“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Tuesday, March 10, 2026

சித்தர்கள் ஆட்சி - 584 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - வால்மீகி ரிஷிமுனி வாக்கு!

 இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.



வால்மீகி ரிஷிமுனி திருவடிகள் போற்றி !!!




==================================

# பஞ்சாபில் மறைந்துள்ள மாபெரும் ராமாயண ரகசியம்: வால்மீகி தீர்த்தத்தின் மகிமை!

==================================


வணக்கம் அகத்தியர் அடியவர்களே...


குருநாதர் உடைய உத்தரவுப்படி பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோயில் யாத்திரையில்.. அமிர்தசரஸில் இருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வால்மீகி தீர்த்தம்.. மற்றும் வால்மீகி ரிஷிமுனி ஆசிரமம் மற்றும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி சீதா தாயாரின் முதல்வர்களான லவகுசா பிறந்த இடமும் அவர்கள் கற்றுணர்ந்த வால்மீகி ஆசிரமமும் அமைந்துள்ளது. இங்கு வால்மீகி ரிஷி முனிக்கு கோயிலும் பிரம்மாண்ட தங்கத்திலான வால்மீகி முனிக்கு சிலையும் அமைந்துள்ளது. 



சீதா அம்மா வாழ்ந்த இடமும் அவர்களுக்காக அனுமன் உருவாக்கிய தீர்த்த கிணறும் உள்ளது.



====================================

# ஜீவநாடியில் முதல்முறையாக ஒலித்த வால்மீகி மகரிஷியின் ரகசிய வாக்குகள்!

=================================


இந்த புனித ஸ்தலத்தில் ஜீவநாடியில் முதல்முறையாக வால்மீகி ரிஷிமுனி வாக்குகள் நல்கினார். அவ் வாக்குகள் பின்வருமாறு!!!



====================================

# அன்புடன் வால்மீகி மஹரிஷி வாக்கு 

====================================


அகிலத்தை, அகிலத்தை ஈர்க்கும் இறைவா,!!!! பணிந்தேனே உம்மை!!!!. 


பணிந்து!!!..., அனைத்து  உயிர்களிடத்திலும் அன்பு செய்யும் இறைவா!!!, போற்றி. போற்றியே,!!!


அனைத்தும் உனக்கே சொந்தமென இருப்பாய், போற்றி. போற்றியே!!!!


உன்னை துதித்தே எழுதினேனே!!!! ராமாயணத்தை!!!!


ராமாயணத்தை எழுதி மக்களுக்கு இன்னும் பல வழிகளிலும் 

 தெரியப்படுத்தினேனே!!!!


இன்று பின் சொல்கின்றேனே சில விஷயங்கள் வால்மீகியான்!!!!!!



=======================================

# பகவான் ஸ்ரீ ராமரும்  சீதை அன்னையும்  மறைமுகமாகச் சென்றதன் விசித்திரக் காரணம் என்ன?

=======================================


அறிந்தும் இதை உணர, உணர்ந்து என்றென்றும் விசித்திரமாக வலம் வருகின்ற ராமனும் சீதையும் இன்னும் எங்கே????


எங்கே என்கின்ற பொழுது பின் லவனும், பின் குசா அறிந்தும் இவை எங்கு பிறப்பு? இவை தன் இரு பின் குழந்தைகள் பிறந்தவுடனே இவர்கள் பின் அதாவது மீண்டும் மறைமுகமாக, மறைமுகமாக சென்றிட வேண்டும், மறைந்து சென்றிட வேண்டும் என்பதுதான்  விதிவிலக்கு கட்டாயம். 




பின் அழுதுகொண்டே, அழுதுகொண்டே!!!!


ஆனாலும் பின் இப்படி ஏன்? பின் சீதா பிராட்டியும் அறிந்தும் இவை உணர ஏன்? பின் பிள்ளைகளை ஏன்??, எதற்கு???



==========================================

# உலகைக் காக்கத் தன் விதியையே மாற்றப் போராடிய ஸ்ரீ ராமன்!

==========================================


ஆனாலும் பிள்ளைகள் கூட பார்க்க அறிந்தும் ஆனாலும் இறைவனிடத்தில் முறையிட்டு சில காலங்கள் பின் அறிந்தும் தெரியாமலே வாழ்ந்து பின் அவர்களுக்கு நல் புத்திகளை அறிந்தும் உலகத்தோரை காக்க யான் நிச்சயம் இருக்க வேண்டும் என்றெல்லாம்!!! விதியை மாற்ற இதனாலே போராடினானே ராமனே.


ராமனே!!!, போராடி, போராடி!!! அறிந்தும் இதை தன் கடைசியில் விதியை மாற்றி!!!!


அறிந்தும் இவை உனது உள்ளமாகவே இருந்தும் என்னை செயல்படுத்த நன்று என்று!!!!  இங்கே பின் சீதா பின் முறையிட்டு, முறையிட்டு, முறையிட்டு, முறையிட்டு பல ஞானிகளிடம் கூட, ரிஷிமார்களிடம் கூட, சித்தர்களிடம் கூட!!!!


இவைதன் மறைமுகமாக விதியும் பிரம்மா மாற்றி!!!!

 அறிந்தும்!!!


ஆனாலும் எவை? எவை? எங்கு சென்றன??? என்பவையெல்லாம் விளக்கங்கள் இன்னும் கூட தெரியப்படுத்தவில்லையே. 


அதனால் அறிந்தும் இவை என்று என்னிடத்தில் இருந்து கொண்டே யான் தெளிவுபடுத்துவேன்.!!


இவ்வாறாக இதனால் சீதா அறிந்தும் அழகாக தன் பிள்ளைகளுக்கு ஆனாலும் மனதில் வேதனை பின் எப்படித்தான் இச்சிறுவர்கள் வாழ்வார்கள்??? என்று!!!


=======================================

# கலியுகப் போரை வெல்ல லவ-குசர்களுக்கு வால்மீகி அளித்த ரகசியப் பயிற்சி!

=======================================


ஆனாலும் எதை என்று புரிய ஆனாலும் உணர்ந்து இதை‌ தன் நிச்சயம் தன்னில் கூட என்னையே தேடி வந்து, தேடி வந்து தந்தை என நினைத்து, நினைத்து, நினைத்து பின் எவ்வாறெல்லாம்? உலகத்தில் போராடலாம்? என்றெல்லாம் பின் அழகாக பின் கலியுகத்தில் இவ்வாறெல்லாம் போராடினால் வெற்றி என்பதை எல்லாம் இலக்காக குறித்து போராட பின் மனம் வேண்டும் என்பவை எல்லாம் இங்கே ஆசிரமத்தை அமைத்து பல வழிகளில் கூட இச்சிறுவர்களுக்கு யானே கற்பித்தேன்.


யான் கற்பித்ததை அழகாக பனை தனில் கூட, பனை ஓலைதனில் கூட (ஓலைச்சுவடிகளில்) எழுதி!!!!


ஆனாலும் அவையும் கூட, அவையும் அறிந்துவிட்டால் அனைவரும் கலியுகத்தில் நன்றாக வாழ்வார்கள் என்பது கூட விதி. 


ஆனாலும் விதிப்பயனோ!??, ஆனாலும் கலியுகம் அழிந்து போகும் நிலை சூழ்நிலையாகவே தென்படுகின்றது. தென்படுகின்றது!!


ஏன்? உற்றார்?, உறவினர்? இழைந்து எவை சொந்தம்?? என்று தெரியாமல் வருந்தி இவ்வான்மாவிற்கு அன்பு, ஞானம் பின் கிடைக்குமோ??? என்று பின் பல மனிதர்கள் தேடித் தேடி அடைந்தாலும் உண்மைப் பொருளை விளங்காது மடிவார்கள். 


மடிந்து மீண்டும் பிறந்து மடிவார்கள்.


==========================================

# வால்மீகி முனிவர் எழுதிய இராமாயணம், மற்றும் பல ரகசிய சுவடிகள்  இன்றும் பத்திரமாக உள்ளது 

==========================================


ஏன்?? இந்த பிறவி என்றே பின் தெரியாமல் காலம் கழிப்பார்கள்.


இதனாலே எழுதி வைத்தேனே பல நூறு பின் ஆண்டுகளுக்கு முன்பே!!!!!


ஆனாலும் அவையும் சிறு சிறு பின் மனிதர்களால் எதையோ தவறுகள்!!!!


பின் எடுத்து பல வழிகளில் கூட பத்திரமாக காத்து!!!!


====================================

# கலியுக அழிவிலிருந்து உலகைக் காக்க அகத்திய மாமுனிவரின்  மாபெரும் படையெடுப்பு!

====================================


இதையே பின் இப்பொழுது பின் அகத்தியனும் அருளும் பரிபூரணமாக அமர்ந்து இவ்வுலகத்தைக் காக்க அகத்தியனே படையெடுத்திருக்கின்றான். 



இதனாலே யாங்கள் நிச்சயம் பின் அகத்தியன் பின்னாலே வந்து பல வழியில் கூட மனிதனுக்கு காண்பித்து இப்படி இருந்தால் உன்னை வெல்லலாம் என்பவை எல்லாம் ஏராளமானோர் பின் ஏராளமானோர் அறிந்தும், அறிந்தும் பின்னே பின் வந்தும் தெளிவுபடுத்தி, தெளிவுபடுத்தி எதற்காக ?? என்று பிறவி என்றெல்லாம் யோசிக்கும் அளவிற்கு யாங்கள் பின் உள்   செலுத்தும் முறைகள் பல வகை பின் யோகங்கள் அறிந்தும்!!!!


இவைதன் உணர பல வகையான மூலிகளும் இருக்கின்றன.


அவையை பறித்து, பறித்துத்தான் இவ்வுலகத்தை திருத்த வேண்டும் என்பது எல்லாம் எங்களுடைய அவா!!!


அறிந்தும்!! ஆனாலும் அதனையும் நிறைவேற்றுவது இறைவனின் கட்டளையே.!!! கட்டளையே!!!


இதை தன் உணர்ந்து மனமார பின் நினைத்த போதிலும் உண்மைதனை உணர இக்கலியுகத்தில் ஆள் இல்லையே.


ஆள் இல்லையே!!! என்பதற்கிணங்க பின் நிச்சயம் ஆட்களை உருவாக்குவோம்!! சித்தர்களே!!!


அறிந்தும் இவை தன் யாங்களும் துணையிருந்து மக்களுக்கு செம்மையான பின் மொழிகளில் செப்பி அறிந்தும் இதை என்று அறிய!!!!


================================

# கலிகாலம் - உண்மைதனை பின் புரியாது திரிவார்களே

# கலிகாலம்  -போவார்களே உண்மைப் பொருளை பின் உணராமலே

================================


காலமும் கலிகாலம்!!!! அறிந்தும் உண்மைதனை பின் புரியாது திரிவார்களே. திரிந்து அலைந்து உடம்பையும் வருத்துவார்களே. வருத்தி, வருத்தி எதை என்று தெரியாமலே போவார்களே. போவார்களே உண்மைப் பொருளை பின் உணராமலே!!!.....


உண்மைப் பொருளை உணராமல்u மனிதனாக பிறப்பெடுத்தும் வீணே. வீணாக பின் உடம்பும் போய்விடுகின்றது.


இவனைச் சான்றோரின் அதாவது குழந்தைகள் இன்னும் ஏராளமான பின் சொந்த பந்தங்களோடு நிச்சயம் உறவும் பிரிந்து பின் வருத்தத்தோடு சென்றடைகின்றார்களே!!!!!!


========================================

# மனிதன் ஏன் பிறக்கிறான்? ஏன் இறக்கிறான்? விடைதெரியாத ரகசியம்!

========================================


ஏன்?? இந்த அவல நிலை? 


ஏன் மனிதன் பிறக்கின்றான்?


ஏன் இறக்கின்றான்?


நடுவில் சொந்த பந்தங்கள் யாருக்காவது தெரியுமா???? என்றால்????


சுத்தமாக தெரியாது.


அவை உணரவே, அவை உணரவே ஒவ்வொரு நேரமும் மனிதனுக்கு ஒரு கால ஆண்டுகள் அவகாசம் இறைவனால் கொடுக்கப்படும். 


அவ் பின் ஓர் ஆண்டு எவன் ஒருவன்?? சரியாக பின் இருக்கின்றானோ!?? அவனுக்கு அனைத்தும் தெரியவரும்.


இவைதன் சித்தர்களே எடுத்துரைப்பார்கள்.


அதுவும் கூட பல புண்ணியங்கள் இருந்தால்!!!!


இன்னும் மனிதனிடத்தில் பாவங்களும் புண்ணியங்களும் ஒளிந்து கிடக்கின்றது.


ஆனால் கலியுகத்தின் பின் பாவ ஆற்றல்  ஆண்டு ஆண்டுகளாகவே, ஆண்டுகளாகவே ஆள வந்து, ஆள வந்து பாவங்களாகவே மனிதன்!!!!!


அதாவது பாவப்பட்டவனே மனிதன்.!!!


====================================

# சித்தர்கள் எழுதி மறைத்து வைத்துள்ள ஓலைச்சுவடிகள் எங்கே உள்ளன?

====================================


இப் பாவப்பட்டவனுக்கு எதை? எங்கு? செப்பினால் புரியும் என்பவை எல்லாம் சித்தர்கள் நன்கு ரசித்து அறிந்தும் வைத்துள்ளார்கள்.


அதனால் தான் இக்காவியங்கள் அதாவது பல பல ஞானியர்கள், ரிஷிகள் இன்னும் குருமார்கள் எழுதியதை!!!


=====================================

(எழுதியது ஓலைச்சுவடிகள் எல்லாம் மறைமுகமாக இருக்கின்றது) 

=====================================


இன்னும் கூட அங்கங்கே தங்கி நிற்கின்றது. அழியவில்லை.


உண்மைப் பொருள் என்றும் அழியாது.


பொய்யானது, பொய்யானதெல்லாம் வரும்!!!.. போகும்!!!.. கட்டாயம் அறிந்தும்.


இதனால் எங்கெங்கு?? சக்திகள் உள்ளவை என்பவை எல்லாம் யாங்கள் அறிவோமே.


அதேபோலத்தான் அங்கு பின் பிறந்து வளர்ந்தாலே பின் உலகம் இருக்கும் வரை பின் மனிதர்கள் அழியப்போவதில்லை.


இதனாலே இவைதன் ரகசியங்கள் இன்னும் சித்தர்கள் பின் உண்மைதனை உணர்த்தி, உணர்த்தி உலகத்திற்கு பின் எப்படியாவது??? நல்லதை செய்ய வேண்டும் என்று எண்ணியே  வருந்தி வருகின்றார்கள்.


ஆனால் மனிதனோ எதை? குறிப்பிட்ட வகையில் இயலாது சென்றடைந்து விடுகின்றான்.


சென்றடைந்து எதை? எதையோ? நோக்கி!!!!....



======================================

# தாய் தந்தையின்றி தவிக்கும் குழந்தைகளுக்காகக் கண்ணீர் விட்ட அனுமன்!

======================================


ஆனாலும் பின் அனுமானும் இதை தன் உணர ஆனாலும் அழுதுகொண்டே அனுமானும்!!!! ஓரிடத்தில்!!!


ஆனாலும் தாய் தந்தைகள் இல்லாமல் பின் இக்குழந்தைகள் எப்படித்தான்? வாழப்போகின்றார்கள்?? வருங்காலத்தில் என்று!!!


ஆனாலும் அனுமன் இறைவன் பக்தன், இறைவன் பக்தன் அல்லவா!!!!


இதனால் எதை என்று கூற சிரஞ்சீவி வரத்தை பெற்றானே!!! இதை தன் அறிய!!!!



இன்னும் இன்னும் காலப்போக்கில் ஆனாலும் சில வயதிலிருந்து ஆனாலும் பன் வயது பெருகும் வரை யாராலும் இன்னும் அறிந்தும் இதைத்தான் நிச்சயம் யானே சொல்ல வந்தேன் !!!


இன்னும் வாழ்க்கைப் பற்றி எல்லாம்!!!


=========================================

# இன்றும் நம்மிடையே சிரஞ்சீவிகளாக வாழ்ந்து அருள்பாலிக்கும் லவனும் குசனும்!

==========================================


ஆனாலும் இன்னும் கூட வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். (லவனும் குசனும்)


பின் அறிந்தும் உண்மைதனை கூட சிரஞ்சீவியாக வருவோருக்கெல்லாம் இங்கு ஆசிகள் கொடுத்து, கொடுத்து!!!



ஏன்? எதற்கு? தாய் தந்தையின் பாசம்!!! பின் இவர்களும் கூட அறிந்தும் எதை என்று உணரும் அளவிற்கு கூட!!!


ஆனால் வருவோருக்கெல்லாம் இங்கு பின் பல பிரச்சனைகள் இவர்கள் மூலமே சரி செய்யப்பட்டு!!, சரி செய்யப்பட்டு!!!


=========================================

# லவ-குசர்களைத் தன் அரவணைப்பில் இன்றும் வளர்க்கும்  ஸ்ரீ அனுமன்!

=========================================


ஏனென்றால் உணர்ந்தார்கள்!!!! பெண்களுக்கு குழந்தைகள் இல்லையே என்றெல்லாம் வருந்துவோருக்கும் இங்கு வந்து, வந்து பின் குளத்தில் மூழ்கி, மூழ்கி பின் இவர்களும் லவ குசாவும் ஆசிகள்!!!!


ஏனென்றால் இவர்கள் சிரஞ்சீவிகள்!!! 


இவர்களை வளர்த்தது அனுமானே.!!!!


அனுமானே இனியும் வளர்த்துக் கொண்டு பார்த்துக்கொண்டு கவனித்துக் கொண்டே இருக்கின்றான்.


ஆனாலும் தாய் தந்தையோ!? அறிந்தும் ஏன்? எதற்கு? இவ் அவல நிலை????,

அவல நிலை என்பதை எல்லாம் பின் ஒளி விளக்காக இன்னும் குறிப்பிடுவேன் வருங்காலத்தில்.


=============================================

# வால்மீகி முனிவரின் அருளால் - மனிதர்களால் தவறாக எழுதப்பட்ட இராமாயண காவியம் மீண்டும் வெளிவரும்

==============================================


பின் எழுதுவேன் மீண்டும் பின்  ராமாயணத்தின் சரித்திர காலம் எப்படி,? ஏது? என்றும் கூட மனிதனுக்கு இன்னும் தெளிவுபடுத்துவேன்.


இன்னும் இதை அறிந்து கலியுகத்தில் உண்மை ஞானத்தை பெற்றோர் எவர்???????


சிலரே!!!!!!!.


அவ் சிலர்.... அவ்வுண்மை ஞானத்தை பெற்றவரும் அமைதியாக போய்விடுகின்றனர்.


பொய்யான ஞானத்தை பெற்றவர் பின் வருந்தி, வருந்தி எதையோ செப்பி மனிதனை, மனிதனை அழித்து உண்மைப் பொருளை மறைமுகமாக காத்து காத்திருக்கின்றான்.


இவைதன் உணராத அளவிற்கும் கூட மனிதன் மூடன், மூடனே!!!!


மனிதன் இவ்வாறு மூடனாக இருப்பதால் மனிதனுக்கு பல தேவைகள் அவசியமாகின்றது.


=================================

(பொன் பொருள் என நிரந்தரமில்லாத ஆசைகள் தேவைகள்)

=================================


பின் அவையெல்லாம் பின் இறைவன் கொடுத்து அவையும் பின் அதாவது அவைப் போன்றே நீயுமடா!!!!! என்றெல்லாம் சோதித்து கடைசியில் உணர்த்துகின்றான்!!.


மீண்டும் இவை போன்றுதான் நாம் என்று மனிதன் உணர்ந்து கொண்டு இறைவனைத் தேடுகின்றானே!!!!!!. இதுதான் மூடனின், மூடன் என்பேன் யான்.




ஏன்?, எதற்கு? என்பதெல்லாம் ஏன்? ஒவ்வொருவற்றையும் இறைவன் படைத்திருக்கின்றான். ஒவ்வொரு உயிரையும் ஏன்??? படைத்திருக்கின்றான் என்பவை எல்லாம் யாராவது யோசித்தானா??? என்று!!!


யோசித்தானா??? என்றால்?? 


இல்லை!!!.


ஏன்?, எதற்கு?? பல மனிதர்கள் பழங்காலத்தில் சாதித்தார்கள்!!!!!


ஆனால்!?????.... இன்றளவில் சாதிக்கச் சொல்!!!!!!

பார்ப்போம்!!!!


இல்லை.!!!


ஏன்,?? எதற்கு??? மனிதனுக்கு சிந்திக்கக் கூட பின் நேரமில்லாமல் போய்விடுகின்றது.


ஏன்??, எதற்கு??? என்றால் மாயைகளில் சிக்கித் தவித்து அதையும் பின் அதாவது சொந்த பந்தங்களாலும் இன்னும் கூட அறிந்தும் எவை, எதை என்று அறிய தான் மட்டுமில்லாமல் தனக்கு வேண்டும்,!!! வேண்டும்!!! என்றெல்லாம்!!!!


பின் தானாகவே பின் அதாவது தன்னைத்தான், அதாவது தன்னைச் சுற்றி வைத்துக்கொண்டு அதனை பின் எப்பொழுது?? ஏது??? தீர்க்க,???


======================================

(மனிதர்கள் சொந்த பந்தங்கள் அவர்களுடைய தேவைகள்.. கட்டாயம்)

======================================


அதாவது அதனைப் பார்க்கவே மனிதனுக்கு நேரங்கள் இல்லாமல், அதாவது அதைப் பார்க்க அவ்நேரங்கள் வீணாகி!!!! மனதும்!!! பழுதாகி!!! உடம்பும் பழுதாகி!!!! வயதும் முதுமைத் தோற்றம் பின் விழுந்து நோய்கள் பலவற்றை சந்தித்துக் கொள்கின்றான்.



=======================================

# கோடியில் ஒருவருக்கு மட்டுமே புரியும் இறைவனின் திருவிளையாடல்!

=======================================


இதனால் அறிந்தும் அனைத்தும் பின் திருவிளையாடல்!!!!!!


இறைவனின் திருவிளையாடலே.


அத்திருவிளையாடலை அறிந்தவன் இவ்வுலகத்தில் கோடியில் ஒருத்தனே!!!!! என்றெல்லாம் பின் ஆணையிட்டுச் சொல்கின்றேன்.


அறிந்தும் இவை தன் உணர அக்கோடியில் நிச்சயம் பின் பல மக்களை உருவாக்க வேண்டும் என்பதே இக்கலியுகத்தின் சித்தர்களின் ரகசியமாக ஒன்று.


பின் உணர்ந்தால் நன்று,!!!!


இல்லையென்றால் அழிவே மிச்சம்!!!!.


அறிந்தும் ஆனாலும் பக்தி எதை எதன் மீது வைக்க வேண்டும்???? என்பவை எல்லாம் அறியாது மனிதன் சுற்றுகின்றானே!!!, சுற்றுகின்றானே!!!!


விலகுகின்ற மனிதன் பின் ஒளி விளக்காக. இதனால் பக்தி என்பது என்ன? பின் ராமன் அறிந்தும் சீதாதேவியும் பின் இன்று கொண்டுள்ள பக்தியின் காரணமாக யான் அதாவது எப்பொழுதும் சிரஞ்சீவியாக!!!!!!


ஏன்?, எதற்கு?? அறிந்தும் இதை  உம்மை காக்க!!!, காக்க!!! காத்தருளும் உலகத்தை அறிந்தும் பின் அதாவது இவ் அனுமானுக்கு தெரியும்!!!!!


(குழந்தைகள் லவனும் குசனும்)அனாதையாக ஆகிவிடுவார்களே!!!


இதனால் என்ன??, ஏது? இளமையாக அதாவது சிரஞ்சீவியாக வாழ வேண்டும் என்றெல்லாம் நிச்சயம் போராடி, போராடி உலகத்தைச் சுற்றி, சுற்றி இக்குழந்தைகளுக்கு நல்வழிப்படுத்த வேண்டும் என்பவை எல்லாம் எதை என்று அறிந்தும் கூட!!!!


நிச்சயம் இவர்கள் பிறந்தவுடன் தாய் தந்தை நிச்சயம் தன்னில் அவ்வளவாக மறந்துவிட வேண்டும் என்பது விதி!!!


விதியை எல்லாம் தெரிந்து எப்படி?, எப்படி என்பதை எல்லாம்!!!!


========================================

# “தான் பெற்ற இன்பம் இவ் வையகம் பெறுக” என்பதை முதலில் உலகத்திற்கு உணர்த்தியவர்  அனுமானே

========================================


ஆனாலும் எப்படியோ? பின் தான், தான் பெற்ற இன்பம் இவ் வையகம் பெறுக என்பதை எல்லாம் சித்தனின் பின் கூற்றே. 


அக்கூற்றின் மூலமாகவே முதலில் உலகத்திற்கு உணர்த்தியவன் அனுமானே.


அனுமானே எதை புரியும்!! ஓ என்று இவ்வளவு கஷ்டங்களா??? என்று!!!


========================================

# எப்போது உங்களுக்கு உங்களை வெல்லக்கூடிய சக்திகள் பிறக்கும்

========================================


தெளிவுபெற்று இதனால்தான் உங்களுக்கு உங்களை வெல்லக்கூடிய சக்திகள் பிறக்கும்!!!


சக்திகளும் உண்டு. அதை தன் இறைவன் முதலிலே படைத்து அனுப்புகின்றான்


அனுப்புகின்றான். அதனை நீங்கள் கண்டு உணர்வதில்லை. 


யார் ஒருவன்??? அதைக் கண்டு உணருகின்றானோ அவனுக்கு அனைத்தும் தெரியும்.!!!


ஆனாலும் மாய உலகத்தில் அவை கண்ணுக்குத் தெரியுமா ?? என்றால் பின் சந்தேகமே. 


எங்கள் வழியில் வருபவர்களுக்கு யாங்கள் காட்டுவோம் அனைத்தும் கூட.!!!


இதனால்தான் இறைவனை வணங்கியும் சித்தர்களை வணங்கியும் ஞானிகளை வணங்கியும் இன்னும் பொய்களாக மனிதர்கள் போய்க்கொண்டிருக்கின்றார்கள். 


இன்னும் சிலர் அவர்கள் எல்லாம் பொய் என்றெல்லாம்!?!?!?!?!


சித்தர்கள் எல்லாம் பொய்,!!!?? ஞானிகள் எல்லாம் பொய்!?!?, ரிஷிகள் எல்லாம் பொய்!?!?!? என்றெல்லாம் இக்கலியுகத்தில் சொல்லி மனிதனின் மனதை மாற்றி எங்கேயோ விடப்போகின்றான்.


உண்மை!!!


ஆனால் !?? யாங்கள் விட்டுவிடுவோமா!?!?!? என்ன?


=========================================

# வால்மீகி முனிவர் உரைத்த ரகசிய பாடங்கள் 

=========================================


அனைத்தும் இவ்வுலகத்தில் கட்டாயம் இப்படித்தான் நடக்கப்போகின்றது என்று பின் லவனுக்கும் குசனுக்கும் யான் அழகாக சொல்லித் சொல்லிக் கொடுத்தேன்.


பின் எப்படி? பின் மனிதனின் உள்நுழைந்து மனதை மாற்றி அறிந்தும் பல பின் நல்ல எண்ணங்கள் கொண்டவர்களிடம் பின் நீங்கள் சென்று அவர்களுக்கு உதவிட வேண்டும். !!


பின் நாட்டை பின் காக்க வேண்டும் என்பவை எல்லாம் யான் சொல்லிக் கொடுத்திருக்கின்றேன். லவனுக்கும் குசனுக்கும்!!!!


========================================

# இன்றும் நல்லோர்களுக்காக மறைமுகமாக ஒளிந்து சென்று அவர்களுக்கு உதவி செய்து கொண்டே இருக்கின்றார்கள். லவனும் குசனும்!!!!!

=========================================


அவ்வாறாகவே இன்றும் கூட பின் எவ்வாறு என்பதை எல்லாம் நல்லோர்களுக்காக சென்று மறைமுகமாக ஒளிந்து அவர்களுக்கு உதவி செய்து கொண்டே இருக்கின்றார்கள். லவனும் குசனும்!!!!!


இதை யார் அறிவார்?


அறிவதில்லையே.!!!


======================================

# அனைவருக்காகவும் நன்மைகள் போராடினால்…….

======================================


இவையெல்லாம் ஏன்?, எதற்கு? என்றால் நிச்சயம் தான் பெற்ற அறிந்தும் இன்பத்திற்காகவே மனிதன் போராடிக் கொண்டிருக்கின்றான்


அவ் இன்பத்திற்காக எப்பொழுது???? மனிதன் போராடுகின்றானோ!???

அவ் இன்பம் துன்பமாக போய்க்கொண்டிருக்கின்றது. 


இதை மனிதன் உணர்வதே இல்லை.


பின் தான் சொந்த பந்தங்களே அறிந்தும் நன்றாக இருக்க வேண்டும், நன்றாக வாழ வேண்டும். இன்னும் கூட பின் அதாவது எத்தனை?, எத்தனை? சொந்தங்கள் மனிதன் உருவாக்கி பின் அவர்கள் அவர்களுக்குள்ளேயே வருத்தங்கள் ஏற்படுத்தி!!!!


ஆனாலும் எப்பொழுது உண்மை ஞானத்தை பெறப்போகின்றான்??? என்பவை எல்லாம்!!!


========================================

# லவ குசர்களுக்கு அனுமன் கற்பித்த சிரஞ்சீவி மந்திரத்தின் ரகசியம்!

========================================


இதனாலே அனுமான் அழுது புலம்பி அறிந்தும் இவர்களுக்காக, குழந்தைகளுக்காக!!!


ஏனென்றால் குழந்தைகள் அனாதைகளாக போய்விடும் என்பது அனுமானுக்கு தெரியும்.


இவ்வளவு பின் தேசத்தை காத்தவனுக்கு இவ்வளவு எதை புரிந்தும் கூட!!!!


இதனால் பல வழியிலும் கூட பின் மூலிகைகளை எதை என்று உலகத்தைச் சுற்றி பல வரங்களைப் பெற்று யான் பெற்ற பின் அதாவது சிரஞ்சீவியான மந்திரத்தையும் பின் லவனுக்கும் குஷனுக்கும் பின் சொல்லித் தருகின்றேன் என்று லவ குசனுக்கும் சொல்லித் தந்தார்கள். 


இதனால் லவ குசனும் பின் எப்பொழுதும் வலம் வந்து!!!(கொண்டே இருக்கின்றார்கள்)


============================================

# குழந்தை வரம் அருளும் லவ-குசர்கள்: அமாவாசை திதியின் அற்புத மகிமை!

============================================


இதனால் குழந்தை பாக்கியம் இல்லையே என்பவை எல்லாம் முன்னோர்களுக்கு சேராத எவை என்று பின் தெரியாத பின் பல கஷ்டங்கள் படுபவர்களுக்கெல்லாம் இங்கு அமாவாசை திதியில் வந்து எதை என்று புரிய அழகாக இங்கு அமர்ந்து கொண்டாலே லவனும் குசனும் வலம் வருவார்கள்.


அழுது கொண்டிருப்பவர்களுக்கெல்லாம் குழந்தை வரத்தையும் கொடுத்து தான் தான் ஏன், எதற்கு என்றெல்லாம்!!!!


நிச்சயம் ஏனென்றால் பின் குழந்தை எவை என்று கூற பின் பிறக்கின்ற எவை என்று உள்ளே பின் சீதையின்(சீதா தாயார் கர்ப்பிணியாக இருக்கும் பொழுது) உள்ளே இருக்கின்ற பொழுதே!!! சீதை எவ்வளவு?? பின் அழுதாள் என்பவை எல்லாம் லவனுக்கும் குசனுக்கும் தெரியும்.



அதனால்தான் பின் தாய்மார்கள் வந்துவிட்டால் இங்கு லவனும் குசனும் அருள் ஆசிகளோடு அனைத்து வரங்களையும் கூட கொடுத்து அனுப்புகின்றார்கள். இப்பொழுதும் கூட!!


=============================================

# குழந்தை பாக்கியம் தரும் அற்புதத் தீர்த்தம்! மூழ்கி எழுந்தால் நடக்கும் அதிசயம்!

=============================================


இதனால் பின் குழந்தை பாக்கியம் இல்லோர்(இல்லாதோர்) பின் ஏதாவது எதை என்று கூற பின் இக் குளத்தில் மூழ்கி பின் நீரை உட்கொண்டு இவ்நீரை எடுத்துக்கொண்டு அனுதினமும் உட்கொண்டு கொண்டே வந்தால் உடம்பில் நிச்சயம் பின் எவை என்று அறிந்தும் கூட லவன் குசனும் நிச்சயம் சிரஞ்சீவியாக அவர்களே பின் அத் தாய்மார்களுக்கு உதவி செய்து நிச்சயம் குழந்தை பாக்கியத்தை அள்ளி த் தருவார்கள்.



=============================================

# நல்லோர்களை மறைமுகமாகக் காக்கும் லவ-குசர்களின் ரகசியச் செயல்பாடு!

=============================================


பல மூலிகைகளால் நிச்சயம் எப்படியோ ஏது? என்று அறிந்து!!! இப்பொழுது கூட லவ குசன் நிச்சயம் நல்லோர்களுக்கு இத்தேசத்தை நிச்சயம் பாதுகாப்பவருக்கெல்லாம் அவர்கள் இல்லத்திலே இருந்து பின் யாரும் ஒன்றும் தெரியாமல் எதை என்று அறிய பின் மறைமுகமாக செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள். 


===========================================

# இன்றும் நம்முடன் குழந்தைகளாகவே வலம் வரும் லவ-குசர்கள்!

===========================================


எக்குறைகளும் எதை என்று கூற இவ் அதாவது தேசத்திற்கு வந்தாலும் இவர்கள் நிச்சயம் யார்? மூலம் எங்கு சென்றடைய வேண்டும் என்பவை எல்லாம் சென்றிட்டு சென்றிட்டு பின் குழந்தைகளாக இன்றும் கூட வலம் வந்து கொண்டே இருக்கின்றார்கள்.


இக்குழந்தைகளை பற்றி தெரியாமல் போய்விட்டது பின் மனிதனுக்கு!!!


ஏன்?, எதற்கு? என்றால் அனைத்தும் மனிதனுடைய பின் அதாவது மூடத்தனமே, மூடத்தனமே என்பேன்.


இதை உணராத பின் மனிதன் எப்படி நல்வாழ்க்கை வாழப்போகின்றான்??? எப்பொழுது பின் நோய் நொடி இல்லாமல் வாழப்போகின்றான்???? எப்பொழுது மனம் வருத்தமாகவே வாழத்தான் போகின்றான்!!!!! அறிந்தும் எதை என்று கூட!!!


செப்பினேனே!!!


இதை தன் மூலமாகவே இன்னும் லவ  பின் அதாவது குசனின் பின் வாழ்க்கை தத்துவத்தை யான் விவரமாக இங்கேதான் சொல்வேன்.


மறு வாக்கில் அறிந்தும் பின் மற்றொரு அமாவாசையிலோ பின் எதை என்று புரிய மாதத்தில் பின் எதை என்றே யான் எடுத்துரைப்பேன். ஆசிகள், ஆசிகள்.


======================================

# குருநாதர் அகத்தியர் பெருமானிடம் வாக்குகள் கேட்ட பொழுது

======================================


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!! 


வால்மீகி ரிஷிமுனி லவ குசா குழந்தைகளை பற்றி வாக்குகள் நல்கிய பிறகு அடியவர்கள் குருநாதர் அகத்தியர் பெருமானிடம் வாக்குகள் கேட்ட பொழுது... 


======================================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 

======================================


அப்பனே எங்கு எதனை செப்ப வேண்டும் என்பதை அறிந்து யான் செப்புவேன்... 



======================================

# இல்லத்தில் அனுதினமும் லவனையும் குசனையும் நினைத்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்களோ அதை தாருங்கள் என்று

======================================


நீங்கள் அனைவரும் இல்லத்தில் அனுதினமும் லவனையும் குசனையும் நினைத்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்களோ அதை தாருங்கள் என்று நினைத்து வேண்டிக் கொள்ளுங்கள் 


அவர்கள் ஆசிகள் கிட்டும் 



==================

ஆலய விபரங்கள்.

==================


ஸ்ரீ ராமர் தீர்த்தக் கோயில் அல்லது பகவான் வால்மீகி தீர்த்த ஆசிரமம், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிதர்சரஸ் மாவட்டத் தலைமையிடமான அமிர்தசரஸ் நகரத்தில் அமைந்துள்ளது. பகவான் இராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயிலை வால்மீகி தீர்த்த ஆசிரமம் என்றும் அழைப்பர்.


இக்கோயிலில் கருவறையில் 800 கிலோ கிராம் எடை மற்றும் 8 அடி உயரம் கொண்ட வால்மீகி முனிவரின் தங்கச் சிலை நிறுவப்பட்டுள்ளது. வால்மீகி தீர்த்த ஆசிரம மேம்பாட்டுக் குழுவால் இக்கோயில் நிர்வகிக்கப்படுகிறது.



பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் அருகே உள்ள வால்மீகி தீர்த்தம் (Bhagwan Valmiki Tirath Asthan) தான் லவ-குசா பிறந்த இடம். இந்த புனித இடத்தில் தான் மகரிஷி வால்மீகி சீதைக்கு புகலிடம் அளித்து, லவ-குசாவை வளர்த்து, அவர்களுக்கு ராமாயணத்தை கற்பித்தார் என்று ஐதீகம்.


=============================================

#சீதை வாழ்ந்த இடமும் லவ-குசா பிறந்த ஆசிரமக் குகையும் இன்றும் எங்கே உள்ளது?

=============================================



இடம்: பஞ்சாப், அமிர்தசரஸ்.

ஆசிரமம்: மகரிஷி வால்மீகி ஆசிரமம்.


சிறப்பம்சம்: சீதைஅன்னை தங்கியிருந்த இடமும், லவ-குசா பிறந்த இடமும் வால்மீகி ஆசிரமத்தில் உள்ள குகை போன்ற பகுதியில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.


https://maps.app.goo.gl/tC6z9RCrHb9Z1t779





ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.