இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.
அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 02/08/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த 12 வது சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 5
நாள், நேரம் : 02/08/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை.
இடம் : உலக நன்மைக்காக 12 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.
முழு கூட்டு பிரார்த்தனை நிகழ்வின் நேரலை :-
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன். நல்விதமாகவே ஆசிகள்.
( பகுதி 4 தொடர்ச்சியாக…… )
பகுதி 5 வாக்கின் நேரலை :- https://youtu.be/npiKG6l6z6o?t=18289
( எழுது பலகையை எடுத்து வைத்தார்கள் அடியவர்கள்……. இதனை தொடர்ந்து ….. )
சுவடி ஓதும் மைந்தன் :- புரிஞ்சுதுங்களா? புரியலைங்களா யாருக்கும்? ஐயா, இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க ஐயா. இப்ப சயின்ஸ் எடுக்கப் போறார் அகத்தியர் வந்து. தயவு செய்து நீங்களே தெரிஞ்சுக்கோங்க. உங்களோட லைஃப் எப்படி போகும்னு தெரிஞ்சுக்கோங்க ஐயா.
ஏன்னா எல்லார் கையில ஒரு ஆற்றல் இருக்குங்க ஐயா. அந்த ஆற்றல் வந்து சரியா நம்ம பயன்படுத்துறது இல்ல.
அந்த ஆற்றல் நம்மளுக்கு தெரிஞ்சுக்கணும்னா, உங்களை நீங்களே அறிஞ்சுக்கலாம்.
உங்களை நீங்களே வெல்லலாம்.
இப்ப அகத்தியர் சயின்ஸ் எடுப்பார். என்ன சொல்லுவாருன்னு தெரியாது. அவர் சொல்றதை நம்ம இங்க செய்றேன்.
நீங்க அப்படியே பார்த்து கவனிச்சு செய்யுங்க ஐயா. சரிங்களா? ஐயா,
ஐயா, அதுக்குள்ள ஒரு பாடல் பாடுங்க ஐயா. அதுக்குள்ள ரெடி பண்றதுக்கு எல்லாம் ஒரு பாடல் மக்களுக்கு பாடுங்க ஏதாவது.
( அடியவர்கள் பாடல் பாட ஆரம்பித்தனர்…)
பாடல் :- ( திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்…)
https://youtu.be/npiKG6l6z6o?t=18450
பாடல் :- ( என் அப்பன் அல்லவா…)
https://youtu.be/npiKG6l6z6o?t=18792
( அடியவர்கள் பாடி முடித்த பின்னர்….)
https://youtu.be/npiKG6l6z6o?t=19047
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (அகத்தியர் சொல்ல வருவது என்னன்னா — மனிதனுக்கு எல்லாம் திறமை இருக்குது, ஆனா அதை பயன்படுத்தாததாலே தான் வாழ்க்கையில் கஷ்டங்கள் வருது. நல்லது செய்தால் நல்லதே வரும், கெட்டது செய்தால் கெட்டதே வரும்; இது இறைவன் கண்காணிப்பில் நடக்கும் இயற்கை நியதி. சில நேரம் கெட்டது செய்றவனுக்கு நல்லது நடக்கலாம், ஆனா அது குறுகிய காலம் மட்டுமே. உண்மை நீடிக்கும், பொய் நீடிக்காது. சித்தர்கள் கண்டுபிடிச்ச விஞ்ஞானம், ஆற்றல், நன்மை — இவை எல்லாம் மனிதன் சிந்திக்க, புரிந்துகொள்ள, வாழ்க்கையை உயர்த்த உதவுறது. அதனால ஒவ்வொருவரும் தங்களுடைய ஆற்றலை வளர்த்து, பிறருக்கு நன்மை செய்யணும்; அதுதான் மனித வாழ்க்கையின் உண்மையான பயன். )
https://youtu.be/npiKG6l6z6o?t=19273
குருநாதர் :- அப்பனே, பூமியும் வரைந்து, அப்பனே, பின் கிரகங்களையும் வரை.
சுவடி ஓதும் மைந்தன் :- அதாவது அனைத்து பூமியையும் வரைந்து, எல்லா கிரகங்களும் போடுங்க, ஐயா. டக் டக்குனு போடுங்க, ஐயா.
( பூமியை வரைந்து , அதனை சுற்றி அனைத்து கிரகங்களையும் வரைந்தார்கள் )
https://youtu.be/npiKG6l6z6o?t=19542
குருநாதர் :- எதை என்று புரிய, அனைத்தும் எதிரொளிக்கும். எவை என்று கூற, ஆற்றல். அதாவது எவ்வாறு என்று, பூமியில் பட்டு பட்டு.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, இப்ப வந்து வியாழன் கிரகம் ( ஒரு உதாரணத்திற்காக ) இது வந்து. ஓகேங்களா? வியாழன். அப்ப (வியாழன் கிரகம்) இதுல இருந்து ஒரு ஆற்றல் வந்து, ( பூமி மீது ) இதை பட்டு ரிப்ளெக்ஷன் ஆகுது. இப்படி போயிட்டு…. திருப்பி இப்படியே திரும்பிடுதுங்க, ஐயா.
அடியவர் :- ரிட்டர்ன் வருது. பிரதிபலிக்குதுன்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- ரிட்டர்ன். ஐயா, புரியுதுங்களா? புரியாதவங்க கேளுங்க வந்து. அப்ப இதுல பட்டு திருப்பியும் வந்து.
அடியவர் :- திருப்பி வருது. ரிப்ளெக்ட் ஆகுது.
சுவடி ஓதும் மைந்தன் :- திருப்பியும் வியாழனுக்கே .
அடியவர் :- வியாழனுக்கு திருப்பியும் வருது.
அடியவர் 6 :- ( பூமிக்கும் வியாழன் கிரகத்திற்கும் இரண்டு அம்பு வரைகோடு இட்டார்கள் — அதாவது, இந்த இரு கிரகங்களுக்கிடையில் நேரடி தொடர்பு அல்லது இணைப்பு இருப்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் குறியீடு வரைந்தார்கள். )
https://youtu.be/npiKG6l6z6o?t=19596
குருநாதர் :- இதனாலே அறிந்தும் பல வகையில் கூட, இவ்வாறு அறிந்தும் கூட, இவ்வாறு செல்வதால் எவரிடமும் எவை என்று புரிய, பின் பக்திகள் குறைந்து கொண்டே கலியுகத்தில்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இந்த குருபகவான் வந்து இந்த பூமியில பட்டு, இப்ப வந்து ரிப்ளெக்ஷன் ஆகுறதுனால அதிக அளவு?
அடியவர் :- ஆற்றல்கள் வந்து சேரல.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆற்றல் வந்து சேரல. அதனால என்ன ஆகும்?
அடியவர் :- அறிவுகள் கம்மி.
சுவடி ஓதும் மைந்தன் :- பக்திகள் என்பது வந்து.
அடியவர் :- பக்தி கம்மி.
சுவடி ஓதும் மைந்தன் :- கண்டிப்பாக.
அடியவர் :- குறையும்.
சுவடி ஓதும் மைந்தன் :- குறையும்.
குருநாதர் :- இதைத்தான் எவ்வாறு பின் முன்னின்று பார்த்தாலும் சனி அவனே ஆதிக்கம்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப சனி பகவான் இங்க இருக்காரு. இவர் ஆதிக்கம். டைரக்டா ( பூமி மேல ) படுது. அம்மா, புரியுதுங்களா எல்லாருக்கும், ஐயா? புரியுதுங்களா?
அடியவர் :- ம்…
சுவடி ஓதும் மைந்தன் :- குருவானவர் என்ன பண்ணாரு? போயிட்டு reflection ஆகுது வந்து. ஆனா சனி பகவான் என்ன பண்றாரு?
அடியவர் :- நேரடியா பூமி மேல படுதுன்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- நேரடியா பூமியை வந்து?
அடியவர் :- உள்ளுக்குள்ள வரைக்கும் போகுதுன்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- உள்ளுக்குள்ள போகுது, ஆற்றல் வருது வந்து.
அடியவர் :- இது மட்டும் மேல, வியாழ கிரகத்துடைய ஒளி வந்து பூமியுடைய சர்பேஸ், அதாவது மேல் புறத்துல பட்டு… திருப்பி மேல போயிடுது. சரியாக ஆற்றல் கிடைக்கிறது இல்ல பூமிக்கு. ஆனா சனியுடைய கதிர்வீச்சு மட்டும் பூமியை நீடிச்சு உள்ள போகுது.
சுவடி ஓதும் மைந்தன் :- உள்ள போகுது.
https://youtu.be/npiKG6l6z6o?t=19671
குருநாதர் :- இவைதான் அறிந்தும் ராகுவும் கேதுவும் உள்ளிடுக.
சுவடி ஓதும் மைந்தன் :- ( ராகு , கேது வெளியில் இருந்து ) இதை எடுத்துட்டு பூமி போடு. உள்ள போட சொல்றாரு.
அடியவர் :- ராகுவையும் கேதுவும் உள்ள போடுங்கன்றாரு.
அடியவர் 6 :- ( ராகுவையும் கேதுவும் பூமியின் உள்ளே வரைந்தார்கள் )
அடியவர் :- ம் ….
சுவடி ஓதும் மைந்தன் :- எடுத்துருங்க.
அடியவர் 6 :- ( பூமியை சுற்றி உள்ள ராகு , கேது கிரகங்களை அழித்தார்கள் )
https://youtu.be/npiKG6l6z6o?t=19690
அடியவர் 6 :- ராகு , கேது பூமிக்கு உள்ளே போய்விட்டாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- உள்ள போயிட்டாங்க. ஓகேங்களா?
குருநாதர் :- இதைத்தான் மிகப்பெரிய கிரகங்களான ராகுவும் கேதுவும் எவை என்று புரிய, இதிலிருந்து இடுக. பின் அதாவது வெளியிலிருந்தே.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இது ரெண்டுமும் ராகுவும் கேதுவும் பெரிய கிரகங்கள் என்றார் வந்து. பெரிய கிரகங்கள். அப்ப.
https://youtu.be/npiKG6l6z6o?t=19713
( அடியவர்கள் அவசியம் இவ்விடத்தில் youtube நேரலையை காண்க…. )
அடியவர் :- பாதி உள்ள, பாதி வெளியில.
சுவடி ஓதும் மைந்தன் :- பாதி வந்து என்ன ஆச்சு?
அடியவர் :- பாதி உள்ள, பாதி வெளியிலன்னு சொல்றாங்களா?
சுவடி ஓதும் மைந்தன் :- எப்படி சொல்றாருன்னா.
அடியவர் :- உள்ள வெளிய.
அடியவர் :- ரைட்.
அடியவர் :- ரைட்.
அடியவர் :- பூமியை விட பெரிய கிரகங்கள் ராகுவும் கேதுவும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, புரியுதுங்களா?
===========================
# ராகுவும் கேதுவும் வளரக் கூடியவர்கள்.
===========================
குருநாதர் :- இவைதான் இணைந்து அனைத்தும் எவை என்று புரிய, பின் இவ்வாறாக அறிந்தும் இவைதன், பின் இவ்வாறாக சுழல்வதால் அனைத்து கிரகங்களும் எதை என்று புரிய. அவை மட்டுமில்லாமல் எவை ஏது என்று புரிய, ராகுவும் கேதுவும் வளரக்கூடியவர்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப ராகுவும் கேதுவும் என்னது?
அடியவர் :- வளரக்கூடியவர்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- வளர்ந்தே வருமாம். இப்ப சின்ன பிள்ளை இருக்காங்க இல்ல?
அடியவர் :- ஆமா.
சுவடி ஓதும் மைந்தன் :-ஐயா?
அடியவர் :- குழந்தை வந்து எப்படி வந்து உயரமாகிக்கிட்டே போகுது, வயது ஏற ஏற. அதேபோல ராகுவும் கேதுவும் அவருடைய சுற்றளவு வந்து அதிகரிச்சுக்கிட்டே போகும்ன்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- அதிகரிச்சுட்டே போகுதாம்.
அடியவர் :- நாளாக நாளாக.
சுவடி ஓதும் மைந்தன் :- நாளாக நாளாக.
குருநாதர் :- இவ்வாறாகவே எதை என்று புரிய, பூமியின் அறிந்தும் வயதும் குறைவு. ஆனாலும் ராகு கேதுக்களின் வயது அதிகமாக.
அடியவர் :- சிவாய நம !!!!!
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப பூமியின் வயது?
அடியவர் :- கம்மி. ராகு கேதுவுடைய வயது அதிகம்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப ராகு கேதுவோட வயது வந்து?
அடியவர் :- அதிகம்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதிகம்.
அடியவர் :- பூமியை விட பெருசா.
சுவடி ஓதும் மைந்தன் :- இது பூமியை விட.
அடியவர் :- அப்பனா அளவு கம்மின்றாங்க.
குருநாதர் :- எதை ஏது என்று புரிய, இவைத்தான் ராகுவும் கேதுவும் கண்களுக்கு தெரியாது.
சுவடி ஓதும் மைந்தன் :- ராகுவும் கேதுவும் எல்லாம் அறிஞ்சதுதான்.
அடியவர் :- மாய கிரகங்கள். நிழல் கிரகங்கள் கண்ணுக்கு தெரியாது. ராகுவும் கேதுவும்.
குருநாதர் :- இதனாலே மனிதனுக்கு அடுத்து என்ன நடக்கின்றது என்பது தெரியாமல் போய்விடுகின்றது.
அடியவர் :- இதனாலேயே வந்து மனுஷனுக்கு அடுத்து என்ன நடக்குதுன்னு தெரியாமல் போயிடுறது.
சுவடி ஓதும் மைந்தன் :- தெரியாமல்?
அடியவர் :- ஏன்னா அது நிழல் கிரகங்கள்.
குருநாதர் :- இவைதான் அதி எதை என்று கூற சிறப்பு. இவைதான் உணர இவ்வாறாகவே, பின் அறிந்தும் கூட, பின் இவ்வாறாகவே, பின் புவி உடனே எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு சுற்றிக்கொண்டே சுற்றிக்கொண்டே.
https://youtu.be/npiKG6l6z6o?t=19822
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால இது என்ன பண்ணுது? ராகு கேது கூட எல்லாமே இப்படி சுற்றுது. ஐயா, புரியுதுங்களா?
எப்படின்னு. ஐயா, எக்ஸ்பிளைன் பண்ணுங்க, ஐயா.
அடியவர் :- இல்ல, எல்லாமே சுத்துது.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா.
அடியவர் :- எல்லாமே சுத்துது.
சுவடி ஓதும் மைந்தன் :- இல்ல, இல்ல, இல்ல. ராகுவும் கேதுவும் சமம்.
https://youtu.be/npiKG6l6z6o?t=19841
குருநாதர் :- எவை ஏது என்று அறிய, பின் புவியை விட அறிந்தும் கூட ராகு கேது பின் சுற்றுதல் எவை என்று கூட பல மடங்கு.
அடியவர் :- வேகம் அதிகமா சுத்துது.
சுவடி ஓதும் மைந்தன் :- வேகம் அதிகம்.
அடியவர் :- பூமியை விட வேகம் அதிகமா சுத்துது.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, பூமியை விட ராகு கேதுக்களின் வேகம் எவ்வளவு?
அடியவர் :- அதிகம்.
சுவடி ஓதும் மைந்தன் :- பல மடங்கு அதிகம்.
அடியவர் :- அதிகம்.
குருநாதர் :- எவை எதை கூற? பல கோடி.
அடியவர் :- பல கோடியாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- அது வந்து அளவிட முடியாது.
அடியவர் :- மடங்கு இல்ல, கோடி கணக்குல.
சுவடி ஓதும் மைந்தன் :- கோடி. இந்த பூமி வந்து ஒரு 100 கிலோமீட்டர் வேகத்துல. உதாரணத்துக்கு சொல்றேன்.
அடியவர் :- ஆமா.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, கேக்குதுங்களா? அப்ப இந்த ராகு கேதுக்கு எவ்வளவு ஆகுது?
அடியவர் :- அது பல கோடி வேகத்துல சுத்துது. மயில் வேகத்துல.
சுவடி ஓதும் மைந்தன் :- பல கோடி வேகத்துல சுத்துது.
https://youtu.be/npiKG6l6z6o?t=19878
குருநாதர் :- இவைதான் எவ்வாறு என்பது எல்லாம் இவ்வாறு பார்க்கின்ற பொழுது, அறிந்தும் பின் கண்ணுக்கு தெரியாது.
சுவடி ஓதும் மைந்தன் :- அவர் சுற்றுகின்ற பொழுது பல கோடி வேகத்துல சுற்றுகின்ற பொழுது ராகு கேது வந்து.
அடியவர் :- கண்ணுக்கு தெரியாது.
சுவடி ஓதும் மைந்தன் :- கண்ணுக்கு.
அடியவர் :- தெரியாது.
சுவடி ஓதும் மைந்தன் :- தெரியாதுன்றாரு.
குருநாதர் :- இவைதான் இவ்விசை அனைத்து கிரகங்களையும் தடுத்து விடுகின்றது.
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால இது பாஸ்ட். இந்த பூமி இவ்வளவு பெரிய இதுல சுத்துகின்ற பொழுது சூரியன், சந்திரன், புதன், வெள்ளி, வியாழன் , சனி.
சுவடி ஓதும் மைந்தன் :- சனி ( கதிர்கள் )உள்ள போயிடுது.
அடியவர் :- அதாவது அந்த ஒளி வந்து பட்டு பிரதிபலிக்குதுன்னு சொல்றாங்க இல்ல. அது ஏன் அந்த ஒளி பிரதிபலிக்குதுன்றத இப்ப சொல்லிட்டாங்க. ஏன்னா இதுவும் அதுவும் சேர்ந்து வேகமா சுத்துறப்போ ராகு கேது.. பல கோடி மடங்கு வேகத்துல சுத்துறப்போ…. எல்லா கிரகங்களுடைய ஒளியும் பூமியில பட்டு திருப்பி போயிடுது அந்த கிரகத்துக்கே.
சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா, புரியுதுங்களா? ஓகேங்களா? அப்ப பட்டு பட்டு என்ன ஆயிடுது? விலகிடுது. சனி பகவான் உள்ள போயிடுறாரு.
அடியவர் :- பூமிக்கு ஒளி கிடைக்கலை.
சுவடி ஓதும் மைந்தன் :- சனி பகவான் ஆற்றல் தான் என்ன பண்ணுது?
அடியவர் :- அது மட்டும் உள்ள வருது. மிச்சம் எந்த கிரகம் ஆற்றலும் உள்ள வரல.
https://youtu.be/npiKG6l6z6o?t=19933
குருநாதர் :- ஏன்? எதற்காக? எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட ஆற்றலை அறிந்தும் எவை என்று கூற பெருக்க, நிச்சயம் தன்னில் கூட. அறிந்தும் முருகன் ஏன்?
சுவடி ஓதும் மைந்தன் :- அப்புறம் ஆற்றலை பெருக்கணும். ஆற்றலை எதுக்காக? முருகன் எதுக்கு வந்தாரு?
அடியவர் :- ஆற்றலை பெருக்குவதற்காக.
குருநாதர் :- இதைத்தான் இவ்வாறாக முருகன் பின் செவ்வாயை பின் எவை என்று கூற, பின் பூமிக்கு பின் எவை என்று கூற, பின் அருகில் இழுத்து வர.
அடியவர் :- சிவாய நம.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இந்த கிரகத்தை தூக்கி வர யார் பயன்படுறாரு?
அடியவர் :- முருகப்பெருமான்.
சுவடி ஓதும் மைந்தன் :- முருகப்பெருமான். ஐயா, புரியுதுங்களா, ஐயா?
அடியவர் :- மனிதருக்கு ஆற்றல்கள் வேணும்ன்றதுக்காக, பூமியை நெருங்கி செவ்வாய் கிரகத்தை முருகப்பெருமான் கொண்டு வராராம்.
சுவடி ஓதும் மைந்தன் :- கொண்டு வந்தா இந்த ஆற்றல் எங்க போகும்?
அடியவர் :- பூமிக்குள்ள போகும்.
சுவடி ஓதும் மைந்தன் :- பூமிக்கு போகும்.
அடியவர் :- உள்ள போகும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, புரியுதுங்களா?
https://youtu.be/npiKG6l6z6o?t=19970
குருநாதர் :- இதனாலே எதை என்று புரிய, ஆனாலும் அறிந்தும் எதை என்று புரிய, பின் அதாவது முருகனை பின் வணங்க வணங்க அறிந்தும் ஆற்றல் முருகனை ஆற்றல் பின் உள்ளத்தில் பின் அறிந்தும் எவை என்று கூட உடம்பில் ஏற ஏற… தானாகவே எதை என்று அறிய, நிச்சயம் பின் செவ்வாய் கிரகத்தின் எவை என்று கூற, பின் அறிந்து கூட, பின் ஆற்றல் உங்களுக்குள் விழுகின்ற பொழுது, பின் செவ்வாய் பின் எவ்வாறு பலன் தருவானோ, அவ்வாறு பலன் தரும்.
அடியவர் :- சிவாய நம.
அடியவர் :- சிவாய நம.
அடியவர் :- சிவாய நம.
அடியவர்கள் :- ( கை தட்டல்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப செவ்வாய் கிரகம் வந்து ஒன்னும் பண்ணலன்னா என்ன ஆகும்?
அடியவர் :- முருகப்பெருமானை தீவிரமா வழிபடுறப்போ அந்த செவ்வாய் கிரகத்துடைய ஆற்றல் நமக்கு அதிகமா கிடைக்கும்ன்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப செவ்வாய் கிரகம் ஆற்றல் வந்து.
அடியவர் :- அதிகமா கிடைக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- கிடைக்கும்.
https://youtu.be/npiKG6l6z6o?t=20009
குருநாதர் :- எவை ஏது என்று புரிய, இதனாலே அறிந்தும் எதை என்று அறிய, புரிய. இதனால் பின் அதாவது ஒன்று பின் ஒன்று அறிந்தும் இதைத்தான் அறிய.
குருநாதர் :- இவ்வாறாக அதிகமாக பின் வழி வழிபடுகின்ற பொழுது, பின் ஆற்றல் அதிகமாகின்ற பொழுது, உங்களுக்கு தேவையானதை பின் ஏது என்று புரிய, பின் அவ கிரகத்திலிருந்து வரும்.
அடியவர் :- அப்பா !!!!!!
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த கிரகத்தில் எப்படி இருந்து வரும் உங்களுக்கு ஆற்றல்?
அடியவர் :- அதிகமா தீவிரமா வழிபட, வழிபட.
https://youtu.be/npiKG6l6z6o?t=20034
குருநாதர் :- இதற்காகத்தான் பல ஞானிகள் அறிந்தும் எவை என்று கூற, வாய்ப்பாட்டை எவை என்று கூற, பின் அறிந்தும் கூட, பின் ஏற்படுத்தினார்கள். அதுவே இப்பொழுது மந்திரமாகி நிற்கின்றது.
அடியவர் :- இதுக்காகத்தான் ஞானிகள் வந்து நிறைய வாய்ப்பாடுகள் எல்லாம் உருவாக்கினாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- வாய்ப்பாடுகள் எல்லாம் என்னது?
அடியவர் :- அதுதான் இப்ப மந்திரமா நிக்குதுன்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- வாய்ப்பாடுகள்னா.
அடியவர் :- மந்திரம்.
சுவடி ஓதும் மைந்தன் :- பாடுறது தானே, ஐயா. அதுதான் வந்து வாய்ப்பாடுகள். அது இப்ப என்ன ஆச்சு?
அடியவர் :- மந்திரம் ஆயிடுச்சு.
சுவடி ஓதும் மைந்தன் :- மந்திரம் ஆயிடுச்சு.
அடியவர் :- மந்திரம் ஆயிடுச்சு இப்போ.
சுவடி ஓதும் மைந்தன் :- பாடல் ஆயிடுச்சு. அப்ப என்ன ஆகுது வந்து (செவ்வாய் கிரகத்தில் ஆற்றல் ) இது வந்து ( பூமி) இங்க இழுத்துண்டு போகுது.
( அவசியம் நேரலையை பார்க்கவும்…)
https://youtu.be/npiKG6l6z6o?t=20063
குருநாதர் :- அப்பனே அறிந்தும் இடுக, அப்பனே எதை என்று அறிய, பின் மனிதனை.
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு மனிதனை பொம்மை போடுங்க, ஐயா. ஐயா, இங்க போடுங்க, ஐயா. பூலோகத்துல பெருசா போடுங்க, ஐயா. எல்லாருக்கும் தெரியுற மாதிரி. பூலோகம்.
அடியவர் :- பெரிய பூமி உருண்டை போடுங்க. பூமி உருண்டை போட்டு.
சுவடி ஓதும் மைந்தன் :- பூமி உள்ள மனிதனை போடுங்கன்றாரு.
அடியவர் :- பெருசா போடுங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- இருங்க, இதுல போடுங்க. கருப்புல போடுங்க.
அடியவர் :- கருப்புல போடுங்க. பெருசா ஒரு உருண்டை போடுங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- கருப்புல தெரியும்ல. பெரிய உருண்டை போடுங்க. இல்ல, மனிதனை வரைங்க.
அடியவர் :- ஒரு தலை, ஒரு குச்சி, ரெண்டு கை, ரெண்டு கால் போடுங்க.
அடியவர் 6 :- ( சொன்னது போல வரைந்தார்கள் )
அடியவர் :- அவ்வளவுதான். ரைட்.
https://youtu.be/npiKG6l6z6o?t=20104
குருநாதர் :- அப்பனே அறிந்தும் உன்னைப் போலவே வரைந்து வைத்திருக்கின்றாய்.
அடியவர்கள் :- ( பலத்த குபீர் சிரிப்புகள்…… )
சுவடி ஓதும் மைந்தன் :- ( சிரித்துக்கொண்டே ) ஐயா…. ( அழியுங்க…)
அடியவர் :- கொஞ்சம் தடியா வரைங்கப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- யாருக்கு, ஐயா, மனுஷன் நல்லா வரைய தெரியுமா? வாங்க, ஐயா.
அடியவர் :- ஒரு ஆர்டிஸ்ட் கொஞ்சம் வந்து இங்க நின்னுக்கோங்க. மேல நல்ல ஆர்டிஸ்ட்.
அடியவர் :- ராகேஷ் அய்யா , உங்க படத்தை வரைஞ்சிட்டீங்க.
அடியவர்கள் :- ( சிரிப்புகள்…… )
சாது அடியவர் :- ( மேடை ஏறினார்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- மனுஷனை வரைங்க….பெருசா வரைங்க, ஐயா, கொஞ்சம்.
சுவடி ஓதும் மைந்தன் :- இன்னும் கொஞ்சம் பெருசா போட்டு வரீங்களா? ரைட், ரைட். அருமையா வருது.
சாது அடியவர் :- ( அருமையாக வரைந்தார்கள் )
https://youtu.be/npiKG6l6z6o?t=20241
குருநாதர் :- அப்பனே, இவைத்தான் உருண்டை எடு.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, உலகம் வரைபடம் எங்க இருக்கு, ஐயா? உருண்டை எடுங்க, ஐயா.
அடியவர் :- உருண்டை எடுங்கம்மா. உலக உருண்டை. அம்மா, மேல வாங்கம்மா. பக்கத்துல நில்லுங்கம்மா.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, எப்படி வரைஞ்சுக்கிறார் பாருங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- உங்களை தான் பார்க்கிறார் அவர்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, ஒரு ஸ்டூல்ல போடுங்க. வைங்க, அது.
https://youtu.be/npiKG6l6z6o?t=20292
சுவடி ஓதும் மைந்தன் :- ஸ்டாண்ட் இல்லையா?
அடியவர் 4 :- இந்தியா பக்கமா திருப்பி வைங்க, ஐயா.
அடியவர் 6 :- இந்தியாதான் வச்சிருக்கேன்.
குருநாதர் :- விளக்குகள்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, விளக்குகள் எடுங்க , ஐயா.
அடியவர் 6 :- ( ஒளிர்ந்து , ஒளிர்ந்து எரியும் மின் விளக்கை எடுத்து வந்தார்கள் )
https://youtu.be/npiKG6l6z6o?t=20386
குருநாதர் :- அப்பனே, இவை என்று அறிய, அப்பனே, ஏன், எதற்கு, இவைத்தன், அப்பனே, மூடப்பட்டுள்ளது. அப்பனே, சிவப்பு நிறத்தில் இப்பொழுது.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, சிவப்பு நிறம் எடுங்க, ஐயா.
அடியவர் :- ( சிவப்பு நிற ஒளிர்ந்து , ஒளிர்ந்து எரியும் மின் விளக்கை எடுத்து வந்தார்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, இப்ப காட்டுல ஃபுல்லா இந்த பூலோகம், இந்த பூலோகம் வந்து என்ன நிறத்துல இருக்குது? சிவப்பு கலர்ல இருக்குதா வந்து…. இப்ப சிவப்பு நிறத்துல இருக்குது வந்து. ஐயா, புரியுதுங்களா?
குருநாதர் :- இதனாலே எவை ஏது என்று புரிய, ஆனால் அறிந்தும் எவை என்று புரிய, நிழல் பின் அடியில் படும், அறிந்தும் எவை என்று அறிய.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆனா இந்த சிவப்பு நிறம் வந்து இங்க அடியில் அதிகமா படுது.
அடியவர் 6 :- ( சிவப்பு நிறத்தை வரையவா பூமியின் கிழே? )
சுவடி ஓதும் மைந்தன் :- ஆமா. போடுங்க, ஐயா.
அடியவர் 6 :- ( பூமியின் கிழே சிவப்பு நிறத்தை வரைந்தார்கள் )
குருநாதர் :- அறிந்தும் இவ்வாறாக எதை என்று புரிய, அறிந்தும் இவ்வாறாக படுகின்ற பொழுது, எதை என்று புரிய, பின் அழிவுகள் பலம்.
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த இந்த நேரத்துல சிவப்புல இங்க படுறப்ப என்ன ஆகும்?
அடியவர் :- அழிவுகள் பலமாக இருக்கும்ன்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- அழிவுகள்
அடியவர் :- பலமாக இருக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- பலம்.
===========================
# சித்தர்களின் திருத்தலம் அமைத்த ரகசியங்கள்
===========================
# சிவப்பு கதிர்வீச்சுகளை, வெள்ளையாக மற்றும் திருத்தல ரகசியங்கள்
===========================
குருநாதர் :- இதை அறிவித்து எவ்வாறு என்பதையும் கூட உணர்ந்து சற்று கூர்ந்து கவனித்தால், எங்கு எதை என்று புரிய, அறிந்தும் எங்கெங்கு எவை என்று கூற, சித்தர்கள் யாங்கள் அமைத்தோம், எவ்வாறு என்பதை எல்லாம் ஏன், எதற்காக, இவ்வாறெல்லாம் நிச்சயம் தன்னில் கூட, பின் எப்பொழுதோ எதை என்று கூற, பின் உணர்ந்து.அதாவது பல நூறு எவை என்று அறிய, பல எவை, வருட எவை என்று உணர்ந்தும் கூட,
குருநாதர் :- அறிந்தும் இவ்வாறாகவே, பின் இதற்காகத்தான் எதை என்று புரிய, இவைத்தன் மாற்றும் சக்தி எதை என்று அறிய, திருத்தலங்கள் அமைத்து, அறிந்தும் ஏது என்று புரிய, அதை எவை என்று கூற, அவ் நிறம் படாதபடி.
அடியவர் :- இதுக்காகத்தான் திருத்தலங்கள் வந்து சித்தர்கள் நாங்க அமைச்சிருக்கோம்ப்பா. நிறைய திருத்தலங்கள் வந்து இந்த ஒளி மேல படாதபடி.
சுவடி ஓதும் மைந்தன் :- சிவப்பு நிறம் தான்…. பல நூறு ஆண்டுகளுக்கே தெரியுமாம் முன்னாடி வந்து. அப்ப இறைவன் அவர் என்ன பண்றார்? சித்தர்கள் வந்து அந்த சிவப்பு நிறம்?
அடியவர் :- படக்கூடாதுன்றாரு.
சுவடி ஓதும் மைந்தன் :- படக்கூடாது.
அடியவர் :- திருத்தலங்கள் நிறைய ஆலயங்களை வந்து அவங்க வச்சிருக்காங்க.
https://youtu.be/npiKG6l6z6o?t=20519
குருநாதர் :- இவைத்தன் அவ் ஆலயத்தில் பல இயற்கை எவை ஏது பொருட்கள் சேர்த்து நிச்சயம் தன்னில் கூட, அதைத்தான் பின் வெள்ளை நிறமாக.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப புரியுதுங்களா ?
சுவடி ஓதும் மைந்தன் :- சிவப்பை வெள்ளை நிறமா மாத்தணும். மாத்துறதுக்காகத்தான் பல திருத்தலங்கள் ஐயா…
சுவடி ஓதும் மைந்தன் :- ஈக்குவல் வெள்ளை இல்ல நீங்க அப்படியே போடுங்க இது ஒன்னும் தெரியல
அடியவர் 6 :- ( ஆலயம் வரைய ஆரம்பித்தார்கள் அங்கு )
ஒரு அடியவர் :- ரெட் அலார்ட்
சுவடி ஓதும் மைந்தன் :- ஆமா ஐயா. உலகத்துக்கு ரெட் அலார்ட் ரெட் அலார்ட் புரியுதுங்களா ரெட் அலார்ட்னா என்னன்னு சொல்லிட்டு… ரெட் அலார்ட்…. ஏன்னா உலகமே வந்து
அடியவர் :- அதனால நிறைய அழிவுகள் வரும் சிவப்பா ஆயிடுச்சு ஆமா
சுவடி ஓதும் மைந்தன் :- ரெட் அலார்ட். அப்ப இந்த ஆலயங்கள் இந்த ஆலயங்கள் ஏன் கட்டுனாங்கன்னா… வந்து அதை வெள்ளையா மாத்துறது வெள்ளையா மாத்தணும்… ஆலயத்துக்கு வெள்ளை
குருநாதர் :- எதை என்று புரிய ஆனாலும் அறிந்தும் ஏது என்று புரிய அறிந்தும் மனிதனிடத்தில் அறிந்தும் கூட. இவ்வாறாக பின் அறிந்தும் நடந்து சென்றாலும், மனிதன் தனியாகவே, பின் இவ் சிவப்பு நிறம் தான், மனிதனுக்கும் பின் எவை என்று கூற வெயில் போல் அல்லது நிழல் போல் படும்.
https://youtu.be/npiKG6l6z6o?t=20603
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த மனிதனுக்கு வந்து என்ன பண்ணுமாம் பூமியை விட்டு செல்லலாம் என்ன பண்ணுமாம் சிவப்பு தான் ஃபுல்லா ஐயா புரியுதுங்களா
அடியவர் :- நிழல் போல படும்ன்றாங்க
சுவடி ஓதும் மைந்தன் :- நிழல் போல் ஃபுல்லா ரெட் தான்
குருநாதர் :- ஆனாலும் இவ்வாறாகவே மனிதன் இருந்தால் மனிதன் மனிதன் பின் அதிவிரைவிலே பிணமாக மாறிவிடுவான்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப?
அடியவர் :- இந்த ஒளி தொடர்ச்சியா மேல பட்டுக்கிட்டு இருந்துச்சுன்னா…. மனுஷன் பணம் ஆயிருவான் என்று சொல்ராங்க…
சுவடி ஓதும் மைந்தன் :- பிணமாக… சீக்கிரமா என்ன ஆயிடுவான் வந்து ?
அடியவர் :- மரணம் வந்துரும்
குருநாதர் :- எவை என்று புரிய அது மட்டுமில்லாமல் உடம்பில் நோய் எவை என்று கூற பல வழிகள் எவை என்று புரிய பின் அனைத்தும் வந்துவிடும்
அடியவர் :- நோய்கள் நிறைய உடலுறுப்புகள் எல்லாம் செயல் வந்துரும்ன்றாங்க
குருநாதர் :- அதனால்தான் திருத்தளங்களை பின் அமைத்து பல இயற்கை மூலிகைகள் அதில் இட்டு பின் அங்கு சென்றால் நிச்சயம் தண்ணீர் அவ் ஒளி படாது உங்கள் உடம்பை பாதுகாத்துக் கொள் என்று
அடியவர் :- சிவாய நம !!!!! சிவாய நம !!!!!
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப கோயில் என் போறோம் தெரியுங்களா ஃபர்ஸ்ட் விஷயம்.
அடியவர் :- முதல் உடலை பாதுகாக்கணும் அந்த உடலை பாதுகாக்குறது தான் திருத்தலங்கள் மெயினா வச்சிருக்காங்க. அந்த கலசங்கள்ல நிறைய மூலிகை எல்லாம் வச்சிருக்காங்க பாருங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப சிவப்புலயே இருந்தோம்னா என்ன ஆகும்
அடியவர் :- நோய்கள் அதிகமா வந்துரும்
சுவடி ஓதும் மைந்தன் :- நோய்கள் அதிகமாகும் கஷ்டம் நிறைய வரும்
ஒரு அடியவர் :- (.......ஆடியோ தெளிவில்லை…… )
சுவடி ஓதும் மைந்தன் :- என்னங்க ஐயா
அடியவர் :- முருகப்பெருமான் நிறம் சிகப்பு அப்படின்ற மாதிரி சொல்றாரு அவர்
குருநாதர் :- அப்பனே எதை என்று புரிய அப்பனே பின் கடைசியில் புரிய வைக்கின்றேன் இவை
https://youtu.be/npiKG6l6z6o?t=20681
சுவடி ஓதும் மைந்தன் :- புரிய வைப்பார். இப்ப முருகன் வந்து இது வந்து செவ்வாய். அந்த கிரகத்தினுடைய ஆற்றல் வந்து இன்னும் என்ன ஆகுது வந்து?
அடியவர் :- புரிய வைக்கிறேன்றாங்க
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா இப்ப சனி பகவான் ( கதிர் வீச்சுகள்) மட்டும்தான் இங்க படுது வந்து… ஓகேங்களா மத்த எல்லாமே?
அடியவர் 6 :- பட்டு பட்டு திரும்ப போகுது
சுவடி ஓதும் மைந்தன் :- பட்டு பட்டு திரும்ப போகுது. வந்து அப்ப இன்னும் வந்து முருகப்பெருமான் தான் செவ்வாய் வந்து ஆற்றல் இழுத்துட்டு வருவார் வந்து. அது இன்னும் சொல்லல. இப்ப இதை சொல்லி இருக்காரு அப்புறம் சொல்றேன்றாரு வந்து. அப்ப வெள்ளை ஆகணும்? எப்படிங்க கோயிலுக்கு வெள்ளை ஆகணும்
அடியவர் 6 :- திருத்தலங்களை வச்சு…. திருத்த.
https://youtu.be/npiKG6l6z6o?t=20709
குருநாதர் :- ஆனாலும் மனிதன் இறைவனையே நம்புவதில்லை. கடைசியில் அனைத்தும் எவை என்று இழந்து கடைசியாக செல்கின்றான். எப்பொழுது நலமாகும்? நீங்களே எடுத்துரையுங்கள்.
அடியவர் :- ஆரம்பத்திலேயே அந்த பக்தி வந்துட்டா தப்பிச்சுக்கலாம். மனிதன் ஆரம்பத்திலேயே இறைவனை நம்புறது இல்ல. எல்லாத்தையும் பட்டு கஷ்டப்பட்டு… எல்லாத்தையும் இழந்ததுக்கு அப்புறம் தான்…. இறைவன் மேல நம்பிக்கையே வருது. பிணமாய் போய் என்னப்பா பிரயோஜனம்ன்றாங்க?
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா புரியுதுங்களா ? அப்ப?
அடியவர் 6 :- வயசானா கோயிலுக்கு போக சக்தி இருக்காது.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப கோயிலுக்கு போக சக்தி இருக்காது புரியுதுங்களா ஐயா?
அடியவர் 6 :- இந்த வயசானவர் கோயிலுக்கு போக முடியாது. எப்படி கடைசில தான் இறைவனை அப்ப கோயிலுக்கு போக உடம்புலயும் சக்தி தெம்பு இருக்காது.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா எக்ஸ்பிளைன் பண்ணுங்க
அடியவர் :- நல்லா அதாவது இறைவனை நாம சொல்லுங்க என்ன உடம்புல தெம்பு இருக்கு… அதான் அதாவது எப்போ நம்ம வந்து இறைவனை தேடணுமோ… இளவயதில் இறைவனை தேடாம விட்டுட்டு… எப்போ நாடி தளர்ந்து போய்… உடம்பு தளர்ந்த போய்… நோய்கள் எல்லாம் வந்ததுக்கு அப்புறம்… வயதான காலத்துல இறைவனை தேடி போறதுனால ஒரு பிரயோஜனமும் இல்லை அப்படின்னு தான் சொல்ல வராங்க.
அடியவர் :- இளமையா இருக்கிறப்பே இறைவனை தேடணும்.
அடியவர் :- எல்லாத்தையும் இழந்ததுக்கு அப்புறம் இறைவனை தேடி என்ன பிரயோஜனம்னு சொல்றாங்க அவங்க.
https://youtu.be/npiKG6l6z6o?t=20769
குருநாதர் :- இதனால் அறிந்தும் கூட முதலில் அறிந்தும் ஏது என்று புரிய. பின் இவ்வாறாக திருத்தலங்களுக்கு செல்கின்ற பொழுது முதலில் எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் அதாவது இவைதன் பின் இங்கு நிற்க அனைத்தும் ஏது என்று கூற உடம்பில் உள்ள பின் எவை என்று சிவப்பு நிறத்தில் மாறக்கூடும்.
குருநாதர் :- இதனால் அதைத்தன் பின் மெதுமெதுவாக அறிந்தும் இதற்கு ஒரு ஆண்டுகள் அல்லது ஒரு ஆண்டுகளில் இருந்து பின் பத்து வருடங்கள் கூட ஆகலாம். இதனால் திருத்தலத்திற்கே சென்று கொண்டிருக்கின்ற பொழுது நிச்சயம் உடம்பு பின் அதாவது வெள்ளை நிறமாக மாறும்.
அடியவர் :- சிவாய நம !!!!! இது உடனே மேஜிக் எல்லாம் கிடையாதுப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா மேஜிக் எல்லாம் கிடையாது . இப்ப நம்ம வந்து சின்ன வயசுல இருந்து கோவிலுக்கு போறதில்ல.
அடியவர் :- போறதில்ல
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன ஆயிடும் சிவப்பு நிறம்?
அடியவர் :- சிகப்பாயிடும் முழுக்க ஃபுல்லா
சுவடி ஓதும் மைந்தன் :- ஆனா நம்மளுக்கு?
அடியவர் :- நமக்கு தெரியாது.
===========================
# குருநாதர் கண்டுபிடிப்பை திருடிய மனிதர்கள்….
===========================
குருநாதர் :- அப்பனே இவை தன் கூட அப்பனே அதாவது பின் பிம்பத்தை அப்பனை காண ஒரு அப்பனை நிச்சயம் தன்னில் கூட எதிரே நிற்கும் பின் எவை என்று கூற பிம்பத்தையும் உருவாக்கி வைத்திருந்தேன். அதனையும் அப்பனே பின் அதை எடுத்துவிட்டு சென்றுவிட்டார்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- மனிதர்களுக்குள்ள கலர்கள் பார்க்கிறதுக்கு ஒரு கண்ணாடி வச்சிருந்தாராம் அகத்தியர் ஐயா புரியுதுங்களா?
அடியவர் :- ம் …..
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த கண்ணாடி என்ன பண்ணிட்டாங்கயா?
அடியவர் :- ம் …..
சுவடி ஓதும் மைந்தன் :- திருடிக்கிட்டு போயிட்டாங்களாம்.
குருநாதர் :- அப்பனே இப்பொழுது அதை வைத்து என்ன செய்யப் போகின்றான் மனிதன் என்னவென்றால், நீ நினைக்கும் எவை என்று கூட ஆற்றலை, அப்படியே நிச்சயம் தன்னில் கூட, பின் விளக்கமாக, அதாவது நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பின் அதாவது கனிப்பொறியில் காட்டப் போகின்றான் அப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- அதை வச்சுக்கொண்டு அடுத்து என்ன பண்ண போறான் மனுஷன்?
அடியவர் :- ஐயோ அப்பா !!!!!!
சுவடி ஓதும் மைந்தன் :- மனுஷனை கனி நீ என்ன நினைக்கிறியோ அதை அவரால் கம்ப்யூட்டர்ல சொல்ல முடியுங்க ஐயா.
அடியவர் :- ஆமா
சுவடி ஓதும் மைந்தன் :- அதை வச்சு என்ன பண்ண போறான் அந்த பிம்பத்தை கடத்தி வச்சுக்கிட்டு?....
சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப நீங்க என்ன நினைக்கிறீங்களோ…. அது என்ன ஆகும்? கம்ப்யூட்டர்ல அப்படியே போடுங்க ஐயா…. ஐயா புரியுதுங்களா?
https://youtu.be/npiKG6l6z6o?t=20872
குருநாதர் :- அப்பனே இவையெல்லாம் ஏன் எதற்கு? அதனால் தான் அப்பனே பின் அதாவது மனிதன் என்றாலே பின் அதாவது சித்தர்கள் ஒதுங்குகின்றார்கள் என்பேன் அப்பனே. இவ்வாறாக உலகத்தை கெடுத்ததே மனிதன் தான்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால்தான் சித்தர்கள் என்ன மனுஷனை பார்த்தாவே
அடியவர் :- ஒதுங்கி போயிடுறாங்க
சுவடி ஓதும் மைந்தன் :- திட்டுறது. அறிவில்லாதவனை…. அப்படி இல்லாதவனே என்று திட்டுறாங்க வந்து… மனிதன் தான் இதெல்லாம் என்ன பண்ணான்?
அடியவர் :- எல்லாம் பண்ணதெல்லாம் அவன்தான்
சுவடி ஓதும் மைந்தன் :- மனிதன்
குருநாதர் :- அப்பனே இதனால் நிச்சயம் மனிதன் எவ்வளவு பெரிய அப்பனே பின் நிச்சயம் முட்டாள் என்று நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள் என்பேன் அப்பனே. திருத்தலத்திற்கு சென்றால் உடனடியாக நடந்து நடந்து நடந்துவிடும் என்று எண்ணுகின்றான்.
அடியவர் :- பாருங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- கோயிலுக்கு போனா
அடியவர் :- வாழ்க்கை….. 60 வருஷமோ… 70 வருஷமோ…. 80 வருஷமோ….. எல்லாம் முடிஞ்சு, கடைசில… 50, 60 வயசுல போய்….. இறைவனை தேடினா, உடனே வெள்ளையா மாறிடுமா அது?
சுவடி ஓதும் மைந்தன் :- வெள்ளையா ?
அடியவர் :- மாறாது
சுவடி ஓதும் மைந்தன் :- மாறாது
அடியவர் :- 10 வருஷம்… 20 வருஷம்…. தொடர்ந்து போகணும்.
===========================
# (1) சிவப்பு …. (2) மஞ்சள் … (3) பச்சை …. (4) வெள்ளை …..
===========================
# டிராபிக் லைட் சிக்னல் - ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் …
===========================
https://youtu.be/npiKG6l6z6o?t=20924
குருநாதர் :- அறிந்தும் அப்பனே எவை என்று அறிய அப்பனே பின் நிச்சயம் வெள்ளை நிறத்தை, அப்பனே பின் அடைவதற்கு, முதலில் அப்பனே பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட, மஞ்சள் நிறம்.
குருநாதர் :- அடுத்து அப்பனே நிச்சயம் ஏது என்று அறிய, அப்பனே அறிந்தும் எவை என்று கூற அப்பனே பின் நிச்சயம் பெருமானின் நிறம். அப்பனே இன்னும் தேவைப்படுகின்றது என்பேன் அப்பனே.
குருநாதர் :- அவையெல்லாம் அப்பனே பின் அடைந்தால்தான் அப்பனே, கடைசியில் வெள்ளை நிறமாக மாறும். உன் வாழ்க்கை சீர்பெறும் என்பேன் அப்பனே.
குருநாதர் :- இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட மனிதன் தெரிந்து கொண்டிருக்கின்றானா என்ன அப்பனே? பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட வெள்ளை சட்டையும் அணிந்து, பின் எவை என்று கூற அப்பனே.
அடியவர் :- சிவாய நம….
சுவடி ஓதும் மைந்தன் :- அதனாலதான் மனுஷன் என்ன பண்ணிக்கிறான் வெள்ளை சட்டையும்
அடியவர் :- வெள்ளை நிறத்தை உடனே அடைஞ்சிட முடியாதுப்பா.
சிகப்புல இருந்து மஞ்சளா மாறனும்.
மஞ்சள்ல இருந்து பெருமாளோட நிறம் பச்சையா மாறனும்.
பச்சையா மாறிதான் அதுக்கப்புறம் வெள்ளையா மாறும்.
மேஜிக் எல்லாம் கிடையாதுப்பா.
அதனாலதான் மனுஷன் வந்து… இந்த வெள்ளை சட்டையை அணிஞ்சிட்டு…. இது வராது…. நமக்கு கிடைக்காதுன்னு…. எல்லாம் வெள்ளையை உடுத்துட்டு சுத்துறோம்ன்றாங்க.
ஒரு அடியவர் :- (........................)
அடியவர் :- அப்பயாவது அந்த ஒளியை ஈர்த்துரலாமான்னு…..
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா புரியுதுங்களா ?
===========================
# ஏன் அனுதினமும் முருகப் பெருமானை வணங்க வேண்டும் ?
===========================
https://youtu.be/npiKG6l6z6o?t=20978
குருநாதர் :- அப்பனே ஆனாலும் எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட அப்பனே. அதனால் அப்பனே ஏது என்று புரிய அப்பனே.
குருநாதர் :- இதனால் அப்பனே இவைத்தன் அறிந்து அப்பனே முருகப்பெருமான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட… கலியுகத்தில் அப்பனே எவை என்று புரிய அப்பனே, அன்போடு அப்பனே எதற்காக பின் நெருங்கி, அப்பனே பின் கலியுகத்தின் அப்பனே நல்விதமாக வணங்கி வந்தாலே, அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அவ் ஆற்றலானது அப்பனே பின் செவ்வாய் கிரகத்தின் ஆற்றலானது… அப்பனே உங்கள் மீது படுகின்ற பொழுது…. அப்பனே நிச்சயம் பின் சில நிறங்கள் மாறுபடும் என்பேன்.
அடியவர் :- சிவாய நம !!!!!
அடியவர் :- இப்ப கலியுகத்தை புரியுதுங்களா கலியுகத்தை முருகப்பெருமானை தீவிரமா வழிபடுறப்போ
சுவடி ஓதும் மைந்தன் :- தீவிரமா வணங்குறப்ப ?
அடியவர் :- அந்த நிறங்கள் மாறும்ன்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- மாறும்.
https://youtu.be/npiKG6l6z6o?t=21016
குருநாதர் :- அப்பனே நிச்சயம் எதிர்பார்க்கக் கூடாது என்பேன் அப்பனே. அனைத்தும் மாறுவதற்கு ஒரு ஐந்து ஆண்டுகள் கூட ஆகலாம். அல்லது பத்து ஆண்டுகள் கூட ஆகலாம் அப்பனே. நிச்சயம் அனைத்திற்கும் அப்பனே தாமதமாகும் என்பேன் அப்பனே.
அடியவர் :- மந்திரம் இல்ல மாயாஜாலம் இல்லாமல் உடனே பண்ண முடியாதுப்பா. குறைந்தது ஐந்து வருடங்களாவது அந்த நிறம் மாறுவதற்கு நேரமாகும்ன்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- நேரமாகும்
குருநாதர் :- இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட கஷ்டம் அதாவது கஷ்டங்கள் பட்டுக் கொண்டே இருக்கின்ற மனிதன் நிச்சயம் தன்னில் கூட அப்பனே எவை என்று கூறப்பின் அதாவது மாறுவதற்கு முன்பே பின் இறைவன் ஒன்னும் ஒன்றும் செய்ய மாட்டான் என்று அழித்து விடுகின்றான் ஐந்து ஆண்டுகளிலே.
அடியவர் :- பொறுமை இல்லை
சுவடி ஓதும் மைந்தன் :- பொறுமை இல்லை
அடியவர் :- கஷ்டம்.. கஷ்டம்… கஷ்டம்னு சொல்லிட்டு… இறைவன் மேல நம்பிக்கை இழந்துறான் மனிதன்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு ஆண்டு போவாங்க…. ரெண்டு ஆண்டு போவாங்க…. மூன்று ஆண்டு போவாங்க…. நாலு ஆண்டு போவாங்க…. அஞ்சு ஆண்டு போகும்போது…. மாறுகின்ற நிலை வரும். அதுக்குள்ள மனுஷன் என்ன பண்ணிடுவான்?
அடியவர் :- இறைவனே இல்லைன்றுருவான்
சுவடி ஓதும் மைந்தன் :- என்னடா ஒண்ணுமே நடக்கல…
அடியவர் :- இறைவன் கஷ்டமா கொடுத்துட்டு இருக்காங்க… இறைவன் ஒருத்தன் இருக்கானா? அப்படின்னு சொல்லி… மனிதன் சந்தேகப்பட்டு… இறைவனை விட்டு ஒதுங்கிடுவான். அவ்வளவுதான் முடிஞ்சு போச்சு.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா புரியுதுங்களா ஐயா?
https://youtu.be/npiKG6l6z6o?t=21075
குருநாதர் :- இதனால் நிச்சயம் தன்னில் கூட மனிதனுக்கு இவ்வாறாக நிச்சயம் பின் அதிகளவு பின் சிவப்பு எவை என்று அறிய பின் அதாவது பூமி தன்னிலே…. அதாவது மனிதனுக்கும் படுகின்ற பொழுது… அதிக பின் உறுப்புகள் நிச்சயம் தன்னில் கூட பாழடைந்து நிச்சயம் தன்னில் கூட.
குருநாதர் :- ஆனாலும் அறிந்தும் அதாவது இவைத்தன் உணர எதற்கு பின் அறிந்தும் இவைத்தன் பின் மஞ்சளாகவே எவை என்று கூறப்பின்.. ஒரு பின் நுண்ணுயிர் இருக்கும் அவை தன் நிச்சயம் தன்னில் கூட பின் மூளை தன்னிலே.
சுவடி ஓதும் மைந்தன் :- இங்க வந்து மஞ்சள் இடுங்க ஐயா…
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப மனிதன் மூளையிலே மஞ்சள் இருக்குமா இங்க வந்து..அம்மா புரியுதுங்களா? மஞ்சள் ஒரு மூளையில சிறு மூளையில வந்து ஒரு மஞ்சள் ஐயா மஞ்சள்
சுவடி ஓதும் மைந்தன் :- ( வரைந்துள்ள மனித மூளையில் மஞ்சள் ஒளிரும் விளக்கை வைத்தார்கள் ….)
சுவடி ஓதும் மைந்தன் :-இங்க வந்து மஞ்சள் இருக்குமாம் வந்து… மூளையில வந்து… அம்மா புரியுதுங்களா?
===========================
# எப்போது மஞ்சள் நிறமாக மாறும்?
===========================
குருநாதர் :- இவ் நுண்ணுயிரை அதிகமாக்கப்பட வேண்டும். எவ்வாறு அதிகமாக்கப்படுவது? அறிந்தும் இவைத்தன் உணர்ந்து இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் இவைத்தன் உணர.
குருநாதர் :- இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட திருத்தலம் திருத்தலம் சென்று கொண்டிருந்தாலே இன்னும் கூட அறிந்து கூட பின் நுண்ணுயிர்கள் அறிந்தும் எவை என்று கூட வளரும்.
குருநாதர் :- இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது சிறிது சிறிதாக நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் அதாவது பின் அறிந்தும் கூட சிவப்பு நிறம், எதை என்று அறிய இவ்வாறாக அறிந்து கூட இதன் பலன் பலம் அதிகரிக்கின்ற பொழுது, சில மாற்றங்கள் உடம்பில் ஏற்படுகின்ற பொழுது, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது பின் மஞ்சள் நிறமாக மாறும்.
அடியவர் :- சிவாய நம !!!!!
அடியவர் :- இதெல்லாம் உடனே நடந்துராது மேஜிக் மாதிரி. திருத்தலங்கள் திருத்தளங்களா போறப்போ…. குருநாதர் முதல் சொன்னாங்க சிகப்பு மஞ்சளா மாறும். அப்புறம் பச்சை …..அதுக்கப்புறம் தான் வெள்ளை….
அடியவர் :- சோ அப்ப மஞ்சளான நுண்ணுயிரி வந்து மூளையில அந்த சில நுண்ணுயிரிகள் வந்து… இது அதிகமா பெருகும். இது திருத்தலங்கள் அதிகமா போக போக…. அந்த மஞ்சள் நுண்ணுயிர் பெருக பெருக…. அதுக்கு அப்புறம் தான் வந்து நமக்கு மாற்றங்கள் நிகழ ஆரம்பிக்கும்ன்றாங்க…
சுவடி ஓதும் மைந்தன் :- அவ்வளவுதான் புரியுதுங்களா ஐயா ?
https://youtu.be/npiKG6l6z6o?t=21200
குருநாதர் :- இவ்வாறாகவே எதை என்று அறிய இவ்வாறாக சிவப்பு நிறத்தில் மனிதன் இருக்கின்றான். இதனால் நோய்கள் கடுமையாகும். இதனால் அதை அழிக்க நிச்சயம் தன்னில் கூட சிவப்பு நிற பழத்தை பின் எடுத்து
சுவடி ஓதும் மைந்தன் :- சிவப்பு நிற பழம் எடுங்க ஐயா. எங்கயா ஜூஸ்?
அடியவர் :- அந்த மாதுளை எடுங்க ஐயா. ஆப்பிள் எடுங்க ஐயா. நல்லா சிகப்பா இருக்குறது எடுங்க ஐயா. ஆப்பிள் எடுங்க ஐயா. நல்லா சிகப்பா இருக்குறது
===========================
# அன்னை மகாலட்சுமியின் கைகளில் உள்ள மாதுளம் பழம் நிறம்… ஞாபகத்தில் வைத்து கொள்ளுங்கள்…..
===========================
https://youtu.be/npiKG6l6z6o?t=21236
அடியவர் 6:- ( கைகளில் ஆப்பிள் , மாதுளை எடுத்து வந்தார்கள் )
குருநாதர் :- இதைத்தன் இவ்வாறாக சிவப்பு நிறத்திலே இருப்பதால் நிச்சயம் தன்னில் கூட பல நோய்கள் மனிதனுக்கு ஏற்படும். இதனால் பின் சிவப்பாவிலே ஆன பின் அதாவது பழங்கள்.. இன்னும் பின் காய்கள் எவை என்று கூறப்பின் உட்கொள்ள… பின் நிச்சயம் உடம்பை எதை என்று கூறப்பின் அதாவது நோய்கள் இருந்து தடுத்துக் கொள்ளலாம். சிறிது காலத்திற்கு.
அடியவர் :- சிவாய நம!!!!!!
அடியவர் :- ஒரு பெரிய….. ரகசியத்தை குருநாதர் சொல்லி இருக்காங்க…
அடியவர்கள் :- ( கைதட்டல்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- கலியுகத்தில் மனிதனுக்கு நோய்கள் அதிகமா வருது ஏன்னா சிகப்பு நிற ஒளி அதிகமா படுது. அப்போ அந்த நோய்களுடைய ஆற்றலை குறைக்கிறதுக்கு… ஒரு எளிய உபாயம் சொல்லி இருக்காங்க. சிகப்பு நிற பழங்களை.. காய்கறிகளை… அதிகமாக எடுத்துக் கொள்ளும் பொழுது…. அந்த சிகப்பு நிற ஒளி நம் படதுனால… ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்கலாம்னு சொல்லி இருக்காங்க.
அடியவர் :- ஓரளவுக்கு
சுவடி ஓதும் மைந்தன் :- ஓரளவுக்கு குறைக்கலாம்
அடியவர் :- ஓரளவுக்கு
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப நிறைய என்ன பண்ணனும்? ஆமா நிறைய தாக்குதல்
அடியவர் :- இது ஒரு இது ஒரு வகையான தாக்குதல்… மும்முனை தாக்குதல் சொல்லுவாங்களே… இந்த மாதிரி ஒரு வகையில நம்ம அட்டாக் பண்ணனும்.. நம்ம உடம்பை…
===========================
# எல்நினோ - என்பது பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் வழக்கத்திற்கு மாறான கடல் மேற்பரப்பு வெப்பமயமாதலைக் குறிக்கும் ஒரு இயற்கையான காலநிலை நிகழ்வு…இது போல உலகத்திற்கே…..
===========================
குருநாதர் :- அப்பனே இவ்வாறாக சிவப்பு நிறத்தில் வருவதால் அப்பனே வறட்சி அதிகமாக காணப்படும் அப்பா எவை என்று கூறப்பின் உலகத்திற்கே.
அடியவர் :- சிவாய நம!!!!!! அடுத்து உண்மை சொல்லியிருக்காங்க….
சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப எவ்வாறு ஒளி படிகின்றது..
அடியவர் :- ஐயா எல்லாம் எல்னினோ வறட்சி கரட்சின்றான் பாருங்க இந்த சிகப்பு நிற ஒளி அதிகமாக அதிகமாக வறட்சி என்பது தானாக வரும்ன்றாங்க
குருநாதர் :- அப்பனே அவை மட்டுமில்லாமல் அப்பனே நிச்சயம் தன்னில் கூட முதலில் இருதயத்தில் அப்பனே நோய் வரும் அப்பா. அப்பனே அவை மட்டுமில்லாமல் இவ்வாறாக இருதயத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் சிவப்பு படுகின்ற பொழுது… அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் மூளையிலும் எவ்வாறு என்பதை எல்லாம் அப்பனே அனைத்தும் மாறும் அப்பா. எண்ணம்.. செயல்கள்.. இன்னும் என்னென்னவோ.
அடியவர் :- சிவாய நம!!!!!! அதாவது அடுத்த உண்மை சொல்றாங்க. மனிதனுக்கு இங்க கலியுகத்துல பார்த்தீங்களா இருதய நோய் தான் அதிகமா இருக்கு நூத்துல 10 பேர் 15 பேருக்கு நோய்னா… முக்கியமா அவங்களுக்கு இருதய நோய் தான் ஜாஸ்தியா இருக்கு. ஏன்னா அதுதான் வந்து ஆற்றல் மையம். சிகப்பு நிற ரத்தத்துடைய ஆற்றல் மையம். அப்போது சிகப்பு நிற கரி வீச்சு அதிகமா பட்டு… அந்த உறுப்பு முதல் பாலாகுதுப்பான்றாங்க.
https://youtu.be/npiKG6l6z6o?t=21342
குருநாதர் :- அப்பனே அடுத்து அப்பனே உணவு குழாய்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக அப்பனே.
குருநாதர் :- ஆனாலும் அதன் ஆற்றல் உங்களுக்கு தெரியாது அப்பா.
குருநாதர் :- அங்கு படுகின்ற பொழுது, அது சுருங்குகின்ற பொழுது, அப்பனே அனைத்து வியாதிகளும் அங்கிருந்து வரும் அப்பா.
குருநாதர் :- இதனால் ஜீரண உறுப்புகள் அப்பனே பின் எவை என்று கூற அங்கே அப்பனே, சில அப்பனே பின் அழுக்குகள் தங்கி, அப்பனே பின் இன்னும் அப்பனே, பின் பல வியாதிகள் அப்பனே மனிதனுக்கு அப்பனே தெரியாமலே.
அடியவர் :- மனிதனுக்கு தெரியாமலே உணவுக்குழாய் வந்து சுருங்கி அதுல நிறைய சில இதெல்லாம் விட்டு… நிறைய நோய்கள் அதனால வரும்ன்றாங்க. உணவு குழாய் சம்பந்தமா.
குருநாதர் :- அப்பனே இவ்வாறாக பின் காய்களை அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஏது என்று புரிய அப்பனே சிவப்பான அப்பனே, பின் எலுமிச்சை அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது பின் அதாவது ஊற்றி, அப்பனே அதனுடனே, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, உட்கொண்டால் அப்பனே, பின் மஞ்சள் நிறம் அப்பனே, அதிகமாக செயல்படும் என்பேன் அப்பனே. பின் அதாவது பின் எது என்று புரிய அப்பனே பின் உடம்பிலே.
அடியவர் :- அடுத்த ஒன்னு சொல்லி இருக்காங்க. எலுமிச்சம் பழம். சிகப்பு காய்கறிகள்… மஞ்சள் நிற எலுமிச்சம் பழம்… எடுக்குறப்போ மஞ்சள் நிறத்துடைய ஒளி வந்து நம்ம உடம்புல அதிகமாகும் அப்படின்னு சொல்றாங்க புரியுதுங்களா.
( இப்போது திரிசூல பூசை வாக்கு ஒன்று உரைத்தார்கள்..அதனை ஏற்கனவே பிணவரும் பதிவில் அடியவர்கள் பூசை செய்வதற்க்காக கீழே இட்டுள்ளோம் ….)
சித்தன் அருள் - 2266 - அன்புடன் அகத்தியர் - திரிசூல பூஜை வாக்கு!
https://siththanarul.blogspot.com/2026/08/2266.html
( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 02/08/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் 12வது கூட்டு பிரார்த்தனை அதனில் உரைக்கப்பட்ட வாக்குகள் தொடரும் )
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.