“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Friday, June 12, 2026

சித்தர்கள் ஆட்சி - 636 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - 19.04.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 8

 இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.




அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 19.04.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 8 


நாள் :- 19/04/2026 (ஞாயிற்றுக்கிழமை) 

நேரம் :- காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 

இடம் : உலக நன்மைக்காக 09 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.


இவ் பகுதியின்  நேரலை :- 

https://www.youtube.com/watch?v=C5OQ5pL4GnY&t=20616s


===========================

# அன்புடன் தேரையர் சித்தர் வாக்கு - முந்தைய பகுதியின் தொடர்ச்சி 

===========================


தேரையர் சித்தர் :-   அறிந்தும் ஏது என்று அறிய அப்பா “இ” என்ற எவை என்று அனைத்தும். 


( “இ” என்று தொடங்கும் அனைத்து வார்த்தைகளையும் அங்கு எழுத சொன்னார்கள். அதன்படியே அடியவர்கள் எழுதினார்கள்…. )

 

இன்பம் 

இறைவன் 

இடம் 

இசை 

இயலாமை 

இயலாமை 

இயல் 

இலக்கணம் 

இரக்கம் 

இயற்கை 

இயக்கம் 

இளநீர் 

இதயம் 

இறப்பு 

இன்பம்

இயல்பு 

இலக்கணம் 

இந்திரன் 

இறுதி 

இயல்பு 

இருமாப்பு 

இகழ்ச்சி 

இசை 

இருதயம் 

இணைப்பு 

இனிப்பு 

இயலாமை 

இச்சை 

இஞ்சி 

இருமாப்பு 

இரும்பு 

இல்லம் 

இங்கிதம் 

இன்னல் 

இராவணன் 

இன்மை 

இலவசம் 

இல்லாமை 

இலந்தை பழம் 

இமயமலை

இல்லான் 

இந்திரலோகம்

இதம்

இன்னிசை

இறைவி 

இடும்பன் 

இடுக்கன் 

இருட்டு 

இடையூறு

இமை 

இளமை

இருவர் 

இடி 

இல்லை 

இருவர் 

இளைஞன் 

இடும்பன் 

இரணியன்

இடியாப்பம் 

இட்லி

இறையாண்மை 

இருமுடி 

இருப்பிடம்

இந்தியா 

இடைக்காடர் 

இயற்பியல்

இளநீர்

இரட்டைக்கிழவி 

இலக்கு 


இவ்விடத்தின் நேரலை :- https://youtu.be/C5OQ5pL4GnY?t=20943


===========================

# முதலில் “அ” என்ற மேஷ ராசியை,  மற்றும் “ஆ” என்ற ரிஷப ராசியை அதன் வார்த்தைகளின் முழு அர்த்தத்தை நன்கு புரிந்து கொண்டால் , அடுத்து வரும் “இ” என்ற மிதுன ராசியில் உள்ள அனைத்தையும் இறைவன் கொடுப்பார். 

===========================


தேரையர் சித்தர் :-  எதை எவை என்று புரிய அதனால் முதலிலே இவை இரண்டும் கடந்தால், இவை அனைத்திலும் இறைவன் தான் கொடுப்பான் என்று எண்ணுக.


சுவடி ஓதும் மைந்தன், அடியவர்கள்  அளித்த விளக்கங்கள் அதனை  பின் வரும் நேரலை பகுதியில் அவசியம் காண்க :- 

https://youtu.be/C5OQ5pL4GnY?t=20956 


===========================

# எப்போது ஒருவர் ஜாதகத்தில் “புதன்” செயல்படும்?

===========================


இவ்விடத்தின் நேரலை :-  https://youtu.be/C5OQ5pL4GnY?t=21201 


தேரையர் சித்தர் :-  ஏது என்று புரிய இப்பொழுதுதான் புதன் செயல்படுகின்றான் இங்கு. அதாவது அறிவு செயல்படுகிறது. இவையெல்லாம் இறைவன் தான் கொடுக்கின்றான் என்று எண்ணினால் புதன் என்வன் வருவான்.


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப புதனுக்கு அதிபதி என்னங்க ஐயா? அறிவு அறிவு. அறிவு எப்ப செயல்படுதுன்னா… புதன். இதெல்லாம் இறைவன் தான் கொடுக்கிறார். துன்பமும் இறைவன் கொடுக்கிறார். இன்பமும் அவர் கொடுக்கிறார். இடியாப்பம் அவர் தான் கொடுக்கிறார். மூச்சும் அவர் கொடுக்கிறார். இட்லியும் அவர் தான் கொடுக்கிறார். இதெல்லாம் இறைவன் கொடுத்தால் இதெல்லாம் இன்பமும் அவர் தான் கொடுக்கிறார். துன்பமும் தான் அவர் தான் கொடுக்கிறார். இதெல்லாம் நீ உணர்ந்தால் அறிவு வளரும். அப்பதான் அறிவு வேலை செய்யும். அப்பதான் பெருமாள் வருவாரு. பரவாயில்லைடா. இவனுக்கு துட்டு கொடுக்கலாம்டா. அப்ப என்ன பண்ணுவாரு? துட்டு கொடுப்பாரு. புத்தி இருக்குதுடா. இவன் துட்டு கொடுத்தாலும் என்ன பண்ணுவீங்க நீங்க? நாலு பேர் தானம் நாலு பேர் தானம் பண்ணுவீங்க. அப்ப இதெல்லாம் இல்லாம கொடுத்தா என்ன பண்ணுவீங்க? நீங்க மட்டும் ஒழிச்சு வச்சுக்கோங்க எனக்கு மட்டும்தான் சொந்தம்னு சொல்லிட்டு ஐயா புரியுதுங்களா? 


தேரையர் சித்தர் :-  அப்புறம் இவை தன் உணராமல் எப்படி மனிதன் பின் ஜாதகங்கள், பரிகாரங்கள் செய்தாலும் ஒன்றும் ஆகாது அப்பா. நஷ்டம் தான். வீண் தான். 


சுவடி ஓதும் மைந்தன் :- இதெல்லாம் தெரிஞ்சுக்காம….?


அடியவர் :- நீங்க  என்ன பரிகாரம், என்ன எங்க போய், என்ன செஞ்சாலும் வேஸ்ட்.


தேரையர் சித்தர் :-  பின் அப்பின் இறைவன் என்ன செய்தான் என்று கேள்விகள் கேட்பான் மூடன் 


சுவடி ஓதும் மைந்தன் :- இறைவன் என்னடா செஞ்சாருன்னு சொல்லிட்டு இதெல்லாம் உணராம என்ன பண்ணுவான்? உணராது என்ன பண்ணுவான்? கேள்வி கேட்பான் மூடன். 


சுவடி ஓதும் மைந்தன் விளக்கங்கள்  :-  

https://youtu.be/C5OQ5pL4GnY?t=21283


தேரையர் சித்தர் :-  இதைத்தன் இவ்வாறு உணராதவன் பின் நிச்சயம் பின் அதாவது பணத்திற்கே கஷ்டப்படுவான், அறிந்து கூட உணராதவன். 


சுவடி ஓதும் மைந்தன் :- இதெல்லாம் உணராதவங்க வந்து என்ன பண்ணுவாங்களாம் வந்து, பண கஷ்டம் இருந்துகிட்டே இருக்கும். 


தேரையர் சித்தர் :- ஆனால் மனிதனும் இறைவனை குறை கூறுவான். இறைவனை பின் வணங்கினாலும் பணம் கொடுக்கவில்லை என்று. எனக்கு கஷ்டம் என்று. எதை என்று புரிய ஆனாலும் பின் வேலை செய்தால்தான் பின் அறிந்தும் கூட பின் அதாவது பின் காசுகள் தெரிகின்றதா? அதேபோல்தான் அனைத்தும் தெரிந்து கொண்டால்தான் காசுகள். எதை என்று புரிய, புரியாமல் இருந்தால் இறைவன் கூட உங்களுக்கு கூலி கொடுக்க மாட்டான், சொல்லிவிட்டேன். 


சுவடி ஓதும் மைந்தன் :- வேலை பார்த்தாதான் கூலி. இந்த விஷயங்களை அறிவால அறிந்து கொண்டாதான் இறைவன் வந்து உனக்கு கொடுப்பார். இல்லைன்னா என்ன பண்ணுவாரு? 


அடியவர் :- இல்லைன்னா அவ்வளவுதான்… இவளெல்லாம் வந்து கொடுக்க மாட்டாரு… பிச்சைக்காரனா இருக்க வேண்டியதுதான் 


தேரையர் சித்தர் :-  அறிந்தும் அப்பா இவை மூன்றும் இணை. 


சுவடி ஓதும் மைந்தன் :-  “ஆ”,  “ஆ”,  “இ”  மூன்றும் இணை.  


அடியவர் :- மந்திரம் இல்ல. அந்த வெறும் எழுத்தை மட்டும் எழுத வேண்டும்.


அடியவர் அவ்வாறே எழுதினார்:-  ஆ ஆ இ”


தேரையர் சித்தர் :-  இப்பொழுது கூறுகின்றேன். இவை மூன்றிற்கும் ஒரே ஒரு ஏது என்று அறிய, சொல்லுங்கள் சரியானவை. அனைவரும் சொல்லாதீர்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :-  யாரும் சொல்லக்கூடாது. ஒரு ரெண்டு மூணு சான்ஸ் தான் இதுக்கு. அவ்வளவுதான். ஐயா இதுக்கு என்ன  அர்த்தம்?


அடியவர்கள் :- ( நீண்ட அமைதி………. )  


தேரையர் சித்தர் :-  அகத்தில் இருப்பவன், ஆண்டவன் இறைவன். அனைத்தும் ஒன்றுதான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அகம். உள்ள யார் இருக்கிறார்? இறைவன் அகம் ஆண்டவன் என்றாலும் ஒன்னுதான். இறைவன் என்றாலும் ஒன்னுதான். அகத்தில் யார் வச்சுக்கணும்? அகத்தில் யார் இருக்கார்? இறைவன் இருக்கின்றார். 


அடியவர் :- அன்பு இறைவன். 


===========================

# எப்போது ஒருவர் மனதில் “இறைவன்” வருவார்?

===========================


தேரையர் சித்தர் :-  இவை இதன்படி பின் பயப்பட்டு மனசாட்சிக்கு ஏது என்று அறிய, நிச்சயம் அறிந்தும் பொய் பேசாமை,  பொறாமை குணம் இல்லாமல் வாழ்ந்தால், இறைவன் உன் மனதில்.


( மனசாட்சிக்கு பயந்து  வாழ , மிக்க நன்மை உண்டாகும் ) 


சுவடி ஓதும் மைந்தன் விளக்கங்கள்:- 

https://youtu.be/C5OQ5pL4GnY?t=21467


தேரையர் சித்தர் :-  அறிந்தும் அனைத்தும் இறைவன் கொடுப்பவனே ஏது என்று புரிய. இப்பொழுதுதான் பின் ஏது என்று அறிய, இவ்வளவு பின் இப்படி சொல்வதற்கே 50 வருடங்கள் ஆகிவிடுகின்றது. 


சுவடி ஓதும் மைந்தன்:-  இந்த மூணு ராசி கிடைக்கவே எவ்வளவு ஆயிடுது?


அடியவர் :-  50 வயசு 


சுவடி ஓதும் மைந்தன்:- 50 வயசு ஆயிடுது தான். எல்லாமே இறைவனால் தானே நடக்குதுன்னு சொல்லிட்டு. ஏன்னா எத்தனை வயசுல சொல்றாங்க வந்து, 50 வயசுல தான் புரியுதுன்றாரு. 


அடியவர் :-  இங்க புரியுது. இறைவன் சக்தியினாலதான் எல்லாம் நடக்குது அப்படின்றதை அறிவு உணர்வதற்கு 50 வருடங்கள். 


சுவடி ஓதும் மைந்தன்:-  50 வருடங்கள் ஆகுதாம். இதெல்லாம் இன்பமும் அவர் தான் கொடுத்தாரு. துன்பம் தான் அவரும் கொடுத்தாரு. எல்லா இலக்கியமும் அவர் தான். இயற்கையும் அவர் தான். எல்லாம் உணர்ந்து கொள்ள, இது எல்லாமே இது அவர் தான்டா. சுக்கிரன் அது எல்லாமே உணர்ந்து கொள்ள நோய் எல்லாமே யார் கொடுத்தா? இறைவன் தான் கொடுத்ததற்கு வந்து.  எவ்வளவு 50 வருஷம் ஆகுது?  50 வருஷம் ஆகுது 


தேரையர் சித்தர் :-   அதனால்தான் என்னமோ அறிந்தும் அதாவது மேடத்திற்கு ஒன்பது என்று. 


சுவடி ஓதும் மைந்தன்:- மேஷ ராசிக்கு ஒன்பது என்று எழுதுங்க ஐயா.


https://youtu.be/C5OQ5pL4GnY?t=21577


( மேஷ ராசியின் மீது 9 என்று எழுதினார்கள் அங்கு ) 


தேரையர் சித்தர் :-   அறிந்தும் பின் சுக்கிரனுக்கு ஆறை இடு. 


சுவடி ஓதும் மைந்தன்:-  அங்க 6 போடுங்க ஐயா. ஆறு சுக்கிரனுக்கு ஆறு.

https://youtu.be/C5OQ5pL4GnY?t=21581

( ரிஷப ராசியின் மீது  6  என்று எழுதினார்கள் அங்கு ) 


தேரையர் சித்தர் :-    இவை இரண்டும் கூட்டு.


அடியவர் :-  ஒன்பது ஆறும் 15. ( 9+6 = 15) 

https://youtu.be/C5OQ5pL4GnY?t=21601



தேரையர் சித்தர் :-   அறிந்தும் ஏது என்று அறிய பின் அதாவது இவை இரண்டும் அறிந்தும் கூட அதாவது பின் புதனே 


சுவடி ஓதும் மைந்தன்:-  இது ரெண்டும் சேர்ந்து என்ன ஆகுச்சு ஐயா? புதன் ஆகிறார். சுக்கிரன். ஆறு போடுங்க 


( மிதுன ராசியின் மீது  6  என்று எழுதினார்கள் அங்கு ) 

https://youtu.be/C5OQ5pL4GnY?t=21612


தேரையர் சித்தர் :-   அப்பொழுது இதற்கு என்ன அர்த்தம் யாராவது கூறுங்கள்?


சுவடி ஓதும் மைந்தன்:- இதுக்கு என்ன அர்த்தம்?  யாராவது சொல்லுங்க? 


===========================

# ஆறு படையானே ஏழு மலையான்.

===========================


தேரையர் சித்தர் :-   அறிந்தும் ஆறு படையானே ஏழு மலையான் அவ்வளவுதான் முடிந்தது விஷயம் 


அடியவர் :- சிவாய நம. 


சுவடி ஓதும் மைந்தன்:-  அப்ப இது புதன் யாரு? ஆறு படையான். அப்ப யாரு அவனும் ஏழு மலையானா இருக்கிறான்ப்பா. 


தேரையர் சித்தர் :-   அப்பனே அனைவருக்கும் சொல்கின்றேன். இறைவன் ஒன்றே. மனிதன் வேறுபடுத்திக் கொண்டிருக்கின்றான். ஆனாலும் இப்பொழுது சொன்னாலும் அனைவரும் பொய் என்று சொல்வார்கள் மனிதர்கள். ஏனென்றால் மனிதன் அதிபுத்திசாலி என்று நினைத்துக் கொண்டிருக்கின்றான். 


சுவடி ஓதும் மைந்தன்:-  அப்ப எல்லாம் ஒன்னுன்னு சொன்னவுடனே என்ன பண்ணுவாரு சில பேர் வந்து 


அடியவர் :- இல்லைன்னுவாங்க 


சுவடி ஓதும் மைந்தன்:-  இல்லைன்னுவாங்க. ஏன்னா மனுஷன் வந்து நான்தான் புத்திசாலின்னு நினைச்சுட்டு இருக்காங்கப்பா.


தேரையர் சித்தர் :-   இதை உணர்ந்தவன் அழகாக அடுத்ததற்கு செல்கின்றான் அதையும் சொல்வேன் 


சுவடி ஓதும் மைந்தன்:-  இதையெல்லாம் உணர்ந்துட்டா அடுத்து என்ன சொல்றாரு? சந்திரனுக்கு வராருன்றாரு 


தேரையர் சித்தர் :-   இதன் பின்பே அனைவருக்கும் ஏது என்று அறிய ஒரு ஆற்றலை பெருக்குக. பாடலை பாடுக. 


பாடகர் அடியவர் :- அனைவருக்கும் ஆற்றலை பெருக்க “என் அப்பன் அல்லவா என்ற பாடலை பாடினார்கள்.


பாடலின் நேரலை :- https://youtu.be/C5OQ5pL4GnY?t=21774 


(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 19.04.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …….)


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.