இறைவா !!!!! நீயே அனைத்தும்.
இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.
அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய மதுரை கூட்டுப் பிரார்த்தனை வாக்கு - 05.10.2025 - பகுதி 1
நாள் : 05.10.2025 ஞாயிற்றுக்கிழமை. நேரம் : காலை 8 மணி - மாலை 6 மணி.
ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.
அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்.
(முதலில் குருநாதர் வாக்கு உரைத்தார் . அந்த வாக்கு. சித்தன் அருள் - 1988 - அன்புடன் அகத்தியர் - மதுரை கூட்டுப் பிரார்த்தனை வாக்கு - 05.10.2025 https://siththanarul.blogspot.com/2025/11/1988-05102025.html )
=====================================================================
# போகர் சித்தர் வாக்கு உரைத்த பின் மீண்டும் குருநாதர் வாக்கு
=====================================================================
குருநாதர் :- அப்பனே, எம்முடைய ஆசிகள். நிச்சயம் தன்னில் கூட, அதாவது ஒவ்வொருவரையும் ஒவ்வொரு இடத்தில் யான் பார்த்திருக்கின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( அகத்தியர் பெருமான், இங்கு வந்த அனைவரையும் தனிப்பட்ட முறையிலும் கூட்டமாகவும் சந்தித்திருக்கிறார். குருநாதர் கூறுவது: நீங்கள் அவரை அழைத்தது போல நினைத்தாலும், உண்மையில் அவர் தான் உங்களை அழைத்திருக்கிறார்.அவரது அருள் இல்லாமல் இந்த இடத்திற்கு யாரும் வர முடியாது. முற்பிறவியில் அகத்தியரின் அருள் பெற்றவர்கள் மட்டுமே இங்கு வர முடியும்.)
குருநாதர் :- அப்பனே, அறிந்தும் கூட உங்களுக்கு நிச்சயம் ஞான வழி பாதையை யாங்கள் காட்டிவிட்டால், பின் நிச்சயம் உங்களையே பின் நீங்கள் வெல்வீர்கள். அப்பொழுது அனைத்தும் நலமாகும்.
எத்தனையோ பிறவிகளில் நிச்சயம், அதாவது அறிந்தும் கூட, அப்படியே, அதாவது வங்கி கணக்கில் எதை என்று புரிய, எப்படி பணம் பின் சேகரித்து வைத்துள்ளீர்களோ, அதேபோல் பல பிறவிகளில் கூட புண்ணியத்தை சேகரித்து வைத்துள்ளீர்கள். ஆனால் அதை எடுக்க யாரும் கற்றுக் கொடுக்கவில்லையே இங்கு.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( பல பிறவிகளில் நீங்கள் கோடி கோடியாக புண்ணியங்களை சேகரித்து வைத்துள்ளீர்கள், அது வங்கியில் பணம் சேமிப்பதைப் போல. ஆனால் அந்த புண்ணியங்களை எடுக்க நீங்கள் "பாஸ்வேர்ட்" தெரியாமல் தடுமாறுகிறீர்கள். கலியுகத்தில் பாவங்கள் வெளியே வரும், ஆனால் புண்ணியம் வெளிப்படுவதற்கு சித்தர்கள் உதவ வேண்டும். அகத்தியர் மற்றும் சித்தர்கள் வழிகாட்டினால், அந்த புண்ணியங்களை வெளிக்கொணர முடியும். அந்த புண்ணியத்தை வாழ்க்கையில் பயன்படுத்தி ஆனந்தமாக வாழலாம் என ஐயா கூறுகிறார்.)
குருநாதர் :- அறிந்தும் எதை என்று புரிய, ஆனால் இவை தன், அதாவது நிச்சயம் பின் எதை என்று அறிய, அனைத்தும் முன்னேற்பாடுகளே , அதாவது நிச்சயம் இப்பொழுதெல்லாம் இருக்கும் சேர்க்கை என்னவென்று , இதனால் அப்பா, அப் பாவத்தை பின் குறைத்து எதை என்று அறிய, நிச்சயம் புண்ணியத்தை நிச்சயம் சேகரிப்பதற்கு எண்கள் ( புண்ணிய வாங்கி ATM password number ) தேவைப்படுகின்றது.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( பல பிறவிகளில் நீங்கள் கோடி கோடியாக புண்ணியங்களை சேமித்து வைத்துள்ளீர்கள், அது "சேவிங் டெபாசிட்" போல. ஆனால் அதை பயன்படுத்த "ஏ.டி.எம் எண்கள்" — அதாவது, சித்தர்களின் வழிகாட்டல் — தேவை. தற்போது நீங்கள் பாவங்களை அதிகம் பயன்படுத்துகிறீர்கள், புண்ணியத்தை அல்ல. புண்ணியத்தை வெளிக்கொணர "பாஸ்வேர்டு" தேவை, அது சித்தர்களுக்கே தெரியும். நீங்கள் மறந்த பாஸ்வேர்டை, சித்தர்கள் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். இது இயற்கையான பிறவி வழி செயல்பாடாகும், ஆனால் ஒவ்வொருவருக்கும் அந்த பாஸ்வேர்டு தனிப்பட்டதாக இருக்கும், )
குருநாதர் :- அறிந்தும் எத்தனை, எத்தனை ஒரு குழந்தைக்கு மட்டும் நிச்சயம் பாடத்தை கற்பித்து, நிச்சயம் இவன் தேர்ச்சி பெறட்டும் என்று மற்றவர்கள் சித்தர்களை நாங்கள் விட்டுவிடுவோமா என்ன? அதனால்தான் அனைவரும் இணைத்தோம்.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( ஒரு தாய் பல குழந்தைகளை இருந்தாலும், எல்லா குழந்தைகளும் நலமாக இருக்க வேண்டும் என்பதே இயற்கையான விருப்பம். அதேபோல், சித்தர்களும் ஒரு ஆன்மாவை மட்டும் அல்ல, எல்லா ஆன்மாக்களையும் நலமாக இருக்க வேண்டும் என்பதையே விரும்புகிறார்கள். ஆரம்பத்தில் ஜீவநாடி வாசிப்பில் தனிப்பட்ட வாக்குகள் வந்தன, பின்னர் சத்சங்கம் மூலம் பொதுவான வாக்குகள் உருவானது. இப்போது பெரிய கூட்டு பிரார்த்தனைகளில், சித்தர்கள் அனைவருக்கும் பொதுவாக வாக்கு கூறுகிறார்கள். ஜீவ நாடியின் வீரியம் மற்றும் சித்தர்களின் ஆட்சி வீரியம் அதிகரிப்பதால், அவர்கள் தனிப்பட்ட முறையில் யாரையும் பிரிக்காமல், எல்லா ஆன்மாக்களையும் ஒருங்கிணைத்து வழிகாட்டுகிறார்கள்.
குருநாதர் :- அறிந்தும் எவை என்று புரிய, இதனால் நிச்சயம் தாய் என்பவள் திருடனாக இருந்தாலும், என் பிள்ளை பின் நல்லவன் என்று நிச்சயம். அதேபோலத்தான் ஒரு சந்தர்ப்பத்தை யாங்கள் தருவோம்.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( "காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு" என்பதுபோல், எவ்வளவு தவறு செய்தாலும், தாய்க்கு பிள்ளை மீது பாசம் குறையாது. இறைவனும் அம்மாவைப் போலவே, பிள்ளை மீது கருணையுடன் இருப்பார்—even if others call him bad, இறைவன் "என் பிள்ளை நல்லவன்" என்று நம்புவார். குருநாதர் கூறுவது: எவ்வளவு பெரிய திருடனாக இருந்தாலும், கெட்டவனாக இருந்தாலும், மாற்றம் சாத்தியமானது. சித்தர்கள் அந்த மாற்றத்திற்கு ஒரு வாய்ப்பு தருகிறார்கள். அந்த வாய்ப்பை பயன்படுத்தி வளர்ச்சி பெறலாம். )
குருநாதர் :- எதை என்று புரிய, ஆனால் இப்படியே மனிதனை மற்றை குறை குறை சொல்லி, குறை சொல்லி, இதுவே பழக்கமாகி விட்டது. இதனால்தான் தொல்லைகள்.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( பிறரை குறை கூறுவது தான் முதல் பிரச்சனை என்று சித்தர்கள் கூறுகிறார்கள். குறைகளை சொல்லிக் கொண்டு, ஒருவரை மற்றவருடன் ஒப்பிட்டு, விமர்சனம் செய்வதில் நாம் நேரத்தை செலவிடுகிறோம். இதனால் உண்மை நிலையை புரியாமல், குழப்பத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். குறைகளை விட்டு விலகி, உள்ளார்ந்த உண்மையை உணர வேண்டும்.)
குருநாதர் :- இப்படி எதை என்று அறிய, இதனால் நிச்சயம் உங்கள் புண்ணிய கணக்கை யாங்களே பின் துடைக்க வைப்போம், கவலை இல்லை.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( உங்கள் புண்ணியம் அதை பயன்படுத்த "பாஸ்வேர்ட்" — அதாவது சாவி — உங்களிடம் இல்லை. அந்த சாவியை இயக்கும் சக்தி சித்தர்களிடம் உள்ளது. சித்தர்கள் தான், அந்த புண்ணிய கணக்கை "ஓபன்" செய்து, உங்களுக்கு அதை பயன்படுத்தும் வாய்ப்பை தருகிறார்கள். அவர்கள் வழிகாட்டுதலால் மட்டுமே அந்த புண்ணியம் செயல்பட முடியும்.)
=============================================
# முதல் விதி / ரூல் - அனைவரும் ஒன்றே
=============================================
குருநாதர் :- ஆனாலும் அதற்கும் நீங்கள் பின் ஆயத்தமாக இருக்க வேண்டும். எப்படி என்றால், பின் நிச்சயம் அனைத்து உயிர்களும் ஒன்றாக பின் எண்ண வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( "ரூல் நம்பர் ஒன்" என சித்தர்கள் கூறுவது: அவர்கள் தான் பூட்டை (ஆன்மிக சாவியை) திறக்கிறார்கள். அதை திறக்க, நாம் செய்ய வேண்டியது: அனைவரும் ஒன்றே என்ற உணர்வை வளர்த்துக் கொள்வது. எல்லா ஜீவராசிகளும்—ஆடு, மாடு, கோழி, பன்றி —எல்லாம் ஒரே உயிர்கள், ஒரே ஆன்மா எனக் கருத வேண்டும். இந்த ஒற்றுமை உணர்வே, ஆன்மீக வளர்ச்சிக்கு அடிப்படை)
குருநாதர் :- அறிந்தும் பின் முன்னே உரைத்தேன். போட்டி பொறாமைகள் நீக்குக என்று, அனைவருமே சொந்தம் என்று எண்ண வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( அடுத்த கட்டமாக, போட்டி மற்றும் பொறாமையை விலக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அனைவரையும் சொந்தமாக, ஒரே குடும்பமாக எண்ணும் மனப்பான்மை வளர்க்க வேண்டும்.)
குருநாதர் :- அறிந்தும் எதை எவை என்று புரிய, பின் தான் இடத்தில் நிச்சயம் தன்னில் எவை என்று அறிய, ஒருவனிடத்தில் இருக்கும், ஒருவனிடத்தில் இருக்காது. நிச்சயம் அதைத் தான், அதையும் கூட இறைவன் தான் தருகின்றான். சமநிலையில் பங்கிட வேண்டும், நிச்சயம் பின் சகோதரனாகவோ, சகோதரியாகவோ.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( இறைவன் ஒருவருக்கு கொடுத்து, மற்றொருவருக்கு கொடுக்காமல் இருக்கிறார் என்பது ஒரு சோதனை. அது உணவுக்காகவே இருந்தாலும், அது ஒரு பரிசோதனைதான். "இந்தா வச்சுக்கோ" என்று சொல்வது, பகிர்ந்து கொடுக்கும் மனதை வளர்க்கும் செயல். . ஒருவருக்கே வைத்துக்கொண்டு சாப்பிடாமல், பிறருக்கும் கொடுக்க வேண்டும் என்பதே இறைவனின் நோக்கம்.)
குருநாதர் :- அறிந்தும் எவை என்று புரிய, இதனால் அத்தனையும் பின் உங்களிடத்திலே ஆனாலும், நீங்கள் மறந்துவிட்டீர்கள்.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( இறைவன் நமக்குத் தேவையான அனைத்தும் ஏற்கனவே கொடுத்திருக்கிறார். நம்மிடம் அதிகம் இருப்பது ஒரு அருளாகும், ஆனால் அதைப் பிறருடன் பகிர்ந்தால் தான் அதன் அர்த்தம் நிறைவேறும். குருநாதர் கூறுவது: நம்மிடம் உள்ள செல்வம், உணவு போன்றவற்றை இல்லாதவர்களுடன் பகிர வேண்டும். ஜீவராசிகளுக்கும் உணவளிக்க வேண்டும். "பகிர்ந்து வாழ கற்றுக்கொள்" என்பதே மையக் கருத்து.)
குருநாதர் :- ஒவ்வொரு குறைவையும் நீக்குவது, மனிதனின் நிச்சயம் எதை என்று புரிய, மனிதன். அதாவது பின் ஒருவனை ஒருவன் அழைத்து, ஆனால் யாங்கள் அப்படி இல்லை. அனைவரும் ஒன்றாக இணைத்து, அனைவரையும், குறைகளையும் நீக்கி, மற்றவர்களுக்காகவும் நிச்சயம் எதை என்று புரிய.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (மனிதன் ஒருவரை தனிப்பட்ட முறையில் அழைத்து, அவரின் குறைகளை கேட்டு, அதை நீக்க முயல்கிறான். ஆனால் இறைவன் அப்படி இல்லை — அவர் மொத்தமாக, கூட்டுப்பிரார்தனையில் அனைவரையும் ஒருசேர அழைத்து, அனைவரின் குறைகளையும் ஒரே நேரத்தில் நீக்கக்கூடிய சக்தி கொண்டவர். சித்தர்களும் அதேபோல், கூட்டுப்பிரார்தனையில் ஆயிரம் பேரை ஒருங்கிணைத்து, கூட்டுப்பிரார்தனையில் மொத்தமாக குறைகளை போக்க உதவுகிறார்கள். )
குருநாதர் :- அறிந்தும், அதாவது முதன்மையாக யான் உரைப்பது, பின் ஆன்மாவைத்தான். இவ்வான்மாவுக்கு சொந்தங்களான பல ஆன்மாங்கள், பின் தெரியாமல், கண்ணுக்கு தெரியாமல், பிரிந்து பிரிந்து, இதனால் ஏன் இக்கைலாய வாத்தியம் எதை என்று புரிய, யாருக்காவது தெரியுமா?
ஆனாலும் பின் எதையோ வாசிக்கின்றார்கள், அதை கேட்கின்றோம் என்று தான் தெரிகின்றது. இதுதான் முட்டாள் என்பது.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( கைலாய வாத்தியம் பற்றி யாருக்கும் முழுமையாகத் தெரியாது. நாம் கேட்கும் கைலாய வாத்தியம் ட்ரம்ஸ் ஒலி மட்டும் தெரியும், ஆனால் அதன் ஆழமான அர்த்தம் யாருக்கும் புரியாது.)
======================================================
# திரு கைலாய வாத்தியம் - ரகசியங்கள்
======================================================
(பின் வரும் YOUTUBE பதிவை கேட்டு ரசித்து பின் இந்த வாக்கினை படிக்கச் நன்று )
https://www.youtube.com/watch?v=SMB7Av04ohY&t=9h26m31s
குருநாதர் :- அறிந்தும் நிச்சயம், அதாவது சொல்கின்றேன். அறிந்தும் இவ்வாறாக இத்தேசத்தில், பல கோடி நிச்சயம் சிவனடியார்கள், அறிந்தும் புரிந்தும் எதை என்று அறிய, எவை என்று புரிய, ஈசனையே நினைத்து நினைத்து, கடைசியில் கைலாயம் செல்லலாம் என்று எண்ணி, அனைவரும் அறிந்தும் புரிந்தும் ஓரிடத்தில் இருந்து, பின் நடந்தே பயணம் செய்தார்கள்.
ஆனால் நிச்சயம் தன்னில் கூட, பின் சில மைல் தொலைவே, நிச்சயம் தன்னில் கூட, ஈசன் இருக்கின்றான். கைலாய மலையும் பின் வந்துவிட்டது, ஆனால் கடக்க முடியவில்லை. எதை என்று புரிய, ஆனாலும் எதை எதுவோ வந்து தடுத்தது. நிச்சயம் மழையும் இன்னும் எதை என்று கூற, நெருப்பு மலையும் இன்னும் இன்னும் கூட.
ஆனால் அக்கோடி எதை என்று புரிய, சிவனடியார்கள், இத்தனை தவங்கள், இத்தனை தியானங்கள், இத்தனை ஈசனை நினைத்துக் கொண்டிருந்தோமே, பின் ஈசனை காணவில்லையே, காணவில்லையே.
ஆனாலும் அறிந்தும் கூட, காணவும் கூட முடியவில்லையே. ஏன் தடுக்கின்றது என்றெல்லாம், நிச்சயம். ஆனாலும் ஈசனும் எதை என்று புரிய, கைலாயத்தில் அழகாக, நிச்சயம் பார்த்து தான் கொண்டிருந்தான்.
பார்வதி தேவியும், பின் இத்தனை உன்னைத்தானே, நிச்சயம் நமச்சிவாயா, நமச்சிவாயா என்றெல்லாம் சொல்லி சொல்லிக் கொண்டிருந்தார்கள். அறிந்தும் புரிந்தும் கூட, ஆனால் இப்படி எதை என்று கூற, தவிக்கின்றதே என்று.
ஆனால் பின் ஈசன் எதை என்று கூற, அழகாக சொன்னான். நிச்சயம் தாயே, எதை என்று புரிய. ஆனாலும் இவர்கள் அனைவரிடத்திலும் எதை என்று புரிய, நிச்சயம் இவர்கள் என்னைத்தான், நிச்சயம் வேண்டிக்கொண்டார்கள். சரியே.
ஆனாலும் தன் கடமையை செய்ய மறந்துவிட்டார்கள். எதை என்று புரிய, அவையும் இல்லாமல், இவர்களிடத்தில் நிச்சயம் ஆன்மாக்களும், சொந்த பந்தங்களும், எவற்றுக்குமே பின் செய்யவில்லை. என்னையே நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
இதனால் அவ் பாவ, நிச்சயம் தன்னில் எதை என்று புரிய, அப்பாவ சில சில நிச்சயம் துகள்களாக, இவர்களிடத்தில் பதிந்துள்ளது. நிச்சயம் எதை என்று புரிய, இதனால் எவை என்று அறிய, மேலிருந்து ஒரு இடி இடிக்கட்டும், அனைத்தும் விலகிப் போகும். எதை என்று புரிய, அனைத்தும் பின் எம்மிடத்தில், அதாவது நம்மிடத்தில் வந்து விடுவார்கள் என்று.
சுவடி ஓதும் மைந்தன் , அடியவர் உரையின் சுருக்கம் :- ( பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால், ஆன்மிக உலகம் முழுவதும் ஒரு அதிசய நிகழ்வு நடந்தது. உலகம் முழுவதும் இருந்த சிவனடியார்கள்—பக்தி, தவம், அர்ப்பணிப்பு நிறைந்தவர்கள்—ஒரு கூட்டு ஆன்மிக அழைப்பை உணர்ந்தார்கள். அந்த அழைப்பு, ஈசனை நோக்கி, கைலாயத்தை நோக்கி.
அவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து, மனதையும் உடலையும் அர்ப்பணித்து, கைலாயத்தின் புனித பாதையை நோக்கி பயணித்தார்கள். அவர்கள் நினைத்தது: “ஈசன் அங்கே இருக்கிறார், நாமும் சேர வேண்டும்.” ஆனால் அந்த பாதை எளிதல்ல. இடிமின்னல் சப்தம், வானம் கிழிக்கும் போல, பயங்கரமாக ஒலித்தது. அந்த ஒலி, அந்த சக்தி, அவர்களை கைலாயத்தின் வாசலிலேயே நிறுத்திவிட்டது.
அப்போது பார்வதி தேவி இறைவனிடம் கேட்டார்கள்:
“ஈசனே , உன்னுடைய அடியார்கள் இவ்வளவு அர்ப்பணிப்புடன் வந்திருக்கிறார்கள். ஏன் அவர்களுக்கு உன்னை சேர முடியவில்லை?”
கயிலை மலையார் , ஆதி ஈசன் பதில் சொன்னார்:
“அவர்கள் என்னையே நினைத்து வந்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் தங்கள் குடும்பத்தை, பாசத்தை, சுற்றத்தையும் மறந்திருக்கிறார்கள். அந்த மனவருத்தங்கள், அந்த பாசத்தின் பதிவுகள், அவர்களின் மூளையில் ‘துகள்கள்’ போல பதிந்து விட்டன.”
அந்த துகள்கள்— பிறருடைய வருத்தங்கள், பாசத்தின் பிணைப்பு, மனக்குறைகள்—அவர்கள் ஆன்மிக பயணத்தில் தடையாக இருந்தது. அந்த தடைகளை நீக்க வேண்டுமென்றால், ஒரு சக்தி தேவை. அந்த சக்தி தான் கைலாய வாத்தியம்.
இடிமின்னலின் ஒலி போல, அந்த வாத்தியம் ஒலிக்கும்போது, அந்த மனக்குறைகள், பதிந்த பதிவுகள்—all dissolve. அது ஒரு வைத்தியம். அறியாமலே, அந்த ஒலி, அந்த அதிர்வு, அந்த இசை, ஆன்மாவை சுத்திகரிக்கிறது. அந்த கைலாய வாத்தியம், ஒரு வேற லெவல் ஆன்மிக சுத்திகரிப்பு. —-- )
குருநாதர் :- எதை என்று புரிய. ஆனாலும் இதைத் தெரியாமல், நிச்சயம் எவை என்று அறிய, இதனால்தான் தெரிந்து கொண்டு, நிச்சயம் இறைவனை வணங்குங்கள் என்றெல்லாம் சித்தர்கள், யாங்கள் தான் உங்களுக்கு வழிகாட்ட வேண்டும். உங்களுக்கு வழிகாட்டி விட்டால், உங்கள் சன்னதிக்கு நீங்கள் வழிகாட்டுகின்ற பொழுது, நிச்சயம் சந்தோஷமாக வாழும்.
அடியவர் உரையின் சுருக்கம் :- ( இறைவனை உணர்ந்து, அறிந்து வணங்க வேண்டும் — அதற்கான வழிகாட்டலை சித்தர்கள் தருகிறார்கள். "உங்களுக்கு தெரியாதது" என அவர்கள் சொல்லித் தருகிறார்கள்; சும்மா சொல்லி விடுவதில்லை. கைலாய வாத்தியம் என்பது ஒவ்வொரு ஆன்மிக நிகழ்ச்சியின் தொடக்கத்திலும், நடுவிலும் இடம்பெற வேண்டிய சக்தி. குருநாதர் அகத்திய பெருமான் அதை மிக அழகாக அமைத்துள்ளார் — இது பெரும் கருணையின் வெளிப்பாடு.)
குருநாதர் :- எதை எவை என்று புரிய, நிச்சயம் இவைதன் அறிந்தும் கூட, இதனால் எவை என்று அறிந்தும், அறிந்தும் கூட, இதனால் எவை என்றும் இன்னும் இன்னும் (உரைகளோடு), இறைவனை பின் ஏன் வணங்குகின்றோம், ஏன் வணங்க வேண்டும் என்பதையெல்லாம் சித்தர்களை நாங்கள் சொல்லிக் கொடுக்கின்றோம்.
ஏனென்றால் கலியுகத்தில், நிச்சயம் இறைவனிடத்தில், பின் எதை என்று கூற, நேராக சென்று வணங்கிவிட்டால், அனைத்தும் கிடைக்கும் என்று மனிதன் நினைத்துக் கொண்டிருக்கின்றான். இது பொய்யே.
அடியவர் உரையின் சுருக்கம் :- (இறைவனை எப்படி, ஏன், எதற்காக வணங்க வேண்டும் என்பதற்கான முழுமையான ப்ராசஸ் (முறை) சித்தர்கள் சொல்லித் தருகிறார்கள். கலியுகத்தில் மக்கள் புரியாமல், சும்மா வேண்டுதல் வைத்து அழுதால் இறைவன் தருவார் என நினைத்து வாழ்கிறார்கள். ஆனால், இறைவனை வணங்குவதற்கு ஒரு செயல், ஒரு முறை இருக்கிறது. அந்த ஆன்மிக முறையை குருநாதர் அகத்தியர் வழிகாட்டுகிறார்கள், உணர்ந்து வணங்கும் வழியை எடுத்துச் சொல்கிறார்கள். )
==========================================================
# திரு கைலாய வாத்தியம் - ஏன் தலைவலி வருகின்றது ?
==========================================================
குருநாதர் :- அறிந்தும், அதாவது இக்கைலாய வாத்தியத்தை நிச்சயம் பின் இவ்வாறு தட்டுகின்ற பொழுது, நிச்சயம் அதிக அளவு முன்னோர்களின் சாபம் இருந்தால், நிச்சயம் அவர்களுக்கு எதை என்று கூற, பின் வலி எடுக்கும். நிச்சயம் எங்கேயாவது ஓடி விடலாமா, பின் எதை என்று புரிய, பின் அப்படியே, பின் தலை வலி எடுக்கும். நிச்சயம் ஐயயோ என்று கத்துவார்கள்.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( சிலருக்கு தலைவலி மற்றும் அதிர்வுகள் ஏற்படலாம். இது முன்னோர்களின் சாபங்கள் அல்லது பதிவுகள் காரணமாக, . சத்தம் கேட்கக்கூடாது என்று காதை அடைத்தவர்கள், அந்த சாபங்கள் அதாவது முன்னோர்கள் அணுக்கள் உங்கள் உடலில் என்று பொருள் கொள்ள வேண்டும். அதனால், காதை திறந்து வைக்க வேண்டும்; அப்போதுதான் அந்த அதிர்வுகள், உங்கள் உடலில் உள்ள முன்னோர்கள் அணுக்கள் வெளியேறி, நலம் ஏற்படும்.)
==========================================================
# அமாவாசை முன்னோர் வழிபாடு ரகசியம்
==========================================================
குருநாதர் :- அம்மையே, அப்பனே, அனைவருக்கும் எதை என்று புரிய, நிச்சயம் ஒட்டிக் கொண்டிருக்கும் ஆன்மாக்களை, நிச்சயம் முழுமையாக எதை என்று அறிய, பின் ஆற்று தன்னில் விட வேண்டும். ஆனால் பின் ஒரு பிறவி, நிச்சயம் முடியாது.
அறிந்தும் எதை என் நிச்சயம் இவை தன் விளக்க, அறிந்தும் கூட, அமாவாசையிலும் கூட, நிச்சயம் உடம்பிலிருந்து எதை என்று அறிய, எவை என்று புரிய, சிறிது சிறிது பின் இலகுவாகவே இருக்கும்.
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம் :- ( ஆன்ம துகள்கள், முன்னோர்கள், மற்றும் அமாவாசையின் சக்தி தொடர்பான ஆன்மீக விளக்கம் - ஒவ்வொருவரின் உடம்பிலும் சின்ன சின்ன ஆன்ம துகள்கள் ஒட்டி இருக்கின்றன. அவை முன்னோர்களின் சாபங்கள் அல்லது பதிவுகள். இந்த துகள்கள் மூளையில் பதிந்து, நம்மை பாதிக்கின்றன. அதனால் துன்பங்கள் தீராமல் இருக்கலாம். முன்னோர்கள் ஆன்மா துகளினை இதை ஆத்துல (நீரில்) விட வேண்டும். அதற்காகவே தர்ப்பணம் செய்ய வேண்டும்.பெரும்பாலோர் தர்ப்பணத்தை சரியாக செய்யவில்லை என்பதால், துகள்கள். துன்பங்களும் நீங்கவில்லை. அமாவாசை நாளில், சந்திரனின் சக்தி மாற்றம் ஏற்படுகிறது. அந்த நாளில், நம் உடம்பில் உள்ள முன்னோர் துகள்களின் பசைத்தன்மை குறையும், அதனால் அவற்றை எளிதாக நீக்க முடியும். மற்ற நாட்களில் அவை பசை போல ஒட்டி இருக்கும், நீக்க இயலாது. முன்னோர்களின் ஆன்ம துகள்கள் நம்மில் பதிந்து, துன்பங்களை ஏற்படுத்தும். அவற்றை நீக்க, தர்ப்பணம் மற்றும் அமாவாசை நாளின் சக்தியை சரியாக பயன்படுத்த வேண்டும். )
குருநாதர் :- அவ் நேரத்தில் நிச்சயம் நதிகளுக்கும் சென்று எதை என்று புரிய, இன்னும் அதாவது கடல் நீர் அருகில் பின் சென்று, நிச்சயம் அறிந்தும் எவை என்று அறிய, பின் பல தூப எண்ணெயைகள் கூட அறிந்தும் கூட,
பல பல வித்தியாசமான பழங்களை (பூசணிக்காய் , பாகற்காய், வாழைக்காய்) நிச்சயம் எவ்வாறாக கீறி, அதாவது எதை என்று புரிய, அப்படியே “””குழுவி”””” போல் எதை என்று அறிந்து கூட, அதில் பின் எண்ணெயை இட்டு, நிச்சயம் தீபத்தை ஏற்றி, சிறு சில சில வழியில் சில மூலிகைகளை இட்டு, அதை அப்படியே நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூட அனுப்ப வேண்டும், சொல்வேன்.
(குழுவி = அம்மியில் பயன்படுத்தப்படும் உருளை வடிவ கல் கருவி)
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம் :- ( அமாவாசை நாளில், பசைத்தன்மை குறைவதால், உடம்பில் ஒட்டியிருக்கும் ஆன்ம துகள்களை நீக்க இது சிறந்த நாள். அந்த நாளில், ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று, எண்ணெய், விளக்கு, மூலிகைகள் கொண்டு ஒரு ஆன்மீக சடங்கு செய்ய வேண்டும். இந்த சடங்கில், பூசணிக்காய், பாகற்காய், வாழைக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் ஆன்ம துகள்களை ஈர்க்கும் சக்தி அதிகம். மந்திரங்கள் மூலம், அந்த துகள்களை உடம்பிலிருந்து பிரிக்க முடியும். இந்த செயல்முறை சரியாக செய்யப்படும்போது, துன்பங்கள் நீங்கி, ஆன்ம சுத்திகரிப்பு ஏற்படும். வாழ்வு நலமாகும்)
குருநாதர் :- நிச்சயம் இதற்கு தகுந்தார் போல், பின் அனைத்தும் ஈர்க்கும் திறன், பூசணி தன்னில் கூட உள்ளது. அவைதன் அனைத்தும் எதை என்று அறிய எடுத்து, அதில் எண்ணெய் இட்டு, நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய, பின் அப்படியே, பின் எவை என்று கூற, அறிந்து கூட, பின்.
அறிந்தும் புரிந்தும், அப்படி நிச்சயம் தன்னில் கூட பிடுங்கிச் செல்லும் என்பேன். ஒவ்வொன்றாக பின் ஈர்ப்பு விசயனாக.
(பூசணிக்காய் அதன் ஈர்ப்பு விசையின் தன்மையினால், உங்கள் உடம்பில் உள்ள உங்கள் முன்னோர்களின் ஆன்ம துகள்களை அதி வேகமாக பிடுங்கி , தன்னுள் வைத்துக்கொள்ளும். அடியவர்கள் அவசியம் செய்க. )
அறிந்தும் இவை (அவசியம் செய்ய) வேண்டும். ஏனென்றால் ஒரே நேரத்தில் அனைத்தும் விலக, எதை என்று புரிய.
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம் :- (
(1) பூசணிக்காய் வழிபாடு மற்றும் அதன் ஆழமான அர்த்தம் - பூசணிக்காயின் உள்ளே உள்ள சதை அகற்றப்பட்டு, எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி, அதை ஆற்றில் விட வேண்டும். இது முன்னோர்களின் ஆன்ம துகள்களை நம் உடலில் இருந்து பிரித்து வெளியேற்றும். இதனால் மிகுந்த நன்மை உண்டாகும்.
(2) நம் உடலில் உள்ள முன்னோர்கள் ஆன்மா துகள்களின் விடுதலை - ஒவ்வொரு அமாவாசையிலும், இந்த பூசணிக்காய் வழிபாடு மூலம், உங்கள் உடம்பில் ஒட்டிக் கொண்டிருக்கும், உங்கள் முன்னோர் ஆன்மா துகள் போன்றவை வேகமாக பிடுங்கி விட்டு போகும். இது வெறும் சும்மா ஒரு சடங்கல்ல; மிகவும் ஆழமான, அதி ரகசியமான, ஆன்மீக ரீதியாக ஒரு பரிசுத்திகரிப்பு செயல்.
(3) ஒரே பிறவியில் பாவங்களை கழிக்க முடியுமா? சாதாரண வழிபாடுகள் மூலம் ஒரே பிறவியில் பாவங்களை முழுமையாக கழிக்க முடியாது. ஆயிரக்கணக்கான பிறவிகளில் தான் அது சாத்தியம். ஆனால் சித்தர்கள் வழிகாட்டும் சில விசேஷமான முறைகள், குறிப்பாக அமாவாசை நாளில் செய்யப்படும் பூசணிக்காய் தீப வழிபாடு, இந்த பாவங்களை விரைவில் கழிக்க வழிவகுக்கும்.)
குருநாதர் :- அறிந்தும் அனைவரும் சொல்லுங்கள், இவைதன் ஒருத்தருக்கு தெரிவித்தால், எதை என்று அறிய, நீங்களும் பின் அதாவது இறைவன் கூட சுயநலம் ஆகிவிட்டான் என்று சொல்வீர்கள். இதனால் அனைவருக்கும் தெரிவித்து விட்டால்….
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம் :- ( ஒரு அடியாருக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் வாக்கு சொன்னால், மற்றவர்கள் வருத்தப்பட வாய்ப்பு இருக்கிறது. அதனால், அந்த உண்மையை யாருக்கும் தனியாகச் சொல்லாமல், எல்லா பேருக்கும் பொதுவாகக் கூட்டமாக அறிவிக்கிறார் குருநாதர். இது ஒருவருக்கே உரித்தான வழிகாட்டல் அல்ல; அனைவரும் அவசியம் செய்ய வேண்டிய வழிமுறை என அவர் வலியுறுத்துகிறார். “நீங்க செய்யணும்” என்று அனைவரையும் ஒரே மாதிரியாக வலியுறுத்துகிறார். இது வழிகாட்டலில் சமத்துவத்தையும், குழுவாக செயல்பட வேண்டியதையும் வலியுறுத்தும் ஒரு பார்வையாக கொள்ளலாம்.)
==========================================================
# ஏன் உண்மையான செய்திகளை தரிப்பதற்கு பல ஆட்கள்?
==========================================================
குருநாதர் :- அப்பனே, அறிந்தும் கூட இதை தடுப்பதற்கும் பல ஆட்கள், எதை என்று அறிய, எவை என்று அறிய, அறிய புரியாதவர்கள். ஏனென்றால் நல்லதை செய்தால், நிச்சயம் தடுப்பவர்கள். ஏனென்றால் இக்கலியுகத்தில் தீயவைத்தான் நடக்க வேண்டும் என்று விதி.
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம் :- (
(1) நல்லதை பகிரும் போது எதிர்ப்பு வரும் - ஒருவர் அகத்தியர் ஜீவநாடி பற்றிய உண்மையை வெளியே சொல்லும்போது, அதை கேட்டு சுற்றியுள்ளவர்கள் சந்தேகம் அல்லது விமர்சனம் செய்யலாம். “அட போப்பா, எதையோ ஒன்னு சொல்லுவாங்க” என்பதிலிருந்து, நல்லதை பகிரும் முயற்சிக்கு எதிர்ப்பு வரும் என்பது தெளிவாகிறது.
(2) கலியுகத்தின் இயல்பு - கலியுகத்தில் மனிதனுக்கு நல்லது கிடைக்க கூடாது என்பதே கலிபுருஷனின் எண்ணம். அதனால், நல்லதை செய்யும் முயற்சிகள் தடுக்கப்படுகின்றன.
(3) உண்மையை பொதுவாக பகிரும் அவசியம் - தனிப்பட்ட முறையில் சொல்லாமல், உண்மையை கூட்டமாக எல்லோருக்கும் பகிர வேண்டும்)
( நம் குருநாதர் அருளால் மதுரையில் நடந்த கூட்டு பிரார்த்தனை வாக்கு தொடரும் …….)
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம் !
சர்வம் சிவார்ப்பணம் !
No comments:
Post a Comment