இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.
அன்புடன் முருகப்பெருமான், 13/09/2026 அன்று அன்புடன் அகத்திய மாமுனிவர் யாத்திரை குழுவினருக்கு உரைத்த வாக்கு - பகுதி 2
வாக்குரைத்த நாள், நேரம், இடம் :- 13/09/2026 (ஞாயிற்றுக்கிழமை இரவு - விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாள், சுவடி ஓதும் மைந்தன் இல்லம்)
==================================
# அன்புடன் முருகப்பெருமான் வாக்கு
==================================
அனைத்தும் காத்து, அருளை ஈயக்கூடிய தந்தையே !!!!!! தாயே !!!!!!
பணிந்தேனே, செப்புகின்றேனே, வேலனவனே !!!!!!
( பகுதி 1 அதன் தொடர்ச்சியாக….. )
==================================
# விநாயகர் சதுர்த்தி வழிபாடு விதி ரகசியங்கள்…
==================================
# விநாயகர் சந்தோஷப்பட வேண்டும் என்றே, இவ் வழிபாடு செய்ய வேண்டும். இதுதான் விதி.
==================================
# அடியவர்கள் கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள்…
==================================
அன்புடன் முருகப்பெருமான் :- இவைத்தன் அனைவரும் இதைத்தன் அறிய, ஆனாலும், பின் அதாவது, பல கோடி மக்களை பார்த்திட்டான் மூத்தோனே இதைத்தன் அறிய.
அன்புடன் முருகப்பெருமான் :- ஆனாலும், பின் மூத்தோன், பின் மனமார, பின் சந்தோஷப்பட வேண்டும் என்றே, இதை செய்ய வேண்டும். இதுதான் விதி.
அன்புடன் முருகப்பெருமான் :- ஆனாலும், மனிதன் சந்தோஷப்படுவதற்காக செய்கின்றான். பின் அப்படியே ஆகட்டும் என்று, மூத்தோன் சொல்லிவிட்டு, சென்று விடுகின்றான். ஆனால், வருந்துவதோ, மனிதனே.
அடியவர் :- விநாயகர் சந்தோஷப்படுவதற்காக செய்யணும். ஆனால், மனிதன் சந்தோஷப்படுவதற்காக செய்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- மனிதன் சந்தோஷப்படுவதற்காக செய்றாங்க . ஆனால், கடைசில, வருந்துவது யாரு?
அடியவர் :- மனிதன்.
சுவடி ஓதும் மைந்தன் :- மனிதன் தான்.
அன்புடன் முருகப்பெருமான் :- இதனால், அனைத்தும் மனிதன் செய்துவிட்டு, கடைசியில், இறைவன் மேல் பழி சுமத்துவான் மனிதன் கலியுகத்தில். அவ்வளவுதான். இது வேடிக்கையா? அல்லது வாடிக்கையா?
அடியவர் :- வேடிக்கை
சுவடி ஓதும் மைந்தன் :- வேடிக்கையா? எல்லாத்தையும் கொட்டுற மனுஷன் செஞ்சுட்டு, கடைசில யாரு இது பண்ணுவாரு? கடவுள் மேல போட்டுருவாராம்.
அன்புடன் முருகப்பெருமான் :- ஆனால், கடவுள், அதாவது, கண்ணுக்கு தெரியப்போகின்றானா என்ன? பின் அவ்வளவு பின் அறிவாளி மனிதன். இதனால்தான் கெடுத்து, அதாவது, கெடுகின்றான் மனிதன்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால, அவ்வளவு பெரிய அறிவாம் மனுஷனுக்கு வந்து… அதனாலதான், மனுஷன் எப்படி இருக்க? எதுக்காக கெடுறது? அதனாலதான்.
==================================
# மரங்கள் நடும் சித்த ரகசியங்கள்…
==================================
ஒரு அடியவர் :- ( அய்யா , மரம் நட ஆசி வேண்டும்..இது குறித்து வாக்குகள் கேட்ட போது….)
அன்புடன் முருகப்பெருமான் :- இவை தன் தாயே. எதைத்தன் மரம் நட்டாலும், எதைத்தன் அறிய. ஆனாலும், எங்கு எவை தன் அறிய.
****** உன் ஆற்றல் எங்கே அதிகமாக இருக்கின்றது என்பது, அகத்தியனுக்கு மட்டுமே தெரியும். அங்கு நட்டால் மட்டுமே சிறப்பு. ******
இல்லையென்றால், பின் இவை தன் பாவம்தான்.
சுவடி ஓதும் மைந்தன் :- எங்க நடனும்? ஏன்னா, நம்ம தெரியாம…..அதுதான் எதுவும் தெரியாம செஞ்சிருக்க கூடாது. ஒரு இடத்துல, உங்களுக்கு எங்க ஆற்றல் அந்த கரெக்டா வந்து விழுதோ, அங்கதான் வந்து…
அன்புடன் முருகப்பெருமான் :- இவை தன் அறிய. இப்பொழுது வெளிச்சத்தில் இருக்கின்றாய். அறிந்தும், இவைத்தன் ஆனாலும், பின் இவை அறியாமல், பின் பின், அதாவது, இரவு தன்னில், அதாவது, பின் இருந்தால், எப்படி அங்கு நட்டால், நிச்சயம் அப்படியே ஆகும். வெளிச்சம் எங்கு இருக்கின்றது உனக்கு? பின் ஆனாலும், இப்பொழுது கண்கள் இருக்கின்றது. ஆனால், வெளிச்சம் தெரிகின்றது. ஆனால், இவ் வெளிச்சம் மறைமுகமானது. அவ் வெளிச்சம் யாருக்கும் தெரிவதில்லை.
அடியவர் 3 :- ஐயா, சரவணன் கொஞ்சம் சொல்லுங்க. ஐயா,
அன்புடன் முருகப்பெருமான் :- எவை எது என்று உண்மை எதைத்தன் அறிய…. என் பெயரை வைத்துக்கொண்டு, எவை என்று புரிய கேட்கின்றாயே? இது நியாயமா? எதற்காக வைத்தாய் நீ?
அடியவர்கள்:- ( குபீர் சிரிப்புகள் )
சுவடி ஓதும் மைந்தன் :- என் பேரை வச்சு, ஏன்பா, என் பேரை எதுக்கு வச்சீங்கன்னு கேட்டாரு.
அடியவர் 3 :- சரி, அய்யா (....ஆடியோ தெளிவில்லை ....) பாருங்க அய்யா.
==================================
# எப்போது பாவ கிணற்றில் இருந்து மேலே வர இயலும்?
==================================
அன்புடன் முருகப்பெருமான் :- இதைத்தன் அறிய எவ்வாறு என்பதை எல்லாம் சொல்லிவிட்டேன். அனைத்தும் பாவத்தில் மிதந்து கொண்டு இருக்கின்றார்கள். அதாவது, கிணற்றில் இருக்கின்றார்கள். இதைத்தன் மெதுமெதுவாக, பின் உண்மையாக அறிந்தும், பின் இறைபக்தியோடு இருந்தால், நிச்சயம் அக் கிணற்றிலிருந்து மேலே தூக்குவான். அவ்வளவுதான். அனைவருக்குமே.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாரும் என்ன பண்ணிறாங்க? உங்களுக்கு சொல்ல. பொதுவா சொல்றார். எல்லாமே கிணற்றுல விழுந்துட்டாங்க. பொறுமையா, இறைபக்தியோடு நடக்கும் நம்மளுக்கு அப்படின்னு சொல்லிட்டு, மனசோட நம்பிக்கையோடு இருந்தா, மெதுவா அந்த கிணற்றுல இருந்து என்ன பண்ணுவாங்க?
அடியவர்கள் :- தூக்கி விடுவாங்க
சுவடி ஓதும் மைந்தன் :- தூக்கிட்டு வந்து கரைக்கு விடுவாங்க. இல்லையென்றால்?.....
அன்புடன் முருகப்பெருமான் :- ஆனாலும், இவை தன் அறிய, இதனால், பின் பரிபூரணமாகவே, எம்முடைய ஆசிகள். கவலைகள் வேண்டாம். அகத்தியன் இன்னும் சொல்வான்.
சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியர் வரும்பொழுது சொல்றேன்னு சொல்லி இருக்காரு.
==================================
# தானங்கள் செய்வதற்கும் புண்ணியங்கள் வேண்டும்.
==================================
# ஆதி ஈசனார் அருளாசிகள் மூலமாகவே தானங்கள் செய்ய இயலும்.
==================================
அடியவர் :- ( ஒரு இடத்தில் ……… ) மோர் சேவை பண்றாங்க. ரெண்டு வருஷமா. ( அது குறித்து வாக்குகள் கேட்ட போது )
அன்புடன் முருகப்பெருமான் :- இவைத்தன் எவ்வாறு பின் தானங்கள்… தானங்கள் செய்வதற்கும் புண்ணியங்கள் வேண்டுமடா. வேண்டுமடா. இதைத்தன் அறிய, அனைவரும் தானங்கள் செய்ய முடியாது. தானங்கள் செய்தாலும், பாவங்களாக போய்விடும். யாருக்கு அத்தகுதி இருக்கின்றதோ, என் தந்தையே முடிவெடுப்பான். கவலைகள் வேண்டாம். ஆனாலும், பின் உன் சேவையை தொடர்ந்து செய். பார்த்துக் கொள்வோம். ஆனால், அதிலிருந்து நன்மையோ, தீமையோ என்று நீ எதிர்பார்க்கக் கூடாது.
அடியவர் :- சரிங்க அய்யா.
==================================
# மூத்தோன் யார் என்பதே இன்னும் தெரியவில்லை
==================================
அன்புடன் முருகப்பெருமான் :- இவை தன் அறிய, நாளை பொழுதில் மனமாரக, மனம் உவந்து , இதைத்தன் மூத்தவனுக்கு வழிபாடுகள் பலபல. அன்பாலே, அவன் தனக்கு பிடித்தது. இதைத்தன் அறிய.
****** பின் ஆனாலும், மூத்தோன் யார் என்பதே இன்னும் தெரியவில்லை. பல, பின் அதாவது, இவ்வுலகத்திற்கே. ******
அன்புடன் முருகப்பெருமான் :- ஆனாலும், அகத்தியன் வந்து சொல்கின்ற பொழுது, பின் இவைத்தன் அறிய, இவைத்தன் புரிய, இன்னும் ஞானங்கள் மனிதனுக்கு எவ்வாறெல்லாம்… எங்கு இருக்கின்றான் என்பதை எல்லாம் தெள்ளத்தெளிவாக அகத்தியன் உரைக்கின்றான்.
==================================
# விநாயகப் பெருமானுக்கு பிடித்த 8 வகையான பிரசாதங்கள்….
==================================
அன்புடன் முருகப்பெருமான் :- இதனால், (2026 விநாயகர் சதுர்த்தி) நாளை பொழுதில், தன் மனமாக, மனம் உருகி என்ன வேண்டுமோ, அதை வேண்டிக்கொள்ளுங்கள். பன்மடங்காக கொடுப்பான். இதைத்தன் அறிய, பலமாக, இவைத்தன் பின் எட்டு. இவைத்தன் அறிய, பின் இவைத்தன் வகையான, இதைத்தன் செய்தாலே, பின் மூத்தவனுக்கு பிடிக்கும்.
அடியவர் 1:- எட்டு வகையான நெய்வேத்தியங்கள்….
அடியவர் 4:- கொழுக்கட்டை…
அன்புடன் முருகப்பெருமான் :- இவைத்தன் எட்டு, இவைத்தன் அறிய, இதற்கும் சம்பந்தம் உண்டு. பின் அறிவாக, அகத்தியனே வந்து சொல்வான்.
==================================
# ஒருவரின் தீய பழக்கங்கள், ஒரு குடும்பத்தையே அழிக்கும்.
==================================
அடியவர் 4:- அய்யா பொதுவா, மது பழக்கத்துல, சின்ன பொண்ணுங்க, காலேஜ் பசங்க, இது பண்றாங்க. அவங்களுக்கு நாங்க என்ன முருகா பண்ணனும்?
அன்புடன் முருகப்பெருமான் :- இவை தன் அறிய, என் தந்தை முடிவெடுத்து வைத்திருக்கின்றான். அனைத்தும், அனைவரையும் அழித்து விடுவோம் என்று. ஆனால், சித்தர்களோ, பொறுமையாக இருங்கள், இருங்கள் என்றெல்லாம்… என் தந்தையிடம், பின் ரகசியமாக, சித்தர்கள் சென்று சென்று.. இதனாலே, ஆனாலும், சித்தர்கள் சரி என்று சொல்லிவிட்டால், அனைவரும் சரிசமமாக அழித்துவிட்டு சென்று கொண்டே இருப்பான் என் தந்தை.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாருமே, இறைவன் கொஞ்சம் இருங்க, இருங்கன்னு சொல்லிட்டு இருக்காரு.
அன்புடன் முருகப்பெருமான் :- ஏன், கலியுகத்தில் எவ்வாறு, இதைத்தன் அறிய. அதாவது, தாயே… இவை போன்று, பின், அதாவது, தன்னைத்தானே கெடுத்துக் கொள்ள வேண்டும் என்பது. ஏனென்றால், கலியுகம், அதாவது, பாவப்பட்டது. பாவப்பட்டது, இதைத்தன் அறிய. இதனால்தான், அதிவிரைவில், பின், இவைத்தன் அறிய, உண்மையானவை, அதாவது, இவைத்தன் அழிய. ஆனாலும், பொய்யானவை, எவைத்தன் புரிய.
அன்புடன் முருகப்பெருமான் :- இதனை அறிவதற்கும் பல ஆண்டுகள் அறிந்தும். இதனால், கலியுகத்தில் இன்னும் இவ்வாறாக இருந்தால், தன்னைத்தானாக, பின், தன்னைத்தானே அழித்துக் கொண்டு, உடனடியாக, அக்குடும்பத்தையும், பின், அவனே அழிப்பான். இறைவனுக்கு இங்கு… பார்த்துக் கொண்டிருப்பான் வேடிக்கை…
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு வீட்ல ஒருத்தர் தவறு செஞ்சாருன்னா..எல்லாத்துக்கும் தண்டனை விழும்ன்றது வந்து. ஏன்னா, அதன் மூலமா என்ன பண்ணுவாங்க? வந்து,
அடியவர் 4:- குடும்பமே கஷ்டப்படும்.
சுவடி ஓதும் மைந்தன் :- குடும்பமே ?
அடியவர் 5 :- கஷ்டப்படுது.
அன்புடன் முருகப்பெருமான் :- இதைத்தன் கலியுகம், இதனால்தான், சில சில, பின், இவைத்தன், அதாவது, சித்தர்களே காப்பாற்றிக் கொண்டு. இதனாலே, பின், சித்தர்கள் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கின்றார்கள். திருந்தினால், திருந்துங்கள் என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- அதனாலதான், சித்தர்கள் என்ன பண்றாங்க? வந்து, திருந்தினால், திருந்து, ஒரு சான்ஸ் கொடுக்கிறேன்னு சொல்லிட்டு, வந்து, இது பண்றார்.
==================================
# உங்கள் அன்பிற்காக வந்திருக்கின்றேன்.
==================================
அன்புடன் முருகப்பெருமான் :- இவைத்தன் அறிய ஆனாலும், பின்,
****** நீங்கள் இதைத்தன் எத்தனை கோடிகள் குவித்தாலும், யான் வரப்போவதில்லை. ஆனால், உங்கள் அன்பிற்காக வந்திருக்கின்றேன். ******
அடியவர்கள் :- ( பக்தி பரவசத்தில் ) முருகா !!!!!! முருகா !!!!!! முருகா !!!!!!
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க எத்தனை கோடி குவிச்சாலும், வந்து, என்னெல்லாம் நான் வரமாட்டேன்ப்பா. உங்கள் அன்பு ஏதோ, நீங்க கஷ்டப்பட்டீங்க, ஏதோ ஒருத்தருக்கு ஒரு கஷ்டம் இருக்குது. வந்து, அது என்னையே தேடி இருக்கிறீங்க. நீங்க வந்து, அதனால, இந்த நேரத்துல நான் சொல்ல வந்தேன்ட்டார்.
அன்புடன் முருகப்பெருமான் :- மனிதன் எவ்வாறு இருக்கின்றான் என்று பாருங்கள். என்னை பார்ப்பதற்கும், இந்நேரத்தில் மீண்டும் சொல்கின்றேன். ஓடி வந்தாலும், மனிதன் உங்களை வெளியே தான் தள்ளிவிடுவான். இதுதான், பின், கலியுகம்.
சுவடி ஓதும் மைந்தன் :- இதுதான்? கலியுகம்.
அடியவர் :- கலியுகம்,
சுவடி ஓதும் மைந்தன் :- கலியுகம்
அடியவர் :- கருணைகடல்…..
அன்புடன் முருகப்பெருமான் :- இதனாலே, எவ்வளவு, பின், எங்களை வணங்கினாலும், யாங்கள் உத்தரவிட வேண்டும் உங்களுக்கு. அவ்வளவுதான்.
==================================
# மழை வேண்டி ஆசி கேட்டபோது
==================================
அடியவர் 6 :- ஐயா, மழையே பெய்யலையா…
அன்புடன் முருகப்பெருமான் :- எவைத்தன், பின், மாற்று. இதைத்தன் அறிய , நல்வகை சொல்லு. நல்மனதோடு இருக்கச் சொல். போதும்,
சுவடி ஓதும் மைந்தன் :- எப்பா, நல்லவங்களா இருங்க. நல்ல மனசை எண்ணுங்கடா. டேய், நல்ல பூஜை, இது வந்து, நல்ல புண்ணியம் பண்ணுன்னு சொல்லு. மழை வருதுன்றாரு.
அன்புடன் முருகப்பெருமான் :- இவைத்தன் அறிய, பின் இவையும், பின் அதாவது, அகத்தியன் அனைத்தும் சொல்வான். பின் அதாவது, சொல்லிச் சொல்லி அழுத்தி விட்டார்கள். அதாவது, இவைத்தன், அவைத்தன் என்று. ஆனாலும், அகத்தியன் சொல்வான். இதற்கு சரியான தீர்வு.
சுவடி ஓதும் மைந்தன் :- சரியான தீர்வு, அகத்தியர் சொல்லுவார்.
==================================
# உழவாரப்பணி வேண்டி ஆசி கேட்டபோது
==================================
அடியவர் :- ஐயா பாடல் பெற்ற திருத்தலங்களில் உழவாரப்பணி ( செய்ய ஆசி கேட்ட போது )
அன்புடன் முருகப்பெருமான் :- இவைத்தன் அகத்தியன் சொல்லட்டும். பின்பு பார்த்துக் கொள்ளுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, அவர் சொல்ல மாட்டார். ஆசீர்வாதம் கொடுத்துட்டு போவாரு.
==================================
# மலை யாத்திரை வேண்டி ஆசி கேட்டபோது
==================================
அடியவர் :- இப்ப வரை மலை யாத்திரை நம்ம டீமோடு இன்னும் போகல. அது மாதிரி போவதற்கு ஆசி வேண்டுகின்றேன் ஐயா.
அன்புடன் முருகப்பெருமான் :- புரியும். அதாவது, சற்று பொறுத்திருங்கள். இதைத்தன் அகத்தியன் எடுத்து ஆசீர்வாதங்கள் கொடுக்கட்டும். அனைவருக்கும் எம்முடைய ஆசிகள்.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாருக்கும் ஆசீர்வாதம் சொல்லிட்டாரு.
==================================
# இறைவன் யாருக்காக இறங்கி வருவார்?
==================================
அடியவர் 7:- ( ஐயா, முருகர் வந்து எங்க அப்பா தானுங்க அய்யா. என் பொண்ணு கூப்பிட்டால் வரலை அய்யா. )
அன்புடன் முருகப்பெருமான் :- இவை என்று அறிய புரிந்து, இவைத்தன் பின், அதாவது, நீங்கள் அழைத்தாலும், எவை தன் புரிய, நிச்சயம் அறிந்தும், இவைத்தன்… எங்களுக்கு யாரை பின் பிடிக்கின்றதோ, அவர்களுக்காக, பின் இறங்கி வருவோம். அவ்வளவுதான்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால, வந்து, நீங்க அழைத்தாலும், எல்லாரும் முருகனை அழைக்கிறாங்க.
அடியவர் :- அவருக்கு யாரை பிடிக்குமோ….
சுவடி ஓதும் மைந்தன் :- எங்களுக்கு யாரு பிடிக்குமோ, நான் அதுக்காகத்தான் வருவேன். அப்பனா பார்த்துக்கோங்க. அம்மா சூப்பரா சொல்றாரு வந்து. டேலன்ட்டா, ஒரு டேலன்ட்டா சொல்றாரு வந்து….
அடியவர் :- எல்லாரையும் கூப்பிடுறீங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாரும் கூப்பிடுங்க. நான் வந்துருவேனா?
அடியவர் :- யாருக்கு, அவருக்கு பிடிச்சது?
சுவடி ஓதும் மைந்தன் :- எனக்கு யார் பிடிச்சதோ? அப்பதான் நான் வருவேன். இறைவன், அவருக்கு பிடிச்சது. அதனால வராரு. இப்படி எல்லாம் ஒரு
அடியவர் 1 :- முருகன் அப்பாவின் தரிசனம் கிடைப்பதற்கு, நாங்கள்
அன்புடன் முருகப்பெருமான் :- இவைத்தன் அறியேன். புரியேன். பின், அதாவது, ஒவ்வொன்றாக, இவைத்தன் பின் செய்திட்டு கேட்டால், நன்று. செய்யாமலே கேட்டாலும், நியாயமா?
(அதாவது முன்னர் உரைத்த வழிபாடுகளை செய்திட்டு, பின்னர் ஆசி வாக்கு கேட்க நன்று.)
==================================
# ஓதிமலை தரிசனத்திற்கு ஆசிகள் கேட்டபோது
==================================
அடியவர் 8 :- ஓதிமலைக்கு அடுத்த வாரம் முருகா !!!!! ( ஆசிகள் கேட்டபோது )
அன்புடன் முருகப்பெருமான் :- இவைத்தன் எதை என்று புரிய எவ் மலைக்கு வந்தாலும், இதைத்தன் அறிய யான் எங்கு ஆசிகள் தருவேன் என்று யாருக்கும் தெரியாது. அவ்வளவுதான்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஓதி மலைக்கு வந்தாலும் சரி , எந்த மலைக்கு வந்தாலும் சரி. நான் எங்க ஆசீர்வாதம் தருவேன் என்று யாருக்கும் தெரியாது.
அடியவர் 8 :- வரதுக்கு ஆசி.
அன்புடன் முருகப்பெருமான் :- எவைத்தன் புரிய அனைத்தும் எம்முடைய ஆசிகள். அருகிலே வழி நடத்துவேன்.
==================================
# இறைவனை கண்டடைய ஒரே வழி….
==================================
அடியவர் 8 :- ஐயா, நாங்க எல்லாருமே (முருகர்) அவர் பிள்ளைகளா எப்போதும் இருக்கவேண்டும். ஆசி வேண்டும்.
அன்புடன் முருகப்பெருமான் :- எவைத்தன் அறிய, இதைத்தன் புரிய. இப்படி சொல்கின்றாயே. இதற்குத்தான் பல பக்குவங்கள். குழந்தாய், இதைத்தன் அறிய.
இதனால்தான் உண்மையான, அதாவது, ஞானங்கள் பெற, பல பக்குவங்கள். இதைத்தன் அறிய, கஷ்டங்கள் தான்.
****** பின், அதாவது, எங்களை கண்டடைய ஒரே வழி, கஷ்டங்கள் தான். ******
எப்பொழுதோ, அகத்தியன் சொல்லிவிட்டான். இதனால், இதைத்தன் அறிய, கஷ்டங்களே இல்லை என்றால், யாங்களும் வரப்போவதில்லை. இதனாலே.
சுவடி ஓதும் மைந்தன் :- என்னை கண்டுகிறதுக்கு ஒரே வழி என்ன வழி ?
அடியவர் :- கஷ்டம்தான்.
சுவடி ஓதும் மைந்தன் :- கஷ்டம்தான்
அடியவர் :- கஷ்டப்பட்டு தான் இறைவனை காண முடியும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்பதான் என் வழியில வந்து..
==================================
# யான் சுவடியில் வந்ததே தீட்சை தானடா.
==================================
அடியவர் 1 :- முருகன் அப்பா எங்களை அழைத்து.. எங்களுக்கு வந்து தீட்சை கொடுக்கணும்னு கேட்குறாங்க. (அலைபேசியில் மற்றொரு அடியவர் கேட்ட கேள்வி)
அன்புடன் முருகப்பெருமான் :- இவைத்தன் அறிய மூடர்களே, யான் வந்ததே தீட்சை தானடா.
அடியவர் 1 :- ( அலைபேசியில் இவ் வாக்கினை எடுத்துரைத்தார்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- நம்ம வந்து மந்திரம் எவ்வளவு நம்ம வந்து தீட்சை கொடுத்தா…. அந்த மந்திரம் (உச்சரித்தால்) செஞ்சா முருகர் வருவார். புரியுங்களா? சரியா சொன்னாரு. நம்ம எவ்வளவு மந்திரம் சொன்னா முருகர் வருவாருன்னு சொல்லிட்டு இது பண்றாங்க. அப்ப அவர் ஒரே வரியில் சொல்லிட்டாரு. என்ன சொல்லிட்டாரு வந்து?
அம்மை அடியவர் :- நான் வந்ததே தீட்சை தான்ன்றாரு.
சுவடி ஓதும் மைந்தன் :- வந்ததே தீட்சை தான்ன்றாரு. . இப்ப எதுக்காக தீட்சை நமக்கு பெறுறோம்? அப்பா ஒரு இறைவனை காண்பதற்கு தானே தீட்சை பெறுறோம். அந்த மந்திரம் அப்ப என்ன ஆச்சு? இவர் வந்து இவர் வந்துட்டாலே வந்து என்ன ஆச்சு?
அடியவர்கள் :- தீட்சை, தீட்சை..
சுவடி ஓதும் மைந்தன் :- அதுதான் தீட்சைன்றாரு. வந்து
==================================
# இறைவன் நினைத்தால் மட்டுமே வாழ்க்கை மாறும்.
==================================
அடியவர் 1 :- அழகனே குமரன் ஐயா, எங்களுடைய வாழ்க்கை மாறுவதற்கு எனக்கு ஒரு மந்திரம் வந்து ( கொடுங்கள் )
அன்புடன் முருகப்பெருமான் :- எது புரிய எவரது பின் வாழ்க்கையும் மாறாதது. இவைத்தன்அறிய பின், அதாவது இறைவன் நினைத்தாலே, அதாவது என் தந்தை நினைத்தாலே உண்டு.
அடியவர் 1 :- ( தொலைபேசியில் இவ் வாக்கினை எடுத்துரைத்தார்கள் )
( ஒரு அடியவருக்கு சில வாக்குகள் )
==================================
# ஆசிகள். எதையும் கேட்காதீர்கள்.
==================================
# ஒரு மூடன் என்ன செய்வான்?
==================================
அன்புடன் முருகப்பெருமான் :- இதை தன் அறிய அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் எதையும் கேட்காதீர்கள். அதாவது நீங்கள் தன் அறிந்தும் இவைத்தன் புரிய. அதாவது இவைத்தன் அறிய என்னை, அதாவது இவைத்தன் கேட்டால்தான் யான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
அதனால் அன்பாலே, பின் எவை தன் புரிய, பின் நினைத்தாலே யான் பதில் சொல்வேன். கவலைகள் வேண்டாம்.
எதை என்று அறிய, இவைத்தன் புரிய. அதாவது இதைத்தன் அறியாவிடிலும் கூட, பின் அதாவது
****** ஒரு மூடன் தான், பின் மீண்டும் மீண்டும் கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்பான். ******
==================================
# முருகனை, அண்ணா என்று கூப்பிடுறேன்.
==================================
அடியவர் 10:- முருகனையே அண்ணா, அண்ணா என்றுதான் கூப்பிடுறேன்.
அன்புடன் முருகப்பெருமான் :- இவைத்தன் அறிய, இதைத்தன் புரிய. யானும் தம்பி !!!!! தம்பி !!!!!! என்று அழைக்கின்றேன். போதுமா?
அடியவர்கள் :- ( குபீர் சிரிப்புகள் )
==================================
# அருணகிரிநாதருடைய ஆசிகள் வேண்டிய தருணம்….
==================================
அடியவர் 11 :- அய்யா , எங்களுக்கு அருணகிரிநாதருடைய ஆசிகள் வேணும் அய்யா . அவர் போல பக்தி வேண்டும் அய்யா.
அன்புடன் முருகப்பெருமான் :- அவனே சொல்வான். இதைத்தன் அறிய, அவனுடைய அருள் என்னவென்று. வாழ்க்கையே எதைத்தன், அதாவது கஷ்டத்திலேயே மிதந்திருக்கின்றான். அவனுடைய அருள் கேட்கின்றாய். அதனால் அவ்வருளை கிட்டிவிட்டால், எதைத்தன் அறிய, வாழ்க்கையே ஒரு போராட்டமாகிவிடும். அவன் சொல்லட்டும் வந்து. பின் வரவழைக்கின்றேன். அவனையும் கூட.
==================================
# முதலில் குடும்பத்தை நன்கு கவனிக்க வேண்டும்….
==================================
அடியவர் 1 :- (எனக்கு கடந்த பிறவியில் இருந்த ……. சித்திகளை இந்த பிறவியிலும் எப்படி இருந்தாலும் கொடுத்து விடுங்கள், தயவு செய்து )
அன்புடன் முருகப்பெருமான் :- எவை எது என்று புரிய ஆனாலும், இவையெல்லாம் கேட்பது நியாயமா? குடும்பம் இவனை நம்பி இருக்கின்றது. ஆனாலும் இப்பொழுது பின் கொடுத்தாலும், குடும்பத்தை விட்டு ஓடோடி சென்றால், இவைத்தன் எவ்வாறு நியாயமடா? மூடனே, இதைத்தன் அறிய உன் பிள்ளைகளை யார் பார்ப்பது? இதைத்தன் அறிய பின், அதாவது உன் இல்லத்தவளை யார் பார்ப்பது? இதெல்லாம் வாய் பேசுகின்றது. அவ்வளவுதான். கவலைகள் வேண்டாம். இருந்தாலும், அகத்தியன் வந்து சொல்லட்டும்.
==================================
# விதி எங்கு சென்றாலும் மாறும் ?
==================================
அடியவர் 1 :- ( எங்களுடைய விதி எங்கு சென்றாலும் மாறும்? என்று கேட்கின்றார் )
அன்புடன் முருகப்பெருமான் :- எவை என்று வரும், எங்கு சென்றாலும், தலைகீழ் நின்றாலும், நிச்சயம் தன்னில் கிணற்றில் விழுந்தாலும் மாறாது. பின் அகத்தியன் வந்து சொல்லட்டும். பின் அகத்தியன் வந்தால்தான், அவை என்று, எவை என்று அறிய வினா. எவை என்று புரிய பதில்.
அடியவர்கள் :- ( சிரிப்புகள்)
அன்புடன் முருகப்பெருமான் :- நாளை பொழுதில் மனமார, பின் மூத்தோனை நினைத்துக் கொள்ளுங்கள். என்ன வேண்டுமோ, அதை நிச்சயம் செய்வான்.
அன்புடன் முருகப்பெருமான் :- இவைத்தன் போதுமா? இவைத்தன் ஆசிகளோடு, வள்ளி தெய்வானையோடு, ஆசிகளோடு மீண்டும் உரைப்பேன். இன்னும் நலன்கள் பெற.
ஒவ்வொரு பிறப்பின் ரகசியம் கூட.
இப்பொழுது பின் உரைத்தாலும், நேரங்கள் இல்லை.
இதனால், பின் உங்கள், அதாவது தொண்டினை, அதாவது என்ன, எதற்காக, எதைத்தன், அதாவது…..
****** எதையும் நினைக்காமல் செய்யுங்கள். போதும். ******
****** இதைத்தன் அறிய, யாங்கள் நினைப்போம், உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது. ******
==================================
# தியானம் செய். அப்பொழுதும் உன் வாழ்க்கை இனிக்கும்.
==================================
அடியவர் 12 :- ( தொழில்) நன்றாக போக வேண்டும்….
அன்புடன் முருகப்பெருமான் :- இதைத்தன் எவை என்று அறிய, முதலில் பின் இதைத்தன் அறிய, மூடனாக இருக்காதே. எவை என்று அறிய, மனதின் பின் வந்தவை எல்லாம், எவைத்தன் அதன்படியே, பின் ஓடுகின்றாய். மனதை மாற்று. தியானம் செய். அப்பொழுதும் உன் வாழ்க்கை இனிக்கும். இல்லையென்றால், பைத்தியவனாகவே சுற்றுவாய். கடை நாளும் , இப்படியே அவை, இவை என்று எதை, எவை என்று திடீரென்று வரும். எதைத்தன் எவ்வாறு என்றெல்லாம், எதைத்தன். அதனால், முதலில் மனதை, பின் அதாவது இதைத்தன் அறிய, பின் மனதின் அழகாக தியானப்படுத்தி, மனநிலை ஒரு நிலைப்படுத்து. போதும். அப்படி இல்லை என்றால், பல நிலை ஆகிவிடும். இதனால், விபரீதம் ஆகிவிடும்.
==================================
# திருட்டு குறித்து கவலை தெரிவித்த போது….
==================================
அடியவர் 1:- அவங்களுடைய மரகத சிலை வந்து திருடு போயிருச்சுன்னு சொல்லிட்டு….அழகன் முருகனின் மரகத முருகனின் சிலை….
அன்புடன் முருகப்பெருமான் :- என்று புரிய அதாவது, நாங்கள் எதுவுமே கேட்கவில்லை. மனிதன் வைப்பான். மனிதனே திருடிவிடுவான். அவ்வளவுதான்.
அடியவர்கள் :- ( குபீர் சிரிப்புகள் )
அடியவர் 1:- பழனியில் இருக்கும் தங்களுடைய தசா பாஷாண மூர்த்தி… ( ஆடியோ தெளிவில்லை )
அன்புடன் முருகப்பெருமான் :- எவ்வாறு என்பது திருடினான் என்று. ஆனாலும், நீங்களும் என் உண்மையில் பின் அன்பு, பின் அதாவது இதைத்தன் வைத்திருக்கிறீர்கள். அதாவது, நீயும் “அண்ணா” என்று (எனை) அன்போடு அழைக்கின்றாய் என்று…. அவனும் கூட, பின் அதற்கு அன்போடு தானே எடுத்துச் சென்றிருப்பான். ஏன் இவ்வாறு நினைக்கக்கூடாது?
அடியவர்கள் :- (குபீர் சிரிப்புகள்…..)
சுவடி ஓதும் மைந்தன் :- அதுதான் என்னன்னா, மனிதனே வந்து வைப்பான். மனிதனே வந்து திருடுவான். மனிதனே வந்து வைப்பான். வேற ஒன்னும் இல்ல. அதனால வந்து திருடன் கூட என்ன சொல்றாரு பாருங்க. முருகர் வந்து நீ ஆசைப்படுற…. நீ ஆசைப்படுறல, அண்ணா, அண்ணான்னு சொல்லிட்டு…. அவனும் அதே மாதிரி ஆசை வச்சுட்டான். நாங்க அதுக்கு அவருக்கு வந்து வருத்தம் இல்லைன்றாரு.
அடியவர் 1:- அவங்களுக்கு பழனி தசபாசானம் மூர்த்திக்கு அபிஷேகம் செய்த பாலை அருந்தலாமா என்று?
அன்புடன் முருகப்பெருமான் :- எதை, ஏது என்று புரிய. இப்பொழுது அங்கு எவை என்று கூற பாசனம், எவை என்று அறிய, இவைத்தன் அதாவது பின் இருக்கின்றதா என்றால், நிச்சயம் இல்லை. சிறிதளவே கிள்ளி வைத்திருக்கின்றார்கள். அதைத்தன் எங்கு இருக்கின்றது என்று யான் சொல்வேன்.
…………..
…………..
அன்புடன் முருகப்பெருமான் :- அதுவும் இவைத்தன், அதாவது அங்கு இருக்கும் சிலவற்றை பிடித்து, அபிஷேகம் செய்யுங்கள் என்று காசுகள் கொடுத்து, பின் அதாவது அவன் மனமார, பின் செய்தால், ஒரு இடத்தில் வந்து, பின் அவன் நினைத்தாலே உண்டு.
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு மனிதன் நினைத்தால்தான் உண்டாம். நல்லா காசு குடுத்தோம்னா, அங்க கரெக்டா ஊத்தி….. அந்த இதுல அவனுக்கு தெரியுமா….எங்கதான் இருக்குதுன்னு சொல்லிட்டு…. அப்ப அதை எடுத்து கொடுத்துருவோம் உன்கிட்ட… இல்லைன்னா, வந்து காசு கொடுக்கலைன்னா …மனிதனா பாருங்களேன்.
அடியவர் :- ஐயா காலையில் 3 வருசமா கூட்டுப்பிரார்தனை செய்கின்றோம். அது என்ன மாதிரி பாடல்கள் என்று ?
அன்புடன் முருகப்பெருமான் :- இவைதன் அகத்தியன் சொல்லட்டும், போதும். இதத்தன் அறிய. அதாவது எப்பாடலை பாடினாலும் …. மீண்டும் மீண்டும் தெரிவிக்கின்றேன். பின் யாங்கள் அன்பு…. அதாவது பாவம் என்று உங்களுக்கு வரவேண்டுமே தவிர, நீங்கள் எவ்வாறு அழைத்தாலும், யாங்கள் வரப்போவதில்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க எவ்வாறு கூப்பிட்டாலும் சரி, எவ்வாறு வேணாலும் நாங்க வருவோமானா, ஏதோ பாவம் பார்த்து வரணும், நாங்கன்றாரு முருகர். வந்து நாங்களா பாவம் பார்த்து.
அன்புடன் முருகப்பெருமான் :- இதைத்தன் எவ்வாறு இன்னும் கேள்விகள். ஆனாலும் பல வேலைகள் எனக்கு. இன்னும் விட்டால், பின் இவைத்தன், அதாவது என்னவென்றே தெரியாமல். இதனால் மூத்தோனை அன்பாக, பின் வேண்டிக்கொள்ளுங்கள் என்ன தேவை என்று. அகத்தியன் வருவான். மீண்டும் யான் வாக்கினை ஜெபிக்கின்றேன். இப்பொழுது போதும், ஆசிகள்
அன்புடன் முருகப்பெருமான் :- இவைத்தன் அறிய, நாளை பொழுதில் நன்றாகவே, இவைத்தன் அறிய, மூத்தோனை வழிபடச் சொல். மீண்டும். பின் அகத்தியன் தெரிவிப்பான், பின் சொல் ஒரே சொல்தான்.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாருக்கும் ஒரே ஒரு சொல்தான்,
அடியவர்கள் :- முருகப்பெருமானுக்கு அரோகரா !!!!!! அரோகரா !!!!!!
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.