உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
(இறைவன் உங்களை தேடி வரும் ரகசியம்)
அப்பனே எவை என்று கூற இறைவனுக்கு பூசைகள் செய்யலாம், அப்பனே இறைவனை வணங்கலாம் , அப்பனே பின் எவை என்று கூற படுத்து படுத்து இறைவனை வணங்கலாம் அப்பனே இறைவன் நாமத்தை உச்சரித்துக்கொண்டே இருக்கலாம் ஆனாலும் அப்பனே எதை என்று அறிய அறிய இதனால் எவை என்று கூற ஒரு புரயோஜனமும் இல்லை அப்பா. புண்ணியங்கள் செய்யச் செய்ய செய்யச் செய்ய அப்பனே இறைவன் உன்னிடத்தில் தேடி வருவான் என்பேன் அப்பனே. உன் மனதில் தங்கி விடுவான் என்பேன் அப்பனே. பின்பு எவை என்று அறிய அறிய இறைவன் தானாக (உன்னை) அழைத்து என்ன செய்ய வேண்டும் என்று கூற அப்பனே உன் மனதில் எதை என்றும் அறிய அறிய குறிக்கோளாக வைத்து அப்பனே செய்ய வைப்பான் என்பேன் அப்பனே. அதனால் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. உலகம் போலியானது என்பதை எல்லாம் யான் எடுத்துரைத்துக் கொண்டே இருக்க்கின்றேன் அப்பனே.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment