“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Tuesday, January 30, 2024

சித்தர்கள் ஆட்சி - 319 : - 2021ஆம் ஆண்டு கோடகநல்லூரில் கொங்கணவர் பொதுவாக்கு!

 



“இறைவா!!! அனைத்தும் நீ”


2021ஆம் ஆண்டு கோடகநல்லூரில் சித்தர் கொங்கணவர் உரைத்த பொதுவாக்கு!


காக்கும் கடவுளை மனதில் எண்ணி, பலமாக உரைக்கின்றேன், கொங்கணவன். 


உண்மையில் ஞானி அவர்கள் எவர் என்பதும் கூட இனி வரும் நாளில் தெரிய வரும் என்பேன். ஆனால், உண்மையான ஞானி என்பவர் யார் என்று இனி வரும் நாளில் தெரியவரும். 


அகத்தியரின் அருளும் பெற்று இருந்து, பின் பின் எவ்வாறு உயர்வது என்று கூட அகத்தியன் சரியான முறையில் கணித்துக் கொண்டுதான் போயிருக்கிறான் என்பேன். 


இதனால், பின் இவைதான் என்று கூறாமல், அகத்தியனும் பக்கத்திலே பன்மடங்கு இருப்பான் என்பேன்.  

ஏன் என்றால், இப்பவுர்ணமி அன்று (சித்திரா பௌர்ணமி) கூட சித்தர்கள் தவத்தை மேற்கொள்வார்கள் என உறுதியாக கூறுகிறேன். இப்புவியில் என்ன என்ன நடக்கப் போகிறது என்று அறிவார்கள் சித்தர்கள். இதனால் இப்பவுர்ணமியை "சித்தர்கள் பௌர்ணமி" என்று கூட அழைக்கலாம். பின் அனைவருக்கும் நல்மனதாய் சித்தர்கள் ஒவ்வொரு இடத்திலும் தவம் செய்வார்கள் என்பேன்.


சரியான முறையாய் சித்தர்களை வணங்குபவர்களுக்கு பின் நல் முறையாய், எவை வேண்டும் என்பவர்களுக்கு, அவை தன் பக்தர்களுக்கு எப்பொழுது வரும் என்றும், அதனுடன் கட்டங்களையும், நிச்சயமாய் வந்து நீக்கி விடுவார்கள். 


அகத்தியனும் தவத்தில் தான் உள்ளான் என்பேன். இவ்வருடத்தில் எந்த எந்த கட்டங்கள் வருகிறது என்று அவனுக்கும் தெரிந்து விடும். 


இப்பவுர்ணமியில் சில சித்தர்கள் அண்ணாமலையில் வலம் வருவார்கள். மலை பகுதிகளிலும் இதுபோல்தான், ஓர் சித்தன் தவம் செய்வான். இப்படி பல இடங்களிலும் சித்தர்கள் தவம் செய்வார்கள். எந்தெந்த விளைவுகள், இவ்வுலகில் மாற்றம் அடையச் செய்கிறது என்று கூட ஒரு வாக்கு இருக்கிறது. 


இதனால்தான், எத்தனையோ பரிகாரங்கள் உரைக்கினும், இப்பவுர்ணமியில் அதை செய்தாலும், பலனளிக்காது. 


பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மூர்த்திகளிடம் பிரார்த்தனை செய்தாலும், அவர்கள் தலை எழுத்தை சித்தர் வழியில் செல்ல மாற்றுவார்கள். ஏன் என்றால், இது "சித்தர்களுக்கான பௌர்ணமி" என்று கூறப்படுகிறது.


பரிகாரங்களை இங்கு(கோடகநல்லூர்) வந்து செய்கிற பொழுது, ராகு காலத்தில் வந்து செய்கிற பரிகாரங்கள் பலனளிக்கும் என்பேன். 


நிபந்தனைகளுக்கு உட்பட்டு, நல்முறையாய் ராகு கேதுக்களை கட்டுப்படுத்த இன்னொரு முறையையும் யான் சொல்கின்றேன். பிறை என்று சொல்கிறார்களே "மூன்றாம் பிறை" அதை தொடர்ந்து நவமாதங்கள் பார்த்துவிட்டால் ராகு, கேதுக்கள் நன்மை செய்துவிடும். இதை யார் உணர்வார்கள்?. 


ஏன் என்றால், எதனையும் நீக்குவதற்கும், அடிக்கடி பெருமாள் இங்கு வந்து அமர்ந்து விடுவார், யான் பார்த்தேன். 


யானும் வேங்கடவன் மலையில் (திருப்பதி ஏழுமலையில் ) தங்கி இருக்கும் பொழுது, இவன்தனை ( பெருமாளை இங்கு ) இழுத்து, இழுத்து வரவேண்டியுள்ளது. அதனால்தான் இப்பொழுது இங்கு வந்தேன் என்பேன். 


நல்விதமாய் ஆசீர்வாதங்கள். நல் முறையாய் சித்தர்களின் அருளால் நன்மையே ஏற்படும். 


அகத்தியனும், நல் முறையாய், நல்ல வழிகாட்டியாய் இருப்பான் உங்களுக்கு.  இனிமேலும் வரும் காலங்கள் உயர்வான காலங்கள் என்பேன்.  


நல்முறையாய் வரும் காலங்கள் மக்களுக்கு சரியானதாய் இல்லை என்றாலும், அகத்தியனை நம்பி, பின் அவர்பின் தொடர்பவர்களுக்கு, பின் குறை இல்லாத வாழ்வே அகத்தியன் அளிப்பான், என்று நல்வாக்கு, பலிக்கும்.


அப்பனே உங்களுக்கும், நல்முறையாய், நல்ல ஆசீர்வாதங்களை, அகத்தியன் பெற்று தந்து கொண்டிருப்பான். 


இவ்வுலகில் நலமாக வாழ மூலாதாரமாக இருப்பது இறை சக்தி ஒன்றுதான். இறை சக்தி இருந்தால், பின் நல் முறையாய் அனைத்தும் தேடி வந்துவிடும். உங்கள் அனைவருக்கும் நல்முறையாய் இறை அருளை பெற்று தருவதற்கு, மூலகாரணமே அகத்தியன் என்பேன். 


இப்பொழுதும் நல் முறையாய், உங்களை பற்றிய சிந்தனைகளும் ஓடுகிறது என்பேன். இப்பொழுது தவம் செய்கின்றார்கள். ஈசனும் கூட வந்து நின்று எங்கெங்கோ பார்த்தான். அவன் திருவிளையாடல் எங்கும் நடந்து கொண்டிருக்கிறது. ஈசன் வந்து பார்த்ததை நாடியில் யான் கூறியதை கண்டு மகிழ்ந்து, அகத்தியன் த்யானத்தில் இன்னும் இருப்பான். அனைத்து சித்தர்களும், இந்நாடியில் வந்து வாக்குரைப்பார்கள்.


எம்முடைய ஆசிகள், நலன்கள்.


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

No comments:

Post a Comment