“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Tuesday, March 24, 2026

சித்தர்கள் ஆட்சி - 597 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - 14.03.2026 அன்று இந்தோனேசியாவின் அழகிய தீவான பாலியில் உரைத்த வாக்கு. பாலி ஆன்மீகப் பயணம் - பகுதி 4

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.


புரா தீர்த்த சுதா மாலா (Pura Tirta Sudamala)

அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 14.03.2026 அன்று இந்தோனேசியாவின் அழகிய தீவான பாலியில் உரைத்த   வாக்கு. பாலி ஆன்மீகப் பயணம் -  பகுதி 4 




முதல் நாள் : 14.03.2026  (சனிக்கிழமை)


வாக்குரைத்த  தலம்:-  நான்காம் புனித தலம்  ( DAY 1 , 4th  PLACE )


வாக்குரைத்த  தலத்தின் பெயர் :- புரா தீர்த்த சுதா மாலா (Pura Tirta Sudamala)


கூகிள் மேப் லிங்க் :-

https://maps.app.goo.gl/Q8mhM51pmtwgxbbm6


புரா தீர்த்த சுதா மாலா (Pura Tirta Sudamala)


முதல்  நாள்  நான்காம் தலம்:- புரா தீர்த்த சுதா மாலா (Pura Tirta Sudamala)



வாக்குரைத்த ஸ்தலத்தின் முகவரி:-  புரா தீர்த்த சுதா மாலா, பெபலாங், பாங்லி, பாங்லி ரீஜென்சி, பாலி 80661, இந்தோனேஷியா


Address :- Pura Tirta Sudamala, Bebalang, Bangli, Bangli Regency, Bali 80661, Indonesia


புரா தீர்த்த சுதா மாலா (Pura Tirta Sudamala)


புரா தீர்த்த சுதா மாலா (Pura Tirta Sudamala)

( இவ் தொடர் வாக்கின் 10 பகுதிகளும் இங்கு அடியவர்கள் படிக்க வசதியாக கொடுக்கப்பட்டுள்ளது ................ 

சித்தர்கள் ஆட்சி - 594  - பகுதி 1
சித்தர்கள் ஆட்சி - 595  - பகுதி 2
சித்தர்கள் ஆட்சி - 596  - பகுதி 3
சித்தர்கள் ஆட்சி - 597  - பகுதி 4
சித்தர்கள் ஆட்சி - 598  - பகுதி 5
சித்தர்கள் ஆட்சி - 599  - பகுதி 6
சித்தர்கள் ஆட்சி - 600  - பகுதி 7
சித்தர்கள் ஆட்சி - 601  - பகுதி 8
சித்தர்கள் ஆட்சி - 602  - பகுதி 9
சித்தர்கள் ஆட்சி - 603  - பகுதி 10

)

===========================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 

===========================


ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 


அப்பனே, எம்முடைய  ஆசிகள்.


===========================

# எப்போது வெற்றிகள் நிச்சயம் உண்டாகும் ?

===========================


அப்பனே, பல ரகசியங்கள் இவ்வுலகத்தில் ஒளிந்துள்ளதப்பா.


அப்பனே, இவையெல்லாம் கண்டு உணர்ந்தால் அப்பனே, வெற்றிகள் நிச்சயம். 


===========================

# ஈசன் கலியுகத்தின் ஆரம்பத்தில் மனிதனை கட்டுப்படுத்தும் வல்லமை கிரகங்களிடம் கொடுத்தார் .

===========================




அப்பனே, நல்விதமாகவே அப்பனே பின், அதாவது கலியுகத்தில் அப்பனே பின், முதலே அப்பனே நிச்சயம் ஆரம்பமாகின்ற முதலே, அப்பனே நிச்சயம் தன்னில் கூட மனிதனுக்கு அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அதாவது கட்டுப்படுத்தும் வல்லமை அப்பனே ஈசன் அப்பனே கிரகங்களிடம் கொடுத்தானப்பா.


அப்பனே, ஆனாலும் அப்பனே பின் கிரகங்கள் தன் வேலையை சரியாக செய்து கொண்டிருந்தன அப்பனே.


சரியாக செய்து கொண்டு அப்பனே.


===========================

# மனிதனை கட்டுப்படுத்த போய் , கிரகங்களுக்கே பல கர்ம வினைகள், பல பாவங்கள் ஏற்பட்டது.

===========================

# இதனால்  கிரகங்களாலும் மனிதனை கட்டுப்படுத்த முடியவில்லை

===========================




ஆனாலும் அப்பனே எதை என்று புரிய அப்பனே, இதனால் அப்பனே எது என்று அறிய அப்பனே, விதியின் தன்மை மீறி அப்பனே பின், அதாவது செயல்கள் தொடங்க ஆரம்பித்து விட்டது என்பேன் அப்பனே.


இதனால் கிரகங்களாலும் கட்டுப்படுத்த முடியவில்லையப்பா.


இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் கட்டுப்படுத்தினாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பல கர்ம வினைகள், அப்பனே பல பாவங்கள், அப்பனே நிச்சயம் தன்னில் கூட !!


அப்பனே பின் கிரகங்களுக்கு ஏற்பட்டது என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.


===========================

# மனிதர்கள் செய்யும் பாவங்கள் கிரகங்களிடத்தில் வந்ததால்…

===========================

# ஈசனிடத்தில் முறையிட்டனர் அனைத்து நவ கிரகநாதர்களும்.

===========================



அப்பனே, இவ்வாறாக அப்பனே பின் ஏற்படுத்தி, ஏற்படுத்தி அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பின் ஒன்றும் முடியாமல் பின் போனது, பின் நவ கிரகநாதர்களும் பின் ஈசனிடத்தில் முறையிட்டனர்.


நிச்சயம் பின் மனிதர்களுக்கு யாங்கள் (நீதி மற்றும் தண்டணைகள்) தருகின்றோம்.


ஆனாலும் அதை மீறி தவறுகள் செய்து, பின் அவையெல்லாம் நிச்சயம் பின் எங்களிடத்திலே (மனிதர்கள் செய்யும் பாவங்கள்)  இவ்வளவு சூழ்ந்துள்ளது.


பின்  எதனையென்றும் ஒன்றும் எங்களால் செய்ய முடியவில்லை.


எதனால் என்ன ஏது என்று அறிய!!!


===========================

# ஆதி ஈசனார்:- மீண்டும் ஒருமுறை  அங்கங்கு சென்று தண்டனை கொடுங்கள்

===========================


ஈசனும்!!!...


மீண்டும் ஒருமுறை நிச்சயம் செல்லுங்கள் அங்கங்கு என்றெல்லாம். நிச்சயம் தன்னில் கூட!!


மீண்டும் பின் கிரகநாதர்கள் அங்கங்கு சென்று மனிதனுக்கு மீண்டும் தண்டனை கொடுக்க!!!....


===========================

# தவறு செய்வதை நிறுத்தாத மனிதன் 

===========================


மீண்டும் மீண்டும் மனிதன் தவறு செய்து கொண்டே இருந்தான்.


இதனால் மீண்டும் பின் அப்பாவங்கள் கிரகநாதர்களுக்கே வந்துவிட்டது. எதை என்று புரிய.


===========================

# ஆதி ஈசனாரிடம் , நவ கிரக நாதர்கள் மீண்டும் முறையிட்டனர் 

===========================


ஆனாலும் மீண்டும் பின் ஈசனாரே!!!! 


நிச்சயம், அதாவது நீங்கள் எவை என்று அறிய…


சரியாக எங்களிடத்தில் கொடுத்தீர்கள் சில சில, அதாவது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை. நிச்சயம் தன்னில் கூட. 


அதை சரியாக யாங்கள் செய்தோம்.


===========================

# மனிதனால் ஆசைகள் இன்னும் பின் தவறுகள் கட்டுப்படுத்த முடியவில்லை. 

===========================


ஆனாலும் மனிதனின் பின் ஆசைகள் இன்னும் பின் தவறுகள் கட்டுப்படுத்த முடியவில்லை. 




===========================

# நவகிரகங்கள் யாங்கள் , மனிதனை கட்டுப்படுத்துவதில் இருந்து யாங்கள் விலகிக் கொள்கின்றோம். 

===========================


இதனால் யாங்கள் விலகிக் கொள்கின்றோம் தைரியமாக அறிந்தும் எதை என்று அறிய சொல்கின்றோம்.


அதாவது ஈசனே, நீங்கள் போதும் எங்களுக்கு. யாங்கள் எதும், எதுவும் எதை என்று புரிய. ஏதும் எவை என்று அறிந்தும் அனைத்தும் நீங்களே என்று. 


ஆனாலும் நீங்களே பின் மக்களுக்கு பின் தண்டனை, தண்டனை பின் நிச்சயம் எவ்வாறு கொடுக்கின்றீர்களோ அவ்வாறெல்லாம் கொடுங்கள் என்று நவ நாயகர்கள் கூட.


எதை, எவை என்று புரிய. இவ்வாறெல்லாம் நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிந்து கொண்டு, புரியாமல் கூட, 


===========================

# ஆதி ஈசன், நவ கிரக நாயகர்களுக்கு  அளித்த வரம். 

===========================


ஆனாலும் நிச்சயம் ஈசனும் கிரகநாயகர்களுக்கு பின் உங்களுக்கும் பின் வரத்தை கொடுக்கின்றேன். நிச்சயம் அறிந்து கூட.


===========================

# இறைவா , மனிதனின் பாவங்களால் - எங்கள் உடல் கரும் புகை போல் ஆகிவிட்டது.

===========================


நவகிரக நாயகர்கள் .. ஈசனிடம்... ஈசனே!!!


இதனால் பின் ஆனாலும் இப்பொழுது என்னவென்று. இவ்வாறு உடம்பு எல்லாம் இவ்வாறு ஆகிவிட்டது. , கரும்போல், கரும் புகை போல் ஆகிவிட்டதே.


இன்னும் எதை என்று அறிய. நிச்சயம் தன்னில் கூட கண்களும் கரும்புகையாக இன்னும் பின் வாயும் எதை என்று புரியாமலும் அனைத்தும் பின் பாழடைந்துவிட்டது போல் தோன்றுகின்றது.


இதனால் நீங்கள் தான் ஒரு வழி சொல்ல வேண்டும் என்று. 


===========================

# எம்பெருமான் ஆதி ஈசன் , நவகிரக நாயகர்களுக்கு உரைத்த ரகசியம் - (இவ் வாக்கின் முக்கிய பகுதி இது) 

===========================


ஈசன்!!!!.....நிச்சயம் கிரகநாதர்களே, அதாவது ஈசனும் பின் கிரகநாதர்களே, நிச்சயம் ஒரு வழி உண்டு. 


பின் நிச்சயம், அதாவது அறிந்தும் எதை என்று புரிய, பின் அதாவது நேரடியாக நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது பின் இவ்வுலகத்தை காக்கும். நிச்சயம் தன்னில் கூட, பின் நீர், அதாவது தேவதையான அறிந்தும் கூட, பின் (பார்வதி தேவி) இல்லத்தவள் அறிந்தும் கூட ஒன்றை பின் உருவாக்கி இருக்கின்றாள். 


===========================

# பாவத்தை தொலைக்க அன்னை பார்வதி தேவி உருவாக்கிய ரகசிய இடம் 

===========================



அதை எதை எப்பொழுது கூட பாவத்தை பின் மனிதன் பின் தொலைக்க வேண்டுமோ!? அதை தன் ரகசியமாக வைத்திருக்கின்றாள். நிச்சயம் தன்னில் கூட.


ஏனென்றால் நிச்சயம் பல புண்ணிய ஆன்மாக்கள் ஏதோ எதை என்று கூற சில நன்மைகள் நிச்சயம் செய்யும் மனிதர்களுக்கு.


ஆனால் மீண்டும் அவ் புண்ணிய ஆன்மாக்களுக்கு ஏதோ ஒரு ரூபத்தில் சில தீய பின் அறிந்தும் கூட பின் வினைகள் ஏற்பட்டு விடும். 


===========================

# அனைத்து நவகிரகங்களையும் , அன்னை பார்வதி தேவி இருவாகிய ரகசிய இடத்திற்கு செல்ல உத்தரவு 

===========================


அவை தொலைக்கவே நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் கூட பின், அதாவது பின் அம்மை அறிந்தும் கூட, அதாவது உங்கள் அம்மை, அதாவது பார்வதி தேவி உருவாக்கி இருக்கின்றாள் ரகசியமாக.


அங்கு செல்லுங்கள் என்று. 


ஆனாலும் அனைவரும், அதாவது கிரகநாதர்களும் பின் சந்தோஷமாக எங்கு? எங்கு? என்று  செல்ல?!!! என்று 


ஈசனும்!!...

நிச்சயம் பின் இதற்கு முதலில் பின் அதாவது அறிந்தும் எதை என்று புரிய, அதாவது நிச்சயம் நீங்கள் சென்று கொண்டே இருங்கள். நீங்கள் சென்று கொண்டே இருங்கள்.


பலமான பின் அறிந்தும் கூட பின், அதாவது நடு!! நடு இரவு தன்னில்


===========================

# நள்ளிரவில் ஒரு ஒலி விசையானது வெடிக்கும். ஓம் !!!! என்று!!!

===========================


ஆனாலும் நேரத்திற்கு தகுந்த மாதிரி பல விஷயங்கள் மாறும்.


ஆனாலும் சரியான இவ்நேரத்தில், அதாவது பின் ஒவ்வொரு நாளும் ஒரு நேரத்தில் பின் பன்மடங்கு பின் ஒரு பின் ஒலி விசையானது வெடிக்கும்.

 

(ஒலி சத்தம் கேட்கும்)


பின் ஓம் !!!! என்று!!!


அங்கு எங்கு விழுகின்றதோ!? அங்கு நிச்சயம் தன்னில் கூட.


===========================

# என்பெருமான் ஆதி ஈசன் , இவ் ரகசிய இடங்களை கிரக நாயகர்களும் கூட சுலபமாக சொல்லவில்லை…ஆனால் குருநாதர் நாம் அனைவர்க்கும் மிக எளிதாக வாக்குகளில் உரைத்து வருகின்றார்கள். இதனை உணர்ந்து அவசியம் இவ் இடங்களுக்கு ஒரு குழு அமைத்து ஒற்றுமையுடன் செல்லுங்கள். வெற்றி வாகை சூட்டுங்கள்.

===========================




அதாவது சுலபமாக பின், அதாவது கிரக நாயகர்களும் சுலபமாக நீங்களே சொல்லிவிடுங்கள். 


ஈசனாரே, உங்களுக்கு  கட்டுப்பட்டு, அதாவது உங்கள் கட்டுக்குள் யாங்கள்!!  அதனால் அறிந்தும் கூட பின், அதாவது நீங்கள் என்ன சொல்கின்றீர்களோ அதேபோலே யாங்கள் நடக்கின்றோம். அதாவது அறிந்தும் கூட. 


இதனால் நீங்களே சுலபமாக சொல்லலாமே. 


===========================

# அனைத்தும் சுலபமாக கொடுத்துவிட்டால் அதற்கு எப்பொழுதும் மதிப்பு கிடையாது.

===========================


ஈசனும்!!!! பின் கிரகநாதர்களே, பின் அனைத்தும் சுலபமாக கொடுத்துவிட்டால் அதற்கு எப்பொழுதும் மதிப்பு கிடையாது.


அதனால் நீங்கள் தேடுங்கள். 


நீங்கள் தேடிக்கொண்டே இருந்தால் உங்களுக்கு பலம் அதிகமாகி நிச்சயம் நீங்களும் கலியுகத்தில் அனைவரையும் வெல்லலாம்.


உங்களுக்கு பின் வருங்காலத்தில் இதோ பின் நீங்கள் இப்பொழுது வந்து கேட்கின்றீர்களே பின் நிச்சயம் எப்பொழுதும் இது நடக்காது.


அதனால் நீங்கள் தான் தேட வேண்டும் என்று.


===========================

# அன்னை பார்வதி தேவியிடம் முறையீடு 

===========================


பின் ஆனாலும் நவகிரக நாயகர்கள் மீண்டும் பார்வதி தேவியிடம் சென்று, அதாவது பின் யாங்கள் முறையிடுகின்றோம். அதாவது இவ்வளவு கஷ்டங்கள் உங்களுக்கு, அதாவது அடிமையாகத்தான் யாங்கள் செயல்பட்டோம்.


ஆனாலும் நீங்கள் சுலபமாக சொல்லவில்லை. யாங்கள் அம்மையிடம் செல்கின்றோம் என்று புறப்பட்டு விட்டார்கள்.


அறிந்தும் மீண்டும் பார்வதி தேவியிடம், தேவியே!!!!, பின் அனைத்தும் அம்மையே!! நீங்கள் தான். 


ஆனாலும் பின் இப்பொழுது இப்படி ஏது என்று அறிய ஈசனாரும் இப்படி சொல்லிவிட்டார். அதாவது தந்தையும் இப்படி சொல்லிவிட்டார் என்று.


===========================

# அன்னை பார்வதி தேவி வாக்கு -  

===========================


பார்வதி தேவியும்!!!.... நிச்சயம் அப்படியே ஆகட்டும். நீங்கள் வெல்ல வேண்டும். காலத்தை வெல்ல வேண்டும் அல்லவா? மனிதர்களை வெல்ல வேண்டும் அல்லவா? அதனால் தேடத்தான் வேண்டும்.


நவக்கிரக நாயகர்கள்!!!... அம்மையே, நீங்களே இப்படி சொல்லிவிட்டால் எப்படி? ஏது? என்று அறிய.


பார்வதி தேவியும்!!....

அதனால் பின், அதாவது உங்களுக்கு ஈசன் தந்தை தானே!!!!


தந்தைச் சொல் கேளுங்கள்.


நிச்சயம் அவரை விட இவ்வுலகத்தில் மந்திரம் இல்லை.


===========================

(தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை அதுபோல தாயின் சொல்லும் மந்திரம் தான்)

===========================


இதனால் பின், அதாவது இப்பொழுது யான் சொல்கின்றேன், அதுவும் பின் அம்மை போல் பின் மந்திரம் இல்லை.


இதனால் தேடுங்கள். தேடுங்கள் என்றெல்லாம்.


===========================

(நவக்கிரக நாயகர்கள் ஈசன் கூறிய விமோசன ஸ்தலம் தேடித் தேடி ஒவ்வொரு திருத்தலம் திருத்தலமாக!!!)

===========================

# திருவண்ணாமலை , மதுரை மீனாட்சி தேவி , பஞ்சபூத ஸ்தலங்கள் , ஜோதிர் லிங்கங்களில், இன்னும் கைலாயத்தில்!!!!

===========================





இதனால் எதை என்று புரிய. இவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட மீண்டும் பின் அண்ணாமலையில் முதலில் கூட வந்து எவை. மீனாட்சி தேவியிடம், அதாவது நிச்சயம் பல வழியில் கூட பின் பஞ்சபூத ஸ்தலங்கள் இன்னும் எதை என்று அறிய. பின், இன்னும் அதாவது ஜோதிர் லிங்கங்களில்!!! இன்னும் கைலாயத்தில்!!!!


ஆனாலும் ஒன்று கூட தென்படவில்லை. எங்கு ஏது என்று அறிய. 




===========================

# மீண்டும் தந்தையிடம் முறையீடு 

===========================


ஆனாலும் மீண்டும் பின் அலறியடித்து ஓட்டம் கண்டனர்.


பின், அதாவது ஈசனாரே, தேவியாரே, எப்படி? இப்படி செய்தால் எங்கும் பின் சத்தம் கேட்கவில்லை.


அங்கும் இங்கும் திரிந்தோம்.


ஆனாலும் பின் இவ்வாறு திரிந்து திரிந்து திரிந்து கொண்டே இருந்தால் காலமும் போய்விடும். அவ்வளவுதான் வாழ்க்கை என்று.


நீங்கள் விளையாடுகின்றீர்களா??? என்ன!!! என்று.



ஈசனாரும்!!!, பின் குழந்தைகளே, அப்படி இல்லை. 


தேடுங்கள்!!!!!. 


ஏனென்றால் கலியுகத்தில் பாவம் புண்ணியம் நிச்சயம் யான் தருவேன்.


அதற்கு ஏற்றார் போல் நீங்கள் தான் செய்ய வேண்டும்.


அதனால்தான், இவ் பக்குவத்தை உங்களுக்கு அளிக்கின்றேன்.


அதனால்தான். பின் வெறும் சுலபமாக கிடைத்துவிட்டால் நீங்கள் அதை எப்பொழுதுமே செய்ய மாட்டீர்கள்.


ஏதோ ஈசன் கொடுத்துவிட்டார் என்று நிச்சயம் தன்னில் கூட பின் சரியான மனிதர்களுக்கு பின் எவை என்று கூட சரியான பாவம் புண்ணியம் பார்த்தும் யான் வணங்கினாலும் நிச்சயம் எப்பொழுது தர வேண்டும்??, எப்பொழுது தரக்கூடாது??? என்றெல்லாம் யோசிக்காமல் செய்து நிச்சயம் மீண்டும் பாவம் பின் பெற்றுக் கொள்வார்கள் மனிதர்கள்.


இதனால்தான் இதை நிச்சயம் மீண்டும் செல்லுங்கள் என்று.


===========================

# சிறிய “ஓம்” சத்தம் கிடைத்தது ராமேஸ்வரத்தில்….

===========================



இதனால் திரிந்தார்கள். அங்கும் இங்கும் ராமேஸ்வரத்தை அடைந்தார்கள்.


ஆனாலும் சிறிது விடை கிடைத்தது அங்கு. 


ஆனாலும் சிறிது சத்தம். 


ஆனாலும் அவையும் கூட பின் போக்க முடியவில்லை.


ஆனாலும் பின் அனைவரும், அதாவது பின் எதை என்று அறிய. பின் ஆனாலும் சத்தம் கேட்டது.


நீராடு.




===========================

( நாம் இங்கு ராமேஸ்வரத்தில் சத்தம் கேட்கின்றது இங்கு நீராடுவோம் என்று)

===========================


நிச்சயம் மீண்டும் ஈசனிடத்தில் சென்றார்கள்.


பின் குளித்துவிட்டோம். குளித்துவிட்டோம். அறிந்தும் இதனால் இங்குதான் சத்தம் கேட்டது என்று.


ஈசனும் நவகிரக நாயகர்களை பார்த்து!!!....


===========================

# ராமேஸ்வரத்தில் கேட்ட ஒலி - ஒரு சிறிய எதிரொளிப்பு தான்…

# ஆனால் உண்மையான இடம் வேறு எங்கோ உள்ளது 

# அது  இவ் வாக்கு உரைத்த தலம் 

===========================


ஆனாலும் பின் இவை இல்லை.


ஆனாலும் இவை ஒரு எதிரொளிப்பு தான்.


ஆனாலும் மீண்டும் பெரிய பின் ஒரு எதை என்று நீங்கள் நிச்சயம் தேட வேண்டியதுதான்.என்று ஈசனும் கூற!!!!


நவகிரக நாயகர்களும் ஆனாலும் நிச்சயம் இவ்வாறெல்லாம் எதை என்று கூற பின் ஈசனே உங்களிடத்தில், அதாவது செல்லுபடி ஆகாது. 




===========================

# பிரம்ம தேவரிடம் முறையிட்ட நவகிரக நாயகர்கள் 

===========================


நிச்சயம் பிரம்மாவிடத்தில் செல்கின்றோம் என்று. எதை என்று அறிய. பிரம்மாவிடத்தில் சென்றார்கள்.


ஆனாலும் பிரம்மனே, இவ்வாறு ஈசனாரும், நிச்சயம் பார்வதி, பின் அம்மை, அம்மையும் நிச்சயம் எங்களை இவ்வாறு அலைக்கழித்து விட்டனர்.


அதனால் நீங்களாவது ஒரு வரத்தை தாருங்கள். நிச்சயம் எதை என்று இப்படி பாருங்கள். எப்படி ஆகிவிட்டது.


நீங்கள் அழகாக எழுதி அனுப்புகிறீர்கள்.


நிச்சயம் எதை என்று புரியாமலும் கூட யாங்கள் மனிதர்களுடைய பாவங்களால் இப்படி ஆகிவிட்டோம் என்று.


===========================

# பிரம்ம தேவர் :- அம்மையப்பன் சொல்வதை முதலில்  செய்யுங்கள் 

===========================


பிரம்மனும் நவகிரக நாயகர்களை பார்த்து!!! நிச்சயம் ஈசனுக்கு அறிந்தும் கூட பின் தாயாருக்கு நிச்சயம் பின், அதாவது அப்படித்தான், அதாவது முதலில் அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை செய்யுங்கள்.


பின் பின்பு எதை என்று யான் கொடுத்துவிட்டால் அவர்கள் கோபம் கொள்வார்கள். அறிந்தும் கூட 


நவகிரக நாயகர்கள் மீண்டும் சரி. பின் பிரம்மநாதரே, அவ்வளவுதானா என்று.


===========================

# விஷ்ணு பகவானிடம் முறையிட்ட நவகிரக நாயகர்கள் 

===========================




 நிச்சயம் யாங்கள் காக்கும். பின் விஷ்ணுவிடம் செல்கின்றேன் என்று.


மீண்டும் விஷ்ணுவிடம் சென்று தெரிவித்தனர்.


ஆனாலும் விஷ்ணுவும் இருவர்கள் (ஈசனும் பிரம்மனும்) எதை என்று அறிய. நிச்சயம் அவர்கள் படைக்கின்றார்கள்.


அறிந்தும் கூட யான் காக்கப் போகின்றேன். அவ்வளவுதான் எனக்கு வேலை.


உங்களை காக்கப் போகின்றேன். ஆனாலும் பின் அவர்கள்தான் அனைத்தும் மாற்ற வேண்டும் என்று.


===========================

# கிரகங்களின் பெயர்ச்சி ரகசியங்கள் - கலியுகத்தில் முதல் முறையாக…….

===========================




===========================

# அடியவர்களே - இந்த இடத்தில் குருநாதர் வாக்கை நன்கு உள்வாங்கி உணரவும். மனிதர்களுடைய கர்மா வினைகளால் பாவங்களால் கிரகங்களுக்கும் தாங்க முடியாத சூழ்நிலை ஏற்படுகின்றது.. அவர்களுக்கு சுமை ஏற்படுவதால் அவர்கள் அடிக்கடி பெயர்ச்சி ஆகிக் கொண்டே இருக்கின்றனர். இந்த ரகசியம் கிரகங்கள் ஏன் பெயர்ச்சியாகின்றது என்பதற்கான ரகசியம் குருநாதர் இந்த இடத்தில் நமக்காக தெரிவித்துள்ளார் அனைவரும் உணர்ந்து கொள்ளவும்)

===========================


நவகிரக நாயகர்களும் ஆனாலும் இப்படியா என்று அலைந்து திரிந்தும் அங்கும் இங்கும் சென்றனர். ஓடோடி சென்றனர்.


ஆனாலும் திரிந்து இதற்காகத்தான் கிரகங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றது சொல்லிவிட்டேன்.


எதை என்று புரிய. இதனால் அங்கும் இங்கும் அலைந்து ஆனாலும் அங்கங்கு தங்கி எதை என்று ஓர் வருடமோ, இரு வருடமோ, இன்னும் பல வருடமோ என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட!!!


===========================

# கிரக பெயர்ச்சிகள் மனிதர்களுக்கு ஜாதகத்தில் ஏற்படும் திசைகள்.

===========================




இவைதான் நிச்சயம் திசையாக, திசையாக மாறி வந்து கொண்டே இருக்கின்றது. இதுதான் எவை என்று கூட கிரகநாதர்களின் தத்துவம்.


ஆனாலும் நவகிரக நாயகர்களும் இதற்கு விடிவே இல்லையா!????? என்றெல்லாம் பின் யோசித்து!!!


===========================

# மீண்டும் அம்மையப்பனிடம் வந்த நவகிரக நாயகர்கள் 

===========================




மீண்டும் ஈசனாரிடமும் பின் எவை என்று அறிய  பார்வதி தேவியிடம் வந்தனர். 


ஈசனும் பார்வதி தேவியும் நவகிரக நாயகர்களை பார்த்து

பின் நிச்சயம் பின் கேட்டனர்.


நீங்கள் அனைவரிடமும் சென்றீர்களே. அனைவரும் பின் நிச்சயம் தெரிவித்தார்களா என்ன???. என்று!!!


பின் தாயே, தந்தையே, போதும் நிறுத்துங்கள்.


உங்களை விட எங்களுக்கு யாரும் இல்லை. 


நீங்களே சொல்லுங்கள் என்று

.

===========================

# அன்னை பார்வதி தேவி உரைத்த ரகசிய இடம் 

===========================


ஈசனும் பார்வதி தேவியும் நவகிரக நாயகர்களை பார்த்து!!! 


ஆனாலும் கடைசி ஒரு வாய்ப்பு நிச்சயம் தன்னில் கூட தெரிந்துவிடும் என்று. 


நிச்சயம் எவ்வாறு அறிந்தும் கூட எதை என்று புரிய இங்கு சரியாகவே, அதாவது நெருங்க, நெருங்க, அதாவது எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட(இந்தோனேசியாவில்)




பின், அதாவது எவை என்று கூட அடி தன்னில் கூட கடல் தன்னில் அடியில் தன்னில் கூட நெருங்க.


ஆனாலும் நிச்சயம் எதை என்று புரிய. பின் சத்தம் கேட்டது.


===========================

# இந்தோனேசியாவிற்கு வந்த நவகிரக நாயகர்கள் 

===========================


ஆனாலும் எவை என்று கூட தேடி வந்தனர். இங்கு!!!


எவை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட பின், அதாவது பின் இங்கு தண்ணீர் கொட்டியது. 




===========================

# (நவகிரக நாயகர்களும் உணர்ந்தார்கள்)

===========================


பின் எதை என்று கூட இங்குதான் என்று நிச்சயம் தன்னில் கூட. 


ஆனாலும் பின், அதாவது இதேதான் என்று யோசித்தார்கள்.


===========================

# அம்மை அப்பன் தரிசனம் கிட்டியது 

# “புரா தீர்த்த சுதா மாலா (Pura Tirta Sudamala)” - இதுதான் அவ்விடம் 

என்ற ரகசியத்தை எடுத்து உரைத்தார்கள் 

===========================


ஆனாலும் பார்வதியும் பின் ஈசனும் வந்து நிச்சயம் இதுதானப்பா.என்று!!!


நவகிரக நாயகர்களே!!! நிச்சயம் தன்னில் (உங்கள் வினைகளை) விலக்கிக் கொள்ளுங்கள் என்று.




===========================

# நவகிரக நாயகர்களுக்கே பாவ விமோசனம் கொடுத்த இவ்நீர்

“புரா தீர்த்த சுதா மாலா (Pura Tirta Sudamala)”

===========================

#  மனிதர்களுடைய பாவத்தையும் தீர்க்கும்  

===========================

# அடியவர்களே அவசியம் இங்கு சென்று பாவத்தை தொலைத்து வெற்றி வாகை சூடுங்கள்..

===========================




நிச்சயம், அதாவது நிச்சயம் இங்கு எவை என்று அறிய. அதாவது கிரகநாதர்களுக்கு பாவ விமோசனம் கொடுத்த இவ்நீர் நிச்சயம் மனிதர்களுக்கும்!!!!

(மனிதர்களுடைய பாவத்தையும் தீர்க்கும்)

 எதை என்று கூற பின் தெரிந்தும் எவை என்று கூற.




===========================

# கிரகங்கள் வழி  விட்டால்தான் இங்கு வர முடியும் 

===========================




காலத்தை வெல்ல வேண்டுமென்றால் நிச்சயம் கிரகங்களும் கூட…


விட்டு நிச்சயம் வந்தால் தான்!!! இங்கு நீராட முடியும். பல பலன்கள் பெற முடியும் சொல்லிவிட்டேன்.


ஆசிகள் !!!


இன்னும் ரகசியங்கள் இங்கு சுற்றி இருக்கின்றது.


அவையெல்லாம் வருங்காலத்தில் சொல்வேன்.

மக்களுக்கு பயன்படட்டும். கலியுகத்தை வெல்லட்டும். 


ஆசிகள் ! 


ஆசிகள் !!


ஆசிகள். கோடிகளப்பா.!!!




===========================

# சுவடி ஓதும் இடத்தில், ஒரு அடியவர் மூலம்  வந்த நேரடி குறிப்புகள் 

===========================

நவகிரக தோஷம் போக்கும் தலம்:


குருநாதரின் திருவாக்குப்படி, இந்தத் தலம் மிகவும் விசேஷமானது. நவகிரகங்களுக்கு ஏற்பட்ட சாபங்களும், தோஷங்களும் நீங்கிய புண்ணிய பூமி இது. மனிதர்களுக்கு ஜாதக ரீதியாக இருக்கும் நவகிரகத் தோஷங்களை நீக்கும் வல்லமை இத்தலத்துத் தீர்த்தத்திற்கு உண்டு என்பது சித்தர்கள் கூறும் ரகசியம்.


பள்ளத்தாக்கின் புனித ஊற்றுகள்:

பள்ளத்தாக்கின் மடியில், நதியின் சலசலப்பிற்கு இடையே அமைந்துள்ள இந்த ஆலயத்தில் 12 புனித ஊற்றுகள் உள்ளன.


இது வழிபாட்டு தலத்துடன் கூடிய புனித ஊற்றுகள் அமைந்த இடம்..




===========================

# ஸ்தலம் பற்றிய விபரங்கள். 

===========================


வாக்குரைத்த  தலத்தின் பெயர் :- புரா தீர்த்த சுதா மாலா (Pura Tirta Sudamala)


கூகிள் மேப் லிங்க் :-

https://maps.app.goo.gl/Q8mhM51pmtwgxbbm6


வாக்குரைத்த ஸ்தலத்தின் முகவரி:-  புரா தீர்த்த சுதா மாலா, பெபலாங், பாங்லி, பாங்லி ரீஜென்சி, பாலி 80661, இந்தோனேஷியா


Address :- Pura Tirta Sudamala, Bebalang, Bangli, Bangli Regency, Bali 80661, Indonesia


புரா தீர்த்த சுதமாலா: 


வடக்கு பாலி யில் தியானம் மற்றும் சுத்திகரிப்புக்கான இடம்.


கடவுள்களின் தீவாக பாலி தீவு, ஆழமான வரலாறு மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்ட புனித கோயில்களுக்கு பெயர் பெற்றது. 


உயர்ந்த ஆன்மீக சக்தியை வெளிப்படுத்தும் கோயில்களில் ஒன்று புரா தீர்த்த சுதம். புலேலெங் ரீஜென்சியின் புலேலெங் துணை மாவட்டத்தில் உள்ள பன்யுஸ்ரி கிராமத்தில் அமைந்துள்ள இந்தக் கோயில், சுத்திகரிப்பு சக்தி கொண்டதாக நம்பப்படும் அதன் புனித நீரூற்று இருப்பதால் இந்துக்கள்  கவனத்தின் மையமாக உள்ளது.


புவியியல் ரீதியாக, புரா தீர்த்த சுதாமாலா பாலியின் வடக்குப் பகுதியில் , சிங்கராஜாவின் மையத்தில் உள்ள பன்யுஸ்ரி என்ற கிராமத்தில் , புலேலெங்கில் அமைந்துள்ளது . இந்த இடம் நகர மையத்திலிருந்து எளிதில் அணுகக்கூடியது , எனவே இப்பகுதிக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து பார்வையாளர்கள் அணுகுவது மிகவும் எளிதானது. புலேலெங் இயற்கை அழகு மற்றும் கலாச்சார செல்வத்தால் நிறைந்த ஒரு பகுதியாக அறியப்படுகிறது . அழகிய இயற்கை நிலப்பரப்புடன், இந்த கோயில் நெல் வயல்கள் மற்றும் நிழல் தரும் மரங்களின் மயக்கும் காட்சியையும், அமைதியான சூழ்நிலையையும் வழங்குகிறது, இது ஆன்மீக நடவடிக்கைகள் மற்றும் தியானத்திற்கு ஏற்றது.


புரா தீர்த்த சுதாமாலா:- 


புரா தீர்த்த சுதாமாலாவின் சிறப்பியல்பு அம்சம் அதன் புனித ஊற்று நீர் ஆகும் , இது நிற்காமல் தொடர்ந்து பாய்கிறது. இந்த நீர் தீர்த்த அமெர்தா அல்லது உயிர் நீர் என்று கருதப்படுகிறது, இது உடலையும் மனதையும் சுத்திகரிக்க முடியும்.


(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 14.03.2026 அன்று இந்தோனேசியாவின் அழகிய தீவான பாலியில் உரைத்த   வாக்குகள்  தொடரும் …….)


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.