“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Wednesday, March 18, 2026

சித்தர்கள் ஆட்சி - 591 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - 08.03.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு. - பகுதி 7

 இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 08.03.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு. - பகுதி 7 


நாள் : 08/03/2026 (ஞாயிற்றுக்கிழமை) 

நேரம் : காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 

இடம் : ராஜா ராணி திருமண மண்டபம், திருவண்ணாமலை 

நேரலை :-  https://www.youtube.com/live/AzhIXYoqaoM


இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.




( இவ் கூட்டு பிரார்த்தனையின் அனைத்து வாக்குகளும் உங்கள் பார்வைக்கு இங்கு ஒவொரு பதிவிலும் , படிக்க ஏதுவாக கொடுக்கப்பட்டுள்ளது.


சித்தர்கள் ஆட்சி - 585 :-  பகுதி 1

https://siththarkalatchi.blogspot.com/2026/03/585.html


சித்தர்கள் ஆட்சி - 586 :-  பகுதி 2

https://siththarkalatchi.blogspot.com/2026/03/586.html


சித்தர்கள் ஆட்சி - 587 :-  பகுதி 3

https://siththarkalatchi.blogspot.com/2026/03/587.html


சித்தர்கள் ஆட்சி - 588 :-  பகுதி 4

https://siththarkalatchi.blogspot.com/2026/03/588.html


சித்தர்கள் ஆட்சி - 589 :-  பகுதி 5

https://siththarkalatchi.blogspot.com/2026/03/589.html


சித்தர்கள் ஆட்சி - 590 :-  பகுதி 6

https://siththarkalatchi.blogspot.com/2026/03/590.html


சித்தர்கள் ஆட்சி - 591 :-  பகுதி 7

https://siththarkalatchi.blogspot.com/2026/03/591.html


சித்தர்கள் ஆட்சி - 592 :-  பகுதி 8

https://siththarkalatchi.blogspot.com/2026/03/592.html


சித்தர்கள் ஆட்சி - 593 :-  பகுதி 9 (நிறைவு பகுதி)

https://siththarkalatchi.blogspot.com/2026/03/593.html


)

================================

# அன்புடன் இடைக்காடர் சித்தர்  வாக்கு

================================ 


ஆதி அருணாச்சலனை பணிகின்றேனே, செப்புகின்றேனே, மனிதனுக்கு இடையனே. 


இடைக்காடர் சித்தர் :- அறிந்தும் எதை என்று புரிய, இவைதான் எவ்வாறெல்லாம் மனிதனுக்கு கஷ்டங்கள். இதை ஏன் தெரிவித்தேன்? 


=================================

# நாம் அனைவரும் முதலில் எந்த கிரகத்தில் இருந்து பூமிக்கு வந்திருக்கின்றோம் என்று தெரிந்துகொள்ள வேண்டும்

=================================


இடைக்காடர் சித்தர் :- இவ்வாறாகவே அதற்கு கிரகத்திற்கு சேவை. அதாவது, பின் இங்கு பூலோகத்தில் ஒரு மனிதன் வந்திருக்கின்றான் என்றால், சந்திரன் எவ்விடம் இருக்கின்றதோ, அவ்விடத்திலிருந்தே வந்திருக்கின்றான் என்று அர்த்தம். 




சுவடி ஓதும் மைந்தன் :- (அப்ப சந்திரன் எந்த வீட்ல இருக்கிறாரோ, நீங்க அந்த வீட்ல , அந்த கிரகத்தில் இருந்திரு நீங்கள் வந்ததாக பொருள் கொள்ளவேண்டும். விருச்சிக ராசி என்றல் செவ்வாய் கிரகத்தில் இருந்தது வந்தவர் என்று பொருள் கொள்ள வேண்டும் )


==============================

( சில ஆடியோ தடங்கல்கள் ….. )

==============================


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப இன்னொரு எக்ஸாம்பிள் என்னன்னா, இப்ப குரு வீட்ல சந்திரன் இருக்குதுன்னா, நீங்க எந்த கிரகத்திலிருந்து வந்திருக்கீங்க ஐயா? குரு வீட்ல, குரு கிரகத்திலிருந்து வந்திருக்கீங்க.


அடியவர் :- தனுசு மீனம்.


சுவடி ஓதும் மைந்தன் :- தனுசு மீனம். அப்ப சிம்ம லக்னத்துல, சிம்மம் இருந்தா எந்த கிரகத்திலிருந்து வந்திருக்கீங்க ஐயா?


அடியவர் :- சிம்ம ராசிக்காரங்க.


சுவடி ஓதும் மைந்தன் :- சூரிய ராசி, சூரியனிடத்திலேயே வந்திருக்கீங்க வந்து. அப்ப கொஞ்சம் ஒரு வேகம் தான் இருக்கும், வந்து எல்லாருக்கும் வேகம் இருக்கும், விவேகம் இருக்கும் வந்து.


அடியவர் :-  கடக ராசி.


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப சந்திரன். 


===============================

# அனைத்து வெற்றிகளையும் பெரும் முதல் அடிப்படை தத்துவம்.

===============================


இடைக்காடர் சித்தர் :-  அப்பனே, அறிந்தும் இவை எதை என்று புரிய, முதலில் இதைப் பின் தெரிந்து கொள்ள வேண்டும் மனிதன். 




சுவடி ஓதும் மைந்தன் :-   இதுவே அடிப்படை தத்துவம். இதுதான் ஃபர்ஸ்ட்.


அடியவர் :-  அடிப்படை.


சுவடி ஓதும் மைந்தன் :-  அடிப்படை தத்துவம் என்ன? எங்கிருந்து வந்த?


அடியவர் :-  கிரகத்திலிருந்து வந்திருக்கிறார்.


சுவடி ஓதும் மைந்தன் :- உங்க ராசி என்னங்க ஐயா?


அடியவர் :-  கும்ப ராசி.


சுவடி ஓதும் மைந்தன் :-  கும்ப ராசி. அப்ப இவர் சனி கிரகத்திலிருந்து வந்தவர்.


சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா நீங்க என்ன ராசி?


அடியவர் 4:- ரிஷபம். 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இந்த அம்மா என்ன, எதுல இருந்து வந்தவங்க ஐயா?


அடியவர் :-  சுக்கிரன் கிரகத்திலிருந்து வந்தவங்கள்.


அடியவர் :-  (அடுத்து ) கன்னி ராசி.


சுவடி ஓதும் மைந்தன் :-  கன்னி ராசின்னா எதுல இருந்து வந்தவர்? கன்னி ராசிக்கு வந்து புதன். அப்ப புத கிரகத்திலிருந்து வந்தவர் இவர் வந்து.


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா? அதாங்க மேஷ ராசிக்கு.


அடியவர் :-  செவ்வாய்.


சுவடி ஓதும் மைந்தன் :-  செவ்வாய். நீங்க செவ்வாய் கிரகத்தை வாசிகள். நீங்க எல்லாம் வந்து அதனோட புத்தி இருக்கும்.


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப வந்து இது என்ன சொல்றாருன்னா, அங்கிருந்து நம்ம கெட்ட எண்ணங்கள் இந்துச்சுன்னா விழுந்துடுறோம். அப்ப அந்தந்த கிரகத்தில் வீழ்ந்தவர்தான் நீங்க… ஐயா புரியுதா?




அடியவர் :-  கரெக்ட்.


சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப நம்ம வந்து, மேல வந்து, கிரகங்கள் வந்து ஒவ்வொரு வட்டத்துல சுத்திட்டு நிக்குது. அப்ப அந்த நிலையில நல்லவங்க, அப்ப நம்ம வந்து தேவையில்லாதது செஞ்சுச, என்ன வந்துரும்?


அடியவர் :- இங்க விழுந்துருவோம்.


சுவடி ஓதும் மைந்தன் :- விழுந்துருவோம்.


அடியவர் :- சிறைச்சாலை. சிறைச்சாலைக்குள்ள விழுந்துட்டோம்.


சுவடி ஓதும் மைந்தன் :- சிறைச்சாலையில விழுந்துருவோம். அது மாதிரி தப்பிச்சு வந்தவங்க தான் நம்ம எல்லாம். புரியுதுங்களா ஐயா? உங்களுக்கு என்ன ராசி ஐயா? அதுதான் குருவோட ராசி. அப்ப யாரு, எங்கிருந்து வந்தவங்க நீங்க வந்து?


அடியவர் :- குரு கிரகத்திலிருந்து.


சுவடி ஓதும் மைந்தன் :-  குரு கிரகத்திலிருந்து வந்தவங்க.


============================

# எந்த கிரகத்தில் இருந்து வந்தோமோ , அந்த கிரகத்தை வென்றால்தான் உங்கள் வாழ்க்கையே சிறப்பா இருக்கும்.. 

============================


இடைக்காடர் சித்தர் :-  இதை அறிவித்து இவ்வாறு என்றே பொருள். ஆனாலும் அதனை முதலில் நீங்கள் வெல்ல வேண்டும். எப்படி வெல்வீர்கள்? பின் அக்கிரகத்தை நீங்கள் வென்றால்தான் உங்கள் வாழ்க்கையே மாறும். 




சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப நீங்க  உதாரணமாக செவ்வாய் கிரகத்தில் வந்திருக்கீங்க இல்ல, அந்த கிரகத்தை எப்படி வெல்றது? அந்த கிரகத்தை வென்றால் மட்டும்தான் உங்க வாழ்க்கை சிறப்பா இருக்கும்.


அடியவர் :- சிறப்பாய் இருக்கும்.


=============================

# உங்களை நீங்கள் வெல்ல …செல்ல வேண்டிய ஆலயங்கள் ரகசியங்கள் 

=============================


இடைக்காடர் சித்தர் :-  இதைத்தான் அப்பொழுது அவ் கிரகத்தின் உச்ச இடங்கள், அதாவது ஆற்றல்கள் எங்கு விழுகின்றதோ, அங்குதான் நீங்கள் செல்ல வேண்டும். நிச்சயம் இவைதான், அதாவது அதற்கும் எண்கள் உண்டு அல்லவா? இதைத்தான் நிச்சயம். 


இடைக்காடர் சித்தர் :- (செவ்வாய்) இதற்கு ஒன்பது, அதாவது எண்களை அறிந்து கூட ஒன்பது மாதம் தொடர்ந்து அங்கு சென்றால் தான் விடிவு. நிச்சயம் பின் சென்று ஒரு மாதம், இரு மாதம் சென்று நின்று விட்டால் முயற்சி போய்விடும்.


அடியவர் :-  சிவாய நம.


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப செவ்வாய் கிரகம்னா……


அடியவர் :-  செவ்வாய் கிரகம்னா ….ஒன்பது.


சுவடி ஓதும் மைந்தன் :-  (ஒன்பது. அதுக்கும் ஒரு எண் இருக்குது வந்து. எண்ணையும் சொல்லுவார். ஏன் என்று )


அடியவர் :-   ஒன்பது மாசம் அங்க போகணும். மாசம், மாசம்.


சுவடி ஓதும் மைந்தன் :-  ஒரு மாசம்.


அடியவர் :-   ஒரு மாசம் விட்டாலும் போச்சு.


சுவடி ஓதும் மைந்தன் :-  ஒரு மாசம் விட்டாலும்.


அடியவர் :- நடுவுல போச்சு.


சுவடி ஓதும் மைந்தன் :- போச்சு.



=============================

# மேஷ ராசி, விருச்சிக ராசி அடியவர்களே ……நீள்கள் செல்ல வேண்டிய ஆலயங்கள் 

=============================


இடைக்காடர் சித்தர் :-  இதைத்தன் அறிவித்து, இவைத்தன் இவ்வதன் பின் அறிந்தும், இதைத்தன் புரிய, பின் இதனைத்தன் மையமாகக் கொண்டு அனைத்து முருகன் ஸ்தலங்களையும் தரிசித்தல் பெரும் சிறப்பு. அப்பொழுதுதான் பின் அவைதன் பின் ஆற்றல் மனிதனுக்கு பின் இட்டு உண்மை நிலைகள் தெரியும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப மேஷ ராசியும், விருச்சிக ராசியும் ஒன்பது மாசம் எங்க போகணும்?


அடியவர் :- எல்லா முருகன் கோவிலுக்கும்.


சுவடி ஓதும் மைந்தன் :- எல்லா முருகன் கோவிலுக்கும் போகணும். முயற்சி விட்டுடக்கூடாது. முயற்சி?


அடியவர் :-  விட்றக்கூடாது.


சுவடி ஓதும் மைந்தன் :- (விட்டுடக்கூடாது. அப்பதான் வந்து அந்த கிரகத்தோட சக்தி உங்களுக்கு கிடைக்கும். )


==================================

# இறைவன் அனுமதி கொடுத்தால்தான் இவ் ஆளுங்களுக்கு செல்ல முடியும்.

==================================


இடைக்காடர் சித்தர் :-  முதலில் அப்பா அறிந்தும் இறைவன் கொடுத்துவிடுவானா என்ன? ஆனாலும் உண்மை நிலையை அறிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பத்தை தருவான் முதலில். பின் அதாவது இப்படி சொல்லிட்டான், சொல்லிவிட்டானே இடையன் என்று ஓடோடி விடாதீர்கள். நிச்சயம் தன்னில் கூட. 




சுவடி ஓதும் மைந்தன் :- திருப்பி என்ன சொல்றாரு ஐயா? இது கிடைச்சு, இங்க போனா எல்லாம் கிடைச்சிரும்னு சொல்லி நினைச்சிடாதீங்க.


அடியவர் :-  ஏன்னா அதுக்கு போனா என்ன ஆகும்? நம்ம நிலைமை நமக்கு தெரியும். முதல்ல…


===================================

# 9 மாதம் எதையும் எதிர்பார்க்காமல்  அனைத்து முருகன் ஸ்தலங்களையும் தரிசித்தால் என்ன நடக்கும் ?

===================================


இடைக்காடர் சித்தர் :-  இவ்வாறாகவே சென்று கொண்டிருந்தாலே முருகன் அனுப்புவான் ஒரு ஞானியை. நிச்சயம் பின் இவ்வாறு செய்க என்று. முடிந்துவிட்டது. 




சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப ஒன்பது மாசம் நீங்க எதையும் எதிர்பார்க்கமல்  சென்றுகொண்டே இருந்தீங்கன்னா,,,, என்ன பண்ணுவார் ஐயா? முருகரே என்ன பண்ணுவார் ஐயா?


அடியவர் :- ஒரு ஞானியை அனுப்புவார்.


சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு ஞானியை உதவிக்கு  அனுப்புவார். 


அடியவர் :- வழிநடத்துறாரு.


சுவடி ஓதும் மைந்தன் :- அப்படி பண்ணு, இப்படி பண்ணுன்னு சொல்லுவார். அப்ப நீங்க என்ன பண்ணுவீங்க ஐயா?


அடியவர் :-  ஜெயிச்சிடலாம்.


சுவடி ஓதும் மைந்தன் :- ஜெயிச்சிடலாம் வாழ்க்கையில. ஏன்? இதோ இங்க திருவண்ணாமலை யாராவது ஒருத்தர் உங்களுக்கு சொல்லலாம். வாப்பா, இந்தாப்பா, நீ இது பண்ணுப்பா, அப்படி பண்ணு என்று  சொல்லிட்டாங்க என்றால்….  அவ்வளவுதான். நீங்க  ஜெயிச்சிடலாம். 


==============================

# இந்த ஜாதக அடிப்படை தத்துவம் தெரியாமல் ஜோதிடத்தை அணுகுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை.

==============================


இடைக்காடர் சித்தர் :-  இதே போலத்தான் அனைத்து கிரகங்களுக்கும் கூட இவைத்தன் தெரிந்து கொள்ள. இதுவே பின் அடிப்படை தத்துவம். இதை புரிந்து கொள்ளாமல் உள் நுழைந்தால் ஒன்றும் ஆக போவதில்லை.


சுவடி ஓதும் மைந்தன் :- இதுதான் அடிப்படை தத்துவம். இதை புரிஞ்சுக்காம ஜாதகத்துக்குள்ள போய், என்னென்னமோ பண்ணாலும்…. ஒன்னும் வேலைக்கு ஆகாதுன்னுட்டாங்க.


அடியவர் :- அப்ப இதுதான் அடிப்படை தத்துவம். நீங்க எங்கிருந்து வந்தீங்க? ஒருத்தர் ஒருத்தரை நீங்களே கணிச்சுக்க வேண்டியதுதான். நீங்க என்ன ராசின்னு சொல்லிட்டு. அப்ப அங்க கிரகத்துல.


சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த கிரகத்துடைய ஆதிக்கம் இருக்கக்கூடிய ஸ்தலங்களுக்கு சென்று வரணும். அந்த எண், அந்த அத்தனை தடவை.


அடியவர் :- ஆமா, ஆமா.


==========================

எண் | கிரகம் (தமிழ்) | கிரகம் (ஆங்கிலம்)

---------------------------------------

1   | சூரியன்        | Sun

2   | சந்திரன்       | Moon

3   | குரு (வியாழன்) | Jupiter

4   | ராகு           | Rahu

5   | புதன்          | Mercury

6   | சுக்கிரன்      | Venus

7   | கேது           | Ketu

8   | சனி           | Saturn

9   | செவ்வாய்       | Mars

============================


=================================

# ஜாதகங்களில் கிரக சேர்க்கைகள் 

=================================


இடைக்காடர் சித்தர் :-  இதைத்தன் இவ்வாறாகவே அறிந்தும் ஆனாலும் சேர்க்கை பெறுகின்றதே, எவ்வாறு? ஆனாலும் சரியாக அதுதன் பின் எவ்வாறு வேகத்தில் சென்று அடைந்ததோ, ஆனாலும் இதைத்தன் தான் அங்கே பின் சேர்க்கையாக நின்று பின் சாதகத்தில் கூட. 




சுவடி ஓதும் மைந்தன் :-  ஒரு கிரகம் நெருங்கும் பொழுது, அதாவது அந்த பாஸ்ட்டா வேகத்தில் போகும்போது அங்க அங்க  கிரகம் நிக்கிறது. நீங்க என்ன பண்றீங்க? இங்க ஜாதகத்தில வந்து, அப்ப சந்திரன் இப்ப குரு இருக்காருன்னு பார்த்தீங்களா? அந்த கிரகங்கள்  அப்படியே போகும்போது இங்க நிக்குது. அவ்வளவுதான். அந்த நேரத்துல… ஐயா புரியுதுங்களா?


அடியவர் 5 :-  அது ராசின்னு சொல்லி அந்த இடத்துல எழுதிடுறோம்.


சுவடி ஓதும் மைந்தன் :-  இல்ல, ஜாதகத்துல எழுதிடுறோம். 


அடியவர்  :- ம் 


சுவடி ஓதும் மைந்தன் :-  இப்ப சந்திரன் கூட குரு சேருதுங்க ஐயா?.


அடியவர் :-  ஆமா.


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப சேரும் பொழுது, எப்படி அது சேருது? போயிட்டே இருக்கும்.


அடியவர் :-  ஆமா.


சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த நேரத்துல வந்து டக்குனு வந்து, பக்கத்துல, பக்கத்துல, பக்கத்துல, பக்கத்துல வரும்பொழுது அது நீங்க அப்படி டக்குனு பிறந்துறீங்க. (கிரகங்கள்) அது அப்படி போயிட்டே இருக்கும். அடுத்த சேஞ்ச் ஆயிட்டு போயிட்டே இருக்கும். ஏன்னா சுத்துதுங்க ஐயா. ஏன் புரியுதுங்களா?


அடியவர் :-  ஒவ்வொரு அந்த ராசி கட்டத்தையும் கிரகம் கடக்கிறப்போ. 



=======================================

இந்த உரையாடலின் சுருக்கம் பின்வருமாறு: ( சித்தர் இடைக்காடரின் சூட்சுமமான கேள்விக்கு, அடியவர்களுடன் உரையாடலில் , சுவடி ஓதும் மைந்தன் கிரகங்களின் இயக்கத்தையும் அவை ஜாதகத்தில் அமையும் விதத்தையும் மிக எளிமையாக விளக்குகிறார். விண்வெளியில் கிரகங்கள் தத்தமது பாதையில் வெவ்வேறு வேகத்தில் தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கின்றன. அப்படி அவை நகர்ந்து செல்லும்போது, ஒரு குறிப்பிட்ட கணத்தில் இரண்டு கிரகங்கள் (உதாரணமாக சந்திரனும் குருவும்) மிக நெருக்கமாகவோ அல்லது ஒரே ராசி கட்டத்திலோ இணைகின்றன. அந்தத் துல்லியமான விநாடியில் ஒரு உயிர் ஜனனிக்கும்போது, அந்த நேரத்தில் கிரகங்கள் வானில் எந்த நிலையில் நின்றனவோ, அதையே நாம் ஜாதகக் கட்டத்தில் 'கிரகச் சேர்க்கை' என்று குறித்து வைக்கிறோம். சுழன்று கொண்டிருக்கும் கிரகங்களின் ஓட்டத்தில், ஒரு குறிப்பிட்ட தருணத்தின் "நிழற்படம்" (Snapshot) போன்றதே ஜாதகம் என்பதை இந்த விளக்கம் தெளிவுபடுத்துகிறது. வாருங்கள் மீண்டும் வாக்கின் உள் செல்வோம். )

=======================================


================================

# கிரக இடைவெளியும், ராசி மண்டலத்தின் வரையறை எல்லைகளும்.

================================


இடைக்காடர் சித்தர் :-  இவைத்தன் இவ்வாறாக ஒன்றாக நிற்பதில்லை. ஆனால் நிச்சயம் இவ்வளவு இடம் என்று உள்ளது, ஒவ்வொரு கிரகத்திற்கும் கூட. அவ்வளவு கடந்தால்தான் அதன் வீட்டை கடக்க முடியும். இதனால் இதற்கும் பல லட்ச மைல் தொலைவுகள். 


அடியவர் :- ம்

சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன சொல்றாரு தெரியுங்களா? இது எப்படி சொல்றாருன்னா…. குரு வந்து… இங்கிருந்து அண்ணாமலையார். அதுவரைக்கும் குருவோட இடம்தான். ஐயா புரியுதுங்களா? ஐயா உங்களுக்கு புரியலையே?


அடியவர் 5 :- அதாங்க ஒரு கிரகத்துக்கும் இன்னொரு கிரகத்துக்கும் பல லட்ச மைல் தூரம். பல லட்ச மைல் தூரம் இருக்கு.


சுவடி ஓதும் மைந்தன் :-  தூரம் இருக்குது.


அடியவர் 5 :- அந்த நேர்கோட்டை கிராஸ் பண்ண போகல. வந்துறோம் அந்த ராசிக்கு.


சுவடி ஓதும் மைந்தன் :-  அவ்வளவுதான். அப்ப இங்கிருந்து நம்ம வந்து திருநெல்வேலி போனோம். அந்த கிரகம் வந்து போயிட்டே தான் இருக்கும். நிக்காது. ஆனா இங்கிருந்து திருநெல்வேலி யாருடையது? இது வந்து அந்த கிரகத்தோட சொந்தம். ஓகேங்களா? இங்கிருந்து நீங்க வந்து ஐயா புரியுதுங்களா? சொல்றேன், படிங்க. 



====================================

இந்த உரையாடலின் சுருக்கம் பின்வருமாறு:-

(சித்தர் இடைக்காடர் மற்றும் சுவடி ஓதும் மைந்தன் இடையிலான இந்த விவாதம், விண்வெளியில் கிரகங்கள் தமக்கெனக் கொண்டுள்ள பிரம்மாண்டமான எல்லைகளையும் தூரத்தையும் விளக்குகிறது. கிரகங்கள் வானில் ஒன்றோடு ஒன்று ஒட்டி நிற்பதில்லை; 


மாறாக, ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு ராசி மண்டலத்தைக் கடக்க பல லட்சம் மைல் தொலைவு கொண்ட ஒரு குறிப்பிட்ட "எல்லை" (Orbit/Range) ஒதுக்கப்பட்டுள்ளது. 


உதாரணமாக, ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊர் வரை உள்ள தூரம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது என்பதை அண்ணாமலையார் முதல் திருநெல்வேலி வரையிலான தூரத்தை உதாரணமாகக் கொண்டு சுவடி ஓதும் மைந்தன் விளக்குகிறார். 


கிரகங்கள் இடைவிடாது நகர்ந்து கொண்டே இருந்தாலும், அவை தமக்குரிய அந்தப் பரந்த எல்லையைக் கடக்கும் வரை அந்த குறிப்பிட்ட ராசிக்குரிய பலன்களையே வழங்குகின்றன என்பது இதன் சாரமாகும்.)

======================================


======================================

# பாகை வாரியான பலன்கள்: முற்பகுதியும் பிற்பகுதியும்

======================================

======================================

# ராசி மண்டலத்தில் கிரகங்கள் நுழையும், மற்றும் விலகும் பாகை நிலைகளே ஒருவரது வாழ்வின் தொடக்க அதிர்ஷ்டத்தையும், பிற்கால வாழ்வியல் மாற்றங்களையும் தீர்மானிக்கின்றன.

======================================


இடைக்காடர் சித்தர் :-  இதை அறிவித்து சரியாக முதலிலே பின் கிளம்பி செல்கின்ற பொழுது பிறப்பவன் அதிர்ஷ்டசாலி எதை என்று அறிய. 


இடைக்காடர் சித்தர் :- ஆனாலும் பிற்பகுதியில்தான் அனைத்தும் கொடுக்கும். 


இடைக்காடர் சித்தர் :-  இதனால் தூரமாக செல்ல, செல்ல, செல்ல, செல்ல பிறக்கின்றவர்கள் நிச்சயம் முதலிலே நல்லறிவை பின் பெற்று, பின்பு தாழ்ந்து விடுகிறார்கள் வாழ்க்கையில். 




சுவடி ஓதும் மைந்தன் :-  அய்யா என்ன சொல்றாங்க?


அடியவர் 5 :-  இப்போ ஒவ்வொரு ராசியும் 30 டிகிரி.


அடியவர்  :-  30 டிகிரி. ஆமா.


அடியவர் 5 :- டிகிரி தெரியுங்களா? ஒரு டிகிரிலிருந்து 30 டிகிரி இருக்குது. ஆமா. முதல் டிகிரில.


சுவடி ஓதும் மைந்தன் :-  மைக் கொடுங்க அவர்கிட்ட. 


( மைக் கொடுத்தனர் )


சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப பேசுங்க அய்யா . 



அடியவர் 5 :-  ஒவ்வொரு ஒவ்வொரு ராசியும் வந்து 360 டிகிரியை வந்து 12 ராசியா பிரிச்சா, 30 டிகிரி வருங்க. அந்த 30 டிகிரில, முதல் டிகிரில சந்திரன் இருக்கும் போது பிறந்தால், பிற்பாகதி வாழ்க்கையில் தான் வந்து யோகங்கள் கிட்டும். 


அதே இது வந்து சந்திரன் வந்து அந்த ராசியில கடைசி 30 டிகிரிக்கு பக்கத்துல வரும்போது பிறந்தால், முதல்லயே யோகத்தை கொடுத்துருவாரு. பிற்பாதி வாழ்க்கை வந்து கஷ்டமாக மாறும். அப்படிங்கறத அவர் சொல்றாரு. 


சந்திரன் வந்து அந்த கிரகத்துக்கு பக்கத்துல போகும்போது முதல்ல அந்த கிரகம் கிரகம் வந்து பார்த்தா 30 டிகிரி. 30 டிகிரில முதல் டிகிரில போகும்போது பிறந்தால், பிற்பாதி வாழ்க்கை தான் நல்லா இருக்கும். அதே இது வந்துட்டு அந்த கிரகத்தை 30 வது டிகிரி கடந்து முடிக்கிற நேரத்தில் பிறந்தால், முதல் பகுதி வாழ்க்கை நல்லா இருக்கும். பிற்பகுதி வாழ்க்கை கட்டமாக இருக்கும். அதுதான் சொல்றாரு. 


=======================================

# நீங்கள் வாழ்ந்த கிரகத்தில் செய்த தவறுக்கு தண்டனையாக புவியில் பிறந்து , அனுபவித்து தீர்க்க வேண்டும். இதுவே ரகசியம்.

=======================================


இடைக்காடர் சித்தர் :-  இவைத்தன் அறிய அனைத்து கிரகங்களில் கூட உயிர்கள் இருக்கின்றது. 


இடைக்காடர் சித்தர் :-  ஆனால் பின் தெரிந்தும் தெரியாமலும் உயிரை ஒரு உயிரை கொன்றுவிட்டுத்தான் இப்பலி, புவி தன்னில் கூட வந்து தீர்க்க வேண்டும் என்பது. இதனால் அவ் ஞாபகம் இப்பொழுது மனிதனுக்கு வந்து கொண்டே தான் இருக்கும். இதைத்தன் அதனால்தான் பின் நிச்சயம் சித்தர் பெருமக்கள் வந்து வந்து வாக்குகளை செப்பிக் கொண்டிருக்கின்றார்கள். 



சுவடி ஓதும் மைந்தன் :-  (அடுத்து ஒன்னு சொல்றாரு. அந்த கிரகத்தில், ஒவ்வொரு கிரகத்துல… அங்க ஏதோ ஒரு உயிரை கொன்றுவிட்டோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஏன்னா அந்த உலகத்தில்/கிரகத்தில் எல்லாம், உயிரை கொல்லக்கூடாது. ஆனா நீங்க ஏதோ உயிர் கொன்றுவிட்டீங்க. அதனால என்ன ஆச்சு? தண்டனை இங்க பூமியில. அப்ப என்ன ஆகும்? அதே  உயிர் கொல்றது.. அதே எண்ணம் தான் இங்க வரும். ஐயா புரியுதுங்களா?) 


அடியவர் :- புரியுது, புரியுது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  (அந்த எண்ணம் இங்க கூட வரும். அங்க என்ன பண்ணீங்களோ…. அதாவது அந்த கிரகத்துல தப்பு பண்ணிட்டு தான் இங்க பூமிக்கு வந்திருக்கீங்க. அப்ப அந்த  எண்ணம் மாறுமா?)


அடியவர் :- அதே தவறான எண்ணம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அதே தவறான எண்ணங்கள் தான் இங்க வந்து வரும். 


இடைக்காடர் சித்தர் :-  இதைத்தன் மாற்றவே பல ஞானிகள் வந்து அருள் கூர்ந்து செப்புகின்றனர். செப்புகின்றனர். 


சுவடி ஓதும் மைந்தன் :-  இதைத்தான்.. அப்பா !!!  இதுதான்டா உன்னிடம் , உன் கையில உள்ள  குறை. இதை நீ மாத்திட்டீன்னா வாழ்க்கையில சக்சஸ் (வெற்றி). இதை கூறுறதுக்கு  தான், இறைவன் என்ன பண்றாரு? ஞானிகளை அனுப்புறாருங்க ஐயா. 


அடியவர் :- (இதான் எதுக்காக வந்தோம் அப்படின்னு…. உணர்வதற்காக இந்த ஞானிகள் வந்து, நம்மள உணர வைக்கிறாங்க.) 


================================

# சித்தர்கள் எப்போது தனிப்பட்ட வாக்கு செப்புவார்கள் ?

================================

# ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வினை. அதை எடுத்து சொல்ல புண்ணியம் நிச்சயம் வேண்டும். அப்பொழுதுதான் சித்தர்கள் செப்புவார்கள்.

================================ 


இடைக்காடர் சித்தர் :-  இதைத்தன் அப்பா எதை என்று கூறிய, அதனால்தான் ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு வினை. அதை பின் சொல்ல புண்ணியம் நிச்சயம் வேண்டும். அப்பொழுதுதான் யான் செப்புவேன். 


அடியவர் :-  சிவாய நம


சுவடி ஓதும் மைந்தன் :-  இப்ப புரியுதுங்களா? நீ எதுக்காக வந்த? எந்த தப்பு பண்ணிட்டு வந்த? அங்கிருந்து கீழ வந்த? அதுக்கும்…. 


அடியவர் :-  புண்ணியம் வேணும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  புண்ணியம் வேண்டும். 


அடியவர் :-  இருந்தா சொல்றேன்னு இருக்காங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்பதான் வந்து நான் சொல்லுவேன். இல்லைன்னா…..


அடியவர் :-   திரும்பி போக முடியாது. இங்கேயே சுத்த வேண்டியதுதான். 


சுவடி ஓதும் மைந்தன் :-   திரும்பி என்ன பண்ணுவீங்க? 


அடியவர் :-   இங்கேயே சுத்த வேண்டியதுதான். 




===============================

# அந்த கிரகத்தில் செய்த அதே தவறு, பூமியிலும் தொடரும்

===============================

# தவறு அதனை நீக்குவதே, உண்மையில் அதிர்ஷ்டம் உண்டாகும்.

=============================== 


இடைக்காடர் சித்தர் :-  இவை எதை என்று அறிய இதனாலே நிச்சயம் பின் விழுந்தும் எதை என்று தெரிவிக்க, அவ் ஞாபகம் போய்விட்டால் போய்விட்டால் மட்டுமே அதிர்ஷ்டம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  நீங்க உருண்டு புரண்டாலும் ஒன்னும் நடக்கப்போவதில்லை. அந்த ஞாபகம்… என்ன ஆச்சு? நீங்க என்ன தப்பு பண்ணீங்களோ அதே ஞாபகம் இங்க வரும். அந்த ஞாபகம் மாத்தணும். அந்த ஞாபகம் மாத்துறதுக்கு யாரால்  முடியும்? 


அடியவர் :-  அவங்கதான்… ஞானிகள் தான் வழி காட்டணும். 


சுவடி ஓதும் மைந்தன் :- இறைவனால்தான்  முடியும். அந்த ஞாபகம் நீங்க மாத்திட்டீங்கன்னா…. என்ன ஆகும்? 


அடியவர் :-  கிளம்பிடலாம். இங்க இருந்து…. 


சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா?


அடியவர் :-  வந்த இடத்துக்கு கிளம்பிடலாம். 


சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா?


அடியவர் :-   எங்கிருந்து வந்தோமோ அங்க கிளம்பிடலாம்.



இடைக்காடர் சித்தர் :-  இவைத்தன் மேல் லோகத்தில் பெண்கள் தலை குனிந்து, தலை குனிந்தே நடப்பார்கள். ஆனால் பின் தலை மேற்கு, தலை மேற்கு, மேல் நோக்கி நடப்பவர்கள் எல்லாம் கீழே விழுந்து விடுகிறார்கள். 


அடியவர் :-  சிவாய நம


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இங்க என்ன எண்ணம் வரும்? ஐயா 


அடியவர் :-  மேல் உலகத்தில் பெண்கள் தலை குனிந்து, தலை குனிந்து நடப்பாங்க. யாரெல்லாம் அங்க தலை நிமிர்ந்து நடந்தாங்களோ, அவங்க எல்லாம் கீழே விழுந்துட்டாங்களாம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  பூமிக்கு விழுந்துருவாங்க. 


இடைக்காடர் சித்தர் :-  ஆனாலும் எப்படி தோன்றும் எண்ணம்? இப்படித்தான் பின் அழிவார்கள். பின் நிச்சயம் இளைஞர்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன பண்ணுவாங்க? ஐயா பெண்கள் வந்து… ஐயா இங்க பூலோகத்துல தலை நிமிர்ந்து… அங்க என்ன பண்ணாங்களோ அதே தப்புதான்….. 


==============================

# மேல் லோகத்திலே நிச்சயம் தாய் தந்தையரை ஒதுக்கி திருமணம் செய்யக்கூடாது.

==============================


இடைக்காடர் சித்தர் :-  இவைத்தன் தெரியாமல் பின் அதாவது காதலித்து பின் தாய் தந்தையரை பின் வெறுத்தோட்டி ( வெறுப்பு ஏற்றி ) , ஒதுக்கி,  ஓடிப்போய் பின் திருமணம் செய்பவர்கள் எல்லாம்….. பின் அதாவது பின் இளைஞனாக இருந்தாலும் விழுவான் கீழே. 




==============================

# இதனால்  அழகாக இறைவன் செய்யும் வேலை மிகப்பெரியது

============================== 


இடைக்காடர் சித்தர் :- இதனால் அதனாலே மீண்டும் நினைத்து, மீண்டும் கஷ்டங்கள் பட வைப்பான், அழகாக இறைவன் செய்யும் வேலை மிகப்பெரியது அப்பா. 


அடியவர்கள் :- ( ஆச்சரியத்தில் - புது செய்திகள் கேட்டு …….கை தட்டல்கள் !!!!!!!!!!!!!! )


சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன பண்றாரு? பார்த்தீங்களா? திருப்பி என்ன பண்றாரு? ( மேல் லோகத்தில் ) அங்க காதலிச்சதும் தப்பு. மேல் லோகத்துல ஒழுங்கா அப்பா, அம்மா வந்து…. 


அடியவர் :- அவங்களை அவ மரியாதை செஞ்சு.. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஆனால் அப்பா, அம்மாவுக்கு தெரிஞ்சும் தெரியாம, லவ் பண்ணி, ஓடிப்போய் கல்யாணம் பண்ணிங்கன்னா என்ன பண்ணுவாங்க  ஐயா ?


அடியவர் :- அவங்களுடைய மனசை கஷ்டப்படுத்துறதுனால…. 


சுவடி ஓதும் மைந்தன் :- திருப்பி நேரா இங்க விழுவாங்க. 


அடியவர் :-  இங்க வந்தும்….


சுவடி ஓதும் மைந்தன் :- இங்க வந்து என்ன பண்ணுவாங்க? ஐயா, 


அடியவர் :-  அதேதான் செய்வாங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :-  காதலிச்சு கல்யாணம் பண்ணி திருப்பி என்ன பண்ணுவாங்க? ஐயா, 


அடியவர் :-  அதே தப்ப செய்வாங்க 


சுவடி ஓதும் மைந்தன் :-  (அழிஞ்சு  போயிடுவாங்கடா. ஐயா, இதெல்லாம் சொல்றதுக்கு யாருங்க நமக்கு இருகாங்க ஐயா? புரியுதுங்களா எல்லாருக்கும்? அப்ப இங்க என்ன நடக்கும்? காதல் தான் நடைபெறும் ஐயா.  எல்லாருக்கும் புரியுதுங்களா? ஏன்னா அதே தப்பு செஞ்சு தான் இங்க வந்துக்கிறான். அப்ப என்ன பண்ணுவான்? )


அடியவர் 5:- அதே தப்புதான் பண்ணுவான்


சுவடி ஓதும் மைந்தன் :- இங்க அதே தப்புதான் பண்ணுவான். 


அடியவர் :-  அப்பனா எல்லா பேரும் அவங்களை ஆராய்ஞ்சாலே போதும். 


சுவடி ஓதும் மைந்தன் :- அய்யா ?


அடியவர் :-  எல்லா பேரும் அவங்க என்ன தப்பு செய்றோம்னு ஆராய்ஞ்சாலே போதும். எதுக்காக வந்திருக்கோம்ன்றது தெரிஞ்சிரும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  நம்ம எதுக்காக வந்தோம்? இது எதுக்குடா பண்றோம்? அப்படின்னு சொல்லிட்டு ஆராய்ஞ்சா மட்டும்தான் நம்ம வாழ்க்கை சரியாகும். இல்லைன்னா என்ன ஆகும்? போதையில ….


அடியவர் :-  சுத்தி விழ வேண்டியதுதான். 


===============================

# மேல் லோகத்திலே நிச்சயம் போதை வஸ்து பொருட்களை உபயோகிக்கக் கூடாது.

=============================== 


இடைக்காடர் சித்தர் :-  இவை இதே போலத்தான். பின் அங்கு பின் கட்டாயம் உண்டு மேல் லோகத்திலே நிச்சயம் போதை வஸ்து பொருட்களை பின் உபயோகிக்கக் கூடாது என்று. ஆனால் மறைமுகமாக சென்று உபயோகித்தனெல்லாம் கீழே வந்து விடுகின்றான். அவ் ஞாபகம் பின் நிச்சயம் பின் ஒன்றை ஒன்று கெடுத்துக் கொண்டே இருக்கின்றான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  சரியா போச்சு. 


அடியவர் :-  புகைப்பழக்கம், மதுப்பழக்கம் எல்லாம் அங்க யாரெல்லாம் பண்ணாங்களோ, 


சுவடி ஓதும் மைந்தன் :-  யாரும் பண்ணக்கூடாது. மேல் லோகத்துல அப்படி தப்பு தேடி மறவா பண்ணினா என்ன ஆகும்? போசுக்குன்னு கீழ விழுந்துருவ. அப்ப இங்க அது ஞாபகம் என்ன வரும்? அந்த ஞாபகம் தான் வந்து இருக்கும். 


===========================

# மேல் லோகத்தில் செய்த தவறு = கீழ் லோகத்தில் செய்து கொண்டுதான் இருப்பாய்.

===========================


இடைக்காடர் சித்தர் :-  மேல் லோகத்தில் என்ன தவறு செய்தாயோ, கீழ் லோகத்தில் செய்து கொண்டுதான் இருப்பாய். நிச்சயம் இது. இதனால் அழிந்து கொண்டுதான் இருப்பான் மனிதன். 


அடியவர் :- சிவாய நம !!!!!


சுவடி ஓதும் மைந்தன் :-  நீ மேல் லோகத்தில் என்ன தப்பு பண்ணியோ, அதே தப்பு பண்ணி…. என்ன பண்ணுவாங்க? 


அடியவர் :-  இங்கேயும் பண்ணிட்டு இருப்போம். 


சுவடி ஓதும் மைந்தன் :- இங்கேயும் பண்ணி…. 


அடியவர் :-  திருப்பி திருப்பி சுத்திக்கிட்டே இருப்போம். 


சுவடி ஓதும் மைந்தன் :- திருப்பி திருப்பி கஷ்டப்பட்டு தான் இருக்கணும். 


===============================

# இறைவனை மனதில் நிரந்தரமாக வைத்து விட்டால், அவ் ஞாபகங்கள் வராது…இதற்கு பல முயற்சிகள் எடுத்த  ஞானிகள். 

===============================


இடைக்காடர் சித்தர் :-  இதையெல்லாம் பின் உணர்ந்தார்கள் ஞானிகள். அதனாலே இப்படி இருங்கள். இப்படி இருந்தால் பிழைத்துக் கொள்ளலாம் என்றெல்லாம் சொல்லிச் சொல்லி மனிதனுக்கு இறைவன் வழி நிச்சயம் இறைவனை மனதில் வைத்துவிட்டால், அவ் ஞாபகங்கள் வராது என்று பல முயற்சிகள். அப்பப்பா, ஞானிகள். 


அடியவர் :- சிவாய நம !!!!!


சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால தான் என்ன பண்றாரு? 


அடியவர் :-  பெருங்கருணை….


சுவடி ஓதும் மைந்தன் :- நீ இறைவனை மனசுல வைடா. 


அடியவர் :-   ஆமா…


சுவடி ஓதும் மைந்தன் :-  வேற எந்த ஞாபகமும் வராது. 


அடியவர் :-  நிச்சயமாக


சுவடி ஓதும் மைந்தன் :-  இறைவனை நீங்க  மனசுல வைத்தீர்கள் என்றால் , வேற எந்த ஞாபகமும் ....




அடியவர் :- எல்லா பேருக்கும் ஒரே சொல்யூஷன். இறைவனை மனசுல வை. (மேல் கிரகத்தில்) ஒவ்வொருத்தரும் ஒரு தப்பு பண்ணி இருக்கிறோம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  இறைவன் நல்லது பண்றாரோ, கெட்டது பண்றாரோ, அப்பாற்பட்டது. 


அடியவர் :- ஆமா…


சுவடி ஓதும் மைந்தன் :-  இறைவன் என்ன பண்ணனும்? 


அடியவர் :-  மனசுல வைங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :-  மனசுல வைங்க. அந்த மனசுல வச்சிட்டீங்கன்னா, 


அடியவர் :-  தப்பிச்சிடலாம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  தப்பிச்சிடலாங்க. ஐயா, அந்த ஞாபகம் என்ன ஆகும்? 


அடியவர் :-  அழிஞ்சிரும். பழைய ஞாபகம் அழிஞ்சிரும். 


இடைக்காடர் சித்தர் :-  ஆனால் கலியுகத்தில் பட பட பட என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஆனால் இந்த கலியுகத்தில் தான் என்ன தப்பு போயிட்டு படபடன்னு வந்து. ஐயா, புரியுதுங்களா? 


இடைக்காடர் சித்தர் :-  ஆனாலும் இதற்கு பரிகாரங்களாம். எதை என்று அறிய எப்படி? அப்பா, வெல்வார்கள் மனிதர்கள். பாவம் 


அடியவர் :-  யாரும் வெல்ல முடியாது. பாவம், 


சுவடி ஓதும் மைந்தன் :-  இதெல்லாம் பாவம்பா. வெல்ல முடியாதுப்பா. 


================================

# அன்பு ஒன்று இறைவனிடத்தில் தான் செலுத்த வேண்டும்.

================================


இடைக்காடர் சித்தர் :-  இதை எது என்று அறிய. இதனால்தான் அன்பு ஒன்று இறைவனிடத்தில் தான் செலுத்த வேண்டும். 




================================

# இளமையில் இறைவனைத் தேடு

================================


இடைக்காடர் சித்தர் :- இளமையில் இறைவனைத் தேடு என்று. தேடு, தேடு என்று கேட்டார்களா என்ன? 




சுவடி ஓதும் மைந்தன் :- அதனால்தான் இறைவன் என்ன பண்றாரு? இறைவனை லவ் பண்ணுங்கடான்றாரு. 


அடியவர் :-   ம்…..இளவயதில் இறைவனை லவ் பண்ணுங்கன்றாரு. 


சுவடி ஓதும் மைந்தன் :- இறைவனை லவ் பண்ணீங்கன்னா ?


அடியவர் :-   வேற லெவல். 


சுவடி ஓதும் மைந்தன் :- எந்த பிரச்சனையும் இல்லை. 


அடியவர் :-   எந்த பிரச்சனையும் இல்லை. 


சுவடி ஓதும் மைந்தன் :-  வேற யார்னா லவ் பண்ணீங்களா? வாழ்க்கை அழகா முடிச்சிட்டு போயிடுவார். 


அடியவர் :-  ஆமா….


சுவடி ஓதும் மைந்தன் :-  வாழ்க்கை 


==============================

# ( இவ் வாக்குகளை படிக்கும் ) தாயே, தந்தையே புரிகின்றதா?

==============================


இடைக்காடர் சித்தர் :-  புரிகின்றதா? தாயே, தந்தையே, நீங்கள் செய்யும் அதாவது பாசமாகத்தான் உங்களை அழைக்கின்றேன். 


===============================

# நீங்கள் செய்யும் தவறுகளே மீண்டும் உருளையாக உங்களிடம்  வருகின்றது.

===============================


இடைக்காடர் சித்தர் :-  இங்கு நீங்கள் செய்யும் தவறுகளே மீண்டும் அது உருளையாக வருகின்றது. அதனால்தான் உலகமும் உருண்டை என்றே. 


அடியவர் :-   சிவாய நம !!!!!


சுவடி ஓதும் மைந்தன் :-   நீங்க என்னென்ன செஞ்சிருக்கீங்களோ? திருப்பி உலகம்…. 


அடியவர் :- சக்கரம் 


சுவடி ஓதும் மைந்தன் :-   செக் அவுட். அதையே வந்து சுத்தி சுத்தி வந்துட்டே இருக்கும். 


==================================

# ஏன் மனிதன் வாழ தகுதியற்றது பூலோகம்?

==================================


இடைக்காடர் சித்தர் :-  இவைத்தன் இப்படி. அதனால் இன்னும் எதை என்று அறிய. அவை மட்டுமில்லாமல், பெண்களால் எதை என்று அறிய. இன்னும் ஆண்களால் அங்கங்கு தவறு செய்வதெல்லாம் இங்கு விழுந்து மீண்டும். இதுதான் அதாவது, அதனால்தான் சொன்னேனே, எதை அறிந்து பின், அதாவது தகுதியற்றது பூலோகமே. 


சுவடி ஓதும் மைந்தன் :- மனிதன் வாழ தகுதியற்றது 


அடியவர் :- பூலோகம். 


சுவடி ஓதும் மைந்தன் :- பூலோகம் மட்டும்தான் 


அடியவர் :- சிறைச்சாலை. 


சுவடி ஓதும் மைந்தன் :- இதெல்லாம் தெரிஞ்சுக்காம… ஐயா, புரியுதுங்களா? 


அடியவர் :- இதை சொர்க்கலோகம்னு நினைச்ச மனுஷன் வாழ்ந்துட்டு இருக்கிறான். எவ்வளவு பெரிய முட்டாள்! 


==================================

# சொர்க்கமும் நரகமும் உன்னிடத்திலேயே இருக்கின்றது.

==================================


இடைக்காடர் சித்தர் :-  ஐயா! எதை என்று சொல்ல… சொன்னாயே? சொர்க்கமும் நரகமும் உன்னிடத்திலேயே இருக்கின்றது. 




அடியவர் :-   சிவாய நம !!!!!


இடைக்காடர் சித்தர் :- சொர்க்கமாவதும், நரகமாவதும் இங்கேயே தேர்ந்தெடுத்தால் போதும். 


அடியவர் :-   சிவாய நம !!!!!


சுவடி ஓதும் மைந்தன் :- ( அப்ப இப்ப… நீங்க சொன்னீங்க பார்த்தீங்களா? அதே இங்க வருது . சொர்க்கமும் நரகமும் யார்ல இருக்குது ஐயா? ) 


அடியவர் :- நம்மகிட்ட தான் இருக்கு. 


சுவடி ஓதும் மைந்தன் :- உங்ககிட்டயே இருக்குது. நீங்க வந்து தேர்ந்தெடுத்தது தான் உண்டு. நரகத்தை தேர்ந்தெடுப்பவரோ, நீங்கள் 


அடியவர் :- சொர்க்கத்தை தேர்ந்தெடுக்கிறவங்களும்  நீங்கள்.


சுவடி ஓதும் மைந்தன் :- சொர்க்கத்தை தேர்ந்தெடுக்கிறவங்களும். நீங்கள்.



==========================

# இறைவனின் வேலை - வேடிக்கை பார்ப்பது 

==========================


இடைக்காடர் சித்தர் :-  இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான் இறைவன். அவ்வளவுதான். 


அடியவர் :- ஆமா..


சுவடி ஓதும் மைந்தன் :- இதை யார் வேடிக்கை பார்த்திருப்பாரு? 


அடியவர் :- ஆமா, இறைவன் வேடிக்கை பார்ப்பார். 


சுவடி ஓதும் மைந்தன் :- இறைவன் 


அடியவர் :- நம்மளுடைய எண்ணங்கள் தான். எண்ணங்கள் நல்ல எண்ணங்களா வச்சோம்னா, இங்கிருந்து திருப்பி சொர்க்கம்… நம்ம வந்த இடத்துக்கு போயிடலாம். எண்ணங்கள் சரியில்லைன்னா, நரகம் இங்கேயே திருப்பி கிடக்க வேண்டியதுதான். 


=========================

"எண்ணமே வாழ்வின் கதி" என்ற தத்துவத்தின் அடிப்படையில், ஒரு மனிதனின் சிந்தனைகளே அவனது மறுவாழ்வைத் தீர்மானிக்கின்றன. நல்லெண்ணங்களைக் கொண்டிருப்பவர், தான் வந்த மூல இடமான பேரின்ப நிலையை (சொர்க்கம்/முக்தி) அடைகிறார். மாறாக, தீய எண்ணங்களைக் கொண்டிருப்பவர், மீண்டும் பிறவிச் சுழற்சியில் சிக்கி இந்த உலகிலேயே நரக வேதனைகளை அனுபவிக்க நேரிடும். சுருக்கமாக, ஒருவரது அகத்தூய்மையே அவர் உயர்வடைவதற்கும் அல்லது இங்கேயே உழல்வதற்கும் காரணமாகிறது.

=========================


சுவடி ஓதும் மைந்தன் :-  புரியுதுங்களா ஐயா?


=========================

# இவ் ரகசியங்கள் அறிந்தால் மட்டுமே ஞானம் பிறக்கும்.

=========================


இடைக்காடர் சித்தர் :-  இன்னும் விளக்குகின்றேன். இன்னும் விளக்குவேன். இவையெல்லாம் அறிந்தால் மட்டுமே ஞானம் பிறக்கும். 


=========================

# இவ் ரகசியங்கள் அறிந்தால் மட்டுமே உங்களை நீங்கள் வெல்லலாம்.

=========================


இடைக்காடர் சித்தர் :-  உங்களை நீங்கள் வெல்லலாம். உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் தடுபடியாகும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  தடுபடியானா என்னங்க அய்யா? 


அடியவர் :- தவிடுபொடி.. சுக்குநூறாய் போயிடும். உங்களை நீங்க உணர்ந்துட்டீங்கன்னா, உங்க கஷ்டம் எல்லாம் சுக்குநூறா உடைச்சிரலாம். அப்படின்றாங்க. 


===============================

# மேல் உலகத்தில் இருக்கும் உங்கள் தாய் தந்தையர் ரகசியங்கள் 

===============================



இடைக்காடர் சித்தர் :-  இதனை யாரும் கண்டடைவதில்லை. இதனாலே இன்னும் கூட, அதாவது பின் எதை, எதை, எவை புரிந்து கொண்டு நல்வாழ்க்கை கொண்டு. 


இடைக்காடர் சித்தர் :-   அதாவது நீ தாய், பின் நல்லவராக, தந்தை நல்லவராக, நிச்சயம் ஆனாலும், மேலே நிச்சயம் இருப்பார்கள். நீங்கள் மட்டும் கீழே வந்து விடுவீர்கள். ஆனாலும், அவர்களை எப்படி நீங்கள் ஒன்றிணைப்பது? அவர்கள், அதாவது உங்கள் ஞாபகம் எவ்வாறு வருவது என்பதை எல்லாம் யாங்கள் தெரிவிக்கின்றோம். அதனால், அதை நீங்கள் பிடித்துக் கொண்டால், உங்களுக்கு உயர்வுகள். 


அடியவர் :-  சிவாய நம….


இடைக்காடர் சித்தர் :-  இவ் ரகசியம் யாரும் இவ்வுலகத்திற்கு தெரியாது. 


அடியவர் :-  ஐயா….


அடியவர் :-  அப்பா, எவ்வளவு பெரிய உண்மை சொல்லி இருக்காங்க. 




சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப, உங்க சொந்தக்காரங்க, உங்க அம்மா எங்க இருப்பாங்க? ஐயா, மேல் லோகத்துல இருக்காங்க. நீ தண்டனைப்பட்டு கீழ வந்துட்ட. இவங்க ரெண்டு பேரையும் எப்படி சேர்க்கிறது? 


அடியவர் :-  நம்மளுடைய அம்மா…. அப்பா மேல இருக்காங்க. பிள்ளை, நாம தப்பு பண்ணி தவறி கீழ விழுந்துட்டோம். அப்போ, எப்படி நாம அந்த தாய் தந்தையரை தொடர்பு கொள்வது? எப்படி அப்படின்றத நாங்க சொல்லித் தரோம். இதெல்லாம் ரகசியம் யாருக்கும் தெரியாதுப்பா. அப்படின்றாங்க. 


=============================

# சித்தர்கள் இவ் ரகசியங்களை உங்களுக்கு சொல்லி கொடுத்தால், இறைவன் என்பவன் யார் என்பது உங்களுக்கு சுலபமாக தெரிந்துவிடும்.

=============================


இடைக்காடர் சித்தர் :-  இவையெல்லாம் சொல்லி பின் கொடுத்தால், இறைவன் என்பவன் யார் என்பது உங்களுக்கு சுலபமாக போய்விடும். 


அடியவர் :-  சிவாய நம. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இதெல்லாம் வந்து சொல்லிக் கொடுத்தால்….


அடியவர் :-  இறைவன் யார் என்பது சுலபமாயிடும்ன்றாங்க. 


==============================

# நீங்களே, நீங்கள் ஏன் முன்னோர்களாக இருக்கக்கூடாது? 

==============================


இடைக்காடர் சித்தர் :-  ஏன்? எதற்கு? எவை என்று அறிய பின், குலதெய்வமும் முன்னோர்களின் ஆசிகளும் பெற வேண்டும் என்பது. ஆனாலும், இப்படியும் எடுத்துக்கொள்ளலாம் என் கணக்கில். நீங்களே, நீங்கள் ஏன் முன்னோர்களாக இருக்கக்கூடாது? 



அடியவர் :- அருமை! ஆமா, நம்ம தானே ஒரு குடும்பத்துல திருப்பி திருப்பி பிறந்துட்டு வர்றோம்.


சுவடி ஓதும் மைந்தன் :-  எப்படி இது ?


அடியவர் :- ஒரு வாரிசு. ஒரு குடும்பத்துல முப்பாட்டன், தாத்தன், பூட்டன் அப்படின்றோம்ல. நம்ம தானே திருப்பி, திருப்பி அந்த ஆன்மா திருப்பி திருப்பி அந்த குடும்பத்துல திருப்பி பிறக்குது. அதனால, நீங்களே முன்னோர்களா இருக்கலாம்ன்றாங்க. 



(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 08.03.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும்……)




ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.