“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Thursday, November 13, 2025

சித்தர்கள் ஆட்சி - 505 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - 02.11.2025 - திருவண்ணாமலை - சிவபுராணம் கூட்டுப் பிரார்த்தனை வாக்கு.- பகுதி 3

 இறைவா நீயே அனைத்தும்.

இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும். 







02.11.2025 - திருவண்ணாமலை - சிவபுராணம் கூட்டுப் பிரார்த்தனை வாக்கு.- பகுதி 3


==========================================

# அன்புடன் இடைக்காடர் சித்தர் வாக்கு

==========================================


பரமேஸ்வரியையும் பரமேஸ்வரனையும் பணிந்து வாக்குகள் ஈகின்றேன் இடையனவனே. 


எதை என்று புரியாத நிலையில் இருந்தாலும், புரிந்து கொள்ள மனிதனால் முடியும். 


ஆனாலும், மனிதன் ஒரு நடிப்புக்காரன். அந்நடிப்புக்காரனை அறிந்தும், இவை என்று அறிய நிச்சயம் இதைத்தன் முறியடிக்க அறிந்தும், உண்மை நிலை வேண்டும். 


உண்மை நிலை இல்லையே, மனிதனிடத்தில் உண்மை நிலை இல்லையே, அறிந்தும் கிரகங்கள் தன் வேலையை காட்டும். 


காட்டும் இதனால், அறிந்தும் இவை என்று அறிய, எதற்காக பிறவிகள் என்பவை எல்லாம் வீணாக போகும். போகுமடா  அறிந்தும் எதை எவை என்று அறிய அனைத்தும் சம்பாதிப்பது எதற்காக என்பது எல்லாம் தெரியாமல் வீணாகுமடா. இதை புரிந்து கொண்டோர் நன்று. 


இதைத்தன் ரகசியத்தை புண்ணிய ஆத்மாக்களுக்கு யான் இப்பொழுது சொல்லித் தருகின்றேன். 


இதையும் பின்பற்றினால், வெற்றி நிச்சயம். 


===============================================

# உங்கள் ஜாதகத்தை மற்றும் சித்த ரகசியங்கள் 

===============================================


சனன ஜாதகத்தில் அறிந்தும் சரியாகவே இதைத்தன் நிச்சயம். சில கிரகங்கள் மாறுபட்டு, மாறுபட்டு ஆனாலும், அவற்றுக்கெல்லாம் விடை நிச்சயம். தன்னில் கூட அதிகாலை தன்னில் நிச்சயம். 


இதை என்று பின் தன், அதாவது மரப் பலகையின் தன்னில் கூட சரியாகவே தன் ஜாதகப் பின் கட்டத்தை இட வேண்டும். இட்டு அறிந்தும் சில கிரகங்களால் தொல்லைகள்.


அறிந்தும், இவை என்று அறிய ஆனாலும், அவ் கிரகத்தை மாற்றி எழுதுதல். 


தற்பொழுது என்ன நிலையில் இருந்தால், அறிந்தும் இவைத்தன் மீண்டும் அறிந்தும், இவைத்தன் இட்டால் புரியும் என்பவை எல்லாம் தானாக இட்டு இட்டு மாற்றி மாற்றி எழுதி எழுதி, அதற்கு அதற்கோன், எதை என்று புரிந்தும், இதற்கென்று அறிந்த சரியாகவே பின் மந்திரத்தை, அதாவது சரியாகவே சம வாய்ப்பாடேயோடு (மந்திரங்கள் / செயல்முறைகள்)  நிச்சயம் சொன்னால், அங்கு அக்கிரகங்கள் பிரதி பிரதிபலித்து அறிந்தும், இவை புரிந்து பின் வெற்றியை நீங்களும் பெறலாம். 


இதைத்தன் சரியாக மேலோன், அதாவது அறிந்தும், இவைத்தன் சரியாகவே சுவடிகளில் கூட. அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு, நிச்சயம் தன்னில் கூட சரியாக மூளை உள்ளவனைப் போலே ஆக்கி அறிந்தும், பல சாதனைகளை புரிகின்றான். 


இதனால் தவறுகள் எதை எங்கு நகருகின்றது என்று பார்த்தால், மனிதனிடையே. இதை திருத்திக் கொள்ள அவசியம். இன்னும் பின் புனிதத்தன்மை பெற வேண்டும். 


இவ்வாறு புனிதத்தன்மை பெற்றால்தான், பின் யாங்களும் வாக்குகள் செப்பி அறிந்தும், அதன் தன்மையை உணர்த்தி, உங்களையும் வெற்றிக்கான வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம். 


ஆனாலும், இதை அறிவித்து, இவை என்று யார் சொல்ல இங்கு காத்துக் கொண்டிருக்கின்றார்கள்? மனிதர்கள் முடியாது. இதனால்தான், எவை என்று கூட விதியும் கூட மாற்ற முடியும். நிச்சயம், தன் புண்ணியத்தால். 


அதைத்தான் உங்களுக்கு சித்தர்கள் யாங்கள் புண்ணியத்தை அள்ளித் தந்து, அள்ளித் தந்து மாற்றிக் கொண்டே அறிந்தும், இவைத்தன் அறிய. 


இவைத்தன் நிச்சயம் பின் மாற்றிவிட்டால், உங்களை நீங்கள் வென்று மற்றவர்களையும் வெல்லலாம். 



சுவடி ஓதும் மைந்தன் , அடியவர் விளக்கங்கள் சுருக்கம் :- ( 

விதியை மாற்றும் செயல்முறை – எளிய விளக்கம்

1. விதி மாற்றம் எப்போது சாத்தியம்?

  • உங்கள் வாழ்க்கை விதியை மாற்ற விரும்பினால், அதற்கான புண்ணியம் வெளிப்பட வேண்டும்.

  • பலரிடம் புண்ணியம் உள்ளே இருக்கிறது, ஆனால் வெளியே தெரியவில்லை. பாவம் மட்டும் வெளிப்படுகிறது.

  • கலியுகத்தில் தீய எண்ணங்கள் அதிகம். எண்ணங்களை நல்லதாக்க வேண்டும். நல்ல எண்ணங்கள் வந்தால் புண்ணியம் வெளிப்படும்.

2. புண்ணியம் வெளிப்பட வழிகள்

  • வெளிநாட்டில் உள்ள சிலருக்கு விதி மாற்றம் நடந்திருக்கிறது. அவர்கள் ஓலைச்சுவடிகளைப் படித்து, அதில் சொல்லப்பட்ட முறைகளைப் பின்பற்றி வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

  • அந்த வழிகளை வெளியில் சொல்லவில்லை. அவர்கள் மட்டும் பயன்படுத்தி முன்னேறுகிறார்கள்.

3. இடைக்காடர் சித்தர் சொல்வது என்ன?

  • அதிகாலையில் உங்கள் ஜாதகத்தை மரப்பலகையில் எழுத வேண்டும்.

  • இரண்டு பக்கங்களில் – இடது பக்கம்: உங்கள் தற்போதைய ஜாதகம், வலது பக்கம்: மாற்றிய ஜாதகம்.

  • உதாரணமாக - உங்கள் ஜாதகத்தில் நீச்சமாக இருக்கும் கிரகங்களை, உச்சமாக இருக்கும் இடத்தில் மாற்றி எழுத வேண்டும்.

  • அதற்குரிய மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். இதனால் கிரகங்கள் பலிக்க ஆரம்பிக்கும். விதி மாற ஆரம்பிக்கும். வெற்றி உண்டாகும். 

4. மந்திரம் + புண்ணியம் = விதி மாற்றம்

  • மந்திரம் மட்டும் போதாது. அதற்குரிய புண்ணியமும் தேவை.

  • புண்ணியம் இருந்தால், மந்திரம் பலிக்கிறது. அதற்கான புண்ணியங்களை சித்தர்கள் நாங்கள் வழங்குகிறோம்.

  • இதைச் செய்தால், உங்கள் தலைவிதி மாறும். நீங்கள் வெற்றி பெறலாம்.

5. ராகு-கேது, ஏழரை சனி போன்ற கிரகங்களும் மாற்றலாம்

  • உதாரணமாக -ராகு-கேது தவறான இடத்தில் இருந்தால், மாற்றி எழுதலாம்.

  • உதாரணமாக - ஏழரை நாட்டு சனி பாதிப்பும் மாற்றலாம். அதற்கும் மூல மந்திரம் உண்டு.

  • இது போல பல முறைகள் ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட வழிமுறை. சில பெரியவர்கள் இதைச் செய்து முன்னேறியிருக்கிறார்கள்.

6. நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

  • உங்கள் ஜாதகத்தை மாற்றி எழுதுங்கள்.

  • அதற்குரிய மந்திரங்களை உச்சரியுங்கள்.

  • புண்ணியத்தை பெறுங்கள்.

  • கிரகங்களை மாற்றி அமைத்தால், உங்கள் வாழ்க்கை பாதை மாற்றப்படும்.

  • இறைவனை சரியான முறையில் வணங்குங்கள். அதற்கும் புண்ணியம் தேவை.

  • இவை அனைத்தும் பின்னர் இடைக்காடர் சித்தர்  சொல்லிக் கொடுப்பார்கள். பொறுக்க வேண்டும். கூட்டு பிரார்த்தனை வாக்குகளை தொடர்ந்து படித்து வருக. கூட்டுப்பிரார்தனையில் பங்கு பெறுக.

இது ஒரு ஆழமான ஆன்மீக வழிமுறை. இடைக்காடர் சித்தர் சொன்ன இந்த வழி, உங்கள் விதியை மாற்றும் சக்தி கொண்டது. )



இடைக்காடர் சித்தர் :-  இதை அறிவித்து, இவைத்தன் அறிந்தும், இதைத்தன் சாதாரணம் இல்லை.  இதைத்தன் நிச்சயம். பின் இவையும் கூட சுயநலம் இல்லாமல், நிச்சயம் தன்னில் கூட மனிதன். 


சுவடி ஓதும் மைந்தன் , அடியவர் விளக்கங்கள் சுருக்கம் :- ( சுயநலத்துடன் செயல்பட்டால் பலிக்காது. நீங்கள் பொது நலத்தை விரும்பி, “அனைவரும்  நன்றாக வாழ வேண்டும்” என்ற மனநிலையில் இருந்தால் தான் உங்கள் முயற்சிகள் பலிக்கும். தனநல எண்ணங்கள் இருந்தால், அது பலனளிக்காது. )


இடைக்காடர் சித்தர் :- இவை அறிவித்து, அதனாலே கூட்டத்தை அழைத்து, அறிந்தும் சில உண்மைகளை பின் மனம் மாறாமல் இருந்தாலும், அவைத்தன் எங்கள் அருளால் மாற்றி, இதை யாங்கள் கொண்டு செல்வோம். 

சுவடி ஓதும் மைந்தன் , அடியவர் விளக்கங்கள் சுருக்கம் :- (  மனதை மாற்ற முடியாத நிலை இருந்தாலும், ஆன்மீக வழியாளர்கள் (இடைக்காடர் சித்தர்) புண்ணியத்தின் மூலம் உங்கள் மனதை மாற்றி அமைக்க முடியும் என்கிறார்கள். அவர்கள் ஒரு "செட்" போல உங்கள் உள்ளத்தை அமைத்து, ரீசெட் செய்து, உங்களை வெற்றிக்கான பாதையில் அழைத்துச் செல்ல முடியும். இது கணினி செட்டிங்க் மாதிரி அல்ல; ஆன்மீக ரீதியான மாற்றம். புண்ணியம் + மன மாற்றம் = வெற்றி )


இடைக்காடர் சித்தர் :-  அறிந்தும் இப்படியே சென்று கொண்டிருந்தால், அனைத்தும் பின் பொய்யாகும் ஜாதகம் கூட. 


சுவடி ஓதும் மைந்தன் , அடியவர் விளக்கங்கள் சுருக்கம் :- (ஆன்மீக அறிவும் செயலும் இல்லாமல் இருந்தால், ஜாதகத்தின் பலன்கள் கூட பொய்யாகி விடும். அது பலிக்காமல், வாழ்க்கையின் பல அம்சங்கள் திசைமாறிப் போகும். அறிவு, முயற்சி, மற்றும் புண்ணியம் இல்லாமல், ஜாதகத்தின் சக்தியும் செயல்படாது. )


இடைக்காடர் சித்தர் :- இதன் தத்துவத்தை அறிந்தவனே யானே ஈசன் இட்ட கட்டளையே. 

சுவடி ஓதும் மைந்தன் விளக்கங்கள் சுருக்கம் :- ( இந்த ஆழமான உண்மை இடைக்காடர் சித்தருக்கே தெரியும்; மற்றவர்களுக்கு தெரியாது. இது இறைவன் ஈசன் கொடுத்த வரம் )

இடைக்காடர் சித்தர் :-  ஆனாலும் அறிந்தும் எதை என்று அறிய வந்து கொண்டே, நிச்சயம் இவை எடுத்து உரைக்காவிடில், மனிதன் பள்ளத்தில் போய்விடுவான். சிக்கிக்கொண்டு தவிப்பான். நோய்களாலும் எதை என்று கஷ்டங்களாலும். 

சுவடி ஓதும் மைந்தன் விளக்கங்கள் சுருக்கம் :- ( ஆன்மீக வழிகாட்டுதல் இல்லாமல், மனிதர்கள் துன்பம், நோய், மற்றும் அழிவுக்கு ஆளாகி விடுவார்கள். ஞானம் பகிரப்படாவிட்டால், மனித சமூகம் முழுவதும் அழிவின் பாதையில் செல்லும் அபாயம் உள்ளது. )

=========================================================================

#  இடைக்காடர் அருளால் ஒரு பெரிய அழிவு நடக்காமல் மாற்றம் அடைய உள்ளது 

=========================================================================


இடைக்காடர் சித்தர் :- இதைத்தன் எவை என்று புரியும் அறிந்தும், இதனால் எத்தனை, எத்தனை எதை என்று அறிய அறிய, இப்பொழுது ஒரு பெரிய அழிவு காத்துக் கொண்டிருக்கின்றது சனீஸ்வரனால். நிச்சயம் யானே சனீஸ்வரனின் இட்டு மாற்றி அமைத்து விடுவேன். அப்பொழுது யார் என்ன செய்வார்கள்? என்ன சொல்ல? யார் சொல்வது பலிக்கும்? 

சுவடி ஓதும் மைந்தன் விளக்கங்கள் சுருக்கம் :- ( அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களில் ஒரு பெரிய பேரழிவு வரப்போகிறது. அழிவின் காரணம் சனீஸ்வரனின் (சனி பகவான்) தாக்கம். இடைக்காடர் சித்தர் , சனீஸ்வரனின் தாக்கத்தை மாற்றி, அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக கூறுகிறார். இது ஒரு பெரிய ஆபத்து வரவிருப்பதை முன்னறிவிக்கும் எச்சரிக்கை. )

=================================================================

#  ஈசனார் வரம் - பக்தியுடன் இருந்தால் நல்லது நிச்சயம் நடக்கும்  

=================================================================


இடைக்காடர் சித்தர் :- அறிந்தும் இவைத்தன் அறிய ஆனாலும், அதிலேயும் நீங்கள் எவை புரிந்து, நிச்சயம் ஈசன் கூட பார்ப்போம். மனிதனின் எவரோடும் பின் பக்தியுடன் இருக்கின்றான் என்று, அவ்வளவுக்கவ்வளவு நல்லது செய் என்று, பின் வரங்களும் தந்தனிப்பினான் என்னையே. 


இடைக்காடர் சித்தர் :-  இவை தன் உணர்ந்த பின் நம்பி வந்தீர்கள் நீங்கள். இவை என்று அறிய மாற்றி யோசனையாக செய்துவிட்டார்கள் இவர்களும் கூட. 


=========================================================================

# கூட்டுப்பிரார்தனையில் சிவனடியவர்களால் மிகுந்த புண்ணியங்கள் அனைவருக்கும் 

=========================================================================


இடைக்காடர் சித்தர் :- இவை தன் அறிய அறிந்தும், இவர்களிடத்தில் எதை எவை பின்பற்ற, நிச்சயம் பின் சொல்கின்றேன். ஆனாலும், இவர் தன் இருக்கும் வரை, எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட அனைவரையும் அழைத்து, அறிந்தும் பின் ஈந்து, பின் அறுசுவையோடு அறிந்தும், அவர்களை சிவ நாமத்தை துதித்து பாட, அனைவருக்குமே கிட்டிடும்  எதை என்று அறிய.இவைத்தன் உணர்ந்து, இதைத்தன் பின் இருப்பினும், பின் பரவாயில்லை. 

சுவடி ஓதும் மைந்தன் விளக்கங்கள் சுருக்கம் :- ( இடைக்காடர் சித்தர் கூறுவது: கூட்டுப்பிரார்தனையில் அனைத்து சிவனடியார்கள் அனைவரையும்  கூப்பிட்டு, தானங்களை ஈந்து, அறுசுவையோடு உணவளித்து, சிவபுராணம் பாட சொல்லி இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், சிவனடியவர்களால், அருள் மேலும் பெருகி, சிவனடியவர்களால் அனைவருக்கும் புண்ணியம் மிகுந்து கிடைத்திருக்கும். இதை இப்போது புரிந்து கொண்டு, தாமதமாக இருந்தாலும் பரவாயில்லை. )

இடைக்காடர் சித்தர் :- இவைத்தன் அறிந்து, உன்னை நம்பினோர் அறிந்தும், எவை பின் புரிந்து, பின் எவை செய்யப் போகின்றீர்கள்? நீங்கள் பின் சிறிதாவது செய்ய வேண்டும். உங்களுக்கும் யான் புண்ணியங்கள் அள்ளித் தர வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன் விளக்கங்கள் சுருக்கம் :- ( சித்தர்கள் நங்கள் உங்களுக்கு புண்ணியம் வழங்கினால், அதன் மூலம் நீங்கள் ஒளிர்ந்து, உயர்ந்த நிலையை அடைவீர்கள். புண்ணியம் பகிர்ந்தால், அனைவருக்கும் நன்மை ஏற்படும். )

இடைக்காடர் சித்தர் :- இதைத்தன் பின் அடுத்தடுத்த படியாக என்ன செய்வது என்றெல்லாம். ஆனாலும், இவை செப்பி வர புண்ணியமே. 

சுவடி ஓதும் மைந்தன் விளக்கங்கள் சுருக்கம் :- ( நீங்கள் சித்தர்கள் வாக்குகளை யான் உரைத்த கிரக மாற்றங்களை பிறருக்குச் சொல்லிக் கொடுத்தால், அதன் மூலம் நீங்களும் புண்ணியம் பெறுவீர்கள். புண்ணியம் பகிர்வதன் மூலம், மற்றவர்களுக்கும் நன்மை ஏற்படும், உங்களுக்கும் ஆன்மீக உயர்வு கிடைக்கும். )

இடைக்காடர் சித்தர் :- இதைத்தன் நிச்சயம் தன்னில் கூட பல வகைகள் கூட. பின் எவ்வாறு என்பதை எல்லாம் ஒவ்வொரு குறை, அவ் குறைக்கு யார் காரணம், எதை என்று புரிந்து கொண்டு, அதை மாற்றி அமைத்தால் போதும். பின் அதையும் செப்புவேன். 

சுவடி ஓதும் மைந்தன் விளக்கங்கள் சுருக்கம் :- (ஒவ்வொருவருக்கும் ஒரு குறை இருக்கும், அது ஏற்கனவே உள்ள கிரகங்களால் ஏற்படும். இடைக்காடர் சித்தர் கூறுவது: அந்த குறையை ஏற்படுத்தும் கிரகத்தை மாற்றி, அதற்குரிய இடத்தில் புதிதாக அமைத்து பழக வேண்டும். இது ஒரு ஆன்மீக ரீதியான மாற்றம், அதன் மூலம் நீங்கள் உங்களை நீங்களே வெல்ல முடியும் — அதாவது, உங்கள் வாழ்க்கையை மாற்றி முன்னேற முடியும்.)


இடைக்காடர் சித்தர் :- இதைத்தன் உணர, பின் இன்னும் இறை நாமத்தை எடுத்து வர, நன்று. அவை தனக்கும் கேதுவானவனே காரணமாகின்றான். அனைவருக்கும் மாற்றி அமைக்கின்றேன் யானே. 

சுவடி ஓதும் மைந்தன் விளக்கங்கள் சுருக்கம் :- ( இடைக்காடர் சித்தர் கூறுவது: இறைநாமத்தை உணர்ந்து, அதை மேலும் பரப்ப வேண்டும்.  அதற்கான காரணம் கேது கிரகம், அது பலமாக இருக்க வேண்டும். இடைக்காடர் சித்தர் அனைவருக்கும்  கேதுவை மாற்றியமைக்கிறார், அந்த மாற்றத்தின் மூலம் ஞானம் பிறக்கிறது. ஞானத்தின் வழியாக இறைபக்தி வளர்கிறது, இறைபக்தியின் மூலம் பல ஆன்மீக சாதனைகள் சாத்தியமாகின்றன.)

இடைக்காடர் சித்தர் :- அப்படி எதை என்று கூற, (கிரகங்கள்) அப்படியே இருந்தால், இப்படித்தான் பின் ( திருத்தலத்தை சுற்றி )  வலங்கள்  வந்து கொண்டே இருக்க வேண்டும் கஷ்டத்தோடே. 


இடைக்காடர் சித்தர் :-  இவை உணர்ந்து எங்களுக்கு தெரியும், எப்பொழுது கண்டம், எப்பொழுது சாவு வரும் என்று இதனை யாங்களே மாற்றிவிட்டோம். அறிந்து உண்மைதனை அப்ப சித்தர்களுக்கு தெரியும். 

சுவடி ஓதும் மைந்தன் விளக்கங்கள் சுருக்கம் :- (இடைக்காடர் சித்தர் மற்றும் அனைத்து சித்தர்கள் தங்கள் சாவும், கண்டமும் எப்போது வரும் என்பதை உணர்ந்து, அதை மாற்றி அமைத்திருக்கிறார்கள். அவர்கள் 60, 100 ஆண்டுகள் மட்டுமல்ல, யுக யுகங்களாக வாழ்ந்திருக்கிறார்கள். சாதாரண மனிதனுக்கு தெரியாத இந்த வாய்ப்பாடு சித்தர்களுக்கு மட்டுமே தெரியும், அவர்கள் அதை தூக்கி மாற்றி இருக்கிறார்கள்.)

============================================================

# சித்தர்களை கேட்டுத்தான் ஆதி ஈசனார் முடிவு எடுப்பார்கள் 

============================================================


இடைக்காடர் சித்தர் :- அறிந்தும் ஒவ்வொன்றாக பின் எங்களை மீறி ஒன்றும் நடப்பதில்லை. எங்களை கேட்டுத்தான் ஈசனும் முடிவெடுப்பான். 


========================================================

# ஆதி ஈசனாரிடம் பாசம் செலுத்துங்கள் - மிக்க நன்மை 

========================================================


இடைக்காடர் சித்தர் :-  இவைத்தன் அறிந்து எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட ஈசன் இட்ட கட்டளை.  நிச்சயம் பாசம் செலுத்தினாலே, பின் நீங்கள் சொல்வதுதான் மெய் என்று சொல்லிவிடும் அளவிற்கு யாங்களும் நடந்து கொண்டிருக்கின்றோம். 

சுவடி ஓதும் மைந்தன் விளக்கங்கள் சுருக்கம் :- ( ஈசனுக்கு மிகவும் பிடித்தது பாசமும் அன்பும். அவரிடம் பாசம் காட்டினால், அவர் “நீ சொல்வது சரி” என்று உங்கள் வேண்டுகோளை ஏற்கிறார். சித்தர்கள் இதை உணர்ந்து, ஈசனிடம் அன்பை பொழிந்து, அவரிடம் எதையும் கேட்காமல் அன்பு மட்டும் வைத்திருக்கிறார்கள். அன்பு இருந்தால், ஈசன் கிரக நிலையை மாற்றி அமைக்கிறார். அதனால், மனிதன் உயர்ந்து, வாழ்க்கையை மாற்றிக் கொள்ள முடியும். எனவே எதையும் எதிர்பார்க்காமல் ஆதி ஈசனாரிடம் அன்பு , பாசம் செலுத்துங்கள்.)

இடைக்காடர் சித்தர் :- இதன் தத்துவம் நிச்சயம் புரியாவிடில் இன்னும் கஷ்டங்கள் தான்.  இவை அறிவித்து பல வழிகளில் கூட சொன்னேன். ஆனாலும் இதை யாரும் எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட பின் பயன்படுத்தவும் முடியாது. அதற்கும் பின் புண்ணியங்கள், அதாவது அண்ணாமலையும் கொடுப்பார். 

சுவடி ஓதும் மைந்தன் விளக்கங்கள் சுருக்கம் :- ( இடைக்காடர் சித்தர் கூறுவது: இந்த தத்துவத்தை புரிந்து கொள்ள முடியாவிட்டால், மனிதனுக்கு மேலும் கஷ்டங்கள் ஏற்படும். அதை பல வழிகளில் அறிவித்தாலும், அதை சீக்கிரமாக பயன்படுத்த முடியாது. அதற்கான புண்ணியத்தை ஈசன் அண்ணாமலையார் தான் வழங்க வேண்டும். புண்ணியம் இல்லாமல், தத்துவம் செயல்படாது. )

இடைக்காடர் சித்தர் :- அதனாலே இங்கு அழைத்தேன் அறிந்தும் இவை என்று அறிய.

சுவடி ஓதும் மைந்தன் விளக்கங்கள் சுருக்கம் :- (  இடைக்காடர் சித்தர் கூறுவது: உங்களை இங்கு அழைத்தது ஒரு புண்ணிய வாய்ப்பு. இந்த தத்துவங்களை கேட்பதற்கே 100% புண்ணியம் கிடைக்கும். நமக்கு 100% கிடைக்கவில்லை என்றாலும், 10% கிடைத்தாலும் போதும். அந்த 10% புண்ணியத்தின் மூலம், நாம் நம்மையே 20%, 30% உயர்த்திக் கொள்ள முடியும். கேட்பதும், உணர்வதும், செயல்படுவதும் — எல்லாம் புண்ணிய வளர்ச்சிக்கான படிகள். )

இடைக்காடர் சித்தர் :- இதைத்தன் பின் அறிந்தும், இவைத்தன் யான் சொல்லப்போகின்றேன். அடுத்தடுத்து வாக்கிலும் கூட 


==============================================================

# சிவவாக்கியர் பாடல் மூளையில் உள்ள தீய செல்களை நீக்கும் 

==============================================================


இடைக்காடர் சித்தர் :- அறிந்தும் எவை என்று அறிய, மூளைக்கு பல பல பல வழிகளில்  தீய பலன்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. அனைவருக்குமே. அப்பாடலை வாக்கியன்  பாடி அகற்றுவான். இங்கு இதுதான் மூலாதாரணம். 

சுவடி ஓதும் மைந்தன் விளக்கங்கள் சுருக்கம் :- ( இடைக்காடர் சித்தர் கூறுவது: மனித மூளையில் (தீய எண்ணங்கள்) தீய செல்கள் பல வழிகளில் பதிந்திருக்கின்றன.  இவை தீய பலன்களை எதிர்பார்க்கும் வகையில் செயல்படுகின்றன. அதாவது நல்ல பலன்களை தடுக்கும்.  அவற்றை அகற்ற சிவவாக்கியர் சித்தர் பாடி அகற்றுவர் இந்த கூட்டுப்பிரார்தனையில். அந்த பாடலின் ஒலி, சொல்லின் சக்தி மூளையில் உள்ள தீய அணுக்கள் (வைரஸ் போன்றவை) அழிந்து, மனதிலும் உடலிலும் புனிதம் மற்றும் சுத்தம் ஏற்படும். இது தான் மூலாதாரம் என சித்தர் விளக்குகிறார் இடைக்காடர் சித்தர். )

இடைக்காடர் சித்தர் :-  எதைத்தன் மனிதனுக்கு இவ்வளவு தெரிகின்றதே? எங்களுக்கு தெரியாதா? என்ன 

சுவடி ஓதும் மைந்தன் விளக்கங்கள் சுருக்கம் :- ( இடைக்காடர் சித்தர் கூறுவது: மனிதன் இன்று கம்ப்யூட்டர், கண்டுபிடிப்பு, அறிவியல் போன்றவற்றில் முன்னேறி இருக்கிறான்.  ஆனால், சித்தர்கள் அதற்கு மேற்பட்ட ஞானம் மற்றும் ஆற்றல் கொண்டவர்கள். மனிதனுக்கு தெரிந்ததை விட, சித்தர்களுக்கு ஆழமான உண்மைகள் தெரியும். அதனால், நீங்கள் எதை செய்தாலும், சித்தர்கள் மேலோங்கி செயல் படுகிறார்கள். )

இடைக்காடர் சித்தர் :-  எதை எவை என்று அறிய, எதனால் என்பவை எல்லாம் அறிந்தும், ஆனாலும் இவை தன் செவி அறிந்தும், இதை என்று அறிய, ஆனாலும் வாக்குகள் கேட்பதற்கும் புண்ணியங்கள் எவை என்று அறிய. இருந்தும், பின் எப்படி என்றெல்லாம் இப்பொழுது கேட்டாலும் சொல்ல முடியாது. இவர்களும் பின் பாவங்களே 

சுவடி ஓதும் மைந்தன் விளக்கங்கள் சுருக்கம் :- ( இடைக்காடர் சித்தர் கூறுவது: எங்கள் வாக்குகளை செவியால் கேட்டாலே , புண்ணியங்கள் உண்டாகும்.  அதை  கேட்பதற்கே புண்ணியம் வேண்டும் .இப்போது சொல்லப்படும் விஷயங்களை, வாக்குகளை  கேட்டாலும், இங்கு உள்ளவர்களால் திரும்பி  சொல்ல முடியாது. ஏனென்றால் பாவங்களே  தடுக்கும் செல்லவிடாமல்.  அதனால், சொல்லும் நேரத்தில் கேட்டு, உணர்ந்து, செயல்பட வேண்டும். )

இடைக்காடர் சித்தர் :- இதைத்தன் உபயோகிக்க, நிச்சயம் பின்னல் அறிந்தும் எவை என்று அறிய, புண்ணியங்கள் எதை என்று அறிய, பலன்கள் தேவை. அனைத்தும் அழுக்குகளாகவே இருந்த வண்ணம், ஆனாலும் இவ்வழுக்குகளை நீக்க, நிச்சயம் சிவவாக்கியன் பாடுவான். 

சுவடி ஓதும் மைந்தன் விளக்கங்கள் சுருக்கம் :- ( இடைக்காடர் சித்தர் கூறுவது: மனிதனுக்குள் தீய செயல்கள், அழுக்குகள் மறைந்து இருக்கின்றன. அவை ஞானம், புண்ணியம், பலன் பெறுவதற்கான தடையாக இருக்கின்றன.சித்தர்கள் சொல்வது நமக்கு புரியாதது, ஏனெனில் அந்த தீய செயல்கள் உண்மையை உணர விடாமல் தடுப்பவை. அவற்றை அகற்ற, சிவவாக்கியர் ஒரு பாடலை பாடுவார். அந்த பாடலின் சக்தி மூலம், தீய செயல்கள் அழிந்து,  புண்ணியத்தையும் ஞானத்தையும் பெறும் நிலைக்கு உயர்த்தும். )

இடைக்காடர் சித்தர் :- அறிந்தும் எவை என்று அறிய, இப்பொழுது மனிதன் அழிவு அழிவு என்று சொல்லிக்கொண்டே, சொல்லிக்கொண்டே, சனீஸ்வரன்.  ஆனாலும், நிச்சயம் பின் பதிலடி அறிந்தும், அதை யான் மாற்றுவதா இல்லையா என்றெல்லாம் உங்களிடத்திலே. 


இடைக்காடர் சித்தர் :- காலங்கள் காலங்களாக இப்படியே, இப்படியே சொல்லி சொல்லி அழிவுகளை தடுப்ப, தடுத்த பாடில்லை. 

சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  விளக்கங்கள் சுருக்கம் :- (இடைக்காடர் சித்தர் கூறுவது: சனீஸ்வரனால் பெரிய அழிவுகள் ஏற்படுகின்றன, மனிதன் அதை தடுக்க முடியாது, அழிவு வரும் என்று சொல்லிக்கொண்டே இருப்பான். ஆனால் சித்தர்கள் சேலஞ்ச் எடுத்து, “நாங்கள் மாற்றி அமைக்கிறோம்” என்று ஆன்மீக தைரியத்துடன் செயல்படுகிறார்கள். அழிவுகளை தடுக்க முடியுமா? மாற்ற முடியுமா? என்ற கேள்விக்கு, சித்தர்களால் மாற்ற முடியும் என்பதே பதில். காலங்காலமாக மனிதன் வாயால் சொல்லி வந்ததை, சித்தர்கள் செயலால் மாற்றுகிறார்கள்.)

இடைக்காடர் சித்தர் :- அறிந்தும் எவை என்று அறிய, பின் தடுக்க, பின் தெரியவில்லையே. 


இடைக்காடர் சித்தர் :-  அறிந்திருந்தும் நீங்களும் ஈசனே, ஈசனே என்றெல்லாம் இறைவா, இறைவா என்றெல்லாம் நினைத்துக் கொண்டு, நினைத்துக் கொண்டு. அதனாலே நாங்களும்  சொல்ல வேண்டும். 


இடைக்காடர் சித்தர் :- இதை என் அறிவித்த இவை தன் மாற்ற. கருங்காலி பலகையே தேவைப்படும். 

சுவடி ஓதும் மைந்தன் விளக்கங்கள் சுருக்கம் :- ( கிரகங்களை மற்ற கருங்காலி பலகையே தேவைப்படும்.)


இடைக்காடர் சித்தர் :- இதனுள்ளே இதை மாற்றி அறிந்தும், பின் 108 மூலிகைகளை பின் இட்டு, இதைத்தன் பின் ஹோமங்களாக  செய்து அறிந்தும், மந்திரத்தை பின் உருவேற்றி, நிச்சயம் அதையும் செப்புகின்றேன். 


இடைக்காடர் சித்தர் :- அறிந்தும் மூலாதாரணம் ( மூலாதாரம் )  இப்பொழுது இல்லை. 

சுவடி ஓதும் மைந்தன் விளக்கங்கள் சுருக்கம் :- ( ஒரு வீட்டில் லைட் எல்லாம் பொருத்திய பிறகு, கடைசியில் சுவிட்ச் ஆன் செய்யும் போது தான் ஒளி வரும். இடைக்காடர் சித்தர் கூறுவது: அனைத்தும் உங்களுக்கு சொல்லிக் கொடுப்போம் எப்படி கிரகங்களை  மாற்ற வேண்டும் என்று. ஆனால் கரண்ட் (ஆன்மீக சக்தி) கொடுக்க மாட்டார், இடைக்காடர் சித்தர் சுவிட்ச் ஆன் செய்து பின்புதான் சக்தியை வழங்குவார். )

இடைக்காடர் சித்தர் :- உங்கள் குறைகளை நீங்கள் தீர்த்துக்கொண்டும், மற்றவர்களுக்கும் உதவிடலாம். 


சுவடி ஓதும் மைந்தன்  :- உங்கள் குறைகளை நீங்களும். சரி பண்ணிக்கலாம். பிறருக்கும் நீங்க உதவி செய்யலாம். மற்றவருக்கும் உதவி செய்யலாம். 


இடைக்காடர் சித்தர் :- அறிந்தும் ஆனாலும் இதை கடைபிடிப்போர் நிச்சயம் இல்லை. 


சுவடி ஓதும் மைந்தன்  :- ஆனால் இதை செய்வதற்கு ஆள் இல்லை. ஆள் இல்லை என்றார். கடினம். 


இடைக்காடர் சித்தர் :-  ஆனாலும் இதற்காகத்தான் பாவம் பின் நிச்சயம் தன்னில் கூட மூளையில் கூட பதிந்துள்ளது. அதை நீக்கவே ஓடோடி “சிவ வாக்கியன்” ஈசன் கட்டளையாலே.  


சுவடி ஓதும் மைந்தன்  :- ( மனிதன் மூளையில் பாவ அழுக்குகள் நிறைந்துள்ளன. அவை இருக்கும் போது புண்ணிய செயல்கள் செய்ய மனது தோன்றாது. பாவம் என்றால் இறைவனை நம்பாத மனநிலை ,காட்சி, சந்தேகம், வெளிப்படையான உணர்வுகளால் மனது சிதறுகிறது. அந்த பாவங்களை நீக்க, ஈசனின் கட்டளையோடு  சிவவாக்கியர் இப்போது பாட உள்ளார்கள்.  அந்த பாடல் வாக்கு மூலம்,  பாவங்களை நீக்க முடியும்.) 

=============================================

# பாடல்கள் மூலம் அனைத்தும் செய்ய இயலும் 

=============================================


இடைக்காடர் சித்தர் :- இவைத்தன் அறிந்து இவ்வாறாகவே பின் உலக தன்னில் அறிந்தும் பல வகையான இற்றுகள் மனிதனின் பின் பெரும் பாடாக இன்றைய காலகட்டத்தில் அவைதன் நீக்கிட நிச்சயம் யாங்கள் அறிந்தும் புரிந்தும் எவை என்று வைத்திருக்கின்றோம். பாடல்கள் மூலமே அழியும். 


சுவடி ஓதும் மைந்தன்  :- (இடைக்காடர் சித்தர் கூறுவது: இன்றைய உலகத்தில் நிறைய பேரின் மூளையில் கெட்ட எண்ணங்கள் பதிந்து விட்டன. அதை மாற்ற முடியாது என்று நினைக்க வேண்டாம். சித்தர்களின் பாடல்கள் மூலம்,அந்த தீய எண்ணங்களை மாற்றி அமைக்க முடியும்.  பாடல்களின் சக்தி மூலம், மனிதன் உள் மனதிலும் வாழ்க்கையிலும் மாற்றத்தை காண முடியும். சித்தர்கள் நாங்கள் சொன்னால், அது மாறும். )


இடைக்காடர் சித்தர் :-  எல்லையும் கடந்து ஆனாலும் அறிந்தும் வந்தோமே. எதை என்று அறிந்தும் இதனால் உங்களுக்கு தெரியவில்லையே என்று கூட்டோடு கூட்டினோமே. 


இடைக்காடர் சித்தர் :-   மீண்டும் மீண்டும் சொல்வோம். அறிந்தும் இதை எப்பொழுதும் பொன் மொழியாகவே நிச்சயம் தன்னில் கூட சித்தன் சித்தன் வழியில் வருவதற்கும் பின் அதாவது யோக்கியங்கள் தேவை. பின் நிச்சயம் யோக்கியம் நிச்சயம் தன்னில் கூட பயன்படுத்தி நிச்சயம் அதை பூர்த்தி செய்வதற்கும் வைராக்கியம் வேண்டும். அறிந்தும் இதைத்தன் இப்படி செய்தால் நன்று. எங்களுடைய ஆசி கிட்டும். ஆனால் பின் கொள்ளைக்காரர்களை அறிந்தும் யாங்கள் பின் விடுவதில்லை அருகே. 


இடைக்காடர் சித்தர் :-  இதை அறிவித்து பெரும் பணங்களாக, பணங்களாக சம்பாதித்து அறிந்தும் பின் மிச்சம் தான். 


இடைக்காடர் சித்தர் :-  இவையே விட்டுவிட்டால் இன்னும் இன்னும் அறிந்தும் எதை என்று அறியே. ஆனாலும் பின் ஈசன், அதாவது ஒருங்கிணைந்து அனைவரும் மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். புண்ணிய செயலாக ஆகட்டும். அறிந்தும் இவை என்று மானிடா எதை என்று கூற, அனைவரும் காப்பாற்று. இவ்வுலகத்தை காப்பாற்று என்று பின் சிவபுராணத்தை ஓதுங்கள். நிச்சயம் அண்ணாமலையில் இருந்து அறிந்தும் இதன் புண்ணியத்தை நீங்கள் செய்தால், அப்புண்ணியத்திற்காக யாங்கள் இறங்கி பின் நிச்சயம் தன்னில் கூட மாற்றுவோம். மூளையை சலவை.


===================================================================

# பேய் விரட்டி மூலிகை - சாம்பிராணி தூபம் - அனைவரும் மாறுவார்கள்

===================================================================


இடைக்காடர் சித்தர் :-  அறிந்தும் இவை என்று அறிய அனைவர் இல்லத்திலும் அறிந்தும் இவைத்தன், நிச்சயம் தன்னில் கூட இன்னும் இவ்வாறாகவே விட்டுச் சென்றால்.  இதனால் மூலிகைகளான அறிந்தும் பின் பேய் விரட்டி மூலிகையை பயன்படுத்துங்கள். இல்லத்தில் நிச்சயம் அனைவரும் பின் மாறுவார்கள். 


இடைக்காடர் சித்தர் :-  அவை தன் நிச்சயம் பின் தீபமாகவோ, அறிந்தும் இவைத்தன் பின் ஏற்ற, எரியவிட அதைத்தன் வரும் வாசனை நிச்சயம் முகர்ந்தால், நிச்சயம் அனைத்தும் மாறும். புதிய செல்கள். 

சுவடி ஓதும் மைந்தன்  :- ( இடைக்காடர் சித்தர் கூறுவது, இன்றைய உலகத்தில் மனிதர்கள் அறிவுடன் இருந்தாலும், தீய எண்ணங்கள் மற்றும் சக்திகள் இல்லங்களில் பதிந்து விட்டன. இதனால், வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இதை மாற்ற, சித்தர்கள் பரிந்துரைக்கும் வழி — பேய் விரட்டி மூலிகைகளை பயன்படுத்துவது. 

அந்த மூலிகைகளை தூபமாக எரிக்கும் போது வரும் வாசனை மூளையில் உள்ள தீய செல்களை அழிக்கிறது. இதன் மூலம் மனமும் சூழலும் சுத்தமாகி, குடும்பத்தினர் நல்ல பாதைக்கு திரும்ப முடியும். சித்தர்கள் கூறுவது, இந்த மூலிகை “பேய்” எனப்படும் தீய எண்ணங்களை அகற்றும் சக்தி கொண்டது. 

பேய் விரட்டி மூலிகை இதை பயன்படுத்தினால், இன்றைய கணினி ஆதிக்கம் மற்றும் கெட்ட வழிகளில் இருந்து மக்கள் வெளியேறி, புண்ணிய வழிகளுக்கு மாற முடியும். அகத்திய மாமுனிவர் இதற்கு  பிரச்சனையை சுட்டிக்காட்ட, இடைக்காடர் சித்தர் அதற்கான தீர்வை பெருங்கருணையுடன் வழங்குகிறார். ) 


இடைக்காடர் சித்தர் :- இதைத்தன் நிச்சயம் தன்னில் கூட ஒவ்வொன்றாக யாங்கள் மாற்றுவோம். நிச்சயம் யாங்களே தேர்ந்தெடுத்து அழைத்து. 


=====================================================

# சிரசாசனம் + பேய் விரட்டி மூலிகை சாம்பிராணி புகை

======================================================


இடைக்காடர் சித்தர் :-  இவைதன் இப்பொழுது இன்னும் சிறப்பாக நீங்களும் குழந்தை குழந்தைகளுக்கு அறிந்தும் பின் தலைகளாக நின்றும், (பேய் விரட்டி மூலிகை சாம்பிராணி புகை ) இவையும் சுவாசத்திலும் இன்னும் அறிவுகள் பலப்படும். 


சுவடி ஓதும் மைந்தன்  :- ( இடைக்காடர் சித்தர் கூறுவது, பேய் விரட்டி மூலிகை சாம்பிராணி புகையுடன்,  குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு சிரசாசனம் (தலைகீழாக நிற்கும் பயிற்சி) மிகவும் பயனுள்ளதாகும். இது மூளைக்கு அதிக ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தி, கழிவுகளை நீக்கி, சுவாசம் மற்றும் அறிவுத்திறனை மேம்படுத்தும். பெற்றோர் தங்கள் குழந்தைகளை நல்ல வாழ்வு பெற வேண்டும் என்றால், இந்த பயிற்சியை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும். சித்தர்கள் கூறுவது, இந்த பயிற்சி நிலை மாற்றம், நல்ல வளர்ச்சிக்கு வழிவகுக்கும். கவனமாக கையாள வேண்டும். ) 


இடைக்காடர் சித்தர் :-  இவைத்தன் விலக இன்னும் அறிந்தும் இவைத்தன் உணர ஆனாலும் இன்னும் மாற்றங்கள் ஒவ்வொரு பின் நட்சத்திரங்கள் இன்னும் பின் கிரகங்கள் எதை என்று அறிய சரியான நேரத்தில் நிச்சயம் தன்னில் கூட பின் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடத்தில் நிச்சயம் ஒளியானது பின் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் பின்னரே எதை எடுக்க தெரியாமல் ஓரிடத்தில் கனிவாக படும். அதனால் அவரவர் பின் ராசியோ, நட்சத்திரத்திலோ நிச்சயம் எங்கு படுகின்றது என்று யான் சொல்வேன். அங்கு நின்றாலே போதுமானது. யோகங்கள் அதிர்ஷ்டங்கள் காத்துக் கொண்டிருக்கின்றது. 

=========================================================================

# கார்த்திகை மாதத்தில் அனைத்து வியாழக்கிழமை, அதிகாலை 5 முதல் 6 மணி வரை

=========================================================================


=========================================================================

# குரு கிரக ஒளி  தென்திட்டை மற்றும் ஆலங்குடி இடங்களில் நேர்கோட்டில் விழும்

=========================================================================


சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம்   :- ( இடைக்காடர் சித்தர் கூறுவது, ஒவ்வொருவரின் ராசி, நட்சத்திரம், மற்றும் கிரகங்களின் நிலைபாடுகள் அவரவர் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை தீர்மானிக்கின்றன. ஒளி எனும் ஆன்மீக சக்தி, சரியான நேரத்தில், சரியான இடத்தில் அவர்கள் மீது விழும்போது, அதிர்ஷ்டமும் யோகங்களும் செயல்படத் தொடங்கும். ஆனால் அந்த ஒளி எப்போது, எங்கு, எப்படிப் படும் என்பதை அறியாமல் மனிதன் குழப்பத்தில் இருக்கிறான். இதை சித்தர்கள் அறிவார்கள்; அவர்கள் அந்த ஒளியின் நேரம், இடம், கிரகத் தொடர்புகளை அறிந்து, வருங்காலத்தில் அதைத் தெளிவாகக் கூறுவார்கள். அந்த இடத்தில் நின்றாலே போதுமானது — அதிர்ஷ்டம் செயல்படும்


இடைக்காடர் சித்தர் :- இவை தன் சுற்றி வர சுற்றி வர யோகங்களே. 


சுவடி ஓதும் மைந்தன்  :-  ( இதை நீங்க அங்க சுற்றி வர சுற்றி வர என்ன ஆகும்? யோகங்கள் உண்டாகும். )


இடைக்காடர் சித்தர் :-  இதைத்தன் நிச்சயம் தன்னில் கூட ஒன்றே எவை புரிய அறிந்தும் நிச்சயத்தின் அதாவது தற்பொழுது நிலையில் எடுத்துக் கொள்வோம். குருவானவனை பரிசுத்தமாக தென்திட்டையிலும், அங்கிருந்து பின் ஆலங்குடியிலும்  சமமாக நேர்கோட்டில் விழுகின்றான். சரியாகவே இதைத்தன் பின் வியாழன் அன்று  நிச்சயம் தன்னில் கூட சரியாக அதிகாலையிலே பின் ஐந்து, ஆறு அறிந்தும் பின் இதற்கிடையே, பின் இவைத்தன் அங்கே பின் சரியாகவே விழுகின்ற பொழுது பின் இதில் நீங்கள் பின் விவரமாகவே, பின் அதாவது அங்கும் இங்கும் அலைந்தால் வெற்றி நிச்சயம். 


இடைக்காடர் சித்தர் :-   இவைத்தன் பின் ஏற்ற இதற்கும் பின் அறிந்து இவைத்தன் கார்த்திகை முழுவதுமே. ஆனால் அனைவரும் ஒரு வருடம் பின் கழித்திருக்க வேண்டும். 


சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம்   :- ( இடைக்காடர் சித்தர் கூறுவது, கார்த்திகை மாதத்தில் அனைத்து வியாழக்கிழமைகளில் , அதிகாலை 5 முதல் 6 மணி வரை, குரு கிரக ஒளி  தென்திட்டை மற்றும் ஆலங்குடி இடங்களில் நேர்கோட்டில் விழும் ஒரு முக்கிய ஆன்மீக நிகழ்வு நடைபெறுகிறது. அந்த நேரத்தில் இவ் இரண்டு ஆலயங்களுக்கும் (42 கிலோ மீட்டர்)  இடைவெளியில் சுழன்று செல்லும் பயணம் — குறிப்பாக அந்த இடங்களில் வாகனங்களில் சுற்றி வருவது — ஆன்மீக ரீதியாக வெற்றியை, யோகத்தையும், அதிர்ஷ்டத்தையும் தரும். இந்த நிகழ்வு வருடத்தில்  கார்த்திகை மாதத்தில் அனைத்து வியாழக்கிழமை நாளில் மட்டுமே நிகழும், அதனால் அதை தவறவிட்டால் மீண்டும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். சித்தர் இந்த ரகசியத்தை முன்னதாகவே கூறி, அந்த வாய்ப்பை உடனே  பயன்படுத்துமாறு அறிவுறுத்துகிறார்.) 


இடைக்காடர் சித்தர் :-  இதைத்தன் பின் ஈர்க்க அறிந்தும், இவைத்தன் தக்க அறிந்தும், இதன் பின் இதைத்தன் உணர்ந்து, உணர்ந்து, இவைத்தன் ருசியாகவும் அறிந்தும், (கொண்டைக்கடலை)


சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம்   :- ( குரு கிரகத்துடன் தொடர்புடைய கொண்டைக்கடலை எடுத்து, அதை சுத்தமாக தயாரிக்க வேண்டும். பைக்கில், சைக்கிளில், தோளில் போட்டு சுத்தி போட்டு எடுத்துச் செல்ல வேண்டும். )


இடைக்காடர் சித்தர் :-  இதற்கு மஞ்சளிலே அறிந்தும் சரியாகவே


இடைக்காடர் சித்தர் :-  இவைத்தன் பின் சரியாகவே இதைத்தன் இதன் மஞ்சளை அறிந்தும், மீனாட்சி தாயிடனே எடுத்து குங்குமத்தையும் கூட 


இடைக்காடர் சித்தர் :-  நிச்சயம் தன்னில் கூட ஒரு மாதம் அறிந்தும் எதை என்று புரிய, 


இடைக்காடர் சித்தர் :-  ஏன், எதற்கு, எவை என்று புரிய ஆனாலும் சுற்ற நேரம் ஆகிவிடும். அதனாலே நேரங்கள் பின் 


சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம்   :- ( இடைக்காடர் சித்தர் வழங்கும் இந்த வழிகாட்டலில், மஞ்சள் நிறம் முக்கிய பங்கு வகிக்கிறது. வெள்ளை துணியில் மஞ்சள் பூசி, அதனை முக்கி எடுத்துக்கொண்டு, மீனாட்சி அம்மனின் குங்குமத்துடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும். இந்த பூசை செய்யும் போது, கொண்டைக்கடலை எடுத்துக் கொண்டு, மஞ்சள் நிற ஆடை அணிந்து, கார்த்திகை மாதத்தில் வரும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் , காலை 5 - 6 மணிக்கு,  அந்த நேரத்தில் ஒளி விழும் இடத்தில், அந்த ஒளி திரும்பி பிரதிபலித்து ஒரு வாரம் கழித்து நிலைநிறுத்தும் சக்தி உள்ளது. இந்த ஒளி இயக்கம், கிரக சக்தி மற்றும் ஆன்மீக நேர ஒழுங்கு சார்ந்தது. இந்த முறையை சரியாக புரிந்து, நேரம் அறிந்து செயல்பட வேண்டும்.) 


இடைக்காடர் சித்தர் :-  இவைத்தன் அறிவித்து, பின் கடை தன்னில் அடித்து, மீண்டும் அறிந்தும், இதைத்தன் பின் கவனமாக இதை அறிவித்து, இவைத்தன் படும்படி மீண்டும் இதைத்தன் பின் பலமாக இட்டு, அங்கு ஒரு அடி, பின் அதன் பின் நிச்சயம் அவைதன் எவ்வாறு என்பவை எல்லாம் நிச்சயம். பின் எரிக்கற்கள் அறிந்தும், இதைத்தன் பெரிய கல் நிச்சயம் அவைகள் மூடுகின்ற பொழுது, அதனுள்ளே பின் அண்ணாமலையிலே பின் பதிந்து நிற்கும். அவைத்தன் பின் இந்திரலிங்கத்திலே. 


சுவடி ஓதும் மைந்தன் :- ( கார்த்திகை மாதம்  கடைசி வியாழக்கிழமை வரும் பொழுது ஒரு பெரிய எரி கல்லானது தட்டிட்டு போகும். அந்த எரி கல்லானது திருவண்ணாமலைக்கு வந்துரும். இந்திரலிங்கத்தில் வந்துவிடும். )


இடைக்காடர் சித்தர் :-  இதைத்தன் அப்படி, அப்பொழுது பன்மடங்கு அங்கே பின் ஞானங்கள் பெற, பின் ஏதுவாக இருக்கும் தியானங்கள் செய்ய நன்று. 


இடைக்காடர் சித்தர் :-  இவைத்தன் அங்கு பட்டு, பின் எங்கிருந்தாலும் அறிந்தும், இதை என்று அறிய ஆனாலும் ஞான ரகசியம் இதன் வழியே அறிந்தும், அங்கிருந்து சரியாக எதைத்தன் புரிய, இதைத்தன் அனைத்து லிங்கங்களிலும் பட்டு, பட்டு பிரதிபலித்து, பிரதிபலித்து அங்கு அமர்ந்தாலே சில வினைகள் தீரும். 


சுவடி ஓதும் மைந்தன் :- (கார்த்திகை மாதம் கடைசி வியாழக்கிழமையில், அந்த ஒளி இந்திரலிங்கத்தில் பட்டு அதன்பின்  மற்றும் அஷ்டலிங்கங்களில்  பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு லிங்கத்திலும் அந்த ஒளி பட்டு, பிரதிபலித்து, அந்த இடத்தில் அமர்ந்தாலே சில வினைகள் தீரும். இந்த ஒளி இயக்கம் பல ஞான ரகசியம் கொண்டது; அதனை புரிந்து, அந்த பிரதிபலிக்கும் நேரத்தில் தியானம் செய்தால் பல மடங்கு ஞானம் பெற முடியும். கிரிவலத்தின் போது இந்த ஒளி இயக்கம் நிகழும், அதனால் அந்த நேரத்தில் தியானம் செய்வது மிக முக்கியம்.) 


இடைக்காடர் சித்தர் :-  வினைகள் மாறும் அறிவித்து, அறிந்து எதை என்று புரிவித்து, இவைத்தன் குருவால் ஏற்பட்ட சாபங்கள் தீரும். 


சுவடி ஓதும் மைந்தன் :- ( நீங்க இந்த முறையில் வழிபாடு செய்தீர்கள் என்றல் , குருவால் வந்த சாபங்கள்  நிவர்த்தியாகும். )


இடைக்காடர் சித்தர் :-  இவை அறிவித்து மீண்டும் அண்ணாமலை ஓடோடி வந்து அறிந்தும், இவைத்தன் நிச்சயம் பின் வந்து கொண்டே இருந்தாலே சிறப்புகள் மேம்படும். 


சுவடி ஓதும் மைந்தன் :- ( குரு சாபம் என்பது தீவிரமானது; அதிலிருந்து விடுபட திருவண்ணாமலையில் அடிக்கடி சென்று இந்த பூஜை கார்த்திகை மாதம் இறுதி வியாழக்கிழமைகளில்  செய்ய வேண்டும். ஜாதகத்தில் குரு சரியில்லை என்றால், இந்த ரகசியமான முறைகள் மூலம் நன்மை பெற முடியும். இந்த ரகசியங்களை யாரும் எளிதில் சொல்ல மாட்டார்கள்; அவை குறிப்பிட்ட நேரத்திலும் இடத்திலும் மட்டுமே பகிரப்படும். தென்குடி திட்டை மற்றும் ஆலங்குடி போன்ற குரு ஸ்தலங்களில் ஒளி பிரதிபலித்து நன்மைகள் ஏற்படும், எனவே அந்த இடங்களை சேர்ந்து அனுபவிக்க வேண்டும்.) 


=================================

# குழந்தையும் பாக்கியம் கிட்டும்.

================================= 


இடைக்காடர் சித்தர் :-  இவைத்தன் உணர நிச்சயம் அவ்வருள் இருந்தால், குழந்தையும் பின்கிட்டும். 


சுவடி ஓதும் மைந்தன் :- ( குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்கும்.) 


இடைக்காடர் சித்தர் :- இவை நினைத்தாலே குருவானவரை என்று நினைத்தாலே போதும். பின் நிச்சயம் ஓடிவிடும். 


சுவடி ஓதும் மைந்தன் :- (  நான் இந்த 2 ஆலயங்களுக்கு வரவேண்டும் என்று நினைச்சாலே,  அந்த எண்ணம் வந்துட்டாலே,  உங்களுக்கு தானா அந்த குருவானவர் ஆக்டிவேஷன் ஆயிடும். இந்த எண்ணம் வர்றதே கஷ்டம்ன்றாங்க. முதல் அந்த எண்ணம் வந்துருச்சுனா குரு வேலை செய்ய ஆரம்பிச்சுரும் என்றாங்க. ) 


===================================

# சதய நட்சத்திரம் - ரகசியங்கள் 

===================================


இடைக்காடர் சித்தர் :-  அறிந்தோம், இவைத்தன் யாங்களே உணர்ந்தோம். ஏன், எதற்கு ஒவ்வொருவரின் பின் நட்சத்திரம், அதாவது அருகில் இருப்பவனே, நீயே சொல். 


சுவடி ஓதும் மைந்தன் :- ( எல்லோருக்கும் ஒவ்வொரு நட்சத்திரம் இருக்குது. உன்னோட நட்சத்திரமே நீ சொல்லு என்று கேட்கிறார் அய்யா?. சொல்லுங்கள். )


அடியவர் :- சதய நட்சத்திரம். 


இடைக்காடர் சித்தர் :-   எதை எவை புரிந்து வைத்திருக்கின்றாய்? எதை என்று அறிய ஆனாலும், இது சதயத்தை பின் ஒரு ஒளி தீபமாக எண்ணிக்கொள். அறிந்தும், ஆனால் அத்தீபம் பின் எங்கு ஒளி விரிகின்றதோ, அங்கு சென்றால்தான் லாபம். 


சுவடி ஓதும் மைந்தன் :- ( சதய நட்சத்திரம் என்பது ஒரு ஒளி தீபம் போல செயல்படுகிறது. ஆனால் அந்த ஒளி எங்கு விழுகிறது என்பதை அறிந்து, அந்த இடத்திற்கு நேரில் செல்வதால் மட்டுமே அதன் பலன்கள், லாபங்கள்  கிடைக்கும். அந்த ஒளி விழும் இடம் தெரியாமல் இருந்தால், சதய நட்சத்திரம் — even ஜாதகத்தில் இருந்தாலும் — செயல்படாது. ஆகவே, அந்த ஒளி பிரதிபலிக்கும் இடத்தை உணர்ந்து, நேரில் சென்று, ஆன்மீக செயல்பாடுகளைச் செய்ய வேண்டும். இது ஒரு ஆழமான ரகசியம், செயல்படும் இடம் மற்றும் நேரம் முக்கியம். )


இடைக்காடர் சித்தர் :-  இவைத்தன் ஒவ்வொரு ஒவ்வொரு எதை என்று புரிந்து கொள்ற அறிந்தும், ஏன் பின் எதற்கு என்றெல்லாம் ஒவ்வொரு இடத்திலும் பின் அதன் பின் பட்டுக்கொண்டே, அதாவது இங்கும் அங்கும் பிரதிபலித்துக் கொண்டே, ஆனால் சரியாக சொல்வதில்லை. இவன் தன் நிச்சயம், இவைத்தன் ஆராய்ச்சியாளருக்கு தெரியும். 


இடைக்காடர் சித்தர் :-  இவைத்தன் பின் புரிந்து கொண்டு அறிந்தும், இதைத்தன் நிரூபிக்க அறிந்தும், எதைத்தன் விவரிக்க. நிச்சயம் தன்னில் கூட சதயமானது அதிக பின் மலைகளிலே படும். கீழே படாது. 


சுவடி ஓதும் மைந்தன் :- ( இந்த சதயம் என்பது அதிகமா எங்க படும்? மலை மேல தான் இதன் ஒளி விழும். )


இடைக்காடர் சித்தர் :-  இவன் (சதய நட்சத்திர அடியவர்)  செல்வான் மலை மீது அருள்கள் புண்ணியம் செய்ய செய்ய, 


இடைக்காடர் சித்தர் :-  இவைத்தன் பின் மீந்து நிற்க அறிந்தும், சதயம் தன்னில் கூட பின் முருகனிடமே. 


சுவடி ஓதும் மைந்தன் :- (  சதய நட்சத்திரத்தின் ஒளி சக்தி அதிகமாக விழும் இடம் முருகர் உறையும் மலைப்பகுதிகள் என இடைக்காடர் சித்தர் விளக்குகிறார். குறிப்பாக பழனி போன்ற முருகன் ஸ்தலங்களில் இந்த ஒளி பிரதிபலிப்பு மிகுந்ததாக இருக்கும்.  ) 


இடைக்காடர் சித்தர் :-  ஆனாலும் இவ் ரகசியம் அண்ணாமலையின் ரகசியம் போக போக தெரிய நிச்சயம். 


சுவடி ஓதும் மைந்தன் :- இன்னும் அண்ணாமலையின் ரகசியம் நான் போக போக உங்களுக்கு நான் சொல்றேன். 


இடைக்காடர் சித்தர் :- பின் எதை என்று அறிய அனைவரும் பின் எவ்வாறு என்பதை எல்லாம் விட்டுட்டு அறிந்தும், எது என்று இறைவன் எப்படி காப்பாற்றும் எல்லாம் வந்து கொண்டே. இதனால் யாங்கள் சொல்வதே இன்னும் எது என்று அறிய இதன் மக்களுக்கு சேர்க்கவே, அவரவர் பிழைத்துக் கொள்ளட்டும் புண்ணியம் செய்து 


சுவடி ஓதும் மைந்தன் :- ( நீங்கள் உங்கள் வேலைகளை விட்டு ஒரு நேரத்தில் இங்கு வந்திருக்கிறீர்கள் என்பது ஒரு பெரிய பாக்கியம். அந்த வருகை சும்மா இல்லை; அது ஒரு அழைப்பு, ஒரு பாக்கியம். நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ வந்திருந்தாலும், அதற்கான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். சித்தர்கள் சொல்கிறார்கள் — “நாங்கள் உங்களுக்கு சொல்லித் தருகிறோம், இன்னும் நிறைய விஷயங்களை பகிர்கிறோம். நீங்கள் மட்டும் மக்களுக்கு இதை ( வாக்குகளை )  எடுத்துச் சொல்லுங்கள்.” )


இடைக்காடர் சித்தர் :-  நிச்சயம் தன்னில் கூட கல்வி எதை என்று புரிய, அதாவது உயர் கல்வி பெற்று பின் பெரிய எவை என்று அறிய அழகாக வாழ வேண்டும் என்று அனைவரும் நினைப்பார்கள். அதுபோலத்தான் இதுவும் என்று நினைத்துக் கொள்ள நன்று. 


இடைக்காடர் சித்தர் :-  இவ்வாறு அவரவர் அறிந்தும் புரிந்தும், இவ்வாறாகவே நிச்சயம் பின் அவ் ஒளியானது பட்டால், பின் நீங்களே எதை என்று அறிய உங்களுக்குள் ஒரு சக்தி இருக்கும். அதை நிச்சயம் அறிந்தும், அதுவும் கூட வெளிச்சமாகும். அப்பொழுது உங்கள் வாழ்க்கை உங்களுக்கே தெரியும். இப்படி சென்றால் நன்று என்று. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( இடைக்காடர் சித்தர் கூறுவது போல, ஒளி விழும் இடத்திற்கு சென்றால்,  உங்களுக்குள் ஒரு சக்தி இருக்கும் - அந்த சக்தி உங்களுக்கு வெளிப்படும். அந்த இடத்தில் உங்கள் எண்ணங்கள் செயல்பட்டு, வாழ்க்கை திசை உங்களுக்கே தெளிவாகும். )

இடைக்காடர் சித்தர் :-  இவை என்றும் பின் நிச்சயம் ஆயிரத்தில் ஒருவனே இதற்கும் தகுதியானவன்.


இடைக்காடர் சித்தர் :-  இதைத்தன் நினைக்க, அடுத்தடுத்து அடுத்து வாக்கியனும் பின் சொல்வான். அப்பொழுது நீங்கும் சில தீய. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( அடுத்து சிவா வாக்கியர் நாடியில் வந்து பாடல்கள் பாடுவார்)

இடைக்காடர் சித்தர் :-  இதைத்தன் அறிவித்த இன்னும் கிரகங்களை அறிந்தும், இவைத்தன் புரிய மாற்றி அமைக்க வழிகள் தாம் கையில். 


(அன்புடன்  இடைக்காடர் சித்தர்  உரைத்த - 02.11.2025 அன்று நடந்த திருவண்ணாமலை கூட்டுப் பிரார்த்தனை வாக்கு பகுதி 3   நிறைவு) 


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!


No comments:

Post a Comment