“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Tuesday, April 30, 2024

சித்தர்கள் ஆட்சி - 375: அகத்திய மாமுனிவர் தர்ம வழி உறுதிமொழி வாக்கு ( அதி அவசரம்! அதி முக்கியம்!! அதி மிக அவசரம், முக்கியம் !!! )

 “இறைவா!!! அனைத்தும் நீ”




வணக்கம் அகத்தியர் அடியவர்களே

29/4/2024 அன்று குருநாதர் அகத்திய பெருமான் கோயமுத்தூரில் முல்லை நகர் வடவள்ளியில் அமைந்திருக்கும் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்திய பெருமான் ஆலயத்தில் வைத்து பொதுமக்கள் கலந்து கொண்ட சத்சங்கத்தில் குருநாதர் நல் உபதேசங்கள் செய்தார்

அதாவது பொதுமக்கள் பெருமளவு கூடி இருந்தாலும் யார் யார் என்னென்ன தான தர்மங்கள் செய்தார்கள் என்பதை கேட்டறிந்து கேட்டறிந்து புண்ணியத்தின் தான தர்மத்தின் மகத்துவத்தை அனைவரும் உணரும்படி உபதேசம் செய்து நல்வாக்குகள் தந்தருளினார்

அதில் முக்கியமாக ஒரு கட்டத்தில் ஒரு அடியவரை எழுப்பி யான் கூறுவதை அப்படியே மக்களிடம் உறுதி மொழியாக சொல்லும்படி அனைவரையும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வைத்தார்.

இந்த உறுதி மொழி அனைத்து அடியவர்களும் சாஷ்டாங்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

கோயம்புத்தூரில் நடந்த முழு சத்சங்கமும் பொதுவாக்கில் விரைவில் வெளிவரும் அதற்கு முன்பாக அவசர உத்தரவாக இந்த உறுதி மொழியை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி.

வாக்குரைத்த ஸ்தலம்:- ஸ்ரீ லோப முத்திரை தாயார் சமேத அகத்திய பெருமான் திருக்கோயில் வடவள்ளி முல்லை நகர் மருதமலை அடிவாரம் கோயம்புத்தூர்.

அகத்திய மாமுனிவர் வாக்கு:- 

எதை என்று அறிய அறிய யான் சொல்லிக் கொடுக்கின்றேன். அதை அவர்களிடத்தில் சொல்.

  1. தர்மம் செய்வேன்
  2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
  3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
  4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
  5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
  6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
  7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும். 
  8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
  9. பிறருக்காக உழைக்க வேண்டும்
  10. பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
  11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே


( அகத்திய மாமுனிவர் பக்தர்கள், அடியவர்கள் இதனைத் தினமும் அதி காலையில் ஒரு மந்திரம் போலச்சொல்லுங்கள். அனைவரிடத்திலும் சொல்லுங்கள். அன்ன சேவை , வழிபாடுகள் மற்றும் அனைத்துபொது இடத்திலும் மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். செயல் படுத்துங்கள். இந்த வாக்குகள்உங்கள் எண்ணமாகட்டும். உங்கள் எண்ணங்கள் சொல்லாகட்டும். உங்கள் சொல் அனைத்தும்குருநாதர் காட்டிய வழியில், செயல்களாகட்டும். இதை அனைவரும் கடைப்பிடித்தால் அடுத்த முறைபிரச்சினை என்று இறை அருளால் வராது)

அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே ஏன் நீங்கள் பிரச்சினை பிரச்சினை என்றுஎன்னிடத்தில் வந்து பின் அப் பிரச்சினை நீக்கு , இவ் பிரச்சினை நீக்கு என்று ( கேட்கின்றீர்கள் ). ஆனாலும் அப்பனே ( உங்களின் ) அவ் பிரச்சினை ( எல்லாம் ) நீக்குவதற்கு அப்பனே உன்னிடத்தில்என்ன உள்ளது என்பதைக்கூட அப்பனே கூறுங்கள் அப்பனே? 

சிறு புண்ணியங்கள் இருந்தால்தான் அப்பனே அதையும் நீக்க முடியும் என்பேன் அப்பனே. அப்பனேஉயிரே போகின்றது என்ற கண்டம் வருகின்றது ( என்றாலும் கூட ) ஆனாலும் அப்பனே அறிந்தும்கூட அதை நீக்குவதற்கும் புண்ணியங்கள் அவசியமாகின்றது. ( நீங்கள் செய்யும் ) அப்புண்ணியங்களை வைத்து பிரம்மாவிடம் பேசுவேன் அப்பனே யான்!!! அறிந்தும் கூட இவ்வாறு அவன்புண்ணியங்கள் செய்திருக்கின்றான் என்று. 

ஆனால் நீங்கள் செய்யவே இல்லை அப்பனே. அப்பொழுது எப்படியப்பா பிரம்மாவிடம்எடுத்துக்கூறி  ( யான் செய்ய இயலும்?)

அப்பனே பிரம்மன் கேட்கின்றான் அப்பா “அகத்தியனே, அறிந்தும் கூட உன்னை ஏதோ ஒருஅறிந்தும் கூட சுய நலத்திற்காகவே வணங்குகின்றார்கள். புண்ணியமே செய்வதில்லை. ஆனால்மக்களுக்காக விதியை மாற்று, மாற்று என்று நீங்கள் சொல்கின்றீர்கள்” என்று. 


அப்பனே யான் தலை குனிய வேண்டியதாயிற்று அப்பனே!!!!!!!


( நமது அன்பு குருநாதர் இப்படி நமக்காகப் பிரம்மனிடத்தில் தலை குனிய வைக்கலாமா? அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி  வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். இந்த உறுதிமொழிப்படி இனி நாம் அனைவரும் நடந்து நம்அன்பு குருத் தந்தையின் பெருமையைக் காப்போம். உலகில் தர்மம் செழிக்க உத்வேகத்துடன்உழையுங்கள். அகத்திய மாமுனிவர் அருளால். உங்கள் பிரச்சினைகள் தவிடு பொடியாகிவிடும். வாருங்கள் அன்பு அடியவர்களே, உறுதிமொழி வழி நடந்து அன்பு அகத்தீசருக்கு பெருமைசேர்ப்போம்.)

















ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!


சர்வம் சிவார்ப்பணம்!!!!!

Friday, April 12, 2024

சித்தர்கள் ஆட்சி - 374 : அகத்திய மாமுனிவர் வாக்கு - குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம் சுப்பா ஞானியார் சுவாமி ஜீவசமாதி அருப்புக்கோட்டை.

 “இறைவா!!! அனைத்தும் நீ”



உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 


குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம் சுப்பா ஞானியார் சுவாமி ஜீவசமாதி அருப்புக்கோட்டை.


ஆதி சிவசங்கரியின் பொற்பாதத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.


நல் முறைகள் ஆகவே நல் முறைகள் ஆகவே ஒன்றை யான் சொல்கின்றேன் நல் முறைகள் ஆகவே என்னுடைய ஆசிகள்.


இவந்தனின் ஆசிகள்.


இவந்தன் இரண்டரை ஆண்டுகள் 


அதிலும் கூட சூட்சுமம் உள்ளது. 


நல் முறைகளாக எவை என்று கூற நினைக்கும் எதிர்த்து போராட திறமை கொண்டவன் இவன்.


இவந்தன்  நல் முறைகளாக எண்ணும் பொழுது இரு வருடம் அல்லது நல் முறைகள் ஆகவே இதற்கு மேல் ஐந்து மாதங்கள் கூட நல் முறைகள் ஆகவே வலம் வருவான் இவந்தன் ஓர் மாதம். 


அவந்தனுக்கே இப்பொழுதுகூட என்ற நிலைமை சித்திரை வைகாசியில் நிச்சயம் இவந்தன் நல் முறைகளாகவே இவ் நல் முறைகளாக இதில் பாதியும் அதில் பாதியும் நல் முறைகள் ஆக சித்திரையில் கடைசி வைகாசியில் முதலில் நிச்சயமாய் இவன் இங்கு சுற்றி வருவான் என்பேன்.

(சித்திரை கடைசி 15 நாட்கள் வைகாசி முதல் 15 நாட்கள் = ஒரு மாதம்) 


அதனால் இங்கு தங்குவது அனைத்து கர்மாக்களையும் நீக்கும் என்பேன்.


நீக்கும் என்பேன் இதனை விட ஒரு சிறப்பை சொல்கின்றேன் சொல்கின்றேன் எதைப் பார்த்து என்பதைவிட நிச்சயமாய் இவன் சீடனே இவந்தனக்கு ஜீவநல்காரியத்தை (ஜீவசாமதியடைதல்) செய்வித்தான்.

ஆனாலும் இவந்தன் இச் சீடனை நல் முறைகள் ஆகவே இவனே மனித ரூபத்தில் வந்து..இவந்தனுக்கும் இச் சீடனுக்கும் இவந்தனே ஸ்தலம் அமைத்து விட்டான் என்பதே மெய்.

அப்பனே இதுதான் ஞான சூட்சுமம் என்பது.


யான் சொன்னேனே!!!!

 (சித்திரை கடைசி 15 நாட்கள் வைகாசி முதல் 15 நாட்கள் = ஒரு மாதம்) 

ஒரு மாதம் நிச்சயமாய் வாருங்கள் ஆசிகள் பல பெற்று செல்லுங்கள் என்பேன். அப்பனே அப்பொழுது வந்தால் இவனுடைய திறமைகள் உங்களுக்கே வெளிப்படும் என்பேன்.


அப்பனே நல் முறைகளாய் இத்தலத்தில் அப்பனே பெருமைகள் என்னென்ன?? கூறுவது!!! 

அப்பனே இங்கு பல கர்மாக்களை அழிக்கலாம் அழித்துவிடலாம் என்பேன். அப்பனே தொடர்ந்து நல் முறைகளாய் இங்கு கூட பின் ஓர் மண்டலம் பின் உறங்கச் சென்றால் அனைத்து கர்மங்களும் நிச்சயம் விமோசனம் அடையும் என்பேன்.

ஆனால் அது நடக்காத காரியம் என்பேன். 

அப்பனே எவ்வாறு என்பதைக் கூட அவன் கர்மா அவை போன்று இருக்கும் பொழுது நிச்சயம் வரமுடியாது தான் என்பேன் யானும் கூட .

அப்பனே நல்முறைகள் ஆகவே இவ்வாறு சில ஜீவசமாதிகள் நாடி நாடி செல்ல வேண்டும் என்பேன்.

இவ்வாறு சென்றால் தான் நம்தனக்கும் சில கர்மாக்கள் விலகும் என்பேன்.


ஆனாலும் "பாத்திரமறிந்து பிச்சையிடு"!!! என்று சொல்கிறார்களே.      வருகிறதா!!! ஞாபகத்திற்கு!!!


அதனைப் போன்று தான் மகன்களே நல் முறைகள் ஆகவே எப்போது எதை தொழ வேண்டும் என்று தொழுதால் நிச்சயம் கர்ம வினை நீங்கும் என்பேன்.


இவன் நிச்சயமாய் ஒர் மாதம் இங்கே உறங்குவான். வெளியில் சுற்றுவான். பின் இதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.


அன்று வாருங்கள்.!!!


அப்பனே இவந்தனக்கும் நல் முறைகளாக யான் சொல்கின்றேன்.


அப்பனே நல் முறைகளாக யாரை? அழைக்க வேண்டுமோ !!! தகுதியான மனிதர்களை மட்டும் தான் இவன் விரும்புவான் என்பேன்.


இவந்தனுக்கு கோபம் வந்தால் அனைத்தும் அழித்துவிடுவான் யாரையும் இவந்தன் கிட்டவே சேர்க்க மாட்டான் என்பேன்.


நல் முறைகள் ஆகவே எவை என்றும் எதற்காக?? ஆனாலும் முன்பே இப்பாதையில் பல பல சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தன.


ஆனாலும் இதை எதிர்க்க நல் முறைகளாக பின் இங்கிருந்தும் பின்.            பின் பின் பல மடங்கு கிலோ மீட்டர் அளவில் இவந்தன் சென்று மக்களுக்கு நல்வழி படுத்த எவ்வளவோ முயற்சித்தான். ஆனாலும் மக்களோ?! முட்டாள்தனமாக எதையுமே நம்பவில்லை.


அதனால்தான் அப்பனே வந்தது வினை!!!!!


""வினை"" இவந்தனும் மக்களை அழியட்டும்!! என்று தனியாக வந்து விட்டான்.


மக்களை பார்க்கவே இவன் விரும்புவதும் இல்லை.


ஆனாலும் இவந்தனக்கு யார் மீது விருப்பம் வைக்கின்றானோ அவந்தனையே அழைப்பான் என்பேன்.


அதனால் நீங்கள் அனைவருமே புண்ணிய காரர்கள் அதனால்தான் அழைத்தான் உங்களுக்கு நிச்சயமாக ஆசீர்வாதங்கள் கொடுத்து இன்னும் மேன்மையான செயல்களை செய்விப்பான். என்பேன் கவலைகள் விடுங்கள் மகன்களே. 


அப்பனே நலன்களாக...நலன்களாக ஏதும் அறியாதவர்? ஏன்?? அப்பனே !!!


பல பேர் இங்கு வருவதில்லை?????


நீங்கள் மட்டும் ஏன் வந்து இருக்கின்றீர்கள் சிறிது யோசித்தீர்களா!!!!


இதனால்தானப்பா பெருகும் புண்ணியங்கள்.


அப்பனே இவ்வளவு எவ்வளவு என்பதைக் கூட அருகதை இல்லாமல் சில ஜீவசமாதிகள் பின் நல் முறைகளாக அவந்தனே அழைத்தால் தான் உண்டு இல்லையென்றால் அத் தரிசனமும் கிட்டாது என்பேன்.


அனைத்துமே அனைத்து ஞானிமார்களுமே மனிதனை பின் திருத்த திருத்த பார்த்து ஆனாலும் திருத்த முடியாமல் அவர்கள் அழிவைத் தேடிக் கொண்டு திரும்ப வந்து கொண்டே இருக்கும் பொழுது சிரிக்கின்றார்கள் மனிதர்களைப் பார்த்து.


"போ " "போ" என்றே!!!!...


ஆனாலும் நிச்சயமாய் இவந்தன் அன்பு பெரியது என்பேன்.


சாதாரணமானவன் இல்லை என்பேன் இவன்.


பாருங்கள் இவன் திறமையை மென்மேலும் நீங்களே பார்ப்பீர்கள் என்பேன்.


ஆனாலும் இவ் நேரத்திலும் நல் முறைகள் ஆகவே நல் முறைகள் ஆகவே ஆசிர்வாதங்கள் கவலைகள் இல்லை என்பதைப் போல இவந்தனக்கும் எவை?? தேவையில்லை என்று குருவைப் போல் சீடனைப் போல் மிஞ்சுவது எதுவுமே இல்லை அதனால் பின் நல் முறைகளாகவே இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன்.


சொல்கின்றேன் பின் தை மாதம் பிறந்தவுடன் நல் முறைகளாக இவர்களே இவர்களுக்கு அபிஷேகம் செய்வார்கள் மாறி மாறி.


அப்பனே நிலையில்லாத வாழ்க்கையில் அப்பனே நிலைக்கும் என்ற கொள்கையை படைத்தவன் மனிதன்.


ஆனாலும் இவனது கொள்கை பின் நிலையில்லாத வாழ்க்கையடா மனிதனின் வாழ்க்கை என்று கூட சில சித்தர்களுக்கு சில ஞானிகளுக்கு மனிதனை பார்த்தால் பின் எவையுமே தோன்றுவது இல்லை என்பேன்.


விளக்கங்கள் அளிக்க அளிக்க இன்னும் நேர்மையான நேர்மையானவை பல உபதேசங்களை ஒருநாள் தெரிவிப்பேன் அனைத்தும் கூட.


அப்பனே உரைக்கின்றேன் மேலும் வாக்குகள்.


ஆலய முகவரி மற்றும் விபரங்கள். 

சுப்பா ஞானியார் ஜீவசமாதி. 

பாலையம்பட்டி.

சொக்கலிங்கபுரம். காமாட்சி அம்மன் கோயில் பின்புறம். 

அருப்புக்கோட்டை.


சொக்கலிங்கபுரம் வடக்குரதவீதி காமாட்சியம்மன் கோவில் பின்புறம் சமாதி கோவில்  இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா பங்குனி மாத புனர்பூசம் நட்சத்திரத்தன்று நடைபெற்றுவருகிறது.


சற்குரு ஸ்ரீ சுப்பா ஞானியார் சுவாமிகள்


"காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே "  என்று பாடிய பட்டினத்தார் அடிகளைப்போன்றே சத்குரு அவர்களும் வாழ்ந்துள்ளார்கள் .சற்குரு ஸ்ரீ சுப்பா ஞானியார் சுவாமிகள் , சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் அருப்புக்கோட்டை நகரில் எண்ணெய் வாணிபம் செய்யும் குடும்பத்தில் தோன்றி , குல வழக்கப்படி வாணிபத்தை சீருடன் புரிந்து , பெரும் செல்வந்தராய் வாழ்ந்து வந்துள்ளார். பின் ஒருநாள் அவருக்கு இறை அருளால் ஞானம் ஏற்பட்டு , தனது அத்துணை  செல்வங்களையும் துறந்து ஞானியாகி விட்டார்.


அவரது ஜீவ சமாதி அருப்புக்கோட்டை நகரிலே , சொக்கநாத சுவாமி, மீனாக்ஷி அம்மை அருள்புரியும் சொக்கலிங்க புரத்திலே அமைந்துள்ளது. ஞானியார் கோவில் என அங்குள்ள மக்களால் அழைக்கப்படும் இக்கோவில், அமைதியான சூழலிலே அமைந்துள்ளது.

   

சுவாமிகளின் சீடரின் சமாதி 

சுவாமிகளின் ஜீவ சமாதி


இந்த ஜீவ சமாதி ஆலயத்தில் காலை, மாலை  என் இரு பொழுதுகளிலும் பூஜை நடைபெறுகிறது. பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. திங்கள் கிழமைகளில் இந்த ஜீவ சமாதியில் பால் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு நடக்கின்றது.


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!


சர்வம் சிவார்ப்பணம்!!!!!

Thursday, April 11, 2024

சித்தர்கள் ஆட்சி - 373 : அகத்திய மாமுனிவர் வாக்கு - வாக்குரைத்த ஸ்தலம். அகத்தியர் சன்னதி மாரியம்மன் கோயில் . பசுமலை. மதுரை.

 “இறைவா!!! அனைத்தும் நீ”



உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 


(சித்தன் அருள் - 1068)

வாக்குரைத்த ஸ்தலம். அகத்தியர் சன்னதி மாரியம்மன் கோயில் . பசுமலை. மதுரை.


ஆதி ஈசனின் பொற் பாதத்தை தொழுது உரைக்கின்றேன் அகத்தியன்.


நலன்களே என் அருள்களால் நலன்களே மிஞ்சும் என்பேன். மிஞ்சும் என்பேன் யான் வாரத்திற்கு ஒருமுறை இங்கு தங்கி தங்கி செல்கின்றேன் .


பின் அவ் நாளும் நல் பின் முறைகளாக உரைக்கின்றேன்.


பின் குருவாரம்(வியாழக்கிழமை) என்கிறார்களே . அவ் வாரத்தில்(கிழமையில்) யான் நல் முறைகள் ஆகவே தங்கித் தங்கி சென்றிருக்கையில் பின் அப்பொழுது கூட அனைவரும் நல் முறைகளாக வந்தார்கள் பல. பல என்பேன் அதனால் பல பல பேர்களுக்கும் நல் முறைகளாக ஆசிகள் தந்து கொண்டேதான் இருக்கின்றேன்.


மேன்மைகள் பெறும். 


ஆனாலும் சில கஷ்டங்கள் வந்து வாட்டுவதற்கும் எவ்வாறு என்ற புரிதல் நிலைக்கு ஏற்றவாறு அன்றைய தினத்தில் நல் முறைகளாக இங்கு அமர்ந்து வந்து துயிலெழுந்து சென்றுவிட்டால் ஆனாலும் சென்று விட்டு நல் முறையாய் பின் ஒரு மாதத்திற்கு இயலாதவர்களுக்கு அன்னம் அளித்து வந்தால் என்னுடைய அருளாசிகள் பலம். கர்மங்கள் அனைத்தும் விலகிப் போகும்.


ஆனாலும் இவையன்றி இப்படியே செய்ய பின் மதுரையில் நல் முறைகளாக  வாழும் மீனாட்சி தாயும் பின் அதனுள்ளே(கோயில்) ஒரு மாதம் அங்கும் தங்கி இருக்க நல் முறைகள் ஆகவே திருப்பரங்குன்றம் நல் முறைகள் ஆகவே அங்கும் ஓர் மண்டலம் தரிசிக்க பின் பழமுதிர்ச் சோலையும் தரிசிக்க இவை அனைத்தும் ஒவ்வொன்றும் நீங்கி நல் முறைகளாக நினைத்ததை நிச்சயமாய் நடைபெறும் என்பேன். யான் சொல்வதை சரி முறையாக கேட்க ஒரு துன்பமும் இல்லை என்பேன். துன்பம் இல்லை என்பேன் இவ்வாலயத்தின் சிறப்பு கூட இது எவ்வாறு என்பதையும் கூட மிஞ்சி பார்க்கும் அளவிற்கு வரும் காலங்களில் யான் வந்து கொண்டேதான் இருப்பேன் இங்கு.


ஏனென்றால் நல் முறைகளாக என்னுடைய பக்தர்கள் எவ்வாறு என்பதையும் கூட என் மீது அன்பு காட்டி நல் முறைகளாகவே உருவாக்கினார்கள் என்பது மெய்.

அதனால் நல் முறைகளாக அவர்களுக்கும் என்னுடைய ஆசிகள் பல. பல பல என்பேன். சித்தர்களின் அனுக்கிரகமும் பலகோடி என்பேன்.


இதனால் நல் முறைகள் ஆகவே திருமூலனும் நல் முறைகள் ஆகவே அருணகிரியும் வந்து வந்து செல்கின்றனர் என்பேன். என்பேன் எதனால் என்பதை விட யான் இருக்கும் இடத்தில் அனைத்து சித்தர்களும் வருவார்கள் என்பது மெய்.


அதனால் யான் சொன்னேன். பின் நல் முறைகளாக அன்போடு ஏற்படுத்தியது இத் தலம் .


அவ்வாறு ஏற்படுத்தினால் நிச்சயமாக அன்போடு நல் முறைகள் ஆகவே எவை வேண்டும் என்று மனதில் எண்ணிக் கொண்டே என்னை வணங்கினால் போதும். யான் கொடுப்பேன் அனைத்தையும். இதனையன்றி அது வேண்டும் இது வேண்டும் இவை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால் நிச்சயம் அதனை யான்  ஏற்க மாட்டேன் இத் தலத்தில். அதனால்தான் அன்போடு வாருங்கள் .


ஏனென்றால் என்னை அன்போடே உருவாக்கியவர்கள். நல் முறைகளாக என் பக்தர்கள் அதனால் அன்போடு தான் வணங்க வேண்டும் நல் முறைகளாகவே. 


இன்னும் பல சூட்சமங்கள் உண்டு என்பேன் உண்டு என்பேன்.


நல் முறைகள் ஆகவே எவ்வாறு என்பதும் கூட இங்கு நிச்சயமாய் வரும் தைப்பூசம் அன்று வெகு சிறப்பாக நடைபெற வேண்டும் முருகன் பாடல்களை பாடி நல் முறைகளாக மூன்று தினங்களாக நல் முறைகள் ஆகவே. முருகனும் வந்து வலம் வருவான். இன்னும் இத்தலம் சிறப்பு பெறும் என்பேன்.


நல் முறையாக ஏற்றங்கள் உண்டு என்பேன் உண்டு என்பேன். நல் முறைகள் ஆகவே இவை அன்றியும் கூற இன்னும் சில சில மனிதர்களுக்கும் எவை வேண்ட வேண்டும் என்று நினைக்காமல் வந்து வணங்குகின்றனர் ஆனாலும் அவர்களுக்கும் யான் நல்லாசி கொடுத்துக்கொண்டு தான் வந்து இருக்கின்றேன்.


அனைவருக்கும் இங்கு வருபவர்களுக்கும் அனைவருக்கும் என்னுடைய ஆசிகள் நிச்சயம் கிட்டும்.

ஆனாலும் அதனை உணர்வதற்காக யான் கஷ்டங்கள் ஏற்படுத்துவேன் சில. அதையும் தாண்டி வர நல் முறையாக ஆசிகள் என்பேன்.


ஆசிகள் என்பேன் ஏனென்றால் இதனையும் சமநிலைப் படுத்த பின் ஒன்றும் தெரியாமலே வருகின்றனர் அதனால் தான் சிறிது கஷ்டங்கள். அவ் அனுபவத்தின் மூலம் இறைவனை நிலையான பொருளை நிச்சயம் அவர்கள் கண்டுபிடித்து நல் முறையாக மனமாற்றங்கள் அடைய யான் சில சில சோதனைகளை செய்வேன். அதனினும் மீண்டு நல் முறைகளாக வந்துவிட்டால் அப்பனே அற்புதங்கள் அப்பனே.


இவ்வுலகில் எதுவும் பெரிதில்லையப்பா.

இறையருளே மிகப் பெரியது.

இறையருளை பெற்று விட்டால் அனைத்தும் இறைவன் தருவான் என்பேன் அதனால் எதையும் கேட்கத் பட தேவையில்லை என்பேன் அன்பை மட்டும் செலுத்துங்கள் அன்பை மட்டும் செலுத்துங்கள் இதுவே போதுமானது


எதையும் எவை என்றும் எதனையென்றும் மனிதனால் பெறமுடியாது என்பேன் இறைவன் நினைத்தால் தான் அனைவருக்கும் அனைத்தும் நடக்கும் என்பேன்.


அதனால் தான் சொல்கின்றேன் எதுவும் பின் நல் முறைகள் ஆகவே அன்போடு அகத்தியா!!! நல்முறையாக முருகா!!! பின் ஈசா!!! என்றெல்லாம் வணங்கி வந்தாலே அவந்தனை பெயர் வைத்து அழைத்தாலே பின் ஓடோடி வந்து விடுவான்.

ஆனால் அதற்கு தகுந்தார்போல் மனிதர்கள் ஒழுக்க சீலராக வாழ வேண்டும் என்பேன்.


ஒழுக்கம் நல் முறைகள் ஆகவே பிறந்த விட்டால் அவந்தனை தேடி பின் அனைத்தும் வந்துவிடும்.

ஒழுக்கம் இல்லை என்றால் அப்பனே எது வந்தாலும் நிற்காது என்பேன்.

அப்பனே இதனால்தான் எவ்வாறு என்பதும்கூட வள்ளுவன் கூட ஒழுக்கத்தைப் பற்றி சிறப்பாக கூறி இருக்கின்றான் அப்பனே.


இக்காலத்திலும் ஒழுக்க சீலராக அப்பனே இருப்பவர்கள் கூட அழிந்து போவார்கள் எதனை என்று கூறும் அளவிற்கு கூட.


ஆனாலும் ஒழுக்கம் நல் முறைகளாக இருந்து விட்டால் அவனிடம் நற்பண்புகள் பெருகும் பெருகும் அவனிடத்தில் ஆசைகள் இருக்காது என்பேன். இதனால் அப்பனே அன்புடன் இறைவனை வணங்குவான். அனைத்தும் இறைவன் கொடுப்பான் என்பேன்.


அப்பனே தன் பிள்ளைகள் தன் இல்லங்கள் தன் சொந்த பந்தங்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதை எல்லாம் பின் கேட்கக் கூடாது என்பேன். அவ்வாறு கேட்டாலும் இறைவன் செய்யமாட்டான் அப்பனே.


இறைவனே நீ என்று நீ என்று கூட இறைவனே அனைத்தும் உந்தனுக்கே தெரியும் என்று பின் நல் முறைகளாக கேட்டுவிட்டால் அனைத்தும் தருவான்.

ஆனாலும் அறியாத முட்டாள்கள் எதை எதையோ கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.


இவை என்று கூற இன்னும் நல் முறைகளாக  மாற்றங்கள் உண்டு என்பேன்.


நிச்சயம் நல் முறைகளாக மீனாட்சி தாயே இங்கு வருவாள் என்பேன்.


இவையன்றி கூற நல் முறைகள் ஆகவே இன்னும் பல உரைக்கின்றேன் ஆனாலும் இதையும் செய்ய மிக்க நன்று என்பேன்.


வரும் எல்லா கன்னி திங்களில்(புரட்டாசி மாதம்) நல் முறைகளாக பின் ஒவ்வொரு சனியும்(சனிக்கிழமை) நல் முறைகளாக அன்னத்தை(அன்னதானம்) மேற்கொள்ள மீண்டும் நல் முறைகளாக மாற்றங்கள் உண்டு. இதனை நிச்சயம் செய்ய வேண்டும் என்பேன்.


அம்மையே எவ்வாறு என்பதையும் கூட இதனையும் யான் சொல்லி வைத்தேன். 


நிச்சயம் சனி தோறும் இங்கு நிச்சயமாய் பெருமாள் வந்து பின் அனைவருக்கும் ஆசீர்வாதங்கள் தந்து விட்டுத்தான் செல்வான் என்பேன்.


அப்பனே எவ்வாறு என்பதை கூட நிலை நிறுத்தும் பொழுது அப்பனே நல் முறைகள் ஆகவே நல் முறைகள்  ஆகவே ஒன்று சொல்கின்றேன் கேட்டதற்கு.


எவ்வாறு என்பதை உண்மை நிலை புரிய அன்னதானம் நல் முறைகளாக நடக்கும்பொழுது அவந்தனும் அனைவரிடத்தில் உட்கார்ந்து அவந்தனும் அன்னதானத்தை உண்டு செல்வான் என்பேன்.


அப்பனே நல் முறைகள் ஆகவே யான் சொல்லியும் விட்டேன் .


நிச்சயமாய் யான் சொல்லியபடி அனைத்தும் நீங்கள் நல் முறைகள் ஆகவே அன்று நல் முறைகள் ஆகவே அருளாசிகள் பெற்று அனைவருக்கும் அடுத்த வாக்கும் கூறுகின்றேன்.


அம்மையே எவ்வாறு என்பதையும் கூட நிலை நிறுத்தும் பொழுது எந்தன் அருள் இல்லாமல் எதையும் செய்ய முடியாது என்பேன்.


அதனால் அனைவருமே என்னுடைய அருள் பெற்றவர்களே.


தேர்ந்தெடுங்கள் எவ்வாறு என்பதையும் கூட நல் முறைகளாக.


இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன்.


பின் ஆடி கிருத்திகை என்கின்றார்களே அப்பொழுதும் கூட இங்கு முருகப்பெருமான் வந்துதான் சென்றான் என்பேன்.


நல் முறைகள் ஆகவே இன்னும் பல மாற்றங்கள் உண்டு என்பேன் இன்னும் பல மாற்றங்கள் உண்டு என்பதற்கிணங்க இன்னுமொரு சூட்சுமத்தையும் நல்முறைகளாக உரைக்கின்றேன்


உரைக்கின்றேன் நல் முறைகள் ஆக மாற்றத்தை யான் ஏற்படுத்தியே தீருவேன் நல் முறைகளாகவே. 


சிலசில வினைகளால் மனிதர்கள் எங்கு சென்றாலும் விமோசனம் இல்லாமல் போய்க் கொண்டே தான் இருக்கின்றது.


இக்கலியுகத்தில் கூட எவை என்று எதை நம்புவது என்று கூட தெரியாமல் மக்கள் அலைந்து மோதி திரிந்து கடைசியில் ஒன்றும் தெரியாமல் மடிந்து விடுகின்றனர்.


ஆனாலும் இனிமேலும் ஒவ்வொருவரும் எவ்வாறு என்பதையும் கூட நிலை நிறுத்தும் பொழுது அம்மையே இங்கு(பசுமலை) வருபவர்கள் நல் முறைகள் ஆகவே அரை மணி நேரம் நல் முறைகள் ஆக தவத்தை மேற்கொண்டு அவரவர் விருப்பப்படி பின் நல் முறைகளாகவே தெய்வங்களை எண்ணினால் நிச்சயம் கைகொடுப்பான் என்பேன்.


அனைத்து தெய்வங்களும் இங்கு வலம் வந்து கொண்டு தான் இருக்கிறது என்பேன்.


சிறப்பின் ரகசியம் எவ்வாறு என்பதையும் கூட இனிமேலும் நல் முறைகள் ஆகவே இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன்.


நினைத்த காரியத்தை நினைத்த படியே நல் முறைகளாக சொல்கின்றேன் இப்பொழுது பக்கத்தில் உள்ள ஒரு மரம் இருக்கின்றதே அம்  மரத்தை 108 முறைகள் சுற்றி நல் முறைகள் ஆகவே   அன்னத்தை நல் முறைகள் ஆகவே இவையன்றி கூற பின்பு அரை(24+12=36) இதிலும் பாதிகூட்ட நல் முறைகளாக முப்பானாறு பேர்களுக்கு(36 நபர்களுக்கு) நல் முறைகளாக அன்னதானம் இவை இட்டு வந்தாலே தன் கர்மங்களும் கழியும் என்பேன்.


அப்பனே எவ்வாறு என்பதை கூட நாள் கிழமை கள் எதுவாயினும் சரி. அப்பனே எவ்வாறு என்பதை கூட அப்பனே யான் இருக்கும் பொழுது நாள் கிழமை பின் எதுவும் தேவை இல்லை அப்பனே.


அம்மையே எவ்வாறு என்பதையும் கூட அப்பனே எவ்வாறு என்பதையும் கூட ஆனாலும் நல் முறைகளாக புரிந்து கொள்ளுங்கள்


ஆனாலும் ஒரு நாள் சுற்றி விட்டு பலன்கள் நடைபெறவில்லையே என்று எண்ண கூடாது என்பேன்.


அம்மையே அப்பனே நல் முறைகளாக இன்னும் மாற்றங்கள் உண்டு என்பேன் உண்டு என்பேன் நல் முறைகள் ஆகவே சக்தி வாய்ந்த நல் முறைகளால் இத்தலம் எவ்வாறு என்பதைக் கூட இன்னும் பல கோடி மர்மங்கள் இம் மதுரையிலே ஒளிந்திருக்கிறது என்பேன்.


இவையன்றி கூற எதனை என்று கூற நினைப்பதற்கும் கூட இங்கு எவ்வாறு என்பதை கூட கோள்கள் எவ்வாறு என்பதையும் கூட கோள்களுக்கு தகுந்த மாதிரி கோவலன் எவ்வாறு என்பதையும் கூட பாண்டிய நாட்டின் அரசன் பல மர்மங்களையும் இப்புவியில் எவ்வாறு என்பதையும் கூட இவ் மதுரை மாநகரிலே புதைத்து வைத்து சென்றிருக்கின்றான். 


ஆனாலும் அதை எடுக்கும் காலம் வந்து கொண்டே இருக்கின்றது என்பேன்.


இப்புவியில் நல் முறைகளாகவே ஆனாலும் சில மனிதர்கள் எவ்வாறு என்பதையும் கூட நினைத்து பார்க்காத அளவிற்கு ஆனாலும் இவையெல்லாம் இருந்தால் மனிதர்கள் பிழைத்துக் கொள்வார்களே என்று அடியோடு அழித்துவிட்டார்கள் அதனையும் மர்மங்களாக. அவை இருந்தால் எப்பொழுதும் மனிதனுக்கு நிலையானதாக அனைத்தும் கிட்டும் என்பேன்.


ஆனாலும் இறைவன் கூட இதில் சூட்சுமமாக நடந்துதான் உள்ளான் என்பேன்.


அனைத்தும் பின் மனிதனுக்கு கிடைத்து விட்டால் இறைவனை பின் இறைவனையே கண்டுகொள்ள மாட்டான் என்பேன்.


இறைவனே நேரடியாக வந்தாலும் இறைவனா என்று கேள்விகள் கேட்பான் மனிதன்.


அதனால் தான் இதிலும் சூட்சமங்கள் உள்ளது.


பின் வாக்குகளில் அனைத்தும் சொல்கின்றேன் இதனைப் பற்றி விரிவாகவே.


நல் முறைகள் ஆகவே நல் முறைகள் ஆகவே இனிமேலும் எவ்வாறு என்பதையும் கூட நிலை நின்று பார்க்கும் பொழுது அனைத்தும் பொய் என்று தான் யான் சொல்வேன்.


நிலையானது எவை என்றால் இறைவனே!!! அதனால்தான்


இறைவனைப் பற்றிப் பற்றி பற்றிக் கொண்டே இருந்தால் நீ இறைவனைப்பற்றி பற்றற்று இருந்தால் அனைவரும் நன்றாகவே வாழ்ந்து விடுவார்கள்.


அதனை மீறி உங்கள் சுயநல விருப்பப்படி பற்று வைத்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும்.


நிலையானது நிலையற்றது இவ்வுலகில் எவ்வாறு என்பதையும் கூட அனைத்தும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான உள்ளதென்பது நிலையானது இறைவன் அருளே!!!

மற்றவையெல்லாம் நிலையற்றது.

ஆனால் முட்டாள் மனிதன் நிலையற்றதையே தேடிக் கொண்டிருக்கிறான்.


ஆனாலும் இவை என்று கூற பின் நிலையில்லாததை பின் தேடிச் சென்றால் பின் அவ் நிலையில்லாததால் மோசம் போய் விடுவான்.


ஆனாலும் நல் முறைகளாக அனைத்தும் நீயே என்று கூறிவிடு.


அதுவும் நன் முறையாகவே நடக்கும்.


அப்பனே நல் முறைகள் ஆகவே அனைத்தும் எந்தனது இல்லை இறைவா உன்னிடத்திலேயே ஒப்படைத்து விடுகின்றேன் என்ற ஒரு நிலையில் யோசித்தால் பின் இறைவன் பார்த்துக்கொள்வான்.

ஆனாலும் ஒருவன் கூட அதை போல் நினைப்பதும் இல்லை .

இதுவரை ""யான்"" பார்த்ததும்!!! இல்லை....


நல் முறைகள் ஆகவே """பிறருக்காகவே வாழ வேண்டும்!!!என்ற கொள்கையை பிடித்தால் உந்தனுக்காக!!! இறைவன் வாழ்வான்.

அதை விட்டுவிட்டு தான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினால் ??

நிச்சயம் இது முடியாது என்பேன்.


இன்னும் மேன்மையான பலன்கள் உண்டு என்பேன்.


மேன்மையான பலன்கள் உண்டு என்பேன் அடுத்த சூட்சுமத்தையும் நல் முறைகளாக இத்தலத்திலே இன்னும் இரு மாதங்கள் கழித்து உரைக்கின்றேன் அதி சிறப்பாக அதி சிறப்பாக நல் முறைகளாகவே


இதை இயக்குபவர்களும் நல் முறைகள் ஆகவே வாழ்வார்கள் என்பேன்.

வாழ்வார்கள் என்பேன் சீரும் சிறப்புடன் என்னுடைய அருளும் பரிசுத்தமாக எங்கிருந்தாலும் அவர்களுக்கு நல் முறையில் ஆகவே யான் காட்சி தந்து கொண்டே இருப்பேன் நல் முறைகள் ஆகவே.

எதைப்பற்றியும் கவலைப்பட அவசியமில்லை எவை எவை மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ அவை எல்லாம் நிச்சயம் ஏற்படுத்தும் என்பேன்.

ஏற்படுத்தும் என்பேன் என்பதற்கிணங்க யானே முன்னின்று அனைத்தும் ஏற்படுத்துவேன் நல்முறைகள் ஆகவே.

என்மீது நல் முறைகளாக பாசம் கொண்டு பாசம் கொண்டு அவ் பாசத்திற்காக நிச்சயமாய் யானும் பல மடங்கு காண்பிப்பேன் இதனால் தொந்தரவுகள் இல்லை அனைவருக்கும் நலமே.


ஆனாலும் ஒன்றைச் சொல்கின்றேன் சிறு பிரச்சினைகள் எவ்வாறு என்பதையும் கூட விதியில் கூட ஒவ்வொருவருக்கும் இப்பொழுது கூட நல் முறைகள் ஆகவே சில வினைகள் தோன்றி தோன்றி வந்து கொண்டே இருக்கின்றது.


அதையும் யான் மாற்றுவேன்.


எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் விதியையே என்னால் மாற்ற முடியும் அளவிற்கு கூட தகுதிகள் இருக்கின்றது.

அதனால் நல் முறைகள் ஆகவே அவ் விதியை ஆனால் யான் தகுதியானவர்களுக்கே வழங்குவேன் என்பேன்.

எதனால்?? அவ் தகுதி நீங்கள்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.


புண்ணியங்கள் பல புண்ணியங்கள் பல தர்ம காரியங்கள் செய்து வந்தால் பின் மாற்றுவேன் யான் பிரம்மனிடத்தில் முறையிட்டு கூட.

 

நல் முறைகளாக விளக்கங்கள் தந்து விட்டேன் அனைத்தும் நல்படியாகவே அனைவருக்கும் நிறைவேறும் என்பேன்.


மீண்டும் இரு மண்டலம் அல்லது இரு மாதம் கழித்து நிச்சயமாய் 


 இத்தலத்திலிருந்து சொல்கின்றேன் வாக்குகளாக.


அனைவருக்கும் என்னுடைய ஆசிகள்.


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!


மதுரை அகத்திய மஹரிஷி ஆலய முகவரி


அருள்மிகு சக்தி மாரியம்மன் கோவில் வளாகம்,

தியாகராசர் குடியிருப்பு, பசுமலை, மதுரை-4.


[திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் மன்னர் திருமலை நாயக்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி  அருகில். மதுரை திருமங்கலம் ரோட்டில் மூலக்கரை பஸ்டாப் இறங்கி பார்த்தாலே, எதிர்புறம் கோவில் தெரியும். திருப்பரங்குன்றத்திற்கு  முந்தின ஸ்டாப்.]


Sri Arulmiga Sakthi Mariamman Temple,

Thiagarajar Colony,

GST Road, Moolakarai, 625004,, Pasumalai, Madurai, Tamil Nadu 625004, India


https://goo.gl/maps/LurkRx2B5DbqSWqa7


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!


சர்வம் சிவார்ப்பணம்!!!!!

Sunday, April 7, 2024

சித்தர்கள் ஆட்சி - 372 : அகத்திய மாமுனிவர் வாக்கு - வாக்குரைத்த ஸ்தலம்: மௌன குரு ரெட்டி சித்தர் சுவாமிகள் ஜீவசமாதி கட்டங்குடி அருப்புக்கோட்டை

 “இறைவா!!! அனைத்தும் நீ”





உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 


சமீபத்தில் குருநாதர் அகத்தியர் மௌனகுரு ரெட்டி சித்தர் சுவாமிகள் ஜீவ சமாதியில் உரைத்த பொது வாக்கு


பாகம் 1


வாக்குரைத்த ஸ்தலம்: மௌன குரு ரெட்டி சித்தர் சுவாமிகள் ஜீவசமாதி கட்டங்குடி அருப்புக்கோட்டை


ஆதி சித்தனை மனதில் எண்ணி வாக்குகள் செப்புகின்றேன் அகத்தியன்


அப்பனே நலன்கள் அப்பனே மனிதன் பக்குவங்கள் பட வேண்டும் என்பேன் பக்குவங்கள் படபட மேன்மை நிலை பெருகும் என்பேன் .


அப்பனே எவ்வாறு என்பதைக்கூட யான் வாக்குகளாக செப்புகிறேன்


அப்பனே கலியுகத்தில் பல பல போராட்டங்கள் வாழ்வில் வரும் என்பேன் வந்துகொண்டே இருக்கும் என்பேன் யான்  சொன்னாலும் ஏற்க்கும் நிலையில் மனிதன் இல்லை என்பேன். ஏனோதானோ என்று இருந்து விடுகின்றான் மனிதன்.


அப்பனே வரும் காலங்களில் எவனோ ஒருவன் கந்தபுராணம் அதிகம் ஓதுகின்றானோ அவனை யானே தேர்ந்தெடுத்து நிச்சயமாய் உதவுவேன் என்பேன் ஆனால் பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்பதுதான் சந்தேகத்திற்குரியது.


அப்பனே பக்தி என்பது ஏதடா பக்தி என்பது எவ்வாறு என்பதைக்கூட அனைவரும் வந்து(சித்தர் ஜீவசமாதி க்கு) கொண்டுதான் இருக்கின்றார்கள் ஆனாலும் இவனுக்கும் (மௌனகுருரெட்டி சித்தர்) கோபம் தான் என்பேன்.


எவனொருவன் நீயே ஒரு நல்வழி விடு என்று கேட்பானா? என்று தவித்துக்கொண்டு இருக்கின்றான் இவ்வாலயத்தில் இருப்பவன். ஆனாலும் ஒருவன் கூட அதை கேட்கவில்லை.


என் பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டும் எனக்கு பணம் வர வேண்டும் சொத்துக்கள் வரவேண்டும் மேற்படிப்புகள் படிக்க வேண்டும் பெரிய இல்லத்தை அமைக்க வேண்டும் என இப்படி கேள்விகளையே கேட்டுக் கொண்டிருக்கின்றான் மனிதன். இவந்தன் என்ன உங்களுக்கு வேலையாளா?? 


அப்பனே இவன்  இடத்திலும் நல் முறையாக சக்திகள் உள்ளது என்பேன் அமைதியாக இவனிடத்தில் தியானம் மட்டும் செய்தால் போதுமானது அனைத்தும் கொடுப்பான் அதைவிட்டுவிட்டு அப்பனே எதை எதையோ கேட்டுக் கொண்டிருந்தால் இவந்தனுக்கு மனக்குழப்பம்  பின் எதுவும் நடக்காது என்பேன்.


வில் அம்பின் (தனுசு ராசி) நேர் கதியாக  இருப்பவன் அப்பனே இங்கு வர என்பதைக்கூட இங்கு வருவான் என்பேன் இவ்விடத்திலும் நன் முறையாக சூட்சுமமாக சொன்னால் நிச்சயம் வருவான் பின் அனைத்து நலன்களும் இவ்வாலயத்திற்கு செய்வான் என்பேன். இத்தலத்திற்கு தேவையானவற்றை நல் முறையாக உதவுவான் என்பேன்.


இன்னும் அவனுக்கு நல்ல முறையாக பக்குவம் எவ்வாறு என்பதும் கூட இவந்தனே (மௌனகுரு சித்தர்) கொடுத்து அழைத்துக் கொள்வான் என்பேன் நிச்சயம்.


ஆனாலும் மக்களே நீங்கள் எதையெடுத்தாலும் முயற்சிகள். ஆனாலும் இவந்தன் விட்டு விடுவதில்லை இவந்தனே தேர்ந்தெடுத்துக் கொள்வான் நீங்கள் சற்று அமைதியாக இருங்கள் என்பேன்.


அப்பனே இவ்வாறு நிலைமைகள் மாற வேண்டும் இன்னும் கலியுகத்தில் போராட்டங்கள் தான் அதிகம் அதிகமாக நடக்கும் என்பேன் அப்பனே அதனால் நீங்களும் பக்குவப்பட்டு கொள்ளுங்கள் அப்படியே வாழ்க்கையை வாழ்ந்து விட்டீர்கள் ஆனாலும் ஒரு பிரயோஜனம் இல்லாமல் வாழ்ந்து விட்டீர்கள்.


ஒவ்வொருவரும் அப்பனே எண்ணிப்பாருங்கள் புண்ணியம் எவ்வளவு செய்தோம் என்று அப்பனே.


அப்பனே ஆனாலும் புண்ணியவான்கள் நல் புண்ணியம் செய்து கொண்டு  வருபவரும் இங்கே இருக்கின்றார்கள்.


எந்தனக்கும் தெரியும் அவந்தன் மனதிற்கும் தெரியும் என்பேன்.


அப்பனே இதனால் தான் சொல்லுகின்றேன்


வாழ்க்கையில் ஆடிவிட்டு பாடிவிட்டு இப்போது அமைதியாக உட்கார்ந்து இருக்கின்றீர்கள் அது நடக்குமா? இது நடக்குமா?என்று எண்ணிக்கொண்டு இப்பொழுது கூட.


அப்பனே பக்குவங்கள் பெறவேண்டும். பக்குவங்கள் பெற்றால்தான் இறையருள் பலமாக இருக்கும் என்பேன் அதை விட்டு விட்டு இறைவன் ஸ்தலத்திற்கு சென்று சென்று கொண்டிருந்தால் என்ன லாபம்? சென்று கொண்டிருந்தால் அங்கு பல உபயங்களையும் நீங்கள் செய்ய வேண்டும் என்பேன் நல் முறைகளாக சில சேவைகள் நிச்சயம் செய்ய வேண்டும் என்பேன் அதை செய்யாமல் நேரடியாக இறைவனிடம் வந்து இது தா அது தா என்று கேட்டாள் இறைவன் கொடுப்பானா என்ன நிச்சயமாய் கொடுக்கமாட்டான் என்பேன் ஆனால் புண்ணியத்தை நீங்கள் செய்தால் இறைவன் எவ்வாறு என்பதும்கூட உன்னையே தேடி வந்துவிடுவான் என்பேன்.


அதனால் அனைவரும் நல் முறைகளாக ஜீவராசிகளுக்கு உணவு நிச்சயமாய் அனுதினமும் கொடுக்க வேண்டும் என்பேன் இதையாவது நீங்கள் செய்கிறீர்களா என்று பார்ப்போம்.


அப்பனே இவையன்றி கூற முன்னே கோரியபடி இவந்தனக்கும்(மௌனகுரு சித்தர்) நல்லாசிகள் உண்டு நல் முறைகள் ஆகவே பின்பற்றும் பொழுது அப்பனே நன்மையாக முடியும் என்பேன். நன்மையாகவே முடியும் என்பேன்.


அப்பனே போராட்டத்திற்கு பிறகே வாழ்க்கையடா! அப்பனே 


ஆனாலும் போராட்டம் போராட்டம் என்று தள்ளிக் கொண்டே இருந்தால் அதில் கூட வாழ்க்கை முடிந்து விட்டதா என்று நீயும் நினைப்பதுண்டு.


அப்பனே புண்ணியம் செய்திடு ! அப்பனே புண்ணியம் தான் வாழ்க்கையை பாதுகாக்கும் என்பேன். அதை விட்டு விட்டு எதை எதையோ நினைத்துக் கொண்டால் அப்பனே பரிதாபத்திற்குரியது தான் நிலைமை என்பேன்.


வரும்  கலியின் காலம் கலியவன் (கலிபுருஷன்) பல மக்களின் மனதை மாற்றி தீய வழிகளில் அழைத்துச் செல்வான் என்பேன். அப்பொழுது கூட மனம் அமைதியாக இருந்தால் பின் மேல்நோக்கி எழலாம் என்பேன்.


அப்பனே ஒன்றை சொல்லுகின்றேன். ஒரு யானை சென்று கொண்டு இருந்ததாம் ! அதன் பின்னால் என்ன வரும்?  நீங்கள் சொல்லுங்கள் பார்ப்போம்?அப்பனே சொல்கின்றேன் பின்னால் நிழல்தான் செல்லும் என்பேன். அப்பனே இது போலத்தான் வாழ்க்கை அப்பனே உங்கள் பாவ புண்ணியங்களே உங்களை பின் தொடர்ந்து வரும் என்பேன். கடை நாள் வரையிலும் பாவம் செய்திருந்தால் அதற்குரிய தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் புண்ணியம் செய்திருந்தால் அப்பனே அதற்குரிய பலன் புண்ணியங்கள் பெற்றிருக்க நல் முறையாகவே மேல்நோக்கி அழைத்துச் செல்லும் என்பேன் இதனால்தான் அப்பனே பாவ புண்ணியங்கள் நிழல்போல் தொடர்ந்துவரும் என்பேன்.


அப்பனே இவைதனை உணர நல்லவையே என்று நினைத்திருக.


நினைத்திருக இன்னும் போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையை தான் கலியவன் ஏற்படுத்துவான் இன்னும்.


ஆனாலும் இதன் உள்ளே இறை பலங்கள் அதிகரிக்க அதிகரிக்க தொந்தரவுகள் நீங்கும். நீங்கும் என்பேன். அனைவரும் யான் கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரச்சினையை எடுத்து கொள்வார்கள் இது உண்மை.


அப்பனே ஆனாலும் பிரச்சினை எதிலிருந்து வருகின்றது என்பதை சிறிது யோசித்துக் கொள்ளுங்கள்.


பிரச்சனைகள் உங்களிடமிருந்து தான் வருவதே.


அப்பனே சிறிது யோசித்துக் கொள்ளுங்கள்


அப்பனே விதியைக் கூட மதியால் வென்று விடலாம் அவ் மதி என்னவென்றால் இறைவனின் அருள் என்பேன். இறைவனருள் இருந்தால் அப்பனே  நல் முறைகள் ஆகவே விதி என்ன ? மதி என்ன? கதி என்னடா??? 


அப்பனே ஆனாலும் வயதாகி விட்டதே தவிர என்னவென்று எதுவும் உங்களுக்கு தெரியவில்லை நீங்கள் என்ன கேள்விகள் கேட்கப் போகிறீர்கள் என்பதும் எந்தனக்குத் தெரியும்.


ஒவ்வொருவரும் எதை எதையோ நினைத்துக் கொண்டு அவை பிரச்சனை ! இவை பிரச்சனை !  இது வருமா ? அது வருமா? பிள்ளைகள் படிப்பா? என்பதுதான் நீங்கள் கேட்டுக்கொண்டு இருப்பீர்கள் . இதனை யான் பல முறை பார்த்துவிட்டேன் அப்பனே. எதையும் கேட்காமல் இருப்பது நல்லதே என்பேன்.


தூய மனதோடு இறைவன் சிந்தனையிலேயே இருங்கள் அப்பனே நல் படியாகும் மோட்சங்கள் பெறுவதற்கு வழிகளும் யான் கூறுவேன் என்பேன்.


அப்பனே இது பொய்யான உலகமடா இந்த பொய்யான உலகத்தில் கூட வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் சில மெய்யானவர்கள். அவ் மெய்யான மனிதர்களை கூட பொய்யான மனிதர்கள் கெடுத்து விடுகின்றார்கள்.


இதனையும் கூட நாங்கள் சித்தர்கள் வந்து கொண்டே இருக்கின்றோம் 


இனிமேலும் நிச்சயமாய் இவ்வுலகத்தில் எவ்வாறு தவறு செய்கிறீர்களோ அப்பொழுது கூட அடுத்த பிறப்பிற்கு என்று செல்லாது இப்பிறப்பில் செய்ததை பிறப்பிலேயே அனுபவிக்க வேண்டுமென்பது இறைவன் ஈசனே கட்டளை விட்டுவிட்டான் கிரகங்களுக்கு கூட. அதனால் அப்பனே இப்பிறப்பில்  செய்வதை இப் பிறப்பிலேயே அப்பனே தண்டனையை அனுபவித்தாக வேண்டும்.


அப்பனே! அன்னதானங்கள் தொடர்ந்து செய்ய செய்ய கர்மங்கள் ஒழியும். பரிகாரம் என்று ஒன்று கூட தேவையில்லை.


நிலையில்லாதது! நிலையற்றது! நிலையுள்ளது  மாறிவருவது! இயல்பானது! இயல்பற்றது! இயல்புள்ளவை! இயல்பில்லாதது! மனம் திறப்பது  ! மனம் திறக்காதது! பின் வருந்துவது! வருந்தாதது!

இவையெல்லாம் மனிதனுக்கு தெரிந்துவிட்டால் இவன் தான் ஞானி என்பேன். 


ஆனாலும் புத்திகள், மதிகெட்ட புத்திகள் மதி அழிந்து பின்னாளில் நிலையற்றதை தேடிச்சென்று மனிதன் அழிவைத் தேடிக் கொண்டிருக்கும் பொழுது பின் இதிலிருந்தும் 

இரண்டு விதிகள் உண்டு .


இன்பம் துன்பம் துன்பத்திலே மனிதன் செல்கின்றான் எதற்காக ?மாயையா? அல்லது இறை அருளா?  துன்பம் எதிலிருந்து வருகிறது ?என்பதால் பின் துன்பத்தில் இன்பம் எதை என்றும் இவை இரண்டும் கலந்து பார்த்தால் இன்பம் துன்பம் இருவழிகள் ஆனாலும் இவ்வாறு என்பதை நினைத்துப் பார்க்கும் அளவிற்கு மனிதன் துன்பப் பாதையில் செல்கின்றான் இன்பப் பாதையில் பின் பின் நிறைவாகவே இருக்கின்றது.


ஒருவன் கூட இன்ப பாதையில் செல்வது இல்லை ஏனென்றால் துன்பப் பாதையிலேயே செல்கின்றான். எதற்கு? துன்பங்கள் பாதையில் செல்கின்ற பொழுது அவனே அவன் தன் துன்பத்தை அவனே தேடிக் கொள்கிறான். ஆனால் இன்பமான பாதை யாரும் அதில் இல்லையப்பா.


துன்பப் பாதை என்றால் சொல்கின்றேன் கேள் அவை வேண்டும்! இவை வேண்டும் ! அது வேண்டும் ! இது வேண்டும் ! பின் பொருள்கள் வேண்டும்! 

பின் பின் பல சொத்துக்கள் சேர்க்க வேண்டும்! பின் இல்லங்கள் அமைய வேண்டும்! என்பதையெல்லாம் எதிர்நோக்கும் பொழுது துன்ப வழியில் செல்லும் பொழுது துன்பத்திற்கு காரணம் யாரென்று கூட பின் தெரிகின்றதா? மக்களே!


ஆனாலும் 


இன்பப் பாதை யில் ஒருவன் கூட இனியும் எவ்வாறு என்பது கூட வந்துவிட்டால் நல்லது என்பேன் இன்பத்தின் மீது நல் முறைகளாக இந்தப் பாதையில் செல்லும்போது கூட 

இறைவா! 

இறைவா! 

இறைவா !

என்று சொல்லிக் கொண்டே செல்லுங்கள் பின் இது கடைசி வரை இன்பமாகவே மாறும் ஆனால் அவ்வழியில் யாரும் இல்லை என்பேன்


பாகம் 2


இவந்தன் (மௌனகுரு ரெட்டி சித்தர் சுவாமிகள்) அருமை பெருமைகள் நன்றாகவே தெரியும். என்பதற்கிணங்க இவந்தனும் நல் முறைகளாக தவத்திலேயே இருக்கின்றான் என்பேன்.


அதனால் நீங்களும் எதையும் கேட்க தேவை இல்லை என்பேன் அமைதியாக உட்கார்ந்து தியானம் செய்யுங்கள்.


 பின் நலமாகும். 


நலமாகும் என்பேன்.


இவந்தனும் (மௌனகுரு ரெட்டி சித்தர் சுவாமிகள்) உற்று பின் மறுமுனையில் இவந்தனும்  ஓர் தவத்தில் இருக்கின்ற பொழுது  மீண்டும் கண்ணை திறப்பான் என்பேன். அவ் நேரம் இரவு எட்டு மணியே என்பேன். அதன் முன்னே ஒரு அரைமணிநேரம் வந்து பின் தியானங்கள் செய்தால் இவந்தன் விழிப்பான். யான் சொல்லிய நேரத்தில் அனைவருக்கும் ஆசிகள் கொடுப்பான் என்பேன் இதனை அனைவரும் தவறாமல் செய்தல் வேண்டும் என்பேன். அப்பனே இவை தான் சொல்வேன் அப்பனே.


 சித்தர்கள் அப்பனே எவை என்று கூற பின் பணம் வேண்டும் இவை வேண்டும் என்றெல்லாம் எவ்வாறு என்பதை கூட கொடுத்து வைத்தவர்கள் போலவே கேட்கின்றார்கள் அப்பனே..


அப்பனே ஆனாலும் யாங்கள் நல்வழிப்படுத்துவோம். அவ் நல்வழியை பயன்படுத்தி கொண்டால் அப்பனே நீங்களே பிழைத்துக்கொள்ளலாம் என்பேன்.


அப்பனே !


ஐந்தறிவு உள்ள ஜீவன்களுக்கும் ஆறறிவுள்ள ஜீவன்களுக்கும் என்ன? வித்தியாசம் என்றால் ஒன்றும் இல்லை என்பேன்.


ஆனாலும் அப்பனே ஆறறிவு நல் முறையாக மனிதன் பயன்படுத்தினால் அவனுக்கு என்றுமே இறப்பு இல்லை என்பேன்.


அப்பனே அப்படி பயன்படுத்தித்தான் பல ஞானியர்களும் பல மனிதர்களும் ஜீவ சமாதி அடைந்துள்ளார்கள் என்பேன்.


அப்பனே நல் முறைகளாக இவ் ஆறாவது அறிவை நல் முறையாக பயன்படுத்தினால் ஏழாவது அறிவு தானாகவே திறந்து விடும் என்பேன்.


ஆறாவது அறிவிற்கு தேவையானது பின் முழுமையாக இறையருளே என்பேன்.


அவ் இறையருளை எப்படி பெறுவது என்பது கூட யான்  பின்வாக்கிலும் சொல்கின்றேன்.


இதை தெரிந்து கொண்டே வந்தால் அப்பனே பின் வாழ்க்கையில் ஏழாவது அறிவு என்று இருக்கின்றதே அது இவ்வுலகத்தில் நின்று பேசும் என்பேன்.


அப்பனே கூறுங்கள் அப்பனே இவையன்றி கூற இவ் ஆறாவது அறிவைப் பயன்படுத்த தகுதியானவை அப்பனே வள்ளலான் (வள்ளலார் பெருமான்) சொன்ன வார்த்தையை கடைபிடிக்க அப்பனே ஆறு அறிவை முடித்துவிடலாம் என்பேன்.


அப்பனே ஏழாவது அறிவுக்கும் எட்டி விடலாம் என்பேன்.


அப்பனே மனிதனிடத்திலே அனைத்தும் கொடுத்து அனுப்புகின்றான் மனிதன் ஆனால் மனிதனுக்கு வாழ தெரியாமல் அவன் கெடுத்துக் கொண்டு திரும்பவும் இறைவனிடத்தில் வந்து வருந்துகின்றான் இது நியாயமா??


அப்பனே அதனால்தான் இறைவன் அறிவு களோடு பிறக்க வைக்கின்றான்.


ஆனாலும் நிலையில்லாத உலகத்தில் மனிதன் நிலை உள்ளதை தேடி செல்கின்றான் என்பேன்.


ஆனாலும் அப்பனே நிச்சயம் ஆன்மிக பூமியாக அப்பனே யாங்களே மாற்றுவோம்.


ஆனால் அப்பனே மனிதர்களை நம்பி நம்பி யாங்களும் பட்ட பாடுகள் .


அப்பனே இவனிடத்தில் கொடுத்தால் நன்றாக செய்வானா? ஆனாலும் இவ்வாறு வரங்களும் கொடுத்துவிட்டு கொடுத்துவிட்டு பின் அவனவனே பிழைத்துக் கொண்டிருக்கிறான்.


அதனால் இனிமேலும் மனிதர்களை யாங்கள் நம்பப் போவதில்லை.


யாங்களே அனைத்தும் செய்வோம் என்பேன்.


சித்தர் ராஜ்யம் அமைத்து ஆன்மிக பூமியாகவே மாற்றி விடுவோம்.


அப்பனே அனைவரும் அதிகாலையிலே சூரியனை வணங்க வேண்டும். பின் சூரியன் வரும் முன்பே எழுதல் வேண்டும் என்பேன் ஆனாலும் சோம்பேறிகள்  எழுவதில்லை என்பேன். அப்பனே இப்படி எழுந்துவிட்டால் அனைத்தும் வெற்றிகள் வாழ்க்கையில் கிடைக்கும் என்று அர்த்தம் என்பேன்.


யாராவது அப்பனே அப்பனே இவ்வாறு நிலைநிறுத்தி பார்க்கும்பொழுது அப்பனே இவர்களுக்கு இறையருள்கள் எவ்வாறு என்பது கூட உண்மை நிலை தெரியும் என்பேன்.


அப்பனே ஆனாலும் இவைதனை உணர சூரியன் ஒளிக்கற்றைகள் நல் முறைகள் ஆகவே


 யான் அறிவியல் ரீதியாகவே சொல்கின்றேன்


அதிகாலையிலே சூரியன் வரும்பொழுது பின் அத்தனையும் மிஞ்சிய அளவு ஒரு சக்திகள் பிறக்கும் என்பேன். அது முதல் ஒளியாக நம் மீது படும் பொழுது அனைத்தும் நல் முறை களாகவே மாறும் என்பேன். அதனால் மூளை திறன் அதிகமாக செயல்படுவது உறுதி என்பேன். இதனால் அறிவுகள் பெருகும் என்பேன். அனைத்தையும் சாதித்துக் கொள்ளலாம் எளிதில் என்பேன்.


ஆனாலும் இதன் அர்த்தம் இன்னொரு முறையும் சொல்கின்றேன்.


ஆனாலும் அப்பனே ஏன் அப்பனே சொல்கின்றார்கள் அப்பனே பின் எவ்வாறு என்பதையும் கூட சூரியன் நல் முறைகளாக வரும் முன்னே திருத்தலங்களை ஏன்? திறக்க வைக்கிறார்கள். என்பதைச் சொல்லுங்கள்.


அப்பனே அவை மட்டுமல்லாமல் மனிதர்களுக்கு தெரியாமலேயே மூடன் ஆகவே வாழ்கின்றான் இதனால் தான் முட்டாள்கள் என்போம் யாங்கள் சித்தர்கள் மனிதனை.


அப்பனே இவ்வாறு என்று கூற சித்தர்கள் பல திருத்தலங்களை அப்பனே எவ்வாறு அமைக்கிறார்கள் என்பதை கூட பின் நல் முறைகள் ஆகவே பின் எவை என்பதை கூட  பின் ஒவ்வொரு உயிருக்கும் கொடுத்துதான் நல் முறைகளாக பின் திருத்தலங்களை உருவாக்குகிறார்கள். 


அதனால் அப்பனே அதிகாலையிலே சூரியன் வெளிச்சம் நன்றாக திருத்தலங்களில் படும்பொழுது அனைத்து ஜீவராசிகளும் ஈரேழு உலகமும் பின் நல் முறைகளாக பின் அடியில் இருக்கும் சித்தர்களும் திடீரென்று எழுவார்கள்அப்பொழுது கூட இத் திருத்தலங்களுக்கு சக்திகள் அதிகமாகின்றது என்பேன். அதனால் திருத்தலங்களுக்குச் சென்றால்  நம்தனக்கும் நல்லதே நடக்கும் என்பது விதியப்பா.


அப்பனே நல்லமுறையில் ஆகவே இன்னொரு விஷயத்தையும் சொல்லுகின்றேன் அப்பனே நோய் உள்ளவன் பின் மாலை வேளையில் அப்பனே!! சூரிய வெளிச்சத்தில் உறங்க வேண்டும் என்பேன். இவ்வாறு உறங்கிக் கொண்டே வந்தால் அனைத்து நோய்களும் விலகும் என்பேன் .


அப்பனே அவைதான் கூட அருகம்புல் என்று சொல்வார்களே அதன்மீது உறங்க வேண்டும் என்பேன். அப்பனே இவையன்றி கூட அப் புல்லுக்கு நல் முறைகளாக நோய்களை எதிர்க்கும் சக்தி உள்ளது என்பேன் அதனால் பின் இதனையே பின் பின் கூர்ந்து கவனித்துக் கொண்டே வந்தால் பின் உடம்பில் உள்ள அனைத்து குறைகளும் நீங்கி விடும் என்பேன்.


அதனால் அப்பனே முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானுக்கும் அதை ஏன்? படைக்கிறார்கள் என்பதே மனிதர்களுக்கு தெரியவில்லை அருகம்புல்லை. அப்பனே இவைதனை உணர இவந்தனும் (விநாயக பெருமான்)  எவ்வாறு என்று தன் தந்தையிடம் கேட்டான் நான் இளமையாக இருக்க வேண்டும் என்று. அதற்கு ஈசன் சொன்னான் விநாயகப்பெருமானிடம் போ!!! போய்!! அருகம்புல்லை உண்டு கொண்டே வா என்று. அதனால் இப்போது கூட இளமையாகவே இருக்கின்றான் விநாயகப் பெருமான் இதனால்தான் நோய்நொடிகள் இல்லாமல்.


அப்பனே ஒவ்வொரு ரூபத்தில் இருக்கும் சமமானதே சமமானவையே  உண்டு என்பேன்.


அடுத்து தேங்காய் என்று சொல்கின்றார்களே அதற்கு வருகின்றேன். அப்பனே இதற்கும் சம்பந்தம் உண்டு என்பேன் ஆனாலும் புத்தி கெட்ட மனிதர்கள் இதை உடைத்து மட்டும் செல்வார்கள் இதன் பயன் யாருக்கும் தெரிவதில்லை என்பேன். பின் நல் முறைகளாக ஈசனிடம் விநாயகப்பெருமான் உடலில் அனைத்து செல்களும் நன்றாக இருக்க நன்றாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். ஈசனும் பின் தேங்காயை உண்டால் அனைத்து நோய்களும் போய்விடும் இதில் பல அதிசயங்கள் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்து விட்டான். அதை உண்ணுக என்று சொன்னால் அதை வெளியில் எறிந்து விட்டு போய் விடுகின்றான் மனிதன். இதனால் என்ன லாபம்??


அப்பனே இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன் அப்பனே எவ்வாறு என்பதைக்கூட பழம் என்றால் என்ன என்பது கூட அனைவருக்கும் தெரிந்திருக்கும் பழம் என்றாலே!


வாழைப்பழம் அப்பனே இதில் எவ்வாறு என்பது கூட சூட்சுமங்கள் அடங்கியுள்ளது என்பேன் இதையும் தின்றுவிட்டு நல் முறையாக உறங்கினால் அப்பனே ஜீரண உறுப்புக்கள் சரியாக செயலிழக்காமல்  இருந்துவிடும். அதனால்தான் அப்பனே ஆனாலும் அதை யாருமே அறிவதில்லை என்பேன்.


இப்பொழுது தெரிகின்றதா?? படைப்புகளைப் பற்றி.


அப்பனே ஆனாலும் சில திருத்தலங்களில் நல் முறைகளாக துளசியை விதைக்கின்றனர் கொடுக்கின்றனர் ஆனாலும் இதனை பற்றி தெரிந்து கொள்க.


அப்பனே இவையும் உண்ண நோய்கள் இல்லை.


அப்பனே மற்றொன்றை எடுத்துக்கொள்ளுங்கள் அப்பனே வில்வம் என்கின்றார்களே அப்பனே இதிலும் சூட்சுமம் உள்ளது என்பேன்.


ஏன்?  எதற்காக? ஈசனுக்கு வில்வத்தை படைக்கிறார்கள் என்பதைக் கூட யாருக்கும் தெரிவதில்லை என்பேன்.


அப்பனே அதைத் தின்று பாருங்கள் தெரியும் ஈசனே பேசுவான் உங்களிடம்.


அப்பனே இவைதன் உணர்ந்து நன்கு தெளிவு பெற்றால் இவைதனை நன்கு சாப்பிட்டால் நல் முறைகளாக உடம்பில் ஒரு குறைகளும் வராது என்பேன்.


வராது என்பேன் அப்பொழுது தான் இறைவன் நிச்சயமாய் கண்களுக்குத் தெரிவான்  என்பேன்.


அப்பனே ஆனாலும் இவையன்றி கூற இதனையும் நின்று பார்த்தால் அப்பனே ஒன்றும் இல்லை.


சில திருத்தலங்களில் அப்பனே இனிப்பை கொடுப்பார்கள் என்பேன்.


இனிப்பு என்றால் அப்பனே நல் முறைகளாக தயாரிக்கப்பட்ட சர்க்கரையே என்பேன்.


ஆனாலும் இதற்கு சான்றாக மனிதன் எதை எதையோ நினைத்து கொண்டு இனிப்பை வழங்கி கொண்டு தான் இருக்கின்றான்.


ஆனால் சரியான முறையில் சரியான சர்க்கரையை எடுத்துக் கொள்ளுங்கள்.


அப்பனே நோயும் விலகிப்போகும் அதிவிரைவில்.


அப்பனே இதை விட்டுவிட்டு மனிதன் முட்டாள் மனிதன் என்ன செய்கிறான் என்றால் இவையெல்லாம் இறைவனுக்கு படைத்தால் பின் நமக்கு ஆசீர்வாதங்கள் கொடுப்பான் என்று நினைக்கின்றான்.


ஆனாலும் அப்பனே இவை என்று கூற இறைவன் நீ நினைத்ததற்கு மனிதனை பாவம் என்று நினைக்கின்றான் இறைவன்.


அப்பனே இவை என்றும் கற்பூரத்தை ஏற்றுகிறார்களே இதனைப் பற்றியும் ஒரு உரிமை சொல்கின்றேன்.


அப்பனே பச்சை கற்பூரத்தை மாதம் ஒருமுறை எவன் உண்ணுகிறானா அவனிடம் இறைவன் நின்று பேசுவான்.


அப்பனே முற்காலத்தில் அப்பனே எவ்வாறு என்பதையும் கூட சில சில மூலிகைகளால் ஆன இப்பொழுது கூட வத்தி (அகர்பத்தி) என்கிறார்களே அதையும் முன் ஜென்மத்தில் பல மூலிகைகள் கலந்து பின் உருவேற்றி அதை தீயிட்டு பற்ற வைக்கும் பொழுது நல் முறைகளாக புகை வரும் அப்பொழுது அவ் நோய்கள் பல நோய்கள் நீங்கும்.


ஆனால் இன்றோ முட்டாள் மனிதன் அதையும் கெடுத்து விட்டான்.


அப்பனே எவ்வாறு என்பதையும் கூட அனைவரும் உலகம் மாறிவிட்டது மாறிவிட்டது என்கிறார்கள் ஆனால் இதற்கும் காரணம் மனிதனே மனிதன் மாறிவிட்டான் என்பதுதான் யான் சொல்வேன்.


அப்பனே இனிமேலும் அப்பன் ஈசன் நிச்சயமாய் நாடகத்தை நடத்துவான் என்பேன்.


மனிதன் மீறினால் எல்லை மீறினால் இறைவனும் எல்லை மீறுவான் என்பேன்.


ஆனாலும் மனிதன் எல்லை மீறும் பொழுது ஆனாலும் அமைதியாக தான் இருப்பான் இறைவன்.


ஆனால்?


இறைவன் எல்லை மீறினால்?? முடியாது !!!என்பேன்.


இறைவனை தடுக்க யாராலும்.!!!!!


அப்பனே தெளிந்து புக்திகளை நல் முறைகளாக இப்படித்தான் வாழ வேண்டும் என்றுகூட நன் முறைகளாக இறைவனை சேவித்து நல் முறைகளாக வாழ்ந்து வந்தால் அப்பனே ஒரு குறையும் வராது என்பேன்.


வராது என்பேன்.


அப்பனே இப்பொழுதும் கூட சொல்லி வைக்கின்றேன் சுத்த சன்மார்க்கத்தை சரி முறையாக கையாள்வது எவன் என்றால் அப்பனே அவனிடத்தில் இறைவனே தேடி வந்துவிடுவான் என்பேன்.


அதைச் செய்யுங்கள் முதலில்.


பின் வாக்குகளாக அனைத்தும் கேளுங்கள் யான் சொல்கின்றேன்.


அப்பனே வள்ளலார் முறைப்படி பின்பற்றினால் ஒரு கடுகளவும் குறை வராது என்பேன். இது நிச்சயம்.


அப்பனே மாய மயக்கத்தில் அப்பனே மனிதன் விழுந்து விடுவதற்காகத்தான் அப்பனே துன்பம் என்ற நிலை ஆனாலும் கர்மாக்கள் இறைவனால் நீக்கமுடியும் என்பேன்.


புண்ணியத்தை நீக்கமுடியாது என்பேன்.


அதனால் புண்ணியம் சேர்த்துக் கொள்ளுங்கள்.


புண்ணியம் சேர்த்துக் கொள்ளுங்கள்.


புண்ணியத்தை சேர்த்துக் கொண்டால்


இறைவனாலயே ஒன்றும் செய்ய இயலாது என்பேன்.


அப்பனே அறிவுகள் பலம் பலம் என்றுதான் சொல்லிக் கொண்டு போய்க் கொண்டிருக்கின்றது.


ஆனால் மனிதனோ இங்கு இறைவனை வணங்குகின்றான் இல்லத்தில் சென்று பின் நல் முறைகள் ஆகவே இவை தான் உண்மை என்று பின் பின் அநியாய காரியங்களை செய்கின்றான்.


இது நியாயமா???


அப்பனே நல் முறைகளாக இங்கு உள்ள வரை அப்பனே


இவ் சுற்றியுள்ள ஊர்களிலும் இவன்(மௌனகுரு ரெட்டி சித்தர் சுவாமிகள்) திருத்தத் தான் பார்க்கின்றான்.


ஆனாலும் திருத்த முடியவில்லை இவனால்.


அதனால்தான் யான் யானே(அகத்தியர்) பொதுவாக வாக்குகளை செப்பி வருகின்றேன் இப்பொழுது.


அப்பனே இவந்தனும்(மௌனகுரு ரெட்டி சித்தர் சுவாமிகள்) நல் முறைகளாக யாராவது பின் நல் முறைகளாக மனது தூய்மையாக இருந்து எதையும் வேண்டாம் என்று எண்ணி நல் முறைகள் ஆகவே வேண்டினால் அனைத்தும் கொடுக்கலாம் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறான்.


ஆனாலும் யாரும்? எவ்வாறு? என்பதையும் கூட அவன் விருப்பம் போல் நடந்து கொள்ளவில்லையே???!!!! அப்பன்களே!!!


அப்பனே உயிர் வாழக்கூடியதற்கு அப்பனே எவை என்று கூற இவ்வுலகத்தில் இலவசமாகவே தருகின்றான்.


காற்றை பின் எவை? என்று கூற பின் அனைத்தும் தர மாட்டானா? என்ன??


அப்பனே ஆதங்கமாக இருந்தான் (மௌனகுரு ரெட்டி சித்தர் சுவாமிகள்) இவன்.


அதனால் தான் அப்பனே என்னையும் அழைத்தான் என்பேன் இவனே.


அப்பனே திருந்தப் பாருங்கள் அப்பனே நல் முறைகளாகவே நல் முறைகள் ஆகவே இது ஆன்மீகம் பூமியாக மாறும் என்பேன் இன்னும் பலகோடி சித்தர் ஜீவ சமாதிகள் இருக்கின்றன. அதனையும் மனிதர்கள் அழித்துவிட்டனர். அங்கே அழித்து அழித்து இல்லத்தையும் கட்டிக் கொண்டிருக்கின்றனர் பல மனிதர்கள். ஆனாலும் வரும் காலங்களில் நிச்சயமாய் ஈசனே எழுவான் என்பேன் அங்கங்கே ஆசிர்வாதங்கள் கொடுத்து புண்ணிய பூமியாக இனிமேலும் மாற்றுவான் என்பேன்.


அப்பனே அநியாயம் எப்போதும் ஓங்கி நிற்காது என்பேன்.


தர்மமும் வரும் என்பேன்.


அப்பனே இதனால்தான் அப்பனே மனிதன் போக்கை பார்த்தால் அப்பனே சரியில்லை தான் என்பேன் யான்.


இதைக்கூட நினைக்கின்றான் இங்கு அமர்ந்து இருக்கக்கூடியவன்(மௌனகுரு ரெட்டி சித்தர் சுவாமிகள்).


பாகம் 3


அப்பனே நல் முறையாக மனிதர்கள் இயற்கை உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பேன்.


அப்பனே நோயைத் தீர்க்கும் மருந்து பூமியில் இருக்கும் அடியில் இருந்து(கிழங்கு வகைகள்) உடனே எடுக்க நோய் தெரிந்துவிடும் என்பேன் அதனால் அதையும் "உண்ணுக! என்பேன்.


அப்பனே நலமாக நலமாக எவை என்று கூற மனிதன்தான் மறுபிறப்பும் எடுக்கின்றான் என்பது உறுதியாக யான் சொல்வேன்.


அப்பனே எவை என்று கூற யாங்கள் சொல்லிக் கொண்டே இருக்கின்றோம். புண்ணியங்கள் செய் புண்ணியங்கள் செய் என்று.

ஆனால் மனிதனோ யாங்கள் கர்மங்கள் செய்வோம் கர்மங்கள் செய்வோம் என்று தான் போய்க் கொண்டு இருக்கின்றான்.

அக் கர்மா பாதையில் சென்றால் பின் பிறவிகள் பிறவிகள் என்று எடுத்துக்கொண்டாகவேண்டும் என்பது நிலைமை. இப்பொழுது பாருங்கள் நீங்களே!!! யாரிடமிருந்து பிறவி ஏற்படுகிறது?? என்று.


அப்பனே அலைந்து திரிந்து அப்பனே இதனால்தான் அப்பனே வாக்கியன் (சிவவாக்கியர் சித்தர்) சொல்கின்றான். வாக்கியன்! எவ்வாறு என்பதைக்கூட நிலைநிறுத்தி பார்க்கும் பொழுது பாவம்! மனிதன்! எங்கெங்கோ? தேடி தேடி அலைந்து திரிந்து உண்மைப் பொருளை பின் கண்டுகொள்ளாமல் இறந்து விடுகின்றான். திரும்பவும் வருகிறான். அப்பொழுது கூட உண்மை நிலை புரியாமல் வாழ்கின்றானே!!என்று மனிதனை பின் வாக்கியனே பின் திட்டுகின்றான் . என்பேன்.


அப்பனே இதற்கும் காரணம் அப்பனே கஷ்டங்களுக்கும் காரணம் எவ்வாறு என்பதை கூர்ந்து பார்த்தால்  மனிதனே என்பேன்.


மனிதன் மூலமாகத்தான் கஷ்டங்கள் வருகின்றது என்பதை நினைத்துக் கொள்ளுங்கள்.


தாங்கள் தங்கள் எவ்வாறு? இப்பொழுது நிலைமையில் இருக்கின்றீர்களோ? இவ் நிலைமைக்கும் நீங்கள் தான் காரணம் என்பேன்.


இறைவனை குறை கூறாதீர்கள் எப்பொழுதும் கூட.


அப்பனே நிலைமையும் மாறும் இவ் நிலைமை மாறுவதற்கு புண்ணியங்கள் தான் அவசியம்.


அவை எவ்வாறு என்று கூட மனிதனுக்கு தெரியும் அதை பயன்படுத்தி கொள்ளுங்கள் என்பேன் கொள்ளுங்கள் என்பேன் அப்பனே அப்பொழுது கூட இறைவன் உங்கள் வாழ்க்கையையே மாற்றி விடுவான் இதுதானப்பா உண்மை.


அப்பனே கர்மாக்கள் ( பணம், பொருள் ) செய்துகொண்டே இருந்தால் அப்பனே எவ்வாறு என்பதையும் கூட தெரியும் அளவிற்கு சொல்கின்றேன் ஒன்றை. இவ்வாறு செய்து கொண்டிருந்தால் அவன் நன்றாகத்தான் இருப்பான் ஆனால் அப்பனே அவன் குலமே அழிந்துவிடும் என்பேன் கடைசியில்.


ஆனாலும் புண்ணியங்கள் தேடிச் சென்றால் அப்பனே புண்ணியங்களை தேட தேட இறைவனே உந்தனக்கும் நல்லருள்கள் கொடுத்து மீண்டும் ஒர் முறை இறைவனே பிறப்பிப்பான் இதுதான் உண்மை.


அப்பனே இவ்வாறு புண்ணியத்திற்கேற்ப பலனுக்கு ஏற்ப இறைவனே தரிசனம் கொடுத்து அல்லது மாறுபாடாக மாறுவேடம் ஆக வந்து உந்தனக்கு என்ன தேவை? என்று கேட்பான். அப்பொழுது கூட நல் முறைகளாக இறைவனே போதுமென்று புண்ணிய ஆத்மாக்கள் சொல்லும்.


சொல்லும்பொழுது ஆனாலும் இவனை வைத்து நல் முறையாக இவ்வுலகத்தை மாற்றலாம் என்று எண்ணி இறைவன் சந்தோசபட்டு அடுத்த பிறவி கொடுப்பான் என்பேன்.


அப்பனே ஒன்றை மட்டும் சொல்கிறேன் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள் உந்தனுக்கு அப்பனை நீங்கள் ஒவ்வொரு ஒவ்வொருவரும் அப்பனே எவ்வாறு என்பதைக் கூட யான் தவறு செய்யவில்லை நிச்சயமாகயென்றால் இவனை(மௌனகுரு ரெட்டி சித்தர் சுவாமிகள்) திட்டித் தீர்த்துக் கொள்ளலாம் என்பேன் எந்தனக்கு ஏன்? இதைச் செய்யவில்லை? என்று.


நிச்சயமாய் இவனே பதிலளிப்பான் என்பேன்.


அப்பனே நல் முறைகளாக இன்னும் இன்னொரு முறையும் சொல்கின்றேன் அப்பனே ஓர் தாயவளுக்கு தன் குழந்தையை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது உறுதியாக தெரியும் என்பேன் அதனால் எவ்வாறு என்பதையும் கூட குழந்தையும் மௌனமாக தான் இருக்கும் என்பேன் அது போல மௌனமாக நீங்கள் இருங்கள் இறைவன் என்ன செய்வான் என்பது இறைவனுக்குத் தெரியும்.


அப்பனே ஆனாலும் கலியுகத்தில் அப்பனே இறைவனை அன்போடு நினைத்தாலே நிச்சயம் ஏற்படுத்துவான் உதவிடுவான் அப்பனே ஏனென்றால் கலியுகத்தில் அனைவரும் திருடர்களே என்பேன்.


குருநாதர் அகத்தியர் மௌன குரு ரெட்டி சித்தர் சுவாமிகள் ஜீவசமாதியில் சில அகத்தியர் அடியவர்கள் கேள்விகளுக்கு பதில் வாக்கு. 


குருவே  குலதெய்வ வழிபாடு குறித்து கூறுங்கள்


அப்பனே எவ்வாறு என்பதையும் கூட நிலை நிறுத்தும் பொழுது அப்பனே நீங்கள் ஒழுங்காக இருந்தால் தான் உங்கள் குல தெய்வமும் உங்களைப் பாதுகாக்கும் என்பேன். பின் நீங்கள் ஒழுங்காக இல்லையென்றால் பின் குலதெய்வத்தை வழிபட்டு என்ன பிரயோஜனம்?? மகனே!


குருநாதரே முன்னோர்கள் வழிபாடு குறித்து கூறுங்கள்


அப்பனே முன்னோர்களின் நல் முறைகளாகவே எவ்வாறு என்பதையும் கூட முன்னோர்களின் ஆசி பெறுவது பற்றி கூறுகின்றேன். அப்பனே. அப்பனே பௌர்ணமி அமாவாசை திதிகளில் முன்னோர்களுக்கு நல் முறைகளாக வணங்கி வணங்கி அப்பனே பல புண்ணியங்கள் செய்ய வேண்டும் என்பேன். இயலாதவர்களுக்கு உணவளிக்க வேண்டும் அவர்கள் பிழைப்பதை நினைத்து நல் முறைகளாக. நல் முறைகள் ஆகவே அவர்களை (முன்னோர்களை) நினைத்து நீங்களே வாங்கிக் கொள்ளவேண்டும் என்று மனதில் எண்ணி நினைத்து கொடுங்கள் நல் முறைகளாக பின் அமாவாசை திதிகளில் நல் முறைகளாக காவேரி நதியில் நீராடி அப்பனே செல்லுங்கள் அப்பனே நல் முறைகளாக புண்ணிய நதிகளில், கடலில் நீராடுங்கள் நிச்சயமாய் கிடைக்கும் என்பேன்.


குருவே பிரம்ம முகூர்த்தத்தில் தீபமேற்றி வழிபாடு செய்வது அதன் பலன் குறித்து கூறுங்கள்


அப்பனே பலன்களா?? அப்பனே நீங்களே தீபம் இட்டுக் கொண்டே இருங்கள் என்ன பலன் என்பதை நீங்களே அறிவீர்கள் அப்பனே. நல் முறைகளாக எதற்காக அப்பனே எதற்காக தீபத்தை நல் முறைகளாக பின் பிரம்ம முகூர்த்ததிலே இட்டு அதன் ஒளியை நீங்கள் பார்க்க அப்பனே நல் முறைகளாக மனதில் ஏற்ற பின் உச்சத்திற்கு செல்ல அப்பனே அனைத்தும் ஒழிந்து விடும் தீய எண்ணங்கள் தோன்றாது என்பேன் அதனால்தான் அப்பனே பின் ஏற்ற சொல்லுகின்றார்கள் அப்பனே.


குருவே மோட்ச தீபம், அமாவாசை மோட்ச தீப வழிபாடு குறித்து கூறுங்கள்.


அப்பனே எதற்காக  மோட்ச தீபம் இடுக்கின்றீர்கள் என்று உங்களுக்கு தெரியுமா?? இறந்தவனுக்கு தான் மோட்ச தீபம் அப்பனே அதைத் தெரிந்து கொள்ளுங்கள் என்பேன். யாங்கள் (சித்தர்கள்) அனைவரும் உயிரோடு தான் இருக்கின்றோம்.


அப்பனே நல் முறைகளாக நல் முறைகளாக உயிரோடு இருப்பவர்களுக்கு எதற்காக?? மோட்சதீபம்?? மோட்ச தீபம் ஏற்றுவதால் கஷ்டங்கள் தான் ஏற்படும் இதனையுமன்றி கர்மாவின் பாதையை தேர்ந்தெடுக்காதீர்கள். அப்பனே மனிதனுக்குத் தெரியும் மோட்சதீபம் வீட்டில் ஏற்றக்கூடாது என்று அப்பனே நிச்சயம் சொல்கின்றேன் மோட்ச தீபத்தை ஏற்றினால் கஷ்டங்கள் தான் நீங்கள் படவேண்டும் உறுதியாகச் சொல்கிறேன் உங்களுக்கும் தெரிந்திருக்கும் நீங்களும் உணர்ந்திருப்பீர்கள் அப்பனே மோட்ச தீபம் ஏற்றினால் என்ன லாபம்? என்று.


அப்பனே நல் முறையாய் இதைப்பற்றி இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன் அப்பனே தீபம் ஏற்றுங்கள்.


எத்தனை தீபம் ஏற்றுக்கின்றீர்களோ அதற்கு தகுந்தாற்போல் உணவை அளித்திட வேண்டும் மற்றவர்களுக்கு நல்முறையாக அனைத்து உயிரினங்களுக்கும் ஏதாவது ஒன்றை.


குருவே வீட்டில் அகல் விளக்கில் விளக்கு ஏற்றலாமா குத்துவிளக்கில் வீட்டு ஏற்றலாமா??


அப்பனே நான் ஒன்றை கூறுகின்றேன் நீ உணவை உண்ணும் பொழுது மண்ணில் இட்டு உண்பாயா? எவ்வாறு என்பதை கூட அல்லது தட்டில் இட்டு உண்பாயா?? என்று கேட்கும் கேள்விகளாகவே தெரிகின்றது அப்பனே எதையாவது செய்து கொள் மனம் அன்போடு இருந்து.


குருவே தொடர்ந்து அமாவாசை தோறும் ஏற்றிவந்த மோட்ச தீபத்தை மாற்றி இறைவனுக்கு தீபத்தை ஏற்றி சாதாரண தீபமாக ஏற்றி வழிபடலாமா??


அப்பனே ஏற்றி பாருங்கள் அப்பனே நல்லவை நடக்கும் என்பேன்.


குருவே இறந்தவர்களின் புகைப்படத்தை வைத்து வணங்கலாமா??


அம்மையே இவை எவ்வாறு நீ கூறலாம் என்பேன் ?? அம்மையே இப்பொழுது இறந்திருப்பவன் அவந்தன் பிறவியை எவ்வாறு கர்மத்தை சேர்த்திருந்தால் மறு உடம்பில் நுழைவான் பின் மறு உடம்பில் நுழைந்தாலும் மீண்டும் பிறப்புகள் எடுத்து விடுவானே இது என்ன? கேள்வி.


குருவே குடும்பத்தில் முன்னோர்கள் அவர்கள் மறைந்த தினத்தில் வழிபாடு வருடத்திற்கு ஒரு முறை செய்து வருகிறோம் இது சரியானதா??


அப்பனே எவ்வாறு என்பதையும் கூட கூர்ந்து கவனித்துப் பார்த்தால் அப்பனே புண்ணிய ஆன்மா இறைவனே ஏற்படுத்துவான் என்பேன். அவ் ஆன்மா நல் முறைகளாக மற்றொரு இடத்தில் பிறக்கும் என்பேன் இவை போன்று செய்தால் அவ் நல் புண்ணியங்களும் உங்களைச் சேரும் என்பேன். இது சரியானதே என்பேன்.


குருவே ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நரிப்பாறை என்ற தலம் உள்ளது அங்கே 6 மணிக்கு மேல் அமானுஷ்யங்கள் தாக்குகின்றன என்று வதந்திகள் உள்ளது அங்கு சென்று தியானம் வழிபாடுகள் செய்யலாமா.? 


அப்பனே இவையெல்லாம் அப்பனே மனம் மனம் ஆனாலும் அப்பனே நிச்சயம் சென்று வழிபடலாம் என்பேன் இவையெல்லாம் சென்று பார்த்தால் அப்பனே மாயை என்பேன்.


குருவே (அகத்தியரை) உங்களை வழிபட்டால் குலதெய்வம் தானாக வந்துவிடுமா?


அப்பனே நல் முறைகள் ஆகவே அப்பனே சித்தர்களை வழிபட்டால் யாங்களே உங்களை நல் முறைகளாக சிறுபிள்ளைகள் ஆகவே நல் முறைகளாக கையை பிடித்து இழுத்து செல்வோம் அப்பனே கவலைகள் விடு.


குருவே செய்வினைகள் என்று சொல்கின்றார்களே அது என்ன??


அம்மையே எவ்வாறு என்பதையும் கூட இதையும் கேட்பது சரியானதா??? ஆனாலும் அம்மையே நீ செய்யும் வினைதான் செய்வினையாக வருகின்றது.


பழிப்பவர்கள் பழிக்கட்டும் தூற்றுபவர்கள் தூற்றட்டும் இந்த வார்த்தையை ஞாபகம் வைத்துக் கொள் மகளே. இறைவன் இருக்கின்றான் என்று உன் பாதையில் நீ சரியாக சென்று கொண்டு இரு.


குருவே மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வடக்கு கோபுரத்தின் கீழே மகா முனீஸ்வரர் இருக்கின்றார் அந்த முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் தடைபட்டு நீண்டு கொண்டே போய்க் கொண்டிருக்கின்றது கடந்த ஆறு வருடங்களாக கும்பாபிஷேகம் தடைப்பட்டுள்ளது.


அப்பனே இவை என்று கூற இதனை என்று கூற மக்கள் சரியில்லை என்று கூட மீனாட்சி தேவியே நிறுத்திக் கொண்டிருக்கின்றாள் பொறுத்திரு வழியும் விட்டு விடுவாள் அவளே.


அப்பனே இதுவும் புரிந்து கொள்ளடா இறையருள் இருந்தால் மட்டுமே அனைத்தும் நடக்குமென்று.


அப்பனே இதைப்பற்றி கேள்வி கேட்பதற்கு நீங்கள் யார் ?எவ்வாறு என்பதை இவ்வாறு நீங்கள் கேட்கலாம்?


இறைவன் அனைத்தும் உருவாக்கினான் பின் அவைதன் எவ்வாறு என்பதையும் கூட தன் நிலைமையை இறைவன் பார்த்துக் கொள்வான் உங்கள் நிலைமையை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.


குருவே சிலசமயம் நாங்கள் பூஜை அல்லது வழிபாடு செய்ய முனையும் பொழுது மனதில் வீணான குழப்பங்கள் சஞ்சலங்கள் ஏற்படுகின்றது இதற்கு என்ன செய்வது??


அப்பனே இவையன்றி கூற இவையெல்லாம் அப்பனே ஏது? என்று கூற இதனால்தான் அப்பனே யான் சொல்கின்றேன் இதை நீங்கள் பயன்படுத்திக் கொண்டால் மனது ஒரு குரங்கு என்பேன் மனது அப்படித்தான் அதை நம்பி போனால் வீணாகிவிடும் வாழ்க்கை அப்பனே அதனால்தான் சொல்கின்றேன் அப்பனே அனுதினமும் ஒரு மணி நேரம் நல் முறைகளாக தியானங்கள் செய் போதுமானது உங்கள் மனது தானாகவே மாறிவிடும் அப்பனே.


குருவே வேலை இன்மை பிரச்சினை இருந்து கொண்டே இருக்கின்றது என்ன செய்வது?


அப்பனே வேலை என்கிறார்கள் ஆனால் அப்பனே வேலை உன்னை தேடி வராது அப்பனே நீதான் தேடி செல்ல வேண்டும் என்பேன். முயற்சிகளும் செய்து கொண்டே இருக்க வேண்டும் அப்பனே. அப்பனே எவ்வாறு என்பது கூட இறைவன் எவ்வாறு என்பதை கூட இறைவன் எதையும் தரமாட்டான் என்பேன் ஆனால் அதற்குரிய முயற்சிகள் நல் மனதோடு தூய எண்ணங்களோடு அன்போடு நல் முறைகளாக இறைவனை எண்ணிக்கொண்டு இருந்தால் அதற்கு உதவிகரம்  இறைவன் நீட்டுவான் என்பேன்.


குருவே மக்களுக்கு ஆசி கூறுங்கள் 


பெற்றால் தான் பிள்ளையா அப்பனே அம்மையே அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நல் மனதாக வேண்டிக்கொள்ளுங்கள் நீங்கள் அனைவரும் நன்றாகவே இருப்பீர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆசிகள் ஆசீர்வாதங்கள்!


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!


சர்வம் சிவார்ப்பணம்!!!!!