“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Tuesday, October 31, 2023

சித்தர்கள் ஆட்சி - 215 : அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 4-9-2023 உரைத்த வாக்கு - பகுதி 13


 “அனைத்தும் இறைவா நீ”


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - அடியவர் ஒருவர் இல்லத்தில் உரைத்த வாக்கு - 04.09.2023 ( பகுதி 13)


இந்த வாக்கின் முந்தைய பகுதி கீழே உள்ள பதிவில் படிக்கவும்


https://siththarkalatchi.blogspot.com/2023/10/214-4-9-2023-12.html?m=0




அடியவர்:- ( அடுத்தவருக்காக அடியவர் வாக்கு கேட்ட போது )


குருநாதர்:- அவரவர் கேட்கட்டும். புத்திகள் இருந்தால் பிழைத்துக்கொள்ளலாம். புத்திகள் இல்லாவிடில் எதை என்று கூற முருகனை வணங்கச்சொல். அனைவரையுமே செந்தூரானை ( திருச்செந்தூர் முருகனை ) நாடச்சொல். 


அடியவர்:-  ( அடுத்தவருக்காக மற்றொரு அடியவர் வாக்கு கேட்ட போது )


குருநாதர்:- அப்பனே சொல்லிவிட்டேன். யார் யாருக்கெல்லாம் வாக்குகள் வேண்டுமோ அவர்கள் எல்லாரும் பஞ்ச பூத தலங்களுக்கு சென்று வாருங்கள். பின்பு உரைக்கின்றேன். சிறிதளவாவது புண்ணியங்கள் சேர்கட்டும். சில கஷ்டங்கள் அனைவருக்குமே இருக்கின்றது. பாவங்கள். அவ் பாவங்கள் சிறிதளவாவது தொலையட்டும். இதனால் யார் யாருக்கு ( வாக்கு ) கேட்க வந்தீர்களோ அவர்கள் எல்லாம் பின் பஞ்ச பூத தலங்களுக்கு செல்லுங்கள். சொல்லுங்கள். சொல்லிவிட்டேன். பின்பு கேளுங்கள். 


அடியவர்:-  ( ஒரு தனி வாக்கு கேட்டார்) 


குருநாதர்:- அனைவருமே எதையும் கேட்டுவிடாதீர்கள். அனைவருக்குமே அப்பனே இல்லத்தில் இருக்கின்றாயே அனைவருக்கும் எழுந்து சொல் யான் என்ன சொன்னேன் என்று. 


நாடி அருளாளர்:- ( மதுரை அடியவரிடம் எடுத்து சொல்ல சொன்னார்கள்)


அடியவர்:- (இந்த அடியவர் இல்லத்தில்தான் இந்த வாக்குகள் உரைக்கப்பட்டது) பஞ்ச பூத தலங்கள் அனைத்தும் தரிசனம் செய்துவிட்டு (அகத்தியர்) ஐயா வாக்கு கேட்க சொல்லி இருக்கின்றார்கள். திருவண்ணாமலை, ஶ்ரீ காளஹஸ்தி, காஞ்சிபுரம் (ஏகாம்பரநாதர் ஆலயம்), சிதம்பரம் , திருவாணைக்காவல் அனைத்தும் தரிசனம் செய்து குருநாதர் வாக்கு கேட்க சொல்லி இருக்காங்க. 


குருநாதர்:- அப்பனே அவ் அனைவருக்குமே ஒவ்வொரு வினைகள். அவ் வினைக்கான தீர்வுகள் இதனால் அப்பனே அங்கே இருக்கின்றது என்பேன் அப்பனே. ( பஞ்ச பூத தலங்களை) சுற்றி வாருங்கள். மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் அப்பனே. பணம் வேண்டும் என்றால் ஓடி ஒடி உழைக்கின்றீர்கள் அப்பனே. அதாவது ஏற்கனவே சொல்லிவிட்டேன் அனைத்தும் கூட. அதனால் தொழில் வேண்டும் என்றால் ஓடி ஓடி (உழைக்கின்றீர்கள்) அப்பனே ஆனால் இறை அருள் வேண்டும் என்றால் வாக்குகள் வேண்டும் என்றால் அப்பனே இதை செய்யுங்கள். எதுவுமே செய்யத்தேவை இல்லை. யான் (வாக்குகள்) கொடுக்கின்றேன் உங்களை தேடி வந்து. போதுமா? 


அடியவர்:- ( தனிப்பட்ட கேள்வி ) 


குருநாதர்:- ( அடியவருக்கு தனிப்பட்ட வாக்கு) அனைவருமே ஏன் உயர் பெரியவர்கள், ஞானியர்கள் பேசவில்லை என்றால் இதற்காகத்தான். ஆனாலும் யான் சொன்னேனே நெற்றியில் பின் வரிசையாக செல்கள் இருக்கும் என்று, ( அவ்செல்கள் ) இவ்வாறு பேசினாலும் உதிர்ந்து விடும் கீழே. அப்படியே மூக்கு பின் வாய் என்று அப்படியே சென்று விடும். இதனால்தான் இவைஎல்லாம் ஞானிகள் மட்டுமே உணர்ந்திருப்பார்கள். அதனால்தான் பேசத்தெரியாமல் அனைத்தும் சாதித்தார்கள். பேசிக்கொண்டே இருப்பார்கள் தரித்திரர்கள். தெரிந்து கொள்ளுங்கள். ஆனால் யாங்கள் பேசாமல் வாழ முடியாது எனபதைக்கூட நீங்கள் தெரிவிப்பீர்கள். ஆனால் கர்மத்தை இப்படித்தான் யாரால் அழிக்க முடியும்? 


அடியவர்:- (அமைதி)


குருநாதர்:- அப்பனே பேசாமல் பேசி வாழ்வது எப்பொழுது? இதற்கு நிச்சயம் அர்தங்கள் கூறவேண்டும். (இங்கு) அனைவருக்கும் வாக்குகள் வேண்டும் அல்லவா? ஆனால் இறக்கு கூறுங்கள்? 


அடியவர்:- அய்யா அனைவரும் பஞ்ச பூத தலத்தில் வழிபாடு செய்ய சொன்னீங்க. எந்த வரிசையில் வணங்க வேண்டும்? 


குருநாதர்:- அம்மையே இப்பொழுது உண்ணும் நேரம் வந்து விட்டது. இப்பொழுது உண்பாயா ? இல்லை நாளை உண்பாயா? 


அடியவர்:-  இப்பொழுது


குருநாதர்:- அம்மையே நீ இதற்கும் தவறான பதில்தான். அவரவர் விருப்பம் என்று சொல்லி விட்டிருந்தால் போய் விடுகின்றது அவ்வளவுதான். ( பஞ்ச பூத தலங்களை அவர் அவர் விருப்பம் போல் சொன்று வணங்கலாம். கால நேரம் கிடையாது) 


அடியவர்:- ( இதற்கு முந்தைய கேள்விக்கு பதில் என்ன என்று நாடி அருளாளர் மீண்டும் கேட்க… இதற்கு ஒரு அடியவர்) மனசுல எந்த எண்ணம் இல்லை என்றால்…


குருநாதர்:- அப்பனே இறைவன் அனைத்தும் செய்வான் என்று மனதில் இருந்தாலே போதுமானதப்பா. இதற்கே இவ் அர்த்தம் என்பேன். அனைவருக்குமே ஒவ்வொரு சூழ்நிலையில் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றது. ஆனாலும் இறைவனுக்கு தெரியும். இப்பொழுது கூட கேட்டார்கள் இப்பிள்ளைக்கு திருமணம் எப்பொழுது என்று ஆனால் உடனடியாக எதை என்றாலும் பிரிவு நிலைகள் வந்து விடும். ஆனால் இறைவன் இவ்நேரத்தில் இவ்வயதில் ஆகவேண்டும் என்று எண்ணிக்கொண்டு அதாவது (விதியை ) எழுதி வைத்து அனுப்புகின்றான் அதை மீறி நடந்தால்தான் அப்பா துன்பங்கள். இப்பொழுது சொல்லுங்கள் அப்பனே ஏன் எதற்காக தடைபட்டு தடைபட்டு நடக்கின்றது. நல்லதா? தீயதா? அப்பனே இறைவன் செய்வது அனைத்தும் நல்லதே. ஆனால் நீங்கள்தான் தவறாக எண்ணிக்கொண்டு இருக்கின்றீர்கள் அப்பனே. அதனால் சொல்லிவிட்டேன் அம்மையே இப்பொழுது இதன் முன்னே திருமணம் நடந்திருந்தாலும் பின் கனவன் மனைவிமார்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டு இவை மீண்டும் இங்கிருந்து வந்து மீண்டும் பின் எங்கெங்கோ சென்று பணத்தை இழந்து பரிகாரங்கள்தான் செய்து கொண்டிருக்க வேண்டும். அப்பொழுது இறைவன் உந்தனுக்கு நல்லது செய்தானா?  கெட்டது செய்தானா? என்று கூறு. ஆனாலும் அம்மையே நீயும் பரிகாரங்கள் பரிகாரங்கள் என்று ஓடுவாய். 


அடியவர்:- ( சில தனிப்பட்ட கேள்விகள் )


குருநாதர்:- ( குருநாதரின் தனுப்பட்ட அருள் பதில் வாக்கு)


அடியவர்:- ( அடியவர் பொதுவாக அனைவருக்கும் உரைத்தது ) எப்போ நம்ம எதிர்பார்ப்புக்கு தடை வருகின்றதோ அப்போ ( இறைவன் ) நம்மை புடம் போடுகின்றார் என்று அர்த்தம். 


குருநாதர்:- (இந்த அடியவர் பொதுவாக உரைத்தது) அனைவருக்கும் தெரிந்ததா இது? 


அடியவர்:- ( அமைதி ) 


குருநாதர்:- ( தனிப்பட்ட வாக்கு ) 


அடியவர்:- ஜீவ சமாதிக்கு போகச்

சொன்னீங்க. 


குருநாதர்:- அனைத்தும் தெரிவித்து விட்டேன். மீண்டும் இதைத்தான் கேட்கின்றீர்கள். 


அடியவர்:- தொழில் மேன்மைக்கு ஆசிர்வாதம்..


குருநாதர்:- அப்பனே பரமா , நீ என்ன சொன்னாய்? 


அடியவர்:- பஞ்ச பூத தலம் போய்தான் வாக்கு கேட்கனும் எல்லாருமே.


குருநாதர்:- அப்பனே யான் சொல்வதை கேட்பதில்லை (நீங்கள்). ஆனால் நீங்கள் சொல்வதை மட்டும் யான் சொல்ல வேண்டுமா. இல்லையப்பா சென்று வாருங்கள். அப்பனே இதிலே அடக்கமப்பா.


அடியவர்:- இதில் சூட்சும்…


குருநாதர்:- அப்பனே பஞ்ச பூதங்களை எதை என்று அறிய அப்பனே ஏன் நாவை அடக்கவேண்டும், செவியை அடக்க வேண்டும், இவற்றை எல்லாம் ஏன் போகச்சொன்னேன் ஏன் இதற்கு பஞ்ச பூத ஸ்தலங்கள் என்றெல்லாம் பெயர் வைத்திருக்கின்றார்கள் என்றெல்லாம்  அப்பனே யான் தெரிவிக்கின்றேன். அங்கு செல்லாமல் அப்பனே பக்தியும் வராதப்பா உங்களுக்கு. அதனால்தான் (அங்கு) செல்லச்சொன்னேன். இப்பொழுது சொல்லிவிடலாம் நீங்கள் பக்திக்கே வரமாட்டீர்கள். இதுதான் விசயமப்பா உங்களுக்கு. 


அடியவர்:- ( அமைதி ) 


குருநாதர்:- அப்பனே இப்படியே சொல்லிக்கொண்டு இருந்தால் அதனால் சென்று வாருங்கள். அகத்தியன் சொல்வது உங்கள் நன்மைக்கே. அப்பனே மீண்டும் பின் வந்து ( இதுபோல் செல்லச்) சொல்வீர்களா என்றால் அப்பனே சொல்வேன். அப்பொழுது கூட மற்ற திருத்தலத்திற்கு ( உங்களை ) செல்லச்சொல்வேன். அப்படி சென்று கொண்டே இருந்தால் அனைத்தும் மாறும் அப்பா. அனைத்து பிரச்சினைகளும் தீரும் அப்பா. அப்பனே கஷ்டங்கள் பட்டால்தான் அனைத்தும் கிடைக்கும் என்பேன். கஷ்டப்படாமல் ஏதும் கிடைக்காதப்பா. இதை ஏற்கனவே உரைத்து விட்டார்கள் அப்பனே. தெரியுமா? தெரியாதா? தெரிந்தவர்கள் அறிவாளி. தெரியாதவர்கள் முட்டாள். அப்பனே முட்டாள்தான் கேள்விகள் கேட்பான் அப்பனே. தெரிவித்து விட்டேன் பின். 


அடியவர்:- நாங்கள் எல்லோரும் அறிவாளிகள். 


குருநாதர்:- சந்தோசம் தாயே. அனைவருக்கும் சொல் அதை. 


அடியவர்:- ( அடியவர்கள் சிரிப்பு ) 


குருநாதர்:- அம்மையே இப்பொழுது வேலை இல்லாவள் என்று சொல்லிவிட்டார். முருகனை அம்மையே மாதத்திறக்கு ஒரு முறை பழனி தன்னை ஏறிவா. 


அடியவர்:- சரிங்க


குருநாதர்:- அப்பனே அனைவருக்கும் பின் தெரியாத விடயத்தை ஒன்று கூறுகின்றேன். பழனிதன்னில் ராகு கேதுக்கள் அங்கு சென்றாலே அக்கிரகங்களின் சில துன்பங்கள் அதி விரைவிலேயே ஈர்க்கும் அப்பா. அங்கு (அடிக்கடி) சென்று கொண்டிருந்தாலே பல துன்பங்கள் ஈரத்துவிடும் என்பேன் அப்பனே. எளிதாக உயர்வு பெற்று விடலாம் என்பேன் அப்பனே. இதனால் சொல்லிவிட்டேன் அப்பனே. எதற்காக அங்கு, அங்கு சென்று கொண்டு இருந்தாலே அப்பனே ஞானம் தித்தித்து உயர்ந்த இடத்தை அடைந்து விடலாம் என்பேன் அப்பனே. அதனால் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்றால் அப்பனே கஷ்டங்கள் அப்பனே அதை ராகு பின் கொடுக்கும் என்பேன் அப்பனே. அதனால் அதை கொடுத்து அப்பனே அங்கு சென்று கொண்டிருந்தாலே அனைத்து கர்மாக்களை எளிதில் ஈர்த்துக்கொள்ளும் என்பேன் அப்பனே. இதனால் வெற்றி உங்களுக்கே என்பேன் அப்பனே. அதனால் பழனி மலையின் சிறப்பு இதுதானப்பா. இன்னும் சொல்கின்றேன் வரும் காலங்களில் அப்பனே. பொறுத்திருந்தால் அப்பனே. ஒவ்வொன்றாக அதை பயன்படுத்திக்கொண்டால் வெற்றி வாழ்க்கையில். இல்லை என்றால் தோல்வி. 


அடியவர்:- ( அமைதி ) 


குருநாதர்:- அப்பனே செந்தூரானை பற்றியும் சொல்கின்றேன். வெற்றி வெற்றி என்பதெல்லாம். ஆனாலும் அப்பனே பின் ஒருவன் சொன்னான் குரு ஸ்தலமா என்று கூட. அங்கு சனியும் அழகாக இருக்கின்றான் அப்பனே. அதனால் தான் வெற்றி. குரு , சனி இருவர் கொடுத்தால்தான் அனைத்து தோசங்களும் நீங்கும் என்பேன். இவர்கள் கொடுக்காவிடில் ஒன்றும் இல்லையப்பா. அதனால்தான் முக்கியத்துவம் அங்கு அப்பனே. 


அடியவர்:- ( அமைதி ) 


குருநாதர்:- அப்பனே அனைவருக்குமே புரிகின்றதா? 


அடியவர்:- புரிகின்றது. 


குருநாதர்:- அப்பனே புரிகின்றதென்றால் யான் என்ன சொன்னேன் என்று கூறுங்கள். 


அடியவர்:- பஞ்ச பூத ஸ்தலம்….


குருநாதர்:- ( தனிப்பட்ட வாக்கு) இறைவன் செய்வது அனைத்தும் நல்லதே. அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். ஆசிகள். இன்னும் பல வாக்குகள் காத்துக்கொண்டிருக்க நிச்சயம் சொல்கின்றேன். ஆசிகள். ஆசிகள்!!!


(மதுரையில் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர் இல்லத்தில் உரைத்த இந்த வாக்கு பின் வரும் பதிவில் தொடரும் ………)

https://siththarkalatchi.blogspot.com/2023/11/216-4-9-2023-14.html?m=0


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!

Monday, October 30, 2023

சித்தர்கள் ஆட்சி - 214 : அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 4-9-2023 உரைத்த வாக்கு - பகுதி 12


 “அனைத்தும் இறைவா நீ”


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - அடியவர் ஒருவர் இல்லத்தில் உரைத்த வாக்கு - 04.09.2023 ( பகுதி 12)


இந்த வாக்கின் முந்தைய பகுதி கீழே உள்ள பதிவில் படிக்கவும்


https://siththarkalatchi.blogspot.com/2023/10/212-4-9-2023-11.html?m=0



குருநாதர்:- அப்பனே குன்றத்தில் இருப்பவன் யார்? அப்பனே ஏன் நிற்கின்றான் என்று யாராவது சிந்தித்தீர்களா என்ன?


அடியவர்:- உயர் நிலை ஞானம்


குருநாதர்:- குன்றத்தில் ஏறி நிறக்கின்றேன் என்றால் அப்பனே ஏற்கனவே யான் சொல்லிவிட்டேன் அப்பனே. மீண்டும் சொல்கின்றேன் அப்பனே. பட்ட கஷ்டங்கள் கால்களில் பின் ஊர்ந்து, நடந்து, எழுந்து சென்றால்தான் அப்பனே கடைசியில் இறைவனை காண முடியும் என்பதற்கே இவன்தன் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும் அப்பனே. அதை நீங்கள் செய்யவில்லை என்றால் அப்பனே கஷ்டமே வரக்கூடாது என்றால் நீங்கள் அப்படியே இருக்க வேண்டியதுதான். உங்கள் வாழக்கை தின்போம் , பின் தின்று நோய்கள் சம்பாதித்துக்கொண்டு, பிள்ளைகள் பெற்றுக்கொண்டு,  மீண்டும் கர்மாவை சேர்த்துக்கொண்டு, மீண்டும் ( சேரத்த கர்மாவை கழிக்க) பிறவி எடுத்துக்கொண்டு இப்படியே வாழ்வது ஒரு வாழ்க்கையே அல்ல என்பேன் அப்பனே. அதனால் துன்பங்கள்ள பட்டுப்பட்டு சென்றால்தான் அப்பனே உயர் நிலையை அடைய முடியும் என்பேன் அப்பனே. அப்பொழுது துன்பங்கள் யான் கொடுப்பது  சரியா? தவறா?  


அடியவர்:- ( அமைதி )


குருநாதர்:- அப்பனே இதனால் இவ்பக்குவங்கள் உங்களை ஏன் சில பேர் மட்டும் யான் இங்கு (மதுரை அடியவர் இல்லத்தில்) அழைத்து உள்ளேன் என்றால், அப்பனே முதலில் நீங்கள் நன்மை செய்தாலும் அப்பனே சில தானங்கள் செய்தாலும் இவை எல்லாம் இப்படித்தான் என்று கூறி அவர்களுக்கு ( மக்களை ) திருத்தி வழிநடத்த வேண்டும் என்பேன் அப்பனே  தெரியாதவர்களுக்கு அப்பொழுதுதான் ( உங்களுக்கு முதல் வகை ) புண்ணியம். அதை விட்டு விட்டு ஏதோ பின் அன்னத்தை கொடுத்து விட்டு அப்பனே இந்தா தின் என்று சொன்னால் அப்பனே ஒன்றும் புரயோஜனமில்லை அப்பா. இதனால் கர்மாதான் அப்பனே. மீண்டும் கடைசியில் வந்து யான் அதை செய்தேன் , இதை செய்தேன் என்று சொல்லிக்கொண்டிருந்தால் அப்பனே என்ன (பலன்)? அப்பனே. அதனால் தெரியாமல் எதையும் செய்யக்கூடாதப்பா. 


(ஈரேழு பதினான்கு உலகங்களை ஆளும் நமச்சிவாயன் அகத்தில் வாழும் ஈசன், பொதிகை வேந்தன் , அகத்திய பிரம்ம ரிஷி அருளால் மதுரை அடியவர் இல்லத்திற்கு 4.9.2023 அன்று பல அகத்தியர் அடியவர்கள் அழைக்கப்பட்டு உலகிலேயே கலிகாலத்தில் முதன் முறையாக அன்னதானம் வழியில் முதல் வகை உயர் புண்ணியம் பெறும் உண்மையை விளக்கும் வாக்கு அடியவர்களுக்கு உரைக்கப்பட்டு அதன் மூலம் உலகில் உள்ள அனைத்து அடியவர்களுக்கும் அவர்கள் எப்படி உயர் புண்ணியம் எப்படி பெற வேண்டும் என்பதை தெளிவாக விளக்கும் மிக மிக அதி முக்கிய மகத்தான மகிமை புகழ் வாக்கு என்பதை உணர்க. 



அன்னதானம் செய்யும் போது , உயர் முதன்மை புண்ணியம் பெரும் வழி முறை:- 


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-  “அனைவரும் அன்னத்தையும் மற்றவர்களுக்கு (இட்டு) புண்ணியச்செயல்கள் செய்தாலும் அப்பனே முதலில் வருவது பின் மற்றவர்களுக்கு (பொதுமக்களுக்கு) பின் வழிதெரியாமல் இதைத்தான் இப்படித்தான் என்று (வழி/செயல் முறைகளை எடுத்து நேரில் சொல்லி) காட்டுவதே முதல் வகையான புண்ணியம் என்பேன் அப்பனே.”


உதாரணமாக அன்னதானம் செய்யும்போது ஒவ்வொரு நபர்களிடம் கூற வேண்டிய சில வாழ்க்கை நெறிகள்:- 


1) எதையும் மனதில் நினைக்காமல் இறைவனை வணங்குங்கள். 


2) உங்களால் இயன்ற அன்னத்தை எறும்பு, பறவை முதலிய ஜீவராசிகளுக்கு தினமும் அளித்து சேவை செய்யுங்கள். 


3) மனிதன் உயிர் , ஆரோக்கியம், நல்வாழ்வு அனைத்தும் புண்ணியத்தில்தான் உள்ளது.  புண்ணியம் செய்யும்போது எதையும் எதிர் பாரக்காமல் மழை நீரைப்போல், சூரிய ஒளி போல் தரமத்தை செய்து கொண்டே செல்லுங்கள்.


4)அசைவம் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்கவும். 


5)அனுதினமும் அடுத்தவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.


6) இந்த தகவல்களை அனைத்துடன் குறைந்தது 108 பேருக்காவது தயவு செய்து எடுத்து நேரில் சொல்லுங்கள்.அடுத்தவர்கள் நன்கு வாழட்டும். அடுத்தவர்களை உயர்த்துங்கள். 


———-> இப்படி சில நல்ல வழிகளை ஏதும் அறியாத ஏழை/எளியோரிடம் அன்னதானம் செய்யும் போது கண்டிப்பாக சொல்ல அது உயர் நிலை முதல் வகை புண்ணியமாக மாற இறை அருளும். 


“பரிசுத்தமான வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என்பதைக்கூட எடுத்துரைத்தால் அப்பனே மனிதர்கள் அதை (நீங்கள் சொல்லியவர்கள்) பின்பற்றினால் அப்பனே உங்களுக்கு (வாழ்க்கை) நிலமைகள் மாறும். மாறும் என்பேன்.“ - அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு


எனவே அடியவர்கள் அனைவருக்கும் இது போல எடுத்து சொல்லி உயர் புண்ணிய பலம் பெற்று நல்வாழ்வு வாழ்க வளமுடன்.


இந்த வாக்கை படித்த அனைத்து அடியவர்களும் இதை முதலில் அனைவருக்கும் எடுத்து சொல்லி அவர்களை உயர் புண்ணியம் பெற்று நல்வாழ்வு வாழ வழி செய்யுங்கள் என சிரம் தாழ்த்தி உங்கள் அனைவரையும் வேண்டுகின்றோம். ) 


யான் சொல்கின்றேன் அப்பனே மின்சாரக்கம்பியை பிடி என்று, (நீ) பிடித்து விடுவாயா என்ன? 


அடியவர்:- இல்லை ( பிடிக்க மாட்டேன் ) 


குருநாதர்:- அப்பனே இங்கு பக்தி பொய் ஆகிவிட்டதப்பா. என் அகத்தியன் சொன்னால் யான் (மின்சாரக்கம்பியை) பிடிப்பேன் என்று எங்கப்பா நீ சொன்னாய். 


அடியவர்:- அமைதி


குருநாதர்:- அப்பனே இப்படி இருந்தால் யான் காப்பாற்றி விடுவேன். பயந்து நின்றால் எப்படியப்பா யான் காப்பாற்றுவது? இப்படித்தானப்பா மனிதர்கள் ஏதோ ஒரு சுயநலத்திற்காகவே வருகின்றார்கள். வாக்கு கேட்கின்றார்கள். எப்படியப்பா முடியும். அப்பனே இப்பொழுது புரிகின்றதா உன்னுடைய பக்தி என்னவென்று?. 


அப்பனே அதனால் நம்பு. உன்னை நம்பு. நிச்சயம் என் அகத்தியன் கொடுப்பான் என்று. அனைத்தும் கொடுக்கின்றேன் அப்பனே. 


அடியவர்:- சரிங்கய்யா. 


குருநாதர்:- அப்பனே இப்பொழுது கூறு, மின்சாரத்தை தொடுவாயா என்ன? 


அடியவர்:- தொடுவேன் ஐயா. 


குருநாதர்:- அப்பனே இப்படித்தான் அப்பா பின் தெரியாமல் வாழ்ந்திட்டு அவ்கர்மத்தை சொன்னால்தான் அப்பன “ஓ!! இப்படியா”

என்று சொல்லிவிடுகின்றார்கள் மனிதர்கள். எப்படியப்பா இது? ஏன் தொடுகின்றாய் அப்பனே? கூறு. 


அடியவர்:- அகத்தியர் காப்பாத்துவார். 


குருநாதர்:- அப்பனே முதலில் ஏன் இதை புரியப்படுத்தவில்லை. கூறு? 


அடியவர்:- ( அடியவர்கள் சிரிப்பு ) 


குருநாதர்:- அறிவில்லை அய்யா


அடியவர்:- அப்பனே, அவ் அறிவின்மையைதான் கொண்டு வருவதற்கே சில கஷ்டங்கள். இது நல்லவையா? தீயவையா? அப்பொழுது உந்தனுக்கு கஷ்டங்கள் வருவது நன்மையா? தீமையா? இதுநாள் வரை கஷ்டங்கள் வந்து கொண்டு இருக்கின்றதே பின் நன்மையா? தீமையா? கூறு அப்பனே. 



குருநாதர்:- நன்மைதான் அய்யா. 


அடியவர்:- அப்பனே பின் நன்மையாக செய்து விட்டேன் அல்லவா இப்பொழுது சந்தோசமா உந்தனுக்கு அப்பனே. 


குருநாதர்:- ரொம்ப சந்தோசம் அய்யா. 


அடியவர்:- அப்பனே அனைத்தும் கொடுத்து விட்டேன் அப்பனே போதுமா?


குருநாதர்:- போதும் அய்யா. 


அடியவர்:- அப்பனே இதுநாள் வரையில் உந்தனுக்கு என்ன செய்து கொண்டிருந்தேன் அப்பனே கூறு? 


குருநாதர்:- நன்மையே செய்து கொண்டு இருந்தீர்கள். 


அடியவர்:- அப்பனே, புரிகின்றதா? அமர். ( குருநாதர் அந்த அடியவரை இதுவரை நின்றதால் அமர உத்தரவு இட்டார்கள் )


குருநாதர்:- சரிங்க அய்யா. ( அடியவர் அமர்ந்தார்) 


அடியவர்:- ( அடியவர்கள் உரையாடல்கள் ) 


குருநாதர்:- ( அடியவருக்கு அவர் விதி மாற்றம், கடுமையான கர்ம நிலை நீக்கம் குறித்த தனிப்பட்ட வாக்கு) 


அடியவர்:- புரிந்தது ஐயா


குருநாதர்:- அப்பனே இதை எல்லாம் யாரும் சொல்ல மாட்டார்கள் அப்பா. பரிகாரங்கள் செய். பரிகாரங்கள் செய். தெரியாமலே செய்து கொண்டு இருப்பான் அப்பனே. அப்பனே விதியில் என்ன உள்ளது என்பதை கூட யாரும் தெரிவிக்க மாட்டார்கள் அப்பா. சித்தர்களால் மட்டுமே முடியும் என்பேன். அவை எல்லாம் உங்களுக்கு அனைத்தும் கற்பிக்கின்றேன் வரும் காலங்களில். அதனால் இப்பொழுது என்ன வகுப்பில் நீங்கள் (அனைவரும்) இருக்கின்றீர்கள் அப்பனே கூறுங்கள்? 


அடியவர்:- முதல் வகுப்பு 


குருநாதர்:- அப்பனே முதல் வகுப்புக்கே இன்னும் வரவில்லையப்பா நீங்கள். 


அடியவர்:- ( அமைதி )


குருநாதர்:-  அதனால் முதல் வகுப்பே பின் தேர்ச்சி பெற்றால் தான் இரண்டாவது வகுப்பு அப்பனே. அதனால் பூஜியத்திலேயே இருக்கின்றீர்கள் அப்பனே. 


அடியவர்:- அமைதி


குருநாதர்:- அப்பனே பூஜியத்தில் இருப்பவன் என்ன கேள்வி கேட்பான் தெரியுமா? எந்தனுக்கு அதைச்செய், இதைச்செய், எந்தனுக்கு கடன், எந்தனுக்கு துன்பங்கள், எந்தனுக்கு கஷ்டங்கள் என்று கேட்டுக்கொண்டு இருப்பான் அப்பனே. அவன் பூஜியத்திலேயே இருக்கின்றான் என்பேன் அப்பனே. இப்படி இருப்பவன் அப்பனே எப்படியப்பா யான் ஒன்று, இரண்டு என்றெல்லாம் (அடுத்த வகுப்புகளுக்கு அழைத்துச்செல்வது?) அதனால் அப்பனே சில பக்குவங்கள் ( துன்பங்கள் ) பட்டு பட்டுத்தான் எழுப்பி நடந்திட வேண்டும் என்பேன் அப்பனே. குழந்தையும் கூட தானாகவே தானாகவே கஷ்டங்கள் பட்டு பட்டு எழும் அப்பா. ஆனால் உங்களுக்கு அறிவுகள் வந்துவிட்டது. நீங்கள் அப்பனே தானாகவே எழுந்திருக்க முடியவில்லையே. தன்னைத்தானே உணரவில்லையே. குழந்தைகூட தன்னைத்தானே உணர்ந்து பின் அடிபணிந்து ( தவழ்ந்து எழுந்து ) கீழே விழுந்து விழுந்து எழுந்து நிற்கின்றதப்பா. அதனால் நீங்களும் அடிபட்டு சிறிது எழுந்து நில்லுங்களப்பா. யான் வழி காட்டுகின்றேன். அமர்ந்து கொண்டே எந்தனுக்கு அதைத்தா இதைத்தா என்றால் யான் சொல்வேன் நீங்கள் அப்படியே அமர்ந்து கொள்ளுங்கள் என்று. புரிகின்றதா? 


அடியவர்:-  அமைதி


குருநாதர்:-  அப்பனே உங்களை படைத்தது இறைவன் அப்பனே. அதை பின் எப்பொழுது தர வேண்டும் என்று இறைவனுக்கு தெரியாதா என்ன? நீங்கள் கேட்டுத்தான் பெற வேண்டுமா என்ன? ஆனாலும் குழந்தைக்கும் தன் தாய் பின் என்ன செய்ய வேண்டும் என்பது கூட தெரியும் அப்பனே. இல்லை என்றால் குழந்தை அழும். அது போலத்தான் அப்பனே இறைவனை குழந்தை அழுவதுபோல் இறைவா என்று அழையுங்கள் போதுமானது. இறைவன் உந்தனுக்கு என்ன தேவை என்பதை கொடுத்து விடுவான். அவ்வளவுதான் வாழ்க்கை என்பேன் அப்பனே.  அதனால் புரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்களே தரித்திர மனிதர்கள் என்று எண்ணி அப்பனே யான் தலை குனிகின்றேன் அப்பனே. அதனால் தான் முதலில் தெரிய வைக்கின்றேன் அப்பனே. இப்படி வாழ கற்றுக்கொள்ளுங்கள் என்று. பின்பு உரைக்கின்றேன் எப்படி என்று கூட. ( முதுகில் உள்ள கர்ம மூட்டை என்ற சுமை ) அதை உணர விடாமல் எப்படியும் வாழ முடியாதப்பா மனிதன். இப்படிப்போனாலும் துன்பம், அப்படி சென்றாலும் துன்பம், உட்காரந்தாலும் துன்பம், எழுந்தாலும் துன்பம் அப்பனே. இவை எல்லாம் ( உங்கள் முதுகில் உள்ள கர்ம மூட்டை ) எங்கு உன்னை விட்டு போகும் அப்பா? அதனால் சொல்லி விட்டேன் அப்பனே கர்மா எங்கு உள்ளது என்றால் உன் முதுகிலே இருக்கின்றதப்பா. அதை முதலில் இறக்கிவிட்டு செல் அப்பனே. அனைத்தும் நடக்கும். அதை வரும் காலங்களில் எப்படி இறக்கி வைப்பது எல்லாம் தெரியப்படுத்துகின்றேன் அப்பனே. அதை இறக்கி வைத்தால்தான் அப்பனே இன்பம்.  அதை இறக்காவிடில் அப்பனே ஒன்றும் செய்ய முடியாதப்பா. நிச்சயம் அப்பனே. 



அடியவர்:- ( அமைதி ) 


குருநாதர்:- அதனால் அப்பனே உணர்ந்து கொள்ளுங்கள். வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களே அப்பனேவமனிதர்கள். அதனால்தான் இறைவன் கூட படைத்து விட்டோமே மனிதனை. தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களே என்று ( வருத்தப்படும் அளவில் மனிதர்கள் நாம்….) 


ஓர் நாள் அப்பனே மரணம். எப்பொழுது என்பதைக் கூட உங்களுக்கு தெரியாதப்பா. ஆனால் எங்களுக்கு தெரியும் அப்பா. சரியான இப்பொழுதெல்லாம் அனைவருக்குமே சொல்வேன் இந்நேரம் எவ்கிழமை எத்துனை இன்னும் வருடங்கள் இருக்கின்றது என்றெல்லாம் யான் சொல்லி விடுவேன் அப்பனே. நிச்சயம் என் பக்தர்களுக்கும் அதை ( சிவபதவி அடையும் நேரத்தை) யான் வரும் காலங்களில் ஞானத்தை பெற்றவனுக்கே யான் சொல்வேன் அப்பனே. சொல்லிவிட்டேன். இதனால் சித்தர்களை மிஞ்சியவர்கள் எவரும் இல்லையப்பா. ஆனால் சித்தர்களை வைத்து ஏமாற்றிவிட்டார்கள் அப்பனே அவ்வளவுதான் அப்பனே. இப்படியே ஏமாற்றிக்கொண்டிருந்தால் சித்தர்களே இல்லை என்று சொல்லிவிடுவார்கள் என்பேன் அப்பனே அதனால்தான் யாங்களே எங்களை பக்குவப்படுத்தி பின் யாங்களே வந்து பின் அனைவரையும் அடித்து நொறுக்கிக்கொண்டிருக்கின்றோம் கஷ்டங்களை வைத்து இது தவறா? 



அடியவர்:-  சரிதான் அய்யா


குருநாதர்:-  அப்பனே அனைத்தும் சரியாகத்தான் போய்க்கொண்டு இருக்கின்றது. அப்பனே மனிதன்தான் தவறான வழியில் சென்று கொண்டு இருக்கின்றான். அதனால் ஒரு அடி கொடுத்து சரியான வழியில் செல் என்று யான் … இப்படித்தான் நடந்து கொண்டு இருக்கின்றது என்பேன் அப்பனே. இன்னும் வாக்குகள் பலமாகும் என்பேன் அப்பனே. சொல்லி எவை என்று அறிய அறிய பாவம் அப்பா மனிதன் தெரியாமலே வாழ்ந்து வருகின்றான் என்பேன் அப்பனே. அதனால் இன்னும் வாக்குகள் சொல்கின்றேன் அப்பனே அங்கு அங்கு வந்து எப்படி வாழவேண்டும் என்று எல்லாம் அப்பனே. அப்படி வாழந்திட்டாலே அப்பனே போதுமானதப்பா. மாற்றங்கள் எளிதில் நிகழும். ஆசிகள். ஆசிகள் அப்பா. 


அடியவர்:- என் மகள் திருமணம்… 


குருநாதர்:- ( பிரம்ம ரிஷி தனிப்பட்ட வாக்கு உரைத்தார்கள். அந்த வாக்குகள் நீக்கப்பட்டது) 


அடியவர்:- அடியவர் மகள் 


குருநாதர்:- அம்மையே ராகு கேதுக்கள் புரிகின்றதா? 


அடியவர்:- புரியுது ஐயா


குருநாதர்:- அம்மையே ராகுவானவன் அனைத்தும் கொடுத்துவிட்டால் கடைசியில் அனைத்தும் எடுத்து விடுவான். நிச்சயம் மெதுவாக நடக்கும். 

( பிரம்ம ரிஷி தனிப்பட்ட வாக்கு உரைத்தார்கள். அந்த வாக்குகள் நீக்கப்பட்டது) 




(மதுரையில் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர் இல்லத்தில் உரைத்த இந்த வாக்கு பின் வரும் பதிவில் தொடரும் ………)

https://siththarkalatchi.blogspot.com/2023/11/215-4-9-2023-13.html?m=0


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!





சித்தர்கள் ஆட்சி - 213 : அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு




உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 

குருநாதர்:- அப்பனே பின் தீபம் ஏன் ஏற்றுகின்றீர்கள்? கூறுங்கள். 

அடியவர்:- (மறுபடி கேள்வி பதில் ஆரம்பித்ததால் அடியவர்க்கள் மகிழச்சி, சிரிப்பு) ஜோதி வழியாக இறைவனை தரிசனம் செய்ய. 

குருநாதர்:- அப்பனே அப்படி இல்லையப்பா. அப்பனே இவ்தீபம் இப்படி எரிகின்றதே (பிரகாசமாக அனைவருக்கும் ஒளி கொடுத்து) அதே போலத்தான் தன் வாழக்கையும் எரிய வேண்டும் என்பதற்க்கே தீபங்கள் என்பேன் அப்பனே. ஆனாலும் அப்படியே எரிந்திருக்க அப்பனே அதற்க்கு என்ன தேவை என்று பின் அனைத்தும் தெரியும் என்பேன். அது போலத்தான் நீங்கள் அழகாக பின் ஒளிர்வதற்க்கு அப்பனே புண்ணியங்கள் தேவைப்படுகின்றது என்பேன் அப்பனே. அப்படி புண்ணியங்கள் இல்லை என்றால் அப்பனே தானாக தீபமும் அனைந்துவிடும். நீங்களும் அனைந்து விடுவீர்கள். அவ்வளவுதான் வாழ்க்கை அப்பனே. 

பச்சரிசி அதனை மாவாக இட்டு அதன் மேலே தான் தீபம் ஏற்ற வேண்டும்.இவ்வாறு ஏற்றினால் தான்  சில சில உயிரினங்கள் அதை உண்டு வர சில கர்மாக்கள் தொலையும்.அவைதன் மகிழ்ச்சியும் இருக்குதப்பா அதனுள்ளே.அவை மகிழ்ச்சியுற இவந்தனும்(தீபமேற்றும் பக்தன்) மகிழ்ச்சியாக இருப்பான்.

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!

Friday, October 27, 2023

சித்தர்கள் ஆட்சி - 212 : அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 4-9-2023 உரைத்த வாக்கு - பகுதி 11


 “அனைத்தும் இறைவா நீ”

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - அடியவர் ஒருவர் இல்லத்தில் உரைத்த வாக்கு - 04.09.2023 ( பகுதி 11)

இந்த வாக்கின் முந்தைய பகுதி கீழே உள்ள பதிவில் படிக்கவும்


(பகுதி 11 - வாக்கு ஆரம்பம் ) 


குருநாதர்:- அப்பனே தன்தனக்கு அவை வேண்டும், இவை வேண்டும் நீங்கள் இப்படி கேட்டுக்கொண்டிருந்தால் அப்பனே சிறு குழந்தைகள் கூட அப்பனே தாய் தந்தையர் இல்லாமல் இருக்கின்றார்களே,  அவர்கள் எல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பார்கள்? யாராவது அதை உணர்ந்து இருக்கின்றீர்களா? என்பேன் அப்பனே. ஆனால் நீங்கள் உங்கள் சுயநலத்திற்காகத்தான் கேட்டுக்கொண்டு இருக்கின்றீர்கள். எப்படியப்பா? (நியாயம்). நீங்கள் சரியாக இருந்தால் “அகத்தியனே, நீங்கள்தான் எந்தனுக்கு அனைத்தும், நீங்கள் ஏதாவது கொடுங்கள்” என்று கையை தூக்கி வணங்கிவிட்டால் அப்படி கூட வணங்க வேண்டாம் அப்பனே மனதில் நினைத்துக்கொள்ளுங்கள். யான் தருவேன் அப்பா. என்பிள்ளைகளுக்கு தராமல் யாருக்கு தரப்போகின்றேன் அப்பனே சொல்லுங்கள். 

உங்கள் கடமையை செய்யுங்கள். உன் கடமை என்றால் அப்பனே பிறர்நலனை காணுங்கள் அப்பனே. போதுமானது அப்பனே. என் வழியில் வருபவர்கள் இப்படித்தான் செய்ய வேண்டும். இப்படி செய்தால்தான் கஷ்டங்கள் நீங்கும். ஆனாலும் அச்செல்கள் அங்கங்கு மாறி கிடக்கின்றது. அவை ஒன்றாக இனைத்தால்தான் வெற்றி உண்டாகும். 
கடைசியில் இனைத்து விடுகின்றேன். இதற்க்காகத்தான் அப்பனே திருநீறு, திருநீறு. ( திரு = இறைவன். நீறு = சாம்பல் ). 

அடியவர்:- (அமைதி)

குருநாதர்:- அப்பனே அன்றைய நேரத்தில் (பழங்காலத்தில்) அவ்செல்கள் சிதறாமல் இருக்க பல மூலிகைகள் ஆன நீற்றை அணிந்தார்கள். ஆனால் இன்றளவும் பின் மாறிவிட்டதப்பா. அதை இழுத்தால் அப்பனே எங்கும் செல்லாதப்பா. அங்கேயே (அவ் செல்கள்) தேங்கி நிற்கும் அப்பா. உயர்ந்த பக்தியை காண்பித்தார்களப்பா. இன்றளவு அப்பனே மாறிவிட்டது. அதாவது இயற்கை முறையில் நன்றாக ( திருநீறு செய்து ) அப்பனே அனைவருக்கும் கொடுங்கள் அப்பனே. அணியச்சொல்லுங்கள் அப்பனே. (பின் அவ்செல்கள்) அது மாறாதப்பா. அதை (அவ்செல்களை பழைய நிலைக்கு ஈசன் படைத்தது போல் உங்கள் நெற்றியில் ) மாற்றுவதற்கு பசும் சாணியிலே இருக்கின்றதப்பா. 

—————-
(பினவரும் அடியவர் தொடர்பான வாக்கு நீக்கப்பட்டு உள்ளது ) 

அடியவர்:- அமைதி

குருநாதர்:- …………

அடியவர்:- ……. 

குருநாதர்:- ………

அடியவர்:- சரி அய்யா

———————

குருநாதர்:- அப்பனே நல்ன்கள். ஆசிகள். நின்று கொண்டு இருப்பவர்களே யாராவது என்ன கேள்விகள் எதிர்பார்க்கின்றார்கள் என்று தெரிந்து எவை என்றும் புரியப்புரிய. ( கேள்விகள் கேட்கலாம் )

அடியவர்:- ஐயா, ( எங்கள் ) உடல் பொருள், எண்ணம் , செயல், சொல் அனைத்தாலும் பிறர் நலத்தை மட்டுமே நாட வேண்டும். ஐயா ஆசிர்வாதம் செய்யவேண்டும். வழி காட்டனும். 

குருநாதர்:- இவ்வளவு நேரம் யான் என்ன தெரிவித்துக்கொண்டிருந்தேன் அப்பனே?

அடியவர்:- இதைத்தான்…( சொல்லி கொண்டு இருந்தீர்கள்)

குருநாதர்:- அப்பனே என்னை நோக்கி வந்து விட்டாலே யான் அப்படித்தான் செய்வேன். முதலில் அதைத்தான் கொடுப்பேன். பின்பு அனைத்தும் கொடுப்பேன் அப்பனே. முன்பே அனைத்தும் கொடுத்து விட்டால் பறப்பீர்கள் நீங்கள். பறந்தாலும் நீங்கள் விழுந்து விடுவீர்கள். அதனால்தான் உங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு நீங்கள் இப்படியும் செல்லாமல், அப்படியும் செல்லாமல் எப்படி பக்குவப்படுத்த என்பதை எல்லாம் சொல்லிக்கொடுத்து மாற்றுகின்றேன். நின்று கொண்டு இருப்பவர்களே ஈசனை எப்படி அழைப்பது?

அடியவர்:- கருணை வடிவானவர்.

குருநாதர்:- அப்பனே இது சரியா? பக்கத்தில் இருப்பவனே கூறு?

அடியவர்:- சிவபுராணம் படிச்சு அழைக்கனும். 

குருநாதர்:- அப்பனே (ஆதி ஈசன்) வந்து விடுவானா என்ன?

அடியவர்:- உண்மையான பக்தி இருந்தால் வருவார். மாசற்ற…

குருநாதர்:- அப்பனே உண்மையான பக்தி என்றால் என்ன? 

அடியவர்:- தன்னலம் இல்லாமல் பொது நலத்தோட இருத்தல். 

குருநாதர்:- அப்பனே அது யாரிடத்திலும் இருப்பது இல்லை அப்பா. அதனால்தான் ( அந்த பொது நலம் உங்களிடம் ) இருப்பதற்க்கு யாங்கள் பல கஷ்டங்கள் பட்டுக்கொண்டிருக்கின்றோம் அப்பனே. இது தவறா? சரியா?

அடியவர்:- (அமைதி) சரிதான்

குருநாதர்:- அப்பனே நல்எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் முதலில் கூட அப்பனே. தூய்மையான எண்ணத்தில், இதயத்தில் இறைவன் வாழ்வான் எப்பேன் அப்பனே. அப்படி இல்லாமல், கடன் அங்கு, அங்கு மனம் செலுத்துவது இப்படி கஷ்டங்களோ என்றெல்லாம் இருந்தால் அப்பனே அவ்மனதில் இறைவன் குடிகொண்டு இருக்க மாட்டான் அப்பா. முதலில் பின் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதை பற்றி நினைக்காதீர்கள் அப்பனே. இறைவன் நம் மனதிலே உள்ளான் என்று எண்ணிக்கொண்டால் அப்பனே நிச்சயம் வருவான் இறைவன். அனைத்தும் செய்வானப்பா.

அப்பனே உடல் எப்படி எல்லாம் இயங்குகின்றது? உயிர் எங்கு இருக்கின்றது? அப்பனே உயிர் எப்படி எல்லாம் இவை பற்றி எல்லாம் எடுத்துரைக்கின்றேன். முதலில் இவை எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. அப்பனே உணவை எப்படி உண்ணுகின்றீர்கள்? அப்பனே. அதனை அருமை பற்றி பெருமை பற்றி எல்லாம் தெரிந்து கொண்டு அப்பனே முதலில் நீரை ஊற்ற வேண்டும். பின்பு எதைச்செய்ய வேண்டும். எதை இட வேண்டும் என்றெல்லாம் அனைத்தும் தெரிவித்துக்கொண்டுதானே உண்ணுகின்றீர்கள்? அப்பனே. இது தெரியாமல் உண்டு விட்டால் என்ன லாபம்? அரிசி மட்டும் உண்டுவிட்டால் போதுமா அப்பனே? இப்பொழுது அரிசி மட்டும்தான் உண்டு கொண்டு இருக்கின்றீர்கள் அப்பனே. அப்படி இல்லாமல் பக்குவங்கள் பட்டு பட்டு வாழந்தால்தான் சிறப்பு. ஆனால் தெரியாமலே வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் பைத்தியக்காரர்கள். இங்கு மனிதர்கள்தான் பைத்தியக்காரர்கள் என்பேன் அப்பனே. அவ் பைத்தியனே அப்பனே பொய் சொல்லி ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றான் அப்பா. இதுதான் அப்பா திருடன் மனிதன் என்றார்கள் அப்பனே. இன்னும் (வாக்குகள் சொல்ல) புசண்டன் ( சித்தர் ஶ்ரீ காகபுசண்ட பிரம்ம ரிஷி ) வருவான் அப்பனே. அப்பனே புரியவைப்பான் வரும் காலத்தில் என்னென்ன தவறுகள் செய்திருக்கின்றான் என்று கூட. இதனால் என்ன புரயோஜனம்? அப்பனே. எங்களால் அனைத்தும் நீக்க முடியும் ஒரு நொடியில். ஆனால் நீங்கள் சரியான முறையில் நிச்சயம் அதனை பயன்படுத்த மாட்டீர்கள் மாட்டீர்கள் என்பது தெள்ளத்தெளிவான கருத்தை என்பேன். இன்று யான் சொல்லிவிடுவேண். நாளை மனிதன் அங்கு சென்று ஏதாவது சொல்லிக்கொண்டிருந்தால் “ஆ இப்படியா” என்று அங்கேயே மயங்கி விடுவீர்கள் என்பேன் அப்பனே. இதுதான் அப்பனே மனிதனின் புத்தியை கீழ் நோக்கி அழைத்துச்செல்கின்றது என்பேன். 

அதனால் முதலில் தன்னை உணருங்கள் யார் என்பதைக்கூட. தன்னை உணர்ந்தால் அங்கு இறைவன் வருவானப்பா. அனைத்தும் சொல்லிக்கொடுப்பானப்பா. 

கூறு இன்னும்? 


அடியவர்:- ஐயா , இங்க உள்ள எல்லோரும் உங்களை பற்றி நல்லபடியா வேண்டுவதற்க்கு ஒரு அருமையான பாடல் ( ஒன்று கூறுங்கள்). 

குருநாதர்:- அப்பனே அகத்தியன் என்று சொல்வதற்கே புண்ணியங்கள் தேவைப்படுகின்றதப்பா. பல கோடி அப்பனே. ஆனால் சரியாக அதை பயன் படுத்த தெரியவில்லை அப்பா. அதனால்தான் அப்பனே மீண்டும் அப்பனே கஷ்டங்கள். அப்பனே யான் கொடுக்க மாட்டேன் என் சீடர்களே கொடுத்து விடுவார்கள் அவ்வளவுதான். 

அடியவர்:- அகத்தியர் என்று சொல்வதற்கே பெரும் புண்ணியம் ஐயா

குருநாதர்:- அப்பனே வாக்கு, வாக்கு என்று கேட்டுக்கொண்டிருந்தாயே இப்பொழுது கேள். 

அடியவர்:- ( அடியவர்கள் சிரிப்பு) என்ன சொல்றதுன்னு தெரியலங்க ஐயா. 

குருநாதர்:- அப்பனே பின் வாயில் தெரியாது தெரியாது என்றுதான் வருகின்றது. தெரியும் என்ன தெரியும் கூறு?

அடியவர்:- தெரியும் என்பது எதுவும் இல்லை

குருநாதர்:- அப்படி இல்லை என்றால் அனைவரையுமே ஒன்று கேட்கின்றேன் அப்பனே. அனைத்தும் தெரியாது என்று கூறுகின்றான். இவன்தனக்கு யான் ஏதாவது கொடுத்தால் இவன் சரியாக பயண் படுத்துவானா என்ன? நீங்களே கூறுங்கள் அவன்தனக்கு. 

அடியவர்:- …..

குருநாதர்:- அப்பனே துன்பங்கள் ஏன் என்று தெரிந்து கொண்டாயா? அப்பனே. உந்தனுக்கு கொடுக்கப்போகின்றேன். அதனால்தான் பக்குவங்கள் பட வேண்டும் என்பதற்க்கே இத்துன்பங்கள் அப்பனே. 

அடியவர்:- ………..

குருநாதர்:- அப்பனே இவ் அகத்தியன் செய்வது உங்கள் நண்மைக்கே என்பேன் அப்பனே. ஆனால் நீங்கள் தீமை என்றால் அப்பனே உங்களுக்கு தெரியாது அப்பனே ஒர் முறையில் நீங்கள் என்னென்ன கஷ்டங்கள் அப்பனே விதியில் உள்ளதை முன்பே ஆராயந்து உங்களை யான் பக்குவப்படுத்திக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே. ( உங்கள் அனைவரின் ) அகத்தின் உள்ளேயே இருந்து. 

(அகத்தீசன் = அகத்தின் + ஈசன் = நம் அகத்தில் இருக்கும் ஈசன் ) 

அப்பனே சிறு நொடியில் உன்  உள்ளே நுழைந்து வெளியே சென்று விட்டால் கர்மங்களை யான் அழித்து எங்கோ விட்டு விடுவேன். ஆனால் நீங்கள் தகுதியான ஆளாக இல்லையப்பா இல்லை, இல்லை. 

அத்தகுதியை முதலில் வளரத்துக்கொள்ளுங்கள். அத்தகுதி எப்படி வரும் மனதில் எதுவுமே இருக்கக்கூடாதப்பா. முதலில் தான் யார்? முதலில் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. முதலில் இவ்வுலகத்திற்கு ஏன் வந்தோம்? எவை எவை செய்யவேண்டும்? எவை எவை செய்யக்கூடாது ? என்பதை எல்லாம் அப்பனே புரிந்து கொண்டால் நன்று என்பேன் அப்பனே. அனைவருமே இதை புரிந்து கொளவதே இல்லையப்பா. அதனால்தான் கஷ்டங்கள் என்பேன் அப்பனே. அதை புரிந்து கொண்டால்,  சரியாகவே வாழ்ந்து வந்தாலே யாங்களே அதை புரிய வைப்போம். புரிந்து கொண்டு வாழ்ந்தாலே வெற்றி நிச்சயம். புரியாவிடில் தோல்வி நிச்சயம். 

அடியவர்:- ………

குருநாதர்:- அப்பனே அதனால் கவலைகள் இல்லை. ஒரு பொழுதும் என் பக்தர்களுக்கு யான் கஷ்டங்கள் தருவதே இல்லையப்பா நீங்கள் தான் கஷ்டத்தை (கர்மாவை) நோக்கி செல்கின்றீர்கள் அப்பனே. கூறுங்கள் அப்பனே. என் மீது தவறா? 

அடியவர்:- இல்லங்கய்யா

குருநாதர்:- அப்பனே உங்களை பக்குவப்படுத்தி பக்குவப்படுத்தி, ஆற்றி ஆற்றி இப்பிறவிக்கு என்னென்ன கஷ்டங்கள் படுவீர்கள் எல்லாம் வரும் காலத்தில் எடுத்துரைப்பேன். அதற்கு என்னென்ன தீர்வுகள் என்றெல்லாம் யான் எடுத்துரைப்பேன்.அதனால் எக்குறைகளும் கொள்ளத்தேவை இல்லை என்பேன். கேளுங்கள் இன்னும்.சொல்கின்றேன். 

அடியவர்:- ( நீன்ட அமைத்திக்குப்பின் ஓர் அடியவர்) ஐயா அடியார்கள் பூசுவதற்கு தென்காசி சுரண்டையில் இருந்து இப்போ விபூதி வாங்கி (மற்றவருக்கு) எல்லாம் கொடுக்க ஆரம்பிச்சு இருக்கோம் ஐயா. அதை சாணம் வாங்கி அதையே திரும்ப ஐயா கிட்ட…

குருநாதர்:- அப்பனே தாராளமாக கொடு. ஆனாலும் சில கர்மங்களை ஏற்ப்பாய். அதை வரும் காலங்களில் பின் எப்படி அழிப்பது என்பதையும் சொல்லி விடுகின்றேன். 

அடியவர்:- குருநாதர்தான் வழி காட்டனும்.

குருநாதர்:- அப்பனே வழியும் காட்டி விட்டேன். மீண்டும் கேட்கின்றாய் என்பேன். இதுதான் மனிதர்களின் புத்தி. மட்ட புத்தி. 

அடியவர்:- ஐயா ஒரு முறை ஜீவ சமாதி போகும்போது, மக்கள் எல்லாம் உட்காந்து (வாக்கு) கேட்கும்போது அந்த ஜீவ சமாதியிலிருந்த மகான் வந்து அருள் பாலிக்கும் விதம் ஒரு மந்திரம் சொல்ரேன்னு சொன்னீங்கல்ல. 

குருநாதர்:- அப்பனே அதை நீ இப்பொழுது செப்பினாலும் வீனாகப்போய் விடும் என்பேன் அப்பனே . ஆனால் மீண்டும் கடன் தான் அதிகமப்பா. ஆனாலும் அதை வரும் காலங்களில், எப்பொழுது எதை செப்ப வேண்டுமோ என்பதை எல்லாம் யான் சொல்லி விட்டேன் அப்பனே. எப்பொழுது எதைத்தர வேண்டுமோ அப்பொழுது கொடுத்தால்தான் நல்லது என்பேன். இப்பொழுது சொன்னாயே ஜீவசமாதி என்று அது எப்படியப்பா? ( ஜீவ சமாதி என்றால் என்ன?)


அடியவர்:- இறைவனை நமக்குள் பார்த்து இறைவனுடன் ஒடுங்குதல். 

குருநாதர்:- அப்பனே. உயிரோடு இருப்பதப்பா அப்பனே இதில் உயிரோடு இருப்பதே எப்படி நீங்கள் அறிந்து கொள்ளலாம் என்றால் சிறிது தொலைவில் அமர்ந்து தியானங்கள் செய்தாலே அப்பனே உன் உடம்பு ஆடுமப்பா. ஆடும். அப்பொழுதே நீங்கள் புரிந்து கொள்ளலாம். இதற்க்கு பன்மடங்கு தியானங்கள் செய்யவேண்டும். அப்பொழுதுதான் உண்மை நிலை புரியும் என்பேன். (உங்களை) ஆட்டுவிப்பான் அவனை (ஜீவ சமாதியில் உள்ள சித்தர்களை) நினைத்து தியானங்கள் செய்து கொண்டிருந்தால் இங்கு உன் உடம்பு அப்படியே ஆடும் அப்பா. அதிர்வுகள் ( உன் உடம்பின் உள் ) தோன்றுமப்பா. பின் உடம்பே ஆடுமப்பா. அப்பொழுதுதான் (உனது) சில கர்மாக்கள் தொலையுமப்பா. அப்படி இல்லை என்றால் ஒரு நொடி போய் விடுகின்றது. பின் ஏதோ வணங்கி விடுகின்றீர்கள் என்றால் நிச்சயம் பின் கஷ்டங்கள் தான் வருமப்பா. பின் அனுபவித்துத்தான் ஆக வேண்டும் அப்பா. சொல்லிவிட்டேன் அப்பனே. ஜீவன் இப்பொழுது எல்லாம் அதை சொல்லக்கூடாது வரும் காலத்தில் அதை சொல்லிவிடுகின்றேன் அதைக்கூட. 

அடியவர்:- …….

குருநாதர்:- அப்பனே செந்தூர் (திருச்செந்தூர்) ஏன் செல்கின்றோம் அப்பனே, கூறு? 

அடியவர்:- முருகன் ஸ்தலம். சடாச்சரன் உள்ள இடம்

குருநாதர்:- அப்பனே, அது இல்லையப்பா. 

அடியவர்:- (மனித பின் மூளையில் உள்ள) கர்மக்குடுவையை செந்தூரான் மட்டுமே அழிக்க முடியும் 

குருநாதர்:- அப்பனே, அதை யான் (ஏற்கனவே) தெரிவித்து விட்டேன். பின் தெரியாததை கூறுங்கள். 

அடியவர்:- …….

குருநாதர்:- அப்பனே யான் சொன்னேனே பின் வரிசையாக ( நெற்றியில் ) செல்கள் இருக்கும் என்று. அப்பனே சில செல்கள் அங்கு சென்றால் புருவின் ( புருவத்தின் ) மத்தியில் வந்து விடும் அப்பா. ஆனால் சென்று கொண்டே இருக்க வேண்டும். இன்னும் தலங்கள் இருக்கின்றது என்பேன் அப்பனே. அங்கெல்லாம் சென்றால் (நெற்றியில் உள்ள) சிதறி கிடக்கின்றதே அதெல்லாம் ஒன்று சேரும் அப்பனே. இப்படி சேரந்தால்தான் அப்பனே பக்தியில் வெற்றி கிடைக்கும். ஆனாலும் அப்பனே பின் சில சில மனிதர்களுக்கு தானாகவே புண்ணியங்கள் சேர்ந்து விடும். இறை பலங்கள் வந்து விடும். தானாகவே ( அவ் செல்கள் ) சேர்ந்துவிடும். (அப்படி) அவை சேர்ந்துவிட்டால் நீங்கள் நினைத்ததை எளிதில் அடைந்து விடலாம் என்பேன் அப்பனே. வரும் காலங்களில் அதனை பற்றியும் எடுத்துரைக்கின்றேன் அப்பனே. 

(மதுரையில் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர் இல்லத்தில் உரைத்த இந்த வாக்கு பின் வரும் பதிவில் தொடரும் ………)


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!

Thursday, October 26, 2023

சித்தர்கள் ஆட்சி - 211 : அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!

சித்தர்கள் ஆட்சி - 210 : அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 4-9-2023 உரைத்த வாக்கு - பகுதி 10


 

“அனைத்தும் இறைவா நீ”


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - அடியவர் ஒருவர் இல்லத்தில் உரைத்த வாக்கு - 04.09.2023 ( பகுதி 10


இந்த வாக்கின் முந்தைய பகுதி கீழே உள்ள பதிவில் படிக்கவும்

https://siththarkalatchi.blogspot.com/2023/10/209-4-9-2023-9.html?m=0

(பகுதி 10 - வாக்கு ஆரம்பம் ) 



குருநாதர்:- அப்பனே, துன்பங்கள் இல்லாமல் எதுவும் கொடுக்க முடியாதப்பா. அப்பனே இப்பொழுதே அப்பனே துன்பம் வேண்டுமா? இன்பம் வேண்டுமா? 


அடியவர்:- (பல அடியவர்கள் சொல்லியது) துனபம். 


குருநாதர்:- அப்பனே இங்கு துன்பம் என்றால் இறைவன். இன்பம் என்றால் கர்மா. அப்பொழுது நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். புரிகின்றதா? 


அடியவர்:- புரிந்தது


குருநாதர்:- அப்பனே தெரிந்து வாழ கற்றுக்கொள்ளுங்கள். என்னிடத்திலே இருந்து கொண்டு அகத்தியா, அகத்தியா என்று சொல்லிக்கொண்டிருந்து அப்பனே வாழத்தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அப்பா. அதனால்தான் அப்பனே இவை எல்லாம் யான் சொல்லிக்கொடுத்து, அப்பனே ஒரு சிறு பிள்ளைக்கு ஒரு தாய் தந்தையர் எப்படி சொல்லிக்கொடுக்கின்றார்களோ அவை எல்லாம் சொல்லிக்கொடுத்துத்தான் உன் விதிகளைக்கூட உள்ளதை யான் அனைத்தும் சொல்வேன் அப்பனே. அப்பொழுதுதான் அனைத்தும் மாறும் அப்பா. பின் யான் சொல்லிவிடலாம். ஓடு, அங்கு ஓடு , இங்கு ஒடு என்றெல்லாம். நீ ஓடிக்கொண்டிதான் இருக்க வேண்டும். அதனால் நம்பிக்கையோடு வாருங்கள். அவ்நம்பிக்கையே உங்களை உயர்த்தி வைக்கும். அப்பனே நம்பிக்கைத்தான் யான் என்று உணர்ந்து கொண்டீர்கள் நீங்கள். 


அடியவர்:- ( ஆதி குருவின் ஞான ரசம் திருப்தியாக உண்ட அமைதி) 


குருநாதர்:- அப்பனே யாருக்காவது பின் கேள்விகள் இருக்கின்றதா என்று கூட்டு எந்தனுக்கு தெரிவி. 


அடியவர்:- ஐயா குருநாதர் அகஸ்தியப்பெருமான் (மீது உள்ள) நாட்டத்தில்  நண்பர் வந்துள்ளார். அவர் நல்லா வந்து திருப்பி இப்போ தீய வழிக்கு போய்ட்டாங்க. இப்போ ( உயிருடன்) இல்ல. ஆனா குருநாதர் வந்து முதல்ல கெட்டவங்களா இருந்த அவங்கள நல்ல வழியில் மாத்தி உட்டாங்க. ஆனா இவரு நல்ல வழியில வந்துதுட்டு , கெட்டதா போனதுக்கு காரணம் என்ன?


குருநாதர்:- அப்பனே நீ பார்த்தாயா? நல்லதை செய்து கொண்டிருக்கின்றான் என்று? அப்பனே உன் வேலையை செய்யவே உந்தனுக்கு நேரம் இல்லை. அவன்தனை நீ பார்த்தாயா? சொல். 


அடியவர்:- அவர் அன்னதானம் பன்னிக்கிட்டு இருந்தார். 


குருநாதர்:- அப்பனே அனைவருமே அன்னதானம் செய்கின்றார்கள் அப்பனே. யாருக்கு கஷ்டம் வரவில்லை கூறு. 


அடியவர்:- அவர் அகத்தியர் குருநாதர் வாக்குகளுடன் வந்தாரு. அதுக்கப்புறம்…


குருநாதர்:- அப்பனே இதுவரை யான் சொல்லிக்கொண்டிருந்தது என்ன? மீண்டும் சொல்கின்றேன் அப்பனே. இவனதனக்கு புத்தியில்லை. இப்பொழுதிலிருந்தே புரிகின்றது அப்பனே. இவன் பின் ஏற்க்கவே யான் சொல்லிவிட்டேன். இறைவன் என்பவன் நெருப்பு என்று. அதை நெருங்க நெருங்க துன்பம் வரும். ஆனால் பாதியிலேயே திரும்பி வந்துவிட்டால் அவ்வளவுதான் வாழ்க்கை என்று. இதை நீ அப்பனே மீண்டும் மீண்டும் செல்வதற்க்கு அகத்தியன் (நெருப்பு என்று உணர்க) அப்பனே புரிந்துகொள். மூளை இல்லாதவனே. 


அடியவர்:- (திரு.ஜானகிராமன் அவர்கள் இந்த அடியவருக்கு விளக்கம் தந்தார்கள்) 


குருநாதர்:- அப்பனே உன்னை அறிவாளி என்றே சொல்கின்றேன் (மீண்டும் என்னைக்கேள்வி) கேள். 


அடியவர்:- அதனாதலதான் அய்யா மனசுல…


குருநாதர்:- அப்பனே இதனால்தான் எங்கு வாய்யை வட வேண்டுமே அங்கு வாயை விடவேண்டும் அப்பனே. எங்கு எப்படி நடக்க வேண்டுமோ அங்கு அப்படி நடந்துகொண்டால் சிறப்பு. அப்படி இல்லை என்றால் படைப்பு. அப்பனே எதைச்சொன்னேன் என்றால் மீண்டும் பிறவியப்பா. அதனால் உணருங்கள். தெளிவு பெறுங்கள். அப்பனே அப்படி இல்லை என்றால் யானே கஷ்டத்தை தருவேன் என்று கூட சொல்லிவிட்டேன். அதைக்கூட நீ கேட்க்கவில்லையா? 

 

அடியவர்:- சரிங்க


குருநாதர்:- அப்பனே, எதறக்காக அப்பா நீ வந்தாய் இங்கு? 


அடியவர்:- குருநாதருடைய வாக்கை கேட்ப்பதற்க்கு


குருநாதர்:- அப்பனே அனைத்தும் சொல்லிக்கொண்டேதான் இருக்கின்றேன் நீ கேட்கவில்லையே. அதனால் என்ன சொன்னேன் என்று சில வாரத்தைகளை அனைவருக்கும் மீண்டும் கூறு? 


அடியவர்:- ஐயா கஷ்டப்பட்டாதான் கர்மாவை போக்க முடியும். 


குருநாதர்:- அப்பனே இதை தெரிந்து கொண்டே என் நண்பன்

கஷ்டப்படுகின்றான் என்று கூறி விட்டாயே அப்பனே. இவைதன் எப்படியப்பா நீ நான் சொன்னாய் அப்பனே அதனால்தான் அப்பனே. மூளை இருக்கின்றது. மனிதனுக்கு உபயோகப்படுத்த தெரியவில்ரையப்பா. அப்பனே தெரிகின்றதா இப்பொழுது? அவன் எதற்க்காக கஷ்டப்படுகின்றான் என்று. 


அடியவர்:- அவர் இப்ப இல்லங்க. புரியுதுங்க. அவர் மீண்டும் பிறவி எடுத்து (கஷ்டப்பட) வரப்போறார். 


குருநாதர்:- அப்பனே என்னை நம்பியவர்கள் கூட கஷ்டப்படுத்திக்கொண்டே அதாவது கஷ்டப்பட்டுத்தான் கொண்டிருக்கின்றார்கள் இருக்கின்றார்கள். எதற்க்காக நீ கூற வேண்டும். 


அடியவர்:- அய்யா, கர்மாவை போக்கி அவங்களை புணிதப்படுத்தி அவர்களை சுத்தப்படுத்துவதற்க்காக. 



குருநாதர்:- அப்பனே தெரிந்து கொண்டாயா?. அனைத்தும் தெரிந்து கொண்டே கேள்விகள் கேட்கின்றாயே? அப்பனே


அடியவர்:- மௌனம்


குருநாதர்:- இதனால் அப்பனே (மீண்டும்) கேள். 


அடியவர்:- அய்யா அதாவது உயர் தர புண்ணியம்னா என்ன? உணவு வழங்குதல் ஓரு புண்ணியம் அப்டின்னு சொல்ரோம். கல்விக்கு வழி வகுத்தல் ஒரு புண்ணியம்ன்னு சொல்ரோம். அப்புறம் வந்து இறை வழிபாட்டுக்கு அழைச்சு வர்ரது புண்ணயம்ங்குறோம். இதுல வந்து எது புண்ணியம் அதிகமானது மனிதனுக்கு புண்ணியம் அதிகம் சேரத்து அவனது கர்மாவை பலனகளை குறைக்கும்?


குருநாதர்:- அப்பனே, “அனைத்தும் இறைவா நீ” என்று சொல்லிவிடு முதலில். அதிலிருந்து அப்பனே இறைவனே உனக்கு அனைத்தும் கொடுப்பான் அப்பனே. வாங்கிக்கொள். அதை மீறி என்னால் முடியும் என்று சென்றால் அங்குதான் அப்பனே கஷ்டங்களப்பா ( கர்மாக்கள் ). அதனால் புரிந்து கொள். 


அதனால் அப்பனே பரமனே ( மதுரை ஶ்ரீ அகஸ்தியர் இறைஅருள் மன்றம் ) தெரிந்து கொள். ஏன் எதற்க்காக வந்து கொண்டிருந்தாய்? உன்னை கஷ்டங்கள் நெருங்கப்போகின்றது. ஏன் எதற்க்காக நீ கூறுவாய். அகத்தியனே உந்தனுக்கு சேவைகள் செய்து கொண்டிருந்தேனே இப்படி கஷ்டங்கள் ஆகி விட்டதே என்று. ஆனாலும் அப்பனே அனைத்தும் உந்தனுக்கு சொல்லிவிட்டேன் அப்பனே. இதையும் பரப்பு. எப்படி மனிதன் வாழவேண்டும்? எப்படி இருக்கவேண்டும்? என்பதை எல்லாம் அப்பனே. உன் கடமையை செய். மற்றவர்கள் கடை பிடிக்கின்றார்களோ இல்லையோ. நீ சொல்லிவிடு அப்பனே. அப்பனே அது கர்மா. அவனையே போய் சார்ந்துவிடும் என்பேன் சொல்லிவிட்டேன் அப்பனே. உந்தனுக்காக மட்டும் இங்கு வந்தேன் அப்பனே. ஆனால் மற்றவர்கள் எல்லாம் கர்மாவை சேகரித்து வந்துகொண்டிருக்கின்றார்கள். அவ்வளவுதான். 


அடியவர்:- அமைதி


குருநாதர்:- அதனால் அப்பனே புரிகின்றதா? என் பக்த்தனை எப்பொழுதும் யான் விடமாட்டேன் அப்பனே. இப்பொழுதிலிருந்து அதனால் அப்பனே என் பக்தனை கஷ்டங்கள் வருகின்றதென்றால் யானே அவனிடத்திற்கு சென்று பாடங்களை கற்ப்பிப்பேன் போதுமா? 


அடியவர்:- அமைதி


குருநாதர்:- நீ கேட்டாய் அப்பனே, அவை, இவை, இப்படிச்செய்தால் புண்ணியம் புண்ணுயம் என்று, செய்துகொண்டே இரு அப்பனே யான் வருவேன். அவ்வளவுதான் அப்பனே. அப்பனே அதனால் தான் அப்பனே புண்ணியங்கள் செய்பவர்களுக்கும் கர்மா ஏற்ப்படுகின்றது என்பேன் அப்பனே. யான் புண்ணியங்கள் செய்தேனே என்றெல்லாம். அதனால் அப்பனே யானே வந்து காத்தருளுவேன் வருங்காலங்களில் கூட அப்பனே. அதனால்தான் அப்பனே முதலில் என்னென்ன செய்ய வேண்டும் என்று கூட தெரிந்து தெரிந்து செய்தால்தான் அப்பனே வெற்றி கிடைக்குமே தவிர இல்லை என்றால் தோல்விகள் தான் மிஞ்சும் என்பேன் அப்பனே. அப்பனே தோல்விகள், தோல்விகள் ஏற்ப்பட, ஏற்ப்பட ஒரு நாள் வெற்றியாகிவிடும் என்பேன் அப்பனே. துன்பங்கள் ஏற்ப்பட ஏற்ப்பட ஒர் நாள் இன்பமாகிவிடும் என்பேன் அப்பனே. பொய்கள் சொல்லச்சொல்ல ஓர் நாள் உண்மை ஆகிவிடும் என்பேன் அப்பனே. இவ்வாறு மனிதன் பொய் சொல்லுச்சொல்லி அப்பனே கடைசியில் கலியுகத்தில் உண்மை ஆக்கிவிட்டால் பாவி மனிதன் அப்பனே. அதை தடுக்கவே யாங்கள் வந்து கொண்டிருக்கின்றோம் அப்பனே. முதலில் அதை தடுத்துவிட்டு உங்கள் அனைவருக்குமே மோட்சகதியை யான் கொடுக்கின்றேன். நலங்கள். ஆசிகள். 


அடியவர்:- அமைதி. ( அடியவர்கள் மோட்சகதி என்று கேட்டு ஆனந்தம்) 


குருநாதர்:- அதனால் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. சித்தர்கள் ஏன் உங்களுக்காக வரவேண்டும்? அப்பனே உங்கள் மூளையில் உள்ள அனைத்து செல்களைக்கூட யான் ஆராயந்து விட்டேன். மனிதன் என்னென்ன வேலை செய்கின்றான் எங்கெல்லாம் (உடம்பில் உள்ள செல்களில்) சில தரித்திரங்கள் தங்கும். அவை எல்லாம் பின் அங்கங்கே நோய்கள் ஏற்ப்படும் என்பதை எல்லாம் யான் நன்றாக தெரிந்திருக்கின்றேன் அப்பனே. 


( சித்த ரகசியம்:- 100 ட்ரில்லியன்/Trillion cells அதாவது ஒரு கோடி கோடி செல்கள் 100,000,000,000,000 உள்ள மனித உடம்பில் - நன்கு கவணிக்க - ஒருமனிதனின் உடலில் உள்ள இவ்வளவு செல்களை அகத்திய பிரம்ம ரிஷி அவர்களால் நொடிப்பொழுதில் ஆராய இயலும் இறை வல்லமை இது. மனிதனால் எந்நாளும் நினைத்தே பார்க்க இயலாத சித்தர்களின் மாபெரும் இறை வல்லமை இது. இது போல மனிதனால் உணர இயலாத பல இறை வல்லமைகள் சித்தர்கள் வசம் உண்டு. அதனை அவர்கள் கூறினால் மட்டுமே ஒரளவு தெரிந்து கொள்ள இயலும். புரியாதவற்றை சொன்னால் கர்மம் என்பதால் சித்தர்கள் இது போன்ற பல விசயங்களை மனிதர்களுக்கு உரைப்பதில்லை .கர்மங்கள் இத்துனை செல்களில் இருந்து நீக்கும் வல்லமை இருவருக்கு மட்டுமே உண்டு. உலகை ஆளும் ஆதி ஈசனாலும், அகத்திய பிரம்ம ரிஷியால் மட்டுமே இயலும் என்பதை உணர்க.


இதை எவரும் தெரிந்திருக்கவில்லையப்பா. அதனை முதலில் ஒழித்திட வேண்டும் என்பேன் அப்பனே. ( ஒரு அடியவரின் வரப்போகும் நோய்குறித்து வாக்கு உரைத்தார் மாமுனிவர், பொதிகை வேந்தன் அகத்திய பிரம்மரிஷி. அதற்க்கு குருநாதர் அந்த அடியவர்க்கு இயலாதவர்களுக்கு உணவளித்துவர அருளினார்). இவை எல்லாம் வரும் காலங்களில் எப்படி கட்டுப்படுத்துவது என்பதை எல்லாம் யான் தெரிவித்துக்கொண்டே இருப்பேன் அப்பனே. அனைத்து செல்களும் அதாவது நெற்றியில் வலது கண்ணில் இருந்து இடது கண் வரை கூட அப்பனே பின் வரிசையாக செல்கள் இருக்கின்றதப்பா. அவ்செல்கள் மாறக்கூடாது என்பேன். (அவை) மாறிவிட்டால்தான் நோய்களப்பா நோய்கள். அப்பனே நலன்களாகவே நீங்கள் செய்யும் வினைகளுக்கு ஏற்ப்பவே அது அங்கு அங்கு தங்கிவிடும் அப்பா. உடம்பில் கூட. அதை மீண்டும் அப்பனே பின் எங்கு இருக்கின்றதோ அங்கு சேர்க்க வேண்டும். அதற்க்காகத்தான் சொல்கின்றேன் புண்ணியங்கள் செய். புண்ணியங்கள் செய் என்பேன் அப்பனே. ஆனால் அனைவருக்குமே அச்செல்கள் மாறிவிட்டதப்பா. அதை மாறக்கூடாது என்பதற்க்காகவே நீரைப்பூசுங்கள் என்று திருநீறு என்பது வந்துவிட்டது என்பேன். அப்பனே அதைப்பூசி அப்பனே பக்தியோடு  இருந்தாலே பின் எண்ணங்கள் எங்கும் கர்மத்தையும் சேரக்க முடியாது. இறைவன் பாதத்தில் மனதை வைத்து அப்பனே அதிபோலவே பின் (அவ்செல்கள்) வரிசையாகவே நின்றால் அப்பனே புருவ மத்தியில் இறைவனை நிறுத்தி இறைவனையே காணலாம். அப்பனே இப்புவிதன்னில் அனைவருக்குமே (அவ்செல்கள்) சிதைந்தாகி விட்டது என்பேன். ஆனால் (அவ்செல்களை) ஒன்று சேரப்பது எவ்வளவு கடினம் அல்லவா அப்பனே. அதை யான்தான் ஒன்று சேர்க்க வேண்டும். ஆனாலும் அப்பனே அதற்க்கும் ஒரு ஒரு திருத்தலங்கள் இருக்கின்றது அப்பா. அங்கு சென்றால் மாறிவிடும். ஆனால் அங்கு செல்வதற்க்கும் அவ்செல்கள் விடாதப்பா. மேல்நோக்கி செல்கள் இதனை தடுக்கும் ( ஆலயத்திறக்கு செல்வதை ) . இதுதானப்பா வினை. அப்பனே அதை சேர்க்கவே வரும் காலங்களில் எத்திருத்தலத்திற்க்கு எல்லாம் செல்ல வேண்டும். எங்கெல்லாம் அமர வேண்டும். எங்கெல்லாம்  தூ(ங்கி) எழுதல் என்பதை எல்லாம் சொல்கின்றேன் கடைபிடியுங்கள் அப்பனே. வாழந்து கொள்ளலாம் அப்பனே. இல்லை என்றால் வாழத்தெரியாமல் அப்பனே இப்படித்தான் கஷ்டங்களோடு  இருக்க வேண்டும் சொல்லி விட்டேன் அப்பனே. 


(மதுரையில் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர் இல்லத்தில் உரைத்த இந்த வாக்கு பின் வரும் பதிவில் தொடரும் ………)

https://siththarkalatchi.blogspot.com/2023/10/212-4-9-2023-11.html?m=0


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!


Wednesday, October 25, 2023

சித்தர்கள் ஆட்சி - 209 : அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 4-9-2023 உரைத்த வாக்கு - பகுதி 9


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - அடியவர் ஒருவர் இல்லத்தில் உரைத்த வாக்கு - 04.09.2023 ( பகுதி 9)


இந்த வாக்கின் முந்தைய பகுதி கீழே உள்ள பதிவில் படிக்கவும்


https://siththarkalatchi.blogspot.com/2023/10/208-4-9-2023-8.html?m=0


(பகுதி 9 - வாக்கு ஆரம்பம் ) 


குருநாதர்:- அதனால் இப்படித்தான் பக்குவங்கள் பட வேண்டும். பக்குவங்கள் பட்டுவிட்டால் உன் விதியைக்கூட யான் சொல்வேன் அப்பனே. அதை மாற்றும் சக்திகள் கூட என்னிடத்திலே இருக்கின்றது அப்பனே. பிரம்மாவிடம் எடுத்துச்செல்வேன் அப்பனே.  புரிகின்றதா? 


அடியவர்:- புரிகின்றது. 


குருநாதர்:- அப்பனே, புரிகின்றது என்று சொல்லிவிட்டாய் என்ன புரிகின்றது? கூறு. 


அடியவர்:-  பக்குவ நிலையை அடைவதற்குத் துன்பம்தான் இறைவன் கொடுத்த வழி. துன்பத்தை ஏற்றுக்கொண்டு இறைவன்பால் மனதை…( இதைச் சொல்லி முடிக்கும் முன்னர் )


குருநாதர்:- அப்பனே இனிமேல் என்னை எதாவது கேட்பாயா என்ன? 


அடியவர்:- ஆசிர்வாதம் வேண்டும். 


குருநாதர்:- அப்பனே, என்னுடைய ஆசிர்வாதம் இல்லாமலா இங்கு வந்திருந்தாய் நீ சொல்? 


அடியவர்:- சரிங்கய்யா. உண்மைதான். 


குருநாதர்:- அப்பனே, சரி என்று எதற்கு கூறினாய்? 


அடியவர்:- நீங்க இல்லன்னா இங்கு வரமுடியாது. தெரியும். 


குருநாதர்:- அப்பனே இதை முதலிலேயே சொல்லலாம் அல்லவா? 


அடியவர்:- புரிஞ்சுதுங்கய்யா. மன்னித்துக்கொள்ளுங்கள்


குருநாதர்:- அப்பனே, பின் அப்பொழுது நீயே புரிந்து கொண்டாயா? நீ தவறு செய்தாயா? தவறு செய்தவன்தான் மன்னிப்பு கேட்க வேண்டும் அப்பனே. அதுதான் அப்பனே உன் வாயிலிருந்தே. அப்பனே தவறு செய்தவன் அப்பனே நிச்சயம் தண்டனைகள் அனுபவிக்க வேண்டும். தவறு செய்தவனுக்குத்தான் அப்பனே அப்பொழுது நீ தவறு செய்தவனா? 


அடியவர்:- ஆமாங்க 


குருநாதர்:- அப்பனே, யான் இல்லை என்று சொல்கின்றேன். 


அடியவர்:- தெரியல அய்யா. 


குருநாதர்:- அப்பனே தெரியவில்லை என்றால் என்ன?


அடியவர்:- (மௌனம்) 


குருநாதர்:- அப்பனே இப்படியே தெரியாது , தெரியாது என்று சொல்லிக்கொண்டே இரு அப்பனே. அனைத்தும் தெரிந்துவிடும். யான் இருக்கின்றேன் அப்பனே. 


அடியவர்:- ( அமைதி )


குருநாதர்:- அப்பனே, உந்தனுக்கு ஒரு மந்திரம் சொல்லட்டுமா? (அந்த மந்திரம்) அப்பனே “தெரியாது”. 


அடியவர்:- (நாடி அருளாளர் திரு.ஜானகிராமன் அவர்கள் அடியவருக்கு விளக்கம் தருகின்றார்.அதன் பின்..)


குருநாதர்:- அப்பனே எதை தெரியாது என்று கூற வேண்டும்? 


அடியவர்:- இறைவன் கூட…


குருநாதர்:- அப்பனே, இப்பொழுது புரிகின்றதா? அப்பனே கடன் எதற்க்காக? என்பதைக்கூட இதுவும் கூட தெரியாதப்பா. அதனால் அமைதியாக இரு. சிறிது சிறிதாக மாறும் என்பேன். 


அடியவர்:- ( அமைதி ) 


குருநாதர்:- அப்பனே நல்முறையாக சில விசயங்கள் , கேள் அப்பனே.

…………………………………..


அடியவர்:-  (தனிப்பட்ட 5 முதல் 6 கேள்வி பதில் இங்கு நீக்கப்பட்டது) 


……………………………………


குருநாதர்:- அப்பனே அப்படி இருக்க, அப்பனே அனைத்தும் செய்வது மனிதனப்பனே. அதை திருத்துவது யான். ஆனாலும் அப்பனே சில துன்பங்களை கொடுத்துத்தான் திருத்திவிடுகின்றேன். இது தவறா? 


(அடியவர்கள் இங்கு ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். துன்பங்கள் அகத்தின் ஈசன் மூலம் நமது அனைவரின் கர்மம் நீக்கும் நண்மைக்காக வழுங்கப்பட்டு, நமது கர்மங்கள் ஆணிவேரோடு முற்றிலும் களை எடுக்கப்படுகின்றது. அதன்மூலம் நல்வாழ்வு கிட்டுகின்றது.)


அடியவர்:- சரிதான்


குருநாதர்:- அப்பனே இப்பொழுது சொல் உந்தனுக்கு துன்பம் கொடுத்தது நல்லதா? கெட்டதா? 


அடியவர்:- நல்லதுதான்


குருநாதர்:- அப்பனே இதனால் சில கர்மங்களையும் தொலைத்துவிட்டாய் அப்பனே. அதனால்தான் அப்பனே துனபம் கொடுத்தால் அதன்மூலமே யான் கர்மத்தை துடைப்பேன் ( நீக்குவேன் ). உந்தனுக்கும் அதுபோலத்தான். உன் பக்கத்தில் இருப்பவனுக்கும் அதுபோலத்தான். யாரை நம்ப வேண்டும் முதலில்? 


அடியவர் 1:- இறைவனை

அடியவர் 2:- குருநாதரை


குருநாதர்:- அப்பனே முதலில் அப்பனே உன்னை நம்புங்கள் முதலில். அப்பனே எப்படி என்னை ( எங்களை நாங்கள்/ அடியவர்களை அடியவர்கள் ) நம்புவது என்று நீங்கள் கூறுவீர்கள் அப்பனே. முதலில் யோசித்து செய்யவேண்டும் ஒரு விசயத்தை அப்பனே. இதை செய்தால் நல்லவயையா? கெட்டவையா? நிறக்கின்றேனே பின் கடன் என்று சொல்லிவிடேன் அப்பனே. அதை முதலிலே யோசித்திருந்தால் பின் தெரிந்திருக்கும் அப்பனே இதனால் என்ன துன்பம் என்று. அதனால்தான் முதலில் உன்னை உணர் என்று. இது தவறா?  


அடியவர்:- தவறில்லை


குருநாதர்:- அப்பனே இதை புரியாமல் சுற்றி திரிந்து அப்பனே வலங்கள் (இறைவனை / குருநாதரை சுற்றி) வந்து வந்து ஒன்றும் நடக்கவில்லை என்றால் எப்படியப்பா? உன் விதியில் இருப்பதுதான் நடக்கும். ஆனாலும் உயர்ந்த பக்தியும் உயர்ந்த புண்ணியங்களும் செய்து கொண்டிருந்தால் அப்பனே யானே மாற்றி அமைப்பேன் இப்புண்ணியங்களை பிரம்மாவிடத்தில் கூறி. 


அடியவர்:- அதுக்கும் நீங்கதான் வழி சொல்லனும்


குருநாதர்:- அப்பனே இதனால் பலகர்மாக்கள் உந்தன் விதியில் கூட. யான் பலமுறை பிரம்மாவிடம் சென்று விட்டேன். ஆனால் பின் அகத்திய மாமுனிவரே துன்பங்களை அனுபவித்துத்தான் ஆக வேண்டும் இவன் என்று சொல்லிவிட்டான். அதே போலத்தான் உன் பக்கத்தில் உள்ளவனுக்கும் சொல்லிவிட்டான் அப்பனே ஆனால் யாங்கள் உங்களை விட வில்லை. 


அடியவர்:- ( மௌனம் ) 


குருநாதர்:- அப்பனே நீ கேட்கலாம். அறிவுள்ளவன்தானே. அகத்தியனே பின் அனைவருக்கும் நண்மை செய்கின்றீர்களே. என் விதியை மாற்றலாமே என்று. அப்பனே அனைத்திற்க்கும் மூலப்பொருள் ( ஆதி ஈசன் ) இருக்கின்றது. அவ்மூலப்பொருளை அடைந்து உந்தனுக்காக யான் விதியை மாற்றி விடுகின்றேன். பின் நாளை என்னைப்பார்த்து பிரம்மன் முறைத்துக்கொள்வான் என்பேன் அப்பனே.  அதனால்தான் அப்பனே எப்பொழுது பின் எவ்மனிதனுக்கு தகுதி பின் எவ்விடத்தில் இருக்கின்றதோ அதை பார்த்துத்தான் யான் கொடுப்பேன் சொல்லிவிட்டேன். இதனால்தான் சில கர்மாக்களை உங்களை கஷ்டத்தை உள் அடக்கி மாற்றி அமைத்துக்கொண்டே இருக்கின்றேன். அனைத்தும் மாறும் அப்பா கவலையை விடுங்கள்.  அப்பனே இதை இருவருக்கும் மட்டும் சொல்லவில்லை. (உலகத்தில் உள்ள ) அனைவருக்கும் சொல்கின்றேன். 


அடியவர்:- ( அமைதி )


குருநாதர்:- அதனால் மனிதன் என்றால் கஷ்டம்தான். அப்பனே கடலில் நீந்த வேண்டும். கடலில் நீந்துவது எவ்வளவு கஷ்டம் என்று அனைவரும் உணர்ந்ததே என்பேன். அதில் என்னென்ன ஜீவராசிகள் இருக்கும். உங்களை துரத்தும். மீண்டும் பிறவிகள் தேவையா? அப்பனே. அதனால் சித்தர்களை நம்பினோர்க்கு நிச்சயம் மறுபிறவி இல்லையப்பா சொல்லிவிட்டேன். அதனால் கஷ்டங்களை இப்போதே தீர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் உங்களை யான் விடமாட்டேன் சொல்லிவிட்டேன். அப்பனே சித்தனை வணங்குவதற்கும் , சித்தன் நாமத்தை உச்சரிப்பதற்க்கும் ஒரு தகுதி வேண்டுமப்பா. அத்தகுதி இல்லாவிடில் நிச்சயம் எங்களை வந்தடையவும் முடியாது. எங்கள் பெயரை உச்சரிக்கவும் முடியாது என்பேன் அப்பனே. அப்பொழுது நீங்கள் எல்லாம் புண்ணியவாதிகளே. 


அடியவர்:- ( இந்த அமுத வாக்கை கேட்ட அடியவர்கள் பல துன்பங்களில் இருந்தாலும் மிக்க மனம் மகிழந்தனர். ) மிக்க நன்றி ஐயா. 


குருநாதர்:- அதனால் தெரிந்து கொள்ளுங்கள். தெரிந்து வாழ கற்றுக்கொள்ளுங்கள். முதலில் இவ்வாறு வாழந்தாலே உன் விதியின் ரகசியத்தையே யான் சொல்லி அப்பனே ஏனைய சித்தர்களும் சொல்வார்களப்பா. அதில் இருந்து நீ எதற்க்காக வந்தாய் என்பதை கூட சுலபமாக தெரிந்து கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் போராடினாலும் உன் விதியை யாராலும் சொல்ல முடியாதப்பா. பணங்கள் பின் ஏமாந்து ஏமாந்து கர்மத்தையும் சேகரித்து சேகரித்து மீண்டும் மீண்டும் பிறவிக்குள் நுழைந்து கஷ்டங்கள்தான் பட வேண்டும். சொல்லிவிட்டேன் அப்பனே. அப்பனே அகத்தியன் வாக்குகள் கேட்பதற்க்கும் தகுதி இருக்க வேண்டும். அப்படி தகுதி இல்லாவிடில் அப்பனே நிச்சயம் அவன் என்ன செய்தாலும் புரயோஜனம் இல்லையப்பா. புரயோஜனம் இல்லை. 

அப்பனே நீங்கள் அனைவருமே கஷ்டங்களுக்குள் நுழைந்து நுழைந்து வந்து கொண்டுதான் (இருக்கின்றீர்கள்). அதனால்தான் இவ்வாக்குகள் உங்களுக்கு சேரட்டும் என்று அப்பனே இன்னும் (உலகெங்கும் உள்ள) என் பக்தர்களுக்கு சேரட்டும் என்று (இந்த வாக்கை) சொல்லிஇருக்கின்றேன் அப்பனே. 


(இந்த மதுரை வாக்கின் அனைத்து பகுதிகள் அனைத்தும் மிக மிக அதி மிக அடியவர்கள் அனைவருக்கும் இந்த வாக்கு உங்களுக்கு என்று நன்கு உணர்ந்து இந்த வாக்குகளில் குருநாதர் சொல்லிய அறிவுரைகளை அன்புடன் ஏற்று , அதன்படி செயல்பட்டு, உங்கள் உயர் முதல் தர புண்ணிய பலங்கள் அதிகரித்து, உங்கள் கர்மங்கள் வினைகள் நீக்கப்பட்டு , அருள் நல் வாழ்வை அடைந்து, பிறருக்கு சேவை செய்து  மாமனிதனாக வாழுங்கள்.


அதனால் வாழ்க்கையில் உயர்தவராக வேண்டும். இறைவன் பக்கத்தில் இருக்க வேண்டும். அப்பனே நண்மைகளே பின் மனிதனுக்கு ஆகவேண்டும் என்றால் அப்பனே நிச்சயம் துன்பத்தில் மிதக்க வேண்டும் அப்பனே. அவ்துன்பத்தில் மிதந்தால்தான் அப்பனே வெற்றிகளும் உண்டு. அப்பனே இன்பமும் உண்டு. பின் இறைவன் பக்கத்தில் பின் இருக்கும் வாய்ப்பும் கிட்டும். 


(மதுரையில் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர் இல்லத்தில் உரைத்த இந்த வாக்கு தொடரும் ………)


https://siththarkalatchi.blogspot.com/2023/10/210-4-9-2023-10.html?m=0


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!