“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Friday, September 25, 2026

சித்தர்கள் ஆட்சி - 745 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - 22/09/2026 அன்று தண்ணீர்மலை மலேசியாவில் நடந்த கூட்டுப்பிரார்த்தனை சத்சங்க வாக்கு - பகுதி 1

 இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும். இறைவா, எங்களை நன்றாகப் படைத்தாய்! அனைத்தையும் நன்றாகக் கொடுத்திருக்கின்றாயே! இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!! 








அன்பு அன்னை லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகள் போற்றி! போற்றி!! போற்றி!!!! 


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால்  22/09/2026  அன்று தண்ணீர்மலை மலேசியாவில்  நடந்த   கூட்டுப்பிரார்த்தனை சத்சங்க வாக்கு - பகுதி 1


தேதி: 22 செப்டம்பர் 2026

நாள்: செவ்வாய்க்கிழமை

நேரம்: மாலை 5:30pm


வாக்குரைத்த ஸ்தலம் : தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தானம், பினாங்கு (Waterfall Sri Balathandayuthapani Devasthanam, Penang) 


Google map link :- https://maps.app.goo.gl/3jg3bAzZfzWwpjvNA 



கூட்டுப்பிரார்த்தனை ஒருங்கிணைப்பாளர்கள்:- தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தானம், பினாங்கு மற்றும் AGATHIYAR UNIVERSAL MISSION, Kuala Lumpur, Malaysia 


===========================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 

===========================


ஆதி சிவசங்கரியின் பொற்  கமலத்தை பணிந்து, செப்புகின்றேன் அகத்தியன். 


அம்மையே , அப்பனே , எவை என்று புரிய, நிச்சயம் அனைவரையும் பின் பார்த்திருக்கின்றேன் பல திருத்தலங்களில்.  எவை என்று  பின் லோபாமுத்திரையோடு எம்முடைய ஆசிகள். 


சுவடி ஓதும் மைந்தன் :-  (உங்க) எல்லாரையும் அகத்தியர்  பார்த்திருக்கின்றாராம்  வந்து ஒரு திருத்தலத்துல. அதனால வந்து, லோபாமுத்திரையோடு…  எம்முடைய ஆசிகள். 


===========================

# இறைவனை எப்படி வணங்க வேண்டும் ?

===========================


குருநாதர்:-  ஏன்?  எதற்காக  இறைவனை வணங்குகின்றோம்?  என்றெல்லாம் தெரியாமலும் மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் இருக்கின்றான். இதனாலே  சில கஷ்டங்கள், மனிதனுக்கு பல வேதனைகள், பல துன்பங்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :-  இறைவனை ஏன் வணங்குகின்றோம் என்று தெரியாமலேயே…… மனிதன்… வணங்கிக் கொண்டிருக்கின்றான். 



குருநாதர்:-  இவைத்தன் அறிய, இதனால்தான் 


***** இறைவனை எப்படி வணங்க வேண்டும்? ***** 


எதை என்று புரிய…. 


***** மற்றவர்களுக்காகவே ***** 


எதை புரிய நிச்சயம் தன்னில் கூட 


***** இவ்வாறாகவே வணங்கினால் உனக்கு என்ன தேவையோ, அதை சரிமுறையாகவே கொடுப்பான். அவ்வளவுதான். ***** 



சுவடி ஓதும் மைந்தன் :-  இறைவன் எப்படி வணங்கனும்? மற்றவருக்காக வணங்கனும் அய்யா. மற்றவருக்காக வணங்குகின்ற பொழுது, உங்களுக்கு தானா இறைவன் என்ன கொடுக்க வேண்டுமோ…. ஐயா புரியுதுங்களா ஐயா ? மற்றவருக்காக நீங்கள் வணங்குகின்ற பொழுது, இறைவன் உங்களுக்கு என்ன கொடுக்க வேண்டுமோ, அதை வந்து கொடுப்பார். 


குருநாதர்:-  எதை தெரிவிக்க, இதனால் பின் நிச்சயம் தன்னில் கூட எவ்வாறாக பல விஷயங்கள் யான் உரைக்கப் போகின்றேன் இங்கு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  பல விஷயங்கள் யான் உரைக்கப் போகின்றேன் இங்கு. 


===========================

# கூட்டுப் பிரார்த்தனை ஆரம்பம்…..

===========================


குருநாதர்:-  இதனால் பின் நிச்சயம் அனைவரும் உலகத்தில் உள்ள அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று முருகனை எண்ணி, அனைவரும் பின் உங்கள் மனதில் என்ன ஏது என்று அறிய, பின் உங்களுக்கு நிச்சயம் தன்னில் கூட என்ன பாடல், பின் அனைவரும் பின் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட எவ்வாறு என்பதை எல்லாம் புரிந்து, முருகனை வேண்டிக்கொள்ளுங்கள். பின்பு யான் செப்புவேன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன சொல்றார் தெரியுங்களா? நீங்க உலகத்துக்காக எல்லாம் சொல்றாங்க இல்ல, எல்லாருக்கும் நல்லா இருக்க வேண்டும்… நன்மை பெற வேண்டும்…. உலகம் நல்லா இருக்க வேண்டும் என்று முருகனிடத்தில்…. வேண்டி… நீங்க உங்கள் மனசுல என்ன விருப்பமோ…. எல்லாரும் ஒன்னா சேர்ந்து அந்த பாடலை பாடி…. அப்பா எல்லாரும் நல்லா இருக்கனும் அப்பா என்று வேண்டிக்கிட்டு, நீங்க அந்த பாடலை பாடி, (முருகப்பெருமான்) அவரை சந்தோஷப்படுத்துங்க. அப்புறம் நான் வந்து சொல்றேன் என்று சொல்கின்றார் ஐயா.


அடியவர்:- வணக்கம் அய்யா…அகத்தியர் அப்பா  என்ன சொல்றாருன்னா, எல்லாரும் ஒரு மனதோடு ஒரு முருகனின் பாடலை…...

 

சுவடி ஓதும் மைந்தன் :-  நல்லா எல்லாரும் வேண்டிக்கிட்டு, அப்பா எல்லாரும் நல்லா இருப்போம்.  முருகா !!!!!!  எல்லாரும் உன்னோட பிள்ளைகள் தான், எல்லாருமே நல்லா இருப்போம். உன்னை கூப்பிட்டு, முருகனை வேண்டிக்கிட்டு, நீங்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு பாடலை பாட வேண்டும். நீங்களே முருகனை பாட… அகத்தியர் உங்க கையிலே கொடுத்திருக்கார்.

ஒரு அடியவர் :- (......)

 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா? 


ஒரு அடியவர் :- ( என்ன பாடல் என்று கேட்க )

 

சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன பாடல்? அகத்தியரே கேட்டுக்கலாம். 


===========================

# முருகப்பெருமான் கோபம் தணிக்கும் மகத்தான திருப்புகழ் பாடல் 

===========================


குருநாதர்:-  அப்பா, முருகன் கோபம் கொள்ளும் பொழுதெல்லாம், அருணகிரி மனமோடு பாடுவான். இதனால்…..


அடியவர்:-  முத்தைத்தரு பத்தித் திருநகை…. 

 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, முருகன் கோபமாக இருக்கும் பொழுதெல்லாம், அருணகிரி என்ன பண்ணுவாராம்?

 

அடியவர்:-  முத்தைத்தரு பத்தித் திருநகை அந்த பாடலை தான் பாடுவார்.

 

சுவடி ஓதும் மைந்தன் :-  பாடல் பாடி மனம் மகிழ வைப்பாராம்.



சுவடி ஓதும் மைந்தன் :- அதனால அது வந்து, அது பாடல். நீங்க பாடுங்கப்பா என்று சொல்கின்றார்  வந்து, அதனால பாடுங்க. எல்லாரும் சேர்ந்து பாடுங்க, ஐயா. எல்லாரும், ஐயா, எல்லாரும் நல்லா இருக்கணும். உலகம் நல்லா இருக்கணும். எல்லா பிரச்சனைகளோட, இத்தனோ பேர் பிரச்சனைகளோட வாழ்றாங்க. அதெல்லாம் தீர்த்து வைப்பா. உன்னால்  தான் முடியும். இறைவன் ஒரு நிமிஷம் வேண்டிக்கிட்டு, அவரை மகிழ்விக்கணும். ஒரு பாடல் பாடுகள், பின்பு அனைவரும் சொல்றாங்க, ஐயா. எல்லாம் கைதட்டி, நல்லா, எல்லாரும் நல்லா இருந்தா, கைதட்டி பாடுங்க.

 

அடியவர் :-  அய்யா இப்படி கைதட்டணும். 


சுவடி ஓதும் மைந்தன் :- முருகனை கேட்கட்டும். எல்லாரும் நல்லா இருக்கணும்.


( அடியவர்கள் அழகாக பாடல் பாட ஆரம்பித்தனர் ) 


முத்தைத்தரு பத்தித் திருநகை

     அத்திக்கிறை சத்திச் சரவண

          முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்


முக்கட்பர மற்குச் சுருதியின்

     முற்பட்டது கற்பித் திருவரும்

          முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்


பத்துத்தலை தத்தக் கணைதொடு

     ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு

          பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்


பத்தற்கிர தத்தைக் கடவிய

     பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்

          பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே


தித்தித்தெய ஒத்தப் பரிபுர

     நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி

          திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்


திக்குப்பரி அட்டப் பயிரவர்

     தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு

          சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்


கொத்துப்பறை கொட்டக் களமிசை

     குக்குக்குகு குக்குக் குகுகுகு

          குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை


கொட்புற்றெழ நட்பற் றவுணரை

     வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி

          குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.


 ( பாடல் முடிந்தவுடன் )


===========================

# சிவபுராணம் ஓதுக

===========================


அடியவர் :-  ஐயா, மைக் கொடுங்க…


அடியவர்கள் :- ( மைக் கொடுத்தனர்) 


குருநாதர்:- அப்பனே , ஈசனை நினைத்து , அப்பனே , அனைத்து, அப்பனே, நிச்சயம் தன்னில் அனைத்தும் உயிர்களும்  நன்றாக இருக்க வேண்டும் என்று அப்பனே பின் அதாவது  அதாவது சிவபுராணம் ஓதுக.

 

அடியவர் :-   ஐயா, என்ன சொல்றாருன்னா, எல்லாரும் சிவபுராணம் பாடுங்கள் என்று உரைக்கின்றார்.

 

சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாரும்  சிவபுராணம் பாடுங்க…. நமச்சிவாய, வாழ்க….எல்லாரும் பாட சொல்றாங்க. எல்லாரும் பாடுங்க.

 

அடியவர் :-   ஐயா, இதை எல்லாரும் சேர்ந்து பாடுங்க.

 

சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாரும் சேர்ந்து பாடுங்க.

 

அடியவர் :-   ஐயா, பாடுங்க.

 

( அடியவர்கள் திருவாசகம் ஓத ஆரம்பித்தனர்….)


நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!

இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!

கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!

ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!

ஏகன், அநேகன், இறைவன், அடி வாழ்க! 

………….

………….

………….

( கருணை கடல் இறைவன் , கர்மங்களை நீக்கும் மகத்தான சிவபுராணம் பாடி முடித்த பின்னர் வாக்குகள் அருளினார்கள்….) 


சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, படிக்கிறேன்…. 


===========================

# கலியுகத்தில் மறைக்கப்பட்ட இறைவனுடைய பல வரலாறுகள்.. 

===========================


குருநாதர்:- இதைத்தன் அறிய, எவ்வாறு என்பதை கூட, பல பல திருத்தலங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி பின் தெரியாமல் வணங்கினாலும் ஆசிகள் எதை என்று புரிய  நீங்களே புரிந்து கொள்ளுங்கள். கிடைப்பதில்லை. 


சுவடி ஓதும் மைந்தன் :-  எப்பவுமே ஒவ்வொரு திருத்தலத்துக்கும் ஒரு வரலாறு உண்டு. அந்த வரலாறு வந்து தெரிந்து கொண்டு இறைவனை வணங்கனும். அப்படி இல்லை என்றால் முழு பலனும் நம்மளுக்கு கிடைக்காதுன்றார் . ஐயா, புரியுதுங்களா? 


குருநாதர்:- இதைத்தன் அறிய இன்னும் பல வரலாறுகள், இறைவனுடைய வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது. 


குருநாதர்:- ஏனென்றால் கலியுகத்தில் இவையெல்லாம் மனிதனுக்கு தெரிவித்தால் பின் அதாவது மனிதன் பிழைத்துக் கொள்வான் என்று, பல பின் நிச்சயம் தன்னில் கூட, எவை என்று அறிய, பின் பல பல மானிடர்களே  பின் சுவடியில் எழுத்து மூலம் எழுதி வைத்துள்ள அனைத்தும் நிச்சயம் எங்கெங்கேயோ தூக்கியும் (பதுக்கியும்) இன்னும் சிலர் திருடியும்… இன்னும் சிலர் நெருப்பில் இட்டும் கூட.  


குருநாதர்:- ஆனாலும் கலியுகத்தில் அவையெல்லாம் யாங்கள் எழுதி வைத்ததை எல்லாம் இப்பொழுது யாம்   சொல்லப் போகின்றோம்.

 

அடியவர்:- ஐயா, என்ன சொல்றாருன்னா பல திருத்தலங்களுடைய உண்மை வரலாறுகளை வந்து மறைத்து விட்டார்கள். ஐயா, கேக்குதுங்களா?

 

அடியவர்கள் :- கேக்குது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  பல திருத்தங்கள்…. கலியுகத்தில் வந்து மனுஷன் எல்லாம் வந்து… ரொம்ப அழிவுகள் சந்திப்போம்னு சொல்லிட்டு வந்து… நிறைய சித்தர்கள் ஓலைச்சுவடியில எழுதி வச்சாங்க. ஆனா மனிதர்களே என்ன பண்ணாங்க வந்து? அதெல்லாம் மனிதருக்கு போய் சேரக்கூடாது. மனிதன் பிழைத்துக்கொள்வான்.   மனிதனே என்ன பண்ணிட்டாங்க?  சில பேர் வந்து திருடிட்டு போயிட்டாங்க. எங்கேயோ சில பேர் கடலையும் போட்டாங்க. சில பேர் எரிச்சிட்டாங்க. ஆனால் நாங்கள் கலியுகத்தில்  அதெல்லாம்…. என்ன எழுதி வச்சோமோ அதெல்லாம் மீண்டும் மக்களுக்கு?  


அடியவர்:-  எடுத்துரைக்க போகிறார்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :-  எடுத்துரைக்க போகின்றோம்… என்று சொல்லிட்டு திருப்பி வந்து அகத்திய பெருமான் சொல்றாங்க. 


===========================

# இறைவன் நாமத்தை  செப்புகின்ற பொழுது அவ்  பாவங்கள் கரைந்து புண்ணியமாக போகும்.  

===========================


குருநாதர்:-  அப்பனே,  ஏன் இந்த பாவம்  எதை என்று புரிய…. ஆனாலும் ஒவ்வொரு எதை என்று கூற அப்பனே நிச்சயம் தன்னில் கூட அனைவருக்குமே சில பாவங்கள் உண்டு. ஆனால் இறைவன் நாமத்தை  செப்புகின்ற பொழுது அவ்  பாவங்கள் கரைந்து புண்ணியமாக போகும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாரும் வந்து ஒரு பாவத்தோடதான் இந்த உலகத்துக்கு வரணும் என்று சொல்றார். புண்ணியம் இருக்குது. அகத்தியர் என்ன சொல்றாருன்னா…. எல்லாரும் ஒரு பாவத்தோடு வரணும். அந்த பாவத்தை கரைக்கணும்னா….. இறைவனுடைய வரலாறுகளை? 


சுவடி ஓதும் மைந்தன் :-  நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 


குருநாதர்:-  இவ்வாறாக பல ஞானிகள் (நாமத்தை, வரலாற்றை) பின் தெரிவித்து அதாவது தெரிந்து கொண்டால் நிச்சயம் தன்னை கூட புண்ணியங்கள் சேரும்.


அப் புண்ணியம் பலத்தால் நீங்கள் மற்றவர்களையும் காப்பாற்றலாம். அதைத்தான் நாங்கள் சொல்ல வந்தோம்.

 

அடியவர் :- அவர் என்ன சொல்றாருன்னா இங்க நிறைய ஞானிகள் இருக்காங்க. அவர்கள் உண்மை வரலாற்றை தெரிந்து கொண்டு, அவர்கள் நினைத்தாலே வந்து… அது உங்களுக்கு புண்ணிய பலனாக மாறும் அப்படிங்கிறாங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா புரியுதுங்களா ?


அடியவர் :- இப்ப வர்ற வழியில தாப்பால வந்து ஜெகநாத் சுவாமிகள் இருக்காரு. 


===========================

google link :-  https://maps.app.goo.gl/2mTvwx6cXkEci2dEA

(ஜெகநாதர் சுவாமிகள் வட இந்தியாவின் பூரி நகரில் 1814-ல் பிறந்து, மலேசியாவிற்குப் புலம்பெயர்ந்து வாழ்ந்த ஒரு மகா சித்தர் ஆவார். ) 

===========================


அடியவர் :- (ஜெகநாத் சுவாமிகள்) அவருடைய உண்மை வரலாறு என்னன்னு உண்மையிலேயே தெரிஞ்சுக்கிட்டு நீங்க அவங்க வணங்குனீங்கன்னா, அவருடைய நாமம் சொல்லும்போது, அதை அவர் இறை நாமமா மாற்றி, அதை உங்களுக்கு புண்ணிய பலனா மாற்றி, வழங்குவார். அப்ப உங்களுடைய பாவ கர்மா என்பது குறையும் அப்படின்னு சொல்கிறார்.


===========================

# முருகப்பெருமான் வருகையும்… தண்ணீர் மலையின் ரகசியமும்… ஆரம்பம்…

===========================

 

குருநாதர்:-  ஏன்?  எதற்காக?  முருகனைப் பற்றி இப்பொழுது சொல்ல போகின்றேன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஏன் எதற்காக இங்க முருகர். நான் முருகனைப் பற்றி முதல்ல சொல்லப்போறேன்….


(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 22/09/2026  அன்று தண்ணீர்மலை மலேசியாவில்  நடந்த   கூட்டுப்பிரார்த்தனை சத்சங்க வாக்குகள் தொடரும் ……. ) 




ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம். 


No comments:

Post a Comment