“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Wednesday, September 16, 2026

சித்தர்கள் ஆட்சி - 736 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 02/08/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த 12 வது சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 4

 இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 02/08/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த  12 வது சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 4


நாள், நேரம்  : 02/08/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை.  


இடம் : உலக நன்மைக்காக 12 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.


முழு கூட்டு பிரார்த்தனை நிகழ்வின் நேரலை :-  

https://youtu.be/npiKG6l6z6o


===========================

#   அன்புடன் முருகப்பெருமான் வாக்கு 

===========================


அனைத்தும் அறிந்து, உணர்ந்து, ஏற்றுகின்ற தாயே, தந்தையே, உமைதானே என்றும் பின் மறவேனே. 


( பகுதி 3 தொடர்ச்சியாக…… )


பகுதி 4  வாக்கின் நேரலை :- https://youtu.be/npiKG6l6z6o?t=17173 


முருகப்பெருமான்:- இதைத்தானே உணர்ந்தேனே. பின் அறிவில்லாதவர்கள் அறிந்தும் இவைத்தன் உணர்ந்து.  பின் உணர்ந்து கொண்டால் நன்று. 


சுவடி ஓதும் மைந்தன் :-   அறிவில்லாதவர்களும் அறிவு புகுத்தி  உணர்ந்து கொண்டால் நன்று. 


===========================

#   கருணைக்கடல் அகத்திய முனிவர் ரகசியங்கள்……

===========================


முருகப்பெருமான்:- இவையாவும் தொலையுமடா அறிந்தும் பின் உணர்ந்தும் இவைதன் புரிதல் பின் அகத்தியன் உருவாக்குவான். 


சுவடி ஓதும் மைந்தன் :- நான் சொன்னாலும் சில மனிதர்களுக்கு புரியாதுப்பா. இதை வந்து யார் ஏற்படுத்துவாரு? 


அடியவர்கள் :- அகத்தியர் 


சுவடி ஓதும் மைந்தன் :-  அகத்தியர் ஏற்படுத்துவார் என்று சொல்கின்றார். 


===========================

# கருணைக்கடலின் போராட்டம்…. யுகம்… யுகமாக….  

===========================


முருகப்பெருமான்:-  அகத்தியனே அறிந்தும் எவை தன் மனிதன் எப்பேர்ப்பட்ட எவை என்று கூற யுகம் யுகமாக  மனிதன் காக்கவே ஓடோடி வந்து கொண்டிருக்கின்றான். தவறு செய்தாலும் பின் சரிபார்த்துக் கொள்ளலாம் என்று. அகத்தியனுக்கு எவை என்று கூற கருணை. எவை என்று எவர் கருணை? 


சுவடி ஓதும் மைந்தன் :- முருகர் சொல்றார் அகத்தியர் பத்தி…. மனுஷன் வந்து எவ்வளவு தப்பு செஞ்சாலும் சரி பண்றதுக்காக அகத்தியர் என்ன பண்றாரு? 


அடியவர் :- யுக யுகமா வந்து 


சுவடி ஓதும் மைந்தன் :- யுக யுகமா வந்து, நான் மக்களை காப்பாத்த முடியும். நான் என்னால பண்ண முடியும். 


முருகப்பெருமான்:-  அறிந்தும் எதை என்று அறிய அகத்தியனே செல்லாதே……. என் தாயும் தந்தையும் எவை என்று கூட சொன்னாலும்….. பின் யான் செல்வேன்.  எவை என்று நீங்கள் இட்ட கட்டளையை பின் எப்பொழுதோ ஒரு வார்த்தை விட்டு விட்டீர்கள் அல்லவா?  அதை யான் நிறைவேற்றி தீருவேன் என்று. 


அடியவர் :- சிவாய நம !!!!!  சிவாய நம !!!!! 


அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள்…… )


அடியவர் :-  பெருங்கருணை !!!!!!


சுவடி ஓதும் மைந்தன் :-  சிவன் பார்வதி என்ன சொல்லி இருக்காங்களாம்?  எப்போ ஏதோ ஒரு தடவை சொல்லி இருக்காங்க 


அடியவர் :-   எப்போ ஒரு தடவைவாய் விட்டாராம் 


சுவடி ஓதும் மைந்தன் :-  நீ எல்லாம் போகாத வா மக்கள் எல்லாம் திருத்த முடியாது நான்தான் படைக்கிறேன். எல்லாம் பண்ணாராம்? ஆனாலும் இப்போ என்ன சொல்லிக்கிறாராம்? 


அடியவர் :- நீங்க சொல்லிட்டீங்க 


சுவடி ஓதும் மைந்தன் :- அதுக்காக நான் இறங்குவேன். 


===========================

# கருணைக்கடல் குறித்து மிக முக்கிய வாக்கு…..

# அவசியம் இரண்டு முறை படிக்கவும்……

===========================


https://youtu.be/npiKG6l6z6o?t=17250 


முருகப்பெருமான்:-  எவை ஏது என்று புரிய பல இழிசொற்க்களும்  பல எவை என்று கூற  வருத்தங்களும் எவை என்று கூட மனிதனாலே.  ஆனாலும் யான் விடப்போவதில்லை எதை என்று கூட அகத்தியன்…. எவை என்று புரிய…. இதை என்று அறிந்தும்… எதை ஏது என்று புரிய அறிந்தும் கூட. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப என்ன சொல்றாரு தெரியுங்களா? 


அடியவர் 2:- நிறைய பேர் தப்பு தப்பா சொல்றது இழிச்சொல்லு 


சுவடி ஓதும் மைந்தன் :-  இழிச்சொல் எல்லாமே அகத்தியனு யார் அது வந்து சொந்தம்? 


முருகப்பெருமான்:-   இவைத்தன் உணரா அறிந்தும் எதைத்தன் அறிந்தும் இவைத்தன் உணரா நிச்சயம் தன்னில் உள்ள என் தாயும் எவை என்று கூட தந்தையிடமே எவை என்று கூட எவ்வாறு பின் பின் எவை அகத்தியன் என்று சொல்லிவிட்டால் அறிந்தும் இதைத்தன் புரிய அறிந்தும் இவைத்தன் யாராவது ஒரு வார்த்தை கூறினால் நிச்சயம் தன்னில் கூட அறிந்து கொள்ளும் எவை என்று புரிய பின் என்னையே சேரும் என்று. யான் தண்டனை கொடுக்கின்றேன் என்று. 


அடியவர்கள் :- ( கைதட்டல்கள் ) 


சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றாரு தெரியுங்களா?  இது அகத்தியரை பற்றி வணங்குறவங்க வந்து… யார் என்ன சொன்னாலும்…. என்னதான் யார் என்ன சொன்னாலும்…. யாரு இப்ப வந்து இவர் அகத்தியர் பக்தர் வச்சுக்கோங்களேன்…. இவர் அகத்தியர் பக்தர்னா என்ன சொல்றாரு புரியுங்களா?  


அடியவர் 3:- நல்லது சொன்னாலும் , பொல்லாத சொன்னாலும் (குருநாதர்) தன்னை தான் சேரும் என்று சொல்லறாரு.


சுவடி ஓதும் மைந்தன் :- தன்னை அகத்தியர் தான் போய் சேரும்பா.. அது வந்து என்ன சொல்றாரு வந்து… முருகர் வந்து 


அடியவர் 2:- அகத்தியர் என்று ஒரு வார்த்தை சொல்லிட்டா வந்துருவாருங்கிறதுதான் சொல்றாரு… 


சுவடி ஓதும் மைந்தன் :-  அதான் சொல்றாரு அப்ப முருகர் வந்து அவங்க அப்பா கையில வந்து…சொல்லுங்க ஐயா. 


அடியவர் 2:- அதாவது அகத்தியர்னு பேரை சொல்லி நல்லது சொன்னாலும் கெட்டது சொன்னாலும் அகத்தியர் வந்துருவாரு. அகத்தியர் போய் சேரும். அகத்தியர் வந்து காப்பாத்துவாரு. அகத்தியர் வந்துருவாருன்னு முருகர் சொல்றாரு. 


அடியவர் 3 :-அப்படின்னா என்ன அர்த்தம் நல்லது சொல்லணும்னு அர்த்தம்.  சொன்னாலும் அப்படித்தான் போகும். 


முருகப்பெருமான்:-   இதைத்தன் இவ்வாறாக உணர எவ்வாறெல்லாம் யுகம் யுகங்களாக பார்த்துவிட்டான் அகத்தியன். பின் சாதாரண மனிதர்கள் நீங்கள் எறும்பை போலே. 


சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன சொல்றாரு தெரியுங்களா? 


அடியவர் 2:- நம்ம எல்லாம் வெறும் எறும்பு என்கிறார் 


சுவடி ஓதும் மைந்தன் :- எறும்புன்றாரு. முருகர் சொல்றாரு யுக யுகமா அகத்தியர் பல ஆட்களை பார்த்துட்டாருடா. 


===========================

# அகத்திய மாமுனிவர் , ஆதி ஈசன் , உமை அம்மை 

===========================


முருகப்பெருமான்:-  அறிந்தும் எவை என்று கூட தண்டனைகள் உடனடியாக அகத்தியனால் தர முடியும். ஆனாலும் பின் இரு என்று எல்லாம் பின் எவை அறிந்தும் கூட. பின் அகத்தியனுக்கு கருணை எவை இழுத்துக்கொண்டே போயிருக்கின்றான். ஆனால் அறிந்தும் கூட பின் என் தாய் எவை என்று கூட தந்தை பின் அப்படி இல்லை. சொல்லிவிட்டேன். 


அடியவர் 2:-  அதாவது அகத்தியர் வந்து ரொம்ப கருணை. ஆனா வந்து சிவபெருமானும் பார்வதி தேவியும் அப்படி கிடையாது. அகத்தியரை பத்தி ஏதாவது சொன்னா அவங்களுக்கு கோவம் வந்துரும். 


சுவடி ஓதும் மைந்தன் :- வந்துரும்ன்றாரு. அதே மாதிரி அகத்தியர் வந்து எப்படி இருந்தாலும்…. எந்த தவறு பண்ணாலும்…. 


அடியவர் 2:-   தண்டனை கொடுக்கல. 


அடியவர் :-  தண்டனையை இழுத்துக்கிட்டே… இழுத்துக்கிட்டே போயிட்டாராம்.. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இழுத்துட்டே போறாரு ஆனாலும்?


அடியவர் :- தாய் தந்தையர் அப்படி கிடையாதுப்பா அப்படின்றாங்க.


சுவடி ஓதும் மைந்தன் :-  தாய் தந்தை? 


அடியவர் , அடியவர் #2 :-  :- அப்படி கிடையாது 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்படி கிடையாது 


===========================

# அகத்திய மாமுனிவர் தன்  கருணையால் இவ்வுலகத்திற்கு, மனிதர்களுக்கு அறிவை கொடுத்துள்ளார்கள்.

===========================


https://youtu.be/npiKG6l6z6o?t=17383


முருகப்பெருமான்:-  எதை ஏது என்று கூறப்பின் அறிவு என்பது எவை என்று கூற,  அகத்தியன் கொடுத்ததே இவ்வுலகத்திற்கு. அவ் அறிவு எவர்  பயன்படுத்துகின்றார்கள்?. 


முருகப்பெருமான்:- அதனாலே அகத்தியன் தலை குனிந்து,  தலை குனிந்து வந்து நிற்கின்றான்.  அட அறிவாளியாக இருடா. 


அடியவர்கள் :- ( மனிதர்களை நினைத்து ஹாஸ்ய சிரிப்புகள் ) 


சுவடி ஓதும் மைந்தன் :-   அகத்தியன் என்றால்? 


அடியவர் :- அறிவு 


சுவடி ஓதும் மைந்தன் :-   அறிவு.  அப்ப எப்படி சொல்றாரு?  


அடியவர் 2 :- இந்த உலகத்துக்கு வந்து அறிவை கொடுத்தது யாருன்னா அகத்தியர். 


சுவடி ஓதும் மைந்தன் :-   அகத்தியர் தான் என்றாரு.  டேய்.. அந்த அறிவு வச்சு ஒழுங்கா பயன்படுத்துறா… 


அடியவர்  :- அகத்தியருக்கு தலை குனிவை ஏற்படுத்திக்கொண்டே (இருக்கின்றார்கள் மனிதர்கள் என்று சொல்கின்றார் ) 


===========================

# பின்வரும் வாக்கை படிக்கும் அடியவர்கள் அனைவரையும் கை கூப்பி வணங்குகின்றோம்….

===========================

# அனுதினமும் புண்ணியத்தை மட்டுமே செய்யுங்கள்…

===========================

# அனுதினமும்  புண்ணிய பாதைக்கு அனைவரையும் திருப்புங்கள்..

===========================

# அனுதினமும்  புண்ணிய வழி நடத்துங்கள் அனைவரையும்   

===========================


https://youtu.be/npiKG6l6z6o?t=17408 


முருகப்பெருமான்:-  எவை என்று கூட பின் இதை என்று அறிய பின் முட்டாளாக எவை என்று திரிந்து கொண்டிருக்கின்றான். இதனாலே அகத்தியன் யான் அறிவு கொடுத்தேனே.. யான் அறிவு கொடுத்தேன். அதை பயன்படுத்துக… என்று ஓடோடி பின் மக்களை பின் எவை என்று கூட கையெடுத்து கையெடுத்து எவை என்று புரிய. 


சுவடி ஓதும் மைந்தன் :-  முருகர் சொல்றாரு… நான் உங்களுக்கு அறிவு கொடுத்துட்டேன்டா….. நான் தான்டா குடுத்தது….டேய்  பயன்படுத்துறா… பயன்படுத்துறா… என்று சொல்லிட்டு…. தண்டனை கொடுக்காம என்ன பண்ணிருக்காரு?  


அடியவர் 2:- அகத்தியர் ஓடுறாரு 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஓடுறாரு.  டேய்….பயன்படுத்துறா… 


அடியவர் :- பெருங்கருணை 


சுவடி ஓதும் மைந்தன் :-  புத்தியை பயன்படுத்துறா… 


அடியவர் :- பெருங்கருணை 


சுவடி ஓதும் மைந்தன் :-   வாழ்ந்துருடா… வாழ்ந்து என்ன பண்றாரு 


முருகப்பெருமான்:-   ஆனால் மனிதனோ, எவை என்று கூற புத்தியை தவறாக பயன்படுத்திக்கொண்டு, அறிந்தும் எவை என்று கூறப்பின் அகத்தியனே எவை என்று புரிய நிச்சயம் தன்னில் உள்ள பொய் என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப அந்த புத்தியை? 


அடியவர் :- தவறா பயன்படுத்துறான் 


சுவடி ஓதும் மைந்தன் :-  தவறாக பயன்படுத்தி…? 


அடியவர் :- அகத்தியனே பொய்ன்றாங்க 


சுவடி ஓதும் மைந்தன் :-   அகத்தியனே?


அடியவர் :- பொய்ன்றாங்க 


முருகப்பெருமான்:- அறிந்தும் எவை என்று ஒரு அகம்புறம் என்ன?


சுவடி ஓதும் மைந்தன் :-    அகம்புறம் என்ன?


அடியவர் :-  உள்ள வெளியே. 


சுவடி ஓதும் மைந்தன் :-   அகம் என்றால்?


அடியவர் 2 :-உள்ளே 


அடியவர்  :-உள்ளே 


சுவடி ஓதும் மைந்தன் :-  புறம் என்றால்? 


அடியவர் 2 :-வெளியே


அடியவர்  :-வெளியே  


===========================

# ஏன் அகத்திய மாமுனிவர் யாருக்கும் தண்டனை கொடுப்பதில்லை?

===========================

# அவசியம் 3 முறை படிக்கவும்.

===========================


முருகப்பெருமான்:- எதை ஏது என்று கூற அறிவு உன் உள்ளதற்கு எவை என்று புரிய அறிந்து கொள்ள எவை என்று அனைத்தும் பின் உள் புகுத்தி எவை என்று கூற வைத்திருக்கின்றானே அகத்தியன். 


முருகப்பெருமான்:- அதனால் அனைவருக்கும் பின் வாரி வழங்கியது அகத்தியனே அறிவு. 


முருகப்பெருமான்:- ஆனால் அகத்தியன் இல்லை என்றால், அறிவு அனைவருக்கும் கெட்டுப்போய்விடும் சொல்லிவிட்டேன். அதனால்தான் அகத்தியன் தண்டனையை கொடுப்பதில்லை யாருக்கும். 


அடியவர்  :- சிவாய நம !!!!! பெருங்கருணை!!!!! 


சுவடி ஓதும் மைந்தன் :-  புரியுதுங்களா ?


அடியவர்  :- சிவாய நம 


சுவடி ஓதும் மைந்தன் :-   ஏன் அகத்தியர் யாருக்கும் தண்டனை கொடுக்கிறது இல்ல? ஏன்னா அவர் கொடுத்த அறிவு இங்க எல்லாருக்கும் வந்து… 


அடியவர்  :-  அறிவுனாலே அகத்தியர் தான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அறிவு கொடுத்ததே 


அடியவர்  :-   அகத்தியர் தான் மனிதருக்கு 


முருகப்பெருமான்:- ஆனாலும் அறிவை வைத்துக்கொண்டு, அகத்தியனை வைத்துக்கொண்டு, ஏமாற்றி திரிகின்றார்களே மனிதர்கள். எவ்வளவு பின் அறிவாளிகள் என்று பாருங்கள். சிந்தித்து பாருங்கள். 


அடியவர்  :- பாருங்க 


சுவடி ஓதும் மைந்தன் :-   அறிவு கொடுத்த ..என்னங்க அய்யா ?


அடியவர்  :-  அறிவு கொடுத்த அகத்தியரை வச்சுட்டே மனுஷன் ஏமாத்திட்டு இருக்கிறான். 


சுவடி ஓதும் மைந்தன் :-    ஏமாத்திட்டு இருக்கிறார்.


https://youtu.be/npiKG6l6z6o?t=17504 


முருகப்பெருமான்:- இதனாலே மீண்டும் மீண்டும் பின் அகத்தியன் வந்து.. வந்து.. பூலோகத்தை காக்கலாம்.. காக்கலாம்.. என்றெல்லாம். ஆனால் என் தாயோ தந்தையோ அப்பப்பா பின் செல் செல் என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :- எப்பா நான் கொடுத்த அறிவு எப்படியாவது நான் திருத்திடுறேன்பா. அகத்தியர் சொல்றாரு. நான் கொடுத்த அறிவுப்பா மக்களுக்கு. நான் எப்படியாவது……? 


அடியவர் :- அவங்களை திருத்திடுறேன்னு சொல்லிட்டு… திருப்பி.. திருப்பி… வராரு. 


===========================

# அகத்திய மாமுனிவர் தான் உலகில் அனைவருக்கும் சிந்திக்கும் திறனை அருளியுள்ளார்கள்.

===========================


முருகப்பெருமான்:- எவை என்று கூற  பின் அறிவது எதை என்று பொறுத்தே பின் அறிவை பின் கொடுத்ததே பின் அதாவது அனைவரும் சிந்திக்கும் திறன் பின் எவை என்று கொடுத்ததே அகத்தியனே. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அனைவருக்கும் ….? 


அடியவர் :-  அந்த சிந்திக்கும் திறனை கொடுத்ததே அகத்தியர் தான் என்றாரு. 


சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியர் தான் என்றார். 


https://youtu.be/npiKG6l6z6o?t=17537


முருகப்பெருமான்:-  யார் அறிவார்? இவ்வுலகம் அறியுமா? அறிந்தும் எவை என்று கூட எவை என்று ஒரு பெரும் ஞானி அவன். 


அடியவர் :-  எப்பா !!!!!!!! அகத்தியருடைய பெருமையை முருகர் வந்து சொல்றாரு. யாருக்குமே தெரியாதுன்றாரு அகத்தியரை பத்தி… பெரும் ஞானின்றாங்க.. மனிதனுக்கு அறிவை கொடுத்தவர்… 


===========================

# அகத்திய மாமுனிவர் ஒருவரால் மட்டுமே விதியின் பலனை மக்களுக்கு சொல்ல முடியும்.  

===========================


https://youtu.be/npiKG6l6z6o?t=17549 


முருகப்பெருமான்:-  எதை ஏது என்று புரிய அறிந்தும் கூட, அதனாலே என் தாயும் தந்தையும் எவை என்று கூற, விதி சொல் நீயே எவை என்று கூறப்பின் அறிந்து உன்னாலே சொல்ல முடியும் என்று, மக்களுக்கு சாதாரணமாக விதியின் பலனை பின் சொல்லுகின்றானே பின் அகத்தியனே. 


அடியவர் :-  ( ஆச்சரியத்தில் ) அப்பா !!!!!!!!!!!!!!!!!!


சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால விதி யாரும் சொல்ல முடியாது.


அடியவர் :- யாருமே சொல்ல முடியாது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  சிவன் பார்வதி என்ன நினைக்கிறாங்களாம்… எப்பா உன்னால எல்லாம்… மனுஷன் நீயே அறிவு கொடுத்த. அந்த அறிவு எல்லாம் சரிப்படுத்த முடியாதுப்பான்றாராம். அப்ப அகத்தியர் இவர் கேக்குறாராம். எனக்கு விதியாவது சொல்ல கொடுப்பான்றாராம். (சிவன் பார்வதி அன்னை) சரிப்பா. விதியே தெளிய வச்சு…நீ மனுஷனை எப்படியாவது பண்ணிக்கோப்பான்றாராம். புரியுதுங்களா?


அடியவர் :-  யாருக்குமே அந்த இது அனுமதி இல்ல ஆக்சுவலா 


சுவடி ஓதும் மைந்தன் :- ஆக்சுவலா அது இல்ல அனால் ?


அடியவர் 2:-  அகத்தியருக்கு மட்டும் தான் இருக்கு அனுமதி இருக்கு. 


சுவடி ஓதும் மைந்தன் :- விதியை சொல்ல ?


அடியவர் 2:- அனுமதி இருக்கின்றது 


முருகப்பெருமான்:-  எவ்வாறு அனுமதி பெற்று அறிந்தும் எதை என்று புரிய அதனால்தான் சொல்லுகின்றேனே எதை என்று புரிய. 


முருகப்பெருமான்:-  அதனால் புரிந்து கொண்டு வாழுங்கள். புரியாமல் வாழ்ந்தாலும் நிச்சயம் வீணே. பின் அதாவது உடம்பிருந்தும் உயிர் இல்லையே. 


அடியவர்:- புரிஞ்சிட்டு வாழுங்கன்றாரு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  புரிஞ்சுகிட்டு வாழனும். 


அடியவர்:-  இல்லைன்னா?  உடம்பு 


சுவடி ஓதும் மைந்தன் :-  இல்லைன்னா….உடம்பு தான் இருக்கும். 


அடியவர்:-   உயிரும் இல்லை. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப என்ன எப்படி வாழணும்? பிணமாக தான் 


அடியவர்:-  பிணம் தான் சொல்றாங்க 


சுவடி ஓதும் மைந்தன் :-   அந்த பிணத்துக்கு இறைவன் என்ன கொடுப்பாரு? 


அடியவர் 2:-  ஒன்னும் இல்லை.


அடியவர்:- ஒன்னும் கொடுக்க மாட்டாரு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஒன்னும் கொடுக்க மாட்டாருங்க ஐயா. தெரிஞ்சுக்கோங்க ஐயா. 


===========================

# அகத்திய மாமுனிவரை  மீறி விஞ்ஞானம் இங்கு இல்லை.

===========================


முருகப்பெருமான்:-  இதனாலே அழிவுகள் எவை ஏது என்று புரிய பின் அனைத்தும் மாறப்போகின்றது. 


இவை தன் அகத்தியன் இப்பொழுது விஞ்ஞான பூர்வமாக உரைப்பான். 


****** அகத்தியனை மீறி விஞ்ஞானம் இங்கு இல்லை. ******


ஒவ்வொன்றாக இயந்திரத்தை, அதாவது பின் மனிதன் தான் இயந்திரம். பின் ஒவ்வொன்றாக புகுத்தான் அகத்தியனே இவை எவை என்று அறிய 


அடியவர்:-  சிவாய நம !!!!!


சுவடி ஓதும் மைந்தன் :- மனிதனுக்கு ஒரு ஒரு பார்ட்சும் ( body parts)  யார் கொடுத்தது? 


அடியவர்:- அகத்தியர் !!!!!


சுவடி ஓதும் மைந்தன் :- எப்படி வேலை செய்யுது என்று யார் கொடுத்தது? 


அடியவர்:- அகத்தியர் !!!!!


https://youtu.be/npiKG6l6z6o?t=17632


முருகப்பெருமான்:-  இதனாலே அதை எப்பொழுது பின் தயாரிக்கலாம்? எப்பொழுது உருவாக்கலாம்? எவை என்று அறிய அதை சரி செய்யலாம்? என்பதை எல்லாம் நிச்சயம் சித்தத்தில் சித்தம்… மருத்துவத்திற்கு மருத்துவம்… எவை என்று புரிய அறிந்தும் எதை என்று புரிய…


முருகப்பெருமான்:-  பின் இதனால்…. 


****** எங்கு தொட்டால் பின் இளைஞன் ஆகும்?  ****** 


****** எங்கு தொட்டால் முதியவன் ஆகும்?  ****** 


****** எங்கு தொட்டால் நோய்கள் தீரும்?  ****** 


என்பதெல்லாம் அகத்தியன் அறிந்தது.  


ஆனால் அதற்கெல்லாம் நீங்கள் எவை என்று அறிய பின் செவி சாய்க்கவில்லை. 


******  அதற்குப் பின் தகுதியான ஆட்களா நீங்கள்??????? ****** 


****** தகுதியான ஆட்களாக இருந்தால் உடனடியாக மாற்றுவான் அனைத்தும். ****** 


******  தகுதி இல்லையே மனிதனிடத்தில். ****** 


அகத்தியனே என்று சொல்கின்றான். மறுநொடியில் பின் ஏமாற்றுகின்றான். பொய் சொல்கின்றான் எவை என்று புரிய. எப்படி?.... எப்படி?..... 


அடியவர் :- சிவாய நம !!!!! சிவாய நம  !!!!! குருநாதருக்கு தெரியுமாம். அகத்திய பெருமானுக்கு தான் தெரியுமாம். எங்க தொட்டா வயசாக்கலாம்?  எங்க தொட்டா இளமையாக்கலாம்?  


சுவடி ஓதும் மைந்தன் :-  எங்க தொட்டா இது ஆக்கலாம்… எல்லாமே பண்ண முடியுமா அவரால…. ஆனால் மனிதன் நீங்கள் அதற்கு?  


அடியவர் :- தகுதி இல்லை 


ஒரு அடியவர் :- தகுதி இருக்காது ( மனிதனிடம் ) 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஆமா. தகுதி இருக்கா? முருகர் கேக்குறாரு. அகத்தியர் மாத்திடுவாரப்பா ஈஸி. 


ஒரு அடியவர் :-  தகுதி இல்லையே 


அடியவர் :-  சொல்லிக் கொடுப்பாரு தகுதியானவராக இருந்தா.


சுவடி ஓதும் மைந்தன் :-  ஆமா. இருந்தால்….


முருகப்பெருமான்:-  இதை நாய் போல் நிச்சயம் சுற்றுகின்றானே மனிதன். எங்கு நல்ல நல்லது நடக்கும் என்று ? ஆனால் தன் மனத்தைப் பற்றி உணரவில்லையே. 


அடியவர் :- சிவாய நம !!!!! 


சுவடி ஓதும் மைந்தன் :-  நாய் போல் சுற்றுவாங்களாம். அங்க நல்லது நடக்குமா? இங்க நல்லது சொல்லுவாங்களாம்? நாய் மாதிரி சுற்றுவாங்களாம் வந்து… 


அடியவர் :- பிரச்சனையை நமக்குள்ள வச்சிட்டு சுத்தாதீங்க என்றார்.


===========================

# நம்பிக்கையில் நாயை விட கீழானவன் மனிதன்….

===========================


முருகப்பெருமான்:-  ஏது என்று புரிய அதாவது சொன்னேனே அறிந்து கூட.  நாய் கூட அறிந்தும் ஏது என்று புரிய பின் எஜமான் பின் உணவு அளிப்பான் என்று. ஆனால் மனிதனுக்கு பின் இறைவன் ஏது என்று புரிய பின் செய்ய மாட்டான் எதை என்று அறிய என்று.  அறிந்தும் புரிந்தும் கூட எவை என்று அறிய இறைவனை நம்புவதில்லையே. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த ……


அடியவர் :-  எஜமானை நம்புற நாய்க்கு தெரியும். தனக்கு உணவு எஜமான் தான் கொடுப்பான்ற நம்பிக்கை அதுக்கு இருக்குது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  நாய் கூட இருக்குதாம் 


அடியவர் :-  இருக்குது 


சுவடி ஓதும் மைந்தன் :-   ஆனா மனுஷனுக்கு இறைவன் நம்மளுக்கு பண்ண மாட்டான்… எப்படிங்க ஐயா சொல்றது ? 


அடியவர் :- அந்த நம்பிக்கை இல்ல.  மனிதனுக்கு அதை விட்டுட்டு அந்த இறைவன் கொடுத்த அறிவை பயன்படுத்தாம எங்கெங்கேயோ சுத்தி தெரியுறீங்கன்றாரு.


===========================

# எதிர்மறை ஆற்றலை எப்படி தடுப்பது? 

===========================


முருகப்பெருமான்:-  இதில் எவை என்று அறியப்பின் உலகம் பின் மாய உலகம் அறிந்தும் கூட.  பின் அனைத்தும் எவை என்று எதிர்மறையாகத்தான். அவ் எதிர்மறை ஆற்றலை எப்படி தடுப்பது என்று அகத்தியன்  இப்பொழுது உரைப்பான். 


அடியவர் :- சிவாய நம !!!!! 


சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாமே ?


அடியவர் :-  மாய உலகம்ன்றாங்க 


சுவடி ஓதும் மைந்தன் :-  நெகட்டிவ் போர்ஸ் 


அடியவர் :-   அதையெல்லாம் எப்படி தடுக்கிறது 


சுவடி ஓதும் மைந்தன் :- மாயாஜலம். மேஜிக். மேஜிக். மந்திரவாதி. அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.


https://youtu.be/npiKG6l6z6o?t=17757 


முருகப்பெருமான்:- இதைத்தன் எவ்வாறு பின் மந்திரத்தால் அனைத்தும் செய்யலாம் என்றெல்லாம் அறிந்து கூட பின் அவனும் கெட்டுக் கொண்டிருக்கின்றான். 


இவனும் கெட்டுக் கொண்டிருக்கின்றான். 


இவன் பின்னே செல்வர்களும் கெட்டுக் கொண்டிருக்கின்றான். 


அனைத்தும் பின் மாயாஜலத்தில் அனைத்தும் முடியும் என்று பத்து நாட்கள் 20 நாட்கள் அனைத்தும் எவ்வாறு என்பதை கூட வசியம் செய்து விடலாம் என்றெல்லாம். 


முட்டாள் மனிதனே எது என்று கூற என் தாயும் தந்தையை விட சிறந்தது எவை இங்கு?  பின் யான் அன்போடு கூறுகின்றேன்.


அடியவர் :-    சிவாய  நம !!!!!


அடியவர் :-    சிவாய  நம !!!!!


அடியவர் :-    சிவாய  நம !!!!!


அடியவர் :-    மாந்திரீகனும் கெட்டு… அவன்கிட்ட போனவனும் கெட்டு… அவனை பின்பற்றவனும் கெட்டு… முட்டாள் மனிதன் சொல்றாங்க… 


சுவடி ஓதும் மைந்தன் :- முருகர் சொல்றாரு என் தாய்க்கும் தந்தைக்கும் மிஞ்சிய சக்தி எங்கடா இருக்குது என்று கேட்குறார்ங்க அய்யா ?  


அடியவர் :-    வேற யாரும் கிடையாதுப்பா.. சாதாரண மனுஷனை நம்பி போய் நீங்களும் கெட்டு…. எல்லாத்தையும் கெடுக்கிறீங்க என்று சொல்ராங்க…. 


===========================

# இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.

===========================

# இறைவன் அருளாலே அனைத்தும் நடக்கின்றது….

===========================


முருகப்பெருமான்:- ஆனால் அதுவும் கூட மனிதனுக்கு தெரியாமல் எவ்வளவு பெரிய முட்டாள் என்பது மனிதன், எதை யான் அதை செய்கின்றேன் என்று சொல்கின்றானே.  பின் எவ்வளவு பெரிய முட்டாள் என்று மனிதன் நீங்கள் சிந்தித்துக் கொள்ளுங்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இறைவன் இறைவன் தான் செய்வாருன்னு சொல்லணுமாம். எல்லாமே அது இல்லாம நான் உனக்கு செய்றேன்டான்னு சொல்றான் பாரு… மனுஷன் அப்ப மனுஷன் எவ்வளவு பெரிய திருடன் பாருன்றாரு.. 


அடியவர் :-  திருடன்ன்றாரு. அதை கேக்குறவன் எவ்வளவு பெரிய முட்டாள். இறைவனாலேயே (எல்லாம்   நடைபெறுகிறது )…


சுவடி ஓதும் மைந்தன் :- ஆமா. 


முருகப்பெருமான்:-  இதைத்தன் அறிந்து கூட 


****** அனைத்தும் இறைவனாலே நடைபெறுகிறது என்று மறந்துவிட்டானே மனிதன்.  ******  


******  கலியுகத்தில் எப்படி வாழ்வான் என்று நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள் !!!!!!  ****** 


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாமே?  


அடியவர் :-  இறைவன் செயல் 


சுவடி ஓதும் மைந்தன் :-  இறைவன் செயல் 


அடியவர் 3 :-  நான் நடத்துறேன் என்று நினைசியிருக்கான் 


சுவடி ஓதும் மைந்தன் :-  மனுஷன்… நான்தான் நடத்துறேன் என்று எண்ணிக்கிறாங்க வந்து… 


அடியவர் :-  அந்த எண்ணமே இல்லைன்றாங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :- அந்த எண்ணமே இல்லை. எல்லாமே?  


அடியவர் :-   இறைவன் நடத்துறது.


சுவடி ஓதும் மைந்தன் :-  இறைவனுடைய செயல். 


===========================

# ஏன் குருநாதர் நமக்காக, மனிதர்களுக்காக  இவ்வளவு பாடுபடவேண்டும் ?

===========================


https://youtu.be/npiKG6l6z6o?t=17836 


முருகப்பெருமான்:-  அறிந்தும் எதை என்று புரிய ஏன் எதற்கு அகத்தியன் இவ்வளவு பாடு கொண்டு கொண்டிருக்கின்றான் என்றால்…. பின் அறிவு கொடுத்தவன்…. நிச்சயம் அதை சரியாக….. பின் எவை என்று கூற  நடத்திடத்தான்.  கூறுங்கள் நீங்களே?  


அடியவர் :-   ( உண்மை உணர்ந்த ஆச்சரியத்தில் ) அப்பா !!!!!


அடியவர் :-    எவ்வளவு பெரிய உண்மை சொல்லி இருக்காங்க ஏன் அகத்தியர் இவ்வளவு தூரம் இறங்கி… நமக்காக போராடுறாங்கன்னா… இந்த அறிவை கொடுத்தவர் அவர்தான்… அப்படின்றப்போ அதை திருத்துற கடமை அவருக்கு தான் இருக்கின்றதுனால.. நம்மள திருத்த போராடிட்டு இருக்கிறார். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அதனாலதான் போராடி இருக்கிறார் 


அடியவர் :-    பெரும் கருணை !!!!!!


அடியவர் :-    குருநாதருடைய பெரும் கருணை !!!!!!


===========================

# பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வாக்குகள்…

===========================


https://youtu.be/npiKG6l6z6o?t=17862 


முருகப்பெருமான்:- எதை இவ்வறிவை வைத்துக்கொண்டு என்னென்னவோ எதை என்று அறிய மீண்டும் அறிந்து கூட. பின் ஆனாலும் பூலோகத்திற்கு எவை ஏது என்று புரிய பின் தாயும் தந்தையும் வந்து எதை என்று அறிய, 


****** அகத்தியனே !!!!! காப்பாற்ற முடியாது. நீ அறிவை தந்தது வீணே. எதை என்று அனைவரும் தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.   ******


பின் எவை என்று கூற  மீண்டும் பின் மண்டியிட்டு, பின் 


******  தாயே!!!!!  ****** 


******  தந்தையே!!!!! ******  


******  ஒரு முறை நிச்சயம் வாய்ப்பு அளி!!!!! ****** 


******  என்றெல்லாம் அகத்தியன் மீண்டும்…. மீண்டும்…. கேட்டுக்கொண்டே இருக்கின்றான்.  ****** 


அடியவர் :-    கருணை…… கருணை…… கருணை…… 


சுவடி ஓதும் மைந்தன் :-  புரியுதுங்களா ?


அடியவர் :-    அவங்க தேடி இறைவனும், இறைவியும்  பூமிக்கே வந்து சொல்றாங்க.  அப்பா, நீ வந்திருப்பா. மனுஷனை திருத்த முடியாது. 


சுவடி ஓதும் மைந்தன் :- நீ அறிவு கொடுத்தது?  


அடியவர் :-  தவறா போயிடுச்சு. 


சுவடி ஓதும் மைந்தன் :- தவறா போயிடுச்சு. அதனால அந்த அறிவு சரியா வந்து 


அடியவர் :-  பயன்படுத்தல மனிதன் 


சுவடி ஓதும் மைந்தன் :- பயன்படுத்தல மனுஷன் வந்துரு 


அடியவர் :-  அப்படின்றாங்க 


அடியவர் :-  மண்டி போட்டு நமக்காக கேக்குறாராம்.  ஒரு வாய்ப்பு கொடுங்க. மனிதர்களை திருத்துறதுக்கு. அப்படின்னு சொல்றாங்க…. 


https://youtu.be/npiKG6l6z6o?t=17903 


முருகப்பெருமான்:- எதிலும் எங்கும் அகத்தியன் பெயர் எதை என்று புரிய. ஆனாலும் என்ன ஏது என்று புரிய அகத்தியன் பெயரை வைத்துக்கொண்டு, எதை என்று யாராவது பின் உண்மை சொல்கின்றார்களா என்றால்?  இல்லை. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஆனால் எங்கும் எதிலும் அகத்தியன். ஐயா புரியுதுங்களா? 


அடியவர் :-   எங்கும் எதிலும் எதிலும் அகத்தியன். 


சுவடி ஓதும் மைந்தன் :-   அகத்தியன் 


அடியவர் :-  ஆனா 


சுவடி ஓதும் மைந்தன் :-   ஆனால் 


அடியவர் :- யாராவது உண்மையை சொல்றீங்களாப்பா 


சுவடி ஓதும் மைந்தன் :-   உண்மையை சொல்றீங்களாப்பா. முருகன் சொல்றாருங்க. இது முருகன் வாக்கு. பண்றதெல்லாம் பொய் என்றார்.


===========================

# அகத்திய மாமுனிவர் யாரிடத்தில் நிரந்தரமாக இருப்பார்கள்?

===========================


முருகப்பெருமான்:-  அகத்தியனுக்கு எவை என்று, எதை கேட்டான்?  எவை என்று புரிய அன்பை கேட்டான்.  எவை என்று பொறுமை கேட்டான்.  


எதை என்று அறிய இன்னும் பின் ஊர்ந்து கவனித்து பார்த்தால் நிச்சயம் பின் கருணையே. 


****** இக்கருணைத்தான் எவர் உள்ளத்தில் இருக்கின்றதோ அவன்தான் எவை என்று கூற மிகப்பெரிய ஞானி என்று, அவனிடத்திலே தங்கி விடுவான் அகத்தியன். ******


ஆனால் எதற்கு? பின் இங்கும்.. அங்கும்.. எவை என்று உயிரோடு இருப்பவனுக்கு மாலையா?  எதை என்று அறிய? 


இன்னும் பின் அபிஷேகங்களா எவை எவை என்று அறிய? 


அதையே பின் கலியுகத்தில் தெரியவில்லையே மனிதனுக்கு. 


எதை தெரிந்து கொள்ளப் போகின்றான் மனிதன்? மாயாஜால மனிதனடா. 


சுவடி ஓதும் மைந்தன் :-   பிளாக் மேஜிக் மனிதனடான்றார். எல்லாரும் யாரு? 


அடியவர் :-  பிளாக் மேஜிக் 


சுவடி ஓதும் மைந்தன் :-   பிளாக் மேஜிக் மனுஷன் ஒண்ணுமே புரியாம இருக்கிறீங்களேடா.  ஐயா கொஞ்சம் எக்ஸ்பிளைன் பண்ணுங்க ஐயா.


அடியவர் :- எங்க வந்து கருணை இருக்கோ…. அந்த உள்ளத்துல… அவர் குடிக்கொள்ளுவார். அப்படிங்கறத புரிஞ்சுக்காம… மனிதன் மாயாஜாலத்தை நோக்கி ஓடுறான். 


முருகப்பெருமான்:-  அறிந்தும் ஏது என்று புரிய தந்தைக்கும் தாய்க்கும் பல திருத்தலங்கள். எவை என்று அங்கு செல்லாதவன் எவை என்று புரிய பின் புது திருத்தலங்களை உருவாக்கி எவை என்று என்ன செய்யப் போகின்றான்?  அனைத்தும் எவை என்று பின் ஏமாற்று வேலைகளே.


அடியவர் :-  கடுமையா சாடுறாங்க… கடுமையா ஏகப்பட்ட திருத்தலங்கள் இருக்கு… பழமை வாய்ந்த திருத்தலங்கள்


சுவடி ஓதும் மைந்தன் :-  என் அப்பாக்கு, என் அம்மாக்கு, பல திருத்தலங்கள் இருக்குதுடா . அங்கெல்லாம் போகாம…. 


அடியவர் :- ஏதோ புதுசா….. நீ பணத்துக்காக கட்டி, மக்களை ஏமாத்துறீங்கன்றாங்க. 


===========================

# அகத்திய மாமுனிவர்,  பாழடைந்த திருத்தலங்களை சீரமைத்து தர உள்ளார்கள்.

===========================


https://youtu.be/npiKG6l6z6o?t=17998


முருகப்பெருமான்:-   எதை ஏது என்று புரிய இன்னும் எவை என்று கூற பாழடைந்த திருத்தலங்களை பின் அகத்தியன்   பின் அதாவது அறிந்தும் பின் அதாவது சீரமைத்து அறிந்து கூட இன்னும் பின் ஏற்றங்களை தருவான் உலக மக்களுக்கு. 


அடியவர் :- சிவாய நம !!!!! 


அடியவர் :-  இன்னும் பாழடைந்த  திருத்தலங்கள் எவ்வளவோ இருக்குது.  அகத்திய பெருமான் அதையெல்லாம் கண்டுபிடிச்சு,  சீரமைச்சு,  மக்களுக்கு கொடுப்பார். 


முருகப்பெருமான்:-    அறிந்தும் எவை என்று வேலை இல்லாதவனே,  எவை என்று வேலையாக எடுத்துக்கொண்டு செய்வான் திருத்தலங்களை. 


அடியவர் :- சிவாய நம !!!!!  வேலை இல்லாதவனே, வேலையாக எடுத்துக்கொண்டு செய்வான் இந்த திருத்தலங்களை.


முருகப்பெருமான்:-   எதை என்று கூட பிழைப்பு, ஏது என்று அறிய எவை என்று கூட அனைவருக்கும் பின் பிழைப்பு, எவை என்று கூட தாயிடம் தந்தையிடம் கேட்டு அகத்தியன் பின் ஏதாவது வாழ்ந்திடட்டும் என்றுதான். 


முருகப்பெருமான்:-  அதாவது அறிவை கொடுத்துவிட்டேனே… கெடுத்து விடாதே என்று,  தாயும் தந்தையிடம் மண்டியிட்டு சென்று கொண்டிருக்கின்றான் அகத்தியனே.


அடியவர் :- அப்பா நமக்காக வந்து எல்லாத்தையுமே இறைஞ்சி… இறைஞ்சி… அகத்திய பெருமான் வந்து இறைவன்ட்ட, இறைவனை கேட்டு… கேட்டு… கொடுத்துட்டு இருக்காங்க… ஒவ்வொரு விஷயமும். 


===========================

# ஜீவ நாடி ரகசியங்கள்…….மறைமுகமாக இருந்த ஜீவ நாடியை…

===========================


https://youtu.be/npiKG6l6z6o?t=18040 


முருகப்பெருமான்:-  இதைத்தன் இவ்வாறாக அதனாலே இவ் நாடியை பின் அகத்தியன் பின் மத்தியில் எடுத்துக்கொண்டான் எவை என்று புரிய.  முடிந்தால் எவை என்று கூற என்ன ஏது என்று புரிய.  ஆனாலும் இதைத்தன் அறிய இதனால்தான் பின் நன்மையை செய்ய.


சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால்தான் மறைமுகமாய் இருக்கின்ற ஜீவனாடிய ? 


அடியவர் :- வெளிப்படையாக… வெளி கொண்டு வந்தார் 


சுவடி ஓதும் மைந்தன் :-  வெளியே வந்து? 


அடியவர் 2 :- கொண்டு வந்துட்டார். 


சுவடி ஓதும் மைந்தன் :-  கொண்டு வந்துட்டார் 


===========================

# அகத்திய மாமுனிவர் அருளும் ஜீவ நாடி வாக்குகளை தவறாக பேசுபவர்களுக்கு ……

===========================


முருகப்பெருமான்:- இவை தன் அறிய. ஆனாலும் இதைத்தன் பின் அறிந்து கூட அகத்தியன் வணங்குபவரும் அறிவில்லையே எவை ஏது என்று புரிய.  


முருகப்பெருமான்:- பின் அப்படி இப்படி இவை என்று அறிய எங்கெங்கு எதை என்று கூட பொய் என்று இதை என்று அறிய, 


****** மக்களுக்கு சேவை செய்வதே பொய் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றான். ****** 


எவை என்று ஏனென்றால் தடுத்து விட வேண்டும் அல்லவா? இவ் அறிவை வைத்துக்கொண்டு.. அறிந்தும். 


அடியவர் :- இந்த அறிவை தயவை தவறா பயன்படுத்தி…. மக்களுக்கு சேவை செய்றது தவறுன்ற மாதிரி…. சில பேர் எடுத்துட்டு போறாங்கன்றாங்க….


முருகப்பெருமான்:-  இதனாலே மனிதன் நிலை இல்லாதவன் ஆனால் இறைவனோ பின் எதை என்று அறிய புரிந்து கொள்ளுங்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :- மனிதன்?  


அடியவர் :- நிலை இல்லாதவன் 


முருகப்பெருமான்:-  நிலை இல்லாதவனிடத்தில் நிலை பின் அற்ற பேச்சுக்கள் தான் இருக்கும் எவை என்று புரிய. அதனால் புரிந்து கொள்ளுங்கள் இறைவனிடத்தில் அறிந்து கூட பின் நெருங்குதல்… நிலை உள்ளதாக எண்ணங்கள் மாற்றப்படுவான் எவை என்று அறிய. 


அடியவர் :- நிலை இல்லாதவனிடம் நிலை அற்ற பேச்சுக்கள் தான் இருக்கும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  மனிதன் நிலை இல்லாதவன் 


அடியவர் :- நிலை இல்லாதவன் 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப நிலை இல்லாத இடத்தில் என்ன பேச்சுகள் இருக்கும் ? 


அடியவர் :- நிலையற்ற பேச்சுகள் தான் 


சுவடி ஓதும் மைந்தன் :-  நிலையற்ற பேச்சுகள் தான் இருக்கும் 


அடியவர் :- உண்மை இருக்காது 


சுவடி ஓதும் மைந்தன் :-  உண்மை இருக்காதுன்றாரு.  அதனால உண்மையை தேடி இறைவன்  பக்கம் செல்லுங்கள். அவன் என்றும் அழிவில்லாதவன். என்றும் நிற்பவன். 


அடியவர் :- நிலையானவன் 


சுவடி ஓதும் மைந்தன் :-  (இறைவன்) நிலையானவன் … அப்படி அவர் கையில போனோம்னா… உங்களுக்கு நிலை உள்ளவை எல்லாம் கொடுப்பாங்கன்றார் வந்து உண்மை நிலையை அறிவிப்பாங்கன்றார் வந்து. 


முருகப்பெருமான்:-  இதைத்தானே ஏது எவை ஏது என்று கூறப்பின் கொடுக்கச் சொல் பார்ப்போம்?  


அறிந்தும் எதை என்று கூறப்பின் அதாவது மனிதன் வாயை திறந்து பின் எவை என்று முருகன் பின் கொடுக்கின்றான்…


எவை என்று ஈசன் கொடுக்கின்றான் என்று சொல்லச் சொல் பார்ப்போம். 


பொய்யாகத்தான் வருமே தவிர,  ஒன்றும் கொடுக்க மாட்டோம் நாங்கள். சொல்லிவிட்டோம். 


சுவடி ஓதும் மைந்தன் :- யாராவது மனிதன் சொல்றாங்க இல்ல… முருகன். அதாவது முருகர் தான் சொல்றாரு. ஆமா முருகன் உங்களுக்கு கொடுப்பான்னு… நான் கொடுத்துருவேனா   மனிதன் சொன்னா?  என் அப்பா அம்மாதான் கொடுத்துருவாங்களா? 


===========================

#  எப்போது நல்லதை பெற்றுச் செல்ல முடியும்?. 

===========================


முருகப்பெருமான்:- எதை ஏது என்று அறிய நிச்சயம் கருணை பின் அடகு வைத்துவிட்டு, நிச்சயம் நல்லதை பெற்றுச் செல்லுங்கள். அவ்வளவுதான். 


அடியவர் :- ஆமா 


சுவடி ஓதும் மைந்தன் :- உன் கருணை என் கையில எப்படி சொல்றதுன்னா 


அடியவர் 2 :- அடகு  வச்சிட்டு 


சுவடி ஓதும் மைந்தன் :- அடகு வச்சு… நீ நல்ல மனசு… என் கையில அடகு வைடா… ஐயா புரியுதுங்களா?  முருகர் சொல்றாரு…. உன் நல்ல மனசை என் கையில அடகை வச்சிட்டு…. உனக்கு என்ன தேவையோ வாங்கிட்டு போயிட்டே இருடா.  


அடியவர் :- உங்க மனசை.. உங்க நல்ல மனசு.. 


சுவடி ஓதும் மைந்தன் :-  உன் நல்ல மனசு 


அடியவர் :- என்கிட்ட அடகு வச்சிருங்கப்பா.  உனக்கு வேண்டியதை  வாங்கிட்டு போ


முருகப்பெருமான்:-  இதைத்தன் அறிய எது என்று புரிய இன்னும் பின் எத்தனை எத்தனை அவதாரங்களோ மனிதன் எதை என்று அறிய.


நிச்சயம் யான் முருகன் என்று சொல்லுவான்.  


அறிந்தும் பின் யான் சிவன் என்று சொல்லுவான். 


எவை என்று அறிய இன்னும் எதை எதை என்று கூட வேஷங்கள் மனிதனிடத்தில்… 


அப்பப்பா !!!!!! அறிந்து கூட பின் அவ்வேஷங்களே அவனை கெடுத்துவிடும். அவ்வளவுதான் வாழ்க்கை. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இன்னும் என்னென்ன சொல்றாரு தெரியுமா முருகர்? 


அடியவர் :- அவன் போடுற வேஷமே அவனை கெடுத்துரும். நான்தான் இறைவன் நான்தான் முருகன். 


சுவடி ஓதும் மைந்தன் :- நான்தான் முருகன் பேசுறேன். நான்தான் சிவன் பேசுறேன். நீ போடுகின்ற வேஷங்கள் எல்லாம்? 


அடியவர் :- உனக்கே ஆப்பு. 


சுவடி ஓதும் மைந்தன் :- உனக்கே ஆப்பு. அவ்வளவுதான். 


https://youtu.be/npiKG6l6z6o?t=18211 


முருகப்பெருமான்:-  அறிந்தும் ஏன் எதற்கு எவை என்று புரிய பின் அதாவது யாங்கள் பார்க்கப் போகின்றோமா என்று அவனுக்கு நம்பிக்கையே இல்லை. அதனால்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றான். 


சுவடி ஓதும் மைந்தன் :- இறைவன் வந்து… எங்க இருக்க போறாரு?  அவர் வந்து… அப்ப நாமே வேஷம் போடுவோம் ஐயா புரியுதுங்களா ஐயா?  


அடியவர் :- அவருக்கு இதெல்லாம் தெரியுமா? 


சுவடி ஓதும் மைந்தன் :- அதெல்லாம் தெரியா போகுது அவருக்கு? 


அடியவர் :-  தெரியவா போகுது 


சுவடி ஓதும் மைந்தன் :- அதனால நமே? 


அடியவர் :-  வேஷம் போடுவோம். 


சுவடி ஓதும் மைந்தன் :- வேஷம் போடுவோம் 


https://youtu.be/npiKG6l6z6o?t=18232


முருகப்பெருமான்:-  இவைத்தன் அறிந்து இதனாலே மனிதன் அதனால் அறிவு எதை என்று புரிய.  இன்னும் பின் அகத்தியன் அறிவை பெற்று பலமாக இப்பொழுது உரைக்கப் போகின்றான். எங்கு உயிர் இருக்க போகின்றது?  எங்கு உயிர் இருந்தால் எப்படி மனிதன் வாழ்வான் என்று தெரிந்து கொள்ளுங்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியர் இப்ப சயின்ஸ் எடுத்துட்டு வரப்போறார். 


அடியவர் :-  அறிவைப் பற்றி உரைக்க போறார்

முருகப்பெருமான்:-  அறிந்தும் ஏது என்று புரிய பின் அதாவது மனிதன் என்னும் இயந்திரத்தை பின் இயக்க அகத்தினுக்கு மட்டுமே தெரியும்.


அடியவர் :-  மனிதன் ஒரு இயந்திரம் அந்த இயந்திரத்தை இயக்குவதற்கு அகத்தியருக்கு மட்டுமே தெரியும் அப்படின்றாங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :- தெரியும் 


முருகப்பெருமான்:- இவைத்தன் அறிந்து ஞானம் என்பது என்ன அறிந்தும் இவைத்தன் புரியவில்லையே அறிந்தும்.  இதைத்தன் அறியவில்லையே.  அகத்தினுக்கும் வாய்ப்புகள் கொடுப்போம் இன்னும். 


அடியவர் :-   சிவாய நம !!!!! 


சுவடி ஓதும் மைந்தன் :-  அகத்தியர் வந்து இப்ப என்ன சொல்ல போறாரு வந்து 


அடியவர் :-    சில விஷயங்கள் கத்துக்கொடுப்பாங்க 


சுவடி ஓதும் மைந்தன் :-  சில விஷயங்கள் கத்துக்கொடுப்பாரு.  போர்டு எடுங்க ஐயா.  அப்ப இன்னும் ஒன்னிட்டு இருந்தேன்னா இன்னும் கொஞ்சம் நேரங்கள் இல்லப்பா என்றாரு அவருக்கு வாய்ப்பு கொடுப்போம் அகத்தியர் என்றாரு வந்து.  என்ன சொல்றாரு பாப்போம் ஐயா எடுங்க ஐயா.    


( எழுது பலகையை எடுத்து வைத்தார்கள் அடியவர்கள்……. இதனை தொடர்ந்து கருணைக்கடலின் வாக்குகள் ஆரம்பமானது….. ) 



( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 02/08/2026   அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  12வது கூட்டு பிரார்த்தனை அதனில் உரைக்கப்பட்ட வாக்குகள் தொடரும் ) 


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.