“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Tuesday, November 3, 2026

சித்தர்கள் ஆட்சி - 779 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - 27/09/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த 13 வது சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 6

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும். இறைவா, எங்களை நன்றாகப் படைத்தாய்! அனைத்தையும் நன்றாகக் கொடுத்திருக்கின்றாயே! இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!! 


அன்பு அன்னை லோபாமுத்ரா உடனுறை அன்புத் தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகள் போற்றி! போற்றி!! போற்றி!!!! 



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 27/09/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த  13 வது சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 6


நாள், நேரம்  :27/09/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 


இடம் : உலக நன்மைக்காக 13 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.


முழு கூட்டு பிரார்த்தனை நிகழ்வின் நேரலை :-  

https://www.youtube.com/live/PKohTFGg6R8 


===========================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு

===========================


ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.  


அப்பனே அம்மையே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். 


( பகுதி 5 அதன் தொடர்ச்சியாக….) 

===========================

# அன்புடன் போகர் சித்தர்  வாக்கு

===========================

https://youtu.be/PKohTFGg6R8?t=25243


போகர் சித்தர்:- இதை, எவை என்று  செப்ப, அனைவருக்குமே ஆசிகளோடு , கந்தனோடு வருகின்றேனே. 


இவை தன் மனமார, பல மனிதர்களிலும் கூட, எண்ணங்களே; புது புதுவான எண்ணங்கள். 


இதிலேயும் கூட, தீர சில வழிவகைகள். 


இவை மட்டும், அதாவது இன்னும் கூட, அதாவது ஆற்றல்கள், அதாவது அகத்தியன் சொன்னதைப் போல், பின் கலியுகத்தில் குறைந்து கொண்டே, குறைந்து கொண்டே செல்லக்கூடாது. 


அப்படி குறைந்து கொண்டே சென்றால், நிச்சயம் இன்னும் தீங்கு தான் நடைபெறும். 


***** அதற்கு, நிச்சயம் மாற்று, பின் பரிசுத்தமான அன்பினை வெளிப்படுத்த, ஆற்றலை, ஆற்றலை, பெருக்கெடுக்க, பெருத்து ஓட, அனைவரும், அனைத்து நலன்களையும் பெற, இதை யான் இங்கு குறிப்பிடுகின்றேன்.  ***** 


*****  சரியாகவே, இவ் நாணயத்தை பின் சரியாகவே, பின் இரவு தன்னில், சரியாகவே, பின் நீர் தன்னில் கூட, அதற்கு சரியாகவே, பின் மண்பானையை பயன்படுத்த வேண்டும். ***** 


*****  பின் பானையை நன்றாக பயன்படுத்தி, அதில் தன் உப்பு தன்னில் கூட, சிறிது பச்சை, பின் எவை, மாவு தன்னைக் கூட, அரிசியிலான  மாவு தன்னில் கூட, இட்டு, எதைத் தன் அறிய, இன்னும் விவரமாகவே. ***** 


சுவடி ஓதும் மைந்தன்:- போகர் சித்தர் சொன்னாருங்க, ஐயா. கொஞ்சம் எக்ஸ்பிளைன் பண்ணுங்க, ஐயா. தலைவலி எடுத்துக்கிச்சு கூட. 

https://youtu.be/PKohTFGg6R8?t=25324 


(பல மணி கணக்கில், ஒரே இடத்தில்….. வெகு நீண்ட நேரம் சுவடி படித்ததால் கடும் அயர்வு. பாடகர் தலைவலி தைலம் கொடுத்தார்கள்)


அடியவர் 2:- இந்த நாணயம் வந்து, இன்னைக்கு ஒன்னு கொடுப்பாங்க. சோ, அதைப் பத்தி வந்து போகர் பெருமான் வந்து சொல்றாரு. ஏன்னா, இந்த உலகத்துல வந்து, கலியுகத்துல வந்து, ஆற்றல் வந்து குறைஞ்சுகிட்டே வருது. ஆற்றல் குறையறது நல்லது இல்ல. குருநாதர் சொன்ன மாதிரி வந்து, ஆற்றல் எல்லாரும் பெருக்கணும். சோ, இந்த நாணயத்தை வந்து எப்படி வந்து உபயோகப்படுத்தணும்னு சொல்லி சொல்றாருங்க. முதல்ல.


சுவடி ஓதும் மைந்தன்:-  ஃபர்ஸ்ட், அகத்தியர் சொல்லிட்டாரு. அது எப்படி?


===========================

#  குருநாதர் முன்னர் உரைத்த வாக்கு -  செப்பு நாணய வாக்கு - பகுதி 1  

சித்தர்கள் ஆட்சி - 747 

இவ் வாக்குகளை  அறிய பின்வரும் லிங்க் அதனை நீங்கள் கிளிக் செய்து , அதன் உள்ளே சென்று பார்க்கவும். 

https://siththarkalatchi.blogspot.com/2026/09/747.html

===========================  


அடியவர் 2:-  அகத்தியர் ஐயா வந்து முதல்லே வந்து, அந்த நாணயத்தை வந்து, நம்ம காமாட்சி அம்மன் விளக்குல, தீபத்துல இட்டு, சோ, அந்த அந்த தீப ஒளி முன்னாடி, நம்ம நல்ல எண்ணங்களோட வந்து, பிரார்த்தனை பண்ணும் போதில, அந்த ஒளி வந்து, அந்த எண்ணங்களை வந்து, மேல இருக்கிற பிரபஞ்ச ஒளியோட வந்து, அதை கொண்டு சேர்த்து, நமக்கு நல்ல ஆற்றலை வாங்கி தரும்னு சொல்லி, அகத்திய பெருமான் சொல்லிட்டாரு. இப்ப போகர் சித்தர் வந்து சொல்ராங்க.


போகர் சித்தர்:- எவை, இதைத் தன் அறிய, அழகாகவே, அகத்தியன் எடுத்துரைத்தான். (செப்பு நாணய வாக்கு - பகுதி 1)


(நவராத்திரி வருவதால்) அழகாகவே, வரும் காலங்கள், பின் அம்பாளுடைய காலங்கள்.  இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டால் நன்று. 


ஆனாலும், இதற்கு புண்ணியங்கள், அகத்தியனே கொடுப்பான். ஏனென்றால், மனிதனால் இதை செய்யவும், பின் முடியாது. மனமும் வராது. சோம்பேறித்தனமாக போகிவிடும். இதனால், அகத்தியன் தன் இருக்கும், தன் கையில் இருக்கும் சில புண்ணியங்களை, மனிதனுக்கு கொடுப்பான்.


சுவடி ஓதும் மைந்தன்:-  போகர் பெருமான்,  என்ன சொல்றாருன்னா, சில வழிபாடுகள்  சொல்றது எல்லாம் வந்து, நம்மளால செய்ய முடியாது என்றார் வந்து. உங்களால செய்ய முடியாது என்றார் வந்து. இதற்கு வந்து, அகத்தியன் சொன்னார் இல்ல, அவரே கொஞ்சம் புண்ணியம் கொடுத்தா மட்டும்தான், உங்களால செய்ய முடியும் என்றார் வந்து. அதனால, அவர் கொஞ்சம் உங்களுக்கு தேவையான புண்ணியத்தையும், சக்தியையும் கொடுப்பார் வந்து. அதை கொடுத்து, நீங்கள் கொஞ்சம் வந்து, அவர் புண்ணியம் கொடுக்கும்போது, இதை செஞ்சீங்கன்னா, உங்களுக்குரிய ஆற்றல்கள் அதிகமாகும். இல்லை என்றால், சாதாரணமாக, சித்தர்கள் சொல்வது, நீங்கள் செய்ய முடியாது என்றாரு. ஏனென்றால், அந்த புண்ணியமும் மனிதரிடத்தில் இல்லை. அந்த புண்ணியமும் என்ன பண்றாங்கன்னா, அகத்தியர் வந்து சொன்னாங்க இல்ல, அதையே கொடுப்பார்ப்பா. 


https://youtu.be/PKohTFGg6R8?t=25453 


போகர் சித்தர்:-  எதை, ஏது என்று அறிய, பின் நல்மனதாக இருந்து விட்டாலே போதுமானது. யாங்கள் வந்து எழுத்துரைப்போம். 


தீய எண்ணங்களோடு இன்னும் பல பல விஷயங்கள் மனிதனுக்கு நடக்கப் போகின்றது. 


மனிதன் வாழ்வான், வாழ்வான் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றான். ஆனாலும், அவை பொய்யே. 


இதனாலே, அகத்தியன் கடைசி ஒரு வாய்ப்பை மனிதனுக்கு கொடுப்போம் என்று, அனைத்து, பின் நிச்சயம், பின் ஞானிகளையும் அழைத்து, அழைத்து வந்து கொண்டிருக்கின்றான். 


இதனை எச் சமைத்தாரும் உணர்வார். 


https://youtu.be/PKohTFGg6R8?t=25515 


இதைத் தன் அறிய, அகத்தியனே  அழைத்து, பல பண்புகளை பெருக்கி, நல் ஒழுக்கங்களை கற்றுக் கொடுத்தாலே போதும். 


சுவடி ஓதும் மைந்தன்:-  நல்ல எண்ணங்களை வகுத்து, நல்ல ஒழுக்கங்களை வந்து. அகத்தியர் வந்து கற்றுக்கொடுப்பார். 


போகர் சித்தர்:-  இதற்கும், கலியுகத்தில், அதாவது முற்றிக் கொண்டிருக்கும் கலியுகத்தில், நிச்சயம் பின் மனிதனிடத்தில் புண்ணியம் இருக்காது. பாவம் தான் அதிகமாக இருக்கும் அடா.


இதனாலே, பின் ஞானிகளை அழைத்து அழைத்து , தன் கையில் இருக்கும் சில புண்ணியங்களை மனிதனுக்கு தாருங்கள். நிச்சயம் தன்னில் கூட, மனிதன் அறிவை பின் பெருக்குவான். அதன் மூலம் அனைத்தும் நல்கும் என்று. 


சுவடி ஓதும் மைந்தன்:- அதனால்தான், எப்பா, மனிதனுக்கு யோசிக்கிற இறைவனை வணங்குறதுக்கும் நேரம் இல்ல. தன் பிரச்சனை பார்க்கறதுக்கே நேரங்களா இருக்குது வந்து. அதனால, அகத்தியர் என்ன பண்றாரு?


அடியவர்:- ஞானிகள் எல்லாம் வர வைக்கிறாங்க.


சுவடி ஓதும் மைந்தன்:-  ஞானிகள் எல்லாம் வரவழைச்சு, எப்பா, கலியுகத்தில் எல்லாமே பாவம் தான், மனுஷனுக்கு பாவம் தான் அதிகமா இருக்கு வந்து. புண்ணியம் குறைவா இருக்குது. நீங்க எல்லாரும், உங்கள் யார் யாரோ, அந்தந்த, இப்ப வந்து, யார் யாரு, அவரவர் எல்லா மதத்திலும்.


அடியவர் 2 :- எல்லா ஞானிகள் கையிலயும் இருக்கிற புண்ணியத்தை கொஞ்சம் கொஞ்சம் கொடுத்து.


சுவடி ஓதும் மைந்தன்:-  ராகவேந்தர், அவர் எல்லாம் ஒரு குருவா நினைக்கலாம். ராகவேந்தர் இருக்கலாம். சிலர் வந்து, எப்படிங்க ஐயா?


அடியவர் 2 :- சீரடி சாய்பாபா.


சுவடி ஓதும் மைந்தன்:-  சீரடி சாய்பாபா. எல்லாரையும், சில பேர் வந்து, எந்த சமயத்திலாவது, கிறிஸ்துவ மதத்திலும் சரி, அப்புறம் முஸ்லிம், அதான், நபிகள் நாயகம் சரி, புத்தர் ஆனாலும் சரி,  எல்லாருமே, ஒரு வாய்ப்பு கொடுங்க, மனுஷனுக்கு வந்து, புண்ணியம் இந்த கலியுகத்துல, எல்லாருக்குமே தெரியும் அது. அதனால, எல்லாருக்கும் உங்களை வணங்கி இருக்காங்க இல்ல, நீங்க வந்து, கொஞ்சம் புண்ணியத்தை கொடுங்க. அந்த புண்ணியத்தை கொடுத்து மனிதன் அறிவை பெருக்கி. அதன் மூலம் தெரிஞ்சு, நீங்க புண்ணிய பாதையில போங்கன்னு சொல்லிட்டு தான் வந்து என்ன பண்றாரு? 


அடியவர் :- அகத்திய பெருமான் வரவிக்கிறாரு.


===========================

# வருங்காலத்தில் நல் வாழ்க்கை வாழ…..

===========================


போகர் சித்தர்:-  இதனாலே, எதை என்று புரிய, பின் கடைசி வாய்ப்பை, பின் தரும் வாய்ப்பை, பயன்படுத்திக் கொள்ளுங்கள். பின் ஏன், எதற்காக என்றால், 


அனைவருக்குமே கஷ்டங்கள் தான் வாழ்க்கையில். 


நிச்சயம் தன்னில் கூட, நிச்சயம் இல்லாத வாழ்க்கை, மனிதன் வாழப்போகின்றான் வருங்காலத்தில்.


இதனாலே, அகத்தியன் அடிக்கடி, இப் பெருங் கூட்டத்தை கூட்டி கூட்டி, மனிதனுக்கு உரைத்துக் கொண்டிருக்கின்றான். 


பின் அதனால், நிச்சயம் தன்னில் கூட, எவ்வாறு என்பது எல்லாம். இதனால், அதை சரியாக பயன்படுத்துவனே, புத்திசாலியாக திகழ்வான். 


இல்லையென்றால், அடிமட்டத்திற்கு சென்றுவிடுவான்.


அப்பனே, இன்னும் தெளிவு பெற வேண்டியவன், தெளிவு பெற இல்லை என்றால், அப்பனே, நிச்சயம் உங்களை சார்ந்தோரும், அதாவது, பின் நீங்கள், பின் அன்பாக, பின் யாரெல்லாம், யாரிடமெல்லாம் இருக்கின்றீர்களோ, நிச்சயம் தன்னில் கூட, பின் அவர்கள் எல்லாம் கவலைப்பட்டு, நீங்களும் கவலைப்பட்டு, கடைசியில், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் மனக்குழப்பங்களாகி, நோய்கள் தான் வரும் அப்பா.


( போகர் சித்தர் வாக்குகள் முடிந்து , இப்போது மீண்டும் அகத்திய மாமுனிவர் வாக்கு ஆரம்பம் ஆனது)


https://youtu.be/PKohTFGg6R8?t=25715 


===========================

# மீண்டும் அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு ஆரம்பம்…..

===========================


குருநாதர்:- அப்பனே, எதை புரிந்து. அப்பனே, பின் அழகாக போகன் சொன்னான் அப்பா, சரியாகவே. இதைத்தான் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்பேன்  அப்பனே.


அப்பனே, எது என்று அறிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 


இதனால், அப்பனே, அறியாமல் இறைவனை வணங்கி, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பல மனிதருக்கு கெடுதல் வைக்காதீர்கள் என்பேன். அப்பனே. 


சொல்லிவிட்டேன், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 


அப்பனே, பல அப்பனே, அறிவில்லாத செயல்கள் எல்லாம் செய்து, அப்பனே, இறைவனிடத்தில் சென்றாலும் அழிவுகள் பலம் என்பேன் அப்பனே. 


வருங்காலத்தில், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட புண்ணிய ஸ்தலங்கள்  தான் அதிகம், அப்பனே பின் இறைவன் ஏற்படுத்துவான் என்பேன் அப்பனே. 


ஏனென்றால் அழுக்குகளோடு செல்கின்றீர்கள், மனிதர்கள். அதனால், அப்பனே, திருந்துங்கள், அப்பனே.


அப்பனே, எதை என்று புரிய, இதனால், அப்பனே, நல்விதமாகவே, நிச்சயம் ஆசிகளை யாங்கள் தயார், அப்பனே, கொடுப்பதற்கு. 


அப்பனே, நல் அருள்கள் கொடுப்பதற்கும். 


இதனால், அப்பனே, நிச்சயம் திருந்துங்கள். 


அப்பனே, திருந்துங்கள். 


===========================

# கவலைகள் ஏன் வருகின்றது?

===========================


குருநாதர்:- அப்பனே, கவலைகள் ஏன் வருகின்றது? அப்பனே, சொல்லுங்கள், பார்ப்போம். 


அப்பனே, பின் அதாவது, மனிதன் சரியில்லையப்பா. இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 


இதனால், அப்பனே, நிச்சயம் போகன் சொன்னது போல், யான் நிச்சயம் சில புண்ணியங்களை, அப்பனே, பின் நம்பினால் கொடுப்பேன், அப்பனே. 


நிச்சயம் நம்பாதவருக்கும் கொடுப்பேன் என்பேன் அப்பனே. 


ஆனாலும், அப்பனே, சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


அப்பனே, சரியாக பயன்படுத்திக் கொண்டால் அறிவு பலமாகும் என்பேன் அப்பனே. 


அறிவு பலமாகுகின்ற பொழுது நீ உன்னை அறிவாய். 


உன்னை அறிந்து, அப்பனே, எப்படி மீண்டும் புண்ணியத்தை, அப்பனே, நிச்சயம் பின் பெருக்கிக் கொள்வாய் என்பதெல்லாம் உணர்வாய். 


இல்லையென்றால் அழிவுதான் என்பேன் அப்பனே.


எதை என்று புரிய, அப்பனே. 


ஏனென்றால், அப்பனே, பின் வருங்காலத்தில், அப்பனே, நிச்சயம் கலியுகத்தில், அப்பனே, நிச்சயம் எதை என்று புரிய, அப்பனே, அதாவது அழிவும், அப்பனே, பலமாக அழிய வேண்டிய கூடிய சூழல் தான் உருவாகி உள்ளது என்பேன் அப்பனே. 


===========================

# அனைத்து அடியார்களுக்கும் நன்மை செய்ய வாய்ப்பு…

===========================

# 4 யுகங்களில் யாருக்கும் கிடைக்காத அருமையம வாய்ப்பு

===========================


குருநாதர்:- இதனால், அப்பனே, நன்மைகளை செய்வோம் என்பேன்  அப்பனே. 


எதை என்று அறிய , அப்பனே, சொல்லித் தாருங்கள் என்பேன்  அப்பனே தெரியாதவர்களுக்கு. 


இதுவும் ஒரு புண்ணியம், அப்பா. 


ஏனென்றால் கெட்டது, அப்பனே, பின் சொல்லிக் கொடுத்தால், அப்பனே, பாவங்கள் உன்னை சேர்ந்து ஒரு நாள் அடிக்கும். 


நல்லவை, அதானால் பின் எதை என்று அறிய, பின் என்னால் பின் எதுவும் செய்ய முடியவில்லையே என்று சொன்னாலும், பின் நிச்சயம் தன்னில் கூட யான் புண்ணியத்தை உங்களுக்கு அளிக்கின்றேன். 


அதன்படியே, நிச்சயம் தன்னில் கூட நீங்களும் பின் செய்யுங்கள். 


பின் கேட்பதும், கேட்காததும் அவர் இஷ்டமே. 


ஒரு நல்லதை சொல்லி, அவன் கேட்கவில்லை என்றால், அப் புண்ணியம் உனக்கு வரும் என்பேன்  அப்பனே. 


சொல்லிவிட்டேன் அப்பனே.


https://youtu.be/PKohTFGg6R8?t=25920 


===========================

# அகத்திய மாமுனிவர் பக்தன் என்ன செய்யவேண்டும் ?

===========================


குருநாதர்:- ஏனென்றால் அனைவரும் எங்களுக்கு ஒன்றே. 


அனைத்து ஜீவராசிகளும் எங்களுக்கு ஒன்றே. 


***** இதனால் அவ் ஜீவராசிகளை நிச்சயம் நல்வழிப்படுத்துவது மனிதனுடைய கடமை.  ***** 


***** பின் என் பக்தன், பின் வருங்காலத்தில் இவைதான் செய்ய வேண்டும். *****


***** இதை செய்தாலே என் பக்தனுக்கு என்ன தேவை, அதாவது சித்தர்கள் எவை என்று புரிய, பின் அது இறங்கி, பின் செய்வார்கள், சொல்லிவிட்டேன்.***** 


சுவடி ஓதும் மைந்தன்:-  என் பக்தன்னா யாருக்கு என்ன சொல்லிக்கொடுக்கணும்? நல்லது மட்டும் தான் சொல்லிக் கொடுக்கணும். நல்லது வந்து சொல்லிக் கொடுத்தாவே, நான் இறங்கி வந்து. அவங்களுக்கு என்ன தேவையோ, நான் செஞ்சு கொடுப்பேன்றாங்க.


குருநாதர்:- அப்படி இல்லை என்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட கலியுகத்தில், அப்பனே, நீங்கள் என்ன செய்கின்றீர்களோ, அதற்கு தகுந்தவாரே, அப்பனே, உதை கிடைக்கும் என்பேன்  அப்பனே.


அப்பனே, எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் உதையோடு, அப்பனே, பின் நிச்சயம் நிறுத்தி விடாமல், அழகாக, அப்பனே, கை கால்களிலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அனைத்து இடங்களிலும் நோய் ஏற்படுத்துவான், அப்பனே, இறைவன் சொல்லிவிட்டேன்.


சுவடி ஓதும் மைந்தன்:- உதை கொடுத்தா கூட தப்பிச்சுக்கலாம், நம்ம வந்து. ஆனா நோயும் காய்களும் முடக்கும் கொடுத்துட்டா என்ன ஆகும்?


அடியவர்:- எந்திரிக்க முடியாதபடி படுக்க வச்சிருவாங்க.


===========================

# இறைவன் ஏன் பெண்களுக்கு இன்னும் ஆற்றல் அதிகம் கொடுத்திருக்கின்றார்?

===========================


குருநாதர்:-  அப்பனே, எங்கு ஏது என்று புரிய, அப்பனே, பெண்களுக்கு இன்னும் ஆற்றல் அதிகம் கொடுத்திருக்கின்றான், அப்பனே. 


இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அதாவது நிச்சயம் பெண்கள், அப்பனே, முன்னோடியாக விளங்க வேண்டும் என்பேன்  அப்பனே. 


எதை என்று புரிய, அப்பனே, இவ்வாறாக பெண்களுக்கு ஏன் பல துன்பங்கள் வருங்காலத்தில் வருகின்றது என்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பெண்கள் எதை என்று அறிய, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட….


அதாவது நவராத்திரி கொண்டாடுவீர்கள், ஏன், எதற்காக என்று தெரியுமா, அப்பனே?  நிச்சயம் தன்னில் கூட, அதிக நாட்கள், அப்பனே, கொண்டாடுகின்றீர்கள் என்பேன்  அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன்:- அம்பாளுக்கு. நவராத்திரி வருது.


குருநாதர்:- அப்பனே, ஏன், எதற்கு, பின் யாருக்காவது தெரியுமா என்றால், நிச்சயம் தெரியாது எதை என்று புரிய. 


===========================

# பெண்கள் மாமிசம் உண்டால் என்ன நடக்கும்?

===========================


குருநாதர்:-  அப்பனே, பெண்களுக்கு பின் ஒன்றை, பின் நிச்சயம் சொல்கின்றேன். 


அதாவது பெண்களே, மாமிசம் உண்டால், நிச்சயம் பின் பலமாக, நிச்சயம் கர்மா எதை என்று அறிய. 


===========================

# பெண்கள்  மாமிசம் உண்பவர்களை  தடுக்கவில்லை என்றால்?

===========================


குருநாதர்:-   அதேபோல், பெண்கள் எது என்று கர்மா, பின் அதாவது எதை புரிய, நிச்சயம் தன்னில் கூட, அதாவது மாமிசம் பின் உண்பவர்கள், நிச்சயம் தன்னில் கூட, பெண்கள் பின் தடுக்கவில்லை என்றால், வாழ்க்கையே போய்விடும். 


அதாவது பெண்களுக்கு ஒரு விதிவிலக்கு உண்டு. எதை என்று புரிய, 


அதாவது விதியும், பின் எதை, பின் வேலை செய்ய, நிச்சயம் தன்னில் கூட, பெண்கள், பின் அதாவது மாமிசம் உண்பவர்களுடன்  பழகினால், பின் அவருடைய வாழ்க்கை அதுவோடு முடிந்துவிடும். 


கஷ்டத்தோடு, 


பின் எவை, பின் இவையெல்லாம், பின் ஏற்கனவே யாங்கள் எழுதி வைத்தோம், சுவடி தன்னில் கூட. 


மறைத்து விட்டார்கள். 


===========================

# பெண்கள்  மாமிசம் உண்பவர்கள் உடன் பேசினால் ?

===========================


குருநாதர்:-  அதனால்தான், நிச்சயம் பெண்கள், அதாவது நிச்சயம் தன்னில் கூட, எவ்வாறு என்பதெல்லாம், மாமிசம் பின் உண்பவர்கள், பின் நிச்சயம் தன்னில் கூட, பின் பேசினாலே, கர்மம் அதி விரைவாக ஒட்டிக்கொள்ளும். 


நிச்சயம் அவனுடைய கர்மம் கூட. 


இதனால்தான் சொல்கின்றேன், நிச்சயம் தன்னில் கூட, ஒதுங்கிக் கொள்ளுங்கள். 


இறைவனிடத்தில் மனதை செலுத்துங்கள். 


வாழ்ந்து கொள்ளுங்கள். 


புண்ணியம் சேர்த்துக்கொள்ளுங்கள்.


https://youtu.be/PKohTFGg6R8?t=26082


அடியவர்:- பெண்களுக்கு அதிக சக்தி இருக்குன்றாங்க. ஆணை விட சக்தி இருக்குன்றாங்க.


குருநாதர்:-  இவ்வாறாக, நிச்சயம் எவ்வாறாக, பெண்கள் அப்படி இல்லை என்றால், நிச்சயம் தன்னில் கூட, மாமிசம் உண்ணுபவனுடன் (அவர்களுடன்) பேசுபவர்களிடம்,   இவர்கள் சக்தி அங்கு போய்விட்டு, நிச்சயம் எதை என்று அறிய. 


சுவடி ஓதும் மைந்தன்:-  அம்மா என்ன சொல்றாருன்னா, பெண்களிடம் அதிகமா சக்தி இருக்குது வந்து. அதை வந்து தக்க வச்சுக்கோங்க.  பெண்கள் பொதுவா மாமிசம் சாப்பிடக்கூடாது வந்து. அப்படி நீங்க வந்து பெண்கள் மாமிசத்தோட சாப்பிட்டு வந்து பேசுனீங்கன்னாவே, அவருடைய கர்மாவும் சேர்த்த உங்ககிட்ட வந்துரும் அம்மா. அதனால வந்து பெண்கள் என்பது வந்து  ஜாக்கிரதையா இருக்கணும். 

தொடர்பு பேசக்கூடாது, பேசக்கூடாதுன்றாரு.


அடியவர்:- பேசினாலே கர்மா டிரான்ஸ்பர் ஆயிருமாம்.


===========================

# பெண்களை வைத்தே அதிக அளவு நிச்சயம் நாட்டை காக்க முடியும்

===========================


குருநாதர்:-  எது என்று புரிய. இதனால் பெண்கள் வைத்தே, நிச்சயம் தன்னில் கூட, அதிக அளவு, நிச்சயம் பின் காலத்தில் நாட்டை காக்க முடியும். அதனால்தான் சொல்கின்றேன். 


===========================

# இறைவன் -  ஆண்களை விட  பெண்களுக்குத்தான் அறிவு  பலமாக கொடுத்துள்ளார்.

===========================


பாடகர் :- (கேள்வி -  நம்ம பேசுற அவங்க மாமிசம் சாப்பிடுறாங்களா இல்லையா என்று எப்படி நமக்கு தெரியும்? ) 


குருநாதர்:-  எதை, எது என்று புரிய அப்பனே, அறிவு, பின் பலமாக, நிச்சயம் பின் ஆண்களை விட பெண்களுக்குத்தான் கொடுத்திருக்கின்றான் இறைவன், அப்பனே. 


தெரிந்து கொள்வார்கள், அப்பனே அவர்கள் என்ன செய்தாலும், அப்பனே. 


நீ, அப்பனே, அதாவது உன் மனைவி, அப்பனே, எதை என்று கூட, உன்னை விட, அப்பனே, பலசாலி. அது கூட தெரியாமல், அப்பனே, பக்கத்தில் உட்காந்து இருக்கின்றாயே, அப்பனே. முட்டாள். அதனால்தான் உன்னை பைத்தியக்காரன் என்று சொல்லிவிட்டேன் நான்.


https://youtu.be/PKohTFGg6R8?t=26202 


===========================

# வேலைக்கு செல்லும் பெண்கள் கவனத்திற்கு…..

===========================


குருநாதர்:-  எதை எது என்று புரிய இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட, பெண்கள் எதை என்று புரிய. 


பின் அதாவது பின் அதாவது வேலைக்கு பின் செல்வதெல்லாம், நிச்சயம் தன்னில் கூட, அதிக அளவு ஆண்கள் எவை என்று புரிய. 


அதாவது மாமிசம் உண்டு எவை என்று கழிக்கின்றார்கள். 


இதனால் பெண்களும் அவரிடத்தில் பேசுகின்ற பொழுது, வாழ்க்கையே முடிந்துவிட்டது. நிச்சயம் தன்னில் கூட, 


கடைநாளும், நிச்சயம் பின் எவை என்று அறிய. நிச்சயம் பின் ஒழுங்காகவே, அதாவது சண்டைகள் இட்டுக்கொண்டே, மனக்குழப்பத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 


===========================

# பெண்கள் மாதம் - புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை…

===========================


குருநாதர்:-  ஆனாலும் இதையெல்லாம் தவிர்க்கத்தான், நிச்சயம் தன்னில் கூட, இதிலிருந்து எதை என்று புரிய. நிச்சயம் பின், அதாவது பின்  முதல்வனாக, முதல்வனாக எதை என்று கூட, புரட்டாதி இரண்டாவதாக, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது வரிசையாக, பின் தை மாதம் வரை, பெண்கள் மாதங்களாகவே, நிச்சயம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. 


இதை பின் பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெறுக. 


பின் இந்நேரத்தில், இவ்வாதத்தில், பின் நிச்சயம் தன்னில் கூட, அனைத்திற்கும் காரணமான நல்விதமாக, பின் எண்ணி எண்ணி, இறைவனை வணங்குகின்ற பொழுது, அனைத்தும் நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது உங்களை சார்ந்தோரும், பின் புண்ணியம் பெருகி, நன்முறையாகவே. 


அதனால் பெண்களுக்கு பின் எவை என்று மாதமாக தொடங்கிவிட்டது. 


இதில் தன் வாழ்வதும், வீழ்வதும், உங்களிடத்திலே. 


https://youtu.be/PKohTFGg6R8?t=26295


===========================

# யார் அதி முட்டாள் ?

===========================


குருநாதர்:-   எதை என்று புரிய இதனால் நிச்சயம் தன்னில் கூட, தர்மத்தை நிலைநாட்டாமல் , எதையும் செய்தாலும், நிச்சயம் பொய் பொய்யே. 


இறைவனை வணங்கு. 


இறைவனுக்கு அபிஷேகம் செய். 


அங்கு அதாவது ராகு கேது ஸ்தலத்திற்கு செல். 


இதைச் செய்தால், இவ் மந்திரம் செய்தால், இதில் பலிக்கும். 


இப்படி செய்தால், உன் குடும்பம் பின் நலமாகும் என்பதையெல்லாம் சொல்பவன்….. 


முட்டாள். 


முட்டாள். 


===========================

# யார் இறைவன் பக்கத்தில் இருப்பவர்கள் ?

===========================


முதலில் தர்மத்தைப் பற்றி பேச வேண்டும். 


பின் உனக்கு கஷ்டமா, தர்மத்தை செய். 


தன் உயிரைப் போல் மற்ற உயிரையும் நினை. 


ஜீவராசிகளை கொல்லாதே. என்றெல்லாம் எவன் ஒருவன் எடுத்துரைக்கின்றானோ, அவன்தான் இறைவன் அருகில் இருக்கின்றான். 


மற்றவையெல்லாம் காகிதத்துக்கு ஆசைப்பட்டு சொல்லிக் கொண்டிருக்கின்றான். 


அவனும் அழிவான். 


அவன் பின்னே செல்பவரும் அழிவார்கள், அப்பா.


===========================

# ஏன் கலியுகத்தில் ஜாதகங்கள் அதிகமாக பார்க்கப்படும்?

===========================


அப்பனே, பின் கலியுகத்தில் ஜாதகங்கள், அப்பனே, எடுக்கப்படும் அப்பா, அதிகமாக. 


ஆனால் அதில் என்ன உண்மை உள்ளது என்பது தெரியாது அப்பா. 


ரகசியமாக ஒரு வார்த்தையில் சொல்கின்றேன், அப்பனே. 


பின் எடு, அப்பனே, எழுது கோலை. 


( எழுது பலகையில் எழுத உத்தரவு இட்டார்கள் ….) 

https://youtu.be/PKohTFGg6R8?t=26372 



(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 27/09/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த  13வது சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …..) 


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.