“இறைவா!!! அனைத்தும் நீ”
உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
எத்தனை துன்பத்திலும் மனதைத் தளர விடாமல், சோர விடாமல் இறை வழிபாட்டில் தம்மை ஆழ்ந்து ஈடுபடுத்திக் கொண்டு , இயன்ற தர்ம காரியங்களைச் செய்து கொண்டு , தன் கடமைகளை நேர்மையாக ஒருவன் ஆற்றி வந்தால் கட்டாயம் விதி மெல்ல மெல்ல மாறி அவனுக்கு நன்மையைச் செய்யும்.
தர்மம் என்றால் ஏதோ லகரம், ககரம் செலவு செய்யவேண்டும் என்று யாரும் தவறாக எண்ண வேண்டாம். அவனவன் சக்திக்கேற்ப செய்தால் போதும்.
ஏதும் இயலாதவர்கள் எறும்பிற்குக் கூட உணவு தரலாமல்லவா?
எனவே
பிறருக்கு ஈவதெல்லாம் மறைமுகமாக தனக்குத்தானே ஈவதுதான்.
எனவேதான் இந்த ஓலையில் (நாடியில்) யாம் அடிக்கடி தர்மத்தை உபதேசம் செய்கின்றோம்.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
No comments:
Post a Comment