“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Wednesday, September 16, 2026

சித்தர்கள் ஆட்சி - 741 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 02/08/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த 12 வது சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 9

 இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.




அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 02/08/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த  12 வது சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 9 ( நிறைவு பகுதி ) 


நாள், நேரம்  : 02/08/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை.  


இடம் : உலக நன்மைக்காக 12 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.


முழு கூட்டு பிரார்த்தனை நிகழ்வின் நேரலை :-  

https://youtu.be/npiKG6l6z6o


===========================

#   அன்புடன் அகத்திய மாமுனிவர்  வாக்கு 

===========================


ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன். நல்விதமாகவே ஆசிகள். 


( பகுதி 8  தொடர்ச்சியாக…… )


குருநாதர் :-  அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்.  கவலைகள்  இல்லை என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய பின்  அனைவருக்கும் கொடுத்து அனுப்புங்கள் என்பேன் அப்பனே. தீய சக்திகள் ஒழியட்டும். 


அடியவர் :-  சிவாய நம !!!!! சூலத்தை கொடுக்க சொல்றாங்க. தீய சக்திகள் எல்லாம் ஒழியட்டும் அப்படின்னு சொல்லி கொடுக்கறாங்க… 


குருநாதர் :-  அப்பனே நலமாக அப்பனே நிச்சயம் அனைவருக்குமே ஆசிகள். கவலைகள் வேண்டாம் என்பேன் அப்பனே. 


===========================

# அறிவுகளை பெருக்குகின்றேன் இன்னும் கூட. 

===========================



குருநாதர் :-  எது என்று கூற அப்பனே நிச்சயம் இதனால் அப்பனே அறிவுகள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பலம் இல்லையப்பா. நிச்சயம் அறிவுகளை பெருக்குகின்றேன் இன்னும் கூட. 


சுவடி ஓதும் மைந்தன் :- அறிவுகள் ? 


அடியவர் :-  அறிவுகள் இல்லப்பா அறிவுகளை நான் பெருக்குகின்றேன் அப்படின்னு சொன்னாங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா புரியுதுங்களா ? 


https://youtu.be/npiKG6l6z6o?t=33952


குருநாதர் :- அப்பனே எவை என்று கூற முருகன் ரகசியத்தை பாட சொன்னேன். அப்பனே நிச்சயம்  பாடிட்டீர்கள் அப்பனே.  மீண்டும் அப்பனே அதாவது நிச்சயம் தன்னில் இவ்  பெண் குழந்தையை பாடச்சொல்.  அப்பனே நிச்சயம்  தன்னில் கூட இவளுக்கும் அப்பனே தக்க சன்மானம் கொடுத்து அனுப்புங்கள். 


அடியவர் :-  பெண் குழந்தையை பாட சொல்லிட்டு சன்மானம் கொடுக்க  சொல்றாங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :- அய்யா ஒரு பாடல் பாட சொல்லுங்க. முருகர் பாடல்… அம்மா முருகர் பாடல் பாடிட்டு எல்லாருக்கும் கொடுப்பாங்க


===========================

# திரிசூலம் பூஜை தொடர்பாக ஒரு கேள்வி….

===========================


அடியவர் :- ஐயா அந்த சூலம்.. எலுமிச்சம் பழம் வந்து.. டெய்லி மாத்தணுமாங்க ஐயா கேட்டாங்க? 


குருநாதர் :-  அப்பனே எது என்று புரிய அப்பனே பின் அதாவது தகுந்தார் போல் அப்பனே நிச்சயம் தன்னில் கூட


சுவடி ஓதும் மைந்தன் :-  தகுந்தார் போல்.. தகுந்தார் போல்னா  எப்படி?  


…..


சுவடி ஓதும் மைந்தன் :-   (காய்ந்து) காய்  ஆகும் போது உங்களுக்கே தெரியும்.  


அடியவர் :- அழுகிடும்,,, அதான் சொல்றாங்க அழுகுனா நெகட்டிவ் எனர்ஜி இருக்குன்னு அர்த்தம்.  அப்ப மாத்திடனும்….அதான் சொல்றாங்க தகுந்தார் போல் 


சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா பாடுங்க அம்மா…..


https://youtu.be/npiKG6l6z6o?t=34002 


குழந்தைகள் பாடல்:-  …. ( வேலவா வடிவேலவா வேலடனாக வந்து நின்ற வேலவா )   

https://youtu.be/npiKG6l6z6o?t=34069


( பாடல் முடிந்த பின்னால்…)  


குருநாதர் :-  ( ஆடியோ தடங்கல்கள்.. எல்லோருக்கும் காணிக்கை  அளிக்க உத்தரவிட்டார்கள் …. ) மேடை தன்னில் கூட. 


https://youtu.be/npiKG6l6z6o?t=34273 


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாருக்கும் ₹ 5000 இவருக்கு₹ 5000   இவங்களுக்கு ₹ 5000 . அந்த பாப்பாக்கு ₹ 5000 . சன்மானம் பண்ணணும். இவங்களுக்கு ₹ 5000 . இவங்களுக்கு சேவை செஞ்சவர்களுக்கு ₹ 5000 . பாப்பாக்கு. இவங்களுக்கு ₹ 5000 . 


பாடகர் :- ( கேள்வி …ஆடியோ தடங்கல்கள்.. ) 

https://youtu.be/npiKG6l6z6o?t=34302


குருநாதர் :- அப்பனே, இது ஒரு கணக்கு என்பேன், அப்பனே. அடுத்த வாக்கியத்தில் சொல்கின்றேன். பின் தெரிந்து கொண்டால், அப்பனே, நீ எதை என்று புரிய, அப்பனே.


சுவடி ஓதும் மைந்தன் :-  இது ஒரு கணக்கு இருக்குதாம். 



குருநாதர் :-  அப்பனே, அதனால்தான் மீண்டும் இதைத்தான் சொல்வேன்: ஒரு கணக்கு இருக்கின்றது என்று. ஒரு கணக்கு இருக்குது. உங்களுக்கு கூட இல்லை. உங்களுக்கு இல்லை. 


பாடகர் :-  எனக்கு ₹1 கொடுத்துட்டு, அதுக்கே இன்னும் கணக்கு சொல்ல மாட்டேங்கிறார் அவர். அந்த ₹1க்கே கணக்கு இருக்குங்கிறார். விந்தை மேல் விந்தை. 


அடியவர் :- அவங்க கணக்கெல்லாம் உங்களால புரிஞ்சுக்க முடியாது. 


சுவடி ஓதும் மைந்தன் :- ( அனைவருக்கும் சன்மானம் அளித்தார்கள் ) 



சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, எல்லாரும்... ஐயா, சொல்லுங்க. எல்லாரும் அமைதியா இருங்க. டைம் நிறைய இருக்கு. ஐயா, சொல்லுங்க. ஐயா, நேரம் நிறைய இருக்குது. 


அடியவர் :-  எல்லாம் கொஞ்சம் அமைதியா இருங்க. எல்லாருக்கும் சூலம்  இருக்கு. அமைதியா இருங்க. அகத்தியர் என்ன சொன்னாரோ, அகத்தியர் என்ன சொன்னாங்களோ, சூளத்தை எப்படி பயன்படுத்தணும்னு சொன்னாங்களோ, அதை சரியான முறையில பயன்படுத்துங்க. இந்த வாக்குகளை வந்து இன்னும் 2-3 நாளிலேயே வந்து உங்களுக்கு வந்து வெளியிட்டுருவோம். எப்படி பயன்படுத்தணும்ன்ற வாக்குகளை வந்து வெளியிட்டுருவாங்க. அதை சரியான முறையில நீங்க படிச்சு பயன்படுத்துங்க.  சந்தேகங்கள் ஏதாவது இருந்தா இந்த கூட்டு பிரார்த்தனை குழுல இருக்கறவங்கள நம்பர் கொடுக்கற 18 பேருக்கு போன் பண்ணி கேளுங்க. சரியானபடி பண்ணுங்க. வினைகளை அகற்றி கொள்ளுங்கள்.


அடியவர் :- ஐயா அடுத்தது ( கூட்டுப்பிரார்த்தனை )  எங்க ஜானகி ஐயா ஐயா


சுவடி ஓதும் மைந்தன் :-  ( சுவடியை படித்து … இங்கதான்)


அடியவர் 3 :- இங்கதான்

 


( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 02/08/2026   அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  12வது கூட்டு பிரார்த்தனை அதனில் உரைக்கப்பட்ட வாக்குகள் நிறைவு அடைந்தது) 


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.