அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
ஒரு மனிதன், தேவையற்ற விஷயங்களில் உறுதி கொள்கிறான். பகையிலே திண்ணியம் கொள்கிறான். பொறாமையிலே திண்ணியம் கொள்கிறான். பிறரை வெறுப்பதில் திண்ணியம் கொள்கிறான். தேவையற்ற விவாதத்தில் திண்ணியம் கொள்கிறான். இப்படி மன உளைச்சலில், கவலையில் திண்ணியம் கொள்வதையெல்லாம் விட்டுவிட்டு நல்ல எண்ணங்களிலே அந்தக் உறுதியை வளர்த்துக் கொண்டால் என்றென்றும் மனித வாழ்வு சுகமாகும். எனவே, அந்த எண்ணிய எண்ணம் அது நல் எண்ணமாக, நோக்கமாக இருந்து, அந்த எண்ணம் உறுதி, உறுதி. உறுதி, உறுதியோ உறுதி என்று இருந்தால் கர்மா இடம் தரவில்லை என்றாலும் கட்டாயம் நடக்கும்.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment