“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Saturday, March 14, 2026

சித்தர்கள் ஆட்சி - 588 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - 08.03.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு. - பகுதி 4

 இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 08.03.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு. - பகுதி 4 ( விஞ்ஞான வாக்கு )  


நாள் : 08/03/2026 (ஞாயிற்றுக்கிழமை) 

நேரம் : காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 

இடம் : ராஜா ராணி திருமண மண்டபம், திருவண்ணாமலை 

நேரலை :-  https://www.youtube.com/live/AzhIXYoqaoM



இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.


================================

வணக்கம் அடியவர்களே, 


இந்த பகுதி மிக , மிக பொறுமையாக படித்தால் மட்டுமே - இவ் வாக்கின்  ஆழ் ரகசியங்கள் உங்களுக்கு புரியும். தெளிவு உண்டாகும். 


இடைக்காடர் சித்தர் பல  பல யுகமாக இறைவனை வேண்டி ,வேண்டி, மக்களுக்கு உண்மையை சொல்ல வேண்டும் என்று கூத்தாடி கூத்தாடி , அதன் பின் பல யுகங்கள் கடந்து , இப்போதுதான்  இறைவன் அனுமதி கொடுத்துள்ளார்கள். 


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால், அன்புடன் இறைவன் ஆதி ஈசன் அருளால் இப்போது  இங்கு நீங்கள் படிக்க உள்ளீர்கள் என்பதை அறியத்தருகின்றோம். 


வாருங்கள் வாக்கின் உள் செல்வோம். 

================================



================================

# அன்புடன் இடைக்காடர் சித்தர்  வாக்கு

================================ 


அண்ணாமலையோனே, உண்ணாமலையோனே, பாதம் பணிகின்றேனே, செப்புகின்றேனே , இடையன். 


==================================

# கிரகங்கள் ரகசியங்கள் சொல்கின்றேன் இப்பொழுது. 

==================================


இடைக்காடர் சித்தர்:- எதை என்று புரிந்து கொள்ள, இன்னும் கிரகங்கள் பற்றியே மனிதன் பின் தெரிந்து கொள்ளாமல் போவான். இன்னும் ரகசியங்கள் சொல்கின்றேன் இப்பொழுது. 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, இடைக்காடர். இடைக்காடர் வந்து இன்னும் மனுஷன் என்ன பண்ணுவானாம்? ஜாதகத்தை எடுத்துட்டு போவானாம். ஜாதகத்தை எடுத்துட்டு போய், எடுத்துட்டு போயிட்டு காமிச்சு, காமிச்சு, உண்மை நிலை...


அடியவர் :- தெரியாது.


சுவடி ஓதும் மைந்தன் :- தெரியாமல் போவான். 


இடைக்காடர் சித்தர்:- அறிந்தும், பிறர் கலியுகத்தில் மாற்று நடப்பதால், ஜாதகம் பொய் என்று சொல்வான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப கலியுகத்தில் சம்பந்தம் இல்லாதது நடந்துட்டு போறப்ப ஜாதகம் என்பது என்ன ஆகுமா?


அடியவர் :- பொய் என்று சொல்வாங்க.


சுவடி ஓதும் மைந்தன் :-  பொய் என்று சொல்லுவானாம் மனிதன். 


இடைக்காடர் சித்தர்:- ஆனால் பின் கிரகங்கள் உண்மை. 


சுவடி ஓதும் மைந்தன் :-   ஆனால்...


அடியவர் :-  கிரகங்கள் உண்மை.


சுவடி ஓதும் மைந்தன் :-   கிரகங்கள் உண்மை. 


==================================

# கலியுகத்தில் முதன் முறையாக - சந்திர தேவன் பற்றிய ரகசியங்கள் 

=================================


இடைக்காடர் சித்தர்:- இப்பொழுதே எடுத்துரைக்கப் போகின்றேன் பின் சந்திரனைப் பற்றியே.


அடியவர் :-  சிவாய நம !!!!! 


சுவடி ஓதும் மைந்தன் :-   இப்பொழுது எடுத்துப் போகின்றார்……


அடியவர் :-   சந்திரன்.


சுவடி ஓதும் மைந்தன் :-  சந்திரனைப் பற்றி. 


இடைக்காடர் சித்தர்:- இவைத்தன் பின் இன்னும் மிக்க மிக்க அறிந்தும் உண்மை என. உண்மை என சாலச்சிறந்தது அதிகமாக ஓட்டம் ஓடுமே சந்திரனே. 



சுவடி ஓதும் மைந்தன் :- (அதிகமாக ஓட்டம் அப்படின்னா? மிக அதிக வேகமாக சுற்றும் சந்திரன். )


===================================

# எதனால் சந்திர தேவன் இருக்கும் இடத்தை ராசியாக வைத்து கொண்டு ஜாதகத்தை கணிக்கின்றோம் ?

===================================


இடைக்காடர் சித்தர்:- இதனாலே அறிந்தும் அதற்கே பின் அவன் இருக்கும் இடத்தை பின் ராசியாக எடுத்துக் கொண்டார்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, அதனால்தான் சந்திரன் அவர் வந்து, செம பாஸ்ட்ல போறாரு, செம  வேகமா போறாரு, அவர் எங்கே இருக்கும் இடத்திலேயே...


அடியவர் :-    ராசி அப்படின்னு எடுத்துட்டாங்க அதை.


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா?


அடியவர் :-   ராசின்னு எடுத்துட்டாங்க அதை.


சுவடி ஓதும் மைந்தன் :- ராசி, அவர் எங்கு இருக்கும் இடத்திலிருந்து ராசின்னு எடுத்துட்டாங்க.


=================================

# புவியும் கண்ணிமைக்கும் நேரத்தில் மிகவும் அதிகமான வேகத்தில்  சுற்றுகின்றது. 

=================================

# அதே நேரத்தில் சந்திரனும்  மிகவும் அதிகமான வேகத்தில்  சுற்றுகின்றது.

================================


இடைக்காடர் சித்தர்:- இவைத்தன் இவை உணர இதை என்று அறிந்து இன்னும் இன்னும். அதாவது புவி கூட பல லட்சம் அறிந்தும் கண்ணிமைக்கும் நேரத்தில், மிகவும் பின் அதிகமாக சுற்று சுற்று எத்தனை ஏன் எதை என்று அறிந்தும் கூட.




அடியவர் :-    ம்...


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப...


அடியவர் :-  பூமியும் வேகமா சுத்துது.


சுவடி ஓதும் மைந்தன் :-  பூமியும் ரொம்ப வேகமா சுத்துது. அப்ப அதுவும்... 


அடியவர் :-   கணக்குல எடுத்துக்கணும். 


சுவடி ஓதும் மைந்தன் :-   சந்திரனும் பாஸ்ட்டா சுத்துது. 


================================

# பூமியும் , சந்திரனும் முறையான, சம அளவு வேகத்தில்,  சுற்றினால் மட்டுமே மனிதனுக்கு  புத்திகள் அதிகமாகும். அப்படி இல்லையென்றால் மனிதனின் மனம் குழம்பிவிடும். 

===============================


இடைக்காடர் சித்தர்:- இப்படி எதை என்று கூற, மாறி மாறி சரியாகவே சம நோக்கில். ஆனாலும் சில மைல்களே நிச்சயம் குறைவு. ஆனாலும் சம அளவு ஓடினால் மட்டுமே, அவரவருக்கு புத்திகள் பின் அதிகமாகும்.


அடியவர் :- சிவாய நம !!!!!


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப பூமி எவ்வளவு வேகமா சுற்றுதோ…. அதே மாதிரி சந்திரனும் என்ன பண்ணும்?


அடியவர் :-  சுழற்சி வேகம் ரெண்டுக்குமே ஒன்னு.


சுவடி ஓதும் மைந்தன் :-  சுழற்சி வேகம் ரெண்டு ஈக்குவலா இருக்கணும். கொஞ்சம் கொஞ்சம் பரவாயில்லை.


அடியவர் :-  ஆமா.


சுவடி ஓதும் மைந்தன் :-  முன்ன பின் இருக்கும். அதை அது ரெண்டு...


அடியவர் :-   முரண்பாடு ஆச்சுன்னா மனிதனுடைய மனசு குழம்பும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  அதை வந்து, கொஞ்சம் சந்திரன் வந்து...


அடியவர் :- எண்ணங்கள் மாறிடும்.


சுவடி ஓதும் மைந்தன் :-   எண்ணங்கள். சந்திரன் கொஞ்சம் அதை லைட்டா வந்து, ஏதோ, பூமியோ அல்லது...


அடியவர் :-  சந்திரனோ.


சுவடி ஓதும் மைந்தன் :-  சந்திரனோ வந்து...


அடியவர் :-   சுழற்சி வேகம் குறைந்தால்.


சுவடி ஓதும் மைந்தன் :-  சுழற்சி வேகம் குறைந்தால் என்ன ஆகும்?


அடியவர் :- மனசு குழம்பும்.


=============================

# தர்ம தேவன், முப்பெரும் தேவன் , சனி தேவன் பெயர்ச்சி ரகசியங்கள்.

=============================

# தர்ம தேவன் தனது பெயர்ச்சியில் , சந்திரன் வீடான கடக ராசிக்கோ அல்லது குருவின் வீடான தனுசு , மீன ராசிக்கு வந்தால் , சந்திரன் சுழற்சி வேகம் குறைந்துவிடும்.

============================


இடைக்காடர் சித்தர்:- இவைத்தன் இப்படித்தான் எதை என்று புரிய. ஆனால் நடுவினிலே, நடுவினிலே அதாவது பின் இவை என்று அறிய  சனியவனோ பின் குருவின் இல்லத்திற்கோ அல்லது சந்திரனிடத்திற்கோ வந்தாலே, சனியின் வேகம் அறிந்தும் எதை என்று புரிய. அதாவது இன்னும் தீய செயல்கள் அதாவது இன்னும் உண்மையினை அறிந்து சொன்னால் சந்திரன் வேகம் குறைந்துவிடும்.




அடியவர் :- சிவாய நம !!!!!


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப சந்திரன் வீட்டுக்கோ, சனியானவர்...


அடியவர் :- குருவின் வீட்டுக்கோ சனி வந்தால்...


சுவடி ஓதும் மைந்தன் :-  (சந்திரன்) இவர் என்ன பண்ணுவாரு?


அடியவர் :- (சந்திரன் வேகம்) குறைஞ்சிடும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  சந்திரன் வேகம் குறைஞ்சிடும். 


===================================

# சந்திரனின் வேகம் குறைந்தால் , மனம் குழம்பும். மனிதனுக்கு புத்திகள் இருக்காது. முட்டாள்தனமாக எதையோ செய்துவிடுவார்கள். இதனாலே அழிவுகள் உண்டாகும்.

===================================

#  ( மார்ச் மாதம் 6ஆம் தேதி 2026 ஆம் ஆண்டு  - தர்ம தேவன் சனி தேவன் கிரக   பெயர்ச்சி கும்ப ராசியில் இருந்து , குருவின் வீடு மீன ராசிக்கு நடந்தது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் உலகில் பெரும் யுத்தம் / சண்டைகள் நடக்க ஆரம்பித்தது.)

===================================


இடைக்காடர் சித்தர்:- மனிதனுக்கு புத்திகள் இருக்காது. எதை எதையோ செய்துவிடுவான். இதனாலே அழிவு. யோசிக்கவில்லை மனிதன்.



அடியவர் :- சிவாய நம !!!!!


சுவடி ஓதும் மைந்தன் :-   (அப்ப, யார் வீட்டுக்கு தர்மதேவன், சனி தேவன் வருகின்றார்?) 


அடியவர் :- குருவின் வீட்டுக்கு (மீன ராசிக்கு).


சுவடி ஓதும் மைந்தன் :-  குரு வீட்டுக்கு போயிருக்கார். அப்ப என்ன ஆகுது மனுஷனுக்கு? என்ன ஆகுமாம்?


அடியவர் :- உண்மை நிலை புரியாது.


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா?


அடியவர் :-  உண்மை நிலை புரியாது.


சுவடி ஓதும் மைந்தன் :-  புத்தி வேலை செய்யாது.


அடியவர் :-   அழிவுகள்.


சுவடி ஓதும் மைந்தன் :-  இதனால் அழிவுகள் ஏற்படும்.


அடியவர் :-   அழிவுகள் வரும். 


சுவடி ஓதும் மைந்தன் :- ஏன்னா மனுஷன் எப்படி பாவம் என்று மனிதன் எண்ண மாட்டான். அதனால என்ன ஆகும்?


அடியவர் :-    சண்டை.


சுவடி ஓதும் மைந்தன் :-  சண்டை, சச்சரவுகள் வரும். 


================================

# இப்படிப்பட்ட பெயர்ச்சிகள் வருவதால்  - மனிதன், மனிதன் சொல்லலையே நிச்சயம் கேட்க மாட்டான். 

================================


இடைக்காடர் சித்தர்:- மனிதன், மனிதன் சொல்லலையே பின் நிச்சயம் கேட்க மாட்டான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  மனிதன் சொன்னதே என்ன பண்ணுவான்?


அடியவர் :-    மனிதன் கேட்க மாட்டான்.


====================================

# சித்தர்கள் தடுத்து நிறுத்துவார்கள் - உலக அளவில் தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் சண்டைகளை.

==================================== 


இடைக்காடர் சித்தர்:- ஆனாலும் நிச்சயம் யாங்கள் நிறுத்துவோம். நடந்து கொண்டிருக்கின்றதே இப்பொழுது.


அடியவர் :- சிவாய நம !!!!!


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன பண்றாரு? இப்ப நடந்து கொண்டிருக்கிற சண்டை அதை.. நான் வந்து...


அடியவர் :- நிறுத்துவோம்ன்றாங்க.


============================

# பிற உயிர்களை கொன்று தின்றால் என்ன ஆகும்?  என்ற அதிர்ச்சியான வாக்கு. ஆழமாக சிந்திக்க வேண்டிய வாக்கு ….

============================


இடைக்காடர் சித்தர்:-  ஆனாலும் இதன் முன்னே ஏன் நிறுத்தவில்லை என்று நீங்களும் கேட்கலாம்.


அடியவர் :- நிச்சயமா.


சுவடி ஓதும் மைந்தன் :- ஆனால் நீங்க கேட்கலாம். முதல்ல...


அடியவர் :- ஏன் நிறுத்தலன்னு.


சுவடி ஓதும் மைந்தன் :- ஏன் நிறுத்தலன்னு….. 


இடைக்காடர் சித்தர்:- பின் இப்படி இப்படி நிச்சயம் அதாவது சொன்னேனே சொல்லி சொல்லி குழந்தைகளுக்குப் போல் சொன்னேனே எதை என்று அறிய. அதாவது நிச்சயம் தன்னில் கூட பிற உயிர்களைக் கொன்று கொன்று, குவித்துக் குவித்து உண்பவனுக்கு எப்பொழுதுமே ஆபத்து தான். ஜாக்கிரதையாகவே  இருக்க வேண்டும். 


சுவடி ஓதும் மைந்தன் :- ( நான் குழந்தைக்கு சொல்ற மாதிரி சொன்னேன். உங்களுக்கும், எல்லாருக்கும் சொன்னேன். அதனால எப்ப ஒரு மாமிசத்தை  உண்ணுகின்றானோ , அவங்களுக்கு அழிவுதான்.ஜாக்கிரதையாகவே  இருக்க வேண்டும். )



ஒரு அடியவர் :-  பயத்தோட தான் இருக்கணும்.


சுவடி ஓதும் மைந்தன் :- (பயத்தோட தான் இருக்கணும். அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு பயம் வேணும்.  ஜாக்கிரதையா இருக்கணும். எப்பவாவது ஒரு நாள் நம்மளுக்கு ஆப்பு வைக்க போகுது. ஆமா. ஆனால்  எப்பன்னு தெரியாது என்ற பயம் வேணும்.) 


இடைக்காடர் சித்தர்:- இவைத்தன் நன்கு உயர்ந்து. ஆனாலும் யாங்கள் மனதை மாற்றிடுவோம் கவலைகள் இல்லை. 


சுவடி ஓதும் மைந்தன் :- ஆனாலும் நாங்கள் மனசு மாத்திடுவோம். 


===============================

# உலக சண்டைகள் - இறைவன் அவ்வப்பொழுது தன்னை , தான் இருக்கின்றோம் என்று நிரூபிப்பார். அப்பொழுதுதான் இறைவனுக்கும் கூட மரியாதை. 

===============================

# இதே போல்தான் அனைத்து சண்டைகளும் என்று பொருள் கொள்க.

===============================

# அவனின்றி ஓரணுவும் அசையாது 

===============================


இடைக்காடர் சித்தர்:- ஏன் இறைவன் பின் இருப்பது பின் அப்பொழுது அப்பொழுது நிரூபிப்பான் அப்பொழுது பின் இறைவனுக்கும் கூட மரியாதை. 



சுவடி ஓதும் மைந்தன் :-  இறைவன் என்ன பண்ணுவாரு 


ஒரு அடியவர் :-  எல்லாமே ஒரு மாதிரி போயிட்டா… 


சுவடி ஓதும் மைந்தன் :- (என்னை மீறி …அப்பப்ப எனக்கு கொஞ்சம் இது பாருங்க. நான் இருக்கிறேன் என்று சொல்லுவார்… என்ன செய்வாராம் ….) 


அடியவர் :- அதுக்கு தான் அந்த சண்டை… 


சுவடி ஓதும் மைந்தன் :-  அதுக்கு தான் சிக்னல். 


ஓதுவார் அடியவர் :- அப்பதான் இறைவனுக்கே மரியாதை 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்பதான் இறைவனுக்கே மரியாதை.


==============================

# உலக வரலாற்றில் அனைத்து சண்டையின் மூலாதாரம் - “நான் தான் கடவுள் என்ற அகங்காரம்”

=============================

.

இடைக்காடர் சித்தர்:- இல்லை என்றால் தான் என்ற அகங்காரம் கலியுகத்தில் வந்துவிடும் நிச்சயம். மனிதன் அதாவது நான்தான் கடவுள் என்று சொல்லிவிடுவான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  (இப்ப இடைக்காடர் சித்தர் என்ன சொல்ல வருகின்றார் என்றால் , அதை இறைவன் செய்யவில்லை என்றால், மனுஷன் நான்தான் கடவுள் என்று நினைச்சிடுவங்க.  மமதை ஏறிடும்.) 


அடியவர் :-  இப்ப அங்க இருக்கிறவங்க எல்லாம் கதறுறாங்க.. இறைவனை நினைச்சு கதறுறாங்க இல்ல..


===========================

# உலகம் அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைக்க….

===========================


இடைக்காடர் சித்தர்:- இதுவும் ஏன் எதற்காக பின் அனைத்தும் தன் கட்டுப்பாட்டில் வைக்க நிச்சயம் ஒரு நாடு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப ஒரு நாடு இந்த உலகமே தன் கட்டுப்பாட்டில் இருக்கணும் தன் கண்ட்ரோல்ல வரணும் தன் கட்டுப்பாட்டில் வரணும்னு சொல்லிட்டு… 


அடியவர் :-  அந்த நாடு முயற்சி செய்யுது 


சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த நாடு முயற்சி செய்யுது.  


============================

# சித்தர்களுக்கு அனைத்தும் ரகசியங்களும் தெரியும். 

============================


இடைக்காடர் சித்தர்:- இதற்காகவும் சொல்கின்றேன். ஏன் எதற்கு இவ்வாறு நடக்கவில்லை என்றாலும், பின் அதாவது பின் லங்காவில் இறக்கி இருப்பான் ஒரு பெரிய படை அங்கிருந்து அடித்திருப்பான் இத்தேசத்தை. 


அடியவர் :-  சிவாய நம !!!!! 


அடியவர் :-   அப்ப காலையில சொன்னீங்க இல்ல…. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப இதையும் , இது நடக்காமல் இருந்தால்,  ஸ்ரீலங்கால வந்து, என்ன பண்ணிருப்பாரு? அவங்க ஒரு பெரிய படையை படையை அங்க இறக்கி ….


அடியவர் :-   நம்மள அடிச்சிருப்பாங்க 


சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன பண்ணிருப்பாரு 


அடியவர் :-   பாரத தேசத்தை அடிச்சிருப்பாங்க… 


சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த பாரத தேசத்தை அடிச்சிருப்பாங்க.. அழிச்சுசிருப்பாங்க…


============================

# இவ் பாரத  தேசத்தின் ரகசியங்கள் 

============================


இடைக்காடர் சித்தர்:- இவைத்தன் இங்கு பல பின் ஞானிகள் வாழ்ந்த இடம். இதனால் பல உண்மைகள் இங்கு இருக்கின்றது என்பது பின் தெரிந்து கொண்டான் அழகாக. 


இடைக்காடர் சித்தர்:- இதைப் பிடித்துக் கொண்டால் அனைத்தும் மாயாஜாலம் போல் நடக்கும் என்பது தெரியும். ஏனென்றால் சக்திகள் அதிகம் இங்குதான் உள்ளது. 


இடைக்காடர் சித்தர்:- அச் சக்திகள் மூளையை தாக்கி பின் அதாவது மனிதன் பலசாலி ஆகின்றான். இதனால்தான் பல நாடுகள் பின் மனிதனுக்கு அதாவது இத்தேசத்திலிருந்து வருபவனுக்கு எவ்வளவு மூளை என்று யோசித்துக் கொண்டிருந்தான். இன்னும் கொன்று கொன்று அவன் மூளை எல்லாம் வைத்திருக்கின்றான். 


அடியவர் :-  சிவாய நம !!!!!  


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா புரியுதுங்களா? 


அடியவர் :-  நிறைய பேர் மூளையை,  ஆளைக் கொன்று , மூளையை வச்சிருக்காங்களாம். இந்த தேசத்திலிருந்து போறவங்க எல்லா பேருமே பெரிய அறிவாளியா இருக்கிறாங்க. வெளிநாட்டுக்காரன் பார்த்து இங்க என்னமோ இருக்குடா. இந்த தேசத்தை கைப்பற்றனும்னு முயற்சி செய்றானாம் அவன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  முயற்சி செய்றாரு 


அடியவர் :-   நம்ம ஆளுங்க மூளை நிறைய பேர் மூளையை வச்சிருக்கானாம் அவன். நிறைய பேர் ஆராய்ச்சி செய்றானாம். 


சுவடி ஓதும் மைந்தன் :-   கொன்னுட்டு இருக்காங்க வந்து… 


அடியவர் :-  இந்தியாவோட பெரிய பெரிய அறிவாளிகள் மூளையை கொன்னு வச்சு ஆராய்ச்சி செய்றானாம். அப்படி என்ன விசேஷம் இருக்கு? இங்க ஏதோ சக்திகள் இருக்குன்னு……


=========================

# ரகசியங்கள் தெரிந்த ஒரு விஞ்ஞானி 

=========================


இடைக்காடர் சித்தர்:- ஒரு விஞ்ஞானி அறிந்தும் எதை என்று அறிய. புவியே ஏன் இவ்வளவு வேகமாக சுற்றுகின்றது? ஆனால் புவியிலிருந்தும் வரும் அதாவது, புவியிலிருந்து விடும் செயற்கைக்கோள் எப்படி ஏது என்று கூட மறு கிரகத்தை அடைய முடியும் என்று கண்டுபிடித்தான். அவனையும் கொன்று விட்டார்கள். 


அடியவர் :-  சிவாய நம !!!!!


அடியவர் :-  இங்க இருந்து ஒரு ராக்கெட் ஒன்னு விட்டோம் என்றால் அடுத்த கிரகத்துக்கு எப்படி போய் சேருதுன்னு அவர் கண்டுபிடிச்சாராம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்படி ஒரு விஞ்ஞானி யோசிச்சுட்டாராம் அதை. வந்து…. 


அடியவர் :- அது ரொம்ப கடினம் 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஒரு விஞ்ஞானி யோசிச்சாராம். இங்க போய்… ஐயா இப்ப பூமியே வேகமா சுத்திட்டு இருக்குது. பல லட்சம் கணக்கு வேகமா சுழலுது.. 


அடியவர் :- சந்திரனும் பல லட்சம் வேகமா சுழலுது… 


சுவடி ஓதும் மைந்தன் :-  பல லட்சம் வேகமா சுழலுது… இங்கிருந்து வந்து… 


அடியவர் :-  ஒரு ராக்கெட் விடுறோம்…


சுவடி ஓதும் மைந்தன் :-  ( அந்த ராக்கெட் ) எப்படி அங்க போய் சேரும் அப்படின்னு யோசிச்சாராம் ஒருத்தர். அவர என்ன செஞ்சாங்களாம்? 


அடியவர் :- அவரையும் கொன்னுட்டாங்க. அவரையும் முடிச்சிட்டாங்க 


இடைக்காடர் சித்தர்:- இவைதன் இன்னும் என்னென்ன ஏது என்று அறிந்தவன் இன்னும் கூட ஒருவன் கட்டுப்பாட்டில். அழகாக ஒரே பின் அதாவது அறையில் வைத்து, சித்திரவதை எல்லாம். 


இடைக்காடர் சித்தர்:- இவைதன் தன் சுயநலத்திற்காகவே. அதாவது அனைத்தும் எங்களுக்கு ஒன்றுதான். ஆனாலும் இதைத்தன் அறிய தன் தன் நாட்டை வெளிக்காட்டவே நிச்சயம் பொய்கள் இன்னும் கூட. 


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாமே பில்டப்பு …


அடியவர் :- தன் நாட்டை வெளிகாட்டுறதுக்காக நிறைய வந்து பொய்கள் சொல்லி பண்ணிட்டு இருக்காங்க 


===========================

# அடியவர்கள் பின் வரும் வகை நன்கு அவசியம் சிந்தியுங்கள் - புண்ணியங்கள் 

===========================


இடைக்காடர் சித்தர்:- இவைதன் இதற்கு நிச்சயம் தன்னில் கூட நீங்களே யோசியுங்கள் நன்று. 


இடைக்காடர் சித்தர்:- அதாவது பல லட்சம் கண்ணிமைக்கும் நேரத்தில் புவியானது இயங்குகின்றது. நிச்சயம் இங்கிருந்து எப்படி நிச்சயம் தன்னில் அறிந்தும் வெளியே போகின்ற பொழுது பின் செயற்கைக்கோள் எங்கு அடையும் நீங்களே சிந்தியுங்கள்? 


இடைக்காடர் சித்தர்:- இதை கூட அறியாத நிச்சயம் தன்னில் கூட இருக்கக் கூடாது. 


சுவடி ஓதும் மைந்தன் :-   ஐயா இது யாருக்கு விடை தெரியுதோ, அதை சொல்லுங்க. இறைவன் நம்மளுக்கு சொல்லப்போறார். 


=====================================

( அனைத்து அடியவர்களும்  சிந்திக்க ஆரம்பித்தனர் )

=====================================


அடியவர் :- ( இடைக்காடர் சித்தர் கேட்ட கேள்வியை மீண்டும் எடுத்து உரைத்தார் ) பூமி பல மைல் வேகத்தில் சுத்துது. இங்கிருந்து ஒரு செயற்கைக்கோள் விடுறாங்க. அந்த செயற்கைக்கோள் எப்படி போய் நிக்குது என்று  கேக்குறாங்க? 



அடியவர் # 3:- இப்போ நம்ம ஒரு இடத்துல நின்னுட்டு, ஒரு இடத்தை குறி பார்த்து சுட முடியும். நம்ம நிலையா நிப்போம். ஆனா பூமி பல லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் சுத்தும் போது , நிலை இல்லாம இருக்கும் போல நிலை இல்லாத ஒரு இடத்திலிருந்து, நிலையா, சந்திரனோ இல்ல செவ்வாயோ அதுவும் நிலை இல்லாம இருக்கு. ரெண்டு நிலை இல்லாத இடத்தை நோக்கி எப்படி குறி பார்த்து சரியா ஒரு செயற்கைக்கோளை விட முடியும்? 


அப்ப அந்த கணக்கை கண்டுபிடிச்சவர் அப்ப எவ்வளவு புத்திசாலியா இருந்திருப்பார். . அதனாலதான் வந்து அவர் சொல்றாரு நிலையா நிக்கிற இடத்திலிருந்து குறி பார்த்து ஒரு இதை சுடுறதே கஷ்டம். இந்த பூமி பல லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் போகுது. 


நிலை இல்லாம இருக்குது ஓடிட்டு இருக்குது. ஓடிட்டு இருக்கிற ஒரு விஷயத்திலிருந்து, செவ்வாய் கிரகம் ஓடிட்டு இருக்குது. இல்ல சந்திர கிரகம் ஓடிட்டு இருக்கு. ஓடிட்டு இருக்கிற ஒரு இடத்துல சரியான இடத்துல போய் நிக்க வைக்கணும்னா, அப்ப எவ்வளவு அவர் ஒரு கணக்கு பண்ணி புத்திசாலியா இருந்திருப்பாரு? சோ அந்த அறிவு எப்படி இவங்களுக்கு கிடைச்சது? அப்படிங்கறதுதான் அவங்களோட மிகப்பெரிய கேள்வியா இருக்கு. 



சுவடி ஓதும் மைந்தன் :-    (ஐயா இதோ இந்த அம்மா பிஎச்டி (PhD ). டாக்டர் பட்டம். இந்த அம்மா என்ன சொல்றாங்கன்னு விளக்கம் இப்போ கேட்கலாம் நாம. )


அடியவர் # 4 (PhD) :-  பூமி ஒரு வேகத்தில் சுத்திட்டு இருக்கு. சந்திரனும் ஒரு வேகத்தில் சுத்திட்டு இருக்கு. சந்திரன் தான் மனதினுடைய, மனசுல தோன்ற எல்லா எண்ணங்கள், நம்ம செயல்படுவதற்கான ஒரு விஷயம். அப்போ அந்த மனசுல தோன்ற அந்த எண்ண செயல்கள்ல வந்து, இங்கிருந்து ஒரு செயற்கைக்கோள் அனுப்புறாங்க, வேற ஒரு கிரகத்துக்கு அனுப்பினா, அது எந்த வேகத்தில் போயி, அந்த எந்த, எந்த கிரகத்துக்கு அனுப்புறோமோ அந்த கிரகத்தில் எப்படி ரீச் ஆகும்ங்கிறதை வந்து, இந்த ஞானிகள் எல்லாம் வாழ்ந்த இந்த பூமியில் உள்ள, இந்த மனித மூளை வந்து, இந்த மனுஷன் இங்க இருக்க நம்ம மனிதர்கள் வந்து, அதை வந்து தெரிஞ்சு வச்சு கண்டுபிடிச்சு, பண்றாங்க. பட் இதை வந்து மத்த நாட்டுல இருக்கிறவங்க, ஒரு நாடு வந்து இதை வந்து ஆதிக்கம் செலுத்தி அதை எடுத்துக்கொண்டு வரணும்ங்கிறதுக்காக இதை என்னன்னு ஆராய்ச்சி பண்றான். அதுதான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  எப்படி விடுவாங்க என்று கேட்கின்றார்…


அடியவர் :-  கேள்வி வந்து கேள்வி வந்து சாத்தியம்னு கேக்குறாரு 


சுவடி ஓதும் மைந்தன் :-   எப்படி எப்படி செயற்கைக்கோள் போகுது அது சாத்தியம் எப்படி கேட்டேன் அடுத்த கேள்வி 


அடியவர் # 3 :-  எப்படி போகுதுன்னு கேக்குறாரு 


அடியவர் # 4 (PhD) :- இல்ல இங்கிருந்து அனுப்புவது, அதுதான் நம்ம பூமியோட வேகத்தையும், மனிதனுடைய மூளை வேகமும், சந்திரனுடைய வேகத்தையும், வச்சு கணக்கிட்டு, இந்த இது இந்த சுழற்சியில இருக்கு. இந்த சுழற்சியில இருந்ததுன்னா, இந்த ரிலேட்டிவ் ஸ்பீடு ரெண்டும் இந்த வேகத்துல சுத்துச்சுன்னா, இன்னொரு இடத்துக்கு எப்படி போய் சேரும்ங்கிறதுதான் நம்மளுடைய எண்ணத்துல கண்டுபிடிச்சு வரது. அதை வந்து, எப்படி இதை செய்றான் அப்படிங்கறதுதான் மனுஷனுடையது. 


( சில உரையாடல்கள் )


==============================

# மீண்டும் சிந்திக்க ஒரு கேள்வி 

==============================


இடைக்காடர் சித்தர்:- இதை என்று அறிய சரியாக எப்படி நிறுத்த முடியும்? அதுவென்ன புவியா நிறுத்துவதற்கு? 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப செயற்கைக்கோள் பற்றி சொல்கிறார். செயற்கைக்கோள் வந்து , ஐயா பூமியிலிருந்து விடுவாங்க ஐயா. பூமியே பல லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் சுற்றிக் கொண்டு இருக்குது . எப்படி பூமி… பூமியை….. எப்படிங்க அய்யா சொல்றது? 


அடியவர் :-  பூமியிலிருந்து இந்த வெளியே போகக்கூடிய செயற்கைக்கோள் ..சுழற்சியில போகும்போது , அது வேற எங்கயாவது தான் போகணும். அது எப்படி நிலையா ஒரு இடத்துக்கு  போகுது? 


சுவடி ஓதும் மைந்தன் :-  எப்படி போகும்? 


அடியவர் :-  ஒரு சுத்திக்கிட்டு இருக்கிற பொருள்ல இருந்து…


சுவடி ஓதும் மைந்தன் :-  எப்படி சந்திர கிரகத்தில் போய் இறக்குறாங்க? 


அடியவர் :-  இல்ல ஒரு பெரிய மொமெண்டம்… போர்ஸ் கிரியேட் ஆகுது… 

அந்த மொமெண்டம் போர்ஸ் எப்படி குறி பார்த்து ஒரு இடத்துக்கு போகுது? 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஒரு இடத்துக்கு போகுது. எப்படி போகுது?


மற்றொரு அடியவர் :- அந்த ராக்கெட் ஸ்பீட் சுத்துனா… ( ஆடியோ தடங்கல்கள் ) 


==============================

# மீண்டும் ஆழமாக சிந்திக்க ஒரு கேள்வி 

==============================


இடைக்காடர் சித்தர்:- தாயே எவை என்று அறிய. ஆனாலும் பின் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றால் நிச்சயம் எவை என்று அறிய, புவியின் ஈர்ப்பு விசை இன்னும் அதிகமாக இருக்கும். பின்பு ஈர்க்குமே? எப்படி மேல் செல்லும்?


சுவடி ஓதும் மைந்தன் :-   இன்னும் ஒரு சில இடத்துல, எல்லாம் புவியின் ஈர்ப்பு விசை ரொம்ப அதிகம். அங்க போயிடுச்சுன்னா, எவ்வளவு வேகத்திலும் போச்சுன்னாலும் , அது என்ன ஆகுமாம்? கீழ விழுந்துடும். 


அடியவர் :-  ம்… ஐயா அதுக்குத்தான் அவங்க என்ன பண்றாங்க… விடுற ராக்கெட்டை, அந்த ஆர்பிட்ல போய் நிறுத்தி, ரெண்டு சுத்து சுத்துறாங்க. சுத்தி, அதுக்கப்புறம் தான் போய் அந்த இடத்துல இறக்குறாங்க. நேரா போய் இறக்குறது கிடையாது. 


இடைக்காடர் சித்தர்:- எதை என்று அறிய அப்பப்பா அவையோ எத்தனை எத்தனை வேகம் என்பதை கூட யார்? அதாவது உனக்கு தெரியுமா ?


அடியவர் :-  தெரியாதுங்க ஐயா 


சுவடி ஓதும் மைந்தன் :- அது கூட வந்து எத்தனை எத்தனை வேகம் எத்தனை எத்தனை இது என்று தெரியுமா? தெரியாது. 


=============================

# நாம் படித்த அறிவியலில் ஒரு தவறு  - “புவி  ஈர்ப்பு விசை எல்லை?”

=============================


இடைக்காடர் சித்தர்:- அப்பப்பா ஒரு குறிப்பிட்ட எல்லைக்குத்தான் புவி புவி ஈர்ப்பு விசை என்று சொல்வார்கள். ஆனால் அதுவும் தவறு. 


அடியவர் :-   ம் 


சுவடி ஓதும் மைந்தன் :-  நம்ம எல்லாரும் படிச்சிருக்கிறோம். 


அடியவர் :-  ம் 


சுவடி ஓதும் மைந்தன் :-  நானும் படிச்சிக்கிறேங்க ஐயா. 


அடியவர் 2 :- அப்ப தப்புன்னா ஒரு ஸ்பீடுக்கு அப்புறம் அந்த ராக்கெட் மேல போகணும்னா, பூமி சுத்துற ஸ்பீடு கூட போனாதானே முடியும்?. அந்த ஸ்பீடுக்கு ராக்கெட் போகலன்னாலே  தெரியுமே? 


இடைக்காடர் சித்தர்:- அப்பா எதை என்று அறிய அறிய நிச்சயம் செல்வதில்லை.


சுவடி ஓதும் மைந்தன் :-   நிச்சயம் செல்லாது. 


அடியவர் :-  போகாதுன்றாங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :-  போகாது 


======================================

# பாரத தேசத்திலே - அதி ரகசிய மர்மமான இடம் ஒன்று இருக்கின்றது.

======================================

# அங்கு பொருள்கள் அனைத்தும் தானாகவே மேல் நோக்கியே  செல்லும். அதாவது புவி ஈர்ப்பு விசை செயல்படாத ரகசிய இடம் அது. 

======================================


இடைக்காடர் சித்தர்:- எவை என்று அறிய அப்பா இத்தேசத்திலே நிச்சயம் எவை என்று புரிய, அப்பப்பா அனைத்தும் அப்பனை நிச்சயம் மேல்நோக்கிச் செல்லும் பின் இடம் ஒன்று இருக்கின்றது. 



அடியவர் :-  (ஆசிரியத்தில் ) ஆஹா ஹா !!!! 


சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த பூலோகத்திலேயே… 


அடியவர் :-  ஒரு இடம் இருக்கு. கரெக்ட்டா போற இடம். 


அடியவர் # 4 (PhD) :-  எல்லா இடத்திலும் புவியிலிருந்து, எல்லாமே பூமியை நோக்கி கீழே இழுக்கும். 


சுவடி ஓதும் மைந்தன் :-   கீழே இழுக்கும். ஆனால் அந்த  ஒரு இடத்துல மட்டும்.. எல்லாம் மேல போகுது.


அடியவர் :-   ம் 


சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த தேசத்திலேயே இருக்குதுப்பா 


அடியவர் :-   ம் 


இடைக்காடர் சித்தர்:- அப்பா இதையும் யான் சொல்வேன் அங்கே. ஏனென்றால் இவ்வளவு பெரிய அறிவை பின் நிச்சயம் தன்னில் கூட இறைவன் மனிதனுக்கு கொடுத்து, யோசிக்க பின் நேரமில்லையே மனிதனுக்கு எவ்வாறு? எவ்வாறு? அப்படி மனிதன் எப்படித்தான் முன்னேறுவான்? நீங்களே ( கூறுங்கள்) ? 



சுவடி ஓதும் மைந்தன் :-  இவ்வளவு பெரிய மூளையை கொடுத்திவிட்டு , சின்ன விஷயம் கூட நீங்க யோசிக்க மாட்டேன் என்று சொல்கின்றீர்களே அப்பா. அது தான் சொல்கின்றார். உண்மையை பொய்யாக்குவான் .


=================================

# மீண்டும் முன்பு கேட்ட அதே கேள்வி ….

=================================


இடைக்காடர் சித்தர்:- அப்பா, எதை என்று புரிய. அப்படி ஏன் விட வேண்டும் நீங்களே கூறுங்கள்? என்ன லாபம்? 


சுவடி ஓதும் மைந்தன் :-  சரி (மேலே) விட்டுவிட்டார்கள்.  ராக்கெட் ஏன் விடனும் ? என்ன லாபம் ?


மற்றொரு அடியவர் :- ( – ஆடியோ தடங்கல்கள் – மேலே என்ன இருக்கு என்று தெரிந்து கொள்வதற்கு )


இடைக்காடர் சித்தர்:- அப்பா,  கீழேயே உள்ளது என்ன என்பதையே தெரிந்து கொள்ள முடியவில்லை. மேல்நோக்கி போய்விட்டாய் அப்பா.


அடியவர் :- இங்கேயே என்ன இருக்குன்னு நமக்கு ஒன்னும் தெரியல.


சுவடி ஓதும் மைந்தன் :- நீ மேல போய் என்ன தெரிஞ்சுக்க போற? 


================================

# ஜாதகம் கணிக்கும் அடிப்படை ரகசியங்கள் - இவ் ராக்கெட் அறிவு

================================


இடைக்காடர் சித்தர்:- எதை என்று புரிய அப்பப்பா அழிவு காக்க முடிகின்றதா அதனால்? நிச்சயம் எவை என்று புரிய. உயிர்களை காக்க முடிகின்றதா அதனால்? என்ன பயன் கூறுங்கள்? ஏனென்றால் இதை ஏன் இங்கு பின் எடுத்து வருகின்றேன் என்றால் அப்பொழுதுதான் ஜாதகத்தை சரியாக கணிக்க முடியும் உங்களால். 


சுவடி ஓதும் மைந்தன் :-  இதை நான் ஏன் இதை எடுத்துட்டு வரேன் என்றால் , இது அடிப்படை.  இதுதான் அம்மா அடிப்படை.  எல்லாரும்,  எனக்கு தெரிஞ்சு இங்க உள்ள எல்லாரும்  நிறைய ஜாதகத்தை தேடி எடுத்துட்டு போயிருப்பீங்க கண்டிப்பா. அப்ப இந்த அடிப்படை உங்களுக்கு தெரியலைன்னா,  ஜாதகம் பொய். அப்ப அடிப்படையிலிருந்து வராரு. ராக்கெட்ல இருந்து வராரு முதல்ல.


==============================

# மிகவும் நேர்த்தியான கேள்வி 

============================== 


அடியவர் :-  அந்த ஒன்னு ரெண்டு ( ராக்கெட் )  விட்டதெல்லாம் உண்மையா?  பொய்யா?


இடைக்காடர் சித்தர்:- அப்பா,  உண்மையைச் சொன்னால் பொய் என்று சொல்வார்கள். விட்டுவிடு. இப்பொழுது வேண்டாம். 


அடியவர்கள் :- ( சிரிப்பு ) 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப உண்மையைச் சொன்னால் ஐயா பொய் என்று சொல்லிடுவாங்கப்பா. அது தேவையில்லைப்பா. எதுக்கு உனக்கு?.


===========================

# எப்போது ஜாதகம் 100% உண்மையாகும். ?

===========================


இடைக்காடர் சித்தர்:- ஏனென்றால் மூலாதாரணம் இதனிடையே சொல்ல வேண்டும். அப்பொழுதுதான் ஜாதகம் உண்மையாகும். 



சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப அடிப்படை எங்க இருக்குது? இந்த ராக்கெட்ல இருந்து தாங்க அய்யா இருக்குது. ராக்கெட்ல இருந்து தாங்க. இதுதான் அடிப்படையே.  ஜாதகம் பார்க்கணும்னா என்ன அடிப்படை ?


அடியவர் :-  அடிப்படை தத்துவம் இங்க இருந்து தான் வருது 


சுவடி ஓதும் மைந்தன் :- ஆமா ராக்கெட் தான் அடிப்படை.  அந்த ராக்கெட் அடிப்படையே  தெரியலைன்னா ….


அடியவர் :-  ஜாதகம் எப்படி தெரியும்? என்று கேட்கின்றார்.


சுவடி ஓதும் மைந்தன் :- எப்படி உண்மையாகும்? என்று கேட்கின்றார்


================================

# 3 கைகள் உள்ள மின்சார விசிறியை வைத்து - கலியுகத்தில் முதன் முறையாக, இதுவரை யாரும் அறியாத  ஒரு ஜோதிட வகுப்பு ஆரம்பம்.

================================


இடைக்காடர் சித்தர்:- இதை அறிவித்து எதை புரிய அப்பா உங்களைப் போன்று, அதாவது இதையும் யான் சொல்கின்றேன். இதையும் யோசிக்க வேண்டும். 


இடைக்காடர் சித்தர்:-  அதாவது அனைத்து கிரகங்களும் கூட சுற்றுகின்றது ஆனாலும் சுற்றுவது கண்களுக்கு தெரியாது. 


இடைக்காடர் சித்தர்:-  அதாவது விசிறியை நீங்கள் பின் சுற்றுகிறீர்கள் பின் பலமாக சுற்றுகின்ற பொழுது தெரிகின்றதா என்ன?  ஒவ்வொரு பின் அதாவது பின் எதை என்று கூற கையும்? 



சுவடி ஓதும் மைந்தன் :-  ஒவ்வொரு கை இருக்குது மூணு கை இருக்குது


அடியவர் :-  மூணு கை சுத்துறப்ப தெரியுதா ? சுத்துது இல்லையா,  அப்ப அது சுத்துறது நமக்கு தெரியல இல்லையா?. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அவ்வளவு பெரிய கிரகங்கள் எல்லாம்  வேகத்துல சுற்றுகிறது.  கிரகங்கள் எல்லாம் வந்து அப்படி சுத்தும் பொழுது, சுத்துறது தெரியாதுன்றாரு. 


அடியவர் :- பேன் (FAN)  சுத்துறதே தெரியல. அங்க பாருங்க ( அங்கு இருந்த மின் விசிறியை காட்டி )  மூணு கை இருக்குது. 


இடைக்காடர் சித்தர்:- ( சுற்றும் மின் விசிறியில் ) ஒன்று இரண்டு மூன்று என்று வைத்துக் கொள்ளுங்கள் அறிந்தும் கூட. பின் யான் சொல்கின்றேன். நீங்களே குறித்து வைத்துக் கொள்ளுங்கள். வில் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். சரியாக மூன்றினை தொடுங்கள் பார்ப்போம். 


=====================================

வாக்கு சுருக்கம் :- வேகமாகச் சுழலும் மின்விசிறியின் இறக்கைகளை (ஒன்று, இரண்டு, மூன்று என) வரிசைப்படுத்தி, அதில்  மூன்றாவது இறக்கையை  சரியாகக் கணித்து , 'வில், அம்பு' ஒன்றை எடுத்துச் சரியாக மூன்றாவது இறக்கையை அம்பினால் அடிக்கவேண்டும். முடியுமா உங்களால் ?

====================================


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப அந்த பேன்ல வந்து, ஒன்னு ரெண்டு மூணுன்னு எழுதிக்கோங்க. ஒரு வில்லை எடுத்துக்கோங்க. 


அடியவர் :-  ம் 


சுவடி ஓதும் மைந்தன் :-  (ஓகேங்களா.  அது ஓடுது. அம்பு இங்கிருந்து மூணுல வில் விடுங்க பார்ப்போம்? )


இடைக்காடர் சித்தர்:- அப்பப்பா அவ்வளவு பெரிய முட்டாள்கள் நிச்சயம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள் இத்தேசத்தை. அதனால்தான் இறைவன் என்ற நிச்சயம் எவை என்று அறிய அறிய இறைவன் எங்கு இருக்கின்றான்? இறைவன் யார்? என்று தெரிவதே இல்லை. நிச்சயம் அதை கண்டுபிடிப்பதற்கு பதிலாக,  இறைவன் எங்கு இருக்கின்றான் என்று கண்டுபிடிக்கச் சொல் பார்ப்போம்?


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா புரியுதுங்களா? 


அடியவர் :- அழகா அழகா புரிய வச்சுட்டாங்க. எப்படி அடுத்த கிரகத்துக்கு சேட்டிலைட் விடுறாங்க என்பதை….  இங்க இருக்கிற FAN அதுல ஒன்னு ரெண்டு மூணு எழுதி ,  மூணாம் நம்பர்ல குறி வச்சே சுட முடியாது நம்மளால. நீ எப்படிடா அந்த கிரகத்துக்கு இங்கிருந்து விடுறேன் கேட்குறார் ?


சுவடி ஓதும் மைந்தன் :- எப்படி விடுறாரு? எப்படி போகும்? 


==================================

# ஜாதகத்தின் அடிப்படை தத்துவமே இதுதான். 

==================================


இடைக்காடர் சித்தர்:- அப்பா நிச்சயம் ஜாதகத்தை எவை என்று அறிய அறிய , இதுதான் அடிப்படை தத்துவமே. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஜாதகத்தை பார்க்கணும்னா எது அடிப்படை தத்துவம்?  இதுதான் அடிப்படை தத்துவம்ன்றார் வந்து.. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அடிப்படை தத்துவம். 


===================================

# அப்படி வில்லை வேகமாக சுற்றும் விசிறியின் இறக்கையில் , அம்பு விட்டாலும் , அம்பு என்ன ஆகும்? உடைந்துவிடும். 

===================================


இடைக்காடர் சித்தர்:- அப்படி சென்றாலும்,  எதை என்று கூறவே, இடிக்கும் பொழுது, உடைந்துவிடும். 


சுவடி ஓதும் மைந்தன் :-   அப்ப அந்த வில்லை.. 


அடியவர் :-  ம் 


சுவடி ஓதும் மைந்தன் :-    விட்டா கூட என்ன ஆகும்? 


அடியவர் :-  வந்து உடைஞ்சிரும். வில் உடைஞ்சு போயிரும் 


சுவடி ஓதும் மைந்தன் :-   உடைஞ்சிட்டு என்ன ஆகும்? ராக்கெட் உடைஞ்சிரும்ன்றார் வந்து..


=============================

# மனிதனின் விஞ்ஞான விளையாட்டுகள் 

=============================


இடைக்காடர் சித்தர்:- இவைத்தன் உடைந்து, அங்கும் இங்குமாக போய்விடும். அதை எடுத்து மனிதன் சொல்வான். இது செவ்வாய் கிரகம். சந்திர கிரகம். சூரிய கிரகம் என்று. 


அடியவர்கள் :- ( பலத்த சிரிப்புகள், பலத்த  கை தட்டல்கள்  ) 


சுவடி ஓதும் மைந்தன் :- (சிரிப்புடன்)  ஐயா புரியுதுங்களா?  ஐயா யாராவது கேளுங்க ஐயா அகத்தியரை… டேலன்ட்டா கேளுங்கம்மா. 


மற்றொரு அடியவர் :- ( ஐயா, கிரகத்துல இப்ப இந்த நிலைமை இருந்துச்சு. அப்படின்னு போட்டோல நமக்கு எடுத்து இதுவரை காட்டுங்க இல்ல. அப்போ அது எல்லாம் ?) 


அடியவர் :- எல்லாம் கதை 


மற்றொரு அடியவர் :- அதுதான் அய்யா …ஏன் சாட்டிலைட் அது போட்டோ எடுக்குதுன்னா… வந்து அது உடைஞ்சிடுதுங்க ஐயா. உடைஞ்சு என்ன ஆகுது? அங்க எங்க விழுதோ அங்க போட்டோ எடுத்து அனுப்பும் 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா புரியுதுங்களா?


அடியவர் :- எல்லாம் பித்தாலட்டுத்தனம். எல்லாம் ஏமாத்துறாங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :-  புரியுதுங்களா? 


==================

# அறிவு வேண்டும். 

# அறிவு வேண்டும். 

# அறிவு வேண்டும். 

===================


இடைக்காடர் சித்தர்:- அப்பப்பா எவை என்று புரிய. 


இடைக்காடர் சித்தர்:-  இதனால்தான் அறிவு வேண்டும். அறிவு வேண்டும். அறிவு வேண்டும். 


சுவடி ஓதும் மைந்தன் :-   அதனால்தான் அறிவு வேணும்ன்றாரு. அறிவு வேண்டும். அறிவு வேண்டும். அறிவு வேண்டும் 


இடைக்காடர் சித்தர்:-  இவ் அறிவு இல்லை என்றால் பின் நிச்சயம் இறைவனும் காண முடியாது. உங்கள் பிரச்சனையும் தீர்க்க முடியாது. யாராலும். எத்தனை மனிதர்கள் வந்தாலும். 




சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த அறிவே உங்களுக்கு இல்லைன்னா…..


அடியவர் :-  இறைவனை காண முடியாது. 


சுவடி ஓதும் மைந்தன் :- காண முடியாது 


அடியவர் :-  அடிப்படை விஷயங்கள் தெரியலனாலே, இறைவனை காண முடியாது. இந்த அறிவு இல்லைன்றாங்க. 


===========================

# ஆதி ஈசன் கட்டளைப்படியே,  இவ்வாக்குகள் மக்களுக்கு இப்போது இடைக்காடர் சித்தர் வந்து நமக்கு சொல்கின்றார்.

===========================


இடைக்காடர் சித்தர்:- இவைதன் இன்னொரு ஏன் எதற்கு இவையெல்லாம் சொல்கின்றேன். ஈசன் கட்டளைப்படித்தான் சொல்லி இருக்கின்றேன். 


==============================

# ஆதி ஈசனாரிடம் பல யுகத்தில் , இவ் ரகசியங்களை மக்களுக்கு உரைக்க வேண்டும் என்று இடைக்காடர் சித்தர் கூத்தாடி கூத்தாடி நின்று கேட்டபோது கூட சொல்வதற்கு வாய்ப்பு  கொடுக்கவில்லை. ஆனால் இப்போது கலியுகத்தில் ஒரு சந்தர்ப்பத்தை, ஆதி ஈசனார் வழங்கியுள்ளார். அதனால் இவ் வாக்குகள் இப்போது மக்களுக்கு……

===============================


இடைக்காடர் சித்தர்:-  ஏனென்றால் பல யுகத்தில் வாழ்ந்து ஈசனிடம் அதாவது மக்களுக்கு உண்மை தெரிவிக்கின்றேன் தெரிவிக்கின்றேன் என்றெல்லாம் யான் பின் அதாவது பின் கூத்தாடி கூத்தாடி, நின்று நின்று, ஆனாலும் கலியுகத்தில் ஒரு சந்தர்ப்பத்தை ஈசன் எனக்கு கொடுத்துள்ளான். அதனால்தான் சொல்லிவிட்டேன். 



அடியவர் :-   சிவாய நம !!!!! 


அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள் )


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப இடைக்காடர்  நான் ஏன் இப்ப  உண்மை  உங்களுக்கு சொல்றேன் இதை? யாரு சொல்ராங்க ? 


அடியவர் :- இடைக்காடர் பெருமான் சொல்றாங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :-  நான் உண்மை சொல்லிடுறேன் என்று சொன்னாலும் , ஈசன் உடனே  நீ சொல்லாத. அமைதியா இரு. இருந்தாலும் மன்றாடி கூத்தாடி,  ஏதோ ஏதோ பண்ணி… என்ன பண்றாரு? 


அடியவர் :- கலியுகத்தில் சொல்ல அனுமதி வாங்கிட்டு வந்துட்டாங்க. 


===============================

# அனைத்து கிரகங்களிலும் மனிதர்கள் வாழ்கின்றார்கள் 

===============================


இடைக்காடர் சித்தர்:- இவை அறிவித்து எதை என்று சார்ந்து. அனைத்து கிரகங்களும் மனிதன் இருக்கின்றான். சொல்லிவிட்டேன். 


அடியவர் :-   சிவாய நம !!!!! 


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லா கிரகங்களும்… 


அடியவர் :-  மனிதர்கள் இருக்கிறாங்க 


சுவடி ஓதும் மைந்தன் :-  மனிதர்கள் இருக்கின்றார்கள். 


=========================

# மனிதன் வாழ தகுதியற்ற இடம் புவியே.

=========================


இடைக்காடர் சித்தர்:- இவைதன் பின், அதாவது பின் அனைத்தும், பின் அனைத்தும் கிடைக்கும் அவ்வவ் லோகத்தில். ஆனால் மனிதனுக்கு கிடைப்பதில்லையே. அதாவது மனிதன் வாழ தகுதியற்ற இடம் புவி தன்னிலே. 



சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப எல்லா கிரகத்திலும்… 


அடியவர் :-  இருக்கிறவங்களுக்கு எல்லாம் கிடைக்கும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  இங்க மட்டும் 


சுவடி ஓதும் மைந்தன் :-   மனிதன் வாழ… 


அடியவர் :-  தகுதி இல்லை. 


சுவடி ஓதும் மைந்தன் :-  (மனிதன் வாழ) தகுதியற்ற இடம் எது? 


அடியவர் :-  பூமி. 


சுவடி ஓதும் மைந்தன் :-  பூமிதான். 




================================

# அடுத்த கிரகத்திலிருந்து தான்  வந்தார்கள் அனைத்து ஞானிகள், ரிஷிகள், சித்தர்கள். அடுத்த கிரகத்திலிருந்து வந்து அவர்கள் அமைத்ததே இத்தனை திருத்தலங்கள் - இதுவே ரகசியம். 

================================


இடைக்காடர் சித்தர்:- இதனால்தான் அடுத்த கிரகத்திலிருந்து வந்தார்களே ஞானிகள், ரிஷிகள், சித்தர்கள். இத்தனை திருத்தலங்கள். போதுமடா. உண்மை சொன்னேனே. தாயே !!  தந்தையே !!



அடியவர் :-   சிவாய நம !!!!! 


சுவடி ஓதும் மைந்தன் :-   போதுமா உங்களுக்கு? என்ன உண்மை சொன்னேன் நான் இதுல இருந்து ? 


அடியவர் :-  புத்தர், இயேசு, இந்த மாதிரி நிறைய ஞானிகள் எல்லாம் வேற வேற கிரகத்தில் இருந்து வந்திருக்காங்க 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஏன் வந்தாரு?  


சுவடி ஓதும் மைந்தன் :-   இது வந்து மனிதன் வாழ்வதற்கு


அடியவர் :-  தகுதியான இடம் இல்லை 


சுவடி ஓதும் மைந்தன் :- தகுதி  இல்லை. எது ? 


அடியவர் :- பூமி 


சுவடி ஓதும் மைந்தன் :-  பூமி


சுவடி ஓதும் மைந்தன் :-  மத்த கிரகங்கள் எல்லாமே?


அடியவர் :-   தகுதியான இடம்.


சுவடி ஓதும் மைந்தன் :-   ஆனால்… பூமிக்கு தகுதி இல்லை. 


அடியவர் :-   இங்க மனிதன் வாழ ஒரு தகுதி இல்லாத இடம் 




இடைக்காடர் சித்தர்:- பின் இவ் அடிப்படை தத்துவத்தை புரிந்து கொள்ளாதவன், இறைவனைப் பார்க்கின்றானாம் ? மந்திரங்களால் சொல்லி நிச்சயம் வெற்றி காணப் போகின்றானாம் ? .. அடடா எவ்வளவு பொய்கள் 


சுவடி ஓதும் மைந்தன் :-  இதை கூட தெரியாம 


அடியவர் :-   இறைவன் எப்படி காண முடியும் என்று கேட்கின்றார்? 


சுவடி ஓதும் மைந்தன் :-  காண என்று கேட்கின்றார்? 


===============================

# பிற கிரகங்களில் இருந்து சித்தர்கள் பூமிக்கு வந்த ரகசியங்கள் ??? 

===============================


இடைக்காடர் சித்தர்:- இதனால்தானே வந்தார்கள் எண்ணற்ற சித்தர்கள். நிச்சயம் புவியில் மனிதன் வாழத் தகுதியற்றவன். இதனால் திருத்துவோம் என்று. 


அடியவர் :-   எண்ணற்ற சித்தர்கள், ஞானிகள் எல்லாம் புவியில் மனிதர்கள் வாழத் தகுதியற்றவர்கள்.


சுவடி ஓதும் மைந்தன் :-  ஏன் புவியை நோக்கி வந்தாங்க?  மனிதன் வாழத் வாழத் தகுதியற்றவன் எது? 


அடியவர் :-  அதனால அவங்களை திருத்துவோம் அப்படின்னு தான் வந்தாங்க எல்லா சித்தர்களும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப என்ன பண்ணுவாரு ஞானிகள் என்ன பண்ணாரு? அதை திருத்துவதற்கு… 


அடியவர் :-  இங்க வராங்க… அவதாரம் எடுக்குறாங்க. 


=================================

# திருத்தலங்களில் ரகசியங்கள். 

# பிற கிரகங்களுடன் நேரடி தொடர்பு உள்ளது பல திருத்தலங்களில். 

=================================


இடைக்காடர் சித்தர்:- எதைத்தன் இத்தனை திருத்தலங்கள் எப்படி ஏது என்று நிச்சயம் தன்னில் கூட. பிற கிரகங்களை ஈர்க்கும் சக்தி எதை என்று கூற, அவ்வவ் கிரகங்கள் பின் மனிதன் வாழ சரியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான். அவ் சக்தியை பின் இறக்கலாம் என்று. அங்கங்கு திருத்தலங்கள் நிச்சயம் தன்னில் கூட. பின் அங்கு சென்றால் சில விஷயங்கள் நடக்கும் என்பதே மெய்யப்பா. மெய். 




அடியவர் :-   சிவாய நம !!!!! 


அடியவர்கள் :- ( ஆச்சரியத்தில் கை தட்டல்கள் )


சுவடி ஓதும் மைந்தன் :-  இப்ப என்ன சொல்றாரு ?


அடியவர் :-   ஒவ்வொரு கிரகத்திலிருந்து ஒரு ஒரு ஞானிகள், ரிஷிகள் சித்தர்கள் இங்கு வருகின்றார்கள்.  


சுவடி ஓதும் மைந்தன் :-  அங்க எல்லோரும் நல்லா வாழ்ந்துட்டு இருக்காங்க.  


அடியவர் :-  அவங்க இங்க வந்து, அந்த கிரகத்துடைய சக்தியை, இங்க இருக்கின்ற இடத்தை கண்டுபிடிச்சு, அந்த இடத்துல திருத்தலங்கள் கட்டி,  அந்த கிரகத்தோட சக்தியை வந்து இங்க புகுத்தி விடுகின்றார்கள்.  


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்பாவது மனுஷன் 


அடியவர் :-  மாறிடுவான் 


சுவடி ஓதும் மைந்தன் :-  மாறிடுவான். பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தாங்க.


===============================

# திருத்தலங்களின் ரகசிய உண்மை நிலை புரியாத மனிதர்கள் பரிதாப நிலை 

===============================


இடைக்காடர் சித்தர்:- ஆனாலும் கலியுகத்தில் பின் வர வர அதுவும் பொய்யாகிக் கொண்டிருக்கின்றது 


அடியவர் :-  நிச்சயமா 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப மனிதன் கோயிலுக்கு போறதும் பொய்யா , ஏதோ பொழுது போக்காக போறான். அதுவும் பொய்யா ஆயிடுச்சு…. 




(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 08.03.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும்……)


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.