இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.
அன்புடன் முருகப்பெருமான், 13/09/2026 அன்று அன்புடன் அகத்திய மாமுனிவர் யாத்திரை குழுவினருக்கு உரைத்த வாக்கு - பகுதி 1
வாக்குரைத்த நாள், நேரம், இடம் :- 13/09/2026 (ஞாயிற்றுக்கிழமை இரவு - விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாள், சுவடி ஓதும் மைந்தன் இல்லம்)
==================================
# அன்புடன் முருகப்பெருமான் வாக்கு
==================================
அனைத்தும் காத்து, அருளை ஈயக்கூடிய தந்தையே !!!!!! தாயே !!!!!!
பணிந்தேனே, செப்புகின்றேனே, வேலனவனே !!!!!!
இதைத்தன் உணர்ந்து எவ்வாறு, இதைத்தன் உணராமலும் பல மக்கள்.
இதைத்தன் கலியுகத்தில் சித்தர்கள் வந்து மக்களுக்கு தெளிவுபடுத்துவார்கள்.
தெளிவுபடுத்தி…. ஆனாலும் இதைத்தன் ஏற்றும் கூட செய்ய முடியாமல் போகும்.
போகுமடா, இதைத்தன் எவ்வாறு உணர்ந்து இருந்தும் கூட.
இதனாலே பாவங்கள் சூழ்ந்து, இன்னும் மனிதனிடத்தில் பல வழிகளில் கூட தண்டனைகள் மனிதன் பெறத்தான் போகின்றான்.
அனைவரையும் உணர்ந்தேன், பார்த்தேன்.
பின் இவைத்தன் ஓரிடத்தில் பின் அருளாசிகள் கொடுத்து விட்டேன்.
இவைத்தன், அதாவது பரிபூரணமாக அருளாசிகளை, வள்ளி தெய்வானையோடே.
இவ்வாறாக, இதைத்தன் உணர்ந்து இருந்தாலும், இதைத்தன் சில சில பாவங்கள், அதாவது பின் தொடர்ந்து வருவதாலே.
வருவதாலே, அதைத்தன் பின் இடையிடையே நிறுத்தி அகத்தியன், அதைத்தன் எவ்வாறு பின் நீக்கிட வேண்டுமோ, அவ்வாறெல்லாம் நீக்கிட்டு, பரிசுத்தமான ஆற்றல் எல்லாம் தந்து கொண்டிருக்கின்றான்.
==================================
# இறைவனின் அருளாசிகள் பலம் குழுவினருக்கு….
==================================
# பல பிறவிகள் செய்த பாவங்கள் தீரும்.
==================================
# தீர்ந்து தீர்ந்து, மீண்டும் சில மனக்குழப்பங்கள் ஏற்படும்.
==================================
இதனால் நீங்கள் இவைத்தன் எவ்வாறு, இதைத்தன் ஓடி ஓடி,
****** தந்தையின் பின் இல்லத்திற்கு சென்றாலும், ******
****** பின் இவைத்தன் அறிய, பின் என்னுடைய இல்லத்திற்கும் வந்தாலும், பின் அருளாசிகள் பலம். ******
****** இவைத்தன் அவ் அருளாசிகள் பலத்தால், பல பல இவைத்தன் பின் பல பிறவிகள் செய்த பாவங்கள் தீருமே. ******
****** இதனாலே தீர்ந்து தீர்ந்து, மீண்டும் சில மனக்குழப்பங்கள் ஏற்படுமே. ******
ஏற்பட்டு, எது வினை, எவை புரியாத அளவிற்கு கூட, ஆனாலும் சற்று பொறுத்திருந்தால், சில வழி வகைகளில் அகத்தியனை. நிச்சயம் செய்வான்.
நிச்சயம் செய்வித்து, பின் உங்களுக்கு என்ன தேவையோ, அவை தந்திடுவான். கவலைகள் வேண்டாம்.
கவலைகள் வேண்டாம், குழந்தைகளே.
இதைத்தன் எவ்வாறு உணர்ந்திருந்தும், சில, அதாவது பிணைக்கப்பட்டுள்ளது. கலியுகம் என்பது பாவத்தாலே பிணைக்கப்பட்டுள்ளது.
==================================
# பாவம் என்ற கிணற்றில் மனிதன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றான்.
==================================
இதனால் இப்பாவத்தின், அதாவது இவைத்தன் உணராத வகையிலும் கூட, புண்ணியத்தை எப்படி சேர்க்க முடியும்?
அதனால்தான், பின் அதாவது பாவம் என்ற கிணற்றில் மனிதன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றான்.
எவ்வாறு, இதைத்தன்…
****** ஆனாலும் அகத்தியன் முழு முயற்சியோடு அக் கிணற்றிலிருந்து பின் தூக்கிவிட பார்த்துக்கொண்டு. ******
ஆனாலும் அவைத்தன் யாங்கள் கிணற்றில் தான் இருப்போம் என்று மனிதன்.
****** பின் இவைதான் விதியின் தன்மை. ******
****** இதுதான் கலியுகம். ******
அதனாலே, பின் அதாவது இவைத்தன் அறிய, பின் மீண்டும் மீண்டும் இறை பக்தியில், பின் ஆழ்ந்த சிந்தனையில், சித்தர்கள் பின்னே சென்றாலும், இதைத்தன் எவ்வாறாக கிணற்றிலிருந்து உடனடியாக, இவைத்தன் அறிய ஏற்றி விட, எவை புரிய.
இதனால் மெது மெதுவாக தள்ளித் தள்ளி, முதலில் இதைத்தன் அறிய, ஒவ்வொரு படிக்கட்டாக மேலே ஏற்றுவார்கள்.
அதனுள்ளே, பின் ஏறுவதற்கு முன்னே, மனிதனுக்கு பல பாவினைகள் சூழ்ந்து, பின் அதாவது ஏன் இவ்வாறு வணங்கினோம்……
வணங்கியும் பிரயோஜனம் இல்லை என்றே…
இதைத்தன் உணர்ந்து, இவைத்தன் மீண்டும் ஏறுகின்ற நேரத்தில், மீண்டும் இவ்வாறு நினைப்பதால், மீண்டும் கிணற்றில் விழுந்து விடுகின்றான்.
எவைத்தன் மீண்டும், பின் சித்தர்கள் வந்து எழுப்புவதற்கு, இவ்வாறு தான் மனிதன், பின் நம்பிக்கையை இழந்து விடுகின்றான்.
இதைத்தன் இதனால், ஏது புரிய.
==================================
# 3 மாதங்கள் பின்னால் நடக்க வேண்டியவை, எப்போது பத்து மடங்கு தள்ளி பின் னே நடக்கும்?
==================================
****** இன்னும் அகத்தியன் பல வகையில் கூட நன்மைகள் செய்ய தயாராகவே. ******
தயாராகவே.
****** ஆனாலும் இதை செய்தால் நன்மை என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கக்கூடாது. ******
****** ஏன், எதற்கு இவ்வாறாக நினைத்தாலே, இன்னும் பின் அதாவது மூன்று மாதங்கள் பின் நடக்க வேண்டியவை, இன்னும் அதாவது பத்து மடங்கு தள்ளி பின் நடக்கும். ******
இதனாலே, இதனால் கவலைகள் வேண்டாம்.
ஒவ்வொரு மனதையும் யான் ஆராந்திருக்கின்றேன்.
அனைவருக்குமே ஒவ்வொரு விதத்திலும் குழப்பங்களே.
குழப்பங்கள் எப்பொழுது தீரும் என்பவை எல்லாம். ஆனாலும் யானும் சென்ற இடங்கள் எல்லாம் பின்னே வந்து கொண்டிருக்கின்றேன்.
ஒவ்வொரு விதத்திலும், ஒவ்வொரு நிலைமையும், பின் அதிகம், பின் பாவங்களே.
இதனால் எப்படி, இதைத்தன் அகத்தியன் பரிபூரணமாக நீக்கிக் கொண்டே தான் இருக்கின்றான்.
****** ஒரு பிறவியில், அதாவது பாவத்தை நீக்குபவன், எவை புரிய யாருமில்லை. ******
ஆனாலும் இதைத்தன் கடைப்பிறவியாக இருப்பதனால் மட்டுமே, இதைத்தன்.
ஆனாலும், பின் நீங்கள் அனைவரும் அகத்தியனிடம் நிச்சயம் மறுபிறவியில், பின் இதைத்தன் வேண்டி, இதைத்தன் எவ்வாறாக இப்பொழுது போதும்.
மறுபிறவியில் அனுபவிப்பதற்கு சில சந்தர்ப்பங்கள், சந்தர்ப்பங்கள் தாருங்கள் என்று சொல்லிவிட்டால், அகத்தியன் உடனடியாக கொடுத்து விடுவான்.
ஆனாலும் நீங்கள் இதைத்தன் அறிய, அகத்தியன் வேண்டாம்.. பிறவியே என்றே, அனைத்து பிறவிகளில் இருக்கும் பாவம், இப்பொழுதே கழியட்டும் என்று அருகிலே இருந்து கொண்டு, உங்களுக்கு மனக்குழப்பங்கள், சில சில வருத்தங்கள் ஏற்பட்டாலும், பின் அதை எப்படியோ ஒரு மூலமாவது மறைத்து, உங்களை தள்ளிக்கொண்டே சென்று கொண்டிருக்கின்றான்.
கவலைகள் வேண்டாம்.
==================================
# யாரால் பிறவி ரகசியங்களை அறிய முடியும் ?
==================================
இன்னும் பிறவியின் ரகசியம் எவ்வாறு உணர்ந்து, இவைத்தன் குழந்தைகளே, கவலைகள் இல்லை.
எப்படி, இதைத்தன் உணர்ந்து, எப்படி, எதற்காக வந்தீர்கள் என்பவை எல்லாம், அகத்தியன் பரிபூரணமாக, இன்னும் பின் சித்தர்கள் பரிபூரணமாக செப்புவார்கள்.
அப்பொழுதுதான் உங்களுக்கு புரியும், ஏன், எதற்காக இப்பிறவி என்று.
பின் யார் ஒருவன், பின் கடைபிற்பாக, பின் எடுத்து, இவைத்தன், அதாவது இப்புவிதன்னிற்கு வருகின்றார்களோ, அவர்களுக்கு நிச்சயம் தன்னில் கூட விதியின் பயனை, பின் நிச்சயம், பின் அறிந்து கொள்வதற்கு, பின் சித்தர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
ஆனால் மற்றவர்கள் மறுபிறவி, மறுபிறவி, மறுபிறவி, பின் இருக்கின்ற பொழுது, பின் நிச்சயம் விதி தன்னை கூட யாரும் அறிந்து கொள்ள முடியாது, அப்பா.
முடியாதடா இவைத்தன் அறிய.
ஏது பிறவி, இவைத்தன் உணராத வகையிலும் கூட.
==================================
# கலியுகத்தின் கொடுமையான விதி
==================================
இதனால், பின் கலியுகத்தில், மீண்டும் சொல்கின்றேன், பாவத்தில், பின் அதிக அளவு பிணைக்கப்பட்டுள்ளான் மனிதன்.
இதனாலே, ஏன், எதற்கு, இவைத்தன், அதாவது கலியுகம், கடையுகம், இவைத்தன் அறிய.
பின் கலியுகத்தின், பின் இவைத்தன் உணராத அளவிற்கும் கூட…
****** பின் வருத்தங்கள் ஏற்பட்டு, மனிதனையே, அதாவது தன்னைத்தானே, பின் கெடுத்து அழிய வேண்டும் என்பது விதி. ******
ஆனாலும் சித்தர்கள் பாவங்கள்..
அதாவது மனிதன் பாவம் என்று கீழே இறங்கி வந்து, இப்படி நடடா என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்க…. பின் இவைத்தன் அறிய, அறிய…
==================================
# இறைவனை காணும் ரகசியங்கள்….
==================================
ஆனாலும் அப்பாவம், அதாவது ஒரு மனிதனை கயிற்றால், நிச்சயம் பன், எவை புரிந்து, இதைத்தன் உணர்ந்து, பின் நிச்சயம் பல, பின் சுற்றுகள் கட்டிவிட்டால்…… கை கயிறால் கட்டிவிட்டால், ஒரே பின் சமயத்தில், இதைத்தன் உணர பிரிக்க முடியுமா என்றால், நிச்சயம் பிரிக்க முடியாது.
இதனால்தான், ஒரு பிடி, ஒரு பிடி என்றெல்லாம், பின் பிடித்து, பிடித்து, அதைத்தன் மெது மெதுவாக, மெது மெதுவாக, சித்தர்கள் பிடிங்கிக் கொண்டிருக்கும் பொழுது, அப்பொழுதுதான், இவைத்தன், அதாவது முதலில் கால்களிலிருந்தே வருவார்கள்.
அங்கிருந்து, எவை பின் வயிற்றுக்கு, பின் பகுதிக்கு வருகின்ற பொழுதே, மனிதன், எவை தன் நம்பிக்கை இழந்து விடுகின்றான்.
அவ்வளவுதான், ஒன்றும் ஆகாது என்று.
இதன் மீண்டும் முழு முயற்சியோடு, இவைத்தன் நிச்சயம் ஆகும் என்று, பின் நினைத்து சென்றால், உறுதியாகும் மனது.
உறுதியாகும் மனது, இவைத்தன், இதைத்தன் எவ்வாறு உண்மை என்று, பின் உறுதிப்படுத்தி, நிச்சயமாகவே, பின் இறைவனை காணலாம்.
==================================
# மெய்ஞானம் …வருத்தங்கள் மூலமாகவே கிட்டும்…
==================================
****** இதனால், மெய்ஞானம் பெறுவதற்கு, பின் வருத்தங்கள் பல பட வேண்டும். ******
மெய்ஞானங்கள் பெறுவதற்கு, பல பல இழப்புகளை, எதை தெரியாமல், எவைத்தன் மனக்குழப்பத்தாலே, பின் இவைத்தன் அறிய.
****** இதனால் நீங்கள் பின் வந்திருப்பது, மெய்ஞானம் அடைவதற்கே. ******
இதனால் சில வருத்தங்கள் ஏற்படும்.
அதையெல்லாம், பின் தாண்டி வந்தால், பின் நிச்சயம், பின் சித்தர்கள் காண்பிப்பார்கள் வழிகள்.
==================================
# வலிகள் மூலம் வழிகள்…..
==================================
இதனால் வழிகள் பலபல. பின் வழிகள் என்பது எல்லாம் வழி, வலி என்பதற்கு பொருள் என்ன?
இவை தன் தத்துவங்களாகவும், பின் அகத்தியன் சொல்லி கொண்டே நடத்தியும் வருவான். கவலைகள் வேண்டாம்.
****** வலியுடனே பிறந்தீர்கள். ******
****** வழியும் செய்வான். ******
****** பின் அவ்வலிகளை நீக்க…******
****** புரிந்து கொள்ளுங்கள். ******
புரிந்து கொள்ளுங்கள், குழந்தைகளே. கவலைகள் வேண்டாம்.
எப்பொழுதும் நாங்கள் துணை இருந்து, மனக்குழப்பங்கள் வேண்டாம். மனக்குழப்பங்கள் வேண்டாம்.
****** பின் பாடி பாடி என்னையெல்லாம் அழைத்ததே, நான் எங்கெல்லாம் நீங்கள் பாடுகின்றீர்களோ, சந்தோஷமாகவே வந்து, பின் பரவசப்படுத்தியதோடு, வள்ளி தெய்வானையோடே.******
ஆனாலும், பின் எவை புரிய, கடைசியாக பிறவி ஆயிற்றே.
இதனால் சில சில வினைகள், பின் அப்படியே, பின் அதாவது, பின் சந்தித்து தீர்க்க வேண்டும் என்பது விதி.
இவ்வாறாக இருந்தால் மட்டுமே, தெளிவு கடைசியில் வரும்.
இல்லையென்றால், நீங்கள் அகத்தியனிடம் கேட்டாலும், எனக்கு மறுபிறவி வேண்டும்.
சில கர்மாவுக்கள், அவ் மறுபிறவியில் அனுபவித்துக் கொள்கின்றேன் என்று கேட்டால், உடனடியாக உங்களுக்கு தேவையானதை கொடுத்து விடுவான்.
ஆனால் அகத்தியனை பின் நம்பினோர், எவைத்தன் புரிய , எவைத்தன் உரிய, அனைத்தும் பின் முதலிலே நீக்குவான். அவ்வளவுதான்.
கவலைகள் வேண்டாம்.
அருளாசிகள்..
==================================
# விநாயக பெருமானிடம் உள்ள 8 பேர் ரகசியங்கள்…..
==================================
மூத்தோனின் அருளாசிகள் பலம்.
நாளை பொழுதில் (14/09/2026 விநாயகர் சதுர்த்தி) உங்களுக்கு, பின் மூத்தோன் அருளாசிகள் வாங்கித் தருகின்றேன்.
****** என் மூத்தோனிடம் இன்னும் எட்டு பேர்கள் இருக்கின்றார்கள். ******
****** இவ்வுலகத்திற்கு அது தெரியுமா என்றால், நிச்சயம் தெரியாது. ******
****** அவ் எட்டு பேர்கள் அருள் இருந்தால் மட்டுமே… ******
****** அவ் எட்டு பேர்கள் யார் என்று, பின் வருங்காலத்தில், இவ்வுலகத்திற்கு அகத்தியன் உரைப்பான். ******
இப்பொழுது ஆசிகள் நிச்சயம் எவை என்று புரியும் அளவிற்கும் கூட, கவலைகள் வேண்டாம்.
****** எங்கெல்லாம் சென்றீர்களோ….. அங்கெல்லாம் அகத்தியன் லோபா முத்திரையோடு வந்து, ஆசிகள்…. அருளாசிகள் இன்னும் இவைத்தன் அறிய. ******
இதனாலே, பின் இவைத்தன் அறிய, ஒவ்வொரு பின் அறிந்தும், ஆன்மாவும் சில விஷயங்களை கூட பரிதாபப்பட்டே , இவைத்தன் விதியும் கடுமையாகவே இருக்கின்றது உங்களுக்கு.
இவ்விதியை நிச்சயம், பின் அகத்தியன் வந்து, இவைத்தன் அறிய, பிரம்மாவிடம் கூட சண்டைகள் இட்டுக்கொண்டே, இட்டுக்கொண்டே..
சில இவ்வாறாக, இவைத்தன் அறிய, இப்படி பின் ஏன் படைத்தாய்? சில சில வழிகளில் கூட, பின் அறிந்தும், இவைத்தன் அறிய..
இவ்வாறாக, பின் பிரம்மனும்,
****** பின் அகத்தியனே !!!!!! ******
****** பின் பொறுத்திரு. ******
****** அனைத்திற்கும் காரணங்கள் உண்டு. ******
பல வகைகளில் கூட, எவ்வாறு எதை புரிய என்றெல்லாம், நிச்சயம், பின் அதாவது, ஏன், எதற்காக என்றெல்லாம், உமக்கே தெரியும்.
==================================
# கண்ணிமைக்கும் நொடி பொழுதில், அனைத்தும் மாற்றிவிடும் சக்தி அகத்திய மாமுனிவருக்கு உண்டு.
==================================
இவைத்தன் அறிய… இதனால் அகத்தியனும் கூட.
ஆனாலும், பின் ஒரு கண்ணிமைக்கும் நொடியில், கண்ணிமைக்கும், கண்ணிமைக்கும் நொடி பொழுதில், இதைத்தன் அனைத்தும் மாற்றிவிடும், பின் சக்தி அகத்தியனுக்கு உண்டு.
ஆனாலும், ஏன் தயங்குகின்றான் என்றால், தன் பிள்ளைகள் எவை என்று, அனைத்தும் உணர வேண்டும்.
உணராவிடில், இவ்வுலகத்தில் வாழ முடியாது.
இவைத்தன் அறிந்தும், இதனால், இவைத்தன் அறிய, பின் உணர்ந்து கொள்ள வேண்டும்.
உணர்ந்து கொண்டால் மட்டுமே, வெற்றிகள் உண்டு.
கர்மா, அதாவது பாவமும் போகும். புண்ணியம்.
==================================
# புண்ணியங்கள் சேமிப்பு கிடங்கில்…..
==================================
ஆனாலும், புண்ணியத்தை அழகாக, இவைத்தன் எப்படி, பின் சேமிப்பு கிடங்கில் வைத்திருக்கின்றீர்களோ, அவ்வளவு, அவ்வளவு, பின் சேமிப்புகள், அதாவது சேமிப்பு கிடங்குகள், வைத்திருக்கின்றீர்கள் நீங்கள்.
****** அதைத்தன் அகத்தியன் எப்பொழுது எடுப்பான் என்று, அகத்தியனே வந்து சொல்வான். ******
****** கவலைகள் வேண்டாம். ******
இதனால், பாவங்கள், பின் அதாவது, கழிந்து கொண்டே இருக்கின்றது.
****** இப்பாவம் கழிகின்ற பொழுது, சில சில எண்ணங்கள் மாறுபடும். ******
****** சில வழிகளில் தொந்தரவுகள் வரும். ******
****** சில வழிகளில் கூட, போராட்டங்கள் வரும். ******
****** இவையெல்லாம் சகித்துக் கொண்டால், மெய்ஞானத்தை உணரலாம். ******
****** நீங்கள் எவைத்தன் அறிய, மெய்ஞானத்திற்காக வந்தவர்கள். ******
அவ் மெய்ஞானத்திற்காக எப்படி, எதை என்று புரிய, எவ்வாறெல்லாம் கஷ்டங்கள் பட வேண்டும் என்பதை எல்லாம் தீர்த்து…கவனித்து…. சித்தர்கள், பின் இவைத்தன் அறிந்து கொள்ளும் அளவிற்கும் சக்திகள் கொடுத்து, பக்குவப்படுத்தி, இதைத்தன் அனைத்தும் அறிவின் வழியாகவே, இறைவனை காணச் செய்வார்கள்.
கவலைகள் வேண்டாம்.
சென்ற இடமெல்லாம், நிச்சயம், சித்தர்கள் வந்து, வந்து, உங்களுடன் பேசியும் இருக்கின்றார்கள்.
சில சில கர்மாக்களும்……
சில சில நோய்களும்……
சில சில வருத்தங்களும்……
பின் அதாவது, பாவத்தை எடுத்தும் சென்றிருக்கின்றார்கள்.
==================================
# இக்கலியுகத்தில் மனிதனிடத்தில் பாவம் 90%. புண்ணியம் 10%
==================================
அப்படி எவைத்தன் அறிய, அதாவது, இக்கலியுகத்தில், பின் மனிதனின் பங்கு, பின் அதாவது, பின் நூற்றுக்கு 90% பாவம்.
10 பின் சதவீதம் மட்டுமே புண்ணியம் இருக்கின்றது.
எப்படி வாழ்வான்?
அதனாலே, உடனடியாக, பின் இவைத்தன் உணர்ந்து, இவைத்தன் 90% ஆக இருப்பதை, பின் நீக்க முடியுமா என்றால், அவ்வளவு சுலபமில்லை.
இதனால்தான், சித்தர்கள், பின் அதாவது, நீங்கள் தேடி வந்தீர்களா என்றால், நிச்சயம் இல்லை.
இவைத்தன் அறிய, அகத்தியனே உங்களைத் தேடி, ஐயோ, இவர்கள் பாவம்.
இவர்கள் வாழ்க்கை பரிதாபப்பட்டது என்றெல்லாம், உங்களைத் தேடி வந்திருக்கின்றான்.
அவ்வளவுதான்.
சித்தனை தேடி, சித்தனை அழைத்தாலும், பின் அதாவது,
எவைத்தன் உருண்டாலும்,
பிரண்டாலும்,
பின் ஐயோ !!!!!! என்று
அகத்தியனே !!!!!! என்று சொன்னாலும்,
பின் நிச்சயம் சித்தர்கள் வருவார்களா என்றால், நிச்சயம் வரமாட்டார்கள்.
ஐயோ, பாவம், பின் இவைத்தன் சிறிது புண்ணியம் வைத்துக் கொண்டு, இவ்வாறு, பின் வாழத் தெரியாமல், வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களே. பாவப்பிடியில் என்று, நிச்சயம், இதைத்தன் அறிய..
==================================
# அகத்திய மாமுனிவரின் கருணை….
==================================
****** பின் ஒவ்வொரு பிறவியிலும், பின் அகத்தியனை குருநாதனாகவே எண்ணிக்கொண்டு, வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே, அகத்தியன் இப்பிறவியில் வந்து, பின் கையை, பின் எவைத்தன் இழுத்து, அனைத்தும் யான் செய்கின்றேன். யான் செய்கின்றேன் என்று.. ******
****** அதாவது, சிறு குழந்தைகளுக்கு, எவ்வாறாக, பின் அதாவது, இனிப்பு, பின் இதோ, வாங்கிக் கொடுக்கின்றேன், வாங்கிக் கொடுக்கின்றேன் என்றெல்லாம், அகத்தியன் பக்குவப்படுத்தி… பக்குவப்படுத்தி…. இதை மாற்றுகின்றேன்.. அதை மாற்றுகின்றேன் என்றெல்லாம் சொல்லி, சொல்லி… உங்களை அழைத்துக் கொண்டே, பாவத்தை அளித்துக் கொண்டே, சென்று கொண்டிருக்கின்றான். ******
கவலைகள் வேண்டாம்.
ஆசிகள், வள்ளி தெய்வானையோடு.
இன்னும் அகத்தியன் தெரிவிப்பான்.
மற்றோரும் வாக்கிலும் யான் தெரிவிப்பேன் வள்ளி தெய்வானையோடு வந்து. இப்பொழுது ஆசிகள் !!!!!!
==================================
# வாக்கு முடிந்தவுடன் அடியவர்கள் கேள்வி பதில்……
==================================
==================================
# யான் இருக்கும் இடமெல்லாம் வேல்…..
==================================
( சித்தன் அருள் - 2278 - அன்புடன் அகத்தியர் - சென்னை சத்சங்க வாக்கு - 05/07/2026 - பகுதி - 10!
சென்னை சத்சங்கத்தில் நிச்சயம் வெற்றிகள் தரும் 11 செவ்வாய் கிழமை வெள்ளி வேல் வழிபாடு. # திருச்செந்தூரில் வெள்ளி வேலை சமர்ப்பணம் செய்ய வேண்டும் போன்ற வழிபாடுகளை அருளியிருந்தார்கள். அவ் வாக்கினை செயல் படுத்த வெள்ளி வேல் அனைவர்க்கும் செய்து எடுத்து வந்திருந்தார்கள். )
அடியவர் :- ( வெள்ளி வேல் அனைவருக்கும் கொடுப்பது குறித்து கேள்வி. )
அன்புடன் முருகப்பெருமான் :- எதை உணர, எவை இருந்து. அதாவது, யான் இருக்கும் இடமெல்லாம், எவை புரிய, புரிந்து கொள்ளுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- முருகன் இருக்கும் இடமெல்லாம்?
அடியவர் :- வேல்
சுவடி ஓதும் மைந்தன் :- வேல். அப்ப?
அடியவர் :- வெள்ளி வேல் எல்லாருக்கும் கொடுக்கலாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- வேல் வந்து எல்லாத்துக்கும் கொடுக்கலாம்.
அடியவர் :- கொடுத்துட்டு, ( 11 செவ்வாய் கிழமை வெள்ளி வேல் வழிபாடு பூசை செய்து..பின்னர் ) திருச்செந்தூரில் கொடுக்க வேண்டும். (வெள்ளி வேல் சமர்ப்பணம் செய்ய வேண்டும்)
அன்புடன் முருகப்பெருமான் :- இன்னும் அகத்தியன் வந்து உரைக்கின்ற பொழுது, பல பல வகைகளில் கூட, ஏன், எதற்காக, இப்பிறவி என்றெல்லாம், வருங்காலத்தில், உங்களுக்கு நிச்சயம், அகத்தியன் சொல்வான். ஏனென்றால், அப் பக்குவ நிலைக்கு வந்துவிட்டீர்கள். ஏனென்றால், பின் சுகம், எவை புரியும் அளவிற்கும் கூட, சுகம் இல்லை. துக்கம் தான் அதிக அளவு.
சுவடி ஓதும் மைந்தன் :- ஓகேங்களா? அதுக்குள்ள யார் வந்துருவாரு?
அடியவர் :- அகத்தியர்..
சுவடி ஓதும் மைந்தன் :- ஏன் இது மாதிரி சொல்லிட்டு, ஏன் நடக்குது எல்லாம் வந்து (அகத்திய மாமுனிவர்) சொல்லுவார்.
அன்புடன் முருகப்பெருமான் :- இதனாலே, பின் அதாவது, கலியுகம், இவைத்தன் அறிந்தும், புரியாத அளவிற்கும், மனிதன் இதனால், பின் கலியுகத்தில், மனிதன் தன்னைத்தானே, பின் கெடுத்துக்கொண்டு, மற்றவர்களையும் கெடுக்க வேண்டும் என்பது விதி.
அன்புடன் முருகப்பெருமான் :- இதுதான், பின் மனிதன், மனிதனே அழித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் விதி.
****** ஆனாலும், அகத்தியன் இருக்கையில், கவலைப்பட தேவையில்லை. ******
அவ் பாவத்திலிருந்து, அதாவது, பின் பாவம் என்பது இங்கு சாக்கடையிலே.
அனைவரும் சாக்கடையில் கால் வைத்துவிட்டார்கள்.
அதைத்தன் கழுவுது எப்படி என்பதை எல்லாம் தெரியாமல், தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனாலும், கழுவினாலும், அதன் துர்நாற்றம் மாறவில்லையே.
இதை போக்குவதற்காகவே, சித்தர்கள் இருக்கின்றார்கள். கவலைகள் வேண்டாமடா , குழந்தைகளே.
==================================
# ஏன், கழுத்தில் பல வகையில் கூட, மாலைகள் அணிகின்றார்கள்?
==================================
அடியவர் :- கணபதி டாலர்…. கணபதி வைக்க சொல்லிருந்தீங்க…. பண்ணிட்டு வந்திருக்காங்க.
அன்புடன் முருகப்பெருமான் :- இவைத்தன் அறிய, இதற்கு பின் உத்தரவாதம், அகத்தியனை அளிப்பான். அளிக்கட்டும். இவைத்தன் அறிய, இதைத்தன் புரிய, பின் புரியாவிடிலும், இன்னும் இதைத்தன் ஏன், எவ்வாறு அணிந்து கொள்வதற்கு, அணிந்து கொள்கிறார்கள் மனிதர்கள் என்ற நிலைமையும் கூட, இன்னும் பொதுவான வகுப்பிலே, அகத்தியன் சொல்கின்ற பொழுது தெரியும்.
அன்புடன் முருகப்பெருமான் :- ஏன், எதற்காக, ருத்ராட்சம் அணிகின்றார்கள்? ஏன், கழுத்தில் பல வகையில் கூட, மாலைகள் அணிகின்றார்கள் என்பவை எல்லாம் யாருக்கும் புரியாது.
அன்புடன் முருகப்பெருமான் :- இவைத்தன் உணர்ந்து, அகத்தியன் நிச்சயம் சொல்வான்.
அதை நீங்கள் புரிந்து கொண்டு, செயல்பட்டு, இன்னும் பின், அதாவது, எவ்வெவ் வழிகள் எல்லாம், நிச்சயம், மனிதன் இறைவனை வைத்து, ஏமாற்ற வேண்டுமோ, அவ்வளவு ஏமாற்றிவிட்டான்.
ஆனால், இன்னும் சித்தர்கள், இன்னும் பல மடங்காக சென்று, இன்னும் அறிவியலை எடுத்து வந்து, அப்பொழுது உங்கள் திறமைகளை, பின் இவ்வாறு தான் என்று, கண்ணோடு, எவை கொண்டு. அதாவது, கண்கள் இருந்து பார்க்கவில்லையே. ஆனாலும், பார்க்க வைப்பார்கள் சித்தர்கள்.
==================================
# மகாதேவ மலை சித்தர் தரிசனம்
==================================
அடியவர் :- ஐயா நேத்து மகாதேவ மலையில், சித்தர் பார்த்தேன்.
(இவ் குழுவினர் 12.09.2026 அன்று வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள மகாதேவ மலை சிவன் கோவில் தரிசனம் செய்தனர். அங்கு அடிவாரத்தில் ஸ்ரீலஸ்ரீ மகானந்த சித்தர் (மகா ஆனந்த சித்தர் - விபூதி சித்தர் ) வாழ்ந்து வருகிறார் அவரை தரிசித்த போது…. கேட்டார்கள்)
அன்புடன் முருகப்பெருமான் :- இவைத்தன் அறிந்து, பின் இதை ஏற்கனவே, அதாவது, தெளிவுபடுத்தி, எங்கே ஞாபகம் வைத்துக் கொள்ளாதடா, குழந்தாய். இதிலேயே இருக்கின்றது.
சுவடி ஓதும் மைந்தன் :- அது (முன்னமே வாக்கில் ) சொல்லிட்டாருங்க, ஐயா…
அடியவர் :- சரிங்க அய்யா.
அன்புடன் முருகப்பெருமான் :- கவலைகள் வேண்டாம். நல்லுணர்வோடு, இன்னும் சில தவிப்புகள். பின் அறிந்தும், இவைத்தன் அறியாவிடிலும், ஏன், எதற்கு, இப்பிறவிகள் என்பதெல்லாம்.
==================================
# ஏன் இந்த இரவு நேரத்தில் வாக்குகள் உரைக்க வேண்டும்?
==================================
அன்புடன் முருகப்பெருமான் :- இவ்நேரத்திலும், யான், பின் ஏன், எதற்காக, உங்களுக்கு வருகின்றேன். பின் எவை என் திருத்தலத்திற்கு வந்தாலும், உங்களை துரத்தி விடுவார்கள். ஆனாலும், பின் யான் வந்தேன் என்றால், எண்ணிக்கொள்ளுங்கள். உங்கள் பின் பாவம் எப்படிப்பட்டது என்பது. அதை தீர்ப்பேன். கவலைகள் வேண்டாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றார் புரியுதுங்களா?
அடியவர்:- (முருகப்பெருமான்) கோயிலுக்கு போனாலும் வெளியே விரட்டிடுவாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- வெளியே விரட்டிடுவாங்க. ஏன் உங்களை தேடி வந்தேன்னு, அவர் முருகர் வந்து தேடி வந்திருக்கிறார். அதனால வந்து, அந்த பாவம் இதுல மாற்றி இருக்கிறதுனாலதான், அது வந்து, நான் உங்களை இது பண்ண விட்டுறேன்னு சொல்றாரு. வந்து…
==================================
# திருத்தலத்திலே எப்போது சென்றால் இறைவன் தரிசனம் கிட்டும் ?
==================================
அன்புடன் முருகப்பெருமான் :- இதனால், பின் யான் திருத்தலத்திலே இருப்பேன் என்றால், நிச்சயம் இருக்க போவதில்லை. இதை தன் சித்தர்களே உணர்த்தி வைத்திருக்கின்றார்கள்.
அன்புடன் முருகப்பெருமான் :- அதனால்தான், சித்தர்கள் அந்நேரம் செல்க என்று. ஆனாலும், பல மக்கள் செல்கின்றார்கள். ஆனாலும், ஆசீர்வாதம் கிடைக்குமா என்றால், சந்தேகமே….. குழந்தைகளே.
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால, சித்தர்கள் என்ன சொல்றாங்க? இந்த நேரத்துல போன்னு சொல்றாங்க. வந்து, அந்த நேரத்துல , அவங்க இருக்கிறாங்க. என்ன சொன்னா, வந்து…
அன்புடன் முருகப்பெருமான் :- இவைத்தன் அறிய, கவலைப்பட தேவையில்லை. இதைத்தன் அறிய, பின் வள்ளி தெய்வானையோடு, எம்முடைய ஆசிகள் எப்பொழுதும், நானும், இவைத்தன் பலன் அறுபடை, பின் வீடுகளுக்கு செல்கின்ற பொழுதும், ஆசிகள் பலமாக கொடுக்கின்றேன். பின் உங்கள் பின்னே வந்து. ஆசிகள், ஆசிகள்.
ஒரு அரியவர் கேள்வி :- ( ……………………….)
அன்புடன் முருகப்பெருமான் :- இவைத்தன் எவ்வாறு என்பதை எல்லாம், இவனுக்கு எது புரிய, இவைத்தன் அறிய, விதி தன்னில் கூட, இவனுக்கு ஒரு குறை. ஆனாலும், இக்குறை எங்கு சென்றாலும், தீர்க்க முடியாது என்பதே குறை. இதனால், விதி தன்னில் கூட, இவ்வாறு பிரம்மன் படைக்கும் பொழுதே, எழுதிவிட்டான். ஆனால், மாற்றுவது, அகத்தியனே. பொறுத்திருக்க சொல்.
சுவடி ஓதும் மைந்தன் :- அது மருந்தோ…..இருங்க, அகத்தியர் சொல்றாரு. விதியிலேயே பிறக்கும் பொழுது, என்ன பண்ணிருக்காரு? இந்த விஷயத்துல, இவரு போராடி, அப்படி எழுதி இருக்காருமா வந்து, அதுல வந்து, அது, அது விதியை மாத்தணும்னா, யாரால முடியும்னா… எவ்வளவு மருந்து எடுத்துக்கலாம்… சரி, அகத்தியர் ஏதாவது சொல்லுவாரு. பாத்துக்கலாம்.
ஒரு அரியவர் கேள்வி :- என் தம்பி ( ………………………) 15 வருஷம் ஆச்சு.
அன்புடன் முருகப்பெருமான் :- எவை புரிய, இதைப்பற்றி, இப்பொழுது வேண்டாம். இவைத்தன் அறிந்தும், அமைதியாக மறந்துவிடு. எவ்யோசனைகளும் கொள்ள வேண்டாம். எவ்யோசனைகள் பின் வந்து கொண்டே இருந்தால், சில தீமைகள் உனக்கு நடந்து கொண்டே இருக்கும். வேண்டாம். ஆனால், சித்தர்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். எப்போது சொல்ல வேண்டும் என்று கவலை விடு.
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க அதை பத்தி கவலை விட்டுருங்கன்னு சொல்றாரு. வந்து,
அன்புடன் முருகப்பெருமான் :- இவைத்தன் மனம் குழம்பி, எதை என்று அறிய, நீயும் குழம்பி, எவைத்தன் மற்றவர்களையும் குழப்பி, கடைசியில், பின் ஏன், எதற்காக?
சுவடி ஓதும் மைந்தன் :- எதுவுமே யோசிக்க கூடாதுன்றாரு வந்து. நீயும் குழம்பிய, மற்றவரையும் குழப்பிடுவீங்கன்றாரு. வந்து, அதனால வேணாம், யோசிக்காத.
==================================
# மூத்தோன் விநாயகர் சதுர்த்தி வழிபாடு பரம ரகசியங்கள்….
==================================
அடியவர் 1:- நாளைக்கு விநாயகர் சதுர்த்தி எப்படி கொண்டாடுறதுன்னு கேட்டிருக்காரு?
அன்புடன் முருகப்பெருமான் :- இதைத்தன் எவ்வாறு, பின் மூத்தோனை எவ்வாறு கொண்டாடினாலும், மூத்தோன் மனம் மகிழ்வான். அவ்வளவுதான். அன்பு மட்டுமே பிரதானமானது.
அன்புடன் முருகப்பெருமான் :- இவைதன் அன்போடு வணங்கினால், அன்போடு அனைத்தும் கொடுப்பான். அன்பில்லாது எதை பின் தொடர்ந்தால், நிச்சயம் அவ்வாறே கொடுப்பான். மனம் எப்படியோ, அப்படியே, மூத்தோன் கொடுப்பான்.
அடியவர் :- எல்லோருக்கும் பொதுவான வாக்கு ?
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லோருக்கும் பொதுவான வாக்கு இது வந்து. உங்க மனசுல இருக்குதோ …. எப்படி வணங்குறீங்களோ… இப்ப வந்து, அன்பான எப்பா எனக்கு ஏதாவது கொடுன்னா, கொடுத்துருவாரு. அன்பு..
அன்புடன் முருகப்பெருமான் :- இதைத்தன் எவ்வாறு அன்றைய தினத்தில், அதாவது மனதில் எண்ணுகின்றீர்களோ, அதேபோலத்தான் வாழ்க்கையும் கொடுப்பான்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, அன்றைய தினத்துல வந்து,
அடியவர் :- நாளைக்கு அன்போட வணங்கணும்.
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்கள் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கீங்களோ, அதேதான் கொடுப்பான்.
அன்புடன் முருகப்பெருமான் :- இவைத்தன் பாவமானாலும் சரி, புண்ணியமானாலும் சரி.
****** பாவத்தை நினைத்து வாழ்ந்தால், பாவத்தை அள்ளிக் கொடுப்பான். ******
****** புண்ணியத்தை நினைத்து வாழ்ந்தால், புண்ணியத்தை அள்ளிக் கொடுப்பான். ******
****** இதுதான், பின் அதாவது, மூத்தவனுடைய வேலை. ******
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றாரு? நீங்க பாவம் ஏதாவது அந்த நேரத்துல எண்ணீங்கன்னா, சரிப்பா, அதே மாதிரி ஆகட்டும். ஓகேவா? அதே மாதிரி, அந்த நேரத்துல புண்ணியமாக நம்ம யோசிச்சோம்னா, ரைட் குடுறாருன்னு சொல்லிட்டு போயிட்டே இருப்பார்.
அன்புடன் முருகப்பெருமான் :- இவைத்தன் ஆனாலும், வருந்துவதில்லை. மூத்தோனே.
அன்புடன் முருகப்பெருமான் :- அனைவருக்கும் கொடுத்துக்கொண்டே இருக்கின்றான். பின் அறிந்தும்,
****** பாவமானாலும் சரி. ******
****** புண்ணியமானாலும் சரி. ******
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, புரியுதுங்களா இது வந்து? எல்லோருக்கும் அவர் எல்லாம் வருத்தப்படுறது இல்ல வந்து.
அடியவர் :- வருத்தப்படுறது இல்ல. நம்ம எப்படியோ…
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க வந்து எப்படி இருக்கிறீங்களோ, அந்த நேரத்துல நீ அப்படியே இருப்பா.
அடியவர் :- அப்படியே கொடுத்துருவர்…
சுவடி ஓதும் மைந்தன் :- எப்படி சொல்றாருன்னா, அப்ப வந்து? நீ எதை விரும்புற?
அடியவர் :- பாவத்தை விரும்புனா…பாவத்தை கொடுப்பார் .
சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப வந்து என்ன சொல்றாரு? ஒரு விதத்துல வந்து, நம்ம என்ன அந்த நேரத்துல பண்றோமோ…
அடியவர் :- அதை கொடுத்துடுவார்.
சுவடி ஓதும் மைந்தன் :- அது பன் மடங்கு கொடுப்பாருங்க. ஐயா, வேற ஒன்னும் இல்ல.
அடியவர் :- ஆனா, அதுக்காக வருத்தப்படுவது இல்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- வருத்தப்படுவது இல்லை. நீ வந்து, இப்ப வந்து, நான் ஜாலியா இருக்கிறேன்னு சொல்றாரா?
அடியவர் :- ஜாலியாவே இரு.
சுவடி ஓதும் மைந்தன் :- ஜாலியா போடா. ஐயா, எனக்கு பாவத்தை ஒழிக்கணும்னு கேக்குறீங்களா? சரி, உன் பாவத்தை ஒழிச்சு, நீ முன்னேறுறா. அவ்வளவுதான்.
அடியவர் 3 :- அங்க நாம போய் நின்னாவே… நம்ம மனசு ஆராஞ்சுகுடுத்துருவாரு.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆமா. குடுத்துருவாரு. அவர் வந்து…
அன்புடன் முருகப்பெருமான் :- இதனாலே, இதைத்தன் எவ்வாறு குனிந்தும், உணர்ந்தும், எவ்வாறாக…. இதனாலே, பின் நின்றாலே, பின் அதாவது, மூத்தோனுக்கு தெரியும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அங்க போய் நின்னாலே,
அடியவர் :- மூத்தவனுக்கு தெரியும்.
சுவடி ஓதும் மைந்தன் :- மூத்தவனுக்கு தெரியும்ன்றாரு.
அடியவர் :- அவங்களோட மனசெல்லாம் ஆராஞ்சி பார்த்து…
சுவடி ஓதும் மைந்தன் :- ஆராய்ந்து இருப்பாருன்றாரு வந்து…
அடியவர் :- ஆராய்ந்து பார்த்து, அதுக்கு ஏற்ப கொடுத்து
சுவடி ஓதும் மைந்தன் :- ஆமா
( அன்புடன் முருகப்பெருமான், 13/09/2026 அன்று அன்புடன் அகத்திய மாமுனிவர் யாத்திரை குழுவினருக்கு உரைத்த வாக்கு அதன் தொடர்ச்சியை வரும் பகுதி 2ல் காண்போம்….)
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.