இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும். இறைவா, எங்களை நன்றாகப் படைத்தாய்! அனைத்தையும் நன்றாகக் கொடுத்திருக்கின்றாயே! இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!
அன்பு அன்னை லோபாமுத்ரா உடனுறை அன்புத் தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகள் போற்றி! போற்றி!! போற்றி!!!!
அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 27/09/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த 13 வது சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 5
நாள், நேரம் :27/09/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம் : உலக நன்மைக்காக 13 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.
முழு கூட்டு பிரார்த்தனை நிகழ்வின் நேரலை :-
https://www.youtube.com/live/PKohTFGg6R8
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே அம்மையே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்.
( பகுதி 4 அதன் தொடர்ச்சியாக….)
( சிவபுராணம் பாடல் பாடி முடித்த பின்னர்…..)
https://youtu.be/PKohTFGg6R8?t=20066
===========================
# குலதெய்வ வழிபாடில் வாயில்லா அப்பாவி ஜீவராசிகளை பலியிடுவது குறித்த வாக்கு.
===========================
அம்மை அடியவர் :- ( மேடையின் முன் வந்து விளக்கம் கேட்ட போது ) குலதெய்வ வழிபாட்டுல…… இதைப் பற்றி ஐயா வந்து தெளிவா விளக்கினாங்க……… (ஆடியோ தெளிவில்லை )
குருநாதர்:- தாயே, அறிந்தும் எவை என்று புரிய, முதலில் அறிவை பலப்படுத்த வேண்டும். அவ் அறிவை பின் எவ்வாறு பலப்படுத்துவது என்பதையெல்லாம் நிச்சயம் யான் தெரிவித்துக் கொண்டே வருகின்றேன். அதை சரியாக பயன்படுத்துவனுக்கு, அதாவது, நிச்சயம் அனைத்தும் தெரியும்.
அடியவர்:- அம்மா கேக்குறாங்க, "குலதெய்வ வழிபாடு"ன்னு சொல்லிட்டு, ஆடு, மாடுகளை, கோழிகளை வெட்டுறாங்களே, அது சரியான்னு கேக்குறாங்க. அதான் குருநாதர் சொல்றாங்க பதில்.
குருநாதர்:- தாயே, எது என்று புரிய, உன்னைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கின்றேன். பல வழிகளில், பல உரைகளில், யான் நிச்சயம் உரைத்துவிட்டேன் இதனை. இறைவனுக்காக நிச்சயம் தன்னில் கூட எது என்று புரிய, பின்—அதாவது, படைப்பது நிச்சயம்; ஆனால் மீண்டும் யார் உண்ணுகின்றார் அதனை?
அடியவர்:- மனிதன் தான் சாப்பிடுறான்.
குருநாதர்:- ஆனால் பாவம் என்று, இறைவன் மீது பழி போடுவது, "இறைவனுக்கு கொடுத்து விட்டேன்" என்று. அவ்வளவுதான், தாயே.
தாயே, அப்படியும் நிச்சயம் தன்னில் கூட, இறைவனுக்கு—அதாவது, குலதெய்வத்திற்கு—பின் கொடுத்தாலும், நிச்சயம் தன்னில் கூட விட்டு விடுவது தானே. இதனை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று. ஏன் மனிதன் அப்படி செய்வதில்லை? ஏனென்றால் மனிதன் அவ்வளவு அறிவாளி இல்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- ஏன் அது மாதிரி பண்றது இல்ல? மனிதன் அவ்வளவு பெரிய அறிவாளி எல்லாம் இல்லப்பா.
குருநாதர்:- நிச்சயம் அறிவு இருந்தால் பிழைத்துக் கொள்வான். எதிலிருந்து? கஷ்டத்திலிருந்து பிழைத்துக் கொள்வான். ஆனால் அறிவில்லையே.
எப்பொழுது மனிதனுக்கு அறிவு பலமாக வருகின்றதோ, அப்பொழுது கஷ்டங்கள் தானாகவே விலகிப் போகும். அறிவு வளர்வதற்காகத்தான், நிச்சயம், இறைவனே கஷ்டத்தை கொடுக்கின்றான்.
===========================
# குருநாதர், சித்தர்கள் வந்து எடுக்கும் பாடத்தில் எப்படி தேர்ச்சி பெறுவது?
===========================
குருநாதர்:- பின் நீங்களும் நினைத்துக் கொள்ளலாம். இப்பொழுதெல்லாம் உங்களுக்கு அறிவை வளர்த்துக் கொள்ள ஒரு பாடத்தை கற்பித்துக் கொண்டிருக்கின்றேன் யான். அதாவது, சித்தர்கள் வந்து பாடத்தை கற்பித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதில் பின் தேர்வு பெறுவதும், தேர்வு பெறாததும், பின் நிச்சயம் தன்னில் கூட உங்கள் முடிவு.
அடியவர்:- பாருங்க. அகத்திய பெருமான் நமக்கெல்லாம் வந்து கிளாஸ் எடுத்துட்டு இருக்காங்க. போர்டு வச்சு கிளாஸ் எடுக்குறாங்க. புரிஞ்சுக்கோங்கப்பா, வாழ்க்கைன்னா என்ன, துன்பம்னா என்ன, துன்பத்திலிருந்து எப்படி தப்பிக்கிறது, உண்மை என்ன, அப்படின்னு தர்மம் என்னன்றதை சொல்லித் தராங்க குருநாதர். ஒரு வாய்ப்பு கொடுக்குறாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- உங்கள் அறிவு வந்து பலமா போச்சுன்னா என்ன ஆகும்?
அடியவர்:- உங்க துன்பத்திலிருந்து நீங்க தப்பிச்சுக்கலாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- அறிவே இல்ல, அப்ப எப்படி துன்பத்திலிருந்து தப்பிக்கிறது?
அடியவர்:- அந்த அறிவு வேலை செய்கிறதை இறைவன் கஷ்டத்தை கொடுக்கிறார்.
குருநாதர்:- ஏன், எதற்கு, இவ்வாறெல்லாம் எது என்று புரிய, இதனால் நிச்சயம் தன்னில் கூட, அதனால் பின் யான் சொல்வதெல்லாம், பின் அறிவை வளர்க்க கூடிய பாடங்கள்.
இதே போலத்தான், அனைத்து ஞானிகளும் கூட, நிச்சயம் அறிவை பின் பெறுவதற்காகவே, நிச்சயம் உங்களுக்கு உரைத்துள்ளார்கள். ஆனால் அவ் அறிவு புத்தகத்தை படிப்பதே இல்லை.
ஏனென்றால் அறிவு வளர்ந்து விடுமே.
ஏனென்றால் நீங்கள் பிழைத்துக் கொள்வீர்களே.
எதை என்று புரிய, நீங்களே நிச்சயம் சோம்பேறித்தனமாக இருந்து, அறிவை வளர்த்துக் கொள்ளாமல், துன்பத்தை தேடுகிறீர்களே, நியாயமா?
===========================
# ஒவ்வொரு குறைக்கும் ஒவ்வொரு திருத்தலம் உண்டு.
===========================
குருநாதர்:- எதை, ஏது என்று அறிய, நிச்சயம் யாங்கள் அமைத்தோம். ஒவ்வொரு குறைக்கும் ஒவ்வொரு திருத்தலம் உண்டு. மனிதனுள்ள அங்கங்கள், பின் எங்கெங்கு பழுதடையும் என்பதெல்லாம் தெரியும்.
இதை உணர்த்தியே, நிச்சயம் எவை என்று அறிய, இன்னும் பல திருத்தலங்களை உருவாக்கியுள்ளோம்.
அங்கு கூட, பின் எவை என்று கூட செல்ல முடியாது. ஏனென்றால், பின் அவ் அறிவு இருந்தால்தான் மட்டுமே அங்கும் செல்ல முடியும்.
அறிவு இல்லை என்றால், பின் ஏன் அங்கு போக வேண்டும்? எதற்காக போக வேண்டும்? ஏதோ சொல்கின்றார் என்று.
இதுதான் நிச்சயம் தன்னில் கூட. அறிவு இல்லாதவன்.
அறிவு உள்ளவன் யோசிப்பான். அவன் யோசிப்பது, அதாவது, அறிவு நிச்சயம் கொடுத்தால், அதாவது, துன்பத்தை கொடுத்தால் மட்டுமே யோசிப்பான்.
துன்பத்தை கொடுக்கவில்லை என்றால், யோசிப்பது கூட கிடையாது.
பாவத்தை சேர்த்து வைத்தே செல்வான் மனிதன். இதுதான் பாவத்தை சேர்ப்பதில் மிகவும், மிகவும், பின் முதல் தரமாக விளங்குவது மனிதனே. அதிவிரைவில்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதிகமா, சீக்கிரமா, பாவத்தை சேர்ப்பது ஃபர்ஸ்ட் டைம் யார்ன்றான்னா, மனுஷன் தான்.
அடியவர்:- கோல்டு மெடலிஸ்ட்.
சுவடி ஓதும் மைந்தன் :- பாவத்தை சேர்ப்பதில் கோல்டு மெடலிஸ்ட்.
===========================
# உங்களுடைய உண்மையான பணம் எது?
===========================
குருநாதர்:- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட குறை கூறவில்லை உங்களை. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட தெரியாதப்பா உங்களுக்கு. அப்பனே, அவ்வளவுதான்.
அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, பின் நிச்சயம் காகிதத்தின் பின்னாலே ஓடுகின்றீர்கள். அவ்வளவுதான்.
சுவடி ஓதும் மைந்தன் :- காகிதத்தின் பின்னால் ஓடுறீங்க. பணத்திற்கு பின்னால் ஓடிக்கொண்டிருக்கின்றீர்கள்.
குருநாதர்:- அப்பனே, அது ஒரு நாள் பறந்துவிடும் காற்று வந்தால் அப்பனே. அது தெரியவில்லையே, அப்பனே.
அப்பனே, என் பணம் போய்விட்டதே. என் பணம் போய்விட்டதே. உன்னுடைய பணம் எது? நிச்சயம் தன்னில் கூட.
***** புண்ணிய பணம் தான் உன்னுடையது. *****
சுவடி ஓதும் மைந்தன் :- உண்மையான அசெட் ( சொத்து) சொத்துன்னா புண்ணியம். நாம சேர்க்கிற புண்ணியம் தான். காகிதம் என்ன பண்ணும்? காத்து அடிச்சா?
அடியவர்:- பறந்துரும்.
===========================
# என் இறைவன் உங்களிடம் உள்ள பணத்தை பிடுங்குகின்றார்? என்ன ரகசியம்?
===========================
குருநாதர்:- அவ் காற்று தான் இறைவன்.
அப்பனே, எது என்று அறிய, பட்டம் போல் மேல் பறந்துவிடும் அப்பனே.
பின் எவை என்று கூற வராதப்பா.
ஏதோ எங்கேயோ போய் விழுந்துவிடும். பின் எவனுக்கோ போய் சேர்ந்துவிடும்.
அப்பனே, இதனால் காகிதம் கொடுப்பான் என்பேன் அப்பனே.
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட கடைசி வரை அதை பிழைத்துக் கொள்ள, அதாவது பிழைத்து, அதாவது நிச்சயம் தன்னில் கூட அதை வைத்துக்கொண்டு வாழ தெரியவில்லையே.
அப்பனே, இக் காகிதத்தை வைத்து இவன் ஏதாவது செய்கின்றானா என்று பார்ப்போம் என்று இறைவன் கொடுத்தால்…. அப்பனே, தேவையில்லாத எல்லாம் நீங்கள் செய்கின்றீர்கள். அதனால்தான் உன்னிடத்தில் எடுத்து, பின் பிறருக்கு இறைவன் கொடுத்து விடுகின்றான்.
***** அப்பனே, இது நிச்சயம். *****
***** இதுதான் இறைவனுடைய தர்மம். *****
அப்படியும் பின் நிச்சயம் இல்லை என்றால், நிச்சயம் அப்பணம் எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட மருத்துவத்திற்கு செலவழிப்பான் இறைவன்.
பாருங்கள். எது என்று புரிய, பாருங்கள்.
எது என்று அறிய, அதாவது உன் உடம்பிற்கு என்ன சேர்த்து வைத்துள்ளீர்கள்? அதை கூறுங்கள் முதலில்?
உன் உயிருக்கு என்ன பின் சேர்த்து வைத்துள்ளீர்கள்? அதை கூறுங்கள் முதலில்?
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, சொல்லுங்க ஐயா. உங்களை தான் கேக்குறாருங்க ஐயா.
அம்மை அடியவர்:- ( ஆடியோ தெளிவில்லை )
குருநாதர்:- தாயே, பின் அப்பனே, நிச்சயம் சொல்லுங்கள் பார்ப்போம். இதை தெரியாமல் கூட இறைவனை வணங்கினால், இறைவன் கண்ணுக்கு தெரிய மாட்டான்.
ஆனால் இறைவன் மீண்டும் மீண்டும் சொல்கின்றேன், இறைவன் கண்ணுக்கு தெரியக்கூடியவன்.
ஆனால் நிச்சயம் அறிவில்லை என்றால், இறைவனும் கண்ணுக்கு தெரிய மாட்டான்.
இறைவன் பக்கத்திலே இருந்தாலும் பார்க்க முடியாது.
===========================
# உன் உயிருக்கும், உடம்பிற்கும் என்ன உத்தரவாதம்?
===========================
குருநாதர்:- தாயே, தந்தையே, எது என்று புரிய, மீண்டும் சொல்கின்றேன். உன் உயிருக்கும் பின், அதாவது உடம்பிற்கும் என்ன உத்தரவாதம்?
சுவடி ஓதும் மைந்தன் :- சொல்லுங்க.
………….
குருநாதர்:- எதை, ஏது என்று புரிய, சொல்லுங்கள் பார்ப்போம்?
ஒரு அடியவர் :- பாவம், புண்ணியம்.
குருநாதர்:- நிச்சயம் பாவம் புண்ணியம் என்பதெல்லாம் இங்கு சொல்லக்கூடாது.
ஒரு அடியவர் :- தான , தர்மம்
குருநாதர்:- எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட தான தர்மம் என்றெல்லாம் சொல்லக்கூடாது.
ஒரு அடியவர் :- ………
குருநாதர்:- எதை என்று புரிய, அதையும் சொல்லக்கூடாது.
ஒரு அடியவர் :- ………
குருநாதர்:- எதை, ஏது என்று புரிய, அதனால் நீங்கள் செய்வதுதான் எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூற, பின் உங்களுக்கு உத்தரவாதம்.
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்கள் என்ன செய்திருக்கிறீர்களோ, அதுதான் உங்களை காப்பாத்தும். அப்ப நீங்க வந்து கெட்டது செஞ்சா என்ன பண்ணும்? அதுதான் உங்க உடலுக்கும் உயிருக்கும் உத்தரவாதம். கெட்டது செஞ்சீங்கன்னா, என்ன செஞ்சீங்கன்னா, அது உங்களுக்கு உத்தரவாதம்.
குருநாதர்:- எது என்று புரிய, இன்னும் மேலே சொல்.
சுவடி ஓதும் மைந்தன் :- இன்னும் இதற்கு மேல போங்கப்பா யாராவதுன்றாரு.
ஒரு அடியவர் :- ( நல் வினை, தீவினை )
சுவடி ஓதும் மைந்தன் :- அதுதான் சொல்லிட்டாரு.
அடியவர் :- அதெல்லாம் சொல்லாதீங்க. தான தர்மம் சொல்லியாச்சு. பாவம் புண்ணியம் சொல்லியாச்சு. வேற புதுசா சொல்லுங்க.
அடியவர் :- இப்ப ஒரு வார்த்தை சொன்னாங்க. நீங்க செய்யறது தான் உங்க உடலுக்கும் உயிருக்கும் உத்தரவாதம்னாங்க. இந்த மாதிரி புதுசா யோசிங்க.
அடியவர் 3 :- எண்ணம் போல் வாழ்க்கை.
குருநாதர்:- தாயே, மீண்டும் சொல்கின்றேன். எது என்று புரிய,
சுவடி ஓதும் மைந்தன் :- திருப்பி கேக்குறாங்க. உயிருக்கும் உடம்புக்கும் உயிருக்கும் என்ன உத்தரவாதம்?
ஒரு அடியவர் :- ………………
குருநாதர்:- தாயே, யான் சொல்லியும் அறிவில்லையே உங்களுக்கு.
***** அறிவுதான். *****
சுவடி ஓதும் மைந்தன் :- நான் முதல்லயே சொல்லிவிட்டேன் அம்மா.
உங்கள் உயிருக்கும், உடலுக்கும். உத்தரவாதம் எது?
சுவடி ஓதும் மைந்தன் :- அறிவு.
குருநாதர்:- பின் இவ் அறிவு இல்லாமல் எதனை பின் எப்படி இறைவனை வணங்கினாலும், நிச்சயம் வணங்கினாலும், நிச்சயம் தன்னில் கூட இறைவன் ஏற்பதில்லை சொல்லிவிட்டேன். இதனால் அறிவோடு, இதனால் அறிவு என்னென்ன நீங்கள் சொல்லுங்கள்?
சுவடி ஓதும் மைந்தன் :- அறிவு இல்லைன்னா, நீங்க என்ன பண்ணாலும் இறைவனை ஏற்கிறதுக்கு போவதில்லை. அறிவு இருக்கணும்ன்றார் வந்து. அறிவு என்னென்ன அறிவுன்னு கேக்குறார். சொல்லுங்கம்மா.
ஒரு அடியவர் :- ………………
குருநாதர்:- தாயே, எது என்று புரிய, வாய்க்கு வருவதெல்லாம் பேசிவிடாதே.
ஒரு அடியவர் :- ………………
குருநாதர்:- தாயே, முதலிலே இதை குறிப்பிட்டேன்.
ஒரு அடியவர் :- தன்னை அறிதலாம்.
குருநாதர்:- அப்பா, எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் எவ்வாறு என்பதெல்லாம், நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு? பின் அதாவது, தன்னை அறிதல் எப்பொழுது?
அப்பனே, மனிதன் தன்னைப் பற்றி அறிந்து கொள்வதே இல்லையே.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்படி இருந்து எப்படி இறைவனை அறிந்து கொள்வான்?
குருநாதர்:- அப்பனே, நீ யார் என்றே உனக்கு தெரியவில்லை.
இறைவனையா அறியப் போகின்றாய்?
எதற்காக வந்தோம் என்றே தெரியவில்லை.
இறைவனையா , பின் அறிந்து கொள்ளப் போகின்றாய்.
எவ் வேலைக்காக? அதாவது, எதற்காக? எவற்றிற்காக? எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட.
உன் புண்ணிய பலம் என்ன?
உன் பாவ பலம் என்ன? என்று உன்னாலே அறிந்து கொள்ள முடியவில்லையே.
அப்பொழுது இறைவனை எப்படி அறியக்கொள்ளப் போகின்றாய் அப்பனே?
தெரிந்து கொள்ளுங்கள்.
ஏனென்றால், ஒருவன் பாவத்தையும், நிச்சயம் புண்ணியத்தைப் பற்றி தெரிந்து கொண்டால் மட்டுமே இறைவனை, அப்பனே, பின் செல்வதற்கான வழிகள்.
ஆனால் அதை யார் சொல்வார்கள் அப்பனே? இவ்வுலகத்தில் யாரும் செப்பப் போவதில்லை.
இதனால் கஷ்டத்தோடே நீந்திக் கொண்டிருங்கள் அப்பனே.
https://youtu.be/PKohTFGg6R8?t=20982
===========================
# ஏன் பிறவிகள் வளருகின்றன? பரம ரகசியங்கள்…..
===========================
குருநாதர்:- இதை நிச்சயம் இதைத் தெரியாமல் எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட.
அதாவது, பின் உன் பிள்ளைகளை நீங்கள் நல்ல அறிவாளியாக, நன்றாக படிக்க வேண்டும். பெரிய தொழில் அமர்த்த வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்.
இறைவன் அது போலத்தானே நினைப்பான்.
அப்பனே, எது என்று புரிய, இதனால் அறிவு கொடுத்து அறிவில்லை என்றால் என்ன செய்வான்? துன்பத்தை நிச்சயம் வைத்தே தீருவான்.
பின் அதிலிருந்து நிச்சயம் அறிவு கற்பிக்க….
அதாவது கற்றுக்கொள்ளவில்லை என்றால், மீண்டும் துன்பத்திலே அடித்து அடித்து…. அடித்து….. அடித்து……
மீண்டும் பிறவிகள் கொடுத்து….. கொடுத்து….. கொடுத்து…..
மீண்டும்….. மீண்டும்…...
பின் எவை என்று அறிய, பின் அதாவது பிறவிகள்.
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய உலகம் அறியாத அன்னதான ரகசியங்கள்…..
===========================
குருநாதர்:- எதை, ஏது என்று புரிய. அன்னதானத்தை அளிக்கின்றீர்கள். எதற்காவது, யாருக்காவது தெரியுமா?
அப்பனே, சொல்லுங்கள் பார்ப்போம். இதிலிருந்து யான் தெரிந்து கொள்கின்றேன், நீங்கள் அறிவாளி என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- சாப்பாடு ஏன் போடுறோம்? ஏன் அன்னதானம் போடுறோம்? யாருக்காவது தெரியுமா? சொல்லுங்க.
குருநாதர்:- அப்பனே, பார்ப்போம். உடனடியாக நீங்கள் சரியான பதில் சொன்னால், உனக்கு என்ன வரம் வேண்டுமோ, இப்பொழுதே யான் கொடுக்கின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- இதுக்கு யாராவது வந்து சரியா பதில் சொன்னா, உங்களுக்கு என்ன வரம் வேண்டுமோ….கேட்டது கிடைக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- இது மனிதன் சொல்லல. தெய்வம் சொல்றார். யார் சொல்றாரு?
அடியவர்:- குருநாதர் அகத்திய பெருமான்.
அம்மை அடியவர்:- பிற உயிர்களுடைய துன்பத்தை துடைக்க வேண்டும். பசிப்பிணியை….
குருநாதர்:- தாயே, ஓரம் கட்டிவிடு. ( இது சரியான பதில் அல்ல )
அடியவர் 5 :- ஐயா, அன்னத்தை அளிக்க அளிக்க, மனம் தயாள குணமாக மாறும்.
குருநாதர்:- அப்பனே, அமர்ந்துவிடு. ( இது சரியான பதில் அல்ல )
அடியவர் 5 :- பசியை தீர்க்கிறது.
குருநாதர்:- அப்பா, நிச்சயம் அதாவது, மனப்பாடம் செய்து வந்து ஒப்பளிக்கின்றாய். ( இது சரியான பதில் அல்ல )
அடியவர் 6 :- ……..
குருநாதர்:- எது என்று அறிய, அப்பனே.
(இவ் கேள்வி பதில் நேரத்தில் அங்கு அன்னதானம் கூட்டுப் பிரார்த்தனை குழு அடியார்களால் செம்மையாக நடந்து கொண்டிருந்தது… பின் வரும் நேரலை காணொளியில் காண்க….)
![]() |
https://youtu.be/PKohTFGg6R8?t=21136
ஒரு அடியவர் :- அன்னத்தை விட வேற எதுவுமே வந்து முக்கியம் இல்லை மனிதர்களுக்கு.
குருநாதர்:- அப்பனே, இல்லை.
அடியவர் 7 :- அன்னம் எதுக்கு கொடுக்குறாங்கன்னா… நம்ம எல்லாருமே ஒரே உயிரினம் தான். நம்மளுடைய எல்லாருமே பார்த்தீங்கன்னா, நம்மளுடைய அப்பா, நம்மளுடைய அம்மா, நம்ம தங்கைகள் தான். இன்னைக்கு வந்து ஒரு பணக்கார குடும்பத்துல நம்ம பிறந்திருப்போம். இதுக்கு முன்னாடி பார்த்தீங்கன்னா, நம்ம ஒரு ஏழை குடும்பத்துல பிறந்திருப்போம். அப்படிப்பட்ட நம்மளுடைய ஜெனரேஷன்கள், நம்ம வரும்போது, நம்ம அந்த அன்னம் அளிக்கும் போது, இன்னைக்கு பிறந்த நம்ம அப்பாதான் அங்க சாப்பிடுவாங்களான்னு கேட்டீங்கன்னா, கிடையாது.
நம்ம எந்த ஜென்மத்துல எடுத்த, நம்ம அப்பா அம்மாவும் அங்க வந்து சாப்பிடுவாங்க. அதுக்காகத்தான் நம்மளுடைய உயிர், நம்ம அனைவருமே ஒரே பிணைப்பு. யாருமே தனித்தனி கிடையாது. பணக்காரன், ஏழை, நல்லவன், கெட்டவன் யாருமே கிடையாது. எல்லாமே ஒரே இனம். கேட்டீங்கன்னா, மனித இனம்.
நம்ம எங்கேயுமே வந்து சாப்பாட்டுக்கு வந்து, நம்ம கஷ்டப்படக்கூடாதுன்றதுக்காக தான், நம்மளுடைய இனம் வந்து முதல்ல பிச்சை எடுக்கக்கூடாது. நம்ம இனம் பிச்சை எடுத்தாலே, நமக்கு கஷ்டம். அதுக்காக தான் எல்லாருக்கும் அண்ணன்னு ஒன்னு கொடுக்கப்பட்டாங்க. அதுக்காக தான் நம்ம சாப்பிடுறோம்.
குருநாதர்:- தாயே, எது என்று புரிய, நிச்சயம் எவை என்று புரிய, அனைவரும் கற்றுக்கொள்ளுங்கள். இவ்வுலகத்திற்கு தெரியப்படுத்துகின்றேன். நிச்சயம் தன்னில் கூட
பல மனிதனிடத்தில் பல பாவங்கள் ஒளிந்துள்ளது. நிச்சயம் தன்னில் கூட. இதனால்தான் சுபகாரியங்களும் சரி. எங்கிருந்தாலும் சரி. அன்னத்தை கொடுக்கின்றோம். ஏன்? எதற்காக என்றால், நிச்சயம் தன்னில் எவ்வாறு என்பதெல்லாம்…
நிச்சயம் அன்றைய காலகட்டத்தில், அதாவது பின் பல யுகங்களாக மாறி,
***** நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது பின் இறைவன் வந்து, நிச்சயம் ஏதோ ஒரு வழியில் பின் உட்கொள்வான். *****
***** அவ் இறைவன் உட்கொள்கின்ற பொழுது, அனைவரையும் கர்மாத்தையும் எடுத்துக்கொண்டு, அனைவரும் பின் நிச்சயம், பின் சந்தோஷமாக, பின் எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட கேட்ட வரத்தை இன்னும் பின் அள்ளிக் கொடுங்கள் என்று வரத்தை கொடுத்துவிட்டு செல்வான். இதுதான் தர்மம். *****
இதுதான் பின் இதனுடைய அன்னத்தை பின் ஏன் பிறருக்கு அளிக்கின்றோம் என்று, இதனால்தான் தாயே, மற்றவையெல்லாம் என்னால் ஏற்க முடியாது.
அடியவர்:- அம்மா, இது யாருக்கும் தெரியாதுன்னுட்டாங்க. உலகத்துக்கு நாங்க சொல்றோமா. முதன்முறையா சொல்லிட்டு இருக்காங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- ஏன் தெரியுமா? கேட்டுக்கோங்க. அகத்திய பெருமான் சொல்றார். மனுஷன் சொல்றது இல்ல. என்ன சொல்றாருன்னா, ஒரு சுபகாரியம் இல்லத்துல நடக்குது. ஒரு சுபகாரியம் நடத்துறோம். எதனால நடத்துறோம்? எல்லாருக்கும் பசியாற்றவா நடத்துறோம்? அன்றைய காலத்துல அப்படி இல்லை என்றார் வந்து. அப்ப சாப்பிடும் பொழுது, இதே மாதிரி சுகமும்….. எப்பவுமே நல்லா இருக்கணும்னு சொல்லிட்டு வந்து…. இருக்கறதுக்காக வேண்டி…. அங்க வந்து இறைவன் வருவாராம். இறைவன் வந்து என்ன பண்ணுவாராம்? சாப்பிட்டா மறைமுகமா சாப்பிட்டு….. திருப்தியா சந்தோஷமா இருங்க. இதே மாதிரி எல்லாத்துக்கும் அள்ளிக் கொடுங்கன்னு சொல்லிட்டு என்ன பண்ணுவாராம்?
அடியவர்:- ஆசீர்வாதம் பண்ணுவார்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆசீர்வாதம் பண்ணி மத்தவங்க கர்மத்தையும் எடுத்துட்டு போவார். ஓகேங்களா?
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய உலகம் அறியாத கூட்டுப்பிரார்த்தனை சாதுக்களுக்கு அன்னதான ரகசியங்கள்…..
===========================
குருநாதர்:- எதனால் பின் சாதுக்களை அழைத்து அன்னமிட்டோம் என்றால், நிச்சயம் அதில் இறைவன் வருவான். அதாவது நீங்கள் கர்மம் செய்து வந்து உட்கார்ந்து இருக்கின்றீர்கள் அல்லவா? இதில் அவன் எடுத்துவிட்டு சென்று விடுவான். அவ்வளவுதான். போதுமா?
எது என்று கூறிய பின் உங்களை ஏன் இங்கு அழைக்கின்றேன்? எதற்காக என்றெல்லாம் நிச்சயம் எவை என்று…
பின் ஒருவன், அதாவது பின் சிலர் எவை என்று தர்மங்களுக்கு இறைவன் வரப்போவதில்லை.
***** இதுபோல் (கூட்டுப் பிரார்த்தனை) நன்மை செய்து, மக்களுக்கு நன்மை தெரிவிப்பவரிடமே இறைவன் உட்கார்ந்து அன்னத்தை சாப்பிட்டு, நிச்சயம் தன்னில் கூட பரிபூரணமாக நன்றாக இருங்கள் என்று உத்தரவாதத்தை கொடுத்துவிட்டு செல்கின்றான். அதேபோல் நீங்களும் நன்றாக இருப்பீர்கள். நிச்சயம் தன்னில் கூட இறைவன் வரத்தை கொடுத்தால், நிச்சயம் வரம் வரம்தான். *****
===========================
# வணக்கம் அடியவர்களே, அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய முதல் வகையான புண்ணியங்கள் செய்வது எப்படி என்று பின் வரும் வாக்குகளில் படித்து அவசியம் தெரிந்து கொள்க. அனைவருக்கும் தெரிவியுங்கள்.
# சித்தர்கள் ஆட்சி - 51 : மிக உயரந்த முதல் வகையான புண்ணியம் - அகத்திய மஹரிஷி வாக்கு 14.3.2022
https://siththarkalatchi.blogspot.com/2022/03/51-1432022.html
அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் சித்தர்கள் ஆட்சி வலைத்தளத்தில் - இவ் வாக்குகள் ஓட விட்டுள்ளோம். அதனை பயன்படுத்தி கொள்க. கர்மம் சேராமல் முதல் தர புண்ணியங்கள் கூட்டுப்பிரார்தனைகள் மூலம் செய்து அனைவரையும் வாழ வையுங்கள். கோடி புண்ணியங்கள். கூட்டு பிரார்த்தனையின் மூலம் அடையும் நன்மைகள் சொல்லவே இயலாது. அவ்வளவு நன்மைகள்.
===========================
அடியவர்:- ஒவ்வொரு கூட்டு பிரார்த்தனைக்கும் சாதுக்களை கூப்பிட்டு அன்னதானம் போடுறோம். இப்ப போன தடவை கூப்பிட்டப்போ, சாதுக்களை போட்டப்போ, அண்ணாமலையாரும் உண்ணாமலை அம்மாவும் வந்து சாப்பிட்டு போனாங்க என்று குருநாதர் அகத்திய பெருமான் சொல்லியிருக்காங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- எப்பவுமே எதுக்காக? எல்லாரும் நீங்க எல்லாம் ஒருவேளை ஏதோ ஒரு விதத்துல கர்மத்தை போட்டு உட்கார்ந்து இருக்கிறீங்க வந்து. அதனால இதுபோல் அன்னம் அளித்தால், இறைவன் ஏதோ ஒரு… இது மாதிரி. அதுவும் எப்ப வருவாரு? நாலு பேருக்கு நன்மை வந்து செய்யறப்போ தான் வருவார் இறைவன். வந்து பார்ப்பார். வந்து எப்பா பரிபூரணமா எல்லாம் இதே போல செஞ்சுகிட்டு…. உங்கள் கர்ம வினைகள் அவர் என்ன பண்ணுவாரு? ஈர்த்துருவாரு. இறைவன் வந்து ஈர்த்துருவார். இதுதான் அன்னதானம்.
https://youtu.be/PKohTFGg6R8?t=21374
குருநாதர்:- அப்பனே, எது என்று அறிய அப்பனே, ஏதோ அப்பனே. அதாவது உங்கள் இல்லத்தில், அப்பனே, உணவு இல்லையா அப்பனே? சொல்லுங்கள் நீங்களே பார்ப்போம்?
சுவடி ஓதும் மைந்தன் :- உங்க வீட்ல எல்லாம் சாப்பாடு இல்லையா? சாப்பாடு இல்லையா?
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய உலகம் அறியாத ஏழுமலையான் ரகசியங்கள்….
===========================
# நீங்களும் எப்படி கோடீஸ்வரராக ஆகலாம்?
===========================
குருநாதர்:- ஏன்? எதற்காக? அனைவரிடத்திலும் இறைவன் அனைத்தும் கொடுத்திருக்கின்றான், எதை, ஏது என்று புரிய.
இதற்கு உத்தரவாதம் ஏழு மலையானே.
அனுதினமும் பின் எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட வருவார்கள். அவனிடத்தில் உட்கொள்வார்கள்.
ஆனாலும் பின், அதாவது ஒரு நாள் பின் பத்து முறை நிச்சயம் உட்கொள்வான்.
பின் எவை என்று புரிய, அங்கே அமர்ந்து, வரும் கர்மத்தை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட எடுத்து, அதாவது நதியில், அதாவது நிச்சயம் அவன் நீரில் கரைத்து விடுவான்.
இதற்கு உத்தரவாதம் யார் என்றால், நாராயணனே.
***** அதனால்தான் கோடீஸ்வரனாக திகழ்கின்றான் அவன். பிறர் கர்மத்தை பின் எடுப்பதனால். *****
நீங்கள் அதேபோலே மற்றவர்களுக்கு நன்மை செய்து, பின் எதை என்று புரிய. இறைவனைப் பற்றி புரிய வைத்து, நிச்சயம் தன்னில் கூட பின் ஜீவகாருண்யத்தை பிடித்தால், நீங்களும் கோடீஸ்வரராக ஆகலாம்.
அடியவர்:- ஏழுமலையான் எப்படி கோடீஸ்வரன் ஆனாரு என்று சொல்லிட்டாரு.
சுவடி ஓதும் மைந்தன் :- ஏழுமலையான் எப்படி கோடீஸ்வரன் ஆனார்? சும்மாவா? பத்து முறை சாப்பிடுவாராம் வந்து. அவர்தான் எடுத்துக்காட்டுன்றாரு. யாரு? பத்து முறை சாப்பிடுவாராம் வந்து. எல்லாரையும் பார்ப்பாராம் வந்து. சரி, ஓகே, தப்பு பண்ணிட்டான்னு என்ன பண்ணுவாரு? எல்லாருக்கும் சரி போய் பொழைச்சுக்கோங்கன்னு சொல்லிட்டு விட்டுருவாராம் வந்து. அதேபோல, நீங்க வந்து தானத்தையும் (கூட்டுப்பிரார்தனை வைத்து ) தர்மத்தையும், சாப்பாடு பூட்டு நல்ல எல்லோருக்கும் கொடுக்கும் பொழுது என்ன பண்ணுவாரு?
===========================
(அனைவரையும் ஒன்று கூடி + கூட்டுப் பிரார்த்தனை நடத்தி + சிவபுராணம் ஓதி + பல இறைவன் பாடல்களை பாடி + சித்தர்கள் உரைத்த தர்மத்தை , சித்தர்கள் உரைத்த நாடி வாக்குகளை நன்கு எடுத்து சொல்லி மக்களுக்கு புரிய வைத்து, அவர்களை புண்ணியங்கள் செய்ய தூண்டி + அன்னதானம் அங்கு செய்தால்…..)
===========================
அடியவர்:- இறைவன் வந்து அந்த கர்மங்களை எடுத்துருவார் .
சுவடி ஓதும் மைந்தன் :- அனைவரின் கர்மத்தை எடுத்துட்டு, நீங்க வந்து என்ன ஆகலாம்?
குருநாதர்:- இப்பொழுது சொல்லுங்கள், பார்ப்போம். அன்னதானம் எதற்காக கொடுக்கின்றோம் என்று?
கொடுக்க, அதாவது அன்னத்தை எதற்காகவே கொடுக்கின்றோம் என்று தெரியவில்லை.
இதுவே தெரியவில்லை. இறைவனா, நீங்கள் பார்க்கப் போகின்றீர்கள்? என்ன நியாயம், தாயே, தந்தையே?
அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஏதோ பின், அதாவது தன்னுடைய பின் ஏதோ காசுகள் இருக்கின்றது என்று நாலு பேருக்கு அப்பனே கொடுத்து விடுவது. யானும் அன்னதானம் செய்துவிட்டேன் என்று…
===========================
# எப்படி செய்தால் அது அன்னதானம் ? உலகம் அறியாத அன்னதான ரகசியங்கள்…..
===========================
சுவடி ஓதும் மைந்தன் :- ஏதோ என் கையில இருக்குது. ஒரு நாலு பேருக்கு, ஒரு பத்து பேருக்கு கொடுத்துட்டேன்னு சொல்லிட்டு பெருமைக்கு செய்கிறது. நான் அன்னதானம் செஞ்சுட்டு, செஞ்சுட்டேன்ன்னு சொல்றது…
குருநாதர்:- எது என்று புரிய, அப்படி செய்வது அன்னதானம் இல்லை. நல்லதை சொல்லி, எதை என்று புரிய, நிச்சயம் ஏன் பின் திருமணத்தில் எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட பின் ஏது? எதற்காக? புரிய…
சுவடி ஓதும் மைந்தன் :- ஏன் திருமணத்தில் சாப்பாடு போடுறாங்க? எதற்காகத்தான் அன்றைய காலகட்டத்துல இதெல்லாம் கடைபிடிச்சிருக்காங்க. திருமணத்துல வந்து இந்த திருமணம் நல்லா இருக்கணும். இந்த திருமணம் வந்து நீடோடி வாழனும்னு சொல்லிட்டு எல்லாரும் சாப்பாடு போடுவாங்க. அப்ப என்ன பண்ணுவாரு? இறைவன் வந்து சாப்பிட்டு ஆசீர்வாதம் பண்ணுவார். நல்லா இருங்கடாப்பா. இதே மாதிரி தானம் தர்மம் செஞ்சுகிட்டு நல்லா இருங்க. நல்லா இருங்கன்றாரு.
குருநாதர்:- ஆனால் இன்றைக்கு எதை என்று புரிய, மாமிசம் மாறிவிட்டது. இதனால் கலியுகத்தில், அதாவது பின், அதாவது பின் எவை என்று மனைவி கணவன் சண்டைகள் தான் நிச்சயம் வரும்.
சுவடி ஓதும் மைந்தன் :- இன்னைக்கு மாமிசம் ஒரு கல்யாணம் இடத்துல என்ன பண்றாங்க? மாமிசம் வெட்டுறாங்க. அப்ப கண்டிப்பாக புருஷனுக்கும் மனைவிக்கும் சண்டைகள் வந்தே தீரும்.
குருநாதர்:- அவை மட்டுமில்லாமல், இவளும் பின் அவனும் பின் புரிந்து கொள்ளாமல் சண்டைகள் பிரிவு. இவையெல்லாம் ஏற்படுவது உறுதி.
இதனால் எது என்று புரிய, மீண்டும் சொல்கின்றேன். இறைவனைப் பற்றி எப்பொழுது எதை என்று கூற, இறைவனை எப்படித்தான் பார்க்கப் போகின்றீர்கள் நீங்கள்?
இப்படி இருந்தால், நிச்சயம் தன்னில் கூட, அதாவது எது என்று புரிய?
அப்பனே, இதனால் நிச்சயம் தன்னில் கூட இன்னும் சில புண்ணியங்கள் உங்களுக்கு தருகின்றேன். அதை வைத்து பிழைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான்.
===========================
# எப்படி மாமிசம் உண்பது உலக அழிவுடன் தொடர்பு உண்டாகின்றது?
===========================
குருநாதர்:- எதை என்று புரிய, நிச்சயம் மாமிசம் எப்பொழுது பின் உயர்வாக செல்கின்றதோ, அழிவுகளும் உயர்வாக செல்லும். உச்சத்தில் செல்லும்.
குருநாதர்:- எதை, ஏது என்று புரிய வருவான் அப்பா, நிச்சயம் கலியுகத்தில் எதை என்று அதிக விரைவிலே.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாத்துக்கும் இதெல்லாம் தண்டனை கொடுக்குறதுக்கு யார் வருவான்? ஒரு மனுஷன் வருவான். உடனடியா வருவான்ன்றாரு. வந்து சீக்கிரமாவே வருவார். வருவார்.
குருநாதர்:- ஏனென்றால் கலியுகத்தின் பின் முற்றிக் கொண்டே போய்க்கின்றது. அழியுகம் தொடங்கப் போகின்றது. இதனால் வந்தே தீர வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால கலியுகம் முடிந்து அழியுகம் ஸ்டார்ட் ஆகப்போகுது. இந்த முடிவில அவர் வந்தே ஆகணும்.
குருநாதர்:- எதை, ஏது என்று கூட, நிச்சயம் கலியுகத்தில் கடைசியாக பின் இறைவனே மனித ரூபம் எடுத்து பின் கொல்வான் அனைவரையும்.
எது என்று புரிய அப்பனே, இன்னும் சொல்கின்றேன் அப்பனே.
இதனால் அப்பனே, அனைவரும் தூங்குகின்றார்கள். அப்பனே, இதனால் அப்பனே, ஒரு தட்டு. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு தட்டு. தட்டுங்கயான்றாரு. எல்லாரும் தூங்குறாங்க.
திருக்கைலாய வாத்திய குழு:- (திருக்கைலாய வாத்தியம் முழங்க உத்தரவு )
https://youtu.be/PKohTFGg6R8?t=21705
ஈசனார் அடியவர்:- ( சிவபுராணம் பாடல் )
https://youtu.be/PKohTFGg6R8?t=23994
பாடகி:- ( ஆடுகின்றனடி தில்லையிலே பாடல்…)
https://youtu.be/PKohTFGg6R8?t=24692
சுவடி ஓதும் மைந்தன் :- ( முருகன் பாட்டு பாடுங்க ….. )
பாடகி:- ( பச்சைமயில் வாகனனே…)
https://youtu.be/PKohTFGg6R8?t=24923
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 27/09/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த 13வது சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …..)












No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.