“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Friday, June 26, 2026

சித்தர்கள் ஆட்சி - 643 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - 24/05/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 2

 இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 24/05/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 2


நாள், நேரம்  : 24/05/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 


முழு நிகழ்வின் நேரலை :-  https://youtu.be/NqRaI13qIDU?t=1


இடம் : உலக நன்மைக்காக 10 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.


===========================

# இவ் பகுதி #2 வாக்கின் நேரலை :-  https://youtu.be/NqRaI13qIDU?t=15242  

===========================


===========================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 

===========================


சுவடி ஓதும் மைந்தன் :- ( சிவ குழந்தையை பார்த்து..அம்மா… ) தண்ணி குடிங்க….


குருநாதர் :- அழகாகவே அறிந்தும் பயன் என்ன? இதனால் பல குற்றங்கள், பல பாவ வினைகள் அறிந்தும் சுமந்து தான் வந்திருக்கின்றார்கள். எதனால் மனம் இறங்கி, அறிந்தும் ஏது என்று புரிய, குழந்தாய் அழகாக முதலிலே பாடினாயே திருப்போரூரார் பற்றி. அதை பாடு, மக்கள் அதாவது முருகன் பெண் அனைவருக்கும் ஆசீர்வதிக்கட்டும். 


(திருப்போரூர் கந்தசுவாமி (முருகன்) மீது பாடப்பட்ட மிகவும் புகழ்பெற்ற பக்திப் பாடல். அதனையே மீண்டும் பாடுக என்று அருளினார்கள்)   


சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப நீங்க பாடுறீங்க, பார்த்தீங்களா? அதையே பாட சொல்றார். பாடுங்க…


சுவடி ஓதும் மைந்தன் :-  (மேலும் சில விளக்கங்கள் உரைத்தார்கள் அங்குள்ள அடியவர்களின் கர்ம வினைகள் நீங்க.)


சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை பாடிய பாடல்:-  

 

(         ஏது பிழை செய்தாலும், ஏழையேனுக்கு இரங்கித்

தீது புரியாத தெய்வமே – நீதி

நீதி தழைக்கின்ற திருபோரூர் தனிமுதலே – நாயேன்

பிழைக்கின்ற வாறுநீ பேசு….. முருகா… முருகா…


நீயல்லால் தெய்வமில்லை!

எனது நெஞ்சே நீ வாழும் எல்லை!

முருகா நீயல்லால் தெய்வமில்லை!  )

 

நேரலை - https://youtu.be/NqRaI13qIDU?t=15337 


( பாடல் பாடி முடித்த பின்னர்..மீண்டும் குருநாதர் வாக்குகள் ஆரம்பமானது…. ) 


===========================

# ஞானத்தை கொடுத்து, அவ்  ஞானத்தின் மூலம் பின் நிச்சயம் உலகத்திற்கு உன்னை தெரியப்படுத்துவேன்

===========================


குருநாதர் :- அழகாக, குழந்தாய். சில பாடல்களுக்கு முருகனே, இறைவனே, நிச்சயம் இறங்குவான்., கவலை வேண்டாம். ஞானத்தை கொடுத்து, அவ் ஞானத்தின் மூலம் பின் நிச்சயம் உலகத்திற்கு உன்னை தெரியப்படுத்துவேன். கவலை வேண்டாம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  பாருங்க, ஞானத்தை நிறைய கொடுத்துருவாரு. நீங்க வந்து அந்த ஞானத்தை நிறைய கொடுத்துட்டு, இந்த உலகத்துக்கே நான் உன்னை தெரியப்படுத்துறேன் என்றார் அகத்தியர். 


குருநாதர் :- இதனால் பின் அனைவருமே அமர்ந்து கொண்டு, அதாவது இவர்களுக்கு ஏதாவது சில கருத்துக்களை கூறு, குழந்தாய். 


சுவடி ஓதும் மைந்தன் :-  இவங்களுக்கு ஏதாவது கூறு. நீங்க என்ன பண்றீங்க? நீங்க இவங்களுக்கு ஏதாவது சொல்ல சொல்றாரு. சொல்லுங்க, என்ன சொல்லுவீங்க? நீங்க சொல்லுங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :- ( சுவடியை எடுத்து அவ் குழந்தைக்கு காட்டினார் ) அம்மா, இது அகத்தியர். இங்க பாருங்க, பாருங்க. இது வந்து உங்களுக்கு காமிக்கிறேன். இது அகத்தியரே சொல்றது வந்து. ஓகேங்களா? அதனால வந்து நீங்க இவங்களுக்கு என்ன சொல்லணுமோ சொல்லுங்கன்றார். தைரியமா? அடுத்த லெவல்ல நீங்க வந்து அடுத்த ஸ்டெப் போயிடுவீங்க. வந்து அகத்தியர் உங்களை எடுத்துட்டு போயிடுவார். சொல்லுங்க.


===========================

# உலகோருக்கு சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை உரைத்த வாக்குகள் 

===========================


( அவசியம் பின்வரும் இவ் வாக்கினை நேரலையில் காண்க )


நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=15806 


சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை உரைத்த வாக்குகள்:- 


நான் எப்பவுமே ஸ்கூல்ல வந்து, டீச்சர்ஸ் வந்து, கிளாஸ் ஆரம்பிக்க முன்னாடி சொல்லுவாங்க, "பிரேயர் பண்ணுங்க" அப்படின்பாங்க. 


நான் என்ன வேண்டுவேன்னா, எனக்கு அது ஒரு மிஸ் (ஆசிரியர்)  சொல்லித் தந்தது. எல்லாரும் நல்லா இருக்கணும், அப்படின்னு வேண்டணும். 


அடியவர்கள் :- ( கைதட்டல்கள் )


===========================

# எத்தனை ஜென்மம் எடுத்தாலும், இறைவா, உன்னை மறந்துடவே கூடாது. 

===========================


சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை உரைத்த வாக்குகள்:- 


இப்போ நீ அந்த மாதிரி வேண்டுற, அதே மாதிரி இன்னொருத்தவங்க வேண்டுனாலும் எப்படி? உன்னையும் சேர்த்து, எல்லாரையும்னா உன்னையும் சேர்த்து வரும் இல்லையா? இப்படி எல்லாரும் வேண்டணும் அப்படின்னா, கண்டிப்பா எல்லாரும் நல்லா இருப்போம் அப்படின்னு வந்து சொல்லித் தந்தாங்க. 


அதனால எப்பவுமே, 6thல இருந்து ( ஆறாம் வகுப்பில் இருந்து )  நான் வந்து, எல்லாரும் நல்லா இருக்கணும் அப்படிதான் வேண்டுவேன். முடிஞ்ச அளவுக்கு, நம்மளால ஏண்ட அளவுக்கு, கொஞ்சம் கொஞ்சம் நம்ம பிறருக்கு உதவி செய்வோம். பக்தி செய்வோம். 


எத்தனை... நான் என்னை பொறுத்தவரைக்கும், நான் இறைவனிடம் ஏதாவது கேட்கணும் அப்படின்னா, 


—---“எத்தனை ஜென்மம் எடுத்தாலும், இறைவா, உன்னை மறந்துடவே கூடாது.”-------


அடியவர்கள் :- ( பலத்த கைதட்டல்கள் )


சுவடி ஓதும் மைந்தன் :-  அய்யா  பாருங்க, பாருங்க. யாருக்கு இந்த இது ( மனசு ) வரும்? பார்த்தீங்களா !!!!! இதுதான் !!!!!. இது எத்தனை பேருக்கு இது (மனசு) வரும்? எனக்கு அது கொடு, இது கொடு. இறைவன் கையில வந்து, ஏதோ வேலையாளு மாதிரி நம்மளுக்கு இறைவனை வந்து— சொல்லுங்க, குட்டி, சொல்லி குட்டி. சொல்லுங்க. ரைட். சோ, பேசுங்க, பேசுங்க.


===========================

# ஏன் சிவபுராணம் பாடலில் முதல் வரி  - "நமச்சிவாய வாழ்க"  என்று உள்ளது?

===========================


மீண்டும் சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை உரைத்த வாக்குகள்:- 


(இறைவா)  நீ நல்லா இருக்கணும் ஃபர்ஸ்ட். நீ நல்லா இருந்தா, நானும் நல்லா இருப்பேன். அப்படித்தான் வேண்டுவேன். அதான்... அதனாலதான் சிவபுராணத்துல முதல் வார்த்தையே என்னன்னு படிச்சிருக்காங்க. "நமச்சிவாய வாழ்க" அப்படின்னு பாடி இருக்காங்க இல்லையா? 


அதாவது முதல்ல சிவபெருமான், நீ வந்து, நீ முதல்ல நல்லா இருக்கணும். நீ நல்லா இருந்தாலே, நீ வந்து என்னை நல்லாதான் வச்சிருப்ப. அந்த மாதிரி ஃபர்ஸ்ட் நான் ஒரு... இங்க வந்து, திருவண்ணாமலைக்கு நேத்து போயிருந்தேன். 


===========================

# திருவண்ணாமலையார் தரிசனம் 

===========================


அங்க போன உடனே, அந்த சிவபெருமானை பார்த்த உடனே, எனக்கு என்ன கேட்கிறேனே தெரியல. ஒரே அழுகையா வந்துச்சு. அது எனக்கும் அவருக்கும் உள்ள ஒரு பாண்டிங், அவ்வளவுதான். நான் பேசவே மாட்டேன். பார்த்துக்கிட்டே இருப்பேன். அங்க அந்த லைன் போக முடிக்கிற வரைக்கும், நான் அவரை பார்த்துக்கிட்டே இருப்பேன். எதுவுமே கேட்க மாட்டேன். அவருக்கு தெரியும், நம்ம எல்லாம் என்ன கேட்கிறது? 


என்னை என்ன படிக்க வை? எனக்கு வந்து நிறைய... 


ஞானத்தை கொடுன்னு வேணா கேட்கலாம். அது கொடு, இது கொடு, இப்படின்னு எப்படி கேட்க முடியும்? 


அது அவருக்கே தெரியும். உனக்கு என்ன கொடுக்கணுமோ, அவர் வந்து கண்டிப்பா ஒரு நாள் தருவாரு. அதுக்குள்ள பக்குவம் வந்துச்சுன்னா, அவரே ஆட்டோமேட்டிக்கா தருவாரு. நம்ம எல்லாம் போயிட்டு, எனக்கு இது தா, எனக்கு அது தான்னு கேட்கிற, அவர் என்ன ஆர்டரா பண்றோம்? அப்படி கேட்கக்கூடாது. 


அவரா வந்து நம்மளுடைய மனப்பக்குவம்... அதாவது சிவபெருமான் என்ன பண்ணுவாரு? கொஞ்சம் சோதிக்கத்தான் செய்வாரு. எதுக்கு? நம்ம மனசு வந்து பக்குவம் அடைகிறதுக்காக. சோதனை தந்து, நம்ம மனசை பக்குவப்படுத்திட்டு, அதுக்கு அடுத்து, அவன் பக்குவம் ஆயிட்டானா அப்படின்னு பார்த்துட்டு தான், நமக்கு என்ன தேவையோ, அதை கண்டிப்பா தருவாரு. 


அடியவர்கள் :- ( பலத்த கைதட்டல்கள் )



===========================

# உங்கள் கர்மவினை தீர - மிக சிறந்த வழிபாடு, கூட்டுப் பிரார்த்தனைக்கு  அடியவர்கள் அவசியம் தவறாமல் வருவது ஒன்றே ஆகும் !!!

===========================



குருநாதர் :-  குழந்தாய், அறிந்தும், பல வினைகள் தீர்ப்பதற்கு அனைவரும் ஓடோடி வந்துள்ளார்கள். இதனால் சிவபெருமானிடம் அறிந்தும், அதாவது நீ எதை என்று அறிய, அனைத்தும் பாடலாக பாடு. நிச்சயம் அவர்களை வேண்டி, பின் அதாவது ஈசனை அழகாக நிச்சயம் பின் மனதிலே நிறுத்தச் சொல். அப்பொழுது நீ பாடு, நிச்சயம் ஈசன் அருள் புரிவான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாரும் நீங்களே சொல்ல சொல்றாரு. என்ன சொல்றாரு? சொல்லுங்க. எல்லாரும் ஈசனை ஒரு மனசுல நினைச்சுக்கோங்க. வந்து என்னென்ன வேணும், என்னென்ன சொல்லி நீங்களே நினைச்சுக்கோங்க. நீங்க பாடல் பாடினீங்கன்னாவே தானா ஈசன் தேவையானதெல்லாம் கொடுப்பாருன்றாரு. வந்து நீங்க திருப்பியும் பாட சொல்றாரு. சொல்லுங்கமா. 


( அவசியம் பின்வரும் இவ் வாக்கினை நேரலையில் காண்க )


நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=16023 


===========================

# பக்தியின் ஒன்பது நிலைகள் 

===========================

# ஸ்ரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாத சேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், சக்யம், ஆத்ம நிவேதனம்.

===========================


உலகோருக்கு சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை உரைத்த வாக்குகள்:- 


எல்லாரும் உங்க மனசுக்குள்ள, ஈசன் அவர்கள் வந்து, கண்டிப்பா நினைச்சுக்கோங்க. நீங்க நினைச்சீங்கனாலே அவர் வந்து புரிஞ்சுக்குவார். 


சரி நம்மள வந்து (இவங்க) கூப்பிடுறாரு. அதாவது, சிவபெருமான் என்ன செய்வாராம்? ஒரு நாள் இல்லனா, ஒரு நாள் கண்டிப்பா அவர் வராம். 


(சிவபெருமான் ) இவர் என்ன வரவே மாட்டேங்குறாரு?  நம்ம இத்தனை நாள் கூப்பிட்டுக்கிட்டே இருக்கோம்?  அப்படின்னு நினைக்கக்கூடாதாம். 


நாம  அவரை வந்து நினைச்சுக்கிட்டே இருக்கணும். அப்புறம் நம்ம எதுக்கு பிறந்திருக்கோம்? அவரை வந்து நினைச்சுக்கிட்டே இருக்கணும். அவர் பாடிக்கிட்டே இருக்கணும். 


பாட தெரியுதா? பாடணும். ஒன்னும் இல்ல. அதாவது, பக்தியை 9 விதமா பிரிச்சிருக்காங்க: ஸ்ரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாத சேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், சக்யம், ஆத்ம நிவேதனம். இப்படி 9 வகையா பிரிச்சிருக்காங்க. 


===========================

# இறைவனை அடைவதற்கான ஒன்பது வழிகளின் எளிமையான விளக்கங்கள். இவ்  வழிகள் இதுவரை தெரியாதவர்கள் , இவ் அம்மையின் வாக்குகளை நேரலையில் கேட்டு அதன் படி இறைவனை வணங்கவும்.

===========================


(1) ஸ்ரவணம் அப்படின்னா கேட்டல் அப்படின்னு பொருள். அவரைப் பத்தி பாடல்களோ, அல்லது இந்த மாதிரி உபநியாசங்களோ, இந்த மாதிரி அவரை கேட்டுக்கிட்டே இருக்கணுமாம். இந்த மாதிரி கேட்டு வழிபடுவது தான் ஸ்ரவணம்.  (1.ஸ்ரவணம்: இறைவனின் திருவிளையாடல்கள், கதைகள் மற்றும் புகழைக் காதுகளால் கேட்டல். ) 


(2) இரண்டாவது கீர்த்தனம். கீர்த்தனம்னா தான் பாடுவது. அவருடைய நாமங்களையோ, அவருடைய பாடல்களையோ பாடி வழிபடுவது தான் கீர்த்தனம்.  (2.கீர்த்தனம்: இறைவனின் புகழைப் பாடி மகிழ்தல். ) 


(3) மூன்றாவது ஸ்மரணம். இந்த ஸ்மரணம் என்னன்னா, மனசுல நினைச்சல் அப்படின்னு பொருள். இப்போ கைக்குழந்தையின் தாய் எப்படி? குழந்தை வந்து தூங்கிட்டு தான் இருப்பா. ஆனாலும் அவளோட மனசு என்ன? எங்க இருக்கும்? குழந்தை நினைப்பாவே இருக்கும். அவ வேலை செஞ்சுகிட்டே இருப்பா. குழந்தை முழிச்சிருப்பானா? தூங்கி இருப்பானா? அப்படின்னு குழந்தை நினைப்பாவே இருக்கும் இல்லையா? அதே போல தான் நம்மளும் இருக்கணுமாம். சிவபெருமானை நினைச்சுக்கிட்டே இருக்கணுமாம். என்னதான் வேலை வேலையா இருந்தாலும், சிவபெருமானை ஒரு பக்கம் நினைச்சுக்கிட்டே இருக்கணுமாம். இப்படி நினைச்சு வழிபடுவது தான் ஸ்மரணம்.  (3.ஸ்மரணம்: எப்போதும் இறைவனையே நினைவில் கொள்ளுதல் (அனுமன், மீரா போன்றவர்கள்). )


(4) நான்காவது பாத சேவனம். அவருடைய பாதாரவிந்தங்களையே வணங்குவது பாத சேவனம். (4.பாத சேவனம்: இறைவனின் திருவடிகளைச் சரணடைந்து தொண்டு செய்தல். )


(5) ஐந்தாவது அர்ச்சனம். அதாவது, நம்ம விளக்கு பூஜை எல்லாம் பண்ணுவோம் இல்லையா? 108 போற்றி, 1008 போற்றின்னு அர்ச்சனை செய்து வழிபடுவது அர்ச்சனம். (5.அர்ச்சனம்: மலர்களால் இறைவனைப் பூஜித்து வழிபடுதல். ) 


(6) வந்தனம்: இறைவனை வணங்கிப் பணிதல். 


(7) தாஸ்யம். தாஸ்யம் அப்படின்னா, கடவுள் எனக்கு எஜமான். நான் அவருக்கு ஒரு தொண்டன். இல்ல, அவருக்கு வேலைக்காரன். இப்படி நினைச்சு வழிபடணுமாம். இது வந்து தாஸ்யம். ( 8.தாஸ்யம்: இறைவனின் தாசனாக (அடிமையாக) இருந்து சேவை செய்தல் (அனுமான் , இலட்சுமணன்). ) 


(8) எட்டாவது சக்யம். சக்யம்னா, அதாவது, நான் இப்படித்தான் நினைச்சு வழிபடுறேன். நமக்கு எத்தனையோ பிரண்ட்ஸ் இருக்காங்க. அதோட சிவபெருமானையும் ஒரு பிரண்டா ( Friend / நண்பனாக )  நினைச்சுக்கணுமாம். அவர் எனக்கு ஒரு தோழன். நானும் அவருக்கு ஒரு தோழி. இப்படி நினைச்சு வழிபடுவது தான் சக்யம்.  ( சக்யம்: இறைவனோடு நட்புறவு கொள்ளுதல் (அர்ஜுனன், சுக்ரீவன்). 


( இவ்விடத்தில் அடியவர்கள் பலத்த கைதட்டல்கள் ) 


(9) ஒன்பதாவது ஆத்ம நிவேதனம். ஆத்ம நிவேதனம் அப்படின்னா, நம்மளுடைய ஆத்மாவையே இறைவனுக்கு அர்ப்பணம் செய்றது. அதாவது, சிவபெருமானே, நீ எல்லாத்தையும் பார்த்துக்கோ. நான் என்னத்துக்கு இருக்கேன்? நீ எல்லாத்தையும் பார்த்துக்கோ. அப்படின்னு நம்மளுடைய ஆத்மாவையே அர்ப்பணம் செய்றது. (9. ஆத்ம நிவேதனம்: தன்னையே முழுமையாக இறைவனிடம் ஒப்படைத்தல் (சரணாகதி) ) 


எங்க அம்மா இப்படித்தான். எங்க அம்மா நல்லா பாடுவாங்க. அவங்க வந்து கச்சேரில எல்லாம் பாடும்போது தொண்டை கட்டிடும். அப்போ சிவபெருமானை பத்தி சொல்லுவாங்க. 


சிவா, எனக்கு இன்னைக்கு தொண்டை கட்டிருக்கு. பரவாயில்லை. யாரு எனக்கு வந்து கெட்ட பேர் வந்தாலும், நீதான் வாங்கிக்கணும். நல்ல பேர் வந்தாலும், நீதான் வாங்கிக்கணும். அப்படின்னு சொல்லுவாங்க. அதே போல தான் நம்மளுடைய ஆத்மாவையே அவர்கிட்ட அர்ப்பணிக்கிறது தான் ஆத்ம நிவேதனம். 


இப்படி ஒன்பது வகைகள் இருக்கு பக்தியில். இப்போ இந்த தெப்பக்குளம் இருக்கு. நாலு படித்துறைகள் இருக்கு. அதுல எந்த படித்துறை வழியா இறங்கினாலும், தெப்பகுளத்து தண்ணில இறங்கிடலாம் இல்லையா? அதே போல தான், இந்த பக்தியும் ஒன்பது வகைகள் இருக்கு. அந்த ஒன்பது வகையில ஏதாவது ஒரு வகை நம்ம வந்து ஃபாலோ பண்ணாலும், கண்டிப்பா இறைவனை அடையலாம். இறைவன் நம்மளையே வந்து கூட்டி, அதாவது நம்மளையே ஆட்கொண்டுருவார் சிவபெருமான். இந்த மாதிரி ஒன்பது வகையில ஏதாவது ஒரு வகையில நீங்க ஃபாலோ பண்ணலாம். 


===========================

# அடியவர்களின் புரிதலுக்காக - இறைவனை அடைவதற்கான ஒன்பது வழிகளின் எளிமையான விளக்கங்கள்:-


1. ஸ்ரவணம்: இறைவனின் திருவிளையாடல்கள், கதைகள் மற்றும் புகழைக் காதுகளால் கேட்டல். (ஸ்ரீ ராம பக்த அனுமான்)

2. கீர்த்தனம்: பகவானின் புகழைப் பாடி மகிழ்தல்.(ஸ்ரீ ராம பக்த அனுமான்)

3. ஸ்மரணம்: எப்போதும் இறைவனையே நினைவில் கொள்ளுதல் (ஸ்ரீ ராம பக்த அனுமான், மீரா போன்றவர்கள்).

4. பாத சேவனம்: இறைவனின் திருவடிகளைச் சரணடைந்து தொண்டு செய்தல்.(ஸ்ரீ ராம பக்த அனுமான்)

5. அர்ச்சனம்: மலர்களால் இறைவனைப் பூஜித்து வழிபடுதல்.(ஸ்ரீ ராம பக்த அனுமான்)

6. வந்தனம்: இறைவனை வணங்கிப் பணிதல்.(ஸ்ரீ ராம பக்த அனுமான்)

7. தாஸ்யம்: இறைவனின் தாசனாக (அடிமையாக) இருந்து சேவை செய்தல் (ஸ்ரீ ராம பக்த அனுமான் , இலட்சுமணன்).

8. சக்யம்: இறைவனோடு நட்புறவு கொள்ளுதல் (ஸ்ரீ ராம பக்த அனுமான், அர்ஜுனன், சுக்ரீவன்).

9. ஆத்ம நிவேதனம்: தன்னையே முழுமையாக இறைவனிடம் ஒப்படைத்தல் (ஸ்ரீ ராம பக்த அனுமான், சரணாகதி). 

===========================


அதனால எல்லாரும் சிவபெருமானை மனசுல நினைச்சுக்கோங்க. ஒரு பாடல்.


உலகோருக்கு சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை பாடிய பாடல்:-  


நேரலை :- https://www.youtube.com/watch?v=NqRaI13qIDU&t=16257s


திருஞானசம்பந்தர் பெருமான் அருளிய பாடல்:- 



மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு

தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு

செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே 


……………..

……………..

……………..

……………..



( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 24/05/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …..)


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.


Thursday, June 25, 2026

சித்தர்கள் ஆட்சி - 642 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - 24/05/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 1

 இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.




அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 24/05/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 1


நாள், நேரம்  : 24/05/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 


முழு நிகழ்வின் நேரலை :-  https://youtu.be/NqRaI13qIDU?t=1 


இடம் : உலக நன்மைக்காக 10 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.


===========================

# இவ் பகுதி 1 வாக்கின் நேரலை :-   https://youtu.be/NqRaI13qIDU?t=12010 

===========================


===========================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 

===========================


ஆதி சிவசங்கரியின் பொற்  கமலத்தை பணிந்து, செப்புகின்றேன் அகத்தியன். 


அப்பனே அனைவருக்கும், அம்மையே அனைவருக்கும், எம்முடைய ஆசிகள். கவலைகள் வேண்டாம். 


ஏன், எதற்கு, இத் தேசத்தை எவ்வாறெல்லாம் நடைபெற, எதை என்று புரியாமலும் மனிதன் இருக்கின்றான். வாழ்வது எது என்று அறிய, வாழ்வோம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றான். 


ஆனாலும் அழிவு, மிகப்பெரிய அழிவுகள் காத்துக் கொண்டிருக்கின்றது. 


ஆனால் மனிதனுக்கு அவை தெரிவதே இல்லை. ஆனாலும் அதை எப்படி காப்பாற்றுவது? 


ஆனால் மனிதன் சொல்வான். ஆனால் அதை எப்படி காப்பாற்றுவது என்பதெல்லாம் தெரியாமல் போய்விடுகின்றது. 


அதனால்தான் உங்களை நிச்சயம் தன்னில் கூட அழைத்தேன். 


எப்படி எல்லாம் நிச்சயம், எவ்வாறாக எல்லாம், எதை பொருட்படுத்த முடியாமல் போகின்றது. எதை எதற்குள் வைக்க, எதை என்று புரிந்தும் கூட மனிதன் செய்வதானால், நிச்சயம் உலகத்தின், அதாவது உலக அழிவிலிருந்து காக்கலாம். 


===========================

# பேரிடர் முன்னெச்சரிக்கை……

===========================

# இறைவனால் நுண்ணுயிர் மூலம் எவ் மருத்துவரால் தடுக்க முடியாத நோய் வர உள்ளது.

===========================


நிச்சயம், அதாவது மனிதன் எதை ஏது என்று செய்ய, மனிதன் எதற்கும், அதாவது அஞ்சுவதும், பின் ஏது என்று, அதாவது மனிதனுக்கு பல வகைகளிலும் கூட நோய்கள் வரப்போகின்றது. 


ஆனால் அதை யார் தடுப்பார்? சொல்லுங்கள். 


எவ் மருத்துவராலும் முடியாது. 


ஏனென்றால் ஒரு தடவை இவை வந்துவிட்டால், ஒன்று பின் ஆள் நிச்சயம் தன்னில் கூட இறந்துவிடலாம். 


ஆனாலும் அவை இதன் உள்ளுக்குள்ளே இருந்து, இருந்து மீண்டும் அறிந்தும் கூட, எதை என்று தெரியாமல் அப்படியே 10 வருடங்கள், 15 வருடங்கள் இருக்கும். 


ஆனாலும் அறிந்தும் கூட, அதை அப்படியே நிச்சயம் தன்னில் கூட உங்களை சார்ந்தவர்கள், உறவினர்களுக்கு நீங்களும் ஏற்றிவிட்டு செல்வீர்கள். 


இப்படி இருக்க எப்படி நலமாகும்? அதனால்தான் பின் அதிவிரைவிலேயே நிச்சயம் அவ் நுண்ணுயிராயினது வரத்தான் போகின்றது, தாக்கத்தான் போகின்றது. அப்பொழுது பின் யாராலும் முடியாது. 


அதனால்தான் முன்னெச்சரிக்கையாகவே அனைவருக்கும் உண்மைகளை தெரிவித்துக் கொள்ள வைத்து, அதன் மூலம் உங்களை நீங்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள். ஏனென்றால் இவ் அழிவுகளும் கூட இறைவனே தான் தருவது. எதனால் இறைவன் தருவதை எவரால் நிறுத்த முடியும்? நீங்களே சொல்லுங்கள். 



சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, புரியுதுங்களா? இதுல என்ன சொல்றாங்கன்னு.


அடியவர் :- ஒரு நுண்ணுயிர் கிருமி, வைரஸ் கிருமி வரப்போகுது அப்படின்றாங்க. அது வந்தா ஆளுக்கு உடனடியா மரணம். அப்படி வந்தாலும் போகாதுப்பா.


சுவடி ஓதும் மைந்தன் :- இது எப்படி சொல்றாருன்னா, மனிதன் வந்து வாழ்றேன்னு நினைச்சுட்டு இருக்காங்க. வந்து நம்ம வாழ்றோம்னு எல்லாரும் நல்லா இருப்போம்னு நினைச்சுட்டு இருக்காங்க. ஆனால் அது முடியாதப்பா. ஆனா அழிவுகள் என்பது மனுஷனுக்கு எல்லாருக்கும் தெரியும்ன்றார். அழிவு வரப்போகுதுன்னு சொல்லலாம். எல்லாரும் சொல்லலாங்க ஐயா, அழிவு வரப்போகுதுன்னு. ஆனால் அதை எப்படி தடுப்பது என்பது யாரும் தெரியாதப்பா மனிதனுக்கு அதுதான் மனிதனோட பொய் வேஷம். 


அதுதான் மனிதனுக்கு வந்து உண்மைகள் தெரியாதுப்பா. அதனால இன்னும் சில காலம், அந்த ஒரு அந்த வைரஸ் வந்துச்சுன்னா, உள்ளுக்குள் போயிடுச்சுன்னா யாராலும் காப்பாத்த முடியாதுன்றார். ஆனா அந்த வைரஸ் எப்படியா இருக்கும் தெரியுங்களா? மருந்தோடு கண்ட்ரோல் பண்ணலாம். ஆனாலும் என்ன ஆகும்? வந்து அப்படியே தான் இருக்கும். 10 வருஷம், 15 வருஷம் அப்படியே இருக்கும். அப்ப என்ன ஆகும்னா, அடுத்து உங்க உறவினர்கள், சொந்தக்காரர்கள் எல்லாம் நீங்க நினைக்கிறீங்க இல்ல? அது அப்படியே பரவுமாம். அப்ப பரவிட்டு நீங்க எல்லாம் நினைச்சிருக்கிறீங்க. வந்து எனக்கு அண்ணன் இருக்கிறான், அக்கா இருக்கிறான், அப்படி இருக்காங்க. இவ்வளவு சொந்தக்காரங்க, பெரியம்மா, பெரியப்பா என்ன ஆகும்? 


பரவும் பொழுது அப்ப யார் கெடுக்கிறது? எல்லாரையும் மனிதன் தான் கெடுக்கிறான். 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இதை யாராலும்????? 


அடியவர் :- தடுக்க முடியாது. 


சுவடி ஓதும் மைந்தன் :- தடுக்க முடியாது. ஏன்னா யார் கொடுக்கிறது? இதை?


அடியவர் :- இறைவன் கொடுக்கிறது. 


சுவடி ஓதும் மைந்தன் :- கடவுள் கொடுக்கிறது. 


சுவடி ஓதும் மைந்தன் :- கடவுள் கொடுக்கிறத யாராவது தடுக்க முடியுமா? 


அடியவர் :- நிச்சயம் தடுக்க முடியாது. 


சுவடி ஓதும் மைந்தன் :- நிச்சயம் முடியாது. அதனால நீங்கள் சில விஷயங்கள் தெரிஞ்சுக்கோங்கப்பா. முதல்ல உங்களை நீங்க காப்பாத்திக்கோங்கன்றார். வந்து ஐயா, புரியுதுங்களா? அதனால வந்து கலியுகம் ஐயா இது.  


சுவடி ஓதும் மைந்தன் :-  உலகத்தை மனுஷனை காப்பாத்த முடியல. அப்ப என்ன பண்ணுவார்? இறைவன் வந்து கடைசில யார் வரணும்? கிளைமாக்ஸ்ல இறைவன் தான் வரணும். இறைவன் தான் வரணுங்க. ஐயா, எல்லை மீறி போயிட்டு இருக்குங்க. ஐயா, உலகத்துல 


சுவடி ஓதும் மைந்தன் :-  ( சில நல் விளக்கங்கள் அளித்தார்கள்  ) 


===========================

# மூளை சுறுசுறுப்பு ஆடைய ஒரு பாடல்…

===========================


குருநாதர்:- அப்பனே, அனைத்தும் அறிந்து வைத்திருக்கின்றேன். அப்பனே, அதனால் அப்பனே, முதலில் அப்பனே, மனிதனுக்கு அப்பனே, மூளை சுறுசுறுப்பு ஆகட்டும். அப்பனே, இதனால் சுறுசுறுப்புக்காக, அப்பனே, நிச்சயம் ஒரு பாடலை பாடுக. பின்பு ஒப்படைக்கின்றேன். 


பாடகர் :- ( மருதமலை மாமணியே முருகையா பாடல் பாடினார்கள்  )


நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=12684 


===========================

ஆதி ஈசனார் வேடம் அணிந்த சிவ குழந்தை, அன்புடான்  அகத்திய மாமுனிவரால்  அன்னையே , தாயே என்று அழைக்கப்பட்ட குழந்தையின் வருகை…. 

===========================


ஆதி ஈசனார் வேடம் அணிந்த சிவ குழந்தையின்  பாடல் :-  ( சுவடி ஓதும் மைந்தன் பாடல் பாட அழைத்தார்கள். அதன் பின்னர் , தனது மழலை,  வெண்கலக் குரலில் சம்போ சிவ சம்போ என்ற பாடல் அருமையாக பாட ஆரம்பித்தார்கள் ) 


( அடியவர்கள் அனைவரும் , அவசியம் இவ் மகிமை புகழ் குழந்தையின் பாடலை நேரலையில் அவசியம் ஒன்று விடாமல் காண்க. )


நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=13073 


( பாடல் பாடி முடித்தவுடன் )


===========================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 

===========================


குருநாதர்:- அப்பனே, புதுமையான விஷயங்கள் எது என்று புரிய, அப்பனே, அனைவருக்கும் புரிய வைக்கின்றேன். நல்விதமாக இவ்வாறாக, அப்பனே, புரிந்து செயல்பட்டால், வினைகளும் தீரும். எது என்றறிய நிச்சயம் தன்னில் கூட,  குழந்தைக்கும் எம்முடைய ஆசிகள். வருங்காலத்தில் உயர் ஸ்தலத்தை அடையச் செய்வேன். 


சுவடி ஓதும் மைந்தன் :- ( சிவ குழந்தையை பார்த்து,  அம்மா!!!  )  உங்களுக்கு ஆசிங்களம். வருங்காலத்தில் இன்னும் இந்த அம்மாவை, இந்த குழந்தையை வந்து என்ன பண்ணுவாரு? உயர்ந்த இடத்தை அடைய வைப்பார் சித்தர்கள்.


===========================

# சிவ குழந்தைக்கு , சுவடி ஓதும் மைந்தனுக்கு  மரியாதை செய்வித்தல்

===========================


அங்குள்ள ஒரு சிவனடியவர் மேடையின் அருகில் வந்து  சிவ குழந்தைக்கு , சுவடி ஓதும் மைந்தனுக்கு  மரியாதை செய்வித்து ஆசிகள்:- 


நேரலை -  https://youtu.be/NqRaI13qIDU?t=13480


அடியவர்கள் :- ( பலத்த கைதட்டல்கள்..அதனை தொடர்ந்து வாக்குகள்   )


===========================

# ஈசன் உடுக்கை  எடுத்து,  இவ் உலகை உலுக்கப் போகின்றார்…….

===========================


நேரலை - https://youtu.be/NqRaI13qIDU?t=13505


குருநாதர்:-  குழந்தாய், அடுத்த பாடலையும் அறிந்தும் கூட அனைவருக்கும் நலம் விரும்பி, ஏனென்றால் ஈசன் உலகை—அதாவது ஒரு உடுக்கை எடுத்து உலுக்கப் போகின்றான். இதனால் அனைவரும் கவலைக்குள்ளாகி விடுவார்கள். இதனால் அனைவரும் பின் நன்றாக. அதனால் ஈசன் நினைத்து அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதை எல்லாம், நீயே உன் மனதில் என்ன படுகின்றதோ அதைச் செய். 



சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை பாடிய பாடல்:-   

(         ஏது பிழை செய்தாலும், ஏழையேனுக்கு இரங்கித்

தீது புரியாத தெய்வமே – நீதி

நீதி தழைக்கின்ற திருபோரூர் தனிமுதலே – நாயேன்

பிழைக்கின்ற வாறுநீ பேசு….. முருகா… முருகா…


நீயல்லால் தெய்வமில்லை!

எனது நெஞ்சே நீ வாழும் எல்லை!

முருகா நீயல்லால் தெய்வமில்லை!  )

 

நேரலை - https://youtu.be/NqRaI13qIDU?t=13619 


( பாடல் பாடி முடித்த பின்னர்..மீண்டும் குருநாதர் வாக்குகள் ஆரம்பமானது…. ) 


===========================

# தாயே….உனக்கு என்ன வேண்டும்? கூறு?

===========================


குருநாதர்:-  அறிந்தும் எதை என்று புரிய, வரும் காலத்தில் உண்மையானவை எல்லாம் அறிந்தும். இதனால் பிறக்கும் குழந்தைகளுக்கு பல நோய்கள், பலவற்றை நிச்சயம் தன்னில் இழந்தவைகள் என்றெல்லாம் நிச்சயம் வரும் அப்பா. இதனால் நிச்சயம் தன்னில் கூட அனைவரையும் ஈசனிடம்…. (நன்றாக இருக்க வேண்டினாய்). 


===========================

# இப்போது ஒரு அம்மை அடியவர் சிவ குழந்தைக்கு மல்லிகைப்பூ மலை அணிவித்தார்கள் ……அடியவர்கள் கைதட்டல்கள் 

===========================


குருநாதர்:-  அதனால் தாயே, எதை என்று புரிய, இதை என்று அறிய, நிச்சயம் உனக்கு என்ன வேண்டும்? கூறு?. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அகத்தியர் உனக்கு என்ன வேண்டும்னு கேட்கிறார். நீங்க நல்லா யோசித்து உடனே சொல்லுங்க. 


சிவ குழந்தை :- ( என்ன கேட்பது என்று யோசனை… )


சிவ குழந்தையின் தந்தை :- ( சில யோசனைகளை உரைக்க முற்பட்டார்கள் ) 


சுவடி ஓதும் மைந்தன் :-  நீங்க சொல்லிக்க கூடாதுங்க ஐயா. அவங்களுக்கே, பாப்பாக்கே, குழந்தைக்கு என்ன வேணும்னு கேட்கலாம். 


===========================

# அவ் குழந்தை தாயின்,  மிக உயர்ந்த, சித்தர்கள் விரும்பும் குணம் 

===========================


https://youtu.be/NqRaI13qIDU?t=14063


சிவ குழந்தை :- “எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்” ( என்று சுவடி ஓதும் மைந்தனிடம் தெரிவித்தார்கள்)


மேடையில் உள்ள அடியவர்கள் :- ( மகிழ்ச்சியில் கைதட்டல்கள்…. ) 


சுவடி ஓதும் மைந்தன் :- பாத்தீங்களா, இதுதான் அகத்தியரோட வேலை. எல்லாரும் நல்லா இருக்கணும். 


கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( மகிழ்ச்சியில் கைதட்டல்கள்…. ) 



சுவடி ஓதும் மைந்தன் :- ( சில விளக்க உரைகள் ) 


குருநாதர்:-  குழந்தாய், பின் இன்னும் உனக்கு தருகின்றேன். 


சுவடி ஓதும் மைந்தன் :- குழந்தைக்கு வந்து இன்னும் உனக்கு நான் தரேன்றார். அகத்தியர் வந்து அம்மா, உங்களுக்கு இன்னும் நிறைய மென்மேலும் படிப்பாலும் சரி, என்னாலும் சரி. வந்து உங்களுக்கு வந்து நல்லா வந்து இன்னும் மென்மேலும் உயர்வுகள் இன்னும் நிறைய பெரிய ஆயிடுவாங்க ஐயா. 


சிவ குழந்தைக்கு அன்பளிப்பு , ஆசீர்வாதங்கள் :- ( ஒரு அடியவர் மேடையின் அருகில் வந்து அன்பளிப்பு, ஆசி.  ) 


சுவடி ஓதும் மைந்தன் :- பெரிய சந்தோஷம் ஐயா. ரைட், சந்தோஷம் ஐயா. 


===========================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 

===========================


குருநாதர்:-  தாயே, அனைவரும் நன்றாக இருக்க. மீண்டும் ஒரு… பின் உன்னால் அறிந்தும்… உன் ஆரோக்கியத்திற்காக இன்னும் உனக்கு அனைத்து பரிசுகளையும் நான் பெற்று தருகின்றேன். கவலைகள் வேண்டாம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  இன்னும் வந்து உங்களுக்கு பரிசுகளையும் பட்டங்களையும் நான் வாங்கி தரேன்றார் அகத்தியர். அதேபோல, மத்தவங்களுக்காக இன்னும் ஒரு பாடலை பாடுன்றார். எல்லாரும் நல்லா இருக்கணும். வேண்டி இறைவனிடத்தில இன்னும் பாடு. நான் உனக்கு பரிசுகளும் பட்டங்களையும் அங்கங்க நான் பெற்று தரேன்றார். பாடுங்கமா. 


சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை பாடிய பாடல்:-   ( தயியற் சிறந்த கோயிலும் இல்லை ..தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை   )


===========================

# மெய்மறந்து, அன்பு உணர்ச்சிகள் பொங்க …. இவ் பாடலை… அடியவர்கள் அனைவரும் அங்கு மிகவும் ரசித்து, ரசித்து  கேட்டனர். அவசியம் இவ் குழந்தையின் பாடலை அவசியம்  கேளுங்கள் நேரலையில்……..

===========================


பாடல் நேரலை :-  https://youtu.be/NqRaI13qIDU?t=14294 


( மீண்டும் வாக்குகள் ஆரம்பமானது )


===========================

# குழந்தைகள் இறைவனிடத்தில் உடனடியாக கேட்டால் அனைத்தும் கிட்டும்.

===========================


குருநாதர்:-  அழகாகவே குழந்தைகள் — இறைவனிடத்தில் உடனடியாக கேட்டால் அனைத்தும் கிட்டும். இதனாலே வருங்காலத்தில் கூட குழந்தைகள் நோயுடனே பிறக்கும். அதாவது, அறிந்தும் சில சில விஷயங்கள் குழந்தைகள் எதை என்று தெரியாமலே சிறுவயதிலே பாதிக்க, எது என்று புரியாமலும். ஈசனின் அருளால் தான் அனைத்தும் நடக்க வேண்டும்; இதனால்தான் ஒவ்வொன்றாக எடுத்துரைக்கின்றேன். குழந்தாய், உனக்கு என்ன வேண்டும்? வரத்தை உடனே கொடுக்கின்றேன். 



சுவடி ஓதும் மைந்தன் :-  அம்மா, நல்ல அகத்தியர் என்ன சொல்றார் என்றால், "உனக்கு என்ன வரம் வேணும்?" என்று கேட்டுக்கொண்டார் அகத்தியர். நல்லா பார்த்து கேளுங்க. அடுத்து, "உங்களுக்கு என்ன வரம்?" உடனே நான் கொடுக்கிறேன் என்றார். 


சுவடி ஓதும் மைந்தன் :- உங்களுக்கு என்ன வேணும்னா கொடுக்கிறார் அகத்தியர். கேளுங்க. 


சிவ குழந்தை :- ( அவர் எது தந்தாலும் சரிதான்) 


சுவடி ஓதும் மைந்தன் :-  பார்த்தீங்களா ( என்ன சொன்னாங்க?)  அவர் எது தந்தாலும் சரிதான். இது யாருக்குங்கய்யா வந்து மனம் வரும்? ஐயா, 


அடியவர்கள் :- கைதட்டல்கள் ……


சுவடி ஓதும் மைந்தன் :-  இதெல்லாம் அகத்தியர். இன்னைக்கு கூட வந்து இதெல்லாம் அகத்தியர் செய்த இதுதான். பார்த்தீங்களா? யாராவது இது மாதிரி கேள்வி கேட்பாங்க. (............சில விளக்கங்கள் .................) இந்த மனசு தான் விரும்புவார்=  அகத்தியர்.  வேற எந்த மனசும் விரும்ப மாட்டார். 


===========================

# ஞானத்தின் மூலம் இவ்வுலகத்தை உன்னை பார்க்க நிச்சயம் வைப்பேன். 

===========================


குருநாதர்:-  குழந்தாய், அழகாக சொல்கின்றேன். இன்னும் ஞானத்தை கொடுக்கின்றேன். ஞானத்தின் மூலம் இவ்வுலகத்தை உன்னை பார்க்க நிச்சயம் வைப்பேன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஞானத்தை கொடுக்கிறார் உங்களுக்கு. அறிவு கொடுக்கிறார். அகத்தியர் பணம் கொடுக்கிறேன்னு சொல்லல. உங்களுக்கு நிறைய படிப்பு கொடுக்கிறேன்னு சொல்லல. என்ன கொடுக்கிறார்? ஞானத்தை கொடுக்கிறேன். அந்த ஞானத்தின் மூலம் இந்த உலகத்தை உன்னை திருப்பி பார்க்க செய்றேன்றார்.  ரெண்டு கேள்வி கேட்டார். சரி, அடுத்து பார்ப்போம். 


குருநாதர்:-  அழகாக, குழந்தாய், கடைசி ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்கின்றேன். என்ன வேண்டும்? 


சுவடி ஓதும் மைந்தன் :-  கடைசி ஒரு சந்தர்ப்பம் உனக்கு என்ன வேண்டும்? இன்னொரு சான்ஸ். மைக்ல சொல்லுங்க. ஞானத்தை கொடுக்கிறேன்னு சொல்லிட்டாரு. 



சிவ குழந்தை :- ( ஞானம் போதும் எனக்கு) 


சுவடி ஓதும் மைந்தன் :-  அதுலயே போதும் எனக்கு என்று சொல்லிட்டாங்க. சரி. ஓகே, ஞானத்தை கொடுக்கிறேன்னு சொல்லிட்டு அதுல இருந்தே அவங்க பிழைச்சுப்பாங்க. பெரிய ஆளா வந்துருவாங்க. ஓகேங்களா? 


===========================

# தாயே, நீ வேண்டினால் ஈசன் நிச்சயம் இறங்குவான்.

# தாயே,  நீ வேண்டினால் நிச்சயம் ஆயிரம் பேருக்கு சமம். 

===========================


குருநாதர்:-  தாயே, அறிந்தும் அதாவது நீ வேண்டினால் ஈசன் நிச்சயம் இறங்குவான். அதாவது நீ வேண்டினால் நிச்சயம் ஆயிரம் பேருக்கு சமம். ஏனென்றால் அதுபோல் ஈசன் பலமுறை நீ பாடி இருக்கின்றாய். ஆலயத்தில் ஈசன் தாலாட்டு அறிந்தும் கூட பின் அழகாக உன்னை ஆசீர்வதித்திருக்கின்றான். அதுபோல் நிச்சயம் இங்கே நீ பாடு. ஈசன் வரட்டும். அனைவருக்கும் ஆசீர்வாதங்கள் தரட்டும். 



சுவடி ஓதும் மைந்தன் :- இந்த குழந்தை நிறைய ஆலயங்கள்ல பாடி இருக்காங்களாம். அப்ப ஈசன் என்ன பண்ணிருக்காராம்? பார்த்திருக்காராம். வந்து பார்த்திருக்காரு. அதனால நீ இன்னொரு முறை பாடு. ஈசன் வந்து எல்லாரும் அந்த இறங்கணும். ஈசன் இறங்கினா எல்லாருக்கும் ஆசீர்வதிக்கணும். எல்லாம் புத்திகள் மாறட்டும்ன்றார். வந்து பாடுங்க. சிவபெருமானை நினைச்சு பாடுங்க. உங்களுக்கு என்ன தோணுதோ, உங்களுக்கு என்ன தோணுதோ, பாடுங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, நீங்க சொல்லிக் கொடுக்காதீங்க. அந்த அம்மாக்கு என்ன தோணுதோ, பாட சொல்றார். 


குருநாதர்:- தாயே, அதாவது குழந்தாய், உனக்கு என்ன தோன்றுகின்றதோ, அதை பாடு. எவ் ரூபத்திலும் எதை என்று ஈசன் தான் வருவான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன சொல்றாருன்னா, உனக்கு என்ன தோணுதோ, எந்த கடவுளை பத்தி வேண்டுமானாலும் பாடுங்க. ஆனா கடைசில ஈசன் தான் வரப்போறார். அதுதான் சொல்றாரு. அதனால எதை நினைச்சாலும் பாடுன்னு சொல்றாரு. ஆனா மக்களுக்கு நல்ல எண்ணங்கள் வரட்டும், நல்ல புத்திகள் வரட்டும், நல்ல ஆசீர்வாதங்கள் கிடைக்கட்டும்னு சொல்றாரு. நீங்க பாடுனீங்கன்னா, ஈசன் என்ன பண்ணுவாராம்? ஆசீர்வாதம் கொடுத்துருவாராம். நிறைய இடத்துல நீங்க பாடி இருக்கீங்க. வந்து ஈசன் உங்களை வந்து ஆசீர்வாதம் பண்ணினார். அதனால பாடுங்க. நீங்க வந்து நல்ல மக்கள் நன்றாக இருக்கணும். உலகத்துல நிறைய தவறுகள் நடந்துட்டு இருக்குது. அதெல்லாம் காக்க இறைவனால் மட்டும்தான் முடியும். 


எத்தனையோ ( மனிதர்கள் ) , எத்தனையோ ( மனிதர்கள் ) இருந்தாலும், அவனெல்லாம் காக்க முடியாது. யாரால? நம்ம அப்பன், இறைவனால, நம்ம அப்பனால தான் காப்பாத்த முடியும். 


அதனால எல்லாரும் நல்லா இருக்கணும்னு சொல்லிட்டு, நன்றாக வேண்டிக்கொண்டு, இறைவன் அண்ணாமலையை, உண்ணாமலையை நல்லா வேண்டிக்கிட்டு ( பாடுங்க )...



சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை பாடிய பாடல்:-   (  செல்லாத்தா ..செல்ல மாரியாத்தா …. )


நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=14972 


( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 24/05/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …..)


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.