இறைவா நீயே அனைத்தும்.
இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.
அன்புடன் அகத்திய மாமுனிவர் பெங்களூர் சத்சங்கம் - 12.November.2024 - பகுதி 3
ஆதி முதல்வனை மனதில் எண்ணி செப்புகின்றேன், அகத்தியன்.
( இவ் தொடர் வாக்கின்- பகுதி 3 )
குருநாதர் :- அப்பனே, அதாவது, உன்னுள்ளே இறைவனை தேடு என்று சொல்லி இருக்கின்றார்கள் அப்பனே. பின் நிச்சயம், யாராவது அதை செய்திருக்கிறீர்களா?
குருநாதர் :- நிச்சயம், பின் தாயை மதியுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். மதித்தீர்களா?
குருநாதர் :- தந்தையை மதியுங்கள் என்று சொல்லி சொல்லியிருக்கின்றார்கள். பின், நிச்சயம், அவையும் மதிப்பதில்லை. நிச்சயம், நேரடியாக இறைவனிடம் சென்று, பின் அதைத் தா, இதைத் தா என்றால், நிச்சயம், எப்படி தருவான்?
சுவடி ஓதும் மைந்தன் :- ( தாயை , தந்தையை மதிக்க வேண்டும் என்று பலர் சொன்னாலும், மனிதன் அதை மதிக்காமல், நேரடியாக இறைவனிடம் கோரிக்கைகள் வைக்கிறான். ஆனால் மனம் சீராக இல்லாமல், நேரடியாக இறைவனிடம் சென்றால், அவர் எதையும் தரமாட்டார்.)
குருநாதர் :- மரியாதையுடன், நிச்சயம், இன்னும் கஷ்டத்தை தான் கொடுப்பான்.
=================================================
# ஏன் திருத்தலத்திற்கு சென்றால் சிலருக்கு கஷ்டங்கள் வருகின்றது?
=================================================
குருநாதர் :- அப்பனே, இதனாலதான், அப்பனே, திருத்தலத்திற்கு சில பேர், நிச்சயம், அப்பனே, அறிந்து கூட சென்று வந்தால், கஷ்டங்கள் வந்துவிடும் என்பேன். அப்பனே, அப்பொழுது, நிச்சயம், நினைத்துக் கொள்ளுங்கள் நீங்களே.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, ஏன் இறைவன் கிட்ட போனா, ஏன் கஷ்டம் வருதாம்? புரியுதுங்களா? யாரும் மதிக்கிறது இல்லை.
=======================================
# இறைவன் உங்களிடம் விரும்புவது என்ன ?
========================================
=======================================
# தாய் தந்தையை மதித்து , காலடியில் விழுந்து ஆசி வாங்க வேண்டும்.
========================================
குருநாதர் :- அப்பனே, இறைவன் என்ன விரும்புகின்றான் என்றால், அப்பனே, நிச்சயம், முதலில் தாய் தந்தையரை மதித்து, பின், அதாவது, பின் காலடியில் விழுந்து, நிச்சயம், பின் வந்தால், இறைவனுக்கு சந்தோஷம். (திருத்தலத்திற்கு) அங்கு உடனடியாக ஆசீர்வதிக்கப்படும். ஆனால் இப்பொழுதெல்லாம், திருத்தலத்திற்கு சென்றாலே, தாய் தந்தையிடம் சண்டையிட்டு தான் செல்கின்றார்கள். என்ன லாபம்?
குருநாதர் :- அப்பனே, அதனால் உங்கள் நிலைமைக்கு யார் காரணம் என்றால், நீங்களே.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, உங்கள் நிலைமைக்கு யார் காரணம்? நம்ம தான் நீங்க தான் காரணம்.
குருநாதர் :- அப்பனே, அந்நிலைமை எப்படி பின் மாற்றுவது என்பதை எல்லாம் இறைவன் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றான். ஆனால் அப்பனே நீங்கள் சோம்பேறிகள். அதனால், அப்பனே, கேட்பதே இல்லை.
குருநாதர் :- அறிந்து கூட, அம்மையே, அப்பனே, அறிந்து கூட, பின் உங்கள் பிள்ளைகள், நிச்சயம், பின் அதாவது, பின் பள்ளிக்குச் சென்று, பின் முதல் தரத்தில், பின் தேர்ச்சி பெற்றால், உங்களுக்கு எவ்வளவு சந்தோஷம் சொல்லுங்கள்?
=======================================
# என் பக்தர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறவேண்டும்.
=======================================
குருநாதர் :- அதேபோலத்தான், பின் என் பக்தராக இருந்து கொண்டு, நீங்கள் முதல் தரத்தில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதே, நிச்சயம், என்னுடைய. அறிந்து கூட, நிச்சயம், அப்படி தேர்ச்சி பெற்று விட்டால், உங்களுக்கு அனைத்தும் கொடுத்துவிடுவேன் நான். ஏன், அதாவது, முதல் தரத்தில் நீங்கள், பின் உங்கள் பிள்ளை, பின் வெற்றி பெற்றுவிட்டால், என்ன வேண்டுமானாலும் செய்வீர்கள் அல்லவா? அதே போலத்தான் யானும் கூட.
குருநாதர் :- அப்பனே, இப்பொழுது அதை செய்கின்றேன், இதை செய்கின்றேன் என்று உங்களை குழப்பியே விடலாம். அப்பனே, ஆனாலும், அப்பனே, நிச்சயம், அப்பனே, விதியில் என்ன, அதாவது, நீங்கள் அங்கு என்ன கேட்டு வந்தீர்களோ, அதே தான் இங்கு நடக்கப்போகின்றது. அதே மீறி ஒன்றும் நடக்கப்போவதில்லை. ஆனாலும், அப்பனே, என்னால் முடியுமப்பா அனைத்தும் தர. அதற்கும் பக்குவங்கள் வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( நீங்கள் என்ன கேட்டு வந்தீர்களோ, அதே விதி தான் இங்கு நடக்கப்போகிறது; அதை மீற முடியாது. எப்படியெல்லாம் முயற்சி செய்தாலும், இறைவனிடம் கேட்ட வரமே கிடைக்கும். ஆனால், அதை மாற்ற முடியுமா என்றால், அது இறைவனின் பக்குவத்திற்கே சார்ந்தது. அனைத்தும் தர இயலும், ஆனால் அதற்கும் உங்களின் பக்குவம் அவசியம் தேவை.)
குருநாதர் :- அப்பனே, விதியை மாற்ற முதலில், அப்பனே, அதாவது, நிச்சயம், அறிந்து கூட, என் பக்தர்கள், அப்பனே, நிச்சயம், பலபேர்கள் கஷ்டப்பட்டுத்தான் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே.
=======================================
# (1) விதியை மாற்ற - பொறாமை கொள்ள கூடாது
=======================================
குருநாதர் :- அப்பனே, முதலில், அப்பனே, நிச்சயம், அப்பனே, சொல்கின்றேன். ஏனென்றால், யானும் பிரம்மாவிடத்தில் கூறி, அப்பனே, விதியை மாற்ற வேண்டும். அப்பனே, நிச்சயம், பொறாமை கொள்ள கூடாது, அப்பனே, சொல்லிவிட்டேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- முதல்ல, விதியை மாத்துறதுக்கு என்னவா? பொறாமை படக்கூடாது.
=======================================
# (3) விதியை மாற்ற - கோபப்படக்கூடாது
=======================================
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், அறிந்து கூட, கோபப்படக்கூடாது.
சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்து, விதி எல்லாம் மாத்தணும்னா, கோபப்படக்கூடாது.
=======================================
# (3) விதியை மாற்ற - பிறரை தன்னைப்போல் எண்ண வேண்டும்.
=======================================
குருநாதர் :- அப்பனே, பிறரை தன்னைப்போல் எண்ண வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, புரியுதுங்களா?
=======================================
# (4) விதியை மாற்ற - கருணை மனம் படைத்திருக்க வேண்டும்.
=======================================
குருநாதர் :- தன்னை போல் எல்லாம் எண்ண வேண்டும். அறிந்து கூட, கருணை மனம் படைத்திருக்க வேண்டும்.
=======================================
# (5) விதியை மாற்ற - உண்மையே பேச வேண்டும்.
=======================================
குருநாதர் :- அறிந்து கூட, இன்னும் பின், அதாவது, உண்மையையே பேச வேண்டும்.
=======================================
# (6) விதியை மாற்ற - மற்ற ஜீவராசிகள் கூட, நிச்சயம், தன் பின் இனமே
=======================================
குருநாதர் :- மற்ற ஜீவராசிகள் கூட, நிச்சயம், தன் பின் இனமே என்று எண்ண வேண்டும்.
=======================================
# (7) விதியை மாற்ற - இறைவா நீயே அனைத்தும்
=======================================
குருநாதர் :- அறிந்து கூட, முதல் எவை என்று கூற, தெளிவு அனைத்திற்கும் காரணம், இறைவன் தான் என்று எண்ண வேண்டும்.
குருநாதர் :- அனைத்தும் இறைவனை, இறைவன் தான் எண்ண வேண்டும். இறைவனிடத்தில், அனைவரும் பிள்ளைகள் தான் என்று எண்ண வேண்டும். இப்படி எல்லாம், பின் நீங்கள் செய்து கொண்டிருந்தால், நிச்சயம், பிரம்மாவிடத்தில் கூறி, என் பக்தன், இவன் இப்படி எல்லாம் இருக்கின்றான். ஏதாவது செய் என்று கேட்கலாம். ஆனால், அப்படி இல்லையப்பா என் பக்தர்கள் யாருமே,
சுவடி ஓதும் மைந்தன் :- புரியுதுங்களா, ஐயா? அப்ப, இப்படி இருந்தால் மட்டுமே, பிரம்மா இடத்தில் போயிட்டு, விதியை மாத்த முடியும்.
குருநாதர் :- அப்பனே, அறிந்து கூட, இதையெல்லாம் (விதியை) எப்படி எழுதுகின்றார்கள் என்பதை எல்லாம் அப்பனே, எப்படி மனிதனை, பின் இறைவன் படைக்கின்றான் என்பதை எல்லாம் அப்பனே, வருங்காலத்தில் யான் தெளிவுபடுத்துவேன். அனைத்தும் உங்களுக்கு கற்பிப்பேன். ஏனென்றால், அனைத்தும் தெரிந்து கொண்டால் தான் அப்பனே, மோட்சம் ஏற்படும் என்பேன். அப்பனே, அனைத்தும் தெரியாமல் சென்றால், மீண்டும் மீண்டும் உலகத்திற்கு வந்து வந்து, கஷ்டங்களை பட்டு பட்டு எழுந்திருக்க வேண்டியதுதான்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( மனிதன் எப்படி உருவாக்கப்படுகிறான், விதிகள் எப்படி எழுதப்படுகின்றன என்பதையும், இறைவனின் செயல்முறைகளையும் வருங்காலத்தில் தெளிவாகக் கற்பிப்பேன். ஏனெனில், அனைத்தையும் உணர்ந்து அறிந்தாலே மோட்சம் சாத்தியமாகும். தெரியாமல் சென்றால், பிறவிகள் தொடரும்; உலகத்தில் மீண்டும் மீண்டும் வந்து, கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியதுதான். )
குருநாதர் :- அப்பனே, அதனால்தான் என் பக்தர்களுக்கு, அப்பனே, முதலில் தெளிவை தருகின்றேன் அப்பனே. அவ் தெளிவை, அப்பனே, உங்களிடத்தில் கொடுத்துவிட்டால், அப்பனே, உங்களுக்கே புரியும் அப்பா. அது மட்டுமில்லாமல், அப்பனே, புண்ணியம் எப்படி சேர்த்துக்கொள்வது என்பதெல்லாம், அப்பனே, உங்களிடத்தில், அப்பனே, நிச்சயம், நான் சொல்லி விட்டால் போதுமானது அப்பா. நீங்களே, அப்பனே, உங்களுக்கு துணை அப்பனே. அதனால், பின் மனிதனால், அப்பனே, அனைத்தும் சாதிக்க, சாதிக்க முடியும் அப்பா. இறைவன், அப்படித்தான் பூலோகத்திற்கு அனுப்புகின்றான். ஆனால், அப்பனே, சரியாகவே, மனிதன், மனிதன் பயன்படுத்துவதே இல்லை என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- ( இறைவன் தனது பக்தர்களுக்கு முதலில் தெளிவை கொடுக்கின்றார். அது புரிந்தவுடன் வாழ்க்கை நன்றாக அமையும். புண்ணியம் சேர்க்கும் வழிகளையும் அவர் நேராக கூறுகிறார்; இதுவே போதுமான வழிகாட்டியாகும். மனிதன் தானே தன்னை துணையாகக் கொண்டு, அனைத்தையும் சாதிக்க முடியும் திறன் பெற்றவன். ஆனால், அந்த அருளையும் அறிவையும் சரியாக பயன்படுத்தாமல், மனிதன் தவறுகிறான் என்பதே வருத்தம். )
குருநாதர் :- அப்பனே, யார் ஒருவன் சரியாக பயன்படுத்துகின்றானோ, அப்பனே, அவன் தனக்கு இறைவன் அருகிலே இருந்து, அப்பனே, அனைத்தும் தருவான் அப்பா,
சுவடி ஓதும் மைந்தன் :- அதை யார் ஒருவர் சரியாக பயன்படுத்துகின்றார்களோ, அவர்களுக்கு வந்து, இறைவன் எல்லாம் தருவார்.
குருநாதர் :- அப்பனே, அப்பனே, அதை பயன் படுத்தாதவரை, அப்பனே, ஒன்றும் நடக்கப்போவதில்லை.
குருநாதர் :- அப்பனே, எதை பயன்படுத்த வேண்டும்? விதியை மாற்ற என்று யான் சொல்லிவிட்டேன்.
குருநாதர் :- அப்பனே, எண்ணம் போல் வாழ்க்கை என்று, அப்பனே, சொல்கின்றார்கள். அப்பனே, பெரியோர்கள்.
குருநாதர் :- அப்பனே, நல்ல நல்லெண்ணம் இருந்தால், அப்பனே, அவ் எண்ணங்கள் உன்னை உயர்த்தி வைக்கும். அப்பனே, கெட்ட எண்ணங்கள் இருந்தால், அவ் எண்ணங்களே உன்னை தாழ்த்தி வைக்கும் அப்பா. அப்பனே, நிச்சயம், அப்பனே, இதை யான் சொல்லவில்லை.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், இப்பொழுதெல்லாம் கலியுகத்தில் அப்படி ஆள் இல்லையப்பா.
குருநாதர் :- சுயநலத்திற்காகவே வாழ்கின்றார்கள் என்பேன் அப்பனே. அப்படி இருந்தால், இறைவன் எப்படி அப்பா கொடுப்பான்?
குருநாதர் :- அப்பனே, இறைவன் அனைவருக்குமே பொதுவானவன் என்பேன். அப்பனே, இறைவன் அனைவருக்குமே நல்லதைத்தான் செய்ய வேண்டும். ஆனால், ஒருவனுக்கு நல்லது செய்கின்றான், மற்றவனுக்கு தீமை செய்கின்றான். ஏன்?
அடியவர் :- நல்லதே நினைச்சுட்டு இருக்காரு. அதனால, அவருக்கு நல்லது நடக்குதா?
குருநாதர் :- அம்மையே, அதுபோலவே வைத்துக்கொள்வோம். நன்மையே செய்து கொண்டிருக்கின்றான். அப்பொழுதுதான், அப்பொழுது கூட, இறைவன் தருவதில்லையே. ஏன்?
அடியவர் :- ஊழ்வினை,
குருநாதர் :- அறிந்து கூட, தாயே, ஊழ்வினை ஒரு பக்கத்தில் இருக்கட்டும். நிச்சயம், அதை நிச்சயம் கொடுப்பதும், நிச்சயம். அதாவது, ஊழ்வினை இருந்தாலும், இறைவன் பின் சில நேரங்களில், பின் ஒதுக்கி வைப்பான் பாவத்தையும் புண்ணியத்தையும் கூட. அதாவது, நீங்கள் சேமிப்பில் வைக்கின்றீர்களே. அதாவது, சேமிப்பு கிடங்கில், அதுபோல்.
குருநாதர் :- தாயே, ஒன்றை சொல்கின்றேன். உங்கள் எண்ணம் போலவே, சரியாகவே எண்ணம் இருந்தால், நிச்சயம், புண்ணியத்தை, நிச்சயம், இந்தா எடுத்துக்கோ என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- (அப்ப, உங்களுடைய எண்ணம் சரியான இருந்துச்சுன்னா, என்ன பண்ணுவாராம்? அந்த புண்ணியம் இருக்குது, பார்த்தீங்களா? இந்தா பாரு, எடுத்து வச்சுக்கோ என்று கொடுப்பாராம்.)
குருநாதர் :- நிச்சயம், எண்ணம் சரியில்லை என்றால், பின் பாவத்தை, நிச்சயம் கொடுப்பான்.
குருநாதர் :- அப்பொழுது, நிச்சயம், என்ன நடக்கும்? இங்கு
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன நடக்கும்? கஷ்டம் தான் நடக்கும்.
குருநாதர் :- அப்பொழுது, நிச்சயம், இறைவன், நிச்சயம், அனைவருக்கும் கொடுப்பது, இங்கு நல்லவையா, தீயவையா?
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, எல்லாருக்கும், இங்கு இறைவன் கொடுப்பது, நல்லவையா, தீமையா?
அடியவர் : (இறைவன்) அவருடைய எண்ணப்படி..
குருநாதர் :- நிச்சயம் அப்பனே, நல்லதுதான் என்பேன். அப்பனே,
சுவடி ஓதும் மைந்தன் :- உங்கள் எண்ணப்படி, கரெக்ட், நம்மள, உங்கள் எண்ணப்படி என்றார். புரிஞ்சுதுங்களா?
குருநாதர் :- அப்பனே, ஏன், எதற்காக இவை சொல்கின்றேன் என்றால், அப்பனே, நிச்சயம், அப்பனே, உங்களிடத்தில், அனைவருக்குமே, புண்ணியங்கள் உண்டு என்பேன். அப்பனே, ஆனால், அப்பனே, எப்படி வாழ வேண்டும் என்று தெரியவில்லையே.
சுவடி ஓதும் மைந்தன் :- ( இறைவன் அனைவருக்கும் புண்ணியங்களை வழங்கியிருக்கிறார்; அது பேலன்ஸ் போல கையிலே இருக்கிறது. ஆனால், அந்த புண்ணியத்தை எப்படி வாழ்வில் பயன்படுத்த வேண்டும் என்பது தெரியாமல் இருக்கிறோம். பேலன்ஸ் இருந்தாலும், அதை யூஸ் பண்ணத் தெரியாததால், வாழ்க்கை மாற்றமடையவில்லை. )
குருநாதர் :- அறிந்து கூட, இவை எப்படி இருக்கின்றது என்றால், தாயே, நீயே சொல்,
குருநாதர் :- எதை என்று புரிய, தாயே, ஒன்றை சொல்வார்களே. தேவையில் இருக்கின்றதா? அதாவது, வெண்ணை வைத்துக்கொண்டு,
அடியவர் : நெய்கு அலையறது…
சுவடி ஓதும் மைந்தன் :- ( உங்களின் கைகளில் புண்ணியம் இருக்கிறது, ஆனால் அதை பயன்படுத்த தெரியாமல் விட்டுவிட்டீர்கள். இது போல, வெண்ணையை கையில் வைத்துக் நெய் பிரிக்க தெரியாமல் தவிக்கும் நிலையைப் போல. புண்ணியத்தை ஆக்டிவேஷன் செய்யும் வழி தான் தெளிவு, பக்தி, சேவை, மற்றும் சிந்தனையின் தூய்மை. அதை உணர்ந்து செயல்பட்டால், அந்த புண்ணியம் பலனளிக்க தொடங்கும். )
அடியவர் :- அதை எப்படி ஆக்டிவேஷன் பண்றதுன்னு சொல்லுங்க.
குருநாதர் :- அறிந்து கூட, தாயே, நிச்சயம், அதாவது, இறைவன் அறிந்து கூட, இப்படி சொன்னேனே. அவையெல்லாம் நீக்க வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( இப்பதான்மா நான் சொன்னேன், தாய் தந்தை மதிக்கணும், கருணை இருக்கணும். கோவம் வரக்கூடாது. உண்மை பேசணும், எல்லா உயிரும், எல்லா உயிரும் எல்லாரையும் ஒரே மாதிரி …)
குருநாதர் :- தாயே, அறிந்து கூட, உன் முன்னோர்களுக்கு, முன்னோர்கள் எல்லாம் எவ்வாறு இருந்தார்கள் என்றால், நிச்சயம், பின் சரியாகவே, பின் சாஸ்திரம், பின் சம்பிரதாயங்கள் எல்லாம் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால், நிச்சயம், அதை பயன்படுத்தவில்லை. நிச்சயம், உன் பிள்ளைகள், அப்பொழுது என்ன? அவர்களே, இறைவனிடத்தில் சென்று, எங்கும் ஆசிகள் தர வேண்டாம் என்றெல்லாம் கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( முன்னோர்கள் எல்லோரும் இறைவனை பக்தியுடன் வணங்கி, சாஸ்திரம் மற்றும் சம்பிரதாயங்கள் முறையாக பின்பற்றினர். ஆனால் இன்றைய தலைமுறை அந்த வழிகளை புறக்கணித்து விட்டனர். அதனால் முன்னோர்கள் இறைவனிடம், எங்கள் தலைமுறைக்கு ஆசிகள் கொடுக்க வேண்டாம் வேண்டாம் என கூறும் நிலைக்கு வந்துள்ளனர். )
குருநாதர் :- தாயே, நிச்சயம், அறிந்து கூட, இதனால் பல மனிதர்களுக்கு உதவிகள் செய்தார்கள். ஆனாலும், தலைகீழாக போய்விட்டது. இப்பொழுது,
குருநாதர் :- இறைவனை, பின் நிச்சயம், பக்தியோடு, பயமோடு வணங்கினார்கள். ஆனால், இப்பொழுது இல்லையே.
குருநாதர் :- அறிந்து கூட, உங்க இல்லத்தில் இருந்து கொண்டே, இன்னும் கூட பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( அந்த முன்னோர்கள் என்ன பண்றாங்க? உங்க வீட்ல இருக்குறாங்களாம், பார்த்துட்டே இருக்காங்களாம். )
குருநாதர் :- ஆனாலும், நிச்சயம், இல்லத்தில் பார்த்தால், பின் யானும் வந்து பார்த்தேன், தாயே. ஆனால், சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
குருநாதர் :- அறிந்தும் எதை என்றும் அறிய அறிய. ஆனால், நிச்சயம், புண்ணியம் தேங்கி நிற்கின்றது. ஆனால், அதை பயன்படுத்த ஆள் இல்லையே.
குருநாதர் :- அப்பனே, அம்மையே, அனைவருக்குமே சொல்லுகின்றேன். இவ்வுலகத்தில், பின் பணங்கள், பின் அதிகம் இருக்கின்றது. ஆனால், பின் உபயோகிக்க தெரியவே இல்லையே. அதே போல தான்,
=======================================
# தன்னைத்தானே அறிந்தால், பின் தானாக லட்சுமி தேவி வந்துவிடுவாள்.
=======================================
குருநாதர் :- அறிந்து கூட, நிச்சயம், தன்னைத்தானே அறிந்தால், பின் தானாக லட்சுமி தேவி வந்துவிடுவாள்.
குருநாதர் :- அப்படி தெரியாவிடில், நிச்சயம், பின் லட்சுமி தேவி, பின் வந்தடைய மாட்டாள். நிச்சயம், அறிந்து கூட, ஏன் எதற்கு? நிச்சயம், பின் அறிந்து கூட, பின் அதாவது, இவை என்று, பின் இன்னும் கூற கூற விளக்கங்கள். அதாவது, அவள் வந்தாலும், நிச்சயம், நோயுடன் தான் வருவாள்.
அடியவர் :- ம்..
சுவடி ஓதும் மைந்தன் :- ( லட்சுமி தேவி வந்தாலும், நோயோடு தான் வருவாங்க. )
குருநாதர் :- ஏன் எதற்கு? பின் நிச்சயம், பின் சுயநலத்தோடு, காசுகள் இன்னும் சேர்க்க வேண்டும், சேர்க்க வேண்டும் என்று, நிச்சயம்,
சுவடி ஓதும் மைந்தன் :- ( சுயநல மனப்பான்மையுடன் வாழக்கூடாது என்பதே இந்த உரையின் மையக் கருத்து. ஒருவர் பணம் வந்ததும் அதை தர்மமாகப் பயன்படுத்தாமல், தனக்கே சேமித்து வைத்தால், அது நோயாகவும் மாறும் என எச்சரிக்கப்படுகிறது. )
குருநாதர் :- ஆனால், நிச்சயம், ஒரு நாள், நிச்சயம், அதை அப்படியே போய், பின் இன்னொரு இருக்கு. பின், நிச்சயம், கொடுத்துர வேண்டும். இது, பின் புண்ணியத்தில் ஆகாது.
சுவடி ஓதும் மைந்தன் :- ( ஒருவர் பணம், அதை தர்மமாகப் பயன்படுத்தாமல் சேமித்து வைத்தால், அது உடல் நோயாக மாறும் என எச்சரிக்கப்படுகிறது. கடைசியில் அந்த பணம் தர்மத்துக்கு அல்ல, மருத்துவ செலவுகளுக்கே செலவாகும். இதனால், “என்ன புண்ணியம்?” எனக் கேட்கும் நிலை உருவாகும். உண்மையான புண்ணியம் என்பது பகிர்விலும் ஈகையிலும் தான் என்பதை இது வலியுறுத்துகிறது. )
(அன்புடன் அகத்திய மாமுனிவர் பெங்களூர் சத்சங்கம் - தொடரும் …. )
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!