“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Thursday, August 26, 2021

சித்தர்கள் ஆட்சி - x20 - அன்புடன் அகத்திய மாமுனிவர் - ராஜராஜ சோழன், பஞ்ச பாண்டவர்கள் கர்மாவை நீக்கிய மகத்தான ஆலயம்!

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும். இறைவா, எங்களை நன்றாக படைத்தாய்! அனைத்தையும் நன்றாக கொடுத்திருக்கின்றாயே! இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!! 


அன்பு அன்னை லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகள் போற்றி! போற்றி!! போற்றி!!!

ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர்

ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மை 

24/8/2021 அன்று ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம் பற்றிய குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு.

வாக்குரைத்த ஸ்தலம். ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம் . பள்ளசூளகரை. மல்லாபுரம், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

google map link :-

===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================

ஆதி சித்தனை மனதில் தொழுது உரைக்கின்றேன் அகத்தியன்!

===========================
# ஏன் ராஜராஜ சோழன் முதலில் தோல்வியுற்றார் ? பயந்து ஒளிந்து, தவத்தை மேற்கொண்டார்?
===========================

நல் முறையாக இவ்வாலயத்தில் பலப்பல சித்துக்கள் செய்தனர் முன் ஜென்மமதிலே முன் ஜென்மம் அதில் சித்திக்கள் செய்யும்பொழுது, பின் ராஜராஜ சோழன் பின் பின் ராஜாங்கத்தை ஆள நினைக்கும் பொழுது தோல்வியுற்றான் என்பேன். 

ஆனாலும் அவன்தனை(ராஜ ராஜ சோழன்) கொல்ல மக்கள் பலப்பல வழிகளில் இருந்தார்கள் என்பேன். 

ஆனாலும் அதனைப் பின் நினைக்காமல் அங்கிருந்து இங்கு ஓடோடி வந்தான். 

ஆனாலும் இங்கு வந்து தவம் மேற்கொண்டான் என்பேன். 

மேற்கொள்ள மேற்கொள்ள பின் அவன்தனக்கு சக்திகளும் கிடைத்தது என்பேன்.

கிடைத்தது என்பேன். 

அதனால் மென்மேலும் மேலும் உயர்கின்ற அளவிற்கு எவ்வளவு உயரங்கள் உயர வேண்டுமோ... பின் நல் முறைகள் ஆகவே பின் பயந்து ஒளிந்து, தவத்தை மேற்கொண்டான் ராஜராஜ சோழன்.

ஆனாலும் நல் முறைகளாக இறைவனே நேரடியாக அவன்தனக்கு காட்சி தந்த இடம் இவ்விடம் .

ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம் . பள்ளசூளகரை. மல்லாபுரம், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

ஆனாலும் இவை என்று யாருக்கும் தெரியாத சூட்சுமத்தை இப்பொழுது செப்புகின்றேன்.

===========================
# கருவூரார் சித்தர் வலம் வரும் ஆலயம்.
===========================

இங்கு ராஜராஜசோழனின் பின் நல் முறைகளாகவே பின் கருவூராரும் வந்து இங்கு நல் முறைகள் ஆகவே வாழ்ந்து வந்தான் என்பேன்.

பலகோடி நூற்றாண்டுகளில் எவ்வாறு என்பதையும் மெய்சிலிர்த்து நல் முறையாக நல் முறைகள் ஆகவே பலருக்கும் தெரியாத விஷயம் இங்கே இப்பொழுதும் கூட கருவூராரும் வலம் வந்து தான்     கொண்டிருக்கின்றான்.

ஆனாலும் இதைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை என்பேன். 

இத்தலத்தை பற்றியும் தெரியாமல் போனது . 

ஆனாலும் பலப்பல யுகங்களில் வாழ்ந்த பெரிய பெரிய அரசர்களும் இங்கு வந்து வழிபட்டு சென்றிருக்கின்றனர் என்பேன்.

நல் முறைகளாக பல சித்தர்களும்   ரிஷிமார்களும் இங்கு வந்து நல் முறைகள் ஆகவே தங்கி பலபல வித்தைகளும் இப்பொழுது கூட பின் எவ்வாறு நலன்கள் ஏற்பட இப்பூமி ஒரு மலைப்பிரதேச பூமி என்பேன்.

நல் முறைகள் ஆகவே இப்பொழுதும் இதனடியில் பலப்பல உண்மைகள் தெரிவதற்கும் எவ்வாறு என்பதை உணர்ந்து பல பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல் பாம்புகளும் உலா வந்து கொண்டுதான் இருக்கின்றது.

இதனால் சக்தி வாய்ந்த இத்திருத்தலத்தை  யாருக்கும் தெரியாமல் போனது.

===========================
# நீங்கள் நினைத்ததை எளிதில் நிறைவேற்றிக் கொள்ளும் ஆலயம்.
===========================

இங்கு வந்து அமர்ந்து தியானங்கள் செய்துவிட்டால் நினைத்ததை எளிதில் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பேன்.

நல் முறைகள் ஆகவே இங்கு அமர்ந்து நல் முறைகள் ஆகவே தியானங்கள் செய்ய..... 

இறைவன் தோன்றி முன்னாளில் எவ்வாறு என்பதை நினைக்கும் பொழுது.... 

பின்பும் இப்பொழுது பின் தஞ்சை கோயில் திருத்தலத்தைப் பற்றி உண்மைகளாக எடுத்துரைக்க என்பதையும் கூட.... 

===========================
# ராஜராஜ சோழன் கர்மாவை நீக்கிய மகத்தான ஆலயம்!
===========================

இங்கு வந்து சரணடைந்து கர்மாவை நீக்கி பின் ராஜராஜ சோழன் தஞ்சை திருக்கோயிலை கட்ட ஆரம்பித்தான் என்பேன்.

நல் முறைகள் ஆகவே இங்கு வந்து வழிபட்டு செல்வோர் அப்பனே சிறிது சிறிதாக கர்மத்தை போக்கிக் கொள்வார்கள் என்பேன்.

அனைத்து சித்தர்களின் ஆசிகள்  கிடைக்கும் என்பேன்.

யானும்(அகத்தியர்) இங்கு வந்த பல முறை தங்கி சென்று இருக்கின்றேன் என்பேன்.

===========================
# திவ்ய முனிசாமி ஜீவசமாதி
===========================

நல் முறைகள் ஆகவே இன்றளவும் கூட பின் நல் முறைகள் ஆகவே கருவூரான் இங்கு இருக்கும் பொழுது அவன்தனக்கு பல சேவைகள் செய்தான். 

பின் திவ்ய முனிசாமி என்பவன். இவன் தன் நல் முறைகள் ஆகவே இவனும் கருவூராரின் பல வித்தைகளை கற்றுக் கொண்டான் என்பேன். 

இதனால் இவனும் ஒரு சீடன் ஆகவே மாறிவிட்டான் என்பேன். (இவரின் ஜீவசமாதி இந்த ஆலயத்தில் அமைந்துள்ளது )

===========================
# பஞ்ச பாண்டவர் ஐவருக்கும் சாபம் நிவர்த்தி அளித்த ஸ்தலம்
===========================

நல் முறைகள் ஆகவே இவையென்றும் கூற பின் எவ்வாறு என்பதையும் கூட ஐவருக்கும் (பஞ்ச பாண்டவர்)  சாபம் நிவர்த்தி ஸ்தலம் என்பேன் இத்தலம்.

இதனால் இத்திருத்தலத்தை பின் நல் முறைகளாக அவர்களும் சிலசில  விஷயங்களில் இதனையும் ஏற்று செய்தனர் என்பேன். 

===========================
# பஞ்ச பாண்டவர் ஐவருக்கும் இவ் ஆலயதத்திற்கும் உள்ள தொடர்பு 
===========================

அதனால்தான் இத்திருத்தலத்தை ஐதீஸ்வரர் என்று அழைக்கப்பட்டது.

நல் முறையாக அவர்களின் கர்மாவும் நீங்கி சென்றுவிட்டார்கள். 

===========================
# இங்கு வருபவர்கள் கர்மா எப்படி நீங்கும்?
===========================

எவ்வாறு என்பது கூட இங்கு வந்து நல் முறைகள் ஆகவே நிச்சயமாய் இங்கு வருபவர்கள் எவ்வாறு என்பதையும் கூட நினைக்கும் பொழுது பல கர்மாக்களை நிச்சயம் இங்கு விலக்கலாம் என்பேன்.

சித்தர்களின் ஆசி பெற்ற பூமி இது. 

ஆனாலும் எவை எவை என்று உண்மைப் பொருள் எவை என்று தெரியாமலே மனிதன் சுற்றி வருகின்றான் என்பேன். 

அதனால்தான் அப்பனே சொல்கின்றேன் இனிமேலும் வரும் காலங்களில் துன்பங்கள் ஏற்படும் பொழுது, பின் அப்பனே மனிதனுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது கூட தெரியாமல் போய்விடும். 

அப்பொழுது இத்திருத்தலத்தை நாடி வந்தால் சில சில உண்மைகள் தென்பட்டு பின் ஆசீர்வாதங்களும் நல் முறைகளாக நல் முறைகள் ஆகவே கொடுக்கப்பட்டு அனைத்தும் நிறைவேறும். 

ராஜராஜ சோழன், பஞ்ச பாண்டவர்கள்  கர்மாவை நீக்கிய மகத்தான ஆலயம்! 

அனைத்து கர்மாக்களும் அழிக்க அழிக்க அழிந்து கொண்டே இருக்கும் என்பேன்.

நல் முறைகள் ஆகவே உயர்ந்த இடத்திற்குச் செல்லலாம். 

நினைத்தது நினைத்தவாறே பெற்றுக்கொள்ளலாம் என்பேன். 

ஆனாலும் தடை தாமதங்கள் சிறிது சிறிது நின்ற பின்தான் செய்வான், நல் முறைகள் ஆகவே இவ் ஈசன்.

எதனால் என்பதையும் கூட சிறிது சிறிதாக முதலில் கர்மத்தை நீக்குவான் என்பேன்.

நீக்கப்பட்டு நல் முறைகள் ஆகவே அனைத்தும் செய்வான் என்பேன்.

இத்திருத்தலத்தை பற்றி நல் முறைகள் ஆகவே பல யுகங்களில் எவ்வாறு என்பதையும் கூட நிர்ணயிக்கும் பொழுது அழிந்து அழிந்து வருகின்றது. கலியுகத்திலும் மீண்டு எழும் என்பேன் இத்திருத்தலம்.

நல் முறைகளாக இதற்கு யான்(அகத்தியர்) நல் முறைகள் ஆகவே முயற்சிப்பேன் என்பேன்.

நல் முறைகளாகவே இன்னும் சமநிலைக்கு இவ்வாறு வரும் திருத்தலங்களை பற்றியும் இன்னும் சொல்கின்றேன்.

அங்கு சென்று பின் வழிபட்டு வர பின் நலன்கள் ஆகும். 

இதுதான் அப்பனே பரிகாரமாக யான் நல் முறைகளாக மக்களுக்கு இன்னும் பல சித்தர்கள் தெரியப்படுத்துவார்கள் என்பேன்.

தெரியாத இடங்கள் பல என்பேன்.

ஆனாலும் அங்கு சென்று சென்று மக்கள் எவ்வாறு என்பதையும் கூட உண்மை நிலை தெரியாமலே வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் பல சூட்சமங்கள் தெரிவித்து அங்கு சென்று கலியுகத்தில் நல் முறையாக கர்மங்களை நீக்கி வாழுவது எப்படி என்பதையும் கூட வருங்காலங்களில் சொல்லிக் கொண்டே வருகின்றேன்.

அப்பனே நல் முறைகளாக இதை ஏற்றுக்கொண்டு அனைவரும் நல் முறைகளாக ஒழுக்க சீலராக வாழுங்கள் என்பேன். 

இவ்வாறு வாழ்ந்து விட்டாலே போதுமானது. 

இறைவன் நம்மிடையே இருந்து கொள்வான் எப்பொழுதும் கூட நல் முறைகள் ஆகவே.

இதனால் தான் யான் நல் முறைகள் ஆகவே யானும் இம்முயற்சியை நிச்சயம் எடுத்து நல் முறைகள் ஆகவே இவ்வாலயம் எவ்வாறு அழிந்தது என்பதை கூட தெரியாமல் போய்விட்டது. 

===========================
# உங்களை யார் ஆலயங்களுக்கு செல்ல விடாமல் தடுப்பது?
===========================

ஆனாலும் கலியுகத்தில் கலியும் முற்றும் எவ்வாறு என்பதையும் கூட, பின் நல்லவைகள் எங்கெங்கு இருக்கின்றதோ அதை அதையெல்லாம் கலியவன் (கலிபுருஷன்) பின் தடுத்துக் கொண்டே இருப்பான். மக்கள் செல்ல அனுமதிக்க மாட்டான். 

அதனால் தான் இன்னும் சில நல் முறைகளாக திருத்தலங்கள் பற்றி அங்காங்கே யான் தெரிவிக்கின்றேன்.

ஆங்காங்கே சென்று கர்மத்தை நீக்கி  நல் முறைகள் ஆகவே நல் முறைகளாக மோட்சத்தை பெற்றுக்கொள்ளுங்கள். 

இதுதானப்பா உண்மை.

மனிதனுக்கு வரவர புத்திகள் வராது. அறிவுகள் அழிந்துபோகும். பின் ஞானப் பாதைக்கு செல்லமுடியாது என்பேன். 

ஏனென்றால் கலியுகத்தில் எவ்வாறு என்பதையும் கூட மேன்மை நிலைகளும் பெற்று திரும்பவும் கீழே இறங்கி விடுவான். 

எதனால் என்பதையும் கூட மெய்சிலிர்த்து பார்க்கும் பொழுது இன்னும் திருத்தலங்கள் அழிந்து கொண்டுதான் இருக்கின்றது அதனையே மனிதனால் பின் நல் முறைபடுத்தவில்லை. 

===========================
# புது ஆலயங்கள் ஏன் மனிதன் உருவாக்குகின்றான்?
===========================

பின் எவை என்று கூற எதனை எதனையோ திரும்பவும் திரும்பவும் வந்து பின் திருத்தலங்களை(புதிய கோயில்கள்)  உருவாக்குகின்றான்.

ஏன்? உருவாக்குகின்றான்?

அதன்மூலம் வருவாய் ஈட்டி அவன் தன் பிள்ளைகளுக்கு பின் பின் எவ்வாறு என்பதை உணர்ந்து இதனையே செய்துகொண்டு இருக்க அவன் தனக்கு எவ்வாறு லாபம் லாபங்களாக புண்ணியங்கள் சேரும்???

ஆனால் சில திருத்தலத்தை பற்றியும் பலமாக உரைக்கின்றேன் வரும் காலங்களில் நல் முறைகள் ஆகவே.

பல திருத்தலங்கள் பல அதிசயங்கள். பின் பல யுகத்திலும் வாழ்ந்த கோயில்களை யான் நல் முறைகளாக எடுத்துரைக்கின்றேன் .

===========================
# அடிக்கடி இவ் ஆலயத்திற்கு வந்து கொண்டே இருந்தால்......
===========================

அதன்படி பின் நல் முறைகளாக நல் முறையாகவே அங்கு அமர்ந்து தியானங்கள் செய்யவே பல பலப்பல பிறவிகளில் செய்த கர்மாக்கள் அழியும் என்பேன்.

கர்மாக்கள் அழிந்து புண்ணிய பலன்கள் மேலோங்கி அனைத்தும் நடக்கும் என்பேன்.

இங்கு வந்து செல்பவர்கள் பின் ஒரு பொழுதும் தாழ்ந்து விடமாட்டார்கள் என்பேன்.

உயர்ந்த அளவிற்கு எவ்வளவு உயரம் உயரத்தான் செய்வான்  இங்கு இருக்கும் சிவன் என்பேன்.

நல் முறைகளாக நல் முறைகளாகவே பின் அனைத்தும் நிறைவேறும் என்பேன் நல் முறைகள் ஆகவே.

ஆனாலும் நல்முறைகள் ஆகவே ஈசன் கருணை இருக்க இன்னும் மனிதர்களை எவ்வாறு என்பதையும் கூட ஈசனே தன்னை உட்படுத்திக் கொண்டுதானே எழுவான் என்பேன் சுயம்புவாக இன்னும் பல இடங்களில் இன்னும்.

ஏனென்றால் கலியுகத்தில் அக்கிரமங்கள் அநியாயங்கள் ஓங்கி நிற்கின்றது. இதனால்தான் ஈசன் அங்காங்கே தோன்றி தோன்றி பின் அனைவரையும் திருத்துவான். பின் அழிப்பான் என்பேன் .

யாங்களும்( சித்தர்கள்)  இதற்கு சமமான உரிமைகளைப் பெற்று பின் நல் முறைகளாக நல் முறைகள் ஆகவே மக்களுக்கு நல்வழி படுத்துவோமே தவிர பின் இவ்வாறு செய்தால் அவ்வாறு நடக்கும் அவ்வாறு பரிகாரங்கள் செய்தால் இவ்வாறு நடக்கும் என்றெல்லாம் மனிதன் மனிதனை ஏமாற்றும் வேலைகளையும் அப்பனே இவை என்றும் எவ்வாறு என்பதையும் கூட நினைக்கும் பொழுது அப்பனே உண்மை விஷயங்களை இன்னும் சொல்வேன் என்பேன்.

சொல்லும் திருத்தலங்களுக்கு அங்கு சென்று ஆசிர்வாதங்கள் பெற்று அப்பனே நலமுடன் வாழ்க என்பேன்.

அப்பனே பல சூட்சமங்கள் ஒளிந்திருக்கின்றது  இவ்வுலகத்தில் ஒவ்வொன்றாக எடுத்துரைக்கின்றேன்  .

உலகம் பின் ஆன்மீக பூமியாக மாறட்டும் இன்னும்.

===========================
# ரகசியமாக புண்ணியம் சேர்த்து கொண்டே போகும் மிக எளிய வழி...
===========================
# அவசியம் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுங்கள் 
===========================

ஆனாலும் ஆன்மீகம் ஆன்மீகம் என்று சொல்லுகிறார்களே

ஆனாலும் பின்பற்றுவதுமில்லை.

எதனை எதனையோ ஆன்மிகம் என்றால் ஆண் எவ்வாறு என்பதையும் கூட நினைக்கும் பொழுது பின் எவன் ஒருவன் நல் முறைகளாக எதனை என்றும் கூறாமலே இறைவனிடத்தில் சரணடைந்து..... பின் பிரம்ம முகூர்த்தத்தில் நல் முறைகளாக நல் முறைகள் ஆகவே மனதில் இறைவனை நினைத்துக்கொண்டு நல் முறைகளாக பின் அனைத்தும் எவை எவை என்று அதிகாலையில் பல உயிரினங்களுக்கு உணவு அளித்து தானும் உணவு உண்டு பின் நல் முறைகளாக தன் சேவைகள் செய்ய பின் இரவில் உறங்கும் முன் பொழுதும் நல் முறைகளாக பல உயிரினங்களுக்கு சேவை செய்து தானும் உண்டு பின் உறங்கினால் அப்பனே புண்ணியம் சேர்த்து கொண்டே போகலாம் என்பேன்.

===========================
# ஏன் துன்பம் வருகின்றது?
===========================

ஆனாலும் இதனை யாரும் செய்வதில்லை என்பேன். 

எதனால் எவை என்று இதனால் துன்பம் வருகின்றது. 

தானுண்டு தானே எண்ணம் உண்டு என்றெல்லாம் கூட பிறக்கின்றான் இறக்கின்றான். 

இதன் நடுவே எவை எவையெல்லாம் செய்கின்றான் என்பதையும் கூட மனிதனால் பின் உணர முடிவதே இல்லை.

அப்பனே திருமணம் செய்கின்றான். பின் எவ்வாறு என்பதையும் கூட கஷ்டத்திற்கு குழந்தைகளும் வருகின்றது பின் அப்பனே குழந்தைகளும் நன்றாக இருப்பார்களா?? பின் மனைவி நன்றாக இருப்பாளா?? இவைதாம் கேள்விகள் மனிதனுக்கு இனிமேலும் வரும் என்பேன்.

===========================
# அனைத்தும் இறைவன் அருளால் எப்போது நடக்கும்? 
===========================

ஆனாலும் அப்பனே நல் முறைகள் ஆகவே இறைவனை பிடித்து "இறைவா நீதான் அனைத்தும்" என்று செல்ல அனைத்தும் இறைவன் அருளால் நடக்கும் என்பேன்.

நடக்கும் என்பேன் இன்னும் பல அதிசயங்களும் பல திருத்தலங்களை பற்றியும் இன்னும் சொல்கின்றேன் நல் முறைகள் ஆகவே.

அங்கு சென்று வாருங்கள் நல் முறைகள் ஆகவே மனமாற்றம் ஏற்பட்டு அதி விரைவிலேயே தேவையானது அனைத்தும் கிடைக்கும் என்பேன் நல் முறைகள் ஆகவே.

என்னுடைய ஆசிகள் அனுகிரகங்கள் எப்பொழுதும் இருக்கும் அப்பனே மீண்டும் வந்து வாக்குகள் உரைக்கின்றேன் அனைவருக்கும் என்னுடைய நல்லாசிகள்.

===========================
# ஆலய விபரங்கள் 
===========================
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம் . பள்ளசூளகரை. மல்லாபுரம், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி. 

Sri agailandeswari sameth iravatheswarar temple.
Palla soolagarai. Village.
Mallapuram.
Uthangarai.tk
Krishnagiri dt.

google map link :-

பள்ளசூளகரை ஐராவத ஈசுவரர் கோயில் (iradheeshwar sivan temple) என்பது கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள பள்ள சூளகரை என்ற ஊரில் உள்ள பழமையான சிவன் கோயில் ஆகும். இது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தகோயில் கருதப்படுகிறது. இக்கோயிலில் மழை நீர் சேகரிப்பு தொட்டி போன்றவை உள்ளன. தற்காலத்தில் கோவில் பராமரிப்பின்றி சிதிலமடைந்த நிலையில் உள்ளது.

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.

Monday, August 23, 2021

சித்தர்கள் ஆட்சி - x19 - அன்புடன் அகத்திய மாமுனிவர் - ஆட்சி சித்தர்கள் எங்களுடையதே!

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும். இறைவா, எங்களை நன்றாக படைத்தாய்! அனைத்தையும் நன்றாக கொடுத்திருக்கின்றாயே! இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!! 

அன்பு அன்னை லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகள் போற்றி! போற்றி!! போற்றி!!!

22/8/2021 ஆவணி அவிட்டம் பௌர்ணமி அன்று குருநாதர்  அகத்தியர் திருவண்ணாமலை திருத்தலத்தைப்பற்றி உரைத்த பொது வாக்கு 


உரைத்த இடம். அம்மணி அம்மாள் ஜீவசமாதி. திருவண்ணாமலை.

google map link 

https://maps.app.goo.gl/R6B6fStjoPW3hkXM9

===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================

ஆதி அண்ணாமலையை மனதில் துதித்து செப்புகின்றேன் அகத்தியன்!

அப்பனே நல் முறையாக, நல் முறைகள் ஆகவே இவ்விடத்தில் பலப்பல புண்ணியங்கள்.  

நல்முறைகள் ஆகவே செய்தவன் தான் அண்ணாமலையை கிரிவலம் வர முடியும் நல் முறைகள் ஆகவே.

நல் முறைகள் ஆகவே அண்ணாமலை வலம் வருவது அதி சிறப்பு என்பேன் என்பேன். 

===========================
# திருவண்ணாமலை என்கின்ற திருத்தலத்தின் சிறப்பு 
===========================

இதனையும் எவை எங்கு என்றும் கூறாமல் நல் முறைகளாக இறைவனை வணங்காவிடினும் நல் முறையாக வலம்வந்து வணங்கி வந்தால் பல பல சித்தர்கள் பல பல எண்ணிலடங்கா கோடி பின் ஞானிகளும் வலம் வருவார்கள் என்பேன். 

அப்பொழுது நல் முறைகள் ஆகவே வலம் வரும் பொழுது அவர்கள் தம் உராய்வின் போது (அருரூபமாக உரசி செல்வார்கள்) 

சில கர்மாக்களை எடுத்துச் செல்வார்கள் என்பேன் இதுதானப்பா  திருவண்ணாமலை என்கின்ற திருத்தலத்தின் சிறப்பு என்பேன்.

ஆனால் இதையோ தவிர்த்துவிட்டு மனிதர்கள் பின் நல் முறை ஆகவே சுற்றிவந்தால் பின் அதுவும் இதுவும் அனைத்தும் நடக்கும் என்றே யோசிக்கிறார்கள் ஆனாலும் அதுவே தவறு என்பேன்.

கர்மா நீங்கி நல் முறைகளாக முக்தி பெறுவதற்கு சரியான  ஸ்தலம் இதுவே என்பேன்.

நல் முறைகளாக குழப்பங்கள் எவ்வாறு என்பதையும் கூட நினைக்கும் பொழுது நிச்சயமாய் இவனை(சிவனை) அண்ணாமலையில் சரண் அடைந்து விட்டால் இவன் தன் குறைகளை வைக்க மாட்டான் என்பேன்.

ஆனாலும் மனதில் எதையும் நினைக்கக் கூடாது என்பேன். அவை வேண்டும் இவை வேண்டும் என்று.

நல் முறை களாகவே வலம் வந்தாலே போதும் கர்மாக்கள் தொலையும்.

கர்மாக்கள் தொலைந்து புண்ணியங்கள் பெருகும் புண்ணியங்கள் பெருகும் பொழுது அனைத்தும் நிறைவேறும் என்பேன்.

நிறைவேறும் என்பேன் நல் முறைகள் ஆகவே 

ஏன் யாங்களும் சித்தர்களும் சித்தர்களின் பரிபூரண பின் மனிதர்களும் அன்பைப் பெற்று பின் அன்பின் பின் பெற்று தொடர்வதாலே முன் செய்த கர்ம வினை ஒருவனுக்கு நீங்க வேண்டும் என்றால் அண்ணாமலையே சிறப்பு ஸ்தலம் என்பேன். மற்றவையெல்லாம் பின்னே என்பேன்.

===========================
# திருவண்ணாமலையில் பல கோடி சித்தர்கள் தவம் செய்துகொண்டு இருக்கின்றார்கள்.
===========================

இதனால்தான் அண்ணாமலையின் ஒரு சிறப்பு உண்டு என்பேன் உண்டு என்பேன் அவன் மலையை மலையில் இன்னும் பல கோடி சித்தர்கள் தவம் செய்துகொண்டு இருக்கின்றார்கள்.

ஆனாலும் இதன் தவத்தை இப்பொழுதும் கூட மனிதர்கள் கெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனாலும் சித்தர்களோ ஞானிகளோ நல் முறைகள் ஆகவே பொறுமை காத்து இருக்கின்றார்கள்.

ஆனாலும் இவையே என்று போகப்போக பின் இதனையே இப்படியே மனிதர்கள் செய்துகொண்டிருந்தால், செய்து கொண்டிருந்தாராயின் பின் எவை என்று கூறாமலேயே பின் கோபம்.

நல் முறைகளாக பின் கர்மத்தையும் எவ்வாறு சுமந்து நின்றாயோ எதனாலே பல புண்ணியங்கள் பெருகும் ஆனாலும் எதை எதை என்று நினைக்கும் மனது மனிதனின் கீழ்த்தரமான எண்ணங்களை கவனித்து சித்தர்கள் இனிமேலும் நிச்சயமாய் தண்டனைகள் கொடுப்பார்கள் என்பேன்.

இதனையும் நன்கு உணர குறைகள் இல்லை என்பேன்.

===========================
# திருவண்ணாமலை அம்மணி அம்மாள் 
===========================

நல் முறைகள் ஆகவே அம்மணி, நல் முறைகள் ஆகவே இங்கும் இப்பொழுதும் கூட அமர்ந்து கொண்டு இருக்கின்றாள் என்பேன். 

ஆனாலும் இவள் தன் இடத்தில் விசேஷங்கள் எவை என்னவென்று அவளிடத்தில் இப்பொழுது கூட உரைத்துக் கொண்டிருக்கிறேன் நல் முறைகள் ஆகவே.

உலகத்தில் வாழும் மனிதர்கள் பல பேர்  பல எண்ணங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் ஆனாலும் அந்த எண்ணங்கள் முற்று பெற்றது என்பேன்.

முற்றுப் பெற்றது என்பேன் என்பதற்கு இணங்க யோசித்து செய்தால் மனிதர்கள் மனிதர்களும் பல காரியங்கள் செய்ய பல மந்திரங்கள் உச்சரித்து பல பல விளைவுகளை ஏற்படுத்தி துன்பம் பெறப் போகிறான் என்பது உறுதி.

===========================
# மந்திரம் பலன் 
===========================

நல் முறையாக நல்லெண்ணத்தோடு மந்திரமும் ஜபத்தால் தான் அதன் பலன் பலம் பல மடங்கு ஆகும் என்பேன்.

அதனை தவிர்த்து பின் அவை வேண்டும் இவை வேண்டும் என்று என்றெல்லாம் மந்திரங்கள் கூறி கொண்டு இருந்தால் பின் மனிதனுக்கு அழிவுகள்.

அழிவுகள் எதனால் வருகின்றது என்பதையும் கூட மனிதன் எவ்வாறு என்பதும்கூட அனைத்தும் செய்துவிட்டு பின் கொலையும் செய்துவிட்டு பின்பு எவ்வாறு என்பதும்கூட சிறு சிறு உயிரினங்களையும் கொன்று குவித்து நல் முறைகளாக இறைவனை வணங்கினால் நியாயமா? இவையெல்லாம் செய்துவிட்டு இறைவனை வணங்கினால் போதுமா?

ஆனாலும் இறைவன் ஏற்க மாட்டான் என்பேன் இப்பொழுது புரிந்து கொள்ளுங்கள்.

புரிந்துகொள்ளுங்கள் நல்லெண்ணத்தோடு பின் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு எண்ணினாலே போதுமானது. இறைவன்   தனக்கு செய்வான் 

இறைவன் அனைத்தும் செய்வான் என்பேன்.

அப்படியிருக்க எனக்கு பணம் வேண்டும் பொருள் வேண்டும் புகழ் வேண்டும் என்றெல்லாம் நினைக்கும் பொழுது பின் அவற்றில் ஒன்றைக் கூட நிச்சயமாய் இறைவன் தரமாட்டான் என்பேன்.

ஆனாலும் இதைத்தான் கேட்கின்றார்கள் இப்பொழுதும் கூட இப்பொழுதும் கூட. 

நல் முறைகள் ஆகவே இத்திருத்தலத்தில் கூட பல பேர்கள் இனிமேல் எவை என்று கூற ஒருவன் தன் ஒருவன் அழியவேண்டும் எவை என்று கூற என் பிள்ளைகள் நலமாக இருக்க வேண்டும் எந்தனுக்கு பொருள்கள் பல சேர வேண்டும் அனைத்தும் சுகமாக வாழ வேண்டும் என்றெல்லாம் இறைவனிடம் கேட்கின்றார்கள்.

ஆனாலும் இவையெல்லாம் இறைவன் நிச்சயம் தரமாட்டான் என்பேன் புரிந்துகொள்ளுங்கள் அப்பனே.

நல் முறைகள் ஆகவே இவ்வுலகத்தில் இவ்வுலகத்திற்கும் நல்  முறையாகவே இனி வரும் காலங்களில் கூட தீங்குகள் தான் நடைபெறும் என்பேன்.

அந்த தீங்குகளை தடுக்க மனிதர்களே முயற்சிகள் செய்ய வேண்டும் என்பேன்.

ஆனாலும் மனதில் எவ்வாறு என்பதும்கூட அழுக்குகள் வைத்துக்கொண்டு மனிதன் நல்லவனாகவே திரிகின்றான் முட்டாளே.

முட்டாள் மனிதர்களே அனைவரும் திருந்துங்கள்.

அனைத்தும் எவ்வாறு என்பதையும் கூட கூறி விளக்கும் அளவிற்கு கூட இப்பொழுது சொல்கின்றேன்.

அனைத்தும் செய்துவிட்டு இறைவா! இறைவா! என்றெல்லாம் தேடினால் கிடைப்பானா?? இறைவன்???

நிச்சயமாய் கண்ணில் பட மாட்டான்.

கண் படமாட்டான், தென் படமாட்டான் இதற்கும் விரிவான சூட்சுமங்கள் உண்டு என்பேன்.

ஆனாலும் எவை எவை என்று மனிதன் மனிதனுக்கு உள்ளேயே பின்  மனது ஒரு குரங்காக கொண்டு இரு குரங்குகள் சேர்ந்து கொண்டு உலகத்தையே அழித்து வருகின்றது.

உலகத்தை அழிக்க மனிதனே ஆயுதம் என்பேன்.

எவை என்று கூற அனைத்திற்கும் மேலானது மனித பிறவி என்பார்கள் ஆனாலும் யாங்கள்(சித்தர்கள்) சொல்வோம்

அனைத்திற்கும் கீழானவை மனிதப்பிறவி என்போம்.

இவையெல்லாம் எவ்வாறு என்பதையும் கூட மனிதனின் நிலையை பார்த்தால் அதர்மம் ஓங்கி நிற்கின்றது வரும் காலங்களிலும் அதர்மங்கள் ஓங்கி நிற்கும்.

ஆனாலும் சித்தர்கள் யாங்கள் நிச்சயமாய் விடமாட்டோம்.

மனிதர்கள் நாங்கள் தான் சித்தர்கள் நாங்கள்தான் தெய்வங்கள் என்றெல்லாம் கூறி ஆனாலும் மனிதர்களை இவ்வாறு முட்டாள்கள் ஆக்குகின்றார்கள்.

ஆனால் சித்தர்கள் வந்து கொண்டே இருக்கின்றோம் ஒவ்வொருவரையும் பலமாக தண்டிப்போம்.

இப்பொழுதே எச்சரிக்கின்றேன் எச்சரிக்கை விடுத்து விடுத்து இதுவரை மனிதர்கள் திருந்தவில்லை என்பேன்.

நல் முறைகள் ஆகவே அப்பனே எவை எவை என்று கூற இப்பொழுது உரைக்கின்றேன் எவ்வாறு பல மனிதர்கள் இறைவனிடத்திலே இருந்து  பின் கஷ்டங்கள் வருகின்றது என்பதையும் கூட யோசிப்பான் என்பேன் இறைவனை வணங்க வணங்க சோதனைகள் அதிகம் என்பேன் .

ஆனாலும் முட்டாள் மனிதனே நீ என்ன செய்தாய்? என்பதை உணர்ந்து பார்.

அப்பொழுது கேள் இறைவனை இறைவனிடத்தில்.

ஒன்றை மட்டும் சொல்கின்றேன் மனதைத் தொட்டு பார்த்து மனசாட்சிக்கு எதிராக பேசாமல் நான் நல்லவன் என்று கூறிவிட்டால். இறைவனிடம் நீ சண்டை இடலாம் என்பேன்.

அண்ணாமலையிலே அண்ணாமலையிடத்திலே பின் பல பல செய்கைகளால் அப்பனே அவன்தனையும்  திட்டி தீர்க்கலாம் என்பேன். அப்பனே!

ஆனாலும் யோசித்து கொள்ளுங்கள்.

அப்பனே இவை தன் எவ்வாறு என்பதை குறைதீர்க்க தப்புக்கள் செய்து அப்பனே அனைத்தும் தீர்த்துவிடு என்றே வலம் வருகின்றார்கள் பல மனிதர்கள்.

பல மனிதர்கள் பெண்ணின் மீது மோகம் பலப்பல மனிதர்களுக்கு புகழின் மீது மோகம் பல மனிதர்களுக்கு பணத்தின் மீது மோகம் இவை என்று கூறி விடாமல் இதனையும் மோகத்திலேயே வலம் வருகின்றார்கள்.

சிலருக்கு விளையாட்டாக சிலருக்கு பொழுதுபோக்காக இவை எல்லாம் விட்டு விடுவானா?? ஈசன்??.

இதனைத்தான் ஈசனை எவ்வாறு என்பதையும் கூட சிறிது உணர்ந்தால் கூட எவரையும் அனுமதிக்க மாட்டான் பின் ஈசனே.

அப்பனே பக்தி என்கின்றான் ஆனால் வெளியில் ஏமாற்றி வருகின்றான் அப்பனே எவை எவை என்று சொல்ல இன்னும் கூட பல பல மனிதர்கள் வருவார்கள் என்பேன்.

வருவார்கள் என்பேன் பின் எதற்காக என்பேன் திருடர்களே என்பேன்.

மனிதர்களை யாங்கள் திருடர்கள் என்று தான் சொல்வோம்.

இவை என்றும் கூறி விடாமல் அப்பனே நல் முறைகள் ஆகவே மனிதன் ஒழுக்கத்தோடு வாழ்ந்தால் நன்மைகள் செய்து கொண்டே வாழ்ந்தால்  அவன் நல் முறைகள் ஆகவே இக்கடலை பிறவிக் கடலை தாண்டி விடலாம் ஆனாலும் ஒழுக்கங்கள் எங்கே??

தானங்கள் எங்கே? தர்மங்கள் எங்கே?

முட்டாள் மனிதர்களே!

பின் மாறிப்போனான் மனிதன் மாறிப்போனான் மனிதன் என்பேன்.

ஆனாலும் இறைவனும் மாறித்தான் போகப் போகிறான் அப்பொழுது தெரியும் ஆனாலும் இப்பொழுதுகூட கஷ்டங்கள் ஒவ்வொருவரையும் பின் முட்டாள்கள் என்று கூட சித்தர்கள் மனிதர்களுக்கு எவ்வாறு என்று சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

ஆனாலும் யானும் நல் முறைகள் ஆகவே இப்புவியுலகில் திரிந்து கொண்டிருக்கின்றேன்.

என்னையும் பல கோடி சித்தர்கள் அகத்தியா அகத்தியா மனிதர்களுக்கு பின் நன்மைகள் செய்து விடாதே. 

மோசமானவர்கள் மனிதர்கள். 

உன்னையே வைத்து பொருள் சம்பாதித்து உன்னையே ஏமாற்றி பின் அகத்தியனே இல்லை என்று சொல்லிவிடுவார்கள்.

அப்பனே இன்றும் சித்தர்கள் கூட என்னிடத்தில் சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

ஆனால் என்னால் முடியும் என்னால் முடியும் என்று கூட யான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன்.

ஆனாலும் மனிதனை பார்த்தால் மோசம் போய்விடுகின்றது.

நல் முறைகள் ஆகவே இவை என்று விளக்கத்திற்கு கேட்க இவை என்றும் எவை எவை என்று பொருள் சம்பாதிப்பதற்கே மனிதன் பிறக்கின்றான்.

பொருள் சம்பாதிப்பதற்காக வா??

ஆனால் நீ சம்பாதித்துவிடலாம் என்பேன் ஆனாலும் அதை அழித்துவிடும் சக்திகள் எங்கள் இடத்தில் உள்ளது என்பேன்.

பொருளுக்கு புகழுக்கு இவைகளுக்கு எல்லாம் அலைந்து திரிந்து சேர்த்துக்கொண்டால் இந்த வினாடியில் எவை என்று கூட சில நாள் கழித்து அப்பணத்தை இப்போதுதே உரைத்து விடுகின்றேன்  ஓர் நாளில் காலி செய்து விடுவோம் என்பேன்.

எச்சரிக்கையாக இருங்கள் மனிதர்களே.

எவரையும் ஏமாற்றி பிழைக்க வேண்டாம் என்பேன்.

அப்பனே முதலில் நீ திருந்து. 

நீ திருந்து பின் உன் இல்லத்தை திருந்த வை. இல்லத்தை திருத்து பின் ஓர் உருவாக்கு ஒரு கூட்டத்தை. அவர்களையும் திருத்து பின் உருவாக்கி. 

பின் அடி பலமாக விழுந்தால் தான் இனிமேலும் மனிதர்கள் திருந்துவான் என்பேன். பின் எவை என்று கூற அமைதியாகச் சொன்னால் திருந்தவே மாட்டான் என்பேன் மனிதன்.

எவை என்று கூற பின் பக்தி பக்தி என்று சொல்லி பின் எவ்வாறு என்பதையும் கூட  சக்திகள் எவ்வாறு என்பதையும் கூட நிச்சயமாய் சித்தர்கள் இனிமேலும் நல் முறைகள் ஆகவே இவ்வுலகத்தில் வந்து ஆட்சி செய்து பலமாக அடி கொடுத்து எவ்வாறு என்பதையும் கூட பின் கிருஷ்ணனும் சொல்லி இருக்கின்றான் தர்மம் தாழும் போது வருவேன் என்று அவனும் நிச்சயமாய் வருவான் என்பேன்.

இதனால்தான் எவ்வாறு என்பதையும் கூட மேன்மை நிலைகள் புரிய நல்லது நடக்கும் இல்லையெனில் அனைவருக்கும் கஷ்ட காலங்களே. கஷ்ட காலங்கள் என்பேன். 

இனிமேல் அனைவருக்கும் எதனை எதனை மூலமும் இறைவன் சோதிப்பான் என்பேன்.

முதலில் பணத்தை எடுப்பான் என்பேன்.

ஏனென்றால் அதில்தான் பல மனிதர்கள் எவ்வாறு என்பதையும் கூட .

ஆனாலும் சில பிரச்சினைகளை உருவாக்குவான் என்பேன் ஆனாலும் பின்  எங்களிடத்தில் பணம் வேண்டும் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள் என்பேன்.

ஏன்? எதனால்? என்பதையும் கூட முக்கியப் புள்ளியாக ஈசனே பணத்தின் மீதுதான் அனைவருக்கும் மோகம் என்பது தெரிந்துவிட்டது. 

இதனால் ஒவ்வொருவரிடத்திலும் பணத்தின் நல் முறைகள் ஆகவே நல் முறைகளாக விளக்கும் அளவிற்கு கூட அவர்களிடத்தில் இருந்து பணத்தை ஈட்டுவான். (ஈசன் எடுத்துக்கொள்வார்) 

பின் கஷ்டங்கள் ஏற்படும் பின் திருடன் ஆவான் மனிதன். திருடி திருடி சேர்த்துவைத்து சேர்த்து வைப்பதே இவனுடைய வேலை மனிதனுக்கு.

நல் முறைகள் ஆகவே இதனால்தான் மனதாக வைத்து கொண்டு இறைவனை வணங்கி வணங்கினால் போதுமானது.

இறைவா பூமியில் படைத்தாய் படைத்தாய் என்பதைக்கூட இறைவனின் செயல் இறைவனின் செயல் மனிதா நீ இப்புவி உலகத்திற்கு வரும்பொழுது உன்னுடைய எண்ணங்கள் எதன்மீதும்  போகவில்லை அப்போது இறைவனே துணை இருக்கின்றான்.

ஆனாலும் நீ வளர வளர உன் மீது உள்ள நம்பிக்கையே போய்விட்டது இறைவனுக்கு என்பேன்.

ஏனென்றால் வளர வளர கெட்ட புத்திகள் கெட்ட செய்கைகள் இன்னும் கெட்ட கெட்ட இன்னும் எவ்வாறு யான் சொல்வது? இனிமேலும் நடக்கும்.

பின் ஒவ்வொருவரையும் எச்சரிக்கின்றேன் ஒவ்வொருவரும் நல்  முறைகள் ஆகவே இனிமேலும் வரும் சந்ததியினருக்கு எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டும் இறைவனை நல் முறையாக இளம் வயதிலேயே பிடிக்க வேண்டுமென்று.

பின் அனைவரிடத்திலும் கூற பின்பு படிப்புகள் இவ்வுலகத்தில் முக்கியமில்லை.

படிப்பிற்கு வரும் காலம் வரும் காலங்களில் பின் முக்கியத்தவம் கிடைக்காது தர மாட்டாது என்பேன்.

ஏனென்றால் படிப்பே ஒரு வியாபாரம் ஆகிவிட்டது என்பேன் படிப்பு எவ்வாறு என்பதையும் கூட பின்  கேட்கும்போது சந்தோசத்திற்காகவே படிப்பு இருக்காது என்பேன்.

அப்படி சந்தோசமாக படிப்பதற்கு சென்றால் உந்தனுக்கு வேலையும் கிட்டாது தொழிலும் கிட்டாது பின் எவ்வாறு என்பதையும் கூட சுய தொழிலும் கிட்டாது பின் நீ திரிந்து கொண்டே தான் இருக்க வேண்டும்.

ஆனால் இறைவனை மனதால் எண்ணி கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு முன்னேறி வா இறைவன் அனைத்தும் தருவான் என்பேன்.

அப்பனே சொல்கின்றேன் சிறுவயதில் எவ்வாறு என்பதையும் கூட நல் முறையாகவே இறைவனையே தாய் தந்தையராக ஏற்றுக்கொண்டு நல் முறைகள் ஆகவே வணங்கி வந்தால் எத்துன்பமும் வராது என்பேன் .

வராது என்பேன் இதனுள் சூட்சமங்கள் இன்னும் பல உண்டு என்பேன்.

மனிதர்களுக்கு எவை என்று கூற இன்னும் பல விஷயங்களைச் சொல்லி         நல்வழிப்படுத்துவோம்.

ஆனாலும் திருந்தாவிட்டால் பின் நிச்சயம் நோய்கள் உருவாக்குவோம் என்பேன் நல் முறைகள் ஆகவே.

பின் இறைவனிடத்தில் பிரார்த்தனைகள் செய்யும் பொழுதும் நல் முறைகளாக செய்யுங்கள் என்பேன் போட்டி பொறாமைகள் வேண்டாம் என்பேன்.

ஆனாலும் நிச்சயமாய் யாங்கள் நடத்துவோம் ஆட்சி.

ஆட்சி எங்களுடையதே என்போம்.

பாருங்கள் இனிமேலும் அப்பனே நல் முறைகள் ஆகவே அப்பன் கந்தன் அடுத்த வாக்கில் உரைப்பான் நல் முறைகள் ஆகவே அனைவருக்கும் என்னுடைய நல்லாசிகள்.

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, August 22, 2021

சித்தர்கள் ஆட்சி - x18 - அன்புடன் அகத்திய மாமுனிவர் - முத்தம்பட்டி அனுமார் ஆலய வாக்கு!

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும். இறைவா, எங்களை நன்றாக படைத்தாய்! அனைத்தையும் நன்றாக கொடுத்திருக்கின்றாயே! இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!! 

அன்பு அன்னை லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகள் போற்றி! போற்றி!! போற்றி!!!

தர்மபுரி முத்தம்பட்டி அனுமன்

Google map link :-
https://maps.google.com/?cid=6501323590160457692

18/8/2021 அன்று தர்மபுரி முத்தம்பட்டி அனுமன் ஆலயத்தைப் பற்றி குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு:-

===========================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 

===========================

அப்பனே நல்லாசிகள் நல் முறையாக முறையாக இந்த ஆலயத்திற்கு என்று ஒரு சிறப்பு உள்ளது அப்பனே

இறைவன் ராம அவதாரத்தில் நல் முறையாக இலங்கையில் யுத்தகளத்தில் ராமனுக்கு மூலிகைகள் தேவைப்பட பின் நல் முறையாய் அனுமனை பணித்து நல் முறையாக சென்று மூலிகைகளைப் பறித்து வா என்று கட்டளை இட்டான்.... 

அனுமனும் நல் முறையாகவே மூலிகைகளை தேடி அலைந்து கடைசியில் சஞ்சீவி மலையை பெயர்த்து பின் நல் முறையாக ராமனிடம் கொண்டு சேர்த்தான்.

ராமனும் நல் முறையாக மூலிகைகளை பரிசோதித்து சில மூலிகைகள் கிடைக்கவில்லை மீண்டும் சென்று அந்த மூலிகைகளை பறித்து வா என்று கூறினான்.

அனுமனும் அந்த மூலிகைகளை தேடி இந்த காட்டிற்கு வந்தான். 

தொப்பூர் காடு என்ற பெயர் இந்த காட்டிற்கு வந்த பொழுது அந்த மூலிகைகள் கிடைத்தது. 

அதை பறித்து செல்ல முற்படும் பொழுது நல் முறையாக அந்த மலையிலும் காட்டிலும் வாழ்ந்து வந்த தேவதைகள்.....

ஆஞ்சநேயா!!!!! இந்த மூலிகைகளை பறித்து செல்ல எங்களது அனுமதி தேவை.

எங்களின் அனுமதி வேண்டும் என்றால் நீ இங்கே இருக்க சம்மதம் தெரிவிக்க வேண்டும். 

இந்த மலையில் பல அக்கிரமங்களும் அநியாயங்களும் வருங்காலத்தில் நடந்தேறும். 

இவ்வாறு நடக்காமல் நீ இங்கேயே இருந்து காக்க வேண்டும். 

தவறான காரியங்களை செய்ய வருபவர்களை தண்டிக்க வேண்டும்.

அப்போதுதான் இந்த மூலிகைகளை நாங்கள் தருவோம் என்று கூறிய பின் நல் முறையாக 

பின் நல் முறையாக அனுமனும் சரி என்று சொல்லி மூலிகைகளை தாருங்கள் என்று கேட்டு மூலிகைகளை பறித்து பின் நல் முறைகள் ஆகவே புறப்பட்டான் 

அப்போது தேவதைகள் என்ன ஆஞ்சநேயா நீ உரைத்ததை மறந்து விட்டாயா?

நீ இங்கேயே இருக்கப் போவதாக வாக்கு தந்தாய் இப்பொழுது நீசெல்கின்றாயே இது நியாயமா?

அனுமனும் பின் நல் முறையாக தேவதைகளை  நோக்கி,  நான் இந்த மூலிகைகளை என் இறைவன் ராமனிடத்தில் கொண்டு சேர்க்கவேண்டும்.

சற்று பின்னால் திரும்பிப் பாருங்கள் என்று கூறினான். 

அப்பொழுது அவர்கள் பின்னால் சுயம்பு வடிவாக கல்லால்  அனுமன் சிலையாக தோன்றினான். 

பின் நல் முறைகள் ஆகவே தேவதைகளே!!!!!

நான் இந்த காட்டில் இருக்கப் போகின்றேன். 

தவறான எண்ணம் கொண்டு வருபவர்கள் தவறை செய்ய வருபவர்கள் அனைவரையும் தண்டிப்பேன். 

இந்த காடுகளையும் மலைகளையும் நான் இங்கிருந்தே காப்பேன் என்று வாக்கு தந்தான். 

அந்த இடம்தான் இந்த கோயில் அப்பனே! 

இப்பொழுதும் இந்த இடத்திற்கு தவறான எண்ணம் கொண்டவர்கள் வரமுடியாது. 

தூய பக்தியுடன் நல் மனதாய் வருவோருக்கு அருள் தந்து கொண்டுதான் இருக்கின்றான், இந்த அனுமன்.

அப்பனே என்னுடைய நல்லாசிகள்.

===========================
# ஆலய விபரங்கள்  
===========================

ஸ்ரீவீர ஆஞ்சநேயர் - முத்தம்பட்டி கிராமம்
தர்மபுரி: நல்லம்பள்ளி அடுத்த முத்தம்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவில்
தருமபுரியில் இருந்து பெங்களூரு செல்லும் சாலையில், சுமார் 12 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது முத்தம்பட்டி அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில். ஸ்ரீவீர ஆஞ்சநேயர் - முத்தம்பட்டி கிராமம் ஸ்ரீவீர ஆஞ்சநேயர் - முத்தம்பட்டி கிராமம் சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு ஓரிடத்தில், மலையில் இருந்து சரிந்து விழுந்த பாறைகள் குவியலாகக் கிடந்ததைக் கண்ட மக்கள், அவற்றை அகற்றிய போது மலைப்பாறையில் புடைப்புச் சிற்பமாகத் திகழும் இந்த அனுமனைக் கண்டு மெய்சிலிர்த்தனர். அந்த இடத்தில் அனுமனுக்குப் பொதுமக்கள் சேர்ந்து கோயில் கட்டி வழிபடத் தொடங்கினர். இன்றைக்கும், அமாவாசை தினங்களில் இந்த அனுமனை வழிபடப் பெருந்திரளாக பக்தர்கள் இங்கே கூடுகிறார்கள். சனிக்கிழமைகள், அனுமன் ஜயந்தி, ஆங்கில மற்றும் தமிழ் வருடப் பிறப்பு ஆகிய தினங்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. இந்த ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை, வடைமாலை சாற்றி மனமுருகப் பிரார்த்தித்தால், நினைத்தது நடக்கும், வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். முத்தம்பட்டி வீர ஆஞ்சநேயர் கோயில் என்பது தர்மபுரி மாவட்டம், தருமபுரியில் இருந்து சேலம் செல்லும் தொடர்வண்டிப் பாதையில் முத்தம்பட்டி தொடர்வண்டி நிறுத்தத்தில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் தொப்பூர் வனப்பகுதியில் உள்ள ஒரு அனுமன் கோயிலாகும். இக்கோயிலை அடைய பேருந்து வசதி கிடையாது சாலைவழியாக வரவேண்டுமானால் தருமபுரியில் இருந்து நல்லம்பள்ளி வந்து அங்கிருந்து வாடகை தானியில் வரவேண்டும் இக்கோயிலுக்கு பெரும்பாலானவர்கள் தொடர்வண்டி வழியாகவே வருகின்றனர். இக்கோயிலைச் சுற்றி குன்றுகளும், மரங்கள் சூழ்ந்த நிலையில் அவற்றிற்கு இடையில் சலசலக்கும் ஓடைகள் அதன் கரையில் உள்ள ஒரு பாறையில் ஏழு அடி உயர ஆஞ்சநேயரின் புடைப்புச் சிற்பமாக ஆஞ்சநேயர் கோயில் கொண்டுள்ளா்.

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, August 15, 2021

சித்தர்கள் ஆட்சி - x17 - அன்புடன் அகத்திய மாமுனிவர் - முருகப்பெருமான் வாக்கு!

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும். இறைவா, எங்களை நன்றாக படைத்தாய்! அனைத்தையும் நன்றாக கொடுத்திருக்கின்றாயே! இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!! 

அன்பு அன்னை லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகள் போற்றி! போற்றி!! போற்றி!!!


நாகபஞ்சமி அன்று வடிவேலன் உரைத்த பொது வாக்கு.

இடம். அங்காளபரமேஸ்வரி அர்த்தநாரிஸ்வரர் ஆலயம் தர்மபுரி.

===========================
# அன்புடன் கந்த வடிவேலன் வாக்கு
===========================

உலகை ஆளும் என் அப்பன் அம்மையை பணிந்துசொல்லுகின்றேன் கந்தனவன்.(கந்தன்) ஞானப் பிழம்பை என் தந்தை நிச்சயமாய் வழங்குவான் என்பேன். பின் என் தாய் அவள் ஆசிர்வாதமும் பரிபூரணமாக இருக்க அப்பனே பின் நல் முறையாக அனைத்து விஷயங்களிலும் ஜெயமாகும் என்பேன். இறைவன் என்றெல்லாம் திரிகின்றார்கள் மனிதர்கள் இறைவன் இறைவன் என்றெல்லாம் திரிகின்ற போது அவரவர் செய்த புண்ணிய பாவங்கள் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.


அவர்களே மனதில் நினைத்து அப்பொழுதுதான் நல் முறையாக அப்பனே தவறு செய்துவிட்டேன் என்று திருந்தி விட்டால் நல் முறையாக ஆசிகள் என்னுடைய ஆசிகள்.


===========================
# எப்போது அவன் தன் கர்மத்தை அவனே விலக்கிக் கொள்கின்றான்?
===========================


ஆனாலும் பின் பல புண்ணியங்கள் நல் முறைகளாய் செய்யும் பொழுது அவன் தன் கர்மத்தை அவனே விலக்கிக் கொள்கின்றான். என்பேன்.… நல் முறையாக மாற்றம் உண்டு தெரியாமல் செய்கின்ற தவறுக்கு எதனை என்று கூற கர்மா கிடையாது எமதர்மன் அதனை எடுத்துக்கொள்வதில்லை.


ஆனாலும் தெரிந்தே செய்கின்ற தவறுக்கு நிச்சயம் கர்மாவினை உண்டு. வருகின்றது வினை. இதனையும் எவ்வாறு என்பதைக்கூட தெரிந்தும் இதற்கும் கூட விமோசனம் உண்டு என்பேன் எதனையும் என்பதைக்கூட எவ்வாறு என்பதையும் கூட இறைவனை வகுத்துக்கொண்டு இறைவனை நினைத்துக் கொண்டால் அக் கர்மவினை பின் பின் சம அளவில் நல் முறையாக இறைவன் எடுத்துக்கொண்டு, நல் முறையாகவே இவ்வுலகத்தில் வாழவைப்பான் என்பேன்.


அதனால் தான் இறை பலங்கள் அனைத்திற்கும் தேவை என்பதைக்கூட நான் நிச்சயமாய் சொல்வேன் என்பேன். ஆனாலும் இதையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது மனிதனுக்கு மாய வலையே மிஞ்சும் என்பேன். மாய வலையில் சிக்கிக் கொள்வான் எவ்வளவு புத்திகள் இருந்தும்.


===========================
# எதனால் மனிதனுக்கு மட்டும் ஓர் அறிவை மிகவும் கடுமையாக வைத்திருக்கின்றான்?
===========================

ஒன்றை மட்டும் தெரிவிக்கின்றேன் நிச்சயமாய் பின் ஐந்து அறிவுகள் அனைத்திற்கும் இருக்கும் என்பதை கூட யான் அறிவேன்.


(மனிதனுக்கு மட்டும்) ஓர் அறிவை பின் பின் மிகவும் கடுமையாக வைத்திருக்கின்றான் எதனால் பின் என்றால் மனிதன் உண்மை நிலையை அறிந்து புண்ணியங்கள் செய்து நல் முறையாக பிறவிக் கடலை தேற்றும் என்று.


ஆனாலும் அவ் அறிவை தவறாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறான் மனிதன் இப்பொழுதும் கூட இனிமேலும் கூட. இதனைப் பயன்படுத்திக் கொண்டாலே அதன் மூலமே அழிவு ஏற்படும் என்பதை மனிதனுக்குத் தெரிவதில்லை. நின்ற பொழுதும் இதனையும் ஆறாவது அறிவை நல் முறைகள் ஆகவே பயன் படுத்தி, இதனைத்தான் பின் அனைத்தையும் கடந்து வந்தால், பின் அறுபடையினை(கந்தனின் ஆறுபடைவீடு) தரிசித்து விடலாம் என்பது கூட உண்மை என்பேன். என்னை காண முடியும் என்பேன்.


ஆனாலும் மனிதன் எவ்வாறு என்பதும்கூட முட்டாளாகவே வாழுகின்றான். நல் முறைகளாக மக்களுக்கு தெளிவுகள் தெளிவுகள் இனி மேலும் பிறக்காவிட்டால், அப்பனே மனிதன் அவனே அவன் தன் போக்கிலே சென்று அழித்து விடுவான்.


===========================
# எப்போது மந்திரங்கள் பலிக்கும் ?
===========================


மந்திரங்கள் பல உபதேசங்கள் செய்து...... செய்து......


ஆனாலும் மனிதர்கள் எண்ணங்கள் பின் உயர்வாக இல்லாதபோது அவை எல்லாமே வீண் என்பேன். நல் முறைகள் ஆகவே விளக்கம் தந்து நான் ஏற்றுவேன்.


நல் முறைகள் ஆகவே இத்திருத்தலத்தில் (அங்காளபரமேஸ்வரி அர்த்தநாரிஸ்வரர் ஆலயம் தர்மபுரி) இதை திருத்தலம் என்றே சொல்லலாம் அவ்வளவு பக்திகள் சக்திகள் இங்கே நிறைந்திருக்கின்றது என்பேன். இதனைத்தான் முன்னோர்கள் சொல்லிவிட்டார்கள் மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிது என்று. இதனால் அன்புடன் நல் மனதாய் எதனையும் என்பதைகூட அன்பை மட்டும் செலுத்தினால் நாங்கள் வருவோம். இவ்வுலகம் நிலையில்லாதது என்பதை கூட மனிதன் தெரிந்து கொள்வதில்லை. ஆனாலும் அதை தெரிந்து விட்டால் நாங்கள் (மனிதர்கள்) கூட நிரந்தரம் இல்லை என்பது தெரிந்து விடும். இதனைத் தெரிந்து விட்டால் ஓடோடிச் சென்று இறைவனிடத்தில் சரணடைந்து விடுவான் மனிதன்.


===========================
# இறைவா நீயே அனைத்தும் .....
===========================

ஆனால் மனிதன் எண்ணங்களோ பின் நிலையற்று நிலையற்றவையே தேடிச் செல்லுகின்றது.


ஆனால் அப்படி தேடி தேடி செல்ல அவன் தனக்கு மனக்குழப்பங்கள் மன வருத்தங்கள் வந்துகொண்டே இருக்கும். ஒன்றை மட்டும் சொல்கின்றேன். "இறைவா அனைத்தும் நீயே" என்று பின் அவனிடத்தில் விட்டுவிடு பின் அனைத்தும் நடக்கும் என்பேன். அதைவிட்டுவிட்டு நல் முறைகளாக, அதைச் செய்கிறேன்...... இது நடக்கும்...... இதைச் செய்கிறேன்...... அது நடக்கும்...... அவை வேண்டும்...... இவை வேண்டும்...... என்று சென்று கொண்டு இருந்தால் நிச்சயம் கிடைக்காது என்பேன்.


===========================
# உங்கள் கஷ்டங்கள் குறைந்துவிடும் ரகசியங்கள்.
===========================

இறைவன் மனிதனுக்கு கஷ்டத்தை தருவதை கூட மனிதனுக்குத் தெரிவதில்லை. கஷ்டத்தின் மூலம் அனுபவத்தை பெற வேண்டுமே தவிர பின் மனக்குழப்பங்கள் ஆகிவிடக் கூடாது என்பேன்.


அப்படி மனக்குழப்பம் ஆகிவிட்டால் அவன் வாழ்க்கை வீணாகிவிடும்.


இதனால் தான் கஷ்டம் வரும்பொழுது இறைவா இறைவா என்று அழைத்தாலே போதுமானது. கஷ்டங்கள் பகுதியாய் குறைந்துவிடும் என்பேன். ஆனாலும் மனிதன் அழைப்பதில்லை. நல் முறைகள் ஆகவே அனைத்தும் நிறைவேறும் என்பேன்.


இவ்வுலகத்தில் படிப்படியாக ஏற்றங்கள்.


அதனால்தான் அகத்தியனும் சரி முறையாக நல் முறையாக மக்களை நல்வழிப்படுத்தி கொண்டிருக்கின்றான்.


யானும் பக்கபலமாக என் குடும்பத்தில் ஒருவனாக இருந்தும் போராட்டத்தில் இருந்து மீட்க கடைசிவரை, என் தாயவளும் என் தந்தை அவனும் துணையாக இருந்து, உயர்வை நோக்கி பின் எவ்வாறு உயர்வை எவ்வாறு உலகத்தில் பெறவேண்டுமா பெறச் செய்வோம் யாங்கள். நிச்சயம் கூட. சத்தியம் கூட. நல் முறைகள் ஆகவே மனிதன் நிலையை ஆராய்ந்து பார்த்தால் தேடி வருபவர்கள் எவ்வாறு என்பதையும் கூட மேன்மையான நல் எண்ணங்களோடு தேடி செல்ல வேண்டும்.


===========================
# புண்ணியம் செய்பவர்களுக்கு மட்டுமே இவ்வுலகத்தில் இனி இடமுண்டு.
===========================

உண்மைகளை நினைக்கும்பொழுது நல் முறையாய் புண்ணியம் செய்பவர்களுக்கு மட்டுமே இவ்வுலகத்தில் இனி இடமுண்டு. அதனால் தான் சொல்கின்றேன் ஒவ்வொருவரும் சிறு புண்ணியமாவது தர்மங்கள் செய்திருந்தால் மட்டுமே இறைவன் தேடி வருவான். நில்லாததை நில் என்று சொல்பவன் தான் மனிதன். மனிதன் இதற்கு தகுதி படைத்தவனா?? என்பதை நினைத்தால் பின் மேலோங்கும் என்பேன் அநியாயங்கள் அக்கிரமங்கள் இன்றளவும் கூட நடந்து கொண்டு இருக்கின்றது. பின் பின் எவ்வாறு என்பதையும் கூட போலி வருடங்கள் போலியான வருடங்கள் செல்லச் செல்ல...... போலியான மனிதர்கள் இன்று என் தலத்திற்கு வருகின்றார்கள்.


முருகா முருகா என்று போலி பக்தியும் காட்டுகிறார்கள். ஆனாலும் இதனை கண்டு கொள்ள இறைவனுக்கு சிலை தானே என்று கூட சிலர் எதனையும் என்றுகூட நினைக்க தெரியாமல் ஓடிவிடுகிறார்கள்


ஆனாலும் அவர்களைத் தான் நாங்கள் கவனித்துக் கொண்டு இருக்கின்றோம் என்பது மெய். இதனையும் கூட முன்னிறுத்தி பார்க்கும் பொழுது அப்பனே இதனையும் ஒன்றும் இல்லை.


உலகில் உலகில் பின் மனிதன் நினைத்து விட்டால் இறை பலத்தோடு அனைத்தும் சாதித்துவிடலாம்.


ஆனாலும் பின் மனிதன் பின் நின்ற பொழுதெல்லாம் மனதிற்கு தேவையானதே தான் வாழவேண்டும் என்றே கேட்கின்றான்.


இவ்வாறு கேட்கும்பொழுது அவன்தனுக்கு நிச்சயம் கிடைக்காது.


அவனுக்கு அதிர்ஷ்டங்கள் இருந்தாலும் கூட சில நேரங்களில் அவன்தனுக்கு கொடுத்து பின்பு நாங்கள் எடுத்து விடுவோம்.


===========================
# யார் இறைவனுடைய அருளை எப்பொழுதும் பெறுவான்?
===========================

மற்றவர்களுக்காக அனைவரும் நல் முறைகள் ஆகவே மற்றவர்களுக்காக உழைக்கின்றவன் எங்களுடைய அருளை எப்பொழுதும் பெறுவான்.


இதைத்தான் யான் செப்புகின்றேன்.


இதனை தெரிந்து கொள்ளுங்கள்.


மற்றவர்களுக்காக வாழ வேண்டும் என்பதனை கூட.


===========================
# உலகம் அறியாத முருகப்பெருமான் ஆலய ரகசியங்கள்
===========================

நல் முறைகள் ஆகவே இன்னும் சில உண்மைகளை தெரிவிக்கின்றேன். நின்று கொண்டிருக்கும் நல் முறைகளாய் யான் எப்பொழுதும் எங்கு என் வீடுகளிலும் எப்பொழுதும் நின்று கொண்டிருப்பேன்.


நின்று கொண்டிருப்பேன் எதனால் என்பதைக்கூட மனிதனுக்குத் தெரிவதில்லை தெரிவதில்லை.


இதனையும் சூட்சுமத்தை அறிவிக்கின்றேன் இப்பொழுதே எதனை என்றும் மனிதன் என்னிடத்தில் கேட்கும்பொழுது பின் நல் முறைகள் ஆகவே ஆசீர்வாதம் ஆசிர்வாதங்கள் கொடுத்து அனுப்புகின்றேன்.


ஆனாலும் அதனை பயன்படுத்தாமல் தவறான முறையில் பயன்படுத்திக் கொண்டு அனைத்தையும் இழந்து பின் நல் முறைகள் ஆகவே மீண்டும் தேடி வருகின்றான்.


அதனால்தான் யான் சொன்னேன் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் நின்றபடி .


நின்றபடியே பார்த்துக் கொண்டேதான் இருப்பேன் எப்போதும் கூட கடைநாள் வரையிலும்கூட. ஆனாலும் நல் முறைகள் ஆகவே என் தந்தை அமர்ந்து கொள்வான். அமர்ந்து கொள்வான் என்பதை கூட பின் பின் நல் முறைகள் ஆகவே அனைத்தும் கூறும்பொழுது,


பின் உனது கர்மாக்கள் கழியட்டும் கழியட்டும் என்று கூட பின் கர்மத்தை கஷ்டங்களைக் கொடுத்து அழித்து கொண்டு இருப்பான் என் தந்தை. ஆனாலும் பின் நல் மனதாய் என் தந்தைக்கு பிடித்துவிட்டால் ஏற்றங்கள்.


பின் உயர்ந்தோர்.


பிடித்தவாறு மனிதர்கள் எவரும் இல்லை என்பேன், என் தந்தைக்கு. ஆனாலும் இனிமேலும் வருவார்கள் நான் சிவனின் குழந்தை! முருகனின் குழந்தை! அகத்தியன் குழந்தை! என்று. ஆனால் அவர்கள்தான் சொல்லிக் கொண்டு இருக்க வேண்டுமே தவிர நாங்கள் ஏற்றுக் கொள்ளுவதும் இல்லை. எதை என்றும் எதனை என்றும் கூட தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே நாங்கள் தரிசனம் தருவோம். செய்வோம். நிச்சயம் செய்வோம் என்பதைக்கூட இதனை திரும்பவும் உரைக்கின்றேன். பின் பின் எவ்வாறு என்பதையும் கூட தொழுது நிற்கும் பொழுது யானே அறிவேன்.


பின் இறைவனே நீ என்னிடத்தில் வந்து விடு என்று கூறி விட்டால் நானே நிச்சயம் வந்துவிடுவேன் என்பதுகூட உண்மை.


ஆனால் மனிதர்கள் இதுபோல் யாரும் அழைத்ததில்லை மகனே.


===========================
# "சுப்பிரமணியர்" பெயர் ரகசியங்கள்
===========================
# ஒரு வருடத்தில் ஒன்பது முறை ஆறுபடைவீடு தரிசனம் ரகசியங்கள்
===========================

இதனை நல் முறைகள் ஆகவே பயன்படுத்தி, பயன்படுத்தி முருகன் நல் முறைகள் ஆகவே யான் என்பேன்.


எனது பல ரூபங்களில் இருக்கின்றது சுப்பிரமணியர் என்பதிலும் கூட இதிலும் கூட ஒரு சூட்சுமம் அடங்கி இருக்கின்றது அடங்கி உள்ளது என்பேன்.


சுப்பிரமணியன் என்பதைக்கூட எவ்வாறு நின்று தொழுது பார்த்தால் இதில் சூட்சுமமான விஷயம் உள்ளது. இதனை கண்டுபிடித்து விட்டால் நல் முறைகள் ஆகவே உங்களுக்கு கஷ்டம் என்பதே வராது என்பேன். அதனால்தான் முதலில் "சு" என்பதை எடுத்துக் கொண்டார்கள் என்பேன். இதிலும் நன்கு உணர்ந்து சொல்கின்றேன். நல் முறைகள் ஆகவே பின் பின் பின் எந்தனையும் நல் முறைகள் ஆகவே பிடித்துக் கொண்டு பின் வருடங்களுக்காவது நல் மனதோடு நல் மனதோடு நவ முறை அறுபடை வீடுகளை தரிசனம் செய்துவிட்டு (ஒரு வருடத்தில் ஒன்பது முறை ஆறுபடைவீடு தரிசனம்) சென்று விட்டால் அவன் தனக்கு பிரம்மாவும் மனமிரங்கி பின் விதியையே மாற்றி விடுவான் என்பதையும் கூட சுப்பிரமணி என்கின்றார்கள். ஆனாலும் இச் சூட்சுமத்தை இதுவரை மனிதர்கள் அறிந்ததே இல்லை இன்று வரையிலும் கூட. நல் முறைகள் ஆகவே பயன்படுத்திக் கொள்ளும் அளவிற்கு ஈசனின் சக்திகள் நல் முறைகள் ஆகவே, என் தாய் அவளும் நல் முறைகள் ஆகவே இந்த பூலோகத்தில் சுற்றி திரிவாள் என்பேன்.


மேன்மேலும் நல் முறையில் ஆகவே அனைத்தும் செய்வித்து எவ்வாறு என்பதை உணர்ந்து அனைத்தும் நிறைவேற்றி வைக்கும் சக்திகள் கூட, என் தாய் என் தந்தை நல் முறைகள் ஆகவே தருவார்கள் மனிதர்களுக்கு மனிதர்களுக்கு தரும் பொழுதும் அதன் பலத்தை அறியாமல் அதன் தகுதியை இழந்து விடுவார்கள் மனிதர்கள். இதனால் தான் சொன்னேன் கற்றவை கற்றபடியாகவே நிற்க வேண்டுமே ஆனாலும் இதனை மனிதர்கள் கற்றதோடு மட்டும் ஓடிவிடுகிறார்கள் இதனால் ஒன்றும் பிரயோஜனம் இல்லை என்பேன். நல் முறைகள் ஆகவே மனமிரங்கி யான் சொல்ல வந்தேன்.


இப் புண்ணியங்கள் பெறும் பொழுது....... புண்ணியங்கள் பெற்று.... பெற்று..... நல் முறையாக எங்களை வணங்குபவர்களை முதலில் யாங்கள் புண்ணியம் தேட வைப்போம்.


புண்ணியம் தேடி தேடி அலைந்து திரிந்தால் யாங்கள் காட்சி அளிப்போம் இக்கலியுகத்தில். நான் நிச்சயமாய் காட்சியளிப்பேன்.என் பக்தர்களுக்கு ஆனாலும் எங்களுக்கு நல் முறைகள் ஆகவே எங்களுக்கு தகுந்தவாறு மனிதன் நடக்க வேண்டும் என்பேன், என்பதுதான் மெய். ஆனாலும் யாரும் நடப்பதில்லையே அதனால் தான் யாரும் எங்களை காணுவதும் இல்லை. இதனை கூட யானும் சொல்லிவிட்டேன்.


எங்களை பார்ப்பதற்கு எவ்வாறு என்பதையும் கூட உத்தரவிட வேண்டும் என்பதைக்கூட...... இதனை நடத்தி கொண்டு.......


புண்ணியம் செய்து கொண்டு இருந்தால் நிச்சயம் என் தரிசனம் கிடைக்கும் நிச்சயம் ஏதாவது ஒரு ரூபத்தில். பின் நல் முறைகள் ஆகவே என் தாயவளும் என் தந்தையவனும். சற்று நிதானத்துடன் தான் செயல்படுவார்கள்.


===========================

# ஈசனார் மாற்றி அமைத்த நவகிரக கட்டளை என்ன?

===========================


ஆனாலும் தண்டனைகள் உண்டு இதனையும் நான் சொல்லி விடுகின்றேன்.


இப்பொழுது முதன்முறையாக இப்பிறப்பில் செய்யும் தவறுகள் அடுத்த பிறவி எடுக்கும்பொழுது பல பாவங்கள் வினைக்கு ஏற்ப பிறவிகள் பின் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பதை கூட விதியில்.


===========================

# அன்புடன் ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய  ஆதி ஈசன் வாக்கு:


இப்பிறவியிலேயே செய்த தவறுகளுக்கு தண்டனையை இப்பிறவியிலேயே அனுபவிக்க வேண்டும் என்று விதி. யான் கட்டளை இட்டுவிட்டேன் நவகிரகங்களுக்கு. நவகிரகங்கள் விடாது என்பேன்.


( இவ் ரகசியம் அறிய பின்வரும் லிங்க் அதனை நீங்கள் கிளிக் செய்து , அதன் உள்ளே சென்று பார்க்கவும்.)


சித்தர்கள் ஆட்சி - x9 - அன்புடன் அகத்திய மாமுனிவர் - ராமேஸ்வரத்தில் சிவபெருமான் வாக்கு!


https://siththarkalatchi.blogspot.com/2021/06/x9.html

===========================


ஆனாலும் என் தந்தையோ கிரகங்களை அழைத்து நல் முறையாகவே பரிசளித்து விட்டான்.


கிரகங்களே மனிதர்களில் இந்த ஜென்மத்தில் இந்த ஜென்மத்தில் செய்யும் தவறுகளுக்கு இப்பொழுது நீங்கள் உடனடியாக தண்டனை கொடுத்து தீர்க்க வேண்டும் என்பதைக்கூட கூறிவிட்டான்.


இதுதான் உண்மை.


அதனால் தான் சொல்கின்றேன்.


பின் தவறுகள் செய்து விட்டு பின் என் தந்தையை வணங்கினால் நல் முறைகள் ஆகவே பின் நிச்சயமாய் இப்பிறவியில் செய்த தவறுகளால் இப் பிறப்பிலேயே அடி நிச்சயம் பலமாக உதிரும் என்பேன். நல் முறைகளாக சம்பந்தங்கள் பல உண்டு சம்பந்தங்கள் பெற்ற பின்புதான் யான் வாக்குகளாக சொல்கின்றேன் இன்றளவும் நல் முறையாக ஆசிகள். வடிவேலன் உரைத்த பொது வாக்கு முற்றிற்று.


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.