“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Wednesday, April 3, 2024

சித்தர்கள் ஆட்சி - 370 : அகத்திய மாமுனிவர் வாக்கு - 30/12/2021 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம். சுசீந்திரம் தாணுமாலயன் திருக்கோயில்.

 “இறைவா!!! அனைத்தும் நீ”




உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 


30/12/2021 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம். சுசீந்திரம் தாணுமாலயன் திருக்கோயில். 

வாக்குரைத்த ஸ்தலம். சுசீந்திரம் தாணுமாலயன் திருக்கோயில்.

ஆதி சிவசங்கரியின் பொற்பாதத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 


நலமாக என்னுடைய ஆசிகள்.


ஆசிகள் யான் தந்து கொண்டே தான் இருக்கின்றேன்.

இக் கலியுகத்தில் மனிதர்கள் நிலை இல்லாமல் பின் திரிந்து மனம் போல் போன போக்கிலே போய்க்கொண்டிருப்பார்கள். என்பேன்.

அவையெல்லாம் தவிர்த்து இறைவனோடு சேர்ந்து விட்டால் நல் மாற்றங்கள் நிச்சயம் நிகழும் என்பேன்.

ஆனாலும் ஒவ்வொரு விதமாக யான் மனிதனை பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன்.

ஆனாலும் இதையுமன்றி இதனையும் மீறி பின் பின் செல்கின்றான் மாய உலகில்.

இதை நிறுத்திக் கொண்டாலே போதுமானது.

ஆனாலும் வரும் காலங்களில் நிறுத்திக்கொள்ள மனிதன் போவதில்லை.

அதனால் யாங்களே நிச்சயம் சில வினைகளை பின் புகுத்தி திருத்துவோம் என்போம்.என்போம்! 


இன்னும் பல மாற்றங்கள் உண்டு. ஆனாலும் ஆசீர்வாதங்கள்.

எந்தன் அருளால் எங்கு செல்ல வேண்டும்? எங்கு தரிசிக்க வேண்டும்? என்பதெல்லாம் யான் உங்களுக்குள்ளே மனதில் நுழைந்து சொல்லிக்கொண்டே வருவேன் என்பேன்.

இங்கு கூட(சுசீந்திரம் கோயில்) மனக்குழப்பங்கள் அகலும் என்பேன்.


அகலும் என்பேன் பல கிரகங்களின் பல கிரகங்களும் இங்கு வந்து சாப விமோசனம் கிரகங்களுக்கே ஈசன் கொடுத்தான் என்பது மெய்யே.


இதனால் கிரகங்களால் ஏற்படும் மனக்குழப்பத்திற்கு பின் ஏற்ற ஸ்தலம் இவை என்று கூட யான் சொல்வேன்.


யான் சொல்வேன் பல சித்தர்களும் ஞானியர்களும் வந்து வந்து பல பல பல உண்மைகளை இங்கே தான் சொல்லி மறைத்து வைத்திருக்கிறார்கள் என்பேன்.

இதன் அடியில் கூட இன்னும் சுவடிகள் காணப்படுகின்றது என்பேன். ஆனாலும் மறைத்துள்ளனர்.

அவை என்ன என்று கூற இன்னும் கலியுகத்தில் எதனையும் என்று இதனையும் பயன்படுத்தி கொண்டால் பின் மனிதன் தவறான வழியில் செல்வதற்கிணங்க ஈசன் காலடியிலேயே மறைத்து வைத்து விட்டான்.

பின் உலகம் நியாயத்திற்கு வரும் தர்மம் வரும் பொழுது அவை எல்லாம் மீண்டும் எழும்பும் என்பேன்.

எழும்பும் என்பேன். உண்மைதனை உணர்ந்து உணர்ந்து.

இன்னும் பல தவ சித்தர்கள் இன்னும்கூட இப்புவியுலகில் தவம் செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

ஆனாலும் மனிதன் நிலைமையோ பின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாக போய்க்கொண்டிருக்கின்றது.

இன்னும் மனிதனால் மனிதன் மனிதனாகவே வாழ்வது கூட இல்லை என்பேன்.

இல்லை என்பேன்! இன்னும் பரிசுத்த ஆன்மாக்கள் இவ்வுலகில் யாங்களே பிறக்க வைப்போம் இதனால் இதனால் நன்மைகளே உண்டு உண்டு  என்பேன்.


எதனையும் என்று  முற்படுத்திப் பார்த்தால் பொய்யான உலகத்திலே மனிதன் தவறு செய்து கொண்டிருக்கின்றார்கள் இதையும் யான் பலமுறை சொல்லிவிட்டேன்.


சொல்லிவிட்டேன் என்பதைக்கூட இதனையும் அறிந்து பின் நீங்களும் எந்தன் பெயரைச் சொல்ல அருகதை வேண்டும் அருகதை எவ்வாறு என்பதையும் கூட அருகதை யுடன் தகுந்தாற்போல் புண்ணியங்கள் தேவை.

இவ்வுலகில் இதனையும் என்று கூற இன்னும் இதனால்தான் புண்ணியம் செய்து கொள் என்பதெல்லாம் யாங்கள் சித்தர்கள் சொல்லிக்கொண்டே தான் வருகின்றோம்.


இதனையும் என்று கூற நீங்கள் செய்த புண்ணியங்கள் பின் நிச்சயமாய் திருத்தலத்திற்கு பின் இங்குள்ள சக்திகள் எவ்வாறு என்பதைக்கூட பின் விநாயகப் பெருமான் முருகன் பின் இன்னும் கூட பைரவன் இவை என்று கூற அனைத்து தெய்வங்களும் சேர்ந்து அழைக்கும்.


ஆனாலும் மூலன் (திருமூலர்) கூற்றுப்படி ஒன்றே தெய்வம் ஒன்றே. இதனையும் என்று கூற இத் தலத்தை(சுசீந்திரம் திருக்கோயில்) பற்றியும் விவரமாக விவரிவித்தால் இதனையும் என்று கூற அனைத்திற்கும் ஈசனே காரணம். ஈசன் ஒருவனே என்பது தான் இங்கு நிச்சயமாக ஆனாலும் அவரவர் விருப்பப்படி அவரவர் வடிவிலும் பின் வணங்குகின்றார்கள் என்பதை இதைப் பற்றிக் கூட யான் தெளிவாக தெரிவிக்கின்றேன் வரும் காலத்தில்.


வரும் காலத்தில் எதனை அழிக்க வேண்டும்? எவ்வகையான கொடுக்க வேண்டும் என்பதையெல்லாம் அவதாரங்களாக ஈசன் எடுத்துக் கொண்டே வந்து கொண்டிருக்கின்றான். ஆனாலும் இக்கலியுகத்தில் கூட ஈசன் வருவான் என்பது மெய்.


இதனையும் முன் நின்று பார்த்தால் நிச்சயமாக பல தொல்லைகள் மனிதனுக்கு உருவாகிக்கொண்டே இருக்கும் என்பேன்.


நிலையில்லாதவர்கள் எவர் என்று கூற நிச்சயமாய் பார்க்கப்பட்டால் இனிமேலும் குறைகள் வரும்.


குறைகளில்லாத மனிதர்கள் இவ்வுலகத்தில் இல்லை. இல்லை என்பேன். 


எனது ஆசிர்வாதங்கள்.


யானும்கூட அமர்ந்து கொண்டுதான் இருக்கின்றேன் இங்கே. 

எவ்வாறு என்பதையும் கூட மேன்மை பெற்று கந்தனும் ஆசிர்வதிப்பான் என்பேன்

கந்தனும் ஆசீர்வதித்து விட்டதோடு இன்னும் பல உண்மைகளை தெரிவிப்பான் என்பேன். 


அப்பனே வந்தது எதற்காக?


என்று தெரிந்து கொண்டு பின் வாழ்க்கையில் பயன்படுத்தினால் நன்றே என்பேன்.


பின் எதனையும் என்று கூற வரும் மனிதர்களுக்கு கூடவே அனைத்தும் வந்துவிடுகின்றது பிறப்பிற்கு ஏற்றவாறே, ஏற்றவாறே

இன்பம் துன்பம் எவை என்று கூற குழப்பங்கள் இதனையும் என்று கூட மனிதன் சுமந்து வந்து கொண்டே இருக்கின்றான்.

ஆனாலும் அதை நிறுத்த முடியும் மனிதனாலே. 

ஆனால் நிறுத்துவதற்கு இயலவில்லை.


இயலவில்லை  என்பேன் ஆனாலும் மனிதர்கள் பல வழிகளில் பல பல திருத்தலங்களுக்கு நாடித்தான் சென்றுள்ளனர்.

ஆனாலும் கஷ்டங்கள் தீர்வதாக இல்லை ஆனாலும் எப்பொழுது எங்கு எங்கு சக்திகள் வரும் எவ்வாறு உண்மை நிலை என்று கூற எங்கு அமர்ந்திருந்து தியானம் செய்ய வேண்டும்? என்பதெல்லாம் குறிக்கோளோடு எழுதப்பட்டு இருக்கின்றது சுவடிகளில்.

ஆனாலும் அதனையும் கலியுகத்தில் தெரிவிப்பதாக அனைத்து மறைத்துவிட்டனர் என்பதற்கிணங்கவே சொல்லுகின்றேன் அதனையும் உணர்ந்து   சரியான நேரத்தில் சரியான பகுதியில் தியானம் செய்தால் இறைவனே ஆசிர்வதித்து  சென்று விடுவான்.


இதனால் மிக்க மகிழ்ச்சிகள்  தூய்மை .இல்லாத தூய்மை இல்லாதவரும் அளவுக்கு கூட இன்னும் பல உண்டு.

உண்டு என்பேன் என்பதற்கிணங்க இன்னும் மாற்றங்கள் .

இதைத்தான் சொல்கின்றேன் வரும் வரும் காலங்களில் எங்கு அமர்ந்து கொண்டால்? எங்கு தியானம் செய்து கொண்டால்? இன்னும் மிக்க மகிழ்ச்சி என்பேன்.


எதனையும் என்று கூற நிச்சயம் எவ்வாறு? எவ்வாறு? என்பதை கூட கிரக தோஷங்கள் மனக்குழப்பங்கள் பின் இதனையும் என்று கூற எதையும் உணராமல் கோபங்கள் பின் நஷ்டங்கள் இவையன்றி கூற இங்கு (சுசீந்திரம் தாணுமாலயன் திருக்கோயில்) ஓர் மண்டலம் வந்து பின் ஒர் நேரத்தில் எதனை என்றுகூட சொல்கின்றேன்


ராகு நேரத்தில் ஆனாலும் இவைதன் எங்களுக்கு தேவை இல்லை ஆனாலும் மனிதர்கள் இதை நினைத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.


ராகு காலம் எமகண்டம் இவைதன் பின் பின் வரும் என்பதைக்கூட நாட்கள் கோள்கள் இவை என்பதைக்கூட ஆனாலும் சரியான விளக்கத்தின்படி மனிதர்கள் புரியுமறிய யான் சொல்கின்றேன்.


ராகு காலத்தில் இங்கு அமர்ந்து தியானம் செய்தாலே போதுமானது என்பேன். பல உண்மைகளை பல பல பல நிரந்தரங்களையும் இல்லாமல் போய் விட்டு பல குழப்பங்களும் இல்லாமல் போய்விடும் என்பேன்.


ஆனாலும் மனிதன் ஆனால் ஒரு சிலருக்கே இறைவன் இத்தகுதியில் படைத்தவாறு இங்கு அழைப்பான் என்பேன்.


ஆனாலும் இதனையும் என்று கூற அறிந்து இங்கு வந்து பின் தியானங்கள் செய்தால் அப்பனே மறைமுகமாக சில சக்திகள் ஏற்படும் என்பேன்.


கிரகங்களும் இங்கேதான் வந்து வழிபட்டு தன் குறைகளை நீக்கிக் கொண்டு கிரகங்களில் பல மடங்கு புண்ணியங்கள் பெற்று விட்டது இதனால் தாம் தம் உயர்விற்கும் சகல தோஷங்களும் எவ்வாறு நின்று நின்று அனைத்து தெய்வங்களின் ஆசிகளும் அருள்களும் உண்டாக்கும் என்பேன். இங்கும் கூட


இங்கும் கூட பல அரசர்களும் வந்து  வழிபட்டு வழிபட்டு பின் எதனையும் என்று கூற இங்கேயும் எதனையும் என்றுகூட ஈசன் ஒருவனே என்பதற்கிணங்க மேலும் கீழும் இங்கு அமர்ந்திட்டான்.

ஆனாலும் இத்தலம் அப்பொழுது வரவில்லை ஆனாலும் இதை அறிந்த மன்னர்கள் இங்கு வந்து விட்டார்கள்.

ஆனாலும் ஈசனோ பின் இதனையும் என்று கூற அறியாத உண்மையாக அப்படியே நின்றுவிட்டான்.


ஆனால் இங்கு சக்திகள் இருக்கின்றது என்பதற்கிணங்க பின்  எதனையும் என்று கூற அவர்கள் தம் தம் வேண்டிக் கொண்டு இருக்கிருப்பதற்கிணங்க எதனையும் என்று கூற இங்கு ஈசன் இருக்கின்றான் என்பதை உணர்ந்து திரும்பவும் தன் தன் பின் அரச மாளிகைக்குச் சென்று இறைவனே நேரில் தரிசனம் கொடுத்து அதைதன் பின் இங்கே அமைத்தாலும் எதனை என்று கூட அங்கே சக்திகள் இருக்கின்றது.


அதனையும் அமைத்து எவ்வாறு என்பதையும் கூட  அங்கு குறிப்பிட்ட அளவிற்கு மேற்சொன்னவாறு உங்களுக்கே பின் பக்திகள் காண்பித்தால் ஓர் மண்டலம் எதனை என்று கூற அங்கே தியானங்கள் செய்து வந்து வந்து தெளிவு பின் இல்லத்தில் எதனையும் என்றும் கூற  இவ் மாளிகையிலே பின் இதனையும் என்று உணர்ந்துவிட்டு உணர்ந்துவிட்டு பின் தெரிந்து கொண்டால் பின் அனைத்தும் அவ் ஆலயத்தை பற்றி தெரிந்துவிடும் அனைத்தும் நடக்கும் நிறைவேறும் என்பதற்கு இணங்க இவர்தம் கனவிலேயே நல் விதமாக ஈசனே கொண்டு போய் சேர்க்க ஈசனே காட்சியளித்து இங்கே தலம் இத்தலம் அமைந்துள்ளது என்பேன். 


இதனால் அவர்களுக்கு படிப்படியாக உயர்வுகள் உலகம் போற்றும் படி செய்வித்தான் ஈசன் என்பேன் .


அதனால் தான் சொல்கின்றேன் எதனை என்று கூற மனைகள் குறைகள் மனைகளிலும் பின் இருக்கின்றது எவ்வாறு என்பதையும் கூட இங்கு வந்து பின் ஒரு மண்டலம் பின் இதனையும் என்று கூற தரிசித்து தரிசித்து ராகுகாலத்திலே சென்றுவிட்டால் ஈசனே சொப்பனத்தில் வருவான் என்பது மெய். மெய் என்பதைக்கூட என்னவென்று தன் இதனையுமென்று கூற காட்டிட்டு பின் துன்பங்கள் மறையும் என்பதே மெய்.


ஆனாலும் திருத்தலங்களில் எப்படி எதனை என்று கூற மனிதன் ஏதோ தானோ என்று நினைப்பதற்காகவே வருகின்றான் எப்படி? இறைவன் வகுப்பான்?


என்பதைக் கூட நியாயம் இல்லை என்பேன். உலகத்தில் அநியாயம் பின் பெருகிக் கொண்டே போய்க் கொண்டிருக்கின்றது.


அதனையும் யாங்கள் சொல்லிக்கொண்டே தான் வந்து கொண்டிருக்கின்றோம் வந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கிணங்க பின் இனிமேலும் கலியுகத்தில் யாங்களே வந்து வந்து மக்களை திருத்துவோம்.


திருந்தாவிடினும் அவர்களுக்கு பலத்த பலத்த சோதனைகளும் கொடுத்து பின் திருத்துவோம் என்பது மெய்யே.


இதனால் மனிதர்களே பின் அனைத்தும் இறைவன் எவ்வாறு என்பதையும் கூட இறைவன் படைக்கும் பொழுது மனிதனிடத்தில் அனைத்தும் கொடுத்தனுப்புகின்றான் என்பதை கூட யான் ஏற்கனவே சொல்லிவிட்டேன்.

ஆனாலும் அதனை மனிதன் ஒழுங்காக பயன்படுத்துவதாக சரித்திரம் இல்லை.

சரித்திரம் இல்லை என்பதற்கிணங்க தன் ஒழுங்காக பயன்படுத்தி விட்டால் இறைவனை நேரில் தரிசிக்கும் பாக்கியம் இக்கலியுகத்திலே கிடைக்கும் என்பேன்.

அதனால் அதற்குரிய தகுதிகள் மனிதன் பின் படைத்துக் கொள்ள வேண்டும் என்பேன்.

ஆசைகள் மனிதனை விட்டு விட்டதா??


ஆசைகள் தான் பலத்த மனங்களால் கர்மாக்களை ஈர்த்துக் கொண்டு தான் இருக்கின்றது.

ஆனாலும் இறைவனை பக்தியோடு வணங்குகின்றார்களே தவிர அவர்களுக்கு ஆசைகள் பல பல என்பேன்.

இறைவனிடத்தில் தன் ஆசைகளுக்காகவே அனைத்தும் கேட்டுக்கொண்டு பின் செல்கின்றான். இறைவன் எப்படி தருவான்??


இறைவன் பின் தருவதற்கு எவ்வாறு என்பதையும் கூட ஆனாலும் இதையன்றி  கூற இறை பக்தியை செயல்பட்டு வருபவர்களும் இனிமேல் வருவார்கள் என்பேன்.


இறை சிந்தனையோடு இறை பக்தியோடு இன்னும் இறைவனே நீயே என்று எப்பொழுது மனிதனுக்கு தோன்றுகின்றதோ அப்பொழுது நிச்சயமாய் பன்மடங்கு உயர்வுகள் கிடைக்கும் என்பேன்.


அதையும் விட்டுவிட்டு எவ்வாறு இதனையும் என்று கூற அதை பெறுவோமா? இதை பெறுவோமா? என்றெல்லாம் மக்கள் கூட்டம். ஒரு கூட்டம்.

இதனையும் என்று கூற யார் கெடுப்பது? இதனையும் என்று கூற இவ்வாறு தோஷங்களா?? இவ்வாறு வருகின்றதா?? இவ்வாறு வருகின்றது.      என்பதுபடியால் அவ்வாறு சென்றடைந்தால் இவை தீருமா ?தீராதா? இவையெல்லாம் மனிதனுக்கு குழப்பமாக உள்ளது.

ஆனால் இவையெல்லாம் மனதில் நினைத்துக் கொண்டு இறைவனை மறந்து விடுகின்றான்.

ஆனால் திருத்தலங்களுக்கு வரும்பொழுது இறைவா என்று வணங்கி விடுகின்றான்.

இதனையுமென்று நியாயமாகாது! செல்லாது !என்பேன்.


இறைவனை எப்படி? வணங்குவது? என்பதை கூட இன்னும் தெரியாமல் தவித்துக் கொண்டு இருக்கின்றான் மனிதன்.

இதனைத்தான் யான் சொல்வேன் மனிதரிடத்திலே தவறு இருக்கின்றது தவறு இருக்கின்றது என்பேன்.


இதனால் இறைவனை குறை கூறி ஒன்றும் நடக்கப்போவது இல்லை.


இதனால் பக்தியே சிறந்தது.


இறைவனே அனைத்திற்கும் காரணம் இறைவனே காரணம் என்பதெல்லாம் மனிதன் எப்பொழுது? உணர்ந்து விடுகின்றானோ !! அப்பொழுதே அவந்தனக்கு அனைத்துமே நடக்கும்.


இவை மட்டுமன்றி அதை விட்டுவிட்டு இதனைச் செய்வதா? இவை செய்வதா? இதனை என்றும் இவை என்றும் குறிப்பிட்டுச் செய்வது அவை செய்தால் இவை உண்டா? என்பதற்கெல்லாம் எங்கு மனிதனுக்கு அறிவுகள்                பலப்படுகின்றன?


பலப்படுகின்றன என்பதற்கெல்லாம் பின் இறைவனிடத்தில் சாரா முறையாக பின் வந்து வந்து நிற்கும் பொழுது இறைவனும் தந்து கொண்டு எதனை என்று நிரூபித்து காட்டிக் கொண்டே இருக்கின்றான்.


உண்மை அல்ல மனிதன் என்பதற்கிணங்க இன்னும் பல வழிகளில் ஞானத்தை பெறலாம் ஞானத்தை பெறலாம் என்பதற்கிணங்க யான் சொல்லிவிட்டேன் முன்பே.


முன்பே அறுபடைவீடுகள் உண்டு என்பேன் அறுபடைவீடுகள் எதற்காக வணங்குகின்றான் என்பதை கூட தெரியாமல் வணங்கிக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள்.

எதனையும் என்று கூற பின் அறுபடை வீடுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அறிவாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.



இவ் அறுபடை வீடுகளும் தரிசித்து இரு மண்டலம் பின் அவந்தனக்கும்(முருகன்) அங்கே கந்த சஷ்டிக் கவசத்தையும் இன்னும் பல அருணகிரிநாதர் எழுதிய பல புத்தகங்களையும்  பின் எவ்வாறு திருவாசகத்தையும் பின் ஒவ்வொரு தலத்திலும் நல முறையாக இரு மண்டலம் ஜெபித்து பின் இதனையுமன்றி  கூறி பின் ஒவ்வொரு தலமாக அறுபடை வீடுகளை தரிசித்து பின் வந்தால் அவந்தனக்கு ஏழாவது என்னும் அறிவு பிறந்து விடும்.

ஏழாவது அறிவு தான் அதைத்தான் சூட்சுமமாக வைத்துக் கொண்டுள்ளேன் .

அதனையும் பிற்பகுதிகளில் பிற் ஆசிகளில்  உரைத்து விடுகின்றேன். 




எதனை என்றும் அதனை கூட உணராத மனிதன் அங்கு சென்றால் அவை நடக்கும் இவைதன் நடக்கும் .

இங்கு சென்றால் அவைதன் நடக்கும் இவ்வாறு கிரகங்களால் ஏற்படும் .இதனையும் என்று கூற பொய் கூறி புறம் கூறி கொண்டிருக்கிறார்கள் அறியாத முட்டாள் மனிதர்கள்.


எதனையும் என்றும் வீணே!! என்பதைக்கூட இதனையும் கூட இவ் ஆறுபடை வீடுகளையும் கடந்துவிட்டால் ஏழாவது படை வீடு ஒன்று உண்டு அதனையும் சிந்தியுங்கள்.

அதனையும் யானே சொல்லிவிட்டால் எவை எவை என்று கூட நீங்களும் அலைவீர்கள் என்பேன்.

எதனையும் என்று கூற அவ் ஏழாவது தலம் தான் அறிவு பின் அனைத்தும் முருகன் உங்களிடத்திலே கொடுத்துவிடுவான் வாழ்வதற்குத் தகுதியானவைகள். 

ஆனாலும் இதனையும் ஏராளமான அரசர்களும் பல புலவர்களும் இதனை நன்கு உணர்ந்திருந்து பல வெற்றிகளைக் கண்டார்கள் என்பேன்.


ஆனாலும் இப்பொழுது இருக்கும் மனிதர்கள் அவைத் முட்டாளாகவே நிராகரித்து எதற்காக வந்தோம் எதற்காக வணங்கினோம் என்பதைக்கூட தெரியாமல் இறைவனை வணங்கிட்டு வணங்கிட்டு சென்று கொண்டிருக்கின்றான் இதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை .


இறைவன் எங்கு அமர்ந்து எப்படி? எல்லாம் இருப்பான்? என்பதை கூட ஆனாலும் ஒரு சில தலங்களுக்கு வரும் பொழுது யான் சொல்லிக் கொண்டே தான் இருக்கின்றேன்.


பக்தியோடு சிரத்தைதோடு அனைவருக்கும் நல் உதவியை செய்து பல அன்னதானங்கள் இட்டு பல அன்னதானங்கள் இட்டு அன்னை தந்தையரை மதித்து சேவைகள் செய்து வந்து திருத்தலம் வந்தால் கூட இறைவன் நிச்சயமாய் நிற்ப்பான் என்பேன்.அங்கே ஆசிகள் தருவான் என்பேன். தருவான் என்பேன் இறைவனே வா மகனே என்று கூட அழைப்பான் என்பேன்.


ஆனால் தரித்திர மனிதன் இவையெல்லாம் செய்வதே இல்லை. செய்வதே இல்லை என்பதற்கு இணங்க இறைவனை மட்டும் வந்து வணங்கிட்டு எந்தனுக்கு அதை தா! இதை தா! என்று சொல்லிக்கொண்டு இருந்தால் இறைவன் ஒன்றும் வேலைகாரன் இல்லை மனிதர்களுக்கு.


அப்பனே ஒவ்வொன்றும் மனிதன் கையிலே இருக்கின்றது.


மனிதன் தவறாகவே பயன்படுத்துகின்றான்.அப்பனே.


ஆனாலும் இன்னும் சூட்சுமங்கள் நிறைந்த வாழ்க்கையில் மனிதனுக்கு என்னவென்று புரியும்படி பின் யாங்களே இன்னும் செய்து வைப்போம்.


ஆனாலும் இதையன்றி கூற ஆனாலும் இதை இப்படி செய்தால்தான் நலன்கள் என்பது உறுதி.


உறுதிப் படுத்திக் கொண்டே இருக்கும் கர்மங்கள் நிறைந்த பூமி இது.


பூமி இது கர்மங்களிலும் எதனையும் என்றும்கூட கடலில் பின் நீந்திக் கொண்டு இருக்கையில் எப்படி மனிதன் தேறுவான்?? 


தேறுவான் என்பதற்கிணங்க தேறுவதாகவே இல்லை. ஆனாலும் எங்களைப் போன்று சித்தர்களை நல் விதமாக வணங்கிட்டு வந்து இதனை என்றும் கூற இறைவா எப்படி? வாழ்வது? எப்படி? உறுதியாக வாழ்வது? எப்படி போய்ச் சேருவது? என்பதையெல்லாம் பின் மனதார நேசித்துக் கொண்டு இறைவா! இறைவா! என்று அழைத்துக் கொண்டிருந்தால் அக்  கடலில் நீந்தி கொண்டிருப்பவனை யாங்களே தள்ளி விடுவோம்.


ஆனாலும் மனிதன் யாங்கள் நீந்துவோம் என்றுதான் தானாகவே கர்மத்தில் விழுகின்றான்.


எப்படி மனிதர்கள்??!!! இதனைத்தான் அப்பனே  மனிதன் திருந்துவதாக இல்லை.


அதனால் யாங்களே நிச்சயமாய் கஷ்டங்களை மனிதனுக்கு கொடுப்போம் என்பதே மெய். தெரிந்து கொள்ளுங்கள்.


ஆனாலும் அப்பன்களே எவ்வாறு எவை என்று கூற அதனையும் மீறி என்னிடத்தில் வந்து விட்டீர்கள் ஆனாலும் அப்பனே சிறிது கஷ்டம் எதற்காக அப்பனே கஷ்டம் இல்லாமல் மனிதன் வாழ்வதில்லை.


வாழ்வதில்லை என்பதற்கிணங்க அப்பனே யான் முன்கூட்டியே பல உரைகளில் தெரிவித்துவிட்டு இருக்கின்றேன்.


எதனையும் என்று மனிதனாக பிறந்து விட்டால் பிறக்கும் பொழுதே இன்பம் துன்பம் இவையன்றி கூற இதனை என்றும் எவ்வாறு என்றும் கூட வந்து விடுகின்றது.


அதனால் அப்பனே துன்பம் இல்லாமல் வாழ்வது என்பது அப்பனே அது இறைவனுக்கு கூட ஆகாது என்பேன்.


அதனால் அப்பனே  எவை என்று கூற ஆனாலும் துன்பம் எதனால் வருகின்றது சிந்தித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.


அப்பனே பின் மனிதனால் தான் வருகின்றது. தம் தம் கைகளால் தான் வருகின்றது.


அதனையும்  விட்டு விட்டால் அப்பனே எவ்வாறு என்பதைக்கூட இறைவா இறைவா என்று இருங்கள் போதுமானது.


உங்களுக்கும் என்னுடைய ஆசிகள் பல பல திருத்தலங்களில் யான் தந்துவிட்டேன் அப்பனே கவலைகள் இல்லை எவைச் செய்ய வேண்டும் எவையெல்லாம் உண்மைகள் என்று தெரிவித்து எவ்வாறு நடக்க வேண்டும் என்பதையும் எல்லாம் யான்  சொல்லிக் கொண்டே தான் வருகின்றேன்.


ஆனாலும் எந்தனையும் பிடித்துக்கொண்டீர்கள் நீங்கள் அறிவு மிகுந்தவர்களே  என்பேன் அப்பனே.


நல் விதமாக இதனை தான் சொன்னேன் அகத்தியனை வணங்குவதற்கு அருகதை வேண்டும் என்பதை கூட யான் முன்னே சொல்லிவிட்டேன்.


அதனால் புண்ணியம் செய்வதில் மட்டுமே அப்பனே அகத்தியா என்று சொல்வதற்கு பாத்திரமானவர்கள் என்பேன். நீங்கள் புண்ணியம் செய்தவர்களே.

ஆனாலும் கேள்விகள் கேட்கலாம் எவ்வாறு என்பதை கூட இவ்வாறு உன்னையே வணங்குகின்றோமே! 

ஏன்? கஷ்டங்கள் வருகின்றது? என்பதைக் கூட

ஆனாலும் அப்பனே இவையெல்லாம் புரிந்து கொண்டால் தான் வாழ்க்கை இனிக்கின்றது.

அப்பனே  எதனையும் என்றும் கூற யான் கஷ்டத்தைக் கொடுக்க வில்லை அப்பனே உங்களால் எவை என்று கூற எதனையும் என்று கூறும் பொழுதும் கூட எதனால் கஷ்டம் வருகின்றது? சிறிது சிந்தித்துக் கொள்ளுங்கள்.

ஆனாலும் அதனையும் யான் பார்த்துக்கொண்டே தான் இருக்கின்றேன் ரசித்துக் கொண்டுதான் இருக்கின்றேன்.

எப்படியெல்லாம் என்னையும் வணங்கிவிட்டு எப்படி எல்லாம் வருந்துகிறீர்களேடா என்றுகூட.

ஆனாலும் அதையும் யான் நீக்கி கொண்டேதான் இருக்கின்றேன் கவலைகள் இல்லை.

அகத்தியன் இருக்கின்றான் என்பதை கூட என் மீது பழி போட்டு விடுங்கள் யான் பார்த்துக் கொள்கின்றேன்.


இதைத்தான் உணர்த்துகின்றேன் அப்பனே.

மனிதர்களுக்கு. மெய்யானவர்களுக்கு மெய்யானவை சொல்லித் தருவோம்.

அதனையும் பயன்படுத்திக் கொண்டால் மெய்யான உலகத்திலே வாழ்ந்து கடந்திட்டு இறைவனை எளிதாக காண முடியும் என்பேன்.

அப்பனே இவையன்றி கூற பல பல யுகங்கள் பல பல பிறப்புக்கள் அப்பனே இறைவனை காண முடியாது.

பல பக்திகளை நாட வேண்டும் இரவும் பகலுமாக அப்பனே

இரவும் பகலுமாக அப்பனே இறைவனுக்காகவே சேவை  செய்ய வேண்டும். ஆனாலும் கலியுகத்தில் இறைவன் இறைவனை சுலபமாக பார்த்துவிடலாம்.

அப்பனே இதனையும் வரும் காலங்களில் உரைக்கின்றேன் எப்படி பார்ப்பது என்பது .

அப்பனே கலியுகத்தில் காத்துகொண்டிருக்கின்றான் இறைவன் மனிதனுக்கு தரிசனம் கொடுக்க.

ஆனாலும் மனிதன் அதனை உணர்வதாகவே தெரியவில்லை.


மனிதன் மனிதன் பற்று பின் எதை என்று கூற ஆசைகளை பார்த்தால் அப்பப்பா வீணாகிவிடும் என்பதைக்கூட யான் திரிந்து கொண்டு அலைந்து கொண்டே இருக்கின்றேன்.


ஆனால் மனிதன் தன் கடமைகளை விட்டுவிடுவதாக இல்லை. இறைவனும் பார்ப்பதாக இல்லை என்பேன்.

இதனால் ஆசைகள் ஆசைகள் என்று கூட அதன் பகுதியிலேயே எவ்வாறு என்பதையும் கூட மனிதன் மாயை பின்னே போய்க் கொண்டிருக்கிறான்.

இறைவன் பின்னே வருவதற்கு யாரும் இல்லையப்பா.

ஆனாலும் பொய் பக்திகள் தான் செலுத்துகின்றார்கள் இவ்வுலகத்தில்.


அப்பனே எதற்காக தன் பிள்ளைகள் இவையன்றி கூற தம் தன் நன்றாக அவர்கள் நன்றாக பின் இவை கிடைக்குமா? பணம் கிடைக்குமா? இவையெல்லாம் பின் சலித்து விட்டான் இறைவன். இறைவனே கேட்டு கேட்டு காதுகளால்.

அப்பனே இதனையன்றி கூற அதனால் எதனையும் கேட்காமல் மனதோடு அமைதியோடு தியானம் செய்தாலே இறைவனுக்கு படைத்தவனுக்கு தெரியாதா?? என்ன தரவேண்டும் என்று கூட.

அதனால் நிச்சயம் படைத்தவன் இறைவன் எவ்வாறு என்பதையும் கூட அவந்தனுக்கு  தெரியும்.

நீயே தா என்று கூட அவந்தனை சொல்லிவிட்டால். 

ஆனாலும் சிறு சோதனைகள் வருமே தவிர அனைத்தும் கொடுத்துவிடுவான் அப்பனே.


சலித்துவிட்டான் என்பதற்கிணங்க கேட்டுக்கேட்டு ஆனாலும் அன்பினால் வணங்குபவர்கள் எவரும் இல்லையப்பா இவ்வுலகத்தில்.

அப்பனே இதனை கண் கூடாகவே பார்த்துக் கொண்டு வந்திருக்கின்றேன்.

அப்பனே ஈசனை மறைமுகமாக கேட்டுக் கொண்டே தான் இருக்கின்றேன்.


ஒரு தடவை அப்பனே எவ்வாறு என்பதையும் கூட அகத்தியா இங்கு வா என்று கூட இத்தலத்திலே என்னை அழைத்தான்.

ஈசா சொல் என்று யானும் கூற

ஒரு மாதம் இங்கே இரு என்னிடத்திலே இருந்து ஆசிகள் வழங்கு என்று கூட என்னை உள்ளே அனுப்பி விட்டான்.

யானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன்

ஒவ்வொரு மனிதனும் பித்தலாட்டங்கள் பொய்கள் பின் எவை என்று கூற

எதை வேண்டுவது? எதை வேண்டக் கூடாது? என்பதெல்லாம் யானே முன் நின்று யானே ஈசனை அழைத்து விட்டேன்.

அப்பப்பா உன் லீலைகள் உன் திறமைகள் பலம் என்பேன்.

இதற்கு எந்தனக்கு தேவை இல்லை யான் மனிதனுக்கு திருத்தி விடுகிறேன் அதனால் நீயே இங்கு இரு என்று கூட யான் சொல்லிவிட்டேன்.


அப்படிப்பட்ட மனிதர்கள் அப்பனே இப்புவியுலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் அப்பனே.

எங்கள் ஆட்சி அப்பனே நல் விதமாக மக்களுக்கு இனியும் அப்பனே.

அப்பனே சொல்லிச் சொல்லி நல்லதைச் சொல்லி சொல்லி மனிதன் திருந்துவது இல்லை அதனால் நிச்சயம் கஷ்டங்கள் கொடுத்துத்தான் யாங்கள் மனிதர்களை திருத்துவோம் என்பது மெய்யே.

அப்பனே ஒவ்வொரு சித்தனும் ஒவ்வொரு விளையாட்டாக அப்பனே இதிலும்கூட அமர்ந்து அமர்ந்த கிரகங்களுக்கும் எவ்வாறு என்பதையும் கூட எதனையும் என்று கூட தெரியாத அளவிற்கு கிரகங்கள் இருக்கின்றன கிரகங்கள் பற்றி அறியாதவர் பலர் என்பேன்.

அதனையும் இது இப்படி செய்யும் அது அப்படி செய்யும் என்பதெல்லாம் மனிதன் பொய்யாகவே கூறி கொண்டிருக்கின்றான்.


கிரகங்களுக்கு ஒவ்வொரு தத்துவம் உள்ளது அவ்வாறு தத்துவம் செய்துவிட்டால் கிரகங்கள் உங்களை அண்டாது என்பேன்.


எதனையும் அண்டாது இவை என்று கூற கிரகங்கள் இதையன்றி கூற அதனை எப்படித் தாக்குப் பிடிப்பது பின் அவைதன் விலக்கி பின் இறைவனோடு ஒன்றாக வாழ்வது என்பதையும் கூட வரும் வரும் வாக்குகளில் கூறுகின்றேன்.


அப்பனே பொய்யான உலகத்தில் அப்பனே அதி விரைவிலே அப்பனே உண்மை நிலை என்று கூட உங்களுக்கு இன்னும் தெரிவிக்கின்றேன் என்னுடைய ஆசிகளும் அனுகிரகங்களும் பெற்று அப்பனே யானும் உங்களுக்கு ஒரு முறையில் அப்பனே தரிசனம் உண்டு கொடுக்கின்றேன் அப்பனே.


கடமைகள் நிறைவேறட்டும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடமைகள் உண்டு அப்பனே அவையெல்லாம் நிறைவேற்றி வரும்பொழுது தான் அப்பனே எந்தனை காணமுடியும் அதனால்தான் அப்பனே யானும் எங்கு எதனை என்று கூட யான் யோசித்து இன்னும் சிலசில நல் வினையான முருகனும் காட்சி அளிப்பான் என்பது மெய்யே.


இதனால் எதனை என்று கூற அனைத்தும் ஆகட்டும் அப்பனே யானே முன் நின்று அனைத்தும் செய்துவிட்டு என் தரிசனம் காட்டுகின்றேன் அப்பனே குறைகள் இல்லை இன்னொரு வாக்கும் சொல்கின்றேன் அடுத்தபடி


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!


சர்வம் சிவார்ப்பணம்!!!!!

No comments:

Post a Comment