“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Wednesday, September 16, 2026

சித்தர்கள் ஆட்சி - 723 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - 12.08.2026 அன்று அன்புடன் காகபுசண்ட மாமுனிவர் அருளிய கூட்டுப்பிரார்த்தனை குழுவினருக்கான ஞான பாடங்கள் வாக்கு - பகுதி 2

 இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 12.08.2026   அன்று   அன்புடன் காகபுசண்ட மாமுனிவர் அருளிய கூட்டுப்பிரார்த்தனை குழுவினருக்கான ஞான பாடங்கள் வாக்கு - பகுதி 2


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகள் போற்றி !!!



===========================

# அன்புடன் காகபுசண்ட மாமுனிவர் வாக்கு 

===========================


அகிலத்தை ஆளக்கூடிய அகிலாண்ட தேவியே!!!, அகிலாண்ட ஈஸ்வரனே!!!

பணிந்து பரப்புகின்றேன், புசண்டனே. 


( பகுதி 1 அதன் தொடர்ச்சியாக …) 


===========================

# சித்தன் யார்? யாருக்காவது தெரியுமா?

===========================


காகபுசண்ட மாமுனிவர் :- எதை என்று புரிய, இதனால் அறிந்தும்—உண்மைதனை உணர வேண்டும். சித்தன் யார்? எதை என்று புரிய, யாருக்காவது தெரியுமா? சொல்லுங்கள், பார்ப்போம். 


சுவடி ஓதும் மைந்தன் :-   சித்தன் யார்? யாருக்காவது தெரியுமான்னு கேக்குறாரு. திருப்பியும் இன்னொரு கொஸ்டின், ஐயா.


அடியவர் 4:- ஐயா, சித்தர்கள் எல்லாமே இறைவனுடைய அம்சம் தான்ங்க  ஐயா.


காகபுசண்ட மாமுனிவர் :- எதை—ஏது என்று புரிய, அறிய, பின் இறைவனையும் எங்களையும் இங்கே சேர்க்காதீர்கள்.


( அமைதி )


அடியவர் 4:-  மனித குலத்தை காப்பதற்காக இறைவனால் அனுப்பப்பட்டிருக்காங்க, அப்படின்னு நினைக்கிறேன்.



காகபுசண்ட மாமுனிவர் :- எதை—ஏது என்று புரிய, அதாவது, பின்னே வருபவனுக்கு இதுவே பதில். 


சுவடி ஓதும் மைந்தன் :- பின்னே வருபவன்னா….. யாரோ சொல்லிக் கொடுத்துக்கிறாங்க. அதை நீ சொல்லிக்கிற. அதான் பதில். 


காகபுசண்ட மாமுனிவர் :- பிரித்து எடுத்துக… பிரித்து எடுத்துக்க… பிரித்து எழுத்துக்களாக சொல்க…சித்தன். 


சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, பிரித்து எடுக்க, பிரித்து எடுத்து, பொருள் சொல்கன்றார்.


அடியவர் 5:-  புஜண்டர்  அப்பாவுக்கு வணக்கம். (எனக்கு) தெரிந்த வரையில, சத்-சித்-ஆனந்தம்னு சொல்லும்போது…. சித்துங்கிற உயிரை….சத்துங்கிற இறைவனுடைய முழுமையாக… எப்பொழுதுமே லயமா வைத்திருக்கக்கூடிய உயர்ந்த ஜீவன்கள்… சித்தர்கள்னு நினைக்கிறேன், குருதேவா.


காகபுசண்ட மாமுனிவர் :- அடுத்து போகட்டும்.


அடியவர் 4:-  குருநாதா, சித்துன்னு சொல்ற மாதிரி… இந்த உயிரை உணர்ந்தவர்கள் சித்தர்கள்.


காகபுசண்ட மாமுனிவர் :-  ஏது என்று புரிய, ஏது என்று சொல்ல 


சுவடி ஓதும் மைந்தன் :- ஏது என்று புரிய… 


ஏது என்று சொல்ல என்றார். ஏது என்று புரிய, ஏது என்று சொல்ல. அடுத்து.


அடியவர் 1 :- ஐயா, சிவத்தை உணர்ந்தவர்கள் சித்தர்கள்னு சொல்லலாம், ஐயா. சி-ன்னா சிவம்.


அடியவர் 7:-  தன்னையும் அறிந்து, இறைவனையும் அறிந்து, உணர்ந்தவர்கள். 


காகபுசண்ட மாமுனிவர் :- அடுத்து, 


சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்து.


அடியவர் 8:- ஐயா, சித்தத்தை அடக்கி ஆண்டவர்கள், ஐயா.



காகபுசண்ட மாமுனிவர் :-அடுத்து..


சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்து  அடுத்துனு வருது. 


அடியவர் 1:-  சித்தர்களை முற்றும் தெரிந்தவர்கள். 



காகபுசண்ட மாமுனிவர் :- இதை எல்லாம்—எதை என்று புரிய, அனைத்தும் தெரிந்ததே. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இதெல்லாம் எல்லாருக்கும் தெரியுமாம். தெரியாதது ஒன்று சொல்ல சொல்றார்.


அடியவர் 5:- குருநாதா, எனக்கு என்ன தெரிகிறது என்றால், நாயோட்டு மந்திரம் ஆகிய சி-மந்திரத்தை முழுமையாக உணர்ந்து, அறிந்து, தெளிந்து, உணர்ந்தவர்கள் என கருதுகிறேன், குருநாதா.


காகபுசண்ட மாமுனிவர் :- அட, மானிடர்களே, மந்திரங்கள் என்ன? எதை என்று கூற, அறிய, மந்திரங்கள் சொன்னால், அனைத்தும் வந்துவிடுமாம். பின் மனது தூய்மை இல்லாமல் சொன்னால், என்ன லாபம்? மந்திரங்களாவது…. பின் வணங்குதாவது….


அடியவர் 1:- ஐயா, சிவத்தை உணர்ந்து, தர்மத்தை போதிப்பவர்கள் சித்தர்கள், ஐயா.


அடியவர் 1:-  “சி”….”த்”….”த” - ன்னா …. தர்மம்.    “சி”-ன்னா சிவம்.


அடியவர்:-  சித்தர்கள் வாழும் காலத்திலேயே, மனம், மெய், ஒளி மூன்றையும் இறைவனை ஒடுக்கி அடங்கியவர்கள். 


காகபுசண்ட மாமுனிவர் :- எதை—ஏது—அதாவது, சொல்கின்றேனடா, மானிடா. 


===========================

# உடம்பு என்ற பானையில் இறைவனை வரவழைப்பதே சித்தம். 

===========================


காகபுசண்ட மாமுனிவர் :- இதற்கு அறிந்தும்—சித்தம்—எவை என்று கூற, பின் பானை என்றும் வைத்துக்கொள்ளலாம். இவ் பானையில் இறைவனை வரவழைப்பதே சித்தம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா? 


அடியவர்:-  பானை 


சுவடி ஓதும் மைந்தன் :-  சித்தம் என்பது என்னன்னு தெரியுங்களா, ஐயா? ஐயா, ஒரு—ஐயா, 


அடியவர் 9:- புரியுதுங்க..


சுவடி ஓதும் மைந்தன் :-   புரியுதுங்களா? சித்தம் என்றால், ஒரு பானை மாதிரி. அந்த பானையிலேயே இறைவனை வரவழைக்கிறது தான் அவங்க சித்தம்ன்றார் வந்து. 


அடியவர்:-  உடம்பு வந்து, உடம்பே ஒரு பானை மாதிரி. பானைக்குள்ள எப்படி தண்ணிய அடக்குறோமோ, அதே மாதிரி இறைவனை வந்து, அந்த பானைக்குள்ள வந்து, அடக்கணும்ங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ம்….


அடியவர்:-  வாழும் காலத்திலேயே. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, புரியுதுங்களா, ஐயா? எக்ஸ்பிளைன் பண்ணுங்க, யாராவது ?


அடியவர் 5:- ஐயா, புரிந்த வரையில, தற்பரன் அப்படின்னு ஒரு வார்த்தை சொல்லுவாங்க. உயர்ந்த வார்த்தை. தனக்குள் பரனை சேர்த்து வைக்கக்கூடிய, வச்சுக்குறவங்க, தற்பரன் அப்படின்னு …நிலைக்கு அடைஞ்சிட்டாங்கன்னு சொல்லுவாங்க. அதுபோல தான் புஜண்டர் அப்பா  சொல்றாங்கன்னு நினைக்கிறேன். சித்தம் என்று சொல்லக்கூடிய இந்த தனக்குள்ள இறைவனை வந்து முழுமையாக நிலைநிறுத்தியவர்கள் சித்தர்கள். அப்படின்னு புரியுது.


காகபுசண்ட மாமுனிவர் :-  ஏது—எப்படி—எவை என்று கூற, பானை. 


சுவடி ஓதும் மைந்தன் :-  எப்படி பானை என்று நான் சொன்னேன். அது யாருக்காவது தெரியுமான்றார். 


அடியவர்கள் :- ( அமைதி )


காகபுசண்ட மாமுனிவர் :-  இதனால்தான் சொல்வதை கேட்க வேண்டும். பின் அறிந்தும்—அகத்தியன் எத்தனை எத்தனை சொன்னான்? யாருக்காவது தெரியுமா என்ன? 


சுவடி ஓதும் மைந்தன் :-  எத்தனையோ விஷயங்களை அகத்தியன் சொல்லி இருக்கார் வந்து. யாருக்காவது தெரியுமா என்னன்னு கேக்குறாரு. 


காகபுசண்ட மாமுனிவர் :- ஏதோ சித்தன் சொல்கின்றான். பின் அதைத்தன் எவை என்று புரிய, ஏதோ விட்டுவிடுவது. ஆனால் மனிதன், அதாவது, வாயால் சொல்வான். எதை என்று கூற, அதாவது, இறந்து போனவன் வாயால் சொல்வான். அதை கேட்டிட்டு, எதை எதையோ, எவை என்று அறிய. 


காகபுசண்ட மாமுனிவர் :- அதாவது, பின் இறந்துட்டவன், பின் எப்படி—அதாவது, மனிதன், பின் உயிரோடு இருக்கின்றான் என்று எண்ணி விடாதீர்கள். 


காகபுசண்ட மாமுனிவர் :- இறந்தவன், இறந்தவன், எதை என்று புரிய, ஏதோ சொல்லிக் கொண்டிருப்பான். அதனால் நீங்கள் அதை பயன்படுத்திக் கொண்டு, நீங்களும் அதேபோல் செய்தால், உங்களுக்கு எப்படி? அதாவது, நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். 


காகபுசண்ட மாமுனிவர் :-  பின், அதாவது, இறந்தவன்  பேச்சை கேட்டால், நீங்களும் பின் அனைத்து விஷயங்களையும் கூட, பின் எதை—ஏது என்று கூற. 



சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, என்ன சொல்றாரு தெரியுங்களா?


அடியவர் 5 :- புரியுதுங்க, ஐயா. 


காகபுசண்ட மாமுனிவர் :-  இவை—ஏது என்று புரிய, இப்படி இருந்தால், அறிந்தும்—அதாவது, இறந்தவன் சொன்னால், உங்களுக்கு ஏதாவது நடக்குமா?..... என்று சொல்லுங்கள், பார்ப்போம்?


சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன சொல்றாரு தெரியுங்களா? மனுஷன் ஏதோ சொல்றான்னா, அதையே நீங்க சொல்லக்கூடாதுன்றார் வந்து. அதை சொல்றான், இதை சொல்றான், இப்படி பயன்படுத்தலாம், அப்படி பண்ணலாம், இப்படி பண்ணலாம்னா, மனுஷன் யார்? 


சுவடி ஓதும் மைந்தன் :-  அவர் காகபுஜண்டர் சொல்றாரு. அடுத்த சித்தர் யாரோ சொல்லுவாரு இங்க வந்து. காகபுஜண்டர் அவர் எடுத்துக்காட்டா   என்ன சொல்றாருன்னா, மனுஷன் என்பவன் இறந்தவன். அந்த இறந்தவன் வாக்கு உனக்கு சொன்னா, என்ன ஆகும் வந்து? 


அடியவர் :- இறந்து போன வாய் அது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இறந்து போன வாய் சொன்னா, அது யூஸ் இல்லாதது. அப்போ நீங்களும் என்ன? நீங்களும் யூஸ் இல்லாதது. 


அடியவர் 1:-  இறந்தவர் போல  


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்படித்தான் ஐயா, புரியுதுங்களா இது? 


அடியவர் 1:-  புரியுது அய்யா.


அடியவர் :-  அப்போ அவங்களை ஃபாலோ பண்ணா…. நம்மளும் அப்படித்தான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  இறந்தவனை வந்து ஃபாலோ பண்ணீங்கன்னா, நீங்களும் வந்து, உங்களுடைய இதுவும் வந்து, எப்படி ஒன்னும் நடக்காதுன்றாரு இல்லையா? ஐயா, புரியுதுங்களா?


அடியவர் 7 :- புரியுது, ஐயா. அதாவது, நம்ம நம்மளே சுயமா பரிசோதனை செய்து, இறைவனை உணரணும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  கரெக்ட், கரெக்ட். இதுதான் சத்தியம். நீங்க சொன்னீங்க பாரு, இதுதான் இது,  ஐயா. 


காகபுசண்ட மாமுனிவர் :-  இதனாலே, அகத்தியன் ஓடோடி வந்து சொல்லிக் கொண்டிருக்கின்றான். உனை, அதாவது, உங்களை நீங்கள் எப்போது வெல்வீர்கள் என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால்தான் அகத்தியன் அடிக்கடிக்கு வந்து, முதல்ல உங்களைப் பற்றி தெரிஞ்சுக்கோங்கடான்றார் வந்து. 



காகபுசண்ட மாமுனிவர் :-  அறிந்தும்—எது என்று புரிய, அதாவது, உங்களைப் பற்றியே நீங்கள் தெரிந்து கொள்ளவில்லை என்றால், இறைவனைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வீர்களா என்ன? 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா? 


அடியவர் 3:- சரிதான், ஐயா. 


காகபுசண்ட மாமுனிவர் :- முதலில் நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள். பின்பு இறைவனை பார்ப்போம். இறைவனை ஒரு பக்கத்தில் வையுங்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :-  இறைவனை ஒரு பக்கத்தில் வைப்பா  என்றார். ஐயா.


அடியவர் 7:- குருநாதா, எங்களை நாங்கள் அறிந்து கொள்ள, முதல் முதல் முன்னெடுப்பு என்னவாக இருக்க வேண்டும்?


===========================

# அகத்திய மாமுனிவர் நினைத்தால் மட்டுமே உங்களை நீங்கள் அறிய முடியும்

===========================


காகபுசண்ட மாமுனிவர் :- அறிந்தும்—ஏது என்று புரிய, உங்களால் அறிந்து கொள்ள முடியாது. அகத்தியனே தீர்வு. இதனால் அவன் முடிவெடுத்தால், நீங்கள் உங்களை அறிந்து கொள்ளலாம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால, உங்களை எல்லாம் நீங்கள் அறிந்து கொள்ள முடியலன்றார் வந்து. அதனால, அகத்தியர் வந்து, கெட்டியா பிடிச்சுக்கோங்க. அவர் முடிவெடுத்தார்னா, உங்களைப் பற்றி நீங்கள் அறிஞ்சுக்கலாம்ன்றாருங்க, ஐயா. 


அடியவர்கள் :-  (அமைதி)


===========================

# உயிர் எதை நோக்கிச் செல்கின்றது?

===========================


காகபுசண்ட மாமுனிவர் :-  மானிடனே, அறிந்தும்—உயிர் எதை நோக்கிச் செல்கின்றது என்று யாருக்காவது தெரியுமா?


அடியவர் 1:-  இறப்பை நோக்கி செல்கிறது, ஐயா.


காகபுசண்ட மாமுனிவர் :- எதை—ஏது என்று புரிய, அதாவது, இதையெல்லாம் மனப்பாடம் என்று நினைக்கின்றேன். 


அடியவர்கள் :- ( சிரிப்புகள் )


சுவடி ஓதும் மைந்தன் :-  இதெல்லாம் மனப்பாடம் பண்ணி சொல்லுறீங்களேப்பா. அப்படித்தான்ப்பா நினைக்கிறேன்றார்.



அடியவர் 1:- உண்மைதான் அய்யா. 


அடியவர் 1:- ( முன்பு குருநாதர் மதுரையில் உரைத்த  வாக்கை நினைவு கூர்ந்து… )  நாங்க ஒவ்வொரு நாளும் இறந்துட்டு தானே இருக்கோம்.



காகபுசண்ட மாமுனிவர் :- உயிர் எப்படி—அதாவது, போகின்றது என்று. அறிந்தும்—அதாவது, எவை என்று கூற, போட்டி, பொறாமை, காமம், இன்னும் பல பல மாயையை நோக்கி, பின்புதான் இதிலெல்லாம் நுழைந்து தான் கடைசியில் சென்று விடுகின்றது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, புரியுதுங்களா?


அடியவர் 1:-  புரியுது.



===========================

# எப்போது உயிர் இறைவனை சந்திக்கும்?

===========================


அடியவர் 1:-  இந்த ஆறு குணத்துல……போட்டி, பொறாமை, பேராசை, சினம், கடும்பற்று, உயர்வு தாழ்வு  மனப்பான்மை, வஞ்சம். 


காகபுசண்ட மாமுனிவர் :-  இதை எவ்வாறு, இவையெல்லாம் எப்பொழுது இல்லாமல் இருக்கிறதோ, அப்பொழுது அவுயிர் நேரடியாக இறைவனை சந்திக்கும். அப்பொழுதுதான் நீங்கள் நினைக்கும் காரியங்கள் நடைபெறும். இல்லையென்றால், பின் நீங்கள் எவ்வளவு இறைவனை வணங்கினாலும், வீணே. 


சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, என்ன சொல்றார் தெரியுங்களா? ஐயா, யாராவது சொல்லுங்க, ஐயா.


அடியவர் 5:- ஐயா, வாழும் காலத்திலேயே, இந்த போட்டி, பொறாமை, இந்த கீழான எண்ணங்கள் முழுமையா நீங்கி, தூய நிலையில இருக்கிறபோது, அந்த மனிதன் இறைவனை உணர்வான். அதுக்கப்புறம் தான் வாழ்க்கையில…



சுவடி ஓதும் மைந்தன் :- உயிர் என்பது டைரக்டா இறைவனை பார்ப்போம்ன்றார். அப்பொழுது நம்மளுக்கு எல்லாமே நடக்கும்ன்றார்.



அடியவர் 5:-  ஆமாங்க, ஐயா.


===========================

# தெரியாமல் எதை செய்தாலும் பாவம் உங்களுக்கே.

===========================


காகபுசண்ட மாமுனிவர் :-  ஏது—இவை அறிந்து, எவை அறிவித்து, இதனாலே தெரியாமல் எதை செய்தாலும், அறிந்தும்—பின் வினை உங்களுக்கே. 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, தெரியாம எதை செய்தாலும், பாவம். ஐயா.புரியுதுங்களா, ஐயா? 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, இது மாதிரி யாருமே சொல்ல மாட்டாங்க, ஐயா. ஆனா, இது மாதிரி இவர் சொல்றாருன்னாவே, ஒரு விதத்துல நீங்க ஏதோ ஒரு கஷ்டத்துல அடிபட்டு, நொந்துட்டு தான் இருக்கிறீங்கன்னு தான் தெரிஞ்சுக்கோங்கன்னு தான் சொல்றாரு இவர் வந்து. 


சுவடி ஓதும் மைந்தன் :-  சாதாரணமாக எல்லாம் சொல்ல மாட்டாரு இவர் காகபுஜண்டர் எல்லாம் வந்து. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஏதோ ஒரு விதத்துல சிக்கி, அழிந்து, சீரழிஞ்சு, ஏதோ ஒரு வந்துருக்கு. அப்படித்தான் இதெல்லாம் சொல்லுவாரு. நல்லா பக்குவம், எப்படியோ வந்து, ஏதாவது வச்சு, பொழைச்சுக்கோடாப்பான்னு சொல்லிட்டு தான் வருவாங்க, ஐயா. காகபுஜண்டர் எல்லாம் சொல்லுவாருங்க, ஐயா. ஐயா, புரியுதுங்களா, ஐயா?


அடியவர்கள் :- புரியுது, ஐயா.


===========================

# இறைவனை குறித்து மனிதனின் உளறல்கள்….

===========================


காகபுசண்ட மாமுனிவர் :-  இதனால், இறைவன் என் உயிர் என்பது.  என் உயிர் மூச்சு என்பது. இவையெல்லாம் இறைவன் பார்க்கத்தான் போகின்றானா? கேட்கத்தான் போகின்றானா? இறைவன் எதை என்று புரிய, அறிந்தும்—மானிடன் தெரியாமல் உளறிக் கொண்டிருக்கின்றான். 


சுவடி ஓதும் மைந்தன் :-   அது தெரியாம மனுஷன், இறைவன் தான் என் உயிர். இறைவன் தான் என் பேச்சு.. என் மூச்சு… அவர் தான் எல்லாம் சொல்லிட்டு, 


அடியவர் :-  கதை பேசுறது. 


சுவடி ஓதும் மைந்தன் :-   கதை பேசுறது. 


===========================

# நல்லது செய்தும் ஏன் தீயவை நடக்கின்றது ? 

===========================


காகபுசண்ட மாமுனிவர் :-  அறிந்தும்—இதனால், பின் எவை என்று அறிய, பின் அனைத்தும் செய்தாலும், எத்தனை நன்மைகள் செய்தாலும், எத்தனை புண்ணியங்கள் செய்தாலும், ஏன் ஒருவனுக்கு தீயதாகவே நடக்கின்றது என்று யாருக்காவது உணர்ந்து, உணர்ந்து, அதாவது, பின் யாருக்காவது தெரியுமா என்ன? 


சுவடி ஓதும் மைந்தன் :-   எவ்வளவோ நன்மை செய்றோம். ஏன் கெட்டதா நடக்கு, ஏன்? ஏன்னு கேக்குறாருங்க, ஐயா. 


அடியவர் 5:- நன்மை செய்றோம். 


சுவடி ஓதும் மைந்தன் :- ஆனா, ஏன் கெட்டது நடக்குது?


அடியவர் 6:- ஐயா, முன்வினை கர்மா, முற்பிறவி கர்மா இருக்கு.


காகபுசண்ட மாமுனிவர் :-  மானிடா, இவை அனைவரும் சொல்வதே. 


சுவடி ஓதும் மைந்தன் :-   அப்பா, இது எல்லாரையும் சொல்வதுதான்ப்பா. எல்லாமே சொல்வதுதான், எல்லாருமே. ஆமா, இது எனக்கும், எல்லாருக்கும், அது வந்து என்ன சொல்றது? பூர்வ ஜென்ம கர்மா, உணர்வு கர்மான்னு எல்லாரும் சொல்றாங்கப்பா.


அடியவர் 5:- ஒருபுறம் புண்ணியங்கள் செய்துட்டு, தர்மங்கள் செய்துட்டு, இன்னொரு பக்கம்… 



அடியவர் 5:- நம்முடைய மனதுல எல்லாவிதமான போட்டி, பொறாமை இருக்கிறபோது, இறையருள் கிட்டாம போயிடும்.. அப்படின்னு.. அதுதான் காரணம்னு நினைக்கிறேன், குருதேவா.


சுவடி ஓதும் மைந்தன் :-  என்னது? 


அடியவர் 10:- ஐயா, அதாவது, தர்மம் செய்யும்போது, ஒரு பக்கம் தர்மம் செஞ்சாலும், ஒரு பக்கம் வந்து பாத்தீங்கன்னா, போட்டி, பொறாமை, அழுக்கோட செய்யும்போது, கிடைக்காது, அப்படின்றாரு. 


காகபுசண்ட மாமுனிவர் :-  எதை—ஏது என்று புரிய, நீங்கள் எதை எதிர்பார்த்து செய்கின்றீர்களோ…அது தர்மமும் இல்லை, தானமும் இல்லை, புண்ணியமும் இல்லை. 



சுவடி ஓதும் மைந்தன் :-  எதிர்பார்த்து செய்றது வந்து, எனக்கு அது நடந்தா, இது பண்ணா, எனக்கு அது நடக்கும்ன்னு சொல்லி, நீங்க செய்றது வந்து, தானத்துலயும் சேராது.


அடியவர் 1:- தர்மத்துலயும் வராது…. புண்ணியத்துலயும் வராது.


சுவடி ஓதும் மைந்தன் :-  தர்மத்துலயும் வராது. 


காகபுசண்ட மாமுனிவர் :-  அப்பொழுது நீங்கள் வெற்றே. பின்பு உளறிக் கொண்டிருக்க வேண்டியதுதான். நான் தர்மம் செய்தேன், புண்ணியம் செய்தேன் என்று. என்ன லாபம்? மனதில் இவ்வளவு அழுக்குகள் வைத்துக்கொண்டு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, புரியுதுங்களா?


அடியவர் 1:-  புரியுதுங்க, ஐயா. புரியுது, ஐயா. புரியுதுங்க.


காகபுசண்ட மாமுனிவர் :-  அறிந்தும்—இதனால்தான்—இதனால் எதை என்று புரிய, இறைவன் யார் என்றே தெரியவில்லை. இறைவனுக்கு அபிஷேகங்கள், ஆராதனைகள், இன்னும் என்னென்னவோ, பின் கொடுப்பானா இறைவன்? 


சுவடி ஓதும் மைந்தன் :-  இறைவன் யார் என்றே தெரியல. அபிஷேகங்கள், ஆராதனைகள், போற்றி சொல்லிட்டால். ஏன் இதெல்லாம்? 


காகபுசண்ட மாமுனிவர் :-  ஏனடா மனிதா, இவையெல்லாம்? 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஏனடா மனிதா, இவையெல்லாம்? எதற்காகடா செய்கின்றீன்னு கேக்குறாங்க, ஐயா. 


காகபுசண்ட மாமுனிவர் :-  அனைத்தும் இறைவனை பாதுகாக்கவா? அல்ல.  மனிதனை பாதுகாக்கவே. உன்னை நீ பாதுகாத்துக்கொள்ள. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, புரியுதுங்களா, ஐயா?


அடியவர் 1:- புரியுது, ஐயா.


சுவடி ஓதும் மைந்தன் :-  புரியணும். இப்படி செய்தால் நமக்கு நல்லது நடக்கும்.  ஐயா?


அடியவர் 3:- புரியுதுங்க, ஐயா.


அடியவர் 1:- புரியுது, புரியுது.


===========================

#  நல் எண்ணங்கள் தான் உன் உயிரையே காக்கும்.

===========================


காகபுசண்ட மாமுனிவர் :-  எவை என்று அறிய, இதனால் எதை என்று கூற, அப்படி. அதாவது, உயிர் காப்பது யார்? 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, யாருமே காக்க மாட்டாங்க. அப்ப, கடைசில உயிர் காப்பது யார்?


அடியவர் 3:- இறைவனும் சித்தர்களும் தான் உயிர் காப்பாற்றுவார்கள் கடைசியில்…


காகபுசண்ட மாமுனிவர் :-  மானிடனே, இவ்வளவு சொல்லியும் ஒன்றும் கேட்கவில்லை. இறைவனும் எவை என்று அறிய, இதனால் எவை என்று புரிய, அதாவது, 


***** பின் நல் எண்ணங்கள் தான் உன் உயிரையே காக்கும். *****


அவ்வளவுதான்.


அடியவர் 5:- சரிங்க, குருதேவா.


சுவடி ஓதும் மைந்தன் :- உயிர் காப்பான்ட்டாரு. 


அடியவர் :- அவனவன் உயிருக்கு , அப்படின்றப்போ, அவனுடைய எண்ணங்களை சுத்தமா வச்சுக்கிட்டானா, அந்த இறைவன் வந்து காக்க முடியும். மேற்கொண்டு அடுத்த லெவல் போக முடியும். இல்லைனா  அடிப்படையில இருக்க வேண்டியதுதான். 


சுவடி ஓதும் மைந்தன் :- புரியுதுங்களா, ஐயா? நம்ம நல்ல எண்ணங்கள் வந்து, நமக்கு உயிரை  காப்பாத்தும். 


காகபுசண்ட மாமுனிவர் :-  அவ் நல்லெண்ணங்கள், அவன் நல் உள்ளங்கள், அதாவது, நல் எண்ணங்கள். இல்லையென்றால், பின் அதாவது, தானும் அழிவான். பின் தன்னை சார்ந்தோரும், பின் சார்ந்தவரையும் அழிப்பான். அழகாக. இறைவன் எப்படி இதற்கு பொறுப்பாக, பொறுப்பாக முடியும்? மானிடர்களே , சொல்லுங்கள், நீங்களே. 


சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றார் தெரியுங்களா? மனசே சரியில்ல. அப்ப, என்ன ஆகும்? 


அடியவர் :- மனசுல அழுக்கு, போட்டி, பொறாமை, கோபம், இந்த மாதிரியான எண்ணங்களை வச்சிட்டு, இறைவனை வணங்கினா, இறைவன் என்ன? இறைவன் பொறுப்பு. 


காகபுசண்ட மாமுனிவர் :-  எதை—ஏது என்று அறிய, தவறு செய்தாலும், அகத்தியன் தப்பித்து வைத்துக் கொண்டிருக்கின்றான் உங்களை. அவ்வளவுதான், கடைசியில் யான் சொல்ல முடியும். 



சுவடி ஓதும் மைந்தன் :- ஒரே வரில முடிச்சுட்டாரு. தவறு செஞ்சாலும்? 


அடியவர் :- குருநாதர் புண்ணியத்துல தான்  தப்பிச்சுட்டு இருக்காங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியர் வந்து உங்களை வந்து காப்பாத்திட்டு இருக்காரு. 


காகபுசண்ட மாமுனிவர் :-  திருந்துவான், திருந்துவான் என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :- திருந்துவான், திருந்துவான் என்று. 


===========================

#  எமதர்மராஜா  பாசக்கயிறு  ரகசியங்கள்.

===========================


காகபுசண்ட மாமுனிவர் :-  ஆனால், அறிந்தும் பாசக்கயிரோன் வந்துவிட்டால், அவ்வளவுதான். 


சுவடி ஓதும் மைந்தன் :- பாசக்கயிறு என்றால் …. எமதர்மராஜா.


அடியவர்கள் :- எமதர்மராஜா.


காகபுசண்ட மாமுனிவர் :-  என்ன செய்வான்? கூறுங்கள் பார்ப்போம். 


சுவடி ஓதும் மைந்தன் :- என்ன செய்வான்? என்ன செய்வார்? அவர் என்ன செய்வார்ப்பா? ன்னு கேக்குறாருங்க, ஐயா.


அடியவர்கள் :-  உயிரை எடுப்பாராம்.


காகபுசண்ட மாமுனிவர் :-  அட, அட, மானிடர்களே , இதை கூட தெரியாமல் இருக்கின்றீர்கள். அதாவது, பாசக் கயிறை வீசுவான். உங்களிடத்தில் எவ்வளவு அழுக்குகள் இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு பாசக்கயிறு மெதுவாக உங்களிடத்தில் வருகின்ற பொழுது, நோய்களும், மனம் கஷ்டங்களும், இன்னும் எது எதுவோ வரும். பின்புதான், பின், அதாவது, பின்,அது, (பாசக்கயிறு) அவை என்று கூற, உன்னை தாக்கி, பின்பு உயிர் எடுக்கும். 


சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றாரு தெரியுமா?


அடியவர்கள் :- உடனே எடுக்காது.


சுவடி ஓதும் மைந்தன் :- உடனே உன்னை, உடனே உன்னை வந்து, அது டக்குனு வந்து, உன்னோட அழுக்கை பொறுத்து…


அடியவர்கள் :- கிட்ட வரும். 


சுவடி ஓதும் மைந்தன் :- கிட்ட வரும். (பாசக்கயிறு) அங்க போடுறது வந்து, மெதுவா என்ன பண்ணுவாரு வந்து, அதுக்கு?  


அடியவர் :- வச்சி செஞ்சுட்டு…. 


சுவடி ஓதும் மைந்தன் :- மெதுவா அங்கிருந்து எவ்வளவு நம்ம எண்ணங்களோ, அழுக்குகள், நம்ம பாவங்கள் இருக்கின்றதோ, 


அடியவர்கள் :- நோயை  கொண்டு வரும். 


சுவடி ஓதும் மைந்தன் :- அது இல்ல, அது வரும். அங்கிருந்து வர, ஐயா, அப்படி இல்லைங்க, ஐயா. வீசும்போதே, அது மெதுவா வரும். ஒரு வருஷமோ, ரெண்டு வருஷமோ, மூணு வருஷமோ, நாலு வருஷமோ, அஞ்சு வருஷமோ, ஆறு வருஷமோ, நம்மளுக்கு, ஐயா, புரியுதுங்களா, ஐயா?


சுவடி ஓதும் மைந்தன் :-  புரியுதுங்க, ஐயா. 


அடியவர் 7 :- அப்படி பாசக்கயிறு வரும்போது, அதிக கர்மாக்களோ, பாவங்களோ இருந்தா, விரைவில் நம்மளை அடையும். அந்த அடைகின்ற நேரத்திற்கு ஏற்ப, நோய் நொடிகள் வந்து, கடைசியில் உயிரை எடுக்கும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்படி இல்ல அய்யா… 


அடியவர் 7 :-  நோய் நொடிகள்ங்கிறது வேற. அதாவது, அதிக கர்மாக்கள் இருக்கிறப்போ, மிக மிக மெதுவாக வந்து கொண்டிருக்கும். வந்து கொண்டிருக்கிற பொழுது…நோய்கள் வரும்… மத்த பிரச்சனைகள் வரும்….அனைத்து கெடுதல்களும் நடந்து கொண்டே இருக்கும்….இறுதியில், பாசக்கயிறால் எடுத்து விடுவார்.



சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த பாசக்கயிறு வர்றதுக்கு, ஒரு ஒரு வருஷமோ, ரெண்டு வருஷமோ, மூணு வருஷமோ, நாலு வருஷமோ, அஞ்சு வருஷமோ, ஆறு வருஷமோ, ஏழு வருஷமோ, எட்டு வருஷமோ, இல்லனா ஒரு பத்து வருஷமோ வரும். 


காகபுசண்ட மாமுனிவர் :-   அறிந்தும் மீண்டும் எதை என்று புரிய, மீண்டும் அவ் வருடங்களில் கூட, மீண்டும் அவனிடத்திலே திருப்பி அனுப்ப புண்ணியங்கள் தேவைப்படுகின்றது. ஆனாலும், அப் புண்ணியங்கள் சில நேரங்களில் வேலை செய்வதே இல்லை.


சுவடி ஓதும் மைந்தன் :-  இப்ப, மெதுவா வருகின்ற பொழுது, சித்தர்கள் வந்துருவாங்க. அப்படித்தான் சொல்றாரு வந்து.  சித்தர்கள் வந்துட்டு, டேய், இதெல்லாம் புண்ணியம் செய்டா , புண்ணியம் செய்டான்னா கூட, நீங்கள் என்ன பண்ண மாட்டீங்க, ஐயா. புண்ணியம் செய்யப் போவதில்லை. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அது என்ன ஆகுது, ஐயா? வந்துட்டே, நெருங்குது வந்து. ஒருவேளை நீங்க வந்து, நிறைய நல்ல மனசு, திருந்தி , ஒழுங்கா இருந்தீங்கன்னா, அது என்ன ஆகும்? இன்னும் திருப்பி, அவர்களிடம் போகணும்ன்றாரு.



அடியவர் 9 :- சில புண்ணியங்கள் வேலையும் செய்றாங்க.


சுவடி ஓதும் மைந்தன் :-  புரியுதுங்களா, ஐயா?


அடியவர் 3:- புரியுதுங்க, ஐயா.


சுவடி ஓதும் மைந்தன் :-  எனக்கும் புரியல. ஏன்னா, ஃபர்ஸ்ட் டைம். இதெல்லாம் சில விஷயங்கள் சொல்றாரு. யாருக்குமே புரியாது. நம்மளே வந்து, ( இந்த வாக்கை தட்டச்சு செஞ்சு) ஒரு கணக்கு எழுதி, திருப்பியும் கேட்டு, இதெல்லாம் தெரிஞ்சு,நம்ம கரெக்டா இருக்கணுங்க, ஐயா. அப்பதானே நமக்கு நல்லது நடக்கும். ஆமா, ஐயா.


அடியவர் 5:- ஐயா, குருதேவர் கிட்ட கேளுங்க. அந்த சில புண்ணியங்கள் வேலை செய்யாதுன்னு சொல்றதுக்கு என்ன பொருள்?  அப்பா சொல்றாங்கன்னு ( கேட்டு சொல்லுங்க )


காகபுசண்ட மாமுனிவர் :-    ஏது என்று புரிய, அதாவது, அறிந்தும் இதை தன் அறிய, அக் கயிறு பின் வந்து கொண்டே இருக்கின்ற பொழுது, அறிந்தும் எதை என்று அறிய, எப் புண்ணியமும் வேலை செய்யாது. 


காகபுசண்ட மாமுனிவர் :- ஆனாலும், மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும், அறிந்தும் பல வகையில் நன்மைகள். அதாவது, நல் மனதாக பின் ஏற்று செய்தால், அறிந்தும் கடைசியில் தான் எவை என்று நெருங்க, பின்பு எவை வெளிச்சத்திற்கு, எவ்வளவு எவை என்று, அவ் வெளிச்சத்தை பார்த்து, எவை என்று கூற, மீண்டும் பின் பின்னோக்கி செல்லும் அக்கயிறு. 


காகபுசண்ட மாமுனிவர் :-  அதாவது, எதை என்று புரிய புண்ணியம் தான் இங்கு வெளிச்சம் என்றும் நினைத்துக் கொள்ளலாம். பின், மானிடனே.


அடியவர் 5:- புரியுது, குருதேவா. நன்றி, குருதேவா.


சுவடி ஓதும் மைந்தன் :-  எனக்கும் புரியல. ஒரு தட்டச்சு செஞ்சு போடுங்க, ஐயா.


அடியவர் 7:-  சூப்பரான பதில் .


சுவடி ஓதும் மைந்தன் :-  புரியுதுங்களா, ஐயா?


அடியவர் 5:- புரியுது, ஐயா.


காகபுசண்ட மாமுனிவர் :-    அதனால், உன் ஆன்மா சக்தியை நீங்கள் பெருக்க வேண்டும். எப்படி பெருக்குவது? முதலில் நல்லெண்ணங்களை, அப்பொழுதுதான் பெருக்க முடியும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  உன் சக்தி எப்படி பெருக்குறது? 


அடியவர் 10:- ஆன்ம சக்தியை கூட்டுறதுக்கு நல்ல எண்ணங்கள்னு சொல்லிட்டாரு. நல்ல எண்ணங்கள் தான். 


காகபுசண்ட மாமுனிவர் :-    இவையெல்லாம் உணராமல், யான் சித்தனை வணங்குகின்றேன். யான் இறைவனை வணங்குகின்றேன் என்றால், அவனுடைய பின் எவை என்று புரிய பின் அவனை விட ஒரு முட்டாள் இங்கு  இல்லை.



அடியவர் 7:- தந்தையே, ஒருவரிடத்தில் எவ்வளவு நல்லெண்ணங்கள் இருப்பது என்று என்பதற்கான அளவு போல் புரியுடுகிறது என்ன, தந்தையே?


காகபுசண்ட மாமுனிவர் :-    அறிந்தும் ஏது என்று புரிய, அதாவது, எவை என்று இப்படியும் யான் சொல்வேன்.  குழப்பி விடுவான். அதாவது, குழப்பி விடுவான். புசண்டன் என்று நினைத்து விடாதீர்கள். அதாவது, பின் இவை தன் அறிய, நீங்கள் நலமாகவே அறிந்தும், பின் இருந்தாலும், அதற்கு அருள் சித்தர்கள் தான் தர வேண்டும். 


சுவடி ஓதும் மைந்தன் :-   அந்த மனசு, நல்ல மனசு வருவதற்கும், அவங்கதான். சித்தர்கள் தான்ப்பா வாய்ப்பு தரணும். 


காகபுசண்ட மாமுனிவர் :-   இதனால், சித்தன் பேச்சை கேட்டால், பின் நிச்சயம் தருவான். 


சுவடி ஓதும் மைந்தன் :-   இதனால, சித்தன் பேச்சை கேட்டா?


காகபுசண்ட மாமுனிவர் :-    ஆனாலும் கேட்க முடியாதே. 


சுவடி ஓதும் மைந்தன் :-   ஆனாலும், முடியாதுப்பா, உங்களால சித்தன் பேச்சை. ஐயா, புரியுதுங்களா, ஐயா?


அடியவர் 3:- புரியுதுங்க, ஐயா.



காகபுசண்ட மாமுனிவர் :-    எதை ஏது என்று அறிய, அவ்வளவு. ஆனாலும், இவ் அழுக்குகள் எப்படி மனிதன் உள் நுழைந்து இருக்கின்றது. குடலினில்   எவ்வாறு சரியாக, எத்தனை அளவில் இருக்கின்றது என்பதை எல்லாம் அகத்தியன் கண்டுபிடித்திருக்கின்றான். அதை சொல்வான். அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். 


காகபுசண்ட மாமுனிவர் :-    ஒரு எல்லைக்கு, அதாவது, எவை என்று புரிய, ஒரு அளவிற்கு பின் மேல் சென்று விட்டால், நிச்சயம் தன்னில் கூட எந் நோயும் பாதுகாக்க முடியாது. இதை அறிந்தே, இதனால் அறிந்தே, நிச்சயம் பின்.


சுருக்கமான, எளிய விளக்கம் :- இந்த உரையில் காகபுசண்ட மாமுனிவர் “பாசக்கயிறு” என்ற எமதர்மராஜாவின் சக்தி எப்படி மனிதனை மெதுவாக அணுகுகிறது என்பதை விளக்குகிறார். ஒருவரின் மன அழுக்கு, பாவங்கள், கர்மங்கள் அதிகமாக இருந்தால், பாசக்கயிறு உடனே உயிரை எடுக்காது; பல வருடங்கள் மெதுவாக நெருங்கி, அந்த காலத்தில் நோய்கள், மனக்கஷ்டங்கள், பிரச்சனைகள், துன்பங்கள் தொடர்ந்து வரும். நல்லெண்ணங்கள், புண்ணியங்கள் இருந்தால் அந்த பாசக்கயிறு சில நேரங்களில் பின்னோக்கி சென்று தள்ளப்படும்; ஆனால் சில சமயம் புண்ணியம் கூட வேலை செய்யாது. சித்தர்கள் வழி காட்டினாலும், மனிதன் நல்ல மனசு, நல்ல எண்ணம், ஒழுக்கம், நன்மை ஆகியவற்றை வளர்த்தால் மட்டுமே ஆன்ம சக்தி பெருகி, அந்த பாசக்கயிறின் தாக்கத்தை குறைக்க முடியும். அதிக அழுக்கு, கர்மம் இருந்தால் உடல், மனம் பாதுகாப்பு இழந்து, இறுதியில் உயிரை எடுக்கும் நிலை வரும். ஆகவே நல்ல எண்ணங்கள், நன்மை, ஒழுக்கம், புண்ணியம் — இவைதான் மனிதனை காப்பாற்றும் “வெளிச்சம்” என்று மாமுனிவர் கூறுகிறார். 


(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 12.08.2026   அன்று   அன்புடன் காகபுசண்ட மாமுனிவர் அருளிய கூட்டுப்பிரார்த்தனை குழுவினருக்கான ஞான பாடங்கள் வாக்குகள் …. தொடரும் ) 


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.