“இறைவா!!! அனைத்தும் நீ”
உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
(2021 ஆம் ஆண்டு உரைத்த பொது வாக்கு)
ஆதி ஈசனை நினைத்து உரைக்கின்றேன் அகத்தியன்.
இவ்வாண்டில் சில மாற்றங்கள் ஏற்படும் என்பேன். நம்பிக்கை இல்லோரை பின் மீண்டெடுக்க முடியாது என்பேன். பின் பலத்த மழையால் அழிவு ஏற்படும் என்பேன். ஏன் என்றால், ஈசன் சிறு சிறு விளையாட்டை, பெரு விளையாட்டாக மாற்றி விடுவான் என்பேன்.
என்பேன் பொய்யான பக்தியின் வழியில் மனிதர்கள் செல்வார்கள் என்பேன். இறைவனை நம்பினால் ஒன்றும் கிட்டாது என்று, நல் வழியை பயன்படுத்தி, தீய வழியில் செல்வார்கள். பின் அவர்களே அழிந்து போவார்கள்.
இவ்வாண்டு கூட, பொய்யான பக்தியை நிலைநாட்டி, எல்லாமே அடைந்துவிடலாம் என்று, பக்தி மார்கத்தில் சில பொய்யான உருவங்கள் பக்தி மார்கத்தை நாடும் என்பேன். பின் சித்தர்களை வைத்து (கூறி) பொருள் பணம் சம்பாதித்து விடுவார்கள். ஆம்! ஆனால், அழிவு நிச்சயம் என்பேன். என்பேன், பின் மறைமுகமாக சில எண்ணங்கள் தோன்றி பெண்களை ஏமாற்றுவார்கள் என்பேன். பக்தி பாதை என கூறி அழைத்து சென்றவர்களே, எதிரியாகி விடுவார்கள்.
இதனால்தான் யான் கூறுகிறேன், அகத்தியனை நம்பினால், பின் அகத்தியனை மட்டும் வணங்கு என்று. பின், அகத்தியன் என்னும் பெயரை சொல்லி ஏமாற்றுவார்கள். பின்னர் பலப்பல வித்தைகளையும் மனிதர்கள் காண்பிப்பார்கள். பின், இனியும் வருவார்கள் மனிதர்கள். யாரையும் நம்பிவிடக்கூடாது.
அதை செய்கின்றேன், இதை செய்கின்றேன் யான், திருத்தலங்களை கட்டுகிறேன் என்று பொருளும், பணமும் சேகரித்து, அவன் சௌகரியமாக அமர்ந்து கொள்வான். பின்னர் அத்திருத்தலங்களில் உள்ள தெய்வ மூர்த்தங்களே அவனை அழித்து விடும. இதனால் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள்.
மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டுமா, நீயே போய் செய்துவிடு, என்பேன்.
பின் ஒன்றை கேட்கின்றேன். சன்யாசிகளுக்கு இவையெல்லாம் எதற்கு? போகட்டும், மூன்று வேளை உணவிருந்தால் போதாதா? என்று கூட யாம் முன்னே பல முறை கூறியுள்ளேன். சந்நியாசியாக வந்துவிட்டால், சுகபோகமாக வாழ்வு கிடைக்கும் என மனிதர்கள் வருவார்கள். ஆனாலும், அன்னை, தந்தை, மனைவி, மகள், அண்ணன், தங்கை இவர்களை விட்டு விட்டு வருவார்கள்.
அனைவரும் என் மக்களே. அனைவரும் மிக கவனமாக இருங்கள். அனைவருக்கும் பலமாக, நல் ஆசிகளை இறைவன் உரைத்துவிட்டான். இனியும் யாரையும் நம்பி ஏமாறாதீர்கள் என்பேன்.
வருவார்கள், கலியுகத்தில், ஆனாலும் ஒன்றை உரைக்கின்றேன். இவர்களால்தான் இந்து மதம் கெட்டுக்கொண்டே இருக்கின்றது. எந்த மதத்ததையும் பற்றி பேசவில்லை. அனைத்து மதங்களும் எங்களுக்கு ஒன்றுதான். ஆனாலும் இதை பற்றி பேசத்தான் இங்கே கூறுகின்றேன்.
பின் இவர்கள் செய்கின்ற தவறுகளால், இந்து மதத்தையே இழிவுபடுத்தி விடுவார்கள்.
அதனால் தான் கூறுகிறேன், ஒழுங்காக வாழக் கற்றுக்கொள்ளுங்கள், இல்லையேல், யாங்களே, சித்தர்களே அழித்து விடுவோம். ஏனென்றால், நீ ஒழுங்காக இறைவனை வழிபட்டால், ஒழுங்காக வழிபட்டு சென்றுவிடு. மற்றவையெல்லாம் ஏன்?
நீ என்ன இறைவனா? உன்னால் என்ன செய்ய முடிகின்றது? மனிதா! என் கோபத்திற்கு ஆளாகாதே! நிச்சயமாய் அழித்துவிடுவேன். இப்பொழுது கட்டளை இடுகின்றேன், அதை செய்கின்றேன், இதை செய்கின்றேன் என்று பொய் பித்தலாட்டம் ஆடுகின்றீர்களே, ஆனால் நிச்சயம் யானே அழித்து விடுவேன்.
ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள், இனிமேலும் எந்தனுக்கு கோபம் வந்தால், அனைத்தையும் அழித்துவிட்டு போவேன். ஈசனைவிட எந்தனுக்கும் திறமைகள் அதிகமாக இருக்கின்றது. மானிடா, சொல்லுவதை மட்டும் கேளுங்கள். மானிடா, உங்களால் என்ன செய்ய முடியும். யங்கள் தான் உங்களையே காப்பாற்றுகின்றோம்.
நீங்கள் உங்கள் திறமைகளை பயன்படுத்தி, பித்தலாட்டம் செய்து எங்களுக்கு செய்வீர்களா? பார்க்கின்றேன், ஒவ்வொருவரையும் அடித்து நொறுக்குகின்றேன்.
அதனால் தான் கூறுகின்றேன். மானிடா, ஒழுங்காக வாழ கற்றுக்கொள்ளுங்கள். உங்கள வேலை என்னவோ காய் மட்டும் செய்யுங்கள்.
மறைமுகமாக பெண்களை ஏமாற்றி விடாதீர்கள். சித்தர்கள் என்று சொல்லி சொல்லி வாழ்ந்த நிலையை இனிமேலும் யான் பொறுத்துக் கொள்ளமாட்டேன்.
ஈசன் எவ்வாறு நாடகத்தை நடத்த உள்ளான்,என்பதை விட அதிகமாக எந்தனுக்கு தெரியும்.
அனைத்து திறமைகளும் என்னிடத்தில் இருக்கின்றது. மானிடா, ஒழுங்காக வாழ கற்றுக்கொள். இல்லையெனில், பக்தன், பக்தன் என்று கூறி ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்களா?
இனிமேலும் சொல்கின்றேன், ஒழுங்காக இருங்கள். அகத்தியனின் கருணை கொண்டு கரையும் உள்ளம் கொண்டுதான் பார்க்கின்றேன். ஆனாலும் என்னை வைத்து இவ்வுலகில் பொருள் சம்பாதிப்பவர்கள், நோய் நொடி பற்றி வருவார்கள். பின் அவர்கள் இல்லத்தில் ஒரு அசம்பாவிதமும் நடக்கும்.
ஏனடா! எங்களை மறைபொருளாக வைத்து சம்பாதிக்க நாங்கள்தான் கிடைத்தோமா? யான் உங்களை காப்பாற்றுகின்றேன், நீங்கள் யார் எந்தனுக்கு செய்வதற்கு?
உந்தனுக்கு எதுவும் தேவை இல்லை என்று வந்துவிட்டாய். பின்னர் அத்தனை சுகம் கேட்கிறதா? அந்த சுகத்தை எவ்வாறு நிறுத்துவது என்பதும் எங்களுக்கு தெரியும். காகபுஜண்டனும் நல் முறையாய் கோபத்தில்தான் உள்ளான் என்பேன். அழித்துவிடுவான். பின் ஜாக்கிரதையாய் இருங்கள்.
வந்து உரைக்கின்றேன், இரு மாதங்களுக்குப் பின்.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
No comments:
Post a Comment