இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும். இறைவா, எங்களை நன்றாகப் படைத்தாய்! அனைத்தையும் நன்றாகக் கொடுத்திருக்கின்றாயே! இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!
அன்பு அன்னை லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகள் போற்றி! போற்றி!! போற்றி!!!!
அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 22/09/2026 அன்று தண்ணீர்மலை மலேசியாவில் நடந்த கூட்டுப்பிரார்த்தனை சத்சங்க வாக்கு - பகுதி 2
தேதி: 22 செப்டம்பர் 2026
நாள்: செவ்வாய்க்கிழமை
நேரம்: மாலை 5:30pm
வாக்குரைத்த ஸ்தலம் : தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தானம், பினாங்கு (Waterfall Sri Balathandayuthapani Devasthanam, Penang)
Google map link :- https://maps.app.goo.gl/3jg3bAzZfzWwpjvNA
கூட்டுப்பிரார்த்தனை ஒருங்கிணைப்பாளர்கள்:- தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தானம், பினாங்கு மற்றும் AGATHIYAR UNIVERSAL MISSION, Kuala Lumpur, Malaysia
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தை பணிந்து, செப்புகின்றேன் அகத்தியன்.
( பகுதி 1 …அதன் தொடர்ச்சியாக…)
===========================
# உங்கள் ஆற்றல்களை அதிகப்படுத்தி, வெல்லும் ரகசியங்கள்.
===========================
குருநாதர்:- இதைத்தன் அறிய, எவரும் அறிந்திலார். பின் இவ்வாறாக சில விஷயங்கள் பின் அறிந்து கொண்டால் தானாகவே உங்களுக்கு ஆற்றல்கள் ஏறும். அவ் ஆற்றல்கள் ஏறுகின்ற பொழுது உண்மை தன்மை புரியும். பின் அவ் உண்மை தன்மை புரிகின்ற பொழுது நிச்சயம் உங்களையே நீங்கள் வெல்வீர்கள். அவ்வளவுதான்.
அடியவர் :- ஐயா, என்ன சொல்றாருன்னா….ஒரு ஆலயத்துக்கு போனீங்கன்னா…
===========================
# தண்ணீர் மலை முருகப்பெருமான் ரகசியங்கள்…..
===========================
குருநாதர்:- இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட கூட எவ்வாறு என்பதை எல்லாம் இப்பொழுது…..
****** இவ் முருகனைப் பற்றி நிச்சயம் உங்களுக்கு எடுத்து, எடுத்து பின் சொல்லப் போகின்றேன். ******
****** பின் சொன்னால், சில ஆற்றல்கள் நிச்சயம், பின் முருகனே பின் எவை என்று புரிய, ஆற்றலை கொடுப்பான். ******
****** அதை வைத்துக்கொண்டு மீண்டும், மீண்டும் நன்மையை செய்யுங்கள் நீங்கள். ******
சுவடி ஓதும் மைந்தன் :- முருகனுடைய சில விஷயங்கள் தெரியாது இருந்தாலும், நான் உங்களுக்கு வந்து முருகனுடைய விஷயங்களை சொல்றேன். அது சொன்னாலே உங்களுக்கு வந்து என்ன ஆகும் வந்து?...
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு ஆற்றல் உங்களுக்கு கிடைக்கும். அந்த ஆற்றலை வைத்துக்கொண்டு நீங்களும் நல்லா இருங்க. மற்றவர்களையும்… மற்றவர்களுக்கும் நல்லது சொல்லிக் கொடுங்கப்பா என்று சொல்கின்றார் வந்து…
===========================
# சித்தர்கள் உங்கள் பின்னே எப்போது வருவார்கள் ?
===========================
குருநாதர்:- அப்பனே சித்தனுக்கு எவை என்று புரிய அப்பனே பின் ஒன்றேதான்.
****** அப்பனே தர்மம். ******
****** தர்மத்தை அப்பனே கடைபிடிக்க வேண்டும். ******
****** தர்மத்தை நிலைநாட்ட வேண்டும். ******
****** அவ்வளவுதான் என்பேன் அப்பனே. ******
****** இவ்வாறு யார் ஒருவன் தர்மத்தின் வழியாக செல்கின்றானோ, அவர்கள் பின்னே யாங்கள் வந்து, அவனை காப்போம். ******
சுவடி ஓதும் மைந்தன் :- சித்தர்களுக்கு என்ன பிடிக்கும் ?
அடியவர் :- தர்மம் மட்டுமே.
சுவடி ஓதும் மைந்தன் :- தர்மம் மட்டுமே. இவ்வாறாக தர்மம் பின்னே நீங்கள் சென்றால்….. உங்கள் பின்னே…. அதான்…. உங்களுடைய பின்னே….. சித்தர்கள் வந்து உங்களுக்கு என்ன தேவையோ, அதை வந்து கொடுப்பாங்க சித்தர்கள் வந்து…
===========================
# காலன் - எமதர்மராஜா உங்கள் பின்னே எப்போது வருவார்கள் ?
===========================
குருநாதர்:- அவ்வாறு இல்லை என்றால் நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது காலன் உங்கள் பின்னே வருவான்.
அடியவர் :- நீங்க தர்மப்படி நடக்கவில்லை எனில், காலன் உங்கள் பின்னாடியே வருவார். நீங்க முடிவு செய்யணும். சித்தர்கள் வரணுமா? இல்ல காலன் வரணுமா? அப்படின்னு சொல்லி சொல்லுவாரு.
குருநாதர்:- இதனால் அப்பனே புரிந்து கொள்ளுங்கள் அப்பனே. சித்தனை எவ்வாறு என்பதெல்லாம்….
குருநாதர்:- ****** சித்தனை பிடிப்பதற்கு தர்மமே !!!!!! . ******
குருநாதர்:- அதாவது உங்களை பிடித்து விடுவோம் அப்பனே.
குருநாதர்:- ஆனால் தர்மத்தை மீறி நீங்கள் சென்றால் அப்பனே, காலன் அதாவது காலன் பின் உங்களை பிடித்து பின் நிச்சயம் பல விஷயங்களை சிக்கி வைத்து விடுவான் என்பேன் அப்பனே. சொல்லிவிட்டேன்.
குருநாதர்:- மீண்டும் வரப்போவது நீங்கள் எங்கு என்றால், நிச்சயம் இவ்வாறு திருத்தலங்கள் தான் என்பேன் அப்பனே.
குருநாதர்:- அதனால் முதலிலேயே தெரிந்து கொள்ளுங்கள்.
அடியவர் :- நீங்கள் தர்ம பாதையில் நடந்து வந்தால் , காலனிடம் இருந்து நாங்கள் காப்பாற்றுவோம். தர்மத்தை மீறி நீங்கள் சென்றால், அப்புறம் காலன் வரைக்கும் (காலனிடமே உங்களை) விட்டுருவோம். ஏன்னா அவங்களால் தடுக்க முடியாது. அவர் காலன் கேள்வி கேட்பாரு. நீ ஏன் குறுக்க வருகின்றாய்? அந்த தர்மப்படி நடக்காத போது…. ஏன்னா சித்தர்கள் தர்மத்திற்கு மட்டுமே கட்டுப்பட்டவர்கள். நீங்க தர்மப்படி நடந்தால், சித்தர்கள் உங்களை தேடி வருவார்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- தேடி வருவார்கள். அப்படி இல்லை என்றால், நீங்கள் தர்மத்தை தர்மத்தை…. நீங்கள் கடைபிடிக்கலன்னா……
அடியவர் :- காலன்…
சுவடி ஓதும் மைந்தன் :-. காலன்னா யார் தெரியுங்களா?
அடியவர் :- எமதர்மராஜா.
சுவடி ஓதும் மைந்தன் :- எமதர்மராஜா காலன்…கலி காலன் . அவர் வந்து உங்க பின்னே வரும்பொழுது, எல்லாம் கெடுத்து, திருப்பி என்ன பண்ணுவாங்க? நீங்க வரவேண்டிய இடம் என்ன? திருப்பி கோயில்தான் என்று சொல்கின்றார். கடைசில கோயில். அதனால முதலிலேயே வந்து என்ன பண்ணிக்கோங்க வந்து ?
சுவடி ஓதும் மைந்தன் :- தர்மத்தை கடைபிடியுங்கள்…
===========================
# இறைவன் உங்களுக்கு எப்படி வெற்றியை பெற்றுத் தருவார்கள்?
===========================
குருநாதர்:- அப்பனே தர்மம். அதாவது கலியுகத்தில் தர்மம் கடைபிடிப்பது சில கடினம் தானப்பா.
ஆனாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட
****** முழு முயற்சியோடு கடைபிடித்தால், ******
****** அப்பனே வெற்றி உங்களுக்கு யான் கொடுக்கின்றேன் அப்பனே. ******
அடியவர் :- தர்மப்படி நடந்தா என்ன சொல்வாங்க? இவன் பைத்தியக்காரன். பிழைக்க தெரியாதவன். ஏன்னா தர்மப்படி நடந்தா… கஷ்டம் வரும். சித்தர்களின் பாதை என்பது ஆணி… கண்ணாடி போன்ற…. நிலையிலும் சற்று கடின பாதைதான். ஆனால் அதை கடந்துவிட்டால், அது அப்ப மலர்ப்பாதையா மாறும்னு சித்தர்கள் நிறைய நிரூபிச்சிருக்காங்க. சோ, ஆரம்பத்துல கஷ்டமாதான் தெரியும். ஆனால் அவங்களே அந்த கஷ்டத்தை உங்களுக்கு வெற்றியாக மாற்றி தருவார்கள். நீங்க தர்மப்படி நடந்தால்….
===========================
# அன்பு அகத்திய மாமுனிவர் பக்தர்களுக்கான நேரடி வாக்கு.
===========================
# பின் வரும் வாக்கு உங்களுக்கான தனி வாக்கு என்று தெரிந்து செயல்படவும்..
===========================
# பொது வாக்கில் உங்களுக்கான தனி வாக்கு
===========================
குருநாதர்:- அப்பனே இது அப்பனே நிச்சயம் அனைவரும் என் பக்தர்கள். அப்பனே பின் சொல்ல போகின்றேன் அப்பனே.
****** மீண்டும் விரிவாக சொல்ல போகின்றேன் அப்பனே. ******
****** என் பின்னே அப்பனே எவை என்று புரிய, அப்பனே நிச்சயம் வருவோர்க்கெல்லாம் அப்பனே சொல்லப் போகின்றேன். ******
****** தர்மம் ஒன்றே !!!!!!. ******
அப்பனே மீண்டும் சொல்ல போகின்றேன்.
****** தர்மத்தை கடைபிடித்தால், உங்கள் பின்னே யாங்கள் !!!!! . ******
****** அப்பனே தர்மத்தை கடை பிடிக்காவிடில், அப்பனே நிச்சயம் அப்பனே நிச்சயம் பின் உங்கள் பின்னே “காலன்”... சொல்லிவிட்டோம். ******
****** உலகம் அழிவு. அவ்வளவுதான். ******
அடியவர் :- அதாவது என்னுடைய பக்தர்கள் “அகத்தீசா” என்று யார் சொன்னாலும், அவங்க தர்மத்தை கடைபிடிச்சா போதும். அது ஒன்னுதான்….
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா தர்மத்தை நீங்க கடைபிடிச்சீங்கன்னா, உங்கள் பின்னே யார் வருவாங்க?
அடியவர்கள் :- சித்தர்கள்…
சுவடி ஓதும் மைந்தன் :- சித்தர்கள் வருவாங்க வந்து. தர்மத்தை கடைபிடிக்கவில்லை என்றால், காலன் உங்கள் பின்னே வருவான். அவ்வளவுதான். லைஃப் அவ்வளவுதான் முடிந்தது என்று சொல்லிவிட்டார். புரிஞ்சுதுங்களா? அப்ப எல்லாரையும்….
குருநாதர்:- அப்பனே எதை என்று புரிய அப்பனே நிச்சயம் முருகனாகினும் சரி என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- யாரு?
அடியவர் :- முருகனே வந்தாலும்….
சுவடி ஓதும் மைந்தன் :- முருகனே வந்தாலும்… நீங்க தர்மத்தை கடைபிடிச்சாதான், முருகர் உங்க பின்னாடி வருவாரு. தர்மத்தை கடைபிடிக்கவில்லை என்றால் யார் வருவாரு?
அடியவர் :- காலன்.
அடியவர் 1 :- (எமதர்ம) ராஜா…
சுவடி ஓதும் மைந்தன் :- காலன்.
===========================
# அன்பு அகத்திய மாமுனிவர் விடுக்கும் எச்சரிக்கை
===========================
குருநாதர்:- ****** அப்பனே இவ் கலியுகத்தில், அப்பனே…******
****** நிச்சயம் அனைவரையும் காலன் தான் பின் தொடர்கின்றான். ******
****** சொல்லிவிட்டேன். ******
****** எச்சரிக்கின்றேன். ******
அடியவர் :- இந்த கலியுகத்துல நிறைய பேர் அதர்ம வழியில போறதுனால, பெரும்பாலும் காலன் வந்து பின்னாடி போயிட்டு இருக்காரு. சித்தர்கள் வந்து ?
சுவடி ஓதும் மைந்தன் :- கம்மி. இறைவனும், சித்தர்களும் மிகக் கம்மி. யார் வந்து பின்னாடி போயிட்டு இருக்காங்க வந்து?
சுவடி ஓதும் மைந்தன் :- காலன்,
குருநாதர்:- காலன் பின்னாடியே வந்து கொண்டே இருக்கின்றான். செல்லுங்கள், செல்லுங்கள் என்று அனைத்திலும் ஏமாற்றி, கடைசியில் எதை என்று புரிய, மீண்டும் பின் ஏமாந்து விட்டாய். மீண்டும் பின் செல் என்று திருப்பி விடுவான் அவனே.
அடியவர் :- அதாவது ஆசை காட்டி மோசம் செய்வார்கள். அதர்ம வழியில் சென்றால், எல்லாத்தையும் குடுத்துட்டு, கடைசில நீ தப்பு பண்ணிவிட்டாய். இதுதான் தண்டனை என்று சொல்லிட்டு, மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்துக் கொண்டே இருப்போம். கஷ்டத்தை அனுபவித்து கொண்டே இருப்போம்…
சுவடி ஓதும் மைந்தன் :- இல்ல, அப்படி இல்லை வந்து. காலன் பின்னாடி போகும்போது….. காலன் பின்னாடி போக போக….. அதான் மனிதன் பின்னாடி வந்து போக போக, நீ பண்றா , நீ பண்ணலாம், பண்ணலாம்னு சொல்லிட்டு, கடைசில என்ன பண்ணிருவாரு காலன்?....…..
சுவடி ஓதும் மைந்தன் :- அவ்வளவுதான். நடு ரோட்ல விட்டு போயிருவாரு. அவ்வளவுதான். நீ போடான்னு சொல்லிட்டு. திருப்பி என்ன பண்ணுவான்? யார்கிட்ட வரனும்? இங்கதான் வரனும். இங்க இருக்காரு பாருங்க மூலவர். யாரு?
அடியவர் 1:- (தண்ணீர்மலை) முருகன்.
சுவடி ஓதும் மைந்தன் :- முருகர் பின்னாடி வரணும். அதனால அகத்தியர் என்ன சொல்றாங்கன்னா, முதல்லயே தர்மத்தை கடைபிடிச்சிரு அப்பா….
குருநாதர்:- அப்பனே பாவப்பட்ட ஜென்மம் அப்பா மனிதன். அவ் பாவப்பட்ட ஜென்மத்திற்கு யாங்கள் வந்து அன்பாக உதவுகின்றோம்.
சுவடி ஓதும் மைந்தன் :- பாவம் மனிதன் என்று சொல்கின்றார் அகத்தியர்.
அடியவர் :- நாம் படும் பாட்டை பற்றி (அகத்திய) பெருமான் சொல்லுகிறார்….பாவப்பட்ட ஜென்மங்கள்,
சுவடி ஓதும் மைந்தன் :- பாவப்பட்ட ஜென்மங்கள்
அடியவர் :- நாமாவது போய் உதவி செய்யலாம் என்று வாக்கு உரைக்க வந்திருக்கிறார்.
===========================
# தண்ணீர் மலையில்…… கண்ணீர் வரவழைக்கும் வாக்கு ….
===========================
# அன்பு அடியவர்கள் இனிமேல் கோபம் , தன் முனைப்பு கொள்வீர்களா ?
===========================
குருநாதர்:- இதைத்தான் அனைத்தும் எவை, ஏது என்று புரிய… அதனால்தான் பின் அனைத்து சித்தர்களையும் அழைத்து, பூலோகத்திற்கு நிச்சயம் பின் இன்னும் அதாவது தொண்டு , பின் தான தர்மங்கள் பற்றி சொல்லுங்கள் என்றெல்லாம் அழைத்து வந்திருக்கின்றேன் மக்களுக்காகவே.
****** கையை கூப்பியும் ******
****** கை கூப்பி வணங்கி, ******
****** கால்களில் விழுந்து.. இவ் அகத்தியன் ******
****** ஏனென்றால் என்னை நம்பி பலபேர் லோகத்தில். ******
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றார் தெரியுங்களா? எப்பா…. என்னை நிறைய பேர் நம்புறாங்க கலியுகத்தில வந்து… அத்தியர் சொல்றார். அதனாலதான் பாவப்பட்ட ஜென்மம் மனிதன். யாருக்கும் ஒன்னும் புரியல. அதனாலதான் ஒவ்வொரு சித்தரும் நான் அழைச்சு வந்திருக்கின்றேன். எப்பா ஒரே ஒரு தடவ வாப்பா பூலோகத்திற்கு. வந்து மக்களுக்கு ஒன்னும் தெரியலப்பா. ஏதாவது சொல்லி, அவங்களுக்கு நல்ல புத்தி கொடுத்து, நல்ல இது பண்ணிட்டு வாழ வைப்பா. வாங்கப்பான்னு சொல்லி, அதாவது யார் பண்றாங்க?
அடியவர் :- அகத்தியர்
சுவடி ஓதும் மைந்தன் :- யாரு?
அடியவர் :- அகத்தியர்,
சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியர்.
===========================
# உலகம் அறியாத தண்ணீர் மலையின் சிறப்பு
===========================
குருநாதர்:- எவ்வாறு என்பதெல்லாம் முருகனுக்கு திடீர் திடீரென்று கோபம் வந்துவிடும்.
****** கலியுகத்தின் தொடக்கத்திலே முருகனுக்கு கோபம் வந்திட்டு, பின் எனக்கு ஏதும் தேவையில்லை. ******
****** யான் தனியாக வந்துவிடுவேன் என்று இங்கு வந்தான். ******
****** ஆனால் அனைவரும், அதாவது பின் மேலோகத்தில் உள்ள அனைவரும் இங்கு வந்தார்கள். இதுதான் சிறப்பு. ******
அடியவர் :- இந்த தண்ணீர் மலையின் சிறப்பை பற்றி சொல்கிறார்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆமா…
அடியவர் :- முருகன் வந்து கோபப்பட்டு இங்கே வந்து நின்னாரு.
சுவடி ஓதும் மைந்தன் :- கலியுகத்துல முருகன் வந்து அடிக்கடி கோவப்படுவாராம். அப்ப இந்த கலியுகத்துல யாருமே சரியில்ல. மனுஷன் சரியில்ல, ஒன்னும் சரியில்ல. அதனால யாரும் எனக்கு தேவையில்லை. நான் ஒரு தனியா இடம்… தனித்து நான் வந்து… சொல்லிட்டு என்ன பண்ணிட்டாரு முருகரு? … இங்க வந்துட்டாரு. யாருமே தேவையில்லை. ஆனால் அப்ப முருகர் இப்படி போயிட்டாருன்னு சொல்லிட்டு….
அடியவர் :- அவரை சமாதானப்படுத்த….
சுவடி ஓதும் மைந்தன் :- சமாதானப்படுத்த எல்லா தேவலோகத்திலிருந்து எல்லாரும் எங்க வந்தாங்க.
அடியவர் :- இந்த தண்ணீர் மலைக்கு…
சுவடி ஓதும் மைந்தன் :- தண்ணீர் மலைக்கு வந்தாங்க.. யாரு?
சுவடி ஓதும் மைந்தன் :- தேவலோகத்தில் இருக்கிற எல்லோருமே, இந்த தண்ணீர் மலைக்கு வந்தாங்க.
குருநாதர்:- இதைத்தன் அறிய.. இதனால்தான் பின் எவை என்று புரிய… பின், அதாவது கடலும் முருகனுக்கு பயந்து இன்னும் பின், அதாவது இப்படி வராமல் நிச்சயம் தன்னில் கூட இருக்கின்றது.
குருநாதர்:- இங்கு பின் முருகன் இல்லை என்றால், நிச்சயம் தன்னில் அறிந்ததும். பின் நீருக்கு தெரியும் முருகன், அதாவது நம் எவை என்று கூற மீறி சென்றால், முருகன் நம் தன்னை எப்படி எப்படி செய்வான் என்று. அதனால் நீரும் பயந்து கொண்டு உள்ளே வரவில்லை.
அடியவர் :- அதாவது முருகப்பெருமானுக்கு பயந்து… இங்க இருக்கிற கடல் தண்ணீர் கூட உள் புகாமல், முருகன் காத்து நிற்கின்றார் இந்த தீவை அப்படிங்கிறார்.
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த தீவுல..
அடியவர் :- முருகப்பெருமானுக்கு பயந்து தண்ணீர் வந்து
சுவடி ஓதும் மைந்தன் :- தண்ணீர் வந்துருமாம் ஈசியா,
அடியவர் :- முருகனுக்கு பயந்து இருக்கு. அப்படின்னு சொல்றாரு.
சுவடி ஓதும் மைந்தன் :- தண்ணிர் கூட வந்து முருகனுக்கு கட்டுப்பட்டு, தர்மத்துக்கு கட்டுப்பட்டு இருக்குதுடா என்று அகத்திய சொல்கின்றார். வேற ஒன்னும் இல்ல. பயந்து இருக்கு. முருகன் அதாவது பயந்து வந்துட்டு, அந்த நீர் கூட….. நீர் கூட என்ன பண்ணும்?
அடியவர் :- பயந்து நிக்குது
சுவடி ஓதும் மைந்தன் :- பயந்து நிக்குது. முருகன் இல்லை என்றால், நீர் எங்க வந்துரும்?
அடியவர் :- எப்பயோ,
சுவடி ஓதும் மைந்தன் :- எப்பயோ அழிவுகள் வந்திருக்கும்.
குருநாதர்:- இதனைத்தன் அறிய இன்னும் இதே பின் எவ்வாறு என்பதை எல்லாம் யான் ஏன் எதற்காக மக்களுக்கு தெரிவிக்கின்றேன் என்றால், இங்கு பின் பூகம்பம் வந்தும், நிச்சயம் தன்னில் கூட, அதாவது பல வழிகளில் கூட எவ்வாறு என்பதெல்லாம்…(...யான் அறிந்தேன்…) ….
குருநாதர்:- இதனால்தான் இதையெல்லாம் பின் நிச்சயம் எவ்வாறு யாங்கள் பின், அதாவது முன்னே பின் இவ்வாறு… இவ்வாண்டுகளில் வரப்போகின்றது என்பதை எல்லாம் (சுவடிகளில்) குறித்து வைத்தோம்.
குருநாதர்:- இதனால் பின் இதைத்தன் அறிய முருகன் பின் கோபப்பட்டாலும், முருகனை அழைத்து, நிச்சயம் நீ இங்கே இருப்பதே நலம் என்று யான் சொன்னேன்.
குருநாதர்:- ஆனாலும் தேவலோகத்தில் அனைவரும், இக் குள்ள முனி , இவைதன் அறிய , இவன் தன் இப்படி, எப்படி என்றெல்லாம், பலர் என்னை சாடினார்கள்.
குருநாதர்:- (அகத்தியன் யானும்) முருகா !!!!!! யார் பேச்சையும் கேட்டு நீ சென்றுவிடாதே !!!!!!.
****** இங்கேயே இரு. ******
****** இங்கேயே இரு என்றெல்லாம் … ******
நிச்சயம் எனை பல பின், அதாவது எவை என்று கூற தேவலோகத்தில் பின் எவை என்று புரிய அனைவரும் என்னை சாடினார்கள்.
****** ஆனாலும் என் மக்களுக்காக யான் விடவில்லை. ******
****** எடுத்த சபதமே சபதம்தான். ******
அடியவர் :- என்ன சொல்றாருன்னா, முருகனை வந்து இங்கே நிறுத்தி வைத்திருக்கிறார் அகத்தியர்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆமா அகத்தியர்.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாரும்…. எல்லாமே வந்து, முருகா, நீ தனியா (தண்ணீர் மலை.. இங்க…) இருகதாப்பா. நீ வந்துரு… அப்படின்னு எல்லோரும் சொன்னாங்களாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆனா அகத்தியர் மட்டும் என்ன சொன்னாராம்? அகத்தியருக்கு தெரியுமாம். இந்த ஆண்டில் இப்படி….. இந்த உலகத்துல இப்படி நடக்கப்போகுது. இந்த நேரத்துல வந்து தண்ணீர் வரும்…. இது இப்படி நடக்கும் என்று தெரியுமாம். அதனால முருகரை என்ன சொல்றாரு வந்து?
சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியர் என்ன சொல்றாரு? அப்பா, முருகா !!!!!! நீ எங்கேயும் போயிடாத. (தண்ணீர்மலை) இங்கேயே இரு.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா புரியுதுங்களா? நீ வந்து இங்கேயே இரு.போயிடாத. அப்ப தேவலோகத்துல இருக்கிறவங்க எல்லாம் என்ன பண்ணுவாராம்? அகத்தியரை திட்டுறாங்களாம் எல்லாரும்.
அடியவர் :- குள்ள முனி ( என்று திட்டுறாங்களாம் )
சுவடி ஓதும் மைந்தன் :- குள்ள முனி
சுவடி ஓதும் மைந்தன் :- (அகத்திய மாமுனிவரே) என்ன இவ்வளவு பண்ற? நியாயமா? நீ அநியாயக்காரன். என்ன பண்றாங்க? எல்லாரும் திட்டுறாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாரும் வந்து அகத்தியர் என்ன பண்றாங்களாம்? தேவலோகத்துல இருக்கிற எல்லாரும் என்ன பண்றாங்களாம்?
சுவடி ஓதும் மைந்தன் :- திட்டுறாங்களாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்போ கூற அகத்தியர் என்ன பண்றாராம்? முருகா !!!!!! நீ இங்கிருந்து போயிடாத, இங்கிருந்து போயிடாதன்னு சொல்லிட்டு, அகத்தியர் ஒருத்தர்தான் இங்க நிக்கிறார்.
அடியவர்கள் :- (ஆச்சரியத்தில்) ஓ !!!!!!…..
குருநாதர்:- இதனாலே முதலில் இங்கு சொல்ல வந்தேன் யான்.
சுவடி ஓதும் மைந்தன் :- இதனால்தான் நான் வந்து…. முதல்ல இந்த ஓலைச்சுவடியை… இந்த இந்த இடத்துல வந்து… நான் வந்து தேர்ந்தெடுத்தேன்.
அடியவர்கள் :- (ஆச்சரியத்தில்) ஓ !!!!!!…..
குருநாதர்:- இதனாலே எதை என்று அறிய பின் தேவலோகத்தில் உள்ள அனைவரும் ஈசனின் முறையிட்டனர் நிச்சயம் இதற்கு காரணம். அதாவது முருகன் வந்திருப்பான். ஆனாலும் அகத்தியன் கெடுத்து விட்டான் என்று.
அடியவர்கள் :- (சிரிப்புகள்)
சுவடி ஓதும் மைந்தன் :- இதனால எல்லாரும்?
அடியவர் :- ஈசன் கிட்ட போய் முறையிடுறாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- ஈசன் கிட்ட போய் முறையிடுறாங்க. யப்பா !!!!! முருகன் !!!!!! …. முருகன் திரும்பி வருவதற்கு ரெடி. ஆனாலும், அகத்தியன் தான் அதை கெடுத்துக் கொண்டு இருக்கின்றார் வந்து…
அடியவர்கள் :- (சிரிப்புகள்)
சுவடி ஓதும் மைந்தன் :- (முருகன் திரும்பி) வரக்கூடாது. நீ இங்கே இரு, இங்கே இரு என்று தெரியாம ( அகத்தியர் தான் சொல்லி கெடுத்து விட்டார்)
அடியவர்கள் :- (சிரிப்புகள்)
குருநாதர்:- மீண்டும் பின் பலமாக எதை பின் இவை உணர பின் சிரிக்கின்றான் ஈசனே !!!!!
சுவடி ஓதும் மைந்தன் :- பலமாக
அடியவர்:- இதை கேட்டு விட்டு, ஈசன் வந்து நகைக்கின்றார்,
சுவடி ஓதும் மைந்தன் :- நகைக்கின்றார்.
அடியவர்:- திருவிளையாடல் அப்படின்னு சொல்லுவாங்க…
===========================
# அன்னையின் கோபமும் , தவிப்பும்…..
===========================
குருநாதர்:- இதைத்தன் அறிய எவ்வாறு என்பதையும் கூட இதனால் எவ்வாறு என்பதையும் கூட, எவ்வாறு பின் பார்வதி தேவியும் கூட. எவ்வாறு இவ்வாறு எதை என்று புரிய,
***** தேவாதி தேவனே !!!!! *****
***** இவ்வாறு நகைக்கின்றாயே? *****
***** நியாயமா? இருப்பது நம் பிள்ளை. *****
***** அகத்தியன் எவ்வாறு இவ்வாறு செய்யலாம் என்று. *****
சுவடி ஓதும் மைந்தன் :- யப்பா, என்னப்பா நீ சிரிக்கிற? எல்லாமே வந்து நம்ம பிள்ளை தனியா இருக்குன்னு எல்லாரும் கஷ்டப்படுறாங்க. நீ என்னப்பா சிரிக்கிற? இருப்பது நம்ம பிள்ளை அப்பா அங்க. அகத்தியர்?
அடியவர் :- நிறுத்தி வச்சிருக்கிறார்.
சுவடி ஓதும் மைந்தன் :- நிறுத்தி வச்சிருக்கிறார். அகத்தியர் மேல வந்து (அன்னை பார்வதி தேவி) அவங்களுக்கு கோவம் வந்துருது.
அடியவர் :- நம்ம பிள்ளை கஷ்டப்படுறானே…
சுவடி ஓதும் மைந்தன் :- (நம்ம பிள்ளை இப்படி) கஷ்டப்படுறானே…. இந்த அகத்தியர் ஏன் இப்படி பண்ணலாம்னு?
===========================
# அப்பனின் கட்டளை
===========================
குருநாதர்:- எதை தன் அறிய மீண்டும் எவ்வாறு என்பதை எல்லாம்.
அதனால் நிச்சயம் தன்னில் கூட…
ஈசனும் !!!!!
பின் அனைத்து, அதாவது பின் தேவலோகத்தில் இருக்கும் பின் அனைவருக்கும் கட்டளை.
பின் கட்டளையும், பின் ஏது என்று புரிய.
இதனால் மீண்டும் நீங்கள் செல்லுங்கள்.
***** ஈசன் உரைத்தான் என்று பின் சொல்லுங்கள் அகத்தியனிடம் . *****
***** பின் நிச்சயம் முடிவெடுப்பான் அகத்தியனே என்று. *****
சுவடி ஓதும் மைந்தன் :- திருப்பி என்ன பண்றாரு? தேவலோகத்துல வந்து எல்லாரும் வந்து ஈசன் என்ன பண்றாரு வந்து?
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாம் (தண்ணீர் மலை அங்க ) போங்க. ஈசன் சொன்னார். முருகனை விடு என்று. ஐயா எப்படி ஐயா ?
அடியவர் :- அகத்தியர் கிட்ட போய் சொல்ல சொல்றாரு. ஈசன் முறையிட சொன்னார்…
சுவடி ஓதும் மைந்தன் :- முறையிட சொன்னார்.
அடியவர் :- முருகர் அவர் இஷ்டத்திற்கு விட்டுவிடு… அப்படின்னு சொல்லிட்டு. ஆனால் அகத்தியன் முடிவெடுப்பான்…
சுவடி ஓதும் மைந்தன் :- முடிவெடுப்பான் என்று.
===========================
# மீண்டும் தண்ணீர் மலைக்கு வந்த தேவர்கள்…
===========================
குருநாதர்:- மீண்டும் தேவலோகத்திலிருந்து அனைவரும் வந்தனர். எதை என்று கூற அகத்தியனை ஒவ்வொரு பின், அதாவது தேவர்களும் எவை என்று அறிய , புரிய அனைவருமே திட்டி தீர்த்தனர் எனை.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாருமே அகத்தியரை திட்டி தீர்த்தாங்க வந்து…. தேவர்கள் வந்து, யப்பா அகத்தியா.. என்னப்பா இது? நல்லது, நீ எப்படியப்பா இப்படி எல்லாம் பண்ற? ஏது, என்ன பண்ற? எல்லாரும் என்ன பண்ணாரு? வந்து அகத்தியர் என்ன பண்ணாங்க?
அடியவர் :- திட்டி தீர்க்கிறாங்க எல்லாருமே.
குருநாதர்:- இவை தன் அறிய பின் முருகனோ, குழந்தை. அவனை வைத்துக்கொண்டு இவ்வாறு செய்யலாம் என்றெல்லாம் நிச்சயம் பின் ஏது என்று அறிய, பின் அதாவது எதை என்று புரிய அனைவருமே.
சுவடி ஓதும் மைந்தன் :- யப்பா , முருகனுக்கு ஒன்னும் தெரியாதுப்பா. அவனை வச்சு நீ என்ன பண்ண போற? என்று தேவர்கள் என்ன பண்றாங்க வந்து?
அடியவர் :- குழந்தையை வைச்சு விளையாடாதே,
சுவடி ஓதும் மைந்தன் :- விளையாடாதே.
குருநாதர்:- ஆனாலும் பின் அனைவரும் அதனால் ஈசன் கட்டளைப்படி முருகனை அழைத்து வரவேண்டும் என்று பின் அனைவரும் சில சில பொய்களை கூறினார்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஈசன் அழைத்து வர சொன்னார்கள்.
அடியவர் :- ( ஆதி ஈசனார் ) அப்படி சொன்னாரு, இப்படி சொன்னாரு,
சுவடி ஓதும் மைந்தன் :- இப்படி சொன்னாரு, அப்படி சொன்னாருன்னு சொல்லிட்டு….
அடியவர் :- அகத்தியரிடம் எல்லாம் சொல்றாங்க.
===========================
# அன்பு அகத்திய மாமுனிவரின் அசராத உறுதி , பொறுமை , மௌனம்
===========================
குருநாதர்:- பின் யானே, நிச்சயம் ஈசனிடம் முறையிட்டு, எதை என்று கூற பின்
““““““ யான் பின் அதாவது முருகனை விட போவதில்லை.””””””
****** பின் நீங்கள் என்ன செய்தாலும், யான் முருகனை விட போவதில்லை. கெட்டியாக பிடித்துக் கொள்வேன் என்று. ******
அடியவர் :- என்ன சொல்றாருன்னா, முருகனை வந்து நல்ல (அன்பால் பாசத்துடன் அனைத்து) கட்டி வச்சிருக்கிறார் அகத்தியர். நீங்க என்ன சொன்னாலும் (தண்ணீர்மலை) இங்கிருந்து முருகனை நான் விடுவிக்க போவதில்லை. ஏன்னா இன்னும் போர்ஸோட (with force) இங்க இந்த பூகம்பம் வந்திருக்கணும். முருகன் இருக்கிறதுனாலதான் இந்த தீவுக்கு வந்து பூகம்பம் வராமல் தடுக்கப்பட்டிருக்கு என்று அகத்தியர் சொல்றார் (தேவர்களிடம்).
சுவடி ஓதும் மைந்தன் :- மீண்டும் வரும். அதனால வந்து அதுக்கு தெரியும். பல நூறு ஆண்டுகளுக்கு, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வந்து, இது நடக்கும்னு தெரியும். அதனால வந்து கட்டி பிடிச்சுக்கிட்டார். யாரை ?
அடியவர் :- முருகனை, அகத்தியர் கட்டி பிடிச்சுக்கிட்டார்.
குருநாதர்:- இதைதன் அறிய இவ்வாறு எல்லாம் மீண்டும் பின்
முருகா !!!!!!
அதாவது தேவலோகத்தில் பின் இருக்கும் அனைவரும்
முருகா !!!!!!
இவன் பேச்சை கேட்டு விடாதே.
பின் அறிந்தும் எதை கூற இவன் கெடுத்து விடுவான் என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாரும் தேவர்கள் வந்து…. எப்பா முருகா !!!!!! அகத்தியர் பேச்சை கேட்டு விடாத.
அடியவர்கள் :- (சிரிப்புகள்)
அடியவர் :- நீ கெட்டுப் போய்டுவ…
சுவடி ஓதும் மைந்தன் :- நீ கெட்டுப் போய்டுவ… அகத்தியன் பேச்சை கேட்டு நீ வந்து… இது பண்ணாத.
குருநாதர்:- எதை என்று புரிய ஆனாலும் அமைதி காத்தேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால அகத்தியர் வந்து…
அடியவர் :- எல்லாத்தையும் கேட்டு அமைதியா இருந்தார்.
===========================
# அடியவர்களே - பின் வரும் வாக்கு உங்களுக்கான தனி வாக்கு.
===========================
# தர்மம் செய்யும் போதும் , வாக்குகளை பரப்பும் போதும் பலரின் இழி சொற்கள், பழி சொற்கள் ஏற்கும் அசராத உறுதியான திட மனம், பொறுமை உங்களிடம் உள்ளதா?
===========================
குருநாதர்:- இதே போலத்தான்
****** கலியுகத்தில் ******
****** என் மக்களுக்கும் நிச்சயம் பல இழி சொற்கள், பல வழிகளில் வரும். ******
****** அவையெல்லாம் தாங்கி நின்றால் யான் உங்களை காப்பாற்றுவேன். ******
சுவடி ஓதும் மைந்தன் :- இதே போலத்தான். அகத்தியர் வணங்குகின்ற இந்த காலத்துல, பல பழி சொற்கள், பல இழி சொற்கள் எல்லாம் வரும். எந்த நேரத்திலும் நீங்க அமைதியா இருந்தால், நான் வந்து உங்களை?
அடியவர் :- காப்பாற்றுவேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- அய்யா, புரியுதுங்களா அய்யா ?
அடியவர் :- என்ன சொன்னாருன்னா, தர்மத்தோடு, எந்த சூழ்நிலையிலும் தர்மத்தோடு இருந்தால்….
சுவடி ஓதும் மைந்தன் :- தர்மத்தோடு இருந்தால், யான் உங்களை?
அடியவர் :- காப்பாற்றுவேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- என் கையிலிருந்து நான் உங்களை விடமாட்டேன். கையிலேயே வச்சிட்டு இருப்பேன்.
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 22/09/2026 அன்று தண்ணீர்மலை மலேசியாவில் நடந்த கூட்டுப்பிரார்த்தனை சத்சங்க வாக்குகள் தொடரும் ……. )
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.
No comments:
Post a Comment