அப்பனே தர்மத்தின் வழிகள் செல்லச்செல்ல அப்பனே இன்னும் புண்ணியங்கள். அப்பனே (தர்மம்) அதை செய்துவிட்டு மீண்டும் அப்பனே பின் நிலைகளுக்கு வேறுபாடுகள் ( தர்ம நிலையில் இருந்து கர்ம நிலைக்கு) சென்றாலேதான் அப்பனே குழப்பங்கள் அப்பா. இதனால் அப்பனே நீங்கள் அனைவருமே அப்பனே தர்மம் செய்வதற்க்கே பிறந்தவர்கள். அதனை விட்டு விட்டு மற்றவை அதாவது வழியில் சென்றால் கஷ்டங்கள்தானப்பா. சொல்லிவிட்டேன் அப்பனே. இது அனைவருக்குமே பொருந்தும் என்பேன் அப்பனே. இதை சரியான வழியில் ( புரிந்து நீங்கள்) ஏற்றுக்கொண்டால் அப்பனே நன்று என்பேன் அப்பனே.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment