“இறைவா!!! அனைத்தும் நீ”
உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
மதுரை பசுமலை ஆலய மகிமை - வியாழக்கிழமை கர்மங்கள் விலகும் ரகசியம்.
ஆதி ஈசனின் பொற் பாதத்தை தொழுது உரைக்கின்றேன் அகத்தியன்.
நலன்களே என் அருள்களால் நலன்களே மிஞ்சும் என்பேன்.
மிஞ்சும் என்பேன் யான் வாரத்திற்கு ஒருமுறை இங்கு தங்கி தங்கி செல்கின்றேன் .
பின் அவ் நாளும் நல் பின் முறைகளாக உரைக்கின்றேன்.
பின் குருவாரம்(வியாழக்கிழமை) என்கிறார்களே . அவ் வாரத்தில்(கிழமையில்) யான் நல் முறைகள் ஆகவே தங்கித் தங்கி சென்றிருக்கையில் பின் அப்பொழுது கூட அனைவரும் நல் முறைகளாக வந்தார்கள் பல. பல என்பேன் அதனால் பல பல பேர்களுக்கும் நல் முறைகளாக ஆசிகள் தந்து கொண்டேதான் இருக்கின்றேன்.மேன்மைகள் பெறும்.
சில கஷ்டங்கள் வந்து வாட்டுவதற்கும் எவ்வாறு என்ற புரிதல் நிலைக்கு ஏற்றவாறு அன்றைய தினத்தில் (வியாழன் ) நல் முறைகளாக இங்கு அமர்ந்து வந்து துயிலெழுந்து (உறங்கி எழுந்து) சென்றுவிட்டால் ஆனாலும் சென்று விட்டு நல் முறையாய் பின் ஒரு மாதத்திற்கு இயலாதவர்களுக்கு அன்னம் அளித்து வந்தால் என்னுடைய அருளாசிகள் பலம். கர்மங்கள் அனைத்தும் விலகிப் போகும்.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
No comments:
Post a Comment