“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Tuesday, September 29, 2026

சித்தர்கள் ஆட்சி - 747 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - 27/09/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த 13 வது சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 1 ( செப்பு நாணயம் வழிபாடு , கோமதி சக்கரம் வழிபாடு )

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும். இறைவா, எங்களை நன்றாகப் படைத்தாய்! அனைத்தையும் நன்றாகக் கொடுத்திருக்கின்றாயே! இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!! 



அன்பு அன்னை லோபாமுத்ரா உடனுறை அன்புத் தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகள் போற்றி! போற்றி!! போற்றி!!!! 


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 27/09/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த  13 வது சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 1 ( செப்பு நாணயம் வழிபாடு , கோமதி சக்கர வழிபாடு ) 


நாள், நேரம்  :27/09/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 


இடம் : உலக நன்மைக்காக 13 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.

முழு கூட்டு பிரார்த்தனை நிகழ்வின் நேரலை :-  

https://www.youtube.com/live/PKohTFGg6R8 

===========================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு

===========================

வாக்கு ஆரம்ப நேரலை :- https://youtu.be/PKohTFGg6R8?t=9677


ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.  

அப்பனே அம்மையே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்… 


(இதன் பின்னர் பல வாக்குகள் குருநாதர் உரைத்தார்கள். அவ் வாக்குகள் பின்னர் இவ் வலை தளத்தில் வெளிவரும். அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால்… அதன் முன்னர் , அடியவர்கள் பயன்படுத்துவதற்காக செப்பு நாணய பூஜை வாக்கு மற்றும் கோமதி சக்கரம் பூஜை வாக்கினை இங்கு முதல் பதிவாக வெளியிடப்படுகின்றது. அடியவர்கள் பூஜை, வழிபாடுகள் செய்து நலன் அடையுங்கள். அனைவருக்கும் பகிருங்கள். வாருங்கள் இப்போது  செப்பு நாணய வாக்கின் உள் செல்வோம்) 


===========================

# செப்பு நாணய வாக்கு - பகுதி 1 

===========================

அன்புடன் அகத்திய மாமுனிவர் செப்பு நாணயம்.


அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு


இவ்விடத்தின் நேரலை :- 

ஆரம்பம் :-  https://youtu.be/PKohTFGg6R8?t=18188

முடிவு  :-  https://youtu.be/PKohTFGg6R8?t=18444


குருநாதர் :- அப்பனே, எதை ஏது என்று புரிய, அப்பனே, முருகன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அன்பிற்கு அடிமை. அப்பனே நிச்சயம் தன்னில் கூட முதல் அன்பு, அப்பனே, தாயின் மேலே. 


சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன சொல்றாரு? முருகன் வந்து அன்பிற்கு அடிமை. முதல்… தாயின் மேலே தான் அடிமை. 


===========================

# செப்பு நாணயம்  அதனில் ஏன் ஒருபுறம் சூலம் , மறுபுறம் வேல் சின்னத்தினை பொறிக்க குருநாதர் உத்தரவு இட்டார்கள் ? 

===========================

குருநாதர் :- அப்பனே, அதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஒரு புறம், அப்பனே, தாயின் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட  அப்பனே, உருவமும்….. மறுபுறம் அப்பனே, முருகன் உருவமும். அப்பனே, நிச்சயம் யான் எதை என்று புரிய  அப்பனே, புரிந்து கொள்ளுங்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :- அதனால்தான் ஒரு பக்கம் 


அடியவர் :- தாய். 


சுவடி ஓதும் மைந்தன் :- தாய் திரிசூலம்.


அடியவர் :-  திரிசூலம்.


சுவடி ஓதும் மைந்தன் :- இன்னொரு பக்கம் வேல்.


அடியவர் :-  முருகன்.


சுவடி ஓதும் மைந்தன் :- முருகனைப் போல வேலை.


அடியவர் :- ஆமா, ஆமா. அதாவது இந்த செப்பு காயினுடைய ரகசியத்தை சொல்றாங்க.


சுவடி ஓதும் மைந்தன் :- செப்பு காயின். ஐயா, புரியுதுங்களா? 

https://youtu.be/PKohTFGg6R8?t=18240


குருநாதர் :- அப்பனே, இவ்வாறாக எதை என்று புரிந்து கொள்வதற்கும் கூட.  


குருநாதர் :- இதனால் அப்பனே, இவைத்தன் சரியாகவே அப்பனே, எதை என்று அறிந்தும் கூட, அப்பனே, நல்விதமாக தீபம் ஏற்றுகின்ற பொழுது, சரியாகவே அப்பனே, தீபத்தில் இட்டு விடுங்கள் என்பேன்  அப்பனே.


குருநாதர் :- பின் எதை என்று புரிய  அப்பனே, இவ்வாறாக தீபத்தில் இட்டு, 


குருநாதர் :- அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட சிறிது நேரம், 


குருநாதர் :- அப்பனே, தியானம் செய்தால், அப்பனே, இன்னும் சிறக்கும்  அப்பா. 


குருநாதர் :- ******  சில உண்மைகள், அப்பனே, சில கவலைகள் மாறும்  அப்பா. ****** 


குருநாதர் :- முதலில் அப்பனே, இதன் ரகசியம் கூட அப்பனே, எவை என்று புரிய. 


குருநாதர் :- அப்பனே, அவ் தீபத்தில் அப்பனே, ஒரு அப்பனே ஒளிப்பிளம்பானது. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட மிகப்பெரிய அளவில் எரிந்து கொண்டிருக்கின்றது. 


குருநாதர் :- அப்பனே, அதனை வைத்தே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எது ஏது என்று கூற  அதை பார்க்கவும் முடியாது என்பேன்  அப்பனே.


குருநாதர் :- ஆனாலும், அப்பனே, அதன் சத்தம் கேட்க முடியும் என்பேன்  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.


குருநாதர் :- அதனால்தான், அப்பனே, பின் அதிகாலையில்  அப்பனே, இவை சரியாக அப்பனே, பின் ஏற்ற வைத்து, அப்பனே, நல்விதமாக. அப்பனே, பின் அதில் இட்டு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் மனதார வேண்டிக் கொள்ளுங்கள். 


குருநாதர் :- ****** முதலில் சில பாவ வினைகள் தீரும். ****** 


குருநாதர் :- ****** அப்பனே புண்ணிய கணக்கு,  அப்பனே, நிச்சயம் வரும் ****** 


குருநாதர் :- ****** தானாகவே அப்பனே, அனைத்தும் நடக்கும் என்பேன்  அப்பனே. ****** 


குருநாதர் :- ******  இவை புரிந்து கொண்டு,  செயல்பட்டு, அப்பனே, மற்றவருக்கும் செயல்படுத்தி, அப்பனே  நிச்சயம் புண்ணியங்கள் பெறுங்கள். ****** 

https://youtu.be/PKohTFGg6R8?t=18296


சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன சொன்னார் தெரியுங்களா?  ஐயா, இந்த ஒரு காயின்ஸ் கொடுப்பாங்க இங்க.  அந்த காயின்ஸ் எடுத்துட்டு போயிட்டு, காமாட்சி விளக்கு எல்லாம் உங்க வீட்ல எரியும்ல வந்து… அதை வந்து அதுல, அது அதுல வச்சு சொல்றாரு. வந்து அதை வச்சிட்டு, அப்புறம் வந்து 


அடியவர் :- ( இப்போது கொல்லூர் அன்னை மூகாம்பிகையின்  திரு பாதங்களில் வைத்து பூஜை செய்து , அன்னை மூகாம்பிகையின் அருள் ஆசி பெற்று அடியவர்கள் எடுத்து வந்த, செப்பு நாணயத்தை, அதனை வெளியே எடுத்தார்கள். அதனை சுவடி ஓதும் மைந்தனிடம் கொடுத்தார்கள் )


சுவடி ஓதும் மைந்தன் :- ( இப்போது அந்த செப்பு நாணயத்தை அனைவருக்கும் தெரியும் வகையில் எடுத்து காட்டினார். அதனை பின் வரும் நேரலையில் காண்க.) 

https://youtu.be/PKohTFGg6R8?t=18321 


சுவடி ஓதும் மைந்தன் :- இதை பாருங்க. ஒரு பக்கம் வேல் இருக்கும். இன்னொரு பக்கம் சூலம் இருக்கும். இதை என்ன பண்றாங்கன்னா, வந்து, காமாட்சி விளக்கு இருக்குல்ல. உங்க வீட்ல காமாட்சி விளக்கு. அதுல போட சொல்றாரு. தீபம் ஏத்த சொல்றாரு. தீபம் ஏத்த சொல்லி அமைதியா தியானம் பண்ண சொல்றாரு. தியானம் பண்ணிட்டு, தியானம் பண்ணி, உங்களுக்கு என்ன? முதல்ல வந்து தியானம் பண்ணாவே போதுமாம்  முதல்ல. அப்புறம் அந்த தீபத்துக்கு தெரியுமாம். உங்களுடைய என்ன குறைகள் ஏது குறைகள்னு சொல்லிட்டு, அதனால இது வந்து அந்த தீபத்துக்கு அந்த ஒளி வடிவமா இருக்கு. பார்த்தீங்களா? அதுக்கு வந்து உணரும் சக்தி இருக்குது. வந்து ரகசியம் வந்து அப்படித்தான் சொல்றாரு.


அடியவர் :- ஒரு பெரிய தீபம் எரியுதுன்றாங்க.


சுவடி ஓதும் மைந்தன் :- பெரிய இதனோட இன்னும் பெரிய பிளம்பு எரியுது. அங்க வந்து அப்ப சிறு இப்ப எரியுதுனால, இதனோட இது பண்ணு. அங்க போய் கனெக்ட் ஆகுன்றாரு. வந்து வேற ஒன்னும் இல்ல. 


அடியவர்கள் :- ( சந்தோஷத்தில் பலத்த கைதட்டல்கள் ) 


குருநாதர் :-  இதனால்தான் எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட அனைத்து எவை என்று கூற மதங்களும் பின் நிச்சயம் தீபங்கள் சிறப்பாக கடைபிடிக்கப்படுகின்றது. 


சுவடி ஓதும் மைந்தன் :- அதனால்தான் எந்த மதத்திலாவது என்ன பண்றீங்க?


அடியவர் :- ஒளி தீபம்ன்றது.


சுவடி ஓதும் மைந்தன் :- தீபம் என்பது உண்டு. யாராவது தீபம் ஏத்தாம இருக்கிறாங்களா? நம்ம என்ன பண்றோம்?


அடியவர் :- எல்லா மதத்துலயும் ஏத்துறாங்க.


சுவடி ஓதும் மைந்தன் :- எல்லா மதத்துலயும் ஏத்துறாங்க. ஏன்?  அந்த மனக்குறைகள் அந்த தீபத்துக்கு யாருக்காவது தெரியுமா? அந்த மதத்துக்கு கூட தெரியாது. ஏன் ஏத்துறோம்னே? வந்து அப்ப அந்த தீபத்தோட இது வந்து நம்ம வந்து என்ன நினைக்கிறோமோ, நம்ம என்ன உணர்றோமோ, அது வந்து தெரியும். அது வந்து கொண்டு செல்லும்ன்றாரு.


அடியவர் :- ஒளிப்பிளம்பு குருநாதர் முன்னாடி சொல்லி இருக்காங்க இல்ல.


===============================================

# பிரபஞ்ச நெருப்பும் கோபுரக் கலசங்களின் ரகசியமும்!

சித்தர்கள் ஆட்சி - 586 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - 29.1.2026 அன்று திருக்கேதீஸ்வரத்தில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 7

https://siththarkalatchi.blogspot.com/2026/02/586.html 

===============================================

# ஆதி ஈசனாரின் நெருப்பு பிழம்பு - பரம ரகசியங்கள் வாக்குகள்

# சித்தர்கள் ஆட்சி - 577 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - 26.1.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 7

https://siththarkalatchi.blogspot.com/2026/02/577.html 

===============================================


குருநாதர் :- எதை ஏது என்று புரிய. அதனால்தான் இறைவனின் நெருப்பு. பின் நெருப்பாலே நிச்சயம் பின் அனைத்தும் அடைவோம். 


சுவடி ஓதும் மைந்தன் :- இறைவன் என்பது யாரு? 


அடியவர் :- நெருப்பு. 


சுவடி ஓதும் மைந்தன் :- நெருப்பு மாதிரி டச் பண்ண பண்ணா? 


அடியவர் :- ஆமா.


சுவடி ஓதும் மைந்தன் :- அவ்வளவுதான் முடிஞ்சிருச்சு.


அடியவர் :- முடிஞ்சுச்சு.


சுவடி ஓதும் மைந்தன் :- அதனால தீபத்தாலே…. நம்ம எண்ணங்கள் தீபத்தாலே கொண்டு செல்வோம். ஐயா புரியுதுங்களா?


அடியவர் :- ஐயா, செப்பு நாணயம் தான் ஈர்க்கும். அந்த செப்பு நாணயம் கொடுத்திருக்காங்க  பாருங்க…..  ( heat ) ஹீட்ட  ஈர்க்கும்.


சுவடி ஓதும் மைந்தன் :- ஈர்க்கும்ன்றாரு வந்து. அதனால வந்து அதனாலயே இது வந்து…. நீங்க நினைச்சீங்கன்னா போதும். இது கனெக்ட் ஆகும்ன்றாரு வந்து. 


குருநாதர் :-  இன்னும் ரகசியங்கள் தெரிந்து எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட உங்களை நீங்களே ஆளுங்கள். இன்னும் நிறைய ரகசியங்கள் தெரிஞ்சுக்கோங்க. வந்து நீங்கள் உங்களையே ஆளுங்கள். 


===========================

# செப்பு நாணய வாக்கு - பகுதி 2

===========================

===========================

# அன்புடன் போகர் சித்தர் வாக்கு

===========================


இவ்விடத்தின் நேரலை :-  https://youtu.be/PKohTFGg6R8?t=32645


போகர் சித்தர் வாக்கு:-  இதைத்தான், இதையே உரைத்தேனே, இவ்வாறாக செய்ய என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :- போகர் என்ன சொல்றார்னா, ஒரு மண் சட்டி இருக்குல்ல, மண் சட்டி எடுத்துக்கிட்டு, அந்த மண் சட்டில உப்பு போட்டுக்கிட்டு, பச்சரிசி மாவு கொஞ்சம் மாவு இருக்குல்ல, போட்டுக்கிட்டு, உப்பு நம்ம தேவையான அளவுதான் கொஞ்சம். பச்சரிசி மாவு போட்டுக்கிட்டு, அடுத்து அந்த (செப்பு)  காயின் போடணும்ன்றார். 


https://youtu.be/PKohTFGg6R8?t=32678


போகர் சித்தர் வாக்கு:-  இதைத்தன் இவ்வாறாகவே, நல் இதைத்தன் துளசி இலைகளையும் கூட, வில்வத்தையும் கூட, நன்றாக அதில் தன் இட வேண்டும், நசுக்கி. 


சுவடி ஓதும் மைந்தன் :- துளசி, வில்வ இலை, இதெல்லாம் நசுக்கி, எதுல? 


அடியவர் :- அந்த கலையத்துல போடணும்


சுவடி ஓதும் மைந்தன் :- அந்த சட்டில போடணும். 


போகர் சித்தர் வாக்கு:-  இவைத்தன் பின் அழகாக, அதிமதுரத்தையும், மிளகு சீரகத்தையும் இட்டு, 


சுவடி ஓதும் மைந்தன் :-  அதிமதுரத்தையும், மிளகு சீரகத்தையும் அதுல இடனும். 


போகர் சித்தர் வாக்கு:-  இவைத்தன் இவ்வாறாக, பட்டையும் கூட, 


அடியவர் :- பட்டை.


சுவடி ஓதும் மைந்தன் :- பட்டை இருக்குல்ல…


அடியவர் :- லவங்கப்பட்டை. 


போகர் சித்தர் வாக்கு:-   இதைத்தன் அறிய, இவ்வாறாக சிறிய பின் அறிந்தும், வேப்பிலையையும் கூட, 


அடியவர் :-  வேப்பிலை, 


சுவடி ஓதும் மைந்தன் :-  வேப்பிலை இருக்குல்ல  வந்து…. இதுகூட…


அடியவர் :-  அதையும் போடணும்ன்றாங்க. 


போகர் சித்தர் வாக்கு:-  இதைத்தன் நன்றாகவே, இவைத்தன் அறிந்தும், இதைத்தன் இரவு தன்னில்  கூட, இதில் தன் பின் இட வேண்டும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  எங்க, எப்ப இட வேண்டும்?


அடியவர் :-   இந்த மூலிகை எல்லாம் இரவுல இடணும்னு சொல்றாங்க.


சுவடி ஓதும் மைந்தன் :-  இரவுல. 


https://youtu.be/PKohTFGg6R8?t=32736


போகர் சித்தர் வாக்கு:- இதைத்தன்  அறிய , சரியாகவே, நிச்சயம் பின் அழகாக, பின் மணல் தன்னில் கூட, இதைத்தன் இவ்வாறாகவே, சரியாக மூடி, இவைத்தன் புதைக்க வேண்டும். 


சுவடி ஓதும் மைந்தன் :-   கொஞ்சம் மணல் இருக்குல்ல, மணல் எடுத்துக்கிட்டு, சின்ன சட்டி எடுத்து…. போட்டு, 


அடியவர் :-    மேல போட்டு, அது மேல மண்ணு போட்டுறணும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  அது மேல மண்ணு போட்டுறணும்.


அடியவர் :-    மூடிடணும்.


அடியவர்  2:- எந்த மண் வேண்டுமானாலும் போடலாமா ஐயா ?


சுவடி ஓதும் மைந்தன் :-  அது எந்த மணலானா போதும்.


அடியவர் :-    ஐயா, மணல் எந்த மணல்?  எந்த மணல்ன்னு  கேக்குறார்?.


சுவடி ஓதும் மைந்தன் :-  மணல் வந்து சின்னது, இது மாதிரி வாங்கி வாங்கமா, சின்னதா ஒரு.


அடியவர் :-    ஒரு ஆற்று மணல், அந்த மாதிரி.


சுவடி ஓதும் மைந்தன் :-  ஆமா. ஆத்து மணல். இது மாதிரி சின்னதா ஒரு மண் சட்டி மாதிரி வாங்கி வாங்க, சின்னதா. குடுவு மாதிரி, ஆமா, ஆமா.


அடியவர் :-   மண் குடுவை. இப்ப நம்ம நிறைய பூஜைக்கு எல்லாம் குடுவை பயன்படுத்துறோம்ல, வேல் பூஜைக்கு எல்லாம், அந்த மாதிரி ஒரு சின்ன குடுவை வாங்கி, அதுல சொன்ன காணும் நாணயத்தை வச்சு, எல்லா மூலிகை எல்லாம் வச்சு, அதுக்கு மேல மணல் போட்டு மூட சொல்லிருக்காங்க.


சுவடி ஓதும் மைந்தன் :-  மூட சொல்றாங்க.

https://youtu.be/PKohTFGg6R8?t=32777 


போகர் சித்தர் வாக்கு:-  இதைத்தன் இவ்வாறாக, நிச்சயம் தன்னில் கூட, வாரத்திற்கு இருமுறை, இவைத்தன் நிச்சயம் பின் அதிகாலையில், பின் அதாவது, பின் அருந்தி வந்தால், ஆனால் அறிந்து, இதன்பின் நிச்சயம் பாலில் பின் பிரித்தெடுக்கும், பின் கடைசியாக வருவதையும் கூட அருந்தினால், பின் மிகச் சிறப்பான ஆற்றல் உங்களுக்கு கிடைக்கும். இதனால் நிச்சயம் பல பிரச்சனைகள், உடம்பில் உள்ள அழுக்குகள் முதலில் வெளியேறும். 

https://youtu.be/PKohTFGg6R8?t=32799


அடியவர் 2:- ( ஆடியோ தெளிவில்லை) குடிக்கலாமா?   சாப்பிடணுமா ?


போகர் சித்தர் வாக்கு:-   எதை, ஏது என்று புரிய, நிச்சயமாக.

 

அடியவர் :- மண்ணு எடுத்துட்டு, ரெண்டு நாளைக்கு மூலிகை சாப்பிடணுமா?.

 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, அப்படி இல்லைங்க ஐயா. இதெல்லாம் கீழ போட்டுருங்கல்ல நைட்டு.  நைட் மண்ணுல ஊற வச்சு, இது பண்ணிட்டு, மூடிட்டு, மண்ணுல எப்படி மூடணும்? அதுக்கெல்லாம் க்ளோஸ் பண்ணனும். 


அடியவர் :- ஓ….


சுவடி ஓதும் மைந்தன் :-  க்ளோஸ் பண்ணிட்டு, மூடிட்டு, காலையில வெறும் வயித்துல சாப்பிடணும் என்றார் ஐயா.

 

அடியவர் :- அந்த மூலிகை (தண்ணீர்) எடுத்து சாப்பிடணும். அதானே? 

 

சுவடி ஓதும் மைந்தன் :- (மூலிகை )    தன்னில் , ஆமா. 


போகர் சித்தர் வாக்கு:-  இதைத்தன்  அறிய , நிச்சயம் தன்னில் கூட, பின் அருந்திட வேண்டும்.  சிறப்பு. 


சுவடி ஓதும் மைந்தன் :- அந்த   தன்னில் இருக்குல்ல, அதுல வந்து, எல்லாம் இடிச்சு,   தன்னில் எல்லாம் மூடும் இல்லைங்க ஐயா, வந்து, அப்ப நீங்க அந்த   தன்னில் குடிக்கணும். 


ஒரு அடியவர் :-  தண்ணிய ஊத்தணுமா?.  


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா,  ( மீண்டும் கேளுங்கள் ) 


ஒரு அடியவர் :-   தண்ணிய ஊத்தணுமா?.  


சுவடி ஓதும் மைந்தன் :-   தண்ணிய ஊத்தணும். அருந்திட வேண்டும்னா என்னது, தண்ணிய ஊத்தணும்.

 

ஒரு அடியவர் :-  ( கேள்வி..ஆடியோ தெளிவில்லை இவ்விடத்தில் வெகு தூரம் இருந்து கேள்வி கேட்டதால்… ) 


அடியவர் :-  மண்ணு போகாத மாதிரி பண்ணணுங்க அம்மா?

 

மற்றொரு அடியவர் :-  ( கேள்வி.. ஆடியோ தெளிவில்லை இவ்விடத்தில் வெகு தூரம் இருந்து கேள்வி கேட்டதால்… ) 

 

அடியவர் :-  ஆமா, மேல மண்ணை மூடணும். பட்டு, அந்த தண்ணி மூலிகைக்குள்ள மண்ணு கலக்க கூடாது.

 

சுவடி ஓதும் மைந்தன் :-  கலக்க கூடாது. நல்லா ஒரு க்ளோஸ் பண்ண மாதிரி இருக்கணும். 


மற்றொரு அடியவர் :-  ( கேள்வி.. ஆடியோ தெளிவில்லை இவ்விடத்தில் வெகு தூரம் இருந்து கேள்வி கேட்டதால்… ) 

 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா,  க்ளோஸ் பண்ண மாதிரி இருக்கணும். ஐயா.

 

அடியவர் 2 :-  ஒரு துணி போட்டு மூடிட்டு, அது மேல மண் வைக்கணும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  அவ்வளவுதான்.

 

அடியவர்  :- ஆமா.


மற்றொரு அடியவர் :-  ( கேள்வி.. ஆடியோ தெளிவில்லை இவ்விடத்தில் வெகு தூரம் இருந்து கேள்வி கேட்டதால்… ) 

 

அடியவர்  :-  அம்மா….குடுவைக்குள்ள குடுவை.

 

போகர் சித்தர் வாக்கு:-  எதை, ஏது என்று புரிய.

 

அடியவர்  :-   குடுவைக்குள்ள குடுவை.

 

சுவடி ஓதும் மைந்தன் :-   அம்மா, நல்லா புரிஞ்சுக்கோங்க, ஒன்னும் இல்ல.

 

அடியவர்  :-   ஐயா, அதான் குடுவைக்குள்ள குடுவைங்க ஐயா. ஒரு பெரிய குடுவை, அதுக்குள்ள ஒரு சின்ன குடுவை. அந்த சின்ன குடுவைக்குள்ள மூலிகை எல்லாம் போட்டு, அதுக்கு மேல வந்து, துணியால மூடிட்டு, அதுக்கு மேல அந்த பெரிய குடுவையில, தண்ணி, மண்ணை நிரப்பிடுங்க.

 

மற்றொரு அடியவர் :-  ( கேள்வி.. ஆடியோ தெளிவில்லை இவ்விடத்தில் வெகு தூரம் இருந்து கேள்வி கேட்டதால்… ) 


அடியவர்  :-   மண்ணு, மணல்.

 

சுவடி ஓதும் மைந்தன் :-   மணல். அது மூடிட்டு, காலையில வந்து, அது ஓபன் பண்ணிட்டு, அந்த தண்ணி எல்லாம் ஊறி இருக்குல்ல, வந்து, தண்ணி ஊறி, காலையில வந்து குடிக்கணும்.

 

அடியவர்  :-   அந்த சின்ன குடுவையை எடுத்துட்டு, அதுல இருக்குற மூலிகை தண்ணிய குடிக்கணும்.

 

சுவடி ஓதும் மைந்தன் :-   புரியுதுங்களா? 


போகர் சித்தர் வாக்கு:-   இதனால் சில ஆற்றல்கள் பெருகும். 


சுவடி ஓதும் மைந்தன் :- இதனால் என்ன ஆகும்?

 

அடியவர்  :-  சில ஆற்றல்கள் பெருகும்.

===============================================

# “ஓம்  ரீம்  கிரீம் சௌம்  சரவணபவ”  -  108 முறை.

===============================================


https://youtu.be/PKohTFGg6R8?t=32914


போகர் சித்தர் வாக்கு:-   உடம்பில் உள்ள சில சில நோய்களும் பின் போகும். 


போகர் சித்தர் வாக்கு:-  அவ்வாறு எதை என்று அறிந்தும், இவ்வாறாகவே, இதற்கு தகுந்த நிச்சயம் தன்னில் அறிந்தும், முருகனை நிச்சயம் நினைத்தே, பின் 


போகர் சித்தர் வாக்கு:-  ******  ஓம்  ரீம்  கிரீம் சௌம்  சரவணபவ  ******


போகர் சித்தர் வாக்கு:-  எனும் மந்திரத்தை, பின் சரியாக 108 முறை செப்பி, இதனை அருந்திட வேண்டும்.

 

அடியவர்  :-   அதான், முருகர்  மந்திரம் சொல்லியிருக்காங்க. 

 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதை வந்து எடுத்துட்டு, இங்க வச்சிட்டு, அதுக்குள்ள மந்திரம் சொல்லணும்.

 

அடியவர்  :-    ஒரு 108 முறை….. உருவேத்தணும்.

 

சுவடி ஓதும் மைந்தன் :- உருவேத்தி, அப்புறம் நீங்க சாப்பிடணும் அந்த தண்ணிய. 


https://youtu.be/PKohTFGg6R8?t=32948



போகர் சித்தர் வாக்கு:-  இதைத்தன் அறிய, இவைத்தன் வாரத்திற்கு இரண்டு நாட்கள். பின் மீதியும் அகத்தியன் சொன்னது போலே, 


சுவடி ஓதும் மைந்தன் :-  இது வாரத்துல… அந்த காயின் வந்து… ரெண்டு தடவை பயன்படுத்தணும். மீதி அகத்தியன் சொல்றபடி என்ன பண்ணிடுங்க? 

 

அடியவர்  :-   விளக்குல வச்சு.

 

சுவடி ஓதும் மைந்தன் :-  விளக்குல வச்சு? 

 

அடியவர்  :-  பயன்படுத்திக்கலாம்.

 

சுவடி ஓதும் மைந்தன் :-  பயன்படுத்திக்கணும். 


போகர் சித்தர் வாக்கு:-  எதை, இவை  அறிய , பின் செப்பிவிட்டேன். இன்னும் ஞானங்கள் பெற, நிச்சயம் செப்புவேன். பின் சரியாக உபயோகித்துக் கொண்டாலே நன்று. 


சுவடி ஓதும் மைந்தன் :-   திருப்பியும் இன்னும் ஞானம் பெற, சில ஆரோக்கியங்கள் பெற, சில உண்மைகள் தெரிய, திருப்பி நான் என்ன சொல்லுவேன்?

 

அடியவர்  :-  இன்னும் நிறைய விஷயம் சொல்றேன்.

 

சுவடி ஓதும் மைந்தன் :-   நிறைய சொல்லுவேன். ஆனா நீங்க இதை பயன்படுத்திக்கோங்க.

 

அடியவர்  :-  இதை பயன்படுத்திக்கோங்கப்பா, முறையா.


https://youtu.be/PKohTFGg6R8?t=32983

 

போகர் சித்தர் வாக்கு:-  ஒவ்வொரு எதை சித்தனும் தெரிவிக்கும் பொழுது, அதை அப்படியே பின் ஏற்று நடந்தால், வெற்றி நிச்சயம் உண்டு.

 

அடியவர்  :-   இதை போகர் தெரிவிக்கிறாரு. இந்த மாதிரி ஒவ்வொரு சித்தர்கள் வந்து சொல்லுவாங்க. அதை தெரிஞ்சு நீங்க உணர்ந்து செஞ்சீங்கன்னா, வெற்றி உங்களுக்குன்றாரு.

 

போகர் சித்தர் வாக்கு:-  அதன் பின்னே, அன்பானவன், அதாவது குழந்தை, நிச்சயம் உங்களுக்கு ஆசீர்வாதங்கள் தேவையானதை கொடுப்பான். 


அடியவர் :- சிவாய நம. நிச்சயமா,  முருகப்பெருமான் 


சுவடி ஓதும் மைந்தன் :-   என் குழந்தை, குழந்தை முருகப்பெருமான்? 


அடியவர் :-  உங்களுக்கு தேவையானதை கொடுப்பார். 


போகர் சித்தர் வாக்கு:-  இன்னும் பல விஷயங்கள் அடங்கி இருக்கின்றது. அவையெல்லாம் பின் மனிதனுக்கு, மனித குலத்திற்கு, எடுத்து வந்தாலே போதுமானது. மனிதன் பிழைத்துக் கொள்வான். நிச்சயம் விரும்பியதை அடைந்திடுவான்.

 

அடியவர் :- இன்னும் பல விஷயங்கள் இருக்குப்பா. மனித குலத்துக்கு தேவையான விஷயங்கள் எல்லாம், அதை நாங்க கொண்டு வந்தா, நீங்க பொழைச்சுப்பீங்கன்றாங்க.

 

போகர் சித்தர் வாக்கு:-  இதைத்தன் இவ்வாறாக இன்று இல்லை என்றால், நிச்சயம் மனிதன் பேரழிவை பின் சந்திக்க, எதை என்று, இதனால் நிச்சயம் இவ்வாறாக, எதை என்று புரிய, மனிதனை உருவேற்ற வேண்டும். இதற்காகத்தான் இவ்வளவு.

 

அடியவர் :- மனிதனை உருவேத்தணும்பா. எப்படி ஒரு மந்திரம் சொல்லி உன்னை உருவேத்துறோமோ, அதேபோல மனிதனை உருவேத்தணுமாம்.


===============================

#  எப்போது கலியுகம் முற்று ? 

===============================


போகர் சித்தர் வாக்கு:-  இதனால் கலியுகத்தில் இன்னும் நதிகளில் பின் நீர் பெருக்கி, எதை பின் அழியும். அதாவது பின் யமுனா நதிக்கரையில், நிச்சயம், அதாவது நதி தன்னில் கூட, பின் அதாவது பலம் வாய்ந்த, நிச்சயம் பின் நீர் வந்துவிட்டால், கலியுகம் முற்று என்று பொருள்.

 

அடியவர் :-  சிவாய நம. ஒரு ஒரு க்ளூ கொடுக்குறாங்க.

 

சுவடி ஓதும் மைந்தன் :-  யமுனா.

 

அடியவர் :-  யமுனா நதி கரை இருக்குல்ல.

 

சுவடி ஓதும் மைந்தன் :-  யமுனா.

 

அடியவர் :-  அந்த யமுனா நதி வந்துச்சு, நீர் வந்துச்சு.

 

சுவடி ஓதும் மைந்தன் :-  பலமா வந்துச்சுன்னா.

 

அடியவர் :-  கலியுகம் முற்றும்ன்னு சொல்றாங்க.

 

சுவடி ஓதும் மைந்தன் :-  கலியுகம் வந்து.

 

அடியவர் :-  முட்டுறதுன்னு சொல்றாங்க.

 

போகர் சித்தர் வாக்கு:-   இதைத்தன் நிச்சயம் தன்னில் கூட அழகாக இதை எழுத்துரைத்தானே, எப்பொழுதோ கிருட்டிணன்…. இதையும் மறைத்து வைத்துவிட்டார்கள்.

 

அடியவர் :-   கிருஷ்ண பெருமான் சொல்லி இருக்காரு.

 

சுவடி ஓதும் மைந்தன் :-  கிருஷ்ண பரமாத்மா சொல்லி இருக்கார். எப்பெல்லாம் வந்து.. அதிகமா வந்து….

 

அடியவர் :-   அந்த  ஆற்று…..

 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்படி இல்ல, எப்ப அதான் உலகத்துல அநேகங்கள் நிறைய வரும்பொழுது, இந்த ஆறுல தண்ணி வந்துரும். அது வந்து என்ன, அதுக்கூட சாட்சி என்ன தெரியுங்களா? எல்லாம் அழிச்சிட்டு போயிடும். அதனோட சாட்சி வந்து கலியுகம் ?.

 

அடியவர் :-   அழியப்போகுது.

 

சுவடி ஓதும் மைந்தன் :-  முற்று.

 

அடியவர் :-  முற்று, அவ்வளவுதான்.

 

சுவடி ஓதும் மைந்தன் :-  முற்று. 


https://youtu.be/PKohTFGg6R8?t=33099



போகர் சித்தர் வாக்கு:-  இதைத்தன் அறியாத பின் மூடர்கள் இன்னும் இருக்கின்றார்கள். இதனால் பின் இவை அறிய, பின் செய்க. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இன்னும் அறியாத? 

 

அடியவர் :-   மூடர்கள்.

 

சுவடி ஓதும் மைந்தன் :-  இருக்கின்றார் வந்து…. நீங்க ( இந்த செப்பு நாணய வழிபாட்டை ) அறிந்து? 

 

அடியவர் :-   ( இந்த செப்பு நாணய வழிபாட்டை ) செய்யுங்கன்றாங்க.


===============================

#  எப்போது இறைவன் உங்கள்  அருகிலே இருப்பார் ?

===============================

ttps://youtu.be/PKohTFGg6R8?t=33114


போகர் சித்தர் வாக்கு:-  இவ்வாறாக ஒவ்வொன்றையும் யாங்கள் பின், அதாவது செப்பியதை அறிந்து செய்வதனாலே, வாக்குகளும் உண்டு. நீங்களும் பின் மனமார, நல்விதமாகவே, நல்விதமாகவே வாழ்ந்து, மற்றவர்களும் வாழ வைக்கலாம். மற்றவர்கள் எப்பொழுது வாழ வைக்கின்றீர்களோ, அப்பொழுதே இறைவன் உன் அருகிலே இருப்பான்.

 

அடியவர் :-   நாங்க சொல்றத வந்து.. நீங்க உணர்ந்து செஞ்சீங்க அப்படின்னா… நீங்க பிழைச்சுக்கலாம்பா. நீங்க எல்லாத்தும் வந்து பிறரையும் நீங்க இதை எடுத்து சொல்லி, அவங்களையும் பிழைக்க வைக்கலாம்.

https://youtu.be/PKohTFGg6R8?t=33136


(நேரலை பார்த்துக்கொண்டு இருந்த ஒரு அடியவர் அலைபேசியில் அங்கு உள்ள ஒரு அடியவரிடம் கேட்ட  கேள்வி ) 


அடியவர் 3 :-  பாலில் இருந்து பிரித்து எடுத்த பொருள் நெய்யா? தயிரா ? என்று ஒரு அடியவர் கேள்வி கேட்கின்றார்?

 

போகர் சித்தர் வாக்கு:-  எதை, ஏது என்று புரிய, அறிய, புரிந்து கொள்ளுங்கள். இவைத்தன் அறிய, கடைசியாகவே. 


சுவடி ஓதும் மைந்தன் :-   ஐயா, மோரு.

 

அடியவர் 3 :- ஐயா  மோர்.  மோருங்க ஐயா ( அலைபேசியில் பதில் தெரிவித்தார்) .

 

போகர் சித்தர் வாக்கு:-  இதைத்தன் இவ்வாறாகவே, நிச்சயம் செய்க. நன்று. மீண்டும் தெளிவாக விளக்கத்துடனே அகத்தியன் செப்புவான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, யாருக்காவது சந்தேகம் இருக்குதா?

 

அடியவர்  :-செயல்முறை சொல்லி இருகாங்க….

 

சுவடி ஓதும் மைந்தன் :-  தெளிவா அகத்தியரே  சொல்லுவாராம் இதை பத்தி.

 

அடியவர்  :- இந்த செயல்முறை சொல்லி இருக்காங்க. இதை எல்லாரும் கரெக்டா செய்யுங்கன்னு இருக்காங்க.

 

சுவடி ஓதும் மைந்தன் :-   புரியுதுங்களா? 


===============================

#  அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு.

===============================

( இப்போது குருநாதர் வாக்கு ஆரம்பமானது ) 


https://youtu.be/PKohTFGg6R8?t=33169


குருநாதர் :- அப்பனே, இன்னும் ரகசியங்கள் பல பல. போகன் எழுத்துரைப்பான் அப்பனே.


குருநாதர் :-  ஏனென்றால் உலகத்தில் அழிவுகள் பின் பலம்.  பலம் என்பேன் அப்பனே. 


குருநாதர் :- இதை பயன்படுத்திக் கொள்க. அப்பனே, இன்னும் அப்பனே, பின் ரகசியங்கள் நிச்சயம் தன்னில் கூட அழகாக. அப்பனே, போகன் பின் எழுத்துரைப்பான் என்பேன் அப்பனே. நிச்சயம் தன்னில் கூட. 


குருநாதர் :-  அப்பனே, இவை செய்தாலே போதுமானதப்பா. 


குருநாதர் :- பல மாற்றங்கள் ஏற்படும். 


குருநாதர் :-  அதை தவிர்த்துவிட்டு, அப்பனே, அவை இவை இவ்வளவு பின் இவ்வளவு கஷ்டங்கள் என்று சொன்னால், அப்பனே, எப்படி அப்பா? 

===============================

# காகபுசண்டர் சித்தர் வாக்கு!

===============================

# உயிர் காக்கும் சிவபுராணம் 

===============================

# சித்தர்கள் ஆட்சி - 722 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - 12.08.2026 அன்று அன்புடன் காகபுசண்ட மாமுனிவர் அருளிய கூட்டுப்பிரார்த்தனை குழுவினருக்கான ஞான பாடங்கள் வாக்கு - சிவபுராணம் என்பது என்ன? - பகுதி 1

https://siththarkalatchi.blogspot.com/2026/09/722.html 

===============================



குருநாதர் :- இதனால் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, நிச்சயம் சிவ, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட காப்பாற்றுவது எப்படி என்பதெல்லாம் சிவ, அப்பனே, புராணத்தை பற்றி புசண்டன் எடுத்துரைத்திருக்கின்றான் அப்பனே.  


குருநாதர் :- அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


அடியவர்  :-  சிவாய நம. அதாவது போகர் பெருமான் வந்து (வாக்கு சொல்லி முடித்துவிட்டாங்க). இப்ப அகத்திய பெருமான் வந்திருக்காங்க. அகத்திய பெருமான்சொல்றாங்க, போகர் பெருமான் சொன்னதை உணர்ந்து பயன்படுத்திக்கோங்க அப்படின்னு சொல்லி இருக்காங்க.


===============================

# கலியுகத்தில் அழிவுகளை தடுக்கும் ஒரே வழி.

# கூட்டு பிரார்த்தனையே சிறந்தது

===============================

https://youtu.be/PKohTFGg6R8?t=33215


குருநாதர் :-  அப்பனே, இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட அனைவரும் எதை என்று புரிய, ஒன்று கூடி, அப்பனே, பின் பக்தியை,  அன்பினை வெளிப்படுத்துங்கள். அப்பனே, 

குருநாதர் :- இறைவன் மனப்பூர்வமாக, அப்பனே, அனைவருக்கும் ஆசீர்வாதம் கொடுப்பானப்பா. 

குருநாதர் :- இல்லையென்றால், அப்பனே, நிச்சயம் அழிவுகள் தான். 

குருநாதர் :- வரக்கூடிய காலங்களில் அழிவுகள் தான், அப்பனே, அதிகம் உள்ளது என்பேன் அப்பனே. 

குருநாதர் :- அதை தடுப்பதற்கான ஒரே வழி, அனைவரையும் அப்பனே, பின் நிச்சயம் பின் கூட்டு பிரார்த்தனையே சிறந்தது என்பேன் அப்பனே. 


குருநாதர் :- நிச்சயம் அனைவரும் மனதையும் மாற்றி, அப்பனே, இறைவன் அப்பனே, பின் பக்தியை புகுத்தால், அப்பனே, நன்மை. இல்லையென்றால், தீயவை தான் நடந்து கொண்டிருக்கும்  அப்பனே.

ttps://youtu.be/PKohTFGg6R8?t=33245


ஒரு அம்மை அடியவர் :- அந்த மூலிகைகளை….( மேடையின் அருகில் வந்து சில சந்தேகங்கள் / கேள்விகள் கேட்டார்கள் ) 


சுவடி ஓதும் மைந்தன்,    அடியவர்  :-   ( விளக்கம் அளிக்க ஆரம்பித்தார்கள் ) .

 

( இதன் பின்னர் பல வாக்குகள் குருநாதர் உரைத்தார்கள். அவை எல்லாம் பின்னர் பதிவுகளில் வரும்… இப்போது குருநாதர் உரைத்த கோமதி சக்கரம் வழிபாடு வாக்கு அதனை காண்போம்…..) 


===============================

# குருநாதர் உரைத்த கோமதி சக்கரம் வழிபாடு

===============================

- கோமதி சக்கரம் -


இவ்வாக்கின் நேரலை :-  https://youtu.be/PKohTFGg6R8?t=33281 


குருநாதர் :- எதை, ஏது என்று புரிய, அப்பனே, நிச்சயம்   தன்னில் கூட இவ்வாறாக அழகாக— பின் அதாவது பின் அவ்  சக்கரத்தை நிச்சயம்   தன்னில் கூட அழகாக ஒரு செப்பு பாத்திரத்தில் வைத்து, அப்பனே நிச்சயம் நீரை நிரப்புக. 


சுவடி ஓதும் மைந்தன் :-    அடுத்து….

  

அடியவர்  :-  அடுத்து கோமதி சக்கரத்தை எப்படி பயன்படுத்தணும்?

 

சுவடி ஓதும் மைந்தன் :-    கோமதி சக்கரத்தைப் பற்றி சொல்றார்—

  

அடியவர்  :-  அப்படின்னு சொல்றாங்க—

 

சுவடி ஓதும் மைந்தன் :-    சொல்லிட்டு என்ன பண்றாரு?

  

அடியவர்  :- ஒரு செப்பு பாத்திரத்தை எடுத்து…


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா ?


அடியவர்  :-  செப்பு பாத்திரம்—

 

அடியவர் 2 :-   செப்பு பாத்திரத்துல நீரை நிரப்பணும், 


சுவடி ஓதும் மைந்தன் :-  நீரை நிரப்பி? 

  

அடியவர்  :-  செப்பு பாத்திரத்தை எடுத்து , நீரை நிரப்பி கோமதி சக்கரத்த அதுக்குள்ள வச்சு நீரால நிரப்புன்னு இருக்காங்க


குருநாதர் :-  அப்பனே, சரியாகவே, அப்பனே, நிச்சயம் எதை என்று புரிய, அப்பனே, ஒரு புல்லை — அப்பனே, நிச்சயம்   தன்னில் இவ்வாறாக— அப்பனே, கையில் பிடித்துக்கொண்டு— அப்பனே, பின் நிச்சயம் எதை என்று கூற— மறுமுனை, அப்பனே, பின் நீரில் இருக்கட்டும்.


சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு புல் இருக்குல்ல?

  

அடியவர்  :-  புல், கிராஸ், ஓகே? 

 

சுவடி ஓதும் மைந்தன் :- என்ன புல்?

  

அடியவர்  :-   அருகம்புல் தானே? புல்னா? 

 

சுவடி ஓதும் மைந்தன் :- தர்பை.

  

அடியவர்  :-  தர்பை

 

சுவடி ஓதும் மைந்தன் :- தர்பை, அதை எடுத்து….

 

அடியவர்  :-  தர்பை, தர்பை. ஒகே.

  

சுவடி ஓதும் மைந்தன் :- புல்லா தர்பை அதுதான்.

 

அடியவர்  :-  தர்பை. 

  

சுவடி ஓதும் மைந்தன் :- அதை எடுத்து, தண்ணில….

 

அடியவர்  2 :- ஒரு முனையில தண்ணீர் 

  

சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு முனையில ஒரு கை…

 

அடியவர்  :- கரண்ட் கம்பி மாதிரி…

  

சுவடி ஓதும் மைந்தன் :- கரண்ட் கம்பி… அதுல விடணும்..

 

அடியவர்  :- ஒரு முனை தண்ணீரிலே , இன்னொரு முனையை கையில பிடிச்சுக்கணும். 


https://youtu.be/PKohTFGg6R8?t=33339

  

குருநாதர் :-  அப்பனே, சரியாக, அப்பனே, நிச்சயம் பிரார்த்தனை செய்யுங்கள், இறைவனை நோக்கி அப்பனே. என்ன வேண்டும் என்று அப்பனே, நிச்சயம்   தன்னில் கூட.

குருநாதர் :- அப்பனே, அவ் சக்கரத்திற்கு அவ்வளவு மதிப்பு என்பேன்  அப்பனே.  

குருநாதர் :-  நிச்சயம் தீங்குகள் செய்யக்கூடாது. 

குருநாதர் :-   அப்பனே, சுத்தமாக இருக்க வேண்டும். 

குருநாதர் :-  அப்பனே, பின் நிச்சயம்   தன்னில் கூட  பின் கோபம், பின் அதாவது, நிச்சயம் பல வகையில் கூட பின், அதாவது, போட்டி, பொறாமைகள் தவிர்த்திட வேண்டும். 

குருநாதர் :- அப்பனே, நல் மனதோடு செய்ய வேண்டும். 

குருநாதர் :-   இல்லையென்றால், எதிர்மறையாக செயல்படும் என்பேன் அப்பனே  உங்களுக்கு.

 

அடியவர்   :- சிவாயநம !!!!! 

  

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, அது செய்யும் பொழுது….

 

அடியவர்   :-  ஜாக்கிரதையா இருக்கணும்.

  

சுவடி ஓதும் மைந்தன் :- ஜாக்கிரதையா செய்யணும்— நல்ல எண்ணத்தோட…

 

அடியவர்   :-  தீய எண்ணங்கள் இருக்கக்கூடாது…

  

சுவடி ஓதும் மைந்தன் :- தீய எண்ணங்கள் இருக்கக்கூடாது…


அடியவர்   :-  பொறாமை இருக்கக்கூடாது. இல்லன்னா திருப்பி அடிச்சிடும்.

  

சுவடி ஓதும் மைந்தன் :- திருப்பி என்ன ஆயிடும்? 

 

அடியவர்   :-  நெகட்டிவ் ஆயிடும்.

  

சுவடி ஓதும் மைந்தன் :- ரிவர்ஸ் ஆயிடும். உங்களுக்கு அகத்தியர் என்ன சொல்றாருன்னா, தேவையானது கிடைக்கிறது தான் அது வந்து..

 

அடியவர்   :-  ஆமா.

  

சுவடி ஓதும் மைந்தன் :-  அதை வச்சு…கரெக்டா… நீர்ல வச்சு, நீங்க வந்து…

 

அடியவர்   :-  கேட்டதை கொடுக்கும்—

https://youtu.be/PKohTFGg6R8?t=33385

  

குருநாதர் :-   அப்பனே, சரியாக, பின் அதாவது, அப்பனே, பின் சுக்கிர வாரத்திலும் அப்பனே, நிச்சயம் எதை சோமவாரத்திலும் அப்பனே, அதை தன்  நல் பூஜிக்க வேண்டும் அப்பனே, நிச்சயம் எவை நாராயணனாகவே நினைத்து. 

 

அடியவர்   :- பாருங்க, பெருமாளை நினைச்சு, சுக்கிரவாரம், சோமவாரம், திங்கட்கிழமை, வெள்ளிக்கிழமையும் நாம அதை—

  

சுவடி ஓதும் மைந்தன் :-  நல்லா வந்து? 

 

அடியவர்   :- பூஜை செய்யணும்ன்றாங்க.

  

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் மாமிசத்தை பின் ஏற்கக்கூடாது. சொல்லிவிட்டேன்.

 

சுவடி ஓதும் மைந்தன் :-  கண்டிப்பா?

  

அடியவர்   :-  மாமிசம் எடுக்கக்கூடாது.

 

சுவடி ஓதும் மைந்தன் :-  மாமிசம் எடுக்கக்கூடாது.

  

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் கேட்டதெல்லாம் பின் கொடுக்கும் சக்திகள்— அப்பனே, இன்னும்— அப்பனே, நிச்சயம் பின் எவை என்று இருக்கின்றது என்பேன்— அப்பனே. 


அவை ஒவ்வொன்றாக பயன்படுத்திக் கொண்டால்— அப்பனே, உங்கள் தரித்திரமும் மறையும். கேட்டதும் கிடைக்கும் என்பேன் அப்பனே.அனைவரும் போல் அப்பனே, பின் வாழலாம் என்பேன் அப்பனே, சொல்லிவிட்டேன். 


https://youtu.be/PKohTFGg6R8?t=33429 


( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 27/09/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த  13 வது சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …..) 



ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.

No comments:

Post a Comment