2/4/2022 அன்று குருநாதர் அகத்திய மஹரிஷி உரைத்த பொதுவாக்கு
இன்னும் பலப்பல சமாதிகளிலும் நல் விதமாகவே பின் ஞானிகள் தங்கி இருக்கின்றனர்.
அவ் தலத்திற்கு ( ஜீவ சமாதி ) சென்று வந்தால் எவ்வாறு என்பதையும்கூட தன்னலம் காக்காது பிறர் மனதை எண்ணி அவர்கள் படியே இவ்வாறு என்பது கூட நடந்துகொண்டால் வெற்றி இது தான் அனைத்து ஞானிகளும் விரும்புவார்கள் என்பேன்.
""தன்னைப்பற்றி வேண்டி கொள்ளுதல் ஆகாது!!! எதையென்று கூற.
எவையன்றி கூற ஏனென்றால் சொல்லி விடுகின்றேன் சில ஜீவசமாதிகளில் வாழும் ஞானிகளை பற்றி இதையன்றி கூற அவர்களுக்கு எவை என்று கூற இதையும் கூட மற்றவர்களுக்கு மற்றவர்களுக்காகவே வணங்குவது தான் சிறப்பு என்பதை கூட அவர்களுக்கு தெளிந்து விட்டனர். அவர்களுக்கு தெரிந்து விட்டது.
அதனால் அங்கு சென்று பின் தன்னைப் பற்றியோ!!! தன் மனைவியைப் பற்றியோ!!! தன் சிந்தனையை பற்றியோ !!!தான் நன்றாக இருக்க வேண்டும் தான் எப்படி செய்ய வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் படுகுழியில் தான் உண்டு.
ஆனாலும் வெற்றி தருமே தவிர திரும்பவும் தோல்வி அதி விரைவிலே ஏற்படும்.
அதனால் பின் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் எவை என்று கூற அனைவரும் உயர வேண்டும் பின் இறைவா!!! அவர்களுக்கெல்லாம் கொடு!!!
இன்னும் ஏழை எளியோர் எல்லாம் உணவு இல்லாமல் பின் மாய்ந்து கிடக்கின்றார்கள்.. உயிர்பிழைத்து கொடு!!! என்றுகூட வேண்டிக்கொண்டால் பின் ஞானிகள் சந்தோஷம் அடைந்து அப்பனே!! இவந்தன் போல ஆட்கள் தேவை .
ஆனாலும் சிறிது சோதனைகள் வைத்தாலும் உயர்ந்த நிலைக்கு அடைந்து விடுவீர்கள்.
-----------------------------------------------------------------------
No comments:
Post a Comment