“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Monday, March 30, 2026

சித்தர்கள் ஆட்சி - 603 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - 14.03.2026 அன்று இந்தோனேசியாவின் அழகிய தீவான பாலியில் உரைத்த வாக்கு. பாலி ஆன்மீகப் பயணம் - நிறைவு பகுதி 10.

 இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 17.03.2026 அன்று இந்தோனேசியாவின் அழகிய தீவான பாலியில் உரைத்த   வாக்கு. பாலி ஆன்மீகப் பயணம் -  நிறைவு பகுதி 10


வாக்குரைத்த  நாள் :- 17.03.2026 (செவ்வாய்க்கிழமை) , (நான்காம்   நாள் ,  முதல்  தலம்)  -  ( DAY4 , 1st   PLACE )


வாக்குரைத்த ஸ்தலத்தின் முகவரி :- மெலஸ்தி பீச், ஜேல். மெலஸ்தி உங்கசான், உங்கசான், கேக். குடா தெற்கு, கபுபாதேன் பதுங், பாலி 80361, இந்தோனேஷி


கூகிள் மேப் லிங்க் (Google Map link)  :-

https://maps.app.goo.gl/321EsNPkVbkTwGit5


Address :- Melasti Beach, Jl. Melasti Ungasan, Ungasan, Kec. Kuta Sel., Kabupaten Badung, Bali 80361, Indonesia



( இவ் தொடர் வாக்கின் 10 பகுதிகளும் இங்கு அடியவர்கள் படிக்க வசதியாக கொடுக்கப்பட்டுள்ளது ................ 

சித்தர்கள் ஆட்சி - 594  - பகுதி 1
சித்தர்கள் ஆட்சி - 595  - பகுதி 2
சித்தர்கள் ஆட்சி - 596  - பகுதி 3
சித்தர்கள் ஆட்சி - 597  - பகுதி 4
சித்தர்கள் ஆட்சி - 598  - பகுதி 5
சித்தர்கள் ஆட்சி - 599  - பகுதி 6
சித்தர்கள் ஆட்சி - 600  - பகுதி 7
சித்தர்கள் ஆட்சி - 601  - பகுதி 8
சித்தர்கள் ஆட்சி - 602  - பகுதி 9
சித்தர்கள் ஆட்சி - 603  - பகுதி 10

)

=============================================

#  அன்புடன்  அகத்திய  மாமுனிவர்  வாக்கு 

=============================================


ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன் 


அப்பனே நலங்களாக கவலைகள் வேண்டாம், அப்பனே நல்ல விதமாக, அப்பனே நிச்சயம் தன்னில் கூட இன்னும் விவரிக்கின்றேன் என்பேன். அப்பனே பொறுத்திருந்தால் என்பேன் அப்பனே. 


ஏனென்றால் அனைத்தும் ஒரே முறையில், அப்பனே நிச்சயம் சொல்லிவிட்டாலும், அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவ் தேசம் இங்கிருந்து, அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின்  எதை என்று அறிய , அப்பனே பின் , அதாவது என் நாமத்திலே, அப்பனே பின்  எதை என்று கூற, பின்  நீண்டு காணப்படுகின்றது என்பேன் அப்பனே. 


இதனால் அப்பனே பின்  எவை என்று புரிய, அப்பனே அங்கும் சென்றால், பின்  நிச்சயம் சில ரகசியங்கள் தெரிவிப்பேன். 


=============================================

# அன்பு குருநாதர் பெயரால் ஆதி காலத்தில் “அகஸ்திரேலியா” என்று முன் காலத்தில் அழைக்கப்பட்ட பகுதி,   இதுவே தற்போது  ஆஸ்திரேலியா என்று அழைக்கப்படுகிறது.

=============================================


அப்பனே , இதனால் எதை என்று புரிய, அப்பனே , இதனால் அப்பனே நல்ல விதமாக, அப்பனே அனைத்து இடங்களிலும் கூட ஆசிகள் பெற்று தந்துவிட்டேன், அப்பனே. 


இதனால் அப்பனே எவை என்று புரிய, அப்பனே இன்னும், அப்பனே நிச்சயம் தன்னில் கூட வாக்குகள், அப்பனே பின்  இருக்கின்றது. பின்  நிச்சயம் பரப்புவேன், பொறுத்திருங்கள். 


…………………….


அப்பனே கவலை வேண்டாம் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.


முன்பே, அப்பனே நிச்சயம் யான் பின்  சொல்லிவிட்டாலும், அப்பனே பின்  அதையே, அப்பனே பின்  நினைத்து நினைத்து, அப்பனே அதனால்தான், அப்பனே பின் , அதாவது பின்  எவை என்று அறிய , அப்பனே பின்  சென்று கொண்டே இருங்கள். அப்பனே பார்த்துக் கொள்வோம். 


அப்பனே நல்ல விதமாக, இம்முறை ஆசிகள், அப்பனே நலமாகவே, அப்பனே நினைத்து ஆற்றல்களும், அப்பனே நிச்சயம் தன்னில் கூட அங்கங்கு, அப்பனே சென்ற இடங்கள் எல்லாம் சிறப்பு அப்பனே. 


அப்பனே இதனால் நல்ல விதமாக, அப்பனே ஆசிகள் இன்னும், அப்பனே நிச்சயம் தன்னில் இருக்கின்றது. 


பல இடங்கள், அப்பனே பல இடத்தில், அப்பனே சில ஆசிகளையும், அப்பனே கொடுத்து, அப்பனே பின்  இன்னும் ரகசியங்கள் எல்லாம், அப்பனே வெளிக்கொண்டு வருவேன். 


கவலைகள் வேண்டாம்.


கவலைகள் வேண்டாம்.


அடியவர் :- இந்த மேலஸ்தி பீச்சோட சிறப்புகள்?.


குருநாதர் :- அப்பனே எது என்று, அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய, அப்பனே எதை என்று புரியாமல் இருந்தாலும், எதற்கு அப்பனே பின்  அடுத்தடுத்த வாக்குகளில்  விவரிக்கின்றேன் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட 


அழகாக, அப்பனே எது என்று புரிய, அப்பனே இங்கு பின் , அதாவது நிச்சயம் தன்னில் ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு. 


அப்பனே இதனால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின்  சில, அப்பனே காந்தகங்கள், அப்பனே பின்  மேலிருந்து நிச்சயம் அங்கு எவை என்று அறிய, பின்  அங்கு, அதாவது அங்காரகன் ( செவ்வாய் )   அப்பனே நிச்சயம் தன்னில் சனியவன், அப்பனே நிச்சயம் ராகு கேதுக்கள், அப்பனே சூரியன் அழகாக, அப்பனே பின்  இங்கு, பின்  அதிக அளவு படுகின்றான் என்பேன் அப்பனே. 


எது என்று கூட இவ்வாறாக, அப்பனே படுகின்ற பொழுது, அப்பனே இவைதான், அப்பனே மனிதனுக்கு அதிக அளவு, அப்பனே நிச்சயம் தன்னில் பாதிப்புகள் ஏற்படுத்தும் என்பேன் அப்பனே. 


இதனால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின், அதாவது நீராட, அப்பனே பின்  இதன் தாக்கம் குறையும். 


அவை மட்டுமில்லாமல், அப்பனே மறைமுகமாக, அப்பனே இங்கிருந்து, அப்பனே சில, அப்பனே மைல் தொலைவிலே, அப்பனே எவை என்று புரிய, அப்பனே நிச்சயம் தன்னில் ஒரு பெரிய பாறை உள்ளது அப்பா, அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 


அங்கு, அப்பனே நல் சக்திகள் எல்லாம் அடங்கி உள்ளது என்பேன் அப்பனே. 


இதனால், அப்பனே அவ் நல் சக்திகள், அப்பனே பின்  அனைத்தும், அப்பனே பின்  இறைவனை வேண்டி, வேண்டி முக்திக்கான, அப்பனே பின்  எவை நிலையை இதனால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவை நிச்சயம் பின்  அதாவது அதிகாலையிலும் மாலை வேளையிலும் கூட வேண்டுகின்ற பொழுது, அப்பனே நிச்சயம் அவ் சத்தங்கள் எது என்று கூற, அப்பனே பின்  அப்படியே நிச்சயம் பின்  இங்கு வந்து……


அப்பனே இதனால், அப்பனே நிச்சயம் தன்னில் மனிதனுக்கும் ஆற்றல் பெறுகின்றது. 


இன்னும் ரகசியங்கள் என்பேன் அப்பனே 


பின், அதாவது அறிவியல் வடிவாக, அப்பனே விவரிக்கின்றேன். 


அதுமட்டுமில்லாமல், அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவர்கள் வணங்குவது, அப்பனே பின்  சுக்கிரன், அப்பனே சூரியன், அப்பனே சந்திரன், அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக, அப்பனே பின்  வணங்கி, நிச்சயம் தன்னில் கூட பல ஆற்றலை, நிச்சயம் தன்னில் கூட மனிதனுக்கு, அப்பனே பின்  வருவோருக்கெல்லாம் ஈந்து கொண்டே இருக்கின்றார்கள் அப்பனே. 


இன்னும், அப்பனே விவரமானதை இப்பொழுது போதும்அப்பா. முடித்துக் கொள்கின்றேன்.


அடியவர் :- ( அடுத்த முறை அங்க செல்ல ஆசி கேட்ட போது )


குருநாதர் :-  அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின்  ஆசிகள் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.


அடியவர் :- இப்ப இந்த இந்த தேசம் வந்து பார்த்தீங்கன்னா, நிறைய தீவுகள் இருக்கிறப்போ, கெட்ட சக்திகளோட இந்த தேசத்தை மட்டும் இறைவன் ஏன் பாதுகாக்கணும்? 


குருநாதர் :- அப்பனே அதாவது சொல்லிவிட்டேன் அப்பனே. பின்  இதற்கும், அப்பனே பின்  இங்கிருந்து, அப்பனே பின்  எவை என்று அறிய அப்பனே அதாவது என்னுடைய நாமத்திலே, அப்பனே அங்கு வரை பரவி இருந்தது என்பேன் அப்பனே. 


ஆனால் நடுவில், அப்பனே சில விஷயங்கள், அப்பனே நிச்சயம் தன்னில் கூட.


அப்பனே இதனால், அப்பனே பின்  இவையும் இணைக்கும் என்பது எல்லாம், அப்பனே பின்பு உரைப்பேன் அப்பனே. 


=============================================

# பாலி தீவில் இருந்து (ஆதி காலத்தில் “அகஸ்திரேலியா”) ஆஸ்திரேலியா வரை முன் காலத்தில் ஒரே நிலப்பரப்பாக இருந்தது. சில இடங்களில் கடல் நீர் உள் புகுந்து விட்டது. அதனால் இப்போது இவ் இடங்கள் தனி தனி தேசங்களாக உள்ளது. 

=============================================


அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின்  ஆற்றல்கள் ஏன், எதற்காக அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய, அப்பனே இப்பொழுது புரிந்து கொண்டாலும், ஆனாலும் எங்கு செப்பி இங்கு இணைத்தால், அப்பனே புரியும் என்பதை யான் வருங்காலத்தில் செப்புவேன். 



அடியவர் :-  ( இப்ப இங்க ஏதாவது முக்கியமான ஸ்தலங்கள் ஏதாவது விட்டுட்டோமா? அடுத்த தடவை பார்க்கிறதுக்கு. ) 


குருநாதர் :- அப்பனே எதை என்று புரிய? அப்பனே கவலை வேண்டாம். அப்பனே தேசத்திற்கு வந்தாலே, அப்பனே நிச்சயம் தன்னில் கூட எங்களுடைய ஆசிகள். அப்பனே நிச்சயம் தன்னில் கூட சித்தர்கள். அப்பனே.


………


கவலைப்பட தேவையில்லை என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 


எவை வந்தாலும் கடைசியில் செய்யப்போவது யான் தான் என்பேன் அப்பனே. 


அதனால் நிச்சயம் தன்னில் கூட எவை நன்மையோ அவையே செய்கின்றேன். கவலை விடு, கவலை விடு. 


(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் இந்தோனேசியாவின் அழகிய தீவான பாலியில் உரைத்த   வாக்குகள்  நிறைவு அடைந்தது…….)


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.