இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.
அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 05/07/2026 அன்று சென்னையில் நடந்த அன்புடன் அகத்திய மாமுனிவர் யாத்திரை குழுவினருக்கான சத்சங்க வாக்கு - பகுதி 16
வாக்குரைத்த நாள், நேரம் :- 05/07/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன்.
அம்மையே, அப்பனே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்.
( பகுதி 15 அதன் தொடர்ச்சியாக ….)
===========================
# அடியவர் #11 - பாடல் பாடினார்கள்…
===========================
ஏது பிழை செய்தாலும், ஏழையேனுக்கு இரங்கித்
தீது புரியாத தெய்வமே – நீதி
நீதி தழைக்கின்ற திருபோரூர் தனிமுதலே – நாயேன்
பிழைக்கின்ற வாறுநீ பேசு….. முருகா… முருகா…
நீயல்லால் தெய்வமில்லை!
எனது நெஞ்சே நீ வாழும் எல்லை!
முருகா நீயல்லால் தெய்வமில்லை!
தாயாகி அன்புப் பாலூட்டி வளர்த்தாய்!
தந்தையாய் நின்றே சிந்தை கவர்ந்தாய்!
குருவாகி எனக்கு நல்லிசை தந்தாய்!
திருவே நீயென்றும் என்
உள்ளம் நிறைந்தாய்!
நாயேனை நாளும் நல்லவனாக்க
ஒயாமல் ஒழியாமல் உன்னருள் தந்தாய்!
வாயாரப் பாடி மனமார நினைந்து
வணங்கிடலே எந்தன் வாழ்நாளின் இன்பம்!
தூயா முருகா மாயோன் மருகா
உன்னைத் தொழுவதொன்றே இங்கு யான்பெற்ற இன்பம்!
நீயல்லால் தெய்வமில்லை!
எனது நெஞ்சே நீ வாழும் எல்லை!
முருகா நீயல்லால் தெய்வமில்லை!
முருகா…………..
முருகா……………
முருகா……………….
குருநாதர் :- எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பின் அழகாகவே அறிந்தும் கூட இதனால் என்ன வேண்டும்?
அடியவர் #11 :- ஆசிகள் தான் ( வேண்டுகின்றேன் ).
குருநாதர் :- எவை என்ற பின் ஆசிகள் இல்லாமலா நிச்சயம் ஓடி ஓடி வந்திருக்கின்றாய்.?
அடியவர் #11 :- ஆசிகள் தான்
குருநாதர் :- அப்பனே, பல கோடி.
அடியவர்கள் :- பல கோடி.
அடியவர் 7:- பல கோடி.
குருநாதர் :- அப்பனே, எது என்று புரிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஏது என்று புரிய கவலைகள் வேண்டாம், அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்து ?
அடியவர் #11 :- ஆசிகள் தான்
குருநாதர் :- அப்பனே, பின் ஆசிகள் என்று சொல்லிவிட்டு, அப்பனே, ஆசைகள் படக்கூடாது.
அடியவர்கள் :- (குபீர் சிரிப்புகள்………)
குருநாதர் :- அப்பனே, எது என்று கூறப்பின் ஒரே தான் அப்பனே, வித்தியாசம்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆசைக்கும், ஆசிக்கும் ?
அடியவர் :- ஒரேதான் வித்தியாசம்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரேதான் வித்தியாசம். அதனால நான் ஆசை பண்ணனும்னு நினைச்சு நீ கேட்டுறாத… என்று சொல்றாரு. வந்து….
குருநாதர் :- அப்பனே, கேள், எது என்று புரிய என்னென்ன பேசுவாய்? இங்கு பேசு.
அடியவர்கள் :- (குபீர் சிரிப்புகள்………)
சுவடி ஓதும் மைந்தன் :- என்னென்ன பேசுவாய்? வீட்ல எல்லாம் பேசப்பாட்டாரு.
அடியவர் #11 :- வீட்ல பேசுவேன், இங்க பேசமாட்டேன்.
குருநாதர் :- அப்பனே, பேசு அப்பனே. பேசித்தான் பார்.
சுவடி ஓதும் மைந்தன் :- பேசுப்பா, பேசித்தான் பார்ப்பா.
அடியவர்கள் :- (குபீர் சிரிப்புகள்………)
அடியவர் #11 :- ………..
குருநாதர் :- அப்பனே, எது என்று புரிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட மாடு என்று சொல்லி விட்டாயே.
அடியவர்கள் :- (குபீர் சிரிப்புகள்………)
அடியவர் #11 :- மாட்டேன்னு தான் சொன்னேன்.
குருநாதர் :- அப்பனே, இதற்கும் சிறிது வித்தியாசம் தான்.
அடியவர்கள் :- (குபீர் சிரிப்புகள்………)
அடியவர்கள் :- மாடு, ஏன்?
அடியவர்கள் :- மாட்டேன்
சுவடி ஓதும் மைந்தன் :- மாட்டேன்.
குருநாதர் :- அப்பனே, எவை என்று கூட மேய்க்கின்றாயா?
அடியவர் #11 :- அப்பப்ப மேய்ப்பன் அய்யா
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட மேய் அப்பனே, புண்ணியம் சேரும்.
அடியவர் #11 :- ……..
குருநாதர் :- அப்பனே, எது என்று கூறப்பின் எதை மேய்க்கச் சொன்னேன் என்று தெரிகின்றதா?
சுவடி ஓதும் மைந்தன் :- எதை மேய்க்கின்றேன் என்று தெரிகின்றதா? தெரியல. அப்பனே,
அடியவர் #11 :- தெரியல
குருநாதர் :- இல்லத்தில் யோசி. அப்பொழுது தெரியும்.
அடியவர்கள் :- (குபீர் சிரிப்புகள்………)
சுவடி ஓதும் மைந்தன் :- இல்லத்துல போய் யோசிப்பா.
அடியவர் #11 :- இங்கே ?
குருநாதர் :- அப்பனே, எதை என்று அப்பனே, பின் யோசித்துச் சொல். பரவாயில்லை,
சுவடி ஓதும் மைந்தன் :- பரவாயில்லைப்பா. இங்கேயே யோசிச்சு சொல்லுப்பா. இல்லத்துல யோசிக்க சொன்னேன். அங்க யோசிச்சா என்னன்னா? இங்க யோசிச்சா என்னன்னா? சொல்லுப்பா.
அடியவர் #11 :- தெரியல.
குருநாதர் :- அப்பனே, எதை தெரியவில்லை என்று கூறுகின்றாய்?
சுவடி ஓதும் மைந்தன் :- எதைப்பா தெரியல?
அடியவர் #11 :- நீங்க கேட்ட கேள்வி புரியல.
குருநாதர் :- அப்பனே, புரியலை, தெரியலை. அப்பனே, இன்னும் பின் விளங்கவில்லை.
குருநாதர் :- அப்பனே, என்ன தெரியும்?
அடியவர் #11 :- பாதை தெரியும்
குருநாதர் :- அப்பனே, தெரியாது என்று யான் சொன்னால்?
அடியவர்கள் :- (குபீர் சிரிப்புகள்………)
அடியவர் #11 :- ஒத்துக்கொள்கிறேன்
குருநாதர் :- அப்பனே, ஒத்துக்கொள்ள போவதில்லை. இல்லத்திலே, நிச்சயம் என்னை திட்டி தீர்ப்பாய். பின் இப்படி சொல்லிவிட்டானே. அகத்தியன், அது தவறு. எப்படி சொன்னான்? எப்படி சொன்னான் என்று?
அடியவர் #11 :- அது அப்பனுக்கும் பிள்ளைக்கும் உள்ள பந்தம்.
குருநாதர் :- அப்பனே, எதை என்று புரிய இதனால் , அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. பின் எவை என்று கூறப்பின் அறிந்தும் கூட. இதனால் , அப்பனே, ஒன்று இரண்டு வித்தியாசம் என்ன?
சுவடி ஓதும் மைந்தன் :- ஒன்றுக்கும் இரண்டுக்கும் வித்தியாசம் என்ன?
அடியவர் #11 :- தனியா இருந்தா ஒரு ஆளு…
அடியவர்கள் :- ( சிரிப்புகள்………)
குருநாதர் :- அப்பனே, எது என்று புரிய அப்பனே, இதனால் எவை என்று கூற, பின் அமைதியாக இருக்க வேண்டும். அப்பனே, எதையும் பேசக்கூடாது.
சுவடி ஓதும் மைந்தன் :- அமைதியா இருக்கணும்ன்றாரு.
குருநாதர் :- அப்பனே, இதே போல இல்லத்தில் இருக்க வேண்டும்.
அடியவர் ஒருவர் :- இருப்பார் அய்யா .
குருநாதர் :- அப்பனே, எது என்று அறிய அப்பனே, இதனால் அலைபேசி எடுத்துக்கொண்டு. அப்பனே, எவை என்று கூற அப்பனே, பின் எது என்று புரிய.
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றது தெரியுங்களா? வீட்ல அமைதியா இருக்கணும்னு சொல்லிட்டு, அலைபேசியில பேசிக்கிறேன். போ, அப்படின்னு சொல்லிட்டு, அலைபேசியில பேசக்கூடாது.
அடியவர்கள் :- ( சிரிப்புகள்………)
குருநாதர் :- அப்பனே, எது என்று புரிய ஆள் வளர்ந்திருக்கின்றாய். அறிவு எங்கே?
குருநாதர் :- அப்பனே, பின் அறிவு அப்பனே, எங்கு வைத்துள்ளாய்?
சுவடி ஓதும் மைந்தன் :- நான் கொடுத்த அறிவு எங்க? நான் கொடுத்த அறிவு எங்க போய் வச்சிருக்கீங்கன்னு கேக்குறாரு.
அடியவர் #11 :- அதனாலதான் பேசிட்டு இருக்கோம்.
குருநாதர் :- அப்பனே, எது என்று புரிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அவ்வறிவு வைத்துக்கொண்டு, இப்படித்தான் பேசுவதா?
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த அறிவு வச்சுக்கொண்டு, இப்படித்தான் பேசுவதா?
அடியவர் #11 :- வேற எப்படி பேசணும்?
குருநாதர் :- அப்பனே, மாற்றி யோசி, மாற்றி பேசு.
அடியவர் #11 :- நான் பாடிடுறேன்.
குருநாதர் :- அப்பனே, பின் பாடினால் தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொள்கிறாய்.
அடியவர் #11 :- ஆமா, ஆமா, ஆமா.
குருநாதர் :- அப்பனே, ஏதோ எவை என்ற பாடச் சொன்னார்கள். பாடிவிட்டோம், அப்பா என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்பாடி எதோ பாட்டு சொல்லிட்டு,
===========================
# குருநாதரின் உயர் ஞான அறிவுரைகள்…..
===========================
குருநாதர் :- அப்பனே, உனக்கில்லை சொந்தம். சொந்தம் வந்த பின் என்ன? ஏது அறிந்தும் அறியாதவர் போல். புரியும், புரியாதவர் போல். இருந்தும், இருந்தவர் போல். இல்லாதவர் போல் உன்னை அறிந்து, உன்னை வெல்வாயா? இதை அறிந்து, அதை வெல்வாயா? இவை வந்து பின் போன பிறகு என்ன? அறிந்தும் ஒன்றுமில்லையே. இவ் புவி தன்னில் கூட. இதை அறிந்து, இவை வந்தாலும், அவை வந்தாலும், அப்படி வந்தாலும், இப்படி வந்தாலும், மூளை எவை என்று கூற அறிந்தும் மனக்குழப்பமே. இதனை நீ அறிவது உத்தமம்.
சுவடி ஓதும் மைந்தன் :- எனக்கே தெரியல. பாடல் ரெக்கார்ட் பண்ணீங்களா?
அடியவர் :- ஆமா…. ரெக்கார்டிங் ( நடந்து கிட்டு இருக்குங்க )
குருநாதர் :- அப்பா எம்முடைய ஆசிகள் , கவலைகள் வேண்டாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்து
===========================
# அடியவர் #12 - பாடல் பாடினார்கள்…
===========================
திருவாசகம் - அருட்பத்து - 8.29 (பாடல் எண் : 8 )
முத்தனே முதல்வா முக்கணா முனிவா
.. மொட்டறா மலர்பறித் திறைஞ்சிப்
பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப்
.. பரகதி கொடுத்தருள் செய்யுஞ்
சித்தனே செல்வத் திருப்பெருந்துறையில்
.. செழுமலர்க் குருந்தமே வியசீர்
அத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால்
.. அதெந்துவே என்றரு ளாயே.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம் எவை என்று கூட ஆதரித்து, எவை என்று கூட அனைத்தும் அப்பனே, பின் மாற்றுகின்றேன். கவலை விடு.
சுவடி ஓதும் மைந்தன் :- உன்னை ஆதரிச்சு…...
குருநாதர் :- அப்பனே, எது என்று புரிய இதனால் , அப்பனே, நிச்சயம் சந்நியாசியாக பிறந்து வாழ்ந்து, எவை என்று கொண்டிருக்கின்றாயோ இது ஒரு பெரிய விஷயம்.
சுவடி ஓதும் மைந்தன் :- வாழ்க்கையில, சந்நியாசியாக பிறந்து, உன்னோட வாழ்க்கை சந்நியாசியா போயிருக்கணும். ஆனா, இப்படி வாழ்ந்து இருக்கிறேன்னா, பெரிய விஷயம்பா.
குருநாதர் :- அதனால், அப்பனே, கவலை விடு. பின் யான் எதை என்று கூறப்பின், எங்கும் அங்கும் அலைந்து திரிந்தாய். கடைசியில் இங்கு இருக்கின்றாய். கவலை விடு, யான் பார்த்துக் கொள்கின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- எதுவும் கேட்டுடாதப்பா. எங்கெங்கோ போன, இப்படி எப்படியோ போனதா? அப்படி வந்த, இப்படி வந்த. கடைசில, எங்க நிக்கிற வந்து, அகத்தியர் கிட்ட நிக்கிற. என்னிடத்தில் நிக்கிற. அதனால, நீ கவலைப்படாதப்பா. உனக்கு என்ன பண்ணனுமோ, அது பண்ணிடுறேன்.
குருநாதர் :- அப்பனே, அவை இவை என்று சொல்லி, ஆசை வைக்க மாட்டேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- உனக்கு வந்து, நான் அதை பண்றேன், இதை பண்றேன், அப்படி பண்ணேன், இப்படி பண்ணேன். உனக்கு வந்து, நான் ஆசை வைக்க மாட்டேன்.
குருநாதர் :- அப்பனே, எது என்று கூறப்பின், சேவை செய், பார்த்துக்கொள்வோம்.
சுவடி ஓதும் மைந்தன் :- சேவை செஞ்சு, ஏதாவது உன்னால் முடிஞ்சது, பார்த்துக் கொள்வோம்ன்றாருங்க.
அடியவர் #11 :- சரிங்க ஐயா,
குருநாதர் :- அப்பனே, எம்முடைய ஆசிகள். அப்பனே, மற்றொரு வாக்கில், எதற்காக பிறந்தாய் என்பதை எடுத்திருக்கின்றேன்.
அடியவர் #11 :- ( உடன் இருந்த ஒரு அடியவருக்கு வாக்கு கேட்க ….)
குருநாதர் :- அப்பனே, எது என்று கூற பின், இப்பொழுது எதையும் கேட்டு விடாதே.
அடியவர் #11 :- ஆசிகள்
குருநாதர் :- அப்பனே, எம்முடைய ஆசிகள்
சுவடி ஓதும் மைந்தன் :- எதுவும் வேணாம், இப்படி என்னுடைய ஆசிகள் ரைட்.
அடியவர் #11 :- சந்தோஷம், சந்தோஷம்.
===========================
# அடியவர் #13 - பாடல் பாடினார்கள்…
===========================
(திருப்புகழ் 724 அண்டர்பதி குடியேற - சிறுவை)
அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர்மன மகிழ்மீற ...... வருளாலே
அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனு முமையாளு ...... மகிழ்வாக
மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு
மஞ்சினனு மயனாரு ...... மெதிர்காண
மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
மைந்துமயி லுடனாடி ...... வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள
புந்திநிறை யறிவாள ...... வுயர்தோளா
பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு ...... வடிவேலா
தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
தண்டமிழின் மிகுநேய ...... முருகேசா
சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு ...... பெருமாளே.
குருநாதர் :- அம்மையே, எது என்று புரிய கவலை வேண்டாம். நிச்சயம் தன்னில் கூடப்பின் என்ன வேண்டும்? எது என்று புரிய பின், அண்ணாமலைக்கு செல். அனைத்தும் கிட்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- உனக்கு என்ன வேணுமோ, அண்ணாமலைக்கு சென்று கொண்டே இருந்தால், அனைத்தும் கிட்டும்.
குருநாதர் :- தாயே, கவலை விடு.
சுவடி ஓதும் மைந்தன் :- கவலை விடு. கேளுமா?
அடியவர் #12:- ஒரு அஞ்சு ஆறு வருஷத்துக்கு முன்னாடி, ……………வேலை விஷயமா, ஒருத்தர் கிட்ட ஒரு பெரிய அமௌன்ட் கொடுத்து விட்டோம். வேலையும் கிடைக்கல, பணமும் கிடைக்கல.
குருநாதர் :- தாயே, எது என்று புரிய? இப்பொழுது இதற்கு விடை இல்லை.
குருநாதர் :- தாயே, எவை என்று புரிய பின் யாரிடத்திலும் எதையுமே இருப்பதில்லை. எது என்று புரிய புரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால், இறைவன் காசுகள் பின் கொடுக்கின்றான் என்றால், நிச்சயம் தன்னில் கூட அதை மற்றவரிடம் கொடுத்துவிட்டால், மறந்து விட வேண்டியதுதான்.
சுவடி ஓதும் மைந்தன் :- இறைவன் காசு கொடுக்கிறார். எல்லாத்துக்கும் வந்து, அது எப்ப மற்றவரிடத்தில் போகுதோ, திருப்பியும் மறந்துடனும், ரிட்டர்ன் வராது என்பது
பாடகர் :- கர்மா கழிஞ்சு போச்சு மாதிரி கணக்கா அது ?
சுவடி ஓதும் மைந்தன் :- அதுதான்,
குருநாதர் :- தாயே, இதனைப் பற்றி ரகசியமாக சொல்கின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப இது சொல்ல மாட்டேன்றாருமா?
அடியவர் #12:- சின்ன அமௌன்ட்னா பரவாயில்லை. பெரிய அமௌன்ட்,
குருநாதர் :- தாயே, எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட, அது கூட, உயிர் போய்விட்டால்?.....
அடியவர் #12:- ( அமைதி )
குருநாதர் :- தாயே, எது என்று புரியப்பின், இதனைப் பற்றி சொன்னாலும், சாபமாக போய்விடும்.
சுவடி ஓதும் மைந்தன் :- வேணாம், ஏன்னா, அது வந்து வரும், வராதுன்னு சொல்லல. அவர் வந்து திடீர்னு வந்து வேற மாதிரி சொல்லிட்டாலும், அது வந்து சாபமா போயிடுமா? உங்களுக்கு இது ஆயிடுமா? வந்து அதனால, இப்ப வேணாமா அந்த விஷயத்தை?
பாடகர் :- பணம் கேட்டா, அவங்க எதோ …………. பண்ண கூட கூட தயங்க மாட்டாங்க. இன்டைரெக்ட்டா சொல்றாரு. அதான் பதில், அது புரிஞ்சுதா? சூட்சமமா உங்களுக்கு உயிர் போய்விட்டால், அப்படின்னா என்ன அர்த்தம்? நீங்க பணம் கேட்டா, உங்களை வந்து …………பண்ண கூட தயங்க மாட்டாங்க. ஒரு 20 லட்சம், 25 லட்சம் கொடுத்து வச்சுக்கோங்க. அதுக்கோசரம் …….. பண்ணலாமே.
சுவடி ஓதும் மைந்தன் :- பாத்துக்கலாம். ஓகேங்களா? அடுத்தது,
அடியவர் #12:- சரி. அப்புறம், அரசாங்க உத்தியோகம் கொடுத்தாரு. என்னமா, அரசாங்க உத்தியோகம் கொடுத்திருக்காரு. நிறைய பேருக்கு அது கிடைக்கல. அந்த வாய்ப்பு எனக்கு கொடுத்திருக்காரு. ஆனா, நிம்மதியே இல்லைங்க. அலைச்சலவே இருக்கே….
குருநாதர் :- தாயே முதலிலேயே சொல்லிவிட்டேன், எங்கு செல் என்று.
அடியவர் :- திருவண்ணாமலை
ஒரு அடியவர் :- திருவண்ணாமலை போக சொல்றாரு.
சுவடி ஓதும் மைந்தன் :- முதல்லயே சொல்லிட்டார். அடிக்கடி நீங்க போயிட்டே இருந்தீங்கன்னா, வந்து
குருநாதர் :- தாயே, எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட, அதாவது, நிச்சயம் பின் எவை என்று அறிய , நிச்சயம் இவ்வாறாக எவை என்று அறிய , நிச்சயம் அரசு பதவியில் இருப்போருக்கெல்லாம்… யாருக்கும் நிம்மதி இல்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- அரசு பதவி என்றாலே, நிம்மதி இல்லாத வாழ்க்கை தான்.
குருநாதர் :- ஆனாலும், எது என்று புரிய தாயே, பின் எவை என்று அறிய வருங்காலத்தில் சில விஷயங்கள் சொல்கின்றேன். பொறுத்திருக.
சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா, அரசு வேலையில் பணிபுரிவீர்கள்னா, யாராவது நல்லா இருக்கணும்னு கேளுங்க. போயிட்டு பக்கத்துக்கு,
அடியவர் #12:- யாரும் இல்லைங்க
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால நீங்க அதனால கொஞ்சம் இருங்கமா? நான் சொல்றேன்றாரு. ஓகேங்களா?
அடியவர் #12:- ஒரு பத்து வருஷமா வீடு கட்டுறதுக்காக ட்ரை பண்றேன்.
குருநாதர் :- எதை, எது என்று புரிய தாயே, முடியும். ஆனால், அண்ணாமலை பின் அடிக்கடி சென்று தரிசித்தல் சிறப்பு தரும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா, நீங்க நேரா அண்ணாமலையில் போமா? அடிக்கடி போயிட்டா, சிறப்பு வந்து உங்களுக்கு எல்லாம் வருமா? ஓகேங்களா? அடுத்து,
அடியவர் #12:- 70 வயசு ஆகுது. அம்மாக்கு இன்னும் அவங்களுக்கு நிம்மதியே இல்லை.
குருநாதர் :- தாயே, எவருக்குத்தான் நிம்மதி இருக்கின்றது? யாரையாவது நிச்சயம் கேள்.
சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா யாருக்குமே நிம்மதி இல்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா, அம்மா, இதை அகத்தியர் வந்து நீங்க சூப்பரா கேட்கணுமா? வேற மாதிரி வந்து யாருக்கும் நிம்மதி இல்லைன்றாரு.
அடியவர் #12:- அவங்க பசங்க நல்லா பாத்துப்பாங்களா?
குருநாதர் :- எதை என்று கூற, பின் எவை என்று புரிய, ஆனால், இவையெல்லாம் எதை என்று புரிய, நிச்சயம் பின் இல்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- இதெல்லாம் இப்ப அது வந்து நல்லா பார்த்துக்கோங்க. அதெல்லாம் கிடையாது.
குருநாதர் :- எதை என்று புரிய, தாயே, நிச்சயம் அவர், அவர் வாழ்க்கை பாருங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- அவரவர் வாழ்க்கை பார்த்துக் கொள்வாங்க. அவ்வளவுதான்.
சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்து?
அடியவர் #12:- ……………
குருநாதர் :- தாயே, எது என்று கூற அண்ணாமலை நோக்கிச் செல் பார்ப்போம்.
சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா, நீங்க அண்ணாமலைக்கு சென்று வாங்கம்மா. ஓகேங்களா? அண்ணாமலையே சொல்றாரு. அங்க போனா அடிக்கடி போகணும்.
பாடகர் :- நாலு வாட்டி சொல்ல மாட்டாரு. நாலாவது வாட்டி சொல்லிட்டார்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( அசைவம் குறித்து உரையாடல்கள் )
அடியவர் :- ஐயா, வழியில வந்து அசைவம் சாப்பிடக்கூடாது.
சுவடி ஓதும் மைந்தன் :- சாப்பிட்டா, இவங்க அப்படியே நிக்கும்மா? எழுத்துக்குள்ள அதனாலதான் வேற ஒன்னும் இல்லமா? அடுத்த முறை நீங்க போயிட்டு வாங்க. அண்ணாமலைக்கு சரிங்க.
( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 05/07/2026 அன்று சென்னையில் நடந்த அன்புடன் அகத்திய மாமுனிவர் யாத்திரை குழுவினருக்கான சத்சங்க வாக்குகள் தொடரும் ……. )
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.