இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.
அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 16.03.2026 அன்று இந்தோனேசியாவின் அழகிய தீவான பாலியில் உரைத்த வாக்கு. பாலி ஆன்மீகப் பயணம் - பகுதி 9
(திருக்கடையூர் அபிராமி அன்னையின் செல்ல பிள்ளை மார்க்கண்டேய மஹரிஷி குறித்த வாக்கு )
வாக்குரைத்த நாள் :- 16.03.2026 (திங்கட்கிழமை) , (மூன்றாம் நாள் , இரண்டாம் புனித தலம்) - ( DAY 3 , 2nd PLACE )
வாக்குரைத்த ஸ்தலத்தின் முகவரி :- பெசாகி ஆலயம், புரா அகுங் பெசாகிஹ், பெசாகிஹ், ரெண்டாங், கரங்காசேம் ரீஜென்சி, பாலி 80863, இந்தோனேசியா
| வாக்குரைத்த ஸ்தலத்தின் முகவரி :- பெசாகி ஆலயம், புரா அகுங் பெசாகிஹ், பெசாகிஹ், ரெண்டாங், கரங்காசேம் ரீஜென்சி, பாலி 80863, இந்தோனேசியா |
கூகிள் மேப் லிங்க் (Google Map link) :-
https://maps.app.goo.gl/d735ueLkPQj2jZqi8
Address :- Pura Agung Besakih, Besakih, Rendang, Karangasem Regency, Bali 80863, Indonesia
=============================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
=============================================
ஆதி முதல்வனை மனதில் எண்ணி செப்புகின்றேன் , அகத்தியன்.
அப்பனே, எம்முடைய ஆசிகள்.
அப்பனே, பல அப்பனே, ஞானிகள், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட பல அப்பனே, பின் திருத்தலங்களில் இயற்றியதை (பாடல்களை) அப்பனே, நிச்சயம் அப்பனே, மறைத்து வைத்துள்ளனர்.
அவையெல்லாம் யாங்கள் வெளிக்கொண்டு வருவோம், அப்பனே.
ஏனென்றால் தர்மம், அப்பனே, தலைகீழாக போய்க்கொண்டிருக்கின்றது என்பதை எல்லாம், அப்பனே, சொல்லிக் கொண்டே இருக்கின்றோம், அப்பனே.
இவ்வாறு, அப்பனே, பின் தர்மம் தலை கீழாக சென்று கொண்டே இருந்தால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட மனிதனால், அப்பனே, பின் தலை நிமிர்ந்து வாழ முடியாதப்பா.
பிற பிற ஜீவராசிகளும் தலை நிமிர்ந்து வாழாதப்பா.
இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் தான் தான், நிச்சயம் தன்னில் கூட எவை என்று, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் அதாவது ஞானிகளை அழைத்து வருகின்றோம், அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
இவ்வாறு, அப்பனே, ஞானிகளை, அப்பனே, பின் அழைத்து வந்துவிட்டால், அவர்கள், அப்பனே, பின் உலகத்தைப் பற்றி சொல்லியிருக்கின்றார்கள்.
உலகம் இப்படித்தான், நிச்சயம் இப்படி இருந்தால், நிச்சயம் தன்னில் கூட.
ஆனாலும், அப்பனே, பின் எழுதிவிட்டு சென்றுவிட்டார்கள்.
ஆனாலும், பின் வந்து காக்க என்றெல்லாம், அப்பனே, ஒவ்வொருவரையும் எழுப்பிக் கொண்டே இருக்கின்றோம்.
=============================================
# அன்பு குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளால் , கலியுகத்தில் முதல் முறையாக மரணத்தை வென்ற “மார்க்கண்டேய மஹரிஷி” வாழ்க்கை பற்றிய மறைக்கப்பட்ட ரகசிய வரலாறு வாக்கு ஆரம்பம்.
=============================================
அப்பனே, அவை மட்டுமில்லாமல், அப்பனே, பின் அதாவது மார்க்கண்டேயனைப் பற்றி, அப்பனே, நான் எழுத்துரைக்கின்றேன் இப்பொழுது அப்பனே, எதை என்று அறிய, அப்பனே.
இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் இவன் தாய் தந்தையர், அப்பனே, சிறுவயதிலே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் ஈசனின், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் தாய் எவை என்று கூற, அப்பனே, ஈசனையும் எவை என்று கூற, பல திருத்தலங்களை, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, பின் ஈசனே, நிச்சயம் தன்னில் எவை என்று கூற, பின் நீதான், நிச்சயம் தன்னில் கூட மகனாக பிறக்க வேண்டும் என்று இவள் தாய், நிச்சயம் தன்னில் கூட எதை என்று கூற, எண்ணி எண்ணி எவை என்று அறிய.
ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட அழகாக, நிச்சயம் தன்னில் கூட, பின் ஒரு குழந்தை.
ஆனாலும், அக்குழந்தை எவை என்று கூற, இவன் தந்தைக்கு தெரிந்துவிட்டது நிச்சயம் தன்னில் கூட.
அதாவது நிச்சயம் பிறந்தவுடன், பின் இறக்க வேண்டும் என்பது சில பின் ஆண்டுகளிலே.
இதை அனைவரும் அறிந்ததே.
=============================================
# ஓம் மார்க்கண்டேய மஹரிஷி திருவடிகள் போற்றி ! போற்றி !!
=============================================
ஆனாலும், நிச்சயம் பின் எவை என்று அறிய நிச்சயம் பின் வாழ்க்கை எவ்வாறு போனது என்று யாருக்காவது தெரியுமா என்றால், நிச்சயம் பின் தெரியாதப்பா எது என்று கூற.
இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அவையெல்லாம் எழுதி வைத்திருந்தார்கள் என்பேன், அப்பனே.
இதனால், அவையெல்லாம் மறைத்து விட்டார்கள்.
ஏனென்றால், அப்பனே, பின் அவையெல்லாம், அப்பனே மீண்டும், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே எடுத்து வந்து, அப்பனே மக்களுக்கு தெரியப்படுத்தி விட்டால், அப்பனே, மக்கள் பிழைத்துக் கொள்வார்கள் என்பேன் அப்பனே.
இதனால்தான் அழித்து விட்டனர் என்பேன், அப்பனே.
இதனால், அப்பனே, நிச்சயம் எவ்வாறு வெல்வது, அப்பனே, பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட இள வயதில், அப்பனே, பின் எவ்வாறு சாவை வெல்வது என்பதை எல்லாம், அப்பனே, அவன் எழுதி வைத்திருக்கின்றான், அப்பா.
ஆனாலும், பின் அனைத்தும் மறைந்துவிட்டது.
இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இவன் தன் தந்தைக்கு தெரிந்துவிட்டது. நிச்சயம் பின் இறக்கப் போகின்றான் என்று.
நிச்சயம் மனம் வருந்தி, மனம் வருந்தி , இதனால் நிச்சயம் பின் பின் அதாவது தாய்க்கும் தெரிவித்தான்.
பின் அதாவது நிச்சயம் பின் அதாவது கணவன் எவை என்று கூற எவை என்று அறிய. நிச்சயம் தன்னில் கூட.
இவ்வாறுத்தான் நிச்சயம் விதி உள்ளது.
இதனால், நிச்சயம் பின் பிள்ளைக்கு பின் சொல்ல வேண்டாம்.
இதனால் சொல்ல வேண்டாம்.
இதனால் எவை என்று புரிய. இதனால் இவர்கள் பின் அத்தாய் நிச்சயம் மனவருந்தியை மனவருந்தியே நிச்சயம் தன்னை ஈசா !!!!! இவ்வாறாக கொடுத்தாய்.
நீயே பின் பிறக்க வேண்டும் என்று நினைத்தேன்.
ஆனாலும் இப்படி ஆகிவிட்டது என்று நினைத்து நினைத்து உண்ணாமலும் உறங்காமலும் நிச்சயம் தன்னில் கூட பின் வருத்தத்தில் பின் அதாவது பின் பின் காலமானார்.
எதை என்று அறிய, இன்னும் கூட அவை எங்கு உள்ளது என்பவை எல்லாம் பார்த்தால் சீர்காழியிலே இருக்கின்றது எவை என்று புரிய.
ஆனாலும் இன்னும் கூட நிச்சயம் தன்னில் கூட பல வழிகளில் கூட பின் நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று அறிய.
பின் அதாவது பின் இவ்வாறு பின் குழந்தைகள் எல்லாம் காக்கவே அவர்கள் எப்பொழுதும் பின் இன்னும் கூட பின் அலைந்து திரிந்து நிச்சயம் பின் அதாவது எவை என்று கூட வந்தால் பின் எதை என்று புரிய,நிச்சயம் தன்னில் அவையும் கூட நிச்சயம் தன்னில் கூட….
=============================================
# திருவெண்காடு தலத்தில் ஜீவ சமாதியான மார்க்கண்டேய மஹரிஷியின் தாயும் தந்தையும் , வருவோர்க்கெல்லாம் ஆசிகள் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அடியவர்கள் அங்கு செல்லும் பொது ஆசிகள் பெறுக !!!!!
=============================================
திருவெண்காடு எனும் தலத்திலே பின் அவர்கள் இருவரும் நிச்சயம் தன்னில் கூட, பின் அவ்வாறு எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட பின் போதும்!!!!! என்று நீதான் கொடுத்தாய்.
பிள்ளையை பார்த்துக்கொள் என்றெல்லாம் நிச்சயம் (திருவெண்காடு) அங்கே பின் சமாதி ஆகிவிட்டார்கள் நிச்சயம் தன்னில் கூட.
“ஆனாலும் இறைவா !!!!! உன்னை நினைத்தேன்”.
ஆனால் வருவோர்க்கெல்லாம் இங்கு (திருவெண்காடு) நிச்சயம் தன்னில் கூட யான் (விதியை) மாற்றி அமைக்க நிச்சயம் யான் பாடுபடுவேன் என்றெல்லாம்..
இப்பொழுது கூட அங்கு (திருவெண்காடு) பின் மறைமுகமாக நிச்சயம் பின் பின் அதாவது மார்க்கண்டேயன் தாயும் பின் தந்தையும் பின் வருவோர்க்கெல்லாம் ஆசிகள் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.
=============================================
# தாய் தந்தையை இழந்து திரிந்த மார்க்கண்டேய மஹரிஷி
=============================================
இவை அறிவித்து இதனால் அப்படியே … ஆனாலும் மார்க்கண்டேயன் எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் இவ்வளவுதான் வாழ்க்கை என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று புரிய.
ஆனாலும் அங்கும் இங்கும் பல பாடல்களை பின் வாழ்ந்து திரிந்தான்.
அங்கே கும்பகோணம் இன்னும் கூட தஞ்சை இன்னும் கூட பல வழிகளில் கூட பின் எவ்வாறு எல்லாம் சீர்காழி இன்னும் கூட பின் எவை என்று அறிய.
இன்னும் அங்கும் இங்கும் அலைந்தான், எது என்று அறிய.
தாய் தந்தை எங்கே என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிந்தும் கூட.
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட எதை இவை தெரிந்தாலும், பின் தன் மகன் நிச்சயம் ஆனாலும் தன் மகன் பின் சந்தோஷத்தை அடைய வேண்டும் என்று.
பின் அதாவது சில வருடங்களே பின் நிச்சயம் இருப்பான் என்றெல்லாம் அவர்கள் உணர்ந்து, பின் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று மறைவாக..
பின் அதாவது அழுது புலம்பி எதை பின் பிள்ளைக்கு தெரியாமலும் அவர்கள் பின் அதாவது அப்படி ஜீவ சமாதி பின் சென்றிட்டனர்.
ஆனாலும் எவை என்று புரிய நிச்சயம் அனைவரும் அறிந்ததே.
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது அமர்ந்தான், நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் எவை என்று அறிய.
=============================================
# சீர்காழி சட்டைநாதசுவாமி கோவிலில் உள்ள அஷ்ட பைரவர் சன்னதி.
=============================================
# ஸ்ரீ அசிதாங்க பைரவர், ஸ்ரீ குரு பைரவர், ஸ்ரீ சண்ட பைரவர், ஸ்ரீ குரோதன பைரவர், ஸ்ரீ உன்மத்த பைரவர், ஸ்ரீ கபாலி பைரவர், ஸ்ரீ பீஷண பைரவர், ஸ்ரீ சம்கார பைரவர்
=============================================
நிச்சயம் தன்னில் கூட பின் அஷ்ட பின் அதாவது பின் பைரவர்கள் இருக்கின்றார்களோ அங்கே அமர்ந்தான், நிச்சயம் தன்னில் கூட.
பின் பல வரங்களை நிச்சயம் தன்னில் கூட பெற்று, ஈசனிடத்தில் நிச்சயம் தன்னில் கூட.
இன்னும் இன்னும் பல வகையில் கூட பின் எவை என்று கூட, (சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்) அதிர்ஸ்டங்கள் எவை என்று அறிய, சொல்லி வைக்கின்றேன்.
ஆனாலும் பின் தற்பொழுது எதை என்று சொல்லுவதாகவே முடித்து முடித்து.
(குருநாதர் மிக சுருக்கமாக இவ் கதையை இப்போது உரைக்கிறார்கள்).
ஆனாலும் எதை புரிய நிச்சயம் அங்கே அமர்ந்தான்.
ஈசனை நினைத்து நினைத்து…
ஆனாலும் நிச்சயம் ஏன் எதற்கு பின் எங்கு தாய் தந்தைகள் சென்றார்கள்?.
பின் ஈசனே என் தாயே, பின் அதாவது பின் உங்களைத்தான் நம்பி இருந்தார்.
ஆனால் தாய் தந்தை… ஆனாலும் இப்பொழுது இல்லையே. எது என்று எங்கு சென்றார்கள் என்றெல்லாம்.
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட கண்களை மூடினான்.
பின் நிச்சயம் தன் தாய் தந்தையர் பின் எங்கே எது என்று அறிந்தபொழுது நிச்சயம் அப்படியே பின் ஜீவ சமாதி அடைந்தார்கள் என்பவை எல்லாம் தெரிந்துவிட்டது.
பின் அதாவது படம் போல் நிச்சயம் தன்னில் கண்களிலே ஓடியது.
பின் இவ்வாறு இறைவா!!!!! நிச்சயம் தன்னில் கூட பின் ஆனாலும் தந்தை ஏன் தாய் என்றெல்லாம் எதற்காக என்றெல்லாம் நிச்சயம் பார்த்தால் நிச்சயம் பின் அதாவது தனக்காகவே என்று ஆனாலும் பின் மார்க்கண்டேயன் மீண்டும் எவை என்று என்று வருந்தினான்.
எவ்வாறு என்பவை எல்லாம் பின் வருந்தி வருந்தி…
எவ்வாறு உண்மை எதை என்று எதை என்று அறியாமலும் கூட நிச்சயம் தன்னில் கூட.
ஆனால் மீண்டும் நிச்சயம் பின் இவ்வாறாக…
இதற்காகவே ஆனால் நிச்சயம் தன்னில் கூட.
ஆனாலும் பின் விதியை கூட வெல்ல முடியாது என்பதாயிற்று.
ஆனாலும் இப்படித்தான் பின் (விதி) எழுதி எவை என்று அறிய.
=============================================
# மார்க்கண்டேய மஹரிஷியின் கடைசி பிறவி விதி - சில தீய சக்திகள் அண்ட வேண்டும். பல நோய்களையும் கூட வந்த பின்புதான் நலம் உண்டாக வேண்டும்.
=============================================
ஆனாலும் இதனுள்ளே பல பல, எவை தன், பின் ஒரு நிச்சயம் கடைசி (பிறவி) தன்னில் கூட பல வழிகளில் கூட எதை என்று அறிய.
நிச்சயம் தன்னுக்குள்ள சில தீய சக்திகள் அண்ட வேண்டும் என்பது விதியாகத்தான்…
பல நோய்களையும் கூட இவனுக்கு வந்துதான் நிச்சயம் தன் அனைத்தும் எவை என்று அறிய.
இதனால் அப்படியே நிச்சயம் ஆகிற்று.
=============================================
# மரணத்தை வெல்ல , இறைவனை இறுக பற்றிய மார்க்கண்டேய மஹரிஷி
=============================================
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின் இறைவனை பின் அதாவது ஈசனை கெட்டியாக பிடித்துக் கொண்டான், எங்கெல்லாம் ஏது என்று அறிய. நிச்சயம் தன்னில் கூட.
பல பல பின் வழிகளிலும் கூட நிச்சயம் எங்கெங்கெல்லாம் தீர்த்தங்கள் உள்ளதோ அங்கெல்லாம் நீராடினான் எதை என்று புரிய.
ஆனாலும் கடைசியில் பின் ஒன்றும்…
ஆனாலும் பின் (மரணம்) நெருங்கிக் கொண்டே வருகின்றது.
ஆனால் நிச்சயம் தன்னில் கூட ஈசனை….. எவை என்று முழு மனதோடு நிச்சயம் இனிமேலும் நிச்சயம் தன்னில் கூட..
அதாவது உயிர் உயிரோடு இருக்கும் பொழுதே நிச்சயம் பின் இறந்து விடலாம் என்றெல்லாம்.
அதனால் நிச்சயம்
“ “ “ “ “ “ “ “ “ ஈசனே !!!!! ” ” ” ” ” ” ” ” ”
எது என்று அறிய. நிச்சயம் தன்னில் கூட
“ “ “ “ “ “ “ “ “ உனை பிடித்துக் கொள்கின்றேன். நீதான் துணை. ” ” ” ” ” ” ” ” ”
எது என்று அறிய, நிச்சயம் என்றெல்லாம் நிச்சயம் தன்னில்…
அப்படியே….
ஆனாலும் அறிந்தும் கூட எதை என்று கூட அப்படியே கெட்டியாக பிடித்துக் கொண்டான்.
உண்ணும் பின் அதாவது உயிரும் எது என்று அனைத்தும் நீயே என்றெல்லாம் கெட்டியாக பிடித்துக் கொண்டான்.
நேரங்கள் பின் வந்து கொண்டே இருக்கின்றது.
எத்தனை ஏது என்று கூட எத்தனை மாதங்கள் அப்படியே கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்தான்.
ஆனாலும் ஈசன் நினைப்பே, எது என்று அறிய.
=============================================
# ஆதி ஈசனின் தீர்ப்பு:- விதிப்படி உயிர் பிரிய வேண்டும் என்பதால், ஒரு நிமிடம் மட்டும் உயிர் பிரிந்து, மீண்டும் உயிர் வழங்கப்பட்டது.
=============================================
பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட பின் (மரணம்) வருகின்றது. நிச்சயம் தன்னில் கூட நீ இறந்துதான் ஆகவேண்டும் பின் என்பது விதி. விதியாக்கப்பட்டது.
இதனால் நிச்சயம் எவ்வாறு என்பதெல்லாம் ஈசனாரே நிச்சயம் உன்னையே பிடித்துக் கொண்டிருக்கின்றேனே.
பின் ஏதாவது பின் மனிதர்களுக்கு சேவை செய்யும் சந்தர்ப்பத்தை கொடு என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட.
இதனால் எவை என்று புரிய அறிந்து கூட ஆனாலும் விதி நன்முறையாக…
ஏதோ ஒரு வகையில் நிச்சயம் தன்னில் கூட பாவம் , புண்ணியம் அதாவது கர்மா எதை என்று தெரியாமலே.
ஆனாலும் இப்படித்தான் இப்பிறவியில் எதை என்று அறிய.
பின் அதாவது பின் ஒரு பிறவியிலே, பின் அதாவது என் அதாவது என் மீது பின் பல அன்புகளை வைத்து பின் பக்தனாக இருந்தாய்.
ஏதோ எதை என்று கூட பல புண்ணியங்களும் பல வழிகளையும் கூட செய்தாய்.
இதனால் நிச்சயம் தன்னில் கூட இவையே பின் போதும் என்றெல்லாம்…. பின் (பிரம்மனும்) எழுதி வைத்து விட்டான் என்றெல்லாம்.
நிச்சயம் இல்லை ஈசனே!!!!! என்றெல்லாம் வாக்குவாதங்கள் ஈசனுக்கும் பின் எவை என்று அறிய.
இதனால் நிச்சயம் சரி. அப்படி என்றால் நிச்சயம் தன்னில் எதை என்று அறிய, உன்னை காப்பாற்றுகின்றேன், எது என்று கூற…
ஆனாலும் சிறிது நிச்சயம் தன்னில்… பின் அதாவது ஒரு நிமிடம் பின் உயிர் பின் சென்று….. மீண்டும் நான் கொடுத்து விடுகின்றேன் என்று நிச்சயம் தன்னில் கூட.
சரி. அதுபோலே ஆகட்டும் என்று நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று அறிய.
இதனால் பின் ஒரு பின் அதாவது உயிர் சென்றுவிட்டது.
நிச்சயம் ஒரு நிமிடம் எது என்று…. மீண்டும் இதனால் நிச்சயம் விதியும் முடிந்துவிட்டது.
மீண்டும் பிழைத்தான் எது என்று கூற.
=============================================
# ஆதி ஈசனின் தீர்ப்பு:- மார்க்கண்டேய மஹரிஷியின் மறுவாழ்வின் நோக்கம். மறுவாழ்வு பெற்ற மார்க்கண்டேயர், தீய சக்திகளின் அட்டகாசம் நிறைந்த பாலி தீவு உள்ளிட்ட பகுதிகளில் சேவை செய்ய ஈசனால் அனுப்பப்பட்டார்.
=============================================
(மார்க்கண்டேய மஹரிஷி…)
இதனால் நிச்சயம் தன்னில் கூட… இவ்வாறெல்லாம் நிச்சயம் பின் உலகத்தில் யான் சேவை செய்யவேண்டும்… உந்தனுக்காக என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட.
(ஆதி ஈசனார்….)
அதனால் பின் “இங்கு இருக்காதே நீ.”
“இங்கு இருந்தால் இன்னும் கூட பின் தாய் தந்தையை நினைத்து நினைத்து வருத்தப்படுவாய்.”
இதனால் நிச்சயம் எங்கேயாவது நிச்சயம் தன்னில் கூட இதனால் பின் அதாவது ஒரு தேசம் இருக்கின்றது. அங்கு தீய சக்தியில் அட்டகாசம் நிச்சயம் தன்னில் கூட.
அதாவது நீயே இவ்வாறு பின் அழுகின்றாய்.
அதாவது நிச்சயம் தன்னில் கூட ஏன் எதற்கு உன் தாய் தந்தையை நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு நிச்சயம் தன்னில் கூட அழுது.
பின் அதாவது சிறுவர்கள் எல்லாம் காப்பாற்று என்றெல்லாம் நிச்சயம்.
பின் ஒரு தேசம் தனியாக நிற்கின்றது. ( இந்தோனேசியா - பாலி )
அங்கு தீய சக்தியின் அட்டகாசம் அதிகமாக இருக்கின்றது.
அங்கெல்லாம் சென்று நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று கூற. பின் நீ எதை… பின் யான் சொல்லவில்லை.
என்னை பின் அதாவது என்னை துதித்து பாடவோ எதை என்று கூற,பின் எவை என்று புரிய.
(ஆதி ஈசனாரை துதித்து, போற்றி பல பாடல்கள் பாட உத்தரவு - தீய சக்திகளை ஒழிக்க )
அதனால் பின் அங்கு சேவை துவக்கு என்று நிச்சயம் தன்னில் கூட.
அழகாகவே அங்கிருந்து நிச்சயம் வந்தான்.
அதிலிருந்து கூட இங்கு நிச்சயம் தன்னில் கூட எவ்வாறெல்லாம் நிச்சயம்..
விடவில்லை முதலில் கூட பின் அதாவது தீய சக்திகள் எது என்று கூற.
பின் இவன் யார் என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட,
பின் அடித்து எவை என்று அறிய, நிச்சயம் பின் நொறுக்கியது.
(முதலில் மார்க்கண்டேய மஹரிஷியை தீய சக்திகள் அடித்து நொறுக்கியது)
ஆனாலும் மீண்டும் மீண்டும்… பின்
“ஈசனே !!!!!”
எவ்வாறு என்பது கூட..
கடினமானதுதான் நிச்சயம் தன்னில் கூட, வாழ்வது என்றெல்லாம் முடிவு கட்டினான் (மார்க்கண்டேயர்).
இருப்பினும் நிச்சயம் ஒரு பிறப்பு எவை என்று கூட..
சேவைக்காகவே தான் என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட பின் மீண்டும் உள்ளே நுழைந்தான்.
ஆனாலும் கை கால்களையும் பின் அடித்து…
எதை என்று நொறுக்கி…
நிச்சயம் சில சீற்றத்தில் வெறியேற்றியது.
=============================================
# மரணத்தை வென்ற மார்க்கண்டேய மகரிஷியின், தீய சக்திகளை ஒழிக்கும் மறைக்கப்பட்ட சுவடி நூல் பாடல்கள் குருநாதர் அருளால் மீண்டும் வெளிவரும்.
=============================================
ஆனாலும் மீண்டும் பின் எவை அறிந்து கூட பின் பல பாடல்களை ஈசனை நோக்கி பாடினான்.
அப்பாடல்களை பாடினால் நிச்சயம் தன்னில் கூட தீய சக்திகள் அண்டாது.
ஆனாலும் வருங்காலத்தில் அப்பாடல்கள் எல்லாம் யான் நிச்சயம் எடுத்துரைப்பேன், எவை என்று கூட.
அப்பாடல்களில் தான் நிச்சயம் தன்னில் கூட பாடி வைத்திருந்தான்.
பின் மார்க்கண்டேயன் அச்சுவடி தான் எங்கேயோ நிச்சயம் திருடி எதை என்று அறிய. நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் வைத்திருக்கின்றார்கள்.
ஆனாலும் அவை தேவையில்லை, எவை என்று கூற.
பின் யானே அப்பாடல்கள் எல்லாம் நிச்சயம் பின் செப்பிடுவேன், வருவரும் காலத்தில் நிச்சயம் தன்னில் கூட.
இதனால் நிச்சயம் ஆனாலும் எவை என்று புரிய.
இதனால் பின் அங்கும் இங்கும் எவை என்று கூட மீண்டும் பின் தீய சக்திகள் எவை என்று உள்ளே வர… பல எதை என்று மீண்டும் நோக்கினான்.
=============================================
# ஆதி ஈசனை தேடி மீண்டும் தமிழகத்தில் மார்க்கண்டேய மகரிஷியின் பயணங்கள் ……
=============================================
பின் அங்கு எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட..
பின் அதாவது தஞ்சை தன்னில் கூட..
பின் வந்து எதை என்று அறிய, நிச்சயம் தன்னில்..
பின் இவ்வளவு ஏது என்று அறிய.
நிச்சயம் பல திருத்தங்களுக்கு எவை என்று கூட மீண்டும் எதை என்று அறியாமலும்…
அண்ணாமலை
இன்னும் எவை என்று கூட…
பின் அதாவது காஞ்சி தன்னில் பின் எவை…
பின் காளஹஸ்திரி எது என்று புரிய…..
நிச்சயம் தன்னில் கூட ஈசனை தேடினான்.
பின் எங்கு இருப்பான் என்றெல்லாம்…
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட, பின் கடைசியில் பின் எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட
இவ்வாறாகவே பின் அழிந்து பின் எப்படியாவது (மீண்டும் பாலி தீவின்) உள்ளே சென்று விட வேண்டும் என்றெல்லாம் ( தமிழகத்தில் ஈசனாரை தேடினார் மார்க்கண்டேய மகரிஷி).
நிச்சயம் காளஹஸ்திரி தன்னில் கூட
(ஆதி ஈசனார் அசரீரி வாக்கு )
பின் அதாவது பின் அதாவது நீ உள்ளே செல்.
நிச்சயம் தன்னில் கூட அதோ… இதோ பின் அதாவது பின் (காளஹஸ்திரி) இங்கிருந்து எடுத்துச் செல்.
நிச்சயம் தன்னில் உந்தனுக்கு கொடுக்கின்றேன் ( ஒரு சிவலிங்கத்தை ).
உள்ளே வா என்றெல்லாம்.
நிச்சயம் பின் அழகாக நிச்சயம் தன்னில் கூட பின் அங்கே வைக்கப்பட்டிருந்தது, நிச்சயம் தன்னில் கூட.
ஆனாலும் ஈசனை காணவில்லை என்று மன வருத்தம் தான்.
ஆனாலும் இதைத்தான் கொடுத்தான் என்று அழகாக எடுத்து வந்தான்.
அவை கையில் எடுத்து வர…. எடுத்து வர…. நிச்சயம் தன்..
அதாவது தீய சக்திகள் இவனை அதாவது மீண்டும் இங்கு வந்து நிச்சயம் தன்னில் கூட பின் அதில் கையை எடுத்து வருவது தீய சக்திகள், நிச்சயம் தன்னில்
இவனை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்பதெல்லாம்.
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட வெளியேற்ற முடியவே இல்லை, எது என்று அறிய.
ஆனாலும் அப்படி அவ் லிங்கத்தை எவ்வாறு எது என்று கூட ஆனாலும் தீய சக்திகளுக்கு புரிந்துவிட்டது.
(லிங்கத்தை) அவை பின் கீழே தள்ளிவிட்டால் இவன் பின் உருண்டு ஓடிவிடுவான் என்று நிச்சயம் தன்னில் கூட இவனை அழித்து விடலாம் என்று.
ஆனாலும் பின் (லிங்கத்தை) கெட்டியாக பிடித்துக் கொண்டான். அப்படியே எதை என்று கூட..
(லிங்கத்தை) இதை விட்டுவிட்டால் அவ்வளவுதான் என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட.
இதனால் பின் எவை என்று அறிய.
அன்று பின் பல மக்கள் நிச்சயம் பின் அதாவது கஷ்டத்திலும் நிச்சயம் பின் அதாவது உணவு பின் அதாவது இருப்பிடம் இவற்றுக்கெல்லாம் கஷ்டப்பட்டுக் கொண்டே இருந்தார்கள்.
ஆனாலும் (லிங்கத்தை) விடவில்லை, நிச்சயம் தன்னில் கூட
பின் அதாவது கெட்டியாக பின் நிச்சயம் தன்னில் கூட இப்படியே ஏது என்று அறிய.
அதனால் நிச்சயம் பின் கேட்ட வரத்தை பின் ஈசனும் கூட..
இதனால் நிச்சயம் தன்னில் கூட சரியாக அதை தன் எப்படியோ நிச்சயம் ஒரு இடத்தில் அமர்த்திவிட்டால்…..
காந்தகம் போல் அவை பின் நிச்சயம் ஒட்டிக்கொள்ளும். அவ்வளவுதான்.
அவ்வாறு எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட முதலில் பின் எங்கு ஏது என்றெல்லாம் அறிந்து கூட பின் அவ்வாறு பின் காந்தகத்தை எவ்வாறு நெருப்பு எவை என்று கூற,பின் இவ்வாறு தேடினான்.
இவை இருந்தால் நிச்சயம் தன்னில் கூட அவ்வாறே ஒட்டிக்கொள்ளும் நிச்சயம் தன்னில் கூட.
அங்கு நிச்சயம் தீய சக்திகள் அண்டாது என்று..
நிச்சயம் எடுத்து வந்தான் நிச்சயம் வைத்தான்.
(பெசாகி ஆலயம்/Pura Agung Besakih ) இங்கு எதை என்று கூற அப்படியே காந்தகம் போல் ஒட்டிக்கொண்டது எதை என்று கூற.
தீய சக்திகள் அலறி ஓடியது எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட.
இதனால் பல மக்களை பின் பல பல வழிகளிலும் கூட பின் சென்று நிச்சயம் தன்னில் கூட இன்னும் கூட எவை என்று அறிய.
பின் எங்கெல்லாம் பின் நிச்சயம் தன்னில் (பல சிவலிங்கத்தை) எடுத்து எடுத்து…. இங்கெல்லாம் வந்து நட்டினான் என்பவை எல்லாம் நிச்சயம் பின் எடுத்துரைக்கின்றேன்.
பின் நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய.
பின் அதாவது ஒரே முறையில் அனைத்தும் பின் சொல்லிவிட்டாலும் அதற்கு மதிப்பு இருக்காது.
அதனால்தான் ஒவ்வொன்றாக எவை என்று கூற.
ஒவ்வொன்றாக… வெவ்வேறாக எங்கெங்கு பின் எவ்விடத்தில் சொல்ல வேண்டுமோ, அங்கெல்லாம் நிச்சயம் யான் எடுத்துரைப்பேன்.
=============================================
# பெசாகி ஆலயம்/Pura Agung Besakih - இங்கிருக்கும் கற்களை, ஈசனாக நினைத்து எடுத்து சென்று , மக்கள் அவர்கள் இல்லங்களில் வைத்து வழிபட , தீய சக்திகள் கட்டுக்குள் வரும் என்று மக்களை நல் வழிபடுத்தினார்.
=============================================
நலங்களாகவே, இதனால் நிச்சயம் தன்னில் கூட பல மக்களுக்கு நல்வழிக்கு படுத்தினான் நிச்சயம் தன்னில் கூட.
பின் இவ்வாறாக தீய சக்திகளை விரட்டுவதற்காக நிச்சயம் தன்னில்… அங்கங்கு நிச்சயம் தன்னில் கூட.
அதாவது பின் அதாவது எவை என்று புரிய. நிச்சயம் தன்னில் எதை என்று அறிய. நிச்சயம் அதாவது இங்கிருந்து எவை என்று கூற.
பின் சில சில வழிகளிலும் கூட
அங்கங்கு நிச்சயம் தன்னில் இருப்பதை பின் ஈசனாக நினைத்துக்கொண்டு.. நிச்சயம் தன்னில் கூட சிறு கற்கள் எல்லாம் எடுத்து சென்று தன் இல்லத்திலே வையுங்கள் என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட.
பின் எதை என்று புரிய. இதனால் பின் இங்கு இருக்கும் எவை என்று அறிய.
நிச்சயம் சிறு சிறு அதாவது ஈசன் பக்கத்தில் இருக்கும், அதாவது நிச்சயம் எவை என்று புரிய. பின் அவையெல்லாம் எடுத்துக்கொண்டு அவ்வவ் இல்லத்திற்கு நிச்சயம் தன்னில் கூட சென்று நிச்சயம் வைத்தனர்.
இதனால் தீய சக்திகளின் கட்டுப்பாட்டுக்குள் எவை என்று கூற.
பின் எவை என்று தீய சக்திகள், ஒரு கட்டுக்குள் வந்துவிட்டது.
இதனால் மீண்டும் பின் ஓரிடத்தில் தங்கிவிட்டது.
அவ்விடமும் இப்பொழுதும் கூட உள்ளது.
ஆனாலும் அத்தீய சக்திகள் நிச்சயம் தன்னில் கூட பின் ஈசன் எவை என்று கூற.
பின் அதாவது ஒவ்வொரு எவை என்று இல்லத்திலும் கூட பின் இருக்கக்கூடாது என்பதெல்லாம் நினைத்து நிச்சயம் தன்னில் கூட அழிந்து கொண்டு.
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட இங்கே பரிசுத்தமாக மார்க்கண்டேயன் நிச்சயம் நட்டது.. இன்னும் கூட பின் இருந்து கொண்டே இருக்கின்றது. மறைமுகமாகவே சில சில (வழிகளில்).
இதனால் தான் பின் அத்தீய சக்திகள் நெருங்க முடியவில்லை.
இன்னும் கூட பல தீய சக்திகள் ஒன்று சேர்ந்து அழிக்க எவை என்று கூட ஆனாலும் முடியவில்லை. எதை என்று புரிய.
இதனால் பல வழியிலும் கூட வேறு ஞான உபதேசங்கள் பலவற்றை நிச்சயம் மக்களுக்கு எடுத்துரைத்தான்.
பின் இல்லங்கள் இல்லங்களாக..
இதனால் பல இல்லங்களில் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது ஈசனாக அதாவது நிச்சயமாக கல்லை ஈசனாக பின் வணங்கினார்.
இதனால் பல பல பின் தீய சக்திகள் ஓடியது, நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய.
ஆனாலும் சில வழிகளிலும் கூட பின் ஒரு எவை என்று கூட இங்கு அறிந்து கூட மலை உள்ளது.
அங்குதான் தீய சக்திகள் மறைவாக இன்னும் கூட எவை என்று கூற…
=============================================
# இன்றும் பாலி தீவுகளை தீய சக்திகளிடம் இருந்து காத்து அருளும் மார்க்கண்டேய மஹரிஷி திருவடிகள் போற்றி ! போற்றி !!
=============================================
மார்க்கண்டேயன் இத்தேசத்தை காத்துக் கொண்டே இருக்கின்றான். நிச்சயம் தன்னில் கூட.
இதனால் இன்னும் கூட அவனைப் பற்றி அதனால்தான் ஞானியைப் பற்றி தெரியாமல் போனது. எதை என்று அறிய. நிச்சயம் தன்னில் கூட
எங்கு சென்றார்கள்?.
பின் இன்னும் கூட பின் அவர்கள் திருமணம் ஆனதா இல்லையா என்றெல்லாம் மனிதனுக்கு தெரியாது.
ஏதோ வந்துவிட்டார்கள்.
எவையை சொல்லிவிட்டார்கள் என்பதெல்லாம் நிச்சயம் தன்னில் கூட இருந்தால் பின் மனித பிறப்பும் பூர்த்தியாகாது.
மோட்சமும் கிடைக்காது என்று சொல்லிவிட்டேன்.
இதனால்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றேன்.
=============================================
# மார்க்கண்டேய மஹரிஷி இது நாள் வரை, வயதில் உயிர் ஆபத்துக்கு வரும் பலருக்கும்,,, அவர் முக்தி அருளும் பாதுகாப்பும் வழங்கி, அவர்கள் இன்னும் நன்றாக வாழ வேண்டும் என்று தொடர்ந்து அருள் கொடுத்து வருகிறார்.
=============================================
இதனால் மார்க்கண்டேயன் மிக எவை என்று அறிய…
இதுநாள் வரை நிச்சயம் தன்னில் கூட அதாவது பாதி வயதில் எவை என்று இறப்பவர்களுக்கு நிச்சயம் தன்னில்…
முக்தியை எவை என்று கூற. எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட…
அதாவது பின் நன்றாக இன்னும் வாழட்டும் என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட….
கொடுத்துக் கொண்டே இருக்கின்றான்.
=============================================
# மார்க்கண்டேய மஹரிஷி , திருக்கடையூர் அபிராமி அன்னையின் செல்லப்பிள்ளை
=============================================
இதனால் பின் திருக்கடையூர் அபிராமி நல்விதமாக பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட.. எதை என்று அறிய…
பின் அதாவது பிள்ளையாக ஏற்றுக்கொண்டு…
பிள்ளையாக ஏற்படுத்தி எதை என்று அறிய…
அனைத்தும் நிச்சயம் தன்னில் கூட செல்லப் பிள்ளையாக.
=============================================
# பாலி தேசத்தில் இருக்கும் மார்க்கண்டேய மஹரிஷி , ஒவ்வொரு மாதமும் வெள்ளிக்கிழமை திருக்கடையூர் சென்று, அபிராமி அன்னை முன்னர் பாடல்கள் பாடி விட்டு, மீண்டும் பாலிக்கு திரும்புவார்
=============================================
பின் அதாவது (இவ் பாலி) தேசத்திலிருந்து நிச்சயம் தன்னில் கூட பின் மாதம் பின் நிச்சயம் தன்னில் கூட வெள்ளி தன்னில் கூட பின் அங்கு வந்து நிச்சயம் தன்னில் கூட பாடல்களை பாடிட்டு தான் இங்கு (பாலி) வருவான்.
=============================================
# அடியவர்கள் விதி மாறும் ரகசியங்கள் - திருக்கடையூரில் வெள்ளிக்கிழமை தோறும் , அபிராமி அன்னை முன், “அபிராமி அந்தாதி” தொடர்ந்து பாடி வந்தால், சில விதிகள் மாறும். நலம் உண்டாகும். அடியவர்கள் பயன்படுத்தி கொள்க. அனைவருக்கும் எடுத்துரைக்க.
=============================================
இதனால் நிச்சயம் தன்னில் கூட , திருக்கடையூர் அபிராமி நிச்சயம் பின்…
அதாவது வெள்ளி அன்று சென்று நிச்சயம் தன்னில் கூட..
அபிராமி அந்தாதி அதை பாடிட்டு வந்தாலே..
நிச்சயம் தன்னில் கூட பின் சில விதிகள்…
பின் ரகசியங்கள் இன்னும் எவை என்று கூற மாறும்.. நிச்சயம் தன்னில்.
இன்னும் பின் போற்றும் எவை என்று உலகம் இருக்கும் வரை மார்க்கண்டேயனை.
ஆசிகள் இன்னும் கூட பின் எடுத்துரைக்கின்றேன்.
ஆசிகள் !
ஆசிகள் !!
ஆசிகள் !!!
=============================================
# வாக்கு முடிவினில் , அடியவர் கேள்வி பதில்கள்
=============================================
அடியவர் :- ( இங்குள்ள Tirta Gangga என்ற தலத்தை குறித்து வாக்குகள் கேட்ட பொது …)
குருநாதர் :- அப்பனே எது என்று அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இப்பொழுது வேண்டாம் என்பேன். அப்பனே.எவை என்று? அப்பனே, மீண்டும் அப்பனே, ஒருமுறை வாருங்கள் என்பேன் அப்பனே,
ஏன் என்றால் அங்கு பல விஷயங்கள் உள்ளது என்பேன் அப்பனே.
எப்பொழுது எதை செப்ப வேண்டும் என்பதெல்லாம் யான் அறிவேன் அப்பனே.
அதனால்தான் அப்பனே, பின் மீண்டும் ஒருமுறை வந்தால் செப்புகின்றேன் அப்பனே.
அதற்கென்று அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஒரு முறை வந்து மீண்டும் அப்பனே, முதலிலே நீராடினீர்களே அங்கு…
நீராடி மீண்டும் அங்கு வாருங்கள் ஒரு நாள், அப்பனே.
நிச்சயம் அனைத்தும் சொல்கின்றேன் அப்பனே, அனைத்தும்.
அப்பனே, நிச்சயம் எங்கு செல்ல வேண்டும்?
எங்கு சொல் செப்ப வேண்டும்?
எங்கு செல்ல வேண்டும்?
என்பதையெல்லாம் நான் அறிவேன். அப்பனே,
இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கவலைகள் வேண்டாம் என்பேன் அப்பனே.
ஆசிகள் !
ஆசிகள் !!
===========================
# பெசாகி ஆலயம் (Pura Agung Besakih விபரங்கள்
===========================
பெசாகி ஆலயம் (Pura Agung Besakih) நிச்சயம் தரிசிக்க வேண்டிய ஒரு அற்புதமான ஆன்மீகத் தலம்..
பெசாகி ஆலயத்தின் சிறப்புகள்
* பாலியின் தாய் ஆலயம்: பாலி தீவில் உள்ள இந்து ஆலயங்களில் இதுவே மிகவும் பெரியதும், புனிதமானதும் ஆகும். இதனால் இது பக்தர்களால் 'பாலியின் தாய் ஆலயம்' (Mother Temple of Bali) என்று பயபக்தியுடன் அழைக்கப்படுகிறது.
* பிரம்மாண்டமான கோயில் வளாகம்: இது ஒரே ஒரு கோயில் அல்ல; சுமார் 80-க்கும் மேற்பட்ட சிறிய கோயில்களையும், 23 முக்கிய கோயில்களையும் தன்னகத்தே கொண்ட ஒரு பிரம்மாண்டமான வளாகமாகும்.
* மும்மூர்த்திகளுக்கான சன்னதிகள்: இங்கு இந்து தர்மத்தின் மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோருக்கு தனித்தனி முக்கிய கோயில்கள் அமைந்துள்ளன. மையப்பகுதியில் சிவபெருமானுக்காக வெள்ளை நிறக் கொடிகளுடன் 'புரா பெனடாரன் அகுங்' (Pura Penataran Agung) என்ற பெரிய கோயில் அமைந்துள்ளது. இதன் வலதுபுறம் பிரம்மாவுக்கும் (சிவப்புக் கொடிகள்), இடதுபுறம் விஷ்ணுவுக்கும் (கருப்புக் கொடிகள்) ஆலயங்கள் உள்ளன.
* வரலாற்றுச் சிறப்பு: சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான படிக்கட்டுகளும், கட்டுமான அமைப்புகளும் இங்கு காணப்படுகின்றன. மார்க்கண்டேய மகரிஷி இந்த ஆலயத்தின் ஆரம்பகால உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்ததாக வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன.
* அதிசய நிகழ்வு: 1963-ஆம் ஆண்டு அகுங் மலையில் மிகப்பெரிய எரிமலை வெடிப்பு ஏற்பட்டபோது, வழிந்தோடிய நெருப்புக் குழம்பு (Lava) கோயில் வளாகத்தை எந்த சேதமும் செய்யாமல் சில மீட்டர் இடைவெளியில் விலகிச் சென்றது. இது இறைவனின் மிகப்பெரிய அற்புதமாக பாலி மக்களால் இன்றும் கொண்டாடப்படுகிறது.
அமைவிடம்
* அகுங் மலையின் மடியில்: பாலி தீவின் மிகவும் உயரமான மற்றும் புனிதமான எரிமலையான 'அகுங் மலையின்' (Mount Agung) தென்மேற்கு சரிவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
* முகவரி: இந்தோனேசியாவின் பாலி தீவில், கராங்கசெம் (Karangasem) மாகாணத்தில் உள்ள பெசாகி (Besakih) என்ற கிராமத்தில் இது அமைந்துள்ளது.
* உயரம் மற்றும் இயற்கை அழகு: கடல் மட்டத்திலிருந்து சுமார் 1000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளதால், இங்கிருந்து பார்த்தால் பாலி தீவின் இயற்கை அழகையும், சுற்றியுள்ள பகுதிகளையும் மிகத் தெளிவாகவும் ரம்மியமாகவும் காண முடியும்.
* பயண தூரம்: குட்டா (Kuta) அல்லது செமின்யாக் (Seminyak) பகுதிகளில் இருந்து காரில் சென்றால் சுமார் 2 மணி நேரப் பயணத்திலும், உபுட் (Ubud) பகுதியிலிருந்து சுமார் 1 முதல் 1.5 மணி நேரப் பயணத்திலும் இங்கு சென்றடையலாம்.
பாலி தீவில் மார்க்கண்டேய மஹரிஷியின் மறைக்கப்பட்ட வரலாறு: அகத்திய மாமுனிவரின் அருள்வாக்கு - ஒரு விளக்க அறிக்கை
இந்த அறிக்கை, 16.03.2026 அன்று இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள பெசாகி ஆலயத்தில் (Pura Agung Besakih), அகத்திய மாமுனிவர் அருளிய வாக்குகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது. இது மரணத்தை வென்ற மார்க்கண்டேய மஹரிஷியின் அறியப்படாத வாழ்க்கை வரலாறு, அவரது தெய்வீகப் பணிகள் மற்றும் பக்தர்களுக்கான வழிகாட்டுதல்களை விவரிக்கிறது.
தலைமைச் சுருக்கம் (Executive Summary)
அகத்திய மாமுனிவர் வழங்கிய இந்த வரலாற்றுச் சுருக்கம், தர்மத்தை நிலைநாட்டவும் மறைக்கப்பட்ட ஞானங்களை வெளிப்படுத்தவும் அளிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
- மரணத்தை வென்ற ரகசியம்: விதிப்படி மரணமடைய வேண்டிய மார்க்கண்டேயர், ஈசனின் அருளால் ஒரு நிமிடம் மட்டும் உயிர் பிரிந்து, மீண்டும் உலகச் சேவைக்காக உயிர் பெற்றார்.
- பெற்றோரின் தியாகம்: மார்க்கண்டேயரின் ஆயுள் ரகசியத்தை அறிந்த அவரது பெற்றோர், திருவெண்காடு திருத்தலத்தில் ஜீவ சமாதி அடைந்தனர். அவர்கள் இன்றும் அங்கிருந்து பக்தர்களின் விதியை மாற்ற ஆசி வழங்கி வருகின்றனர்.
- பாலி தீவுப் பணி: தீய சக்திகளின் ஆதிக்கம் நிறைந்த பாலி தீவை மீட்டெடுக்க ஈசனால் மார்க்கண்டேயர் அனுப்பப்பட்டார். காளஹஸ்தியிலிருந்து கொண்டு வரப்பட்ட சிவலிங்கத்தின் மூலம் பாலி தீவில் தீய சக்திகளை ஒடுக்கினார்.
- ஆன்மீக வழிகாட்டுதல்: திருக்கடையூர் அபிராமி அந்தாதியை வெள்ளிக்கிழமைகளில் பாராயணம் செய்வது விதியை மாற்றும் வலிமை கொண்டது என்ற ரகசியம் இதில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------
1. வரலாற்றுப் பின்னணி மற்றும் அருள்வாக்கு சூழல்
அகத்திய மாமுனிவர் இந்த வாக்குகளை இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள புனிதமான பெசாகி ஆலயத்தில் உரைத்துள்ளார்.
தகவல் | விவரம் |
வாக்குரைத்தவர் | அகத்திய மாமுனிவர் |
திகதி | 16.03.2026 (திங்கட்கிழமை) |
இடம் | பெசாகி ஆலயம் (Pura Agung Besakih), பாலி, இந்தோனேசியா |
மையப்பொருள் | மார்க்கண்டேய மஹரிஷியின் மறைக்கப்பட்ட வரலாறு மற்றும் தர்ம மீட்பு |
--------------------------------------------------------------------------------
2. மார்க்கண்டேயரின் ஆரம்ப காலமும் பெற்றோரின் சமாதியும்
மார்க்கண்டேயரின் பிறப்பு மற்றும் அவரது பெற்றோரின் மனநிலை குறித்த பல அரிய தகவல்கள் இதில் விவரிக்கப்பட்டுள்ளன:
- ஆயுள் ரகசியம்: மார்க்கண்டேயர் பிறந்த சில ஆண்டுகளிலேயே இறக்க வேண்டும் என்பது விதி. இதை அறிந்த தந்தை, தாயிடம் மட்டும் உண்மையை உரைத்தார்.
- பெற்றோரின் முடிவு: மகனின் நிலையை எண்ணி வருந்திய தாய், உண்ணாமலும் உறங்காமலும் வருந்தினார். இறுதியில், மகனின் துயரத்தைக் காணச் சகிக்காமல், சீர்காழிக்கு அருகிலுள்ள திருவெண்காடு திருத்தலத்தில் இருவரும் ஜீவ சமாதி அடைந்தனர்.
- திருவெண்காட்டின் சிறப்பு: இன்றும் திருவெண்காட்டில் மார்க்கண்டேயரின் பெற்றோர் மறைமுகமாக இருந்து, அங்கு வரும் பக்தர்களின் விதியை மாற்றி ஆசி வழங்கி வருகின்றனர்.
--------------------------------------------------------------------------------
3. மரணத்தை வென்ற தருணம்: ஈசனின் தீர்ப்பு
மார்க்கண்டேயர் மரணத்தை எதிர்கொண்ட விதம் மற்றும் ஈசன் வழங்கிய மறுவாழ்வு குறித்த விவரங்கள்:
- ஈசனைப் பற்றுதல்: மரணம் நெருங்குவதை உணர்ந்த மார்க்கண்டேயர், பல்வேறு தீர்த்தங்களில் நீராடிவிட்டு, இறுதியில் ஈசனை முழுமையாகப் பற்றிக் கொண்டார். "உயிரோடு இருக்கும்போதே இறந்துவிடலாம்" என்ற நிலையில் ஈசனையே சரணடைந்தார்.
- விதி மாற்றப்பட்ட விதம்: விதியின்படி உயிர் பிரிய வேண்டும் என்பதால், ஈசன் ஒரு தந்திரத்தைப் பயன்படுத்தினார். மார்க்கண்டேயரின் உயிர் ஒரு நிமிடம் மட்டும் பிரிக்கப்பட்டு, விதியை முடித்த பின், மீண்டும் அவருக்கு மறுவாழ்வு வழங்கப்பட்டது.
- மறுவாழ்வின் நோக்கம்: மனிதர்களுக்குச் சேவை செய்யவும், தீய சக்திகளை அழிக்கவும் இவருக்கு மீண்டும் உயிர் வழங்கப்பட்டது.
--------------------------------------------------------------------------------
4. பாலி தீவில் மார்க்கண்டேயரின் தெய்வீகப் பணிகள்
ஈசனின் கட்டளைப்படி மார்க்கண்டேயர் இந்தோனேசியாவின் பாலி தீவுக்குச் சென்று ஆற்றிய பணிகள்:
- பாலி தீவுக்கு அனுப்பப்படல்: பெற்றோர் நினைவால் மார்க்கண்டேயர் வருந்துவதைத் தவிர்க்கவும், தீய சக்திகளின் ஆதிக்கம் மிகுந்த பாலி தேசத்தைக் காக்கவும் ஈசன் அவரை அங்கு அனுப்பினார்.
- தீய சக்திகளுடன் போராட்டம்: ஆரம்பத்தில் பாலி தீவில் இருந்த தீய சக்திகள் மார்க்கண்டேயரை உடல்ரீதியாகத் தாக்கி சித்திரவதை செய்தன. இருப்பினும், ஈசனின் நாமத்தை விடாமல் அவர் போரிட்டார்.
- காளஹஸ்தி லிங்கம்: தமிழகத்தின் காளஹஸ்தியில் ஈசன் அசரீரியாக மார்க்கண்டேயருக்கு ஒரு சிவலிங்கத்தை வழங்கினார். அந்த லிங்கத்தை விடாமல் பற்றிக்கொண்டு பாலிக்கு வந்தடைந்தார்.
- பெசாகி ஆலயம் (Besakih): பெசாகி ஆலயத்தில் அந்த லிங்கத்தை நிறுவியபோது, அது காந்தம் போல் ஒட்டிக்கொண்டது. அதன் சக்தியால் தீய சக்திகள் அலறி ஓடின.
- மக்களுக்கான நல்வழி: மக்கள் தங்கள் இல்லங்களில் சிறு கற்களை ஈசனாக நினைத்து வைத்து வழிபடச் சொன்னார். இதன் மூலம் வீடுகளுக்குள் தீய சக்திகள் நுழையாமல் கட்டுப்படுத்தப்பட்டது.
--------------------------------------------------------------------------------
5. திருக்கடையூர் அபிராமி அன்னையுடனான பிணைப்பு
மார்க்கண்டேய மஹரிஷிக்கும் திருக்கடையூர் அபிராமி அன்னைக்கும் உள்ள ஆழமான தொடர்பு குறித்த தகவல்கள்:
- செல்லப்பிள்ளை: அபிராமி அன்னை மார்க்கண்டேயரைத் தனது செல்லப்பிள்ளையாக ஏற்றுக்கொண்டார்.
- மாதாந்திர பயணம்: இன்றும் பாலி தேசத்தில் இருக்கும் மார்க்கண்டேயர், ஒவ்வொரு மாதமும் வெள்ளிக்கிழமை தோறும் திருக்கடையூர் சென்று அன்னை முன் பாடல்களைப் பாடிவிட்டு மீண்டும் பாலி திரும்புகிறார்.
--------------------------------------------------------------------------------
6. அடியவர்களுக்கான முக்கிய வழிகாட்டுதல்கள் மற்றும் ரகசியங்கள்
மார்க்கண்டேயரின் வரலாற்றின் ஊடாக அகத்திய மாமுனிவர் அடியவர்களுக்கு வழங்கும் உபதேசங்கள்:
- விதி மாறும் ரகசியம்: திருக்கடையூரில் வெள்ளிக்கிழமை தோறும் அபிராமி அன்னை முன் "அபிராமி அந்தாதி" பாராயணம் செய்து வந்தால், தீர்க்க முடியாத விதிகளும் மாறும், நலம் உண்டாகும்.
- மறைக்கப்பட்ட சுவடிகள்: தீய சக்திகளை ஒழிக்க மார்க்கண்டேயர் பாடிய பாடல்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. அந்த ரகசியப் பாடல்களை வருங்காலத்தில் அகத்திய மாமுனிவரே மீண்டும் உலகிற்கு எடுத்துரைப்பார்.
- பாதுகாப்பு: பாதி வயதில் உயிர் ஆபத்து உள்ளவர்களுக்கு மார்க்கண்டேயர் இன்றும் பாதுகாப்பும் முக்தியும் வழங்கி வருகிறார்.
--------------------------------------------------------------------------------
குறிப்பு: இந்த ஆவணத்தில் உள்ள அனைத்து தகவல்களும் அகத்திய மாமுனிவர் 16.03.2026 அன்று பெசாகி ஆலயத்தில் அருளிய வாக்குமூலத்திலிருந்து நேரடியாகத் தொகுக்கப்பட்டவை.
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் இந்தோனேசியாவின் அழகிய தீவான பாலியில் உரைத்த வாக்குகள் தொடரும் …….)
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.