“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Friday, April 29, 2022

சித்தர்கள் ஆட்சி - 60 : ஆஞ்சேநேயர் வழிபாடு



 


அன்னை ஸ்ரீ லோபாமுத்ரா உடன் உறை பொதிகை அகத்திய மகரிஷி பாதம் காப்பு 


ஸ்ரீ ராம ஜெயம்! 

ஸ்ரீ ராம ஜெயம்! 

ஸ்ரீ ராம ஜெயம்! 

ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் பாதம் காப்பு. 




அடியவர் கேள்வி:- 

குருவே நமஸ்காரங்கள்.

ஆலயத்திற்கு செல்ல இயலாதவர்கள், முடியாதவர்கள்  எப்படி ஆஞ்சநேயரை வணங்குவது???


எந்தை அகத்திய மஹரிஷி அளித்த அருள் வாக்கு:-

அப்பனே நல் முறையாக சனிதோறும் இல்லத்தில் ஆஞ்சநேயனுக்கு நல் தீபமேற்றி... ஸ்ரீராம ஜெயத்தை ஜபித்து வந்தாலே அவனருள் பெறலாம். சனியவனும் விலகிச் செல்வான் அப்பனே.


அடியவர் கேள்வி:-

குருவே நமஸ்காரங்கள் 

ஆஞ்சநேயரின் பரிபூரண அருள் கிடைக்க எவ்விதம் வழிபாடு செய்ய வேண்டும்???


எந்தை அகத்திய மஹரிஷி அளித்த அருள் வாக்கு:-

அப்பனே சொல்கின்றேன் அப்பனே மாதம் ஒருமுறை வரும் உத்திர நாளன்று( உத்திர நட்சத்திர நாள்) அவந்தன் ஆலயத்திற்குச் சென்று பின் தியானங்கள் ஸ்ரீராமஜெயம் ஜெபம் செய்து வந்தாலே அவந்தன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறலாம் அப்பனே! 

வாயில்லா ஜீவராசிகளுக்கும் உதவிட அவந்தன் அருள்கள் பலமாகும் அப்பனே.!!!!

ஞாயிறு அன்று ராகுகாலத்தில் அவந்தனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபாடு செய்ய, செய்ய சில வினைகள் விலகும் என்பேன். அவந்தன் அருள்கள் கிட்டும் என்பேன் அப்பனே!! 


இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன் அப்பனே வரும் வரும் ராகு காலத்தில் அப்பனே நல் விதமாகவே அனுமானுக்கு அப்பனே வெற்றிலை மாலை சாற்றி தன் எண்ணத்தில் உள்ள குறைகள் பின் அவனுக்கு அவனிடத்தில் சொன்னால் அப்பனே அதி அற்புதம் நடக்கும் என்பேன் அப்பனே.

ஆனாலும் இவையெல்லாம் கூட இதுவும் ராகு காலத்தில் செய்துவிட வேண்டும் என்பேன் ஞாயிறு தோறும் . ஆனால் பல மக்களுக்கு இது தெரியாமல் போய்விட்டது அப்பனே.

சொல்லிவிட்டேன் சூட்சுமத்தை அப்பனே.

------------------------------------------------------------------------------------------------

மூல நாடி வாக்கு https://siththanarul.blogspot.com/2022/04/1125.html

------------------------------------------------------------------------------------------------

Wednesday, April 20, 2022

சித்தர்கள் ஆட்சி - 59 : ஆதி ஈசன் உரைத்த அகத்திய மஹரிஷியின் மகத்தான மகிமை குறித்த அருள் அமுத வாக்கு 2

 


ஆதி அம்மை அப்பன் பாதம் காப்பு 


அன்னை ஸ்ரீ லோபாமுத்ரா உடன் உறை பொதிகை வேந்தன் அகத்திய மகரிஷி பாதம் காப்பு 


அகத்திய மஹரிஷி 7/4/2022 அன்று உரைத்த வாக்கு

எந்தை என்றும் இளவரசர் அகத்திய மஹரிஷி ஆதி ஈசன் உரையாடல்


அகத்திய மஹரிஷி :-  ஈசா!!!! எத்தனையோ தேவர்கள் எத்தனையோ முனிவர்கள் சபதம் செய்து தவம் செய்து கொண்டிருக்கின்றார்களே!!! 

என்னை மட்டும் ஏன்?? நீ சென்றால் அங்கு நலமாகிவிடும், இங்கு சென்றால் நலமாகும் என்றெல்லாம் அனுப்புகின்றாயே!!!  வேதனைக்குரியது ஈசா!!! எனறு யானும் கேட்டுவிட்டேன்!!!


அதனால் ஈசன்!! ஒரு வார்த்தை சொன்னான்!!! 


"""அகத்தியனே!! எந்தனுக்கு இவ்வுலகத்தில் சமமானவன் நீயே!!! என்று சொல்லிவிட்டான்..

கண்ணீர் மல்கியது!! எந்தனுக்கு!!!! 


அதனால் தான் என்னால் அனைத்தும் முடியும் என்று சொல்லிவிட்டேன் மக்களே!!


நல்லோர்கள் !! என்னை நம்பியோர்கள் இனிமேலும் நிச்சயம் வாழ்வார்கள் என்பதை திண்ணமாக கூறுகின்றேன்.

சித்தர்கள் ஆட்சி - 58 : ஆதி ஈசன் உரைத்த அகத்திய மஹரிஷியின் மகத்தான மகிமை குறித்த அருள் அமுத வாக்கு



ஆதி அம்மை அப்பன் பாதம் காப்பு 


அன்னை ஸ்ரீ லோபாமுத்ரா உடன் உறை பொதிகை வேந்தன் அகத்திய மகரிஷி பாதம் காப்பு 


அகத்திய மஹரிஷி 7/4/2022 அன்று உரைத்த வாக்கு


ஆதி ஈசன் , அகத்திய மஹரிஷியை குறித்து இராஜராஜ சோழன் தவத்தை மெச்சி அவ்மன்னனுக்கு காட்சி  கொடுத்தபோது உரைத்த அருள் அமுத வாக்கு


🙏🌸🙏🌸🙏🌸🙏🌸🙏

அகத்தியன் போல் இவ்வுலகத்தில் கருணை உள்ளவர் யாரும் இல்லை!!!

ஒருவரை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் அளவிற்கு தகுதிகள் படைத்தவன் அகத்தியன்.

ஆனால் அவன் மீது பற்றாத பற்று!! 

நம்பிக்கை வைத்து விட்டால் கைவிடமாட்டான் இவ்வுலகத்தில்.  அது எவரேனும் சரி!!!!

திருடனாக இருந்தாலும் சரி!! 

நல்லோர் ஆக இருந்தாலும் சரி!!!

மாற்றிவிடுவான் எளிதில் அகத்தியன்.

ஆனால் நம்பிக்கை வேண்டும் !!!

நம்பிக்கை வேண்டும் அன்பு வேண்டும்!! 

அவ் அன்பிற்கு பன்மடங்கு செய்வான் என்பது குறிக்கோளாக.!!!



Tuesday, April 12, 2022

சித்தர்கள் ஆட்சி - 57 :அகத்திய மஹரிஷி வாக்கு - சித்தர்களின் ஜீவ சமாதி வணங்கும் முறை அதன் ரகசியங்கள்


அன்னை லோபாமுத்ரா உடன் உறை அகத்திய மஹரிஷி பாதம் காப்பு

2/4/2022 அன்று குருநாதர் அகத்திய மஹரிஷி உரைத்த பொதுவாக்கு

இன்னும் பலப்பல சமாதிகளிலும் நல் விதமாகவே பின் ஞானிகள் தங்கி இருக்கின்றனர்.

அவ் தலத்திற்கு ( ஜீவ சமாதி ) சென்று வந்தால் எவ்வாறு என்பதையும்கூட தன்னலம் காக்காது பிறர் மனதை எண்ணி அவர்கள் படியே இவ்வாறு என்பது கூட நடந்துகொண்டால் வெற்றி இது தான் அனைத்து ஞானிகளும் விரும்புவார்கள் என்பேன்.

""தன்னைப்பற்றி வேண்டி கொள்ளுதல் ஆகாது!!! எதையென்று கூற. 

எவையன்றி கூற ஏனென்றால் சொல்லி விடுகின்றேன் சில ஜீவசமாதிகளில் வாழும் ஞானிகளை பற்றி இதையன்றி கூற அவர்களுக்கு எவை என்று கூற இதையும் கூட மற்றவர்களுக்கு மற்றவர்களுக்காகவே வணங்குவது தான் சிறப்பு என்பதை கூட அவர்களுக்கு தெளிந்து விட்டனர். அவர்களுக்கு தெரிந்து விட்டது.

அதனால் அங்கு சென்று பின் தன்னைப் பற்றியோ!!! தன் மனைவியைப் பற்றியோ!!! தன் சிந்தனையை பற்றியோ !!!தான் நன்றாக இருக்க வேண்டும் தான் எப்படி செய்ய வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் படுகுழியில் தான் உண்டு.

ஆனாலும் வெற்றி தருமே தவிர திரும்பவும் தோல்வி அதி விரைவிலே ஏற்படும்.

அதனால் பின் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் எவை என்று கூற அனைவரும் உயர வேண்டும் பின் இறைவா!!! அவர்களுக்கெல்லாம் கொடு!!!

இன்னும் ஏழை எளியோர் எல்லாம் உணவு இல்லாமல் பின் மாய்ந்து கிடக்கின்றார்கள்.. உயிர்பிழைத்து கொடு!!! என்றுகூட வேண்டிக்கொண்டால் பின் ஞானிகள் சந்தோஷம் அடைந்து அப்பனே!! இவந்தன் போல ஆட்கள் தேவை .

ஆனாலும் சிறிது சோதனைகள் வைத்தாலும் உயர்ந்த நிலைக்கு அடைந்து விடுவீர்கள்.

-----------------------------------------------------------------------




Monday, April 4, 2022

சித்தர்கள் ஆட்சி - 56 : அகத்திய மஹரிஷி நாடி - 4/4/2022

 


அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடன் உறை அகத்திய மஹரிஷி


அகத்திய மஹரிஷி நாடி வாக்கு  -  4/4/2022 

( அடியவர் ஒருவருக்கு உரைத்த வாக்கில் வந்த பொது வாக்கு )

ஆதி மூலனின் பொற்க்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே என்னுடைய ஆசிகள் இருப்பதாலும் நலமே மிஞ்சும். 

இயற்க்கையான வகையிலே உண்டுகொள்ள நன்று என்பேன். 

அப்பனே நலமாக நலமாக வரும் சித்திரை திங்களில் ( சித்திரை மாதம் ) அப்பனே பலபேர்களுக்கு அப்பனே பின் குளிர்ந்த நீரை அப்பனே கொடுத்தால் அப்பனே இன்னும் பல புண்ணியங்கள் பெருகும். 

யான் இதைத்தான் அனைவருக்கும் சொல்வேன் அப்பனே. 

ஆனாலும் அப்பனே வாயில்லா ஜீவ ராசிகளுக்கும் அப்பனே நல்விதமாக ஓர் பானையில் நல்விதமாகவே அமைத்து அப்பனே கொடுத்துவா அப்பனே.

இன்னும் சித்தர்களின் ஆசியும் அனுக்கிரகமும் கிடைக்கும். அப்பனே என்னுடைய அருள் நல்விதமாக இருக்குதப்பா. 

அதனால் அப்பனே யாங்களும் சில சில நேரங்களில் அப்பனே அங்கும் இங்கும் சென்று வருவோம் அப்பனே இச்சித்திரை திங்கள் தனில் ( சித்திரை மாதம் தனில் ). அதனால் அப்பனே யான் சொல்லி விட்டேன். அதை செய்து கொண்டே வா. 

மீண்டும் கேள் அப்பனே.


——- நாடி உரை முற்றே ——-