“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Thursday, March 5, 2026

சித்தர்கள் ஆட்சி - 578 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - 01/மார்ச்/2026 அன்று நடந்த சென்னை சத்சங்க வாக்கு - பகுதி 6

 இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் சென்னையில் 01/மார்ச்/2026 அன்று  நடந்த சத்சங்க  வாக்கு - பகுதி 6


வாக்குரைத்த  நாள் :-  01 / March / 2026 , ஞாயிற்றுக்கிழமை 

வாக்குரைத்த இடம் :-  சென்னை 


இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.


( இவ் சத் சங்கத்தின் அனைத்து பகுதிகள் இங்கு உங்கள் பார்வைக்கு. 


சித்தர்கள் ஆட்சி - 573 :-பகுதி 1

சித்தர்கள் ஆட்சி - 574 :-பகுதி 2

சித்தர்கள் ஆட்சி - 575 :-பகுதி 3

சித்தர்கள் ஆட்சி - 576 :-பகுதி 4

சித்தர்கள் ஆட்சி - 577 :-பகுதி 5

சித்தர்கள் ஆட்சி - 578 :-பகுதி 6

சித்தர்கள் ஆட்சி - 579 :-பகுதி 7

சித்தர்கள் ஆட்சி - 580 :-பகுதி 8

சித்தர்கள் ஆட்சி - 581 :-பகுதி 9

வாருங்கள் வாக்கின் உள் செல்வோம் 

=========================================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 

=========================================


ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 


================================================

( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் சென்னையில் 01/மார்ச்/2026 அன்று   நடந்த சத்சங்க  வாக்கு - பகுதி 6  )

================================================



குருநாதர் :-  தாயே , நீ பாடலை பாடவில்லை. ஆனால் சொல்லிவிட்டேன். நிச்சயம் பாடு. 




===============================================

# அடுத்த அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார்கள்

===============================================


அடியவர் 11   :-  ( பின் வரும் பாடல் பாட ஆரம்பித்தார்கள் )


உருவாய் அருவாய், உளதாயே  இலதாயே 

மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.



குருநாதர் :-  அப்பனே, கவலை விடு. இழுத்து வந்து விடுகின்றேன். 


=============================================

# பக்தி - எதில் இருந்து  தொடங்க வேண்டும்?

=============================================

# காலையிலும் மாலையிலும் அவசியம் இல்லங்களில் தீபம் ஏற்றுங்கள் 

=============================================


குருநாதர் :-  தீபமாவது ஏற்ற சொல். காலையிலும் மாலையிலும்.


குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் இதிலிருந்து தான் தொடங்க வேண்டும் பக்தி 



குருநாதர் :-  எதை என்று மீண்டும் சொல். அனைவருக்கும், 


சுவடி ஓதும் மைந்தன்  :-  அனைவரிடத்திலும் மீண்டும் அந்த பாடல் சொல்ல சொல்றார். 


அடியவர் 11   :-   ( மீண்டும்  பின் வரும் பாடல் பாட ஆரம்பித்தார்கள் )


உருவாய் அருவாய், உளதாயே  இலதாயே 

மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.


குருநாதர் :-   ( **** தனி வகுக்கள் ****  )



அடியவர் 10   :-  மழை வாழ்த்து படிக்கணும்னு ஆசைப்படுறேன். மழை வாழ்த்துன்னு ஒரு பாடல் இருக்குங்க.  ஏரி, குளம், கிணறு, ஆறு எல்லாம் நினைவு வழியான்னு ஒரு பாடல் இருக்கு. 


அடியவர்  :-  அந்த பாடலை வந்து கூட்டு பிரார்த்தனை சேர்க்கணும்னு சொல்லி என்னோட அந்த பாடலை கூட்டு பிரார்த்தனை சேர்க்கணும்னு ஆசைப்படுறாருங்க. 


குருநாதர் :-  அப்பனே , நிச்சயம் தன்னில் கூட இப்பொழுது விட்டுவிடு. பின்பு ஒரு மாதம் கழித்து எனை கேள். சொல்கின்றேன். 


===============================================

# அடுத்த அடியவர் பாடல் பாட ஆரம்பித்தார்கள்

===============================================


அடியவர் 12   :-  ( பின் வரும் பாடல் பாட ஆரம்பித்தார்கள் )


முத்தைத்தரு பத்தித் திருநகை

     அத்திக்கிறை சத்திச் சரவண

          முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்


குருநாதர் :-  தாயே, பின் அழகாக வழிநடத்து விடுகின்றேன். கவலை பின் வேண்டாம். என்ன தேவையோ அதை கொடுத்து உனக்கு யான் வழி நடத்துகின்றேன். போதுமா? 


சுவடி ஓதும் மைந்தன்  :-  இன்னும் என்ன வேண்டுமா? 


==============================================

# நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையார் கருணை 

==============================================


அடியவர் 12   :-  ஐயா, எனக்கு ஒன்று தான். திருவண்ணாமலை கிரிவலம் பண்ண முடியாத அளவுக்கு என்னுடைய வலது முழங்கால் முட்டி தேஞ்சு போய் நடக்க முடியாமல் இருக்கேன். என்னுடைய வாழ்க்கை, 


குருநாதர் :-  தாயே , எது என்று அறிய நிச்சயம் பின் நினைத்தாலே முக்தி தரும் என்பவையெல்லாம் அனைவருக்கும் நிச்சயம் தன்னில் கூட. இதனால் பின் எவை என்று அறிய அறிய வாகனத்தில், அதாவது நிச்சயம் செல், தாயே . 


அடியவர் 12   :-   எனக்கு ஏதாவது கிரிவலம்….. 



சுவடி ஓதும் மைந்தன்  :-   அம்மா, இருங்க, இருங்க, இருங்க. வண்டியில போவோமான்னுட்டாரு.


அடியவர் :-  ஆட்டோல ..


அடியவர் 12   :-    எனக்கு நடந்து தான், சார், நான் போகணும். எனக்கு வந்து, 


குருநாதர் :-  தாயே , இவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய. பின் இப்பொழுது பின் தேவையில்லாதவை இவை. 


சுவடி ஓதும் மைந்தன்  :-  (இப்போது என்ன பண்ண சொல்றாரு? நீங்க ஆட்டோல கிரிவலம்  போகலாம் ) 


குருநாதர் :-  தாயே , 16 வயது போல் பேசுகின்றாய். நியாயமா? 


அடியவர்கள் :- ( சிரிப்புகள் ) 



============================================

# இறைவனின் பெருங்கருணை மனிதனுக்கு புரிவதே இல்லை 

============================================


குருநாதர் :-  தாயே , கவலைகள் வேண்டாம். நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட பின் ஈசன் அருகிலே இருக்கின்றான். 


சுவடி ஓதும் மைந்தன்  :-  ( அம்மா , ஈசன் உங்க பக்கத்துலயே இருக்கிறார். பக்கத்துலயே இருக்கிறார். )


குருநாதர் :-  இவை எது என்று புரிய. அப்பொழுது உன்னை வரவேற்பானா? என்ன? 



சுவடி ஓதும் மைந்தன்  :- ( உங்க பக்கத்துலயே ஈசன் இருக்கும் போது,  இறைவன் உங்களை திருவண்ணாமலை கிரிவலம் வர,  உங்களை அங்கு வரவேற்பாரா என்ன? இல்ல) 


அடியவர் 12   :-   ( ……………… )  


குருநாதர் :-  தாயே , கவலை விடு. அதனால்தான் சொல்லிவிட்டேன் முதலிலே.


=====================================

# குருநாதர் :-  அனைவரும் கேளுங்கள்.

=====================================

# உடல் என்பது ஒரு எந்திரம் - போக போக என்ன ஆகும் ?

====================================== 


குருநாதர் :-  தாயே , நிச்சயம் தன்னில் கூட மீண்டும் சொல்கின்றேன். அனைவரும் கேளுங்கள். புதிதாக வாகனத்தை நிச்சயம் வாங்குகின்றீர்கள். போக போக என்ன ஆகின்றது? இதுதான் உடம்பு கூட. உடம்பு இயந்திரம். தாயே , 


சுவடி ஓதும் மைந்தன்  :- ("எல்லார்கிட்டயும் அவர் இது தான் சொல்றாரு. நாம ஆசையா ஒரு புது வண்டி வாங்குறோம்; ஆனா ஒரு பத்து வருஷம் ஓடுனதும் அது பழைய வண்டி ஆகிடுது இல்ல? அப்பறம் என்ன... ஒன்னொன்னா ரிப்பேர் ஆகும், எல்லாத்தையும் மாத்திதான் ஆகணும். நம்ம உடம்பும் அந்த மெஷின் மாதிரிதான். ஓட ஓட ஒவ்வொன்னா தேயும், கழண்டு வரும், கடைசியில வண்டி ஓடாதப்ப எப்படி அத ஓரமா தூக்கி போடுறோமோ, அதே மாதிரிதான் இந்த உடம்பும். ஒரு கட்டத்துல இதையும் தூக்கி போட்டுட்டு போக வேண்டியதுதான். இதுதான்மா உலக விதி, இத யாராலயும் மாத்த முடியாது!" )



குருநாதர் :-  இதனை யாராலும் தடுக்க முடியாது. தாயே, சொல்லிவிட்டேன். 


சுவடி ஓதும் மைந்தன்  :-  இதை வந்து இதுதான் உலக நியாயம். இதை வந்து என்ன பண்றது? மாத்த முடியாது. மாத்த முடியாது. 


================================================

# ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும் ?

================================================


குருநாதர் :-  நிச்சயம் அனைத்தும் இறைவன் தான். பின் மனது இளமையாக எவை என்று அறிய நன் மனது வைத்துக் கொண்டால், நிச்சயம் இவையெல்லாம் கலந்து ஓடாது. 


சுவடி ஓதும் மைந்தன்  :-  ("நாம எப்பவுமே என்ன பண்ணணும்னா, மனசை ரொம்ப இளமையாவும் நல்ல எண்ணங்களோடும் வச்சுக்கணும். அதுக்கு அடிக்கடி உடற்பயிற்சி, யோகான்னு எதாவது ஒன்னு பண்ணிக்கிட்டே இருக்கணும். அப்படி முறையா உடம்பையும் மனசையும் கவனிச்சுக்கிட்டா, அந்த வண்டி (உடம்பு) சீக்கிரத்துல தேஞ்சு போய் பாகம் பாகமா (Parts) கழண்டு ஓடாது; இன்னும் கொஞ்ச நாளைக்கு நல்லாவே உழைக்கும்!" )

=======================================

# குருநாதர் “யான் பார்த்துக் கொள்கின்றேன்” - என்றால் அதன் அர்த்தம் 

=======================================


குருநாதர் :-  கவலை வேண்டாம், தாயே . பார்த்துக் கொள்கின்றேன். 


அடியவர் 12   :-   ( ……………… )  


குருநாதர் :-  தாயே நிச்சயம் தன்னில் கூட விதியில் ( ****  **** **** பிரம்ம தேவர் எழுதிய , கடுமையான விதியின்  ரகசியங்கள் **** **** **** **** **** **** **** **** ) என்று விதி, தாயே . பின் சொல்லவும் எவை என்று உண்மை சொல்லிவிட்டாலும் மனது சங்கடங்கள். 


குருநாதர் :-  தாயே , எதை என்று அறிய நிச்சயம் ( ****** மருத்துவர்களால் கண்டுபிடிக்க , சரி செய்ய இல்லாத அதி மருத்து மூல ரகசியங்களை  எடுத்து உரைத்தார்கள் **** )  


சுவடி ஓதும் மைந்தன்  :-  ( ***** ரகசிய விளக்கங்கள் ***** )


குருநாதர் :-  நிச்சயம் மருத்துவன் அதை கை வைத்தால், அவ்வளவுதான். 




சுவடி ஓதும் மைந்தன்  :-  ( **** மிக மிக  மிக  நீண்ட விளக்கங்கள் *** )


அடியவர் 12   :-   ( ……………… )  


குருநாதர் :-  தாயே , எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அனுதினமும் நிச்சயம் யான் சொல்வேன். அதை …………. என்றால் நிச்சயம் இல்லை. விதிதான் ஜெயிக்கும். அதனால் நிச்சயம் தன்னில் கூட கடல் . அதாவது கடல் , அதாவது நீர் நீராடினாலே போதுமானது. 




(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் சென்னையில் 01/மார்ச்/2026 அன்று நடந்த சத்சங்க   வாக்குகள் தொடரும்……)



ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.