இறைவா நீயே அனைத்தும்.
இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.
அன்புடன் அகத்திய மாமுனிவர் பெங்களூர் சத்சங்கம் - 12.November.2024 - பகுதி 4
ஆதி முதல்வனை மனதில் எண்ணி செப்புகின்றேன், அகத்தியன்.
( இவ் தொடர் வாக்கின்- 4 ஆம் பகுதி உரையாடல்களை இப்போது பார்ப்போம் )
குருநாதர் :- தாயே, நிச்சயம், பின் ஒரு சதவீதமாவது முதலில் கொடுத்தால், நிச்சயம், பின் அறிந்து கூட, எவை என்று அறிய அறிய. தாயே, பின் நிச்சயம், பின்
சுவடி ஓதும் மைந்தன் :- ( ஒரு சதவீதம் கொடுப்பது என்று யோசிக்க வேண்டாம். நம்மால் முடிந்த அளவுக்கு தான தர்மம் செய்ய வேண்டும். நூறு ரூபாயில் ஒரு ரூபாய் என்றால் அது ஒரு சதவீதம் தான். அந்த ஒரு ரூபாய்க்கு கூட இன்று எதுவும் வாங்க முடியாது போலத் தோன்றலாம். ஆனால் அந்த ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி, அதை நன்றாக அரைத்து எறும்புகளுக்குப் போடலாம். அது கூட ஒரு புண்ணியமாகும். எறும்புகளுக்குத் தானம் செய்வது என்பது பரிவும், கருணையும் நிறைந்த ஒரு செயல். இதுவே தான தர்மத்தின் உண்மையான அர்த்தம்—அளவைக் கடந்து உள்ள அன்பை வெளிப்படுத்துவது. )
=======================================
# ஒரு ரூபாய் கொடுத்தாலே , இறைவன் இன்னும் கொடுப்பார்
=======================================
குருநாதர் :- தாயே, இவ்வொரு ரூபாய் கூட அறிந்து கூட, நிச்சயம், பின் மனதால செய்தாலே, இறைவன் இன்னும் கொடுப்பான். செய்ய, அதாவது, சிறிதளவு செய்தாலே, நிச்சயம், பெருவழியில் போய்விடும் அது.
சுவடி ஓதும் மைந்தன் :- ( தாயே, ஒரு ரூபாய் கூட மனதார அறிந்து, நம்பிக்கையோடு தானமாக கொடுத்தால், இறைவன் அதைவிட பெரிதாக கொடுப்பதில் சந்தேகமே இல்லை. சிறிதளவு செய்தாலும், அதில் உள்ள மனதின் தூய்மை, கருணை, நம்பிக்கை என்பவை அந்த செயலை புண்ணியத்தின் பெருவழிக்குத் தள்ளும். நீங்கள் அந்த தான தர்மத்தின் ஆரம்பத்தை செய்துவிட்டீர்கள் என்றால், அது எங்க போய்விட்டது என்று கேட்பது தேவையில்லை; அந்த செயல் இறைவனின் கணக்கில் பதிந்து, உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை silently கொண்டு வந்திருக்கலாம். ஒரு சிறிய தானம்—even if it’s just a rupee—is a divine trigger; அதை மனதார செய்தால், அது நிச்சயம் பலம் தரும். )
=======================================
# சுயநலம் - இறைவன் அப்படியே ஆகட்டும் என்று சொல்லிவிட்டு சென்று விடுவார்.
=======================================
குருநாதர் :- ஆனாலும், நிச்சயம், அதை செய்ய தெரிவதில்லையே. அனைத்தும் தன் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும். தன் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறவர்களுக்கு, இறைவன் அப்படியே ஆகட்டும்பா என்று சொல்லிவிட்டு சென்று விடுவான்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( தன் குடும்பம் நல்லா இருக்கணும். நாம நல்லா இருக்கணும். என்று வேண்டினாள் இறைவன் என்ன சொல்லுவார் ? அப்படியே இரு என்று சொல்லிவிடுவார்? - ஆசிகள் கிடைக்காது. கஷ்டப்படும் சூழ்நிலை உருவாகிவிடும் )
குருநாதர் :- அறிந்து கூட, ஆனால் எவை என்று புரிய, இதற்கு அர்த்தம் யாராவது கூறுங்கள்?.
சுவடி ஓதும் மைந்தன் :- சரி, அர்த்தத்தை யாராவது கூறலாம்.
அடியவர் :- (சாதாரணமான ஒரு குடும்பத்துக்கு இயல்புதான் சாமி. ஒரு குடும்பஸ்தனுக்கு, அவன் கூட இருக்கிறவங்க எல்லாம் நல்லா வைத்திருக்க வேண்டும் என்று எண்ணம் தானா வருது? )
குருநாதர் :- அப்பனே, அது சுயநலவாதி. உன் ஆசைக்காகத்தான் உன் குடும்பம்.
அடியவர் :- கரெக்ட்.
அடியவர் 2 :- ஆமா, சாமி,
சுவடி ஓதும் மைந்தன் :- ( சுயநலத்துல உன் ஆசைக்காக தான்ப்பா நீ இப்படி செய்கின்றாய்.)
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், பின் மனைவியும், பின் பிள்ளைகளும் இப்படித்தானப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- மனைவி வந்ததும் ஒரு ஆசை.
அடியவர் :- ம்
சுவடி ஓதும் மைந்தன் :- பிள்ளைகளும் ஒரு ஆசைதான்.
குருநாதர் :- அப்பனே, எதை என்று அறிந்து இன்னும் சொல்?.
சுவடி ஓதும் மைந்தன் :- இன்னும் நீ சொல்லுப்பா.
அடியவர் :- ஆசான், அவர்தான் சொல்றாரு. அது உங்கள் மூலம் நாங்க தெரிஞ்சுக்கிறோம்.
=======================================
# ஈசனோடாயினும் ஆசை அறுமின்
=======================================
குருநாதர் :- அப்பனே, நீங்கள் ஆசைகள் வைத்துக்கொண்டு, அப்பனே, நிச்சயம், அறிந்து கூட, அப்பனே. எவை என்று புரிய, புரிய. அப்பனே, இதனால், அப்பனே, அறிந்து கூட, இதனாலதான், அப்பனே, நிச்சயம், ஆசை அப்பனே, இறைவனிடத்தில் வைக்கக் கூடாதப்பா.
சுவடி ஓதும் மைந்தன் , அடியவர் :- ( சாமி, கும்பிடனும்ன்றது ஆசை. அதுவும் ஆசைதான். அதே மூணு ஆசை. இது பண்ணி கொடுத்தா, நான் இந்த பூஜை செய்றேன். அதை செய்றேன். )
அடியவர்கள் :- ( பல உரையாடல்கள் )
குருநாதர் :- அப்பனே, நிச்சயம். அப்பனே, அதாவது, இது கர்நாடக நேயம் அப்பனே. அதாவது, (உன்னை) முதல் அமைச்சர் ஆக்க அப்பனே, அனைவரையும் கூட பூஜைகள் செய்ய சொல்லலாமா என்ன ?
சுவடி ஓதும் மைந்தன் : - ( சரி? ஓகே, இந்த கர்நாடக தேசத்துல, நீங்க முதலமைச்சர் ஆகணும். எல்லாரையும் அழைத்து வந்து பூஜை செய்யல சொல்லலாமா? புரியலையா?)
அடியவர் :- எல்லாரும் எதிர்பார்ப்பு இல்லாம பூஜை செஞ்சா நல்லா இருக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் : - ( ஒருவர் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசையால், மற்றவர்களை அந்த நோக்கத்துக்காக பூஜை செய்யச் சொல்கிறார். அந்த செயல் சுயநல ஆசையின் வெளிப்பாடாக இருக்கிறது. அப்போ அந்த பூசையை செய்யலாமா? )
அடியவர் :- இல்ல, சுயநலம்,
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், இறைவன் கொடுப்பதப்பா. அப்பனே அவ்வளவுதான்.
சுவடி ஓதும் மைந்தன் : - இறைவன் என்ன கொடுக்கிறாரோ, அதுதான்.
=======================================
# பூசை ரகசியங்கள் - எப்படி பூசை செய்யக்கூடாது ?
=======================================
குருநாதர் :- அப்பனே, சில பூஜைகளுக்கும் கூட, அப்பனே, விசேஷம் உண்டு என்பேன் அப்பனே. அதை எப்படி செய்ய வேண்டும் என்றால், அப்பனே, நிச்சயம். அப்பனே, பின் அப்ப பூஜை மூலம் இது ஆகிவிடும் என்று, அப்பனே, ( எனக்கு இது நடந்துவிடும் என்று ஆசைகளுடன் ) நிச்சயம் செய்யக் கூடாதப்பா.
சுவடி ஓதும் மைந்தன் : - ( பூஜை என்பது சுயநல ஆசையால் அல்ல, பரம உலக நன்மை என்ற நியாயத்தால் செய்யப்பட வேண்டும்; அப்போதுதான் அது பலிக்கிறது. “இது வேணும், அது வேணும்” என்ற தனிப்பட்ட விருப்பங்களால் பூஜை செய்தால், அது நடக்காது என்பதே இறைவனின் பதில். அதற்காக இவ்வளவு தூரம் முயற்சி செய்தாலும், சுயநலத்துடன் செய்தால் அது பலிக்காது என்பதே உண்மை. )
குருநாதர் :- அப்பனே, ஏன் எதற்கு? எவை என்று அறிய அப்பனே. ஆனாலும், இதில் ஒரு புண்ணியம் அப்பா. அப்பனே, நிச்சயம், இதில் நிச்சயம். அப்பனே, ஏதோ காசு இன்னொருவருக்கு கொடுக்கின்றார். (பூசை செய்பவர்) அவன் வாழ்கின்றான். அது (உனக்கு) புண்ணியம் அப்பா.
சுவடி ஓதும் மைந்தன் : - ( பூஜை செய்பவர், ஏதோ ஒரு நலன் வேண்டி, மற்றொருவரிடம் பணம் கொடுத்து பூஜை செய்கிறார்; அதனால் அவர் வாழ்கிறார். அந்த செயல் புறத்தில் சுயநலமாகத் தோன்றினாலும், அதில் ஒரு புண்ணியம் இருக்கிறது — ஏனெனில், ஒருவர் வாழ்வதற்கான வழி ஏற்படுகிறது. )
=======================================
# பூசை ரகசியங்கள் - எப்போது நீங்கள் பிழைத்துக் கொள்வீர்கள்?
=======================================
குருநாதர் :- அப்பனே, (பூஜை செய்பவன்) உண்மையானாக அவன் இருந்தால், அப்பனே, நிச்சயம், நீங்கள் பிழைத்துக் கொள்வீர்கள் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் : - ( அவர் செய்தது ஒரு உண்மையா இருந்தா, அவர் சரியான ஆள் ஆக இருந்தா, அது உங்களுக்கு புண்ணியம் ஆயிடும்பா. நீங்க நல்லா இருப்பீங்க. இதுதான் புண்ணியம். )
=======================================
# பூசை ரகசியங்கள் - ஏன் பூசை செய்பவர்களுக்கு நோய்கள்?
=======================================
குருநாதர் :- அப்பனே, பல யுகங்களாக நான் பார்த்திருக்கின்றேன். அப்பனே, பூஜை செய்தவனுக்கும் நோய் அப்பா.
சுவடி ஓதும் மைந்தன் : - ( நான் பல யுகங்களை பார்த்து விட்டேன். பூஜை செய்றாங்க பாருங்க . அவருக்கும் நோய் வருதுப்பா. )
குருநாதர் :- அப்பனே, கஷ்டங்கள் வருதப்பா.
சுவடி ஓதும் மைந்தன் : - கஷ்டமும் வருதப்பா.
குருநாதர் :- அப்பனே, சாதாரண மனிதனை போன்று இல்லை அப்பனே. இன்னும் மேலாகவே.
சுவடி ஓதும் மைந்தன் : - ( ஒரு சாதாரண மனிதனுக்கு எவ்வளவு கஷ்டம் வருமோ, அதைவிட மேல வருதுப்பா (பூசை பிறருக்காக செய்பவர்களுக்கு . )
அடியவர்:- (பல பேருடைய கர்மாவை அதனால).
குருநாதர் :- அப்பனே, அறிந்து கூட, அப்படி இல்லை அப்பா. (பூசையை) சரியாக செய்வதில்லை அப்பா.
சுவடி ஓதும் மைந்தன் : - ( அப்படி எல்லாம் இல்ல. மனசால செய்றது இல்ல. சரியாக செய்யறது இல்ல. )
குருநாதர் :- அப்பனே, பக்தி என்பது யான் சொல்லிவிட்டேன் கத்தி போன்று.
சுவடி ஓதும் மைந்தன் : - ( நான் ஏற்கனவே சொல்லிட்டேன். அந்த வகையில், பக்தி என்பது கத்தி போன்று. அதுல, கால் வைக்கிறதுன்னு கரெக்டா இருக்கணும். இல்லைன்னா, அவ்வளவுதான். )
=======================================
# பூசை ரகசியங்கள் - எப்படி பூசை செய்ய வைத்து கர்மாவை அடைகின்றீர்கள் ?
=======================================
குருநாதர் :- அப்பனே, சில மந்திரங்களும் தவறாகவும் ஜெபிக்கின்றார்கள் அப்பா. அப்பனே, அது சொல்வதற்கும் கர்மா. அப்பனே, பின் அதை காதால் கேட்பவனுக்கும் கர்மா.
சுவடி ஓதும் மைந்தன் : - ( சிலர் மந்திரங்களை தவறாக ஜெபிப்பது ஒரு கர்மா/பாவம். அந்த தவறான மந்திரங்களை காதால் கேட்பவருக்கும் அதேபோல் கர்மா ஏற்படும்)
குருநாதர் :- அப்பனே, கலியுகத்தில், இறைவனே, இப்படித்தான் அப்பா அசைத்து விடுவான்.
அடியவர் :- சாமி, இந்த இடத்துல ஒரு சின்ன சந்தேகம். இப்ப, நம்ம சாஸ்திரிகளுக்கு ஒரு யாகம் பண்றோம். சாஸ்திரிகள் உச்சரிக்கிறாரு. ஆனா, அது சரியா தப்பான்னு பண்றோம்னு தெரியாது இல்ல? அப்ப, அது அவர் எப்படிங்க, ஐயா?
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், அறிந்து கூட, எப்படி தெரியாமல் போகும் என்பேன் அப்பனே?
சுவடி ஓதும் மைந்தன் : - எப்படிப்பா தெரியாமல் போகும்ன்றோம்?
அடியவர் :- எப்படின்னா, நமக்கு இந்த மந்திரம் (எதுவும்) தெரியாது. (அவங்க மீது) நம்பிக்கை வைக்கிறோம் (நல்லா பூசை செய்வாங்க என்று).
=======================================
# பூசை ரகசியங்கள் - எப்படி பூசை செய்ய வேண்டும்?
=======================================
=======================================
# பூசை ரகசியங்கள் - இறைவனை, அதாவது, முன்னோர்கள் நினைத்திட வேண்டும். குலதெய்வத்தை நினைக்க வேண்டும்.
=======================================
குருநாதர் :- அப்பனே, அதனால்தான் சொன்னேன் அப்பனே. பின் நிச்சயம், அவன் பிழைத்துக் கொள்கின்றான் அப்பனே. அவ்வளவுதான் அப்பனே. அதனால் புண்ணியம் அப்பா உந்தனுக்கு. ஆனாலும், அப்பனே, அவன் பயப்பட வேண்டும் என்பேன் அப்பனே. சரியாக சொல்லிவிட வேண்டும். இறைவனை, அதாவது, முன்னோர்கள் நினைத்திட வேண்டும். குலதெய்வத்தை நினைக்க வேண்டும். அவனும் பல புண்ணியங்கள் செய்ய வேண்டும் அப்பா. அப்பொழுதுதான் சரியாக வரும் என்பேன் அப்பனே.
குருநாதர் :- இல்லையென்றால், அப்பனே, அவனுடைய மனநிலையும் உன்னுடைய மனநிலையும் ஒரே மாதிரி இருக்கும். அப்பா,
சுவடி ஓதும் மைந்தன் : - ( ஐயா, புரியுதுங்களா? வருவாங்க. உன்னுடைய மனநிலை எப்படி இருக்குதோ, அதே மனநிலை தான் வருவாரு. அவர் பூஜை பண்ணுவாரு. புரியுதுங்களா? வந்து, நீங்க கஷ்டத்துல இருக்கீங்களா? அவர் கஷ்டத்துல தான் வருவாரு. புரியுதுங்களா? அப்ப, நீங்க நல்ல அப்பா, இறைவன் கொடுத்துக்கிறாரு. இறைவன் இருக்கிறாருன்னு சொன்னா, அவர் என்ன பண்ணுவாராம்? அதே மாதிரிதான் வருவாராம். )
குருநாதர் :- அப்பனே, அதாவது, பின் பேருந்து இயக்குவனுக்கு தெரியுமாப்பா?
சுவடி ஓதும் மைந்தன் : - பேருந்து இயக்குவனுக்கு தெரியுமாப்பான்றார்.
அடியவர் :- கரெக்டா வண்டி ஓட்டவேண்டும்.
=======================================
# பூசை ரகசியங்கள் - எப்படி உங்களை ஏமாற்றுகிறார்கள்?
=======================================
குருநாதர் :- அப்பனே, அதனால் சில பேர் உங்களை பார்த்தே எண்ணி விடுவார்கள். இவர்களுக்கு ஒன்னும் தெரியாது. நிச்சயம், மந்திரங்கள் தவறாக, பின் எதையாவது செப்பி விட்டு செல்வோம் என்று.
சுவடி ஓதும் மைந்தன் : - ( சில பேர் உங்களை பார்த்து என்ன நினைப்பாங்களாம்? . நீங்க இப்ப பூஜை பண்ற வரீங்க இல்ல? அந்த பூஜை பன்னுகின்றவர் பார்ப்பாராம். இவங்களுக்கு ஒண்ணுமே தெரியாம இருக்கு. so சும்மா ஏதோ சொல்லிட்டு போயிடலாம். அவ்வளவுதான். அது உங்களுக்கும் லாபம் இல்லை. )
குருநாதர் :- ஆனாலும், அப்பனே, இறைவன் ஒன்று இருக்கின்றான் என்று மறந்தே விடுகிறார்கள் கலியுகத்தில்.
சுவடி ஓதும் மைந்தன் : - அப்ப, இறைவன் நம்மை பார்த்து இருக்கிறார்.
=======================================
# தவறு பண்ணாதே, சாமி கண்ணு குத்தும்
=======================================
குருநாதர் :- அப்பனே, மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் அப்பனே. இறைவன், அதாவது, அப்பனே, நிச்சயம். அப்பனே, எதை என்று அறிய அறிய சில பேர்கள். அப்பனே, நிச்சயம், தவறு செய்தால், சிறுபிள்ளையாக இருக்கும் பொழுது, இறைவன், பின், அதாவது, கண்ணை அப்படியே, பின் அறிந்து கூட, பின் எவை என்று கூற, பின் குத்தி விடுவார் என்று சொல்லி கொடுத்து.
சுவடி ஓதும் மைந்தன் : - ( சின்ன வயதில் பெரியவர்கள் எச்சரிக்கையாக சொன்னார்கள் – “தவறு பண்ணாதே, சாமி கண்ணு குத்தும்”. )
குருநாதர் :- அப்பனே, இதனால்தான். அப்பனே, அதனால், அப்பனே, உங்கள் நிலைமைக்கு யார் காரணம்? இப்பொழுது கூறுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் : - உங்கள் நிலைமைக்கு யார் காரணம்? நம்ம தான் காரணம். நீங்க தான் காரணம்.
குருநாதர் :- அப்பனே, உயர்வதும், தாழ்வதும், அப்பனே, இன்பமும், துன்பமும், அப்பனே, சூரியனும், சந்திரனும், அப்பனே, இன்னும், அப்பனே, தாயும், தந்தையும், அப்பனே, இன்னும், இன்னும் சொல்லிக்கொண்டே இருந்தால், அப்பனே,
குருநாதர் :- அப்பனே இவையெல்லாம் ஒரே நேரத்தில் வந்துவிட்டால் என்ன ஆகும்?
சுவடி ஓதும் மைந்தன் : - சூரியன், சந்திரன் ஒரே நேரத்தில் வந்தா என்ன ஆகும்?
அடியவர் :- கிரகணம்
சுவடி ஓதும் மைந்தன் : - ( மறைந்து தான் இருக்க வேண்டும் ).
=======================================
# பக்தி - மனிதன் இன்னும் பூஜ்ஜியத்தில்தான்
=======================================
குருநாதர் :- அறிந்து கூட, இதனால், தாயே, நிச்சயம், இன்னும், நிச்சயம், அறிந்து கூட, பக்திகள் பற்றி, நிச்சயம், இப்பொழுது நான் சொல்கின்றேன். நிச்சயம், பூஜ்ஜியம் தெரிந்தது மனிதனுக்கு.
ஆடியவர் :- ம், பக்தியே இல்ல.
சுவடி ஓதும் மைந்தன் : - ( பக்தி என்னவாம் ? ஜீரோ, இதெல்லாம் உண்மைங்க அய்யா . அப்ப, இன்னும் நம்ம எங்க இருக்கிறோம்? )
அடியவர்:- பக்குவமே இல்ல. நம்ம பக்குவமே இல்ல. இல்ல.
அடியவர்:-ஆரம்பிக்கவே இல்ல. இப்ப, ஆமா, எல்லாம் கும்பிடுறது. ஆமா, எல்லாம் கும்பிடுறது. ஏன்னா, என்ன பண்றது?
சுவடி ஓதும் மைந்தன் : - ( நம் எல்லாம் ஜீரோ இருக்கிறோம் என்று சொல்லிவிட்டார். நம்ம எல்லாம் ஒன்று என்று கூட சொல்லவில்லை. அவர் ஒன்னாவது சொல்லி இருந்தாலும், சந்தோஷப்பட்டு இருப்போம். அப்ப, பூஜ்ஜியம் என்று சொல்லிவிட்டார் ) .
குருநாதர் :- ஆனால், வேண்டும் என்றால், நிச்சயம், நடித்துக் கொள்ளலாம்.
சுவடி ஓதும் மைந்தன் : - ( நான் இறைவன், எனக்கு எல்லாம் தெரியும். பக்தி தெரியும். எல்லாம் பற்றி தெரியும். என்று , நடிக்கலாம். ஏன்னா, நம்ம சுயநலம் தான். )
=======================================
# பக்தி - 1% தெரிந்திருந்தால், அமைதியாக இருப்பான். யாரிடமும் பேசமாட்டான்.
=======================================
குருநாதர் :- ஆனால், அம்மையே, பின் ஒன்று சதவீதம் தெரிந்திருந்தால், அமைதியாக இருப்பான். யாரிடமும் பேசமாட்டான்.
சுவடி ஓதும் மைந்தன் : - ( அந்த ஒரு பசண்டாவது தெரிஞ்சிருந்தா, என்ன பண்ணுவாங்களாம்? அமைதியா இருபங்களாம் . யார் கிட்டேயும் பேச மாட்டாங்களாம்)
குருநாதர் :- நிச்சயம், பின் அறிந்து கூட, நிச்சயம், ஒன்றும் தெரியாதவன் தான் - நான் இறைவனிடத்தில் பேசினேன். இறைவன் அனைத்தும் செய்கின்றான். இறைவன் அங்கு காண்கின்றான். இங்கு காண்கின்றேன். நிச்சயம், பின் அங்கு பூஜைகள் செய்தால் நலம். இங்கு பூஜைகள் செய்தால் நலம். அனைத்தும் நடக்கும். இவ் மந்திரம் சொல், அம்மந்திரம் சொல் என்று, சொல்லிக் கொண்டிருப்பவன் ஒன்றும் தெரியாத முட்டாள்.
சுவடி ஓதும் மைந்தன் : - ஐயா, அப்ப என்ன சொல்றாரு? பார்த்தீங்களா? எப்படி சொல்றாருன்னா?
அடியவர் :- டிராமா பண்ணிட்டு இருக்காங்க.
சுவடி ஓதும் மைந்தன் : - அதுதான் எனக்கு அது தெரியும். இது தெரியும்னு,
=======================================
# விதி - புலி ஒன்று உன்னை தாக்குகின்றது. நீ என்ன செய்வாய்?
=======================================
குருநாதர் :- அப்பனே, அறிந்து கூட, அப்பனே அதாவது, எதை என்று புரிய? அப்பனே, ஒரு புலி ஒன்று உன்னை தாக்குகின்றது. நீ என்ன செய்வாய்?
சுவடி ஓதும் மைந்தன் : - ( உங்களுக்கு தான் கேட்கின்றார் . ஒரு புலி ஒன்னு தாக்குதுன்னா, நீ என்ன செய்வாய் என்று கேட்கின்றார் ? )
அடியவர் :- அவர் ஓடுவாரு.
அடியவர் 2 :- அவர் பசி எடுத்திருக்குது. என்னை சாப்பிட்டுட்டு போயிடு. சாப்பிட்டுட்டு போயிடு.
அடியவர்கள் :- ( சிரிப்பு அலைகள் )
குருநாதர் :- அப்பனே, அறிந்து கூட, அப்பனே, வாயை தான் அனைத்தும் பேசுகின்றதே தவிர. அப்பனே,
அடியவர்கள் :- ( சிரிப்பு அலைகள் )
அந்த நிமிர்ந்து நிக்க மாட்டாரு. வாயில அம்மா பேசுது. அது அது புரிய.
அடியவர் அடிக்கடி நம்மளே போய் நிக்கணும். நீ சாப்பிடுன்னு,
அடியவர்கள் :- ( சிரிப்பு அலைகள் )
=======================================
# விதி - எப்படி சமாளிப்பது?
=======================================
குருநாதர் :- அப்பனே, அறிந்து கூட, அப்பனே, எவை என்று அறிய அறிய. இதே போலத்தான், அப்பனே, எவை என்று அறிய அறிய. அப்பனே, நிச்சயம், பின் நிச்சயம், பாவமும் புண்ணியமும் மனிதனை துரத்திக் கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே. இதை எப்படி சமாளிப்பது?
சுவடி ஓதும் மைந்தன் : - ( சரியான கேள்விதான், ஐயா. அதிலேயே ஆன்சர் வருது பாருங்களேன். இப்படித்தான் ஒரு மனிதனை பாவமும் புண்ணியமும் வந்து துரத்தினே இருக்குது. நீங்க ஓடிக்கொண்டே தான் இருக்கீங்க. அதை எப்படி சமாளிக்கிறதுன்னு கேக்குறாங்க. )
அடியவர் :- சரணாகதி
=======================================
# விதி - எப்படி சமாளிப்பது? - இறைவனிடம் சரணாகதி
=======================================
குருநாதர் :-அப்பனே, இதற்கு பதிலும் சொல்லிவிட்டாய். அப்பனே. சரணாகதி.
சுவடி ஓதும் மைந்தன் : - கம்ப்ளீட்டா நின்னுடனும். எப்பா, நீதானப்பா, ஒன்னும் புரியாதுப்பான்னு இதுலயே சொன்னாரு. சூப்பரா. இதனால வந்து மனிதன் என்ன பண்ணிருக்காங்கன்னா, வந்து டோட்டலா சரண்டர் போயிட்டு ஓடினே தான் இருக்காங்களாம். நிக்கல, தப்பிக்க முடியாது. தப்பிக்க முடியாதுன்றாரு. முடியாது. இப்ப ஓடுனா, நீங்க தப்பிக்க முடியுமா? முடியாது. அதனால, தெரியாம ஓடினே இருக்காங்கப்பா.
அடியவர் :- ரெண்டே ஆப்ஷன் இருக்கிறது.
அடியவர் 2:- ஒரே ஒன்னு தான்,
அடியவர் 3:- ரெண்டு கூட கிடையாது. ஒன்னு தான்
சுவடி ஓதும் மைந்தன் : - நின்னுடும். அவ்வளவுதான்.
அடியவர் :- சரணாகதி
சுவடி ஓதும் மைந்தன் : - ( என்ன வேணும்னாலும் செய்யட்டும் என்று நின்றுவிட வேண்டும் ).
=======================================
# விதி - என்ற புலி எப்போது நிற்கும் ?
=======================================
குருநாதர் :- அப்பனே, அப்பொழுது தெரியும். புலி, நிச்சயம் என்ன யோசிக்கின்றது என்று.
சுவடி ஓதும் மைந்தன் : - நின்னுட்டு , புலி அது நினைக்கும்.
அடியவர்:- ( இவனை அடிக்கலாமா வேண்டாமா என்று அது நின்னு யோசிக்கும் )
சுவடி ஓதும் மைந்தன் : - ( என்ன பண்றது என்று புலி அது நினைக்குமாம் )
=======================================
# எப்போது இறைவன் அருள் செய்வார் உங்களுக்கு ?
=======================================
குருநாதர் :- அப்பனே, ஒன்றும் தெரியாமல், பின் நீங்கள் ஓடிக்கொண்டே இருக்கிறீர்கள் அப்பனே. அதனால்தான், அப்பனே, இறைவனும், அப்பனே, ஓடிக்கொண்டே. அதாவது, பின் செல்லட்டும், செல்லட்டும் என்று. (நீங்கள் இறைவனை சரணாகதி அடைந்து) நின்றுவிட்டால், இறைவனும் கூட நின்றுட்டு, இவன் தனக்கு என்ன செய்யலாம் என்று எடுத்துரைப்பானப்பா.
சுவடி ஓதும் மைந்தன் : - ( மனிதன் ஒன்றும் புரியாமல் ஓடிக்கொண்டே இருக்கிறான்; அதைப் பார்த்து இறைவனும் பின் செல்லட்டும் என அனுமதிக்கின்றார். ஓட்டம் நம்மை விடுவதேயில்லை; அது மேலும் குழப்பத்திற்கே வழிவகுக்கும். ஆனால் ஒருவர் இறைவனை சரணாகதி அடைந்து நின்றுவிட்டால், இறைவனும் நின்று அவனை நோக்கி திரும்புகின்றார். அப்போது தான், “இவன் என்ன செய்யலாம்?” என இறைவன் எண்ணி, கருணையுடன் வழி காட்டுகின்றார். )
அடியவர் :- பல விஷயத்துக்கு எல்லாருக்கும் போன் பண்ணிட்டு, பண்ணுங்க, பண்ணுங்கன்னு சொல்லிட்டு இருக்கும்போது, எதுனா ஒரு காரணத்தை சொல்லிட்டு இருப்பாங்க. சரி, நீ எப்படி பண்றியோ, என்ன பண்றியோ, நடக்குறது, நடக்குதுன்னு கம்முனா, எல்லா வேலையும் அப்படியே நடந்துட்டு இருக்கும்.
குருநாதர் :- அப்பனே, நிச்சயம், அப்பனே, அதாவது, பின் எதை என்று அறிய அறிய, இப்படித்தான். அப்பா, இதனால, அப்பனே, மனிதன் இன்னும் ஓடிக்கொண்டே இருக்கின்றான் அப்பனே. எப்படி பின் எப்பொழுது நிற்பான் சொல் நீயே ?
சுவடி ஓதும் மைந்தன் : - இது மாதிரி மனிதன் ஓடினே இருக்கிறானாம். எப்பதான்ப்பா நிப்பான்? நீயாவது சொல்லுப்பான்றாரு.
அடியவர் 1:- ஒரு கட்டத்துல, முடியவே முடியலன்னா, நிப்பாரு.
அடியவர் 2:- ஓடிப்போய், சலிச்சுப் போய் தான் நிப்பாரு
=======================================
# முதலிலேயே புலியிடம் இருந்து ஓடாமல் நின்றிருந்தால்?
=======================================
குருநாதர் :- அறிந்து கூட, பின் இறைவன் பலமாக அறிவுகள் கொடுத்துள்ளான். முதலிலே நின்றிருந்தால், வந்திருக்குமா இவை ?
அடியவர்கள் :- (சிரிப்புகள்)
அடியவர் :- கரெக்ட்.
சுவடி ஓதும் மைந்தன் : - முதலிலே எல்லாமே இறைவன் கொடுத்திருக்காரு. அறிவு எல்லாருக்கும். முதலிலே வந்து, எப்பா வேணாப்பா, நீதான்ப்பா, என்னை பார்த்துக்கணும். நல்லதோ , கெட்டதோ எண்டு நின்னுட்டு இருந்தா,
அடியவர்:- அப்ப அறிவு வரலை அய்யா.
=======================================
# அறிவு வருவதற்கு தான் கஷ்டங்கள்
=======================================
குருநாதர் :- அறிந்து கூட, அதனாலதான், தாயே, அறிவு வருவதற்கு தான் கஷ்டங்கள். கஷ்டங்கள் கொடுத்தால்தான் உன் அறிவும் வளரும்.
அடியவர்:- கரெக்ட்.
சுவடி ஓதும் மைந்தன் : - அப்ப, அதுக்காகத்தான் கஷ்டம் கொடுக்கிறார். இறைவன் அந்த கஷ்டத்தை கொடுத்துட்டாருன்னா, அறிவு தானமே வளர்ந்துரும். நீங்களும் வளர்ந்துருவீங்க.
குருநாதர் :- பின், நிச்சயம், கஷ்டத்தை கொடுத்தால், அறிவு வளரும். நீங்களும் வளர்வீர்கள். உனை சார்ந்து இருப்பவர்களும் வளர்வீர்கள். வளர்ந்து கொண்டே இருப்பார்கள்.
சுவடி ஓதும் மைந்தன் : - சூப்பரா சொன்னாரு. பாருங்க, கஷ்டத்தை கொடுத்தா,
அடியவர் :- அறிவு வளரும்.
சுவடி ஓதும் மைந்தன் : - அறிவு வளரும். அறிவு வளர்ந்தால் , நீங்க வளர்ந்துருவீங்க.
அடியவர் :- நம்ம கூட இருக்கிறவங்க வளருவாங்க.
=======================================
# இறைவன் துன்பம் கொடுப்பது - அறிவு வளர
=======================================
குருநாதர் :- ஆனால், நிச்சயம், அறிந்து கூட, இப்பொழுது புரிந்து கொண்டீர்களா? என்ன? பின், நிச்சயம், இறைவன் துன்பம் கொடுப்பது எதனால்?
சுவடி ஓதும் மைந்தன் : - இப்ப புரிந்துகொண்டீர்களா ? இல்லைங்களா?
அடியவர் :- புரியுதுங்க. அறிவு வளர. இறைவன் எதுக்கு துன்பம் ( கொடுக்கின்றார் என்று )
குருநாதர் :- தாயே, நீ கூட, நிச்சயம், பலபேரோட பல பல வழிகளில் கூட ஏமாற்றப்பட்டிருக்கின்றாய். அதனால்தான், அங்கிருந்து வந்திருக்கின்றாய். இங்கு ஏதாவது தீர்வு கிடைக்குமா என்று,
சுவடி ஓதும் மைந்தன் : - அப்ப உங்களையும் வந்து பலபேர் ஏமாத்திட்டாங்க. அதுக்காகத்தான், நீங்க இங்க வந்து உட்கார்ந்து இருக்கீங்க.
அடியவர் :- அப்ப, நாங்க இங்க ஒரு சுயநலம் தான் சாமி, இங்க வந்திருக்கிறோம்.
சுவடி ஓதும் மைந்தன் : - அதேதான்.
அடியவர் :- அப்ப, ஐயனை பார்த்து அந்த ஆசீர்வாதம் கேட்கணும்னு வரல., அப்படியாச்சும் அய்யன், வழி காட்டுவார் என்று ( இங்கே சுயநலத்தோடு இங்கு வந்திருக்கின்றோம் )
=======================================
# பக்குவப்பட்டு இருந்தால்தான் - வாக்கு
=======================================
குருநாதர் :- நிச்சயம், இவ்வாறு பக்குவப்பட்டு இருந்தால்தான், அப்பனே, பின் யானும் சொல்ல முடியும். நிச்சயம், உங்களுக்கும் புரியும் அப்பா. நீங்கள் பக்குவம் படவில்லை என்றால், எவ்வளவு சொல்லியும், பின் ஏதோ அகத்தியன் சொல்லிக் கொண்டிருக்கின்றான் என்றெல்லாம், நீங்கள் நினைப்பீர்கள் அப்பா. அப்பனே, கஷ்டங்கள் ஒன்று கொடுத்தால்தான், அப்பனே, அதனால்தான் யாரை எங்கு வரவேண்டும், யாருக்கு எப்பொழுது தர வேண்டும் என்பதை எல்லாம் யான் உணர்வேன் அப்பனே. இது நல்லதா? பின் கெட்டதா?
அடியவர்கள் :- நல்லது. நல்லது.
சுவடி ஓதும் மைந்தன் : - அப்ப, யாருக்கு நான் வாக்கு கொடுக்கணும்? யாருக்கும் கொடுக்கக்கூடாது. அது அவர்தான் முடிவு செய்வார். அதுவும் பக்குவம். நீங்க பட்டு இருந்தால் தான் கொடுப்பாங்க. அப்பதான், நீங்க நம்புவீங்களாம். சும்மா வந்து குடுத்துட்டு போனா….
=======================================
# புண்ணியம் - எப்படி செயல்பட வைப்பது ?
=======================================
குருநாதர் :- அப்பனே, புண்ணியங்கள் இருக்க வேண்டும் என்பேன் அப்பனே. அப்பொழுதுதான் சித்தன் வந்து அனைத்தும் செய்வான் அப்பா. புண்ணியங்கள் இல்லை என்றால், அப்பனே, ஆனாலும் உங்களிடத்தில் புண்ணியம் தேங்கி நிற்கின்றது. அதனால்தான், நீங்கள் கேட்க கொண்டிருக்கிறீர்கள். அப்பனே, ஆனால் புண்ணியம், அப்பனே, செயல்பட வைக்க வேண்டும் அவ்வளவுதான்.
சுவடி ஓதும் மைந்தன் : - எல்லார் கையில, வந்தவங்க எல்லாம், புண்ணியம் இருக்குது. ஆனால், செயல்பட முடியல.
அடியவர் :- ஆக்டிவேஷன் பண்ண முடியல.
சுவடி ஓதும் மைந்தன் : - அதனாலதான், உங்களுக்கு வந்து அது எப்படின்னு புண்ணியம் இருக்குது. ஆல்ரெடி, உங்களுக்கு அந்த புண்ணியம் இருந்ததுனாலதான், அகத்தியர் வந்து வாக்கு சொல்லிகொண்டு இருக்கிறார். நீங்க கேட்டு இருக்கீங்க. ஆனா, ஆக்டிவேஷன் பண்ண முடியல. அது பண்ணனும்.
அடியவர் :- சாமி , “பாஸ்வேர்டு” தெரிஞ்சுதான் சாமி ஆக்ட்டிவேஷன் செய்யமுடியும்..
அடியவர் 1 :- எப்படி? ஆக்டிவேஷன் பண்றது?
(எப்படி உங்கள் புண்ணியங்களை ஆக்டிவேஷன் செய்வது என்று அடுத்த பதிவில் பார்ப்போம்…..அன்புடன் அகத்திய மாமுனிவர் பெங்களூர் சத்சங்கம் - தொடரும் …. )
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
No comments:
Post a Comment