“இறைவா!!! அனைத்தும் நீ”
உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷிகள் பெருமை குறித்து கந்த வடிவேலன் உரைத்த வாக்கு:-
சில துன்பங்கள் இருந்தாலும் அதனையும் கூட அகத்தியன் பார்த்துக்கொண்டிருக்க…
ஏன் பார்த்துக்கொண்டிருக்க? அதை நீக்க முடியுமே என்று நீ எண்ணலாம்.
ஆனாலும் கர்மா வினையை ( அனுபவித்தே ஆக வேண்டும்) ஆனாலும் சிறிதளவாவது அனுபவிக்க வேண்டும். ஆனாலும் பெரிய அளவாக வந்திருக்கக் கூடியது ஆனால் சிறிய அளவாகவே (அனுபவிக்கச் செய்து கர்மா கழித்துவிட்டான்). இதுதான் அகத்தியனின் பெருமை.
(விளக்கம்:-)
அடியவர்களுக்குப் பெரிய அளவில் வரக்கூடிய ஆபத்துக்களை, அதாவது மரண கண்டம் போன்ற ஆபத்துக்களைத் தடுத்து நீக்கி அதே சமயம் ஒரு சிறிய அளவில் அவர்களை அனுபவிக்க வைத்து அதன் மூலம் விதியையும் இயங்க வைத்து, அதன் பின் அவர்கள் விதியையும் மாற்றி நல் வாழ்வு பலருக்கும் அருளிக்கொண்டே இருக்கின்றார் குருநாதர். இது பலர் வாழ்கையில் அவர்கள் புண்ணிய பலத்தின் மூலம் நடக்கும். ஆனால் ஜீவ நாடியில் உரைத்தால் அன்றி மனிதர்கள் எவராலும் உணர இயலாது.
அகத்தீசன் மூலம் , அகத்தீசர் அருளால் இவ் அதிசயங்கள் புண்ணிய பலங்கள் உள்ள பல அடியவர்களுக்கு நடந்து கொண்டே உள்ளது. இதனால்தான் புண்ணியங்கள் செய்யுங்கள், புண்ணியங்கள் செய்யுங்கள் என்று சித்தர்கள் தொடர்ந்து புண்ணியத்தின் மகிமைகளை உரைத்து மனிதர்களுக்கு வழி காட்டி அருளுகின்றனர்.
உதாரணம்:- ஒரு அடியவர் குடும்பத்தில் விதியில் தாங்க இயலாத பெரிய ஆபத்து நெருங்கியது. ( மரண கண்டம் - இதுவும் பல நாட்கள் கழித்தே அவ் குடும்பத்திற்குப் புரிந்தது). அகத்தீசர் இவ் பெரிய ஆபத்தைத் தடுக்க/நீக்க , அவ் குடும்பத்தில் ஒரு அடியவருக்குக் கண்களில் ஒரு சிறிய ஆபத்தை உண்டாக்கி அவ் குடும்பமே மனம் கலங்கித் தவித்து நின்று மருத்துவர்களால் அது நீங்கியது போன்ற எளிய தோற்றம் உண்டாக்கி, அவ் வலியை உணர வைத்து , விதியையும் இயக்குவதுபோல் இயக்கி அவ் அடியவருக்கு அனைத்தும் சரியானது போல மிக அழகாக மாற்றி அமைத்தார் குருநாதர்.
எனவே அடியவர்களே,
அனுதினமும் புண்ணியம் செய்யுங்கள்!
அனுதினமும் புண்ணியம் செய்யுங்கள்!!
அனுதினமும் புண்ணியம் செய்யுங்கள்!!!
அனுதினமும் புண்ணியம் செய்யுங்கள்!!!!
அனுதினமும் புண்ணியம் செய்யுங்கள்!!!!!
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment