“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Tuesday, September 28, 2021

சித்தர்கள் ஆட்சி - x27 - அன்புடன் அகத்திய மாமுனிவர் - தொழிலுக்கு அதிபதியான சிவபெருமான் - ஸ்ரீ திருநிலை நாயகி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் ஆலய வாக்கு.

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும். இறைவா, எங்களை நன்றாக படைத்தாய்! அனைத்தையும் நன்றாக கொடுத்திருக்கின்றாயே! இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!! 


அன்பு அன்னை லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகள் போற்றி! போற்றி!! போற்றி!!! 


ஸ்ரீ திருநிலை நாயகி உடனுறை பிரம்மபுரீஸ்வரர்
நந்தியம் பெருமான் - பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் 


15/9/2021 அன்று குருநாதர் அகத்திய மாமுனிவர் உரைத்த பொது வாக்கு! 

வாக்குரைத்த ஸ்தலம்:- ஸ்ரீ திருநிலை நாயகி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் ஆலயம், சித்தருகாவூர் கிராமம், வந்தவாசி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.


===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================

ஆதி பரமனை மனதில் எண்ணி உரைக்கின்றேன் அகத்தியன்

நல் முறைகள் ஆகவே இத்தலம் உயர்வடையும் என்பேன் பல சித்தர்களும் இங்கு நாடி வந்து பல சித்துக்களும் செய்தார்கள் என்பேன்.

அப்பனே இங்கு ஓர் பெரிய மண்டபம் உண்டு என்பேன் இதனால் அதில் கூட பல சித்தர்கள் ஞானிகள் வந்து அமர்ந்து உறங்கி சென்று இருக்கின்றார்கள் முன்னொரு காலத்தில் என்பேன்.

நல் முறைகள் ஆகவே எவை என்று கூற இதனையும் நல் முறைகள் ஆகவே கருவூரானும் (கருவூர் சித்தர்) அமைத்தான் என்பேன்.

===========================
# ஸ்ரீ திருநிலை நாயகி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் தொழிலுக்கு அதிபதி.
===========================
# உங்கள் தொழிலில் உயர்வு பெற அடிக்கடி வாங்கவேண்டிய ஆலயம்.
===========================

நல் முறைகளாக இதனால் எவ்வாறு என்பதையும் கூட இத்தலத்திற்கு இன்னும் புகழ் பெற நல் முறைகள் ஆகவே வலம்வந்து வலம் வந்து கொண்டிருந்தால் தொழிலில் உயர்வு பெறலாம் என்பேன் என்பேன்.

தொழிலுக்கு அதிபதி இவனே என்பேன்.

அப்பனே நல் முறைகளாக இன்னும் பல திருத்தலங்கள் இன்னும் சிதிலடைந்து கொண்டே இருக்கின்றது ஆனாலும் மனிதர்களோ எவை எவை என்று புதுப்புது திருத்தலங்களை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் பழைய திருத்தலங்களில் அப்பனே பல அற்புத சக்திகள் உள்ளன என்பேன் அங்கு சென்றால்தான் மட்டுமே கலியுகத்தில் மனிதன் பிழைத்துக் கொள்வான் என்பேன்.

ஆனாலும் இத்திருத்தலமும் அதில் ஒன்று என்பேன்.

நல் முறைகளாக விளக்கங்கள் அப்பனே புண்ணியங்கள் எவை என்று செய்ய அப்பனே நல் முறைகள் ஆகவே இங்கு வணங்கி செல்பவர்கள் நிச்சயம் தொழில் அமைப்பார்கள் என்பேன். 

தொழிலில் சிறந்து விளங்குவார்கள் என்பேன்.

சுயதொழில் நல் முறையாக செய்வார்கள் என்பேன். 

இதுதான் சிறப்பு என்பேன்.

ஸ்ரீ திருநிலை நாயகி அம்மை 

===========================
# சுய தொழில் செய்பவர்கள் உயர்வுகள் அடைய உதவும் அதி ரகசியங்கள்
===========================

சுயதொழில் செய்பவர்கள் நல் முறையாக இங்கே பின் ஒரு மண்டலம் (48நாட்கள்) நல் முறைகளாக இவனை வணங்கி, பாடி, துதித்து, பின் சிவ புராணத்தைப் பாடி, நல் முறைகள் ஆகவே தீபம் ஏற்றி, அனுதினமும் அப்பனே நல் முறைகள் ஆகவே அரை மண்டலம் (24நாட்கள்)... அதன் உரையே இருபத்தி நான்கு மனிதர்களுக்கு அனுதினமும் உணவை தானம் அளித்து நல் முறைகளாக சென்று விட்டால்,  பின் ஒரு மண்டலம் கழித்து உயர்வுகள் வரும் என்பேன். 

இதுதான் இத்தலத்தின் அதி சிறப்பு என்பேன்.

ஆலயம் அமைக்கும் முன்னர் எடுத்த புகைப்படம் 

அப்பனே ஆனாலும் சித்தர்களுடைய திருத்தலங்கள் எவருக்கும் தெரிவது இல்லை. 

கலியுகத்தில் அப்பனே முன்னே சொன்னேன் அப்பனே. 

அற்ப சுக வாழ்க்கைக்காக வே மனிதன் ஓடோடி கொண்டிருக்கிறான்.

அதனால்தான் அப்பனே பின் பரிகாரங்கள் பரிகாரங்கள் என்றெல்லாம் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். 

ஆனாலும் அவை எல்லாம் ஒன்றும் செய்ய இயலாது என்பேன் அப்பனே. 

இதனை நன்குணர்ந்து அனைத்து தலங்கள் சித்தர்கள் வாழ்ந்த ஸ்தலங்கள் மேலும் எழும்ப இங்கு வந்தும் எவ்வாறு என்பதையும் கூட ஆங்காங்கே மனிதர்கள் வணங்கி வந்தால் விமோசனம் கிடைக்கும்.

அதனை விட்டுவிட்டு எதையெதையோ செய்து கொண்டால் ஒன்றும் செய்ய இயலாது என்பேன்.

மனிதன் பின் படுகுழியில் விழத்தான் வேண்டும் என்பேன்.

நல் முறைகள் ஆகவே அப்பனே எவ்வாறு என்பதையும் கூட நினைக்கும் பொழுது கருவூரானே அனைத்தும் செய்து விடுவான் என்பேன். 

கருவூரான் பக்தர்கள் இங்கு வருவார்கள் என்பேன். 

அனைத்தும் நல் முறைகள் ஆகவே எவை எவை என்று கூற அதி விரைவிலேயே இத்தலத்திற்கும் நல் முறைகள் ஆகவே நடக்கும் என்பேன். 

சித்தர்களும் வருவார்கள் என்பேன் முன் ஜென்மத்தில் வாழ்ந்த பல ரிஷிகளும் இங்கே வருவார்கள் என்பேன். 

இதனை அதி விரைவில் முடித்து யான் அகத்தியனும் இங்கு வருவேன் என்பேன்.

நல் முறைகள் ஆகவே பலப்பல அப்பனே எவ்வாறு என்பதையும் கூட உணர்ந்து அப்பனே முறைகள் ஆகவே இச் சிவன் துணை புரிவான். 

தொழிலுக்கு மூலமான அதிபனும் துணை புரிவான் என்பேன்.

===========================
# குழந்தை பாக்கியமும் கிடைக்கும் ரகசியங்கள்
===========================
# சந்தான ஈஸ்வரி உடனுறை சந்தான ஈஸ்வரர்
===========================

இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன் அப்பனே. நல் முறைகள் ஆகவே இங்கு வலம் வந்து எவ்வாறு என்பதையும் கூட நிலைநிறுத்தி, அனுதினமும் இச் சிவனை 108 முறை நல் முறைகளாக வலம் வந்தால் குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பேன்.

அப்பனே எவ்வாறு என்பதையும் கூட எதனால் இதனில் இவன் தனக்கு பெயரையும் வைக்கலாம் என்பேன். 

திருநிலை நாயகி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் இன்று நீங்கள் அழைத்தாலும் சந்தான ஈஸ்வரி சந்தான ஈஸ்வரர் என்றும் அழைக்கலாம் தவறு இல்லை என்பேன்.

===========================
# பிரம்ம தேவர் வரம் தரும் ரகசியங்கள்....
===========================

அப்பனே இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன் அப்பனே நல் முறைகள் ஆகவே இவன்தனை வணங்க,  பிரம்மனும் நல் முறைகள் ஆகவே வரங்கள் தருவான் என்பேன்.

அற்புதங்கள் நிறைந்தது அப்பனே. 

ஆனாலும் இதனை யான் ஏற்கனவே சொல்லி கொண்டே இருக்கின்றேன் எவ்வாறு என்பதையும் கூட  பல பல திருத்தலங்களை அப்பனே மனிதர்கள் வணங்கி உயர்வு பெறுகிறார் என்று சில தீய மனிதர்கள் அழித்து விட்டார்கள்.

அப்பனே ஆனாலும் ஈசன் விடமாட்டான் என்பேன். எழுவான் என்பேன்.

ஆனாலும் எவரெவர் நியமிக்கப்பட வேண்டும் என்று என்பதுகூட ஈசனுக்கு தெரியும் அப்பனே. 

நல் முறையாக நல் மனிதர்களை நியமத்து விட்டான் அப்பனே.

===========================
#கருவூரார் சித்தர் ரகசியங்கள்.
===========================

அப்பனே நல் மேல் முறைகள் ஆகவே இங்கு கருவூரான் நல் முறைகள் ஆகவே வலம் வந்து இன்றளவும் அனுதினமும் இங்கே உறங்கித்தான் செல்கின்றான். என்பேன் இத்திருத்தலத்தை நல் முறையாக முடிக்கும் வரை அனுதினமும் இங்கு வந்து சென்று கொண்டுதான் இருப்பான் என்பேன்.

===========================
# ராஜராஜ சோழன் தரிசித்த மகிமை புகழ் ஆலயம். 
===========================

அப்பனே எவ்வாறு என்பதையும் கூட நினைக்கும் பொழுது நல் முறைகள் ஆகவே எவ்வாறு என்று நினைக்கும் அளவிற்கு கூட ராஜராஜ சோழனின் பங்கும் இங்கு உள்ளது என்பேன்.

அவனும் இம் மண்டபத்தை நல் முறையாக பெரிதாக்க அவன் தனும் பின் நல் முறைகளாக இத் திருத்தலத்திற்கு பல உதவிகள் செய்வான் என்பேன்.அதனால் ராஜராஜசோழனும் இங்கு வந்து இச் சிவனை தரிசித்து தான் சென்றிருக்கின்றான் என்பேன்.

===========================
# அருணகிரிநாதர் இவ் ஆலயம் வந்த பின்புதான் , திருவண்ணாமலைக்கு சென்று உயிர் துறக்க துணிந்து 
===========================

அப்பனே நல் முறைகள் ஆகவே அருணகிரிநாதன் இங்கு சில நேரத்தில் தங்கிச் சென்று பின்  நல் முறைகளாக பின்பு தான் அண்ணாமலைக்கு சென்றான் என்பேன்.

அப்பனே இங்கு வந்து நல் முறைகளாக அவன்தனக்கு சில சில உதவிகள் கிடைக்காததால் அண்ணாமலைக்கு சென்று அங்கு உயிரையும் துறந்துவிட துணிந்து விட்டான். ஆனாலும் முருகன் காப்பாற்றினான் அப்பனே.

முருகனும் இங்கு ஒளிந்து கொண்டுதான் இருக்கிறான் இங்கு.

அப்பனே நல்முறைகள் ஆகவே அப்பனே இவ்வுலகத்தில் சிவனே பெரியவன் என்பேன். 

ஆனாலும் இதனையும் தடுத்தழிக்க அப்பனே முன்னொரு ஜென்மத்தில் படையெடுத்து வந்து பின் மனிதர்களெல்லாம் பின் திருத்தலங்களுக்குச் சென்றால்வாழ்ந்து விடுவார்கள் என்று நினைத்து பின் அனைத்தையும் அழித்து விட்டார்கள். 

ஆனாலும் கலியுகத்தில் நிச்சயம் நல்லோர்களால் எவ்வாறு என்பதையும் கூட யார் மூலம் எதனை செய்தால் நல்லது என்று கூட நினைத்து ஈசனே வரவழைத்து அனைத்தும் செய்துகொள்வான் என்பேன்.

இனிமேலும் கலியுகத்திலும் அப்பனே அக்கிரமங்கள் அநியாயங்கள் நடக்கும்பொழுது ஈசன் நிச்சயமாய் அன்றன்றே தண்டிப்பான் என்பேன்.

அப்பனே இதிலும் சூட்சமம் உள்ளது என்பேன். 

சூட்சமங்கள் அப்பனே எவை எவை என்று கூற மனிதன் இன்னும் ஒன்றுமே தெரியாமல் வாழ்ந்து வருகின்றான் அப்பனே முட்டாள்களாகவே வாழ்ந்து வருகின்றான்.

ஆனால் எவை என்று கூற இருக்கும்பொழுது... 

===========================
# இறையருளே அனைத்தும் கொடுத்துவிடும்
===========================

இறையருள் பெற்று விட்டால் அப்பனே வேறு எதுவும் தேவை இல்லை என்பேன். இறையருளே அனைத்தும் கொடுத்துவிடும்.

ஆனாலும் மனிதன்

எதன் எதனோ மாயையில் சிக்கிக் கொண்டு அனைத்தையும் இழந்துவிட்டு திரும்பவும் இறைவனிடத்தில் வந்தால் அவன் என்ன செய்வான்? மகனே?

அப்பனே ஆனாலும் எவ்வாறு என்பதையும் கூட மனிதன் எதை நோக்கிச் செல்கின்றானென்றால் கர்மாவை நோக்கியே செல்கின்றான்.

இதனையும் பல தடவைகளில் பல உரைகளில் யான் சொல்லியே வந்திருக்கின்றேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே.

மனிதன் கர்மாவை சேர்ப்பதில் வல்லவன் என்பேன் அப்பனே. 

இவ்வாறு என்பது கடைசியில் பின் எவ்வாறு என்பதையும் கூட கஷ்டங்கள் வந்தால் இறைவா இறைவா என்று ஓடோடி வருவது அப்பனே. 

===========================
# ஆறாம் அறிவு, ஏழாம் அறிவு
===========================

அதனால்தான் ஆறு அறிவுகள் இறைவன் பயன்படுத்தி கொள்வதற்காகவே கொடுத்திருக்கின்றான். 

ஆனாலும் மனிதர்களுக்கு அதை ஒழுங்காக பயன்படுத்தத் தெரியவில்லை மகனே. 

அப்பனே நல் முறைகள் ஆகவே இந்த ஆறு அறிவையும் ஒருவன் ஒழுங்காக கடைப்பிடித்தால் ஏழாவது அறிவு அவனுக்கு தெரிந்துவிடும் அவன் இறைவனையே காணலாம் என்பேன்.

அப்பனே நல் முறைகள் ஆகவே இறைவன் அனைத்து திறமைகளும் கொடுத்து தான் மனிதனை அனுப்புகின்றான். 

ஆனால் முட்டாள் மனிதனோ அவ விஷயங்களை அனைத்தையும் கெடுத்து கொண்டிருக்கின்றான்.

அப்பனே நல் முறைகள் ஆகவே சிவன் வருவான் எவ்வாறு என்பதை நினைத்துப் பார்க்கும் அளவிற்கு கூட அப்பனே நல் முறைகளாக அனைத்து சித்தர்களும் இங்கு வருவார்கள் என்பேன். 

நீங்கள் குறித்துள்ள நாட்களிலேயே நிச்சயம் அவர்களே வந்து இதனை பிரதிஷ்டை செய்வார்கள் பின் எவ்வாறு என்பதையும் கூட இதனையும் நிறுவித்து செய்வார்கள் அப்பனே இது உண்மை.

===========================
# இவ் இறைவன், கேட்டதை மனம் இரங்கி அருள் செய்வார்.  
===========================

அப்பனே இதற்கும் சக்திகள் எவ்வாறு என்பதையும் கூட நினைத்துப் பார்க்கும் பொழுது அப்பனே இன்னொரு சூட்சுமத்தையும் சொல்கின்றேன் அப்பனே.

நன்றியோடு நல் முறைகள் ஆகவே கேட்டதை நல்ல முறையில் ஆகவே எவை எவை என்றும் கூற கூறி விளக்கும் பொழுது அதில் அதிலும் சூட்சமம் உள்ளது இல்லாதது என்றெல்லாம் இல்லை என்பேன்.

"அப்பா" என்று.... 

இவன் தனை மனமுருகி வணங்கி வழிபட்டால்,  இவனும் மனம் இரங்கி அருள் செய்வான் என்பேன்.

கருவூரானும் எவ்வாறு என்பதை நினைக்கும்பொழுது அப்பனே சித்தனும் எவ்வாறு என்பதையும் கூட நன்கு பொருந்தி நல் முறையாக வாழ்ந்திட கருவூரான் உதவி செய்வான் என்பேன்.

கருவூரான் செய்த பல பல லீலைகள் எவ்வாறு என்பதை நினைக்கும்பொழுது அப்பனே அவ் லீலைகள் அனைத்தும் பிழைப்பதற்காகவே  எழுதி இருக்கின்றான் ஆனாலும் முட்டாள் மனிதர்கள் அதனை அழித்தும் விட்டார்கள் என்பேன்.

அப்பனே கலியுகத்தில் மனிதன் இன்னும் அழிப்பதற்கே பார்ப்பான்.

ஆனாலும் யாங்கள் சித்தர்கள் நிச்சயமாய் விடமாட்டோம் மாட்டோம் காப்பாற்றுவோம் இப்பூவுலகை.

===========================
# கலியுகத்தில் கலி முற்றும் தருணத்தில்
===========================

அப்பனே எவ்வாறு என்பதையும் கூட கலியுகத்தில் கலி முற்றும் தருணத்தில் அப்பனே எவ்வாறு என்பதையும் கூட மனிதர்களுக்கு நோய்கள் வரும்....

பிரச்சினைகள் பல வரும்... 

ஆனாலும் அப்பனே அதன் முன்னே யாங்கள் எவ்வாறு என்பதையும் கூட ஈசன் பின் திருவடிகள் ஆங்காங்கே சக்தி வாய்ந்த பல திருத்தலங்களை யாங்களே யார் மூலம் என்று எண்ணி ஈசனும் சேர்த்து உருவாக்குவோம் என்பேன்.

இதனால் அப்பனே கலியின் வேகம் குறையும் என்பேன்.

அப்பனே கடைபிடியுங்கள் நல்லவையாகவே நடக்கும் என்பேன். 

அப்பனே ஒன்றை தெரிவிக்கின்றேன் இதனை உரைக்கும் பொழுது கருவூரானே இங்கு அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கின்றான் என்பேன்.

அப்பனே இதைபோன்று ஆசீர்வாதங்கள் எவருக்கும் இல்லை என்பேன். 

இங்கு அமர்ந்திருக்கும் அனைவருக்கும் ஆசிகள் கொடுத்துவிட்டான் என்பேன். 

அவரவர் விருப்பப்படி நல் முறைகள் ஆகவே நடக்கும் என்பேன்.

===========================
# அனு தினமும் ஏதாவது ஒரு ஜீவராசிகளுக்கு உணவு அளித்து விடுங்கள்.
===========================

அப்பன்களே அம்மைகளே அனு தினமும் ஏதாவது ஒரு ஜீவராசிகளுக்கு உணவு அளித்து விடுங்கள்.

அப்பனே நல் முறையாக இவ் ஈசனையே பிடித்துக் கொள்ளுங்கள். 

அனைத்தும் விரும்பியவாறே நடக்கும் என்பேன். இவன் தன் அனைத்தும் செய்வான் நல் முறைகள் ஆகவே.

===========================
# திருமணம் ஆகாதவர்களுக்கு நிச்சயம் விரும்பியவாறு நிச்சயம் அனைத்தும் கொடுக்கப்படும்
===========================

எவ்வாறு என்பது நினைத்துப் பார்க்கும் அளவிற்கு திருமணம் ஆகாதவர்களுக்கு நிச்சயம் விரும்பியவாறு நிச்சயம் அனைத்தும் கொடுக்கப்படும் என்பேன்.

இவ்வாலயத்தின் முதல் முறையாக வந்து நல் முறைகள் ஆகவே வணங்கி செல்பவர்கள் வீட்டில் சுபிட்சங்கள் சுப காரியங்கள் ஏற்படும் என்பேன். 

அப்பனே எவ்வாறு என்பதையும் கூட பல பல சித்தர்கள் வருவார்கள் அனைத்தும் செய்வார்கள் என்பேன் கவலைகள் இல்லை எவ்வாறு என்பதையும் கூட உயர்ந்து நிற்கும் இத்தலம் என்பேன்.

அப்பனே நல் முறைகளாக ஒன்றை மட்டும் தெரிவிக்கின்றேன் ஈசன் அருள் இல்லாமல் இங்கு யாரும் இத்திருத்தலத்திற்கு வரமுடியாது என்பேன்.

அலைந்து திரிந்து சிவனே கதி என்று நினைத்து இங்கு வந்துவிட்டால் அனைத்தும் மாறும் என்பேன். அனைத்தும் நல்கும் என்பேன்.

அப்பனே ஆனால் மனிதர்களோ அதை செய்தால் இவை நடக்கும் இதைச் செய்தால் அதை நடக்கும் என்று எங்கெங்கோ எவ்வாறு என்பதையும் கூட மனிதனை தேடி செல்கின்றான். 

ஆனால் மனிதனால் ஒன்றும் செய்ய இயலாது என்பேன். 

ஆனாலும் இவை தானே அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் என்றெல்லாம் மனிதனை ஆசை காட்டி தூண்டிவிட்டு அப்பனே வேடிக்கை பார்க்கின்றவன் தான் மனிதன் என்பேன். 

===========================
# சித்தர்கள் ஆட்சி வரும் 
===========================

ஆனாலும் இறைவன் எவ்வாறு என்பதையும் கூட பின் யாங்கள்(சித்தர்கள்) எங்களுடைய ஆட்சிகள் வரும் என்பேன்.

ஆனாலும் ஆங்காங்கே இருக்கும் தலங்களை ஏற்படுத்தி நல் முறைகளாக மக்களுக்கு யாங்களே நல்லவை செய்வோம். 

மனிதனை இனிமேலும் யாங்கள் நம்பப் போவது இல்லை என்பேன்.

நல் முறைகள் ஆகவே அப்பனே எவை எவை என்று கூற அப்பனே அகத்தியன் யான் இருக்கின்றேன். 

இத்திருத்தலத்தை முடிந்தவரையில் யானே முடித்து வைக்கின்றேன் இத்திருத்தலத்தை நல் முறைகள் ஆகவே.

===========================
# இவ் ஈசன் , நீங்கள் எண்ணியவாறு அனைத்தும் செய்வார்.
===========================

நல் முறைகள் ஆகவே அப்பனே எவ்வாறு என்பதையும் கூட அப்பனே நலமாக நலமாக எண்ணியவாறு அப்பனே அனைத்தும் செய்வான் இவ் ஈசன் என்பேன். 

அப்பனே குற்றங்கள் இல்லை. 
துன்பங்கள் இல்லை. 
துயரங்கள் இல்லை. 

நல் முறைகள் ஆகவே அப்பனே அதனால்தான் சக்தி வாய்ந்த திருத்தலங்களை இன்னும் யாங்கள் நல் முறைகள் ஆகவே  மனிதர்களை பயன்படுத்தி கூட வெளிக் கொணர்ந்து ஏற்படுத்துவோம். எவ்வாறு என்பதையும் கூட

நல்லோர்கள் என்பதைக்கூட யாங்களே ஏற்படுத்துவோம். 

எங்களுக்கு தெரியும் யாரை பயன்படுத்த வேண்டும் என்று கூட. நல் மனிதர்களை யாங்கள் தேர்ந்தெடுத்து நடத்தி வைப்போம் நல் முறைகள் ஆகவே.

அப்பனே இதற்கு இது எவ்வாறு என்பதை கூட சொல்கின்றேன் நல் மனது இருந்தால் மட்டுமே போதுமானது.

அப்பனே நல் விதமாக அப்பனே எவ்வாறு என்பதையும் கூட முன்னேற்றங்கள் காணப் போகின்றது. 

அப்பனே இங்குள்ள அனைவரும் நல் முறைகளாக சக்திகள் பெற்றுள்ளார்கள் என்பேன். 

அதனால் இங்குள்ள ஒவ்வொரு இல்லத்திலும் சக்திகள் கூடி அருள் பெருகும் என்பேன்.

===========================
# பாம்புகள் ராஜ்யம் இத்திருத்தலமே 
===========================

அப்பனே நல் முறைகள் ஆகவே இங்கிருந்து எவ்வாறு என்பதையும் கூட பாம்புகள் ராஜ்யம் என்கின்றார்களே அவ் ராஜ்ஜியம் இத்திருத்தலமே என்பேன்.

அப்பனே நல் முறைகள் ஆகவே எங்கிருந்து எவ்வாறு என்பதையும் கூட பின் நல் முறைகள் ஆகவே அரை கிலோ மீட்டர் அளவிற்கு உள்ளே சென்றால் பல நாகராஜன்கள் தவழ்ந்து  கொண்டிருக்கின்றார்கள் என்பேன் அதனால் சக்திகள் பலம் என்பேன் இங்கு.

===========================
# இவ் ஆலயத்தில், ராகு கேது தோஷங்களும் நிச்சயமாய் விலகி ஓடும் 
===========================

அப்பனே நல் முறைகள் ஆகவே ராகு கேதுக்கள் இவர்களால் ஏற்பட்ட தோஷங்களும் நிச்சயமாய் இங்கு விலகி ஓடும் என்பேன்.

"அப்பனே நல் முறைகள் ஆகவே ராகு கேதுக்கள் இவர்களால் ஏற்பட்ட தோஷங்களும் நிச்சயமாய் இங்கு விலகி ஓடும் என்பேன்."


அப்பனே இத்தலத்திற்கு நன்கு பல சிறப்புகள் உண்டு என்பேன். 

இன்னும் பல சூட்சமங்களை விவரிக்கின்றேன் நல் முறைகள் ஆகவே வரும் காலங்களில்.

அப்பனே என்னுடைய ஆசிகள். 

கருவூரானும் அப்பனே கேட்டு சந்தோஷம் அடைந்து விட்டான் என்பேன்.
 
மீண்டும் வந்து வாக்குகள் செப்புகிறேன் அப்பனே அனைவருக்கும் என்னுடைய நல்லாசிகள்.


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, September 21, 2021

சித்தர்கள் ஆட்சி - x26 - அன்புடன் அகத்திய மாமுனிவர் - திருவண்ணாமலை வாக்கு - (ஆறாம் அறிவு, ஏழாம் அறிவு, எட்டாம் அறிவு, ஒன்பதாவது அறிவு ரகசியங்கள், புரட்டாசி மாத வழிபாடுகள்)

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும். இறைவா, எங்களை நன்றாக படைத்தாய்! அனைத்தையும் நன்றாக கொடுத்திருக்கின்றாயே! இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!! 


அன்பு அன்னை லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகள் போற்றி! போற்றி!! போற்றி!!! 



20/9/2021, தேய்பிறை புரட்டாசி பிரதமை அன்று குருநாதர் அகத்திய மாமுனிவர்  உரைத்த பொது வாக்கு. 
வாக்குரைத்த இடம்:- திருவண்ணாமலை. 


===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
ஆதி மகேஸ்வரனை மனதில் எண்ணி வாக்குகள் உரைக்கின்றேன்  அகத்தியன்

===========================
# புரட்டாசி மாதத்தில் பௌர்ணமி மறுநாள் முதல் அம்மாவாசை வரை ஓர் ரகசிய வழிபாடு.... அனைத்தும் நிறைவேறும் வழிபாடு
===========================

நலன்கள் காண அப்பனே நல் முறைகள் ஆக இன்றிலிருந்து (தேய்பிறை புரட்டாசி பிரதமை)  நல் முறையாகவே எவை என்று சொல்ல,  தன் குலதெய்வத்தை நல் முறைகள் ஆகவே அமாவாசை திதி (மஹாளய அம்மாவாசை )  அன்று வரை வணங்கி வந்தால், குலதெய்வத்தின் அருள் ஆசிகளும்,  முன்னோர்களின் அருளாசிகளும் பலம் பெற்று அனைத்தும் நிறைவேறும் என்பேன்.

சிறிது சிறிதாக மனிதன் துன்பத்தில் நுழைந்து விட்டான். 

அதனால் (புரட்டாசி) இம்மாதத்தில் நிச்சயமாய் இதனைச்செய்ய நல் முறையாகும்.

நல் முறையாகும் ஆனாலும் இன்னும் விளக்குகின்றேன். 

அதிகாலையிலேயே நல் முறையாகவே துயிலெழுந்து பின் துளசி நீரை பருக.... 

பின் பருகிய பின் நல் முறைகளாய் ஐந்தறிவு உள்ள ஜீவராசிகளுக்கு பின் உணவளித்து, 

நல் முறைகள் ஆகவே பின் ஒருவேளை விரதமிருந்து, 

நல் முறைகள் ஆகவே பின் ஐந்து அல்லது நவ (9 நபர்) மனிதர்களுக்கு அன்னம் அளித்து பின் உண்டால், 

அப்பனே நல் முறைகளாக தம் தாம் முன்னோர்களும் உண்ணுவார்கள் என்பேன். 

சில துன்பங்கள் கரைந்துவிடும் கரைந்து ஓடும் என்பேன்.

ஆனாலும் அப்பனே முட்டாள் மனிதன் பின் இதைச் செய்தால் அவை நடக்கும் அதைச் செய்தால் இது நடக்கும் என்றெல்லாம் ஏமாற்றி பிழைத்துக் கொண்டிருக்கின்றான். இது தவறு என்பேன்.

இனிமேலும் யான் தவறு செய்தால் நிச்சயமாய் தண்டிக்க பின் அனைத்து சித்தர்களும் வருவார்கள் என்பேன்.

யான் ஏற்கனவே சில மனிதர்களை தண்டித்து விட்டேன் ஆனாலும் அவர்கள் எவை என்று கூறாமலேயே பொய் தனமாகவே நடந்துகொண்டு வருகின்றார்கள் அப்பனே.

திரும்பவும் கடைசியில் வரும் வரை எச்சரித்து விடுகின்றேன் துன்பத்திற்கு காரணம் யார்? எவை என்று கூற பின் சித்தர்களா? இறைவனா?

அனைத்து துன்பத்திற்கு காரணம் மனிதன் என்பேன் யான் சொல்லிக் கொண்டே வருகின்றேன். 

மனிதனின் பிறப்பு மிக கீழ்தரமாக உள்ளது வரும் காலங்களில் கூட அப்பனே இவையன்றி கூட ஆனாலும் இறை பலத்தை நல் முறையாக பிடித்துக் கொண்டால்தான் அப்பனே அக் கீழ்தரமான பிறவி நல் முறையாக மேல் தரமாக மேலோங்கும் என்பேன்.

அப்பனே மேன்மையான குணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.

அப்பொழுதுதான் மேன்மையாக வாழ முடியும் 

(மேன்மையாக) வாழ முடியுமே தவிர,  மற்றவையெல்லாம் அப்பனே எவை என்று கூற உன் புத்திகள் கீழ்தரமாக இருந்தால் இறைவனை வணங்கினாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பேன் அப்பனே.

அதனால் எதனை என்று கூற அப்பனே மனதை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள். 

வரும் காலங்களில் திருடர்கள் மிகுந்து காணப்படுவார்கள் என்பேன். 

ஆனாலும் அப்பனே யாங்கள் சித்தர்கள் விடமாட்டோம் என்போம் அப்பனே எவ்வாறு என்பதையும் கூட. 

ஆனாலும் சில மனிதர்கள் எவை என்று கூட தெரியாமலே எப்படி வணங்குவது என்பது கூட தெரியாமல் புத்தி கெட்ட மனிதர்கள் திரிந்து திரிந்து பின் இறைவனை காணாமலே இறந்துவிடுகின்றான். 

இது ஒரு பிறவியா?

அப்பனே பிறவியை நல் முறையாக உபயோகிக்க வேண்டும் என்பேன். 

தான் நன்றாக இருக்க வேண்டும், தன் பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டும், தன் காந்தர்வங்கள் இருக்க வேண்டும், என்றுதான் நிறைய மனிதர்கள் பின் நினைத்து நினைத்து இறைவனை வேண்டுகிறார்கள். 

ஆனாலும் ஒருவன் கூட இறைவா உன்னை எவ்வாறு காணலாம்? உன்னை எங்கு தரிசிக்கலாம் எல்லாம் நீயே இறைவா அனைத்தும் நீயே இறைவா என்றெல்லாம் கூட ஒருவனும் வணங்குவது இல்லை.

அப்பனே சுயநலத்திற்காக எதைச்செய்தாலும் இறைவன் நிச்சயமாய் கொடுக்கமாட்டான்.

சொல்கின்றேன் சித்தர்கள் யாங்களும் கொடுக்கமாட்டோம் நிச்சயமாய் அப்பனே நல் முறைகள் ஆக எதற்காக நீ பிறந்தாய்? எதற்காக வளர்ந்தாய்? எதற்காக இறக்கின்றாய்? அப்பனே தெரியுமா?

தெரியவில்லை. 

அதனால்தான் அப்பனே யான் நான்கு யுகங்களிலும் மனிதர்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன் அப்பனே 

ஆனாலும் அப்பனே வருகின்றான் திருமணம் செய்கின்றான். பிள்ளைகளை பெறுகின்றான். சுயநலமாக வாழுகின்றானே தவிர, இறைவனை காணாமலே சென்று விடுகின்றான் அப்பனே. 

இதனால் என்ன லாபம்? பிரயோஜனம் இல்லை அப்பனே.

===========================
# 36வயது வரை கஷ்டங்கள் பட்டவர்களுக்கு....
===========================

அப்பனே ஒன்றைமட்டும் சொல்கின்றேன் அப்பனே. 

நல் முறைகளாக ஆகவே சிறுவயதிலிருந்து துன்பத்தை அனுபவித்து அனுபவித்து.... அனுபவித்துக் கொண்டே வந்து..... நல் முறைகளாக முப்பான்  ஆறின்  (36வயது) மேல்..... இவ்வளவு பின் கஷ்டங்களை கடந்தும் இறைவன் வரவில்லையா?  என்று நினைப்போர்க்கு நிச்சயம் நிச்சயமாய் உண்டு என்பேன் தரிசனம் .

அதனால்தான் அப்பனே பொறுத்திருக... பொறுத்திருக.... என்றெல்லாம் யான் வாக்குகள் கூறிக்கொண்டே வந்து கொண்டிருக்கிறேன்.

ஆனாலும் மனிதர்கள் அதைப் பின்பற்றி பின்பற்றுவதும் இல்லை. 

===========================
#ஏமாற்றுபவர்கள் , ஏமாறுகிறவர்கள்  - யார் அதிகம்?
===========================

அப்பனே மனிதன் எதை எதையோ நினைத்து எப்படி எப்படியோ ஏமாற்றி   ஏமாறுகின்றார்கள் ஏமாற்றுகின்றார்கள். 

இதனைத்தான் அப்பனே இன்னொரு முறையும் திரும்பத் திரும்ப இதைத்தான் யான் சொல்கின்றேன் அப்பனே.

இவ்வுலகத்தில் ஏமாற்றுபவர்கள் அதிகம் அதை விட ஏமாறுகிறவர்கள் அதிகம்.

அப்பனே இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன் அப்பனே. 

என்னை நம்பியே வாழ்கின்றனர் அப்பனே. 

ஆனாலும் அப்பனே என்னையும் எவ்வாறு என்பதையும் கூட என் பெயரை வைத்தே ஏமாற்றி பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றனர் அப்பனே இது நியாயமா?

===========================
# இறைவனை தரிசிக்கும் உன்னத தர்ம வழி 
===========================
அப்பனே நல் முறைகளாக அப்பனே முதலில் நீ திருந்து. 

பின் நல் முறையாய் உன் குடும்பத்தை திருத்து. 

பின் உலகத்தை திருத்திக் கொள்ளலாம். 

பின் ஆண்டவனை நேரில் தரிசிக்கலாம் என்பேன்.

அப்பனே இனியாவது திருந்தி கொள்ளுங்கள். 

வரும் காலங்களில் ஆண்டவனை எப்படி தரிசிக்கலாம் என்பதையும் கூட யான் எடுத்து உரைக்கின்றேன் அப்பனே.

ஒன்றை மட்டும் தெரிவிக்கின்றேன் அப்பனே பின் நீங்கள் எவ்வாறு எதனை நினைத்து பூஜை செய்தாலும் அப்பனே  பலன் இல்லை என்பேன். 

எதற்காக பூஜை செய்கிறோம்? எதற்காக? இறைவனை வணங்குகின்றோம்? எப்படி இறைவனை வணங்குவது? என்பதைக்கூட தெரியாமல் முட்டாள் மனிதனுக்கு தெரியாமல் பிழைப்பு நடத்தி வருகின்றான் அப்பனே.

இதனால் கடைசியில் கஷ்டங்கள் வரும் பொழுது கஷ்டங்கள் எந்தனுக்கு இறைவா இறைவா என்றெல்லாம் ஓடோடி வருகின்றான்.

அப்பனே ஆனாலும் அப்பனே புத்தியை நல் முறையாக பயன்படுத்திக்கொள்ள தெரியவில்லை.

===========================
# மந்திரம் அதனுடைய பலன்கள் எப்போது பன்மடங்கு ஆகும்?
===========================

அப்பனே சில மனிதர்களுக்கு மந்திரம் எதற்காக உச்சரிக்கின்றோம் என்பது கூட தெரியவில்லை.

பின் அதனால் என்ன பயன் அப்பனே மந்திரங்களை நல் முறைகளாக எவ்வாறு உச்சரிப்பது? எவ்வாறு நன்கு புரிந்து கொள்ளுவது? என்றெல்லாம் அறிந்து உச்சரித்து வந்தால் தான் அதனுடைய பலன்கள் பன்மடங்கு ஆகும் அப்பனே.

இதனை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே மந்திரங்களை எதற்காக உச்சரிக்கின்றோம் என்றால்? அப்பனே மனதை தூய்மைப்படுத்த பின் உடம்பை நல் முறையாக பயன்படுத்த.

ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள் மனிதன் யான் திரும்பவும் சொல்கின்றேன் மனிதனை திருடன்தான் என்று சொல்லுவேன்.

திருடன் திருடன் மனிதன் என்பேன்.

எதனால் என்றால் அப்பனே ஏமாற்றிக் கொண்டிருக்கிறான் மனிதன்.

மந்திரத்தைச் சொன்னால் பின் அனைத்தும் வருமாம்!!

அப்பனே பின் யானே பூலோகத்தில் திரிந்து கொண்டிருக்கின்றேன் அப்பனே மனிதன் ஏமாந்து கொண்டேதான் இருக்கின்றான் அப்பனே.

மந்திரங்கள் சொன்னால் எவையும் வராது. 

துன்பங்கள் எவ்வாறு என்பதையும் கூட பிற்பகுதியில் உரைக்கின்றேன் அப்பனே. 

நல் முறைகள் ஆகவே அப்பனே மந்திரங்கள் முறையாக பின் எவை என்று கூற ஒவ்வொரு விதத்திற்கும் அப்பனே சரி முறையாய் உடம்பில் உள்ள குறைகள் நல் முறையாக நல் மனதாக மாற்றவே மந்திரங்கள் என்போம்.

இப்பொழுது கூட யான் சொல்லிவிட்டேன் அப்பனே அதை தவிர்த்து விட்டு இதைச் சொன்னால் அது நடக்கும் அதைச் சொன்னால் இவை நடக்கும் என்று சொன்னால் அப்பனே தவறாக போய்விடும்.

இன்னொரு முறையும் அப்பனே யான் எச்சரிக்கின்றேன் மனிதர்களை.

அப்பனே ஒழுங்காகக் வாழ கற்றுக் கொள்ளுங்கள். 

ஏமாற்றிப் பிழைக்காதீர்கள். 

பொய் சொல்லாதீர்கள்.. 

அப்பனே இதைச் சொன்னால், செய்தால், அனைத்தும்  சித்தர்களும் வந்து தண்டிப்போம் நிச்சயமாய்.

தண்டனை நிச்சயம் உண்டு என்பேன்.

இறைவனைக் காண ஒரு கூட்டம். 

பொய்களின் பாதையில் ஒரு கூட்டம். 

ஒரு கூட்டமோ இறைவன் கிடைப்பானா?

கிடைப்பானா அப்பனே?

யார் செய்த தவறுகள்? அப்பனே யான் மனிதர்கள் மீது தான் தவறு என்று கூறுவேன்.

அப்பனே மனிதன் அனைத்தும் செய்து விடுகின்றான்.

கடைசியில் இறைவன் என்று வருகின்றான் அப்பனே எவ்வாறு இறைவன்  காண்பிப்பான் தரிசனத்தை?

அப்பனே அதனால்தான் சொல்கின்றேன் அப்பனே முன்னோர்களின் வாக்கு பெரியவர்களின் வாக்கு இளமையில் கல் எதற்காக சொல்லியிருக்கின்றார்கள்?

அப்பனே மெய்மறந்து நல் முறைகளாக இறைவனை இளமையிலேயே நீ இறைவனை பிடித்தால்தான் அப்பனே கடை காலங்களில் இறைவனை தரிசிக்க பின் ஆண்டவனை நேரில் காணலாம் என்பேன்.

அதனை விட்டுவிட்டு அப்பனே சுகபோகங்கள் அனைத்தையும் அனுபவித்துவிட்டு பின் இவை எல்லாம் வீண் என்று இறைவனை இறைவா நீயே தான் கதி என்று தாடியும் மீசையும் வைத்துக்கொண்டு அதனை விடவும் கேவலமாக இறை பக்தனாக நடித்துக் கொண்டிருக்கிறான் மனிதன் இவ்வாறு பொய் வேடத்தில் திரிகின்றான் மனிதன் அப்பனே.

அப்பனே வேண்டாம் அப்பனே பொய் சொல்லி ஏமாற்றி வாழாதே என்பேன்.

அப்பனே நல் முறைகளாக வயதான காலத்தில் ஏன் பக்தி வருகின்றது?

ஏன் உந்தனுக்கு இளம் வயதில் பக்திகள் இல்லையா? உனக்கு வராதா? தோன்றவில்லையா? அப்பனே இளம் வயதில் பக்திகள் எண்ணிப்பாருங்கள்.

எதற்காக? எதற்காக? அனைத்தையும் ஆண்டு அனுபவித்து விட்டு எவ்வாறு அனைத்தும் பொய் என்ற நிலைமையில் தான் கடைசியில் இறைவனை காண வருகின்றான் பக்தி செலுத்துகின்றான் ஆனால் இறைவன் கொடுப்பானா??

இவன் தன் அனைத்தும் அனுபவித்துவிட்டு ஒன்றுகூட இல்லை என்றுகூட உட்கார்ந்து கொண்டிருக்கின்றான் என்பதுதான் இறைவனின் தீர்ப்பாக இருக்கும். ஆனால் அருள் கிடைப்பது அரிதாகும்.

அப்பனே அருள்கள் எவ்வாறு முறையாக வரும் என்பதைக்கூட யான் வரும் காலங்களில் தெரிவிக்கின்றேன் அப்பனே.

அப்பனே இனிமேலும் இவ்வாறாக முட்டாளாக முட்டாள்களாகவே இருந்தால் அப்பனே அனைத்தும் அழிந்து போகும் என்பேன் உன் பிள்ளைகளும் அனைத்தும்.

ஆனாலும் அப்பனே பந்த பாசங்கள் யாரை விட்டது? அப்பனே? அதனால் தான் தெரிந்து விழித்துக்கொள்ளுங்கள் அப்பனே.

===========================
# ஆறாம் அறிவு  - சரியாக பயன் படுத்தினால் ஏழாம் அறிவு திறக்கும்.
===========================

யான் சொல்கின்றேன் அப்பனே இறைவன் முறையாகவே மனிதனுக்கு ஆறாம் அறிவை படைத்தான். 

ஆனால் அப்பனே அவ் ஆறாவது அறிவை பின் எவரும் பின்பற்றுவதே இல்லை இதுவரை.
 
யான் பின் முன் வாக்கிலும் இதைத்தான் சொன்னேன் ஆறாவது அறிவை பயன்படுத்துங்கள் பயன்படுத்துங்கள் என்று.

ஆறாவது அறிவை பயன்படுத்தினால் அப்பனே இறைவனை நல் முறைகளாக ஏழாவது அறிவுக்கு அழைத்துச் செல்வான் என்பேன்.

===========================
# ஏழாம் அறிவு  - சரியாக பயன் படுத்தினால்.....
===========================

***** ஏழாவது அறிவில் அப்பனே இறைவனை காணலாம். *****

===========================
# எட்டாம் அறிவு  - சரியாக பயன் படுத்தினால்.....
===========================

அதைவிட எட்டாவது அறிவில் நல் முறைகள் ஆகவே அப்பனே அனைத்து சித்திகளும் நல்ல முறையில் கிடைக்கும் .அப்பனே. 

***** எட்டாவது அறிவில் அட்டமா சித்திகளும் கிடைக்கும் *****

ஆனாலும் அப்பனே இன்னும் ஆறாவது அறிவிற்கே மனிதன் இதுவரை வரவில்லையே அப்பனே.

அப்பனே புத்திகள் கொண்டு வாழுங்கள். யாரையும் ஏமாற்றி விடாதீர்கள்

என்(அகத்தியன்) பெயர் சொல்லி ஏமாற்றாதீர்கள்.

அப்பனே உன் பிழைப்பிற்காக எங்கேயும் கஷ்டப்பட்டு வா யாங்கள் துணை இருப்போம்.

இறைவன் பெயரைச் சொல்லி எங்கள் பெயரை சொல்லி ஏமாற்றாதீர்கள் ஏமாற்றாதீர்கள்.

நிச்சயம் இக்கலியுகத்தில் தண்டனை உண்டு என்பேன்.

தண்டனை உண்டு என்பேன் அப்பனே நீங்கள் செய்த தவறுக்கு நீங்கள் தான் தண்டனையை அனுபவித்தாக வேண்டும் அனுபவித்து விடுவீர்கள் என்பேன்.

அதனால் அப்பனே வேண்டாம் அப்பனே நல் முறைகளாக நல் மனதாக அப்பனே கீழ்த்தரமான பிறவி மனிதப்பிறவி அதை மேல் தரமாக ஆக்குவது மேல் முறையான எண்ணங்களே ஆகும் என்பேன்.

அப்பனே மேன்மையான எண்ணங்கள் இருந்தால் அப்பனே நீ மேல் நோக்கியே செல்வாய் என்பேன்.

அப்பனையும் ஒன்றைமட்டும் சொல்கின்றேன் அப்பனே உன் மனதை தொட்டு சொல் நீ நல்லவனா?? என்று. 

அப்பனே நீ நல்லவன் என்றால் இறைவனிடத்தில் ஈசன் இடத்தில் சண்டையிடு. அனைத்தும் கொடுப்பான் என்பேன்.

அப்பனே வேண்டாம் அப்பனே அழிவு காலம் மனிதனை மனிதன் தின்னுவான் என்பேன்.

அப்பனே இவையெல்லாம் அப்பனே இனிமேலும் அன்போடு ஒன்றாக இணையுங்கள் அப்பனே. 

ஆனாலும் மனிதனுக்கு பொறாமை புத்திகள் கூட அதிகமாகிவிட்டது.

அகத்தியன் என்னை வணங்குபவர்களுக்கு கூட, என்னுடைய பக்தர்களுக்கு கூட, யான் தான்  பெரியவன் என்ற கர்வம் அதிகமாகிவிட்டது. நான் தான் பெரியவன் என்று கூட தெரிந்து கொண்டிருக்கின்றார்கள் இதனால் என்ன பயன்??

பின் நீதான் பெரியவனா??

ஏன் உன்னால் எதையும் சாதிக்க முடியவில்லை?

அப்பனே தெரிந்து கொள்ளுங்கள். 

இறைவன் தான் பெரியவன் இவ்வுலகத்தில். 

மனிதர்களால் ஒன்றுகூட செய்ய இயலாது. 

ஏனென்றால் அப்பனே ஆறாவது அறிவிற்கே மனிதன் இன்னும் நுழைய முடியவில்லை அப்பனே.

எப்படி ஏழாவது அறிவு க்கு செல்வான்??

எப்படி எட்டாவது அறிவு க்கு செல்வான்??

===========================
# ஒன்பதாவது  அறிவு ???
===========================

ஏன் அப்பனே ஒன்பதாவது அறிவும் இருக்கின்றது இதனைப் பற்றி எல்லாம் தெரிவிக்கின்றேன் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள்.

அப்பனையும் ஒன்றை மட்டும் தெரிவிக்கின்றேன் அப்பனே உயர்வான எண்ணத்தோடு வாழுங்கள்

வாழுங்கள் அப்பனே சொல்கின்றேன். 

வேண்டாம் அப்பனே இன்னும் இன்னும் கர்மத்தை சேர்த்துக்கொண்டு சேர்த்துக்கொண்டு பிறவிகள் எல்லாம் கடந்து அப்பனே எவ்வாறு வேண்டாம் ஐயனே. 

இவ்வுலகத்திலே பிறந்தாய் உலகத்தை விட்டு நல் முறைகளாக செல்லுங்கள் அப்பனே. 

மறுபிறப்பு வேண்டாம். 

இது எவரிடத்தில் இருப்பது என்றால் உங்கள் இடத்தில் தான் இருக்கின்றது அப்பனே. 

அதனால்தான் வரும் காலங்களில் அனைவரும் ஒற்றுமையாக இருங்கள் அப்பனே என் பெயரைச் (அகத்தியர்) சொல்லியே பொறாமைக்காரர்கள். 

அப்பனே சிறு வயதில் இருந்து எவ்வாறு இருந்து சிறுவயதில் கூட யான் பெரியவன். நான் தான் அகத்தியன் என்றுகூட திரிந்து கொண்டிருக்கின்றான் அப்பனே.

நிச்சயமாய் வேண்டாம் அப்பனே. 

திரும்பவும் எச்சரித்து விடுகின்றேன். 

வேண்டாம் அப்பனே வேண்டாம் வேண்டாம் அப்பனே. 

நல் முறைகள் ஆகவே யான் சொல்லிவிட்டேன் அப்பனே. 

(புரட்டாசி) இம்மாதத்தில் நல் முறைகளாக  முன்னோர்களை நல் முறையாகவே மதித்து நல் முறைகளாக செய்து வாருங்கள் யான் கூறியவற்றை அப்பனே இன்றிலிருந்து.

இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள் அப்பனே. 

ஒவ்வொருவரும் ஒவ்வொரு கஷ்டத்திலும் இருந்து கொண்டிருக்கின்றீர்கள்.

இதனால் அப்பனே பொதுவாகவே யாம் சொல்லி விடுகின்றேன் அனைத்தும் கூட அப்பனே திருந்திக்கொள்ளுங்கள்.

தப்பித்துக் கொள்ளுங்கள் பிழைத்துக் கொள்ளுங்கள் என்பேன்.

மறு வாக்கும் நல் முறைகள் ஆகவே உரைக்கின்றேன் அப்பனே அனைவருக்கும் என்னுடைய நல்லாசிகள்!

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, September 16, 2021

சித்தர்கள் ஆட்சி - x25 - அன்புடன் அகத்திய மாமுனிவர் - சிதம்பர ரகசியம், உத்தரகோசமங்கை ஈசனார் தரிசன ரகசியங்கள், மீனாட்சி அம்மை ரகசியங்கள், சிதம்பரம் உடுக்கை நடன ரகசியம் வாக்கு

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும். இறைவா, எங்களை நன்றாக படைத்தாய்! அனைத்தையும் நன்றாக கொடுத்திருக்கின்றாயே! இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!! 


அன்பு அன்னை லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகள் போற்றி! போற்றி!! போற்றி!!! 



சிதம்பர ரகசியம் - திருச்சிற்றம்பல தரிசனம் - குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு-மதுரை


google map links


உத்திரகோசமங்கை

https://maps.app.goo.gl/RS8Vnn89AtvcSW766


Thillai Nataraja Temple, Chidambaram

https://maps.app.goo.gl/9ogS4VUvg7DDdVWG7


மீனாட்சி அம்மன் கோவில்

https://maps.app.goo.gl/Yj9RRina76UJzpN68


===========================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு

===========================

ஆதி சித்தனை மனதில் எண்ணி வாக்குகள் உரைக்கின்றேன் அகத்தியன் எவை என்று கூற இதிலும் சூட்சமங்கள் அடங்கியுள்ளது என்பேன்.


நல்ல முறையாக அமைப்பது எல்லாம் சிறிதாயினும் மூர்த்திகள் எவ்வாறு என்பதையும் கூட நினைக்கும் பொழுது அப்பனே பெரிய அளவில் வருகின்றது மாயை என்பேன். இவ்வுலகத்தில் மாயை பின் மனிதனை அழிக்க. ஆனாலும் இதனை எல்லாம் சொல்கின்றேன். சூட்சுமங்களை எல்லாம் சொல்லி அப்பனே நல் முறையாக திருத்துங்கள் மனிதனை என்பேன்.


மனிதன் திருந்தாவிட்டால் அப்பனே பின் இயற்கையும் திருந்தாது என்பேன். அப்பனே எவை வேண்டும் என்றுகூட கேட்டாலும் அப்பனே தன் சுயநலத்திற்காக வே இறைவனை வேண்டுகிறார்கள் அதை நாங்கள் ஏற்பதில்லை மகன்களே எப்பொழுதும் கூட.


===========================

# அகத்திய மாமுனிவர் பத்தர்கள் அனைவருக்கும் பின்வரும் வாக்கினை தெரிவிக்கவேண்டும்.

===========================

அப்பனே எல்லோருக்கும் ஒன்றை தெரிவியுங்கள்.


அப்பனே அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று வணங்க வேண்டும். இதனை தெரிவித்து விட்டால் இறைவனுக்குத் தெரியும் அப்பனே.


இவையன்றி கூட இன்னும் பல சூட்சமங்கள் இவ்வுலகத்தில் ஒளிந்து கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே. அப்பனே இவை மட்டுமன்றி அப்பனே மீண்டும் ஈசன் திருத்தலங்கள் கூட எவ்வாறு வடிவமைக்கப்படுகிறது என்பதைக்கூட என்பதை பார்த்தால் அதுவும் ஒரு ஆச்சர்யமே என்பேன் வரும் காலங்களில்.


===========================

# சிதம்பர ரகசியம்

===========================

அப்பனே எவை என்று கூற இன்னொரு ரகசியத்தை சொல்கின்றேன்.

அப்பனே தற்போது நல் முறையாக நல் முறைகள் ஆகவே எவ்வாறு என்றுகூட சிதம்பர ரகசியம் என்கிறார்களே அவ் ரகசியத்தை ஓர் முறை சொல்லி விடுகின்றேன். அப்பனே ஒரு ரகசியத்தை. அப்பனே அத்திருத்தலத்தை ஈசனே அமைத்துக் கொண்டான் என்பதுதான் உண்மை .


அப்பனே அங்கும் வருவான் என்பேன் ஈசன் எப்பொழுது வருவான் என்பதுகூட எந்தனுக்கு தெரியும். அதை அங்கு அவன் வரும் பொழுது அவன் கண்ணில் பட்டாலே போதும் பாவங்கள் தொலைந்துவிடும் என்பேன்.

அவ் சூட்சுமத்தையும் ஆருத்ரா தரிசனம் என்கின்றார்களே அவ் ஏழு நாட்களையும் அப்பனே சேர்த்துப் பார்த்தால் ஒரு நாள் வரும் கடைசி நாளில் வருவான் நேரமும் சொல்கின்றேன் வரும்பொழுது உங்களுக்கு.


===========================

# உத்தரகோசமங்கை ஈசனார் தரிசன ரகசியங்கள்

# திருவாதிரை நாள் ஆருத்ரா தரிசனம்

===========================


இவையன்றி கூற அப்பனே ஒரு நாள் தங்குவான் என்பேன் உத்தரகோசமங்கையில். பின் எவை என்று கூற இப்பொழுதும் கூட அதை சொல்லி விடுகின்றேன் அப்பனே மார்கழி மாதத்திற்கு முன் ஒரு மாதத்தில் சொல்கின்றேன். அப்பனே எவை என்று கூற நல் முறைகள் ஆகவே அப்பொழுதுதான் அவனுக்கு நல் முறையாக வருடத்தில் ஒரு நாள் அபிஷேகங்கள் (திருவாதிரை நாள் ஆருத்ரா தரிசனம்) நடக்கும் என்பேன். அப்பனே அவனுக்கு பிடித்தமான தலம் உண்டு என்பேன் அங்கு கூட.


அவன் எங்கு அமர்ந்திருப்பான் என்பதைக்கூட இப்பொழுதே சொல்லிவிடுகிறேன் அப்பனே. அங்கு ஒரு மரம் இருக்குமே அங்கேதான். ஆனாலும் அதை தெரியாத மனிதர்கள் அப்பனே அவ் அபிஷேகத்தை காண அபிஷேகத்திற்காக தான் அனைவரும் காத்திருப்பார்கள்.


ஆனால் ஈசனோ இங்கு மரத்தடியில் அமர்ந்து கொண்டு இருப்பான். அவ்விடத்தில் நீங்கள் நிச்சயம் அமருங்கள் அங்கு சென்று.


===========================

# மீனாட்சி அம்மை ரகசியங்கள்

===========================


அப்பனே இன்னொரு சூட்சுமத்தை சொல்கின்றேன் இப்பொழுது அப்பனே இந்த ஊரிலேயே மீனாட்சி தாய் இருக்கின்றாளே எப்படி என்று எவை என்று கூற நினைக்கும் பொழுது ஈசனே சிதம்பர ரகசியத்தை ஏற்படுத்தி விட்டான் அதையும் யான் சொல்லிவிட்டேன். ஆனாலும் பார்வதிதேவி கோபம் கொண்டு நீ அமைத்தாயா? யானும் அமைக்கின்றேன் என்று போட்டியில் தனக்கென திருத்தலம் அமைத்துக்கொண்டாள். இப்பொழுது கூட மீனாட்சி திருத்தலம் என்று அழைக்கப்படுகின்றது என்பேன். அத்திருத்தலமே மீனாட்சி கோயில். அப்பனே இவையன்றி கூற இன்னும் பல ரகசியங்கள் உண்டு என்பேன் உண்டு என்பேன் அப்பனே ஒரு ரகசியத்தை சொல்லி விட்டேன்.

===========================

# சிதம்பரம் உடுக்கை நடன ரகசியம்

===========================

இனி ரகசியங்களை ஒன்றொன்றாக சொல்கின்றேன் அப்பனே.

சிதம்பரம் உடுக்கை நடன ரகசியம்
ஆனாலும் இவையன்றி கூற ஓர்நாள் அப்பனே நல் முறைகளாக உள்ளே தங்கி சென்றால்,


அப்பனே அங்கு எவ்வாறு என்பதையும் கூட நினைக்கும் பொழுது,


ஈசன் உடுக்கையால் நல் முறைகள் ஆகவே ஓர் நிமிடம் பின் உடுக்கையை ஆட்டி பின் நல் முறைகளாக நடனம் ஆடுவான் என்பேன். அங்கு தங்கினால் இச் சத்தமும் கேட்கும் என்பேன்.


ஆனால் காலப்போக்கில் பல மனிதர்கள் பின் அங்கு சென்று அவனுடைய சத்தம் மனிதன் கேட்டால் மனிதன் பெரும் புகழும் பெரும் செல்வங்களும் பெற்று வாழ்ந்திடுவார்கள் என்று அதையும் கேடு கெட்ட மனிதர்கள் கெடுத்து விட்டனர். அப்பனே இப்பொழுதும் கூட அங்கே ஞானியர்கள் நல் முறைகளாக ஈசனின் உடுக்கை சத்தத்தை கேட்க வருவார்கள் என்பேன். ஒவ்வொரு இடத்தையும் சுற்றிப் பாருங்கள் அப்பனே உங்களுக்கே தெரியும் அவையெல்லாம் அப்பனே ஒவ்வொரு சித்தனும் வாழ்ந்த இடம் என்பேன். இவை அன்றும் இன்னும் பல பல உண்மைகள் உண்டு என்பேன் இவ்வுலகத்தில் ஒவ்வொன்றாக எடுத்து உரைக்கின்றேன் அப்பனே. அப்பனே அனைவருக்கும் நல்லாசிகள் அப்பனே நலமாக நலமாக அனைத்தும் சொல்லிவிட்டேன்.


மறு வாக்கும் அதி விரைவிலேயே உரைக்கின்றேன் சூட்சமத்தோடு.


அப்பனே அனைவருக்கும் என்னுடைய ஆசிகள்.


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.