இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.
அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 14.03.2026 அன்று இந்தோனேசியாவின் அழகிய தீவான பாலியில் உரைத்த வாக்கு. பாலி ஆன்மீகப் பயணம் - பகுதி 3
முதல் நாள் : 14.03.2026 (சனிக்கிழமை)
வாக்குரைத்த தலம்:- மூன்றாம் புனித தலம் ( DAY 1 , 3rd PLACE )
வாக்குரைத்த தலத்தின் பெயர் :- புரா குனுங்க் கவி (Pura Gunung Kawi)
முதல் நாள் மூன்றாவது தலம்:- புரா குனுங்க் கவி (Pura Gunung Kawi)
வாக்குரைத்த ஸ்தலத்தின் முகவரி:- புரா குணங் கவி, செபது. jl. குசுமா யுதா, செபது, கெக். தெகல்லாலாங், கபுபடென் கியான்யார், பாலி 80561, இந்தோனேசியா.
கூகிள் மேப் லிங்க் :-
https://maps.app.goo.gl/pCs5B9zCQnmt57g89
Address :- Pura Gunung Kawi, Jl. Kusuma Yudha, Sebatu, Kec. Tegallalang, Kabupaten Gianyar, Bali 80561, Indonesia
===============================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===============================
ஆதி மூலனை மனதில் எண்ணிச் செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே, எம்முடைய ஆசீர்வாதங்கள்.
அப்பனே, ஏன்?, எதற்காக?, அப்பனே, இவ்வளவு ஆலயங்கள்?
அப்பனே, எதற்காக??? அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.!!
=============================
# இன்னும் பல ஆலயங்களின் ரகசியங்களை உரைப்பார்கள் சித்தர்கள்
=============================
இதனால், அப்பனே, ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஒவ்வொரு சிறப்புகள் ஏன்?, எதற்கு? என்றெல்லாம் அப்பனே ஏற்கனவே தெரிவித்து விட்டார்கள் சித்தர்கள்.
இன்னும், அப்பனே, ரகசியங்கள் பன்மடங்கு உரைப்பார்கள் சித்தர்கள், அப்பனே.
இதைப் பற்றி எதை என்று, அப்பனே.
==========================
# இறைவனை காண்பது சாதாரணம் இல்லை.
==========================
இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, இறைவனைக் காண வேண்டும் என்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சாதாரணம் இல்லை என்பேன் அப்பனே.
=============================
# அனைத்திலும் வெற்றி பெற்று விடலாம்.
=============================
# ஆனாலும் நிச்சயம் பக்தியில் வெற்றி பெற இயலாது.
=============================
இதனால் தான், அப்பனே, அனைத்திலும் வெற்றி பெற்று விடலாம்.
ஆனாலும், அப்பனே, பின் நிச்சயம் பக்தியில் வெற்றி பெற இயலாதப்பா.
மனிதன் தோல்வியைத் தழுவுகின்றான்.
============================
# நீங்கள் பக்தியில் வெற்றி பெற்று விட்டால்…….
============================
அவ்வாறு பக்தியில் வெற்றி பெற்று விட்டால், அப்பனே, இவ்தேசம் புகழ்ந்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, இவ் பூமி இருக்கும் வரை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது, நிச்சயம் அவனுடைய ஆன்மா, அப்பனே, இவ்வுலகத்தில் பேசப்படும்.
இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின்.
============================
# இறைவனை தன் வாழ்நாள் முழுவதும் தேடிய மரியாதைக்கு உரிய “உண்ணா முனி” என்ற ஒரு பெரும் ஞானியின் கதை.
=============================
இறைவன் யார்?
பின் எங்கு இருக்கின்றான்? என்பதை எல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஒரு பின் இவை அறிந்தும் எதை புரிய, அப்பனே, அண்ணாமலையிலிருந்தே!!!!
அப்பனே, ஏன்,? எதற்கு,? பின் அண்ணாமலை பல சிறப்புகள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட!!
ஒவ்வொருவரையும், அப்பனே.
===============================
# மரியாதைக்கு உரிய “உண்ணா முனி” ஞானி.
===============================
இதனால், அப்பனே, ஒரு ஞானி, அப்பனே, பின் அவன் நாமமே உண்ணா முனி.
அப்பனே, உண்ணா முனி, அப்பனே பின் பல ஆண்டுகளாக தவம் செய்தான்.
ஈசனையும் காணலாம். பின் பார்வதி தேவியும் காணலாம். பின் என்று.
===========================
# பல ஆண்டுகளாக திருவண்ணாமலை கிரிவலம்
===========================
ஆனாலும், (கிரிவலம்) சுற்றி சுற்றி வந்தான் மலையைக் கூட.
ஆனாலும், முடியவில்லை.
ஆனாலும், சந்தேகம் ஏற்பட்டு விட்டது.
ஆனாலும், இன்னும் அவனுக்கு கஷ்டங்களாகவே வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. எவ்வாறு?, ஏது? என்று கூற.
கடைசியில், பின் நீரும் இல்லை, உணவும் இல்லை.
=============================
# இறைவனை காண முடியவில்லையே என்று மனம் வெறுத்த “உண்ணா முனி” ஞானி.
=============================
ஆனாலும், மீண்டும், பின் நமச்சிவாயனை, நமச்சிவாய!!, நமச்சிவாய!!! என்று சொல்லிக் கொண்டே இருந்தான்.
இதனால், முடியவில்லை. பல வினைகள்.
அதாவது, உடம்பு எடுத்தாலே பல வினைகள் என்பவை எல்லாம், பின் அனைவரும் அறிந்ததே.
இதனால், அவ் உண்ணாமுனி, நிச்சயம், அதாவது, அதாவது, மனது, பின் வெறுத்தான்.
===============================
# கடுமையான சுய பரிசோதனை , முடிவில் கோபம் வந்தது ……
===============================
இவ்வளவு நாட்கள் தவம் செய்தோம்!!!.....
இவ்வளவு நாட்கள், பின் இறைவனை வணங்கினோம்!!!...
இவ்வளவு நாட்கள் அன்பை செலுத்தினோம்!!!.... என்றெல்லாம்!! கோபங்கள் வந்துவிட்டது.
அப்பொழுது, இறைவா!!!!......... என்று அழைத்தான்.
இறைவி, எங்கு? இருக்கின்றீர்கள்???? நீங்கள்?
நீங்கள் உண்மையா???, பொய்யா?? என்றெல்லாம்.
ஆனாலும், அப்பனே, இப்படி எல்லாம் இக்கலியுகத்தில் இருக்குமப்பா.
ஏன்?, எதற்கு,?? இவ்முனியை,!!!........
==========================
# (இப்பொழுது இந்த முனியை பற்றி ஏன் குருநாதர் கூறுகின்றார்)
==========================
அப்பனே, உயர்ந்த முனி என்பேன், அப்பனே.
ஏனென்றால், இவ்முனியைப் பற்றி ஏன்? சொல்கின்றேன் என்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. இதற்கும், அப்பனே, பல காரணங்கள் உண்டு.
ஏனென்றால், அப்பனே, இவை, பின், அதாவது, மனிதன், அப்பனே, கலியுகத்தில், அப்பனே, இவ்வாறெல்லாம்,...
====================================
# (கலியுகத்தில் மனிதர்களுக்கு இறைவன் இருக்கின்றாரா இல்லையா என்ற எண்ணங்கள் வந்துவிடும் அந்த எண்ணங்களை மாற்றுவதற்காக உண்ணாமுனி ஞானியின் பக்தியை குருநாதர் நமக்கு எடுத்துரைக்கின்றார்)
====================================
அப்பனே, (இறைவன் இருக்கின்றாரா என்ற சந்தேகங்கள்) வந்துவிடக்கூடாது என்பதற்காகவே இவனை இங்கு அழைத்து வருகின்றேன் என்பேன், அப்பனே, உண்ணாமுனி என்பவனை.
அப்பனே, நல் விதமாக, அப்பனே, எதை என்று கூற.
==============================
# வாழ்நாள் முழுவதும் இறைவனை தேடாமல்…..
==============================
# ஒரு சில தீபம் ஏற்றிவிட்டு அலுத்துக்கொள்ளும் அடியவர்கள் ….
==============================
# சில சேவைகள் செய்துவிட்டு அலுத்துக்கொள்ளும் அடியவர்கள் ….
==============================
# கடைசியில் இறைவன் இல்லை என்று சொல்லிவிடுவது
==============================
அதனால், அப்பனே, இக்கலியுகத்தில் இப்படித்தானப்பா.
பின், அதாவது, தீபங்களை ஏற்றினேன். இன்னும் இறைவனுக்கு சேவை செய்தேன்.
இன்னும் பல வகையில் கூட. பின் எதை, எதையோ என்று செய்தேனே என்பவை எல்லாம், அப்பனே.
பின் மனிதன் சொல்லிக்கொண்டு கடைசியில் இறைவன் இல்லை என்று சொல்லிவிடுவான் என்பேன் அப்பனே. கலியுகத்தில், அப்பனே,
இதுதான், அப்பனே, உண்மை நிலை.
================================
# உண்ணாமுனி - மிகவும் வல்லமை வாய்ந்தவர்.
================================
ஆனாலும், அப்பனே, இவ்முனி, அப்பனே, அதாவது, உண்ணாமுனி, அப்பனே, மிகவும் வல்லமை வாய்ந்தவன் தான், அப்பனே.
ஏனென்றால், இவனை, பின் ஏன், எதற்கு, இப் புவிதன்னிற்கு அனுப்பினான் என்றால், பின், அதாவது, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை உண்டு என்பதை எல்லாம் எடுத்துரைத்துக் கொண்டே இருக்கின்றேன், அப்பனே.
================================
# இறைவன் ஆதி ஈசனார் , ஏன் உண்ணாமுனி ஞானியை பூலோகத்திற்கு அனுப்பினார் என்ற அதி ரகசியம்
================================
இதனால், இவனை எதை என்று கூற, பின், அதாவது, எடுத்துக்காட்டாக, பின் செப்பி!!!..., அப்பனே, அதாவது, இவ்வுலகத்தில் உள்ள பல, அப்பனே, ஞானிகளுக்கு சிறந்த உதாரணமாகவே இவன் இருப்பான் என்பது சிறந்த எடுத்துக்காட்டாகவே இருப்பான் என்று நிச்சயம் தன்னில் கூட ஈசனே அனுப்பி வைத்தான், அப்பனே.
இவன் பிறவிகள் முடிந்து போயிற்று.
=============================
# ஏன் ஈசனின் திருவிளையாடல்கள் மூலம் நமக்கு கஷ்டங்கள்?
=============================
# நாம் எதற்காக இவ் பூலோகத்தில் வந்தோம் என்று புரிய வைக்கவே………
=============================
இதுவும் அப்பனே, ஈசனுடைய லீலையே.
இதனால்தான், அப்பனே, பின் ஈசன் ஒருவனுக்கொருவனுக்கு கஷ்டங்கள் கொடுத்து, அப்பனே, நிச்சயம், பின் என்னென்ன??, பின் எதற்காக வந்தாய்??? என்பதை தான், அப்பனே, பின் தன் வேலையை உணர்த்தவே, அப்பனே, கஷ்டங்கள் பலவற்றில் கூட, அப்பனே.
இதனால், இவ் உண்ணாமுனி எதை என்று புரிய, அப்பனே, பின் புரியாமல் இதனால் கோபமுற்றான் அப்பனே.
ஆனாலும், இதை அறிவித்து, பின் எங்கு செல்லலாம்??, எதை என்று அறிய,
===============================
# உண்ணா முனி ஞானி - இறைவனை காண முடியவில்லை என்ற வெறுப்பில் , இறைவன் இல்லை என்றே முடிவெடுத்து விட்டார்.
===============================
ஆனாலும் இறைவன் இல்லை என்றே......ஆனாலும் முடிவெடுத்து விட்டான்.
இவர்கள் எவை, என்று அறிய இவர்கள் வருவார்களா?????, என்ன!!!!!????,
இவர்களை இவ்வாறு, பின் அழைத்திட்டு!!!!!, (நமச்சிவாயா நமச்சிவாயா என்று) அழைத்திட்டு!!!.... எவ்வாறு என்பதை எல்லாம், அப்பனே.
ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட. சரி, மீண்டும்,!!!.......
=============================
(திருவண்ணாமலையில் இருந்து எங்கேயாவது செல்லலாம் என்று)
=============================
ஆனாலும், சத்தம் கேட்டது இவனுக்கு காதில் தன்னில் கூட.
=======================
# (இறைவனின் அசரீரி)
=======================
நிச்சயம், பின் வருவேன்!!, வருவேன்!! என்று.
ஆனாலும், பின் எதை என்று அறிய அறிய!!.... யார்??? இட்டது சத்தம் என்பதை எல்லாம் இதை உணர்ந்தான்.
பின், அதாவது, பின் காதில் தன்னில் கூட.
பின் சத்தம் யார் இட்டது??, யார் இட்டது??? என்றெல்லாம்.
ஆனாலும், பின் சுற்றினான்.
சரி!!!...., இதற்கு தீர்வுகள் கிடைக்கும்.
அதாவது, ஒரு இடத்தில் அமர்ந்தால், நிச்சயம், பின் இப்படியே, பின் அதாவது, பின் அமர்ந்து விட வேண்டியதுதான்.
அதாவது, நிச்சயம் எங்கேயாவது செல்வோம் என்று மனம், பின் ஏங்கியது.
=============================
# நடந்து நடந்தே, பல ஆலயங்களுக்கு சென்ற உண்ணா முனி ஞானி
=============================
எங்கெல்லாம், பின் எதை என்று அறிய அறிய ஆலயங்கள் பல வழியில் கூட எங்கெல்லாம் பல சக்திகள் இருக்கின்றதோ அங்கெல்லாம் தேடி அலைந்தான்!!!
பல வகையிலும் கூட நடந்து நடந்தே......!!!!
பல ஆண்டுகள் ஆயிற்று!!.....
ஆனாலும் இறைவனை காணவில்லை அறிந்து கூட!!!
ஆனாலும் பின் திருத்தலத்திற்கு செல்வான்.
அங்கு உறங்குவான் அவ்வளவுதான் இவனுடைய வேலை!!!
எதை என்று புரிய இதனால் பல வழியில் கூட பல பல வழிகளில் கூட எதை என்று தெரியாமல் கூட அலைந்தான்!!! திரிந்தான்!!
ஆனாலும் பின் அங்கே உறங்குவான்!!!
ஆனாலும் வருவோர்கள் பின் போவோர்கள் பின் இறைவனை வணங்குவார்கள்!!!
ஆனாலும் இவன் வணங்க எதை என்று புரிய இறைவனை வணங்குவதே இல்லை !!!
ஆனால் பார்ப்பான்!! முறைத்து பார்ப்பான்!!!
பின் ஆனாலும் சிலரை, அதாவது புண்ணியங்களை, பின் புண்ணியம் செய்தவர்கள் இவனுக்கு நன்றாக தெரியும்!!!
====================================
(புண்ணிய ஆத்மாக்களை அறியும் சக்தி இவரிடம் இருந்தது)
====================================
உண்ணா முனி :- வா!!! இங்கே!!!.... எதற்காக? வந்திருக்கின்றாய்??? என்று!!!
புண்ணிய அடியவர்கள்:- இறைவனை காண!!!! ( என்று பதில் )
உண்ணா முனி :- இறைவனிடம் என்ன கேட்கப் போகின்றாய் என்று?????
புண்ணிய அடியவர்கள்:- எதுவும் கேட்கப் போவதில்லை என்றெல்லாம்!!!
புண்ணிய ஆத்மாக்களை மட்டும் அழைத்து…. இதனால் இறைவனின் ஆசி உனக்கு கிடைக்கப்பெற்று இன்னும் பல சாதனைகளை படைப்பாய் என்பவை எல்லாம் சொல்லி அனுப்புவான்.
=============================
(பாவம் செய்துவிட்டு வருபவர்களை பார்த்து அதாவது பாவ மனிதர்களை)
=============================
அவை மட்டுமில்லாமல் பாவவோர்களைப் பார்த்து!!!
பின் அதாவது இதோ!! இங்கே வா!!!
என்று எதை புரிந்து பின் அதாவது பின் திட்டுவான்!!!
பின் ஏது என்று அறிய!!!
============================
# ஒரு உயர் ஞானியானவர் மனிதர்களை திட்டினால் பாவம் போகும்.
============================
# எந்த ஒரு மனிதனும் ஒரு ஞானியை திட்டினால் பாவம் வரும்.
============================
நிச்சயம் அதாவது எவை என்று புரிய பின் இறைவனை உணர்ந்து உணர்ந்து என்றெல்லாம் நிச்சயம் பல வழியில் திட்டுவான்!!
அவர்களும் இவனை திட்டிட்டு செல்வார்கள்!!
இதுபோலத்தானப்பா!!!
=============================
# பாவம் இருந்தால் , நல்ல ஆன்மாக்களும் தீயவையாக தெரியும்\
=============================
பாவம் இருந்தால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட நல்ல ஆன்மாக்களும் பின் தீயவையாக தெரியும் என்பேன் அப்பனே!!
அதனால்தான் அப்பனே புண்ணியங்கள் வேண்டும் வேண்டும் என்றெல்லாம் பல மனிதர்களுக்கு உரைத்துக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!
===========================
# புண்ணியங்கள் பெற்றுவிட்டால் உங்கள் சக்திகள் அதிகரித்து….
===========================
அப்புண்ணியங்கள் பெற்றுவிட்டால் அப்பனே பின் உண்மை யார்???? பொய் யார்???? என்பதை எல்லாம் சாதாரணமாகவே தெரிந்து கொள்வீர்கள் என்பேன் அப்பனே!!!
================================
# கலியுகத்தில் சித்தர்கள் திருத்தலத்திற்கு வருகை
================================
அதேபோலத்தான் இக்கலியுகத்தில் சித்தர்கள் யாங்கள் அங்கங்கு வருவோம் என்போம் அப்பனே!!
அவ்வாறு நிச்சயம் தன்னில் கூட அப்பனே திருத்தலத்திற்கு எல்லாம் வருவோம் என்போம் அப்பனே!!!
மக்களை பார்ப்போம் என்போம் அப்பனே!!!
================================
# உங்கள் மனம் நல் மனதாக உயர்ந்த குணமாக இருந்தால்….
# சித்தர்களே உங்களுடன் பேசுவார்கள்.
================================
ஆனாலும் நல் மனதாக உயர்ந்த குணமாக அப்பனே இருந்தால் நிச்சயம் அப்பனே பின் உங்களுடன் யாங்களே வந்து பேசுவோம் என்போம் அப்பனே!!!
=================================
# யோசித்துப் பாருங்கள்… ஆலயங்களில் உங்களிடமும் சித்தர்கள் பேசியிருப்பார்கள்…..
=================================
இது பல ஆட்களுக்கு அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பல மனிதர்களுக்கு….. அப்பனே யாங்கள் பேசியுள்ளதையும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் உணர வைத்துள்ளோம் அப்பனே!!
நன்றாகவே!!!
இதனால் அப்பனே வழிகள் பல பல பின் நிச்சயம் தன்னில் கூட.
================================
# உண்ணா முனி ஞானி - இறைவனை நினைக்காமல் பல ஆலயங்களுக்கு சென்றார்
===============================
அப்பனே ஏதாவது அப்பனே இவ்வாறு தான் அப்பனே எதை என்று அறிவித்து தெரியாமல் அப்பனே பல வழியில் கூட அப்பனே பின் அவ்வாறு அதாவது அவ் உண்ணா(முனி) அப்பனே பின் அதாவது அப்பனே அவ் முனியானவன் அப்பனே பின் அதாவது பின் எதை என்று தெரிவித்து அப்பனே இன்னும் சென்றான் அப்பனே!!!
ஆனாலும் அப்பனே அங்கங்கே அப்பனே பின் அது நீராடுவது. இறைவனை எதை என்று அப்பனே ஆனாலும் நினைப்பதே இல்லை என்பேன் அப்பனே!!!
ஆனாலும் எதை என்று புரிய அப்பனே ஆனாலும் கடைசியில் அப்பனே பின் அதாவது காசிக்கு சென்று அப்பனே பல வழியில் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்படியே எதை என்று அப்பனே பல ஆலயங்களுக்கு அப்பனே!!!
==================================
# முன்பு எல்லாம் உடம்பை இரும்பாக்கி, இளமையாக 100 ஆண்டுகள் வாழ்ந்தனர்.
==================================
ஆனாலும் அப்பொழுதெல்லாம் அப்பனே இப்பொழுதுதான் 70 ஆண்டுகள் 80 ஆண்டுகள் அப்பனே!!
ஆனாலும் இவ்வளவு ஆண்டுகள் அப்பனே ஆகிவிட்டது அதாவது வயதாகிவிட்டது என்று இப்போது எண்ணுகிறார்கள் என்பேன் அப்பனே!!!
ஆனாலும் அப்பொழுதெல்லாம் அப்பனே பின் உடம்பை இரும்பாக்கி அப்பனே நிச்சயம் தன்னில் கூட பல அப்பனே 100 ஆண்டுகள் வாழ்ந்தனர் என்பேன் அப்பனே இளமையாக என்பேன் அப்பனே!!!
=============================
# அனைத்திற்கும் மனது தான் காரணம்
=============================
ஆனாலும் அப்பனே மனது தான் காரணம் அனைத்திற்கும் என்பேன் அப்பனே!!
==============================
# உங்கள் வாழ்க்கை ரகசியங்கள் - 1
==============================
# ஏன் வயதாகிக் கொண்டே போகின்றது ?
==============================
தீய அழுக்குகள் அதிகமாக இருந்தால் வயதாகிக் கொண்டே போகும்!!!
நல் எண்ணங்கள் அப்பனே அதிகமாக இருந்தால் அப்பனே வயது குறைந்து கொண்டே வரும் என்பேன் அப்பனே!!!
இதுதான் வாழ்க்கை என்பேன் அப்பனே!!!
==============================
# உங்கள் வாழ்க்கை ரகசியங்கள் - 2
==============================
# ஏன் நோய்கள் வருகின்றது ?
==============================
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவை மட்டுமில்லாமல் அப்பனே தீய எண்ணங்கள் அதிகமாக பின் கொண்டிருந்தால் நோய்கள் வந்து கொண்டே இருக்கும் அப்பனே !!!
நல் எண்ணங்கள் அப்பனே அதிகமாக கொண்டிருந்தால் அப்பனே பின் நோய்களே வளராதப்பா!!!... குறைந்து கொண்டே இருக்கும்..
அப்பனே பின் அதாவது நிச்சயம் உடம்பில் அப்பனே பின் ஒவ்வொருவருக்கும் நோய் வரும் என்று சொல்லிவிட்டேன்!!!
==============================
# உங்கள் வாழ்க்கை ரகசியங்கள் -3
==============================
# நல் எண்ணங்கள் - நிச்சயம் அதுதான் மருத்துவம்
==============================
ஆனாலும் நல் எண்ணங்களை அப்பனே வளர்த்துக் கொண்டால் அதுதான் மருத்துவம் என்பேன் அப்பனே!! நிச்சயம் தன்னில் கூட!!!
நோய்கள் குறைந்து கொண்டே வரும் என்பேன் அப்பனே!!!
அப்படி நல் எண்ணங்களை அப்பனே பின் வளர்த்துக் கொண்டால் யாங்களே வந்து ஏதோ ஒரு மூலமாக அப்பனே நிச்சயம் உண்மை நிலை உணர வைத்து அப்பனே பின் அனைத்தும் செய்வோம் அப்பனே!!
நோய்களும் எவை என்று அண்டாதப்பா!!!
================================
# உண்ணா முனி ஞானி, இறைவனை தேடி, தேடி பல இடங்களிலும் அலைந்து திரிந்தார்.
================================
இதனால் அப்பனே பல வழியில் கூட அப்பனே அவ் உண்ணா அப்பனே முனி பல வழியில் எங்கெங்கோ!?? அலைந்தான்!! திரிந்தான்!!! அப்பனே!!
ஆனாலும் அப்பனே இறைவனை எதை என்று அறிய அப்பனே எப்படி? ஏது என்று கூட காதில் சத்தம் ??யார்???
கேட்டது எவை என்று புரிய நிச்சயம் அதாவது காதில் பின் யார்??? பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அதாவது கேட்டானல்லவா!!!
பின் காதில் யார்?? பின் பேசினார்கள்??? என்பதை எல்லாம் அப்பனே சிந்தித்து அப்பனே இதனால் பல வழியில் கூட அப்பனே ஞானத்தை பெற அப்பனே எவ் எவ் ஆலயங்கள் எல்லாம் அப்பனே சென்று கொண்டே!!!!
=============================
# உண்ணா முனி ஞானியை அம்மையும் , அப்பனும் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்
=============================
ஆனாலும் ஈசன் அப்பனே இவந்தனை பார்த்துக் கொண்டே!!!
பார்வதி தேவியும் பார்த்துக் கொண்டே!!! அப்பனே பல வழியில் கூட!!!
அப்பனே இதனால் அப்பனே மனம் செம்மையாக வைத்துக் கொண்டான்.
அப்பனே குணம் அப்பனே பின் பல வழியில் கூட அப்பனே பின் குணம் அப்பனே!!!
இவ்வாறுதான் எதை என்று அப்பனே மனிதனை (பல மனிதர்களை சந்தித்து) நிச்சயம் தன்னில் கூட அப்பனே பல வழியில் கூட பார்த்தான் அப்பனே!!
================================
# உண்ணா முனி ஞானி இறுதியில் இந்தோனேஷியா வந்தடைந்தார்
================================
# புரா குனுங்க் கவி (Pura Gunung Kawi):-
================================
இதனால் அப்பனே பல வழியில் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட வந்தானப்பா இங்கு!!! (இந்தோனேஷியா)
அப்பனே இங்கு வந்து அப்பனே பல வழியில் கூட அப்பனே ஞானத்தை பெற அப்பனே பின் அதாவது பின் இன்னும் எதை என்று கூற..
================================
# இறைவா !!!!!! இனிமேல் என்னால் முடியாது !!!!!
================================
# இறைவா !!!!!! இனி நீ இங்கே வா !!!!!
================================
அப்பனே ஈசனை நோக்கி என்னால் பின் அதாவது இனிமேலும் பின் முடியாது!!!
இதனால் இங்கே வா!!!!.... எதை என்று புரிய பின் அதாவது நிச்சயம் தன்னில் உண்மையில் பன்மடங்கு எதை என்று கூற உன்னையே நினைத்துக் கொண்டிருந்தேன்!!!
கடைசியிலாவது என்னை பார்க்க ஓடோடி வா!!! என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட!!!!
===========================
# மீண்டும் இறைவனின் அசரீரி வாக்கு
===========================
இதனால் எவை என்று புரிய பின் மறைமுகமாக மீண்டும் சத்தம் கேட்டது!!!!
எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட!!!
இதனால் அதாவது பின் அதாவது பின் நீ என்னென்ன?? ஏது??? என்று அறிந்து பின் என்னை நினைத்து நிச்சயம் தன்னில் கூட இங்கு எவ்வாறெல்லாம் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் உனக்கு பல வித்தைகள் தெரிந்திருக்கும் என்றெல்லாம் அதாவது பின் எவை என்று மேலிருந்தே ஒரு சத்தம்!!! (அசரீரியாக)
==================================
# (யார் அழைத்தது என்று புரியவரும்)
==================================
பல வித்தைகள் உந்தனுக்கு தெரிந்திருக்கும் இவ்வித்தைகள் படி!!!
நிச்சயம் பின் அதாவது பின் யார்??? அழைத்தேன் என்று!!!
நீயும் கூட பல வழியில் கூட!!!
================================
# புரா குனுங்க் கவி (Pura Gunung Kawi)
================================
# இவ்விடத்தில் முன்பு ஒரு காலத்தில் மிக பெரிய மலை இருந்தது
================================
பின் எப்படியாவது பின் எவை என்பதையே…. இன்னும் பெரிய மலை இருந்ததப்பா இங்கு.
அப்பனே இவை மழை வந்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட இன்னும் அப்பனே பின் (வெள்ள பெருக்கில்) அடித்திட்டு பல வகைகளோடும் அப்பனே பின் அதாவது பூகம்பங்கள் ஏற்பட்டு மறைந்து விட்டது என்பேன் அப்பனே!!
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட !!!..
இதனால் அப்பனே அதாவது என்னை நினைத்துக் கொண்டு இருக்கின்றாய் அல்லவா!!!!
யான் எப்படி?? இருக்கின்றேன்?? என்று பல வழியில் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது நீயே உன் மனத்தில் உன் எண்ணத்தில் தகுந்தவாறு பல வழியில் கூட நிச்சயம் தன்னில் ஏற்படுத்து!!!
இவ் மலையே என்று!!!!
================================
# (உண்ணா முனி ஞானி - இவ் மலையையே இறைவனாக எண்ணி!!!!.. மலையில் இறைவன் உருவங்களை செதுக்கினார். இவ் படங்களை இங்கு இணைத்துள்ளோம். மேலும் கூகுளை மேப் லிங்க் மூலம் இவ் இடத்தில் உள்ள குகை சிலைகள் அவற்றை பார்க்கவும். )
================================
புரா குனுங்க் கவி (Pura Gunung Kawi) கூகிள் மேப் லிங்க் :-
https://maps.app.goo.gl/pCs5B9zCQnmt57g89
================================
# எப்படியாவது இங்கு சென்று வாருங்கள்…பலத்த அருள்கள் உண்டாகும் உங்களுக்கு.
=================================
மலையே உனக்காக விட்டுகின்றேன் என்று!!!! (இறைவன் அசரீரி)
இதனால் அங்கங்கு நிச்சயம் தன் மனதில் என்ன ஏற்படுகின்றதோ அதை அப்படியே அப்படியே எவை என்று
இவர்தான் ( இறைவன் என்று ) … அழைத்தான்…
இவர்தான் ( இறைவன் என்று ) அழைத்தான் என்று நிச்சயம் தன்னில் கூட !!!
=================================
# இவ்வாக்கினை படிக்கும் அடியவர்கள் - அவசியம் புரா குனுங்க் கவி (Pura Gunung Kawi) கூகிள் மேப் லிங்க் மூலம் இவ் செதுக்கிய மலைகளை பாருங்கள். அதுவே புண்ணியம் தரும் இவ் வாக்கின் மூலம். அங்கு செல்ல இல்லாவிடிலும் , அவ் மலையை இங்கிருந்தே பாருங்கள்…இறைவன் அருள் பெறுங்கள்…அனைவருக்கும் எடுத்து சொல்லுங்கள்….எப்படியாவது இங்கு சென்று வாருங்கள்…பலத்த அருள்கள் உண்டாகும் உங்களுக்கு.
=================================
அப்பனே பின் அவ்வாறு பின் அதாவது மலையை செதுக்கினான் பல வழியிலும் கூட அப்பனே!!!
பின் சிறிதுதான் இருக்கின்றது என்பேன் அப்பனே.
=================================
கூகிள் மேப் லிங்க் :-
https://maps.app.goo.gl/pCs5B9zCQnmt57g89
=================================
=================================
எப்படியாவது இங்கு சென்று வாருங்கள்…பலத்த அருள்கள் உண்டாகும் உங்களுக்கு.
=================================
இன்னும் அப்பனே பல வழியிலும் இங்கிருந்து அப்பனே பல மைல் தொலைவிலும் கூட இன்னும் இருக்கின்றதப்பா பல வகையாக இடங்கள் என்பேன் அப்பனே!!!
இதனால் அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே பின் செதுக்கி!! செதுக்கி… அப்பனே பின் எவை என்று அறிய அறிய!!
===============================
# உண்ணா முனி ஞானி - மலையை செதுக்கி பின்னர் இறைவா !!! செதுக்கிவிட்டேன் என்று பலமாக கத்தினார்….
===============================
ஆனாலும் நிச்சயம் அப்பனே பின் அதோ அதாவது மீண்டும் இவன் பலமாக கத்தினான் செதுக்கிவிட்டேன் இதில் என்ன? ஏது? என்று கூட யார்? பேசியது?? என்று!!!
மீண்டும் எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட!!
===============================
# எம்பெருமான் ஈசன், உண்ணா முனி ஞானியின் மனதில் இறங்கினார்.
===============================
அதாவது பின் ஈசன் பின் அதாவது மனதில் இறங்கினான் எவை என்று அறிய!!!
பின் அதாவது உன் மனதிலேயே இருக்கின்றேன் என்று செப்பினான்!!
எதை என்று கூட இவ்வளவு வரைந்து (செதுக்கி ) நிச்சயம் தன்னில் கூட மீண்டும் கோபமுற்றான்!!!
எங்கு? என் மனதில் இருக்கின்றாய்?? என்று!!!
அறிந்தும் எதை என்று கூற மீண்டும்
=============================
# உண்ணா முனி ஞானிக்கு மீண்டும் இறைவனின் அசரீரி வாக்கு.
=============================
வெளியே வருகின்றேன் பின் நிச்சயம் எண்ணத்தில் பார் என்று!!!
நிச்சயம் கண்களை மூடினான் எதை என்று அறிய அறிய கண்களை திறந்தான்!!
==============================
# (இறைவன் உருவம் மனதிலும், கண்களிலும் தோன்றவில்லை)
==============================
# உண்ணா முனி ஞானிக்கு வந்த கோபம்
==============================
எவை என்று ஒன்றுமில்லை!!...
மீண்டும் கோபமாகிவிட்டது பின் அதாவது ஈசனாரே!!!! எதை என்று புரிய!! உன்னுடைய விளையாட்டா????
எவை என்று புரிய பின் எந்தனுக்கு எதுவும் சொந்தமில்லை!! பந்தமில்லை!!!
பின் உற்றார் எவை என்று உறவினர் இன்னும் இன்னும் எதை எதையோ?? பின் எதையுமே கொடுக்கவில்லை.
ஒரு வேளை கூட பின் உணவு கொடுக்கவில்லை.
பின் நீர் கூட கொடுக்கவில்லை!!!!
ஆனாலும் உன்னை காணவே பின் எதை என்று அறிய!!!
============================
# உண்ணா முனி ஞானிக்கு மீண்டும் இறைவனின் அசரீரி வாக்கு.
============================
ஆனாலும் மேலிருந்து சத்தம் !!! (அசரீரியாக)
நிச்சயம் அனுப்பியது யான் தான்!!
எதை என்று புரிய பின்!!
(உண்ணா முனி ஞானி) ஆனாலும் அனுப்பியது நீ சரி!!!
ஆனாலும் இப்படி ஒரு வாழ்க்கையா??? பின் எனக்கு என்றெல்லாம்!!
பின் இவ் உண்ணாமுனியும் கூட !!!
இதனால் நிச்சயம் பின் அதாவது எதை என்று புரிய பின் காட்டுகின்றாயா உன்னை!!! காட்டுகின்றாயா??? இல்லையா????
இல்லை நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது காட்டப் போவதில்லையா??? உன் தரிசனத்தை என்று!!!
============================
# உண்ணா முனி ஞானிக்கு மீண்டும் இறைவனின் அசரீரி வாக்கு.
============================
(இறைவன்) நிச்சயம் அதை இவ்வளவு கஷ்டங்கள் பட்டுவிட்டாய் அல்லவா!!!
நிச்சயம் எப்படி?? நீ காண்பது என்று நீ யோசித்தால் சரியாக யானே உனக்கும் எவை என்று புரிய எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட!!
============================
# சரியாக யோசித்து விட்டால் தரிசனம்….
============================
அதனால் நிச்சயம் எவை என்று புரிய அதாவது நிச்சயம் கண்களை மூடு என்றெல்லாம்!!! (அசரீரியாக)
நிச்சயம் எவை என்று அறிய நிச்சயம் எதை என்று கூற !!!
திரும்பவும் பார்!!!! என்று ஒரு சத்தம்!!!கேட்டது!!!
பார்த்தான்!!!
============================
# உண்ணா முனி ஞானி கண்களால் காணுவதெல்லாம் ஈசனாகவே தெரிந்தது……
============================
பின் எதை என்று கூட பின் இருக்கும் இடமெல்லாம் நிச்சயம் பின் அங்கும் இங்கும் ஈசனாகவே!!!!!!!! பின் எவை என்று கூட!!!
============================
# உண்ணா முனி - பல தோற்றங்களில் ஈசன் தரிசனம் கண்டு ஆனந்தம்.
============================
ஈசன் பல வடிவங்களில் தோன்றினான்!!!!!
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட இதில் யார் இது???? இதில் ஈசன் யார்?? இது ஈசன் என்றும் சந்தேகம் வந்தது..
============================
# ஏகன் அநேகனாக தரிசனம்
============================
# “ஏகன் அனேகன் இறைவன் அடி வாழ்க”
============================
இதனால் நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூற பின் அனைத்தும் யானாகவே இருக்கின்றேன் என்று ஈசன்!!!!
எதை என்று புரிய பின் எவை என்று கூற நிச்சயம் தன்னில் கூட நீ எவ்வாறு நினைக்கின்றாயோ? அதுதான் யான்!!!
============================
# இறைவன் திருவிளையாடல் நிறைவு பெரும் வேளையில்
============================
# “பல்லாயிரம் வடிவங்களை காட்டினான் ஈசன்!!!!”
============================
இதனால் நிச்சயம் பல பல வழியில் கூட எங்கெங்கு? ஏது என்று அறிய பின் எதை என்றும் எவ்வாறு நினைத்தாயோ!??? அண்ணாமலையிலும் நிச்சயம் தன்னில் அவ்வாறெல்லாம் இப்பொழுது காட்டுகின்றேன் நீ எவ்வாறெல்லாம் நினைத்தாய்?? தவங்கள் செய்கின்ற பொழுது பின் ஈசன் இப்படி இருப்பானா!??? அப்படி இருப்பானா!??? என்றெல்லாம் நினைத்தாய் அல்லவா!!!!!!
அத்தனையும் இவை எவை என்று கூற!!!
இதனால் பல்லாயிரம் பின் வடிவங்களை கூட காட்டினான் ஈசன்!!!!
இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் பின் எவை என்று கூற பின் அதாவது வழிபாடு ஒரு வழிபாடு மற்றொன்று அப்பனே பின் நீங்கள் அறிவீர்கள் பின் அப்பனே!!!!!
============================
# “ஏகன் அனேகன் இறைவன் அடி வாழ்க”
============================
============================
# (பல்வேறு மதங்கள் பல்வேறு வழிபாட்டு வழிமுறைகள் பல்வேறு மத சடங்குகள் எப்படி இருந்தாலும், இறைவனை எந்த ரூபத்தில் மனதில் நினைத்தாலும், இறைவனுக்கு அது போய் சார்கின்றது. இறைவன் ஒருவனே!!! …அனேகனும் ஏகனே !!!!!)
============================
============================
# இறைவனை நாம் எந்த உருவாக்கத்தில் நினைத்து வணங்குகின்றோமோ அதே உருவத்தில் தரிசனம் கிட்டும் ஒரு நாள்.
============================
இதனால் அப்பனே இறைவனை எவ் மனதில் நீங்கள் நினைத்து பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட நினைக்கின்றீர்களோ!?? அதை அப்படியே நிச்சயம் ஒரு நாள் அப்பனே உனக்கு காண்பிப்பான் அப்பனே அனைத்தும் கொடுப்பான் அப்பனே
============================
# உண்ணா முனி ஞானி இறைவனிடம் கேட்ட வரம்…..
============================
இதனால் அப்பனே பல வழியிலும் கூட அப்பனே பின் இங்கேயே அப்பனே நிச்சயம் தன்னில் கூட அதாவது மறைமுகமாக நீ இங்கேயே இருக்க வேண்டும் நிச்சயம் தன்னில் கூட!!!
பின் வருவோருக்கெல்லாம் ஏனென்றால் பின் நிச்சயம் தன்னில் கூட…. உன்னை தேடி அலைய முடியாது.
அதனால் நிச்சயம் எப்படியாவது நிச்சயம் தன்னில் கூட பல குறைகளை வைத்திருப்பவர்களை எல்லாம் யான் அழைத்து வருகின்றேன்!!!
இதே போலத்தான் மறைவாக இருந்து நீ அனைவருக்கும் காட்சி அளிக்க வேண்டும் என்று சத்தியம் செய்து கொடு!!! என்று இவ் உண்ணாமணியும் கூட!!!
============================
# புரா குனுங்க் கவி (Pura Gunung Kawi) மற்றும் இதனை சுற்றி இருக்கும் மலை சிற்பங்கள் - இவ் தரிசனங்களை கூகுளை மேப் லிங்க் மூலம் இவ் வாக்கினை படிக்கும் போதே அவ் தரிசனங்களை பெறுங்கள்…. எப்படியாவது இங்கு சென்று வாருங்கள்…பலத்த அருள்கள் உண்டாகும் உங்களுக்கு.
============================
============================
கூகிள் மேப் லிங்க் :-
https://maps.app.goo.gl/pCs5B9zCQnmt57g89
============================
============================
# உண்ணாமுனி ஞானிக்கு ஈசனார் செய்த சத்தியம் :-
============================
“தெரியாமல் இருந்து இங்கு வருவோருக்கெல்லாம் நிச்சயம் ஆசிகள் தந்து, நிச்சயம் பின் வரும் காலத்தில் அனைத்தும் தருவேன்.”
============================
ஈசனும்!!!.....
இதேபோல் நிச்சயம் யான் எதை என்று அறிய பின் இங்கு தெரியாமல் இருந்து வருவோருக்கெல்லாம் நிச்சயம் ஆசிகள் தந்து நிச்சயம் பின் வரும் காலத்தில் அனைத்தும் தருவேன் என்றெல்லாம் பின் சத்தியம் செய்து கொடுத்துவிட்டான் ஈசன்!!!
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
============================
# ஆதி ஈசன் இறைவன் சத்தியம் செய்து கொடுத்தினால், புரா குனுங்க் கவி (Pura Gunung Kawi) இவ்விடம் சிறப்பு மிக்கது
============================
இதனால்தான் அப்பனே இவ்விடம் அப்பனே சிறப்பு என்பேன் அப்பனே!!!
ஆனாலும் பல பேருக்கு தெரியாதப்பா!!!
============================
# புரா குனுங்க் கவி (Pura Gunung Kawi)
============================
# யாரால் இங்கு வர முடியும் ?
============================
ஈசன் மீது அப்பனே பின் பல வழியில் கூட நம்பிக்கை கொண்டு அப்பனே பல வழியிலும் கூட பின் கஷ்டங்கள் படுத்தி அப்பனே அங்கும் இங்கும் அலைந்தவன் உண்மை எதை என்று தெரிந்தவன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட வருவான் என்பேன் அப்பனே!! ஆசிகளும் பெறுவான் என்பேன் அப்பனே!!!!
============================
# புரா குனுங்க் கவி (Pura Gunung Kawi) - வருபவர்கள் ஈசனுடைய ஆசிகள் பெற்று, உயர்ந்த லாபத்தையும் பெற்று, உயர்ந்த இடத்தையும் பிடிப்பார்கள்.
============================
“““““““ ஈசனுடைய ஆசிகள் பெற்று அப்பனே உயர்ந்த லாபத்தையும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட உயர்ந்த அப்பனே பின் நிச்சயம் இடத்தையும் பிடிப்பான் என்பேன் அப்பனே. ””””””””
============================
# அன்பு குருநாதரின் ஆசிகள்
============================
ஆசிகள்.
ஆசிகள்.
============================
# உண்ணாமுனி ஞானியின் ஆசிகள்
============================
உண்ணாமுனி, உண்ணா அப்பனே பின் முனியின் கூட!! (ஆசிகளும் கூட)
============================
# உண்ணா முனி ஞானி இங்கே புரா குனுங்க் கவி (Pura Gunung Kawi) இயங்கிக் கொண்டே இருக்கின்றார்.
============================
அப்பனே இவ்வாறுத்தான் அப்பனே இங்கே இயங்கிக் கொண்டே இருக்கின்றான் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!!
============================
# புரா குனுங்க் கவி (Pura Gunung Kawi) இங்கிருந்து பறந்து , பௌர்ணமி அமாவாசை திதியில் அண்ணாமலை வந்து, அனைவருக்கும் ஆசிகள் தந்து கொண்டே இருக்கின்றார். திருஅண்ணாமலை செல்லும் அடியவர்கள் பயன்படுத்தி கொள்க…….
============================
அப்பனே வருவான் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட… பறந்து அப்பனே பின் அதாவது பௌர்ணமி அமாவாசை திதியில் கூட அப்பனே!! அண்ணாமலை வந்து, அனைவருக்கும் ஆசிகள் தந்து கொண்டே இருக்கின்றான் என்பேன் அப்பனே!!!
============================
# ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு
============================
அதனால்தான் அப்பனே ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு என்பேன் அப்பனே !!
============================
# அன்பு குருநாதரின் ஆசிகள்
============================
கவலை இல்லை… ஆசிகள் ஆசிகள்…
எம்முடைய ஆசிகள் கடை நாளும் உண்டு !!!
ஆசிகள்!!
======================
# இறுதியில் ஆதி ஈசனாரின் ஆசிகள்.
======================
குருநாதர் :- ஈசனின் ஆசிகள்!!
======================
# வாக்கு முடிந்து அடியவர் கேட்ட கேள்வி
======================
அடியவர் கேள்வி :- ( ஈசனின் ஆசிகள் குறித்து கேட்டபோது….)
(இவ் வாக்கின் இறுதியில் ஆதி ஈசனார் ஆசிகள் என்று உரைத்ததை எடுத்துரைத்தார்கள்.)
குருநாதர் :- ஈசன் அப்பனே எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட சொல்லிவிட்டேன் அப்பனே எவை என்று அறிய அறிய.
அடியவர் :- நமச்சிவாயா !!!!!
சுவடி ஊதும் மைந்தன் :- சொல்லிவிட்டேன் என்று சொல்கின்றார்.
அடியவர் :- நமச்சிவாயா !!!!!
அடியவர் :- ( புரா குனுங்க் கவி (Pura Gunung Kawi) மலையை குடைந்து சிலைகள் ) இதெல்லாம் அவர் செஞ்சதுங்க ஐயா …இது எல்லாம் உண்ணா முனி அய்யா செய்தது அய்யா…குருநாதா !!!! அப்பா !!!! எவ்வளவு பெரிய ஸ்தலம்…
=====================================
===================================
# சுவடி ஓதும் இடத்தில், ஒரு அடியவர் மூலம் வந்த நேரடி குறிப்புகள்
===================================
இது பாலி தீவின் ஆன்மீக அதிசயங்களில் ஒன்று.
உண்ணாமுனி உருவாக்கிய குடவரை அதிசயம்:
குருநாதரின் வாக்குப்படி, இப்பகுதி உண்ணாமுனி என்னும் மகா முனிவர் தவம் இயற்றிய இடமாகக் கருதப்படுகிறது.. பாறைகளைக் குடைந்து பிரம்மாண்டமான சிற்பங்களாக மாற்றிய இந்தத் தலம் முனிவரின் தவ வலிமைக்குப் சான்றாகும். பள்ளத்தாக்கின் இருபுறமும் 7 மீட்டர் உயரத்தில் செதுக்கப்பட்டுள்ள 10 குடவரைச் சிற்பங்கள் (Candis) காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும்.
ஈசனின் மறைமுக ஆசி:
முனிவர் உண்ணாமுனியின் வேண்டுதலுக்கு இணங்கி, சிவபெருமான் இத்தலத்தில் சூட்சுமமாக இக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தனது ஆசீர்வாதங்களை வாரி வழங்குகிறார். பள்ளத்தாக்கின் அமைதியும், ஓடும் நதியின் ஓசையும் ஈசனின் அருளாசி அங்கே நிறைந்திருப்பதை உணரச் செய்யும்.
சிறப்பம்சங்கள்:
* இயற்கை சூழல்: அடர்ந்த மரங்கள் மற்றும் நெல் வயல்களுக்கு இடையே உள்ள 300-க்கும் மேற்பட்ட படிக்கட்டுகளை இறங்கிச் சென்றால் தான் இந்த அருட்சன்னதியை அடைய முடியும்.
* தியான குகைகள்: முனிவர்கள் தவம் செய்வதற்காகப் பாறைகளில் குடையப்பட்ட சிறிய குகைகள் இன்றும் இங்கே உள்ளன.
இது வழிபாட்டுத்தலம் மட்டுமே
============================
# புரா குனுங்க் கவி (Pura Gunung Kawi)
ஆலயம் பற்றிய விபரங்கள் :-
============================
கூகிள் மேப் லிங்க் :-
https://maps.app.goo.gl/pCs5B9zCQnmt57g89
============================
Address :- Pura Gunung Kawi, Jl. Kusuma Yudha, Sebatu, Kec. Tegallalang, Kabupaten Gianyar, Bali 80561, Indonesia
============================
குணுங் கவி கோயில், குணுங் கவி குன்றின் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது, இது பாலியின் டம்பக்சிரிங் கிராமத்தில் அமைந்துள்ள 11 ஆம் நூற்றாண்டின் ஒரு மயக்கும் கோயில் மற்றும் இறுதிச் சடங்கு வளாகமாகும். இந்த பாதுகாக்கப்பட்ட தொல்பொருள் தளம் பக்கெரிசன் ஆற்றின் இரு கரைகளிலும் பரவியுள்ளது, பாறை பாறையில் செதுக்கப்பட்ட அதன் தனித்துவமான இருப்பிடத்தால் பார்வையாளர்களை ஈர்க்கிறது.இது மன்னர் உதயணனின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டு அனக் வுங்சுவின் ஆட்சி வரை தொடர்ந்தது, இது பாலியின் வர்மதேவா வம்சத்திற்குள் பெரும் வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
இந்தக் கோயிலில் குறிப்பிடத்தக்க 315 பாறைப் படிகள் உள்ளன, அவை கல் சுவர்களுடன் இறங்குகின்றன.இந்தக் கோயிலில் குறிப்பிடத்தக்க 315 பாறைப் படிகள் உள்ளன, அவை கல் சுவர்களுடன் இறங்குகின்றன, இது பார்வையாளர்களை பாறை முகத்தை அலங்கரிக்கும் அதன் ஈர்க்கக்கூடிய புடைப்புகளுக்கு இட்டுச் செல்கிறது. வந்தவுடன், இரண்டு தனித்துவமான கோயில் குழுக்கள் காத்திருக்கின்றன. ஆற்றின் மேற்கே அமைந்துள்ள முதல் குழுவில் நான்கு சரணாலயங்கள், ஒரு நீரூற்று மற்றும் ஒரு குளியல் குளம் ஆகியவை உள்ளன,
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 14.03.2026 அன்று இந்தோனேசியாவின் அழகிய தீவான பாலியில் உரைத்த வாக்குகள் தொடரும் …….)
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.