“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Friday, March 6, 2026

சித்தர்கள் ஆட்சி - 580 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - 01/மார்ச்/2026 அன்று நடந்த சென்னை சத்சங்க வாக்கு - பகுதி 8

 இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க  வாக்கு - பகுதி 8


வாக்குரைத்த  நாள் :-  01 / March / 2026 , ஞாயிற்றுக்கிழமை 

வாக்குரைத்த இடம் :-  சென்னை 


இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.



( இவ் சத் சங்கத்தின் அனைத்து பகுதிகள் இங்கு உங்கள் பார்வைக்கு. 

சித்தர்கள் ஆட்சி - 573 :-பகுதி 1

சித்தர்கள் ஆட்சி - 574 :-பகுதி 2

சித்தர்கள் ஆட்சி - 575 :-பகுதி 3

சித்தர்கள் ஆட்சி - 576 :-பகுதி 4

சித்தர்கள் ஆட்சி - 577 :-பகுதி 5

சித்தர்கள் ஆட்சி - 578 :-பகுதி 6

சித்தர்கள் ஆட்சி - 579 :-பகுதி 7

சித்தர்கள் ஆட்சி - 580 :-பகுதி 8

சித்தர்கள் ஆட்சி - 581 :-பகுதி 9

வாருங்கள் வாக்கின் உள் செல்வோம் 


=========================================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 

=========================================


ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 


================================================

( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் சென்னையில் 01/மார்ச்/2026 அன்று   நடந்த சத்சங்க  வாக்கு - பகுதி 8  )

================================================



குருநாதர் :- தாயே, இதனாலதான் நிச்சயம் தன்னில் கூட பின் கொடுத்துக்கொண்டே தான் இருக்கின்றேன். 


சுவடி ஓதும் மைந்தன்  :-   அதனால ஏதோ ஒரு விதத்துல நான் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன். அப்புறம்.. 


அடியவர் 13   :-  ( சரிங்க ஐயா, எங்க குடும்பத்தில் மூத்த தலைவரா  இருந்து குருநாதரே வழிநடத்த வேண்டும் . நான்  குருநாதரே  கதி என்று இருக்கேன் ……. ) 


குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட கவலை விடு. நிச்சயம் தன்னில் கூட எதை செய்ய வேண்டுமோ அதை செய்கின்றேன் நிச்சயம். 





==============================================

# மறைந்து நின்று தாக்கும் குல தோஷங்கள், முன்னோர்களுடைய  சாபங்கள்

=============================================


குருநாதர் :- பின் சில விஷயங்களை மனிதனுக்கு சொன்னால் புரியாது. பின் நிச்சயம் அவையெல்லாம் ஏன், எதற்கென்று சொன்னாலும் பல வழிகளில் கூட பின் வருத்தங்கள். 


குருநாதர் :- அதனால் நிச்சயம் தன்னில் கூட, குடும்பத்திலே பல பல தோஷங்கள். முன்னோர்களுடைய பின் எவை என்று கூற  சாபங்கள். அவை மட்டுமில்லாமல் குடும்பத்தில் எதை என்று அறிய அறிய  குல தோஷங்கள் எதை என்று அறிய  உரிய காலம் கடந்து வந்து கொண்டே. 



குருநாதர் :-  ஆனாலும் வந்துவிட்டாய் தப்பி எவை என்று கூட என்னிடத்தில். 


குருநாதர் :-  அதனால் அவையெல்லாம் உன்னால் பின் அதிவிரைவில் நீக்க முடியாது. யானே ஒவ்வொன்றாக நீக்கிவிட்டு செய்து கொண்டே தான் இருக்கின்றேன். கவலை விடு.


அடியவர் 13   :-  ஐயா. குலதெய்வம் ஆசீர்வாதம் இருக்குதா? 


குருநாதர் :- தாயே, நிச்சயம் பின் மற்றவர்களுக்கு நிச்சயம் எவை என்று புரிய, யான் சொல்லியதை பின் செய்துட்டு வா. சொல்கின்றேன். 


சுவடி ஓதும் மைந்தன்  :- சொல்லிட்டாரு. அடுத்துமா? 



===============================================

# அடுத்த அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார்கள்

===============================================


அடியவர் 14   :-  ( பின் வரும் பாடல் பாட ஆரம்பித்தார்கள் )


===================================================

திருச்சேறை திருமுறை பதிகம் 02

இறைவர் திருப்பெயர் : செந்நெறியப்பர், சாரபரமேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஞானவல்லி

திருமுறை : நான்காம் திருமுறை 73 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்

பாடல் எண் : 07

===================================================

 


விரித்தபல் கதிர்கொள் சூலம்

வெடிபடு தமரு கங்கை


தரித்ததோர் கோல கால

பயிரவ னாகி வேழம்


உரித்துமை யஞ்சக் கண்டு

வொண்டிரு மணிவாய் விள்ளச


சிரித்தருள் செய்தார் சேறைச்

செந்நெறிச் செல்வ னாரே.



குருநாதர் :- அப்பனே, நன்றாக பின் என்ன வேண்டும்? நீயே கேள். 


சுவடி ஓதும் மைந்தன்  :- என்ன வேணுமோ நீயே கேள். 


=======================================================

# எந்த  முயற்சிகள் எடுத்தாலும் , தடைபட்டால்  நிச்சயம்  முதலில்  குலதெய்வத்தின் சாபமே என்று எண்ணிக்கொள்ள வேண்டும் அனைவருமே. 

=======================================================


அடியவர் 14   :-  எந்த முயற்சி எடுத்தாலும் தடைபட்டிருக்கிறது. 


குருநாதர் :- அப்பனே, இதற்கு எது என்று புரியும்? அப்பனே, முயற்சிகள். அப்பனே, தடைபட்டால் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய முதலில் குலதெய்வத்தின் சாபமே என்று எண்ணிக்கொள்ள வேண்டும் அனைவருமே. 



சுவடி ஓதும் மைந்தன்  :-  ( "ஐயா, எந்த முயற்சி எடுத்தாலும் அது கைகூடல, ஒரு காரியமும் நடக்க மாட்டேங்குதுன்னா என்ன பண்றதுன்னு கேக்குறாரு. 'குலதெய்வம் சாபம்' இருக்கிறதா என்று ,  எல்லாரும் சொல்றாங்கன்னு இவரு பொதுவா ஒரு கேள்வியை முன்வைக்கிறாரு. கவனிங்க... ஆமா, இதையெல்லாம் நல்லா கேட்டுக்கோங்க. எல்லாருக்கும் பொதுவா அகத்தியர் சொல்றாரு. அதாவது, குலதெய்வத்தோட சாபம் இருக்குது ." ) 


============================================

# உங்கள் தடைகளை தவிடு பொடியாக்கும் - குலதெய்வ வழிபாடு ரகசியங்கள்.

============================================

# அனைத்து அடியவர்களும் உடும்பு பிடியாக , கெட்டியாக இந்த வாக்கை பிடித்து கொள்ளுங்கள் 

============================================ 


குருநாதர் :- இவை போக்க நிச்சயம் தன்னில் கூட பின் குலதெய்வத்தின் அருகே சென்று நிச்சயம் தன்னில் கூட. அங்கே பின் அதாவது பின் சமைத்து நிச்சயம், பல மனிதர்களுக்கும் கூட, பின் அதாவது நல்விதமாக பின் எதை என்று அறிய அறிய, பின் கொடுத்து, பின் அங்கிருந்து நிச்சயம் சில பிரசாதங்களையும் பின் அதாவது இல்லத்தில் எடுத்து வந்து, நிச்சயம் அவ் பிரசாதங்களுக்கு நிச்சயம் அனுதினமும் நிச்சயம் பூஜை செய்ய, செய்ய குலதெய்வத்தின் அருளாசிகளும் கிட்டும். 



சுவடி ஓதும் மைந்தன்  :-  ( "ஐயா அங்க பின்னாடி கேட்டாங்களே, அவங்களுக்காகவும் சேர்த்துதான் இதைச் சொல்றாரு. எல்லாருக்குமே ஒரு நாள் குலதெய்வக் கோயிலுக்குப் போய் அங்க நல்லா வணங்கிட்டு வரணும். முயற்சி எது எடுத்தாலும் தடைபடுதுன்னா, அதுக்கு என்ன பண்ணனும்னா, கோயிலுக்குப் போய் அங்கேயே சமைச்சு, எல்லாருக்கும் சோறு போட்டு அன்னதானம் பண்ணணும். அப்புறம் அங்க இருக்கிற மண்ணையும் பிரசாதத்தையும், ( குல தெய்வ ஆலய மண் , விபூதி , குங்குமம் , சந்தானம் …. )  எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வரணும். அதை வீட்ல கொண்டு வந்து வச்சுட்டு, சும்மா விடாம தினமும் அதுக்கு பூஜை பண்ணணும்னு ஒரு தீர்வா சொல்றாரு.")


குருநாதர் :- நிச்சயம் இவை தன் பின் ஐந்து மாதத்துக்கு மேலே. 


சுவடி ஓதும் மைந்தன்  :-  ஒரு அஞ்சு மாசத்துக்கு இது மாதிரி பண்ணனும் தொடர்ந்து. 


அடியவர் :- சரி, அது பெண் வீட்டார் ரெண்டு பேரு….. ( அதாவது இல்லத்தரசிகளுக்கு 2 குலதெய்வங்கள் ) 


குருநாதர் :- எதை என்று புரிய பின் நிச்சயம் தன்னில் கூட பின் அனைவருக்குமே பொருந்தும். 


சுவடி ஓதும் மைந்தன்  :- எல்லாருக்கும் பொருந்தும். 


குருநாதர் :- நிச்சயம் இவ்வாறாக பின் அவை மட்டுமில்லாமல் நிச்சயம் எவை என்று அறிய நிச்சயம் (................. *** தனி  வாக்கு ***** ...................) ஒன்றை பின் நிச்சயம் உன்னிடத்தில் வாங்கிக் கொள்வான் முருகன். 


===========================================

# அடிக்கடி திருச்செந்தூர் தரிசனங்கள் -  உங்களுக்கு வெற்றி நிச்சயம்

===========================================


குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட பின் திருச்செந்தூரை நிச்சயம் பின் எவை என்று அறிய பின் போய்க்கொண்டே இரு. போய்க்கொண்டே இரு. வெற்றி நிச்சயம் 


சுவடி ஓதும் மைந்தன்  :-  திருச்செந்தூர். அங்க அடிக்கடிக்கு நீங்க போய்க்கொண்டே இரு என்றார் வந்து, வெற்றி நிச்சயம் என்றார். 


===============================================

# “யான் சொல்லியதை செய் , நிச்சயம்  வெற்றிகள் உண்டு.”

===============================================


குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் கூட இதனால் அப்பனே பின் அறிந்தும் எவை என்று அறிய நிச்சயம் வெற்றிகள் உண்டு. பின் நிச்சயம் தன்னில் கூட கவலை இல்லை. யான் சொல்வதை பின் செய். 


========================================

# பின் வரும் வாக்கு அனைவருக்கும் பொதுவான வாக்கு. 

# இவ் வாக்கை உங்களுக்கு உரைத்த வாக்காக எடுத்து செயல்படுத்தவும்.

========================================


குருநாதர் :- அவை மட்டுமில்லாமல் நிச்சயம் தன்னில் கூட தாயே, நீயும் கூட. அதாவது பெண்கள் நிச்சயம் தன்னில் கூட. பின் முயற்சிகள், பின் தோல்வி நிச்சயம் தன்னில் கூட. மனக்குழப்பங்கள் நிச்சயம் தன்னில் கூட. பின் இவ்வாறெல்லாம். 


குருநாதர் :-  அனைவருக்குமே சொல்லுகின்றேன். 


==============================================

"விதியே கதி" என்று முடங்கி விடாமல், இந்த முறையான வழிபாட்டை அனைவரும் பின்பற்றினால்,  வாழ்வில் அனைத்து நலன்களும், தடையில்லா வெற்றியும் நிச்சயம் உண்டாகும்.

================================================


குருநாதர் :- நிச்சயம் அனுதினமும் பின் அதாவது பின் அதாவது அரச பின் இலையை தன்னில் கூட நன்றாக, நிச்சயம் தன்னில் கூட 108 பின் தீபங்களை ( அரச இலை மேல் தீபங்கள் )    பின் அதிகாலையில் ஏற்றி, நிச்சயம் தன்னில் கூட நன்முறைகளாக அதில் தன் பின் அதாவது உள்ளங்கையில் பின் பச்சை கற்பூரத்தையும் நிச்சயம் தன்னில் கூட நல்விதமாக. பின் நாயுருவி  வேரையும் நிச்சயம் தன்னில் கூட. பின் எதை என்று அறிய என்ன வேண்டுமோ, அதை தன் உள்ளங்கையில் வைத்து வேண்டிக்கொண்டு, நன்றாக நிச்சயம் தன்னில் கூட, பின் ராம ஜெபத்தை பின் எழுதி, பின் 108 அல்லது 1008 முறை பின் எழுதி. நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் நல்விதமாகவே எதை என்று அறிய ஒரு கையில் நிச்சயம் தன்னில் கூட பின் அவை தன் பிடித்துக் கொள்ள வேண்டும். மறுமுனை  எழுதிக்கொண்டு நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட இவ்வாறே செய்து செய்து வந்தாலே வெற்றி நிச்சயம். பின்பு ராமேஸ்வரத்தில் நிச்சயம் தன்னில் கூட எழுதியதை பின் சமர்ப்பித்து வந்தால் அனைத்து நலனும் உண்டு. இதை அனைவரும் பின்பற்றினால் ஆனால் விதி நிச்சயம் கதி. 



சுவடி ஓதும் மைந்தன், அடியவர்கள் உரையின் சுருக்கம்   :- ( அனைத்துத் தடைகளும் நீங்கி வெற்றி பெற, அதிகாலையில் 108 அரச இலைகளின் மீது 108 தீபங்களை ஏற்றி வழிபட வேண்டும். ஒரு கையில் அரச இலை, பச்சை கற்பூரம் மற்றும் நாயுருவி வேர் ஆகியவற்றை வைத்துக்கொண்டு, நிறைவேற வேண்டிய காரியத்தை மனதார வேண்டிக்கொள்ள வேண்டும். அந்தப் பொருட்களை ஒரு  கையில் பிடித்துக் கொண்டே, மறு கையால் "ஸ்ரீ ராம ஜெயம்" நாமத்தை 108 அல்லது 1008 முறை எழுத வேண்டும். அதாவது தீபம் எரியும் போதே.  இவ்வாறு எழுதி முடித்த “ஸ்ரீ ராம ஜெயம்” ஏடுகளைப் பின்னர் ராமேஸ்வரத்தில் கொண்டு போய் சமர்ப்பித்தால், விதியையும் மதியால் வென்று அனைத்து நலன்களையும் பெறலாம். ) 



குருநாதர் :- அப்பனே, நலங்களாகவே வெற்றியாகும் என்பேன். அப்பனே. ( ……………… **** தனி வாக்குகள் **** ……………..) அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, தருவான் அனைத்தும். 


அடியவர் 14   :-  ஆக்சுவலா காலையில எந்திரிக்கும் போது முருகன் நாமத்தை சொன்னாவே. அன்னைக்கு ஃபுல்லாவே பாசிட்டிவா போகுதுங்க. 


அடியவர் 14   :-  ( ……………… ) 


குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட யான் சொல்றதையும் செய். 


===============================================

# அடுத்த அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார்கள்

===============================================


அடியவர் 15   :-  ( பின் வரும் பாடல் பாட ஆரம்பித்தார்கள் - திருப்புகழ் 114 ஆறுமுகம் ஆறுமுகம்  (பழநி))


ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்

     ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி


ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி

     யார்கள்பத மேதுணைய ...... தென்றுநாளும்


ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது

     ஈசஎன மானமுன ...... தென்றுமோதும்


ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை

     யேவர்புகழ் வார்மறையு ...... மென்சொலாதோ


நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி

     நீலமயில் வாகவுமை ...... தந்தவேளே


நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய

     நீடுதனி வேல்விடும ...... டங்கல்வேலா


சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக

     தேவர்துணை வாசிகரி ...... அண்டகூடஞ்


சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம

     தேவர்வர தாமுருக ...... தம்பிரானே.


வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா . 



குருநாதர் :- தாயே, நிச்சயம் தன்னில் கூட கவலை விடு. சித்தர்கள் யாங்கள் பார்த்துத்தான் உனக்கு பின் என்ன கொடுக்க வேண்டுமோ, அதை கொடுக்கின்றோம். பின் இப்பொழுது எதையும் கேட்டு விடாதே. 


===============================================

# அடுத்த அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார்கள்

===============================================


அடியவர் 16   :-  ( பின் வரும் அபிராமி அந்தாதியின் 50-வது பாடல் பாட ஆரம்பித்தார்கள் ) 


நாயகி; நான்முகி; நாராயணி; கை நளின பஞ்ச

சாயகி; சாம்பவி; சங்கரி; சாமளை; சாதிநச்சு

வாயகி; மாலினி; வாராகி; சூலினி; மாதங்கி என்று

ஆயகி ஆதி உடையாள் சரணம் அரண் நமக்கே.


===========================================

# பாலாம்பிகை தேவியின் மந்திர ரகசியங்கள் 

# பாலாம்பிகை தேவியின் மந்திரம் - “ஓம் ஐம் கிலீம் சௌம்”

===========================================


குருநாதர் :- நல்விதமாக எம்முடைய ஆசிகள் கவலை வேண்டாம். நிச்சயம் தன்னில் கூட பின் எப்பொழுதும் பின் அமைதியாக இருந்து பின் பாலாம்பிகை தேவியின் பின் மந்திரத்தை நிச்சயம் தன்னில் சொல்லிக்கொண்டே வா. எதை என்று புரிய இதனால் பல விஷயங்கள் உனக்கு தெரியவரும். 


குருநாதர் :- ஆனாலும் நிச்சயம் பின் தெரிந்ததை நிச்சயம் பின் வெளியில் சொல்லாமல் அமைதியாக நிச்சயம் தன்னில் கூட இருந்தாலே பல வழிகள் பின் பிறக்கும். நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது நன்விதமாகவே பல வழிகள் பிறந்து எதை என்று புரிய. 


குருநாதர் :- ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின் எவை எதை என்று நீ சொல்கின்றாயோ எவை என்று புரியாமலும் இருந்தாலும் நிச்சயம் தன்னில் கூட பின் சொன்னாலே நிச்சயம் அவ்வார்த்தைக்கு மதிப்பில்லாமல் போய்விடும். 


குருநாதர் :- அதனால் நிச்சயம் தன்னில் கூட மனதிலே நிச்சயம் பாலாம்பிகையின் பின் மந்திரத்தை பின் ஜெபிக்கொண்டிருந்தாலே நிச்சயம் வலுவுகள் ஏறும். நிச்சயம் தன்னில் கூட பின் பின்பு சாதித்துக் கொள்ளலாம். அனைத்து விஷயங்களையும் கூட சொல்லிவிட்டேன். நல்விதமாகவே. 



============================================

# பாலாம்பிகை  அன்னை ஆலயத்தில் தயிர் அண்ணெயத்தை அனைவருக்கும் கொடு.  சில விஷயங்கள் பின் மாறும். 

============================================


குருநாதர் :-  அதனால் எதை என்று புரிய அறிந்தும் கூட எவை என்று அறிந்தும் கூட இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் பாலாம்பிகை பின் பின் தேவிற்கு மனமுவந்து நிச்சயம் தன்னில் கூட பின் அங்கு சென்று நிச்சயம் எவை என்று புரிய பின் சரியாகவே நிச்சயம் பின் தயிர் அண்ணெயத்தை பின் அனைவருக்கும் கொடு. நிச்சயம் எவை என்று புரிய சில விஷயங்கள் பின் மாறும். 


சுவடி ஓதும் மைந்தன் :- பாலாம்பிகை கோயில் கீழ வந்து அங்க போயிட்டு தயிர் சாதம் கொடுக்கணும். எங்காவது கோயில் இருந்தா தயிர் சாதம் வந்து கொடுக்கணும்ன்றாங்க. 


குருநாதர் :- அவை மட்டுமில்லாமல் நிச்சயம் தன்னில் எவை என்று அறிய பின் அறிந்தும் கூட பின் அதாவது சரியாகவே பின் ( *********************** ) சமர்ப்பணம் செய். நிச்சயம் எதை என்று புரிய.


சுவடி ஓதும் மைந்தன் :-  ஒரு கோயிலுக்கு ( *********************** )  வந்து சமர்ப்பணம் செய்யணும். ஏதோ ஒரு அம்பாள் கோயிலுக்கு வந்து நீங்க வந்து  ( *********************** ) வாங்கி கொடுக்கணும். 



================================================

# திருமூர்த்தி மலை  சென்று பின் வாருங்கள். நிச்சயம் சில மாற்றங்கள் ஏற்படுவது உறுதி. 

================================================


குருநாதர் :-  நிச்சயம் பின் எவை என்று அறிய இதனால் பின் எதை என்று அறிந்தும் கூட நல்விதமாகவே புரிந்தும் புரிந்தும் கூட பின் எதை என்று அறிய என்ன தேவை என்பதை உணர்ந்து நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்து கூட பின் அதாவது பின் திருமூர்த்தி மலை எனும் திருத்தலத்திற்கு சென்று பின் வாருங்கள். நிச்சயம் தன்னில் கூட சில மாற்றங்கள் ஏற்படுவது உறுதி. 


===========================================================

திருமூர்த்தி மலை குறித்த முந்தைய வாக்கு :- 

https://siththanarul.blogspot.com/2025/11/1977.html

சித்தன் அருள் - 1977 - அன்புடன் அகத்தியர் - நரசிபுரா வாக்கு!

============================================================


சுவடி ஓதும் மைந்தன் :-   திருமூர்த்தி மலைன்னு ஒன்னு இருக்குது. அங்க போனா வந்து சில மாற்றங்கள் ஏற்படுவது உறுதி என்றார். 


=================================================

# உங்கள் மனதில் நினைத்த காரியங்கள் தடையின்றி நிறைவேறவும், ஒரு விஷயத்தை வெற்றிகரமாக உருவாக்கவும் உதவும் எளிய வெற்றிலை தீப வழிபாடு

=================================================


குருநாதர் :-  நன்முறைகளாகவே எதை என்று கூற எதை நினைத்து பின் எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் கூட எவை வேண்டுமோ அவை தன் பின் உருவாக்க நிச்சயம், அனுதினமும் பின் நல்விதமாகவே பின் வெற்றிலை தன்னில் கூட நல்விதமாகவே பின் மண் அதாவது இட்டு, மண் தீபத்தை எவை என்று ஏற்றிக்கொண்டே வந்தாலே, பின் எவ் காரியம் பின் நினைத்து பின் நிச்சயம் பின் காலையிலும் மாலையிலும் நிச்சயம் ஏற்றிக் கொண்டு வந்தாலே சிறப்பு தரும். அவ் விசயம் நடக்கும். 



சுவடி ஓதும் மைந்தன் :-  ( "ஐயா, ஒரு காரியம் நடக்கணும்னா எதை நினைச்சு என்ன பண்ணணும்னு தெளிவா சொல்றாரு பாருங்க. நம்ம மனசுல என்ன நினைச்சு ஒரு விஷயத்தை உருவாக்குறோமோ, அது நல்விதமா நடக்கணும்னா தினமும் ஒரு முறையைச் சொல்லித்தர்றாரு. வெற்றிலை மேல கொஞ்சூண்டு மண்ணை வச்சு, அதுல மண் தீபத்தை ஏத்தி வழிபாடு செய்யணும். காலையிலும் மாலையிலும் விடாம அந்தத் தீபத்தை ஏத்திக்கிட்டே வந்தா, நீங்க எந்தக் காரியத்தை நினைச்சு அதைச் செய்றீங்களோ, அந்த விஷயம் நிச்சயம் நடக்கும், அது நல்ல சிறப்பைக் கொடுக்கும்னு உறுதியா சொல்றாரு." ) 


====================================================

# உங்கள் எண்ணங்களை வெற்றி ஆக்கி  தரும் வழிபாட்டு ரகசியங்கள் 

# வெற்றிலை மேல் மண் அகல் தீபம் + சிவபுராணம் + அபிராமி அந்தாதி ஓதுதல்

====================================================


குருநாதர் :-  நல்விதமாக பின் அவ்வாறாக நிச்சயம் தன் நிச்சயம் தன்னில் கூட பின் அப்பொழுது பின் எவை என்று அறிய நிச்சயம் அதாவது திருவாசகத்தை நிச்சயம் பாடிக்கொண்டு நிச்சயம் அதாவது சிவபுராணத்தை அழகாக, பின்பு இவை தன் முடித்து, பின் அபிராமி அந்தாதியும் ஓதிக்கொண்டு வந்தாலே வெற்றி தரும் ஆசிகள். 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்படி விளக்கு ஏற்றி வச்சிட்டு, சிவபுராணம் பாடிக்கிட்டு அடுத்து என்ன பண்ணனும்? அபிராமி அந்தாதியை நீங்க படிக்கணும். அப்படி படிச்சிட்டே வந்தீங்கன்னா கொஞ்சம் என்ன பண்ணனும்? நீங்க நினைச்சு பாருங்கள் என்னவோ அது வெற்றி தந்துரும்ன்றார். 


=====================

# திருமாள்பூர் ஆலயம் 

=====================


குருநாதர் :-  நலங்கள் ஆசிகள் கவலை வேண்டாம். நான் சொல்லியதை நிச்சயம் ஏற்று நடங்கள். பின் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் எதை என்று அறிய பின் எவை என்று புரிந்தும் கூட நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது திருமாள்பூர் எனும் இடத்திற்கு பின் ஏறி இறங்க. 



குருநாதர் :-  எதை என்று நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக நிச்சயம் யான் சொல்லியதை ஏற்று பின் ஏதாவது எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட (.............) பின் சித்திரையில் நீங்க நீங்கள் எதை என்று புரிய பின் நல் பின் அம்பாளுக்கு நிச்சயம் பின் எவை என்று கொடுத்து விடுங்கள். பின்பு யான் உரைப்பேன் சில ரகசியங்களும் கூட. 


==================================================

# எந்த ஒரு ஆலயம் செல்வதாக இருந்தாலும் , அவ் ஆலயத்தை நிச்சயம் நினைத்து உருகி உருகி பின் பாடல்களை பாடிக்கொண்டே வரவேண்டும்.

=================================================


குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் நல்முறையாகவே பின் எவ்வாறாக திருத்தலத்திற்கு நிச்சயம் தன்னில் கொடுக்கின்றீர்களோ? நிச்சயம் தன்னில் கூட அனுதினமும் நிச்சயம் பின் எவை என்று ஒரு திருத்தலத்தை நினைத்து நிச்சயம் உருகி உருகி பின் பாடல்களை பின் பாடிட்டே 



சுவடி ஓதும் மைந்தன் :- முதல்ல நீங்க ஒரு கோயிலை  செலக்ட் பண்ணிடனும். மனசுல டெய்லி நினைச்சு கும்பிட்டு பாடி பாடிக்கிட்டே எதுவும் நினைக்காம வரணும். புரியுதுங்களா? 


==============================================

# யான் சொல்வதை ஏற்று நடங்கள். நல்முறையாக மாற்றங்களே உண்டு.

==============================================


குருநாதர் :-  நிச்சயம் எவை என்று புரிய பின் எவை என்று அறிந்து இதனால் கவலைகள் இல்லை. நல்முறையாக மாற்றங்களே உண்டு. பின் யான் சொல்வதை ஏற்று நடங்கள். 


குருநாதர் :-  ஆசிகள், ஆசிகள் மீண்டும் இதை பின் நிச்சயம் பின் கொடுத்து மீண்டும் கேளுங்கள். பின்பு உரைப்பேன். 


===============================================

# அடுத்த அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார்கள்

===============================================


அடியவர் 17   :-  ( பின் வரும் பாடல் பாட ஆரம்பித்தார்கள் ) 


தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா

மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா

இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே

க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே


ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டமெல்லாம்

பூத்தாளை, மாதுளம்பூ நிறத்தாளை, புவி அடங்கக்

காத்தாளை, ஐங்கணைப் பாசாங்குசமும் கருப்புவில்லும்

சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே.


======================================

# அபிராமி அந்தாதி -  என்னென்ன தேவையோ, அவையெல்லாம், வாழ்க்கையில் அனைத்தும் கிட்டும்

======================================


குருநாதர் :-  அப்பனே, நிச்சயம், அப்பனே, அவளே  அனைத்தும் பார்த்துக் கொள்வாள் என்பேன் அப்பனே. நலன்களாக அப்பனே அபிராமி என்ற அப்பனே, பாடலை பாடிக் கொண்டே இரு. அனைத்தும் நடக்கும். அப்பனே, ஒரு தீபத்தை ஏற்றி, அப்பனே, நிச்சயம், பாடிக்கொண்டே இரு. அப்பனே, வாழ்க்கையில் அனைத்தும் கிட்டும். அப்பா. என்னென்ன தேவையோ, அவையெல்லாம்.


ஒரு அடியவர் :- ஒவ்வொரு ஆண்டும் வரும் வெயில் காலத்துல வந்து நீர் மோர் தானம் செய்யணும்னு நினைப்பேன். ஆனா அதை செய்யறதுக்கு தைரியம் வரல. 


குருநாதர் :-  அப்பனே, கவலை விடு. நிச்சயம், தன்னில் வேண்டிக்கொள். அப்பனே, நிச்சயம், அனைவரும் செய்ய வேண்டும் என்று, அப்பனே, தானாக வந்துவிடும். 


சுவடி ஓதும் மைந்தன் :- இது எல்லாரும் வந்து செய்யணும்பா. இந்த உலகத்துல இப்படி இருக்குது, அப்படி இருக்குதுன்னு சொல்லிட்டு நீங்க நினைச்சுக்கிட்டீங்கன்னா, உங்களுக்கும் தானா வந்துரும்னு சொல்றாரு. அதை நீங்களும் பண்ணுவீங்க, பண்ணுவீங்கன்னு பிள்ளைக்கு, 



குருநாதர் :-  ( *.*.*.*.*.*.*  தனி வாக்குகள்  *.*.*.*.*.*.*)


===============================================

# அடுத்த அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார்கள்

===============================================


அடியவர் 18   :-  ( பின் வரும் பாடல் பாட ஆரம்பித்தார்கள் ) 


( இவ் அடியவர் அருமையாக இவ்வாறு ஆரம்பித்தார். )


இறைவா, நீயே அனைத்தும்.  இறைவா, நீ நன்றாக இருக்க வேண்டும். 


திருப்புகழ் - திருச்செந்தூர்

இராகம்: கௌளை

தாளம்: கண்ட நடை (தத்தத் தந்தன தந்தன...)


பாடல் வரிகள்:

இரட்டி தர்மம் பிரபாவம் உடைய

பயாற்றி யோடிகள் கூட்டிக்கொள் - வஞ்சன்

பொன் வந்திட ராவணன் உபந்தன்

திக்வரி தேகரி வஞ்சன் பொன் - வஞ்சரி


யாமென வெகு சேரி வந்தம்பும்

பொங்கிய தாகவே திக்கும் தன் - சம்பிரதாயம்

வந்தம்பும் பொம்பள பேசியும் வெகு

ரேகை வெஞ்சன் பின் சன்ரைசை - போதுக


ரங்கந்து சூரணம் போலவே குன்றும்

குன்றும் தர தார்வரம் மகம் வீசி

வெண்டல்லு கண்களினாலது கர்த்தங்கன்

கந்தர மார்போடு வெஞ்சந்து - சிந்தனி


சரசரன் வகை சேர உஞ்சன் என்று

திரிசி நாட்டி விழுந்தங்கும் - சென்றே

மதுக்கள் நொந்தும் என்றிட வேதசை

நிலம் போலே விண்டுங்கும் - துஞ்சில


கோடிகள் தின்னின்று நெருங்குறி

போடுவேன் அத்தம்பும் கொண்டுவேன் - மாதவன்

வருவோனே தஞ்சம் தன் சந்திர என்பதி

கொஞ்சம் கோன் சந்திர ஏயது - தண்டின்றி


பண்பு வீடது தருவாய் சங்கங்கன்

சங்கையில் சூழ்கட மெங்கைக்கும் - பொங்க

முகாவளி தந்தங்கும் செந்தில்

வாழ்வியல் பெருமாளே.


( கருணைக்கடல் இவ் அடியவருக்கு அற்புதமாக வாக்குகள் அருளினார்கள் ) 


===============================================

# வாழ்வில் ஏற்படும் முட்டுக்கட்டைகளுக்கும் வருத்தங்களுக்கும் காரணம், முந்தைய பிறவிகளில் முன்னோர்கள் செய்த சில வினைகள் அல்லது குடும்ப தோஷங்கள் இவ் அடியவர் தலைமேல் விழுந்திருப்பதுதான்

===============================================


குருநாதர் :-  ( ********** தனி வாக்கு ……………………… ******  ) 


 …………………………………

…………………………………

…………………………………


குருநாதர் :-  நிச்சயம், தன்னில் கூட அனுபவித்தே தீர்க்க வேண்டும். ஆனாலும் கவலைகள் வேண்டாம். 


குருநாதர் :-  ஆனாலும் இறைபலங்கள் அதிகம் என்பேன். 


குருநாதர் :-  அதனால் தப்பித்துக் கொள்ளலாம். எளிதில் கூட கவலைகள் இல்லை. சில நிச்சயம், நிச்சயம், தன்னில் கூட பின் சில காரியங்கள் தடைபடும். ஆனாலும் வெற்றி உண்டு. 


…………………………………

…………………………………

…………………………………


குருநாதர் :-  ( **** ஒரு  அம்பாள் ஆலயம் செல்ல வாக்கு , மற்றும் குரு போல ஒரு ஞானி உதவுவர் என்றும் வாக்கு **** ) 


குருநாதர் :- அப்பனே, இதனாலதான் அப்பனே, நிச்சயம் தன்னுடைய கவலைகள். நிச்சயம் எவை என்று புரிய. அப்பனே, அவையெல்லாம் யானே நீக்குகின்றேன் உங்களுக்கு தெரியாமலே. 


…………………………………

…………………………………

…………………………………


குருநாதர் :-  அப்பனே, எப்பொழுதும் எதை என்று அறிய. அப்பனே, நிச்சயம், தன்னில் கூட ஆசிகள் எப்பொழுதும் உண்டு. அப்பனே, கவலை வேண்டாம். நல்ல விதமாக. அப்பனே, இதனால்தான். அப்பனே, என் பிரச்சனைகள் ஏது எங்கு பின் செப்பிட வேண்டும் என்பதை எல்லாம் யான் அறிவேன் என்பேன். அப்பனே, 


==========================

# தேதியை வைத்து வாக்கு 

==========================


குருநாதர் :-  அப்பனே, பின் இன்றைய தேதி நீயே கூறு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இன்றைய தேதி நீயே கூறுன்றாரு. 


அடியவர் 18   :-   மார்ச் ஒன்றாம் தேதி. ( 01/03/2026 )


குருநாதர் :-  அப்பனே, நிச்சயம், தன்னில் கூட சூரியன் எவை என்று அறிய. அப்பனே, பின் நிச்சயம் பித்ரு காரகன். அப்பனே, பின் எவை என்று கூட தெரிந்துகொள். 


சுவடி ஓதும் மைந்தன் :-  சூரியன் யாரு? பித்ரு காரகன். அதனால வந்து என்ன பண்றாரு? வந்து சில விஷயங்களை வந்து இது பண்ணி, அவரே உங்களை கூட்டிட்டு போயிட்டு, அங்கங்க ஆசிகள் கொடுத்து, அது முடிக்கிறார். 


==========================

# நேரத்தை வைத்து வாக்கு 

==========================


குருநாதர் :-  அப்பனே, நேரத்தை பார். நேரத்தை பார். 


அடியவர் 18   :-   8:21 ஐயா. ( 8 மணி : 21 நிமிடம் )


குருநாதர் :-  அப்பனே, நிச்சயம், சனீஸ்வரன் கூட அனுபவத்தை பின் பெற்று தந்து கொண்டே இருக்கின்றான். அப்பனே, நிச்சயம்.  அதனால், அப்பனே, பின் ஞானி என்று சொன்னேனே. அப்பனே, மூன்று தெரிந்து கொண்டாயா? அப்பனே, 


=============================================

# வரும் காலத்தில், அப்பனே, சரி, இளைஞருக்கெல்லாம் இப்படி சொன்னால்தான் வாக்குகள் புரியும்

=============================================


குருநாதர் :-  ஏனென்றால், பின் வரும் காலத்தில், அப்பனே, சரி, இளைஞருக்கெல்லாம் இப்படி நிச்சயம் சொன்னால்தான் புரியும். அப்பா, 


சுவடி ஓதும் மைந்தன் :-  ( "ஐயா, இப்ப எல்லாரும் 'சயின்ஸ், சயின்ஸ்'னு சொல்றாங்களே, அங்க சனீஸ்வரன் ஒரு இடத்துல என்ன பண்ணாருன்னு பாருங்க. நீங்க என்னென்ன நினைக்கிறீங்களோ, அதுக்கெல்லாம் குறுக்கே வந்து அடிக்கடி முட்டுக்கட்டை போட்டுக்கிட்டே (முட்டி போட்டு) இருந்தாரு. ஆனா அப்பத்தான் ஒரு ஞானி ஒரு விஷயத்தைச் சொன்னாரு—அதாவது 'மூணு' என்ற எண் யாருன்னா, அது குரு பகவான். அந்த குருவானவர் என்ன பண்றாருன்னா, சனீஸ்வரன் எந்தத் தடையைக் கொடுத்தாலும், இவரு டக்குனு ஒரு வழியைக் காட்டி வழிநடத்துறாரு. சனீஸ்வரன் எதைச் செய்தாலும், பின்னாடியே ஒரு குருவோட 'ஆக்டிவேஷன்' இருந்துகிட்டே இருக்கு. அதனால, உங்களுக்குக் கிடைக்க வேண்டியதை அந்தக் குரு நிச்சயம் உங்ககிட்ட கொண்டு வந்து சேர்த்துருவாருன்னு ஒரு நம்பிக்கையைச் சொல்றாரு." ) 


========================================

# அனைத்தும் நேரத்தையும் கூட்டி வாக்கு 

========================================


குருநாதர் :-  அப்பனே, அனைத்தும் கூட்டு விடை. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அனைத்தும் கூட்டு ஒரு விடை சொல்லுன்றாரு. 


அடியவர் 18   :-  அனைத்தையும் 


8 மணி : 21 நிமிடம்


8 + 2 + 1 = 11


11 = 1 + 1 = 2 


2 = சந்திரன்


ஐயா, ரெண்டு வருது. சந்திரன், சந்திரன். 


குருநாதர் :-  எவை என்று புரிய பின் அம்பாளை, பின் நிச்சயம், தன்னில் கூட எவை என்று அறிய சொன்னேன் அல்லவா?  நிச்சயம் எவை என்று கூற  புரிகின்றதா? 



===================================

# ஜோதிட கால புருஷ தத்துவத்தின் படி வாக்கு 

# ( 8 மணி : 21 நிமிடம் ) = 2 ( 2 ஆம் ராசி ) 

===================================


குருநாதர் :-  எதை என்று புரிய நிச்சயம், தன்னில் கூட கால, பின் தத்துவத்தின்படி, நிச்சயம், தன்னில் கூட. அப்பனே, பின் மேஷம் ஒன்று. அப்பனே, இரண்டாவதாக, பின் ரிஷபத்தை எடுத்துக்கொண்டு, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட அப்பனே. 




======================================

# ஜோதிட கால புருஷ தத்துவத்தின் படி - ரிஷப ராசி 2 ஆம் வீடு.

======================================


சுவடி ஓதும் மைந்தன் :- கால விதிப்படி, மேஷம் ஒன்னு. இந்த இரண்டு என்ன? ரிஷப ராசி. இப்ப ரிஷப ராசி. ஓகேங்களா? 


அடியவர் 18   :-  சரிங்க. 


==================================================

# ரிஷப ராசி 2 ஆம் வீடு  ( 2 ) - இதனை இப்போது ஆதாரமாக எடுத்து கொண்டு 

#  8 (மணி)  - ரிஷப ராசி யில் இருந்து 8 ஆம் ராசி  தனுசு ராசி ( குரு வீடு )

==================================================


குருநாதர் :-  அப்பனே, பின் இவ் ராசியிலிருந்து, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பின் எட்டாம் இடத்தை பார். 


சுவடி ஓதும் மைந்தன் :- இந்த ராசியிலிருந்து, ரிஷப ராசியிலிருந்து, எட்டாம் இடத்தை பார். தெரியுமா உங்களுக்கு? 


அடியவர் 18   :-   தனுசு ராசி. 


குருநாதர் :-  அப்பனே, புரிகின்றதா? அப்பனே, குரு என்று சொல்லிவிட்டேன். 


அடியவர் 18   :-  குரு வீடு 


சுவடி ஓதும் மைந்தன் :- சொல்லிவிட்டேன். புரியுதா? 


குருநாதர் :-  அப்பனே, நிச்சயம், எதை என்று அறிய? அப்பனே, நிச்சயம், தன்னில் கூட எவை என்று கூட ஒன்பதாம் இடத்தை பார். 


அடியவர் 18   :-  சனி, சனீஸ்வர பகவான். 


குருநாதர் :-  அப்பனே, நீதான் சொன்னாய். 


குருநாதர் :-  அப்பனே, எவை என்று கூற  புரிகின்றதா? எட்டு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப யார்? அவர்தான் உங்களுக்கு வந்து ஒன்பதாம் இடம் யாரு? ஒன்பதாம் இடம் சனீஸ்வர பகவான். மகரம், மகரம் வருது. அப்ப யார்? அவர் வந்து ஆலயத்திற்கும் குருநேயத்தும் உபதேசம் பெறுதல் யார் கொடுப்பாரு? ஐயா, புரியுதா? மேட்ச் பண்ணிட்டாரு. 


குருநாதர் :-  அப்பனே, இதுபோலத்தான் சிலருக்கு சொல்ல வேண்டும் என்பேன். அப்பனே, அப்பொழுதுதான் புரிந்து கொள்வார்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :-  சில பேருக்கு இப்படித்தான் சொன்னாலும், அப்பதான் புரிந்து கொள்வார்கள். 


======================================

# நேரத்தை வைத்தே ஜோதிடம் சொல்லும் முறை 

======================================


குருநாதர் :-  அப்ப, நிச்சயம், தன்னில் இப்பொழுது நேரத்தை பார். 


அடியவர் 18   :- 8:23. ஐயா,  ( 8 மணி : 23 நிமிடம் ) 


குருநாதர் :-  அப்பனே, அனைத்தும் கூட்டு 


அடியவர் 18   :- 13 ன்னு வருதுங்க. ஐயா, நாலு. ராகு.  ( 8 + 2 + 3 = 13. 1+3 = 4 )


குருநாதர் :- அப்பனே,  திடீர் என்று அனைத்தும் நடக்கும். அப்பா, போதுமா? 


அடியவர் 18   :-  நன்றி, நன்றிங்க. 





சுவடி ஓதும் மைந்தன் :-  ராகு என்ன பண்ணுவாரு? ஐயா, ராகு வந்து முன்னோர்கள் வந்து இதுக்கெல்லாம் செய்து இருந்தா என்ன பண்ணுவாரு? ஐயா, ராகு என்ன பண்ணுவாரு? திடீர்னு உங்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்துவார். 


குருநாதர் :-  அப்பனே, முடிந்துவிட்டது. நிச்சயம், தன்னில் கூட. அப்பனே, பின் உரைப்பேன். அப்பனே, எவை என்று கூட. அப்பனே, நிச்சயம், பின் இன்னும் வாக்குகள் உண்டு. 


அடியவர் 18   :-  ஐயா, ஒரே ஒரு விஷயம். ராமேஸ்வரத்துல முன்னோர்கள் வழிபாடு செஞ்சோம். அகத்தியர் சொன்ன எல்லா விஷயத்தையுமே செஞ்சோம். 


குருநாதர் :-  அப்பனே, நிச்சயம், தன்னில் கூட ராகு எதற்கு? அப்பனே, பின் குறிக்கின்றார். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ராகு எதனவா குறிக்கின்றாரு?  அதனாலதான் இப்ப ராகு எல்லாம் செஞ்சுட்டு. ஓகே, ஓகே. ஐயா, புரிஞ்சுக்கோங்க. சூப்பரா. உங்க அழகா நீங்க கேட்டீங்கன்னாவே தெரியும். உங்களுக்கு பதில் வந்து ஆன்சர் இதுலயே வந்துரும். 


அடியவர் 18   :-  நன்றிங்க. 


அடியவர் 18   :-  ( ………………. )


குருநாதர் :-  அப்பனே, பின் எவை என்று கூட பின் அனைத்தும் இப்பொழுது சொல்லியது. 


அடியவர் 18   :-  ( ………………. )


சுவடி ஓதும் மைந்தன் : ஐயா, சூப்பரா சொல்லி இருக்காரு. உங்களுக்கு எல்லாருக்கும் குடும்பத்துக்கும் தான் அது உண்டு. ஓகேங்களா? 



குருநாதர் :-  எதை என்று கூட கவலைப்பட தேவையில்லை. நிச்சயம், தன்னில் கூட நல்முறையாகவே அறிந்து கூட தியானம். அதாவது மூச்சு பயிற்சி செய்ய சொல். 



குருநாதர் :-  என்று புரிய. நிச்சயம், அப்பனே, பின் புரிந்து கொண்டு பின்பு கேள். 


===================================================

# கருணைக்கடல் வந்திருக்கும் அனைவருக்கும் வாய்ப்பு கொடுத்தார்கள் 

===================================================


குருநாதர் :-  அப்பனே, அனைத்திற்கும் பின் எவை என்று அறிய அனைவருக்கும் வாய்ப்பு. 


அடியவர் 18   :-  நன்றி , நன்றி அய்யா. அகத்திய பெருமானுக்கு நன்றி.





(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க   வாக்குகள் தொடரும்……)








ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.