| இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும் | |
| அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு சித்தன் அருள் - 1764 - பிரதோஷ வேளை ரகசியம் | |
| நிச்சயம் பிரதோஷ வேளைகளில் ஏதாவது ஒன்றை திருத்தலத்திற்கு சென்று செய்து கொண்டே வாருங்கள் அப்பனே. இன்னும் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் உண்டு. உங்கள் குழந்தைகளுக்கும் கூட முன்னேற்றங்கள் ஏற்படும் என்பேன் அப்பனே. | |
| அப்பனே இதனை நீங்கள் அனைவரும் செய்யலாம் அனைவருக்கும் சொல்லலாம் என்பேன் அப்பனே . என் பக்தர்கள் அனைவரும் இதை கடைப்பிடிக்க வேண்டும் என்பேன் அப்பனே. | |
| அப்பனே இதனை தொடர்ந்து செய்து கொண்டே வரவேண்டும் என்பேன். இவையெல்லாம் செய்கின்ற பொழுது சில தடை தாமதங்கள் நீங்கும் அப்பா. பின்பு தான் அனைவருக்குமே வெற்றி கிடைக்கும் அப்பா. | |
| விளக்கம் : பிரதோஷ காலசமயங்களில் ஈசன் ஆலயத்திற்கு சென்று ஏதாவது சேவைகள் வழிபாடு மற்றும் செய்து வர வேண்டும். வாழ்க்கையில் முன்னேற்றங்கள் உண்டு. உங்கள் குழந்தைகளுக்கும் கூட முன்னேற்றங்கள் ஏற்படும் | |
| தேதி | தமிழ் தேதி |
| 11-01-2025 சனி | மார்கழி மாதம் 27 வளர்பிறை, த்ரயோதசி |
| 27-01-2025 திங்கள் | தை மாதம் 14 தேய்பிறை, த்ரயோதசி |
| 10-02-2025 திங்கள் | தை மாதம் 28 வளர்பிறை, த்ரயோதசி |
| 25-02-2025 செவ்வாய் | மாசி மாதம் 13 தேய்பிறை, த்ரயோதசி |
| 11-03-2025 செவ்வாய் | மாசி மாதம் 27 வளர்பிறை, த்ரயோதசி |
| 27-03-2025 வியாழன் | பங்குனி மாதம் 13 தேய்பிறை, த்ரயோதசி |
| 10-04-2025 வியாழன் | பங்குனி மாதம் 27 வளர்பிறை, த்ரயோதசி |
| 25-04-2025 வெள்ளி | சித்திரை மாதம் 12 தேய்பிறை, த்ரயோதசி |
| 10-05-2025 சனி | சித்திரை மாதம் 27 வளர்பிறை, த்ரயோதசி |
| 24-05-2025 சனி | வைகாசி மாதம் 10 தேய்பிறை, துவாதசி |
| 08-06-2025 ஞாயிறு | வைகாசி மாதம் 25 வளர்பிறை, த்ரயோதசி |
| 23-06-2025 திங்கள் | ஆனி மாதம் 9 தேய்பிறை, த்ரயோதசி |
| 08-07-2025 செவ்வாய் | ஆனி மாதம் 24 வளர்பிறை, த்ரயோதசி |
| 22-07-2025 செவ்வாய் | ஆடி மாதம் 6 தேய்பிறை, த்ரயோதசி |
| 06-08-2025 புதன் | ஆடி மாதம் 21 வளர்பிறை, அதிதி |
| 20-08-2025 புதன் | ஆவணி மாதம் 4 தேய்பிறை, துவாதசி |
| 05-09-2025 வெள்ளி | ஆவணி மாதம் 20 வளர்பிறை, த்ரயோதசி |
| 19-09-2025 வெள்ளி | புரட்டாசி மாதம் 3 தேய்பிறை, சதுர்தசி |
| 04-10-2025 சனி | புரட்டாசி மாதம் 18 வளர்பிறை, திதித்துவம் |
| 18-10-2025 சனி | ஐப்பசி மாதம் 1 தேய்பிறை, சுன்யதிதி |
| 03-11-2025 திங்கள் | ஐப்பசி மாதம் 17 வளர்பிறை, த்ரயோதசி |
| 17-11-2025 திங்கள் | கார்த்திகை மாதம் 1 தேய்பிறை, த்ரயோதசி |
| 02-12-2025 செவ்வாய் | கார்த்திகை மாதம் 16 வளர்பிறை, த்ரயோதசி |
| 17-12-2025 புதன் | மார்கழி மாதம் 2 தேய்பிறை, த்ரயோதசி |
| ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!!!!! சர்வம் சிவார்ப்பணம்!!!!! | |
“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.
"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.
உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-
1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.

