“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Sunday, October 8, 2023

சித்தர்கள் ஆட்சி - 171 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு


 அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகள் போற்றி! போற்றி!! போற்றி!!!

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-

தர்மம் செய்தால் அப்பனே கடலும் விலகும்!!!! எவை என்று கூட மழையும் நில்!! என்றால் நிற்கும்!!

அப்பனே உயிருடன் எவை என்று கூட அதாவது உயிர் இல்லாதவனை கூட அப்பனே பிழைக்க வைக்கலாம் என்பதை கூட யான் நிச்சயம் இங்கு தெரிவித்து எவை என்று அறிய அறிய!!!

அப்பனே இன்னும் இன்னும் தர்மங்கள் அப்பனே தர்மங்கள் அப்பனே எதை என்று கூட புண்ணிய கணக்கு யாருமே இல்லை அப்பா எதை என்றும் அறிய அப்பனே!!!

அவ் புண்ணிய கணக்கு இல்லாதவரை அப்பனே எவ்வளவு இறைவனை வணங்கினாலும் எவ்வளவு பூஜைகள் செய்தாலும் அப்பனே கஷ்டங்கள் தேங்கி நிற்குமப்பா!!!!

அப்பனே இதனால் அப்பனே தெரிந்து செய்யுங்கள் தெரியாமல் எதை என்றும் செய்து விடாதீர்கள் அப்பனே தெரியாமல் செய்த எவை என்றும் கூட தெரிந்தும் செய்யும் அப்பனே எவை என்று கூட எவை என்று அறிய அறிய

அதனால்தான் யாங்கள் சித்தர்கள் மனித குலத்திற்காகவே எவை என்று அறிய அறிய இங்கு வந்து உதவிகள் செய்து கொண்டே இருக்கின்றோம் அப்பனே எவை என்றும் புரிய புரிய.

இதனால் அப்பனே நல் விதமாகவே அப்பனே இதனால் புண்ணியம் செய்தவனுக்கு அப்பனே எதை வேண்டுமானாலும் வெற்றி கொள்ளலாம் சொல்லிவிட்டேன் அப்பனே!!!

புண்ணியம் இல்லாதவனுக்கு எதை செய்தாலும் அப்பனே கர்மா தான் எவை என்று அறிய அறிய!!!

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!