“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Wednesday, September 16, 2026

சித்தர்கள் ஆட்சி - 734 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 02/08/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த 12 வது சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 2

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.







அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 02/08/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த  12 வது சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 2


நாள், நேரம்  : 02/08/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை.  


இடம் : உலக நன்மைக்காக 12 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.


முழு கூட்டு பிரார்த்தனை நிகழ்வின் நேரலை :-  

https://youtu.be/npiKG6l6z6o



===========================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு

===========================


ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன். நல்விதமாகவே ஆசிகள். 


( பகுதி 1 தொடர்ச்சியாக…… )


===========================

# மூளையில் உள்ள  நுண்ணுயிரிகள் - அதனை ஆட்டுவிப்பது எப்படி?

===========================


பகுதி 2  வாக்கின் நேரலை :- https://youtu.be/npiKG6l6z6o?t=13031  


குருநாதர் :- அப்பனே, அறிந்தும் இதை ஏன் வாசிக்கச் சொன்னேன்? அறிந்தும் இவைத்தன் உயரிய, அறிந்தும் கூட.  இதனால் பின் உயிரிகள், நுண்ணுயிரிகள் எதை என்று புரிய மனிதனின் பின், அதாவது மூளையின் சிறிய, அதாவது நிச்சயம் தன்னில் கூட தெரியாத அளவிற்கு இருக்கும் அப்பா. இவைத்தன் நிச்சயம் தன்னில் கூட சரியாக ஆடினால் மட்டுமே மனிதனுக்கு புத்தியும் வரும், சிந்திக்கும் செயலும் வரும். இதனாலே பின் இதில் எவை என்று அறிய. 


சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியர் என்ன சொல்றார் தெரியுங்களா? மூளை பக்கத்துல கண்ணுக்கு தெரியாம ஒரு சிறிய நுண்ணுயிர் இருக்குதாம். அப்ப அதை வந்து என்ன பண்ணனும்? அதை ஆக்டிவேஷன் பண்ணா மட்டும்தான்…. மனிதனுக்கு நல்ல சிந்திக்கக்கூடிய செயலும் புத்தியும் வரும். அது எது தெரியுமா, ஏற்படுத்துகிறது? அது செயல் பண்ணனும்னா எது? அதுதான் டமாரம் தான். டம டமன்னு அடிக்கிறாங்க, பாத்தீங்களா?


அடியவர் :- மிருதங்கம் நாதஸ்வரம்.


===========================

# இறந்தவர்கள் ஊர்வலத்தில் அடிக்கும் தாரை தப்பட்டை ரகசியங்கள் ===========================


குருநாதர் :- அப்பனே, இறந்தவர்கள் எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அனைவரையும் ஞாபகத்தில் பின் எவை என்று வைத்துக் கொள்ள அப்பனே பின் அடிப்பார்கள் அப்பா நிச்சயம் தன்னில் கூட பரட்டை. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இறந்து போனாலும் அந்த செல் என்ன ஆகும்? 


அடியவர் 2:- ஞாபகத்துல இருக்கும். 


சுவடி ஓதும் மைந்தன் :-   ஞாபகத்துல இருக்கும். அதனால வந்து இறந்தவர்களுக்கு வந்து அடிப்பாங்க, பாத்தீங்களா? பரட்டை எதுக்கு அடிக்கிறாங்க? அந்த செல்ல வந்து எல்லாரையும் ஞாபகத்து வச்சுக்கணும்.


அடியவர் :-  யப்பா !!!!!


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, புரியுதுங்களா ஐயா?


அடியவர் :-  ஐயா, ஒரு பெரிய உண்மை சொல்லிருக்காங்க குருநாதர்.


சுவடி ஓதும் மைந்தன் :-   புரியுதுங்களா? அந்த செல்ல எப்படிங்க?


அடியவர் :-  அது இறந்த இடத்துல……. அந்த இது….. மேலதாளம் எல்லாம் அடிக்கிறாங்க பாருங்க…. சில இடத்துல….. அது ஞாபகம் வச்சுக்கும்.


https://youtu.be/npiKG6l6z6o?t=13132


குருநாதர் :- அறிந்தும் நிச்சயம் தன்னில் கூட அவை அப்படியே நிச்சயம் தன்னில் கூட, பின் இவ்வாறாக நிச்சயம் பின் அடித்தால், பின் அப்படியே நிச்சயம் தன்னில் கூட, சிறிது பின் எவை என்று கூற, பின் அறிந்து மூன்று மணி நேரம், அல்லது நான்கு மணி நேரத்தில் எது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, அவ் நுண்ணுயிர் ஆனது இறைவனை அடைந்துவிடும். இதனால் அந்நுண்ணுயிர் பின் இறைவிடத்தில் என் சொந்த பந்தங்கள் இப்படி இருக்கின்றார்கள், அவர்கள் காப்பாற்றுக என்று நிச்சயம் சொல்லும்.


அடியவர் :-   சிவாய நம….. சிவாய நம…..


சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, புரியுதுங்களா ஐயா?


அடியவர் :-  சிவாய நம.


சுவடி ஓதும் மைந்தன் :- யாருக்கு தெரியுங்களா? ஐயா, இது நல்லா எக்ஸ்பிளைன் பண்ணுங்க ஐயா, இது வந்து.


அடியவர் :-  அதாவதுங்க அந்த மேலதாளம் அடிக்கிறப்போ என்ன ஆகுதுன்னா அந்த இடைப்பட்ட நேரம் இருக்கு பாருங்க. அந்த நேரத்துல இந்த நுண்ணுயிர் பிரிந்து… இறைவனிடம் சென்று… இவர்கள் எனக்காக… இங்க கூடி எல்லாம் மெனக்கடுறாங்க. இவங்க எல்லாம் நல்லா இருக்கணும்.


சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, அப்படி இல்ல ஐயா. ஐயா, இல்ல அப்படி இல்ல.அய்யா நீங்க சொல்லுங்க…


அடியவர் 2:- அதாவது இறந்த உடனே வந்து அந்த இறந்த ஆத்மா இந்த இறந்த உடல்ல வந்து ஒரு நுண்ணுயிர் இருக்கும். அந்த நுண்ணுயிர் வந்து அந்த பரட்ட சத்தம் கேட்கிறதுனால… அந்த மூணுல இருந்து… நான்கு மணி நேரத்துக்குள்ள… என்னோட சொந்தக்காரங்க… என் கூட குடும்பத்தில உள்ளவங்க எல்லார பத்தியும்… வந்து இறைவன்ட்ட போய் வேண்டுமாம்.  எனக்காக இவங்க எல்லாம் இருக்கறாங்க. இவங்கள காப்பாத்து அப்படின்னு சொல்லிட்டு அந்த மூணுல இருந்து நாலு மணி நேரத்துக்குள்ள…


சுவடி ஓதும் மைந்தன் :-  இறைவனை அடைஞ்சிரும் 


அடியவர் 2:-  அது இறைவனை போய் அடைஞ்சு.. அங்க போய் இறைவன்ட்ட மன்றாடுமாம். என் குடும்பத்தை காப்பாத்து அப்படின்னு சொல்லிட்டு.  அதுக்காகதான் அந்த சத்தத்தை அடிக்க வச்சிருக்காங்க வந்துட்டுங்க. 


அடியவர்கள் :- ( உண்மை புரிந்த பரவசத்தில் …கைதட்டல்கள் ….) 


சுவடி ஓதும் மைந்தன் :-   அதனாலதான் ?


அடியவர் 2:- அந்த அந்த பரட்ட சத்தம் அடிக்கிறாங்க.


சுவடி ஓதும் மைந்தன் :- பரட்ட சத்தம். 


குருநாதர் :-  இதனாலே அதனால்தான் பின் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் வயதானவர்களுக்கு கெடுதல் வைக்க கூடாது என்று. பின் அவர்கள் மனது நொந்தால் நீங்களும் அப்படியே ஆவீர்கள் என்று. 


குருநாதர் :-  ஏன் என்றால் கடைசி காலத்தில் மனிதன் மக்களை அதாவது தாய் தந்தையை துடித்து வைப்பான். அதேபோல் அவ் மனைவியிலே இருந்து பின் இறைவனிடத்தில் சொல்ல எது என்று புரிய பின் பின்பு பின் இறந்தவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். அவ்வளவுதான். அதனாலே இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள்.


அடியவர் 2:-   அதனாலதான் வந்து வயசானவங்களுக்கு வந்து எந்த துன்பமும் நம்ம கொடுக்க கூடாது. ஏன்னா அவங்க இறந்த உடனே அவங்க மனநிலை வந்து பாதிச்சு இருந்ததுன்னா…. அந்த பாதிப்போட இறைவன்ட்ட போய் அவங்க சொல்லுவாங்க. அப்ப நமக்கு கஷ்டம் வந்துரும். ஆனா இவங்க என்ன பண்ணிட்டு இருப்பாங்க… நாங்க… எங்க அம்மாக்கு வந்து தர்ப்பணம் கொடுக்கறேன்…. அப்பாக்கு தர்ப்பணம் கொடுப்பாங்க…. அதனால ஒரு பிரயோஜனமும் இல்லை. அதனால வயதான காலத்துல அவங்களை நல்லபடியா பார்த்துக்கணும்.


சுவடி ஓதும் மைந்தன் :-   பார்த்துக்கணும். எல்லாரையும் வந்து நல்லா பார்த்துக்கணும்ன்றார். 



https://youtu.be/npiKG6l6z6o?t=13266


குருநாதர் :-  இதனாலே இப்புத்தியை பின் எவை என்று அறிய நிச்சயம் அதாவது அவ் நுண்ணுயிரியை  இயக்க நிச்சயம் மனிதனால் எவை என்று கூற முடியாது. பின்னால் எவை என்று அதனால்தான் நிச்சயம் தன்னில்  கூட திருமணம் செய்கின்ற பொழுதும் இவன் நாதத்தை அதாவது நிச்சயம் தன்னில்  கூட பின் எவை என்று புரிய. 


சுவடி ஓதும் மைந்தன் :-   அதனால திருமணம் செய்கின்ற பொழுது என்ன பண்றாங்க? நாதஸ்வரத்தை அடிக்கிறாங்க. எதுக்கு அடிக்கிறாங்க? உங்களோட புத்தி வேலை செய்யணும். கல்யாணம் என்பது சாதாரணம் இல்லை. அதனால வந்து யோசிக்கணும். ஐயா, யோசிச்சுக்கோ. கல்யாணம் என்பது சாதாரணம் இல்லை. அதனால அந்த புத்தியை சரி பண்றாங்க. ஐயா, சும்மா ஏதோ கல்யாணத்துல வந்து மேலதாளம் ஏதோ அச்சிட்டோம். அப்படி எல்லாம் கிடையாது. அந்த புத்தியை நல்லா யோசி. புத்தியை கூர்மைப்படுத்து. அது யோசிக்கிறது. அந்த கூர்மைப்படுத்தினா என்ன ஆகும்? ஓ, இப்படிதான் வாழனும். இப்படித்தான் எழுதி இருக்கணும். இப்படித்தான் இது பண்ணனும்னு சொல்லிட்டு… அத வந்து என்ன ஆகும்? யோசிக்க திறன் அதிகமாகும் ஐயா. அதனால அந்த மேலதாளம் அடிக்கிறாங்க. நாதஸ்வரம் அடிக்கிறாங்க. 


https://youtu.be/npiKG6l6z6o?t=13329



குருநாதர் :-  அப்பனே, இன்னும் பின் உடம்பில் எப்படி எல்லாம் இயக்குவது என்று சொல்லுகின்றேன். அப்பனே, ஏனென்றால் மனிதன் மடையன் என்பேன் அப்பனே. பின் தேவையில்லாத எல்லாம் சொல்லி அப்பனே மனதை குழப்பி, இறைவனே எங்கிருக்கின்றான் என்று எவை என்று அறிய பின் மனிதன் மனிதனே பொய்யாக்குவான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப அதெல்லாம் எப்படி ஒர்க் ஆகணும்? 


===========================

#  கர்ப்ப பிரச்சனைகள் நீங்கி, குழந்தைகள் ஆரோக்கியமாக பிறக்க…..

===========================


https://youtu.be/npiKG6l6z6o?t=13349


குருநாதர் :-  அப்பனே, எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் அதாவது அப்பனே இவ் தேசத்தில் அடுத்து பின் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, எவை என்று புரிய, அப்பனே, எவை என்று அறிய. 


**** அப்பனே, பின் கர்ப்ப பிரச்சனைகள் அதிகமாக வரும் அப்பா. ****


அப்பனே, ஏனென்றால் கர்ப்பம் எவை என்று அறிய. அப்பனே, பின் வயிற்றில் உள்ள அப்பனே நுண்ணுயிர்கள் அதிகமாக இருக்கும் அப்பா. 


அவை இறந்து விடுகின்றன அப்பனே, எவை என்று கூற.  சில நுண்ணுயிர்கள் மட்டும் அசைந்தாடிக்கொண்டு அப்பனே. 


ஆனாலும் அப்பனே பல இறந்தமையால் ஒன்று ஒன்று, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட. 


இதனால், அப்பனே, பின் இவைதன் அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட. இவ்  சத்தத்தால், அப்பனே, அதிர்வடைந்தால் அவையும் எவை என்று கூற, அப்பனே, பின் இன்னும் எவை என்று கூற. பின் உருவாக்கும் என்பேன் அப்பனே. 


**** செத்ததையும் கூட அப்பனே, நிச்சயம் தன்னில் கூட உயிர்பிக்க வைக்கும் என்பேன் அப்பனே. ****


**** இதனால் குழந்தைகள் ஆரோக்கியமாக பிறக்கும். பின் வருங்காலத்தில் சொல்லிவிட்டேன் அப்பனே.  **** 


https://youtu.be/npiKG6l6z6o?t=13391\


அடியவர்கள் :- ( பொதுநல உண்மை அறிந்து சந்தோஷத்தில் …பலத்த கைதட்டல்கள் ) 


சுவடி ஓதும் மைந்தன் :-   என்ன சொன்னார் தெரியுங்களா? கர்ப்ப பிரச்சனைகள் அதிகமா வரப்போகுது. லேடீஸ்க்கு எல்லாம் 


அடியவர் 2:- இந்த தேசத்துல, இந்த நாட்டுல வந்து பாத்தீங்கன்னா, வருங்காலத்துல ஆல்ரெடி இப்பவே வந்து கர்ப்ப பிரச்சனைதான் அதிகமா இருக்குது. அது அதிகமானதுக்கு காரணம் வந்து பாத்தீங்கன்னா, இந்த மாதிரி இசைகளை வந்து கேட்க தவறியாச்சு. இந்த மாதிரி இசைகளை வந்து அதிகமா கேட்டால், வந்து அந்த நுண்ணுயிரி எல்லாம் கரெக்டா வேலை செஞ்சு… நல்ல குழந்தைகளும், ஆரோக்கியமான குழந்தைகளும் வரும். அப்படிங்கறாங்க. 


===========================

#   எச்சரிக்கை :- வருங்காலத்தில் அறிவில்லாத குழந்தைகள் பிறக்கும்.

===========================


குருநாதர் :-  அப்பனே, விஞ்ஞானம் வளர, வளர அப்பனே, நிச்சயம் தன்னில்  கூட, அப்பனே, ஏது என்று புரிய அப்பனே, நிச்சயம் அப்பனே, பின்… 


**** அறிவில்லாத குழந்தைகள் எல்லாம் இன்னும் வருங்காலத்தில் பிறக்கும் அப்பா. **** 


அப்பனே, இதனால்தான், அப்பனே, உங்களை முதலில் பின் உங்களை வென்று அப்பனே, நிச்சயம் தன்னில்  கூட.


அடியவர் 2:-  விஞ்ஞானம் வளர, வளர, மனுஷனுக்கு அறிவு குறைஞ்சிருச்சு. அப்படிங்கிற மாதிரி….. இன்னும் வருங்காலத்துல விஞ்ஞானம் இன்னும் அதிகமா வந்து வளர்ச்சி அடையும் போதில….. குழந்தைகளுக்கு அறிவு அப்படிங்கறதே வளராது. அப்படிங்கறாங்க.


===========================

#   விஞ்ஞானம் = மின்சாரம்  = உறுப்புகள் அனைத்தும்  கெடுத்து விடும்.

===========================


https://youtu.be/npiKG6l6z6o?t=13443


குருநாதர் :- அப்பனே, எவை என்று விஞ்ஞானம் வளர, வளர.. அப்பனே, அனைத்தும் அப்பனே, பின் மின்சாரம் தான் என்பேன் அப்பனே. 


குருநாதர் :- உடம்பில் உள்ள அனைத்து அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட பின் உறுப்புகளும் கெடுத்து விடும் என்பேன் அப்பனே. \


குருநாதர் :- அவை கெடுக்காமல் இருக்க என்ன ஏது செய்வது என்றெல்லாம் சொல்கின்றேன்.


அடியவர் 2:-  வருங்காலம்… அதான் இப்பவே வந்து… போன் எல்லாம் வந்துருச்சு. எல்லாம் வந்து சாதனங்கள் தான் வந்து… இன்னும் வருங்காலங்கள்ல வந்து அதிகமான கேட்ஜெட்ஸ்….. அதிகமான வந்து இதே மாதிரி உபகரணங்கள் அதிகமா வரும்போது…. மனிதனோட ஒவ்வொரு ஒவ்வொரு பாகங்களும் வந்து பழுதடையக்கூடிய சூழ்நிலை வரும். அதை எப்படி சரி செய்யணும்னு சொல்லி தரேன்ப்பா.


குருநாதர் :- அப்பனே, அவர் நுண்ணுயிரானது நீங்கள் எதை எது அதிகமாக யோசிக்கின்றீர்களோ, அதை பிடித்துக் கொள்ளும் என்பேன் அப்பனே. அவ்வளவுதான் வாழ்க்கை.


அடியவர் 2:-  அதான் நம்ம எதை யோசிக்கிறோமோ, அது அதிகமா வந்து மல்டிபிளை ஆயிட்டே இருக்கும். அது பெருகிட்டே இருக்கும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  அது நுண்ணுயிர் என்பது வந்து நீங்க வந்து நாலு பேருக்கு நான் வந்து கெட்டது செய்யணும்னு நினைக்கிறீங்களா? அது என்ன ஆயிடுமா?


அடியவர் 2:-  அது அதுவே அதிகமாயிடும்.


சுவடி ஓதும் மைந்தன் :-   அதுவே அதிகமாயிடும். நீங்க கெட்டதேதான் செஞ்சுட்டு இருக்கறோம்.


அடியவர் :-   நம்ம இந்த YouTubeல நீங்க பாக்குறப்ப, எது நீங்க பாக்குறீங்களோ, அதேதான் முதல் வந்துகிட்டே இருக்கும் பாருங்க. பெருகிட்டே இருக்கும். அதே சம்பந்தப்பட்ட விஷயங்கள், அதேபோல நீங்க நம்ம எதை யோசிக்கிறோமோ, எதை பார்கறோமோ, அது அப்படியே பெருகிட்டே இருக்கும்ன்றாங்க.


சுவடி ஓதும் மைந்தன் :-  ஆமா……


குருநாதர் :- அப்பனே, இதனால் அதையெல்லாம் தடித்து ஒழித்திட வேண்டும் என்பேன். அப்பனே.  இதற்கு இவ்  நாதஸ்வரம்தான் தேவைப்படுகின்றது. அடியுங்கள் என்பேன் அப்பனே, இன்னும் கூட. அப்பனே, பாடுங்கள் என்பேன்அப்பனே, முருகன் பாடலை.. 


சுவடி ஓதும் மைந்தன் :-  பாடுங்கயா, இன்னும் அடியுங்கயா.


அடியவர் :-  சிவாய நம… இதெல்லாம் சரி பண்றதுக்கு நாதஸ்வரம் தான் மருந்துன்றாங்க.


சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால முதல்ல என் கையில இருக்கறதெல்லாம் இதெல்லாம் யோசிக்க வைக்கலாம்ன்றாங்க. நல்லது செய்றது அப்புறம்…. அது இதுல இருக்குது பாருங்க. அதெல்லாம் வந்து யோசிக்க வைக்கலாம்.


அடியவர் :- மூளைய முதல்ல யோசிக்க வைக்கலாம்.


சுவடி ஓதும் மைந்தன் :- அடிங்கயா.


அடியவர் :-  அதுக்கு முதல்ல நாதஸ்வரம் அடிக்கலாம்ன்றாங்க. நாதஸ்வரம் மட்டும் அடிங்கயா.


சுவடி ஓதும் மைந்தன் :-  பாடல் பாடுங்க. மருதமலை.


பாடகர் :- மருதமலை பாடல் ? திருப்பியுமா ?


சுவடி ஓதும் மைந்தன் :-   ஆமா.


சுவடி ஓதும் மைந்தன் :-   முருகன் பாடல் ஏதாவது பாடுங்க. ஐயா, புரியுதுங்களா? நாதஸ்ரம் எல்லாம் நம்மள வந்து அந்த உயிர் போன நுண்ணுயிரியை  


அடியவர் :-  உயிர்ப்பிக்கும். 


சுவடி ஓதும் மைந்தன் :-   இன்னும் எல்லாரும் சொல்லி தருவாங்க. அகத்தியரே, தெரிஞ்சுக்கணும். நீங்களும் நல்லா இருங்க. நாலு பேருக்கு 


அடியவர் :-   சொல்லி கொடுங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :-   சொல்லி கொடுங்க ஐயா. அதுவே புண்ணியம் ஐயா. நீங்கள் செய்த நன்றி இறைவனுக்கு ஒண்ணுமே தேவையில்லை. இதுதான் நன்றி. இறைவனுக்கு செய்யக்கூடிய நன்றி.


சுவடி ஓதும் மைந்தன் :-  பாடுங்கப்பா. ஐயா எல்லாரும் கொஞ்சம் ஜோரா கை தட்டுங்க ஐயா.


பாடகர் :- ( பாடல் பாட ஆரம்பித்தார்கள் ) 


https://youtu.be/npiKG6l6z6o?t=13568



குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் அங்கே

குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம்

குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் அங்கே

குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம்


தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்

தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்

தெருமுழுதும் பக்தர்களின் ஆனந்தமன்றம்

தெருமுழுதும் பக்தர்களின் ஆனந்தமன்றம்


தங்கம் வைரம் பவளம் முத்து தவழும் தெய்வானை

தங்கம் வைரம் பவளம் முத்து தவழும் தெய்வானை

தாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள் முருகப் பெம்மானை

தாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள் முருகப் பெம்மானை

முருகப் பெம்மானை


குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் அங்கே

குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம்

குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்


( பாடல் முடிந்த பின்பு……) 


https://youtu.be/npiKG6l6z6o?t=13792


குருநாதர் :- அப்பனே, அறிந்தும், நமச்சிவாய எனும் பாடலைப் பாடுக, அப்பனே. அனைவருக்கும், அப்பனே, அருளாசிகள் அப்பனே ஈசன் கொடுக்கட்டும்; பின்பு உரைப்பான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாருக்கும் திரு  வாசகத்தை, ஐயா, எல்லாரும் நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க. எல்லாரும் வேண்டிக்கோங்க, ஐயா. நீங்களும் நல்லா இருக்கணும், மத்தவங்களும் நல்லா இருக்கணும்னு சொல்லி வேண்டிக்கோங்க, ஐயா. சிவபுராணம் பாடலைப் பாடுவோம், நமச்சிவாய வாழ்கன்னு சொல்லிட்டு. பாடுங்க, ஐயா. ஐயா, நல்லா மேல தாளம் அடிங்க. இவங்க கையில இருக்குற அந்த நுண்ணுயிர் எல்லாம் ஆக்டிவேஷன் ஆகட்டும். அது ஆக்டிவேஷன் ஆனா தான் உங்களுக்கு அறிவே வரும். இறைவனைப் பற்றி சிந்திக்கவும் நல்லா வரும். இல்லன்னா, அப்படியே இருக்க வேண்டியது தான். இறைவனைப் பற்றி…அதனால பாடுங்க அய்யா……


===========================

#   சிவபுராணம் கூட்டுப்பிரார்தனை 

===========================


நேரலை :- https://youtu.be/npiKG6l6z6o?t=13832


ஓதுவார் அடியவர் :- ( சிவபுராணம் பாட ஆரம்பித்தார்கள்….) 


மேடையில் குழந்தைகள் :- ( இணைந்து பாடினார் அருமையாக ….) 


( அழகாக மாறி , மாறி பாடினார்கள்….அவசியம் நேரலையில் கேளுங்கள் ) 



===========================

#   அனைத்து சாதுக்களுக்கு ஓர் அறிவிப்பு 

===========================

https://youtu.be/npiKG6l6z6o?t=14523


அடியவர் :- ( அனைத்து சாதுக்களுக்கு ஓர் பொது அறிவிப்பு தெரிவித்தார்கள். )


( பொது அறிவிப்பு முடிந்தவுடன் …..)


https://youtu.be/npiKG6l6z6o?t=14566


குருநாதர் :- அப்பனே, இவைத்தன் முருகனை உருகிப் பாட நன்று. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, முருகனை வந்து உருகிப் பாடணும். 


பாடகர் :- ( பாடல் பாடினார்கள் ) 


மேடையில் குழந்தைகள் :- ( இணைந்து பாடினார் அருமையாக ….) 


( அழகாக மாறி , மாறி பாடினார்கள்….அவசியம் நேரலையில் கேளுங்கள் ) 


https://youtu.be/npiKG6l6z6o?t=14623


நீயல்லால் தெய்வமில்லை - எனது நெஞ்சே

நீவாழும் எல்லை முருகா

(நீயல்லால்)


தாயாகி அன்புப் பாலூட்டி வளர்த்தாய்

தந்தையாய் நின்றே சிந்தை கவர்ந்தாய்

குருவாகி எனக்கு நல்லிசை தந்தாய்

திருவே நீயென்றும் என் உள்ளம் நிறைந்தாய்


நாயேனை நாளும் நல்லவனாக்க

ஒயாமல் ஒளியாமல் உன்னருள் தந்தாய்

(நீயல்லால்)


வாயாரப் பாடி மனமார நினைந்து

வணங்கிடலே எந்தன் வாழ்நாளின் இன்பம்

தூயா முருகா மாயோன் மருகா - உன்னைத்

தொழுவதொன்றே இங்கு யான்பெற்ற இன்பம்

(நீயல்லால்) 



( பாடல் முடிந்த பின்பு……) 


===========================

#   அருணகிரிநாதர் பாடல் பாட உத்தரவு 

===========================


https://youtu.be/npiKG6l6z6o?t=14984 


குருநாதர் :- அப்பனே இவையும் பாடு, அருணகிரி.


மேடையில் உள்ள அடியவர்கள் :- ஐயா , முத்தைத்தரு பத்தித்திருநகை பாடலா?


சுவடி ஓதும் மைந்தன் :- ஆமா.


பாடகர் :- ( பாட ஆரம்பித்தார்கள் ….) 


https://youtu.be/npiKG6l6z6o?t=15004


( பாடல் முடிந்த பின்னர்….) 


https://youtu.be/npiKG6l6z6o?t=15083


குருநாதர் :-  அப்பனே  இதை அறிந்து அப்பனே முருகனை வேண்டி குழந்தைகளை பாடசொல்.


சுவடி ஓதும் மைந்தன் :- (குழந்தைகளை பார்த்து…. ) நீங்க படலாம்….முருகனை வேண்டி……அப்படியே எல்லாரும் பாடுங்க…. கூடவே பாடுங்க எல்லாரும்…


குழந்தைகள் :- ( வேலவா வடிவேலவா எனும் பாடலை அழகாக பாடினார்கள் …) 


நேரலை :- https://youtu.be/npiKG6l6z6o?t=15145 


கூட்டுப் பிரார்த்தனை youtube தளத்தின் மற்றொரு நேரலை :-  

https://www.youtube.com/shorts/tUUeF0DG7_c 


வேலவா வடிவேலவா

வேடனாக வந்து நின்ற வேலவா

ஓடிவா அன்பரை நாடிவா

ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா

………

……..

………

( பாடல் முடிந்த பின்னர்…… )


https://youtu.be/npiKG6l6z6o?t=15331


குருநாதர் :- இவைத்தன் மீண்டும் பின் அனைவருக்கும் எவை என்று அறிய பின் எவை என்று அறிய நிச்சயம் இன்னும் பலமாக பாடுக 


சுவடி ஓதும் மைந்தன் :-  இன்னும் பலமா பாட சொல்றார்.  நல்லா அடிங்க ஐயா… பாடுங்க அம்மா…  


குழந்தைகள் :- ( “பச்சை மயில் வாகனனே” எனும் பாடலை அழகாக பாடினார்கள் …) 


https://youtu.be/npiKG6l6z6o?t=15360


பச்சை மயில் வாகனனே சிவ

பால சுப்பிரமணியனே வா - இங்கு

இச்சை இல்லாம் உன்மேல் வைத்தேன்

எள்ளளவும்ஐயமில்லை -


கொஞ்சும் மொழியானாலும் - உன்னைக்

கொஞ்சிக் கொஞ்சிப் பாடிடுவேன் - இங்கு

சர்ச்சை எல்லாம் மறைந்ததப்பா - எங்கும்

சாந்தம் நீறைந்தப்பா - (பச்சைமயில்) 


( பாடல் முடிந்த பின்னர்…… )


https://youtu.be/npiKG6l6z6o?t=15682


(ஆடியோ தடங்கல்கள்)


===========================

#   ஈரேழு பதினான்கு உலகங்களின் மன்னன் கயிலை நாதனை போற்றி பாட உத்தரவு…..

===========================


குருநாதர் :- அப்பனே அழகாக கைலோனை நினைத்து ( வணங்கிய பின்பு)  ….பின்பு முகுகன் வருவான்…


சுவடி ஓதும் மைந்தன் :- ( பாடகரை பார்த்து ) அய்யா “வேற்றாகி” பாடலை பாடுங்க. கைலோன் வருவார். அப்புறம் முருகர் வருவார். 


பாடகர் :- ( வேற்றாகி விண்ணாகி பதிகம் பாட ஆரம்பித்தார்கள்….) 


பாடல் நேரலை :- https://youtu.be/npiKG6l6z6o?t=15715


( பாடல் முடிந்த பின்னர்…… )


சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, படிக்கலாங்க. ஐயா.  ஐயா, கேட்குதா  லாஸ்ட் வரைக்கும். 

https://youtu.be/npiKG6l6z6o?t=16401 


குருநாதர் :- அப்பனே, அம்மையே, மனிதன் பின் உயிர் எங்கு இருக்கின்றது, எதை என்று புரிய, மனிதன் எப்படியெல்லாம் எதை நோக்கி செல்கின்றான் என்பவையெல்லாம் இப்பொழுது பின்—அதாவது முருகன் வந்த பின்பே யான் சொல்வேன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  இப்ப, அடுத்து என்ன சொல்றார் தெரியும்களா? மனிதன் எப்படின்னா எப்படி நடக்கும்? 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப, அடுத்து என்ன சொல்றார்னா, முருகர் வந்த பிறகு—இப்ப முருகன் வருவார், இப்போ முருகர் சொல்றார், இப்போ வந்து... ஐயா சொல்றாரு, அடுத்து வந்து, மனுஷன் என்ன பண்ணுவான், மனுஷனுக்கு என்ன இது மாதிரி வந்து வேதனைகள், எதுக்குன்னு சொல்லிட்டு, அப்புறம் அகத்தியர் என்ன சொல்றாருன்னு சொல்றாரு. இப்ப முருகர் வராரு. 


===========================

#   சுவடியில் எப்படி புரிந்து கொள்வது ?

===========================


சுவடி ஓதும் மைந்தன் :-  அது முருகர் வ... சிலர் அகத்தியர் வந்தா, ஐயா, சில சில வேர்ட்ஸ் வந்து புரியாம போகும். அகத்தியர் வந்தா ஒரு மாதிரி வரும் வார்த்தைகள். முருகர் வந்தா ஒரு வார்த்தை வரும். மற்ற சித்தர்கள் வந்தா ஒவ்வொரு இது வரும். அதனால தான் நம்ம வந்து நல்லா புரிஞ்சுக்கணும், வந்து...


அடியவர் :- ஸ்டைல். அவங்க பேசுற ஸ்டைல்.


சுவடி ஓதும் மைந்தன் :-   ஸ்டைல் வேற.


அடியவர் :- வேற மாதிரி வரும்.


சுவடி ஓதும் மைந்தன் :-    ஆனாலும் ஒன்னு.


அடியவர் :- உன்னிப்பா கவனிக்கணும்ன்றாங்க.


சுவடி ஓதும் மைந்தன் :-    உன்னிப்பா கவனிக்கணும். வந்து, அவர் கேட்டாலே நம்மளுக்கு புண்ணியம்ங்க, ஐயா. அவ்வளவுதாங்க, ஐயா.


அடியவர் :- சிவாய நம.


( அடுத்த பகுதியில் அன்புடன் முருகப்பெருமான் அருளிய வாக்கு அதனை காண்போம் ….) 


( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 02/08/2026   அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  12வது கூட்டு பிரார்த்தனை அதனில் உரைக்கப்பட்ட வாக்குகள் தொடரும் ) 


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.