“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Saturday, January 13, 2024

சித்தர்கள் ஆட்சி - 295 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - “அறுவை/கீறல் வைத்தியம் செய்யும் பொது ஏதேனும் தடைகள் வராமலிருக்க”


 


“இறைவா!!! அனைத்தும் நீ”


உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 


( பழைய நாடி வாக்கில் இருந்து…)


அகத்தியன் அருள்வாக்குத் தந்தாலும் கீறல் வைத்தியம் செய்யும் பொது ஏதேனும் தடைகள் வராமலிருக்க யாமே பக்க பலமாக இருந்து அந்த மருத்துவச் சிகிர்ச்சையை வெற்றி பெற வைப்போம்.  இன்று முதல் காலையிலும், மாலையிலும் தப்பாது ஐம்பத்து நான்கு முறை வைத்தீஸ்வரம் புகழ் பாடும் காயத்ரி மந்திரத்தை சொல்லி வா" என்று அகத்தியர் அழுத்தம் திருத்தமாக உத்தரவு போல் அருள் வாக்கு சொன்னார்.


இந்த வார்த்தைகளைக் கேட்ட பிறகு தான் அந்த மருத்துவர் முகத்தில் மகிழ்ச்சியே ஏற்பட்டது.  சந்தோஷமாக புறப்பட்டுப் சென்றார்.

==============================


பாலாம்பிகேச வைத்யேச

பவரோக ஹரேதிச

ஜபேந் நாமத்ரயந் நித்யம்

மஹாரோக நிவாரணம்


( மேலே குறிப்பிட்டுள்ள 3 வரி காயத்திரி மந்திரத்துடன் அந்த  புகழ் பெற்ற முழுப்பாடலை இங்கு இனைத்துள்ளோம். அடியவர்கள் பலன் பெற.)

தீராத நோய் தீர்க்கும் ஸ்ரீ வைத்யநாதாஷ்டகம்


வைத்தியநாதரைப் போற்றும் விதமாக இவ்வைத்யநாத அஷ்டகம் விளங்குகிறது.” இதன் இறுதியில் உள்ள சுலோகம் பா(வா)லாம்பாகேசா! வைத்யேசா! பவரோகஹரா! இந்த மூன்று நாமங்களை தினமும் சொல்பவர்க்கு மஹாரோகம் நிவரத்தி ஆகும் என்று அறுதியிடுகிறது.


இந்த துதியை பாராயணம் செய்தால் தீராத நோயெல்லாம் வைத்தீஸ்வரன் திருவருளால் தீரும். ஒவ்வொரு ஸ்லோகத்தையும் பாராயணம் செய்தவுடன் வைத்தீஸ்வரனை நினைத்து ஒரு நமஸ்காரம் செய்தால் அதிக பலன் கிடைக்கும் என்பது சான்றோர்கள் கருத்து.


ஸ்ரீராமஸௌமித்ரி ஜடாயுவேத

ஷடானனாதித்ய குஜார்ச்சிதாய

ஸ்ரீநீலகண்டாய தயாமயாய

ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய


விளக்கம்: ஸ்ரீராமன், லட்சுமணன், ஜடாயு, நான்கு வேதங்கள், ஆறுமுகன், சூரியன் மற்றும் தனது ரோகத்தைப் போக்கிக்கொள்ள விரும்பிய அங்காரகன் போன்றவர்களால் பூஜிக்கப்பட்டவரும், விஷத்தைக் கண்டத்தில் தரித்தவரும், கருணையே வடிவானவருமான ஸ்ரீ வைத்யநாதன் எனும் பரமசிவனை நமஸ்கரிக்கிறேன்.


கங்காப்ரவாஹேந்து ஜடாதராய

த்ரிலோசனாய ஸ்மரகாலஹந்த்ரே

ஸமஸ்த தேவைரபி பூஜிதாய

ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய


விளக்கம்: கங்கையின் பிரவாகத்தை சிரசில் தாங்கியவரும், சந்திர மண்டலத்தையும் சிரசில் தரித்தவரும், மூன்று கண்களை உடையவரும், மன்மதனையும் காலனையும் வதம் செய்தவரும், எல்லா தேவர்களாலும் பூஜிக்கப்பட்டவருமான ஸ்ரீ வைத்யநாதன் என்ற பரமசிவனை நமஸ்கரிக்கிறேன்.


பக்தப்ரியாய த்ரிபுராந்தகாய

பினாகினே துஷ்டஹராய நித்யம்

ப்ரத்யக்ஷலீலாய மனுஷ்யலோகே

ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய


விளக்கம்: பக்தர்களிடத்தில் அன்பு கொண்டவரும், திரிபுர ஸம்ஹாரம் செய்தவரும், பினாகம் என்ற வில்லை தரித்தவரும், தினமும் துஷ்டர்களை ஸம்ஹாரம் செய்கிறவரும், மனிதர் வாழும் உலகத்தில் எல்லோருக்கும் புலப்படும்படியாகப் பலவித லீலைகளைச் செய்தவருமான ஸ்ரீ வைத்யநாதன் என்ற பரமசிவனை நமஸ்கரிக்கிறேன்.


ப்ரபூதவாதாதி ஸமஸ்தரோக

ப்ரணாஸகர்த்ரே முனிவந்திதாய

ப்ரபாகரேந்த்வக்நிவிலோசனாய

ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய


விளக்கம்: பாதம் முதல் தலை வரையிலும் ஏற்படக்கூடிய எந்த ஒரு நோயையும் நாசமாக்குகிறவரும், மகரிஷிகளால் ஆராதிக்கப்பட்டவரும், சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூவரையும் முக்கண்களாகக் கொண்டவருமான ஸ்ரீ வைத்யநாதன் எனும் பரமசிவனை நமஸ்கரிக்கிறேன்.


வாக்ஸ்ரோத்ர நேத்ராங்க்ரி விஹீனஜந்தோ:

வாக்ஸ்ரோத்ர நேத்ராங்க்ரி சுகப்ரதாய

குஷ்டாதி ஸர்வோன்னதரோ கஹந்த்ரே

ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய


விளக்கம்: பேச்சுப் புலன், காது, கண், கால் முதலிய அங்கங்களை இழந்தவருக்கு அவற்றை மீண்டும் கொடுத்து சுகத்தை அளிப்பவரும், குஷ்டம் முதலிய மிகப் பெரியதான ரோகங்களைப் போக்குகின்றவருமான ஸ்ரீவைத்யநாதன் என்ற பரமசிவனை நமஸ்கரிக்கின்றேன்.


வேதாந்த வேத்யாய ஜகன்மயாய

யோகீஸ்வரத்யேய பதாம்புஜாய

த்ரிமூர்த்திரூபாய ஸஹஸ்ரநாம்னே

ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய


விளக்கம்: வேதாந்தங்களால் அறியத் தகுந்தவரும், உலகில் உள்ள எல்லா பொருட்களுமாக இருப்பவரும், யோகீஸ்வரர்களால் தியானம் செய்யத்தக்க சரணங்களை உடையவரும், பிரம்ம-விஷ்ணு வடிவாய் விளங்குபவரும், ஆயிரம் நாமங்களை உடையவருமான ஸ்ரீ வைத்யநாதன் எனும் பரமசிவனை நமஸ்கரிக்கின்றேன்.


ஸ்வதீர்த்தம்ருத் பஸ்மப்ருதங்கபாஜாம்

பிஸாசது:க்கார்த்திபயாபஹாய

ஆத்மஸ்வரூபாய ஸரீரபாஜாம்

ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய


விளக்கம்: தனது தீர்த்தமாகிய சித்தாம்ருத தீர்த்தத்தில் நீராடுவதாலும், தனது வைத்தீஸ்வரன் கோயிலில் கொடுக்கப்படும் மருந்து உருண்டைகளாலும், தனது விபூதியினாலும், தன் கோயிலில் உள்ள வேப்பமரத்தின் அடியிலுள்ள மண்ணினாலும், தனது குளத்து மண்ணினாலும், பிசாசு, ரோகம் போன்ற துக்கங்களையும் மனக் கவலையையும், பயத்தையும் போக்குகின்றவரும் சரீரத்தை அடைந்தவர்களுக்கு அந்தராத்மாவாய் இருப்பவருமான ஸ்ரீ வைத்யநாதன் என்ற பரமசிவனை நமஸ்கரிக்கின்றேன்.


ஸ்ரீநீலகண்டாய வ்ருஷத்வஜாய

ஸ்ரக்கந்த பஸ்மாத்யபிஸோபிதாய

ஸுபுத்ரதாராதி ஸுபாக்யதாய

ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய


விளக்கம்: விஷம் அருந்தியதால் நீலமான கண்டத்தை உடையவரும், ரிஷபத்தை வாகனமாகக் கொண்டவரும், மாலை, சந்தனம், விபூதி ஆகியவற்றால் பிரகாசிக்கின்றவரும், நல்ல மனைவி, நல்ல குழந்தைகள் என்ற நல்ல பாக்கியங்களைக் கொடுக்கின்றவருமான ஸ்ரீ வைத்யநாதன் என்ற பரமசிவனை நமஸ்கரிக்கின்றேன்.


பாலாம்பிகேச வைத்யேச

பவரோக ஹரேதிச

ஜபேந் நாமத்ரயந் நித்யம்

மஹாரோக நிவாரணம்


விளக்கம்: (மேலே சொல்லப்பட்ட எட்டு ஸ்லோகங்களை உளமாறச் சொல்வோருக்கு) வாலாம்பிகைக்கு நாதனானவரும், வைத்தியர்களிலேயே மிகவும் சிறந்தவரும், ஜனன, மரணமென்ற ரோகத்தைப் போக்குகின்றவரும் ஆகிய வைத்யநாதரின் மூன்று நாமாக்களையும் (வாலாம்பிகேச, வைத்யேச, பவரோக ஹரேதிச) தினமும் ஜபிப்பவர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய கொடிய நோய்கள் விலகும். இந்த அஷ்ட ஸ்லோகம் மகான்களால் தொன்று தொட்டு ஜபிக்கப்பட்டு வருகிறது என்பதே இதன் சிறப்பை விளக்கவல்லது.


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!



No comments:

Post a Comment