“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Wednesday, March 25, 2026

சித்தர்கள் ஆட்சி - 598 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - 14.03.2026 அன்று இந்தோனேசியாவின் அழகிய தீவான பாலியில் உரைத்த வாக்கு. பாலி ஆன்மீகப் பயணம் - பகுதி 5

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.




அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 15.03.2026 அன்று இந்தோனேசியாவின் அழகிய தீவான பாலியில் உரைத்த   வாக்கு. பாலி ஆன்மீகப் பயணம் -  பகுதி 5 




இரண்டாம் நாள் :- 15.03.2026 (ஞாயிற்றுக்கிழமை)


முதல் புனித தலம்  ( DAY 2  , 1st   PLACE )


கூகிள் மேப் லிங்க் :-

https://maps.app.goo.gl/L2AxYmTLgkBUyPpd7




வாக்குரைத்த தலம் :-  புரா உலூன் தனு பிராட்டன் (Pura Ulun Danu Bratan) , தனாவு பெராதன், சண்டிகுனிங், படுரிதி, தபானன் ரீஜென்சி, பாலி 82191, இந்தோனேஷியா




Address :- Pura Ulun Danu Bratan, Danau Beratan, Candikuning, Baturiti, Tabanan Regency, Bali 82191, Indonesia.



===========================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 

===========================


ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 


அப்பனே, எம்முடைய ஆசிகள். 


===========================

# அதிர்ஷ்டம் தரக்கூடிய பல மூலங்கள் இவ் உலகில் உள்ளன 

===========================


அப்பனே, பல வித்தியாசமான அப்பன பின், அதாவது பல வழிகளில் கூட அதிர்ஷ்டத்தை தரக்கூடிய அப்பனே, நிச்சயம் மூலங்கள் எல்லாம் உள்ளது என்பேன்  அப்பனே. 


அவையெல்லாம் மனிதன் தெரிந்து கொண்டால், அப்பனே, ஆனாலும், அப்பனே, வயதுகள் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இருக்கின்றது என்பேன்  அப்பனே. 


===========================

# உங்கள் வயதின் ரகசியம் - கட்டாயம் இவ் வாக்கை யோசியுங்கள்.

===========================

# குருநாதர் கட்டளை - யோசித்து உங்கள் பத்திகளை கமெண்ட் செய்யுங்கள் 

===========================


அதனால்தான், அப்பனே, பின் மனிதனுக்கு, பின் வயதை, அப்பனே, பின், அதாவது எவை என்று அறிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இறைவன் நிர்ணயிக்கப்பட்டதா? 


அல்லது…… 


மனிதன் அப்பனே, நிச்சயம் எவ்வளவு வயதுதான் என்று நிர்ணயிக்கப்பட்டதா? 


என்பவை எல்லாம் நீங்கள் தான் யோசிக்க வேண்டும்.


===========================

# இறைவன் , மனிதர்கள் அனைத்தும் தெரிந்து கொண்டு நல் வழி நடந்திட பல முறைகள் / வழிகள் காண்பித்துள்ளார் இவ் இந்தோனேசியா தேசத்தில் 

===========================


அப்பனே இதனால்தான், அப்பனே, அனைத்தும் தெரிந்து கொண்டு, அப்பனே, அனைத்தும் பின் இறைவன் பாதை, பின் வழிநடத்திட, அதாவது இறைவனே வழிநடத்திட, அப்பனே, பல பின் முறைகள் காண்பித்துள்ளான், அப்பனே, இத்தேசத்தில். 


===========================

# இறைவனை மக்கள் எவரும் சரியாகவே பின்பற்றுவதில்லை

===========================


ஆனாலும், பின் நிச்சயம் இறைவனை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட மக்கள் எவரும், அப்பனே, சரியாகவே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின்பற்றுவதில்லை. 


===========================

# ஏன் நோய்கள் , வருத்தங்கள் வருகின்றது ?

===========================


அதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் பாதியில், அப்பனே, நிச்சயம் பல வருத்தங்கள், பல நோய்கள். 


===========================

# இறைவனை நீங்கள் காணும் ரகசியங்கள் 

===========================


அப்பனே, சரியான வழியில், அப்பனே, இறைவனை, அப்பனே, நேசித்து, சரியான வழியில் சென்றால், அப்பனே, இறைவனை தரிசித்து, அப்பனே, எதற்காக வந்தோம் என்று தெரிந்து, அப்பனே, அதையும், அப்பனே, பின் வென்றிட்டு, அப்பனே, இறைவனை காணலாம் என்பேன்  அப்பனே. 


===========================

# மாயை வயது - என்ன தொடர்பு ?

===========================


ஆனாலும், பின், அதாவது மாயை மனிதன் நோக்கிக் கொண்டு, நோக்கிக் கொண்டு, இதனாலே பாதி வயது ஆகிப் போகின்றது என்பேன்  அப்பனே. 


இதனால், அப்பனே, எப்படி அப்பா இறைவன் இறைவனை பார்ப்பான், அப்பனே. 


இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 


===========================

# புரா உலூன் தனு பிராட்டன் என்ற இவ் தலத்தின் ரகசியங்கள் கலியுகத்தில் முதன் முறையாக…. 

===========================



அப்பனே, இவ் தளத்தைப் பற்றி சொல்கின்றேன், அப்பனே. 


அப்பனே, அறிந்து கூட இவை எது என்று கூற, பின், அதாவது (இந்தோனேசியா) இவ் தேசத்தில் கூட எதை என்று புரிய, அப்பனே. 


===========================

# இறைவன் ஒருவனே 

===========================


பின் அனைத்தும், அப்பனே, அதாவது நிச்சயம் தன்னில் கூட, பின் ஒன்றே தான். 


இருப்பினும், அப்பனே, பின் ஏன் பிரித்து எதற்காக என்றெல்லாம், அப்பனே, வருங்காலத்தில் யான் எடுத்துரைப்பேன், அழகாக. எதை என்று புரிய….


===========================

# முன்பு ஒரு காலத்தில் (இந்தோனேசியா)  இவ் தேசத்தில் தீய சக்திகள் புகுந்து , தீய சக்திகள் ஆட்டம் அதிகமாக போனது.

===========================


அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் ஒளி புகுந்து, அப்பனே, பின், அதாவது இத்தேசத்தில், அப்பனே, தீய சக்திகள், அப்பனே, நிச்சயம் ஆட்டம், அப்பனே, அதிகமாக போனதப்பா. 


===========================

# எப்படி மனிதர்களால் தீய சக்திகள் உருவாகின்றன ? 

===========================

# எப்படி உங்களை தீய சக்திகள் தாக்கும் ?

===========================

# என்ன கரணம் என்ற அதிர்ச்சி தரும் ரகசிய வாக்கு 

=========================== 


அதாவது, அப்பனே, அதுவும் கூட, அப்பனே, பின் ஒளி எவை என்று, அப்பனே, இவையெல்லாம், அப்பனே, பின், அதாவது தீய சக்திகள் எவ்வாறு ஏற்படுகின்றது என்றால்…….


அப்பனே, நிச்சயம் தன்னில் கூட மனிதனின் ஆன்மாக்கள், அப்பனே, எவ்வளவு ஏது என்று கூற…. 


பிறரை கெடுப்பை எண்ணுவது, நிச்சயம் எவ்வாறெல்லாம், நிச்சயம் தன்னில் கூட….. 


பின் பிறரை அழிக்க எண்ணுவது…..


இவையெல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் ஒன்று சேர்ந்து, அப்பனே, அதாவது இவ் ஆன்மாக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தான், அப்பனே, நிச்சயம் ஒரு தீய சக்தி உருவாகின்றது என்பேன்  அப்பனே. 


===========================

# நல்மனதாக வைத்துக் கொள்ளுங்கள்

===========================

# நல்ல எண்ணங்களோடு வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.

===========================


அதனால்தான், அப்பனே, நல்மனதாக வைத்துக் கொள்ளுங்கள், அப்பனே. 


அதாவது நல்ல எண்ணங்களோடு வாழக் கற்றுக் கொள்ளுங்கள். 




===========================

# ஏன் பொதுநல சித்தனை அவசியம் உங்களுக்கு ?

===========================


அவை மட்டுமில்லாமல், அப்பனே, தீய எண்ணங்களோடு, பின் நிச்சயம் வாழாதீர்கள் என்பவை எல்லாம், அப்பனே, எடுத்துரைத்துக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே. 


===========================

# பொறாமை , பிறரை கெடுக்கும் தீய எண்ணங்களோடு வாழ்ந்தால் என்ன ஆகும் ?

===========================




தீய எண்ணங்களோடு வாழ்ந்தால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அத்தீய பின் ஆன்மாக்கள் இருக்கும் அல்லவா? 


அவை தன், அப்பனே, பின் அப்படியே, அப்பனே, நிச்சயம் எதை என்று கூற, பின், அதாவது பற்றிக்கொண்டு மனிதன், அப்பனே, தீய திசையில் எல்லாம் சென்று….


அப்பனே, பின் அழித்து, அப்பனே, மீண்டும், அப்பனே, யோசிப்பான். இறைவன் இருக்கின்றான் என்று, அப்பனே, மீண்டும், அப்பனே, எது என்று, அப்பனே, பின் எவை என்று புரிய. 


===========================

# உங்கள் எண்ணம் போல், உங்கள்  வாழ்க்கை 

===========================


இதனால்தான், அப்பனே, பின், அதாவது எண்ணம் போல் வாழ்க்கை என்பார்கள், அப்பனே. அனைவருக்குமே புரிந்ததே என்பேன்  அப்பனே. 


===========================

# இறைவன் உங்கள் மனதில் நுழையும் சூட்சுமங்கள்….

===========================


அதனால் எண்ணத்தை மேன்மையாக வைத்திருந்தால், அப்பனே, இறைவன், அப்பனே, உள்ளில் நுழைவானப்பா, 


தெரிவானப்பா, இதயத்திலே, அப்பனே. 


===========================

# தீய மனதை வைத்திருந்தால், வாழ்கை ??????

===========================


ஆனாலும், அப்பனே, பின் தீய, அப்பனே, மனதை வைத்திருந்தால், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட எங்கு செல்ல வேண்டுமோ அங்கு அழைத்துச் சென்றிடும் என்பேன்  அப்பனே. 


===========================

# உலகத்தில் இரண்டே இரண்டு அணிகள் தான்..உலகை ஆட்டிப் படைக்கின்றது…உங்களையும் ஆட்டிப் படைக்கின்றது. 

===========================

# நல்ல உயர் எண்ணங்கள் , தீய கீழ் எண்ணங்கள் 

===========================


இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் வேறொன்றும் இல்லை என்பேன்  அப்பனே. இத்தேசத்தில் என்பேன்  அப்பனே. 


அதாவது, பின் இவ்வுலகத்தில் என்பேன்  அப்பனே. 


===========================

# பின் வரும் வாக்கை நன்கு யோசித்தால் …உங்களின் வாழ்வு ஏன் இப்படி உள்ளது என்று நன்கு தெரிய வரும் ? 

===========================

# உங்கள் உடல் முழுவதும்..எப்படி தாக்குதலுக்கு ஆளாகும் என்று  ஒரு சுய பரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது….

===========================


அனைத்தும் மனிதனுடைய எண்ணங்கள் தான், அப்பனே. நிச்சயம் தீய சக்திகளாகவும், நல் சக்திகளாகவும் பிரித்து பிரித்து…


அப்பனே, அவை அனைத்தும் இரண்டும், அப்பனே, கண்ணும், அப்பனே, நிச்சயம் தன்னில் உள்ள காதும், அப்பனே, எது என்று அறிய, அப்பனே, மூக்கின் துவாரங்களும், அப்பனே, பின் கைகளும், கால்களும், அப்பனே, நிச்சயம் தன்னில் உள்ள இன்பம், துன்பமும், அப்பனே, சூரியனும், சந்திரனும், அப்பனே, பின் அனைத்தும், அப்பனே, பாருங்கள் என்பேன்  அப்பனே…


===========================

# குருநாதர் பொது உத்தரவு:- நிச்சயம் தன்னில் யோசியுங்கள்

===========================

# உங்கள் யோசனை முடிவை அனுபவத்துடன் இங்கு கமெண்ட் செய்யுங்கள்…அனைவருக்கும் உதவும்……

===========================


நிச்சயம் தன்னில் யோசியுங்கள் என்பேன்  அப்பனே, 


நிச்சயம் தன்னில் யோசிக்காமல், அப்பனே, நிச்சயம் விட்டுவிடாதீர்கள் என்பேன் அப்பனே. 


===========================

# யோசிக்காவிட்டால் - வாழ்க்கை கட்டாயம்   நரகமாக போய்விடும்

===========================


வாழ்க்கை, அப்பனே, நரகமாக போய்விடும் என்பேன்  அப்பனே. 


===========================

# உங்கள் வாழ்க்கை இப்போது ஏன் சொர்க்கமாக இல்லை ?

===========================


நரகத்தையும் சொர்க்கத்தையும், அப்பனே, நிச்சயம் யார் தேர்ந்தெடுக்கின்றான் என்றால்…. 


அனைத்தும் மனிதரிடத்திலே என்பேன்  அப்பனே. 


இது சரியாக, பின் நிச்சயம் தேர்ந்தெடுப்பதே இல்லை என்பேன்  அப்பனே. 


===========================

# வாழ்க்கை சொர்க்கமாக மாற , நல் மனதோடு  இருந்தால் போதும். 

===========================


நல் மனதோடு, அப்பனே, இருந்தால் போதும். 


===========================

# இறைவன் பொழியும் ஞானிகள் என்ற அருள் மழை….. 

===========================


அதனால்தான் இத்தனை ஞானிகள், அப்பனே, பின் அதாவது மனிதனை திருத்த, அப்பனே, எத்தனை எத்தனை தேசத்தில், அப்பனே, நிச்சயம் தன்னில் ஞானிகளை இறைவன் அனுப்பிக் கொண்டே தான் இருக்கின்றான் என்பேன்  அப்பனே. 


===========================

# ஆனாலும்  நிச்சயம் மனிதர்கள் தெளிந்தபாடு இல்லை.

===========================


ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட தெளிந்தபாடு இல்லை. 


===========================

# இப்போது உலகில் நடக்கும் அழிவுகள்….

===========================

# ஏன் அழிவுகள் இப்போதும் , எப்போதும் உண்டாகின்றது ?

===========================


அதனால்தான், அப்பனே, அழிவுகள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட… 


===========================

# ஒருபுறம் சித்தர்கள் அழிவை தடுக்க பல முயற்சிகள்… 

===========================


அப்பனே, அழிவுகள். அதை எப்படியோ யாங்கள் தடுத்திட  வேண்டும் என்பவை எல்லாம் அப்பனே. 


===========================

# மறுபுறம் இறைவன் அழிவின் மூலம் தண்டனைகள் 

===========================

# அழிவு ஒன்று வந்தால் தான் இறைவன் யார் என்று தெரியவரும்.

===========================


ஆனாலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அழித்து அழித்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 


அப்பனே, பின் அழித்தால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் மக்களுக்கு, பின் இறைவன் யார் என்று தெரியவரும். 


===========================

# ஏன் இறைவன் அனைத்தும் கொடுப்பதில்லை?

===========================


நிச்சயம் தன்னில் கூட என்றால், அனைத்தும் கொடுத்துவிட்டாலும், பின் எதை என்று புரிய, அப்பனே, பின் இறைவன், அப்பனே, பின் இல்லை என்றே மனிதன் சொல்லிவிடுவான் என்பதை எல்லாம் பல வாக்குகளில் செப்பிவிட்டேன் . 


===========================

# நல் மனதாக இறைவன் அனைத்தும் தருவான் என்று இறைவனை  வேண்டிக் கொள்ளுங்கள். 

===========================


இதனால்தான், அப்பனே, நல்மனதாக இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள். 


இறைவன் அனைத்தும் தருவான் என்று. 


===========================

# இந்தோனேசியாவில் முன்பு ஒரு காலத்தில் தீய சக்தியின் ஆட்டம் அதிகமாக போய்விட்டது 

===========================




ஆனால், அப்பனே, அவ் தீய சக்தியின் ஆட்டம் அதிகமாக போய்விட்டது என்பேன்  அப்பனே. இத்தேசத்தில், அப்பனே. 


ஆனாலும், அனைவரும் எதை என்று புரிய, அப்பனே , நிச்சயம் தன்னில் கூட அனைவருக்கும் நோய்கள் வந்துவிட்டது என்பேன்  அப்பனே . 


நிச்சயம் தன்னில் பல கஷ்டங்கள் வந்துவிட்டது என்பேன்  அப்பனே.


===========================

# மனிதனின் தீய எண்ணங்கள் , அதன் மூலம் தீய சக்திகள் அதிகமாகி , அதனால் இறைவனை வணங்கினாலும் பலன் இல்லாமல் போனது

===========================


அனைத்தும் எதை என்று கூற, இறைவனை வணங்கியும், நிச்சயம் தன்னில் பிரயோஜனம் இல்லாமல் போனது. 


இறைவனை எவை என்று கூற, பல பூஜைகள் செய்தனர், அப்பனே . நிச்சயம் தன்னில் கூட, பின் எவை என்று, அப்பனே . 


ஆனாலும், எதை என்று அறியாமலும், எவை என்று புரியாமலும், அப்பனே, மனது மக்கள் தவித்தனர் என்பேன்  அப்பனே. 


எங்கு இருக்கின்றான் இறைவன்? ஏன், எதற்காக என்றெல்லாம் அப்பனே . 


===========================

# “அந்நிய  ஞானி” - இவ் வாக்கின் ஆதாரமான உயர் பக்தி கொண்ட  ஞானி.

===========================

# “அந்நிய ஞானி” - குறித்த ரகசிய வாக்கு ஆரம்பம் 

===========================


ஆனாலும், நல்விதமாக, அப்பனே , நிச்சயம் தன்னில் கூட, எவை என்று கூற, பின் ஒரு சக்தி எது என்று, அப்பனே, ஒரு ஞானி. அந்நிய ஞானி


===========================

# “அந்நிய ஞானி” - காசியில் இருந்து “புரா உலூன் தனு பிராட்டன்” இங்கு  வந்தார்கள்….. (Pura Ulun Danu Bratan)

===========================




அப்பனே, எது என்று கூற, அப்பனே, பின் வந்து எது என்று, அப்பனே, பின் அதாவது இவையும் கூட எங்கிருந்து வந்தார்கள் என்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சரியாகவே, அப்பனே, பின் காசி தன்னிலே, அப்பனே. 


===========================

# இறைவனே மக்களுக்கு நல் வாழ்வு கிட்ட அனுப்பியவர்தான் இவ்  “அந்நிய ஞானி”

===========================


ஏனென்றால், அப்பனே, இறைவனுக்கு தெரியும் என்பேன்  எங்கிருந்து எங்கு வரவேண்டும் என்பதை  அப்பனே.


நிச்சயம் அவனுக்கு ஒரு கஷ்டங்கள் கொடுத்து…


அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பல வழியில் கூட ஈசனை நினைத்து நினைத்து தவங்கள் செய்தாலும்…


அப்பனே, நிச்சயம் தன்னில் வெறுத்துப் போய்… 


பின் இங்கிருந்து செல்க என்று இறைவனே….


அப்பனே, நிச்சயம் தன்னில் கூட மனதை மாற்றி…


===========================

# (Pura Ulun Danu Bratan)

===========================


அப்பனே, ( இந்தோனேசியாவில் உள்ள - “புரா உலூன் தனு பிராட்டன்”) இங்கு வந்தான் என்பேன்  அப்பனே. 


===========================

# உயர் ஞானிகளுக்கு தீய சக்தி, நல் சக்தி உணரும் வல்லமை உண்டு.

===========================


ஆனாலும், இவனுக்கு தெரிந்துவிட்டது. ஏனென்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட தீய சக்தி, நல் சக்தி என்பதை எல்லாம் இவனுக்கு தெரியும். 


===========================

# யாருக்கு முக்காலம் உணரும் சக்தி உண்டாகும் ?

===========================

# முக்காலம் உணரும் சக்தி கிடைக்க என்ன செய்ய வேண்டும் ?

===========================


ஏனென்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அதாவது சரியாக, அப்பனே, பின் ஒருவனை தர்மத்தை கடைபிடித்து…. 


(எப்பொழுதும்) இறைவனை மனதை நிறுத்திக்கொண்டு…. 


சதா எப்பொழுதும் கூட, பின் இறைவனை, இறை நாமத்தை ஜெபித்துக் கொண்டிருந்தால்….


அப்பனே, நடக்க விருக்கும்….. 


அதாவது என்ன ( நடக்க போகின்றது )  என்று சொல்ல முடியும் என்பேன்  அப்பனே, சரியாக, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 


===========================

# காசியில் அந்நிய ஞானியின் வேலை என்ன ?

===========================


இதனால், அப்பனே, இவன் எப்பொழுதும் இறைவனை, அதாவது ஈசனை நினைத்துக் கொண்டு… 


நினைத்துக் கொண்டு, பல வகையில் கூட…… 


பின் அதிகாலையில், அப்பனே , நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, கங்கையில் நீராடுவது…. 


மீண்டும், அப்பனே , நிச்சயம் தன்னில் கூட, பின் எவை என்று கூற, பின் மாலையில் நீராடுவது…..

மீண்டும் மீதி, அப்பனே, இருக்கும் பொழுதெல்லாம், நமசிவாய, நமசிவாய என்று சொல்லிக்கொண்டே இருப்பது…… 


(அந்நிய ஞானி) இவனுடைய.. இதுதான் வேலை. 


அப்பனே, எதை என்று அறிய, அப்பனே, இவ்வாறு செய்து கொண்டிருந்தான் என்பேன்  அப்பனே. 


===========================

# அந்நிய ஞானிக்கு தெரிந்துவிட்டது. 

# அனைத்தும் இறைவன் ஆதி ஈசன் திருவிளையாடல் என்று… 

===========================


இதனால், அப்பனே, அவனதுக்கு, அப்பனே, வெறுப்பாகிவிட்டது. ஏனென்றால், இதுவும், பின் ஈசனுடைய வேலையே என்பேன்  அப்பனே. 


 இங்கு  (Pura Ulun Danu Bratan) வந்தான். 


===========================

# அந்நிய ஞானி, நாம் ஏன் காசியில் இருந்து  இங்கு (புரா உலூன் தனு பிராட்டன்/ Pura Ulun Danu Bratan - இந்தோனேசியா ) வந்தோம்???? என்று யோசிக்க ஆரம்பித்தார்….. 

===========================


ஏன், எதற்காக என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட, எவை என்று புரிய, பின் அதாவது அமைதியாக….


அப்பனே , நிச்சயம் தன்னில் கூட, பின் எப்படியாவது, பின் அதாவது, பின் எவரையும், அதாவது பிறந்துவிட்டோம்.


பின் நமசிவாய, நமசிவாய என்றெல்லாம், நிச்சயம்…. 


பின் அதாவது செப்பிக்கொண்டே இருக்கின்றோம்… 


காலையிலும், மாலையிலும்…. நிச்சயம் தன்னில் கூட, 


பின் அதாவது கங்கை நதியில் கூட, பின் நீராடினோம். 


ஆனாலும், மக்களுக்கு, நிச்சயம் தன்னில் கூட, இது ஒரு சந்தர்ப்பம். ஈசன் தான் கொடுத்தான் என்று நினைத்துக் கொண்டான். 


===========================

#அந்நிய ஞானிக்கு , தீய சக்திகளை அழிக்க ….

# அன்னை கங்கை தாய் அளித்த வரம் ….

===========================


இதனால், அப்பனே , நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது கங்கை தான்….


பின் எதை என்று புரிய, பின் அதாவது எதற்கு, எவை என்று புரிய, அப்பனே. எவை என்று புரிய, எதை என்று அறிய, அப்பனே…


நிச்சயம் தன்னில் கங்கை தான், நிச்சயம் தன்னில் கூட கொடுத்தது. 


எதை என்று அறிய, அப்பனே, நல்விதமாகவே, அப்பனே, வரத்தை என்றெல்லாம், பின் நிச்சயம் தன்னில் கூட 


இவ்வாறெல்லாம் வரத்தை கொடுத்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட…..


பின் அதாவது ஈசனை, பின் மனமார எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கங்காதேவியும், பின் மனமார  , நிச்சயம் தன்னில் கூட எதை என்று அறிய, நிச்சயம் குளித்தோம் அல்லவா? 


நிச்சயம் தன்னில் எவை என்று கூற…. 


பின் அத்தனையும் நிச்சயம் தன்னில் கூட, அதாவது, பின் இங்கு எவை என்று கூற, பின் அறிந்தும் கூட, அதாவது கங்கை, பின் தாயே, நிச்சயம் தன்னில் கூட எது என்று புரிய….. 


நிச்சயம் தன்னில் கூட, பின் எடுத்து…..


===========================

#அந்நிய ஞானிக்கு , தீய சக்திகள் இங்குள்ள  மக்களை ஆட்டுவிப்பது தெரிந்து விட்டது……

===========================


அதாவது இவ்வளவு தீய சக்திகள், பின் நடந்தேறி, நிச்சயம் தன்னில் கூட மக்கள் இன்னும், அதாவது அவனுக்கு தெரிந்துவிட்டது. 


===========================

# அந்நிய ஞானி… (புரா உலூன் தனு பிராட்டன்/ Pura Ulun Danu Bratan) இங்கிருந்தே கங்கை அன்னையை வேண்டினார்.

===========================




மக்கள் இன்னும் அழிவார்கள் என்று. ஆனாலும், நிச்சயம் தன்னில்… 


கங்கை தாயை நினைத்துவிட்டு…


( கங்கை )தாயே!!!!! 


நிச்சயம், பின் அதாவது எனக்கு யாரும் சொந்த பந்தங்கள் இல்லை….


யாருமில்லை…… 


ஆனால் நீங்கள் தான் சொந்தம் என்று. 


ஆனாலும், நிச்சயம் தன்னில் இவ்வாறு அழிந்து கொண்டிருக்கின்றார்கள். 


(மக்கள் அழிய) வேண்டாம். 


இவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதை எல்லாம், நிச்சயம் தன்னில் கூட…… ஞானி, நிச்சயம் தன்னில் கூட என்று எண்ணி…..நிச்சயம். 


===========================

# கங்கை அன்னை, அந்நிய ஞானியிடம்  கேட்ட கேள்வி….. 

===========================

===========================

# கங்கை தாய் திருவடிகள் போற்றி ! போற்றி !! போற்றி !!!

===========================


ஆனாலும், அதாவது கங்கை தேவி, நிச்சயம் தன்னில் கூட, மகனே, எதை உந்தனுக்கு என்ன வேண்டும் என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட…….


===========================

# அந்நிய ஞானி கேட்ட வரம்….. 

===========================


தாயே !!!!!  நிச்சயம், பின் அதாவது, பின் அங்கே ஓடுகின்றாய் அல்லவா? 


பின் எத்தனை நாட்கள் யான், நிச்சயம் நீராடி இருப்பேன்? நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய….


பின் அதாவது, நிச்சயம், அதாவது எதை என்று புரிய….


===========================

# காசியில் இருக்கும் கங்கை ஆற்றின் நீர் , புரா உலூன் தனு பிராட்டன்/ Pura Ulun Danu Bratan என்ற இவ்விடத்தில் மழையாக பொழிய வேண்டும்.

===========================


பின் இங்கே, நிச்சயம் உன், அதாவது, பின் அங்கே ( காசியில் )  இருக்கும், பின் ( கங்கை ஆற்றின் ) சிறு நீராவது, நிச்சயம் தன்னில் கூட, இங்கு , அதாவது மழை, மழையாக பொழிய வேண்டும். 


===========================

# காசியில் இருக்கும் கங்கை ஆற்றின் நீர் , புரா உலூன் தனு பிராட்டன்/ Pura Ulun Danu Bratan என்ற இவ்விடத்தில் நிரம்ப வேண்டும்.

===========================


இதனால், நிச்சயம் தன்னில் கூட இவைதன் எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட நிரம்ப வேண்டும். 


===========================

# இங்கு வரும்  அவ் கங்கை ஆற்றின் நீர் நிலைகள் , புரா உலூன் தனு பிராட்டன்/ Pura Ulun Danu Bratan என்ற இவ்விடத்தில் மக்கள் தொல்லைகளை அடியோடு அகற்ற வேண்டும்.

===========================


(அவ் கங்கை ஆற்றின் நீர் நிலைகள் ) அனைத்தும் எதை என்று புரிய. 


இதனால் மக்கள் தொல்லைகளை பின் அகற்ற வேண்டும் என்பவை எல்லாம். 


===========================

# கங்கை அன்னை மகிழ்வுடன் அப்படியே ஆகட்டும் என்று வரம் அருளினார்கள்.

===========================

# கங்கை தாய் திருவடிகள் போற்றி ! போற்றி !! போற்றி !!!

===========================




நிச்சயம் அதேபோல். நிச்சயம் தன்னில் கூட பின் கங்கை நதியோ எது என்று கூற, எது என்று அறிய…. 


கங்கை மாதா எவை என்று அறிந்தும் கூட, நிச்சயம் தன்னில் கூட அவ்வாறே ஆகட்டும் என்று…. 


===========================

# இவ் வாக்குரைத்த இடத்தில் மிகப்பெரிய ஒரு நீர் நிலை உள்ளது. அடியவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள கூகிள் லிங்க் மூலம் அதனை பார்த்து…. கங்கை அன்னையை உங்கள் இல்லத்தில் இருந்தே மிக உயர்ந்த… மரியாதைக்குரிய …நெடுஞ்சாண் கிடையாக கங்கை அன்னையை மனதில் நினைத்து வணங்குங்கள்…

===========================

கூகிள் மேப் லிங்க் :-

https://maps.app.goo.gl/L2AxYmTLgkBUyPpd7

===========================


பின் பரிசுத்த எது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட பல வகையில் கூட பின் நீர் நிலைகள் கூட ஏந்தி….. 


எது என்று அறிய, நிச்சயம் தன்னில் (மழை) பொழிந்தாள்…


===========================

# திடீரென்று இவ்விடம் கங்கை அன்னையின் மழை நீரால் நிரம்பியது 

===========================

# கங்கை தாய் திருவடிகள் போற்றி ! போற்றி !! போற்றி !!!

===========================


பின் எவை  என்று அறிய இன்னும் நிரம்பியது நிச்சயம். 


ஆனாலும் அவை எது என்று அறிய ஆனாலும் இவ்வாறாக நிச்சயம் திடீரென்று இதற்கும் எவை என்று அறியாமல் கூட… 


===========================

# அந்நிய ஞானி , வாக்கு உரைத்த இவ் இடத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும்….. கங்கை அன்னையின் வருகையை தெரிவித்தார்… 

===========================


இதனால் மக்கள் அனைவருக்குமே பின் தெரிவித்தான். 


===========================

# கங்கை தாய் திருவடிகள் போற்றி ! போற்றி !! போற்றி !!!

===========================

# புரா உலூன் தனு பிராட்டன்/ Pura Ulun Danu Bratan என்ற இவ்விடத்தில் நீராடினால் என்ன பலன் ?

===========================




இவ் நதியில் நீராடினால் நிச்சயம் தன்னில் கூட…. 


பின் அனைத்தும் நிச்சயம் தன்னில் கூட… 


பின் தீய சக்தியில்…. பின் அதாவது தீய சக்திகளின் அண்டிட்டு நிச்சயம் தன்னில் கூட பின் இவைதன் போக போக பின் அழித்துவிடும் அனைத்தும் கூட. 


===========================

# இங்குள்ள கங்கை அன்னையிடம் அனைவரும் ஒன்று சேர்ந்து நீராடி . மக்கள் பல பலன்கள் அடைந்தனர். பல வகை நோய்கள் தீர்ந்தது. பல வகையில் கூட நன்மைகள் அனைவருக்கும் ஏற்பட்டது. 

===========================

===========================

# இங்குள்ள மக்களுக்கு அருளிய கங்கை தாய் திருவடிகள் போற்றி ! போற்றி !! போற்றி !!!

===========================


இதனால் உடனே நீராடுங்கள் என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட இதனால் அனைவரும் ஒன்று சேர்ந்து நீராடினார்கள் எதை என்று புரிய…


ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின் பலவகை நோய்கள் பின் தீர்ந்தது நிச்சயம் தன்னில் பல வகையில் கூட நன்மைகள் ஏற்பட்டது. 


===========================

# கங்கை அன்னையின் புனித நீரால் , மக்களுக்கு ஆரோக்கியம் ஏற்பட்டது. பல வகையான நோய்கள் நீங்கியது.

===========================

# கங்கை தாய் திருவடிகள் போற்றி ! போற்றி !! போற்றி !!!

===========================


நிச்சயம் தன்னில் பல வகையான நோய்கள் எதை என்று அறிய ஆரோக்கியம் ஏற்பட்டது. 


===========================

# இவ் நீர் நிலை உருவானது முதல் இருந்து …முன்பு உண்மை தெரிந்து வணங்கினார்கள். 

===========================

# இவ் நீர் நிலை உருவான காரணம் காலப்போக்கில் மக்கள் மறந்து விட்டனர்.

===========================

# ஆனால் இப்போது மரபு வழியாக …. (இந்த உண்மை கதை தெரியாமல்) …இவ் தேசத்தின் மக்கள் இன்றும் …. கங்கை அன்னையை அவர்கள் அறியாமலேயே வணங்கிக் கொண்டே இருக்கின்றார்கள்…

===========================

# கங்கை தாய் திருவடிகள் போற்றி ! போற்றி !! போற்றி !!!

===========================


இதனால் நிச்சயம் தன்னில் கூட அன்றிலிருந்து எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட….. 


பின் அதாவது மறைமுகமாக நிச்சயம் தன்னில்…. 


இவ்நதியை வணங்கிக் கொண்டே இருக்கின்றார்கள்.


===========================

# இப்பொழுதும்  கங்கை தேவியாக இவ் நதி / நீர் நிலை உள்ளது 

===========================

# கங்கை தாய் திருவடிகள் போற்றி ! போற்றி !! போற்றி !!!

===========================


எவை என்று கூற…. இவ் நதிதான்….. 


பின் கங்கை தேவியாக பின் எவை என்று கூறி இப்பொழுதும் கூட… 


பின் எவை  என்று கூறி…. 


இதனால் கேட்ட வரங்களை நிச்சயம் தன்னில் கூட… 


அதனால் நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூற… 


===========================

# கங்கை அன்னையிடம் , இவ் மக்களுக்காக , இங்கு வருபவர்களுக்கு …மீண்டும் அந்நிய ஞானி கேட்ட மற்றொரு  வரம் 

===========================

# அந்நிய ஞானி திருவடிகள் போற்றி ! போற்றி !! போற்றி !!!

===========================


பின் அதாவது அந்நிய பின் அந்நிய எதை என்று அறிய பின் முனிவனும் எதை என்று அறிந்தும் கூட நிச்சயம் அதாவது தேவியை… 


பின் நிச்சயம் (கங்கை ) தாயே!!!!! 


நிச்சயம் நீங்கள் தான் எவை என்று கூட அனைத்தும். 


இதனால் நிச்சயம் தன்னில் கூட இவர்கள் நிச்சயம் வருவரும் காலத்தில் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள் என்பவை எல்லாம் யாங்கள்….


அதாவது பின் அதாவது நீங்களே பின் அறிவீர்கள். 


இதனால் நிச்சயம் தன்னில் கூட… 


இதனால் இவர்களுக்கு தேவையானதை  நிச்சயம் தன்னில் கூட….


பரிசுத்தமாக அனைத்தும் கொடுத்து நிச்சயம் தன்னில் கூட…


சந்தோஷமாக வாழ ( வைக்கவேண்டும் ) …. அதுவே போதும் ( தாயே !!! ) …. என்பதை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட.


===========================

# கங்கை அன்னையின் கருணை உத்தரவு…

===========================


இதனால் பின் அதாவது கங்கை பின் தேவியும் நிச்சயம் தன்னில் கூட…


பின் அதாவது குழந்தாய் நிச்சயம் தன்னில் கூட…. 


நீ இங்கிருந்து நிச்சயம் தன்னில் கூட… 


பின் அனைவரையும் பின் காத்து நிச்சயம் தன்னில் கூட இங்கேயே தங்கிவிடு என்றெல்லாம். 


===========================

# கங்கை அன்னையின் உத்தரவை , அப்படியே ஏற்ற அந்நிய ஞானி….

===========================


இதனால் பின் அவன் முடியும் பின் அப்படியே ஆகட்டும் என்று… 


இங்கே தங்கி…. 


பல வகையிலும் கூட மறைமுகமாக நிச்சயம் தன்னில்….


வருவோருக்கெல்லாம் ஆசீர்வதித்து கொடுத்து…. 


என்னென்ன பின் தேவைகள் எல்லாம் பூர்த்தி செய்து கொண்டே இருக்கின்றான். 


===========================

# அந்நிய ஞானி போல , ஒவ்வொரு தேசத்திலும்…ஒவ்வொரு ஞானிகள் …இன்னுமும் இவ் உலகை காத்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்….

===========================


இதனால் ஒவ்வொரு எவை என்று தேசத்திலும்….. 


பின் எங்கிருந்து புறப்பட்டான் என்பதை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட வரும் காலத்தில் சொல்வேன் நிச்சயம் தன்னில் கூட. 


பின் உலகத்தை பின் ஒவ்வொரு ஞானியும் காத்துக் கொண்டுதான் இருக்கின்றான். 


===========================

# எல்லை மீறும் முட்டாள் மனிதன் 

===========================


ஆனால் மனிதனோ எல்லை மீறிக் கொண்டிருக்கின்றான்… 


இவ்வெளியை எப்பொழுது தடுப்பது என்பதை என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட அடுத்தடுத்த வாக்கில் நிச்சயம் குறிப்பிடுவேன்.


===========================

# மனிதர்கள் அனைத்தையும் தெரிந்து கொண்டு இறைவனை வணங்க வேண்டும்.

===========================


இதனால்தான் மனிதர்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.


தெரியாமல் இறைவனை பின் வணங்கினாலும் நிச்சயம் தன்னில் கூட….


===========================

# தீய சக்திகளால் பாதிக்கப்பட்டோர் இங்கு வந்து அமர்ந்தாலே , அந்நிய ஞானிக்கு தெரிந்து விடும். உடனே அவர் அவ் தீய சக்திகளை அழித்து விடுவார். இறைவன் அருளால், கங்கை அன்னையின் ஆசியால் இதுவே அந்நிய ஞானிக்கு முழு நேர வேலையாக இருக்கின்றது.

===========================


இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட சில சில தீய சக்திகளை அண்டுவோர்கள் எல்லாம் இங்கு வந்து நிச்சயம் தன்னில் கூட எதன் கூட அமர்ந்தாலே பின் நிச்சயம் அவன் ஞானிக்கு தெரிந்துவிடும்.. 


பின் எதை தேடி வந்திருக்கின்றார்கள் என்றெல்லாம் நிச்சயம் தன்னில்…


அவனுக்கு தெரிந்து எவை என்று கூற… பின் அழித்துடுவான் தீய சக்திகளை.


பின் அழிப்பதே அவனுக்கு பின் வேலையாக நிச்சயம் தன்னில் கூட வேலையாக இருக்கின்றது.



===========================

# சில சில தீய சக்திகள் என்ற தரித்திரங்கள்  மனிதனை தாக்கிக் கொண்டே இருக்கின்றது.

===========================


இதனால்தான் சில சில தரித்திரங்கள் மனிதன் தெரியாமல் வாழ்ந்து கொண்டே இருக்கின்றான். 


சில சில தீய சக்திகள் எதை என்று கூற பின் அண்டிக்கொண்டே இருக்கின்றது மனிதனை.


===========================

# மனிதனிடத்தில் உள்ள தீய சக்திகளை எங்கு சென்று நீக்க வேண்டும் என்று தெரிந்து முதலில் அங்கு செல்ல வேண்டும். ===========================

 

அவ் சக்திகள் எங்கு பின் நீங்கும் முதலில் கூட பின் அங்கு நீக்கினால்தான் நிச்சயம் தன்னில் கூட பின் நலமாகும். 


===========================

# உங்களிடம் உள்ள தீய சக்திகளை நீக்கினால்தான் , உங்கள் உள்ளங்கள் தெளிவாகும். உங்களுக்கு நல்லெண்ணங்கள் நிச்சயம் வளரும். 

===========================


உள்ளங்கள் தெளிவாகும். 


நல்லெண்ணங்கள் நிச்சயம் வளரும். 


இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட.. 


===========================

# தேடி அலைந்தால் தான் வெற்றி உண்டாகும் 

===========================


ஆனாலும் நிச்சயம் தேடி அலைய வேண்டும் என்று சொல்லிவிட்டேன்..


அனைத்திற்கும் தேடி அலைந்தால் தான்… பின் நிச்சயம் தன்னில் கூட…. வெற்றி கிட்டும் எவை என்று அறிய. 


===========================

# ஆனால் அதே நேரத்தில் இறை பக்தியை தேடி அலைவது கடினம் 

===========================


ஆனாலும் பின் இறை பக்தியை பின் எவை என்று கூறி இன்னும் பின் அனைத்திற்கும் மேலாக இறைபக்தி தான் நிச்சயம் தன்னில் கூட பின் தேடி அலைய வேண்டியது, பின் கடினம் என்பேன் அப்பனே 


அனைத்தும் பின் தேடி அலையலாம்… 


ஆனாலும் இறை பக்தியை பின் தேடி காண்பது என்பது அவ்வளவு சுலபம் அல்ல நிச்சயம் தன்னில் கூட. 


===========================

# இறை பக்தியை தேட…முதலில்…..

===========================


ஒன்று இறைவனின் பின் அதாவது இறைவன் பின் (உங்களை இது போன்ற இடங்களுக்கு) வர வழைக்க வேண்டும் 


மற்றொன்று…. அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் முடியாதப்பா நிச்சயம் தன்னில் கூட.. 


பின் எவ்வாறு மனிதன் நினைத்தாலும் கூட பின் எவை என்று கூற.


===========================

# இவ் உலகமே சித்தர்களின் ராஜ்யம் 

===========================


அதனால்தான் அப்ப நிச்சயம் தன்னில் எங்கெங்கோ.. அதாவது நிச்சயம் தன்னில் கூட பின் எங்கள் எவை என்று கூற ராஜ்ஜியமாகவே இருந்து என்பேன் அப்பனே. 


ஏனென்றால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட… பின் உலகமே அப்பனே நிச்சயம் தன்னில் கூட சரியாக நடந்து கொண்டிருக்கின்றது..


அப்பொழுது எவை என்று கூற… 


பின் அதனால் நிச்சயம் மக்கள் நலராக பின் வாழட்டும் என்று விட்டுவிட்டோம் என்பேன் அப்பனே.


===========================

# காலப்போக்கில்  மனிதன் மாறிவிட்டான்…

===========================


ஆனாலும் காலப்போக்கில் அப்ப நிச்சயம் தன்னில் கூட மனிதன் மாறிவிட்டான் என்பேன் அப்பனே. 


அதனால்தான் மீண்டும் அப்பனே நிச்சயம் தன்னில் வந்து… 


அப்பனே வாக்குகள் பரப்பி…. 


அப்பனே மனிதரை திருந்த ( இறைவனின் ஆசியால் கடைசி முயற்சி சித்தர்கள் எடுத்துள்ளனர்) … 


===========================

# மனிதன் திருந்த வில்லை என்றால் ..

# 2026 ஆம் ஆண்டு ….இப்போது நடந்து கொண்டிருக்கும் உலக அழிவுகள் போல நடக்க ஆரம்பிக்கும்…. 

===========================


அப்பனே  அப்படி இல்லை என்றால் அப்பனே… 


நிச்சயம் எப்படி எவ்வாறு  அழிவுகள் இப்பொழுதும் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறீர்கள்.. 


எவ்வாறு எல்லாம் பின் அழிவு எதை என்று அறிய.


அப்பனே அதனால் சொல்லிக் கொண்டே இருந்தேன் அப்பனே. 


நிச்சயம் திருந்துங்கள் திருந்துங்கள் என்று அப்பனே நிச்சயம் தன்னில் கூட.


===========================

# மனிதன் திருந்த வில்லை என்றால் ..இன்னும் அழிவுகள் பலமாகும் 

===========================


அப்பனே திருந்தாவிடில் அப்பனே எவை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 


அப்பனே இதனால் அப்பனே இன்னும் இன்னும் அழிவுகள் அப்பனே பின் ஏராளம். 


===========================

# ஏன் பல வாக்குகள் மனிதர்களுக்கு வந்துகொண்டே இருக்கின்றது?

===========================


இதனால் அப்பனே மக்களுக்கு தெளிவுபடுத்தி.. 


உண்மை நிலையை அப்பனே ஞானங்களை பெருக்கி.. 


===========================

# தன்னை வென்றால் மட்டுமே , இறைவனை காண முடியும்

===========================


அப்பனே தங்களை அப்பனே பின் தான் வென்றால்தான் அப்பனே  நிச்சயம் தன்னில் இறைவனை காண முடியும் என்பேன் அப்பனே. 


தாங்கள் வெல்லவே , அப்பனே நாங்கள் வந்து வாக்குகள் செப்பிக் கொண்டிருக்கின்றோம் அப்பனே நிச்சயம் தன்னில். 


கவலைகள் வேண்டாம் என்பேன் அப்பனே. 


===========================

# மனிதனை திருத்தி… அவனை உயர்த்தினால் நன்மைகள் பலருக்கு உண்டாகும்.

===========================


இன்னும் அப்பனே நிச்சயம் மனிதனை திருத்துவோம் அப்பனே. 


பின் ஒரு மனிதனை எவை என்று அப்பனே எவ்வாறு எங்கெல்லாம் மனிதனை திருத்தி… 


அப்பனே நிச்சயம் தன்னில் கூட உயர்த்தினால் அப்பனே… 


===========================

# தீய சக்திகள் வராமல் காத்து ,தேசத்தை ஆண்டு கொண்டிருக்கும் ஞானிகள்.

===========================


அதனால் ஒரு முனிவன் அப்பனே தேசத்தை ஆண்டு கொண்டிருக்கின்றான் அப்பனே தெரியாமலே தீய சக்திகள் வராமல் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 


ஆனாலும் எல்லை மீறி வந்து விடுகின்றது என்பேன் அப்பனே. 


ஆனாலும் அவனுடைய அப்பனே பின் விஷயத்தில் விளையாடுவதே இல்லை என்பேன் அப்பனே. 


===========================

# மனிதர்களின் தீய எண்ணங்களால் , அவர்களுக்கு தீய சக்திகள் பல உள் புகுந்து , ஆலயத்திற்கு வரும் பலருக்கும் ஒன்றும் நல்லது நடப்பதில்லை….

===========================


அதனால்தான் அப்பனே இன்னும் அப்பனே பல பல ஆன்மாக்கள் அப்பனே  நிச்சயம் தன்னில் கூட… 


இறைவனை வணங்கியும்…. 


அப்பனே சில தீய சக்திகளோடு அப்பனே உள்புகுந்து… 


அப்பனே வருகின்றார்கள் திருத்தலத்திற்கு ஒன்றும் நடக்க எவை என்று கூற தீய மனதுடைய என்பேன் அப்பனே. 


அப்படி இருப்பவர்கள் ஒன்றும் நடக்காது என்பேன் அப்பனே. 


===========================

# அன்புடன் குருநாதர் , நமக்கு தீய சக்திகளை நீக்க எங்கு செல்ல வேண்டும் என்று தெரிவிப்பார்கள் .

===========================


இதனால் அப்பனே எங்கு செல்ல வேண்டும் என்பவை எல்லாம் அப்பனே வருங்காலத்தில், அப்பனே தெரிவிப்பேன் என்பேன் அப்பனே. 


===========================

# இவ் அந்நிய ஞானி - அங்கங்கு மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கின்றார்.

===========================

# இதே போல பல ஞானிகளும் இவ்வாறே பல ஞானிகளும் உலகத்தில் மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கிறனர் என்று அடியவர்கள் அறிய தருகின்றோம்.

===========================


ஏனென்றால் அங்கங்கு அப்பனே பின் முனிவன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட வந்து அப்பனே பின் எவை என்று மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கின்றான். 


===========================

# இவ் அந்நிய ஞானி எப்போது உங்களை தேடி வருவார் ?

===========================


அப்பனே முனிவன் பின் நம் தன்னை தேடி வருவானா? 


அப்பனே அப்படி தேடி வரவேண்டும் என்றால்…. அனைவரும் அப்பனே உண்மையாக பின் பக்தியாக இருக்க வேண்டும். 


அப்பொழுதுதான் தேடி வருவான் என்பேன் அப்பனே. 


ஆனாலும் அப்பனே இப்பொழுது மங்கிவிட்டது. 


===========================

# அடியவர்கள் நல் மனதாக மாற வேண்டும்…..

 ===========================


அதனால்தான் அப்பனே  நிச்சயம் தன்னில் கூட (அந்நிய ஞானி) அவனை தேடி அப்பனே  நிச்சயம் தன்னில் கூட… 


அதாவது நீங்கள் மாறுங்கள் என்பேன் அப்பனே. 


(அந்நிய ஞானியை) யான் வரவழைக்கின்றேன் என்பேன் அப்பனே. 


நல் ஆசிகள். 


நல் ஆசிகள்.


===========================

# இன்னும் ரகசியங்கள் இத்திருத்தலத்தில் இருக்கின்றது 

===========================


மீண்டும் அப்பனே இன்னும் ரகசியங்கள் இத்திருத்தலத்தில் இருக்கின்றது என்பேன் அப்பனே. 


பல அதிசயங்கள் என்பேன் அப்பனே. 


இன்னும் அப்பனே சொல்வேன் அப்பனே வருங்காலத்தில் கூட 


===========================

# ஒரு ஆலய வரலாற்றை மறைத்த மனிதர்கள் 

===========================


அப்பனே எவை என்று கூற ஒரு ஆலயத்திற்கு பல வரலாறு இருக்கின்றது என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட 


அவையும் மறைத்துவிட்டார்கள்.. 


இனிமேலும் அப்பனே என்றால் அப்பனே இறைவன் இருப்பது மெய் அப்பனே நிச்சயம் தன்னில் கூட 


பின் உலகம் அழிவது பொய். 


அப்பனே எவை என்று அறிய.


அப்பனே பின் இதற்கு என்ன அர்த்தங்கள் என்று கூறினீர்களனால்… அப்பனே அனைவரும் அப்பனே உலகம் அழியும் அழியும்.


ஆனாலும் ஞானிகள் இருக்கின்றார்களே அப்பனே எவ்வாறு அழியும் எதை என்று அப்பனே நிச்சயம் தன்னில் கூட… 


இறைவன் இருப்பதும் மெய்.


அப்பனே எவை என்று கூற பின் உலகம் 


சொல் அப்பனே ?.... 


===========================

# குருநாதர் அடியார்களிடம் கேள்விகளை கேட்டார்கள் 

===========================


சுவடி ஓதும் மைந்தன் :- சொல்லுங்க….


அடியவர் :- இறைவன் இருப்பது மெய். 


சுவடி ஓதும் மைந்தன் :-  உலகம் அழிவதும் 


அடியவர் :- உலகம் அழிவதும் மெய்.  இவங்களாலதான் காப்பாத்தப்படணும் 


===========================

# மீண்டும் வாக்குகள் …….

===========================


குருநாதர் :- அப்பனே எது என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே புரிந்து கொள்ளுங்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 


===========================

# சில விஷயங்கள் உங்களுக்கு புரியாமல்  இருப்பதுதான் நல்லது.

===========================


சில விஷயங்கள் உங்களுக்கு புரியாமல் இருக்கும் என்பேன் அப்பனே.


ஆனாலும் அப்பனே புரியாமல் இருப்பதுதான் நல்லது என்பேன் அப்பனே.


சில விஷயங்கள் மனதை குழப்பிவிடும் என்பேன் அப்பனே. 


===========================

# சித்தர்கள் வாக்கு மூலம் , மனதை குழப்பிக் கொள்வது நல்லது. 

===========================

# ஏனென்றால் அறிவு ஏற்பட்டு , தரித்திரங்கள் நீங்கும்

===========================


குழப்பிக் கொள்வதுதான் நல்லது என்பேன் அப்பனே. 


ஏனென்றால் அப்பனே பின் அதாவது தரித்திரங்கள் பின் நீங்கும் அல்லவா?


===========================

# ஏன் சித்தர்கள் வாக்குகளை மாற்றி மாற்றி , அப்படியும் இப்படியும் சொல்கின்றார்கள்? 

===========================


அப்பனே இப்படியும்… அப்பனே நாங்கள் சித்தர்கள் எவை என்று கூற…. அப்படியும்… இப்படியும்…. சொல்லுவோம் என்போம் அப்பனே.


ஆனாலும் நீங்கள் சிந்திக்க வேண்டும் சரியாக. 


ஏன் இதற்கு சித்தன் சொன்னான் என்றால்?????


அப்பனே அப்பொழுதுதான் உண்மை நிலை தெரியும் என்பேன் அப்பனே. 


===========================

# சித்தர்கள் வாக்குகளை சிந்திக்காமல் , படித்து மட்டும் போனால்…. நிச்சயம் அழிவுதான் நிச்சயம்…..ஒவ்வொரு வாக்கையும் ஆழமாக சிந்தியுங்கள்….உங்கள் தரித்திரங்கள் நீங்கும்…

===========================


ஏதோ எவை என்று கூற அங்கு இப்படி சொன்னான்… 


இங்கு அப்படி சொன்னான் என்றெல்லாம்… 


அப்பனே  நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூற… 


பின் அதாவது அப்படியே நினைத்துக் கொண்டு போனால்…. 


அப்பனே நிச்சயம் அழிவுதான் நிச்சயம் என்பேன் அப்பனே. 


===========================

# இவ் வாக்குகளை படிக்கும், அடியவர்கள் சிந்தனைக்கு பின் வரும் வாக்குகள்…..நன்கு சிந்திக்கவும்…..

===========================


எதற்காக சொல்கின்றேன் அங்கும் இங்கும்? 


அப்பனே எவை என்று அப்பனே?


பின் இதனால் அப்பனே பின் எவை என்று… 


சென்றோர்… 


வந்தோர்…


அப்பனே போவோர்…. 


பின் எவை என்று தங்குவோர்… 


பின் இல்லோர்…. 


பின் உள்ளோர்… எவை என்று அறிய அப்பனே  நிச்சயம் தன்னில்.


===========================

# இறைவா நீயே அனைத்தும் 

===========================


அனைத்திற்கும் காரணம் அப்பனே பின் ஈசன் அப்பனே எதை என்று கூற.


அப்பனே பின் இறைவன் இருக்கின்றான் அப்பனே பரிபூரணமாக. 


ஆசிகள் அப்பனே மற்றொரு தலத்தில் உரைக்கின்றேன் அப்பனே. 


===========================

# அந்நிய ஞானியின் வேண்டுகோள்…

===========================


அப்பனே பின் நிச்சயம் தன்னில் அழகாக இன்னும் அப்பனே பின் அதாவது நிச்சயம் தன்னில்… 


===========================

# கங்கை அன்னையே !!! இங்கேயே தங்கிவிடு !!!

===========================


அவ் முனிவனும் எவை என்று கூற பின் தேவியே நிச்சயம் ஏதோ ஒரு ரூபத்தை எடுத்து நீ இங்கே தங்கிவிடு நிச்சயம் தன்னில்… 


மக்களுக்கு சேவை செய் என்றெல்லாம்… 


பின் அதாவது உன்னிடம் பாசம் வைத்தேன் அல்லவா? 


பின் அம்மையாக இங்கே இருந்துவிடு… நிச்சயம் தன்னில் என்றெல்லாம்… 



===========================

# கங்கை அன்னையின் வரம் 

===========================


நிச்சயம் அதாவது ஒரு பாகம் நிச்சயம் தன்னில் கூட… எவை என்று கூற பின் இங்கேயே நிச்சயம் தன்னில் இருக்கின்றேன் என்று சொல்லிவிட்டாள். 


இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று கூற…  


===========================

# மறைமுகமாக இயக்கிக் கொண்டே இருக்கும் கங்கை அன்னை 

===========================

# கங்கை தாய் திருவடிகள் போற்றி ! போற்றி !! போற்றி !!!

===========================


பின் நிச்சயம் தன்னில் கூட மறைமுகமாக இயக்கிக் கொண்டே இருக்கின்றாள். 


===========================

# இவ்விடத்தில் அனைவருக்கும் தேவையானதை (கங்கை) தேவி கொடுத்துக் கொண்டே மறைமுகமாக இயக்கிக் கொண்டே இருக்கும் கங்கை அன்னை 

===========================

# கங்கை தாய் திருவடிகள் போற்றி ! போற்றி !! போற்றி !!!

===========================


அனைவருக்கும் தேவையானதை பின் நிச்சயம் தன்னில் (கங்கை) தேவி கொடுத்துக் கொண்டே இருக்கின்றாள்  மறைமுகமாக. 


===========================

# புரா உலூன் தனு பிராட்டன் (Pura Ulun Danu Bratan)

===========================

# இங்குள்ள பக்தர்களுக்கும் நிச்சயம் இறைவன் அனைத்தும் கொடுக்கின்றான் என்று தெரியும்

===========================


அதனால் நிச்சயம் தன்னில் கூட… 


பின் அதாவது பின் இவர்களுக்கு தெரியும். 


நிச்சயம் இறைவன் பின் எவை என்று அனைத்தும் கொடுக்கின்றான் என்று. 


===========================

# இங்குள்ள பக்தர்கள் “தனுதேவி” என்று அழைக்கப்படும் கங்கை தாயை வணங்கி பூஜைகள் ஆத்மார்த்தமாக செய்து கொண்டே இருக்கின்றார்கள். 

===========================


நிச்சயம் பின் அவ்வளவு ஆத்மார்த்தமாக செய்து கொண்டே இருக்கின்றார்கள். 


நலம் !


நலம் !! 


ஆசிகள் ! 


ஆசிகள் !!


மீண்டும் ஒரு பின் தலத்தில் உரைப்பேன் 


ஆசிகள் ! 


ஆசிகள் !!



===========================

# சுவடி ஓதும் இடத்தில், அடியவர் மூலம்  வந்த நேரடி குறிப்புகள் 

===========================


கூகிள் மேப் லிங்க் :-

https://maps.app.goo.gl/L2AxYmTLgkBUyPpd7


வாக்குரைத்த ஸ்தலத்தின் முகவரி:-  புரா உலூன் தனு பிராட்டன், தனாவு பெராதன், சண்டிகுனிங், படுரிதி, தபானன் ரீஜென்சி, பாலி 82191, இந்தோனேஷி


Address :- Pura Ulun Danu Bratan, Danau Beratan, Candikuning, Baturiti, Tabanan Regency, Bali 82191, Indonesia.

===========================


புரா உலூன் தனு பிராட்டன் (Pura Ulun Danu Bratan) என்பது பாலி தீவின் அடையாளமாகவே கருதப்படும் மிக முக்கியமான மற்றும் புகழ்பெற்ற நீர்நிலைக் கோயிலாகும். பெடுகுல் (Bedugul) மலைப்பகுதியில் உள்ள பிராட்டன் ஏரியின் கரையில் இது அமைந்துள்ளது.


இந்த ஆலயத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் ஆன்மீகத் தகவல்கள் இதோ:


1. மிதக்கும் கோயில் (The Floating Temple)

இந்த ஆலயத்தின் தனிச்சிறப்பே இதன் அமைப்புதான். பிராட்டன் ஏரியின் நீர்மட்டம் உயரும்போது, இந்தக் கோயில் ஏரியின் நடுவே மிதப்பது போன்ற ஒரு அற்புதமான மாயத் தோற்றத்தை உருவாக்கும். பஞ்ச பூதங்களில் ஒன்றான 'நீர்' தத்துவத்தை உணர்த்தும் மிகச் சிறந்த தலம் இது.


2. தேவி தனு மற்றும் மும்மூர்த்திகள் வழிபாடு

இந்த ஆலயம் பாலியின் நீர், ஏரிகள் மற்றும் நதிகளின் தெய்வமான தேவி தனு (Dewi Danu) என்பவருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பாலி விவசாயிகளுக்கு நீராதாரமாக விளங்கும் இந்த ஏரியைப் பாதுகாக்க தேவியை வழிபடுகின்றனர். மேலும், இங்கு பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவபெருமான் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் சன்னதிகள் உள்ளன.


3. ஈசனின் 11 அடுக்கு 'மேரு' கோபுரம்

பாலி கட்டிடக்கலையின் உச்சமாக இங்குள்ள பனை ஓலைகளால் வேயப்பட்ட 'மேரு' (Meru) கோபுரங்களைக் கூறலாம். ஏரிக்கு நடுவே கம்பீரமாக நிற்கும் 11 அடுக்குகள் கொண்ட பிரம்மாண்ட கோபுரம் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. (பிரம்மாவுக்கு 7 அடுக்குகளும், விஷ்ணுவுக்கு 3 அடுக்குகளும் கொண்ட கோபுரங்கள் உள்ளன).


4. மலைப்பிரதேசத்தின் ஆன்மீக அதிர்வுகள்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 1500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளதால், இந்தப் பகுதி எப்போதும் குளிர்ந்த காற்று மற்றும் லேசான பனிமூட்டத்துடன் காணப்படும். அமைதியான ஏரி, சுற்றிலும் உயர்ந்த மலைகள், நடுவே சிவபெருமானின் ஆலயம் என தியானம் செய்வதற்கு ஏற்ற மிக உயர்ந்த ஆன்மீக அதிர்வுகளைக் கொண்ட இடம் இது.


5. பாலி நாணயத்தில் உள்ள பெருமை

இந்தக் கோயிலின் அழகு மற்றும் முக்கியத்துவத்தின் காரணமாக, இந்தோனேசியாவின் 50,000 ரூபியா (Rupiah) காகித நோட்டில் இந்தப் புரா உலூன் தனு கோயிலின் படம் பொறிக்கப்பட்டுள்ளது.

வலைப்பதிவிற்கான சிறப்புச் சுருக்கம்:

"மலைகளின் மடியில், ஏரியின் நடுவே ஈசன் கொலுவிருக்கும் தலம் 'புரா உலூன் தனு'. நீரின்றி அமையாது உலகு என்பதற்கேற்ப, பஞ்ச பூதங்களில் நீரின் சக்தியை முழுமையாக உணரக்கூடிய ஆத்மார்த்தமான இடம் இது."


குருநாதர் வாக்குப்படி..

காசியில் வாழ்ந்து வந்த ஞானி ஒருவர் இங்கு வந்து தீய சக்திகளை விரட்டி மக்களின் கஷ்டத்தை மற்றும் நோய்களையும் நீக்கி இன்றளவும் இங்கு வருபவர்களிடம் உள்ள தீய சக்திகளை விலக்கி மக்களை காத்துக் கொண்டு வருகிறார்.. இன்றளவும் மக்கள் ஆத்மார்த்தமாக பூஜைகள் செய்து தனுதேவி என்று அழைக்கப்படும் கங்கை தாயை வணங்கி பூஜைகள் செய்து வருகின்றனர்.


(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 15.03.2026 அன்று இந்தோனேசியாவின் அழகிய தீவான பாலியில் உரைத்த   வாக்குகள்  தொடரும் …….)


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.