“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Friday, June 12, 2026

சித்தர்கள் ஆட்சி - 631 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - 19.04.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 3

 இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 19.04.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 3 


நாள் : 19/04/2026 (ஞாயிற்றுக்கிழமை) 

நேரம் :- காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 

இடம் : உலக நன்மைக்காக 09 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.

நேரலை :-  https://www.youtube.com/live/C5OQ5pL4GnY



===========================

# உலகம் அறியாத சித்தர்கள் ஜோதிட வகுப்பு ஆரம்பம்……

===========================


அடியவர் :- ( ஜாதக கட்டத்தை வரைந்தார்)


இடைக்காடர் சித்தர்:-  ஏது என்று புரிய, இவன் மனம் போலே வரைந்திருக்கின்றான். இப்படி வரையக்கூடாது. 


சுவடி ஓதும் மைந்தன் :- (மீண்டும் அனைவர்க்கும் தெரியும் வண்ணம் பெரிதாக வரைய சொன்னார்கள். அடியவர்கள் அதுபோல மீண்டும் வரைந்தனர்.   )


இடைக்காடர் சித்தர்:-  இவைத்தன் அறிய, இதைத்தன் எழுதுக, ஓதுபவனே. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ( எழுந்து நின்றார் அனைவருக்கும் எடுத்து சொல்ல )


இடைக்காடர் சித்தர்:-  அறிந்தும் இதன் உலகத்தை, அதாவது ரகசியத்தை இப்பொழுது தெரிவிக்கின்றேனே. அகத்தியனை அறிந்து இன்னும் அறிக. 


சுவடி ஓதும் மைந்தன் :- யாருக்கும் தெரியாத ரகசியத்தை அகத்தியர் எனக்கு சொல்லிக் கொடுத்ததை உங்களுக்கும் நான் சொல்லப்போறேன்றார். 


இடைக்காடர் சித்தர்:-  வெல்க உங்களை. 


சுவடி ஓதும் மைந்தன் :- உங்களை நீங்க வெல்லிக்கோங்க ( வென்று கொள்ளுங்கள் ) . 


இடைக்காடர் சித்தர்:-  அனைவரையும் ஏது என்று அறிய நல்வழிப்படுத்தி உலகத்தையும் காக்க அருள். ஏது என்று புரிய அண்ணாமலையோன் அருளிடுக. 


இடைக்காடர் சித்தர்:-  அ அறிந்தும் எதை என்று அறிய பின் (ஃ) அக்குவரையே எழுதுக. அறிந்தும் இவைத்தன் பின் மேடத்திலிருந்தே.


சுவடி ஓதும் மைந்தன் :-  ( மேஷ ராசியில் இருந்து மீன ராசி வரை,  அ முதல் ஃ  வரை எழுத சொன்னார்கள். அடியவர்கள் ராசி கட்டத்தின் உள்ளே பின்வருமாறு எழுதினார்கள் )


- மேஷம் - அ

- ரிஷபம் - ஆ

- மிதுனம் - இ

- கடகம் -  ஈ

- சிம்மம் -  உ

- கன்னி - ஊ 

- துலாம் - எ 

- விருச்சிகம் -  ஏ

- தனுசு  -  ஐ 

- மகரம் - ஒ 

- கும்பம் - ஓ 

- மீனம் -  ஔ


இடைக்காடர் சித்தர்:- அப்பா அறிந்தும் ஒன்றை விட்டு வைத்துள்ளான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப, இருங்க, இருங்க. எழுதாதீங்க ஐயா. அப்படி போங்க ஐயா. 


இடைக்காடர் சித்தர்:-  அறிந்தும் இதற்கு அனைத்தும் சுழற்சி இடு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  சுழற்சி இடுனா ஐயா, எல்லாத்துக்கும் வந்து அந்த சுழற்சி ஏன்னா ஜீரோ போடுங்க. எல்லாத்துக்கும் குடுங்க ஐயா. இப்படி இங்க ஜீரோ போடுங்க. இப்படி போடுங்க. ரவுண்டு போடணுங்க ஐயா. இது ரவுண்டு போடுங்க ஐயா.


( அடியவர்கள் அனைத்து தமிழ் எழுத்துக்களுக்கும் சுழற்சி இட்டனர். )


இடைக்காடர் சித்தர்:-  அப்பா, அறிந்தும் இதனையே சரியாக எழுதத் தெரியாமல், படிக்கத் தெரியாமல், அப்பனே, எவ்வளவு இறைவனைப் பற்றி ஓதினாலும் ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. நீங்களே பாருங்கள், பக்தி எவ்வளவுக்கு உள்ளது என்பது. 


சுவடி ஓதும் மைந்தன் :- ( அப்ப, இதனையே உங்களுக்கு சரியா எழுத தெரியல, அப்ப, உங்க இடத்துல. பக்தி எவ்வளவுக்கு இருக்குது பார்த்துப்பா. )


இடைக்காடர் சித்தர்:- அறிந்தும் இவை என்று அறிய, இதனால் ஒருவன் முகத்தைப் பார்த்தே  தெளிவை, தெளிவு, அதாவது இவன் பக்தி மார்க்கனா என்று சொல்லி அறிந்தும் சொல்லப்போகின்றேன். 


சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு முகத்தை பார்த்தே இவன் பக்தியில் இருக்கிறானா இல்லையான்னு சொல்லிட்டு உங்களுக்கு நான் தெரியப்படுத்துறேன்பான்றாரு. 


இடைக்காடர் சித்தர்:- அறிந்தும் இடுக (ஃ) அக்கை.


இடைக்காடர் சித்தர்:-  இதை என்று அறிய, அதாவது அனைத்தும் இதை என்று பெருக்க, பின் நடுவில் தன்னில் கூட 


சுவடி ஓதும் மைந்தன் :-  பெருக்கல், இப்படி போட்டு, இப்படி போட்டு அக்கு (ஃ) போடுங்க.


( ஜாதகத்தின் நடுவில் ஒரு பெரிய பெருக்கல் வரைந்து அதன் நடுவில்  “ஃ” எழுதினார். இதனை ஜாதகங்களில் வரைந்தார். )


இடைக்காடர் சித்தர்:-  அறிந்தும் ஏது என்று புரிய, இதை யான் இங்கு செப்பியுள்ளேன்  என்பதை யாராவது தெளிவு பெற. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இதை ஏன் இங்க நான் அக்கு போட்டேன்னு சொல்லிட்டு யாராவது சொல்ல முடியுமா? 


இடைக்காடர் சித்தர்:-  அப்பா  புத்தி அவ்வளவுதான் மனிதனுக்கு. ஏனென்றால் மனிதன் ஏது என்று புரிய எப்பொழுதும் ஆசைகளை நோக்கியே, பெரும் ஆசைகளை நோக்கியே, மாயைகளை நோக்கியே செல்கின்றான். அப்பொழுது என்னதான் புரியும்? இதற்கு ஏது என்று அறிய, அதாவது (இறைவன்) முடிவில்லாதவன், தெரியாதவன். அதனால்தான் அகத்தியன் அழகாக அப்படி போட்டுவிட்டான். பூஜ்ஜியமாக 


சுவடி ஓதும் மைந்தன் :- இறைவன் யாரு? அதனாலதான் அக்கு.  ஆ, ஆ, ஈ, ஈ எல்லாம் இதுல தெரியும். ஆனா இதெல்லாம் ஒரு 12 கட்டத்தில் அடங்குச்சு. ஆனா கடைசில அக்கு அடக்க முடியாது. யாருன்னு தெரியல. 


இடைக்காடர் சித்தர்:-  எதனாலே ஏது என்று புரிய, இவைத்தன் அறிந்தும் இவ்மூன்றும் பிரம்மா, விஷ்ணு, ஈசன் என்றும் வைத்துக்கொள்ளலாம். 


அடியவர்கள்:- ( பலத்த கை தட்டல்கள் ) 


சுவடி ஓதும் மைந்தன் :- ஆமா. 


இடைக்காடர் சித்தர்:-  அறிந்தும் இவர்களை எப்படி நீங்கள் காண முடியும் சொல்லுங்கள் ஆனாலும். 


சுவடி ஓதும் மைந்தன் :- இங்க இந்த ஜீரோ ஜீரோ இருக்குதே. எப்படி நீங்க காண முடியும்னு கேட்கிறார். யாராவது சொல்ல முடியுமா?


இடைக்காடர் சித்தர்:-  அப்பனே, இதனால்தான் மற்றவர்கள் இறைவன் இல்லை என்று சொல்கின்றார்கள். அப்பா, ஆனாலும் யாங்கள் விடமாட்டோம். அப்பா, 


சுவடி ஓதும் மைந்தன் :- இதனால்தான் இறைவன் யாருன்னே தெரியல. அதனால்தான் மக்கள் என்ன பண்றாரு? கடைசில ஒன்னு ஆகலைன்னா என்ன பண்ண போறாங்க? இறைவன் இல்லை என்று சொல்றாங்க . 


இடைக்காடர் சித்தர்:-  அப்பா, அறிந்தும் கூட அனைத்தும் ஒன்றே. இதனால் முதல் ஏது என்று அறிய, அப்பா, அறிந்தும் கூட, அதாவது நிச்சயம் இவை தன் மேலே, அதாவது முருகன் என்றே தொடங்குகின்றது. கலியுகத்தின் நாயகனே.


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப கலியுகத்தின் நாயகன் யாரு? முருகன் என்றே தொடங்குகின்றது. மேஷ ராசி அய்யா.


இடைக்காடர் சித்தர்:-  இதைத்தன் அனைத்தும் இடுக. பின் அம்புகோல். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அம்புக்குறி காட்டியா? ஐயா, இங்க மேஷம் எழுதுங்க. ( அதாவது ஒவ்வொரு ரசிக்கும் ஒரு அம்புக்குறி இட்டு , அந்த ராசியின் பெயரை எழுத சொன்னார்கள் )


இடைக்காடர் சித்தர்:-  அறிந்தும் இவைத்தன் முதலிலே அறிந்தும் “அ”  என்று, அறிந்தும் அறிவின் பார்வைகள் என்னென்ன எழுதுங்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப ஒரு “அ” இங்க இருக்கு இல்லையா முதல்ல. அறிவின் பார்வைகள் உங்களுக்கு அறிவில் என்ன படுதோ, அதை ஆல முதல்ல தொடங்குறதுக்கு எழுதுங்கன்றார். 


( பின் வரும் வார்த்தைகள் அனைத்தும் அங்கு அடியவர்கள் உரைத்ததே. அதனை இங்கு படத்தில் காணலாம் )


அறம். 

அன்பு.

அம்மா.

அப்பா. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, இதெல்லாம் தெரிஞ்சுக்கணும். ஏன்னா இதெல்லாம் கோடி ரூபாய் கொடுத்தாலும் உங்களுக்கு யாரும் சொல்ல மாட்டாங்க. ஏன்னா படிச்சிட்டு தான் சொல்லி இருப்பாங்க. சித்தர்கள் என்பவர்கள் வேற. இந்த உலகத்துல வந்து நம்மளுக்கு ஜீவநாடி கிடைச்சதுன்னா பெரிய விஷயம். நம்ம எல்லாம் ஒரு ஒரு என்ன சொல்றதுனா வந்து பெரும் பாக்கியசாலிகள். யாரும் சொல்ல மாட்டாங்க. வந்து இந்த ஓலைச்சுவடியில்  வந்தா மட்டும் தான் தெரியும். அதை சொல்ல வராரு ஏதோ. அதை கடைபிடிங்க. வாழ்க்கையில ஜெயிக்கலாம். எல்லாருக்காகவும் எனக்கு அது நடக்கல, இது நடக்கலன்னு சொல்லாதீங்க. ஏன்னா நமக்காக வந்து இறங்கி சொல்றாங்க. இதை பயன்படுத்தி சொல்லுவாங்க. நானும் படிக்கிறேன். எல்லாரும் ஏத்து செய்யுங்க. 



அடியவர் 2:-  அறம், அன்பு, அம்மா, அறிவு, அப்பா, அருள், அகல், அகம், அகண்டம், அன்னம், அன்னம், அன்னம், அன்னம், 


அடியவர் 3 :-  எழுதுங்க. அகத்தியர். 


( இங்கு இவ் வேளையில் பல உரையாடல்கள் அடியவர்களிடம் நிகழ்ந்தது..அடியவர்கள் உரைத்த தமிழ் “அ”கர வரிசையை மட்டும் இங்கு காண்போம் )


அகிலம். 

அணு 

அனுபவம். 

அகந்தை.

அழிவு.

அரசியல்.

அமைதி.

அடக்கம்.

அறநெறி. 

அனுபவம்.

அனுகூலம்.

அரசு.

அக்கறை. 

அடியவன்.

அனல்.

அடியார்.

அனல்.

அகல்.

அலை. 

அரசு.

அறுசுவை.

அண்டம்.

அக்னி.

அற்புதம்.

அமிர்தம்.

அழகு. 

அழைப்பு.

அலை. 

அரச மரம்.

அரவணைப்பு.

அர்ச்சனை.

அர்ச்சனை.

அண்ணன்.

அனுபூதி.

அளவு.

அண்ணாமலை.

அதிகாலை. 

அழகு.

அருணகிரி.

அந்தம். 

அந்தம்.

அக்கா.

அடிமை.

அனுசம்.

அவிநாசி.

அந்தம்.

அருட்பெருஞ்ஜோதி.

அத்தனாரி ஈஸ்வரர்.

அறிவிப்பு.

அழகு. 

அம்பல்.

அம்மன்.

அம்மையப்பர்.

அந்தனர்.

அபிராமி.

அஷ்டகம். 

அரவணைப்பு.

அருமை.

அழுக்கானி சித்தர். 

அனாதை.

அரக்கன்.

அஞ்சல்.

அகிலாண்டீஸ்வரி. 

அட்டவணை.

அருவி.

அம்மையப்பர்.

அறிவொளி.

அமரர்.

அத்தை.

அதர்மம்.

அருகம்புல்.

அசல்.

அசதி. 

அமைதி. 

அதிகாரம்.

அனுபவம்.

அறியாமை.

அதிசயம்.

அம்மி.

அகம்பாவம்.

அசிரிதி.

அமர்நாத்.

அப்பளம்.

அடுப்பு.

அக்கினி.

அட்சய திதி.

அன்பளிப்பு.

அன்பளிப்பு.

அறிவிப்பு.

அகோரி.

அது.

அகதி.

அப்பர்.

அதிதி.

அவதி. 

அகதி.

அச்சம்.

அனுதினமும்.

அஸ்தம்.

அமைதி.

அனுமான். 

அமேசான். 

அபிஷேகம்.

அங்காரன்.

அருள்வாக்கு.

அழைப்போம். 

அழைத்தல். 

அசுபதி.

அக்பர்.

அக்பர்.

அளப்பறை.


( மீண்டும் வாக்குகள் ஆரம்பமான போது…)  


சுவடி ஓதும் மைந்தன் :- அமைதியா இருங்க. அகத்தியர் என்ன சொல்ல போறாருன்னு, தேரையர் என்ன சொல்ல போறாருன்னு பார்ப்போம்.


(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 19.04.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …….)


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.