“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Wednesday, November 12, 2025

சித்தர்கள் ஆட்சி - 501 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய மதுரை கூட்டுப் பிரார்த்தனை வாக்கு - 05.10.2025 - பகுதி 2

 இறைவா !!!!! நீயே அனைத்தும்.

இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.






அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய மதுரை கூட்டுப் பிரார்த்தனை வாக்கு - 05.10.2025 - பகுதி 2


நாள் : 05.10.2025 ஞாயிற்றுக்கிழமை. நேரம் : காலை 8 மணி - மாலை 6 மணி.



ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.

(இத்தொடர் வாக்கின் முந்தைய பகுதியை இதற்கு முன் உள்ள பதிவில் படித்து பின் இந்த வாக்கினை படிக்க நன்று )

==========================================================

ஆதி ஈசனார் கலிபுருஷனுக்கு அளித்த வரம் ரகசியம் 

==========================================================


குருநாதர் :- அறிந்தும் எவை என்று அறிய, பின் அதாவது ஈசன் மிக மிக கருணை படைத்தவன். பின் இக்கலியவனுக்கும் எதை என்று அறிய, ஈசனை வேண்டிக்கொண்டே, ஈசனை வேண்டிக்கொண்டு, பல நூறு கோடி எதை என்று அறிய, எவை என்று அறிய, அறிய, ஈசனையே நமச்சிவாய, நமச்சிவாய என்று நினைத்து. ஆனால் பின் தூங்குவதும் எதை என்று புரிய, எதை என்று அறிய, ஈசன், இவன் தொல்லை பெரும் தொல்லையே என்று என்ன வரம் வேண்டும் என்று (ஈசனார், கலி புருஷனிடம்  கேட்க),  


(கலிபுருஷன் ) யான் என்ன வரத்தை, எதை என்று அறிய, என் மனதில் நினைக்கின்றேனே.  நிச்சயம் அதை யான் எவை என்று அறிய, எதை என்று புரிந்தும். என்று அவை தான் கொடுக்க வேண்டும் என்று.  (ஈசனார்) சரி, தொலை என்று நிச்சயம் எதை என்று அறிய, ஈசனும் நிச்சயம் தெரியாமல், பின் வரத்தை அளித்துவிட்டான் கலியவனுக்கு. 


ஆனாலும், நிச்சயம் ஈசனே எவை என்று திரும்ப பெறுவதற்கு, பின் முழித்துக் கொண்டிருக்கின்றான். 



சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  உரையின் சுருக்கம் :-  ( 

(1) ஈசனின் கருணை மற்றும் கலிபுருஷனின் வரம் - பல ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்த கலிபுருஷன், இறைவனிடம் வரம் கேட்டார். ஈசன், கலிபுருஷனின்  மனதில் என்ன இருக்கிறதோ அதை நிறைவேற்றும் வகையில் மறைமுகமாக வரம் அளித்தார். இது ஈசனின் கருணையை வெளிப்படுத்துகிறது.

(2) வரத்தின் விளைவுகள் - கலிபுருஷன், நல்லதை நினைக்க கூடாது என எண்ணி, மனிதனுக்கு தொல்லை தரும் எண்ணத்துடன் செயல்படுகிறார். ஈசன் அந்த எண்ணத்தை முழுமையாக புரிந்து கொடுக்கவில்லை; அவருக்கே கலியின் செயல்கள் தெரியாததால்,  ஈசனே, தான் அளித்த வரத்தை  திரும்ப பெறுவதற்கு, பின் முழித்துக் கொண்டிருக்கிறார். 

(3) கருணையின் ஆழம் - இறைவன் நேரடியாக சொல்லாமல், தனது கருணையால் கலிபுருஷனின் மனசில் உள்ளதை நிறைவேற்றினார். இது ஈசன் எவ்வளவு கருணை படைத்தவர் என்பதை வலியுறுத்துகிறது இந்த வாக்கு.)


குருநாதர் :-  அறிந்தும் அப்படி எதை என்று அறிய, எவை என்று அறிய, ஈசன் உங்களுக்கு கொடுக்க மாட்டானா என்ன? 


அடியவர் :- கலிக்கே கொடுத்த ஈசன் உங்களுக்கு கொடுக்க மாட்டாராப்பா? உங்களுக்கு அந்த வரத்தை கொடுக்க மாட்டாரா? கெட்டது நினைச்சு செய்யற ஆளுக்கே கொடுக்கிற இறைவன் நல்லது செய்ய நினைக்கிறவங்களுக்கு கொடுக்க மாட்டாரா? 


==========================================================

ஆதி ஈசனார் - கலிபுருஷன்  உரையாடல்

==========================================================


குருநாதர் :-  அறிந்தும் பலமுறை ஈசனும் கூட கலியிடம் சென்று, ஏன் எதை என்று அறிய, இத்தனை இத்தனை கஷ்டங்களை வைத்துக் கொண்டே இருக்கின்றாயே? எதை என்று அறிய.


சுவடி ஓதும் மைந்தன்: ஈசன் கலி கிட்ட போய், ஈசன் சொல்றாரு, என் அப்பா, இது மாதிரி பண்ண, ஏதோ என் கையில, அப்பா, அப்பான்னு சொல்லிட்டு, ஏமாத்திட்டு, ஏமாத்திட்டு, அடியார்களை கஷ்டப்படுத்திட்டு இருக்கிறேன்றாரு.



குருநாதர் :-  (கலிபுருஷன் ஆதி ஈசனை பார்த்து) நிச்சயம் நில்லும், தேவாதி தேவனே, அறிந்து கூட, ஏனென்றால் அறிந்தும் புரிந்தும் கூட, ஏன் இத்துன்பத்தை மனிதனுக்கு யான் அளிக்கின்றேன் என்றால், நிச்சயம் கலியுகத்தில் எவை என்று அறிய, உந்தனுக்கே துன்பத்தை நிச்சயம் கொடுப்பான் மனிதன். எதை என்று அறிய, பின் நீ எதை என்று புரிய, அதாவது அறிந்து கூட, கருணை  படைத்தவன் நீ, அறிந்து கூட, வரத்தை எடுத்துக்கொள் என்று நீ அனைவருக்கும் கொடுத்து விட்டால், நிச்சயம் மனிதன் யான் தான் இறைவன் என்று சொல்லிவிடுவானே. 


சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  உரையின் சுருக்கம் :-  ( கலிபுருஷன் இறைவனிடம் சென்று: 'அப்பா, இந்த மாதிரி ஒரு வரம் நீ எனக்குக் கொடுக்கவில்லை என்றால், மனிதர்கள் எல்லோரும் தங்களை இறைவனாகவே நினைத்து, உன் பதவிக்கே சவால் விடுவார்கள்.அதனால் அனைவருக்கும் கஷ்டங்கள் கொடுக்கின்றேன் என்று' )


குருநாதர் :- நிச்சயம் ஈசனும் கூட தலை குனிந்து, பின் இவன் தன் எதை என்று புரிய, 


சுவடி ஓதும் மைந்தன்  உரையின் சுருக்கம் :-  ( "அப்போது இறைவனும் சிந்திக்கத் தொடங்குகிறார். தலை குனிந்து, 'கலி இவன் நம்மை ஏமாற்ற முயலுகிறானா? இப்படி ஒரு விஷயத்தை நம்புவது எப்படி? மனிதர்கள் எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்!' என ஆச்சரியப்படுகிறார். உண்மையிலேயே இது நடந்ததா? ஏனெனில், அவர் ஏற்கனவே தெரிந்தோ, தெரியாமலோ அந்த வரத்தை வழங்கிவிட்டார். ஆனால், ஐயா, இதை உணர்வது முக்கியம்.) 


==========================================================

ஈசன் அடியார்களுக்கும் ஏன் கஷ்டங்கள் வருகின்றது ?

==========================================================


குருநாதர் :-  அறிந்தும் இதனால்தான், நிச்சயம் பின் ஈசன் அடியார்களாக இருந்தாலும், எதை என்று அறிய, கஷ்டம் தான் பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 


சுவடி ஓதும் மைந்தன்  உரையின் சுருக்கம் :-  ( "அதனால்தான் கலி புருஷன்  என்ன செய்கிறார் தெரியுமா? நீங்கள் எவ்வளவு நமச்சிவாயம் ஜபித்தாலும், எவ்வளவு பக்தியுடன் ஈசனை வணங்கினாலும், இன்னும் துன்பம் நீங்கவில்லை. மக்கள் பட்டினியால் வாடுகிறார்கள். ஏன்? கலி புருஷன் விடவே மாட்டார். அதனால்தான் சிவனின் அடியார்களும் தொடர்ந்து துன்பங்களை அனுபவிக்கின்றார்கள். )


குருநாதர் :-  எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் எதை என்று அறிய, இவ்வாறத்தான் அறிந்தும் புரிந்தும் கூட. 


சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  உரையின் சுருக்கம் :-  ( "அதனால்தான்—even சிவனின் அடியார்களாக இருந்தாலும், சிவனை பூஜை செய்தாலும்—even அவர்கள் துன்பங்களை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏன் இப்படி நடக்கிறது? கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம், ஐயா. குருநாதர் சொல்வதுபோல், கலியுகத்தில் மனிதனின் மனப்பாங்கு மாறி, இறைவனிடம் கேட்ட வரத்தை தவறாக பயன்படுத்துகிறான். அதனால்தான் பலர் தங்களை,  'நான் தான் இறைவன்', 'எனக்குள்ளே அகத்தியர் இருக்கிறார்', 'எனக்குள்ளே ஈசன் இருக்கிறார்', 'அம்பாள் இருக்கிறார்' என்று கூறுகிறார்கள். இப்படிப்பட்ட எண்ணங்கள் பல இடங்களில் பரவி விட்டன. இதை முன்னரே புரிந்துகொண்ட கலிபுருஷன், கலியுகத்தின் தொடக்கத்திலேயே மனிதனை பிடித்து வைத்துவிட்டார். மனிதனை விடவே இல்லை—கைப்பிடியில் கட்டி வைத்திருக்கிறார்.) 



குருநாதர் :-  அறிந்தும் எதை என்று புரிய, நிச்சயம் கலியவனும் ஈசனிடத்தில், பின் நிச்சயம், பின் தந்தையே, உன்னை யான் விட்டுவிடுவேனா என்ன என்று, 


ஈசனும் பின் முழித்து அமைதியாக…… 


சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  உரையின் சுருக்கம் :-  ( அப்போது கலிபுருஷன் கூறுகிறார்: 'தந்தையே, மனிதர்கள் எப்படி நடக்கிறார்கள்? . கலியுகத்தில் உங்களை விட,  மனிதர்கள் நாங்கள் பெரியவர்கள் என்று கூறுகிறார்கள். நான் இதை ஏற்க வேண்டுமா? தந்தையே உன்னை விட்டுவிட வேண்டுமா?' என்கிறார்கள். இதைக் கேட்ட இறைவன் மனம் சோர்ந்து, தலை குனிந்து, 'ஆஹா, மனிதர்கள் இப்படி எல்லாம் நடக்கிறார்களா?' என ஆழமாக சிந்திக்கிறார்.) 


===============================================================

# கலியுகத்தில் - கலியிடம் இருந்து தப்பிக்கும் விதி  ரகசியம் 

===============================================================


குருநாதர் :-  ஆனாலும் கலியவன் எதை என்று புரிய, நிச்சயம் அறிந்தும் கூட, எதை என்று அறிய, சரி, பின் ஈசனும், அதாவது எதை என்று அறிய, அறிய நல் மனது, எதை என்று அறிய, பின் அனைவருக்கும் உதவி செய்யும் மனப்பான்மை, மனப்பான்மை, போட்டி, பொறாமை, நீக்குதல், அனைவரும் ஒன்றே என்று எண்ணுதல், நிச்சயம் அனைவருக்கும் எவை என்று புரிய, பின் அனைத்தும் செய்தல், இவர்களுக்காவது விடுவி என்று. 



சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  உரையின் சுருக்கம் :-  ( "பாருங்கள், இங்கு ஒரு விதி உள்ளது. அதாவது, ஒரு இயற்கைச் சட்டம் போல. ஆனால் அந்த விதியை மீறுவதற்கும் ஒரு வழி இருக்கிறது. கலியுகத்தில் அனைவரும் துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்பது ஒரு பொதுவான விதி. ஆனால், இந்த விதியை மாற்றும் வழி என்னவென்று கேட்டால்—பிறருக்கு உதவிக்கரம் நீட்டும் மனப்பான்மை கொண்டவர்கள், அனைவரையும் சமமாக கருதும் நல்லெண்ணம் உள்ளவர்கள், உண்மையான கருணையுடன் நடக்கும் நற் பண்பாளர்கள் —இவர்களுக்கு அந்த விதி பொருந்தாது. )



குருநாதர் :-  அறிந்தும் எதை என்று அறிய, நிச்சயம் இறைவன் அனைவருக்கும் கொடுக்க தயார், நிச்சயம். அதற்கு நீங்கள் பின் பக்குவம் உள்ளவர்களாக, பின் எவை என்று யோசியுங்கள். 


சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  உரையின் சுருக்கம் :-  (  "இறைவன் உங்களுக்கு அனைத்தையும் வழங்கத் தயாராக இருக்கிறார். குருநாதர் ஒவ்வொரு வாக்கிலும் இதையே வலியுறுத்துகிறார்—இறைவன் தர விரும்புகிறார், ஆனால் நீங்கள் அதை பெற தயாரா? உங்களிடம் அந்த தகுதி உள்ளதா? அந்த தகுதி என்னவென்றால்: அனைவரையும் சமமாக கருதும் மனப்பான்மை, பிறருக்கு உதவிக்கரம் நீட்டும் மனநிலை. இதுவே இறைவன் எதிர்பார்க்கும் உண்மையான தகுதி. இந்த மனநிலை இருந்தால், உங்கள் விதியும் மாற்றமடையும். )



குருநாதர் :-  அறிந்தும் புரிந்தும் கூட, இப்படி எதை என்று அறிய, அறியே, ஆனால் நீங்களும் கேட்கலாம். பின் கெட்டதை செய்பவன், செய்பவன் நன்றாக இருக்கின்றான் என்று. 


சுவடி ஓதும் மைந்தன்  உரையின் சுருக்கம் :-  ( "ஆம் ஐயா, இது எல்லோருக்கும் மனதில் எழும் ஒரு கேள்வி: கலியுகத்தில் நற்குணம் கொண்டவர்கள் துன்பங்களை அனுபவிக்கின்றார்கள், ஆனால் தீமையுடன் நடக்கும் சிலர் சௌகரியமாக வாழ்கிறார்கள். ஏன் இப்படி ஒரு நிலைமை? ) 


குருநாதர் :-  அக்கெட்டவனிடத்தில் சென்று, நீங்கள் நிச்சயம் அனைத்தும், அதாவது எதை என்று அறிய, ஒரு தேர்வுக்கு பின் சென்றாலும், எதை என்று அறிய, பின் அதாவது நிரப்ப வேண்டும், நிச்சயம் எதை என்று ஒரு காகித்தாலே . அதேபோல், நிச்சயம் பின் என்னென்ன, எது எப்படி, எது என்று கூட, நிச்சயம் நீங்கள் நினைக்கின்றீர்களே, அவனிடத்திலே கேளுங்கள், தெரியும். அப்பொழுது.


சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  உரையின் சுருக்கம் :-  ( "அப்பொழுது அவர் கூறுகிறார்: 'நீங்களே சென்று கேளுங்கள். நீங்கள் ஒருவரை "கெட்டவர்" என அழைக்கிறீர்கள் என்றால், அதற்கான அடிப்படை என்ன? எதை வைத்து நீங்கள் அவரை தீர்மானிக்கிறீர்கள்?' என்கிறார். மேலும், அந்த நபரிடம் சென்று, அவரிடமிருந்து ஒரு பாடத்தை கற்றுக் கொள்ளுங்கள், கேளுங்கள், புரிந்து கொள்ளுங்கள், அப்பொழுது உங்களுக்கு தெரியும்.)


==================================================================

# அதர்மம் செய்பவர்கள் - பலி ஆடு போல முதலில் ராஜ மரியாதை 

==================================================================


குருநாதர் :-  இதை ஏற்கனவே யான் தெரிவித்து விட்டேன். கெட்டவனுக்கு மட்டும் பின் கொடுக்கின்றான் இறைவன் என்று. ஆனாலும் அறிந்தும் புரிந்தும், அதாவது இதை ஏற்கனவே தெரிவித்து விட்டேன். மீண்டும் இங்கு தெரிவிக்கின்றேன்.  ஒரு ஆட்டிற்கு அனைத்தும் செய்வான். நலன்கள் பின் மாலை இடுவான், எதை என்று குளிப்பாட்டுவான், எதை என்று அறிய, நிச்சயம் அனைத்தும் செய்து, ஆனால் அவன் ஆடு சந்தோஷம் ஆடும், நிச்சயம் ஆடும். பின் நிச்சயம் எதை கூட, அனைத்தும் பின் நம் தனக்கு செய்கின்றார்களே என்று, பின் எவை என்று அறிய, அறிய, பின் அதாவது மனிதனும் அப்பா, பாவம், 


சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  உரையின் சுருக்கம் :-  (  "அவர் எவ்வளவு அனுமதித்திருக்கிறார் என்பதைப் பாருங்கள்—அதிகம் indeed! சிலர் தீய செயல்களில் ஈடுபடுபவர்களாக இருந்தாலும், அவர்கள் ஒரு பலியாட்டைப் போல நடத்தப்படுகிறார்கள். பலி கொடுக்கப்படும் ஆட்டுக்கு முன் என்ன செய்கிறார்கள்? சிறந்த உணவு அளிக்கப்படுகிறது, மஞ்சள் நீர் தெளிக்கப்படுகிறது, மாலை அணிவிக்கப்படுகிறது, மரியாதை செய்யப்படுகிறது. ஆனால் இறுதியில், அந்த ஆடு பலிக்காக நிறுத்தப்பட்டு, ஒரு நிமிடத்தில் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது. அதுபோலதான் சிலரின் நிலையும். )


கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( இவ் விளக்கம் கேட்டு,  மிகவும் பலத்த கை தட்டல்கள் )


===============================

# தெய்வம் நின்று கொல்லும் 

===============================


குருநாதர் :- நிச்சயம். பின் மனிதன் வேண்டுமென்றால், உடனடியாக தண்டனை கொடு, எதை என்று அறிவான். ஆனால் இறைவனோ, நிச்சயம் ஓடு, ஓடு என்று அனைத்தும் செய்வான். இதோ, அனைத்தும் எடுத்துக்கொள் என்று. 


சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  உரையின் சுருக்கம் :-  ( "ஆனால் மனிதன் என்ன செய்கிறான் தெரியுமா? ஒருவன் தவறு செய்துவிட்டான் என்றால் உடனே குற்றம் சாட்டுகிறான்—'ஏன் இப்படிச் செய்தான்?', 'அவன் தப்பானவன்' என்று திட்டுகிறான், விமர்சிக்கிறான், கோபப்படுகிறான். ஆனால் இறைவன் அப்படியல்ல. ஒரு அரசன் உடனே தண்டனை வழங்கலாம்; ஆனால் தெய்வம் பொறுமையுடன் காத்திருந்து, சரியான தருணத்தில் செயல்படுவான். ஒருவரின் வாழ்க்கையில் சில விஷயங்கள் தாமதமாக நடப்பது கூட இறைவனின் கர்மா செயல்படுவதற்கான ஒரு பகுதி. அந்த தாமதம், அந்த ஓட்டம்—all அவனுடைய பழைய கர்மாவை கழிக்க ஒரு வாய்ப்பு. ஆனால் அந்த கர்மா மிகுந்த அளவில் இருந்தால், இறைவன் தக்க நேரத்தில் தண்டனையையும் வழங்குவார்.) 


குருநாதர் :-  அறிந்தும், ஆனால் நீங்களும் கேட்கலாம். பின் அதற்குள்ளே அனைத்தும் பின் நடக்கின்றதே என்று. ஆனாலும் அதோடு முடிந்தது, அவன் பரம்பரை. 


சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  உரையின் சுருக்கம் :-  ( "அந்த ஒரு தலைமுறை, அந்த ஒரு பரம்பரை முடிவடைந்துவிட்டதாக குருநாதர் கூறுகிறார்கள்.  வெளியிலிருந்து பார்ப்பதற்கு சாதாரணமாகத் தோன்றும். தவறுகள் செய்யும் அந்த நபரை முடிவுக்கு கொண்டு வந்ததோடு, அவருடைய பரம்பரையே முடிவடைந்தது. நீங்கள் நினைக்கலாம்—'அவன் இன்னும் வாழ்கிறானே, தண்டனை வருவதற்குள் வாழ்ந்துவிட்டானே?' என்று. ஆனால் உண்மையில், அந்தச் சண்டை முடிவடைந்துவிட்டது. அந்த நபரின் பரம்பரை, ஒரு பெரிய சிக்கலுக்குள் நுழைந்த பரம்பரையாகவே மாறிவிட்டது. ) 


====================================

# இறைவன் - அதி உச்ச மின்சாரம் 

====================================


குருநாதர் :- அறிந்தும், இதனால் இறைவன் மிகப்பெரியவன். இதைப் பின் இச்  சக்தியை யாராலும் உணர முடியாது. 


சுவடி ஓதும் மைந்தன் :- இறைவன் என்பவர் மிகப்பெரியவர், அந்த சக்தி என்பவர் சக்தி என்பது யாராலும் உணர முடியாது. யாராலும் உணர முடியாது. 


குருநாதர் :-  அறிந்தும் கூட, அதாவது யானே சொல்கின்றேன்.  அதாவது மின்சாரம் பின் கம்பி தன்னில் கூட சென்று கொண்டே இருக்கின்றது. ஆனால் பின் யான், பின் பிடி என்று ஒரு மனிதனுக்கு சொல்கின்றேன். நிச்சயம் தன்னில் கூட பிடித்து விடுவானா என்ன ?


சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( "ஒரு எடுத்துக்காட்டாக அவர் கூறுகிறார்: 'கரண்ட் கம்பியை யாராவது பிடிப்பார்களா? கரண்ட் கம்பியை யாராவது பிடிப்பார்களா? நீங்கள் பிடிப்பீர்களா?' என்று குருநாதர் கேட்கின்றார், 'ஐயா, குருநாதர் சொல்கிறார்' என்று நினைத்துக் கொள்ளுங்கள். 'ஐயா, கரண்ட் கம்பி பிடியுங்கள், பிடியுங்கள்' என்று கூறுகிறார்கள். நீங்கள் பிடித்திருப்பீர்களா? பிடிக்க முடியுமா? )


குருநாதர் :-  அறிந்தும், புரிந்தும் இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் இது சுலபமானது. ஆனால் இறைவன் மிகப்பெரியவன். பிடி என்றால் எப்படி நீங்கள் பிடிப்பீர்கள்? 


சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( "இறைவன் என்பது ஒரு ஹை வோல்டேஜ் டிரான்ஸ்பார்மர் போல. அந்த வோல்டேஜை எப்படி பிடிக்க முடியும்? நம்மால் சொல்ல முடியுமா? அதற்குப் பிறகு என்ன ஆகும்? அவ்வளவுதான். அடித்தே தூக்கிடும், ஐயா. பிடிக்க முடியாது. பிடிக்க மாட்டார்கள், முடியாது என்பதுதான். நெருங்க முடியாது—even பக்கத்திலேயே செல்ல முடியாது. நெருங்க முடியாது. )


குருநாதர் :- நிச்சயம் இவற்றுக்கு எதை என்று அறிய, யாங்கள் வழிகாட்டுவோம். வருங்காலத்தில் நிச்சயம் தன்னில் கூட நீங்களும் நெருங்கி எதை என்று புரிய, 


சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  உரையின் சுருக்கம் :-  (நெருங்கலாம். அதுதான் வீட்ல ஒரு கரண்ட் வேலைக்கு ஒரு எலக்ட்ரிசியன் வருகிறார். அப்படின்னா, அவர் எப்படி வேலை பார்க்கிறார்? எலக்ட்ரிசியன் கையில இதற்கேற்ற எக்யூப்மென்ட்  எல்லாம் வைக்கிறார்—கிளௌஸ்  போடுகிறார், கட்டை வைக்கிறார், செருப்பு போடுகிறார், கட்டிங் பிளேயர் வைத்திருக்கிறார். அந்த கரண்டை அப்ரோச் செய்வதற்கு டூல்ஸை வைத்துத்தான் செய்கிறார். அதே மாதிரி, இறைவனை அப்ரோச் செய்வதற்கும் வழிமுறைகள் இருக்கின்றன. 'நான் சொல்லித் தருகிறேன்' என்று  குருநாதர் கூறுகிறார்.)


===============================================================

# சித்தர்களுடைய வாக்குகளை கேட்டாலே சில புண்ணியங்கள்

===============================================================


குருநாதர் :- எதை எவை என்று புரிய, நிச்சயம் அதனால் அறிந்தும் புரிந்தும் . பின் சித்தர்களுடைய வாக்குகளை பின் கேட்டாலே சில புண்ணியங்கள், அப்புண்ணியங்கள் நிச்சயம் பின் மற்றவரிடத்திலும் நீங்கள் செலுத்தலாம். 


அடியவர் :- ஓம் நமச்சிவாய. அதாவது இந்த வாக்குகள் கேட்கிறதே பெரிய புண்ணியம்ங்கிறாங்க. 


கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( இவ் விளக்கம் கேட்டு,  மிகவும் பலத்த கை தட்டல்கள் )


சுவடி ஓதும் மைந்தன்:- அப்ப இந்த புண்ணியத்தை நீங்கள் பிறருக்கு கொடுக்கலாம், கொடுக்கலாம். 


குருநாதர் :- அதனால்தான் தீயவன் பின் அருகில் இருந்தால், நிச்சயம் அவனுடைய பட்டும் உன்னிடத்தில் பற்று. பின் நிச்சயம் இன்னும் தீயதை செய்வீர்கள். பின் நல்லதை எது என்று அறிய, பின் சொன்னால், பின் அதையும் சமநிலைப்படுத்தி, இன்னும் பின் எவை என்று புரிய, பின் நல்லது எது என்று ஒரு அப்படியே, பின் சமநிலைப்படுத்தி, நிச்சயம் சமமாக செல்லும். அப்பொழுது உங்களுக்கும் புண்ணியம் எது என்று அறிய, அவர்களும் எது என்று அறிய, 


சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  உரையின் சுருக்கம் :-  (நல்லவர்களோடு இணைந்தால் நல்லதே நடக்கும். தீயவர்களோடு சேர்ந்தால் தீயதே நடக்கும். அதனால், சமநிலையைப் பேணிக்கொள்ள வேண்டும். தீயவர்கள் அதிகமாகும்போது, பிரச்சனைகளும் அதிகரிக்கத் தொடங்கும்)


===============================================================

# கூட்டு பிரார்த்தனைக்கு வந்தாலே உண்டாகும் புண்ணியங்கள்

===============================================================


குருநாதர் :- எதை என்று புரிய, நிச்சயம் மறைமுகமாக எங்களை நாடி வந்துவிட்டீர்கள். நிச்சயம் எதை என்று புரிய, யாங்களும் இங்கே தான் இருக்கின்றோம். நிச்சயம் எவை என்று அறிய, எங்கள் ஒளி உங்கள் மீது பட்டாலே சில புண்ணியங்கள், பின் நிச்சயம் அதாவது சில சில வருத்தங்கள் மறைந்து, புண்ணியங்கள் பெருகிவிடும். அப்புண்ணியங்கள் எது என்று அப்படியே பிரகாசிக்கும். நிச்சயம் நீங்களும் பின் இல்லத்திற்கு சென்றால், உங்கள் குழந்தைகளுக்கும் போய் சேரும். 


சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  உரையின் சுருக்கம் :-  (அதாவது, நீங்க இங்க வந்திருக்கீங்கப்பா, உங்களுக்கு என்னுடைய ஒளிகள், சித்தர்கள் எங்களுடைய ஒளிகளை வழங்குகிறோம். இந்த ஒளிகளோடு நீங்கள் வீட்டுக்கு சென்றால், குடும்பத்தில் உள்ள குழந்தைகள், மனைவி, மற்றும் எல்லா உணவினர்களுக்கும் அது பட்டு, அதன் மூலம் சில புண்ணிய செயல்கள் பெருகும் என்று கூறுகிறார்கள். ஐயா, இது உங்களுக்கு மட்டும் அல்ல—உங்கள் குடும்பத்திற்கே நல்லது. இங்கு வந்திருக்கிற அனைவருக்கும் அது அதேபோல் பயனளிக்கும். )


கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( இவ் விளக்கம் கேட்டு,  மிகவும் பலத்த கை தட்டல்கள் )


குருநாதர் :- அறிந்தும் எது என்று அறிய, கலியுகத்தில் மனிதனால் தப்பிக்கவே முடியாது பாவத்திலிருந்து. ஆனாலும் பின் யாங்கள் தான் ஐயோ பாவம் என்று 



அடியவர்  உரையின் சுருக்கம் :- :- ( கலியுகத்தில் இருந்து யாரும் யாரும் தப்பிக்க முடியாது. சித்தர்கள் நாங்கள் 'ஐயோ பாவம்' என்று பார்த்து, உங்களுக்கு ஏதாவது செய்தால்தான்நம்மை  உண்டாகும்.)


குருநாதர் :- அறிந்தும் இதனால் இப்படியே விட்டுவிட்டால், நிச்சயம் எவை என்று அறிய, அறிய இறைவனை வணங்குபவர்களும் கூட அதிக கஷ்டத்திற்கு உள்ளடக்கி, உள்ளாக்கி, நிச்சயம் புரிந்து கொள்ளாமலும் இறைவன் இல்லை. இறைவனே, வணங்குகின்றேனே, ஒன்றுமே செய்யவில்லை என்று பின் எதை என்று அறிய, இறைவன் மீது பற்று போய்விடும் என்பேன். இதனால்தான் நிச்சயம் இறைவன் இருக்கின்றான், ஆனால் மனிதனுக்கு தெரிவதில்லை. 


சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  உரையின் சுருக்கம் :-  ( இப்போ அதனால்தான் சித்தர்கள் இறங்கி வந்திருக்கிறார்கள். ஏனெனில் நல்லவர்கள் எல்லாம் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். கலியுகத்தில் ஏன் இப்படி நடக்கிறது, எதற்காக இப்படி நடக்கிறது என்பதெல்லாம் புரியவில்லை. இவர்கள் எல்லாம் ஒரு எக்ஸ்ட்ரீம் நிலைக்கு சென்றுவிடுகிறார்கள். ஐயா, 'இறைவனே இல்லை' என்று கூறி விட்டால், அப்புறம் உலகமே அழிந்துவிடும். சித்தர்கள் பெரும் கருணை கொண்டவர்கள் என்று கூறப்படுகிறார்கள். 'அப்பா, நீ வாழத் தெரியாமல் வாழ்கிறாய், ஆனால் இறைவன் இருக்கிறார்' என்பதை கூறுகிறார்கள். 'நான் உனக்குப் புரிய வைக்கிறேன். நீ நல்லவன் தான், ஆனால் இறைவனை எப்படி வணங்க வேண்டும் என்பதைக் தெரியவில்லை. இறைவனை நான் உனக்கு சொல்லித் தருகிறேன். வாங்க' என்று சித்தர்கள் இறங்கி வந்து நம்ம அனைவருக்கும் சொல்லித் தருகிறார்கள்.) 


===============================================================

# கூட்டு பிரார்த்தனையின் அபார  பலன், ஆச்சரியமான  சக்தி

===============================================================


குருநாதர் :- அறிந்தும் புரிந்தும் கூட, அதாவது எவை என்று அறிய, அறிய சிவபுராணத்தை எத்தனை முறை நீங்கள் சொன்னீர்கள் என்பது பின் அனைவரும் எதை என்று அறிய சிந்தித்து?


சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  உரையின் சுருக்கம் :-  (அப்போ, இதுவரைக்கும் நீங்கள் சிவபுராணத்தை எத்தனை முறை சொன்னீர்கள்? ஐயா, இந்தக் கேள்வியை குருநாதர் கேள்வி கேட்கிறார்—'நீங்கள் இந்த கூட்டு பிரார்த்தனையில் இதுவரைக்கும் எத்தனை தடவை சிவபுராணத்தை சொல்லியிருக்கிறீர்கள்? நீங்கள் இதுவரை 3 முறை சொல்லி இருக்கின்றீர்கள்) 


குருநாதர் :-  அறிந்தும் இவை தன் பின் எதை என்று கூற ஏற்கனவே முன் உரைத்துவிட்டேன். ஒருவன் பின் மூன்று தடவை சொன்னால், நிச்சயம் தன்னில் கூட, அதாவது உள் உறுப்புகள் அதிர்வடைந்து சில பாவங்கள் வெளியேறும். இதனால் நிச்சயம் தன்னில் கூட, பின் எத்தனை ஆட்கள் இங்கு இருக்கின்றீர்கள்? 


அடியவர்கள் :-  ஆயிரம் பேர், ஆயிரம் பேர் இருக்காங்க. 


===================================================

# ஒரு முறை பாடினால் - 1000 முறை பாடிய பலன் 

===================================================


குருநாதர் :-  எதை என்று புரிய, இதை தெரிந்து கொள்ளே ஆகவேண்டும். நிச்சயம் தன்னில் கூட, நீங்கள் அனைவருமே ஆயிரம் தடவை உச்சரித்துள்ளதாக, நிச்சயம். 


கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( இவ் விளக்கம் கேட்டு,  அடியவர்கள் சந்தோஷம் அடைந்து , மிகவும் பலத்த கை தட்டல்கள் )


சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  உரையின் சுருக்கம் :-  ( அப்போ, நீங்கள் ஒவ்வொருவரும் சிவபுராணம் மூன்று தடவைகள் மட்டுமே உச்சரித்தீர்கள். சிவபுராணம் ஒரு தடவை சொன்னால், கூட்டுப் பிரார்த்தனை இங்குள்ள  ஆயிரம் பேர் சேர்ந்து சொன்ன மாதிரி, ஆயிரம் தடவை. மூன்று தடவை சொன்னால், 3000 தடவை சொன்னதற்கு சமம் என்கிறார். நீங்கள் ஒவ்வொருவரும் என்ன செய்தீர்கள் தெரியுமா? 3000 தடவை சிவபுராணம் சொல்லியதற்கு சமம்.  கூட்டு பிரார்த்தனையின் பலன் மிகுந்த அபார சக்தி இருக்கிறது. )


கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( இவ் விளக்கம் கேட்டு,  அடியவர்கள் சந்தோஷம் அடைந்து , மிகவும் பலத்த கை தட்டல்கள் )


சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  உரையின் சுருக்கம் :-  ( ஐயா, இதுவே கூட்டு பிரார்த்தனையின் சக்தி. கூட்டு பிரார்த்தனை என்றால், நீங்கள் தனியாக ஒன்று, இரண்டு, மூன்று தடவை சொன்னாலும், ஆயிரம் தடவைகள் வராது. சொல்ல முடியுமா? ஆயிரம் என்றால், ஒரே நாளில் நீங்க ஆயிரம் புண்ணியம் செய்வதற்குச் சமம். மூன்று தடவை சொன்னதற்கே 3000 தடவை சொன்ன புண்ணியம் கிடைத்துவிட்டது. அப்ப, நீங்கள் மூன்று தடவைகள் தான் சொன்னதாக நினைத்திருக்கலாம். ஆனால், 3000 தடவைகள் சொன்னதற்கு சமம். ஒவ்வொரு தடவையும் அந்த புண்ணியம் உங்களுக்கு கிடைத்ததால், நீங்கள் நிச்சயமாக நல்லவனாக வாழ்ந்திருப்பீர்கள். உங்களுக்கு புண்ணியம் வந்திருக்கும்)


கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( இவ் விளக்கம் கேட்டு,  அடியவர்கள் சந்தோஷம் அடைந்து , மிகவும் பலத்த கை தட்டல்கள் )


குருநாதர் :- இதனால்தான் அறிந்தும் கூட எவை என்று கூற, எவை என்று புரிந்து கொள்ளுங்கள். ஆனாலும் புரியாமல் இருந்து விடாதீர்கள். 


சுவடி ஓதும் மைந்தன்:- தயவு செஞ்சு புரிஞ்சு செய்யுங்கப்பா. எந்த ஒரு செயலையும் புரியாமல் செய்யாதீங்க. 


===================================================

# உயிர் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திரம் 

===================================================


குருநாதர் :- அறிந்தும் கூட, நிச்சயம் அறிந்தும், அதாவது பின் இறப்பவனும் கூட, நிச்சயம் எழுப்பி எதை என்று அறிய, நடத்தி எதை என்று அறிய, அறிய அனைவரும் ஒன்று சேர்ந்து மந்திரத்தை பின் நிச்சயம் பின் எவை என்று ஒரு சஞ்சீவினி மந்திரத்தை கூட. 


சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  உரையின் சுருக்கம் :-  ( அப்போ இறக்கும் நேரத்தில், குருநாதர் கூறுகிறார். ஒரு ஆயிரம் பேர் கூடி, குருநாதர் அந்த சஞ்சீவி மந்திரத்தை சொல்லுவார். அதை நீங்கள் சொன்னீர்கள் என்றால், இறக்கும் நேரத்தில் உள்ளவர் உயிர் பிழைப்பார் என்கிறார். கூட்டு பிரார்த்தனையின் சக்தியைப் பற்றியும், சக்தி எல்லாரும் கூப்பிட்டு, ஒரு ஆயிரம் பேர் சேர்ந்து அந்த மந்திரத்தை சொல்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள். ஐயா, எல்லாரும் ஒன்றாக சேர்ந்து அந்த மந்திரத்தை சொன்னால், இறக்கவிருக்கும் ஒருவரையும் பிழைக்க வைக்க முடியும் என்கிறார்.)



குருநாதர் :- அப்பனே, இவையெல்லாம் அழகாக பின் புத்தகத்தில் எழுதி வைத்தோம். அதாவது சுவடிகளில் எழுதி வைத்தோம். அவையெல்லாம் நிச்சயம் எவை என்று கூற, இவ்வாறாக நிச்சயம் கலியுகத்தில் மனிதன் பிழைத்துக் கொள்வான் என்று நிச்சயம் எங்கெங்கோ இட்டு விட்டார்கள். 


சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  உரையின் சுருக்கம் :-  ( அப்போ மனிதன் என்ன செய்தான் என்றால், சித்தர்கள் முன்னதாகவே இதையெல்லாம் எழுதி வைத்திருந்தார்கள். இதையெல்லாம் எழுதி வைத்திருந்தார்கள். மனிதன் இதையெல்லாம் பார்த்தால் பிழைத்து விடுவான் என்பதற்காக. ஆனால் சில கெட்ட மனிதர்கள் இதையெல்லாம் மறைத்துவிட்டார்கள்.)


குருநாதர் :- எதை என்று அறிய, அறிய இங்கு நிச்சயம். அதாவது இப்படி எல்லாம் இருந்தால், அனைவரும் எதை என்று பிழைத்துக் கொண்டு, அனைவரும் நன்றாக வாழ்ந்து விடுவான் என்று மனிதனே அதை மறைத்து விட்டான். ஏனென்றால் பின், அதாவது முன்னோர் எல்லாம் பின் செல்வந்தன் என்று சொல்வானே. நிச்சயம், அதாவது இவ்வாறாக அனைவருக்கும் தெரிந்து விட்டால், இங்கு யாம் பிழைக்க முடியாது. நிச்சயம் பெரிய ஆளாக எதை என்று கூற, பின் இக்காண்பிக்க முடியாது என்று. 


சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  உரையின் சுருக்கம் :-  (அப்போ மனிதன் என்ன செய்கிறான்? சில கெட்டவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால், தாங்கள் பிழைக்க வேண்டும் என்பதற்காக, 'மிச்சம் எல்லாம் கீழே இருக்க வேண்டும், அப்போதுதான் நான் மேல இருக்க முடியும்' என்ற ஒரு சுயநல எண்ணத்தால், இந்த மாதிரியான சுவடி நூல்களை மறைத்துவிட்டார்கள். தங்களை முதன்மைப்படுத்தி கொள்ளும் நோக்கத்தில், இவை போன்ற நூல்களை மறைத்துவிட்டார்கள். இப்போது இவரை பெரிய ஆளாக வைத்துக்கொள்கிறார்கள். 'என்ன இது? இதெல்லாம் இருந்தபோதும், இவங்களுக்கு சொல்லிக் கொடுத்திருந்தால், இவர்கள் நாளை பெரிய ஆளாகிவிடுவார்கள். நீங்கள் பெரிய ஆளாகிவிடுவீர்கள்.' அப்போ, 'நாம் தான் பெரிய ஆளாக இருக்க வேண்டும்' என்று நினைத்து யார் இதை செய்தார்கள்? மனிதர்களே மறைத்துவிட்டார்கள். மனிதனே மறைத்தான் என்கிறார்கள். அதனால்தான் மனிதனை குறை கூறுகிறார்கள். இறைவனும், சித்தர்களும்—all மனிதனே என்பதுதான் காரணம் என்கிறார்கள்.)


குருநாதர் :-அறிந்தும் எவை என்று அறிய, அறிய நிச்சயம் பின் இருப்பதை எதை என்று அறிய, நிச்சயம் பார்த்து எவை என்று அறிய, நிச்சயம் எதை என்றும் புரியாமல் இருந்தாலும், குருடனாக இருக்காதீர்கள். 


அடியவர் :- எதுவும் அறியாமல், புரியாமல் குருடன் போல் வாழாதீங்க. ஐயா, 


குருநாதர் :- நிச்சயம் அதேபோலத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது கூட.


சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  உரையின் சுருக்கம் :-  (  இப்போதும் அதே போல தான் இருக்கிறோம் என்கிறார்கள். எல்லாம் இருந்தபோதும், நம்மால் குருடன் போலவே இருக்கிறோம் என்கிறார்கள். )



குருநாதர் :- அறிந்தும் எவை என்று அறிய, இதனால் மனிதனை தேடி அலைகின்றோம். இறைவனை மறந்து விடுகின்றோம். 


சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  உரையின் சுருக்கம் :-  ( 

இதனால் நம்ம என்ன செய்கிறோம்? மனிதனை, மனிதன் தேடி அலைகிறான். 'பரிகாரம் எனக்கு, அந்த பிரச்சனை' என்று. 'ஐயோ, ஏதாவது நடக்குமா?' என்று மனிதன் கையில போய்விடுகிறான். அப்போ என்ன செய்கிறான்? இறைவனை மறந்துவிடுகிறான். மறந்துவிடுகிறான். மனிதன் கையில போய்விட்டு, 'அது நடக்குமா? இது நடக்குமா?' என்று கேட்கிறான். அப்போது என்ன நடக்கிறது? இறைவனுக்கு எங்கே மதிப்பும் இருக்கிறது? )


( நம் குருநாதர் அருளால் மதுரையில் நடந்த கூட்டு பிரார்த்தனை வாக்கு தொடரும் …….)


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம் !

சர்வம் சிவார்ப்பணம் !


No comments:

Post a Comment