“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Tuesday, November 3, 2026

சித்தர்கள் ஆட்சி - 775 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - 27/09/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த 13 வது சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 2

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும். இறைவா, எங்களை நன்றாகப் படைத்தாய்! அனைத்தையும் நன்றாகக் கொடுத்திருக்கின்றாயே! இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!! 


அன்பு அன்னை லோபாமுத்ரா உடனுறை அன்புத் தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகள் போற்றி! போற்றி!! போற்றி!!!! 


அன்பு அன்னை லோபாமுத்ரா உடனுறை அன்புத் தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகள் போற்றி! போற்றி!! போற்றி!!!! 




அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 27/09/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த  13 வது சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 2


நாள், நேரம்  :27/09/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 


இடம் : உலக நன்மைக்காக 13 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.


முழு கூட்டு பிரார்த்தனை நிகழ்வின் நேரலை :-  

https://www.youtube.com/live/PKohTFGg6R8 


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 27/09/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த  13 வது சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை

===========================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு

===========================


வாக்கு ஆரம்ப நேரலை :- https://youtu.be/PKohTFGg6R8?t=9677

ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.  


அப்பனே அம்மையே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். 


===========================

# மனிதனிடத்தில் உள்ள முதல் குறை என்ன?

===========================


குருநாதர்:- ஆனாலும் பல பல குறைகள் மனிதனிடத்தில். 


***** ஆனாலும் முதல் குறையாக வருவது நிச்சயம், அதாவது மனது சரியில்லை. *****


அதாவது மனதில் தீய எண்ணங்களே. 


குருநாதர்:- இதுதான் முதல், பின் இம் முதலே நிச்சயம் எதை என்று புரியாமல் வாழ்ந்து வருகின்றான். அதில் முதல் குறையாகவே இருந்தாலே இறைவனை நாடவும் முடியாது. அன்பையும் பெற முடியாது. 


சுவடி ஓதும் மைந்தன்:- அகத்திய பெருமான் என்ன சொல்றார் தெரியுமா? முதல் குறையே என்னது இந்த உலகத்துல?


அடியவர்:- மனசு.


சுவடி ஓதும் மைந்தன்:-  மனசுதான். முதல் குறையே மனசுதான். அந்த மனசு சரியில்லை என்றால் நீங்க இறைவனை கண்டாலும், இறைவனை வணங்கினாலும் ஒன்னும் பிரயோஜனம் இல்லை.


அடியவர்:-  சரியில்லைன்னா என்ன? தீய எண்ணங்கள்.


சுவடி ஓதும் மைந்தன்:- தீய எண்ணங்கள் அதெல்லாம் இருந்து ஒன்னும் பிரயோஜனம் இல்லை. அப்ப இறைவனின் அன்பும் நம்மளுக்கு கிடைக்காது. 


===========================

# எது மனிதனின் தீய “கதி”யாக மாறுகிறது? துற்கதி, அவகதி ஏன் உண்டாகின்றது?

===========================


குருநாதர்:- அப்பனே, கலியுகத்தில் இவைதான் நடந்து கொண்டிருக்கின்றது. 


அப்பனே, மனதில் அப்பனே வெவ்வேறான தீய அழுக்குகள் அப்பனே.  


இப்படி வைத்துக் கொண்டு நிச்சயம் தன்னில் கூட இறைவனிடம் வேண்டினாலும் அப்பனே. 


ஆனால் அப்பனே சொல்கின்றேன், தீய எண்ணங்கள் வைத்துக்கொண்டு அப்பனே பின் வாழ்பவனுக்கு அனைத்தும் தீயதாகவே நடைபெறும் என்பேன்  அப்பனே. 


***** இதுதான் அப்பனே பின் எவை என்று கூற கதி. *****


சுவடி ஓதும் மைந்தன்:-  விதி, மதி, கதி. இதுதான் கதி என்றார். மனசுல தீய எண்ணங்களோட வாழ்ந்து கொண்டிருக்கிறவங்களுக்கு வந்து…. எல்லாமே தீயதுதான் நடக்கும். 


அடியவர்:-  பெரியவங்க சொல்லியிருக்காங்க. எண்ணங்கள் போல வாழ்வோம்னு சொல்லிருக்காங்க. அதான் சொல்றாங்க. 


சுவடி ஓதும் மைந்தன்:-  அதான் மனதில் வந்து நீங்க வந்து நல்ல எண்ணத்தை வணங்குறீங்க, ஏற்படுத்துறீங்கன்னா என்ன நடக்கும்? 


அடியவர் 2 :-  நல்லது நடக்கும். 


சுவடி ஓதும் மைந்தன்:- நல்லது நடக்கும். தீய எண்ணங்கள்? 


அடியவர்  :-  "உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினுந் தள்ளாமை நீர்த்து."  


(குறளின் பொருள் :- மனிதனின் எண்ணங்களும் குறிக்கோள்களும் எப்போதும் உயர்ந்ததாகவே இருக்க வேண்டும். அந்த உயர்வானது கைகூடாவிட்டாலும், அவ்வாறு எண்ணுவதை கைவிடக் கூடாது.திருக்குறள் நூலில் ஊக்கமுடைமை அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள 596-வது குறளாகும். )


https://youtu.be/PKohTFGg6R8?t=9789 


===========================

# உங்கள் ஜாதகத்தை எந்த ஜோதிடரிடமும் சென்று  பார்க்காமலேயே, யோக ஜாதகமாக மாற்றுவது எப்படி? - இறைவனின் பரம ரகசியங்கள்.

===========================


குருநாதர்:- அப்பனே, எதை என்று புரிய கலியுகத்தில் அப்பனே மனிதன் தீய எண்ணங்களோடு தான் வாழ்வான். அப்பனே, அதனால் நேரங்கள் எல்லாம் அப்பனே தீய நேரங்களை தான் என்பேன் அப்பனே. 


ஏனென்றால் அப்பனே நிச்சயம் ஜாதகத்தை பார்த்தாலும், அப்பனே நல நேரம் உனக்கு சொல்வார்கள். தீய நேரம் என்று சொல்வார்கள். ஆனாலும் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட உன் மனநிலை எப்படியோ தான் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே. 


அப்படி பின் உன் மனநிலை சரியில்லை என்றால், பின் தீய நேரம். அப்பனே, பின் சரியாக இருந்தால் நல்ல நேரம். அப்பனே, இவ்வளவுதான். அப்பனே, வாழ்க்கையே முடிந்துவிட்டது. இது தெரியாமல் அப்பனே ஓடுகின்றார் மனிதர் எங்கெங்கோ அப்பனே இறைவனை தேடி, 


அப்பனே நிச்சயம் தன்னில் கூட, உன் மனது அப்பனே சரியாக இருந்தால், அங்கே இறைவன் குடி கொள்வான். அப்பனே, இறைவன் எதை என்று கூற, உனக்கு என்ன தேவையோ, பின் அதாவது மனதுக்குள்ளே இறைவன் குடி கொண்டிருக்கும் பொழுது, அப்பனே அவ்  மனது என்ன நினைக்கின்றதோ, அதை செய்வான் என்பேன்  அப்பனே. நிச்சயம் தன்னில் கூட அப்பனே எவை என்று அறிய அப்பனே, 


பின் ஆனாலும் தீய மனதுடன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் இறங்குவான் என்பேன்  அப்பனே. நீங்க தீயதாகவே நிச்சயம் தன்னில் கூட பின் எண்ணிக்கொண்டிருந்தால், அத்தீயவையும்  உனக்கு கொடுப்பான். அப்பனே, தெரிந்து கொள்ளுங்கள். 


குருநாதர்:-  அப்பனே, தெரியாமல் வாழாதீர்கள் என்பேன்  அப்பனே. தெரியாமல் பின் நிச்சயம் தன்னில் இறைவனை வணங்கினாலும் பிரயோஜனம் இல்லை என்பேன்  அப்பனே. இறைவனுக்கு தான் கெட்ட பெயர். 


அடியவர்:- சிவாய நம. மனசுதான் இறைவன்ட்டாரு குருநாதர். அப்பனா, இந்த மனசுக்குள்ள உங்களுக்குள்ள என்ன எண்ணங்கள் இருக்குதோ, அதுதான் இறைவன் கொடுப்பாரு. நீங்க வெளியில போய் ஜாதகத்தை பார்த்து எனக்கு நல்ல நேரம், எனக்கு கெட்ட நேரம். 



https://youtu.be/PKohTFGg6R8?t=9873 


சுவடி ஓதும் மைந்தன்:-  ஐயா, என்ன சொல்றாருன்னா இதுல நல்ல நேரம், கெட்ட நேரம் ஒன்று இல்ல. நீங்க நல்லதாவே நினைச்சா நல்ல நேரம். உனக்கு எல்லாமே நல்ல நேரம். நீங்க மனசுல கெட்டத வச்சு பண்ணினா, உனக்கு எல்லாமே கெட்ட நேரம். அப்ப, இறைவனை வந்து நல்ல மனசோட நல்ல எண்ணங்கள் இருந்தா, இங்க வரவழைக்கலாம் மனசுல. அப்ப, இறைவன் நீங்க என்னென்ன நினைக்கிறீங்களோ, அதை செய்வார். 


அப்ப, இன்னும் ஒரு எக்ஸ்ட்ரா, ஒரு ஹை லெவல்ல போயிட்டு, அகத்திய பெருமான் சொல்றாரு, நீங்க தீய எண்ணங்களை வச்சிருந்தாலும், இறைவன் இங்க வருவாரு. அப்ப, நீங்க அந்த என்ன நினைக்கிறீங்களோ, தீயவை நினைக்கிறீங்களா? அதுக்கு தகுந்த மாதிரியும் இறைவன் தீயதாக கொடுப்பார். ஐயா, புரியுதுங்களா? ஐயா, எல்லாருக்கும் புரியுதுங்களா? 


அதனால வந்து எண்ணங்கள் மேன்மையா இருக்கணும். அதனால வந்து நல்ல நேரம், கெட்ட நேரம் இல்ல. இது சொல்லுவாங்க? ஆனா வந்து, அப்பா, உனக்கு நல்ல நேரமா போயிட்டு இருக்குது, கெட்ட நேரமா போயிட்டு இருக்கு. அப்படி எல்லாம் இல்லன்றாங்க  சித்தர்கள். 


நல்ல எண்ணத்தோடு வாழ்ந்தால், உங்களுக்கு நல்லது நடக்கும். கெட்டதோடு வாழ்ந்தால், கெட்டது நடக்கும். அதனால நீங்க வந்து கெட்ட மனசோட போயிட்டு, இறைவனை வணங்கினாலும் பிரயோஜனம் இல்லை. இறைவனுக்கு கெட்ட பெயர் வாங்கி கொடுக்காதீங்கடான்றார். இறைவனுக்கு கெட்ட பெயர் வாங்கி கொடுக்காதீங்க. ஏன்? 


https://youtu.be/PKohTFGg6R8?t=9944 


குருநாதர்:-   அப்பனே, எதை என்றறிய நிச்சயம் தன்னில் கூட அப்படி செய்தால், அப்பனே இரு மடங்கு உங்களுக்கு நிச்சயம் அப்பனே, பின் எது என்று கூற தண்டனைகள் வந்தே தீரும் அப்பா. 


சுவடி ஓதும் மைந்தன்:-  நீங்க அப்ப தீய எண்ணத்தோடு இறைவன் வணங்கினா?


அடியவர்:-  இரண்டு மடங்கு, 


சுவடி ஓதும் மைந்தன்:- டபுள் மடங்கு வரும். டபுள் மடங்கு?


அடியவர்:-   கெட்டதுதான் நடக்கும். 


சுவடி ஓதும் மைந்தன்:- கெட்டதுதான் நடக்கும். 


===========================

# பக்தி என்பது என்ன அப்பனே?

===========================

https://youtu.be/PKohTFGg6R8?t=9964 


குருநாதர்:-   அப்பனே, இன்றைய காலகட்டத்தில் பக்தி என்பது யாருக்குமே தெரியவில்லை என்பேன்  அப்பனே. நிச்சயம் தன்னில் கூட பக்தி என்பது என்ன அப்பனே? நிச்சயம் தன்னில் கூட சொல்லுங்கள் பார்ப்போம்? 


சுவடி ஓதும் மைந்தன்:-  பக்தி என்பது யாருக்குமே தெரியவில்லை. 


குருநாதர்:-  அப்பனே, ஆனாலும் மனிதன் யான் பக்தன் என்று சொல்லிக் கொண்டிருப்பான் அப்பனே. ஆனால் எதன் மீது பின் பக்தன் என்று தெரியவில்லை என்பேன்  அப்பனே. அவ்வளவுதான் அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன்:-   ஆனால் நான் பக்தன். மனுஷன் என்ன சொல்லுவான்? நான் பக்தன்பான்னுவான். எதன் மீது பக்தி? எதன் மீது பக்தன்?


அடியவர்:-  எதுக்குப்பா பக்தன் நீன்னு கேக்குறாரு.


குருநாதர்:- அப்பனே, சொல்லுங்கள், பார்ப்போம். அப்பனே, எதன் மீது பக்தி செலுத்த வேண்டும்? நீங்களே சொல்லுங்கள். 


சுவடி ஓதும் மைந்தன்:-  அப்ப, உங்களை கேட்கிறார். எதன் மீது பக்தி செலுத்த வேண்டும்? பக்தன் என்றது….  இவர் பக்தன் என்றாரு. அது பொய் என்றாரு. எதன் மீது பக்தி  இவருக்கு? தெரியலையே. அப்ப, பக்தி என்பது என்ன? சொல்லுங்கமா? பக்தி என்பது என்ன? கேக்குறாரு.


அடியவர்:-  சொல்லுங்க, சொல்லுங்க.


சுவடி ஓதும் மைந்தன்:-  யாராவது கேளுங்கயா? பக்தி என்பது என்ன? சொல்லல. உங்களுக்கே கேள்வி. இதுதான் அகத்தியர். ஏன்னா சில சைட்ல வந்து எல்லாம் பக்தின்னு சொல்றாங்க. பக்தி ஏன்?


https://youtu.be/PKohTFGg6R8?t=10034 


அம்மை அடியவர் :- மனசுல தூய்மையான எண்ணத்தையும், தூய்மையான இதையும் நினைத்து சாமி கும்பிடுறது.


குருநாதர்:-  இதையும் சொல்லி, சொல்லி அழித்துவிட்டார்கள். 


சுவடி ஓதும் மைந்தன்:-  இதை சொல்லி சொல்லி?


அம்மை அடியவர் :- அப்ப யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாம, தூய்மையா நாட்டோட இருக்கணும்.


குருநாதர்:-  எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட. ஆனாலும் யார் கேட்டாலும், இவை தன் பின் சொல்வது எது என்று கூற கடினம் தான். யானே சொல்கின்றேன். 


***** ஒன்றும் தேவையில்லை. இறைவா !!!!! உன் அன்பு மட்டும் போதும் எனக்கு என்று, நிச்சயம் யார் ஒருவர் நினைக்கின்றாரோ, அதுதான் பக்தி. *****


https://youtu.be/PKohTFGg6R8?t=10062 


கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள்:- ( மகிழ்ச்சியில் , சந்தோஷ புரிதலில் பலத்த கை தட்டல்கள்) 


சுவடி ஓதும் மைந்தன்:-  பக்தி என்பது என்ன?


அம்மை அடியவர் :-  இறைவனிடத்தில் வைக்கும் அன்பு.


சுவடி ஓதும் மைந்தன்:-   இறைவா, எனக்கு எதுவும் தேவையில்லை. எதுவும் தேவையில்லைன்னா என்ன அது? எதுவும் ஆசைப்படக்கூடாது.


அம்மை அடியவர் :-  ஆசைப்படக்கூடாது.


சுவடி ஓதும் மைந்தன்:-  எனக்கு எதுவுமே தேவையில்லை. நீங்க மட்டும் இருந்தால் போதும்பா.


அம்மை அடியவர் :- உன்னுடைய அன்பே போதும்.


சுவடி ஓதும் மைந்தன்:-  அது சொல்றவன் தான் உண்மையான பக்தன். 


குருநாதர்:-  ஆனால் நிச்சயம் அப்படி இருக்கின்றார்களா என்றால், கலியுகத்தில் நிச்சயம் இல்லை. 


***** அப்பனே, அப்படி இருந்துவிட்டால், இறைவன் அனைத்தும் கொடுத்திடுவான் என்பேன்  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. *****


*****  அப்பனே பின் இறைவனை கேட்க தேவையே இல்லையே!!!!!  ***** 


சுவடி ஓதும் மைந்தன்:-  இப்படி இருந்துட்டா, இறைவா, அனைத்தும் நீதான்ப்பா. எனக்கு எல்லாம் நீதான்ப்பா பார்த்துக்கணும்னு சொல்லிட்டு இருந்தா மட்டும்தான், இறைவன் என்ன பண்ணுவாரு? எல்லாத்தையும் கொடுப்பார்.


அடியவர் :- நீங்க கேட்கவே வேண்டாம்.


குருநாதர்:- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் நீங்க எதை கேட்டாலும், அப்பனே பின் இறைவன் கண்டுக்க போவதில்லை என்பேன்  அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன்:- அப்படி மீறி நீங்க எதை கேட்டாலும், இறைவன் கண்டுக்க போவதில்லை. 


===========================

# இறைவன் அருளும் ரகசியங்கள்.

===========================


குருநாதர்:-  அப்பனே, எது என்று புரிய. அப்பனே, இவை தன் பல வாக்குகளும் சொல்லிவிட்டேன் அப்பனே. கேட்பதெல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எதற்காக? அப்பனே. 


***** இறைவன், அப்பனே, மனிதனின் பின் அனைவரையும் படைத்தான் அப்பனே.   ***** 


***** ஆனால் இறைவன், இறைவனுக்கு தெரியும்….. 


எப்பொழுது?  

எதனை?  

பின் எங்கு?  

எவ்விடத்தில்?…..  


நியாயமான பின் எவை என்று கூற, அனைத்தும் செய்யலாம் என்று நிச்சயம் தன்னில் கூட.  ***** 


அப்பனே பின் அப்படி எது என்று புரியாமல், அப்பனே பின் கேட்டால், அப்பனே, இவன் அறிவில்லாதவன், நிச்சயம் தன்னில் என்று சென்று கொண்டே இருப்பான் இறைவன் அப்பனே.  


புரிந்து கொள்ளுங்கள் அப்பனே.


https://youtu.be/PKohTFGg6R8?t=10156  


சுவடி ஓதும் மைந்தன்:-  இறைவனை கேட்கக்கூடாது. அப்ப, இறைவன் தேவையானவற்றை செய்வார். நமக்கு அப்படி நீங்க கேட்டுக்கிட்டு இருந்தீங்கன்னா, எனக்கு அது செய், இது செய்ன்னு சொல்லிட்டு, அடா, முட்டாளே, உன்னை படைச்சேனடா, அந்த அறிவு கூட உனக்கு இல்லடா. நான் பண்ணுவேன்னு சொல்லிட்டு, அப்ப, உனக்கு எதுக்குடா பண்ணனும் நானுன்னு சொல்லிட்டு, என்ன பண்ணுவாரு? அவர் பாட்டுக்கு போயிட்டே இருப்பாரு. வந்து. 


குருநாதர்:-  அப்பனே, மெய்ஞானம் வேண்டும். தாயே, மெய்ஞானம் வேண்டும். 


சுவடி ஓதும் மைந்தன்:-   அப்பா, அம்மா, மெய்ஞானம் வேண்டும் என்றார். 


===========================

# மெய்ஞானம் என்பது என்ன?

===========================


குருநாதர்:-  மெய்ஞானம் என்பது என்ன? கூறுங்கள், பார்ப்போம்?


சுவடி ஓதும் மைந்தன்:- மெய்ஞானம் என்பது என்ன? கூறுங்கள், பார்ப்போம். 


அடியவர்கள்:- (.....சில பதில்கள் .......) 


குருநாதர்:-  அப்பனே, நிச்சயம் அங்கங்கு வேறுபட்ட கருத்தையும் யான் சொல்வேன். 


சுவடி ஓதும் மைந்தன்:-  நான் எங்கெங்க வந்து என்னென்ன கருத்துக்கு தேவையோ, அதெல்லாம் நான் சொல்லிடுவேன்பா. எனக்கு எங்க என்ன தோணுதோ, அதை சொல்லுவாருன்றார். வந்து, மெய்ஞானம் என்பது என்ன? 


அடியவர் 3 :- இறைவனை அறிந்து வைத்திருப்பது. 


சுவடி ஓதும் மைந்தன்:-  ஐயா, யாருங்க ஐயா? ( மீண்டும் கூறுங்கள் ) 


அடியவர் 3 :- இறைவனை அறிந்து வைத்திருப்பது. 


குருநாதர்:-  அப்பனே, முதலில் உன்னை நீ  அறிவித்திரு. 


சுவடி ஓதும் மைந்தன்:-   உன்னை நீங்க அறி என்றார். முதல்ல, மெய்ஞானம் என்றால் என்ன? 


அடியவர்கள்:- (.....சில பதில்கள் .......) 


குருநாதர்:-   அப்பனே, எது என்று புரிய. அப்பனே, இங்கு அண்ணாமலையிலே யான் சொல்கின்றேன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 


***** மெய்ஞானம் என்பது, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அனைத்திற்கும் காரணம் இறைவனே. *****


*****  நடப்பதெல்லாம் அவன் செயலே என்று நினைப்பதுதான் மெய்ஞானம் அப்பனே.  ***** 


அடியவர்கள்:- (.....பலத்த கை தட்டல்கள் .......) 


அடியவர்:- எவ்வளவு பெரிய தத்துவம்! 


சுவடி ஓதும் மைந்தன்:- மெய்ஞானம் என்பது என்ன? 


அடியவர்:-  எல்லாம் அவன் செயல். 


சுவடி ஓதும் மைந்தன்:-  எல்லாம் அவன் செயல். அவன் செயலே எல்லாமே. கொடுக்கிறதும், வாங்குறதும், எல்லா இது பண்றதும் யார் செயல்? இறைவன். அவனுடைய செயல். அப்படி யார் நினைக்கின்றார்களோ, அதுதான்டா மெய்ஞானம் என்றார் வந்து.


===========================

# பொய் ஞானம் என்பது என்ன?

===========================

https://youtu.be/PKohTFGg6R8?t=10261 


குருநாதர்:-   அப்பனே, பின் மற்றவை எல்லாம் பொய் ஞானம். 


சுவடி ஓதும் மைந்தன்:-  அப்படி நினைக்காட்டி, எனக்கு அது வேணும், இது வேணும், இப்படி வேணும், அப்படி வேணும்னு சொல்றதெல்லாம் 


அடியவர்:-   பொய் ஞானம். 


சுவடி ஓதும் மைந்தன்:-  பொய் ஞானம். 


குருநாதர்:- அப்பனே, இப்பொழுதெல்லாம் பொய் ஞானம் தான் அப்பனே, அதிகம் உள்ளது என்பேன்  அப்பனே. 


அப்பனே, பொய் ஞானத்தில், அப்பனே, என்னென்ன தெரிவிப்பார்கள்? மனிதன் என்றால், பின் அங்கு செல், இங்கு செல், இதனை செய், உத்தரவிட்டு இருக்கின்றான் இறைவன். இவையெல்லாம் நல்ல நேரம், தீய நேரம், நிச்சயம் பரிகாரங்கள் என்று, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூட சொல்லிக் கொண்டிருப்பான் மனிதன். 


இது பொய் ஞானம், அப்பா. ஏனென்றால், இப்பொழுது பொய் ஞானம் தான் நடந்து கொண்டிருக்கின்றது. இப் பொய் ஞானம், அப்பனே, நடந்து கொண்டே இருந்தால் அப்பனே, அழிவுகள் அதிகமாக வந்து கொண்டிருக்கும் அப்பா. பின் நிச்சயம் அப்பனே, தப்ப முடியாது. 

https://youtu.be/PKohTFGg6R8?t=10311 


சுவடி ஓதும் மைந்தன்:-   இப்ப என்ன நடந்துட்டு இருக்கு? எல்லாத்தையும் என்ன நின்னுக்குது? பொய் ஞானம் எல்லாருமே என்ன பின்பற்றுறாங்க? பொய் ஞானத்தை பின்பற்றுறாங்க. வந்து, பொய் ஞானத்தில் ஒரு ஒரு பிரயோஜனம் இல்லை அப்பா. 


===========================

# மெய்ஞானத்திற்குள்  மெய்ஞானம்  என்பது என்ன?

===========================


குருநாதர்:- அப்பனே, மெய் ஞானத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 


அனைத்தும் பின் அனைத்திற்கும் காரணம் இறைவனே அப்பனே. 


நிச்சயம் பின் நீங்கள் ஏன் இப்படி இருக்கின்றீர்கள் என்று, அப்பனே, பின் எண்ண வேண்டும். 


***** இறைவா !!!!! தவறு செய்துவிட்டேன். நிச்சயம் அனைத்திற்கும் நீதானே காரணம். பின் குணப்படுத்து என்று, பின் தெரிந்தால், நிச்சயம் எவை என்று கூற, அதுவும் மெய்ஞானத்திற்குள் மெய்ஞானம். ***** 


அடியவர்:- சிவாய நம. 


சுவடி ஓதும் மைந்தன்:- மெய்ஞானம். அதுக்கு மேல, மெய்ஞானம் என்ன தெரியுங்களா? இறைவனை வந்து, எப்பா, தெரியாம தப்பு பண்ணிட்டோம்பா. யோசிக்கணும். நம்ம பத்தி யோசிக்கணும்ன்றார். வந்து, மெய்ஞானம் என்பது வந்து, எல்லாத்துக்கும் காரணம் இறைவனே. உன் அருள் இல்லாம ஒன்னும் வந்து நடக்காது. எல்லாமே பண்ணனும். ஆனா, சற்று பின்னோக்கி போயி, எப்பா, தெரியாம தப்பு பண்ணிட்டோம்பா. ஏதாவது ஆசீர்வதித்து, இந்த பாவத்தை போக்குப்பான்னு சொல்றாங்க பாருங்க… அது என்னது? 


அடியவர்:- அதுதான் மெய்ஞானத்துல, மெய்ஞானம். 


சுவடி ஓதும் மைந்தன்:-  மெய்ஞானத்துல…. மெய்ஞானம். 


===========================

#  பாவம் செய்துவிட்டு, பரிகாரங்களை தேடுவது எந்த வகை ஞானம்?

===========================

https://youtu.be/PKohTFGg6R8?t=10377 


குருநாதர்:- அப்பனே, எதை என்று புரிய, பொய் ஞானம் அப்பனே, அதற்கு கீழே என்னவென்று, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது பாவம் செய்துவிட்டு, பரிகாரங்களை தேடுவதுதான் அப்பனே, பொய் ஞானம். 


சுவடி ஓதும் மைந்தன்:-  பொய் ஞானம் என்பது என்ன? தவறு செஞ்சுட்டோம். ஆனா, அது உணரல நம்ம வந்து. இதுக்கு என்ன பரிகாரம்னு சொல்லிட்டு சேர்றோம். பாருங்க, வந்து, அது என்னது? பொய் ஞானம். 


===========================

#  சித்தர்கள் மனிதர்களிடம் விரும்புவது என்ன? 

===========================


குருநாதர்:- அப்பனே, யாங்கள் எதுவும் விரும்புவதில்லை என்பேன்  அப்பனே. அதாவது உங்கள் மனத்தை தான் நாங்கள் விரும்புகின்றோம். அப்பனே. அங்கே முதலில் திருத்தலங்கள் அமையுங்கள். 


சுவடி ஓதும் மைந்தன்:-  நான் எதுவுமே விரும்புறது இல்லை.. சித்தர்கள் வந்து.  எதை விரும்புறோம்? உன் மனசு தான். உன் மனசுல திருத்தங்கள். உன் மனசுல திருத்தலத்தை அமையுங்கள். மனசு நல்லா இருந்துச்சுன்னா, திருத்தலங்கள் எங்க அமையுங்கள்? எங்க அமைக்கணும்?  


அடியவர்:- இறைவன் வந்து அமர்வதற்கு… 


சுவடி ஓதும் மைந்தன்:-   மனதில் அமையுங்கள். திருத்தலம் எங்க அமைக்கணும்? மனதில் அமையுங்கள். 


===========================

#  எங்கு, எப்போது இறைவனே கும்பாபிஷேகத்தை நடத்துவார் ?

===========================


குருநாதர்:-  நிச்சயம் எது என்று அறிய அதற்கு கும்பாபிஷேகம், நிச்சயம் தன்னில் கூட இறைவன் செய்வான். சொல்லிவிட்டேன். 


ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட பின் ஒழுக்கங்கள் இல்லாமல், அவை செய்கின்றேன். இவை செய்கின்றேன் என்று சொல்லிட்டு, நிச்சயம் தன்னில் கூட. 


***** பின் இறைவனுக்கு ஏது என்று புரிய, உங்களுக்கு, அதாவது இறைவன் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும். ***** 


*****  அப்படித்தான் நீங்கள் இருக்க வேண்டும். ***** 


குருநாதர்:-  அப்படி நிச்சயம் இருந்துவிட்டால், உலகம் ஞானம். நிச்சயம் உலகம் அழிவு வராது. 


அடியவர்:- சிவாய நம. 


சுவடி ஓதும் மைந்தன்:- இப்படி எல்லாம் இருக்க முடியுமா என்று தெரியல. 


அடியவர்:-  ஆதங்கம். குருநாதருடைய ஆதங்கம். 


சுவடி ஓதும் மைந்தன்:- ஆதங்கம். என்ன சொல்றாருன்னா, நல்ல மனசா வச்சுக்கிட்டு, 


அடியவர்:-   பூசலார் மாதிரி 


சுவடி ஓதும் மைந்தன்:-  அங்க நீங்க வந்து, இறைவனை வந்து, நல்ல மனசோட இருந்தா, இறைவன் என்ன பண்ணுவார்? கோயில் கட்டி, கும்பாபிஷேகம் இறைவனே வந்து செய்வார். 


===========================

#  திருவண்ணாமலையை ஏன் நாம் அனைவரும் சுற்றுகின்றோம்?

===========================


குருநாதர்:-   அப்பனே, எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட அவ்வாறாக நீங்கள், அப்பனே, நல் மனதோடு இருந்தாலே, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, யாங்கள் ஏன் சொல்கின்றோம்? எதற்காக சொல்கின்றோம்? அப்பனே, அனைத்திற்கும் தீர்வுகள் அப்பனே, நிச்சயம். 


அப்பனே, அதாவது இவ் மலையை (திருவண்ணாமலையை) ஏன் வலம் வருகின்றோம் என்பதே யாருக்கும் தெரியாது அப்பா. 


வலம் வந்திருக்கின்றான் அப்பனே, அதாவது நிச்சயம் தன்னில் கூட, பின் ஆடுகள் பின் போகும். அதேபோலத்தான் என்பேன்  அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன்:-  இந்த மலையை ஏன் சுத்துறோம்? ஏன் சுத்துறோம்னு கூட தெரியாதாம். ஆடுகள் ஒன்னு போகுது. பின்னாடி எல்லாரும் பின்னாடி போற மாதிரி?


அடியவர்:- ஆட்டு மந்த கூட்டத்துல, பின்னாடி எல்லாம் சுத்துறீங்கப்பான்றாரு. ஏன் சுத்துறது தெரியாம…


குருநாதர்:- அப்பனே, இதனால் நிச்சயம் தன்னில் கூட உங்கள் குறைகளை, அப்பனே, எங்களால் போக்க முடியும் அப்பா. அப்பனே, உங்கள் குறைகள் என்னவென்று எங்களுக்கு தெரியும் அப்பா. 


ஆனால் நீங்கள் கேட்பது, அப்பனே, அதாவது கேட்டு பெறுவது, அப்பனே, அறிவல்ல அப்பனே, நிச்சயம் தன்னில் கூட 


சுவடி ஓதும் மைந்தன்:-  உங்கள் குறைகள் இறைவனுக்கு ரொம்ப நல்லா தெரியும். எங்களுக்கு நல்லா தெரியும். அது எப்ப சீர்படுத்தணும்? எப்ப இது பண்ணனும்?  எல்லாம் எங்களுக்கு தெரியும். அப்ப, நீங்க கேட்டுட்டீங்கன்னா, என்னோட குறை இப்படின்னு கேட்டா, உனக்கு அறிவில்லை. 


அடியவர்:- அதையும் தாண்டி, பரிகாரம்னு போய்….. எல்லோரும்  பொய் ஞானத்துக்கு போயிடுறாங்க. 


சுவடி ஓதும் மைந்தன்:-  அறிவில்லை. 


குருநாதர்:- அப்பனே, எதை ஏது என்று போன்று, அப்பனே, ஏன் அப்பொழுது திருத்தலங்கள் அமைத்தார்கள் என்பவையெல்லாம் யான் அழகாக எடுத்துரைப்பேன் அப்பனே. 


ஏனென்றால், அப்பனே, நிச்சயம் பின், அதாவது வந்திருப்பவர்களும், தீய அழுக்குகள் சில, அப்பனே, பின், அப்பனே, பின், நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய. அப்பனே, கெட்ட சக்திகள் என்று கூட, அப்பனே, 


இதனால், அப்பனே, கைலாயத்தை வைத்து, ஒரு, அப்பனே, வலம் வாருங்கள் என்பேன்  அப்பனே. தீய தீயவை ஓடட்டும். பின்பு உரைக்கின்றேன். யான் 


சுவடி ஓதும் மைந்தன்:- (திருக்கயிலாய வாத்திய குழுவினரை பார்த்து)  ஐயா, ஒரு அப்படியே ( அரங்கம் முழுக்வதும்) ரவுண்டு வாங்க. எல்லாரும் ஏன்னா, எல்லாரும் தீய ஏதோ இருக்குது. தீய சக்தியும் எல்லாம் வச்சிருக்காங்க. வந்து, நீங்க போடுங்கப்பா, ஒரு அடி போடுங்க. எல்லாத்தையும் வெளியே போட்டோம். அப்புறம் நான் சொல்றேன்னு சொல்லி இருக்காரு. ஒரு ரவுண்டு வாங்க அய்யா. 


திருக்கயிலை வாத்திய குழுவினர்:- ( மைந்தன் சொன்னது போல வலம் வந்தார்கள்… பின் வரும் நேரலையில் அவசியம் பார்க்கவும். )  


start :- https://youtu.be/PKohTFGg6R8?t=10585 

end :- https://youtu.be/PKohTFGg6R8?t=12060


ஒரு குழந்தை அடியாரின் அழகான திருக்கைலாய வாத்தியம்:-  (பின் வரும் நேரலையில் அவசியம் பார்க்கவும். வாழ்த்துங்கள் இவ்  குழந்தை   அடியவரை……)

  

ஒரு குழந்தை அடியாரின் அழகான திருக்கைலாய வாத்தியம்

start :- https://youtu.be/PKohTFGg6R8?t=12060

end :- https://youtu.be/PKohTFGg6R8?t=12294



( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 27/09/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த  13 வது சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …..) 



ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.